31 டிசம்பர் 2011

புலிகளின் முக்கியஸ்தர்கள் இரகசிய தடுப்பு முகாமில்?

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பலர் இன்றுவரை இரகசிய தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2009 மே 17, 18, 19 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளின் மூத்த தளபதிகள் பொறுப்பாளர்கள் பலர் இரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் யோகி, எழிலன், புதுவை இரத்தினதுரை முதலானவர்கள் உள்ளடங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அண்மையில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான நகுலன் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொலநறுவை மின்னேரிய முகாமிலேயே இவர்களும் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
பொலநறுவை மாவட்டம் மின்னேரியாப் பகுதியில் பாரிய பரப்பளவில் அமைந்துள்ள பிரதான முகாம் பகுதியில் இரு வேறு தனிப்பட்ட முகாம்களில் இவர்கள் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தொடர்ச்சியான சித்திரவதைகள் விசாரணைகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு, அவர்களின் அசையும் அசையாச் சொத்துகள், அவற்றை பராமரிப்பவர்கள், அல்லது கையகப்படுத்தி வைத்திருப்பவர்கள், தொடர்ந்தும் செயற்பாட்டில் உள்ளவர்கள் உள்ளிட்ட விடயங்களை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கும், அவ்வப்போது புலம் பெயர் தமிழ்ர்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதற்கும் இவர்களை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள் யாவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவின் நேரடிக் கட்டுப்பாட்டுள் அவருக்கு மிக நெருங்கிய புலனாய்வுப் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள் சிலரின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது.
எனினும் இவை குறித்த ஆதாரபூர்வமான விடயங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவானதாகவே இருப்பதாக கூறும் குறித்த செய்தியாளர்,அவற்றை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் தொடர்வதாக தெரிவிக்கின்றார்.

30 டிசம்பர் 2011

தேசியத் தலைவரின் தபால் முத்திரை வெளியீட்டுக்கு சிங்களவர்கள் எதிர்ப்பாம்!

பிரான்ஸில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உருவப்படத்தைக் கொண்ட தபால் முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளமைக்கு சிங்கள அரசு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்கள் பிரான்ஸில் நான்கு தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளனர்.
ஈழ வரைபடம், விடுதலைப்புலிகளின் மலர், புலிக் கொடி மற்றும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உருவப்படத்தைக் கொண்ட நான்கு வகையான முத்திரைகள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
இந்த விசேட தபால் முத்திரைகளுக்கு பிரான்ஸ் தபால் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், நேற்று முன்தினம் முதல் இந்த முத்திரைகள் பயன்பாட்டுக்கு விடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முத்திரை வெளியீடு தொடர்பில் பிரான்ஸ் வாழ் சிங்களவர்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

லலித் வீரராஜுவை கடத்தியது அரசாங்கமே"சந்திரசேகரன்.

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான தோழர் லலித் வீரராஜூற்கு யாழில் ஆபத்து இருந்ததை மக்கள் விடுதலை முன்னணி முற்கூட்டியே உணர்ந்திருந்தது என்று தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் அரசின் அராஜகமே லலித் வீரராஜை கடத்தியது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் போராட்ட இயக்கம் காணாமல் போனவர்களை விடுவிக்க கோரி இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை நடத்தியது. அந்தப் போராட்டத்தை நடத்திவிட்டு ஊடக மாநாடு ஒன்றை நடத்த தயாராகிய பொழுது யாழ் அச்சுவேலிப் பகுதியில் வைத்து மக்கள் போராட்ட இயக்கத்திற்கு ஆதரவான யாழ்ப்பாணத்தை சேர்ந்த குகன் என்பவருடன் லலித் வீரராஜ என்பவரும் மர்ம நபர்களினால் கடத்தப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரனிடம் குளோபல் தமிழ் செய்தியாளர் உரையாடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். பிரிவினைவாத குழுவினரே லலித் வீரராஜை ஆபத்திருந்த யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி அவர் கடத்தப்படும் நிலையை உருவாக்கியது என்றும் ஆர். சந்திரசேகரன் கிளர்ச்சிக் குழுவினர் மீது குற்றம் சாட்டினார்.
லலித் கடத்தப்பட்ட பின்னர் இதுவரையில் அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று குறிப்பிட்ட சந்திரசேகரன் இராணுவமும் காவல்துறையினரும் கட்டுப்பாட்டில் உள்ள சூழலில் இந்த அராஜகத்தை அரசே செய்திருக்கிறது என்றார். நாட்டில் சமாதானம் வந்து விட்டது என்றும் வடக்கில் எல்லாம் சரியாகிவிட்டது என்றும் சொல்லும் நிலையில் இந்தக் கடத்தல் அரசின் அராஜகத்தை வியப்போடு வெளிக் காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
லலித் ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியில் செயற்பட்டவர் என்று குறிப்பிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் அக்கால கட்டத்தில் அவர் பலமுறை அச்சுறுத்தப்பட்டார், கைது செய்யப்பட்டார், தாக்கப்பட்டார். இதனால் அவருக்கு யாழில் ஆபத்து இருந்ததை உணர்ந்த மக்கள் முன்னணி அவரை யாழில் கட்சிச் செயற்பாடுகளை தற்காலிகமாக தவிர்க்கும்படி கூறியிருந்தது என்றார்.
ஜே.வி.பியின் பிளவு காரணமாக லலித் விரராஜ் பிரிவினைவாத குழுவுடன்; இணைந்தாக குறிப்பிட்ட சந்திரசேகரன் அவருக்கு யாழில் ஆபத்து இருப்பதை தெரிந்தும் பிரிவினைவாதக் குழுவினர் தனியாக அனுப்பி அவரை அரசு கடத்தும் சூழலை ஏற்படுத்தி விட்டது என்று கிளர்ச்சிக் குழுவினர்மீது குற்றம் சாட்டினார்.
லலித் கடத்தப்பட்ட இந்த விடயத்தில் இது லலித்திற்கு மாத்திரம் நடந்த அவருக்கு மட்டுமான பிரச்சினை இல்லை எனத் தெரிவித்த சந்திரசேகரன் வடக்கில் யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் இல்லாத காரணத்தினால் ஏற்பட்ட பிரச்சினை என்றும் கடத்தப்பட்ட 20க்கு மேற்பட்ட இளைஞர்களின் பிரச்சினை என்றும் குறிப்பிட்டார்.
லலித்திற்காக மாத்திரமின்றி கடத்தப்பட்ட ஒட்டுமொத்த இளைஞர்களுக்காகவும் மக்கள் விடுதலை முன்னணி உரிய நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

பூநகரியில் நடந்தது பொதுமகன் மீதான படையினரின் அராஜகமே!

பூநகரி சங்குப்பிட்டியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இடைமறித்த இராணுவம் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிக்க முற்பட்டு மோட்டார் சைக்கிள் சாரதியைப் படுகொலை செய்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வீதியில் நின்றிருந்த இராணுவம், வீதியில் பயணித்த குறித்த நபரை இடைமறித்து மோட்டார் சைக்கிளைத் தருமாறு கேட்டிருக்கின்றது. இந் நிலையில் அவர் அதற்கு உடன்பட மறுத்திருக்கின்றார். சம்பத்தினை அடுத்து குறித்த நபர் மீது இராணுவம் சரமாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருக்கின்றது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அருகில் இருந்த இராணுவத்தினரால் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், குறித்த சிப்பாயை சுட்டுக்கொல்லுமாறு குறித்த அதிகாரி ஏனைய சிப்பாய்களுக்கு அறிவித்த நிலையில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய இராணுவச் சிப்பாயும் அருகில் இருந்த சிப்பாய்களால் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக சரிதத்துக்கு கிடைத்த பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நிலையில் சிப்பாயும் கொல்லப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்திற்கு வேறு காரணங்களைச் சாட்டுவதற்கு படைத்தரப்பு முற்படலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
படைத்தரப்பு வெளியிட்ட தகவலின்படி குறித்த நபர் இராணுவம் எனவும், அவர் தப்பியோட முயற்சித்த போதே மேற்படி சம்பவம் இடம் பெற்றதாக தெரிவித்துள்ளனர். இதில் ஒருவரே கொல்லப்பட்டதாகவும் மற்றையவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
நன்றி:சரிதம்

29 டிசம்பர் 2011

பூநகரிப்பகுதியில் படைகளுக்கிடையில் மோதல் ஒரு அதிகாரி பலி!

கிளிநொச்சி மாவட்டத்தில் சங்குபிட்டி, பூநகரி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்ததோடு மற்றுமொரு அதிகாரி படுகாயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.இன்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில்,18வது கெமுனு படை முகாமைச் சேர்ந்த படை சிப்பாய் ஒருவர் முகாமில் இருந்து தப்பியோடியதாகவும் அவரை சக இராணுவ வீரர்கள் துரத்திச் சென்று பிடித்து வந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டின்போது இராணுவ உப லெப்டினன் அதிகாரி ஒருவர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததோடு, இராணுவ லெப்டினன் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த சிப்பாய் கைது செய்யப்பட்டு தற்சமயம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

சிங்களவன் ரோலரில் மீன் பிடிக்கலாம் நாம் பிடிக்கக்கூடாதா?யாழில் தமிழ் மீனவர்கள் ஆவேசம்.

யாழ்,வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள் தங்களை றோலரில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இன்று நண்பகல் யாழ் பிராந்திய நீரியல் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்களவனுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா? நாங்கள் றோலரில் மீன்பிடிக்க கூடாது தென்பகுதி கடற்றொழிலாளர்கள் றோலரில் மீன்பிடிக்கலாம் என்கிறது உங்கட அரசாங்கம். எங்களை ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?என அலையலையாய் கொதித்து எழுந்தனர் வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள்.
எங்கட றோலர் கடல் உபகரணங்களை எங்களின் அனுமதியின்றி ஏன் பறிமுதல் செய்தீர்கள்? எனவும் கேட்டு மீனவர்கள் கொதித்து எழுந்துனர். இந்த மீனவ்ரகளின் பிரச்சனையை அரசியலாக்கி அதில் அரசியல் இலாபம் தேட சில அரசியல்வாதிகள் முற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கடல் தொழிலாளர்களில் அரசு கை வைக்குமானால் யாழ்.மாவட்ட செயலகத்தை முன்றுகையிட்டு தொடர் போராட்டங்களை நடத்துவோம் என கடற் றொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் துறை பணிப்பாளர் எஸ்.ரவீந்திரனிடம் ஒப்படைத்தனர்.

எம்மை நாமே ஆளும் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வை தவிர வேறெதையும் ஏற்கமாட்டோம்.

குருதி சிந்தும் நாள்கள் மீண்டும் வருவதைத் தமிழ் மக்களும், கூட்டமைப்பும் விரும்பவில்லை. ஆனால் சிங்கள அரசும், சிங்கள தலைவர்களும் அதனையே விரும்புகின்றனர் என்றே தெரிகிறது. மீளவும் தமிழ் மக்கள் அடக்கு முறைக்குள் உட்படுத்தி துன்புறுத்தவே சிங்கள அரசியல்வாதிகள் முயற்சிக்கிறார்கள்.
ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்து, உரையாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளமை வருமாறு:
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரம் உள்ளிட்ட தமிழ்த் தேசிய இனம் என்ற அடிப்படையில் எம்மை நாமே ஆளும் சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வைத் தவிர வேறு எந்தத் தீர்வையும் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
மக்களுக்கு விரோதமாக, அவர்களது அடிப்படை அரசியல் அபிலாசைகளுக்கு தேவைகளுக்கு முரணாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நடந்து கொள்ளாது. குழப்பங்கள், கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால் ஒரு போதும் கூட்டமைப்பு அதன் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து மாறுபடப் போவதில்லை.
அரசாங்கத்துடன் பல தடவைகள் பேச்சு வார்த்தை நடத்தியும், விட்டுக்கொடுத்தும் எதுவித பயனும் ஏற்பட்டிருக்கவில்லை. எமது உரிமைகளை நாங்கள் தானே கேட்க வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும் இழுபட்டாலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தே ஆகவேண்டும்.
பேச்சுவார்த்தை மூலமாக எமக்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெகுஜன போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருக்கும். இதில் நாம் மிகத் தெளிவாகவுள்ளோம். எமது மக்களை மீண்டும் துன்பகரமான வாழ்க்கையைத் தொடர நாம் விரும்பவில்லை.
பேச்சு வார்த்தையின் போது தமது பொறுமையைச் சோதிக்கக் கூடாது என அரசு கூறுகிறது. எமது மக்களின் உரிமைகள், தீர்வுகள் பற்றி நாங்கள் தானே பேசவேண்டும். இதன்போது உள்நாட்டு ரீதியாக, வெளிநாட்டு ரீதியாக, இராஜதந்திர ரீதியாகச் சில தடங்கல்கள் வரலாம். அதுபற்றி நாம் மௌனம் காப்பதாக பொதுமக்களும் சில ஊடகங்களும் எண்ணலாம். எனினும் இத்தகைய மௌனிப்புகளைக் கொண்டு கூட்டமைப்பு தன் கொள்கைகளைக் கைவிட்டு விட்டதாக எண்ணக்கூடாது.
வடக்குகிழக்கு இணைப்பில்லாது வடமாகாண சபைத்தேர்தல் நடந்தால் அதில் கட்சி ரீதியாகப் போட்டியிடக் கூடாது. தேசியக்குழுவாகவோ அல்லது அமைப்பாகவோ போட்டியிடுவது பற்றி பரிசீலிக்க வேண்டும் எனச் "சிவில்' சமூகம் கேட்டுக் கொண்டுள்ளது.
2012 இல் இந்தத் தேர்தல் நடைபெறுமாக இருந்தால் சிவில் சமூகத்துடன், துறைசார் வல்லு நர்களுடன் கலந்துரையாடி என்ன அடிப்படையில் போட்டியிடுவது என்பது பற்றி பேசுவோம்.
தமிழ் மக்களுக்கு விரோதமான சக்திகளின் கைகளுக்கு வடக்கு மாகாணம் சென்றுவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு தமிழனும் உறுதியாக இருக்க வேண்டும். எம்மை அழிப்பவர்கள், காட்டிக்கொடுப்பவர்கள், இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவருமே இறக்கவில்லை என்று சொன்னவர்கள், ஆட்சிக்கு வருவதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. இதனைத் தடுப்பதற்காகவேனும் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடத்தான் வேண்டும். இதுபற்றி சிவில் சமூகத்துடன் கலந்துரையாடப்படும்.
அரசுடன் பேசும் விடயங்களைச் சில தந்திரோபாயங்களுக்காக நாம் வெளியே சொல்லவில்லை. அரசு சிலவற்றைச் சொல்வதனால் சம்பிக்கரணவக்க உள்ளிட்ட பலர் அங்கு பிரச்சினைகளை உண்டுபண்ணுகின்றனர். இனவெறியையும் ஊட்டுவார்கள். ஆனாலும் அரசுடன் பேசிய எந்த விடயங்களும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
சிறையிலுள்ள கைதிகளின் பெயர் விவரங்கள் உள்ளடங்ய பட்டியலை வெளியிடுவதாக அரசு கூறியது. அதேவேளை பெண்கள், குழந்தைகளை விடுதலை செய்கிறோம் என்றும் ஜனாதிபதி கூறினார். இது இரண்டுமே நடக்கவில்லை. மாறாக வெலிக்கடை, போகம்பரை, அநுராதபுர சிறைச்சாலைகளில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்தவர்கள் எனப் பலர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

28 டிசம்பர் 2011

எந்த நாட்டிற்காவது அரசியல் தீர்வில் நாட்டமிருந்தால் முதலில் புலம்பெயர் தமிழரை திருப்பி அனுப்பட்டும்"மகிந்த சொல்கிறார்.

மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது, அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டின் செய்தியாளர் பகவான் சிங்கிற்கு அலரி மாளிகையில் வைத்து அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
‘டெக்கன் குரோனிக்கல்‘ நாளேட்டில் இன்று வெளியாகியுள்ள இந்தச் செவ்வியின் முழு வடிவம் இது.
கேள்வி - சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரும் மேற்கு நாடுகளை எப்படி அணுகப் போகிறீர்கள்?
பதில் - மேற்கு நாடுகளில் எஞ்சியுள்ள புலிகள் தான், சிறிலங்காவுக்கு எதிராக அடிப்படையற்ற விவகாரங்கள் குறித்து, அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். மேற்கு நாடுகள் கஸ்மீர் தொடர்பாகவும் சிறிலங்கா தொடர்பாகவும் தமது நாடாளுமன்றங்களில் பேசுகின்றன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும், ஈராக்கிலும் தாம் என்ன செய்தன என்று மௌனம் காக்கின்றன.
சிறிலங்காவில் 1880 ஊவா கிளர்ச்சியின் பின்னர், 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவரையும் பிரித்தானியர்கள் கொன்றனர். மக்களைப் பட்டினி போடுவதற்காக அங்குள்ள நீர்த்தேக்கங்கள் அனைத்தையும் அழித்தனர். நிலத்தைக் கைப்பற்றினர்.
இந்தியாவிலும் அதையே செய்தனர். அவர்கள் தான் இப்போது மனிதஉரிமைகள் பற்றிப் பேசுகின்றனர். மேற்குலகம் என்னை தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது. அதற்கு நான் தயாராக இல்லை.
கேள்வி- நீங்கள் சீனாவை நோக்கிச் சாய்வதாக ஒரு உணர்வு இந்தியாவில் உள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பூகோள அரசியல் நிலையை அது காயப்படுத்தக் கூடும் அல்லவா?
என்னைப் பொறுத்தவரையில் இந்தியா தான் முதலாவது. மற்றெல்லோரும் இந்தியாவுக்குப் பின்னர் தான் வரமுடியும்.
நான் பதவிக்கு வந்தவுடன் இந்தியாவுக்குச் சென்று அதன் ஆதரவைப் பெற்றேன். அதற்குப் பிறகு, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா பற்றி நான் கவலைப்படவில்லை.
உண்மையில், விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்பாக முக்கியமான தகவல்களை வழங்கி உதவியது அமெரிக்கா தான். அதன் மூலம் அவற்றைக் கடலில் வைத்து அழிப்பது சாத்தியமானது.
அதுபோல சீனாவும் உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற வந்துள்ளது. நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், அம்பாந்தோட்டைத் துறைமுகம் உள்ளிட்ட சீனாவுக்கு நாம் வழங்கிய ஒவ்வொரு திட்டத்தையும் முதலில் இந்தியாவிடம் தான் வழங்கினோம்.
ஆனால் அங்கிருந்து பதில் வரவில்லை. கொழும்புத் துறைமுக விரிவாக்கத் திட்டம் குறித்தும் விளம்பரப்படுத்தினோம். சீனா மட்டுமே வந்தது.
கேள்வி - போர் முடிவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். ஆனாலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற வெற்றி, தமிழர்கள் சுயநிர்ணய உரிமையைக் கோருவதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தநிலையில் தமிழர்களின் கவலைகளுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறீர்கள்?
பதில் - அந்தத் தேர்தல்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறைமையின் அடிப்படையில் நடைபெற்றன. கணிசமானளவு வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் விழுந்துள்ளன. வடக்கு,கிழக்கிற்கு வெளியே தான் 54 வீதமான தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் ஒரு நிலையான அரசியல் தீர்வில் கவனம் செலுத்துகிறோம். ஆனால் அது பரந்துபட்டளவில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். சிறப்பாக போருக்குப் பிந்திய சூழலில் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
கேள்வி - அதிகாரப்பகிர்வை எப்படி முன்வைக்கப் போகிறீர்கள்?
பதில் - அதிகாரப்பகிர்வுக்காக நாங்கள் ஏற்கனவே வடக்கு தவிர ஏனைய மாகாணங்களில் மாகாணசபைகளை நிறுவியுள்ளோம். வடக்கிலும் கூட அதனை அமைக்கவுள்ளோம்.
மாகாண நிர்வாகத்தை எப்படி வலுப்படுத்துவது, மேம்படுத்துவது என்றும் பெரும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை பகிர்ந்து கொள்வது குறித்தும் அவர்கள் கலந்துரையாட வேண்டும்.
கேள்வி - நீங்கள் முன்வைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனை பயனற்றது என்றும், அதுபோன்ற பல குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்ட போதும், அரசியல் பிரச்சினைகள் இன்னமும் உள்ளதாக பலரும் கூறுகின்றனரே?
பதில் - சிக்கலான எந்தப் பிரச்சினைக்கும் ஜனநாயக முறைப்படி நாடாளுமன்றத்தின் மூலம் தீர்வு காண நாடாளுமன்றத் தெரிவுக்குழு நல்லதொரு அணுக்குமுறை.
துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பிரதிநிதிகளின் பெயரை முன்வைக்கவில்லை. அவர்கள் விடுதலைப் புலிகளின் அதே மனோபாவத்துடனேயே உள்ளனர். அவர்களின் கோரிக்கைகளான வடக்கு,கிழக்கு இணைப்பு, காவல்துறை மற்றும் காணி அதிகாரப்பகிர்வு என்பன நடைமுறைச் சாத்தியமற்றவை.
உங்களின் நாட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள், ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்துக்கு பயணம் செய்த போது மாயாவதி அவரைக் கைது செய்ய முனைந்தார்.
இவர்கள் என்னைக் கைது செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? (தமிழர்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களாலேயே இயக்கப்படுகிறது. அவர்களுக்கு அமைதியோ அரசியல்தீர்வோ தேவையில்லை.
நியாயமான அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பது முக்கியமானது. ஆனால் அவர்கள் தமது பிரதிநிதிகளின் பெயர்களை பரிந்துரைக்கவில்லை.
இரா.சம்பந்தன் சிலருக்குப் பயப்படுகிறார் போலத் தோன்றுகிறது. இப்போது அவர்கள் அமெரிக்காவுக்குப் போய் முறையிடுகிறார்கள். இதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது. பிரபாகரன் காலத்தில் செயற்பட்டது போன்றே செயற்படுகின்றனர்.
சிறிலங்காவில் அரசியல்தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்று எந்தவொரு நாடாவது கவலைப்படுமானால், தமது நாடுகளில் தங்கியுள்ள புலம்பெயர் தமிழர்களை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும்.
எம்மைக் குறை சொல்வது அர்த்தமற்றது. தமிழ்க் கட்சிகள் தான் அரசியல்தீர்வை தாமதப்படுத்துகின்றன.
கேள்வி - மோதல்கள் இடம்பெற்ற சூழலில் கூட வடக்கில் உள்ளூராட்சி மற்றும் நாடாளுமன்றத் தேரதல்கள் நடத்தப்பட்டன. ஆனாலும் இப்போது அங்கு ஏன் மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தவில்லை?
பதில் - கூடிய விரைவில் அங்கு நிச்சயமாக தேர்தல் நடத்தப்படும். ஆனால் மாகாணசபைத் தேர்தலில் மக்கள் பங்கேற்க உண்மையான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
மோதல் சூழலில் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சுதந்திரமான முறையில் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயக ரீதியில் மக்கள தமது கருத்தை வெளிப்படுத்துவதற்கு எதிராக விடுதலைப் புலிகள் செயற்பட்டனர்.
கேள்வி - வடக்கு இன்னமும் கூட அதிகளவில் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழர்கள் முறையிடுகிறார்கள். 3 இலட்சம் மக்கள் வாழும் பகுதிகளில் ஒரு இலட்சம் படையினர் நிலைகொண்டுள்ளனர். சனசமூக நிலைய கூட்டத்துக்கோ அல்லது பாடசாலை நிகழ்வுக்கோ கூட சிறிலங்கா இராணுவத்தின் அனுமதி தேவைப்படுகிறது. குடியியல் நிர்வாகத்தில் இருந்து இராணுவத்தை எப்போது நீக்கத் திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில் - வடக்கில் 3இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். சனத்தொகைக்கேற்ப அங்கு படையினர் நிலைநிறுத்தப்படவில்லை. ஆனால் அந்தப் பிராந்த்தின் பாதுகாப்புக்கு அவர்கள் தேவைப்படுகின்றனர்.
சிறிலங்கா இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள அந்தப் பகுதி மூன்று பத்தாண்டுகளாக மோசசமான ஆயுதமோதல்கள் இடம்பெற்ற பிரதேசம். அங்கு சிறிலங்கா இராணுவம் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் முக்கியமான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
கேள்வி- இராணுவ முகாம்களை அமைப்பதற்காகவோ அல்லது சிங்கள வர்த்தகர்களுக்காகவோ தமது நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதாக தமிழர்கள் சந்தேகிக்கின்றனரே?
பதில் - இது விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் கிளப்பி விடப்பட்டுள்ள புரளி. நாடெங்கும் ஆயுதப்படையினர் உள்ள்ளர், அவர்களின் அவர்களின் முகாம்கள் உள்ளன. சிறிலங்காவின் பிராந்திய எல்லைகளையும், இறைமையையும் பாதுகாக்க இது அவசியமானது.
விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் வசித்தனர். சிங்களவரோ, தமிழரோ முஸ்லிமோ அவர், யாராக இருந்தாலும் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு அவர்களின் நிலத்தை கொடுக்க வேண்டும்.
வடக்கில் தமிழர்கள் வகித்து வரும் பெரும்பான்மையை சிறிலங்கா அரசின் எந்தவொரு செயற்பாடும் மாற்றியமைக்காது.

27 டிசம்பர் 2011

ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐ.நா.மனித உரிமை பேரவையில் தீர்மானம்?

ஜெனிவாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான- கடுந்தொனியிலான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் மேற்கு நாடுகள் இறங்கியிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடுமையான சொற்களில் அமைந்த இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்கு நாடுகள், இதுபற்றி முன்னணி ஆசிய நாடுகளுடன் இராஜதந்திர ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் மயக்க நிலை குறித்தும் மேற்கு நாடுகள் இராஜத்தந்திர ரீதியில் கலந்துரையாடியுள்ளன.
ஜெனிவாவில் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அனைத்துலக அரசசார்பற்ற நிறுவனங்களும், மேற்கு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், 2012ம் ஆண்டு சிறிலங்காவுக்கு “தீயணைப்பு ஆண்டு“ ஆகவே அமையும் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

வீதியில் இறங்கிப் போராட மக்கள் தயாராகவேண்டும் என்கிறார் சிவசக்தி ஆனந்தன்.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது போனால் தமிழ் மக்கள் வீதியில் இறங்கி அறவழிப்போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தயாராக வேண்டும் என்று சிவசக்தி ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் பறநட்டகல் மீள்குடியேற்ற கிராம மக்களுக்கு அவர் தென்னங்கன்றுகளை வழங்கினார். இந்த வைபவத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி தொடங்கி இம்மாதம்வரை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்பவைகளை வழங்கினால் தன்னால் தனது சொந்த கிராமத்திற்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அவரது இக்கூற்று மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரும் நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்த்தால் தனது சொந்தக் கிராமத்திற்குச் செல்ல முடியாது என்று சொல்லியிருப்பது எமக்குப் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினை என்பதை ஜனாதிபதி தன்னுடைய சுயநலத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கிறாரா, என்ற சந்தேகம் இதன் மூலம் எழுந்துள்ளது. இதுவரை இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசியல் தலைவர்களும் இனப்பிரச்சினையைச் சரியாக அணுகவில்லை. நான் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பேன் என்று தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்த ஜனாதிபதியே இப்போது இவ்வாறு கூறியிருக்கின்றார். இதன் மூலம் தமிழ் மக்களுக்கும் இனப்பிரச்சி;னையைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி குறித்தும் அரசாங்கம் இரட்டைவேடம் பூண்டிருக்கின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்பது வெறும் தேர்தல் பிரச்சாரமா? பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கென்று சர்வதேச உதவிகளைப் பெற்றுக்கொண்டு எமது மக்களை நிர்க்கதியாக்கி இன்று தனது சுயலாபத்திற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்பதைக் கொடுக்கமாட்டேன் என்று சொல்வது சரியானதா? இலங்கையின் ஜனாதிபதி என்றால், அது அம்பாந்தோட்டைக்கு மட்டும்தானா? யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஆள்நடமாட்டமே இல்லாதிருந்த கிளிநொச்சியில் இராணுவத்தினர் அளித்த சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்துகொண்டு வடக்கு-கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மாவட்டத்திற்கும் நான்தான் ஜனாதிபதி என்று சொல்லியிருந்தார். இனப்பிரச்சினைக்குப் பாதிக்கப்பட்டவர்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய குறைந்த பட்ச தீர்வையாவது முன்வைக்க முடியாது, அவ்வாறு செய்தால் தான் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாது என்று ஒரு நாட்டின் ஜனாதிபதி கூறுவது ஏன்?
சொர்க்கத்திற்குப் போவதற்கான ஒரு மந்திரத்தை அடியார் ஒருவாருக்கு அவரது குருநாதர் ஓதிவிட்டு இதை நீ மற்றவர்களுக்குச் சொன்னால் நீ நரகத்திற்குச் செல்வாய் என்று சொல்லியபோது அந்த அடியார், ‘கேட்பவர்கள் அனைவரும் சொர்க்கத்திற்குச் செல்லலாம் என்றால் நான் ஒருவன் நரகத்திற்குப் போவதில் பெருமைப்படுகின்றேன்’ என்றாராம். ஆனால் இந்த நாட்டின் ஜனாதிபதி இந்த நாட்டில் சமபங்காளிகளாக விளங்கும் தமிழ் மக்களுக்கு அவர்களுக்கு உரித்தான உரிமைகளை வழங்கினால் தான் தனது சொந்த கிராமத்திற்குச் செல்லமுடியாது என்கிறார். தன்னலமற்ற சேவையைப் புரியவேண்டிய ஆட்சிப்பொறுப்பிலுள்ளவர் இப்படிச் சுயநலமாகச் சிந்திப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.
அமைச்சர்களும், எதிர்க்கட்சியினரும் ஜனாதிபதியின் இக்கூற்றுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமலிருப்பதானது அவர்கள் அனைவரும் ஜனாதிபதியின் கிராமத்தை வலுப்படுத்துவதற்காகவே அவ்வாறு நடந்துகொள்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நாம் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த அரசாங்கத்துடன் பேசித்தான் ஆகவேண்டும். ஆனால் அரசாங்கம் எமக்கு உரித்தானவற்றை வழங்க மறுத்தால் நாம் கூனிக்குறுகி நிற்காமல் ஜனநாயக மரபின் அடிப்படையில் அறவழிப்போராட்டங்களை நடத்துவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் அனைத்து அறவழிப்போராட்டங்களிலும் மக்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும். அதன் மூலம் எமது ஒற்றுமையையும் எமது உரிமைப்போராட்டத்தில் உள்ள நியாயத்தையும் சர்வதேசத்திற்கு எடுத்துக்கூறுவோம். என்று கூறினார்.
இந்தக் கூட்டத்தில் வவுனியா பிரதேசசபையின் தவிசாளர் சிவலிங்கம், உறுப்பினர்கள் கதிர்காமு பரமேஸ்வரன், தர்மலிங்கம், பார்த்திபன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பறநட்டகல் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் தலைமைதாங்கினார்.

26 டிசம்பர் 2011

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுவது பற்றிய முக்கியமான விவகாரங்கள் குறித்து சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் எடுக்கத் தவறியுள்ளதாக - அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளில் ஒன்றான- “சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அனைத்துலக குழு“ (Minority Rights Group International) கண்டித்துள்ளது.
சிறிலங்கா அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளதை வரவேற்றுள்ள இந்த அமைப்பு, சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்த முக்கியமான சில விவகாரங்களில் அளித்துள்ள பரிந்துரைகளையும் வரவேற்றுள்ளது.
மொழி, காணி உரிமைகள், மீள்குடியமர்வு, கட்டாயமாக காணாமற்போனவர்கள், பெண்களின் பாதுகாப்பு, முஸ்லிம்களின் இடம்பெயர்வு போன்ற விடயங்களில் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இந்த அமைப்பு வரவேற்றுள்ளது.
இந்த அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளை, ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.
“போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவது பற்றி ஆணைக்குழு எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
சிறிலங்கா அரசு மற்றும் இராணுவத் தரப்பின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை பக்கச்சார்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மோசமான மனிதஉரிமை மீறல்கள் குறித்து, இந்த அறிக்கையில் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை.
போர் முடிவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்துள்ள நிலையிலும் சிறிலங்காவில் ஆட்கள் கட்டாயமாகக் காணாமற்போகும் சம்பவங்களும், சித்திரவதைகள் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் தொடர்கின்றன.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நீதியையும், பெறுப்புக் கூறுவதையும் உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசு தவறியுள்ளது.
இந்தச் சூழலில், அனைத்துலகத்தின் நடவடிக்கை மிகவும் முக்கியமானது.
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து, அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு, ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டும்“ என்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அனைத்துலக குழு அழைப்பு விடுத்துள்ளது.

மன்மோகனுக்கு கருப்புக்கொடி!விஜயகாந்த் கைதாகி விடுதலை.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பிலிருந்து ஊர்வலகமாக புறப்பட்ட தேமுதிகவினர் சின்னமலை வழியாக பிரதமர் தங்கியிருந்த ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்றனர்.
சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே வந்தபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை ஏற்க மறுத்து ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயகாந்த் மற்றும் தேமுதிகவினர் திருமண மண்டபவங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் 12.45 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், கூடங்குளம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைகள் குறித்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல், தனியார் நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் செல்வது தவறு. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பார்க்க பிரதமர் வந்தாரா? அரசாங்கம் விழாவுக்கு வந்த மாதிரி வந்துவிட்டு, ப.சிதம்பரம் சொல்கிற 2 விழாவுக்கு போய் சேருகிறார் பிரதமர். மக்கள் செத்தாலும் பரவாயில்லை. பிரதமர் விழாவுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். 4 அடுக்கு பாதுகாப்பு என்று சொன்னார்கள். திருச்சியில் இருந்து காரில் போகிறார் என்றார்கள். எங்கே கருப்புக்கொடி காட்டுவார்களோ என்று உடனே விமானத்தில் போகிறார். இதுதான் மக்களுக்கு செய்கிற நல்ல காரியமா?
திமுக அதிமுக ஒன்றுபட்டு முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு போராட தயாராக இருந்தால், தேமுதிகவும் போராட்டத்தில் இணையும். மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வலியுறுத்தி அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தேமுதிக தயாராக உள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த், போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டது இதுவே முதல் முறை.
பிரதமருக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்திய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும், தே.மு.தி.கவினர் மறியலில் ஈடுபட்டனர் இதனால் ஆயிரகணக்கானவர்கள் கைது செய்யபட்டனர். 10 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் கைதானார்கள்.

25 டிசம்பர் 2011

காணி,காவல்துறை அதிகாரம் இல்லாது அரசு எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்போகிறது?

பொலிஸ், காணி அதிகாரங்கள் வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு வழங்கமுடியாது எனக் கூறிக்கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக்கொண்டிருப்பதானது இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு முனையும் நடவடிக்கையென தெரிவித்துள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் தமிழ் மக்களுக்கு அரசு எவ்வாறு அரசியல் தீர்வை வழங்கப்போகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளதன் அடிப்படையே வடக்கு கிழக்குக்கு காணி,பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதாகும். ஆனால், அரசாங்கத்தில் உள்ள ஹெகலிய போன்ற அமைச்சர்கள் காணி,பொலிஸ் அதிகாரங்கள் வழங்க முடியாது என்கின்றனர். தற்போது அரசாங்கம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை கொண்டுவருவதற்கே இந்தப் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை நடத்துகின்றது.
நிலாவைக்காட்டி பிள்ளைக்கு சோறூட்டுவது போல தமிழ்த்தேசியக் கூட்மைப்பை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைத்து சர்வதேச நெருக்கடியில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இன்று தமிழ் மக்களுக்கு தீர்வுத்திட்டங்களை வழங்கி அவர்கள் தமது வாழ்க்கையை மேம்படுத்த உதவுமாறு சர்தேச சமூகம் இன்று இலங்கை அரசாங்கத்துக்கு பல்வேறு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது.
இந்த நிலையில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை அரசாங்கம் அவசரஅவசரமாக அமைக்க முனைந்துள்ளதுடன் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை அச்சுறுத்தி உள்வாங்க முனைகின்றது. இதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அடிபணியாது. அந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவானது ஒரு’பீடா”க்கடை போன்றது அதன் மூலம் எதுவித நன்மையும் ஏற்படப் போவதில்லை.
இந்த நிலையில் காணி,பொலிஸ் அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். அத்துடன் பேச்சு வார்த்தைகள் தொடர்பில் அரசாங்க அமைச்சர்கள் கருத்துக்கள் வழங்குவதை நிறுத்தி ஆக்கபூர்வமான விடயங்கள் தொடர்பில் சிந்திக்கவேண்டும்.

பேச்சுக்களிலிருந்து விலகமாட்டோம் என சம்பந்தர் பி.பி.சி.க்கு தெரிவித்தார்.

சிவில் சமூகம் கூட்டமைப்பிற்கு விடுத்த வேண்டுகோள்கள் தொடர்பாக சம்பந்தன் நேற்று மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்களிற்கு அனுப்பி வைத்தது தொடர்பில் பிபிசி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டிருந்தது.
சிவில் சமூகத்தால் முன்வைக்கப்பட்ட சுயநிர்ணயம் தேசியம் தொடர்பாக கேட்டபோது, அவை வெறும் கோசங்கள் என்ற சாரப்பட பதிலளித்த சம்பந்தன், அரசாங்கம் காணி பொலிஸ் அதிகாரங்களை தரமாட்டாது என அறிவித்த நிலையில் பேச்சுக்கள் எவ்வாறு தொடரப்பட இருக்கின்றது என கேட்டபோது, பேச்சுவார்த்தையில் அரச தரப்புக் குழு அவ்வாறு ஒன்றும் சொல்லவில்லை எனவும் வெறும் அமைச்சர்கள் கூறுவதை பொருட்படுத்த தேவை இல்லை எனவும் தெரிவித்தார். அதேவேளை நாம் பேச்சுக்களிலிருந்து ஒருபோதும் விலகமாட்டோம் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு சம்பந்தன் தெரிவித்தாலும், மகிந்த ராஜபச்சே பத்திரிகையாளர் மாநாட்டில் பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

24 டிசம்பர் 2011

ஐ.நா இன்னும் ஏன் மெளனம் காக்கிறது?இன்னர் சிற்றி பிரஸ் விசனம்.

சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாக ஐ.நா கூறியிருந்த போதும், கடந்த ஒரு வாரமாகியும் எந்தக் கருத்தையும் வெளியிடாமல் ஐ.நா மெளனமாக இருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக்கூறுவதற்கான ஏற்பாடுகள் இல்லை என்று விமர்சனம் செய்யும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் எச்சரித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் இந்த அறிவிப்புத் தொடர்பாகவும், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா எந்தக் கருத்தையும் வெளியிடாதிருப்பது குறித்தும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு அவர், ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்யும் பணி நடப்பதாகவும், அதுகுறித்து மேலதிகமாக சொல்வதற்கு ஏதும் இருந்தால் தாம் பின்னர் கூறுவதாகவும் பதிலளித்துள்ளார்.
இதன்பின்னர், பான் கீ மூனின் அதிகாரிகள் பலரிடம் விசாரித்ததில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக ஆய்வு செய்யுமாறு ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்களம் மற்றும் மனிதஉரிமைகள் பிரிவு ஆகியனவற்றிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தை மேசையிலிருந்து கூட்டமைப்பு உடன் வெளியேறவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு மேடையிலிருந்து உடன் வெளியேறித் தமிழ் மக்களின் உரிமைக்காகத் தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக வேண்டும். இடதுசாரிகள், கூட்டமைப்பின் எந்தவொரு முடிவுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவே உள்ளனர்.
உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர் அமைப்புகளை ஒன்றுதிரட்டும் நடவடிக்கையையும் கூட்டமைப்பு, உடன் ஆரம்பிக்க வேண்டும். என புதிய இடதுசாரி கட்சி வலியுறுத்தி உள்ளது. அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பாக கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச்செயலாளரும் தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் நகரசபைகளுக்குக்கூட காவற்துறை அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் உட்பட முக்கியமான அதிகாரங்களை வழங்குவதற்கு மஹிந்த அரசு மறுப்புத் தெரிவிக்கின்றது. ஜனாதிபதி நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவே அதிகாரப் பரவலை வலியுறுத்தியுள்ளது. நிலைமை அப்படியிருக்கையில், அரசு மழுப்பல் போக்கைக் கடைப்பிடிப்பது ஏன்?
13ஆவது அரசமைப்பில் திருத்தம் செய்யவுள்ளோம் என அரசு கூறுவது அபத்தமானது. இதனை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனவாதம் என்ற கொடூர அரக்கன் சிறுபான்மையினத்தவரின் உரிமைகளை விழுங்கி ஏப்பம் விடுகின்றான். பிரதான எதிர்க்கட்சியில் இனவாதப் போக்குடையவர்கள் இருப்பதும் மஹிந்த அரசுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. சக்திவாய்ந்த எதிர்க்கட்சி ஒன்று அவசியம். அதனைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும். இல்லையேல் நாடு படுபாதாளத்தை நோக்கிப் பயணிக்கும்.
அதைத் தரமாட்டோம்; இதைத் தரமாட்டோம் எனக் கூறிக்கொண்டு பேச்சைத் தொடர்பவர்களுடன் பேசுவதில் எந்தப் பயனுமில்லை. கூட்டமைப்பு, உடன் பேச்சு மேடையிலிருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறி தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
உள்நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்குத் தமிழர்களின் பிரச்சினையைத் தெளிவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பு பெரும் கூட்டங்களைத் தெற்கில் நடத்தவேண்டும். அதற்கு நாம் பூரண ஒத்துழைப்பையும் வழங்குவோம் என விக்ரமபாகு தெரிவித்துள்ளார்.

23 டிசம்பர் 2011

மகிந்தவுடன் விருந்துண்டு மகிழ்ந்தார் சம்பந்தன்!

வரவு செலவுத்திட்ட வாக்களிப்பு பாராளுமன்றத்தில் நிறைவு பெற்ற பின்னர் நேற்று முன்தினம் இரவு சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற சம்பிரதாய பூர்வ விருந்துபசாரத்தில் மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க உட்பட ஆளுங்கட்சி எதிர்ச்கட்சி உறுப்பினர்கள் பங்குபற்றி இருந்தனர். இவ் விருந்துபசாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கலந்து கொண்டு மகிந்தவுடன் உணவுண்டு மகிழ்ந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு முடிந்த பின்னர், சபாநாயகர் அவர்களால் விருந்துபசாரம் வழங்கப்படுவது வழமையாகும். இக் குறித்த சம்பிரதாய பூர்வ நிகழ்விற்கு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு வழங்கப்பட்டது. குறித்த நாளில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மகிந்த வடகிழக்கிலிருந்து இராணுவ முகாங்கள் எக்காரணங் கொண்டும் அகற்ற முடியாது எனவும், காணி அதிகாரங்களோ பொலிஸ் அதிகாரங்களோ வழங்கப்படமாட்டாது எனவும் மகிந்த தெரிவித்திருந்தார். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த இராப் போசனத்தில் கலந்து கொள்வது குறித்து சிந்திக்கவில்லை.
குறித்த இராப்போசனத்தில் கலந்து கொள்வதற்காக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சக உறுப்பினர்களைக் கேட்ட போது, பாராளுமன்றில் நடைபெற்ற சம்பவத்தினைச் சுட்டிக்காட்டி நிகழ்வில் கலந்துகொள்வது பொருத்தமற்ற விடயம் எனத் தெரிவித்திருக்கின்றனர். இது இவ்வாறு இருக்க கூட்டமைப்பின் சம்பந்தன் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட மகிந்தவுடன் உணவுண்டு மகிழ்ந்தள்ளார்.
தமிழ் மக்களோடும், பத்திரிகைகளோடும் உரையாடும் போது தான் ஒரு தேசியவாதியாகக் காட்டிக் கொள்ளும் சம்பந்தன், மறுபுறத்தில் அரசுடனும் மகிந்தவுடனும் கைகோர்த்துச் செயற்படுவது தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்.

தமிழ் மக்களுக்கான பிரித்தானியாவின் அனைத்து பாராளுமன்றக் குழு தலைவர் Lee Scott (லீ ஸ்கொட்) அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில், உயிர் இழந்தவர்களுக்கும்,இன்று வரை இலங்கையில் வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் தமிழ் மக்களும், நீதியைப் பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றவாவது பாராளுமன்ற அமர்விற்கு அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியிலேயே Lee Scott அவர்கள் இக்கூற்றினை தெரிவித்துள்ளார்.
போர்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களை சர்வதேச விசாரணை கூண்டில் முன் நிறுத்துவதற்கான முயற்சியில் தனது சகாக்களையும் அழைத்துளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவின் மிச்சம், மோடன் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh (ஷிபொன் மக்டோனா) அவர்கள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியில் எதிர் வரும் ஐ.நாவின் மனித உரிமைகள் சபையில், துறைசார் தகமையுடன் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நாவின் மனித உரிமைக் கூட்டத் தொடரில் அனைவரும் ஓருங்கிணைநத்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஷிபொன் மக்டோனா அவர்கள் போர் குற்ற விசாரணை தொடர்பில் கிடைக்கபெறும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்த அனைவரும் பாடுபடவேண்டும் Siobhain McDonagh கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஒருங்கிணைந்த பணியில் ஈடுபட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டில் தானும் இணைந்திருப்பதையும் குறிப்பிட்டுள்ள Siobhain McDonagh அவர்கள் அனைத்து புலம் பெயர்ந்த தமிழ் மக்களும், உண்மையாக ஒருங்கிணைந்து அழுத்தத்தை கொடுக்க வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தனது பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.

22 டிசம்பர் 2011

ஆறுமுகன்,கக்கீம் ஆகியோர் போல் கூட்டமைப்பும் தம்மை ஆதரிக்க வேண்டும் என்கிறார் பசில்.

விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடும் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களை விட மோசமாக நடந்து கொள்கிறது என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகங்களின் ஆசிரியர்களை நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற கட்டடத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே பசில் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஊடகங்களின் ஆசிரியர்களை சந்தித்தபோது, விடுதலைப் புலிகள் போன்றே கூட்டமைப்பு செயற்படுவதாக குற்றம்சாட்டியிருந்த நிலையில் பசில் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“விடுதலைப் புலிகள் சிலவேளைகளில் விரும்பியோ, விரும்பாமலோ அல்லது வேறு ஏதேனும் நோக்கத்துடனோ போர் நடந்து கொண்டிருந்த போது கூட அரசாங்கத் தரப்புடன் வெளிநாடுகளில் பேச்சுக்களை நடத்த முன்வந்தனர்.
அவ்வப்போது போர்நிறுத்த உடன்பாடுகளைச் செய்து கொண்டு, திடீரெனப் போரை பிரகடனம் செய்யும் தந்திரங்களையும் கையாண்டது.
முன்னர், தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே என்ற ஆணவத்துடன் விடுதலைப் புலிகள் செயற்பட்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்பதை கடந்த காலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்ற போதிலும், தம்முடன் மட்டுமே பேச்சுக்களை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற தவறான மனப்போக்கில் செயற்படுகிறது.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் நியமிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கு கொள்வது அவசியம்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் மட்டும் பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முடியாது.
தெரிவுக்குழுவில் உள்ள சகல கட்சிகளுடனும் பேசி அவற்றின் இணக்கப்பாட்டுடன் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே, சமாதானத்தை நிலைத்திருக்கச் செய்ய முடியும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டால் அத்துடன் அந்த விவகாரம் முடிந்து விடும்.
ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் சிறப்பு தெரிவுக்குழு ஒன்றின் மூலம் பரிசீலனைக்கு எடுத்து, அதில் கூறப்பட்டுள்ள யோசனைகள், பரிந்துரைகள் மற்றும் சட்ட நுணுக்கங்களை தெளிவாக ஆராய்ந்து, ஒவ்வொன்றுக்கும் அரசாங்கம் நியாயமான தீர்வை ஏற்படுத்துவதே புத்திசாலித்தனமான செயல் என்று நான் நினைக்கிறேன்.
ரவூப் ஹக்கீம், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தமது மக்களின் நலனுக்காக சிறிலங்கா அரசுடன் இணைந்து செயற்படுவது போன்று, அதே வழியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்.
ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினர் வடக்கில் சட்டபூர்வமான அரசியல் செய்வதை அரசாங்கம் வரவேற்கிறது.
அதுபோன்று தெற்கிலுள்ள ஏனைய கட்சிகளும் வடக்கில் அரசியலில் ஈடுபடுவது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு உதவியாக அமையும்.
அதேவேளை, ஜே.வி.பியில் இருந்து பிரிந்து சென்ற குழுவினர் வடக்கில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை இணைத்துக் கொண்டு சதி வேலைகளில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காணி,காவல்துறை அதிகாரமற்ற தீர்வு தேவையில்லை"சுரேஷ் பிரேமச்சந்திரன்.

மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் அரசு ஒரு தீர்வை முன்வைக்க விரும்புமானால் அப்படியானதொரு தீர்வு தமிழ் மக்களுக்குத் தேவையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது எனவும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை எனவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து ´அத தெரண தமிழிணையம்´ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வினவியது, இதற்கு பதிலளித்த கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,
காணி, பொலிஸ் அதிகாரங்கள் அற்று பேச்சுவார்த்தை நடத்துவதானால் அது பயனளிக்காது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண அரசு ஒன்றுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தேவைகளாகும்.
காணி அதிகாரம் இல்லாவிட்டால் மாகாணத்திற்குள் அபிவிருத்தி நடவடிக்கையை முன்னெடுக்க முடியாது. ஆடு, மாடுகளை வளர்க்க முடியாது. விவசாயம் செய்ய முடியாது. மக்களுக்கு காணி பகிர்ந்தளிக்க முடியாது. அதேபோன்று பொலிஸ் அதிகாரம் இல்லாவிட்டார் மாகாணத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட முடியாது.
எனவே இவைகள் இல்லாத ஒரு அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு அவசியமில்லை. காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13ம் திருத்தத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை அரசு வழங்க மறுத்தால் 13வது திருத்தச் சட்டத்தை புறந்தள்ளியுள்ளதாக அர்த்தம்.
இப்படியிருக்கையில் இனப்பிரச்சினை தீர்வுக்கு 13வது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று ´13 + +´ என்ற தீர்வை முன்வைக்கவுள்ளதாக அரசாங்கம் உலக நாடுகளுக்கு கூறிவருவது எவ்வாறு? என சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

சர்வதேச விசாரணைக்கு பிரித்தானியாவை ஆதரவளிக்கும்படி கோரும் மின் விண்ணப்பம்.

ஏற்கனவே நீங்கள் செய்யவில்லை எனில், பின்வரும் இணைப்பில் அழுத்திமின் மனு மேலே கையெழுத்திடுங்கள்.. http://epetitions.direct.gov.uk/petitions/14586

அத்துடன் நீங்கள் உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த இணைப்பை முன்னோக்கி அனுப்ப முடியுமாயின் நாம் நன்றி உடையவர்களாக இருப்போம்.
உங்கள் தகவலுக்கு, மனுவில் கையெழுத்து இடுப்பவர் பிரித்தானிய குடிமகனாக அல்லது பிரித்தானியாவில் வாழ்பவராக இருக்க வேண்டும் . இந்த மனுவில் கையொப்பம் இட வயது எல்லை கிடையாது. நீங்கள் மின் மனு வலைத்தளத்தில் ஒரு மின் மனுவில் கையெழுத்திடும் போது உங்கள் கையொப்பங்கள் உண்மையானதா என சோதிக்க உங்கள் பெயர், முகவரி மற்றும் மின்னஞ்சல் அளிக்க வேண்டும்.
உங்கள் தனிப்பட்ட தகவல்கள் இந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படும். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் தளத்தில் வெளியிடவோ மின் மனு உருவாக்கிய நபர் பார்க்கவோ முடியாது. முக்கியமாக, நீங்கள் மனுவில் கையெழுத்திட்ட பின்பு அதை உறுதி செய்ய உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புவிக்கப்படும்.
நீங்கள் இணைப்பை அழுத்தி உறுதி செய்யும் போதுஉங்கள் பெயர் மட்டுமே மனுவில் சேர்க்கப்படும்.

21 டிசம்பர் 2011

கூட்டமைப்பின் பின்னணியில் புலிகள்"தாம் பொறுமை காப்பதாக கூறுகிறார் மகிந்த.

அரசுடனான தீர்வுப் பேச்சுகளின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், விடுதலைப் புலிகளின் பாணியையே பின்பற்றுகின்றனர். தனித்தீர்மானம் எடுக்கமுடியாமல் வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் சக்திகளால் அவர்கள் தடுமாறுகின்றனர். நாமும் பொறுமையாகப் பேசுகிறோம். எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.இவ்வாறு நேற்றுக் கருத்து வெளியிட்டார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்றுக்காலை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கருத்துகளை வெளியிட்டார் ஜனாதிபதி.
அப்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு:
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பு இடம் பெறவேண்டும் என்பது முக்கியமானது. இதற்கு உறுப்பினர்களின் பெயரை அனுப்புமாறு நாம் தெளிவாகக் கூறியிருக்கிறோம். ஆனால், புலிகள் செய்ததைத்தான் கூட்டமைப்பும் செய்கிறது. பேச்சு மேசையில் அமர்வார்கள். பிறகு ஏதாவது நிபந்தனையை விதித்துவிட்டு வெளியேறுவார்கள். பிறகு வருவார்கள், பேசுவார்கள். நாமும் மிகப் பொறுமையாகப் பேசுகிறோம். எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.
தமிழ்க் கூட்டமைப்பினரின் மனநிலை மாறவேண்டும். போர்ச்சூழல் மனநிலையிலிருந்து அவர்கள் விலகவேண்டும். நான் பேச்சுக்கு செல்லாமைக்கும் இதுதான் காரணம். தீர்மானங்களை எடுக்கக்கூடிய ஒரு தரப்புடன்தான் நாம் தீர்மானங்களை எடுக்கலாம். ஆனால், கூட்டமைப்பினர் இப்படியான நிலையில் இல்லை. தனியாக ஒரு தீர்மானத்தை அவர்களால் எடுக்கமுடியாத நிலைமை இருக்கிறது. அவர்கள் வெளித்தீர்மானத்திற்கு உட்பட்டு செயற்படவேண்டிய நிலையில் இருக்கின்றனர். புலிகளின் அடிவருடிகளும் வெளிநாட்டுச் சக்திகளும் அவர்களின் பின்னணியில் இருக்கின்றன என்று தெரிவித்துள்ளார் மகிந்த ராஜபக்ஷ.

20 டிசம்பர் 2011

அனைத்துலக விசாரணைக்கு கூட்டமைப்பு கோரிக்கை,உலக ஊடகங்கள் முக்கியத்துவம்.

சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ள விவகாரம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அறிக்கைக்கு அனைத்துலக செய்தி முகவர் நிறுவனங்களும், ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
அமெரிக்க, அவுஸ்ரேலிய, ஐரோப்பிய, இந்திய ஊடகங்கள் பலவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது குறித்த செய்திகளையும் ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளன.
அத்துடன் உலகின் முன்னணி செய்தி முகவர் நிறுவனங்களும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
இதனால் இந்த விவகாரம் அனைத்துலக கவனத்தை அதிகளவில் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மக்களையும்,புலிகளையும் குற்றம் சுமத்தவே ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இறுதியில் புலிகளையும், தமிழர்தரப்பையும் குற்றம் சாட்டிக்கொண்டு முடிக்கப்படும் என நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்பட்டபோது தெரிவித்திருந்த கருத்துக்கள் இன்று உண்மையாகி இருப்பதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் உபதலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பாக கலந்துரையாடும் வகையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கம், சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்குமாகவே நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தது. நல்லிணக்க ஆணைக்குழு யுத்தத்தின் பின்னரான மூன்று வருடங்களினை ஆய்வுசெய்து அதை மையமாக வைத்துக் கொண்டு இந்த நாட்டில் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையிலான இன முரண்பாட்டிற்குத் தீர்வு காண நினைக்கின்றது.
ஆனால் அது சாத்தியமல்ல. தமிழ் இனத்தின் மீதான இன அழிப்பு நடவடிக்கையினை காலத்திற்குக் காலம்வந்த சிங்கள அரசாங்கங்கள் ஆரம்பித்து விட்டன. எனவே பிரித்தானியர் இங்கிருந்து வெளியேறிய காலத்திருந்தான ஆய்வினை சர்வதேசம் செய்யவேண்டும்.இந்த நிலையில் யுத்தத்திலும், இன அழிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்த தரப்பான அரசாங்கம் உருவாக்கிய ஆணைக்குழுவொன்றை ஏற்றுக்கொள்ளமுடியாது.
இதே நிலைப்பாட்டையே கூட்டமைப்பும் எடுக்கவேண்டும், கூட்டமைப்பு போர்க்குற்ற விசாரணைகளையும், ஜ.நாவின் நிபுணர்குழு அறிக்கையினையும் வரவேற்பதாக கூறிக் கொண்டிருக்கின்றது.ஆனால் உண்மையினை கண்டறியவேண்டும் என்ற கருத்தையே அவர்கள் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இங்கேநடந்த உண்மை கூட்டமைப்புக்குத் தெரியும், எனவே பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை கூட்டமைப்பு வலியுறுத்தவேண்டும்.கடந்த ஒரு வருடகாலமாக இந்த அறிக்கையினை எதிர்பார்த்திருந்து சர்வதேசம் இன்று ஏமாற்றப்பட்டிருக்கின்றது எனவே சர்வதேசம் இனியாவது ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழு(மகிந்த ஆணைக்குழு)அறிக்கை தொடர்பில் கவலையடைகிறோம்"என அமெரிக்கா தெரிவிப்பு.

அண்மையில் வெளிடப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து அமெரிக்கா தனது கவலையை தெரிவித்துள்ளதோடு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு மீது முழுமையான விசாரணை ஒன்றுக்கும் வலியுறுத்தியுள்ளது.
அரச படைகள் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியபோது பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 பக்க அறிக்கை உறுதி செய்துள்ளதென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ஊடக சுதந்திரம், மனித உரிமை மீறல் போன்ற விடயங்களில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிலையான பரிந்துரைகளை செய்துள்ளதாக அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் முழு அறிக்கையையும் படித்து வருகிறோம். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உண்மையான மனித உரிமை மீறல் மற்றும் சம்பவங்கள் குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ள விதம் தொடர்பில் நாம் கவலையடைகிறோம்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பூரணமானது என கருதாமல் அறிக்கையில் கூற தவறப்பட்ட விடயங்கள் குறித்தும் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தாமே பதிலளிப்பது சிறந்தது என அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் கூறியுள்ளார்.

19 டிசம்பர் 2011

அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை அமைக்க ஐ.நாவிடம் கோரிக்கை.

ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் , தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர் தயாகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் - இவையல்லாம் அனைததுலக பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தை உணர்தி நிற்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தை இத்தீர்மானம் கோரியுள்ளது.
மேலும்,சிறிலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகைள கிராம ரீதியாகக் கண்காணிப்பதற்காக உலகின் முக்கியமான நாடுகளில் கண்காணிப்புக்குழுக்களை அமைப்பது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை 2012 ஆம் ஆண்டை சிறிலங்கா அரசின் மீதான அனைத்துலக விசாரணைக்குரிய ஆண்டாhகப் பிரிகடனப்படுத்தும் தீர்மானம் ஒன்றையும் நா.த.அரசாங்கத்தின் பாராளுமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டிசம்பர் 14ம் திகதி முதல் 17 திகதி வரை இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடர் அமர்வின் நிறைவுநாளில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஆற்றிய உரையில்....
தமிழீழமே ஈழத் தமிழர் தேசத்தின் இலக்கு - அந்த இலக்கு நோக்கிய பயணத்தை நாம் உறுதியுடன் தொடருவோம் என்பதை எதிரிக்கும் உலகத்துக்கும் முரசறைந்து கூறக்கூடிய வகையில் நமது மூன்றாவது அமர்வு நிகழ்கள் நடைபெற்று நிறைவேறியிருக்கின்றன.
இந்தியாவிலிருந்தும் தென்னாபிரிக்காவிலிருந்தும் முதலாவது நியமன அரசவை உறுப்பினர்கள் இந்த அமர்வில் சத்தியப்பிரமாணம் செய்து அமர்வில் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
உலகளாவியரீதியில் தமிழர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்பின் அணிவகுக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்தக்காட்டு.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது வலுவினை அதிகரிக்கும் முயற்சியில் இது ஒரு முக்கியமான படிக்கட்டு.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பிரதிநிதிகள்;, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அறிஞர்கள் நேரடியாகப் பங்கு பற்றி வழங்கிய கருத்துரைகள் , பிரித்தானிய அரசியற்தலைவர்களின் வாழ்த்துக்கள் போன்றவையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னைத் ஈழத் தமிழர் தேசத்தின் வலுமையமாக ஆக்கிக் கொள்வதற்கு வலுச் சேர்க்கக் கூடியவை.
இவையெல்வாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மென்வலுவினைக் கம்பீரமாககப் பயன்படுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லத் துணைபுரியக்கூடியவை.
புதிதாய் அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனப்படுகொலை நிபுணர்குழு முதற்தடமையாகக்கூடித் தனது செயற்பாடுகளை ஆராய்ந்துள்ளது.
சிறிலங்கா அரசின் ஈழத் தமிழ் தேசத்தின் மீதான இனப்படுகொலையினை அனைத்துலக அரங்கிலும் உள்நாடுகளிலும் காத்திரமாக வெளிப்படுத்தக்கூடிய பல்வேறுவகையிலானன அணுகுமுறைகளை இந் நிபுணர்குழு ஆராய்ந்தது.
உள்நாடுகளில் கூடுதலான சட்டநடவடிக்கைககைளை மேற்கொள்வது குறித்தும் அனைத்துலக அரங்கில் மக்கள் நீதிமன்றங்களை அமைத்து சிறலங்கா அரசின் இனப்படுகொலை குறித்த விசாரணைகளை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டன.
2012 ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படவேண்டிய முறை குறித்து ஆராய்வதற்காக ஒரு விசேட மூலோபாயச் சந்திப்பும் மேற்கொள்ளப்பட்டது.
நள்ளிரவுவரை நீடித்த இந்தச் சந்திப்பில் உறுப்பினர்கள் காட்டிய உற்சாகம் மிகுந்த நம்பிக்கையினைத் தந்தது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திக் போரட்டப்பாதை குறித்து சமர்பிக்கப்பட்ட ஆவணம் குறித்தும் நாம் விவாதித்தோம்.
இது குறித்த விவாதங்களைத் தொடரந்து மேற்கொண்டு நாம் பயணிக்க வேண்டிய திசையினை தெளிவாக வரையறுத்துக் கொள்வதற்கு இந்த அமர்வு வழிகோலியுள்ளது.
அறிஞர்களும் செயற்பாட்டார்களும் இந்த அமர்வில் முன்வைத்த கருத்துக்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணை செய்யக்கூடியவையாக அமைந்தன. புத்தாக்கச் சிந்தனைகளுக்கு களம் அமைப்பவையாகவும் அமைந்தன.
முஸ்லீம் சகோதரர்களுக்கும் சகோதரர்களுக்குமான அரசியல் உறவுகள் தொடர்பான உரையாடல் இங்கே ஆரம்பமானது.
தமிழீழத் தாயகத்தில் சிங்களத்தின் இன அழிப்புக்கெதிராக அனைத்துலக பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது தொடர்பான ஆவணம் மீதும் சபை விவாத்தித்தது.
ஈழத் தமிழர்தயாககத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும்; அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் - இவையல்லாம் அனைததுலக பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தை உணர்தி நிற்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கியநாடு சபை செயலாழர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிநிற்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் இத்தகையதொரு அனைத்துலகப் பாதுகாகப்புப் பொறிமுiயினை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோருகிறது.
மேலும்,சிறிலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகைள கிராமரீதியாகக் கண்காணிப்பதற்காக உலகின் முக்கியமான நாடுகளில் கண்காணிப்புக்குழுக்களை அமைப்புது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா அரசு தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் குடியேற்றங்கள் தொடர்பாகவும் நாம் இச் சபையில் விவாதித்திருந்தோம்.
2012 ஆம் ஆண்டை சிறிலங்கா அரசின் மீதான அனைத்துலக விசாரணைக்குரிய ஆண்டாhகப் பிரிகடனப்படுத்தும் தீர்மானம் ஒன்றையும் நாம் இச்சபையில் நிறைவேற்றியுள்ளோம்.
இப்படியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த மூன்றாவது அமர்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் முன்னேறுவதற்கு உதுணையாகப் பல்வேறு விடயங்களை விவாதித்திருந்தது.
ஈழத் தமிழர் தேசத்தின் அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்தில் 2012 ஆம் ஆண்டு தீரக்கமான பாத்திரத்தை வகிக்கப் போகிறது எனவும் - இவ் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் ஈழத் தமிழர் தேசத்துக்கும் சவால் மிக்கதொரு ஆண்டாக அமையும் எனவும் - இந்த ஆண்டில் எவர் முன்னோக்கி ஒடுகிறார்களோ அவர்களே அடுத்த கட்ட வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன எனவும் நான் எனது மூன்hவது அமர்வுக்கான ஆரம்ப உரையில் தெரிவித்திருந்தேன்.
நடைபெற்று முடிந்த மூன்றாம் அமர்வு நிகழ்வுகள் 2012 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் தேசத்தின் ஆண்டாகவே அமையப் போகிறது என்பதனை எமக்கு உள்ளுணர்த்தி நிற்கின்றன.
2012ம் ஆண்டை நமது ஆண்டாக வென்றெடுக்க அனைவரும் திடசங்கற்பம் பூண்டு உழைப்போமாக என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனதுரையில் தெரிவித்தார்.
இதேவேளை அமர்வில் உணர்வுபூர்வ நிகழ்வாக பார்வையாளராக கலந்து கொண்ட தாயொருவர் தமிழீழக் கொடியேற தன் (தாலி) கொடியை தமிழீழ அரசாங்கத்துக்கு வழங்கிய உணர்வுபூர்வ நிகழ்வு குறித்து குறிப்புரைத் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள்....
தாயகத்தில் எமது தாய்மார்களினதும் சகோதிரிகளினதும் கழுத்துக்களில் தொங்கும் தாலிகள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு தாலிக்கொடி இறங்கியது. ஈழத் தமிழர் தேசம் தனக்கெனச் சுதந்திரமான இறைமையுடைய தமிழீழத் தனியரசினை அமைத்து, தமிழீழத் திருநாட்டின் தேசியக் கொடி உலக அரங்கில் பட்டொளி வீசப் பறக்க வேண்டும் என்பதற்காக - இந்த அமர்வில் நமது தேசத்தின் தாய் ஒருவர் தனது கழுத்திலிருந்த தனது தாலிக்கொடியினை தானே இறக்கி - நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் ஒப்படைத்த நிகழ்வை நாம் இந்த அரங்கில் கண்டோம்.
இது நம் எல்லோர் நெஞ்சையும் நிகழச் செய்தது. நமது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
இந்தத் தாய் நமது மக்களின் விடுதலை உணர்வின் குறியீடு.
தேசியத்தலைவரின் தiமையில் தமிழீழ மண்ணிலே தமிழீழ நடைமுறை அரசு அமைக்கப்பட்டு, விடுதலைப் போராட்டம் வீச்சாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இத்தகைய நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். அந்த உணர்வுகளுக்கு சற்றும் குறையாத வகையில் தமிழ் மக்களின் அர்பணிப்பு உணர்வைததான் இந்தத்தாயின் வடிவில் நாம் இந்தச் சபையில் கண்டோம்.
இதனைத் தொடர்து இங்கு கூடியிருந்தோர் பலரும் தம்மிடம் இருந்த தங்கச் சங்கிலிகளையும் பணத்தையும: பங்களிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்களாக வழங்கியமையும் நாம் கண்டோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றிகரமாக தனது இலக்கு நோக்கிய பயணத்தைத் தொடர வேண்டும் என்பதில் அனைவரும் கொண்டிருக்கும் பற்றுதியை இவை வெளிப்படுத்தி நிற்கின்றன என பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.

- நாதம் ஊடகசேவை -

18 டிசம்பர் 2011

வேடிக்கையான ஸ்ரீலங்கா நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்ற விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வேடிக்கையளிப்பதாக சனல்4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அது மேலும் தெரிவித்துள்ளதாவது,
வெளியாகியுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களை குறிவைத்து இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக யுத்த சூனியப் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என அவ்வறிக்கையில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சிறிய அளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடயம் என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அது செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐ.நாவின் அறிக்கையை அது இணைத்து சில ஆதாரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தை தயாரித்த “காலம் மக்ரே” அவர்கள் இதில் பல விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
மேலும் “தண்டிக்கப்படாத குற்றங்கள்” என்ற தலைப்பில் மற்றுமொரு 30 நிமிட ஆவணப்படம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளது.
வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ள இந்த ஆவணத் திரைப்படத்தில் புதிய பல போர்க்குற்ற ஆதாரங்கள் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



அவுஸ்ரேலியா சென்ற அகதிகள் படகு கடலில் மூழ்கியது!

சுமார் 380 அகதிகளுடன் அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற படகு ஒன்று இந்தோனேசியக் கடற்பரப்பில் நேற்றுக் கவிழ்ந்ததில் 300 இற்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளனர்.
கிழக்கு ஜாவா கடற்பகுதியில் கவிழ்ந்த இந்தக் கப்பலில் பயணம் செய்த 76 அகதிகளை மீட்டுள்ளதாக ஜாவா அவசரகால மீட்பு பணியகத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
மரத்தினாலான இந்தப் படகில் அளவுக்கதிகமானோர் பயணம் செய்துள்ளதாகவும், இராட்சத அலைகளால் தாக்கப்பட்டு அது கவிழ்ந்திருக்கலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இநதப் படகில் பல்வேறு நாட்டவர்கள் பயணம் செய்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரையில் இருந்து 90 கி.மீ தொலைவில் மூழ்கிய இந்தப் படகில் 40 சிறுவர்கள் வரை பயணம் செய்ததாக, தப்பிப் பிழைத்த ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கூறியுள்ளார்.
அங்குமிங்குமாக சாய்ந்த கப்பல் உடைந்து நீரில் மூழ்கியதாகவும், அப்போது உடைந்து போன பாகங்களை பற்றிப் பிடித்தவாறு தத்தளித்துக் கொண்டிருந்த தம்மை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படகில் பயணம் செய்த 200 இற்கும் அதிகமானோர் மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சிறிலங்காவில் இருந்தும் அண்மையில் அகதிகள் அவுஸ்ரேலியா நோக்கி சென்றுள்ள நிலையில் இந்தப் படகில் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களும் பயணம் மேற்கொண்டனரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

ஒட்டுசுட்டான் ஆலய தீர்த்தக்கேணியில் குளித்த சிங்களவர் பலி!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் கேணியில் அத்துமீறி நீராடிய சிங்களவர் ஒருவர் இன்று அதிகாலை நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தென்னிலங்கையில் இருந்து வன்னிக்குச் செல்கின்ற சிங்களவர்கள் ஒட்டுசுட்டான் சிவன்கோவிலில் தங்கி கோவில் கேணியில் குளித்து கேணியினை அசிங்கப்படுத்திவந்திருக்கின்றனர். இது தொடர்பில் கோவில் நிர்வாகமும் ஊர் மக்களும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்ற போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. கோவில் வளாகத்தில் மாமிச உணவுகளை உட்கொள்வது, மதுபோதையில் நடமாடுவது போன்ற நடவடிக்கைகளை சிங்களவர்கள் தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு நேற்று இரவு அங்கு தங்கியிருந்த சிங்களவர்களில் ஒருவர் கோவில் கேணியில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றார். அவரது உடலம் முற்பகல் வரையில் மீட்கப்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சில உடைகளும், 30 ரூபா பணமும் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
ஆலய கேணியில் ஊர் மக்கள் எவரும் நீராடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் சிங்களவர்கள் அத்துமீறி குடியேறியுள்ளனர்.

முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் தொடர்ந்தும் தெற்கில் இருந்து வந்தவர்களால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப் பகுதியில் 240 இற்கும் மேற்பட்ட தெற்குக் குடும்பங்கள் குடியேறியுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் உள்ள காணிகள் அனைத்தும் பூர்வீகமாகத் தமிழர்கள் வாழ்ந்த காணிகள் என அந்த மக்கள் கூறுகின்றனர். அதற்கு அரசினால் வழங்கப்பட்ட சட்ட ஆவணங்களும் தம்மிடம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்களக் குடும்பங்களே தொழில் நிமித்தம் முகத்துவாரம் பகுதியில் தங்கியிருந்தன. எனினும் தற்போது நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த 240 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழர்களின் காணிகளை அபகரித்து அடாத்தாகக் குடியமர்ந்துள்ளன.
அத்துடன் முகத்துவாரம் கடற்பகுதியையும் அவர்கள் முழுமையாகத் தமது கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு நீர்கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலும் சொந்தமான வீடுகள், காணிகள் என்பன உள்ளன.
தமிழரின் நிலங்களைத் திட்டமிட்டு ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே இந்த மக்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளனர். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இது குறித்து உடனடிக் கவனம் செலுத்தி பிரச்சினைகள் ஏற்படுவதைச் சம்பந்தப்பட்டோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

இலங்கைக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு சர்வதேச பொலிஸ் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளதாம்.

இலங்கைக்கு எதிராக செயற்பட்ட 70 பேருக்கு சர்வதேச பொலிஸார் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளனர் என திவயினபத்தரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இவர்களில் 29 பேர் பாரிய பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பல கோடி ரூபா வெட் வரி மோசடியில் ஈடுபட்ட கயிப் குதுப்தீனின் பெயரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உப தலைவராக கடமையாற்றிய வேலுப்பிள்ளை ரேமன் என்பவருக்கு எதிராகவும் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள், இணைய தளமொன்றை நடத்திய நபர் ஒருவர் ஆகியோரது பெயர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முதல் தடவையாக பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் பெயரையும் இதில் உள்ளடக்கியுள்ளதாக திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

17 டிசம்பர் 2011

நாம் அஞ்சியது போன்று பக்கச்சார்பான அறிக்கையாகவே அமைந்துள்ளது.

சிறிலங்காவில் பிரச்சினைகள் இருப்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஒப்புக்கொண்டுள்ள போதும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மோசமான குற்றங்கள் குறித்த சான்றுகளையும் போர் தொடர்பான ஏனைய சட்டமீறல்களும் இந்த அறிக்கையில் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை கூறியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரீபி,
“நாங்கள் ஏற்கனவே அஞ்சியது போன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பானதாகவே அமைந்துள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்த மனிதஉரிமைகள் நிலைமையை முன்னேற்றுவது தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் கண்டறிவுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்“ என்றும் சாம் சரீபி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க(மகிந்த)ஆணைக்குழு அறிக்கையை கூட்டமைப்பு ஏற்கவில்லை.

நல்லிணக்கத்திற்கான (மகிந்த ஆணைக்குழு) படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “அடிப்படையில் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறி நிராகரித்துள்ளது. அறிக்கை குறித்த தமது நிலைப்பாட்டை விளக்கி ஒரு விரிவான அறிக்கையை கூட்டமைப்பு விடும் என்றும் அதன் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
குற்றம் எதுவும் புரியவில்லை என்று கூறி இராணுவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே அறிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுக்கான பரிந்துரைகள் அர்த்தமற்றவை, பொருளற்றவை, அது குறித்து விரிவாக ஆய்ந்தறியாமல் தெரிவிக்கப்பட்டவை என்று மேலும் அவர் கூறி உள்ளார்.

16 டிசம்பர் 2011

கேகாலையில் தமிழர்கள் மீது சிங்கள இனவெறியர்கள் வாளால் வெட்டி அட்டூழியம்!

கேகாலை, எட்டியாந்தோட்டையில் இந்து ஆலயத்துக்குள் அத்துமீறிப் புகுந்து சிங்கள இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெறியாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து குறித்த பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதன்போது, வாள்வெட்டுக்கு இலக்கான தமிழ் இளைஞர்கள் ஐவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் இருந்த சிங்கள இளைஞர்கள் எட்டியாந்தோட்டை, எதுராபொல தோட்டம் கீழ்ப் பிரிவில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்குள் நேற்றுமுன்தினம் மாலை நுழைவதற்கு முயற்சித்துள்ளனர்.
போதையில் ஆலயத்துக்குள் வரவேண்டாம் எனக்கூறி அங்கிருந்த தமிழ் இளைஞர்கள் அவர்களை ஆலயத்திற்குள் பிரவேசிக்கவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் தமிழ் இளைஞர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டது.
கடும் கோபத்துடன் திரும்பிச்சென்ற சிங்களவர்கள் தங்களது கோஷ்டியினர் சகிதம் மீண்டும் ஆலய வளாகத்துக்குள் வந்து, தமிழ் இளைஞர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்கான தமிழ் இளைஞர்கள் ஐவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தையடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதியால் வீட்டுக்குள்ளேயே உறைந்துப்போயுள்ளனர். தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு குறித்த பிரதேசத்தில் வாழும் மக்கள் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அசுரவேகத்தில் செயற்பட்ட மனோ, புளத்கொஹுபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திஸாநாயக்கவுடன் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். அவிசாவளை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு இந்தச் சம்பவத்தை அவர் கொண்டுசென்றுள்ளார்.
எதுராபொல கீழ் பிரிவு தோட்டத்துக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுமென பொலிஸார் மனோவிடம் உறுதியளித்துள்ளனர். அத்துடன், இச்சம்பவத்தை மனோ கணேசன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கடற்படையின் இரகசிய தடுப்பு முகாமில் காணாமல் போனோரில் பலர் உள்ளனர்?

திருகோணமலை கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்தில் இரகசியத் தடுப்பு முகாம்கள் இயங்கிவருகின்றன என்று தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது காணாமற்போனோரைத் தேடியறியும் குழு.கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் இந்த முகாம்களில் காணாமல்போனோர்களில் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மை என்னவென்பதை அரசு உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும் என்று காணாமற்போனோரைத் தேடியறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக “உதயனு”க்குக் கருத்து வெளியிட்ட, காணாமல்போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரன் கூறியவை வருமாறு:
திருகோணமலை கடற்படை முகாம் அமைந்துள்ள அடர்ந்தக் காட்டுப் பிரதேசத்தில் இரகசிய முகாம்கள் இயங்கிவருகின்றன என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. காணாமல்போனோரின் உறவினர்கள் தமது உறவுகள் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
காணாமல்போன தனது கணவரை திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள இரகசியத் தடுப்பு முகாமொன்றில் தான் சந்தித்துப் பேசினார் என பெண்ணொருவர் எம்மிடம் கூறியுள்ளார். பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு அவர் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
எது எப்படியிருப்பினும், இரகசிய முகாம்கள் குறித்து எமக்கு நம்பகரமான தகவல் கிடைத்துள்ளது. இரகசிய முகாம்கள் அங்கு இயங்குகின்றனவா என அது தொடர்பான உண்மைத்தன்மையை அரசு கட்டாயம் வெளியிடவேண்டும். காலத்தைக் கடத்தாது வெகுவிரைவில் இது தொடர்பாக தெளிவுப்படுத்துமாறு நாம் அரசைக் கோருகின்றோம் என்றார்.

15 டிசம்பர் 2011

யாரடா நீ?வெளியே போய் குப்பை கிடந்தால் பொறுக்கு"!

“யார் ஊழல் செய்தாலும் நான் அதை சுட்டிக் காட்டுவேன்” மேயரைப் பார்த்து உரையாற்றிய மங்கள நேசனால் சபை அல்லோல கல்லோசப்பட்டுள்ளது.
“நான் பேசும் போது யாரும் பேசக் கூடாது! யார் ஊழல் செய்தாலும் நான் அதை சுட்டிக் காட்டுவேன்” என ஆவேஷமாக யாழ் மாநகர சபை மேயரைப் பார்த்து காட்டமாக கடிந்து கொண்டார் ஈபிடிபி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மனுவல் மங்களநேசன்.
யாழ் மாநகர சபையின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்.மாநகர சபை முதல்வர் தலமையில் யாழ் மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ் மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசன் முதல்வரை தரக் குறைவாக பேசியதாகவும் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையே முரண்பாடும் மோதலும் வெடித்தது.
பிரதி மேயர் றீகன் மேயருடன் மரியாதையாக நடந்து கொள்ளவேண்டும் என்று மங்களநேசனிடம் கூறியதும் “நீ யாரடா? யார்? உனக்கு இங்கு என்ன வேலை வெளியில் குப்பை ஏதும் கிடந்தால் போய் பொறுக்கு” என்று கோவத்துடன் பேசினார் மனுவல் மங்கள நேசன்.
உங்களுக்கு பேசுவதற்கு உரிமையிருக்கிறது. ஆனால் மரியாதையாக பேச வேண்டும் என சபை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதும் அமைதியாகி தனது உரைமுடிந்ததும் உடனே சபையை விட்டு வெளியேறிச் சென்றார்.
இதேவேளை மங்களநேசன் சபையில் இருந்து வெளியேறியதுடன், தான் லெபனானில் ஆயுதப் பயிற்சி பெற்ற பலத்தை யாழ்.மாநகர சபையில் தான் அங்கம் வகித்த கட்சிக்கு எதிராகப் பயன்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
இருந்தும் மூன்று மொழி தெரிந்தவர் ஒரு மொழியிலேயே இவ்வாறு என்றால் மிகு இரண்டு மொழியும் பேசினால்...?
இதேவேளை தான் வகித்த கட்சிக்கு எதிராக இவ்வாறு துணிவுடன் சபையில் போராடிய மங்களநேசனைப் பார்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் திருந்திக் கொள்ள வேண்டும்.
இல்லாவிடில் மங்களநேசனிடம் போய் கற்றுக் கொள்ள வேண்டும்.
நன்றி:tamilcnn

அனைத்துலக ஆணைக்குழு என்ற சம்பந்தனின் கனவு பலிக்காதென்கிறார் பீரிஸ்.

போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக விசாரிக்க அனைத்துலக ஆணைக்குழுவைக் கொண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று கூறியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
"தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சம்பந்தன், ஐதேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல போன்றோர் எமது வெளிநாட்டுக் கொள்கை பற்றிப் பேசுகின்றனர். அது தவறானது, நிராகரிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். எமது வெளிநாட்டுக் கொள்கை எமது நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதாகவும், எமது மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவுமே இருக்க வேண்டும்.
இரா.சம்பந்தன் அறிவுபூர்வமாக பேசவில்லை. உணர்வுபூர்வமாகப் பேசுகிறார். பிரச்சினைகளுக்கு அறிவுபூர்வமாகப் பேச்சு நடத்தித் தான் தீர்வுகளைப் பெறமுடியும். கடந்த செப்ரெம்பரில் ஐ.நா மனிதஉரிமை பேரவை மாநாட்டில் சிறிலங்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஒரே ஒரு நாடு மட்டுமே எமக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்தது. அப்போது நான் சிறிலங்கா அதிபருடன் நியுயோர்க்கில் இருந்தேன். அங்கிருந்து கொண்டே சுமார் 15 நாடுகளின் அமைச்சர்களுடன் எம்மால் கலந்துரையாட முடிந்தது. இதனால் எமக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரே தமது அறிக்கையை விலக்கிக் கொண்டார்.
பின்னர் ஒக்டோபரில் கொமன்வெல்த் மாநாட்டின் போது அவுஸ்ரேலிய ஊடகங்கள் சிறிலங்காவை விமர்சித்து பரப்புரைகளை மேற்கொண்டன. 2013 கொமன்வெல்த் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு சிறிலங்காவுக்கு கிடைக்காது என்று சிறிலங்காவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் ஊடகங்கள் வெளியிட்டன.
இதன்போதும் நாம் பல நாடுகளுடன் நடத்திய பேச்சுக்களுக்கு வெற்றி கிடைத்தது. பெரும்பாலான நாடுகளின் ஆதரவு, எமக்குக் கிடைத்த போதும் ஒரே ஒரு நாடு எமக்கெதிராக செயற்பட்டது. இதன்போதும் மேலும் 15 நாடுகள் எமது நியாயத்தை, ஏற்றுக் கொண்டு ஆதரவளிக்க முன்வந்தன. முடிவில் 2013ம் ஆண்டு கொமன்வெல்த் மாநாடு எமது நாட்டுக்கு வழங்கப்பட்டது. இது எமக்கு கிடைத்த பெரியவெற்றி.
எமது வெளிநாட்டுக் கொள்கை தவறானதோ அல்லது நிராகரிக்கப்பட்டதோ அல்ல என்பதை எடுத்துக் காட்ட இவற்றை சிறந்த ஆதாரமாகக் காட்டலாம். விமர்சனங்கள் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு, இறைமை போன்ற விடயங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
போர்க்கால சம்பவங்களை ஆராய உள்ளக விசாரணைகளை நிராகரித்து விட்டு அனைத்துலக விசாரணைகளைக் கோருகிறார் இரா.சம்பந்தன். இதனை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது. லூயிஸ் ஆபர் அம்மையாரின் கருத்துக்களை அவர் ஆதரிக்கிறார். இது எமது நாட்டுக்கள் எந்த சர்வதேச அமைப்பும் பிரவேசிக்கலாம் என்பதையே கொண்டுள்ளது.
சர்வதேச தலையீட்டை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. அதற்கு இடமளிக்கவும் போவதில்லை. போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக விசாரிக்க அனைத்துலக ஆணைக்குழுவைக் சிறிலங்காவுக்குள் கொண்டு வரும் கூட்டமைப்பின் கனவு ஒருபோதும் பலிக்காது.
தருஸ்மன் அறிக்கையானது (ஐ.நா நிபுணர்குழு) யாரிடம் சாட்சிகளைப் பெற்று தயாரிக்கப்பட்டது என்பது எவருக்குமே தெரியாது. இந்தநிலையில் அது எப்படி உண்மைத்தன்மையானதாக இருக்க இருக்க முடியும்? அது அரசியல் இலாபங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று.
அனைத்துலக காவல்துறையிடம் எமது பிரச்சினைகளை ஒப்படைக்க நாம் தயாரில்லை. சில கொள்கைகள் எமது நாட்டுக்குப் பொருத்தமானதல்ல என்பதை ரணில் விக்கிரமசிங்கவும் உணர வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

எனக்கு தேசிய விருது கொடுத்திருந்தால் முகத்தில் வீசி எறிந்திருப்பேன்!

சென்னையில் ‘கொள்ளைக்காரன்’ பட விழாவில் இயக்குநர்கள் செல்வமணி, தங்கர்பச்சான், அமீர், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் தங்கர்பச்சான், ’’தமிழன் எப்படி வஞ்சிக்கப்படுகிறானோ? அதே மாதிரி தமிழ் சினிமாவும் புறக் கணிக்கப்படுகிறது. தேசிய விருதை நாம் கவுரவமாக நினைத்துக்கொள்ளக்கூடாது. மத்திய அரசு நமக்கு கொடுத்திருக்கும் தேசிய விருதுகளை நாம் தூக்கி வீசுவோம்.
எனக்கு அப்படி ஒரு விருது கொடுத்திருந்தால், முகத்தில் வீசி எறிந்திருப்பேன். என்றைக்கு காவேரி பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ? என்றைக்கு முல்லைப்பெரியாறு பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ? என்றைக்கு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படுகிறதோ? அன்றைக்கு வாங்கிக்கொள்வோம் தேசிய விருதுகளை’’ என்று ஆவேசமாக பேசினார்.
அவர் மேலும், ‘’டெல்லியில்தான் நம்மை மதிக்கமாட்டேங்கிறார்கள். நம்மை நாமே ஒதுக்கி வைப்பதுதான் வேதனை.
சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அனைவராலும் பாராட்டப்பெற்ற தென்மேற்கு பருவக்காற்று, செங்கடல் படங்கள் தேர்வாகவில்லை’’ என்று பேசினார்.

14 டிசம்பர் 2011

நந்திக்கடலில் நடந்ததென்ன என விசாரித்த சீன படையதிகாரி.

போரின் இறுதிக்கட்டத்தில் நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த தரை நடவடிக்கைகள் பற்றிய குறிப்பிடத்தக்க சில விபரங்களை சீனாவின் உயர்மட்ட படைஅதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தரப்பை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள சீன இராணுவத்தின் அதிகாரிகளுக்கான பிரதி தலைலர் ஜெனரல் மா சியாவோரியன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவைச் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின் போதே, போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க சிறிலங்கா இராணுவத்தினால் தரை நடவடிக்கையின் போது கையாளப்பட்ட வழிமுறைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பாக சீனப் படை அதிகாரிகள் குழு விசாரித்து அறிந்து கொண்டுள்ளது.
சிறிலங்கா இராணுவம் போர் வெற்றி கொள்ளப்பட்ட முறைமை தொடர்பாக பலமுறை விளக்கமளித்திருந்த போதும், சில குறிப்பிட்ட விடயங்கள் குறித்து சீன அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் விசாரித்துள்ளதில் இருந்து, அவை வெளிவராத இரகசியத் தகவல்களாகவே இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதேவேளை சிறிலங்கா இராணுவத்துக்கான பயிற்சிகள் மற்றும் உதவிகளை அதிகரிப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனிடையே சீன ஜெனரல் மா சியாவோரியன் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவையும் சீனப் படையதிகாரிகள் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
இவர்கள் கூட்டுப்படைகளின் தளபதி எயர் மார்சல் றொசான் குணதிலக உள்ளிட்ட பாதுகாப்புத் துறைசார்ந்த பலரையும் சந்திக்கவுள்ளனர்.
அத்துடன் சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு நிலைகளுக்கும் இவர்கள் பயணம் செய்யவுள்ளனர்.
இந்தக் குழுவில் சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிவிவகாரப் பணியகத்தின் பிரதித் தலைவர் றியர் அட்மிரல் குவான் யூபி, ஜெனரல் மா சியாவோ ரியனின் செயலர் மூத்த கேணல் குவோ ஹொங்வெய், பாதுகாப்பு அமைச்சின் ஆசிய விவகாரப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் மூத்த கேணல் சொங் யன்சாவோ, கேணல் சா ஓ மெங், கேணல் லியூ பின், கப்டன் ஜியாங் பின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.