30 நவம்பர் 2011

ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினின் மகள் அமெரிக்காவில் காலமானார்.

முன்னாள் சோவியத் ஒன்றிய சர்வாதிகாரியான காலஞ்சென்ற ஜோசஃப் ஸ்டாலினின் ஒரே மகளான ஸ்வெட்லானா அமெரிக்காவில் முதியோர் இல்லம் ஒன்றில் தனது 85 வயதில் காலமாகியுள்ளார்.
நவம்பர் 22ஆம் தேதி அவர் வயிற்றுப் புற்றுநோயால் இயற்கை எய்தினார் என்பதை அமெரிக்க அதிகாரிகள் பிபிசி ரஷ்ய சேவைக்கு உறுதிசெய்துள்ளனர்.
தொடர்புடைய விடயங்கள்மனித உரிமைஅமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பனிப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் 1967ல் ஸ்வெட்லானா சோவியத் யூனியனிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தது அச்சமயம் சோவியத்துக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.
தன் அப்பாவுடைய நிழலில் இருந்து தன்னால் முழுமையாக விலகிவர முடியவில்லை என்று அப்போது ஸ்வெட்லானா கூறியிருந்தார்.
ரஷ்யாவில் தனக்கு கிடைக்காக கருத்து சுதந்திரத்துக்காக சிந்தனை வெளிப்பாட்டு சுதந்திரத்துக்காக தான் அமெரிக்கா வந்ததாக அவர் கூறியிருந்தார்.
ரஷ்யாவில் தனது வாழ்க்கைத் துணையாக இருந்துவந்த இந்திய கம்யூனிஸவாதி பிரிஜேஷ் சிங்கை சோவியத் அதிகாரிகள் மோசமாக நடத்தினார்கள் என்பதும் தான் சோவியத்திலிருந்து விலக ஓர் காரணம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
பிரிஜேஷ் சிங்கை பின்னாளில் இவர் தனது கணவர் என்று குறிப்பிட்டாலும், இருவரும் திருமணம் செய்துகொள்வது தடுக்கப்பட்டிருந்தது.
1966ல் பிரிஜேஷ் இறந்த பின்னர் அவரது அஸ்தியைக் கரைப்பதற்காக இந்தியா வந்த அவர் சோவியத் திரும்பாமல் அமெரிக்கத் தூதரகத்துக்குள் சென்று அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்.
கம்யூனிஸ சித்தாந்தத்தையும், தனது தந்தையையும் தான் நிராகரிப்பதாக அவர் அறிவித்தார்.
தனது தந்தையை ஓர் அரக்கன் என்றும் அவர் வர்ணித்திருந்தார்.
ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியில் ரஷ்ய மக்கள் பல லட்சம் பேர் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் தனது வாழ்க்கை எப்படி இருந்தது என்று நினைவுகூர்ந்து ஸ்வெட்லானா எழுதிய "டுவெண்டி லெட்டர்ஸ் டு எ ஃபிரண்ட்" என்ற புத்தகம் அமெரிக்காவில் மிகவும் அதிகமாக விற்பனை ஆகியிருந்தது.
அமெரிக்காவில் வில்லியம் வெஸ்லி பீட்டர்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு தனது பெயரை லானா பீட்டர்ஸ் என்று இவர் மாற்றிவைத்துக்கொண்டார்.
இளமைப் பருவம்:
தந்தை ஸ்டாலினுடன் ஸ்வெத்லானா
ஸ்வெட்லானாவுக்கு ஆறு வயது இருந்தபோது அவரது தாயார் நாஸ்தெஸ்தா தற்கொலை செய்துகொண்டார்.
இளம் வயதில் அப்பா ஸ்டாலினின் விருப்பத்துக்குரியவராக ஸ்வெட்லானா இருந்தார். ஆனால் பின்னாளில் இருவரும் மிகவும் அன்னியப்பட்டுப்போனார்கள்.
ஸ்வெட்லானாவின் ஒரு சகோதரன், இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் படையினரின் கைகளில் சிக்கி கொல்லப்பட்டிருந்தார்.
இன்னொரு சகோதரன் அதிகமாகக் குடித்து இளம் வயதிலேயே உயிரிழந்திருந்தார்.

கொலைகள்,சித்திரவதைகள், பின்னணியில் ஸ்ரீலங்காவின் படையினரே உள்ளனர்.

இலங்கையில் இடம்பெறும் கொலைகள், காணாமல் போதல்கள் மற்றும் ஏனைய குற்றச் செஙல்களின் பின்னணியில் அரச படையினரும் புலனாய்வுப் பிரிவினருமே இருக்கின்றனர் என்பதை அரச சார்பற்ற நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் துஸ்பிரயோகம் தொடர்பிலான சாட்சிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமை குறித்து ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
உலக நாடுகள் மத்தியில் மனித உரிமை தொடர்பில் சாட்சியமளிப்பவர்களுக்கான சட்டங்கள் மறுகக்க விளைவை கொடுத்துள்ளளதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதே வேளை இலங்கையில் போர் முடிவடைந்த போதும் அங்கு படையினராலும் புலயாய்வுத் தரப்பினாலும் சித்திரவதைகள் உட்பட குற்றச் செயல்கள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று குழு குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் அரசு இவற்றைக் கண்டுபிடித்து விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக குற்றவாளிகள் தொடர்ந்தும் குற்றங்களுக்கு தூண்டப்படகின்றனர்- என்று சித்திர வதைகளுக்கு எதிரான குழு சுட்டிக்காட்டியுள்ளது.

29 நவம்பர் 2011

தளபதி கேணல் நகுலனை மின்னேரியா வதை முகாமில் வைத்து சிங்களப்படைகள் படுகொலை செய்துள்ளனர்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
கேணல் நகுலன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி கணபதிப்பிளை சிவமூர்த்தி, கடந்த 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
மின்னேரியாவில் உள்ள இரகசியத் தடுப்புமுகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 மே 18ம் நாள் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு அணிகளில் ஒன்றினது தலைவராக கேணல் நகுலன் செயற்பட்டிருந்தார்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த இவர், 2007 இல் மட்டக்களப்பின் மீதான கட்டுப்பாட்டை புலிகள் இழந்த பின்னர், மட்டக்களப்புக்கான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
2007 மே 23ம் நாள் ஏறாவூரில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் மரணமான விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் சடலங்களுக்கு அருகே கிடந்த கேணல் நகுலனின் அடையாள அட்டையை வைத்து, அவர் கொல்லப்பட்டு விட்டதாக, 2007 ஜுன் 8ம் நாள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த்து.
ஆனால், கேணல் ராமுடன் செய்மதி தொலைபேசி மூலம் கொண்டிருந்த தொடர்பாடல் சமிக்ஞையை அடிப்படையாக கொண்டு, திருகோணமலையில் வைத்து கேணல் நகுலனை 2009 பிற்பகுதியில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
கேணல் நகுலன் கொல்லப்பட்டு விட்டார் என்று ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு அறிவித்து விட்டதால், தமது செய்தி பொய்யாகி விடும் என்பதாலும், புலம்பெயர் தமிழர்களுடன் இவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாலும், இவரது கைது பற்றி எந்தவொரு ஊடகங்களுக்கும் தெரிவிக்காமல், சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாகவே வைத்திருந்தது.
ஆனால், புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தகவல்களை கேணல் நகுலனிடம் இருந்து பெறுவதற்கு பலமுறை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
சிறிலங்கா படையினருடன் ஒத்துழைக்க மறுத்ததால், கேணல் நகுலன் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெறமுடியவில்லை.
இந்தநிலையில், அவர் எந்தவகையிலும் பயன்படமாட்டார் என்று உணர்ந்து கொண்ட இராணுவப் புலனாய்வாளர்கள், உயர்மட்ட பணியகத்தில் இருந்து வந்த உத்தரவை அடுத்து, கேணல் நகுலனை படுகொலை செய்துள்ளனர்.
கேணல் நகுலன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மின்னேரியா தடுப்பு முகாமில் மேலும் பல புலிகள் இயக்கத் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

28 நவம்பர் 2011

தண்ணீர் தாங்கி உச்சியில் ஈகச்சுடர் ஏற்றினர் யாழ்,பல்கலை மாணவர்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளின் தண்ணீர் தாங்கி உச்சியில் நேற்றுமாலை 6.05 மணிக்கு திடீரென மாவீரர் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
தகவல் அறிந்ததும் உடனடியாகப் படையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர். இதனால் நேற்றிரவு சில மணிநேரம் அங்கு பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவின. மாணவர்கள் விடுதியைவிட்டு வெளியேறவில்லை. இராணுவப் புலனாய்வாளர்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர்களால் விடுதியின் காப்பாளர்கள் இருவர் தாக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
முன்னதாக, யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதிகளின் உச்சியில் சரியாக 6.05 மணிக்கு மாவீரர் நாள் ஈகச் சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கட்டடத்தின் நாற்புறமும் அறைகளிலும் மெழுகுதிரிகளை ஏற்றி மாணவர்கள் அகவணக்கம் செலுத்தினர்.
விடுதியில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெறுவதை அறிந்தும், விடுதியின் உச்சியில் ஈகச் சுடர் ஏற்றப்பட்டதைக் கண்டும் இராணுவத்தினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்தனர். ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகள் இரண்டும் சுற்றி வளைக்கப்பட்டன.
விடுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவத்தினர் சீருடையுடனும் சீருடை இல்லாமலும் கொட்டன்கள், பொல்லுகள் சகிதம் நின்றனர் என்று மாணவர்கள் கூறினர். இரவு 7.30 மணியளவில் அப்பகுதியிலிருந்த பெரும்பாலான படையினர் வெளியேறினர். அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறவில்லை.
மாவீரர் நாள் நேற்று அனுஷ்டிப்பு:
படையினரின் பாதுகாப்புக் கெடுபிடியின் மத்தியிலும் வடக்கு, கிழக்கில் மாவீரர் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதி, யாழ்ப்பாணத்தின் இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பொது இடங்களில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பகுதிகளில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

27 நவம்பர் 2011

மட்டக்களப்பில் மாவீரர் நாள் துண்டுப்பிரசுரம் விநியோகம்!

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள் எமது இனம் விடுதலை வேண்டி உறுதி ஏற்கும் புரட்சிகரமான புனித நாள். இவ்வாறு மட்டக்களப்பில் இன்று விநியோகம் செய்யப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநியோகம் செய்யப்பட்ட துண்டுப்பிரசுரம் .


திருச்சி வேலுச்சாமி அவர்கள் மாவீரர் தினம் தொடர்பாக விடுத்த வேண்டுகோள்!

எம் மாவீரர் செல்வங்களை போற்றி வணங்குவோம்!

இன்று தமிழீழ தேசிய மாவீரர் நாள்,ஆயிரம் ஆயிரம் சிங்கள இந்திய ஆக்கிரமிப்புப் படைகளை களங்களில் வீழ்த்திய எங்கள் மாபெரும் தளபதி பால்ராஜ் அண்ணா,அரசியல் களத்திலே எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பாலா அண்ணா உட்பட்ட ஆயிரக்கணக்கான தமிழீழ,தமிழக வீர மறவர்களை போற்றி வணங்கும் புனிதநாள் இம்மாவீரர் நாள்.இந்த தூய்மையானவர்களை தரிசிக்கும் நன்னாளிலே அவர்களின் கனவுகளை நனவாக்க உறுதி பூணுவோமாக.எமது தேசியத் தலைவரின் இலட்சியப்பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.தமிழீழ இலட்சியப்போராட்டமானது அற்ப சொற்ப சலுகைகளுக்கான போரல்ல தமிழனது மானத்தை காக்கவும்,உரிமைகளை நிலை நிறுத்துவதற்குமேயாகும்.இன்று இலங்கையிலே தமிழர்கள் எப்படி அடிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள் என்பதை ஒரு முறை எண்ணிப்பார்ப்போம்.இப்பொழுதாவது மாவீரர் தியாகங்களை புரிந்து கொள்வோம்!உலகத்தமிழினமே வாரீர் ஒரே இலட்சியத்துடன் போராடுவோம்.தமிழீழ தாயகத்தை அடைவோம்.மாவீரர்களே உங்களை போற்றி வணங்குகிறோம்!

26 நவம்பர் 2011

நீங்கல்லாம் நாசமா போயிருவீங்க இது நடக்கும்"சீமான் கொதிப்பு!

25.11.2011 அன்று சென்னை அம்பத்தூரில் உள்ள ‘ஆஸ்ஸி’ பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அவர் பேசுகையில்,
ஒருத்தன் கேட்கிறான் பால் விலை, பேருந்து கட்டணம் எல்லாம் ஏறிவிட்டது. ஏன்னென்றால், பொதுநிறுவனங்களை பாதுகாக்க நிதி இல்லை. உடனே ஒருத்தன் எடுத்து பேசுறான், அண்ணா நூலகத்தை மாற்ற காசு இருக்கு. இதுக்கு காசு இல்லையா. இதுக்கு யாரிடம் பதில் இருக்கு.
மத்திய அரசு, மாநில அரசு கேட்ட நிதியை ஒதுக்கி தரவில்லை. மத்திய அரசுடன் கூட்டணி அமைக்காமல் இந்த அரசு அமைந்திருக்கிறது. பெரும்பான்மையோடு அமைந்திருக்கிறது. தனக்கு அடிபணியவில்லை. அதனால் வஞ்சிக்கிறது. பொதுவாகவே இந்தியாவை ஆளுகிற காங்கிரஸ் அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரானது.
மேற்கு வங்காளத்தை ஆளுகிற மம்தா பானர்ஜியோடு கூட்டணி வைத்திருக்கிறது. அதனால் கேட்கிற நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. இங்கே ஆளுகிற அதிமுக அரசு காங்கிரசோடு கூட்டணி வைக்கவில்லை. அதனால தேவையான நிதியை தரவில்லை. அப்ப நீங்க என்ன செய்திருக்க வேண்டும். மக்களிடம் சொல்லியிருக்க வேண்டும். கேட்ட நிதியை மத்திய அரசு ஒதுக்கி தராததால், நான் விலைவாசியை உயர்த்தினால் பால் விலை 6 ரூபாய் 25 காசு கூடும். பேருந்து கட்டணம் இரட்டிப்பாகும். பேருந்தில் எவன் போவான். ஷேர் ஆட்டோவில் போகமுடியாதவன். இருசக்கர வாகனம் வைத்துக்கொள்ள முடியாதவன். கார் வைத்துக்கொள்ள முடியாதவன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன். மாதச் சம்பளம் 3 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய் வாங்குபவன்தான் பேருந்தில் போவான். அவன் காசை பறித்து, அதில் இருந்து நிதியை பெருக்கி, நிர்வாகத்தை சீர்செய்ய வேண்டும் என்பது எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு மோசமானது என்பதை சிந்திக்க வேண்டும்.
அப்ப என்ன செய்திருக்க வேண்டும். என் அன்பு மக்களே, இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. தமிழக அரசுக்கு நிதி தரவில்லை என்றால், பால் விலையை ஏற்றினால், பேருந்து கட்டணத்தை உயர்த்தினால் உங்களுக்கு இவ்வளவு சுமை இருக்கும். இவ்வளவு கஷ்டத்தை மக்கள் மீது சுமத்த முடியாது. எனவே எனக்கு ஆதரவாக நில்லுங்கள். நான் போராடுகிறேன். அப்படித்தான் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்கள் போராடினார்கள். மத்திய அரசு வேண்டிய அறிக்கையை கொடுக்காதபோது, மக்களைத் திரட்டி ஒரு நாள் போராட்டம். அடுத்த நாள் பதறிக்கொண்டு அறிக்கையை கொடுத்தது மத்திய அரசு. அப்படி போராடி இருக்க வேண்டும்.
மத்திய அரசு, நான் உங்களை அடிக்கிறேன். நீங்கள் திருப்பி என்னைத் தான் அடிக்க வேண்டும். பக்கத்தில் இருக்கும் அப்பாவியை அடிக்கக் கூடாது. அது சரியல்ல.
ஆர்ப்பாட்டத்தில் பேச அனுமதி இல்லை. பெரம்பலூரில் டிசம்பர் 15ல் தம்பி அப்துல் ரசக்கின் நினைவுத் தினத்திற்கு கூட்டம் போட்டால் அந்த இடத்தில் அனுமதியில்லை. ஏன், பக்கத்தில் அகதிகள் முகாம் இருக்கிறது. சீமான் பேசினால், பக்கத்தில் இருக்கிற அகதிகள் எல்லாம் துப்பாக்கியை தூக்கிக்கிட்டு இலங்கைக்கு போய்விடுவானா. சீமான் பேசினால் உணர்வு பெற்றுவிடுவான். ஏண்டா ஒரு தமிழன் கூட உணர்ச்சியே பெற்றுவிடக் கூடாதா. உணர்வே பெற்றுவிடக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தீங்கன்னா, இதை எங்கப்போய் சொல்லறது. நான் இந்தக் கூட்டத்தில் பேசுவதற்கும், எங்கோ ஓரத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருக்கும் தமிழர்கள் உணர்வு பெறுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கு. அதுக்காக அந்த இடத்தில் பேச அனுமதி இல்லையென்றால், இதைவிட ஒரு கொடுமை, இதைவிட ஒரு சர்வாதிகாரம், இதைவிட அடக்கமுறை எதாவது இருக்கா.
கலைஞர் கருணாநிதி அவர்கள் என்னை பேச வைத்து இறையாண்மைக்கு எதிரா பேசுறான். விடுதலைப்புலிகளை ஆதரிச்சு பேசுறான். சட்டத்துக்கு எதிரா பேசுறான் என்று தூக்கி தூக்கி உள்ளே போட்டாரு. இதுக்கு அதுவே பரவாயில்லை. இங்கே நீ பேசவே விடல. அந்த கொடுமையை தொலைக்கத்தான் இந்த வேலையை செய்தோம். இது அதைவிட பெரிய கொடுமையா இருக்கு. இதை தொலைக்க பெரிய வேலை செய்யணும் போலிருக்கு நாங்க.
நான் சொன்னேன் ஒரு அதிகாரிகிட்ட எடுத்து, நாசமா போயிருவீங்கன்னு சொன்னேன். இது நடக்கும். இந்த சேட்டையெல்லாம் நீங்க வைச்சிக்கக் கூடாது. ஒண்ணு தெரிந்துக்கொள்ளுங்கள் அப்படியே ஒரு வாய்க்காலில் ஓடுகிற தண்ணீரை நீங்க அடக்கி தேக்கி தேக்கி வைச்சி வைச்சி திறந்தீங்கண்ணா, அது வேக வேகமா பாயும். அதைத்தான் நீங்க செஞ்சிக்கிட்டு இருக்கீங்க. இரவு முழுவதும் பட்டியில் கட்டி வைத்திருந்த மாடுகளும், ஆடுகளும் காலையில் திறந்து விட்டால் எவ்வளவு வேகமா வெளியே பாய்ந்து வருமோ, அவ்வளவு வேகமா நாங்க வருவோம். ஆடு, மாடுமே அப்படி பாயும்போது, வீரத்தமிழ் புலிகள் நாங்கள் எப்படி பாயுவோம் என்று நீங்க புரிந்துக்கொள்ளுங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.

தலைவரின் பிறந்தநாள்,தமிழகப் பெண்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் 57ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழகப் பெண்கள் செயற்கள ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமையில் 100 பேர் குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். புகைப்படம் இணைப்பு.

கட்டுப்பாடுகளையும் மீறி யாழில் தேசியத்தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சில பிரதேசங்களில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக யாழில் பாதுகாப்பு நிலவரம் உசார் படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து யாழ்.குடாநாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
இந்நிலையில், பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு எந்தவிதக் கொண்டாட்டங்களோ அல்லது நிகழ்ச்சிகளோ யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்க விடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிறிதொரு குழுவொன்றினால் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இராணுவத்தினருடன் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சாதாரண தினமாகவே காணப்படப்போகின்றது. இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் எந்தவொரு கொண்டாட்டமும் இடம்பெறப்போவதில்லை என்று என்னால் உறுதி கூற முடியும் என்றும் யாழ். கட்டளைத்தளபதி தெரிவித்தார்.
யாழ்ப்பாண நகரின் பல வீதிகளிலும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் இரவு வேளைகளிலும் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர் என்று மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை யாழ்ப்பாண நகரத்தில் உள்ள தேநீர்ச்சாலைகளில் மக்கள் ஒன்று கூடி கேக்கைக் கொள்வனவு செய்து உண்டு மகிழ்ந்துள்ளனர்.
ஆலயங்களுக்குப் பலத்த பாதுகாப்பை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் கண்களுக்கு மண்ணைத் தூவி விட்டு மக்கள் தேசியத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தேநீர்ச்சாலைகளில் முன்னெடுத்துள்ளனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
ஆக்கிரமிப்புக்களும், அடக்குமுறைகளும் எக் காரணம் கொண்டு வெற்றியளிக்காது என்பதற்கு இது நல்லதோர் எடுத்துக்காட்டு.

25 நவம்பர் 2011

முகமூடி அணிந்து பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த சிலர் அடாவடியில் ஈடுபட்டனர்!

யாழ். பல்கலைக்கழகத்திற்குள் முகமூடிக் கொள்ளையர்கள்போல் நுழைந்த சிலர் சிற்றுண்டிச் சாலைக்கு அருகில் இருந்த விளம்பரப் பலகையின் கண்ணாடியை அடித்து நொருக்கினர். மாவீரர் தினத்தையொட்டிய நோட்டீஸ் ஒன்று அதற்குள் இருந்ததன் காரணமாகவே நொருக்கப்பட்டது என்று மாணவர்கள் கூறினர்.
“முன்புறம் கறுப்பு நிறக் கண்ணாடி கொண்ட தலைக் கவசங்கள் நீண்ட மழை அங்கி என்பவற்றை அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்த நான்குபேர் திடீரென விளம்பரப் பலகையின் கண்ணாடியை அடித்து நொருக்கி அதற்குள் இருந்த நோட்டீஸை எடுத்துச் சென்றனர்” என்றனர் மாணவர்கள்.
இதுபோன்ற நோட்டீஸ்கள் பல்கலைக்கழகத்தின் வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்ததாகவும் ஆனால், அவற்றுக்கு எவரும் சேதம் விளைவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றமை பல்கலைக்கழகத்துக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் புலிகளால் மாவீரர் வாரம், மாவீரர் தினம் என்பன கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. 2009 மே மாதம் அரச படையினரால் புலிகள் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தினங்கள் வடக்கு கிழக்குப் பகுதியில் கடைப்பிடிக்கப்படுவதற்கு அரசும் இராணுவமும் தடை விதித்துள்ளன. எனினும் உலகில் தமிழர்கள் பரந்து வாழும் ஏனைய நாடுகளில் மாவீரர் வாரம் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகின்றது. மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

சரத் பொன்சேகாவை விடுவிக்காவிட்டால் நடவடிக்கை என அமெரிக்கா எச்சரிக்கையாம்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்கா விட்டால், ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒரு அரசியல் கைதி என்றும் அவரை உடனடியாக விடுவிக்குமாறும் சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது.
வெள்ளைக்கொடி வழக்கு முடிந்த பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உயர்மட்ட அமைச்சர் ஒருவருடனான சந்திப்பின் போது அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா நடத்திய ஆய்வு ஒன்றில், சிறிலங்காவைச் சேர்ந்த பெரும்பாலானோர் சரத் பொன்சேகா விடுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவதாக தெரியவந்துள்ளது என்றும் அந்த இராஜதந்திரி கூறியுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு சிறிலங்கா அரசு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்றும் இல்லையேல் இந்த விவகாரத்தை அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் எழுப்பும் என்றும் அமெரிக்க இராஜதந்திரி எச்சரித்துள்ளார்.
முன்னதாக சிறிலங்கா அமைச்சரை கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிசியா புற்ரெனிசே சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் கடைசிநேரத்தில் அவர் தனது மனதை மாற்றிக் கொண்டு வெறொரு பிரதிநிதியை சந்திக்க வைத்துள்ளார். அவரே சிறிலங்கா அமைச்சருக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்துள்ளார்.

24 நவம்பர் 2011

தொடர்கிறது சிங்களப்படைகளின் அடாவடி!

கிளி, முல்லை மாவட்டங்களில் இராணுவத்தினரின் அடக்கு முறைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. மக்கள் கூட்டமாக நிற்கவோ மற்றும் பொது நிகழ்வுகள் நடாத்துவதற்குத் தடை விதித்துள்ளனர்.
கிளிநொச்சி திருவையாற்றுப் பகுதியில் வீடு வீடாகச் செல்லும் இராணுவத்தினர் குடும்பப் பதிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் பகைப்படங்ளை எடுப்பதுடன் வீடுகளில் வாகனங்கள் இருந்தால் வாகனத்திற்கு முன்பாக நிற்கவைத்து புகைப்படங்களை எடுத்து பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அத்தோடு வாகனங்களின் இஞ்சின் மற்றும் செசி இலக்கங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதே வேளை கிளிநொச்சி ஜெயந்திநகரில் சாய்பாபா அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றபோது அங்கு வந்த இராணுவத்தினர் இது மாவீரர் தின நிகழ்வாக இருக்கலாம் எனக் குழப்பம் விளைவித்து இந்நிகழ்வைத் தடுத்து நிறுத்தினர். இவ்வாறு பொது நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்தியது இவ்வாரத்தில் இது இரண்டாவது தடவையாகும்.

அனுருத்த ரத்வத்த சிகிச்சை பலனின்றி மரணம்.

முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்த (73) மரணமடைந்தார்.1938 ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த ஜெனரல் அனுருத்த லூகே ரத்வத்த, 1994 முதல் 2001 ஆம் ஆண்டுவரை பிரதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். மின்சக்தி வலுசக்தி அமைச்சர் உட்பட அமைச்சரவை அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்தமை குறிப்பிடத்தக்கது. தலதா மாளிகையின் பிரதி தியவதன நிலமேயாகவும் இவர் பதவி வகித்துள்ளார்.
இவர் மாவனல்லை தொகுதியின் முன்னாள் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரும் தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமேயுமான ஹரிஸ் லூகே ரத்வத்தயின் மகனாவார்.
இலங்கையின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்த கடந்த செவ்வாய்க்கிழமை கண்டி பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வீட்டினுள் விழுந்து காயமடைந்துள்ளதனால் கண்டி பொது வைத்தியசாலையில் அனுருத்த ரத்வத்த அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நெருங்கிய விசுவாத்துக்குரியவராக விளங்கிய ரத்வத்த சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கையின் பிரான சூத்திரதாரியாக விளங்கியிருந்தார். அதேவேளை தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி 1997 முதல் 2002ஆம் ஆண்டுவரையான காலப் பகுதியில் 34 மில்லியன் ரூபா பணத்தினையும் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களையும் சட்டவிரோதமான முறையில் அபகரித்திருந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டும் ரத்வத்த மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

23 நவம்பர் 2011

வழுக்கி விழுந்ததில் ரத்வத்தையின் மண்டை உடைந்ததாம்!

சிறிலங்காவின் முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை, வீட்டில் வழுக்கி விழுந்து, தலையில் படுகாயமடைந்த நிலையில் கண்டி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றுமன்தினம் இரவு வீட்டில் வழுக்கி விழுந்ததை அடுத்து அவர் உடனடியாக கண்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
தலையில் படுகாயமடைந்து நினைவிழந்த நிலையில் உள்ள அவருக்கு அவசர சிகிச்சைப்பிரிவில் நரம்பியல் நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஜெனரல் ரத்வத்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ள போதும், அவர் தொடர்ந்து நினைவிழந்த நிலையிலேயே இருக்கிறார்.
24 மணி நேரத்துக்கும் மேலாக- நேற்றிரவு வரை அவர் மயக்கநிலையில் இருந்து மீளவில்லை. அவரது உடல் நிலை குறித்து மேலதிக தகவல்களை வழங்க கண்டி மருத்துவமனை வட்டாரங்கள் மறுத்து விட்டன.
சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஜெனரல் அனுருத்த ரத்வத்தை கடும்போக்காளராக இருந்து போரை முன்னெடுப்பதில் தீவிர பங்காற்றினார்.

தமிழர்கள் எது செய்தாலும் மாவீரர் தின நிகழ்வுகளோ என எண்ணி குழப்பத்தில் ஈடுபடுகிறது சிங்களப்படை!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த தினமான 26, மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை நினைவில் வைத்துள்ள படையினருக்கு வடக்கு கிழக்கு எப்பகுதியிலாவது ஊர்வலங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்துவதாயின் முன்னனுமதி எடுக்கவேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
வன்னி மாவட்டத்தில் கனகராயன் குளம் மகாவித்தியாலயத்தில் வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் கனகராயன்குளம் மகா வித்தியாலய மாணவர்களால் உலக கைகழுவினர் தின விழிப்புனர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு யுனிசெவ் நிதி அனுசரணை வழங்கியிருந்தது.
இந்த ஊர்வலம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30க்கு கனகராயன் குளம் பொதுச் சந்தையில் ஆரம்பமாகிய நிலையில் அங்கு வந்த இராணுவத்தினர் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தியதுடன் இதற்கான அனுமதி பெறப்படவில்லை எனவும் என்ன நிகழ்வாயினும் எம்மிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் அச்சுறுத்தியதுடன் அங்கு கூடி இருந்த வவுனியா வடக்கு பிரதிக் கல்விப்பணிப்பாளர், யுனிசெவ் பிரதிநிதியையும் விசாரணைக்கென அழைத்துச் சென்றனர்.
மாவீரர் வார நிகழ்வுகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெற்றுவிடும் என்பதற்காக அதிகளவான இராணுவப் புலனாய்வாளர்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

22 நவம்பர் 2011

மகிந்த ஆணைக்குழுவின்(நல்லிணக்க ஆணைக்குழு)பரிந்துரை வெளியானது எப்படி?

சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை (மகிந்த ஆணைக்குழு என்றே சொல்லவேண்டும்)இன்னமும் பகிரங்கப்படுத்தப்படாத நிலையில், கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றில் அதன் முக்கிய பரிந்துரைகள் வெளியாகியுள்ளன.
“பலமான ஆயுதங்கள் தரித்த தீவிரவாதக் குழுவின் பிடியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சிறிலங்காவை எந்தவொரு அரசாங்கமும் கேட்க முடியாது.
அவ்வாறு போர் நடவடிக்கையை நிறுத்துவது தீவிரவாதிகள் மூர்க்கம் பெறுவதற்கு மட்டுமே வழிவகுக்கும்.
அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் பொதுமக்கள் வேண்டுமென்றே தாக்கப்படுவதை தடைசெய்கின்றது.
ஆனால் ஒரு அரசாங்கம் பணயக்கைதிகளை மீட்கின்ற போர் நடவடிக்கையின் போது அதைக் கடைபிடிக்க முடியாது“ என்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ளது.
“போர் நடவடிக்கையை நிறுத்துவது அல்லது தற்காலிகமாக இடைநிறுத்துவது பிரச்சினைகளை மோசமாக்கவே செய்யும்“ என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதி பல்வேறு சந்தர்ப்பங்களில், போரின் இறுதிக்கட்டங்களில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டதாக கூறிய பிரதான குற்றச்சாட்டுக்கே ஆணைக்குழு இவ்வாறு பதிலளித்துள்ளது.
388 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தொழில்நுட்ப மற்றும் வரைபடத் தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.
காணாமற்போனோர் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த பலர், குறிப்பாக வடக்கு,கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அளித்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“படையினரால் கைதுசெய்யப்பட்டு காணமற்போனவர்கள் தொடர்பாக, அவர்களின் அன்புக்குரியவர்களின் சாட்சியங்களை புறக்கணிக்கக் கூடாது. காணாமற்போன நடவடிக்கைளில் அரசாங்கத்தின் தொடர்பு இல்லை“ என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.
ஆகக்கூடிய பாதுகாப்புடன் கடும்போக்குள்ள தீவிரவாத சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூசா தடுப்புமுகாமுக்கு சென்றிருந்த தமது உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை பாதுகாப்புப் படையினரோ காவல்துறையினரோ இல்லாத சூழ்நிலையில் சந்திக்க முடிந்ததாகவும் ஆணைக்கழு கூறியுள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ளோர் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட வேண்டும் அல்லது விரைவான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“எல்லா சமூகத்தினருக்கும் சமமான உரிமைகளும், முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்.
வடக்கு உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள ஒரு நிலத்தையும் யாரும் வாங்கக் கூடிய நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். வடபகுதியில் உள்ள நிலங்களை வேறு பகுதியைச் சேர்ந்த யாராவது வாங்க முடியாது என்ற சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும்.“
“ஆயுதக்களைவுக்கு நியாயபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அண்மையில் பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர கொல்லப்பட்ட சம்பவத்தை தவிர்த்திருக்க முடியும்.
ஆணைக்குழுவின் அமர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோதமான எல்லா ஆயுதங்களையும் களைவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல மாதங்களுக்கு முன்னர் கையளித்த இடைக்கால அறிக்கையின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்“ என்று, மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவை மும்மொழி நாடாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள இந்த அறிக்கையில், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக பயன்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நோர்வேயின் நடுநிலையுடன் கூடிய போர்நிறுத்த உடன்பாடு உள்ளிட்ட, பிரச்சினைகளுக்கு காரணமான போருக்கு முந்திய மற்றும் பிந்திய பல்வேறு செயற்பாடுகள் குறித்தும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“அரசு மற்றும் அரசு சாராத தரப்புகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்த போர்நிறுத்த உடன்பாட்டை ஒரு முன்மாதிரியாக கொள்ள முடியாது“ என்றும் கூறியுள்ள அறிக்கையில், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் அவசர அவசரமாக இந்த உடன்பாட்டைச் செய்து கொண்டதற்காக சிறிலங்கா அரசாங்கத்தையும் ஆணைக்குழு விமர்சித்துள்ளது.
“டக்ளஸ் தேவானந்தா ஆணைக்குழு முன்சாட்சியமளித்த போது, போருக்கு முந்திய மற்றும் பிந்திய சூழலில் அவரது குழுவினருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு முழுப்பலான பதில்களையே அளித்துள்ளார்“ என்றும் கூறியுள்ளது.
“விடுதலைப் புலிகளின் பின்புலத்துடன் சனல்-4 வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களங்கள் காணொளி முற்றிலும் போலியானது.“
உலகின் பல்வேறு இடங்களிலும் காண்பிக்கப்பட்ட இந்தக் காணொளியின் உண்மைத்தன்மையை அறிய தாம் நாசா நிபுணர் ஒருவரின் ஆலோசனையை நாடியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவசரஅவசரமாக சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் மீது ஆணைக்குழு குறை கூறியுள்ளது.
“தேசிய பிரச்சினைகள் விடயத்தில் 24 மணி நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் கருத்தை எதிர்பார்ப்பது சரியல்ல“ என்றும், பொதுமக்கள் சட்டரீதியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை இதன் மூலம் பறிக்கப்படுவதாகவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
ஆணைக்குழுவின் இந்த அறிக்கையை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்தினால், சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து எந்தவொரு அனைத்துலக விசாரணைப் பொறிமுறையும் தேவைப்படாது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விடுதலையான போராளிகளின் வாழ்வில் தலையீடு செய்யும் சிங்களப்படைகள்!

தமிழர்களை அழித்தும் , ஈழத்தமிழரின் விடுதலை போராட்டத்தை முடக்கியும் சிங்கள பேரினவாதத்தின் யுத்தம் 2009 மே மாதத்துடன் முடிவிற்கு வந்த பின்னரும் தமிழர்களுக்கும் முன்னாள் விடுதலை புலிகளையும் எவ்வளவு துன்பங்களுக்கு சிங்கள அரசு ஆளாக்கி வருகிறது என்பதற்கு சான்றாய் வெளிவந்துள்ளது அல்ஜசீரிவின் செய்தி காணொளி.ஆனால் இலங்கையின் சமூகங்கள் முன்பைவிடவும் மேலும் பிரிவினையாகியிருப்பது போலத் தோன்றுவதால் இன்னொரு பிரச்சினை தோன்றக் கூடிய அபாயம் ஏற்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளியேறி தமது வீடுகளுக்குத் திரும்புகையில் தமது வாழ்க்கையில் இராணுவத்தின் நுழைவு இன்னமும் தொடர்ந்திருப்பதைக் காண்கின்றார்கள் என அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது.
இதேவேளை போர்க்குற்றங்களை விசாரணை செய்யும் அதிகாரம் அரசாங்கத்திற்குக்கு கிடையாது என கூறுபவர்களால் போரின் இறுதிக்கால கட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கான அறிக்கையைச் சமர்ப்பிக்க அதிகாரம் கிடையாதென விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.
இந்த அறிக்கை நேற்று ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனால் ‘இலங்கை இணைகின்றது’ போன்ற குழுக்கள் நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலம் உள்ளதென்றே பார்க்கின்றனர்.
இந்த இளையோர் அமைப்பு இலங்கை முழுவதும் பயணித்து இனக்குழுக்களிடையே ஒற்றுமையையும் சமாதானத்தையும் தூண்டும் நகர்வுகளைச் செய்துவருகின்றன.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களில் அனேகமானவர்கள் விடுதலை செய்யப்பட்டள்ளனர் என அரசு தெரிவித்து வருகிறது. அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டு சுமூகமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அல்ஜசீரா, முன்னாள் விடுதலைப் புலிகளின் வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் தொடர்பிலான காணொளி ஆவணம் ஒன்றை தயாரித்துள்ளது. அக் காணொளி இங்க பகிரப்பட்டுள்ளது.
இலங்கை போரிற்குப் பின்னதான கசப்பான இனப் பிரிவினையை மாற்ற என்ன தான் வழி?

21 நவம்பர் 2011

ஸ்ரீலங்கா பாராளுமன்றில் தண்ணீர் போத்தல் வீச்சு!

நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட உரையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மீது எதிர்க்கட்சியினர் தண்ணீர் போத்தல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் 2012ம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்ட உரை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூச்சல் குழுப்பங்களுடன் இடம்பெற்று வருகிறது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று பிற்பகல் 2 மணியளவில் நாடாளுமன்றம் வந்து வரவுசெலவுத் திட்ட உரையை நிகழ்த்த ஆரம்பித்தார்.
இதன்போது இடையில் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள், வரவுசெலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூச்சல்போட்டு குழப்பம் ஏற்படுத்தினர்.
வெட்கம் வெட்கம் என்று எழுத்தப்பட்ட பதாகைகளுடன் கூச்சலிட்ட ஐதேகவினருக்கு எதிரான ஆளும்கட்சி உறுப்பினர்களும் கூச்சல் குழப்பங்களில் ஈடுபட்டனர்.
ஐதேகவினரிடம் இருந்து பதாகைகளை ஆளும்கட்சி உறுப்பினர்கள் பறிக்க முற்பட்ட போது, ஒருகட்டத்தில் ஐதேக உறுப்பினர் ஹரின் பெர்னான்டோவும் திலும் அமுனுகமவும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக் கொண்டனர்.
இதன்போது ஐதேக உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐதேக பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மீது புத்தகம் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஆளும் கட்சியின் பின்வரிசையில் இருந்து எதிர்க்கட்சியினர் மீது தண்ணீர் போத்தல்கள் வீசப்பட்டன.
அதேவேளை எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து வீசப்பட்ட தண்ணீர்போத்தல் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு சில அங்குலம் தொலைவில் விழுந்தது.
இதன் பின்னர் ஐதேக உறுப்பினர்கள் அனைவரும் சபையை விட்டு வெளிநடப்புச் செய்தனர்.

20 நவம்பர் 2011

வெளிநாட்டு இராஜதந்திரிகள் கொழும்பில் இரகசிய ஆலோசனை!

சிறிலங்கா அதிபரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய இராஜதந்திரிகள், தாம் முக்கியமாக அறிக்கையின் பரிந்துரைகளை எதிர்பார்த்திருப்பதாகவும், மீறல்களுக்குப் பொறுப்புக் கூறப்படுவது அவசியமானது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு வருத்தும் தெரிவிப்பது குறித்தும் இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்குவது குறித்தும் அறிக்கையில் பரிந்துரைக்கப்படுவது அவசியமானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இல்லையேல், உலகத்தை ஏமாற்ற செய்யப்பட்ட முயற்சி என்றே அனைத்துலக சமூகம் கருதும் என்றும் அமெரிக்க, பிரித்தானிய இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை, இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் அவர்கள் ஒத்த கருத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒரு பகிரங்கப்படுத்தப்படும் ஆவணமாக இல்லாத போதும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் வெளிப்படுத்தவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.
இந்த அறிக்கையை அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை அறிந்து கொள்வதற்கு விருப்பம் கொண்டுள்ளதுடன் இது இரகசியமாக வைக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளன.

சனல்போர் காணொளி போலியானதென ஆணைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்!

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றிருக்கக் கூடிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு, சிறிலங்கா அதிபரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கேட்டுக் கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆணைக்குழு பெற்ற தகவல்களை அடிப்படையில் விசாரணை நடத்துவதற்குத் தேவையான முதற்தோற்றச் சான்றுகள் இருப்பதாலேயே இந்த விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் விசாரணை செய்யப்பட வேண்டிய சம்பவங்கள் குறித்தோ, இதற்குப் பொறுப்பானவர்கள் என்றோ எவரது பெயரையும் ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அத்துடன் ஆணைக்குழுவின் அறிக்கையில், சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலைகளை மேற்கொண்டதாக கூறும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி முற்றிலும் போலியானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்படவுள்ளது.
அலரி மாளிகையில் நடைபெறும் நிகழ்வில் 400 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை கையளிக்கப்படும் என்று ஆணைக்குழுவின் பேச்சாளர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் அறிக்கை கையளிப்பு காலையில் நடக்குமா மாலையில் நடக்குமா என்பது குறித்து இருவேறு குழப்பமான தகவல்களை அவர் ஊடகங்களிடம் வெளியிட்டுள்ளார்.
கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றிடம் காலை 11 மணிக்கு இந்த அறிக்கை கையளிக்கப்படும் என்று கூறியுள்ள அவர், மற்றொரு ஆங்கில வாரஇதழிடம் மாலை 6.30 மணியளவில் அறிக்கை கையளிப்பு இடம்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை கையளிப்பு நேரம் பற்றிய குழப்பங்கள் இருந்தாலும், இன்று இந்த அறிக்கை அலரி மாளிகையில் வைத்து சிறிலங்கா அதிபரிடம் கையளிக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
2002இல் போர்நிறுத்தம் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது தொடக்கம் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்தது வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ரணில் மீது பாலியல் குற்றச்சாட்டு!

ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கட்சியின் தலைமைப் பதவியில் இருந்த அகற்ற முனையும் அணியினரால், அவருக்கு எதிராக 20 குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
தென்மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணவர்த்தன இந்தக் குற்றப்பத்திரத்தை ஐதேக பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
றோசி சேனநாயக்க, புத்திக பத்திரன, துனேஸ் கங்கந்த, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சந்திரா கங்கந்த, சிரால் லக்திலக, பந்துலால் பண்டாரிகொட, லக்ஸ்மன் லனறோல் மற்றும் பலர் இந்தக் குற்றப்பத்திரத்தில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குற்றப்பத்திரத்தில் ரணில் விக்கிரமசிங்க மீது, இளம்நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருபாலுறவுக்கு நிரப்பந்தித்தாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவை ரணில் விக்கிரமசிங்க ஒருபாலுறவுக்கு நிர்ப்பந்தித்தாகவும், அவர் மறுத்துவிட்டதால், கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கி அவரைத் தண்டித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா அமைசர்கள் மகிந்தானந்த அளுத்கமகேயும்,மேர்வின் சில்வாவும் பகிரங்க தொலைகாட்சி விவாதம் ஒன்றில், ஐதேக தலைவர் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்குவதாக கூறிய தகவல்களும் குற்றப்பத்திரத்தில் சான்றாக இணைக்கப்பட்டுள்ளது.

19 நவம்பர் 2011

தமிழர் எழுச்சி வாரத்திற்கு நாம் தமிழர் கட்சி அழைப்பு.

பல நூற்றாண்டுக் காலமான தமிழினத்தின் மீது அரசியல் ரீதியாகவும், ஆட்சிமையின் வலிமையிலினாலும் பூட்டப்பட்ட அடிமைத் தளையை உடைத்தெறிய மாபெரும் மக்கள் விடுதலைப் போராட்டத்தை ஆயுதம் தாங்கி முன்னெடுத்து வெற்றிகண்டு சுதந்திரமான தமிழீழ தேசம் என்றொன்று உண்டு என்பதை உலக நாடுகளுக்குப் பறைசாற்றிய தமிழர் எழுச்சியின் தலைவர், தமிழ்த் தேசிய இனத்தின் முகமாகவும், முகவரியாகவும், அடையாளமாகவும், வீரமாகவும், உயிராகவும் திகழும் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26ஆம் நாளையும், தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் இளமை, வாழ்க்கை, கனவு, உறவு என்றணைத்தையும் துறந்து, இன்னுயிர் ஈந்த தமிழின மாவீரர்களின் நினைவைப் போற்றும் நவம்பர் 27ஆம் நாளையும் உள்ளடக்கி நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை தமிழர் எழுச்சி வாரமாக தமிழின சொந்தங்களும், நாம் தமிழர் கட்சியினரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தமிழர் விடுதலையையும், உரிமைகளையும் வென்றெடுக்க தமிழினம் தயாராகிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் தமிழரின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வீர விளையாட்டுக்களான சிலம்பம், கபடிப் போட்டிகள், ஓவியம், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், மகளிர் பங்கேற்கும் கோலம் போடுதல், கும்மியாட்டம், நடனப் போட்டிகள், இளம் சிறார்களுக்கு திருக்குறள், பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.
ஓவியம், கவிதை, பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் சிறந்த விளஙகுவோருக்கு ‘வெற்றித் தமிழர்’ விருதும், ‘வீரத் தமிழர் விளையாட்டு, அதில் வென்று மானத்தை நிலைநாட்டு’ என்ற முழக்கத்துடன் நடத்தப்படும் சிலம்பம், கபடி போன்ற வீர விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவோருக்கு ‘வீரத் தமிழர்’ விருதும், கோலம், கும்மியாட்டம் திருக்குறள், பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகளில் சிறந்து விளங்கும் இளையோருக்கும் பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.
கலையை மீட்பதும், கலைஞர்களைக் காப்பதும் நமது கடமை’ என்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப, மாலைப் பொழுதில் கலை, இலக்கிய நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. இவற்றை நாம் தமிழர் கட்சியின் கலை பண்பாட்டுப் பாசறை ஒழுங்கு செய்யும். இதில் பறையாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆகியன இடம் பெற வேண்டும். இதன் பிறகு மாலை 7 மணி முதல் பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். இக்கூட்டத்தில் உரையாற்றுவோர் இனத்தின் விடுதலைக்காக தம் இன்னியிரை ஈந்த மாவீரர்கள் போன்றுவோம் என்ற இலக்குடன் இக்கூட்டங்கள் நடைபெறும்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் 20ஆம் தேதி நாகை மாவட்டம் கீழ்வேளூர், 21ஆம் தேதி திருப்பெரும்புதூர், 22ஆம் தேதி இராமநாதபுரம், 23ஆம் தேதி சிவகங்கையிலும், 24ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலும், 25ஆம் தேதி கோவையிலும், தேசியத் தலைவர் பிறந்த நாளான 26ஆம் தேதி நாமக்கல் நகரிலும், மாவீரர் தினமான 27ஆம் தேதி கடலூர் மாவட்டம் மஞ்சக் குப்பத்திலும் பேரணி, பொதுக் கூட்டங்கள் நடைபெறும். 28ஆம் தேதியன்று தமிழர் எழுச்சி வார நிகழ்வு நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெறுகிறது. இந்நிகழ்வுகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொள்கிறார்.
26ஆம் தேதி நாமக்கல்லிலும், 27ஆம் தேதி மஞ்சக் குப்பத்திலும் நடைபெறும் பேரணியில், தங்கள் மாவட்டத்தில் தமிழர் எழுச்சி வார விழாவை முடித்துவிட்ட நாம் தமிழர் தோழர்களும், தமிழ்ச் சொந்தங்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்.
இன்று19ஆம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் உரையாற்றுகிறார். கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக மிக முக்கியத் தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும்.

சாதாரண சிப்பாய்களை போர்க் குற்றவாளிகளாக காட்டி மகிந்த சகோதரர்களை காப்பாற்ற முனையும் ஆணைக்குழு!

வன்னியில் நடந்து முடிந்த இறுதிப் போரின்போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில், இலங்கை இராணுவத்தின் மேஜர் தர அதிகாரிகள் உட்பட 100 படையினர் ஈடுபட்டார்கள் என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
“லங்கா நியூஸ் வெப்” என்கிற இணையத்தளம் அறிக்கையின் உள்ளடக்கம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
“2009ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த போரின்போது அனைத்துலகச் சட்டங்கள் மீறப்பட்டன என்ற குற்றச்சாட்டில் இருந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் பாதுகாப்பதற்காக, மேஜர் தரம் வரையிலான சில அதிகாரிகள் உட்பட சுமார் 100 படையினர் பலிக்கடாக்கள் ஆக்கப்பட உள்ளனர்” என்று அந்த இணையத் தளம் குறிப்பிட்டுள்ளது.
நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு அறிக்கையில் உள்ளவை என்று “லங்கா நியூஸ் வெப்” கூறியவை வருமாறு:
போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்த்தப்பட்ட குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கு அனைத்துக்கும் இந்த 100 படையினருமே பொறுப்பு என்று கூறியுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, இவர்கள் மீதான குற்றங்களை இலங்கைச் சட்டங்களின் கீழ் விசாரணை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் காணாமற்போனவர்களின் உறவினர்களுக்கு இலவச வீடுகள் மற்றும் ஒரே தடவையிலான நிதிக் கொடுப்பனவு என்ற ரீதியிலான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. அதேவேளையில், காணாமற்போனவர்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்றும் ஆணைக்குழு கூறியுள்ளது.
பயங்கரவாதிகளிடம் இருந்து பெரும் எண்ணிக்கையிலான மக்களை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் படையினர் பெரும் பங்காற்றியுள்ளனர் என்றும் அறிக்கை கூறுகின்றது.
இராணுவத்தின் இரகசியச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலரை அல்லது பலரை பொது நீதிமன்றங்களில் நிறுத்தி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் தொடர்பான விவகாரங்களில் அரசு பொறுப்பற்ற தன்மையுடன் நடந்துகொண்டது என்று விமர்சித்துள்ள அறிக்கை, இதிலிருந்து கிடைத்த படிப்பினைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆணைக்குழுவின் அறிக்கையில், போர்க் குற்றங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ சகோதரர்களுக்குத் தொடர்புகள் இருந்தன என்பது தொடர்பாக எந்த விடயமும் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் தவிர்க்கப்பட்டுள்ளார்கள். வெள்ளைக்கொடி விவகாரம் எனப் பரவலாக அறியப்பட்ட பிரச்சினையில் இவர்கள் தொடர்புபட்டிருந்தார்கள் என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளபோதும் ஆணைக்குழு அறிக்கையில் அது பற்றித் தெரிவிக்கப்படவில்லை.
வன்னியில் நடத்தப்பட்ட மருத்துவமனைகள் மீதான தாக்குதல், பொதுமக்கள் நிலைகள் மற்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவின் நிலை மீதான எறிகணை வீச்சு, தாக்குதல் தவிர்ப்பு வலயங்கள் மீது படையினர் மேற்கொண்ட தாக்குதல்கள், போதியளவு உணவு மற்றும் மருந்துப் பொருள்கள் அனுப்பப்படாமை என்பன குறித்தும் ஆணைக்குழுவின் அறிக்கையில் எதுவுமேயில்லை. இவ்வாறு அந்த இணையத் தளம் கூறியுள்ளது.

18 நவம்பர் 2011

தீர்ப்பை நானோ மக்களோ ஏற்கப்போவதில்லை,இந்த தீர்ப்பால் நீதித்துறைக்கு கரும்புள்ளி விழப்போகிறது"சரத் பொன்சேகா.

வெள்ளைக்கொடி வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி வணிகசுந்தரவின் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழுவினால் ட்ரயல் அட் பார் முறையில் விசாரணை செய்யப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று முற்பகல் அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவரான வேரவெவ, சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை விடுவித்தார்.
ஆனால் ஏனைய இரு நீதிபதிகளான தீபாலி வணிகசுந்தரவும் ரசீனும் அவர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் ஒன்றில் குற்றவாளி என்று அறிவித்தனர்.
சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபாய ராஜபக்ச மீது பழி சுமத்தும் வகையில், போரின் இறுதிக்கட்டத்தில் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளை சுட்டுக்கொல்லுமாறு அவர் உத்தரவிட்டிருந்தாக “சண்டே லீடர்“ ஆசிரியர் பிரெட்றிகா ஜான்சுக்கு பேட்டி ஒன்றை வழங்கினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் செலுத்த வேண்டும் என்று நீதிபதி தீபாலி வணிகசுந்தர தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.
அரசியலில் தாம் ஈடுபடுவதை தடுக்கவே தனக்கு இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா நீதிமன்ற வளாகத்தில் கூறியுள்ளார்.
“எதிர்க்காலத்தில் நான் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளுக்காகக் கிடைத்த ஆசீர்வாதமாகவே இந்த தீர்ப்பைக் கருதுகின்றேன்.
நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை நானோ, மக்களோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இந்த தீர்ப்பு நியாயமற்றது. இதனால் மக்களின் எதிர்பார்ப்பு சீர்குலைந்துள்ளது.
இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்தின் சுதந்திரத் தன்மை வெளிப்படையாகியுள்ளது. இதனால் நீதிமன்றுக்கு எதிர்காலத்தில் கரும்புள்ளி விழப் போகிறது.
நான் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்ட ஒரு அரசியல்வாதியின் சதி காரணமாகவே எனக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தீர்ப்பு வெளியிடப்பட்ட பின்னர் சிறைக்காவலர்களால் சரத் பொன்சேகா வெளியே அழைத்துச் செல்லப்பட்ட போது நீதிமன்றத்துக்கு வெளியே குழப்பநிலை உருவானது.
இதன்போது சிறைக்காவலர்களால் சட்டவாளர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் இரண்டு வாகனங்கள் பொதுமக்களால் சேதமாக்கப்பட்டன.
பெருமளவு முன்னாள் படையினரும், போரில் உடல்உறுப்புகளை இழந்த படையினரும் நீதிமன்ற வளாகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் திரண்டிருந்தனர்.

17 நவம்பர் 2011

பிரகீத் எக்னெலிகொட உட்பட பல சடலங்களை கடலில் புதைத்தோம்!

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை நீர்கொழும்பு கடலேரிக்கு அப்பாலுள்ள கடலில் புதைத்ததாக பாதாள உலகக்குழுவின் தலைவரான தெமட்டகொட சமிந்த தகவல் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தெமட்டகொட சமிந்த குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளின் விசாரணையின் போதே தமது தலைமையிலான குழுவே எக்னெலிகொடவின் சடலத்தை புதைத்ததாக கூறியதாக லங்கா நியூஸ்வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேரின் கொலைகள் தொடர்பாக தெமட்டகொட சமிந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நம்பிக்கைக்குரிய ஒருவராவார்.
தான் புதைத்த சடலம் யாருடையதென்று தனக்குத் தெரியாது என்றும், அன்று மாலையில் ஜய்க் ஹில்டன் விடுதியில் ஒரு விருந்தின் போதே, அது ஒரு இணைய ஊடகவியலாளரினது சடலம் என்று தனது முதலாளி (துமிந்த சில்வா) கூறியதாகவும், அதன்பின்னரே அது பிரகீத்தினுடையது என்று தெரிந்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
துமிந்த சில்வாவின் பணிப்பின் பேரில் பல சடலங்களை தான் இவ்வாறு கடலில் புதைத்தாகவும் தெமட்டகொட சமிந்த கூறியுள்ளார். சடலங்களை சாக்குப் பைகளில் சுற்றி கனமான கிரனைட் கற்களை கட்டி கடலில் வீசி விடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு முறை சடலங்களை புதைக்கும் போதும், பெரியமுதலாளியின் (கோத்தாபய ராஜபக்ச) உத்தரவின் பேரிலேயே இதைச் செய்வதாக தனது முதலாளி (துமிந்த) கூறுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
“இவர்கள் என்னை எப்படியாவது கொல்லப் போகிறார்கள். நாம் கொலைகளைச் செய்தோம், போதைப்பொருட்களைக் கடத்தினோம்- இது உண்மை. இவை ஒன்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அல்ல. முதலாளி எம்மைக் கேட்டுக் கொண்டதால் செய்தோம்.
இந்த விபரங்களை வெளிப்படுத்துங்கள். சிலநாட்களில் என்னை கொன்று விட்டால், இந்த விபரங்கள் புதைக்கப்பட்டு விடும்.“ என்றும் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளிடம் தெமட்டகொட சமிந்த கூறியுள்ளதாகவும் ‘லங்கா நியூஸ் வெப்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, ஜெனிவாவில் சித்திவதைகளுக்கு எதிரான மாநாட்டில், சிறிலங்காவின் பிரதிநிதியாகப் பங்கேற்ற முன்னாள் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ், பிரகீத் எக்னெலிகொட வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படுவதும், அவரது விடுதலைக்காக நடைபெற்று வரும் பரப்புரைகளும் மோசடியான ஒரு செயற்பாடு என்றும் மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், எக்னெலிகொட எங்கு தப்பிச் சென்றார் என்பது குறித்து எந்த விரிவான தகவல்களையும் மொகான் பீரிஸ் வெளியிடவில்லை.
இந்தநிலையில், மொகான் பீரிஸ் கூறுவது போல, தனது கணவர் வெளிநாடு ஒன்றில் ஒளிந்து கொண்டிருப்பாரேயானால், தங்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கமாட்டார் என்று அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மொகான் பீரிசின் அறிக்கை தம்மைக் கவலையடையச் செய்துள்ளதாகவும், சில தூதரகங்கள் இது குறித்து சிறிலங்கா காவல்துறை மற்றும் சிறிலங்கா அதிபரின் செயலகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தனது தந்தையார் செய்த தவற்றை தாமும் தொடர்ந்தோம் என்பதை ஒப்புக்கொண்டார் சந்திரிகா.

எனது தந்தையார் எஸ்.டபிள்யூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க கொண்டுவந்த தனிச்சிங்களச் சட்டமே இலங்கை இனப்பிரச் சினையின் மூலத்தவறாக அமைந்துவிட்டது. இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.
அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
தனிச்சிங்களச் சட்டத்தால் தமிழ் மக்களுக்கும் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் சொல்லமுடியாத அளவுக்குப் பாதிப்புக்கள் ஏற்பட்டன. அவர்கள் கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றை அடைந்துகொள்வதில் தனிச்சிங்களச் சட்டம் பெரும் தடையாக அமைந்தது. குறிப்பாக தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்வதைச் சிக்கலுக்குள்ளாக் கக்கூடிய சட்டங்கள் அனைத்தையும் ஆட்சியில் இருந்தவர்கள்நான் உட்பட கொண்டுவந்தனர்.
இது இனமுரண்பாடுகளை இன்னும் அதிகரிக்கச் செய்தது. இனத்துவ அடையாள அரசியல் ஒரு தவறான பாதையாகும். சாதகமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனில் பன்மைத்துவமே பயன்படுத்தக்கூடிய சிறந்த தெரிவாகும்.
போர் முடிந்த பின்னரும்கூட தாம் எதிர்பார்த்த எதுவுமே நடைபெறாததால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். இளைய தலைமுறையினரிடமிருந்து உருவாகக்கூடிய புதிய அரசியல் தலைமை மூலமே போருக்குப் பின்னான காலத்திலாவது இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காணமுடியும்.
இலங்கையின் இனப்பிரச்சினை காரணமாக அங்குள்ள மக்கள் எப்படி ஒரு சொர்க்கத்தை இழந்தார்கள் என்பதைத்தான் நீங்கள் (அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள்) எம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

16 நவம்பர் 2011

தமிழர் பகுதிகளில் சிங்களப்படைகள் இருக்கும்வரை தமிழர்களுக்கு பாதுகாப்பில்லை!

கடந்த திங்கட்கிழமை (15 நொவெம்பர், 2011) பரந்தன் பகுதியில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்தும் முல்லைத்தீவு தனியார் பேருந்தும் சிறிய விபத்தில் சிக்கியிருந்தது. இது தொடர்பில் இரண்டு பேருந்துகளினதும் சாரதிகள் தமக்குள் இணக்கம் கண்டு சமாளித்துச் செல்ல முற்பட்டபோது, அங்கு வந்த படையினர் தனியார் பேருந்து நடத்துனர், ஓட்டினர், உரிமையாளர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவந்த பேருந்தை சிங்கள இராணுவம் அங்கிருந்து கொண்டு சென்றுவிட்டது. ஆனால் தனியார் பேருந்து சாரதி, நடத்துனர், மற்றும் உரிமையாளர் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டு காயங்களுடன் காவல்துறையினர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
சிங்கள இராணுவத்தினர் தமிழ்மக்கள் மீது தாக்குதல் நடத்துவது இதுதான் முதல் தடவை என்று கூறமுடியாது. கடந்த யூன் மாதம் யாழ்ப்பாணம் அளவெட்டி சைவ மகாஜன சபை மண்டபத்தில் நடந்த ததேகூ வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திடீரென அத்து மீறி நுழைந்த சீருடை அணிந்த சிங்கள இராணுவத்தினர் இரும்புக் கம்பிகள், மண் வெட்டிப் பிடிகளைப் போன்ற குண்டாந்தடிகளால் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றிக் கடுமையாகத் தாக்கினார்கள்.
மேடையில் கூட்டத்துக்கு தலைமை வகித்த தமிழரசுக்கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிச் செயலாளர் சுகிர்தனின் உடலைப் படையினரின் கொட்டன்கள் பதம் பார்த்தன. மேடையில் மட்டுமல்லாது கீழே அமர்ந்திருந்தவர்கள் மீதும் கொட்டன்களும் இரும்புக்கம்பிகளும் தாறுமாறாக விளையாடின. எவருமே படையினருடன் நியாயம் கதைக்கவோ அல்லது அவர்களிடம் கருணை கிடைக்குமென்று எதிர்பார்க்கவோ முற்படவில்லை. அங்கு வருகை தந்திருந்த 5 ததேகூ நா.உறுப்பினர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். அவர்களது பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த மெய்காப்பாளர்களே அவர்கள் மீது விழ வேண்டிய அடிகளைத் தாங்கிக் கொண்டார்கள். இரு மெய்பாதுகாப்பாளர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார்கள்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி இரவு நாவாந்துறையில் நடமாடிய கிறிஸ் மனிதனை மக்கள் மடக்கிப்பிடிக்க முயன்ற போது அவன் நாவந்துறையிலுள்ள இராணுவ காவலரணுக்குள் ஓடி ஒளிந்ததாக மக்கள் குற்றஞ்சாட்டினர். அதனைத் தொடர்ந்து மக்களுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. காவல்துறையினரது வண்டிகளைப் பொதுமக்கள் அடித்து நொருக்கியதாகக் கூறி அங்கு உறங்கிக் கொண்டிருந்த மக்களை கேட்டுக் கேள்வியின்றி, வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து � பூட்டியிருந்த வீடுகளை உடைத்து வீட்டில் இருந்த அனைவரையும் தற தறவென்று இழுத்துச் சென்று மிகக் கடுமையாகத் தாக்கினர். இந்தக் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்குப் பெண்கள், சிறுவர்கள், நோயாளர்கள் என எவரும் தப்பவில்லை. நித்திரையிலிருந்த பொது மக்களை மதுவெறியும் இனவெறியும் தலைக்கேறிய காவல்துறையிரும் இராணுவமும் பொல்லுகளால் அடித்தும் காலணிகளால் உதைத்தும் ஊழித்தாண்டவம் ஆடினர்.
தமது பிள்ளைகளை -கணவனை கண்முன்னே அடித்து உதைத்து இழுத்துச் செல்வதைத் தடுக்க முயன்ற பெண்களும் ஈவு இரக்கமின்றி தாக்கப்பட்டனர். யார் எவரென்றில்லாமல் வயது வேறுபாடின்றி மக்களைத் தாக்கிக் காயப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் தாக்கப்பட்டவர்களை கிட்டத்தட்ட 8 மணித்தியாலயங்களுக்கு மேல் தண்ணீர் கூடக் கொடுக்காமல் மருத்துவ ஏற்பாடுகள் எதுவுமில்லாமல் சிங்களப் படையினர் தடுத்து வைத்திருந்தனர்.
சுமார் 150 க்கும் மேற்பட்ட ஆண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். அவர்களில் 30 பேருக்கு மேற்பட்டவர்கள் பொது இடத்தில் வைத்து கை கால்கள் முறிக்கப்பட்டனர். ஏனைய இடங்களில் மர்ம மனிதர்களைப் பிடித்தவர்கள் அல்லது எதிர்த்தவர்களே படையினரின் தாக்குதல்களுக்கு இலக்கானார்கள். ஆனால் இங்கே ஒட்டு மொத்த கிராமமே பாதிப்புக்குள்ளானது.
கைது செய்யப்பட்டு காவல்துறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட மக்கள் தம்மிடம் சிங்கள மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலங்களில் கையொப்பத்தை பெற்றுக்கொண்டதாக குற்றம்சாட்டுகின்றனர்.
மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்தமாதிரி இராணுவம் மற்றும் காவல்துறை கை, கால் மற்றும் உடல் முழுவதும் தாக்கப்பட்ட நாவாந்துறை மக்கள் இராணுவ முகாமைத் தாக்கினார்கள் என்று குற்றஞ்சுமத்தி 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மறுபுறம் சிறீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையும் பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகள் தொடர்பாக 61 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்குகள் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் டிசம்பர் 13 ஆம் நாளுக்குத் தள்ளிப் போட்டுள்ளது.
சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டதால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இதனால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக ஒவ்வொரு வழக்கு முறைப்பாட்டாளரும் தலைக்கு ரூபா 10 இலட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் முறைப்பாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வாதிகளாகப் பாதுகாப்புச் செயலர் கோத்தபா இராசபக்சே, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசுரிய, பாதுகாப்புப் படைகளின் யாழ்ப்பாணக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத் துருசிங்க, காவல்துறை மா அதிபர் என். இலங்கக்கோன், இராணுவத்தின் 51 ஆவது படையணித் தளபதி வெல்கம, 512 ஆவது பயைணியின் தளபதி அஜித் பள்ளவெல, துணை காவல்துறை அதிபர் நீல் தலுவத்த, மூத்த காவல்துறை அத்தியட்சகர், நெவில் பத்மதேவா, உதவிப் காவல் அத்தியட்சகர் ஏ.எம்.சி.ஏ. பண்டார, யாழ்ப்பாண காவல்துறை தலைமையகப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, பெண் காவலர் நதீகா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கம் போல் தாக்குதலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக நாவாந்துறையில் வெடித்த குழப்ப நிலையை உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் என்பதற்காக யாழ்ப்பாண காவல்நிலையத் தலைமைக் காவல் அதிகாரி சமன் சிகேரா காவல்துறை அதிபர் காமினி சில்வா அவர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நாவாந்துறையில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குல்களை நாட்டிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் பாடமொன்றைப் புகட்டுவதற்கு சிங்களப் படைகள் மேற்கொண்ட நர வேட்டை எனக் கொள்ளலாம்.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் சிங்கள அடக்குமுறை இராணுவம் நாவாந்துறையில் நடந்தது, இனி எங்கும் நடக்கலாம் எங்கென்றாலும் தமிழர்கள் அடங்கித் தான் ஆகவேண்டும். மாறாக ஆடினீர்கள் என்றால் இது தான் நடக்கும் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது.
அளவெட்டி, நாவாந்துறை, பரந்தன் என இராணுவ பயங்கரவாதம் தொடரும் போது இராசபக்சே அரசு அவற்றைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
சிங்கள இராணுவமும் சிங்கள காவல்படையும் ஏன் இப்படிக் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறது?
1) நாங்கள் ஆளும் இனம் நீங்கள் ஆளப்படும் இனம் எனவே நீங்கள் வாய்பொத்தி கை கட்டி வாழப் பழக வேண்டும்.
2) நாங்கள் எசமானர்கள் நீங்கள் கொத்தடிமைகள். எனவே நாங்கள் வைத்ததுதான் சட்டம்.
3) நாங்கள் தமிழர்களுக்கு எதிரான போரில் வென்று விட்டோம். எனவே நாங்கள்தான் வரலாற்றை எழுதுவோம். எழுதுகிறோம்.
4) நாங்கள் முதல்தர குடிமக்கள் நீங்கள் மூன்றாந்தரக் குடிமக்கள் என்பதை கனவிலும் மறந்துவிடக் கூடாது.
5) நாங்கள் பயங்கரவாதத்தை ஒழித்தவர்கள் நீங்கள் யாராக இருந்தாலும் உங்களைப் பயங்கரவாதிகளாகவே பார்ப்போம்.
6) நாங்கள் எது செய்தாலும் யாரும் தட்டிக் கேட்க முடியாது. நாங்கள் சட்ட திட்டத்திற்கு அப்பால் பட்டவர்கள் என்பது நினைவிருக்கட்டும்.
7) மனிதவுரிமை ஆணையத்திடம் முறைப்பாடு செய்கிறீர்களா? அங்கேயும் நம்மாள்தான் இருக்கிறார்கள்.
8) உயர் அல்லது உச்ச நீதி மன்றத்துக்கு நீதி கேட்டுப் போகிறீர்களா? அங்கேயும் நம்மாள்தான் இருக்கிறார்கள். உங்களுக்கு நீதி கிடையாது.
தொடர்ந்து வடக்கில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். சிங்கள இராணுவமும் காவல்துறையும் அவர்களை தங்கள் எதிரிகளாகவே பார்க்கின்றன.
ஆனால் சிறீலங்காவில் எதுவுமே நடக்கவில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர், தமிழர்களுக்கு எதுவிதமான சிக்கல்களே இல்லை. சிங்கள அரசு தமிழ் மக்களுடன் நல்லுறவை - இணக்கத்தைப் பேணி வருகிறது. வடக்கில் வசந்தம் வீசுகிறது கிழக்கில் உதயம் உதித்துள்ளது என்ற தொனியில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அண்மையில் நடந்த ஜெனிவா மாநாட்டில் பேசியிருந்தது நினைவிருக்காலம்.
மடியில் பூனையை வைத்துக் கொண்டு சகுனம் பார்த்தால் எப்படி? வடக்கை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவத்தை (Sinhala occuption army) அகற்ற வேண்டும்.
இல்லையென்றால் ஆக்கிரமிப்பு இராணுவம் வடக்கில் குடிகொண்டிருக்கு மட்டும் தமிழ்மக்களுக்கு பாதுகாப்பில்லை. நிம்மதி இல்லை. சுதந்திரம் இல்லை என்ற நிலைப்பாடே தொடரும்.

மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பில் ஒருமித்த உடன்பாட்டுக்கு வருமாறு நாடுகடந்த தமிழீழ அரசு வேண்டுகோள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதய காலகட்டம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் ஆகும். இக் காலகட்டம் ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் பெருவிருப்பான தமிழீழத் தனியரசு என்ற கொள்கை நிலையினை உயிர்ப்போடு பேணி அந்த உயரிய இலட்சியத்தை நோக்கித் தொடர்ச்சியாகச் செயற்படும் தீர்மானகரமான காலகட்டம்.
இந்த இலட்சியப்பயணத்தில் நம்மை வழிநடாத்துபவர்கள் நமது மாவீரர்களே.
தமது தன்னலமற்ற ஈகத்தால், அளப்பெரும் வீரத்தால் வரலாற்றுச் சாதனைகளைப் புரிந்து நமது தாயக மண்ணில் ஆகுதியாகிப் போனவர்கள் நமது மாவீரர்கள்.
தியாகதீபம் திலீபனின் வார்த்தைகளில் கூறுவதாயின் மலரும் தமிழீழத்தை வானத்தில் இருந்து பார்ப்பதாக நமக்குக் கூறிவிட்டு நம்மிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டவர்கள் இம் மாவீரர்கள்.
இம் மாவீரர்களை மையமாகக் கொண்டுதான் ஈழத்தமிழர் தேசம் ஒன்றுபட்ட தேசமாக விளங்க முடியும்.
இவர்கள் விட்டுச் சென்ற இலட்சியச்சுவடுகள்தான் நமக்கான வழிகாட்டிகள்.
நமது மாவீர்களின் இலட்சியத்தை முன்னெடுப்பதில் தமிழ்த்; தேசியச் செயற்பாட்டாளர்களுக்கிடையே கொள்கையளவில் மாறுபட்ட கருத்துக்கள் கிடையாது.
அணுகுமுறைகள் சார்ந்து நமக்கிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். நாம் எல்லோரும் ஒரே அமைப்பாக செயற்பட முடியாமலும் போயிருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் ஒரு ஜனநாயகச் சூழலில் மிக இயல்பானவை.
நமக்கிடையே இருக்கக்கூடிய எவ்விதமான அணுகுமுறை வேறுபாடுகளும்; நமக்கிடையிலான உரையாடலுக்கூடாகக் கையாளப்படக்கூடியவை. ஆனால் இதற்கெல்லாம் நாம் ஒருவரையொருவர் மதிக்கவும் அங்கீகரிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளில் இவ் வருட மாவீரர் நாள் நிகழ்வுகளை இரு பிரிவுகளாக நடாத்துவது தொடர்பான தகவல்கள் நம்மையும் நமது மக்களையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளன.
பல மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் மக்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை இவ் விடயத்தில் தலையிடுமாறும் ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் மாவீரர் தின நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஆவன செய்யுமாறும் தொடர்ச்சியான வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்.
இருந்த போதும் நமது மாவீரர் குடும்பநலன் பேணும் அமைச்சின் ஊடாக ஒருங்குபட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பினை விடுத்ததைத் தவிர நாம் மேலதிகச் செயற்பாடுகளில் இதுவரை ஈடுபடவில்லை.
இதற்கு ஒரு முக்கிமான காரணம் இருந்தது.
மாவீரர் நாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும் நிலைமை திடீரெனத் தோற்றம் பெற்றதொன்றல்ல. விடுதலை அமைப்பின் இரண்டு கட்டமைப்புக்கள் தாம் ஒன்றாகச் செயற்படுவது தொடர்பாக நீண்டகாலம் பேச்சுக்களில் ஈடுபட்டு அதில் வெற்றியடைய முடியாமல் போனமையின் எதிர்மறைப் பெறுபேறாகவே இந் நிலை தோற்றம் பெற்றுள்ளது.
இவ் இரண்டு கட்டமைப்புக்களிலும் ஒன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டு வருகிறது என்பது ஊர் அறிந்த விடயம்.
இச் சூழலில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஆக்கபூர்வமான முறையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தல் சாத்தியம்தானா எனும் கேள்வி எமக்கிடையே இருந்தது.
இருந்த போதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கம் எனும் வகையில் நாம் நமது கடமைகளை மேற்கொள்ளுதல் அவசியமானது என நாம் உணரும் காரணத்தினாலும், இவ் விடயத்தில் மாவீரர் குடும்பங்கள் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் ஒருங்குபட்ட முறையில் மாவீரர்நாள் நிகழ்வுகளை நடாத்துவதற்கு வழிகோலும் வகையிலுமான பேச்சுக்களில் உடனடியாக ஈடுபடுவதென நாடு கடந்த தமிழீழ அரசாங்ககத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இப் பேச்சுக்களை நடாத்துவதற்கென நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் குடும்பநலன் Nபுணும் அமைச்சினால் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் பிரதிநிகள் உடனடியாக நியமனம் செய்யப்படுவார்கள்.
முரண்பட்ட நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழுவினர்களுடனும் பேச்சுக்களை மேற்கொண்டு, இம் முரண்பாடுகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து, இரண்டு பகுதியினருக்கும் ஏற்புடையதான ஒரு பொது ஏற்பாட்டைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் நமது பிரதிநிதிகள் ஈடுபடுவார்கள்.
நமது இம் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவீரர் நாள் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பகிரங்கமாகக் கோருகிறது.
இம் முயற்சிக்கான ஆதரவினை வழங்குமாறு பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் உள்ள பொது அமைப்புக்களையும் ஊடகங்களையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறது.
நமது மாவீரர்களின் கனவை நனவாக்கும் நோக்கம் கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரோக்கியமாக அடுத்த கட்டம் நோக்கி நகர்வது ஈழத் தமிழர் தேசத்தின் ஒருமைப்பாட்டான செயற்பாடுகளில் இருந்தே கட்டியமைக்கப்படக் கூடியது.
இதனை உணர்ந்து நாம் அனைவரும் செயற்படவேண்டியது இன்றைய காலத்தின் தேவை மட்டுமல்ல மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான வணக்கமாகவும் அமையும்.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

15 நவம்பர் 2011

றூம் போடுவது தப்பில்லை என்கிறார் ரெமீடியாஸ்!

நேற்று முந்தினம் யாழில் சுமங்கலி லாட்ஜை சுற்றிவளைத்த பொலிசார் பல பெண்களையும் ஆண்களையும் கைதுசெய்து விபச்சார வழக்கில் சிறைவைத்துள்ளனர். சுமங்கலி லாட்ஜில் விபச்சாரம் நடப்பது யாழில் அனைவரும் அறிந்த ஒரு விடையம். இது ஒரு புறம் இருக்க சிக்கியுள்ள பெண்களையும் ஆண்களையும் வெளியே எடுப்பதற்காக நேரடியாகக் களமிறங்கியுள்ளார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரமுகரும் வழக்கறிஞருமான திரு ரெமீடியஸ் அவர்கள். அதாவது சுமங்கலி லாட்ஜில் நடப்பது விபச்சாரம் அல்ல அங்கே ஆண்களும் பெண்களும் தமக்கு பிடித்தவர்களுடன் வந்து தங்கிச் செல்வது வழக்கம் என்று இவரே தன் வாயல் கூறுகிறார். அத்தோடு மட்டும் நின்றுவிடாது காதலர்கள் மற்றும் கலியானம் ஆக இருப்பவர்களும் அங்கே வந்து ரூம் போடலாம் அதில் என்ன தவறு என்று நேரடியாகவே கேட்க்கிறார் இவர் ! (ஆடியோ இணைக்கப்பட்டுள்ளது).
புளொட் அமைப்பின் ஆயுதப் பிரிவின் முக்கிய நபரான ரஞ்சன் என்பவரே இந்த சுமங்கலி லாட்ஜை நடத்திவந்தார். அவரைக் காப்பாற்றும் முயற்சியில் தற்போது ரெமீடியஸ் அவர்கள் இறங்கியுள்ளார். லாட்ஜில் நடந்தது விபச்சாரம் இல்லை என்று நீதிமன்றில் நிரூபித்தால் ரஞ்சன் வெளியே வந்துவிடுவார் அவ்வளவு தான். இதற்காகவும் மற்றும் விபச்சார வழக்கில் இருந்து குறித்த பெண்களும் ஆண்களும் தப்புவதற்காகவும் தற்போது இவர் புதிய யுக்திகளையும் கையாண்டும் உள்ளார். அதாவது அகப்பட்டிருக்கும் ஒரு பெண்ணையும் ஆணையும் காதலர்கள் என்று கூறி அவர்களை நீதிமன்ற அனுமதியோடு திருமணம் முடித்துவைக்கவும் இவர் முனைப்புக்காட்டி வருகிறார். இப்படிச் செய்தால் விபச்சாரம் என்ற குற்றச்செயல் அடிபட்டுப்போய் காதலர்கள் வந்து உல்லாசமாக இருந்துவிட்டுச் சென்றார்கள் என இவ்வழக்கை இலகுவாக திசைதிருப்பிவிட முடியும் அல்லவா ?
நாம் அறிந்தவரையில் பொலிசார் ஏதோ சாட்டுக்கு இவர்களைப் பிடித்துக்கொண்டுபோய் நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் கிணறு தோண்ட பூதம் வெளிக்கிட்ட கதைகயாக அங்கே இவர்களின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி மிக மிகக் கடுமையானவர் என்பது தற்போது தான் இவர்களுக்குத் தெரியவந்துள்ளதாம். இதனால் அவசர அவசரமாக ரெமிடியசை களமிறக்கியுள்ளனர் சிலர். அதிர்வின் நிருபர் அவரைத் தொடர்புகொண்டு சில கேள்விகளைக் கேட்டபோது அவர் கூறிய பதில்கள் இங்கே ஆடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.


நன்றி:அதிர்வு

நோர்வேயின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் உருத்திரகுமாரன் எதிர்ப்பு.

சிறிலங்காவில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் தோல்வி கண்டதற்கு, விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசும் தமது கொள்கையில் கடைப்பிடித்த இறுக்கமான நிலைப்பாடே காரணம் என்று நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்தை நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் நிராகரித்துள்ளார்.
நோர்வேயின் நிலையுடன் சிறிலங்கா அரசுடன் நடத்தப்பட பேச்சுகளின் போது விடுதலைப் புலிகளின் சட்டஆலோசகராக பங்கேற்ற அவர், பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலே இந்தக் கருத்தை நிராகரித்துள்ளார்.
“விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுக்களில் உளச்சுத்தியுடனேயே ஈடுபட்டனர்.
பேச்சுக்கள் நடக்கும்போதே, விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதம் என்ற கண்ணாடியின் ஊடாகப் பார்த்து, அவர்கள் கொண்டிருந்த சமபல நிலையைக் குலைத்த, அனைத்துலக சமூகம் தான் இந்தப் பேச்சுக்கள் தோல்வியடைந்ததற்குக் காரணம்.
விடுதலைப் புலிகள் இந்தப் பேச்சுக்களின் போது, பல விட்டுக் கொடுப்புகளைச் செய்தனர்.
போர்நிறுத்த மீறல்கள் விவகாரத்திலும், சிறிலங்கா அரசே பாரிய மீறல்களில் ஈடுபட்டது.
போர்நிறுத்த மீறல்கள் விடயத்தில், சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்பு குழு கூட,மீறல்கள் குறித்த எண்ணிக்கையை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது, அதன் கீழுள்ள தார்ப்பரியத்தைப் பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.“ என்று அவர் கூறியுள்ளார்.
இனப்பிரச்சினை விவகாரத்தில் புலம்பெயர் தமிழர்கள் முன்னணி நிலையை எடுக்காமல், தலைமைத்துவத்தை,சிறிலங்காவில் வசிக்கும் தமிழர்கள் எடுக்க வேண்டும் என்று நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டதைப் பற்றிக் கருத்து தெரிவித்துள்ள வி.ருத்திரகுமாரன்,
" புலம்பெயர் தமிழர்கள், உள்நாட்டில் களத்தில் வாழும் தமிழர்கள் என்ற பேதம் உண்மையானதல்ல.
சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு தங்களது கருத்துக்களை சுதந்திரமாகக் கூறவும் செயல்படவும் தேவையான அரசியல் வெளி, இருக்கவில்லை.
சிறிலங்கா ஒரு ஜனநாயக ரீதியாகத் தோல்வியடைந்த நாடு என்று இந்த அறிக்கையே கூறுகிறது.
எனவே புலம்பெயர் தமிழர்கள், சிறிலங்கா பிரச்சினையில் குரல் கொடுப்பதில் தவறில்லை," என்றும் அவர் கூறியுள்ளார்.

14 நவம்பர் 2011

அமெரிக்காவும் நோர்வேயும் செய்த பாவத்திற்கு பாவமன்னிப்பு கோருகின்றனர்!

யுத்தத்தின் போதும் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போதும் அதனை தடுத்து நிறுத்த முயற்சிக்காத நோர்வே இன்று அனைத்தும் முடிந்த பின்னர் பாவ மன்னிப்பு கோருவது எவ்விதத்தில் நியாயமாகும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை, கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அரசாங்கத்தின் மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கையில்லாததன் காரணமாகவே பொதுநலவாய விளையாட்டுப் போட்டி கைநழுவிப் போனதென்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் அழிவிற்கும் யுத்தத்திற்கும் இந்தியாவே காரணம் என நோர்வே எக்சொல்ஹெய்ம் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. இதனை அனைவரும் அறிவார்கள். அன்று யுத்தம் நடந்த போது தமிழ் மக்கள் கொல்லப்படும் போது நோர்வேயோ, அமெரிக்காவோ யுத்தத்தை நிறுத்துவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இன்று அனைத்து அழிவுகளும் இடம் பெற்ற பின்னர் நோர்வேயும் அமெரிக்காவும் செய்த பாவத்திற்கு "பாவ மன்னிப்பு" கோருகின்றனர். இது எவ்வாறு நியாயமாகும். இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் நடுத்தெருவில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நாட்டில் கொலைகள் அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள் அதிகத்துள்ளன. இவ்வாறான சூழலில் இங்கு வந்து விளையாட்டுக்களில் ஈடுபட்ட பின்னர் உயிரோடு வெளியேற முடியுமா என்ற அச்சம் வெளிநாடுகளில் உருவாகியுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகளில் உலக நாடுகளுக்கு நம்பிக்கை இல்லை. பொது நலவாய விளையாட்டுப் போட்டிகளை இலங்கையில் நடத்துமாறு முதன் முறையாக விண்ணப்பித்தும், அனுதாபரீதியிலாவது அதிகப்படியான வாக்குகள் இலங்கைக்கு கிடைக்கவில்லை. 47 அதிகப்படியான வாக்குகளை பெற்று விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு அவுஸ்திரேலியாவிற்கு கிடைத்துள்ளது. சட்டம், ஒழுங்கு நாட்டிற்குள் இல்லாததால் 27 வாக்குகளே இலங்கைக்கு கிடைத்துள்ளன எனவும் அரசாங்கத்தின் பாவத்திற்கு நாடும் மக்களும் தலைகுனிந்துள்ளனர் என விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார்.

றோவுடனும் தான் பேச்சு நடத்தியதாக சொல்கிறார் எரிக் சொல்கைம்!

2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்திற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளும் இந்தியாவும் இரகசியமாக சந்தித்ததாக நோர்வேயின் சுற்றாடல் மற்றும் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நோர்வேயில் இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியிலேயே சொல்ஹெய்ம் இவ்வாறு கூறியுள்ளார்.
எனினும் இச்சந்திப்பு எங்கு நடைபெற்றது என்பது குறித்தோ இதில் இரு தரப்பிலும் யார் யார் பங்குபற்றினார்கள் என்ற விபரத்தையோ வெளியிடுவதற்கு சொல்ஹெய்ம் மறுத்துள்ளார்.
இத்தகவல் உண்மையானால், ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்தையடுத்து 1992 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளை இந்தியா தடை செய்தபின் அவ்வமைப்புடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திய முதல் சந்தர்ப்பமாக இது இருக்கும்.
பலர் எண்ணுவதற்கு முரணாக, போர் நிறுத்த ஒப்பந்தத்தை உருவாக்குவதிலும் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான அப்போதைய இந்திய அரசாங்கம் திரைமறைவில் முக்கிய பாத்திரம் வகித்ததாக சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்திற்கு முன்னர் இந்தியாவின் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இந்திய புலனாய்வு அமைப்பான றோ அதிகாரிகளுடனும் இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் தான் பல்வேறு தடவை பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
றோ அதிகாரிகளுடனான சில சந்திப்புகள் புதுடில்லி விமான நிலையத்தில் இடம்பெற்றது என அவர் கூறினார்.
இலங்கையும் இந்தியாவும் 2001- முதல் 2002 வரை போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அமைதியாக கலந்துரையாடியதாகவும் ஒவ்வொரு விடயமும் இந்தியாவுக்கு அறிவிக்கப்பட்டது எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அதேவேளை இந்தியா சிறந்த ஆலோசனைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இச்சமாதான செயற்பாடுகளில் வேறெந்த பெரிய சர்வதேச செயற்பாட்டாளர் எதுவும் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை.
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் எந்தெந்த நாடுகள் இடம்பெற வேண்டும் என்றுகூட இந்தியா ஆலோசனை கூறியது எனவும் சொல்ஹெய்ம் கூறினார்.
இலங்கை பிரிக்கப்படுவதை இந்திய அதிகாரிகள் கடுமையாக எதிர்த்தனர் எனவும் தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினர் எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

13 நவம்பர் 2011

முகாமிலுள்ள மக்களை படுகொலை செய்து பின்புறம் வீசிய சிங்களப்படைகள்!

2009ம் ஆண்டு மேதம் 17 மற்றும் 18ம் திகதி இராணுவத்திடம் சரண்டைந்த பொதுமக்களில் பலரை இராணுவத்தினர் அழைத்துச் சென்று சுட்டுக்கொண்றுள்ளனர். இதனைப் பல தமிழர்கள் முன்னர் கூறியுள்ளபோதும் அதனை அப்போது உறுதிப்படுத்த முடியவில்லை ஆனால் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் சில அதனைக் காட்டுவதாக அமைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. சரணடைந்த பொதுமக்களில் புலிகள் எனத் தாம் சந்தேகித்த நபர்களை இராணுவம் தனியாக அழைத்துச் செல்வது வழக்கம் எனவும் ஆனால் அவர்கள் முகாம்களுக்குத் திரும்ப வருவதே இல்லை எனவும் பொதுமக்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட பலர் முகாம்களின் பின்புறத்தில் வைத்து சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் உடலங்கள் முகாமின் பின்பகுதிகளில் அல்லது ஒதுக்குப்புறமான இடங்களில் காணப்பட்டதாக பல சாட்சியங்கள் அப்போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்க விடையமாகும். நந்திக்கடல் பகுதியில் வைத்து கண்களைக் கட்டி புலிகள் உறுப்பினர்கள் பலரை இராணுவம் கொலைசெய்ததுபோல தடுப்பு முகாம்களிலும் மற்றும் தடுப்பு முகாம்களுக்கு மக்களைக் கொண்டுசெல்லும் போதும் இராணுவம் பலரை இவ்வாறு சுட்டுக்கொண்றுள்ளது. வகை தொகையின்றி சந்தேகப்படும் அனைவரையும் இராணுவம் சுட்டுள்ளது.
இதனை விடக் கொடுமை என்னவென்றால் புலிகளின் முக்கிய உறுப்பினர் சாயலில் உள்ள பல தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொணறது தான். பின்னர் உண்மையான முக்கிய உறுப்பினர்களை தடுப்பு முகாமில் வைத்து இராணுவத்தினர் கைதுசெய்துள்ளனர். அப்போது அவர்கள் ஆச்சரியப்பட்டதும் உண்டாம். வன்னியில் இருந்த சுமார் 3 தடுப்பு முகாமில் இருந்து காணாமல் போன தமிழ் இளைஞர்கள் தொகை மட்டும் 300 ஐ தாண்டும் என்று தற்போது வெளியே வந்துள்ள அகதி ஒருவர் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்தார். இவர்கள் அனைவருக்கும் புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் தான் இவர்களை இராணுவம் கொண்டுசென்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழத்திற்கான விடுதலைப்போர் மீண்டும் வெடிக்கும் என கவிஞர் காசி ஆனந்தன் முழக்கம்!

முள்ளிவாய்க்கால் முடிந்து மெல்ல மெல்ல செய்திகள் மறைந்து அமுக்கப்பட்டு எல்லாம் தீர்ந்து விட்டதென்று யாரும் நினைக்காதீர்கள். நாங்கள் நெருப்பின் நடுவில் இருக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்போர் மீண்டும் வெடிக்கும் என்று சென்னையில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் முழங்கினார்.
சென்னையில் நேற்று முன்தினம், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய சிந்தல், பொழிச்சல், நறுக்கு ஆகிய புதுக்கவிதை வடிவில் எழுதப்பட்ட மூன்று நூல்கள் வெளியிட்டு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு ஆவேசமாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உலகத் தமிழர் இயக்க தலைவர் பழ. நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நடிகர் மணிவண்ணன், கவிஞர் தமிழிச்சி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் தெரிவித்ததாவது:
வியட்நாமில் மக்கள் அழிக்கப்பட்ட நேரத்தில் இந்தியாவில் புதுக்கவிதை எழுதியவர்களும் இலக்கியம் படைத்தவர்களும் உள்ளார்கள். கருத்து வெளியிட்டவர்களும் இருக்கின்றார்கள். ஆனால் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொலையுண்டு விழுந்த நேரத்தில், உலகத்தில் யார் ஈழத்தமிழ் மக்களுக்காக எழுதினார்கள்?
எத்தனையோ பெரிய கொடுமைகள் ஈழத்தில் நிகழ்த்தப்பட்டன. யார் அந்த மக்களுக்காகக் கைகொடுத்தார்கள்? பெண் உறுப்பில் வெடிகுண்டு வைத்து மட்டக்களப்பில் கோணேஸ்வரி சிதைக்கப்பட்டாள்.
புங்குடுதீவு கண்ணகி கோவிலில் வைத்து சாரதாம்பாள் வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள். அவர்களின் வேதனைகளை இந்த உலகம் கணக்கில் எடுக்கவில்லை.
இவ்வாறே போரின் இறுதியில் இசைப்பிரியா. அவளைச் சிறைப்படுத்திய இனவெறியர்கள் போர்க்கைதிகளை நடத்தும் உலக விதிப்படியா நடத்தினார்கள்? இல்லையே!
இன்று அவற்றையெல்லாம் எழுத்தில், கவிதையில், திரைப்படத்தில், சிற்பத்தில் வடிக்கும் காலம் வந்துள்ளது. ஓவியர் சந்தானம் முள்ளிவாய்க்கால் படுகொலையினை வைத்து வரைந்த படத்தினை மாதிரியாகக் கொண்டு முருகன் என்கின்ற சிற்பி தஞ்சையில் சிலை வடிக்கிறார். அந்த நினைவுச்சின்னம் முள்ளிவாய்க்கால் கொடுமையினை இந்த உலகுக்கு என்றும் பறை சாற்றி நிற்கும்.
அப்படிப்பட்ட கலைஞனே இன்று இந்த மண்ணுக்குத் தேவை. தமிழீழத்திற்காக தமிழ்நாட்டில் பல படைப்பாளிகள் படைப்புக்களை எழுதிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனால் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு எழுதிய எழுத்தாளர்களின் அளவு, ரஷ்ய விடுதலைப்போரின்போது எழுதிய எழுத்தாளர்களின் அளவு, தமிழினத்தின் விடுதலைக்காக நடந்த போராட்டத்திற்காக எழுதியவர்களை எண்ணித்தான் பார்க்கவேண்டும்.
பல திரைப்படங்கள் இன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றன. இன்னும் இன்னும் கூடுதலான திரைப்பட கலைஞர்கள் தமிழினத்திற்கு கைகொடுக்கவேண்டும். விடுதலைக்காக கலைஞர்கள் இயங்கவேண்டும் எழுதவேண்டும், என்ற கருத்தினை படைப்பாளிகள் மத்தியில் முன்வைக்கின்றேன்.
உலகில் வாழ்கின்ற அனைத்து நாடுகளிலும் அத்தனை அரசுகளின் கீழ் இயங்குகின்ற நாடுகளிலும் அறவழியில் போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கின்றது. ஆனால் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகளை எதிர்த்து வாய் திறந்து பேசமுடியாத நாடாக உலகில் இலங்கை மட்டுமே காணப்படுகின்றது.
தமிழ் மக்கள் அப்படிப்பட்ட கொடுமையான சூழலில் வாழ்கிறார்கள்.
தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இயக்கம் தமிழர் கூட்டமைப்பு. அவர்களால் எந்த அறப்போராட்டத்தையும் முன்னெடுக்க முடியவில்லை. அவர்களால் அங்கு பேசமுடியாது. பேசினால் நாளை அவர்களுக்கு உயிர் இருக்காது. ம்.. என்றால் சிறைவாசம். ஏன்... என்றால் வனவாசம் என்ற நிலை இன்று தமிழீழத்தில் இருக்கிறது. இதை கேட்பதற்கு யாருமே இல்லை.
முள்ளிவாய்க்கால் முடிந்து மெல்ல மெல்ல செய்திகள் மறைந்து அமுக்கப்பட்டு எல்லாம் தீர்ந்து விட்டதென்று யாரும் நினைக்காதீர்கள். நாங்கள் நெருப்பின் நடுவில் இருக்கிறோம். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்போர் மீண்டும் வெடிக்கும் என்றார் காசிஆனந்தன்.

12 நவம்பர் 2011

சமாதான முயற்சி தோல்வியடைந்தமைக்கு இந்தியாவும் முக்கிய காரணம்!நோர்வே அறிக்கை.

புலிகளை அவர்களின் இடத்தில் வைக்க வேண்டும் என்று நோர்வேயிடம் இந்தியா கூறியதாக, தோல்வியடைந்த சிறிலங்காவின் சமாதான முயற்சிகள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நோர்வே அரசின் பணிப்பின் பேரில் தயாரிக்கப்பட்ட 208 பக்கங்களைக் கொண்ட, ‘அமைதிக்கான அடமானங்கள்‘(Pawns of Peace) என்ற தலைப்பிலான இந்த அறிக்கை இன்று, ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையில் சமாதான முயற்சிகள் முறிந்து போக இந்தியா எவ்வாறு காரணமாக இருந்தது என்பது பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2003-2004 இல் சமாதான முயற்சிகள் மெதுவாக அவிழத் தொடங்கிய போது கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுக்களை இந்தியா அனுதாபத்துடன் அணுகியதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
ஆனால் 2004இல் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழர்களின் அபிலாசைகளை பாதுகாப்பதாக கூறிக்கொண்டாலும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினது இராணுவத் தீர்வு முயற்சிக்கு எதிராக எந்தவொரு அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட சந்திப்புகளில் நோர்வேயை “புலிகளின் நண்பர்“ என்று இந்தியா விமர்சித்ததாகவும், “புலிகளை அவர்களின் இடத்தில் வைக்க வேண்டும்“ என்று கூறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்கா படைகளுக்கு இந்தியா ரேடர்கள், புலனாய்வுத் தகவல்களை வழங்கியது.
சிறிலங்காவுக்கு தாக்குதல் போர்த்தளபாடங்களை வழங்குவதில்லை என்ற கொள்கையை புதுடெல்லி கடைப்பிடித்தாலும், வேறு எவரிடம் இருந்தும் ஆயுதங்களை சிறிலங்கா கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
விடுதலைப் புலிகள் மீதான இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு, சிறிலங்காவுக்கு போரை நடத்துவதற்கு உந்துதலாக அமைந்தது.
2004இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, விடுதலைப் புலிகளால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட ராஜிவ்காந்தியின் துணைவியார் சோனியாகாந்தி, இந்தியாவின் சக்திவாய்ந்த நபராக மாறியது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2008 இறுதியில் பொதுமக்களின் இழப்புகளை மட்டுப்படுத்துமாறு புதுடெல்லி கோரிய போதிலும் கூட, இராணுவ நடவடிக்கையைத் தொடர்வதற்கும், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கும் ஆதரவு வழங்குவதில் இந்திய அரசாங்கம் மிகவும் தெளிவாக இருந்தது.
விடுதலைப் புலிகளின் இறுதி நாட்கள் பற்றி குறிப்பிடும் இந்த அறிக்கையில், புலிகள் மிக நெருக்கமாக சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகள் சரணடைவதற்கு கொழும்பு மிகமிக குறைந்தளவு ஆர்வமே காட்டியது.
போரின் இறுதியில் விடுதலைப் புலிகள் தப்பித்துக் கொள்வதற்கு இந்தியா ஆர்வம் காட்டியிருக்குமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
சமாதான முயற்சிகளில் இந்தியா கூடுதல் பங்கு வகிக்குமாறு 2007இல் நோர்வே தொடர்ச்சியாக வலியுறுத்திய போதும் புதுடெல்லி அதை நிராகரித்து விட்டது.
இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்த போது தாக்குதலை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்பதும் தெளிவாகியது.
போரின் இறுதிக்கட்டத்தில் இந்தியாவில் நடந்த பொதுத்தேர்தல் குறித்து சிறிலங்கா கவலை கொண்டிருந்தது.
காங்கிரஸ் கட்சி தூக்கியெறியப்பட்டு வேறு யாரும் பதவிக்கு வந்தால் புலிகளுக்கு உதவி கிடைக்கலாம் என்ற கவலை சிறிலங்காவுக்கு இருந்ததாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு, முன்வரைவு அறிக்கையை ஏற்று ஆயுதங்களை கீழே போட இணங்குமாறு ஆலோசனை கூறியதாகவும், ஆனால் இந்த நகர்வு புலிகள் ஆதரவு அரசியல்வாதியான வைகோவுக்கு கசிந்ததும், இது காங்கிரசின் தந்திரம் என்று நிராகரிக்குமாறும், தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றும் புலிகளை மீட்கும் என்றும் அவர் உறுதி கூறியதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அது நடக்கவில்லை. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தார் என்றும் நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுநலவாய விளையாட்டுப்போட்டி,தோற்றது ஸ்ரீலங்கா.

2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையினை அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரம் வென்றெடுத்துள்ளது. இதனால் ஹம்பாந்தோட்டையில் 2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் இலங்கையின் கனவு வீணாகியுள்ளது.
இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரமும் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரமும் 2018ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் உரிமையினை பெறுவதற்குப் போட்டியிட்டன.
இது தொடர்பான பொதுநலவாய விளையாட்டுச் சம்மேளனத்தின் வாக்கெடுப்பு நேற்று இரவு நடைபெற்றது. இவ்வாக்கெடுப்பில் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 2018ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகளை நடத்துவதற்கு 43 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். இலங்கையில் குறித்த போட்டியினை நடத்துவதற்கு 27 உறுப்பினர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.
பொதுநலவாய போட்டிகளை நடத்தும் உரிமையினை ஐந்தாவது தடவையாக அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.