30 ஜூன் 2011

தமிழர்கள் ஏமாறப் பிறந்தவர்கள் இல்லை.பொய்லி காட்டம்.

இலங்கை அரசாங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் செயல்களுக்கு உடனடி விசாரணை நடத்தவேண்டும் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளமை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பேராசிரியர் பொய்லி, இலங்கை அரசாங்கம் எதுவித விசாரணையை நடத்தவோ, யாரையேனும் குற்றவாளியாக நிரூபிக்கவோ தனக்கு உத்தேசமில்லை என்பதை தெளிவாகக் காட்டிவிட்டது. தொடர்ந்தும் தான் அழித்துவரும் தமிழர்களுடன் அரசியல் சமரசம் செய்ய மட்டுமே அது விரும்புகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வன்னியில் 40000 க்கும் மேற்பட்ட தழிழர்களை அழித்த இலங்கை அரசை விசாரிப்பதற்கென சுயாதீன ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐ,நா செயலாளருக்கு அழுத்தம் கொடுக்கும் காலத்தை ஒபாமா அரசு இப்போது கடந்து விட்டது. இவ்வாறு ஒரு ஆணைக்குழு அமைத்தால், இலங்கையில் நடக்கும் இன அழிப்பை நிறுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியைக்கூட அனுப்பக்கூடும் என்றும் அவர் தனது கருத்தில் கூறியுள்ளார்.
இல்லையெனில், அமெரிக்காவின் கொள்கையானது இதுவொரு நகைச்சுவை, ஒரு மோசடி, ஏமாற்றல் மற்றும் பிரச்சாரம் என்று தாமே நிரூபிக்கும்.தமிழர்கள் ஏமாற பிறந்த குழந்தைகள் இல்லை என்று தெரிவித்துள்ளார் பொய்லி.

வடமராட்சியில் குண்டு சத்தங்கள்!மக்கள் பீதியில்.

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று இரவு தொடர்ச்சியாகக் குண்டுச் சத்தங்கள் கேட்டதாகத் தென்மராட்சிக் கரையோரப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
நேற்று இரவு 8 மணிமுதல் சுமார் 10 நிமிடங்களுக்கு இந்தக் குண்டுச் சத்தங்கள் நீடித்ததாகவும், குண்டுச் சத்தங்களின் பின்னர் அந்தப் பகுதியில் இருந்து வானத்தை நோக்கி வெளிச்சக் குண்டுகளும் ஏவப்பட்டதாகவும் இதனால் தென்மராட்சி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலில் குண்டுச் சத்தங்கள் கேட்டதாகவும் பின்னர் ஏவப்பட்ட வெளிச்சக் குண்டுகளால் தென்மராட்சி கரையோரப் பிரதேசம் பிரகாசமாகக் காணப்பட்டதாகவும் வரணி வாசி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்த மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இலங்கை சட்டத்தரணிகள் பேரவையின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு.

இலங்கை சட்டத்தரணிகள் பேரவையினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சர்வதேச சட்டத்தரணிகள் பேரவை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு நியமனத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் பேரவை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
எனினும், இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக் கூடியத்தல்ல என சர்வதேச சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமை, சட்டம் ஒழுங்கு மற்றும் ஜனநயாகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக குரல் கொடுப்பதே சட்டத்தரணிகள் பேரவையின் கடமையாகும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க இலங்கை சட்டத்தரணிகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டுள்ளனவா என விசாரணை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கும் நோக்கில் நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமை விவகாரத்தில் சர்வதேச சமூகத்துடன் ஒன்றிணைந்து காத்திரமான நடவடிக்கை எடுக்க இலங்கை சட்டத்தரணிகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

29 ஜூன் 2011

சனல்போர் மீது குற்றம் சுமத்தும் பேரினவாத சிங்களவர்.

ஊடக நெறிமுறைகளை முழுமையாக மீறி, புலிகளின் கொடூரமான செயற்பாடுகளை மூடி மறைத்தமை தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி சேவைக்கு தண்டனை வழங்குமாறு கோரி, லண்டனில் உள்ள சிங்களவரான எஸ்.டி.சில்வா, பிரித்தானிய தொலைக்காட்சி சேவைகள் தொடர்பான பெறுப்பு கூறும் நிறுவனமான ஒப்கோம் நிறுவனத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.
செனல் 4 தொலைக்காட்சி விடுதலைப்புலிகளிடம் நிதி உதவியை பெற்றே இலங்கைக்கு எதிராக திரைப்படத்தை தயாரித்துள்ளதாகவும் இலங்கை இராணுவத்தினரால் காப்பற்றப்பட்ட தமிழர்கள் குறித்து செனல் 4 செவ்விகளை ஒளிப்பரப்பவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் சில்வா என்ற பேரினவாத சிங்களவர் கூறியுள்ளார் எனவும் தெரிய வருகின்றது.

சர்வதேச மனித உரிமை மீறல் தொடர்பில் உடனடி விசாரணை அவசியம்.

சர்வதேச மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
உரிய விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உலக நாடுகளுக்கு ஏற்படும் என குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் நம்பகமானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலான சுயாதீன விசாரணைகளுக்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் முழுமையான ஆதரவினை வழங்கும் என தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் முதன்மைக் கடமைகளில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறெனினும், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு ரீதியான விசாரணைகளை நடத்த முடியாத சூழ்நிலை காணப்பட்டால், சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச தரத்தில் விசாரணைகளை நடத்தி குற்றச் செயல்களை ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியும் என்பதனை இலங்கை அரசாங்கம் துரித கதியில் நிரூபிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்கச்சார்பற்ற விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இலங்கை அரசாங்கம் உரிய முனைப்புக் காட்டத் தவறினால் மாற்று வழிகள் குறித்து சர்வதேச சமூகம் சிந்திக்க வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்;ட தமிழ் பெண் போராளிகளின் காட்சிகள் அடங்கிய வீடியோ ஆவணங்களை செனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பியதன் மூலம் இலங்கைக்கு கடும் அழுத்தங்கள் ஏற்பட்டதாக ஏ.எப்.பி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
இதேவேளை, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சகல குற்றச்சாட்டுக்களையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

28 ஜூன் 2011

தம்முடன் சேர்ந்து பொய்யுரைக்க தமரா குணநாயகத்திற்கு பதவியுயர்வு.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான தமரா குணநாயகம் என்பவர் ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, இந்த விடயம் குறித்து முறைப்பாடு செய்வதற்கு ஜெனீவா செல்லும்போது. அங்கு சென்ற அவர் தமரா குணநாயகத்துடனேயே தங்கி இருந்து தனது பணிகளை மேற்கொள்ளுமளவுக்கு நம்பிக்கையும் சினேகமும் உள்ளவரென தெரியவருகிறது.
கியூபாவிலுள்ள சிறிய இலங்கைத் தூதரகத்தில் சிறிலங்கா தூதுவராகத் தற்போது கடமையாற்றி வரும் தமரா குணநாயகம் தற்போது மிக முக்கியத்துவமிக்க தூதுவர் பதவிக்கு ஜனாதிபதி மஹிந்தவால் நியமிக்கப்பட்டுள்ளதனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. இவர் 1970 ஆம் ஆண்டுகளின் போது இலங்கையில் செயற்பட்டு வந்த மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் உறுப்பினராக இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடாபிக்கு கைது உத்தரவு!மகிந்தவிற்கு எப்போது?

லிபிய அதிபர் மும்மர் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம், உளவுத்துறைத் தலைவர் அப்துல்லா அல் சனுசி ஆகியோருக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தியதாகவும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி உத்தரவிட்டதாகவும் கடாபி மீது நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
லிபியாவில் கடந்த பிப்ரவரி மாத மத்தியிலிருந்து பெரும் கலவரம் வெடித்தது. கடாபிக்கு எதிரான அதிருப்தியாளர்கள் படை பலத்துடன் மோதலில் குதித்ததால், அவர்களுக்கும், கடாபி ஆதரவு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் உக்கிரமடைந்தது. இதில் சிக்கி இதுவரை பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
கடாபியை ஒடுக்க எதிர்ப்புப் படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில்தான் கடாபிக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சஞ்சி மோனகேங் கூறுகையில், கடாபியும், அவரது மகனும், குற்றம் இழைத்தவர்கள் என்று நம்புவதற்கு போதுமான காரணங்கள் உள்ளன.
அப்பாவி மக்களை கொன்ற குற்றச்சாட்டுக்கு அவர்கள் பொருத்தமானவர்களாக உள்ளனர். அவர்களது குற்றங்கள் தண்டனைக்குரியவை என்றார். கடாபிக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் லூயிஸ் மோரினோ ஒகாம்போ கடந்த மே மாதம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது வாரண்ட்டை இங்கிலாந்து வரவேற்றுள்ளது. ராஜபக்ஸவுக்கு எப்போது சர்வதேச நீதி விசாரணை? கடாபியை விட மிகக் கொடுமையான தாக்குதலுக்கு உத்தரவிட்டவர்கள் இலங்கையின் அதிபராக இருந்து வரும் மஹிந்த ராஜபக்ஸவும் அவரது தம்பி கோத்தாபய ராஜபக்ஸ,மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் ஆவர்.இவர்கள் ஆடிய வெறியாட்டத்திற்கு லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், போர்க்குற்றத்திற்கான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று காட்டுக் கத்தலாக பல்வேறு நாடுகளிலும் தமிழர்களும், பிற அமைப்பினரும் கூறி வரும் நிலையில் அதுகுறித்து ஒரு நாடும் கண்டு கொள்ளாமலேயே உள்ளன. இந்த நிலையில் கடாபிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

27 ஜூன் 2011

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் இன்னும் முடியவில்லையாம்.

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவு பெற்றுவிட்டது என எண்ணிவிடக் கூடாது, ஜனாதிபதிக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு சதிகளை மேற்கொண்டுவருகிறது என மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
ஒரு யுத்தம் முடிவு பெற்றாலும் சர்வதேசத்தி லிருந்து வரும் மற்றுமொரு யுத்தத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மொனராகலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற படைவீரர்களுக்கான வீடுகள் கையளிப்பு தேசிய வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சம்பளம் கொடுப்பனவு என எதனையும் பார்க்காமல் நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்களே முப்படைவீரர்கள்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இத்தகைய படைவீரர்களுக்காக பல்வேறு நலன்புரி திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அவர்களுக்கான வீடமைப்பு உட்பட சகல வசதிகளிலும் கவனம் செலுத்துமாறு பணிப் புரைகளை விடுத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

மெரீனாவில் கூடிய பல்லாயிரக் கணக்கான மக்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 26-வது நாளை உலககெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐ.நா. சபை கடைபிடித்து வருகிறது. அந்த வகையில் இலங்கை ராணுவத்தின் பிடியில் சிக்கி, சித்ரவதைக்கு உள்ளாகி உயிர் இழந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், கவிஞர் காசி ஆனந்தன், ஓவியர் வீர சந்தானம், மே 17 இயக்கம் திருமுருகன், ம.தி.மு.க., மற்றும் சமூக ஆர்வலர்கள், தமிழ் ஆர்வலர்கள் என பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வை தொடர்ந்து பேசிய பழ.நெடுமாறன், "இலங்கை தமிழர்களுக்கு தமிழ் ஈழம் பெற்று தர தான் இங்கே கூடியிருக்கிறோம். இந்த ஒற்றுமை, ஒன்றுப்பட்டால் நம்மால் நம்முடைய எண்ணத்தை அடைய முடியும். அதற்கு இந்த நிகழ்வு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்'' என்றார்.

26 ஜூன் 2011

இரட்டை குடியுரிமையுடைய போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடர முடியும்.

இரட்டை குடியுரிமை உடைய இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரலாம் என சட்டவிரோத படுகொலை மற்றும் கைதுகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி கிறிஸ்டொப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ருந்தால் அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டைக் குடியுரிமை உடைய இலங்கை அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் திட்டமிட்டமுறையில் இலக்கு வைக்கப்பட்டுள்ளமைக்கான போதிய ஆதாரங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்ற போதிலும், ஆதாரங்களுடன் அவை நிராகரிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லிபியாவில் சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்தைப் போன்று இலங்கை விவகாரத்திலும் சர்வதேச சமூகம் காத்திரமான வழியில் தலையீடு செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்ச்சை நிலவுவதாக அவர் ஓப்புக் கொண்டுள்ளார். எனினும், கைதிகள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கை இதுவரையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழக்கை எதிர்கொள்ள சட்டத்தரணிகளை நியமிக்கவுள்ள மகிந்த ராஜபக்ஷ.

மஹிந்த ராஜபக்ஷ சார்பில் அமெரிக்க நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க நீதிமன்றில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக அண்மையில் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் குறித்த சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளனர்.
அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் சட்டத்தரணிகள் ஆஜராகவுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் குறித்த சட்டத்தரணிகள் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முப்படைகளின் சேனாதிபதி என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு எதிராக அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலரினால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
அமெரிக்க நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அரசாங்கம் முதலில் அறிவித்திருந்தது.
இலங்கை சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என நீதி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தென் கொலம்பிய நீதிமன்றினால் ஜனாதிபதிக்கு எதிராக அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

25 ஜூன் 2011

இலங்கையின் கொலைக்களங்கள்"காணொளியை ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பிரித்தானிய மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தும் “இலங்கையின் கொலைக்களங்கள்” என்ற ஆவணப்படம் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆவணப்படத்தை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 14 ஆம் திகதி ஒளிபரப்பியிருந்தது. இந்த ஆவணப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி மூலம் பிரித்தானியாவில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
அதேவேளை உலகம் முழுவதிலும் கடந்த ஒருவாரத்தில் மட்டும் 2 இலட்சத்து 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த ஆவணப்படத்தை காணொளிப் பதிவு மூலம் பார்வையிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இந்த ஆவணப்படம் அனைத்துலக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் திரையிடப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை நியூயோர்க்கில் இந்த ஆவணப்படம் இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இந்தியா, அவுஸ்ரேலியா, ஜேர்மனி, நியூசிலாந்து, அயர்லாந்து, கிழக்குத்திமோர் உள்ளிட்ட பல நாடுகளின் ஐ.நாவுக்கான தூதரகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இதனை பார்வையிட்டிருந்தனர். அதேவேளை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையிலும் கடந்த புதன்கிழமை இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்காவிற்கு எதிராக சர்வதேச மன்னிப்புச்சபை வழக்கு.

சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கைக்கு எதிராக போர் குற்றம் தொடர்பில் வழக்கொன்றை தாக்கல் செய்யும் முனைப்புகளை மேற்கொண்டு வருகிறது. கனடாவின் டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய, கனேடிய மன்னிப்புச் சபையின் தலைவர் ஜோன் ஆக்ரட், பிரித்தானியா, சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணிகளை கொண்டு, இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த மாநாட்டில், ஸ்கைப் மூலம் தொடர்புக்கொண்ட ஜெர்மனியில் இயங்கும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் தலைவர், செனல் 4 தொலைக்காட்சிக்கு வீடியோ படங்களை தாமே வழங்கியதாக கூறியுள்ளார்.
தமது அமைப்பை சேர்ந்த 22 பேர் வெளிநாடுகளில் இருப்பதாகவும் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
செனல் 4 தொலைக்காட்சிக்கு வீடியோ காட்சிகளை வழங்கிய இந்த நபருக்கு ஜெர்மனி அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளதாக தூதரக அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இலங்கைப் படைகளுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சனல் போர்வுடன் இணைந்து இலங்கையர்கள் செயற்படுகின்றனர் என்கிறது சிங்கள நாளிதழ்.

செனல் 4 தொலைக்காட்சியுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்படும் 5 நாடுகளில் உள்ள 22 இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என திவயின தெரிவித்துள்ளது.
இந்த இலங்கையர்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள் சிலவற்றின் உதவியுடன் வெளிநாடுகளுக்கு சென்று அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.
ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, சுவிஸர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவர்கள் வசித்து வருகின்றனர் என்பதை புலனாய்வு பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து, இந்த இலங்கையர்கள், இலங்கை இராணுவத்திற்கு அவதூறு ஏற்படுத்துவதற்காக செனல் 4 தொலைக்காட்சியுடன் இணைந்து செயற்படுவதாக தெரியவந்துள்ளது. அதேவேளை இந்த குழுவை வழிநடத்துபவர் யார் என்பது குறித்தும் கண்டறியப்பட்டுள்ளது எனவும் திவயின கூறியுள்ளது.

24 ஜூன் 2011

புலிகளிடம் இலஞ்சம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக சரத்பொன்சேகா தெரிவிப்பு.

உயிரைப் பணயம் வைத்து நாட்டை மீட்டெடுத்த இராணுவ ஜெனரல்களை வீட்டுக்கு அனுப்பிய அரசு, புலிகளிடம் லஞ்சம் பெற்ற இராணுவ உயர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளது. இதற்குப் பொறுப்பு கூறவேண்டிய பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்புச் செயலாளரும் பதவி விலக வேண்டும். இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்றுத் தெரிவித்தார்.வெள்ளைக்கொடி விவகார வழக்கு நேற்று மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைகள் முடிந்த பின்னர் நீதிமன்றினுள் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட போது ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த சரத் பொன்சேகா மேலும் கூறியவை வருமாறு:
தொப்பிகலை உட்பட பயங்கரவாதத்தின் பிடியிலிருந்த பகுதிகளை மீட்டெடுப்பதற்கு உயிரைப் பணயம் வைத்து முழுமூச்சாக செயற்பட்ட இராணுவ ஜெனரல்களை அரசு வீட்டுக்கு அனுப்பியுள்ளது.
ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து மாதாந்தம் லஞ்சம் பெற்ற இராணுவ உயர் அதிகாரிகளுக்கு அரசு உயர் பதவிகளை வழங்கியுள்ளது. எனவே, இவற்றுக்குப் பொறுப்பு கூற வேண்டிய பாதுகாப்பு அமைச்சரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பதவி விலக வேண்டும். இப்படி அவர் கூறினார்.

தமிழின அழிப்புக்கு துணை போகும் தமிழ் பெண் மருத்துவர்.

இச் செய்தியை வாசித்தால் நரம்புகள் நடுங்கும் ! நாளங்கள் ஆடி விடும் ! யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதியில் போரினால் பதிக்கப்பட்ட பல பெண்களையும் சிறுமிகளையும் வேலை தருவதாகக் கூறி, தென்னிலங்கை அழைத்து வரும் ஒரு கும்பல், அவர்களை பாலியல் தொழிலில் பலாத்காரமாக ஈடுபடவைக்கிறது. பொய் சொல்லி இவ்வாறு தென்னிலங்கை அழைத்து வரும் தமிழ் பெண்களை அடைத்து வைத்து அவர்களை சிங்கள காமவெறியர்களுக்கும் பணக்கார முதலைகளுக்கும் தாரைவார்ப்பதையே இவர்கள் செய்துவருகின்றனர். இதனைக் கூட ஒருவகையில் மன்னிக்கலாம் ஆனால் இலங்கை தனியார் வைத்தியசாலைகளில் நடக்கும் அட்டூளியங்கள் தான் தலைவிரித்தாடுகிறது !
சமீபத்தில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி வன்னியில் இருந்து அழைத்துவரப்பட்ட 16 வயதுச் சிறுமி ஒருவர் தென்னிலங்கையில் விடுதி ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஒட்டுக்குழுவினர், அவர் நிலந்தரமாக கர்ப்பம் தரிக்ககூடாது என்பதற்காக வைத்தியசாலை கொண்டுசென்றுள்ளனர். இச் சிறுமியின் கர்பப்பையை அகற்றுமாறு அவர்கள் வைத்தியரிடம் கூறியும் உள்ளனர். கொழும்பில் உள்ள ஒரு பிரபல வைத்தியசாலை தாதியான வித்தியா கந்தசாமி என்றவர் இந்த அறுவை சிகிச்சைக்கு உதவுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு தமிழ் பெண் ஆவார்.
தனக்கு அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதை அறிந்த 16 வயதுச் சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற சிறுமி கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்ததை அடுத்து, பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தியுள்ளனர் என அறியப்படுகிறது. இதனையடுத்து, நீதிமன்றம் சிறுமியை சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த சிறுமி வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே பொலிசார் மேலும் சில விடுதியில் தேடுதல் நடத்தி, அங்கு சிக்கியிருந்த யுவதிகளை மீட்டுள்ளனர் எனவும் மேற்படி யுவதியின் கற்பப்பையை அகற்ற முன்வநதவர் ஒரு தாதியென்பதும் அவரது பெயர் வித்தியா கந்தசாமி எனவும் புகைப்பட ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளன.

இனப்படுகொலை தொடர்பான மகாநாட்டை நிராகரித்த மாவை சேனாதிராஜா.

இலங்கை இனப்படுகொலை தொடர்பான மகாநாட்டிற்கு தாயகத்திலிருந்து தமிழர் பிரதிநிதிகளை பங்குபற்ற வைக்கும் நோக்குடன் மகாநாட்டின் ஏற்பாட்டாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான மாவை சேனாதிராஜா அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு இக்குறிப்பிட்ட மாநாட்டில் பங்குபற்றமாறு கோரியிருந்தனர்.
தமிழ் மக்களால் ஜனநாயக முறையில் தமது அரசியல் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் பங்குபற்றி கருத்தக்களை தெரிவித்தால் சிறப்பாக இருக்கும் எனும் நோக்குடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பை அழைப்பதற்காக மாவை சேனாதிராஜா அவர்களுடன் தொடர்பை மேற்கொண்ட ஏற்பாட்டாளர்களுக்கு மாவை அளித்த பதில் பெரும் ஆச்சரியத்தை கொடுத்ததாக தெரியவருகிறது. எனக்கு வேறு அலுவல்கள் இருப்பதால் என்னால் இம் மாநாட்டிற்கு வர முடியாது எனவும் வேறு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றுவதாயின் கட்சி குழு கூடியே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவித்து விட்டார். இலங்கையில் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினை தொடர்பான மகாநாட்டை விட மாவை சேனாதிராஜாவிற்கு வேறு என்ன முக்கிய அலுவல்கள் இருந்திருக்கம் என்பது ஆச்சரியத்துக்குரியதொன்றாகும்.
ஐரோப்பிய பாராளுமன்றக் கட்டடத்தில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக மகாநாட்டிற்கு கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது தொடர்பில் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கமா என்பதும் ஆச்சரியத்துக்குரிய விடயமாகவே இருக்கும்.
இம் மகாநாட்டில் தமிழ் நாட்டிலிருந்து வைக்கோ, தாயகத்திலிருந்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் பலர் பங்கு பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

23 ஜூன் 2011

சீமானின் கண்டனத்தால் இலங்கைப் பொருட்களை புறம்தள்ளிய வர்த்தக நிறுவனம்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றுமுதல் 4 நாட்கள் வீட்டின் உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெறும் என்றும் அதில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் துண்டு பிரசுரம் வெளியானது.
கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பதற்கும், இலங்கை பொருட்கள் இடம் பெறுவதற்கும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை போரில் 1 1/2 லட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்றும், அந்த நாட்டிற்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களை அனுமதிப்பது தமிழக சட்டப் பேரவை தீர்மானத்தையும், தமிழக மக்களின் உணர்வு களையும் அவமதிப்பதாகும்" என்று கூறி இருந்தார்.
இதற்கு விளக்கம் அளித்து ஜாக் கண்காட்சி நிறுவனர் சையது ஜாகிர்அகமது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், "ஜாக் கண்காட்சி ஏற்பாட்டாளர்களாகிய நாங்கள் சென்னை வர்த்தக மையத்தில் 23ம் திகதிமுதல் 26ம் திகதிவரை இல்லம் உள்வடிவமைப்பு நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சியை நடத்த உள்ளோம்.
இக்கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த நிறுவனங்களோ அல்லது இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களோ இவை எதுவுமே இடம் பெறவில்லை. இக்கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த பொருளும், தயாரிப்பாளரின் நேர்முகமான அல்லது மறைமுகமான தொடர்பும் இல்லை.
எங்களுடைய நிறுவனத்தின் தகவல் ஏடுகளில் காணப்படும் தகவல்கள் ஏதேனும் தமிழர் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் அதற்காக எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

கொலைப்படை இனம் காணப்பட்டுள்ளதால் கோத்தபாய குழப்பம்.

சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்” ஆவணப்படம் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா சிறிலங்கா படை அதிகாரிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த ஆவணப்படம் போலியானது, இந்தியாவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகிறது.
இந்த ஆவணப்படத்தின் பின்புலக் காட்சிகள் சிறிலங்காவின் போர்வலயத்தில் எடுக்கப்பட்டவையல்ல என்றும், அதிலுள்ளவர்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அல்ல என்றும், ஐரோப்பிய நாடுகளுக்கு விளக்கமளிக்குமாறு சிறிலங்கா தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றும் படை அதிகாரிகளுக்கு கோத்தபாய ராஜபக்சே பணித்திருந்தார் .
இப்போது அமெரிக்காவிலுள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும், 8வது அதிரடிப்படைப் பிரிவின் தளபதியாகப் பணியாற்றிய பிரிகேடியர் ரவிப்பிரிய அமெரிக்கா அதிகாரிகளுக்கு இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்
55 மற்றும் 59வது டிவிசன்களின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பிரித்தானிய அதிகாரிகளிடமும், 57வது டிவிசன் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், ஜேர்மனி மற்றும் சுவிஸ் அதிகாரிகளிடம் இதுபற்றி விளக்கமளித்துள்ளனர் .
ஆவணப்படத்தில் உள்ளவை போர் முனைக் காட்சிகள் அல்ல என்று அவர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்
அதேவேளை சனல் 4 காணொளி போலியானது என்று பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு 58வது டிவிசன் தளபதியாக இருந்து தற்போது நியுயோக்கில் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் விளக்கமளித்துள்ளார் .
தற்போது இந்திய பாதுகாப்பு கல்லூரியில் பட்டயக்கல்வி ஒன்றைக் கற்று வரும் 53வது டிவிசனின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவும், சனல்4 காணொளி பற்றி கேள்வி எழுப்பிய இந்திய இராணுவ அதிகாரிகளிடமும் இது போலியானது என்றே கூறியுள்ளார் .
போர்முனையில் கைத்தொலைபேசி மூலம் இந்தப் படம் பிடிக்கப்படவில்லை என்றும், இவை காணொளிப்பதிவுக் கருவி மூலம் பயிற்சி பெற்ற நடிகர்கள் மூலம் படமாக்கப்பட்டுள்ளதாகவே விளக்கமளிக்குமாறு கோத்தாபய ராஜபக்சே பணித்திருந்தார் .
அதன்படியே படைஅதிகாரிகள் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்திருந்தனர்
ஆனால்,கடந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சிறிலங்கா பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சே கேணல் ரமேஸ் கைது செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளார்
கிழக்கில் புலிகளின் தலைவராக கேணல் ரமேஸ் செயற்பட்டவர் என்றும், பெருமளவு கொலைகளுக்குப் பொறுப்பானவர் என்றும் கூறியுள்ள கோத்தாபய ராஜபக்சே , ஆகையால் அவரது கொலை நியாயமானதே என்று கூறியுள்ளார்
அதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இசைப்பிரியா ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக வெளிநாடுகளிடம் இது போலியான காணொளிப்பதிவு ஒன்று என்றும் தேர்ச்சிபெற்ற நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ள நிலையில்- கோத்தாபய ராஜபக்சே இவ்வாறு கூறியுள்ளது வெளிநாடுகளில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக இனிமேல் தாம் கூறும் உண்மையான தகவல்களை கூட வெளிநாட்டு அதிகாரிகள் நம்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளதாக சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் .
இதனிடையே சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொளி பதிவுகளில் இடம்பெற்றுள்ள 12 சிறிலங்கா படையினர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இவர்கள் அனைவரும் கொமாண்டோ படைப்பிரிவு, சிறப்புப் படைப்பிரிவு மற்றும் 68-1வது பிரிகேட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார் இனங்காணப்பட்டவர்களில் அதிகாரிகளும் உள்ளடங்கியுள்ளனர்
இவர்களை நெருக்கமாகக் கண்காணிக்கும்படியும், தம்மிடம் கலந்தாலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சே பணித்துள்ளார்
அடையாளம் காணப்பட்ட படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் மேலும் பல புதிய ஆதாரங்கள் வெளியாகி விடலாம் என்று கோத்தபாய ராஜபக்சே அச்சம் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச பாதுகாப்பு அனைத்துத் தமிழர்களுக்கும் அவசியமில்லை என்கிறது பிரித்தானியா.

சகல தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் சர்வதேச பாதுகாப்பு அவசியமில்லை என பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீன் அந்நாட்டு பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் துன்புறுத்தப்பட்டமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.
2008ம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் புலம்பெயர் கோரிக்கையாளர் ஒருவர் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கில் இது குறித்து விளக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் பாதுகாப்பு அவசியம் எனக் கருதப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தொடர்ந்தும் அடைக்கலம் வழங்கப்படும் என அவர் தெரிவி;த்துள்ளார். புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பமும் காணப்படுவதாகவும் தெரிவித்த அவர்
புகலிடம் மறுக்கப்பட்டு நாடு கடத்தப்பட் ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் இலங்கையில் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பது குறித்து பிரித்தானிய எல்லை முகவர் நிறுவனம் கண்காணிக்கவில்லை என்பதனையும் ஒப்புக் கொண்டுள்ளார்.
புகலிடக் கோரிக்கைகள் தனிப்பட்ட நபர்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட டேமியன் கிரீன், இதேவேளை, ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு பரிந்துரைகள் வரவேற்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சுயாதீனமானதும், நம்பகரமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட ரீதியில் நபர்கள் எதிர்நோக்கி வரும் ஆபத்துக்களின் அடிப்படையில் புகலிடம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

22 ஜூன் 2011

கொலை,பாலியல் வெறியாட்டம் புரிந்த சிலர் இனம் காணப்பட்டனர்.

பிரித்தானிய தொலைக்காட்சியான செனல்-4 வில் காண்பிக்கப்பட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணக் காணொளியில் காணப்படும் (படுகொலைகள், பாலியல் வல்லுறவுடன் தொடர்புடையவர்கள்) சிறிலங்கா படையினர் 12 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காணொளியில் காணப்படும் இந்த 12 சிப்பாய்களும் சிறிலங்கா இராணுவத்தின் கமாண்டோ படைப் பிரிவினையும் 641 ஆவது விசேட படையணியையும் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பன்னிருவரில் அதிகாரி தரத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இவர்களை விசாரிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சுச் செயலகம் ஆர்வம் காட்டவில்லை என்று கூறியுள்ள அவர், அவ்வாறு குறிப்பிட்ட சிப்பாய்களை விசாரணைக்கு உட்படுத்தும் போது பல உண்மைகள் வெளியாகி அது பிரச்சினைகளை மேலும் பெரிதாக்கிவிடும் என்பதனாலேயே இந்த விடயம் தொடர்பில் அக்கறை செலுத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில வாரங்களில் சனல்4 வீடியோவில் காணப்படும் படுகொலைகள், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட இன்னும் பல இராணுவ சிப்பாய்களின் பெயர் விபரங்கள், ஆதரத்துடன் வெளிவரும் எனவும் கூறப்படுகின்றது. படையதிகாரிகளும் அரசியல்வதிகளும் சிப்பாய்களின் மேல் பழிகளை போட்டுவிட்டு தப்புவதற்கு திட்டம் தீட்டிவருவதாகவும் குறித்த இராணுவ அதிகாரி தெரிவித்தார். இதனாலேயே சில கீழ் நிலை அதிகாரிகள் குறித்த விபரங்களை வெளியிட விரும்புகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திடம் இருந்து பெரும் தொகையான வீடியோக்களை கோத்தா தலைமையிலான இரகசிய குழு கைப்பாற்றி அழித்தது. ஆனால் சில வீடியோக்கள் விசேட அதிரடிப்படை, பொலிஸ் பிரிவு ஆகியவற்றுக்கும் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கூடவே சில சிவில் அதிகாரிகளிடமும் சிக்குண்ட நிலையில் கோத்தபாயவினால் முழுமையாக ஆதாரங்களை அழிக்க முடியவில்லை.

இசைப்பிரியா சிங்களப்படைகளால் கொலை!சர்வதேச விசாரணை அவசியம்.

தமிழீழ தேசியத் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் இசைப்பிரியா, இலங்கை படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் எனக் கூறப்படுவது தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என நியூயோர்கை தளமாக கொண்டு இயங்கும் ஊடக உரிமை அமைப்பு வலியுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இசைப்பிரியா கொலை செய்யப்பட்டதற்கான உரிய ஆதாரமான காணொளியினை சனல் 4 வெளியிட்டுள்ளது என ஊடகவியலாளர் பாதுகாப்பு செயற்குழு அதிகாரி பொப் டயர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவரின் குடும்பத்தை மகிந்த பராமரித்து வருவதாக அஸ்வர் தெரிவிப்பு.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பராமரித்து வருவதாக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
மோசடி தடுப்பு தொடர்பான உத்தேச சட்ட மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அல் கய்தா இயக்கத் தலைவர் ஒஸாமா பின் லேடனின் மனைவியையும் அமெரிக்க துருப்பினர் படுகொலை செய்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒஸாமா மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்படுவதனை செய்மதி தொழில்நுட்பம் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாகவும் இதன் மூலம் ஜனாதிபதியின் மனிதாபிமான பண்புகள் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (மகிந்தவின் மனிதாபிமானம் உலகே அறிந்ததாயிற்றே)
பிரபாகரனின் பிள்ளைகளுக்கு கல்வி புகட்டப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்திய போது அவற்றைத் திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் இதனை முன்மாதிரியாகக் கொண்டு இலங்கை செயற்பட வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்லா பாராளுமன்றில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் நோக்கில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர், பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகளை ஜனாதிபதி பராமரித்து வருவதாக கருத்து வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 20ம் திகதி இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் தமிழீழ தேசிய தலைவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

21 ஜூன் 2011

நிபுணர் குழு அறிக்கைக்கு பதில் அளிக்கப்போவதில்லை என்று முதலே தெரிவித்து விட்டோம்.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பதில் எதனையும் அளிக்கப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளது.
யுத்தத்தின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட அபிவிருத்தி தொடர்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதனை சர்வதேச சமூகம் பார்வையிடக் கூடிய வகையில் பகிரங்கப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர் குழு உருவாக்கப்பட்டதாகவும், அந்த நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்ட போதே அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்பட்டதாகவும், அதில் எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையின் குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்கு மட்டும் பதிலளிக்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அரசாங்கம் முழுமையான அறிக்கைகளை தயாரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிற்கான உணவு விநியோகம், மருத்துவ வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைகளை, ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் ஏனைய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பார்வையிட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
பான் கீ மூனின் நியமனம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியான குரோதத்தை வெளிப்படுத்துவதில் அர்த்தமில்லை எனவும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பதிவு நடவடிக்கை இல்லையென கூறிய பின்பும் பதிவில் ஈடுபடும் படையினர்.கத்துருசிங்க ஆடும் நாடகம்.

யாழ் குடா நாட்டில் இராணுவப் பதிவுகள் இடைநிறுத்தப்பட்டு விட்டதாக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க அறிவித்த போதிலும் பதிவு நடவடிக்கைகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. வலிகாமத்திலும் வடமராட்சியிலும் பல பகுதிகளிலும் இந்த பதிவு நடவடிக்கைகள் தொடர்வதாகக் கூறப்படுகின்றன.
யாழ் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்தப் பதிவு நடவடிக்கைகள் ஓரளவு ஓய்ந்திருக்கின்ற போதிலும் கிராமப் புறங்களிலும் ஏனைய பகுதிகளிலும் இந்தப் பதிவு நடவடிக்கைகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. படையதிகாரிகள் சகிதம் வீடுகள் தோறும் பயணிக்கும் படையினர் இந்தப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். குறிப்பாக வீடுகளுக்கு வரும் படையினர் வீடுகளில் அறைகள் உள்ளனவா, கிணறு உண்டா, மலசலகூடம் உண்டா என பல்வேறு கேள்விகளைக் கேட்பது குடும்பத்தவர்களை வேடிக்கைக்கு உள்ளாக்கி இருக்கின்றது.
குறிப்பாக விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், முன்னாள்ப் போராளிகள் இருந்தார்களா?, எவராவது தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களா?, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள உறவுகள் விபரங்கள் என்பன தொடர்பாக படைத்தரப்பு துருவித்துருவி விபரங்களைக் கேட்டுப் பதிவது அச்சத்தை ஊட்டுகின்றது. முன்னதாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறான இராணுவப் பதிவுகள் படைத்தரப்பால் பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றின் உதவியை நாடியது. நீதிமன்றப் படியேறப் பின்னடித்த படைத்தரப்பு பதிவுகளைக் கைவிடுவதாகக் கூறியது.ஆனாலும் 4 தடவைகளுக்கு மேலாக இவ்வாறு கூறுவதும் பின்னர் படையினர் இரகசியமாகப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அது அம்பலமான பின்னர் கூட்டமைப்பு தொடர்ந்து சுட்டிக்காட்டுவதும் பின்னர் இடைநிறுத்துவதுமான சம்பசங்களே தொடர்ந்தன. இதனிடையில் அண்மையில் யாழ் மாவட்ட இராணுவத்தளபதி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்த அறிக்கையில் பதிவு நடவடிக்கைகளைக் கைவிட்டு விட்டதாகக் கூறியிருந்தார். ஆனால் அவரது அறிவிப்பிற்கு மாறாக குடாநாட்டின் பல பகுதிகளில் பதிவு நடவடிக்கைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
யாழ் மாவட்ட இராணுவத் தளபதி வழமைபோல் இவ்வாறான உறுதிமொழிகளை வழங்குவதும் அதனை ஊடகங்கள் செய்திகளாக வெளிவிடுகின்ற போதிலும் குடாநாட்டு மக்களால் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றது. ஏனெனில் அவர் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று என்று வழக்கமாக இருக்கின்றது. ஆனாலும் கொழும்பில் வெளியாகும் தேசிய நாழிதழ்கள் உள்ளிட்ட பல ஊடகங்கள் யாழ் குடாநாட்டில் பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்தாக உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டிருக்கின்றன. ஏன் இவ்வாறு தேசிய நாழிதழ்கள் செயற்பட்டு வருகின்றன என கேள்வி எழுப்புகின்றனர் இன்னல்களை அனுபவித்து வரும் தமிழ் மக்கள்.

20 ஜூன் 2011

கனிமொழியின் இருப்பிடமானது திகார் சிறை.பிணை மனுவை உச்ச நீதிமன்றமும் நிராகரித்தது.

2- G -ஸ்பெக்டரம் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்த கனிமொழியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இன்று காலை முதலே டில்லியில் இந்த வழக்கு தொடர்பான பரபரப்பு நிலவி வந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு கனிமொழியின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றமும் நிராகரித்து விட்டது. இனி நீதிமன்ற விசாரணைகள் முடியும் வரை கனிமொழி திஹார் சிறையில் இருந்து வெளிவருவதற்கான வாய்ப்புகளே இல்லை. நீதிமன்ற விசாரணையை விரைந்து நடத்தக் கோருவதன் மூலமே நீதிமன்ற விசாரணைகள் முடிந்த பின்னரே இந்த வழக்கில் கைதாகியுள்ளவர்கள் இனி ஜாமீன் பெற முடியும்.
கனிமொழிக்கு இறுதி வாய்ப்பாக அமைந்த உச்ச நீதிமன்றமும் ஜாமீனை நிராகரித்து விட்ட நிலையில் டில்லியிலும் தமிழகத்திலும் திமுக, காங்கிரஸ் தரப்பினரிடையே வருத்தம் கலந்த பதட்டம் நிலவுகிறது. உச்ச நீதிமன்றமும் ஜாமீன் மனுவை நிராகரித்து விட்ட நிலையில் திமுகவின் செயற்குழுவை கூட்ட கலைஞர் கருணாநிதி முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இறுதியாகக் கிடைத்த தகவலின் படி மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு ஜாமீன் மனுவை தாக்கல் செய்யும் உரிமை கனிமொழிக்கு உண்டு என்று டில்லி வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அரசுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயலும் சம்பந்தனுக்கு சிலர் தடையாகவுள்ளனர்.-கோத்தபாய.

அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு கட்சியின் சில உறுப்பினர்கள் தடைகளை ஏற்படுத்துவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இராணுவத்துடன் இணைந்து செயற்படத் தயார் எனவும் சம்பந்தன் கடிதம் ஊடாக தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சம்பந்தனின் இந்த முனைப்பு வரவேற்கத்தக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்கள் அளவெட்டி சம்பவத்தை பூதாகாரமாக மாற்றும் முனைப்புக்களில் தீவிரம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கில் அரசியல் கூட்டங்களை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சம்பந்தன் கோரியிருந்ததாகவும், இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு முன்னதாகவே அனுமதியின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் கூட்டத்தை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சம்பந்தன் மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அளவெட்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் விசாரணை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டமைப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதோ அல்லது வாகனங்கள் மீதோ தாக்குதல் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முரண்பாட்டின் போது அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் மீது தாக்குதல் நடத்தப்படதாகவும், இதனை கூட்டமைப்பின் சிலர் பெரிதுபடுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தேவையில்லாமல் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை அமைப்பில் இணைத்துக் கொண்ட போது சர்வதேச சமூகம் மௌனம் சாதித்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சர்வதேச நாடுகள் அறிவுரை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

ராஜபக்ஷ சொல்பேச்சு கேட்பதில்லை என்கிறார் மன்மோகன்.

நாம் சொல்வதையும் எமது கருத்துக்களையும் சிறீலங்காவின் அரச தலைவர் மகிந்தராஜபக்ச கேட்க மறுக்கிறார். இந்த நிலையில் என்னால் என்ன செய்ய முடியும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவிடம் புலம்பியதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக பதவியேற்ற பின்னர் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா புதடில்லி சென்றபோது இந்திய பிரதமரை சந்தித்திருந்தார்.
இந்த சந்திப்பின்போதே சிறீலங்கா விவகாரம் கலந்துரையாடலில் எடுக்கப்பட்டபோது மன் மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். போரின் போது, உளவுத் தகவல்கள், செய்மதிப்புகைப்பட தகவல்கள், ஆயுதங்கள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் படையினரின் நேரடியான உதவிகள் என்வற்றை வழங்கிய இந்திய அரசு தற்போது சிறீலங்கா தனது பேச்சை கேட்பதில்லை என புலம்புவது அதன் இராஜதந்திர தோல்வியையே காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.சில வேளை இதுவும் மன்மோகனின் இராஜதந்திரமாகவும் இருக்கலாம்.ஜெயலலிதாவை பகைக்காமல் இருக்க இது ஒரு சாட்டு.

19 ஜூன் 2011

எம்மால் வழக்கை சோடிக்கவும் முடியும்,விரும்பினால் விடுவிக்கவும் முடியும்.மகிந்தவின் திமிர் பேச்சு.

முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரியான கந்தேகெதர பிரியவன்ஸ, 2011 மே 12ம் திகதி, கல்கிசை நீதிபதி முன்னிலையில், சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் கொலையில், ஒரு உயர்மட்ட இராணுவ அதிகாரி தொடர்பு பட்டிருப்பதாகக் கூறும்படி, பயங்கரவாத புலனாய்வு பிரிவின் (TID) பொறுப்பதிகாரி, தனக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். தற்போது விளக்க மறியலில் இருக்கும் இந்த புலனாய்வு அதிகாரி பகிரங்க நீதிமன்றில் சாட்சியமளிக்கையில், நீதிமன்றத்தில் பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி இந்த கொலையில் தொடர்பு பட்டிருப்பதாக கூறும்படி தனக்கு அறிவுறுத்தப் பட்டதாகவும் அதற்கு பிரதியுபகாரமாக, வெளிநாடு செல்லும வாய்ப்பு, தனக்கான பாதுகாப்பு மற்றும் சிறிலங்காவில் ஒரு வீடு என்பன கிடைக்கவிருந்ததாகவும் தெரிவித்தார்.
இந்த முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு குறித்த உயர்மட்ட இராணுவ அதிகாரியை லசந்தவின் கொலையோடு தொடர்பு படுத்தும்படி கூறப்பட்ட அதேவேளை, குறித்த இராணுவ அதிகாரியை இரண்டு ஊடகவியலாளர் மீதான தாக்குதலிலும் தொடர்பு படுத்தும்படி அறிவுறுத்தப் பட்டதாகக் கூறப்பட்டது. அந்த குறித்த 'உயர்மட்ட இராணுவ அதிகாரி' ஜெனரல் சரத் பொண்சேக்கா தான் என்பது மிகவும் நிச்சயமானதாகும்.
2009ம் ஆண்டின் பிற்கூறுகளில் ராஜபக்ஷக்களுக்கெதிராக திரும்பும்வரை அவர் இந்த ஆட்சியினுடைய செல்லப்பிள்ளையாக இருந்தார். லசந்தவினுடைய கைதொலைபேசியைத் திருடிய ஒரு கிராமத்து பையன் தவிர வேறு எவரும் முதலில் கைது செய்யப் பட்டிருக்கவில்லை. ஆனால் பொண்சேக்கா எதிரணியில் இணைந்து கொண்டபின், ஒரு தொகுதி இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். லசந்தவை கொல்வதென்பது ஒரு அரசியல் முடிவுதான் வெறுமனே இராணுவ தளபதியுடைய முடிவு அல்ல, என்பது தெளிவான விடயமாகும். இப்பொழுது ராஜபக்ஷக்கள் லசந்தவின் கொலையில் ஜெனரல் பொண்சேக்காவை மாட்ட முயற்சி செய்கிறார்கள்.
2008ம் ஆண்டில் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நான் சந்தித்த பொழுது, நான் கண்ட, அப்போதுதான் முளைவிட்டுக் கொண்டிருந்த, முழுமையான, தண்டனை- பயமின்மையின் அறிகுறிகள் தொடர்பான எனது சொந்த அனுபவம் எனது நினைவுக்கு வந்தது. சுதந்திர ஊடகவியக்கத்தின் ஏற்பாட்டாளர் என்ற முறையிலேயே நான் அவரைச் சந்தித்தேன். நாங்கள் தனிமையில் சந்திக்கவில்லை. அவருடைய அமைச்சரவையின் வேறுபல உறுப்பினர்களும் அங்கே பிரசன்னமாக இருந்தனர். சுமுகமான ஒரு கலந்துரையாடலின் பின் 'நீங்கள் போகுமுன் ஏதாவது இரவுணவு சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்' என்று கூறிக்கொண்டே ஜனாதிபதி தன் இருக்கையில் இருந்து எழுந்தார்.
'இன்னும் ஒரு விடயம்' என்றேன் நான்.
'என்ன அது?' ஜனாதிபதி கேட்டார்.
'திசைநாயகத்துடைய விவகாரம்' நான் சொன்னேன்.
' ஓ! அதுவா? நான் திசாநாயகத்தை விடுவிக்க விரும்புகிறேன். அவரது மனைவி மங்கள முனசிங்க ஊடாக மனு ஒன்றை அனுப்பியிருந்தார்' முகத்தில் ஒரு புன்னகையுடன் ஜனாதிபதி சொன்னார். 'அப்படியானால் இரண்டு வாரங்களுக்கு முன் பிரதி சட்ட முகவர்கள் நாயகத்தை அழைத்து வழக்குத் தாக்கல் செய்யும்படி ஏன் கூறினீர்கள்?' நான் கேட்டேன். இதனால் ஜனாதிபதிக்கு கோபம் மூண்டிருப்பது தெளிவாக தெரிந்தது. அவர் முதலில் ஊடகத்துறை அமைச்சர் யாப்பா பிரியதர்சனவின் திசையிலும,; பின் சுதந்திர கட்சி பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கமும் பார்த்து விட்டு நேரடியாக என்னை நோக்கினார். கோபத்தோடு மேசையில் ஓங்கி அறைந்த அவர் 'எங்களால் வழக்குகளைச் சோடிக்கவும்முடியும் ஆட்களை விடுதலை செய்யவும் முடியும்' என்று சொன்னார். பின்பு எனக்கருகே வந்த அவர், எனது இடுப்பு பகுதியில, கையால் செல்லமாக இடித்துவிட்டு, 'உங்களுக்கு எல்லாம் தெரிந்து விடும் இல்லையா?' என்று கேட்டார்.
மேற்படி உரையாடல், 2008 செப்ரெம்பரில் நாங்கள் அவரை சந்தித்த போது நிகழ்ந்தது. ஜனாதபதி ராஜபக்ஷவுடனான இந்த சந்திப்புக்கு சிறிலங்கா உழைக்கும் ஊடகவியலாளர் சங்க தலைவரான சனத் பாலசூரிய, அச்சங்கத்தின் செயலர், ஜயந்த ஆகியோருடன் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் என்ற வகையில் நானும் இணைந்து கொண்டிருந்தேன்.



(உவிந்து குருகுலசூரிய)

முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து துணை நிற்போம்.

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.
ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நடந்தது. கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் இயக்குனர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ், பேராசிரியர் தீரன், அற்புதம்மாள், கலைக்கோட்டுதயம், அன்புதென்னரசு, கோட்டைகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். அய்யநாதன் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
இலங்கையில் தமிழினத்தை அழித்த அதிபர் ராஜபக்சே உள்ளிட்டவர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்குமாறும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, அதனடிப்படையில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து வழங்கிய மனுவிலும் அந்த கோரிக்கையை வலியுறுத்தியுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்துமே ராஜபக்சே அரசுக்கு ஆதரவாகவே உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளுமாறு முதல்வருக்கு வலியுறுத்துகிறோம். சமீபத்தில் முதல்வரை சந்தித்துவிட்டு கொழும்பு சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம் ஐ.நா. குழுவின் அறிக்கை குறித்து கருத்து கேட்டதற்கு, “ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எந்த ஒரு நாட்டையும் தனிமைப்படுத்தி கண்டனம் செய்ய இந்தியா அனுமதிக்காது” என்று கூறியுள்ளார்.
இதற்கு இலங்கை அரசை தனிமைப்படுத்த மாட்டோம் என்பதே பொருள். எனவே மத்திய அரசு இலங்கைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பது தெளிவாகியுள்ளது. இலங்கைக்கு எதிராக மற்ற மாநில அரசுகளின் தலைவர்களிடமும், இந்தியாவின் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் பேசி, இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை தீர்மானத்தை நிறைவேற்றுமாறு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.
தூத்துக்குடி – கொழும்பு இடையிலான கப்பல் போக்குவரத்தை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதற்காகவும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழினம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. பொருளாதார புறக்கணிப்பை முன்னெடுக்கும் வகையில் இலங்கை பொருட்களை புறக்கணிப்போம், தமிழக வணிகர்கள் யாரும் அந்நாட்டுடன் வணிகம் செய்யக்கூடாது, இலங்கை விமான சேவையை புறக்கணிப்போம், தமிழ் திரைத்துறை மட்டுமின்றி, இந்திய திரைப்பட கலைஞர்களும் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்த நாம் தமிழர் கட்சி முடிவெடுத்துள்ளது.
இதற்காக முதல்-அமைச்சரும் பொதுவானதொரு வேண்டுகோள் விடுக்க வேண்டும். கச்சத்தீவை மீட்பதற்கான முயற்சியாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் வரவேற்கிறோம். அதோடு, இருநாடுகளுக்கிடையேயான கடற்பகுதியில் எவ்வித தடையுமின்றி தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும். இல்லையேல் இந்திய – இலங்கை கடல் எல்லை வரையறை ஒப்பந்தத்தையே ரத்து செய்வது தான் சரியானதாக இருக்கும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைக்கிறோம்.
தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அவர்களை கண்காணிப்பது அவசியம் என கருதினால் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி ஈழத் தமிழர்களுக்கான முகாம்களில் தங்கியிருக்குமாறு கட்டளையிடலாம். உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தோல்வியை பொறுக்க முடியாமல் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சித்ரவதை செய்து படுகொலை செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இந்திய நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.
இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுகதான் கைப்பற்றும் என்பது நிச்சயம்.
காங்கிரஸ் கட்சியின் தயவு அதிமுகவுக்குத் தேவையில்லை. அதிமுகவின் தயவுதான் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை. எனவே அதிமுக ஒருபோதும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்றார்.
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் தொடங்கியதும் சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து விட்டுவிட்டு சிறிது நேரம் மழை பெய்தது. ஆனாலும் கூட்டத்தினர் கலையாமல் இறுதி வரை காத்திருந்து சீமான் பேச்சை கேட்டனர்.

18 ஜூன் 2011

தனி ஈழமொன்றே நிரந்தரத் தீர்வு என கருத்துக் கணிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ கோரிக்கை தொடர்பில் சென்னை லயோலா கல்லூரி தகவல் தொடர்பு மாணவர்கள் நடத்திய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், கச்சதீவை மீட்க வலியுறுத்தும் அரசின் தீர்மானத்துக்கு 62.9 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
81 சதவீதம் பேர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக் கோரும் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர். பாராளுமன்றத்தில் இலங்கை தலைவரை போர் குற்றவாளி என தீர்மானம் கொண்டுவர 69 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தனி ஈழம் ஒன்றே இலங்கை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கனடியத் தமிழர் பேரவை என்.டி.பி கட்சியுடன் தமிழர் பிரச்சனை குறித்து பேச்சு.

கனடிய எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு யக் லேற்றன் (Hon. Jack Layton) அவர்களுடன் கனடியத் தமிழர் பேரவை இன்று வன்கூவரில் உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொண்டது. இச் சந்திப்பின் போது சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட விவரணக் காணொளி தொடர்பாகப் போர்க்குற்ற விசாரணைகள் சிறி லங்காவில் நடைபெற வேண்டிக் கனடியப் பாராளுமன்றத்தில் தகுந்த நடவடிக்கையை வரும் நாட்களில் எடுக்கப் போவதாக அவர் கனடியத் தமிழர் பேரவைக்கு உறுதியளித்தார். மாண்புமிகு யக் லேற்றன் அவர்கள் தமிழ் சமூகத்தின் ஆதரவாளராக எப்போதுமே இருந்து வருகிறார்.
வன்கூவரில் இடம்பெறும் என் டி பி கட்சியின் தேசிய மாநாட்டில் சிறி லங்கா தொடர்பான பிரேரணை ஒன்றை அங்கீகரிக்க வேண்டி கனடியத் தமிழர் பேரவை மேலும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என் டி பி கட்சியின் தேசிய மாநாடு இன்றும் நாளையும் வன்கூவரில் நடைபெறுகிறது.
போர்க்குற்ற விசாரணையை ஆதரிக்கக் கோரி கனடியத் தமிழர் பேரவை கனடாவின் அனைத்து அரசியற் கட்சிகளின் உதவியையும் பெறும் நோக்கிற் தொடர்ந்தும் பேசி வருகிறது.

அமெரிக்க நீதிமன்றமொன்று மகிந்தவிற்கு அழைப்பாணை.

மஹிந்த ராஜபக்ஷ்வை நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி அமெரிக்காவில் உள்ள மாநில நீதிமன்றமொன்று அழைப்பாணை விடுத்துள்ளது.
சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான அமெரிக்க பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளவர்கள் மகிந்தவிடமிருந்து 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகக் கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெக் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதற்கு அமைய மகிந்தவிற்கான நீதிமன்ற அழைப்பாணை இலங்கை நீதியமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத கொலைகளால் மூன்று மாணவர்கள் பலியானதாக அவர்களுடைய பெற்றோர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
அத்துடன் இறுதி யுத்தத்தில் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கியிருந்த தங்களது உறவினர்கள் எரிகணைத் தாக்குதலில் பலியானதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. குறித்த மனுவின் பிரதிவாதியாக மஹிந்த ராஜபக்ஷ் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

17 ஜூன் 2011

தம்மை மாட்டிவிட புலம்பெயர் தமிழர்கள் சனல்4வை பயன் படுத்துவதாக கோத்தபாய புலம்பல்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவுள்ள புலம்பெயர் தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தையும் இராணுவத்தையும் சிக்கலில் மாட்டிவிடுவதற்காக சனல் 4 க்குப் பணம் கொடுத்துத் தயாரித்துள்ள வீடியோதான் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படம் என்று இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இலங்கை அரசுக்கு அவதூறை ஏற்படுத்தப் பாடுபடும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் இப்போது சனல் 4 ஐ ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ள அவர், தமிழ் மக்களைக் காப்பாற்றப் போராடிய இராணுவத்தினர் ஒருபோதும் பொதுமக்களைக் கொல்லவே இல்லை என்றும் அவர் சாதிக்கிறார்.
இதற்கு உதாரணமாக புலிகளின் தளபதி சூசை மற்றும் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் குடும்பங்கள் உட்பட கிட்டத்தட்ட 11,000 முன்னாள் புலிகள் இராணுவத்தின் பிடியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனராம் என்கிறார் கோத்தபாய. மேலும், தலைவர் பிரபாகரனின் பெற்றோரையும் தாம் பாதுகாத்து தமது கட்டுப்பாட்டில் பேணி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ள கோத்தபாய, சனல் 4 இல் வீடியோப் படம் போலியானது என்றும் அதைத் தான் முற்றிலும் மறுப்பதாகவும் கூறியுள்ளார்.

நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் தேசிய இரகசிய பிரிவினரிடம்.

பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 38 பேர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர் . இந்த நிலையில் இலங்கை வந்துள்ள எவரும் கைது செய்யப்பட மாட்டார்கள் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை வந்துள்ள 38 தமிழர்களும் விசாரணைக்கென தேசிய இரகசிய விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடிகயல்வு திணைக்களக் கட்டுப்பாட்டார்ள் வூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பிரித்தானியாவில் இருந்து 28 பேரே நாடு கடத்தப்படவுள்ளதாக தமக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 38 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைநேரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சனல் 4ற்கு நாடுகடந்த தமிழீழ அரசு பாராட்டு!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற கொலைக்களம் பற்றிய விவரணச்சித்திரத்தை ஒளிபரப்பியதற்காக சனல் 4 தொலைக்காட்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா ராணுவத்தினரால் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை பற்றிய உண்மையை எடுத்துக்காட்டியதற்காக சனல் 4 தொலைக்காட்சிக்கு நாம் தலை வணங்கி எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்’ என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.
நாம் பார்த்தது ஒரு துளிதான். ஊடகவியலாளர்கள் ஸ்ரீலங்காவிற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பின் தமிழினப்படுகொலையை உறுதிப்படுத்தும் மலை போன்ற சாட்சியங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்’ என்றும் அவர் சொன்னார்.
தமிழ்த் தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் இத்தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த வீடியோ படம் ஒன்றை வலியுறுத்துகின்றது. அதுதான் தமிழர்களின் பாதுகாப்பை ஸ்ரீலங்காத் தீவில் உறுதிப்படுத்துவது சுதந்திர தமிழீழம் ஒன்றை நிறுவுவதன் மூலம் மட்டுமே என்பதைத்தான். சுதந்திர தமிழீழம் ஒன்றை நிறுவும் வரை 1958 இனக்கலவரத்தின் பின்னர் தொடர்ந்து தமிழ் மக்கள் கொல்லப்படுவது, கற்பழிப்புக்குள்ளாக்கப்படுவது சனல் 4 மூலம் வெளிக்கொணரப்பட்டது போன்று
தொடரும்’ என்றும் உருத்திரகுமாரன் தெரிவித்தார்
பிரபல பத்திரிகையாளர் தார்ஸி வித்தாச்சி தனது 1958 இனக்கலவரம் பற்றிய புத்தகத்தில் இன உறவுகள் பற்றி ஆய்வு செய்து கேள்வி ஒன்றுடன் முடித்தார். தமிழர்களும் சிங்களவர்களும் பிரிந்து செல்வதற்கு வந்துள்ளார்களா? என்ற அந்த
கேள்விக்கு பதிலாக தமிழர்கள் 1977 பொதுத் தேர்தலில் இறைமையுள்ள சுதந்திர தமிழீழ நிறுவப்படவேண்டும் என்பதற்கு அமோகமாக ஆதரவு அளித்து வாக்களித்தனர்.
அந்த 1977 பொதுத்தேர்தல் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் நடத்தப்பட்டது.அத்தேர்தல் ஸ்ரீலங்காவில் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே நடத்தப்பட்டது’, என்றும் அவர் தெரிவித்தார்.
1983இல் இடம்பெற்ற இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் வேட்டையாடப்பட்டனர் என்பதுடன் காடையர்கள் தமிழ் பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது மட்டுமல்ல சிறைச்சாலைகளில் தமிழ்க் கைதிகள் படுகொலையும் செய்யப்பட்டனர். தமிழர்களுக்கு சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு இல்லை என்பதை அது உறுதிப்படுத்தியது.

16 ஜூன் 2011

செங்கல்பட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுதலை செய்க.

செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை :
சிறப்பு முகாம்களில் சிறைபடுத்தப்பட்டுள்ளோரை விடுதலை செய்க:-செந்தமிழன் சீமான்
செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியிலுள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 3 பேர் தங்களை விடுவிக்கக்கோரி கடந்த 13ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
செல்வம், அருங்குலசிங்கம், தர்மலிங்கம் ஆகிய அந்த மூன்று பேரில், செல்வத்தின் உடல் நிலை மோசமாகி அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களைச் சந்தித்த செங்கல்பட்டு தாசில்தார் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு எப்போதும் கடைபிடிக்கும் சம்பிரதாயப்படி கோரிக்கை விடுத்துள்ளார். போராட்டக்காரர்கள் அவரின் வேண்டுகோளை ஏற்கவில்லை.
தங்களை விடுவித்து, தமிழ்நாட்டில் இதர முகாம்களில் வசித்துவரும் தங்கள் உறவினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர். இதே கோரிக்கையைத்தான் பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களும் கோரி வருகின்றனர்.இலங்கைக்கு உணவு கடத்தினார்கள், மண்ணெண்ணை கடத்தினார்கள், இரத்தம் கடத்தினார்கள் என்கிற குற்றச்சாற்றின் பேரிலும், ஐயத்தின் பேரிலும் செங்கல்பட்டு முகாமில் 23 தமிழர்களும் பூந்தமல்லி முகாமில் 4 தமிழர்களும் ஈழத் தமிழ் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். தங்களை விடுவிக்கக்கோரி இவர்கள் பல முறை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
ஐயத்தின் பேரால் ஈழத் தமிழர்கள் பலரை இப்படி சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைத்து வைப்பது என்பது கடந்த ஆட்சியில் அடிக்கடி நடைபெற்றது. ஒரு கட்டத்தில் அவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருந்தது. சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் பல ஆண்டுகளாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தங்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தவறு செய்திருந்தால் தண்டியுங்கள், இல்லையேல் எங்களை விடுவித்து இதர முகாம்களில் உள்ள எம் சொந்தங்களுடன் வாழ அனுமதியுங்கள் என்பதே அவர்களின் கோரிக்கையாகும். ஆனால் கடந்த ஆட்சியில் அவர்களின் எழுப்பிய கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகவும், அடக்குமறைக்கு உட்படுத்தப்படும் நிலையைத்தான் ஏற்படுத்தியதே தவிர, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. அங்குள்ளவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் பொழுதெல்லாம் கண்துடைப்பாக ஏதாவது செய்து பிரச்சனையை அரசும் அங்குள்ள அதிகாரிகளும் திசை திருப்புகின்றனர். அவர்களை விடுவிக்க மறுக்கின்றனர்.
இப்படி வழக்கு, விசாரணையின்றி அவர்களை தடுத்து வைத்திருப்பது மனித உரிமை மறுப்பாகும் என்பதை எடுத்துக்கூறி தமிழர் இயக்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திவிட்டன. ஆனால் அரசு பெரிதாக அசைந்துகொடுக்கவில்லை. ஈழத்தில் போர் முடிந்த பிறகு வன்னியில் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட நிலையே, இங்கு சிறப்பு முகாம்களில் என்ற பெயரில் இருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு அவமானமல்லவா?
தமிழகத்தின் முதல்வராக 3வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்கள், அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்து விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

பிரித்தானிய வரலாற்றில் மிகவும் துன்பகரமான நிகழ்ச்சி!

பொதுமக்களை படுகொலை செய்ததற்காக சிரிய அதிபர் பசீர் அல் அசாத் மீது ஐ.நா தடைகளை கொண்டுவர முடியுமானால், வன்னியில் 40,000 தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா அரச தலைவரும், அவரின் சகோதரர் கோத்தபாயா ராஜபக்சாவும் தமது குற்றங்களில் இருந்து எவ்வாறு தப்ப முடியும்? என பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் த கார்டியன் நாளேடு தெரிவித்துள்ளது.
அதன் தமிழ் வடிவம் வருமாறு:
பிரித்தானியாவின் வரலாற்றில் மிகவும் துன்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாக கடந்த செவ்வாய்க்கிழமை (14) ஒளிபரப்பாகிய “சிறீலங்காவின் கொலைக்களம்” நிகழ்ச்சி அமைந்திருந்தது.
நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட தமிழ் கைதிகள் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள், பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சடலங்களாக காணப்படும் காட்சிகள், வாகனங்களில் இழுத்து வரப்படும் சடலங்கள், வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் என்பன மிகவும் கெடுமையாக அமைந்திருந்தன.
சிறீலங்கா படையினரின் இந்த போர்க்குற்றங்கள் செல்லிடதொலைபேசிகளினால் பதிவு செய்யப்பட்டவை. நூறு ஆயிரம் மக்களை ஒரு சிறிய பிரதேசத்திற்குள் முடக்கிய சிறீலங்கா படையினர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட வன்முறைகள் இவை.
விடுதலைப்புலிகளும், சிறீலங்கா அரசும் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக ஐ.நா நிபுணர் குழு கடந்த மாதம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது காண்பிக்கப்பட்ட காணொளிகளில் சில புதியவை. மனித உரிமை அமைப்புக்கள் மேற்கொள்ளும் பணிகளை சனல் போ.ர் நிறுவனம் செய்துள்ளது.
அதன் காட்சிகள் பார்க்கமுடியாதவாறு கொடுமையாக இருந்தாலும் அதனை ஒளிபரப்பியதற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று அங்கு சாட்சிகள் அற்ற போரை சிறீலங்கா மேற்கொண்டிருந்தது. சேர்பேனிக்காவை போல களமுனைகளில் இருந்து ஐ.நாவை அது பலவந்தமாக வெளியேற்றியிருந்தது.
இந்த காணொளி அங்கு நடைபெற்ற சம்பவங்களில் சிறிய பகுதியாக இருந்தாலும், சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்துலக சமூகம் தவறிவிட்டது.
இரண்டாவது, இது சேர்பேனிக்காவிற்கு நிகரானது என்பதுடன் உண்மையானதும் கூட. வைத்தியசாலைகள் மீது சிறீலங்கா படையினர் திட்டமிட்ட முறையிலேயே எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலை மீது 65 தடவைகள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே அவை எழுந்தமானவை என எண்ணமுடியாது. வைத்தியாசாலைகளின் அமைவிடங்கள் தொடர்பான தகவல்களை அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கம் சிறீலங்கா படையினரிடம் வழங்கியவுடனும் வைத்தியசாலைகள் மீது எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தாக்குதல்களை தவிர்ப்பதற்காகவே செஞ்சிலுவைச்சங்கம் தகவல்களை வழங்கியிருந்தது. பொதுமக்களை தாக்குவது போர்க்குற்றமாகும். இந்த குற்றங்கள் உறுதியானால் அதன் தாக்கம் சங்கிலித் தொடர் போன்றது. சிறீலங்கா படைத் தளபதிகளில் இருந்து அரச தலைவர்கள் வரை தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.
2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இடம்பெற்ற படுகொலைகளுக்காக ஈரான் மீது கண்டனம் தெரிவிக்க முடியுமானால், ஹெக் தொடர்பில் ரற்கோ மெலடிக் மற்றும் றொடவன் கராட்சிக் மீது நடவடிக்கை மேற்கொள்ள முடியுமானால், 1,300 பொதுமக்களை படுகொலை செய்ததற்காக பசீர் அல் அசாத் மீது ஐ.நா தடைகளை கொண்டுவர முடியுமானால், சிறீலங்கா அரச தலைவரும், அவரின் சகோதரர் கோத்தபாயா ராஜபக்சாவும் 40,000 மக்களை படுகொலை செய்ததில் இருந்து எவ்வாறு தப்ப முடியும்?
விடுதலைப்புலிகளும் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் என்பது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட குற்றங்களை நியாயப்படுத்துவதற்கான காரணமல்ல. சிறீலங்காவின் பொருளாதாரமும், உல்லாசப்பயணத்துறையும் வளர்ச்சி அடைந்து வருகின்றன என்பதற்காக இதனை சிறீலங்கா வரலாற்றில் மறைத்துவிட முயற்சி செய்கின்றது. ஆனால் அவ்வாறு விட முடியாது. சாட்சியங்களை நாம் புதைத்துவிட முடியாது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 ஜூன் 2011

அவுஸ்திரேலிய தொலைக்காட்சியான ஏ.பி.சியும் படுகொலைக் களக்காட்சிகளை வெளியிட்டுள்ளது!

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரில் சிறீலங்கா படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றி பிரித்தானிய தொலைக்காட்சி நேற்று மேலும் ஆதாரங்களை வெளியிட்ட அதேவேளை, அவுஸ்திரேலிய தொலைக்காட்சியான ஏ.பி.சியும் (ABC) இன்று சில காணொளிகளை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்காவின் கொலைக்களத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரித்தானிய வெளியுறவு அமைச்சர்!

போரின்போது சிங்கள இனவெறிப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை பற்றிய ஆவண திரட்டு ஒன்றை சணல்4 குறித்த நேரத்திற்கு ஒளிபரப்பியது. இதனைப்பார்த்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அதிர்ச்சியடைந்தார்.
இந்த ஆவணப்படத்தில் காண்பிக்கப்பட்ட மீறல்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை எனவும் இது தொடர்பில் கட்டாயம் விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் ஏனைய சர்வதேச சமூகங்களுடன் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு திருப்பி அனுப்பவென 40 தமிழர்கள் பிரித்தானியாவில் தடுத்து வைக்கப்பட்டுயள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படக் கூடாதென வலியுறுத்தி சனல் 4 ஒரு ஆவணத்தை தயாரித்து காணொளி வெளியிட்டுள்ளது.

உலக மக்களை கலங்கடித்த சிங்களக் காடையர் புரிந்த கொடூரக்காட்சிகள்!

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு மற்றும் திட்டமிட்ட படுகொலைகள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் வழங்கிய செய்தி ஆய்வு நேற்று (14) இரவு 11.05 மணியளவில் ஒளிபரப்பப்பட்டது.
உலகில் வாழும் மக்களை காப்பாற்றுவதற்கு என இரண்டாவது உலகப்போரின் பின்னர் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் செயற்திறனற்ற தன்மையால் 40,000 இற்கு மேற்பட்ட தமிழ் மக்களை சிங்கள கடையர்கள் கூட்டமாக படுகொலை செய்யும் காட்சிகள் உலகின் பல பாகங்களிலும் உள்ள மக்களின் இதயங்களை சிதறடித்துள்ளது.
நாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம்? மனித நேயம், மனித உரிமைகள், மனிதாபிமானம் என இந்த உலகம் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களுக்கு சிறீலங்காவில் என்ன நடந்தது என்ற கேள்விகளை இந்த நிகழ்ச்சியை பார்த்த பல மில்லியன் மக்கள் தமக்குள் கேட்டுக்கொண்டனர்.
யாரும் இரவு உறங்கியிருக்க மாட்டார்கள். சுயாதீன சாட்சியாளர்களை வெளியேற்றிவிட்டு தமிழ் மக்களை முற்றாக அழிப்பதற்கு சிறீலங்கா அரசு தயாரானது. அதற்கு அமைவாகவே வன்னியில் இருந்து ஐ.நா அமைப்புக்களை வெளியேறுமாறு சிறீலங்கா அரசு தெரிவித்தது.
ஆனால் அதற்கு மறுபேச்சு பேசாது அலுவலகத்தை மூடிவிட்டு ஐ.நா அதிகாரிகள் வெளியேறினார்கள். அவர்களை போக வேண்டாம் என தமிழ் மக்கள் தடுத்தனர், கெஞ்சினர், மன்றாடினர், தம்மை தனியே விட்டு செல்லவேண்டாம் என குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும், ஐ.நா அலுவலக வாசலில் குழுமி நின்று அழுதனர்.
ஆனாலும் தமது மனட்சாட்சிகளை படுகொலை செய்து புதைத்துவிட்டு ஐ.நா வெளியேறி சிறீலங்காவின் படுகொலைக்கு வழி அமைத்துக் கொடுத்தது.
அன்று ஐ.நா வாசலில் நின்று கதறிய மக்களில் பலர் இன்று உயிருடன் இல்லை.
ஐ.நாவின் இந்த நடவடிக்கைக்கு தூண்டியது யார்? இந்திய மத்திய அரசா??
இந்த இனஅழிப்புக்கு ஐ.நாவே காரணம் என அதன் கொழும்புக்கான முன்னாள் பிரதிநிதி கோடன் வைஸ் தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் தோல்வி இது எனவும் அவர் கூறியுள்ளார்.
எனவே தனது தோல்வியில் இருந்து விடுபட, சிறீலங்கா அரசின் படுகொலைகள் தொடர்பான நீதியை தமிழ் மக்களுக்கு ஐ.நா பெற்றுத்தருமா?
சனல் போர் செய்தி ஆய்வை பார்வையிட இங்கே அழுத்தவும்:

14 ஜூன் 2011

இன்று வெளியாகவுள்ள அதிர்ச்சிக் காணொளியின் ஒரு பகுதி!(எச்சரிக்கை:காணொளி கொடூரமானது)

பெரும் சிரமங்களுக்கு மத்தியில் உலகத் தமிழர் பேரவை(GTF) இந்தக் காணொளிகளை இலங்கைக்கு வெளியே கொண்டுவந்து அதனை சனல் 4 தொலைக்காட்சிக்கு கொடுத்துள்ளனர். அவர்களின் தன்னலமற்ற சேவையினை பாராட்டாமல் இருக்கமுடியாது !
ஒரு போரில் கைதாகும் போராளிகளையும் சரி, காயப்பட்ட எந்தவொரு இராணுவ வீரராக இருந்தாலும் சரி அவர்களை மரியாதையுடன் நடத்துவதோடு அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளையும் காலந்தாழ்த்தாது வழங்க வேண்டும் என்பதையே சர்வதேசச் சட்டமும் ஜெனீவா பிரகடனமும் வலியுறுத்துகிறது. ஆனால் இலங்கை இராணுவத்தினர் இவ்விதிகளை மீறியுள்ளதோடு, இறந்த மற்றும் காயப்பட்ட போராளிகளின் உடல்களை அவதூறு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கைக்கு தக்க மேற்கோளாக இந்த வீடியோவும் அமைகிறது.
கற்பழிப்பும், பாலியல் வன்முறையும்
இறுதிக்கட்டப் போரின்போதும் அதற்குப் பின்னரும் தமிழ்ப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கற்பழிப்பும் பாலியல் வன்முறையும் பெரியளவில் அறிக்கைகளில் உள்ளடக்கப்படவில்லை. இதுபோன்ற குற்றச் செயல்கள் தமக்கு நேர்ந்ததை தமது உறவினர்களுக்குக் கூடத் தெரிவிக்க முடியாதபடி மக்களின் கலாச்சாரம் மற்றும் தமது பெயருக்கு களங்கம் ஏற்படும் என்ற பய உணர்வு ஆகியவை பாதிக்கப்பட்டவரைத் தடுத்துவிட்டன. ஆனால் ஏராளமான தமிழ்ப் பெண்களின் கற்பு அரச படைகளாலும் அவர்களுடன் சார்ந்திருக்கும் தமிழ் ஒட்டுக்குழுக்களாலும் சூறையாடப்பட்டன என்பதற்கு மறைமுக ஆதாரங்கள் பல உள்ளன.
புகைப்படங்கள் மற்றும் வீடியோ கிளிப்புகள், குறிப்பாக சனல் 4 வெளியிட்டுள்ள வீடியோ ஆகியவை, இறந்த தமிழ்ப் போராளிகளின் உடல்கள் நிர்வாணமாக அல்லது மேலாடைகள் அகற்றப்பட்டு அவர்களின் அந்தரங்க உறுப்புகள் வெளிக்காட்டப்பட்டபடி இருப்பதைக் காட்டுவதோடு, அவ்வுடல்களைப் பார்த்து இராணுவத்தினர் பேசும் நக்கல் பேச்சுக்களில் இருந்து அவர்கள் அவ்வுடல்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியமையும் தெள்ளத் தெளிவாகிறது. ஒரு காட்சியில், நிர்வாணமான பெண்களில் உடல்கள் பலவற்றை இராணுவச் சிப்பாய்கள் ட்ரக் ஒன்றில் தூக்கி எறியும் காட்சியும், அதில் ஒரு பெண்ணின் காலின்மீது ஏறி மிதிப்பதையும், அப்பெண் அசைவதையும் கூடக் காணக்கூடியதாக உள்ளது.
தடுப்பு முகாம்களிலுள்ள போராளிகளைக் கற்பழித்ததற்கான சான்றுகளும், இடைத்தங்கல் முகாம்களிலுள்ள பெண்களைக் கற்பழித்ததற்கான சான்றுகளும் கூட சில சர்வதேச அமைப்புகளால் வெளிவிடப்பட்டுள்ளன. ஆனால் இடம்பெயர்ந்த மக்களுக்கு நேர்ந்த இக்கொடூரங்களை அவர்கள் போலீசிடமோ வேறு நிறுவனங்களிடமோ முறையிடக் கூடாது என்று இராணுவத்தால் அச்சுறுத்தப்பட்டும் உள்ளனர்.
7.27 நிமிடங்களுக்கு ஓடும் ஒரு முழு வீடியோ சர்வதேச ஊடகங்களுக்கு ஐ.நா நிபுணர் குழுவுக்கும் உலகத் தமிழர் பேரவையால் வெளியிடப்பட்டது. இவ்வீடியோ ஹெட்லைன்ஸ் நியூஸ் ரி.வி (இந்தியா ருடேயின் ஒரு பகுதி) இல் அண்மையில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. இவ்வீடியோவே தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா தனது பதவியேற்பின் முதலாவது உரையில், இலங்கை அதிபர் ராஜபக்�ஷவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தக் காரணமாக அமைந்தது.
இன்று வெளியாகும் வீடியோவில் இலங்கை இராணுவத்தினர் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அடிக்கும் நக்கல் பேச்சுக்களும் கருத்துக்களும் வீடியோவில் காட்டப்படும் நேரத்துடன் சேர்த்துக் கீழே தரப்பட்டுள்ளன.


0:04 முதலாவது உடல் தலையில் பெரும் காயத்துடன் கிடக்கிறது.
0:15 – 0:25 இரண்டாவது உடல் ஆடை கழுத்தில் சுற்றியவாறு காணப்படுகிறது. கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார்?
0:42 மூன்றாவது உடல் காட்டப்படுகிறது.
1:10 நாலாவது உடல் காட்டப்படுகிறது, ஒரு ட்ரக்ரர் அங்குள்ளது.
1:25 ட்ரக்ரரில் ஏற்றப்படுவதற்காக உடல் இழுத்துச் செல்லப்படுகிறது.
1:30 உயர்த்து, உயர்த்து, போடு
1:48 ஐந்தாவது உடல் காட்டப்படுகிறது, அந்தரங்க உறுப்புகள் வெளிக்காட்டப்பட்டுள்ளது.
2:09 கமெரா , அவளின் சரக்கை வீடியோ எடுப்பதற்கு கமெரா சரியான சின்னதாக இருக்கிறது.
2:19 இதுதான் சரக்கு ஒரு ஆணுக்கு சேவையாற்றுவதை விட்டுவிட்டு இப்படி தனது வாழ்க்கையை முடிக்கிறாளே. அவள் ஒரு தலைவி.
2:29 அவள் கடுமையாகச் சுடப்பட்டிருக்கிறாள்.
2:58 3:11 ஏராளமான சிப்பாய்கள் கிட்ட வருகிறார்கள், சில முகங்கள் பார்க்கக்கூடியதாக உள்ளன.
3:13 குமார், வா, குமார் வா!
3:25 ஒரு உடல் ஏற்கனவே ட்ரக்ரரில் பார்க்கக்கூடியதாக உள்ளது.
3:37 3:53 இன்னொரு நிர்வாண உடல் இழுத்து வரப்பட்டு, உயர்த்தப்பட்டு, பலத்த சத்தத்துடன் ட்ரக்ரரில் எறியப்படுகிறது.
3:57 அவள் சயனைட் சாப்பிட்டு விட்டாள்.
4:07 4:14 இன்னொரு உடல் எறியப்படுகிறது.
அதைக் கொண்டு வா. அவள் இப்போது வேதனையில் முனகுகிறாள்.
4:20 இன்னொன்றை ஏற்றத் தொடங்குகிறார்கள்.
4:22 அதைக் காலில் பிடித்து இழு.
4:30 நிர்வாண உடல் பற்றிக் கருத்துக் கூறுகிறார்கள்: அதைக் கொண்டுவா. இது ஒரு நல்ல உடல்.
4:55 இன்னொரு உடல் இழுத்து வரப்படுகிறது.
5:27 5:55 தலையில் சுடு நல்லதொரு வேலை செய்ய வந்திருந்தாள். அவளின் தலை விழத்தக்கமாதிரி சுட்டு நொருக்கினேன் செத்திட்டாள்
அவள் முனகுகிறாள். உடம்பு சூடாக இருக்கிறது. உடம்பு இப்போதும் அசைகிறது.
[சுடப்பட்டவர் இறந்துவிட்டாரா இல்லையா என்பது குறித்து அவர்கள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதை இது காட்டுகிறது].
5:40 5:50 பின்னணியில் ஏராளமான சூட்டுச் சத்தங்கள் கேட்கின்றன.
6:02 போய், ரோட்டில் இருப்பவையை ஏற்றுவோம்.
நாலும் பெண்கள்.
6:20 இந்த உடலின் விரல்களைக் காணவில்லை.
6:36 6:45 இன்னொரு உடல் இழுத்து வரப்படுகிறது.
6:45 7:00 உடல் ஏற்றப்படுகிறது.
ஜீன்ஸைக் கழற்றிவிட்டு அதை இந்தப் பக்கமாகத் திருப்பு
அவர்கள் கட்டித்தழுவ விடு
அப்படி இருக்குமாறு வை.
7:07 7:15 உடலைக் கீழே போடுகின்றபோது, கை அசைவது தெரிகிறது. அப்பெண்ணின் தொடையில் ஒரு சிப்பாய் கடுமையாக ஏறி மிதிக்கிறார்.
7:20 குமார், போய் அதை இழு.அங்கே இன்னும் ஒன்று இருக்கிறதுமாமரத்துக்குக் கீழே நான்கு உள்ளது.
சாலையோரத்தில் ஒரு குவியல் இருக்கிறது. [ஒரு நபர் சேர் என அழைக்கப்படுகிறார், எனவே இராணுவ அதிகாரி ஒருவரும் அங்கிருந்தார் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது].
7:27 முடிவு.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரும் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று 13.06.2011 அன்று சென்னை ஐகோர்ட்டில் வைகோ நேரில் ஆஜராகி வலியுறுத்தினார்.
பின்னர் ஐகோர்ட்டில் இருந்து வெளியே வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி நாங்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்காக ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டிருப்பது, எங்களுக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றியாகும். இந்த தடையை நீக்கக்கோரி தொடர்ந்து முயற்சி செய்வோம். தடை நீக்கப்படும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், போர்குற்றங்களுக்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச அளவில் விசாரிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறோம்.
ஆனால் தேர்தல் முடிவு வெளியான உடனேயே, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும், இலங்கையில் நடந்த போர்குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும், இந்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம் என்றார்.

13 ஜூன் 2011

அகதிகளின் இரகசியங்களை இலங்கைக்கு சொன்ன பிரித்தானியா!

ஜூன் 16ம் திகதி இலங்கைத் தமிழ் அகதிகள் 300 பேரை திருப்பி அனுப்ப பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தனி விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதனில் 300 தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்த அவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். இதனை எதிர்த்து இன்றைய தினம் சில தமிழ் வழக்கறிஞர்கள், அரசுக்கு எதிராக வழக்குத் தொடுக்கவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. ஆனால் ஜூன் 31ம் திகதி மற்றுமொரு விமானத்தையும் வாடகைக்கு அமர்த்த பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் முயல்வதாக மேலும் செய்திகள் கசிந்துள்ளது. அதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுமாயில் வேறு பொறிமுறைகளையும் அவர்கள் கையாளவுள்ளனராம்.
தற்சமயம் சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் போக, போலீஸ் நிலையத்தில் சென்று கையெழுத்து இடுவோர் மற்றும் பல காலம் நிலுவையில் உள்ள அகதிகள் ஆகியோரைப் பிடித்து திருப்பி அனுப்பவும், குடிவரவு அதிகாரிகள் முற்படலாம என்ற ஊர்ஜிதமற்ற செய்திகள் தற்போது கசிந்துள்ளது. பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட ஒருவரின் சகோதரர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார் என்ற இரகசிய தகவலை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் இலங்கை தூதுவராலயத்துக்குத் தெரிவித்துள்ளனர். இதனால் குறிப்பிட்ட அந் நபர் இலங்கை சென்றால் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார், இல்லையேல் கொல்லப்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
நாடுகடத்தப்படவுள்ள 300 பேரில் இந் நபரும் அடங்குவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள சகல தமிழ் அமைப்புகள் இந்த அகதிகளை திருப்பி அனுப்பும் செயலை தடுத்து நிறுத்த உடனடியாகத் தலையிடவேண்டும் ! தமது அமைப்புகளுக்கு நெருக்கமாக இருக்கும் பிரித்தானிய எம்.பிக்களை உடனடியாகத் திரட்டி, காத்திரமான நடவடிக்கையில் உடனே இறங்கவேண்டும். இங்கே சிறிது காலம் தாழ்த்தினாலும், அவர்கள் நாடுகடத்தப்பட்டுவிடுவார்கள் என்ற யதார்த்தத்தை அனைவரும் உணருதல் நல்லது.
நன்றி:அதிர்வு இணையம்.

தனி ஈழம் அமைவதற்கு ஐ.நா.மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வைகோ , ராஜபக்ஸவை போர்க்குற்றவாளி என்று சொல்கிறார்கள். ஆனால் அவர் போர்க்குற்றவாளி இல்லை. இனக் கொலை செய்தவர். அவருடைய குற்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பங்கும் உண்டு. அதனுடன் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தவர்களுக்கும் உண்டு. இந்திரா காந்தி தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டவர். ஆனால் சோனியா காந்தி அப்படிப்பட்டவராக இல்லை.
சிங்களவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கி, விமானப் பாதைகள் அமைத்துக் கொடுத்தது எல்லாமே இந்திய அரசுதான். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் ராஜபக்ஸவைச் சந்தித்து தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கொடுக்க வலியுறுத்தி பேசியதாகச் சொல்லப்படுகிறது. ராஜபக்ஸ ஒரு நாளும் அதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக்கொள்ள மாட்டார். சிவசங்கர மேனனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும் இலங்கைக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
யார் சென்றாலும் ராஜபட்சவிடமிருந்து தமிழர்களுக்கு உரிய அதிகாரத்தை எதிர்பார்க்க முடியாது. சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபட்சவை நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே அதை வரவேற்று அறிக்கை விட்டேன். இப்போது முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். தில்லியில் பிரதமரைச் சந்திக்கும்போது இலங்கையுடனான இந்தியாவின் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும். அண்மையில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்து, இலங்கைக்கு மின்சாரம் வழங்கல், ரயில் பாதை அமைத்தல் போன்றவை தொடர்பாக ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். இதனால் இலங்கையில் பொருளாதாரம்தான் வளரும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தனி ஈழம் அமைவதற்கு, ஐ.நா. மன்றம் மூலம் பொதுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நடத்தும்போது, இப்போது இலங்கையில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்லாது, வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். இப்படி வாக்களிக்க வைத்தால் தமிழர்களின் ஒற்றுமை புலப்படும். உரிய அதிகாரத்துடன் கூடிய தனி ஈழம் அமைவதற்கும் வாய்ப்பாக அமையும் என்றார் வைகோ.

ஈழத்தமிழர்களின் நாடுகடத்தல் உத்தரவை நிறுத்துமாறு கோரிக்கை.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உத்தேச ஈழத்தமிழ் அகதிகளின் நாடுகடத்தலை நிறுத்துமாறு ஐரோப்பிய தமிழர் பேரவை அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
300 ஈழத்தமிழர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி ஒரே விமானத்தில் ஏற்றி நாடு கடத்தவிருக்கும் பிரிட்டன் அரசின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனவும் இந்த எண்ணிக்கையில் எந்தவொரு நாடும் இந்த நூற்றாண்டில் நாடுகடத்தப்படவில்லை என் பதைக் சுட்டிக் காட்டுகிறோம் எனவும் பேரவை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இலங்கைத் தீவில் தமக்கென வரையறை செய்யப்பட்ட பாரம்பரிய பூமியில் மொழி, மத கலாசார அடையாளங்களுடன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றை மாற்றியவர்கள் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தினரே.நிர்வாக நலனுக்காக தமிழர்களையும் சிங்களவர்களையும் ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்த ஆட்சியர்கள் விட்டுச் செல்லும்போது தமிழர்களைச் சிங்களவர்களின் ஆட்சிப் பொறுப்பில் விட்டுச் சென்றுள்ளதன் பலனை தமிழ் மக்கள் இன்றுவரை அனுபவிக்கின்றனர்.
தனது வரலாற்றுத்தவறை மறந்த இப்போதைய பிரிட்டிஷ் அரசு நாடுகடத்தலை மேற்கொண்டு எமக்கு மேலதிக துன்பச் சுமையைத் தருகிறது. இலங்கையில் இயல்பு வாழ்க்கைக்கு இடமில்லை. மிகவும் கொடுங்கோன்மையான இராணுவ ஆட்சி தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கில் நடைபெறுகின்றது.
யாழ். குடாநாட்டில் மாத்திரம் 57,000 பொது மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் முகாம்களில் வாழ்கின்றனர். வவுனியா தடுப்பு முகாம்களில் 30,000 வரையிலானோர் முடக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பகுதிகளில் பெருந்தொகையான உள்நாட்டு அகதிகள் நிச்சயமற்ற வாழ்க்கை நடத்துகின்றனர்.
ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமிற்கு மாற்றுவதை இலங்கை அரசு மீள்குடியேற்றம் என்று சொல்கிறது. அரசியல் நிலைவரம் இன்னும் மோசமாக இருக்கிறது. தற்போதைக்கு அதிகாரப் பகிர்வு குறித்த சட்ட மூலங்களைச் சமர்பிக்கப் போவதில்லை என்று இலங்கை அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கைப்படி இலங்கை அரசு உயர்மட்டத்தினரும் இராணுவத்தினரும் போர்க் குற்றங்கள், மனிதநேயச் சட்ட மீறல்கள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் புரிந்துள்ளனர் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழியின் அடிப்படையில் 300 அப்பாவித் தமிழர்களை நாடுகடத்துவது பாராதுராமான விளைவுகளை ஏற்படுத்தும். இலங்கை அரசின் வன்முறைக் கும்பல்களின் தாக்குதலுக்கும் காணாமற் போதலுக்கும் அவர்கள் உள்ளாவது நிச்சயம்.
நாடுகடத்தல் நடைபெறும் பட்சத்தில் இந்த 300 பேரின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வருமா? உயிராபத்து உள்ள நாட்டிற்கு ஏதிலிகளின் விருப்பத்திற்கு மாறாக அனுப்புவதை மனித உரிமைச்சட்டங்கள் தடை செய்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
மன்னிக்க முடியாத வரலாற்றுத் தவறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டாமென்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தேசித்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகளின் நாடுகடத்தலை நிறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.