30 ஏப்ரல் 2010

யாழில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை துண்டுபிரசுரம்!

வர்த்தக நிலையங்களில் சிங்கள பெயர்ப்பலகை எழுதுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல், சிங்களவர்களுக்கு வீடு, காணி விற்றல், தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
`தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம்` என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.
அத் துண்டுப்பிரசுரத்தில்,
‘இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிட பல உத்திகளை வகுத்துள்ளது.
இந்த உத்திகளில் சிலவே தென்னிலங்கையில் இருந்து அதிகளவிலான சிங்களவர்கள் சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மை சிறுபான்மையினராக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் ஒருவார காலத்திற்குள் முடிவுக்கு வருதல் வேண்டும். இல்லையேல் நீங்கள் கடும் விளைவுகளை எதிர்நோக்கவேண்டி ஏற்படும். அதியுச்ச தண்டனைகளையும் பெறுவீர்கள்.
எமது சக்தியான விடுதலைப் புலிகளின் இயங்குநிலை ஸ்தம்பிதமடைந்துள்ள இதேவேளை எம்முடன் ஒத்துழைத்து சிங்களமயமாக்கலில் எமது தாய்மண்ணையும் தாய்மொழியையும் எதிர்கால சந்ததியையும் காப்போம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

29 ஏப்ரல் 2010

எசன் வாழ் தமிழர்களை பின்பற்றி,சுறா படத்தை புறக்கணிக்க தயாராகுங்கள் புலம்பெயர் தமிழர்களே!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தாக்கத்தை மிகவும்உணர்ந்தவர்களாகவும்,ஒரு பெரும் கொதிநிலைக்குள்தள்ளப்பட்டவர்களாகவும் ஜெர்மனியின் எசன் மாநகரத்தில்வாழும் தமிழர்கள் பொங்கி எழுந்தனர்,இளைஞர்களோ ஒருபடி மேலே சென்று,எசன் திரையரங்குகளில்தமிழ் சினிமாக்களை தடுத்து நிறுத்தினர்,இன்றுவரை எசன் நகரில் இந்திய தமிழ் திரைப்படங்கள்திரையிடப்படுவதில்லை என்பது,மானமுள்ள தமிழர்களுக்குமுன்மாதிரியாக எசன் வாழ் தமிழர்கள் விளங்குகிறார்கள்என்பதை பறைசாற்றி நிற்கின்றது.இதை இங்கு கோடிட்டு காட்டுவதன் அர்த்தம் என்ன என்பதைபுலம்பெயர் தமிழர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்,மீண்டும் தலைவிரித்தாடும் சினிமா மோகம்,விஜயின் "சுறா"படவிளம்பரங்கள்,பல்லாயிரக்கணக்கான எம் உறவுகளை கொன்றொழித்த,எம் குலப்பெண்களை பாலியல் வக்கிரம் புரிந்த,எம் சொந்தங்களைஇன்றும்கூட முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கின்ற,சிறிலங்கன்இனவாத அரசோடு கூட்டிணைந்து மாபெரும் மனிதப்படுகொலைக்குதுணை நின்ற,இந்திய மத்திய அரசோடு கைகோர்த்து நிற்கும் விஜய் என்றஒரு நடிகனை தலையில் தூக்கி வைத்து கொண்டாட புறப்பட்டு விட்ட,தமிழர்கள்,எசன் வாழ் தமிழர்களை பின்பற்றியாவது தம்மை திருத்திக்கொண்டு,"சுறா"படத்தை புறக்கணிப்பதன் மூலம்,தமிழர்கள் தன்மானம்உள்ளவர்கள் என்பதை நிரூபித்து,தகுந்த பதிலடியை கொடுப்போம்.

தியாகி முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை திறப்புவிழா!





ஈழத் தமிழர்களுக்காக சென்னையில் தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு தஞ்சாவூரில் சிலை திறக்கப்படவுள்ளதாக இளந்தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கை... தமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை. இனவெறியின் கோரப் பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது. முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது. இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும். முள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது. சிலை திறப்பு நிகழ்வுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் ச.குமரேசன் கலந்து கொள்ள இசைவு தந்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட முத்துக்குமார் சிலையை அன்பளிப்பாக வழங்கி, இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன் சிறப்புரையாற்றுகிறார். சிலை திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிற்பகல் 2 மணிளவில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் வகையில், சுடரோட்டம நிகழ்வு நடைபெறுகின்றது. பூதலூர், ஆவாராம்பட்டி, நந்தவனப்பட்டி வழியாக சாணுரப்பட்டிக்கு இச்சுடரோட்டம் வந்தடைகிறது. மாலையில், ‘முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்’ என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநர் ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். முள்ளிவாய்க்கால் முடிவல்ல, புதியதொரு தொடக்கம் என்பதை இவ்வுலகிற்கு நாம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழகத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது. தாய்த் தமிழகத்தில் எழுகின்ற எழுச்சியே தமிழீழ மக்களின் நலன் காக்கும் என்பதை உறுதியாக நம்பிக் களம் இறங்க வேண்டிய சூழல் இது என்பதை முன்வைத்தும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழகமெங்கும் உள்ள இன உணர்வாளர்கள், கட்சி வேலிகளைக் கடந்து ஒன்று கூட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன விடுதலைக்கான சூளுரை தினமாக நெஞ்சிலேந்தி, விடுதலைப் பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. தமிழ் உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பெருந்திரளாக பங்கெடுக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது. சிலை திறப்பு மற்றும் வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இளந்தமிழர் இயக்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சிலை திறப்பு நிகழ்வில், பங்களிப்பு செலுத்த விரும்பும் உணர்வாளர்கள், elanthamizhar@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி அல்லது +91-9841949462 begin_of_the_skype_highlighting +91-9841949462 end_of_the_skype_highlighting என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

28 ஏப்ரல் 2010

சிறி லங்கா,இன அழிப்பை மேற்கொண்ட நாடு என்பதற்கு சகல ஆதாரங்களும் உண்டு-றேச்சல் ஜோய்ஸ்.




வட்டுக்கோட்டை தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது உட்பட சிறிலங்கா அரசு மேற்கொண்ட பல்வேறு ஜனநாயக விரோத செயற்பாடுகள் அதனை இனஅழிப்பை மேற்கொண்ட நாடாக அறிவிப்பதற்கு தகுந்த ஆதாரங்களை முன்மொழிந்திருக்கிறது என்று வைத்தியர். றேச்சல் ஜொய்ஸ் ( கறோ மேற்கு கொன்சவேட்டீவ் அபேட்சகர்) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
இனப்படுகொலை எனப்படுவது ஒரு சமூகத்தையோ, ஒரு இனத்தையோ, ஒரு மதத்தினரையோ, ஒரு தேசியத்தையோ முழுமையாகவோ அல்லது பகுதிபகுதியாகவோ, திட்டமிடப்பட்டு, வேண்டுமென்றே அழித்தலாகும்.
1948 ஐ.நா. கூட்டத்தில் இனப்படுகொலையெனும் குற்றத்தைத் தடுப்பதும் தண்டிப்பதும் என்ற தலைப்பில், இனப்படுகொலையின் சட்டபூர்வமான வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளது. அதில் 2 ஆவது சட்டத்தின்படி ஒரு சமூகத்தையோ, ஒரு இனத்தையோ, ஒரு மதத்தினரையோ, ஒரு தேசியத்தையோ முழுமையாகவோ அல்லது பகுதிபகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் கீழ்க்கண்ட செயல்கள் இனவழிப்பு என்றும் வரைவிலக்கணத்திற்குள் உள்ளடங்கும்.
ஒரு குழுவினரின் அங்கத்தவரைக் கொலைசெய்தல், ஆபத்து விளைவிக்கும் வகையில் காயப்படுத்தல், மனநோயை ஏற்படுத்தல், அந்தக்குழுவினரின் வாழ்க்கையை முழுதாகவோ, பகுதிபகுதியாகவோ அழிக்கும் வகையில் சூழ்நிலைகளை உருவாக்குதல், அந்தக் குழுவினரின் சந்ததி வளராது தடுக்கும் நோக்குடன் நடவடிக்கை எடுத்தல், ஒரு குழுவினரின் பிள்ளைகளை பலாத்காரமாக இன்னொரு குழுவினரிடம் ஒப்படைத்தல் ஆகியனவே அவையாகும்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் கீழ்க்கண்ட செயல்களை நான் இனவழிப்பாகக் கொள்ளப்படவேண்டும் என்று நம்புகிறேன்:-
யாழ் நூலகத்தை எரிக்கப்பட்டது, வட்டுக்கோட்டை தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது, தமிழ் மக்களை தனிப்பட்ட முறையில் கடத்துவது காணமல் போகவைப்பது, தமிழை இலங்கையில் அரச மொழியாக ஏற்க மறுத்தது, ‘பாதுகாப்பு வலயம்” எனக்கூறப்பட்ட பிரதேசங்களில் துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு நடத்தியது, தமிழ் மக்களை இடம்பெயர்த்து பாரம்பரிய தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களைக் குடியேற்றியது, இடம்பெயர்ந்த மக்களை முள்வேலிக்குள் சிறைப்படுத்தியது ஆகியவையே.
மேற்கூறிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக இன அழிப்பு எனப்பிரகடனப்படுத்தி அவற்றைத் தீர்ப்பதற்கு ஐ.நா சபையின் கூட்டத்தைப் பயன்படுத்துவதற்கு தமிழ் மக்களுடன் சேர்ந்து நானும் உழைப்பேன் – என்று அவர் தெரிவித்துள்ளார்.
Janani_02அமெரிக்காவை தளமாக வைத்து இயங்கும் இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழர் (ரீ.ஏ.ஜி) எனும் அமைப்பின் பிரித்தானியப் பிரதிநிதியும் 20009 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை அபேட்சகராக நின்று 50.000 ற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றவருமாகிய ஜனனி ஜனநாயகம் இது பற்றி கூறுகையில்:-
‘எமது இனத்துக்கு எதிராக இடம்பெற்றிருக்கும் இனப்படுகொலைக்குச் சட்டமூலம் அங்கிகாரம் பெறும் பொருட்டு உழைத்து வரும் நாங்கள் வைத்தியர் றேச்சலின் நிகரில்லாத ஆதரவால் மகிழ்ச்சி அடைகிறோம். எல்லாத் தகவல்களையும் கவனமாக ஆராய்ந்த பின்னரே அவர் இத்தகைய முடிவுக்கு வந்துள்ளார் என நான் அறிவேன். இத்தகைய முடிவுக்கு வந்த அவர், சட்ட ரீதியல் இவ்விடயத்தை அணுகத்தைரியமாகவும் உறுதியாகவும் முயற்சி செய்வார் என்பதனையும் நான் அறிவேன்.
பிரித்தானிய அரசியற்கட்சிகள் ஒன்றும் இலங்கையின் இனப்படுகொலை பற்றி ஒரு தீர்க்கமான முடிவு எடுக்காத நிலையில், றேச்சல் ஜோய்ஸ் போன்றவர்கள் தனித்துவமாக இத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஈழத்தமிழருக்கு நடக்கும் இனப்படுகொலையை இனங்கண்டு அதற்குத் தகுந்த பரிகாரம் தேடுவதற்குச் சர்வதேச அரசியல் ஒருமைப்பாடும் அனுசரணையும் எவ்வளவு முக்கியம் எனக்கூறத்தேவையில்லை.
2009 இல் சில பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கலாம் என்று கூறியிருந்த பொழுதும் றேச்சல் ஜோய்ஸின் இந்தக்கூற்று ஒரு முக்கிய விடயமாகும். சிலருக்கு இப்படிப்பட்ட நிலைப்பாடு அவர்களின் தனிப்பட்ட அனுபவமாகும். உதாரணமாக ஒஸ்விட்ஸ் இல் இருந்து வந்த தனது மூதாதையர்களைக் கொண்ட லீஸ்கொட், இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என உறுதியுடன் நிற்கிறார்.
இல்லியோனிஸ் சட்டப்பேராசிரியரான ‘பிரான்சிஸ் பொயில்” சுதந்திரம் முதல் இலங்கை அரசாங்கங்களின் இனப்படுகொலைக்கு தமிழர்கள் இரையாகுகிறார்கள். போஸ்னியாவில் ‘றடோவன் கறட்சிக்” இனப்படுகொலைக்காக குற்ற விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். இலங்கை அரசு சமீபத்தில் நடைபெற்ற வன்னிப்போரில் மாத்திரம் 50.000க்கும் மேல் கொன்றொழித்தது இனப்படுகொலையாகும். என்று அவர் கூறுகிறார் – என்றார் அவர்.

மொழியையும்,நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்-காசி ஆனந்தன்.



தமிழகத்தில் மொழியையும், ஈழத்தில் நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்று வேதனை வெளியிட்டுள்ளார் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்.

எழுகதிர் தமிழ் நிலம் இணைந்து நடத்திய தமிழர் இந்தியர் இல்லையா என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நூலை மாலை முரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் சுந்தரேசனார் பெற்றுக் கொண்டார்.

லண்டனில் திருக்குறள் தமிழ்ப்பள்ளி நடத்தும் தேவதாசு,​ நூலாசிரியர் அறுகோபாலன்,​டெல்லி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இந்திரா மணியன்,​​பாவலர் மு.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே விழாவில், தமிழர் மிகுதியாக இழந்தவற்றை மீட்க என்ன வழி?, வாழ்வியற் சொல் அகரமுதலி ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசுகையில், 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் இன்று தமிழகத்தில் மட்டுமே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உலகில் முதன்முதலில் தோன்றிய மொழி தமிழ்.​ இது அறிஞர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.​ தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் வாழ்பவர்கள் மண்ணின் மைந்தர்கள்.​ மொரிஷியஸ்,​​ பிஜி நாடுகளுக்குச் சென்றவர்கள் பிழைக்கச் சென்றவர்கள்.

இன்றைக்கு தமிழ் ஈழமும்,​​ தமிழ் இனமும் அழியும் நிலையில் உள்ளது.​ இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ராஜபட்ச கூறிவிட்டார்.​ இலங்கை நீதிமன்றமும் அதை உறுதி செய்து விட்டது.26,500 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த தமிழ் ஈழம் படிப்படியாக குறைந்து இன்றைக்கு 11,500 சதுர கிலோ மீட்டர் என்ற அளவுக்கு வந்துவிட்டது.

தமிழ் ஈழ விடுதலைப் போர் தோற்றுவிட்டதாக யாரும் கருதி விடக்கூடாது.​ போரில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.​ மீண்டும் 2 ஆண்டில் தமிழ்ஈழம் நிமிர்ந்து நிற்க்கும். இப்போது தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது.​ ஒவ்வொரு அரச மரத்தின் கீழும் புத்தர் கோயிலை கட்டத்தொடங்கியுள்ளனர்.​ தமிழர் நகரங்களில் சிங்கள கடைகளும், ராணுவ குடியேற்றங்களையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாய் தமிழகம் இந்த தருணத்தில் தன் கடமையை செய்ய வேண்டும்.​ இந்திய அரசை இப்போதும் நாங்கள் நம்புகிறோம்.​தமிழ் ஈழத்தை அழிவின்விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும். தமிழ் ஈழம் நிலத்தை இழந்து கொண்டிருக்கிறது.​ தமிழ்நாடு மொழியை இழந்து கொண்டிருக்கிறது.​ இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தும் கடமை தமிழர் அனைவருக்கும் உண்டு என்றார் அவர்.

27 ஏப்ரல் 2010

அமிதாப்பிற்கு எமது நன்றிகள்-சீமான்.







இது குறித்து நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

இலங்கையின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு கொழும்பில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜுன் 2 முதல் 4 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முக்கியபங்காற்றுவதாகவும்அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழர்களின்இனப்படுகொலையை மறைப்பதற்காக நடத்தப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அமிதாப் கலந்து கொள்வதற்கு கண்டனம் தெரிவித்து எமது நாம் தமிழர் தொண்டர்கள் மும்பையில் உள்ள அமிதாப் அவர்களின் வீட்டு முன்பு கடந்த ஞாயிறு அன்று முற்றுகைப்போராட்டம் நடத்தினர். அமிதாப் அவர்களைச் சந்தித்து 10 கோடித்தமிழர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
இந்த நிலையில் போராடிய எமக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.அமிதாப் நேற்று இது குறித்து கருத்து தெரிவிக்கையில் தமிழர்களின் உணர்வுகளைத்தான் புரிந்துள்ளதாகவும்,அவர்களது உணர்வுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் இது குறித்து நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் உட்பட அனைவரிடமும் பேசி இணக்கமான,நல்ல முடிவைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
கருப்புக்கொடி,ஆர்ப்பாட்டம் என்றாலே தமக்கு எதிரான ஒன்று என்று நினைக்கும் தலைவர்கள் மத்தியில், உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்களின் வேதனையான உணர்வுகளைப்புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளித்து தமிழர்களுக்கு சாதகமான முடிவை எடுப்பதாக தெரிவித்துள்ள அமிதாப்பிற்கு நாம் தமிழர் இயக்கம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.அமிதாப்அவர்களைப் பின்பற்றி ஷாருக்கான்,ஐஸ்வர்யாராய் உட்பட பிற நடிகர்களும் கலந்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன்.இந்த வெற்றி எமக்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் எம் தமிழ்ச்சொந்தங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.அமிதாப் அவர்கள் இதோடு நின்று விடாது ஈழத்தில் சிங்கள வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட தமிழினப்படுகொலைக்கு எதிராக எம் தமிழ்ச்சொந்தங்களுடன் இணைந்து போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேர்வினை ஊடகத்துறை அமைச்சு பதவியிலிருந்து நீக்கவேண்டும்!



பிரதி ஊடகத்துறை அமைச்சராக மேர்வின் சில்வா நியமிக்கப்பட்டமைக்கு எல்லைகளற்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. அத்துடன்மேர்வின் சில்வாவை அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறும் பிரதமர் டி.எம்.ஜயரட்னவிடம், சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஊடகவியலாளர்களை தாக்கியும், அவமானப்படுத்தியும் உள்ள ஒருவரை எந்த நாடு அமைச்சராக நியமிக்கும் எனவும் அந்த அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. ஊடக சுதந்திரத்திற்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவரை முக்கியமான பதவியில் நியமித்ததன் மூலம் அரசாங்கம் தனது பொறுப்பற்ற நிலையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் சர்வதேச ஊடகவியலாளர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மகிந்தவின் காலடியில் மேர்வின் இருப்பதையே மேலே உள்ள படம் காட்டுகிறது)


26 ஏப்ரல் 2010

அமிதாப்பச்சன் வீட்டின் முன் "நாம்தமிழர்"முற்றுகை போராட்டம்!







தமிழின அழிப்புக்குத்துணை போகும் அமிதாப் வீட்டு முன் நாம் தமிழர் முற்றுகைப் போராட்டம்
2010-04-26 01:32:34
தமிழினத்தை அழித்த இலங்கை அதனை மறைக்க கொழும்பு நகரில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவை வரும் ஜூன் 2 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை இந்திய அரசின் உதவியுடன் நடத்த திட்டமிட்டுள்ளது. IIFA விருது என்பது பாலிவுட்டின் ஆஸ்கார் போன்றதாகும். உலகில் ஆஸ்காருக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான நிகழ்ச்சியென IIFA விருது மதிப்பிடப்படுகிறது..
பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப்பச்சன்,ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரும் விழாமேடையில் தோன்றி இந்த விழாவிற்கு வலு சேர்க்க இருக்கின்றார்கள். மேலும் இந்த விழாவில் சில தமிழ் திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கின்றது. தமிழ் திரைப்பட நடிகர்கள் சிலரும் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கின்றார்கள்.
இந்திய திரைப்பட்த்துறை உதவியுடன் சிங்கள அரசு மேற்கொள்ளும் இந்த நிகழ்ச்சியானது தமிழினப்படுகொலையை உலகின் கவனத்தில் இருந்து மறைக்கவே உதவும்.உலகில் சிங்கள ஏகாதிபத்தியம் அம்பலப்பட்டு இருக்கும் இந்த வேளையில் அதனை மறைக்க உதவும் இந்த விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை நாம் தமிழர் இயக்கத்த்தின் சார்பில் செந்தமிழன் சீமான் வன்மையாக கண்டித்திருந்தார்.
முதற்கட்டமாக நடிகர் அமிதாப் அவர்களை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிறு அன்று ஜனநாயக முறைப்படி சந்தித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க உள்ளோம் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தார்.அவரது உத்தரவின் படி நாம் தமிழர் இயக்கத்தின் மும்பை கிளை நிர்வாகிகள் நேற்று நடிகர் அமிதாப் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின் காரணமாக IIFA விருது விழாவை நடத்தும் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்துக்கே விரைந்து வந்தனர். IIFA வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் திரு. அமிதாப் ஆகியோர் நமது நாம் தமிழர் இயக்கத்தின் பொறுப்பாளர்களை அழைத்து கோரிக்கைகளை கேட்டறிந்தனர். ஈழத்தமிழர்களின் நிலையும், சிறீலங்காவின் போர் குற்றங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. IIFA அனைத்து நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்னை தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற வில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்று நாம் தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மும்பை நிர்வாகிகள் ராஜேந்திரன்,வழக்கறிஞர் கணேசன்,அர்ஜூன்,அக்கா,மருத்துவர் ராஜா,கண்ணிவெடி கந்தசாமி,பரிமளம்,கென்னடி,சிவராமன்,சுரேஷ்,தங்க டேனியல், சுந்தரம்,ஆகியோர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

25 ஏப்ரல் 2010

கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவை,தமிழ் நடிகர்கள் புறக்கணிக்க வேண்டும்!



இது தொடர்பாக செந்தமிழன் சீமான் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது.
சென்ற வருடம் இதே நேரம் எம் ஈழ தேசத்தில் லட்சக்கணக்கான தமிழர்களின் வீடுகளில் மரண ஓலம் கேட்ட்து.அந்த கொடூரத்தில் இருந்து தமிழர்கள் இன்று வரை மீள வில்லை.லட்சக்கணக்கான தமிழர்களின் குருதியில் நனைந்த சிங்கள ஏகாதிபத்தியம் உலகம் முழுவதும் இப்பொழுது தனிமைப்பட்டு இருக்கின்றது, தமிழர்கள் உண்ண உணவின்றி உடுத்த துணியின்றி உயிர் வாழ மருந்துப்பொருட்களின்றி நித்தமும் செத்துக்கொண்டிருக்கின்றார்கள்.உலகம் முழுவதும் உள்ள நாடுகள் இலங்கையை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பா ஒன்றியம் இலங்கையில் தனது வரிச்சலுகைகளை நீட்டிப்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்த வரிச்சலுகை. இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பின்னடைவாகும். மேலும் அண்மையில் நடைபெற்ற டப்ளின் தீர்ப்பாயம் இலங்கையின் நற்பெயரை கிழித்தெறிந்து, அதனை போர்க்குற்றவாளியாகவும் அறிவித்துள்ளது.இத்தகைய சமீபத்திய நிகழ்வுகள் இலங்கையை இனப்படுகொலை நாடாகவும்,பாதுகாப்பற்ற நாடாகவும், விரும்பத்தகாத ஜனநாயகமற்ற நாடாகவும் நிலைநிறுத்துகின்றன.. இதனாலேயே அன்னிய நிறுவன்ங்கள் இலங்கையில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் இலங்கையோ தனது நாட்டை அனைவருக்கும் ஏற்ற நாடு என்று காட்டவும் சொர்க்க புரி என்று உலகிற்கு சொல்லவும் கடும் முயற்சி எடுத்துகொண்டிருக்கின்றது
இலங்கைக்கு ஏற்கனவே பல்வேறு வகைகளில் உதவிபுரிந்த இந்திய அரசு இதற்கும் உதவி செய்துள்ளது.பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.அதன் ஒரு கட்டமாக கொழும்பு நகரில் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா ஜூன் 2 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை நட்த்த திட்டமிட்டுள்ளது. IIFA விருது என்பது பாலிவுட்டின் ஆஸ்கார் போன்றதாகும். உலகில் ஆஸ்காருக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான நிகழ்ச்சியென IIFA விருது மதிப்பிடப்படுகிறது.. பாலிவுட் திரை நட்சத்திரங்களான அமிதாப்பச்சன்,ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரும் விழாமேடையில் தோன்றி இந்த விழாவிற்கு வலு சேர்க்க இருக்கின்றார்கள். மேலும் இந்த விழாவில் சில தமிழ் திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கின்றது. தமிழ் திரைப்பட நடிகர்கள் சிலரும் கலந்து கொள்ள திட்டமிட்டு இருக்கின்றார்கள்.
இந்திய திரைப்பட்த்துறை உதவியுடன் சிங்கள அரசு மேற்கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழினப்படுகொலையை உலகின் கவனத்தில் இருந்து மறைக்கவே உதவும்.உலகில் சிங்கள ஏகாதிபத்தியம் அம்பலப்பட்டு இருக்கும் இந்த வேளையில் அதனை மறைக்க உதவும் இந்த விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியை நாம் தமிழர் இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.அதற்கு பல்வேறு வழிகளில் எதிர்ப்பைக் காட்டவும் முடிவு செய்துள்ளது,முதற்கட்டமாக நடிகர் அமிதாப் அவர்களை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வரும் ஞாயிறு அன்று ஜனநாயக முறைப்படி சந்தித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.மேலும் தமிழ் நடிகர்கள் சிலர் இந்த விழாவில் பங்கேற்க மறுத்துள்ளதை வரவேற்கின்றோம்.பிற நடிகர்களும் பங்கேறகமாட்டார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.தமிழ்ப்படங்கள் திரையிடுவதை தயாரிப்பாளர்கள் தவிர்ப்பார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்..இந்த நிகழ்ச்சிக்கு எதிராக பல்வேறு வகைகளிலும் நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டம் தொடரும்.மரண் ஓலமும் ஒப்பாரியும் கேட்டுக்கொண்டிருக்கும் எம் தமிழர் இல்லங்களில்,அவர்களின் ரத்தக்கறையின் மீது நின்று எம் இனத்தை அழித்த எதிரியின் வெற்றிக்களிப்பில் இணைவதை தவிர்க்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றோம்.தமிழினப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படும் வரை ஓய மாட்டோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..

யாழில் மாணவியை கடத்தும் முயற்சி,பொது மக்களால் முறியடிப்பு!



யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போ சந்திக்கு அருகில் 9 ஆம் வகுப்பு பாடசாலை மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடத்த முயற்சித்த போது பொதுமக்கள் திரண்டு முறியடித்தனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:-
வெள்ளிக்கிழமை பிற்பகல் பாடசாலை முடிவுற்று மாணவர்கள் வீடு செல்வதற்காக வந்துகொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் கறுப்பு நிற தலைக்கவசம் அணிந்த இருவர் குறித்த மாணவியை பலவந்தமாக இழுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்ற முற்பட்டனர்.
அப்போது அம்மாணவி கூக்குரல் இடவே கூடியிருந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறியடித்து ஓடினர். அங்கிருந்த பொது மக்கள் திரண்டு கடத்தல்காரர்களை வழிமறித்தனர். அவ்வேளையில் கடத்தல்காரர்கள் மாணவியை கீழே இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கடத்த முற்பட்ட மாணவி ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

24 ஏப்ரல் 2010

குட்டிமணியை காட்டிக்கொடுத்தது கருணாநிதியே,வைக்கோ திடுக்கிடும் தகவல்!


1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வெளிக்கடை சிறையில் சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழத்து தளபதிகளில் ஒருவரான குட்டிமணியை 1973-ம் ஆண்டு தமிழகத்தில் கைது செய்து சிங்கள அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதான் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.நேற்று சென்னையில் நடைபெற்ற பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கெதிரான கண்டனக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது பற்றி வைகோ பேசியதாவது :1973-ம் ஆண்டுவாக்கில் குட்டிமணி தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்த நேரத்தில் இது பற்றி அறிந்த சிங்கள அரசு குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்திய அரசு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதி கருத்து கோரியிருந்தது. கலைஞர் சிறிதும் யோசிக்காமல் குட்டிமணியை சிங்கள அரசிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்தார். அதேபோல் குட்டிமணி சென்னை விமான நிலையத்தில் சிங்கள அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார். இந்த நேரத்தில் நான் தி.மு.க.வின் வெறி பிடித்த தொண்டன். கலைஞரின் அதி முக்கிய விசுவாசி. தீவிரமான தம்பி.. அப்போது நாடாளுமன்றத்திலே தி.மு.க.வின் சார்பிலே இலங்கை பிரச்சினை குறித்து நான்தான் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தேன்.அந்த நேரத்தில் நடந்த இந்த குட்டிமணியின் நாடு கடத்தல் உத்தரவில் என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்தச் சம்பவம் நடந்த உடனேயே தமிழகத்தில் ஊர், ஊருக்கு “குட்டிமணியைக் காட்டிக் கொடுத்த கருணாநிதி ஒழிக” என்று சொல்லி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.தி.மு.க.வின் அதி தீவிர தொண்டனான நான் இதைப் பார்த்து பெரிதும் வருத்தப்பட்டேன். முடிந்த அளவுக்கு அந்த போஸ்டர்களை கிழிக்கின்ற அளவுக்குக்கூட சென்றிருந்தேன். இதுவெல்லாம் அந்த நிகழ்ச்சியை தமிழகத்து மக்களிடமிருந்து மறைத்துவிட முடியாது என்பதை உணர்ந்த நான் அடுத்து செய்ததுதான் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம்.குட்டிமணியின் வழக்கறிஞர் கரிகாலன் எனக்கும் நல்ல நண்பர்தான். அவரிடம் நான் பேசினேன். குட்டிமணி கைது செய்யப்பட்டு சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தில் கலைஞருக்குத் தொடர்பில்லை என்று குட்டிமணியிடம் ஒரு கடிதம் வாங்கித் தரும்படி அவரைக் கேட்டுக் கொண்டேன்.மூன்று மாதங்களுக்கு ஒரு முறைதான் வழக்கறிஞர் கரிகாலனால் குட்டிமணியைச் சந்திக்க முடியும் என்பதால் நான் இதை மிகவும் அவசரப்படுத்தினேன். கரிகாலன் முதல் முறை குட்டிமணியைச் சந்தித்து இது பற்றித் தெரிவித்தபோது குட்டிமணி இது பற்றி தங்கத்துரை மற்றும் ஜெகனிடம் ஆலோசித்துவிட்டுச் சொல்வதாகச் சொல்லியனுப்பி விட்டார். ஆனால் அடுத்த முறை கரிகாலன் அவர்களைச் சந்தித்தபோது ஒரு கடிதத்தை எழுதியனுப்பினார் குட்டிமணி. அந்தக் கடித வாசகங்கள்கூட நான் எழுதிக் கொடுத்தவைதான். அதேபோல் குட்டிமணி எழுதிக் கொடுத்திருக்கிறார்.அதுல இருந்தது என்னவென்றால், “குட்டிமணியாகிய நான் கைது செய்யப்பட்டு சிங்கள அரசிடம் ஒப்படைக்கப்பட்டபோது, நான் ஒரு தமிழ் போராளி என்பது தமிழக முதல்வர் கருணாநிதிக்குத் தெரியவே தெரியாது..” என்று எழுதப்பட்டிருந்தது.இந்தக் கடிதம் கலிங்கப்பட்டியில் இருந்த எனக்கு கரிகாலன் மூலமாகக் கிடைத்தது. நான் உடனேயே இதனை கருணாநிதிக்கு அனுப்பி வைத்தேன். பின்பு ஒரு பத்து நாட்கள் கழித்து சென்னைக்கு வந்து கருணாநிதியைச் சந்தித்து அந்தக் கடிதம் பற்றிக் கேட்டபோது “இவ்ளோ முக்கியமான லெட்டரை எதுக்கு போஸ்ட்ல அனுப்புனீங்க..? இப்பத்தான் எல்லா லெட்டரையும் பிரிச்சுப் பார்த்துட்டுத்தான கொடுக்குறாங்க.. சென்சார்ஷிப் இருக்குன்னு உங்களுக்கே தெரியாதா..?” என்றார்.இப்படியும் ஒருவேளை நடந்தாலும் நடக்கும் என்பதால் நான் அந்தக் கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்திருந்தேன். அந்தக் காப்பியை உடனேயே எடுத்து கருணாநிதியிடம் கொடுத்தேன். அதனை கருணாநிதி வாங்கிப் படித்துவிட்டு அடுத்த நாளே முரசொலியில் அதனை வெளியிட்டார். ஆனால் அந்தக் கடிதத்தை வாங்க உதவிய என்னைப் பற்றி ஒரு வார்த்தைகூட அப்போது குறிப்பிடவில்லை.ஆனால் இதுதான் என் அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப் பெரிய முட்டாள்தனம் என்று இப்போதும் கருதுகிறேன்..” என்று வருத்தத்தோடு குறிப்பிட்டார் வைகோ.

ஐ.தே.கட்சியின் தலைமைப் பொறுப்பில் ரணில் இருக்கும்வரை,தொடர்பு இல்லை.மனோ கணேசன்.


ஐக்கிய தேசிய முன்னணியில் ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை தாம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் எது வித தொடர்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து தாம் முற்றாக விலகியுள்ளதுடன், இனி வரும் காலங்களில் தொடர்ந்து தனித்து செயற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று மலை 5.00 மணிக்கு கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற இருக்கும் மத்திய குழு கூட்டத்தின் போது, இவ்விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.ஜனநாயக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, மனோ கணேசனிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

செய்தி:வீரகேசரி இணையம்.

23 ஏப்ரல் 2010

முத்துக்குமார் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்,சீமான் ஆவேசப்பேச்சு!




அன்னை பார்வதி அம்மாள் அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் அவர்களை கைது செய்ததைக் கண்டித்தும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் இன்று புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டமும் பொதுக்கூட்டமும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்ச்செல்வன்,நல்லதுரை,வெற்றிக்குமரன்,சிவக்குமார்,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவகங்கை தீனதயாளன்,நாகை மாறன்,ராஜ்குமார்,புதுக்கோட்டை சத்திய மூர்த்தி,ஜெயசீலன்,வழக்கறிஞர் ஜெயந்தன்,காளிமுத்து திருச்சி செயந்தி,வழக்கறிஞர் பிரபு,தஞ்சாவூர் அருட்குமரன்,ஈரோடு பேரறிவாளன்,திருப்பூர் செல்வம்,ராமநாதபுரம் தமிழன்பன்,தேனி முருகன்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், ‘’என் தம்பி முத்துக்குமார் தியாகத்தை வென்றவன். அவன் நாட்டில் வாழ்ந்ததை விட காட்டிலும்,சிறையிலும் வாழ்ந்ததுதான் அதிகம்.

அந்த தம்பி மீதுதான் ரத்த பொட்டலம் மருந்துகள் கடத்தியதாக வழக்கு போடப்பட்டிருக்கிறது. அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடத்தியதற்கு இப்போதுதான் வழக்காம்.அவன் கடத்தவில்லை;கொடுத்தான்.

ஆனால் இந்திய நாடு தமிழனின் உயிரை அல்லவா எடுக்க ஆயுதம் கொடுத்தது. அடிபட்டு காயம்பட்ட தம்பிகள் என்னைதொடர்பு கொண்டு கை,கால்கள் இழ்ந்துவிட்டோம். மருந்துகள் இல்லாமல் அழுக்கொண்டிருக்கிறோம்.

முடிந்தால் மருந்துகள் வாங்கி அனுப்புங்கள்;இல்லையென்றால் கடித்து சாகிறோம் என்று சொன்னார்கள். அது என்னால் அந்த சமயத்தில் முடியவில்ல. என் தம்பி முத்துக்குமார் செய்திருக்கிறார்.

மருந்து கிடைக்காத பல தம்பிகள் சயனைடு கடித்து செத்து மாண்டார்கள். அரிசியும் மருந்தும் வாங்க வந்த எனது ஈழத்து பிள்ளைகளை பிடித்தனர். அவர்களிடம் பிடிங்கிய பணம் எங்கே?

2016ம் ஆண்டுதான் நமது இழக்காக இருந்தது. ஆனால் இப்போதும் கொடுக்கப்படும் நெருக்கடி. அதற்கு முன்பே நுழையவாய்ப்பு கொடுக்கிறது.

அண்ணன் பிரபாகரன் கேட்ட கேள்வி என்ன தெரியுமா? தமிழகத்தில் ஒரே ஒரு வீரன் இருந்தான் வீரப்பன் என்று. அவனையும் கொன்றுவிட்டீர்களே நியாயமா என்று கேட்டார்.

வீரப்பனை விசம் வைத்து கொன்று அதன்பிறகு சுட்டுக்கொன்றதாக மெடல் வாங்கிய போலீஸ் தமிழ்நாடு போலீஸ்.தமிழனுடை பண்பாட்டு மரபுகளை வீரப்பன் மதித்திருந்தான். மது,மாது,சூது,புகை என்று அவன் எதையும் நாடியதில்லை. அப்படி இருந்ததால்தான் நாகப்பாவை கடத்தியவன் நடிகையை கடத்தவில்லை.

ஒரு தமிழன் எந்த ஒரு சிங்களப்பெண்ணின் தாவணியை தொட்டதுண்டா. ஆனால் அவன் இறந்த ஒரு தமிழச்சியைவன்புணர்ச்சி செய்தானே யாராவது கேட்டதுண்டா?’’என்று ஆவேசமாக பேசினார்.

பண்டாரவன்னியன் நினைவுத் தூபியை தகர்த்தது சிங்கள காடையர் கூட்டம்!






தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை அழிக்கும் சிறிலங்காவின் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலை மடு பிரதேசத்தில் அமைந்துள்ள பண்டார வன்னியன் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டுள்ளது.
இவ் நினைவுச் சின்னமானது ஆங்கிலேயரால் பண்டாரவன்னியனுக்கு அமைக்கப்பட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது. இதேவேளை இப்பகுதியில் கடுமையான சண்டை நடைபெற்றபோது கூட இவ் நினைவு சின்னம் அழிக்கப்படவில்லை என்பது தெரிந்ததே.

பண்டாரவன்னியன் நினைவுச்சின்னம் உடைக்கப்பட்ட நிலையில்
இப்பகுதியில் மக்கள் மீள குடியமர்ந்துள்ளபோதும் கூட இதற்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டு இருக்கவில்லை எனவும் வாக்களிப்பு நடைபெறுவதற்கு 10 நாட்கள் இருக்கும் வரையில் இவ் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இது சில விஷமிகளின் கீழ்தரமான வேலை என கருதப்படுகிறது. இதற்கு அருகில் உடைந்த மண்டபம் ஒன்றும், பொது நோக்கு மண்டபம் ஒன்றும் இருக்கின்றபோதும் விளையாட்டு மைதானம் இவ் ஊர் இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றபோதும் இவ் நினைவுச்சின்னம் யாருமற்று கவனிக்கப்படாமல் இருப்பதாக தெரியவருகிறது. இதனை பராமரிப்பதற்கு எவரும் முன்வராதது மிகவும் வேதனையான விடயமாகும்.

21 ஏப்ரல் 2010

மே,18 போர் குற்றவியல் நாளாக பிரகடனம்!தமிழீழ மக்கள் அவை.

மே 18 நாளை போர்க் குற்றவியல் நாளாக தமிழீழ மக்கள் அவையின் அனைத்துலகச் செயலகம் பிரகடனப்படுத்துகிறது…..
21.04.2010
அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே,
மே 18… சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்… கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்… எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்…
மே 18… எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்… பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்… உயிர் காக்க, உடல் தெறிக்க ஓடிய எம் பாசத்திற்குரிய மக்கள் சிங்களம் வீசிய குண்டுகளுக்கு வீழ்ந்து கருகிய நாள்…
மே 18… மனிதமே வெட்கித் தலைகுனிய மானிட தர்மம் நிலை குலைய விடுதலை வேண்டிய தமிழர்கள் வீழ்ந்து சாய்ந்த நாள்… மிருகவதைச் சட்டம் போட்டு விலங்குகளுக்கும் காவலர்களாய் நின்ற, அகில உலகமும் வேடிக்கை பார்க்க, எமது மக்கள் சிங்களத்தால் வேட்டை ஆடப்பட்டு குருதி சிந்திய நாள்…
மே 18… நாகரீக உலகில், நமக்கு மட்டும் சுதந்திரம் மறுக்கப்பட்டது… வாழும் மனிதர்கள் போல் வாழ விரும்பிய ஈழத் தமிழர்கள் இழி நிலைக்குள் தள்ளப்பட்ட கொடூர நாள்… விடுதலை எமக்கு மீண்டும் மறுக்கப்பட்ட நாள்…
எங்கள் மக்கள்மீது இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நாளாக இந்த மே 18-ம் நாளை போர்க் குற்றவியல் நாளாகத் தமிழீழ மக்கள் அவை பிரகடனப்படுத்துகின்றது.
எங்கள் தேசத்து மக்களின் சுதந்திர தாகத்தை முற்றாகத் துடைத்தெறிய… சிங்களம் திட்டமிட்டு நடாத்திய இனப் படுகொலையை நாம் மறந்துவிட முடியுமா…? முள்ளிவாய்க்காலில் எமது மக்களின் மூச்சு நிறுத்தப்பட்டதை உலகத் தமிழினம் மறந்துவிட முடியுமா…? மே 16 முதல் 18 வரை ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை மனித குலம் மறந்துவிட முடியுமா…?
எனவே, இந்தக் கொடூர நாளை சிங்கள அரசின் அதி உச்ச «போர்க் குற்றவியல் நாள்» என்று ஈழத் தமிழர்கள் சார்பில் தமிழீழ மக்கள் அவையினர் பிரகடனப்படுத்துகின்றனர்.
1) சர்வதேசங்களினால் தடை செய்யப்பட்ட நச்சுக் குண்டுகளையும், எரிகுண்டுகளையும் பாவித்து பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது,
2) பாதுகாப்பு வலையங்களாக அறிவித்து, மக்களை அங்கே வரவழைத்து, அவர்கள்மீது விமானக் குண்டுகளையும், எறி கணைகளையும் இரவு பகலாக வீசி இன அழிப்பு நடாத்தியது,
3) பாதுகாப்புத் தேடிப் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்த மக்களை ஈவிரக்கமில்லாமல் உயிரோடு மண்மூடிப் புதைத்தது,
4) காயப்பட்ட, அங்கவீனப்பட்ட மக்கள்மீதும், போராளிகள் மீதும் கனரக வாகனங்களை ஏற்றிக் கதறக் கதற நெரித்துக் கொன்றது,
5) வெள்ளைக் கொடியுடன் நிராயுதபாணிகளாக வருமாறு கூறி, அவ்வாறு வந்த போராளிகளை இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது,
6) காயப்பட்டுக் களத்தில் வீழ்ந்த பெண் போராளிகள் மீது மிருகத் தனமாகப் பாலியல் கொடும் வதை புரிந்து, அவர்களைப் பலி கொண்டது, என எண்ணற்ற போர்க் குற்றங்கள் புரிந்த கொடூரமிக்க சிங்கள அரசினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை பெற்றுக் கொடுக்க நாம் அனைவரும் அணி திரள்வோம்.

நன்றிதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்இவ்வண்ணம்,
சி. பிரதீபன்இணைப்பாளர்,அனைத்துலகச் செயலகம்,
தமிழீழ மக்கள் அவை.INFO.MAKKALAVAI@GMAIL.COM

சுன்னாகத்தில் இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்!

கடந்த திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இளம் பெண் ஒருவரை இரு இளைஞர்கள் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது.
வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த அப்பெண் தனது உறவினரை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றபோதே இவ்வாறு கடத்தப்பட்டு திங்கட்கிழமை இரவு பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும், மறுநாள் செவ்வாய் காலை ஒருவாறு அங்கிருந்து தப்பி வந்து அயலவர்களிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த இளம்பெண்ணிடம் இருந்து பறித்த கைத்தொலைபேசியை வைத்திருந்த நபர் மூலம் அவரை இனம் கண்டு இருவரையும் மடக்கி பிடித்த அயலவர்கள் இவ் இரு இளைஞருக்கும் நையப்புடைத்து தகுந்த பாடம் படிப்பித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், அவர்கள் தற்போது பொலிஸாரின் கண்காணிப்பில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறியமுடிகிறது.
24 அகவையுடைய இப்பெண் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து குடும்பத்தினருடன் வவுனியா தடுப்பு முகாமில் தங்கியிருந்தவர் என்பதுவும் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
செய்தி:தமிழ்வின்.

20 ஏப்ரல் 2010

இத்தாலியில் தமிழ் பெண் கொலை!உறவுகள் தொடர்பு கொள்ளவும்!


சமீபத்தில் (17.04.2010) அன்று இத்தாலியில் கொலைசெய்யப்பட்ட தமிழ் பெண்ணின் உடலை இதுவரை எவரும் பொறுப்பேற்க்க வரவில்லை. அதனை இத்தாலிய அரசாங்கம் இன்னும் சில நாட்களில் அடக்கம் செய்ய நேரிடலாம். கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கு இவ் விடையம் தெரியாது. இவருக்கு நன்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாராவது இருப்பின் இவ் விடையத்தை அவர் பெற்றோருக்கோ அல்லது கிட்டிய சொந்தங்களுக்கோ தெரியப்படுத்தி அந்தப் பூத உடலை கையேற்க்க முடியுமா என இத்தாலிய தமிழ் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பூத உடலை அடக்கம் செய்த பின்னர், இச் செய்தி தெரியவரும்போது அவர் உறவினர்கள் மிகுந்த மனக்கவலை அடைவார்கள் ! எனவே உங்களுக்கு இப் பெண் குறித்து ஏதாவது தெரிந்திருந்தால் உடனே கிளிநொச்சிக்கு தொடர்புகொள்ளவும். அல்லது கீள் கானும் எண்ணில் தொடர்புகொள்ளவும் என அதிர்வு இணையம் எமது வாசகர்களை வேண்டி நிற்கிறது. அவர் குறித்த விபரங்கள் பின் வருமாறு :புலத்தில் 17/04/2010இல் இடம்பெற்ற மரணம் (கொலை) தொடர்பான முக்கிய அறிவித்தல்இத்தாலி தேசத்தில், பிஸ்தோயா (Lamporecchio(Pistoia)- Italy.) என்னும் இடத்தில் வாழ்ந்த “இராமன் விஜயலக்ஸ்மி” என்னும் 36 வயதுடைய கிளிநோச்சியை பிறப்பிடமாகக் கொண்ட பெண் 17/04/2010 வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டு மரணமடைந்துள்ளார் என இத்தாலிய காவல் மற்றும் இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இப்பெண்தொடர்பான மேலதிக காரியங்களை மேற்கொள்வதற்கு அதாவது, மரணவீட்டுக் காரியங்களை நடாத்துவதற்கு உரித்துடையவர்கள், அல்லது, இப்பெண்ணுடைய உறவினர்களின் தகவல் தெரிந்தவர்கள் அவர்களுக்கு இச்செய்தியினை அறிவித்து எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். அல்லது, நேரடியாக இத்தாலியில் உள்ள இலங்கைத்தூதராலயத்துடன் அணுகுமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள். இத்தாலியில் உள்ள இலங்கைத்தூதராலயத்தின் வேண்டுகோளுக்கிணங்கUNGA “ஒருங்கிணைந்த புதிய தலைமுறை ஒன்றியம்” இத்தாலிய பணிமனைமக்கள் சேவைப்பிரிவுஇத்தாலி -TP+39 3346708523 / +39 3204031624 begin_of_the_skype_highlighting +39 3204031624 end_of_the_skype_highlighting (Mrs.Shana)Mail - arugan@hotmail.it(இதனை அனைத்து இணையங்களும் பாரபட்சமின்றி வெளியிட்டு உறவினர்களை தொடர்பு கொள்ள ஆவண செய்யவும். மற்றைய இணையங்களுக்கும் தயவு செய்து தெரியப்படுத்தவும். )அருகன்திரு. பிரான்சிஸ் மக்ஸிமின் தமிழ் எழுத்தாளரும், இத்தாலியில் குடிவரவு அலுவலகத்தின் அதிகாரியும். தொலைபேசி- +39 3204031624 begin_of_the_skype_highlighting +39 3204031624 end_of_the_skype_highlightingஸ்கைப்- arugan2008இணையம்- http://arugan.spaces.live.com/மின்னஞ்சல் - arugan@hotmail.comயூருப்- arugan2009 Send To Friend


கருணாநிதி சொல்வது நம்பும்படி இல்லை,விஜயகாந்த்..

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வந்தபோது விமான நிலையத்தில் இருந்து வெளியே விடாமல் அவரை திருப்பி அனுப்பிய சம்பவம் தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி பேரவையில் கூறியிருப்பது நம்பக்கூடியதாக இல்லை என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் ஒரு பயணியாக வந்துள்ளாரே தவிர ஒரு முக்கிய அரசியல் பிரமுகராக அல்ல. இந்த விஷயம் பற்றி தனக்கு தெரிவிக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி குறைப்பட்டுக் கொள்வதில் அர்த்தமில்லை. சென்னை விமான நிலையத்தில் மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த தகவல் உடனடியாகத் தெரிந்திருக்கும். அப்படியிருக்க தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி சொல்வது நம்பக்கூடியதாக இல்லை. இந்திய அதிகாரிகள் மூலம் விசா பெற்றுதான் பார்வதி அம்மாள் சென்னை வந்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் தன்னை இறங்கவிடமாட்டார்கள் என்று அவர் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அவரை இறங்கவிடாமல் தடுத்தது இந்திய அரசுதான். ஆகவே இத் தகவல் தெரிந்தும் மெளனம் சாதித்துள்ளது தமிழக அரசு. ஆகவே, தடை ஆணை விதித்த இந்திய அரசும் அதற்கு துணை போன முதல்வர் கருணாநிதியும்தான் மீண்டும் பார்வதி அம்மாள் சென்னைக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக பார்வதி அம்மாள் கோரிக்கை வைத்தால் பரிசீலிப்போம் என்று சொல்வது என்ன நியாயம்? 2003-ம் ஆண்டில் அன்றைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரபாகரனின் பெற்றோர் மீண்டும் இந்தியாவுக்கு வர தடை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அன்றைக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் இருந்த சூழ்நிலை வேறு, இன்றைய நிலை வேறு. 2003-ம் ஆண்டு பட்டியலை 10 ஆண்டுகள் கழித்து தான் பரிசீலிக்க வேண்டும் என்பதில்லை. தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் இந்த தகவல் தனக்கு தெரிந்த உடனேயே இன்றைய சூழ்நிலையை மத்திய அரசுக்கு எடுத்துச்சொல்லி அந்த பட்டியலை ரத்து செய்திருக்கலாம். 1979-ம் ஆண்டிலிருந்தே பிரபாகரனின் பெற்றோர்கள் அவரைப் பிரிந்து தான் வாழ்கின்றனர். 2003-ம் ஆண்டில் இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது மீண்டும் அவர்கள் இங்கிருந்து இலங்கை சென்றனர். பிரபாகரனை இந்தியா பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி என்று அறிவித்ததற்கும் பிரபாகரனின் பெற்றோர்களுக்கும் என்ன சம்பந்தம்? வயதான காலத்தில் தனியே விடப்பட்டு தமிழினத்திற்கு தாய் நாடான தமிழ்நாட்டிற்கு வந்து சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று வந்த 80 வயதான பார்வதியம்மாளை இங்குள்ள அரசுகள் திருப்பி அனுப்பிய பொழுது அந்த தாய் உள்ளம் எத்தகைய வேதனை அடைந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டாமா? எனவே, மனிதாபிமான அடிப்படையிலும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற அடிப்படையிலும், தானே முன் வந்து மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி பார்வதி அம்மாள் தமிழ்நாட்டிற்கு வருவதை தடுத்த அந்த தடை ஆணை பட்டியலை அறவே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். இவ்வாறு அறிக்கையில் விஜயகாந்த் கூறியுள்ளார்

நாம் தமிழர் இயக்கத்தினருக்கான அறிவிப்பு!

நாம் தமிழர் இயக்கத்தவர்க்கு இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது
உலகமெங்கும் பரவியுள்ள நாம் தமிழர் இயக்கத்தவர்கள் மே 18 அன்று மதுரையில் நடைபெறும் தமிழின எழுச்சி அரசியல் மாநாட்டையொட்டி கருத்தரங்குகள்,கலந்தாய்வுகள்,தெருமுனைப்பிரச்சாரங்கள் போன்றவற்றையும் பல்வேறு பொதுப்பிரச்சனைகளில் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றையும் நடத்தி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் புகைப்படங்களுடன் உடனடியாக அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.மேலும் இது போக அனைத்து இடங்களிலும் பல்வேறு முறைகளில் செய்யப்படும் விளம்பரங்கள் போன்றவற்றையும் உடனடியாக அனுப்பி வைக்கவும்.இது அனைத்தையும் இணையத்தில் வெளியிடுவதன் மூலம் நமது இயக்க பணிகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாகவும் அனைவரும் உத்வெகத்துடன் செயல்படுவதற்கு உதவியாகவும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மின்னஞ்சல் முகவரி.naamtamizhar@gmail.com

பையா!திரை நோக்கு.


தனக்கு விருப்பமான ஒரு பெண்ணுடன் பெங்களூரிலிருந்து மும்பை செல்லும் இளைஞன், வழியில் சந்திக்கும் பிரச்சினைகள்தான் கதை.
வேலை தேடிக்கொண்டிருக்கும் பொறியியல் பட்டதாரி இளைஞன் கார்த்தி. வேலைதேடி அப்ளிகேஷன் கொடுத்து சிபாரிசுடன் அலையும் இரண்டொரு சந்தர்ப்பங்களில் தமன்னாவை பஸ் ஸ்டாப்பில் பார்க்கிறார். பார்த்தவுடனே காதலில் விழுகிறார். அதன் பிறகு தனது நண்பனை அழைத்து வர அந்த நண்பனின் காரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்கிறார். அங்கே மீண்டும் தமன்னாவை பார்க்கிறார். தமன்னாவோ கார்த்தியை டிரைவர் என்று நினைத்து காரை வாடகைக்கு அழைக்கிறார். உடனே சம்மதிக்கும் கார்த்தி, ரயிலில் வந்திறங்கும் நண்பனையும், அவரது குடும்பத்தையும் அம்போ என விட்டு விட்டு, தமன்னாவுடன் சென்னை புறப்படுகிறார்.
பயணத்தின் போது தனது அப்பாவின் திருமண ஏற்பாடுகள் பிடிக்காததால் மும்பையில் இருக்கும் தனது பாட்டி வீட்டிற்கு செல்வதாக சொல்கிறார் தமன்னா. வழியில் தன் அப்பாவின் ஆட்கள் பின்தொடர்வது தமன்னாவுக்கு தெரிய வருகிறது, உடனே காரை வேகமாக ஓட்டச் சொல்கிறார். கார்த்தியோ "இது உன்னுடைய பிரச்சினை இல்லை, என்னுடையது" என்று காரை ஓரம் கட்டி அவர்களை துவம்சம் செய்கிறார். பின்பு இருவரும் மும்பை பறக்கின்றனர். கார்த்தியின் பழைய விரோதிகளும் தீர்த்துகட்ட விரட்டுகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்தார்களா? தமன்னாவை கார்த்தி கைபிடித்தாரா என்பது இறுதிக்காட்சி.
துறுதுறுவென வரும் கார்த்தியின் நடிப்பில் கொள்ளை அழகு! நண்பர்களிடம் தன் காதலை கார்த்தி ஃபீல் பண்ணும் இடங்கள் அருமை. லிப்ட் கேட்கிற சாப்ஃட்வேர் ஆசாமியை வண்டியில் ஏற்றி, பின்பு காதலுக்கு வேட்டு வைப்பானோ என்று அஞ்சி நட்ட நடுவழியில் இறக்கிவிடுகிற காட்சியில் சும்மா அமர்க்களப்படுத்தியிருக்கிறார். மொத்தத்தில் கார்த்தியின் சேட்டையால் திரையரங்கமே கலகலக்கிறது.
தமன்னா பொம்மை போல் பளிச் என வந்து தன் மென்மையான நடிப்பாலும், துடிப்பான பெண்மையாலும் வழக்கம்போல நம்மை கவருகிறார். பாடல் காட்சிகளில் தாராளமாய் கவர்ச்சி காட்டியிருக்கிறார். கார்த்தியை டிரைவர் என நினைத்து மும்பை போனதும் பணம் தருகிறேன் என சொல்லும் தமன்னாவின் அப்பாவித்தனம் பளிச். பின்பு காதலின் ஆழம் புரிந்து கார்த்தியை கட்டியணைப்பது ஜீவன்.
நண்டுவாக வருபவர் ஈர்க்கிறார். சோதா வில்லனாக மிலிந்த் சோமன். எந்த அளவு சோதா தெரியுமா... தான் தேடிக் கொண்டிருக்கிற கார்த்தி கண்ணெதிரே போகிறார், ஒரு குடையால் முகம் மறைத்தபடி. அட, அவரை அடையாளமே தெரியாமல் போகிறது வில்லனுக்கு. ஒரு சின்ன மருவை வைத்துக் கொண்டு கெட்டப் மாற்றிவிட்டதாகக் காட்டும் "தமிழ்ப் பட நக்கலு"க்கு குறைவில்லாத காட்சி!
திரையில் வராமல் போனிலேயே கில்லியாக தெலுங்கு பேசும் வில்லி, மகளுக்கே கொடூரம் இழைக்கத் துடிக்கும் அப்பா, ஓடிப்போனவள் மகள் என தமன்னாவை மும்பையின் வசதியான வர்த்தக குடும்பம் என பணக்காரர்களின் பயமான வாழ்க்கையை படம் பிடித்துக் காட்ட முயன்றிருக்கும் இயக்குனர் லிங்குசாமியின் பங்கும், பாங்கும் பிரமாதம். அதேநேரம் சண்டைக்காட்சிகள் லிங்குவின் முந்தைய படமான பீமாவையும், சேஸிங் காட்சிகள் சண்டைக்கோழி, கில்லி படங்களையும், படக்காட்சிகள் ரன் படத்தையும் ஞாபகப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம்.
யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் அனைத்து பாடல்களும் பிரமாதம். "துளி துளி...", "அடடா மழைடா", "என் காதல் சொல்ல...". "சுத்துதே சுத்துதே....." பாடல்கள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்கிறது. பின்னணி இசையிலும் வெளுத்து வாங்கியிருக்கிறார் யுவன்.
யுவனைப்போலவே மயங்க வைத்த மற்றொருவர் ஒளிப்பதிவாளர் மதி. ஆக்ஷன் காட்சிகளில் அதிர வைக்கிற அதே கேமிரா, டூயட்டுகளில் அழகாகிவிடுகிறதே, அற்புதம். கார் சேசிங் காட்சிகளில் ஆங்கில படங்களை நினைவுபடுத்தியிருக்கிறார். ஆன்டனியின் எடிட்டிங் ஒரளவு காட்சிகளை விறுவிறுப்பாக்க உதவுகிறது.
கார் பயணத்தில் கார்த்தியின் நாயகன் இமேஜை உயர்த்தவும், தமன்னா மனதில் இறங்கவும் இறுதிக்காட்சியை இன்னும் வலுவாக தொகுத்து இருக்கலாம். இயக்குனர் லிங்குசாமி, திரைக்கதையில் கொஞ்சமாவது புதுமையை தந்திருந்தால் படத்தின் வெற்றி இன்னும் அமோகமாக இருந்திருக்கும்!

கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் இரு வேடதாரிகள்!




தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் தமிழினத்துரோகசெயற்பாடுகளுக்கு வக்காலத்து வாங்கும்,திராவிடர் கழகதலைவர் கி.வீரமணியும்,விடுதலை சிறுத்தைகள் தலைவர்தொல்.திருமாவளவனும்,தமிழீழதேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின்தாயார் திரு,வேலுப்பிள்ளை பார்வதி அம்மா ஆறுமாத காலவிசாவை சட்டப்படி பெற்று சென்னை வந்தவேளை,கருணையற்றகருணாநிதி அரசு ஈவிரக்கமற்ற முறையில் ஒரு நோய்வாய்ப்பட்டமூதாட்டி என்றும் பாராமல் விமான நிலையத்தில் வைத்தேமலேசியாவிற்கு திருப்பி அனுப்பியது.இச்செயலுக்கு பல்வேறுபட்ட அமைப்புகளும்,அரசியல் கட்சிகளும்கண்டனம் வெளியிட்டு வரும் நிலையில்,இந்த இரு வேடதாரிகளும்நடந்த செயலுக்கு ஜெயலலிதாவே காரணமெனவும்,2002ம் ஆண்டுமத்திய அரசிடம் ஜெயலலிதா பெற்ற தடையுத்தரவினால்தான்இப்படி நேர்ந்ததாகவும்,அப்பாவி முதல்வர் கருணாநிதிக்கு எதுவுமேதெரியாதென்பது போலவும் கருத்துக்களை தெரிவித்திருப்பதானதுதமிழர் மனங்களை மீண்டும் குத்தி காயப்படுத்தும் செயலாகவேநோக்கவேண்டியுள்ளது.

19 ஏப்ரல் 2010

ஐயோ பாவம்!தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது?தெரியாமல் ஒரு முதல்வர்.

கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவ சிகிச்சைக்காக தேசிய தலைவர் தயார் பார்வதி அம்மாள் சென்னை சென்றபோது விமான நிலையத்தில் அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாது, அப்படியே திருப்பி அனுப்பியது தமிழ் நாடு அரசு. இன்று தமிழ் நாடு சட்டமன்றம் கூடியபோது இது குறித்து விவாதிக்க விசேட பிரேரணை ஒன்றை எதிர்க்கட்சிகள் கொண்டுவர முற்பட்டன. அதற்கு பதிலளித்த கருணாநிதி இது குறித்து தாம் எதுவும் அறிந்திருக்க வில்லை எனவும், அடுத்த நாள் காலை பேப்பரில் தான் தான் இச் செய்தியை படித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இவ்வறிக்கையைத் தொடர்ந்து சட்டமன்றில் பெரும் அமளி ஏற்பட்டது. வேடிக்கையும் வெட்கப்படவேண்டிய விடையம் என்னவென்றால், இவருக்கு விமானநிலையத்தில் நடந்தது எதுவும் தெரியாதாம்.சம்பவ தினமன்று கலகமடக்கும் பொலிசார், சென்னை விமான நிலையத்தில் குவிக்கப்படனர். மதிமுக செயலாளர் வைகோ தாக்கப்பட்டார், சன் தொலைக்காட்சி உட்பட பல தொலைக்காட்சிகள் இதனைச் செய்தியாக வெளியிட்டன, இருப்பினும் இச் செய்தி முதல்வர் காதுகளுக்கு எட்டவில்லை என்பது, பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் என்று கூறுவதுபோல உள்ளது. மிகவும் சிறு பிள்ளைத்தனமாக தனக்கு எதுவும் தெரியாது என்று இவர் கூறியிருக்கும் கருத்துகள் அப்பட்டமான பொய்.தமிழ் நாட்டில், ஸ்ராலின் ஆகட்டும் அல்லது அழகிரியாகட்டும் இவர்கள் இருவருக்கும் தெரியாமல் எதுவும் நடந்துவிடப் போவது இல்லை. இச் சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் உடனே கலைஞரை அல்லது அவரது குடும்பத்தை நிச்சயம் தொடர்புகொண்டிருப்பார்கள். சோணியா அம்மையாரை திருப்திப் படுத்த கலைஞர் ஆடிய நாடகமே இது. எத்தனையே வரலாற்றுப் பிழைகளை இழைத்துள்ள கலைஞர் இறுதிக்கட்டத்திலாவது மனம் மாறுவார் என்று பல தமிழர்கள் காத்திருந்திருக்கக் கூடும். ஆனால் அவர் போக்கு என்ன என்பதை தற்போது தமிழர்களுக்கு அவர் செய்கை நன்கு புரியவைத்துள்ளது.
(செய்தி:அதிர்வு.கொம்,தலைப்பு மாற்றப்பட்டுள்ளது)

சாள்ஸ் அன்ரனி அவர்களின் 25வது பிறந்த நாள்!

தமிழீழ தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மகன் சாள்ஸ் அன்ரனியின் 25 வது பிறந்ததினம் இன்றாகும் அவர் ஏப்பிரல் மாதம் 18ம் திகதி 1985ம் ஆண்டு பிறந்தார். கடந்தவருடம் மே மாதத்தில் ஏற்பட்ட கடுமையான போரில், காட்டிக்கொடுப்பால் வஞ்சகமாகக் கொல்லப்பட்டார் சாள்ஸ் அன்ரனி. அவர் புலிகளின் வான் படையிலும், கணணி பொறியியல் அமைப்புகளிலும் பல நுற்ப்பமான அறைவைப் பெற்றிருந்ததுடன், இறுதிப் போரில் பல தாக்குதலை பொறுப்பேற்று நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவர் பெயர் தமிழீழப் போராட்டப் பாதையில் ஒரு மயில் கல்லாக எப்போதும் நினைவுகூரப்படும் என்பதில் ஐயமில்லை.

18 ஏப்ரல் 2010

புலிகள் தாக்கலாம்!வாக்கு எண்ணும் நிலையம் மாற்றம்.

திருகோணமலை மாவட்டம் கும்புருபிட்டிய தேர்தல் தொகுதியில் நடந்த வன்முறைகள் காரணமாக அங்கு நாளை மறுதினம் மறுவாக்கெடுப்பு நடக்கவுள்ளது. அந்த வாக்குகளை அன்று மாலையே அதே கும்புருப்பிட்டிய வாக்குச் சாவடியில் வைத்துக் கணக்கெடுத்து முடிவு வெளியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது போலீசின் அறிவுறுத்தலின் பிரகாரம் மேற்படி வாக்கெண்ணும் நிலையமானது திருகோணமலை பிரதேச செயலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.கும்புறுப்பிட்டி பகுதியில் இப்போதும் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகளால் வாக்கெண்ணும் பணிக்கு இடைஞ்சல்கள் ஏற்படலாம் என்ற காரணத்தாலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 ஏப்ரல் 2010

தேசியத்தலைவரின் தாயார் திருப்பி அனுப்பப்பட்டார்!




தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த தாயாரை, உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடித்த கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள். இச் செயலுக்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை:



தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து ஆறு மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு இன்று (16.04.2010) இரவு 10:45 மணிக்கு விமானத்தில் வந்தார்.



படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக விஜயலட்சுமி என்ற பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.



கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல் வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர். பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிச்சைக்காக அவர் இங்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.



இந்திய அரசு ஆறு மாத காலத்திற்குரிய விசாவை இன்று காலையில்தான் அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்? அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும். காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்திய அரசுமே பொறுப்பாவார்கள்.



அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவரது உடல்நலம் மட்டுமே எங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை.



விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்ற போது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள். விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நாங்கள் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களைப் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்து பிடித்துத் தள்ளும் அளவிற்கு காவல்துறையினர் அட்டூழியம் புரிந்தனர். தொடர்ந்த தள்ளு முள்ளுக்கு நடுவேதான் நாங்கள் விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியையே அடைய முடிந்தது.



விமான நிலையத்தில் தனியான பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். ஆனால் சென்னை புறநகர் காவல்படையினர் அத்து மீறி செயல்பட்டு எங்களைத் தடுத்தார்கள். முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாமல் இது ஒரு போதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விசா வழங்கிய பிறகு கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இரக்கமற்ற இந்த கொடிய செயலுக்கு அவரே முழுமையான பொறுப்பாளி ஆவார்.



உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியத் தலைவரான பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்தத் தாயாரை, தாய் தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடித்த கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.



15 ஏப்ரல் 2010

பேர்லினில் மாபெரும் பேரணி.

எல்லாம்  முடிந்துவிட்டதென்று ஒப்பாரி வைத்துக்கொண்டிருப்பதற்கான தருணம் அல்ல இது.இடிகளைத் தலைமீது தாங்குவது ஈழத்தமிழினத்திற்கு இது ஒன்றும் முதன்முறையும் அல்ல.யாருடைய மக்கள் நாம்!அன்பான உறவுகளே!எங்கள் மக்களின் கண்களில் கண்ணீர் இருக்கும்வரை அதைத்துடைப்பதற்கான நமது கடமைக்கும் ஓய்வு கிடையாது.சிங்களப்பேரினவாதத்தின் ஜனநாயகத்திற்கு எதிரான தமிழ் விரோதப்போக்கை இப்போதுதான் மேலைநாடுகள் நேருக்கு நேரே அறியத்தொடங்கியுள்ளன.தனது சிங்களமக்களுக்கான அரசாக விளங்கக்கூடிய தகுதியே இல்லாத சிறிலங்காவின் அதிகாரபீடம்,எப்படி தமிழ்மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்து ஜனநாயகத்தை பேணிக்கொள்ளப்போகின்றது என்ற சந்தேகம் முன்னணி நாடுகளிடம் வலுக்கத்தொடங்கியுள்ளது.போர்க்காலங்களில் சிறிலங்கா மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கான சாட்சியங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.பயங்கரவாதத்திற்கு எதிரானபோர் என்ற முலாம் பூசப்பட்டு மிகக் கவனமாக சர்வதேச நாடுகளிடம் சிறிலங்கா மேற்கொண்டிருந்த பொய்ப்பரப்புரையின் முகத்திரை இப்போது கிழிந்து கொண்டுவருகிறது.இது வெற்றியின் பின்னரான பலவீனம்.மமதையின் உச்சியில் நின்றுகொண்டு நீயும் பயங்கரவாதிதான் என ஐரோப்பிய நாடுகளை சிறிலங்காவின் அதிகாரவர்க்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.உண்மையை உலகம் உணரத்தொடங்கிவிட்டது.
நமது மக்கள் தத்தம் வாழ்விடங்களில் வாழக்கூடிய இயல்பான நிலைமை உடனடியாக தோற்றுவிக்கப்பட வேண்டும்!
தடுப்பு முகாம்களில் எந்தவொரு விசாரணையுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டு,தத்தம் குடும்பங்களுடன் வாழ அனுமதிக்கப்பட வேண்டும்!
சிங்கள ஆட்சியாளர்களால் தமிழ்மக்கள் மீது கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் ஐ.நா.பொதுமன்றில் விசாரிக்கப்படவேண்டும்!
இலங்கைத்தீவிலே தமிழ் மக்களின் இன உரிமைகள் மதிக்கப்பட்டு,கெளரவமான வாழ்க்கையினை வாழ்வதற்கு ஏதுவாக தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவான தீர்வு எட்டப்படவேண்டும்!
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஜெர்மனியத் தலைநகர் பெர்லினில் மாபெரும் பேரணி!
படுகொலை செய்யப்பட்ட எம் ஆயிரமாயிரம் மக்களையும்,அவர்களை காப்பதற்காய் தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களின் கடைசிக் கணங்களையும் தீயாய் நெஞ்சங்களில் சுமந்து வீறுகொண்டு எழுவோம்!
இடம்:Klingelhöfer str ,1
10785 Berlin (Norway botschaft )
காலம்:20 .04 .2010
காலை 10 :30 இருந்து 15 :௦௦ மணிவரை.
அறிக்கை:சம உரிமைகளுக்கான தமிழர் மையம்.

சாதாரண விடுதியில் அசின்.

பக்கா சைஸ் பர்கரையெல்லாம் பார்த்த அசினுக்கு சுக்கா ரொட்டி சைசுக்கு இருக்கும் லாட்ஜ் என்றால் எப்படியிருக்கும்? உதட்டை பிதுக்கி ம்ஹ§ம் என்று சொல்ல முடியாத இக்கட்டில் இருக்கிறார். என்னாத்துக்கு இத்தன இழுப்பு?




காவல்காரன் படப்பிடிப்புக்காக காரைக்குடியில் தங்குகிற விஷயத்தில்தான் இத்தனை குழப்பம். மும்பையில் பெரிய பெரிய ஹோட்டல்களில் ரூம் போட்டு கொடுப்பார்கள். அதுவும் சரிபட்டு வரவில்லை என்று மும்பையில் வீடே வாங்கியிருக்கிறார் அசின். அப்படியாப்பட்ட அசினுக்கு காரைக்குடியில் இருக்கிற தம்மாத்துண்டு லாட்ஜ் சரிப்படுமா? ஆனாலும் அசினின் வருகைக்காக தன்னையே புதுப்பித்து கொண்டு தயாராகி வருகிறது அங்குள்ள மலர் லாட்ஜ். பாத்ரூமுக்கே பல லட்சம் செலவு செய்திருக்கிறார்களாம். அதுமட்டுமா, இந்த பாத்ரூமுக்கு அசினையை அழைத்து சென்று காட்டி, “பிடிச்சிருக்குங்களாம்மா” என்றெல்லாம் பேசி கரைத்திருக்கிறார்கள். லாட்ஜ், ஓட்டல்களில் கேமிரா தொல்லை இருக்கும் என்பதால், இந்த பாத்ரூமை இஞ்ச் பை இஞ்ச்சாக அலசி ஆராய்ந்த அசின், பிடிச்சுருக்குன்னு சொன்னதும்தான் பூ மலர்ந்ததாம் லாட்ஜ் அதிபரின் முகத்தில்.இங்கதான தங்குறாரு இளைய தளபதியும்?

தொழில் கட்சியின் தேர்தல் அறிக்கை.

பிரித்தானியாவில் ஆளும் தொழில் கட்சி நடைபெறவுள்ள தேர்தல் குறித்த தமது விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையில் நடைபெற்ற போரில் உயிரிழந்த மக்களுக்கு புலிகளும் அரசுமே பதில் கூறவேண்டும் என முதலில் குறிப்பிட்டுள்ளது. பின்னர் போர் குற்றம் தொடர்பாக விசாரணைகளை நடத்த தாம் ஒத்துழைப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த முகவரியில் தொழில் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தரவிறக்கம் செய்து பார்வையிடலாம்.




http://www2.labour.org.uk/manifesto-splash



பிரித்தானியாவின் பொதுத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கணிசமாக தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரித்தானிய கட்சிகள் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதில் பெரு ஆர்வம் காட்டிவருகின்றன. குறிப்பாக சில பிரித்தானிய எம்.பிக்களின் ஆசனத்தை உறுதிசெய்யும், அல்லது வெற்றியடையச் செய்வது தமிழர்கள் கைகளில் இருப்பதால், இத் தேர்தல் சமயத்தை தமிழர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது நல்லது. இத் தேர்தலில் தமிழர்கள் வாக்களிப்பதன் மூலம், அரசிடம் நாம் பேரம் பேசி எமது அரசியல் முன் நகர்வுகளை முன்னெடுக்க ஏதுவாக அமையும்.



பிரித்தானிய தொழில் கட்சி கூறியிருப்பது போல இலங்கை அரசுக்கு எதிராக போர் குற்ற விசாரணைகளை நடத்த உதவுமேயானால், அது ஒரு மிக முக்கிய நகர்வாகக் கருதப்படும். வெறுமனவே தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின்னர் அவற்றை நிலுவையில் போடும் கட்சிகள் போல தொழில் கட்சி செயல்படாமல் இருக்க பிரித்தானிய தமிழ் அரசியல்வாதிகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற கருத்தும் மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

14 ஏப்ரல் 2010

ஊர்காவற்றுறையில் கோஷ்டி மோதல்.

ஊர்காவற்துறையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இரு கோஷ்டிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலே வாள்வெட்டில் முடிவடைந்தது.இதில் காயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை கரம்பன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வை.நிர்மலன் (வயது – 28), ஜே.பற்றிக் (வயது – 30), பி.ஜென்சிகா (வயது – 30), ஜெ.தயானந்தா (வயது – 22) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

(ஆதாரம்:வீரகேசரி)

திரைப்பார்வை அங்காடி தெரு.


தமிழ்சினிமாவில் எப்போதாவதுதான் இதுபோன்ற படங்கள் வரும். புத்தியும் மனசும் ஒரு சேர வலிக்கிற மாதிரி 'பொளேர்' என்று அறைந்துவிட்டு போகும்! ரங்கநாதன் தெருவின் கூச்சலும், நெரிசலும் இரண்டரை மணி நேரத்தில் நம்மை விட்டு கடந்து போனாலும், இரண்டொரு நாட்கள் விடாமல் ஒலிக்கிற இரைச்சலில் ஒன்று 'தாயோளி முண்ட...'
லிங்கமும் கனியும் மட்டுமல்ல, ஒரு சில காட்சிகளில் வந்து போகிற கேரக்டர்கள் கூட, பசுமரத்தாணி போல பஞ்ச் வைத்துவிட்டு போவதுதான் வசந்தபாலனின் ஸ்டைல்!
ரங்கநாதன் தெருவின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் ஒரு வணிக நிறுவனத்தை குறித்துதான் இயங்குனரின் பார்வை விரிந்திருக்கிறது. லேபர் சட்டங்களை வேஸ்ட் பேப்பர் போல கிழித்தெறியும் அதன் அதிகார பார்வையில், கண்கூசி நெளிகிற எத்தனையோ தொழிலாளர்களின் துயரத்தை சொல்ல, அவர்களை விடவும் கடுமையாக உழைத்திருக்கிறார் வசந்தபாலன். தோழரே, வாழ்க!
நள்ளிரவு. பஸ் ஸ்டாண்டில் கால்களால் உரசிக் கொள்ளும் காதலர்களாக காண்பிக்கப்படுகிறார்கள் மகேஷ§ம், அஞ்சலியும். இறுதியில் அவ்வளவு உற்சாகமாக விளையாடிய கால்கள் இரண்டுமே அஞ்சலிக்கு இல்லை என்று முடிகிறது கதை. இடையில் நடப்பது என்ன? கிராமத்திலிருந்து கொண்டுவரப்படும் இத்தகைய தொழிலாளர்கள் நாள் முழுக்க நின்று கொண்டே வேலை பார்க்கிறார்கள். மதிய உணவுக்காக ஓடோடி செல்லும் அவர்கள் திரும்பி வர தாமதமாகும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் கட். அந்த மதிய உணவுக் கூடம் இருக்கிறதே, அதற்கு பன்றிகள் கூடமே பரவாயில்லை. உள்ளே சூப்பர்வைசர்கள் என்று சொல்லப்படும் இரண்டாம் தர முதலாளிகளின் பாலியல் வக்கிரம். கொடூர தண்டனைகள் என்று வசந்தபாலன் கைகாட்டுகிற திசையெல்லாம் மனித உரிமை மீறல்கள்!
உறங்குகிற தொழிலாளர்களுக்கு புரண்டு படுக்க கூட இடமில்லாதளவுக்கு நெரிசல் மிகுந்த வாழ்க்கை. அந்த நேரத்திலும் காவலுக்கு கைத்தடியுடன் ஒரு காவலாளி! இப்படி காட்சிக்கு காட்சி கொத்தி கிழிக்கப்படுகிறது முதலாளித்துவத்தின் முகத்திரை. இங்கேதான் காதல் வளர்க்கிறார்கள் அஞ்சலியும் மகேஷ§ம். அந்த நிறுவனத்தின் எழுதப்படாத விதி, காதல் கூடாது! அதையும் மீறி காதலிக்கும் இருவரும் மாட்டிக் கொள்கிற காட்சியும், அவர்களுக்கு தரப்படும் தண்டனையும் தியேட்டரை ஒரேயடியாக உச் கொட்ட வைக்கிறது.
கழுத்தை பிடித்து வெளியே தள்ளப்படும் இருவரும் புது வாழ்க்கையை துவங்கும்போது மீண்டும் விதியின் கோரத் தாக்குதல். அகோரமான விபத்தொன்றில் கால்களை பறிகொடுக்கிறார் அஞ்சலி. அதன்பின்பும் தொடரும் கதையில் நம்பிக்கை துளிர்த்ததா? முடிவு.
புதுமுகம் மகேஷ§க்கு இது முதல் படம் என்றால் நம்பவா முடிகிறது? கண்ணெதிரே காதலிக்கு தரப்படுகிற தண்டைனையை கண்டு ஆவேசப்படும் அவர், மூர்க்கத்தனமாக சூப்பர்வைசரை தாக்குவது சினிமா ஹீரோயிசம் அல்ல. அடங்கிப் போகிற ஒவ்வொரு சாமானியனுடைய எழுச்சி! கிராமத்தில் ஒரு காதல் இவருக்கு. நகைப்புக்காக என்றாலும் சகிக்கலை சாமி. (கேஸ் ட்ரபுளால் பிரியுதாம் அந்த காதல்)
நடிப்பும், அதற்கு அட்சர பொறுத்தமான டப்பிங்குமாக அசத்தியிருக்கிறார் அஞ்சலி. அவ்வளவு கறாரான நிறுவனத்தில் ரகசியமாக சீட்டு பணம் பிடிக்கும் சாமர்த்தியம் அழகென்றால், குடும்ப சூழலுக்காக தன்னை விட்டு விலகும் மகேஷ் மீது காட்டுகிற கோபமும் அழகு. சூப்பர்வைசர் வெங்கடேஷ் பார்வையில் சிக்கிவிட்டோமே என்று அச்சம் காட்டும் அதே கண்களில் சகலவிதமான உணர்ச்சிகளும் கபடி ஆடிவிட்டு போகிறது. தமிழ்சினிமாவுக்கு மீண்டும் ஒரு அவார்டு நாயகி.
அண்ணாச்சியாக நடித்திருக்கிறார் பழ.கருப்பையா. சில காட்சிகளே வந்தாலும் அந்த மிடுக்குப் பார்வை மிரட்டல். ஒவ்வொரு நாள் கடை திறக்கும்போது நடக்கும் சம்பிரதாயமும், மரியாதைகளும் மக்கள் அறிந்திராத அரிதான காட்சிகளில் ஒன்று. கவனத்தை ஈர்த்த இன்னொருவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். இவர் வருகிற காட்சிகளில் எல்லாம் நம்மையறியாமல் ஒரு நடுக்கமே வந்துவிடுகிறது. இவர் வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகளில் பாதி சென்சார் ஆபிசர்களுக்கு புரியாமல் போவதால் தாயோளி முண்டைகளும், கூ... களும் சரளமாக விழ அனுமதித்திருக்கிறார்கள். அந்த கிராமத்து கிழவியின் "அறுத்துபுடுவேன்...." டயலாக்குக்கு தியேட்டரே துவம்சம் ஆகிறது. மகேஷின் நண்பனாக வரும் பிளாக் பாண்டிக்கும் மனசுக்குள் ஒரு தனி இடம் கிடைக்கிறது.
சூப்பர்வைசரின் மிரட்டலுக்கு பயந்து காதலையே கொச்சைப்படுத்துகிற அந்த இன்னொரு தொழிலாளியும் தற்கொலை செய்து கொள்ளும் அந்த காதலியும் கூட மனசை உலுக்கிவிட்டு போகிறார்கள். சினேகாவின் விளம்பர காட்சி இயல்பாக அமைந்தாலும், பின்னணியில் ஒரு பொருத்தமான அர்த்தம் இருப்பதாகவே படுகிறது.
திரும்ப திரும்ப கடைக்குள்ளேயே கேமிரா சுழல்கிறது என்று நினைக்கிற இயக்குனர் மெல்ல அதிலிருந்து வெளியே வருகிறார் மேலும் சில கேரக்டர்களின் உதவியோடு! ஆனால், அங்கேயும் தலைவிரித்தாடுகிறது சோகம். ஹைக்கூ போல முடியவேண்டிய காட்சிகள் கூட, நீளமாக சொல்லப்படுவதால் சற்றே அலுப்பு.
தலா ஒரு பாடலை முணுமுணுக்க வைக்கிறார்கள் இசையமைப்பாளர்களான விஜய் ஆன்ட்டனியும் (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை), ஜி.வி.பிரகாஷ§ம் (உன் பேரை சொல்லும்போதே). எதையெதையோ செதுக்கிய வசந்தபாலனுக்கு பின்னணி இசையை கன்ட்ரோல் செய்ய முடியாதளவுக்கு என்ன பிரச்சனையோ? கூறு போட்டிருக்கிறார் விஜய் ஆன்ட்டனி.
ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவில் மெனக்கெடல் தெரிகிறது. ஜெயமோகனின் வசனங்களில் பிராவகமெடுத்து ஓடுகிறது வட்டார பாஷை.
'எடுத்துக்கோ எடுத்துக்கோ... அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோ' என்ற ஸ்லோகனை 'படம் எடுத்துக்கோ...' என்று புரிந்திருக்கிறார் வசந்தபாலன். அங்காடிக்குள் பெருச்சாளி புகுவதுதான் வாடிக்கை. ஆனால் ஒரு புலியே புகுந்து புலனாய்ந்திருப்பது ஆச்சர்யம்தான்!
-ஆர்.எஸ்.அந்தணன்

புலிகள் அறிக்கை.

தவறான முறையில், தவறான சக்திகளால் பொட்டு அம்மானின் பெயரில் வெளியிடப்பட்டதாக உங்களுக்கு வரும் எந்தவொரு அறிக்கையையும் நம்ப வேண்டாம். ஏற்கனவே ல்ட்டெப்ரெச்ச் என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தவர்கள் தோல்வியடைந்த நிலையில் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கி பொட்டு அம்மானின் பெயரில் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதை சற்றும் பொருட்படுத்தாது இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.இதுதான் எமது அதிகாரபூர்வ ஏடுகள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள வலைத்தளம். இதையொத்த பெயர்களில் வரும் ஏனைய தளங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். http://viduthalaipulikal.net

நாம் தமிழர் கொடி அறிவிப்பு.

நாம் தமிழர் கொடி அறிவிப்பு, பேரணி, பொதுக்கூட்டம் தஞ்சாவூரில் மிக எழுச்சியாகவும், பிரம்மாண்டமாகவும் நடந்தேறியது. நாம் தமிழரின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நாம் தமிழரின் புதிய கொடியை வெளியிட்டார். நாம் தமிழர் பேராசிரியர் தீரன் கொடி விளக்கவுரை ஆற்றினார்.
முன்னதாக தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் இருந்து மாலை 5 மணி அளவில் புலிக் கொடி பேரணி துவங்கியது. செந்தமிழன் சீமான் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இப்பேரணியில் யானை ஊர்வலம், குதிரைகள் அணிவகுப்பு, மயிலாட்டம், மாடாட்டம், நையாண்டி மேளம், பறை இசை போன்ற தஞ்சை மண்ணுக்குரிய கலைகள் நிகழ்த்தப்பட்டன. பேரணியில் குடந்தை நாம் தமிழர் புகழ்மாறன் என்ற வினோத் தலைமையில் நிகழ்ந்த சிலம்பாட்டக் குழுவின் சாகச காட்சிகள் பலத்த வரவேற்பை பெற்றன. பேரணி துவக்கத்தில் உடையாளூர் இராசராசன் நினைவிடத்தில் இருந்து நாகை நாம் தமிழர் மாறன், ராஜ் குமார் தலைமையில் ஊர்வலமாக வந்த குழுவினர் கொண்டு வந்த தீச்சுடர் மற்றும் புலிக் கொடியை செந்தமிழன் சீமான் பெற்றுக் கொண்டார். பேரரசன் ராசராசன் அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்ட தஞ்சை திலகர் திடலில் பாசறை பாணர் தேனிசை செல்லப்பா அவர்களின் உணர்வெழுச்சி கொள்கை பாடல் கச்சேரி நடைப்பெற்றது.
பிறகு மாலை 6.30 மணி அளவில் தஞ்சை திலகர் திடலில் நடைப்பெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திரைப்பட உதவி இயக்குனர்களின் கருப்புக்குரல் வழங்கிய இராச ராச சோழன் சரித்திர நாடகம் மிக அற்புதமாக நடந்தது. சோழ மன்னன் சிங்களர்களை தோற்கடித்து புலிக் கொடி நட்டதை மிக அற்புதமான வகையில் அய்கோ தலைமையிலான கருப்புக்குரல் குழுவினர் நிகழ்த்திக்காட்டினர். பிறகு நடந்த பொதுக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் நாம் தமிழரின் புதிய புலிக்கொடியை வெளியிட்டார். நிகழ்வில் மாநில,மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். பேராசிரியர் தீரன் கொடி விளக்க உரை ஆற்றினார். பேராசிரியர் தீரன் பேசிய போது புலிக்கொடியின் வடிவமைப்புப் பற்றியும், அதன் வரலாறு பற்றியும் பேசியது கருத்தை கவர்வதாக இருந்தது. இந்நிகழ்வில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, பேராசிரியர் முனைவர் ச.மணி ,அருட்தந்தை சூசை,திலீபன், ஜெயசீலன், இயக்குனர் சிபி சந்தர் உள்ளீட்ட பலர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். திருவாரூர் தென்றல் சந்திரசேகர் தீர்மானங்கள் வாசித்தார். பேரணி ,பொதுக்கூட்ட ஏற்பாடுகளை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் நல்லதுரை, வழக்கறிஞர் மணிசெந்தில் என்ற திலீபன் , மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வீரக்குமரன், கருணாநிதி ஆகியோர் மிக எழுச்சியாகவும், மிக பிரமாண்டமாகவும் செய்திருந்தனர். வாண வேடிக்கைகளுடன் மிகப் பிரம்மாண்டமாக நிகழ்ந்த இந்நிகழ்விற்காக தஞ்சாவூர் நகரமே விளம்பரத் தட்டிகளாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
செந்தமிழன் சீமான் இறுதியாக பேசும் போது புதிய புலிக் கொடியின் விளக்கத்தினை அளித்தார். தமிழினத்திற்கு எதிராக எது வந்தாலும் முதலில் தடுப்பதையும், பிறகு அடிப்பதையும் புலி வெளிப்படுத்துகிறது எனவும், சுற்றி இருக்கும் கருப்பு வட்டம் தமிழர்களின் இன்றைய நிலையை குறிக்கிறது எனவும், தமிழீழம் தமிழர்களின் தேசம் எனவும் , தமிழ்த் தாயின் மடியில் அந்நியன் தலை வைத்து படுத்திருக்கிறான் எனவும் , அவனை விரட்டாமல் தமிழர்கள் விழி மூடாது எனவும் ,திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆண்டு இந்த மண்ணை நாசப்படுத்தி விட்டன எனவும், நாம் தமிழர் இவ்விரு கட்சிகளோடு எந்தக் காலத்திலும் கூட்டணி அமைக்காது எனவும், மே 18 ல் மதுரையில் தோன்றும் நாம் தமிழர் தனிப் பெரும் கட்சியாக வளர்ந்து உலக தமிழினத்திற்காக போராடும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியினை மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் என்ற திலீபன் தொகுத்து வழங்கினார்.

புது வருடம்.


இன்று விகிர்த்தி வருடம் பிறந்துள்ளது,இவ் வருடப்பிறப்பானது

சகல செளபாக்கியங்களையும் எம் மக்களுக்கு வழங்கி,

அவர்களை துன்ப துயரங்களில் இருந்து விடுவித்து,நல்

நிம்மதியை வழங்க வேண்டுமென ரவீஸ் பசுபதி.கொம்

மனதார வேண்டி,அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை

தெரிவித்துக்கொள்கிறது.

13 ஏப்ரல் 2010

பாசம்.

பாசம் என்பதெல்லாம் இன்று பேச்சளவில் தானா?
உண்மை பாசமென்பது இன்று உதட்டளவில்தானா?
மனிதன் தனக்குள் தானே ஏன் முட்டி மோதுகிறான்?
சிந்திப்போம் அன்பர்களே!
போலி வாழ்வை கிழித்தெறிந்து,அன்பெனும் கூடு கட்டி
கூடி வாழ்வோம் சொந்தங்களே!
வேசங்களை எல்லாம் பாசமென நம்பி ஏமார்ந்த உறவுகள்
தங்கள் வேதனைகளை எல்லாம் இங்கே கொட்டி
மனதினை ஆட்ருப்படுத்தி கொள்ளுங்கள் உறவுகளே.
நன்றியுடன்
ரவீஷ் பசுபதி.

வணக்கம் நேயர்களே!

அன்புடன் வணக்கம்!

இத்தளத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை

உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் ,

நீங்களும் உங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களை

இங்கே கொண்டுவரலாம் ,அவை யாவும் கண்ணியம்மிக்க

வகையில் எவரையும் புண்படுத்தாமலும் இருக்க

வேண்டுமென தயவாகக் கேட்கிறேன் .

நன்றியுடன்

ரவீஸ் பசுபதி .