31 ஜூலை 2012

தங்களைத் தாங்களே ஆளும் தீர்வே தமிழருக்குத் தேவை; சம்பந்தன்.

இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு நடத்தும் பேச்சு நேர்மையானதாக இருக்க வேண்டும் எனவும் அது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நேற்றுமுன்தினம் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. திரியாயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவிததார்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு
அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பேச்சை அரசுடன் மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், பேச்சு நேர்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதான பேச்சாக இருக்கக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விழிப்புடன் இருக்கின்றது.
அண்மையில் கொழும்பில் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்து நடத்திய கலந்துரையாடல்களின் போதும் இது பற்றி நாம் தெளிவாகக் கூறியிருந்தோம்.
அரசுடன் இதுவரை நடத்திய பேச்சுகளின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான தனது அடிப்படை நிலைப்பாட்டைத் தெளிவாக எழுத்து மூலம் முன்வைத்தது. அரசு தனது பதிலைத் தருவதாகத் தெரிவித்தது. இன்னும் அதற்கான பதிலைத் தரவில்லை. அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்கமுடியாத நிலையில் உள்ளது.
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக்கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்ககூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை இன்று நாட்டின் எல்லைகளை தாண்டி சர்வதேசத்தின் கூர்மையான பார்வைக்கு சென்றுள்ளது என்றார்.
திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நடைபெற்ற இக்கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

30 ஜூலை 2012

ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு சாகடிக்கப் பட்டுள்ளது - அதனால் நீதிமன்ற உத்தரவின் பிரதியை கிழித்தேன்.

ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. ஜனநாயகம் சாகடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தே நீதிமன்ற உத்தரவின் பிரதியை தான் கிழித்தெறிந்ததாக முன்னாள் நாடாளுமன்ற அங்கத்தவரும் ரெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று வழங்கிய வாக்குமூலத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து யாழ். நீதிமன்றம் உத்தரவொன்றை அப்போது பிறப்பித்திருந்தது.
எனினும் அதனை வன்மையாக கண்டித்த கே.சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டத்தில் வைத்தே நீதிமன்ற உத்தரவின் பிரதியை கிழித்தெறிந்திருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டிருந்தது.
இச்செயல் நீதிமன்றை அவமதிப்பதாக குற்றஞ்சாட்டி அவரிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றை யாழ்.பொலிஸார் தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்காள்ளப்பட்ட வேளையில் இன்று நீதிமன்றில் நேரில் ஆஜராகியிருந்த கே.சிவாஜிலிங்கம் தொடரும் சட்டத்தரணிகளது பணி புறக்கணிப்பை காரணம் காட்டி மூத்த வழக்கறிஞரான சிறிகாந்தா தமது சார்பில் இன்று நீதிமன்றில் ஆஜராக இருந்த போதும் இன்று அவர் வருகை தர முடியாதிருப்பதால் தவணை கோரியிருந்தார்.
இதையடுத்து விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட 20ம் திகதிக்கு நீதிபதி மா.கணேசராஜா ஒத்திவைத்திருந்தார்.
அவ்வேளையில் அங்கு ஆஜராகியிருந்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவாஜிலிங்கத்திடமிருந்து வாக்கு மூலமொன்றை பதிவு செய்ய அனுமதி கோரியிருந்தார்.
அதையடுத்து அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்ய நீதிபதி பணிப்பினை பிறப்பித்திருந்தார்.
யாழ்.பொலிஸ் நிலயத்திற்கு நேரில் சமூகமளித்திருந்த கே.சிவாஜிலிங்கம் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் சாகடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தே நீதிமன்ற உத்தரவின் பிரதியை தான் கிழித்தெறிந்ததை ஒத்துக்கொண்டு வாக்கு மூலமளித்திருந்ததாக செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்திருந்தார்.

கொழும்பு மாநகரசபை செங்கோல் எதிர்க்கட்சியினர் வசம்!

கொழும்பு மாநகர சபையின் செங்கோலை எதிர்கட்சி உறுப்பினர்கள் கைப்பற்றிய நிலையில் மாநகரச சபையில் பதற்றநிலை ஏற்பட்டது. இதனால் சபையின் இன்றைய அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினருடன் சமத்துவமான இணக்கப்பாடொன்றுக்கு மேயர் வரும்வரை செங்கோலை கொண்டுசெல்ல எதிர்க்கட்சியினர் மாட்டார்கள் என சபையின் ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர் றிஸா ஸரூக் டெய்லி மிரரிடம் கூறினார்.
"160 மில்லியன் ரூபா பெறுமதியான பவுஸர்களை வழங்கியமைக்காக பாதுகாப்பு செயலாளருக்கு நன்றி தெரிவிப்பதற்கு நாம் முன்வைத்த யோசனையை ஏற்றுககொள்ள மறுத்துள்ளார். சபை அமர்வில் இவ்விடயத்தை நாம் முன்வைத்தபோது மேயர் சர்வாதிகாரமாக எமது கோரிக்கையை நிராகரித்தார். எனவே எமக்கு வேறு வழியிருக்கவில்லை. செங்கோலை சபைக்கு வெளியே சபை உறுப்பினர் அநுர சுஜீவ எடுத்துச் சென்றார்" என றிஸா ஸரூக் தெரிவித்தார்.

கருணாநிதி உலகத்தமிழரிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.

பழ.நெடுமாறன் ஐயா
உலகத் தமிழர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட பின்புதான் டெசோ மாநாட்டை நடத்த வேண்டும் என்று, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசினார்.
ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை வெளியிட்டு அவர் பேசியது:
இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு இலங்கை அரசும், மத்திய அரசும், மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்த திமுகவும்தான் பொறுப்பேற்க வேண்டும். இவற்றையெல்லாம் மறைப்பதற்காக டெசோ மாநாட்டை திமுக தலைவர் கருணாநிதி நடத்துகிறார். முள்ளிவாய்க்கால் சம்பவத்தில் ஒரேநாளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இக்கட்டான நிலையில் ஈழத் தமிழர்களுக்கு உதவாத கருணாநிதி இப்போது டெசோ மாநாடு நடத்துவது ஏன்?
உலகத் தமிழர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுவிட்டு டெசோ மாநாட்டை கருணாநிதி நடத்த வேண்டும். இம் மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து தமிழர் தலைவர்கள் வருவதாக தகவல்களை கருணாநிதி வெளியிட்டு வருகிறார்.முள்ளிவாய்க்கால் சம்பவத்தின்போது கருணாநிதி நாடகம் நடத்தியபோது இவர்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை. விரைவில் தமிழீழ நாடு உருவாகும் என்றார்.
நிகழ்ச்சியில் கவிஞர் காசியானந்தன், தமிழர் உரிமை முன்னணி ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச்செயலாளர் கா.பரந்தாமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

29 ஜூலை 2012

தேசியத்தலைவரின் படத்திற்கு தடையென்றால் ராஜீவ்,சோனியா படங்களையும் அகற்றுவோம்!

ஈழத்தில் தங்கள் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடைய படத்தை விற்பதற்கு காவல்துறை தடைசெய்கிறது என்றால், காவல்துறை மக்களை காக்கும் துறையா அல்லது ஆட்சியாளர்களின் ஏவல் துறையா என்று சீமான் தெரிவித்தார்.ஆதம்பாக்கத்தில் நேற்று இரவு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் தெரிவித்ததாவது:
ஈழத்தில் தங்கள் மண்ணின் விடுதலைக்காகவும், அரசியல் சம உரிமைக்காகவும் போராடியவர்கள் விடுதலைப் புலிகள்.
தங்கள் மக்களின் துயரைத் நிரந்தரமாகத் துடைக்க, தம்மையே அழித்துக்கொண்டு போராடிய தியாகிகள் விடுதலைப் புலிகள்.
அவர்கள் எம்மக்களுக்காக அழுதவர்கள் அல்ல, அவர்களின் அழுகையை நிறுத்துவதற்காக செத்தவர்கள்.
அப்படிப்பட்ட உன்னதமான ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் தலைவர் எனது அண்ணன் பிரபாகரன்.
அவருடைய படத்தை விற்பதற்கு காவல்துறை தடை செய்கிறது என்றால், காவல்துறை மக்களை காக்கும் துறையா அல்லது ஆட்சியாளர்களின் ஏவல் துறையா என்று கேட்கிறேன்.
அவருடைய படத்தை விற்பதற்கு காவல்துறை தடை செய்வது நீடித்தால் ராஜீவ் காந்தி, சோனியா படங்களை அகற்றுவோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டித்துள்ளது இந்திய மத்திய அரசு.
எத்தனை தடைகள் போட்டாலும் தமிழீழ விடுதலையை நாங்கள் தொடர்ந்து பேசுவோம், அதற்காக எமது மக்களின் ஆதரவை முழுமையாகத் திரட்டுவோம்.
இப்படிப்பட்ட தடைகளால் ஈழத் தமிழினத்தின் விடுதலை போராட்டத்தை முடக்கிடவும் முடியாது, அதற்கான ஆதரவு சக்திகளாக உள்ள எங்களை அடக்கிடவும் முடியாது.
நாங்கள் ஜனநாயக வழியில் அரசியலை முன்னெடுக்கின்றோம், எங்களைச் சீண்டாதீர்கள், இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை உருவாக்காதீர்கள்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொடுத்த உதவியால் எங்களின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டது. எமது மக்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேர் கொல்லப்பட்டார்கள். ஈழத் தமிழினம் இனப் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டது.
இப்போதுகூட கூறுகிறோம். உலக நாடுகள் இலங்கைக்கு உதவுவதை நிறுத்தட்டும், நாங்களும், சிங்கள அரசும், அதன் படைகளும் நேருக்கு நேர் மோத விடுங்கள், பிறகு முடிவைப் பாருங்கள். தமிழர்களுக்கென்று ஒரு நாடு நிச்சயம் பிறக்கும்.
இன்றைக்கு மாணவர்களாக இருப்பவர்கள், இளைஞர்கள் அனைவரும் அரசியலிற்கு வர வேண்டும். ஒரு இலட்சிய வெறியோடு எங்கள் அரசியலை முன்னெடுக்கிறோம், ஆயுதம் தாங்கி அல்ல, ஜனநாயகப் பாதையில், மக்கள் சக்தியைத் திரட்டி அத்ன மூலம் மாற்றத்தை ஏற்படுத்த போராடிக்கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு சீமான் பேசினார்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது.

நல்லிணக்க ஆணைக்குழு
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதனை சர்வதேசத்துக்கு உணர்த்தும் வகையில், கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
அந்த அறிக்கையை நடை முறைப்படுத்துவதற்கான திட்டம் சர்வதேசத்தை ஏமாற்றும், நேரத்தை வாங்கும் முயற்சியே. தமிழர்களின் இருப்பை இல்லாது ஒழிக்கும் அரசின் திட்டத்தை சர்வதேசத்துக்கு உணர்த்த கிழக்குத் தேர்தலை கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு வடக்கு கிழக்கைச் சேர்ந்த மருத்துவர்கள் 21, பேராசிரியர்கள் 6, விரிவுரையாளர்கள் 10, பொது அமைப்புகளில் அங்கம் வகிப்பவர்கள் 23, கல்வித்துறை சார்ந்தோர் 2, கிறிஸ்தவ மதகுருக்கள் 9, சட்டத்தரணிகள் 10, வங்கியாளர் 1, ஓய்வுநிலை அரச ஊழியர் 7, பல்கலைக்கழக மாணவர்கள் 8 மற்றும் ஆயர் ஒருவர் அடங்கிய 98 பேரைக் கொண்ட சிவில் சமூகம் விடுத்த அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேர் கிழக்கைச் சேர்ந்தவர்கள்.
அறிக்கையின் விவரம் வருமாறு:
தமிழர்கள், ஒற்றையாட்சி அரசியலமைப்பையும் அதன் கீழான மாகாண சபை முறைமையையும் தமது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் தன்மையற்றது என தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். எமது தாயகத்தில் கடந்த காலத்தில் இரண்டு முறை (1989, 2008) நடந்த மாகாண சபைத் தேர்தல்களை தமிழ்த்தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் புறக்கணித்திருந்தன. அரச சார்புத் தமிழ்க் கட்சியொன்றினால் சுயாதீனமாக நடத்த முடியாத மாகாண சபையை தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சியொன்று சுயாதீனமாக நடத்த முடியாது என்பதில் சந்தேகமிருக்க முடியாது.
ஆளுநரதும் மத்திய அரசினதும் பிடியில் உள்ள மாகாண சபை முறைமையைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்பதை 1989 மற்றும் 2008 இல் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தம் வசம் வைத்திருந்த அப்போதைய முதலமைச்சர்கள் தெளிவாக அவ்வப்போது சொல்லியுள்ளனர்.
தேர்தல்களில் பங்குபற்றுவது என்பது ஓர் அரசியல் இலக்கை எய்துவதற்கான கருவியாக இருக்குமிடத்து அவற்றில் பங்கு பற்றுவது சரியாக இருக்கும். மாறாக அவ்வாறாகப் பங்கெடுப்பதானது எடுத்துக் கொண்ட அரசியல் இலக்குகளுக்கு பாதகமாக இருக்குமிடத்து மாற்றுபாயங்களைப் பற்றிச் சிந்திப்பதும் எம்மீது திணிக்கப்படும் ஓர் தேர்தலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் முன்யோசனையுடனும் தூர நோக்குடனும் செயற்படுவதும் இற்றைக் காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலின் முன்னகர்வுக்கு அத்தியாவசியமானது.
தமக்கெதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களுக்கெதிராகத் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு மக்கள் தேர்தல்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அங்கலாய்க்கின்றமை இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இன்றியமையாததாகும்.
இந்த அடிப்படையில் சில முன்மொழிவுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்வைக்கிறோம்.
*தற்போதைய ஒற்றையாட்சி அரசமைப்பும் அதன் கீழான மாகாண சபை முறைமையும் நிராகரிக்கப்பட வேண்டும். 13 ஆவது திருத்தமானது அரசியல் தீர்வுக் கான ஆரம்பப் புள்ளியாகக் கூட ஏற்கப்பட முடியாதது.
*வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகமாகும். எந்தவொரு அரசி யல் தீர்வும் இணைந்த வடக்கு கிழக்கை ஓர் அலகாக அங்கீகரிப்பதாக அமைய வேண்டும். இந்த விடயம் தொடர்பில் குறிப்பாக முஸ்லிம் மக்களது நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வது முக்கியமான தாகும். தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து வேலை செய்தல். இவ் விரு சமூகத்தினதும் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்கு இன்றியமையாததாகும்.
*நீடித்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வொன்று தமிழர்களது தேசம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை அங்கீகரிப்பதனூடாகவே வரும். இவற்றை அங்கீகரிக்காத எந்தவொரு அரசியல் செயன்முறையும் பிரயோசனமற்றது.
*ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழருக்கெதிரான அநியாயங்களும் அடக்கு முறைகளும் பெருகியுள்ளனவே அன்றி குறையவில்லை.
தமிழரது நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுதல், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ச்சியாகத் தடுப்பில் வைக்கப்பட்டிருத்தல், காணாமற்போனோர் தொடர்பில் தொடர்ச்சியாக எந்தவித முன்னேற்றமும் இல்லாதிருத்தல், தமிழ்த் தேசியத்தின் பொருளாதார, கலாசார அடிப்படைகள் சீரழிக்கப்படுதல், அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடுகள் அதிகரித்தல், கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி ஆகிய அனைத்துத் துறைகளினது தனித்துவங்களை சீரழிக்கும் வகையில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகரித்தல், உயர் பாதுகாப்பு வலயங்கள் நிரந்தரமாக்கப்படல் (சம்பூர் உயர் பாதுகாப்புவலயம் உட்பட), இடம்பெயர்ந்த மக்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் தொடர்ச்சியாக முகாம் வாழ்வில் இன்றும் அல்லற்படல், மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்கள் புறக்கணிக்கப்படல் போன்றன தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அனுபவிக்கும் இன்னல்களுக்கு உதாரணங்கள்.
மேலும் தமிழருக்கெதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழரது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதைச் சர்வதேச சமூகம் உணர வேண்டும். அந்த அறிக்கையும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமும் சர்வதேசத்தை ஏமாற்றும், நேரத்தை வாங்கும் முயற்சியே. மேலும் அவ்வாறாகக் கிடைக்கும் நேர இடைவெளிக்குள் தமிழர்களது இருப்பை முற்றாக இல்லாதொழிப்பதற்கு அரசு திட்டமிடுகின்றது என்பதைச் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேற்படி விடயங்களை வலியுறுத்தி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்தக் தேர்தல்களில் பங்குபற்றுவதனூடாகத் தமிழர்கள் பிரிந்த வடக்குக் கிழக்கை அங்கீகரித்துவிட்டனர், மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டு விட்டனர் என்ற வாதத்தின் செறிவை ஓரளவேனும் குறைக்கலாம் என எண்ணுகின்றோம். மாகாண சபை முறைமையையும் பிரிந்த வடக்குக் கிழக்கையும் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்துதல் இன்றியமையாததாகும்.

28 ஜூலை 2012

சிங்களத்தின் தமிழ்க்கொலை!

சிங்களம் தமிழ் நிலத்தை ஆக்கிரமித்திருப்பதுமடடுமல்ல அங்கு தமிழ் மொழியை திட்டமிட்டு கொலையும் செய்கிறார்கள்..இது இனச்சுத்திகரிப்பின் நுண்வடிவம் .. நந்திக்கடலை எப்படி எழுதி இருக்கிறார்கள்.
தாயகத்தில் இருந்து சிங்களத்தை நம்பி பிழைக்கும் மேதாவிகள் சிலருக்கு ஒரு வேண்டுகோள் ..புலிதான் உங்களுக்கு பிரச்சினை தமிழ் மொழி கூடவா உங்களுக்கு ஆகாமல் போய்விட்டது.. சிங்களவனுடன் கதைத்து இந்த பலகைகளையாவது மாத்துங்கோவன்..

நன்றி: பரணி கிருஷ்ணரஜனி

மகிந்தவுக்கு லண்டனில் பாதுகாப்பில்லாததால் விஜயத்தை இரத்து செய்தார்!

லண்டனில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க பிரித்தானியப் பொலிஸார் மறுத்ததை அடுத்து, அவரின் லண்டன் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிய வருகின்றது.
இந் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க முடியாது என பிரித்தானியாவின் ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதனை பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகமும் அரசாங்கத்துக்கு அறிவித்திருந்தது.
இதனையடுத்தே ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் தமது முடிவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாற்றிக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க பிரித்தானிய ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் மறுப்புத் தெரிவித்தமை, இலங்கை அரசாங்த்தின் ஒரு இராஜதந்திரத் தோல்வியாகவே கருதப்படுகின்றது.
லண்டனில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக 'தி இன்டிபென்டன்ட்' பத்திரிகை நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரைவில் இலண்டனுக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர உறுதிப்படுத்தி இருந்ததாக 'தி இன்டிபென்டன்ட்' பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானிய மகாராணியின் வைரவிழா நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்திருந்த போதும், அதற்கு முன்னதாக 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வந்திருந்த போதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் அவர் உரையாற்றவிருந்த நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

றிசாட் விவகாரம் சூடு பிடிக்கிறது! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒன்றுகூடுகிறது!

risadஅமைச்சர் றிசாத் பதியூதீன் விவகாரத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பகிரங்கமாக இன்று ஒன்று கூடி முடிவெடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது. முன்னதாக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் சிலரும் காலியைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் அமைச்சர் றிசாத் பதியூதீனிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.எனினும் இன்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒன்று கூடி சங்கத்தின் சார்பில் வழக்குகளை நேரடியாக தாக்கல் செய்வது தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே நேற்றும்; மதிய வேளைத் தொழுகையின் பின்னர் கண்டன போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை றிசாத்தின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்திலும் நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மொகைதீன் பள்ளி வாசலில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் முழு அளவினில் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் திடீரென வீதி வழியாக ஊர்வலமாக பயணித்தனர்.
அதே வேளை கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட றிசாத்தின் ஆதரவாளர்களது கண்டன பேரணிக்கென மன்னாரிலிருந்து 13 பேருந்துகளினில் ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

27 ஜூலை 2012

போர்க்குற்றவாளியுடன் கைகுலுக்கிய மெல்பேர்ண் (அ)சிங்கத் தமிழர்கள்(படங்கள்)

தமிழின இன அழிப்பின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான முன்னாள் போர்க்குற்றவாளியும் இந்நாள் ஒஸ்ரேலியாவுக்கான சிறிலங்காத் தூதுவருமான திஸ்ஸர சமரசிங்கை மெல்பேர்ண்ணைச் சேர்ந்த (அ)சிங்கத் தமிழர்கள் சிலர் சந்தித்துள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் சட்டத்தரணியுமான குகன், சுந்தரமூர்த்தி, பன்னெடுங்காலமாக சிங்கள அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்பட்டுவரும் மிருக வைத்தியர் நடேசன் மற்றும் சிவநாதன் ஆகியோரே முன்னாள் கடற்படைத் தளபதியான தமிழினக் கொலையாளியை சந்தித்தவர்களாவர்.
போர்க் குற்றவாளிகளைக் கூண்டிலேற்றித் தண்டனை பெற்றுக்கொடுக்க புலம்பெயர் தமிழ் சொந்தங்கள் அல்லும் பகலும் உழைத்துக்கொண்டிருக்க போர்க்குற்றவாளியுடன் கைகுலுக்கும் இவர்களைப் போன்றவர்களும் நம்மவர்கள் மத்தியில் உலாவுகிறார்கள். ”பெற்றதாயை விற்றுப் பணம் காசு வாங்குவதற்கு” இணையான செயலைச் செய்யும் இவர்களைப் போன்ற விச ஜந்துக்களை இனங்கண்டு இவர்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்குங்கள் உறவுகளே.
தன் சொந்தங்களை கொன்றவனுடன் கைகுலுக்கி விருந்துண்ட ”கோடரிக்காம்புகளின்” படங்கள்

இலங்கையில் எனக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது!

2000 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, தம்மை கொலை செய்ய முயற்சித்ததாக எரிக் சொல்கெய்ம் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குச் சக்திகள் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
2000 ஆம் ஆண்டு மே மாம் 22 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் தாம் உள்ளிட்ட நோர்வே பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது குண்டுத் தாக்குதல் நடத்தி தம்மை படுகொலை செய்ய சில தரப்பினர் முயற்சி செய்ததாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அப்டீன் போஸ்டின் என்னும் நோர்வேயிலிருந்து வெளியாகும் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
படுகொலை முயற்சி தொடர்பான தகவல்களை அப்போதைய பாதுகாப்புதரப்பினருக்கு தாம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடும்போக்குடைய சிங்கள மக்கள் பற்றி தெரிந்திருந்த, நோர்வேயில் வாழும் மக்களும் கொலை முயற்சி குறித்த தகவல்களை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே பிரஜைகள் என்ற ரீதியில் உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய ஒரே இடமாக இலங்கை காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மெய்ப்பாதுகாவலர்கள் இன்றி தாம் இலங்கையின் எந்தவொரு பகுதிக்கும் விஜயம் செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விஜயத்தை முடித்துக் கொண்டு சொல்ஹெய்ம் நாடு திரும்பிய அதே தினத்தில் இலங்கைக்கான நோர்வேத் தூதரகம் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

26 ஜூலை 2012

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தயான் அந்தனி இரகசிய பொலிஸாரால் கைது

அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தயான் அந்தனி (வயது 30), இன்று வியாழக்கிழமை அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் இரகசிய பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருடன் இலங்கையை வந்தடைந்த தயான் அந்தனி, விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னரே இரகசிய பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இவர் 2010 ஆம் ஆண்டு விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்தமைக்காக இவருக்கு எதிராக 2011 பெப்ரவரி மாதம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவே ஆட்கடத்தல் என்கிறது திவயின!

திவயின
இலங்கையில் வாழக் கூடிய பொருத்தமான சூழ்நிலை இல்லை என சர்வதேச சமூகத்திற்கு காணப்பிப்பதற்காக, புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை சட்டவிரோதமான வழிகளில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் ஒருங்கமைக்கப்பட்ட திட்டம் குறித்த தகவல்கள் புலனாய்வுப் பிரிவுகளுக்கு கிடைத்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் பின்னணியில், இம்முறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் சுரேஷ் குமார் என்பவர் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவர் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி, சென்றுக்கொண்டிருந்த புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப்புலி உறுப்பினர்கள் ஏற்றிய ஆழ்கடல் மீன்பிடி படகொன்று திருகோணமலை உப்புவெளி கடற்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த படகில் பயணித்தவர்கள் தமது பயண பொதிகள் உள்ளிட்ட பொருட்களை கைவிட்டு, வேறு படகுகளில் தப்பிச் சென்றுள்ளனர். இந்த படகு குறித்து உப்புவெளி காவற்துறை பொறுப்பதிகாரி பிரகதி லக்மினவுக்கு கடைத்த தகவல் ஒன்றை அடுத்து, கடற்படையினரின் உதவியுடன் அந்த படகு கைப்பற்றப்பட்டது.
படகில் இருந்த பயண பொதிகளை சோதனையிட்ட போது, படகில் பயணம் செய்தவர்கள் புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வழங்கப்பட்ட சான்றிதழ்கள் உள்ளிட்ட பல ஆவணங்கள் பயண பொதிகளில் இருந்துள்ளன. அத்துடன் ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களும் படகில் இருந்துள்ளன.
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப்புலி உறுப்பினர்களை சிறிய படகுகள் மூலம் ஆழ்கடல் மீன்பிடி படகுக்கு அழைத்துச் சென்ற பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணைகளின்படி இலங்கைக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் இந்த திட்டம் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு இலங்கை அரசாங்கம் தொழில் வாய்ப்புகளையோ, வசிப்பதற்கு வீடுகளையோ வழங்காது, அவர்களை கடும் சிரமங்களுக்கு உட்படுத்தியுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு வெளிகாட்ட இவர்கள் முயற்சித்துள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்கள் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு வரும், நிலையில், இலங்கைக்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் திட்டமிட்ட சிலர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

25 ஜூலை 2012

தமிழ் பெண்கள் மீது பாலியல் பலாத்காரம் புரியும் முஸ்லீம்கள்!

காக்கை வன்னியன் கருணாவும் மகிந்தவின் மகனும் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என்றும், தமிழ் பெண்களை முஸ்லீம்கள் திட்டமிட்ட முறையில் பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படும் துண்டு பிரசுரங்கள் படுவான்கரையின் பல கிராமங்களில் விநியோகிக்கப்படுகிறது.
தமிழ் சமூகத்தை சீரழிக்கும் வகையில் முஸ்லீம்கள் தமது பணத்தை காட்டி தமிழ் பெண்களை சீரழித்து வருகின்றனர் என்றும் அந்த துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனைக்கு செல்லும் தமிழ் பெண்களுக்கு சில முஸ்லீம் வியாபாரிகள் இலவசமாக பொருட்களை கொடுத்து விட்டு அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் புரிகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரசுரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழரை அவுஸ்திரேலியா நாடு கடத்தியது!

அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரை அவுஸ்திரேலியா நேற்று நாடுகடத்தியுள்ளது.
30 வயதான தயான் அந்தனி எனும் இந்நபர், மெல்பேர்னின் தென்கிழக்கிலுள்ள டான்டேநோங்கில் தனது சகோதரியுடன் வசித்துவந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை, மெல்பேர்னிலுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்திற்கு அவர் அழைக்கப்பட்டு, அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றபடுவதற்கான அதிகாரிகளின் தீர்மானம் குறித்த கடிதம் கையளிக்கப்பட்டது.
மெல்பேர்ன் மெரிபிர்னோங் தடுப்பு முகாமில் வைக்கப்பட்ட அவர், மெல்பேர்னுக்கு அருகிலுள்ள டுல்லாமரைன் விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படுவதற்காக பேங்கொக் செல்லும் விமானமொன்றில் அவுஸ்திரேலிய நேரப்படி நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.35 மணியளவில் ஏற்றப்பட்டதாக 'தி அவுஸ்திரேலியன்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
இவர் 2010 ஆம் ஆண்டு விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றதாகவும், தமிழீழ விடுதலைப புலிகளுடன் தொடர்புபட்டிருந்தமைக்காக, ம் இவருக்கு எதிராக 2011 பெப்ரவரி மாதம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடு கடத்தப்படுவதற்கு எதிராக, சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. விசேட அறிக்கையாளரிடம் மேன்முiறீயீடு செய்யப்பட்ட நிலையில் இவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலிய நீதிமன்றமொன்றிடம் இந்த நாடு கடத்தலுக்கு எதிரான உத்தரவைப் பெறுவதற்கு அகதிகள் விவகார வழக்குரைஞர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் தீவிரமடைந்ததையடுத்து 2008 ஆம் ஆண்டு முதல் அகதிகள் வருகை தீவிரமடைந்ததபின், அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் முதலாவது இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் இவர் என நம்பப்படுவதாக 'சிட்னி மோர்னிங் ஹெரால்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதற்கு முன் திருப்பி அனுப்பப்பட்ட ஏனைய இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், படகுகளை வழிமறிக்குமாறு அவுஸ்திரேலியா கோரியபின் இந்தோனேஷியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் அல்லது சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.
அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படக்கூடிய சுமார் 150 தமிழர்களில் நாடு கடத்தப்படும் முதலாவது நபராக இவர் இருக்கலாம் எனவும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இலண்டனிலிருந்து இனப்படுகொலையாளிகளை விரட்ட அணிதிரண்டுவாரீர்!

அன்பான ஐரோப்பியவாழ் தமிழீழ உறவுகளே! எதிர்வரும் 27.07.2012 அன்றைய நாள் இலண்டன் ஒலிம்பிக் தொடக்கவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காக உலகெங்கிலுமுள்ள 120 இற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் வருகைதரவுள்ளார்கள்.
இதில் சிறீலங்கா இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவும் வருகைதரவுள்ளார். உலகின் 120 இற்கும் மேற்பட்ட நாட்டுத் தலைவர்கள் இலண்டன் Aspen Way E14 என்னும் வீதிவழியாக ஊர்தியில் சென்று ஒலிம்பிக் தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிலையில் சிறீலங்கா இனப் படுகொலையாளிகளை பிரித்தானியா மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் முகமாகவும் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவழிப்பை சர்வதேச நாட்டுத் தலைவர்கள் மத்தியில் வெளிப்படுத்தும் முகமாகவும் எதிர்வரும் 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 9:00 மணிவரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து உலகத் தலைவர்கள் முன் கவனயீர்ப்புச் செய்வதற்கு இது எமக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு! இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தி, எமது உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக அனைத்து பிரித்தானிய வாழ் தமிழீழ உறவுகளும் ஒருமித்த மக்கள் சக்தியாகத் திரண்டு அன்றைய நாள் மாலை 5:00 மணிக்கு Billingsgate Fish Market E14 5ST என்னும் இடத்துக்கு முன்னால் Aspen Way E14 என்ற வீதியருகே ஒன்றுதிரண்டு வருமாறு அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்.
தமிழீழ மண்ணிலே நாளுக்கு நாள் எங்கள் உறவுகள் படுகொலை செய்யப்படுவதும் எமது தாயக பூமி சூறையாடப்படுவதும் தொடர்கதையாக இருந்துவருகிறது. சிங்கள பேரினவாத அரசு சர்வதேச நாடுகளை ஏமாற்றி, ஈழத்தமிழ் இனத்தின் மீது மிகப்பெரிய இனவழிப்பையும் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்களையும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் உலகில் எங்கும் இல்லாதவாறு மிகத் தீவிரமாக இழைத்துவருகிறது.
எம்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மிகத்தீவிரமான திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டுவருவது இன்றைய சூழலில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் தலையாய கடமையாக உள்ளது. எங்களது உரிமைகளை போராடி மீட்பதற்கான எமது ஆயுதப் போராட்டம் உலகநாடுகளின் துணைகொண்டு நசுக்கப்பட்ட நிலையில், எமது நீதிக்கான, சுதந்திரத்திற்கான தொடர் கவனயீர்ப்பு மக்கள் போராட்டங்ளை தொடர்ந்து ஓயாது சர்வதேச நாடுகளில் நிகழ்த்த வேண்டியது எமது விடுதலைக்கான வரலாற்றுக் கடமையாகும்.
எனவே, அனைத்துலக மட்டத்தில் எடுத்துச் செல்லப்படக்கூடிய ஒரு வாய்ப்பில், ஒரு பகுதியாக மனிதநேயன் திரு.கோபி.சிவந்தன் அவர்கள் தொடர் உண்ணாநிலை கவனயீர்ப்புப் போராட்டத்தை செய்துவருகிறார். அதேவேளை, எதிர்வரும் 27.07.2012 வெள்ளிக்கிழமை குறித்த நேரத்தில் அனைத்து பிரித்தானிய வாழ் தமிழீழ உறவுகள் அனைவரும் காலத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டாயத்தை உணர்ந்து பெரும் மக்கள் வெள்ளம்போல் ஒன்றுதிரண்டு இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க வருமாறு அன்புடன் வேண்டப்படுகிறீர்கள்.

24 ஜூலை 2012

தேசியத்தலைவரின் திருமண நாளில் தனது திருமணமும் என்கிறார் சீமான்.

பிரபாகரன் திருமண நாளான அக்டோபர் 1ம் நாள் என் திருமணமும் நடக்கும்! – சீமான்தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்த அக்டோபர் 1-ம் நாள் என் திருமணமும் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
பாஞ்சாலங் குறிச்சி, தம்பி போன்ற படங்களின் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்று கடந்த சில தினங்களாக செய்தி கசிந்து வந்தது.
அவரிடமே இதுபற்றி கேட்டுவிட தீர்மானித்து தொடர்பு கொண்டு கேட்டபோது, சீமான் கூறுகையில்,
ஆம்.. அக்டோபர் ஒன்றில் எனது அண்ணன் பிரபாகரனுக்கும் அண்ணி மதிவதனிக்கும் திருமணம் நடந்த தினம். அன்று திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலிருக்கிறேன்.
பெண் யாரெனத்தான் இன்னும் தெரியவில்லை. எப்படியும் அதற்குள் பெண்தேடும் படலம் முடிந்துவிடும். இத்தனை லட்சம் பெண்களில் எனக்கென்று ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள்?
ஆனால் இந்த வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி திருமணம் என்பது உறுதி. எல்லோரையும் அழைத்து விரைவில் அறிவிப்பேன் என்றார்.
சீமான் தான் திருமணம் செய்யவிருக்கும் பெண் யாரென தெரிவிக்கவில்லை. என்றாலும், அவர் திருமணம் செய்ய இருப்பது ஈழத்தைச் சேர்ந்த போராளி விதவைப் பெண்ணான யாழ்மதியை என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்தனர்.

23 ஜூலை 2012

கூட்டமைப்புடன் கூட்டணி இல்லையென்கிறார் அலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி சேரப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி சேரப் போவதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜாவும், முஸ்லிம் காங்கிரஸின் ஹசன் அலியும் இணைந்திருந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
ஊடகங்களில் வெளியான இந்த செய்தி வெறும் வதந்தியே தவிர நிஜம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்த தினத்தில் வவுனியா கச்சேரியில் மாவை சேனாதிராஜாவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே இவ்வாறு ஊடகங்களில் வெளியானதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனோ வேறு எந்தக் கட்சியுடனோ புரிந்துணர்வு உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நாளைய தினம் கட்சித் தலைமையகத்தில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நிமலரூபனின் சடலம் வவுனியா நோக்கி..!

வவுனியா - சிறையில் ஏற்பட்ட மோதல் நிலையை அடுத்து மஹர சிறைக்கு மாற்றப்பட்டு காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் சடலம் தற்போது தனது சொந்த ஊரான வுவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
நிமலரூபனின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்காது நீர்கொழும்பில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை ஏற்காத அவருடைய பெற்றோர் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி கோரிக்கையை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் நிபந்தனையின் அடிப்படையில் நிமலரூபன் சடலத்தை வவுனியாவிற்கு எடுத்துச் செல்ல அனுமதி அளித்தது.
அமைதியான முறையில் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இதன்படி இன்று வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் நிமலரூபனின் சடலம் நாளை மாலை வவுனியாவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அமைதியை நிலைநாட்டவென நிமலரூபனின் ஊரில் பொலிஸ் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாளை இறுதிச் சடங்குகளில் பங்குபற்ற மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் மற்றும் அதன் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்டோர் வவுனியா செல்லவுள்ளனர்.

22 ஜூலை 2012

கிளைமோர் தாக்குதலில் தப்பித்த ஒட்டுக்குழு இனியபாரதி!

மட்டு-அம்பாறையில் நடாத்தப்பட்டுள்ள கிளைமோர் தாக்குதலில் இருந்து இனியபாரதி தப்பித்துள்ளதாக அங்கிருந்து செய்திகிடைத்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத்தின் படைப்பிரிவின் முக்கிய நபர்களில் ஒருவராக விளங்கிய இனியபாரதி தமிழினத்தை காட்டிக்கொடுத்து இனத்துரோகமிழைத்து பிரிந்து சென்றார்.
மட்டு-அம்பாறை பகுதியில் தமிழகத்து பாணியில் கட்டைப் பஞ்சாயத்து முறையில் அடாவடித்தனம் செய்து வரும் இனியபாரதியை சிங்களப் பெண் ஒருவர் திருமணம் முடித்து சொத்துகளை சேர்த்துக் கொண்டு பிரிந்து போயிருந்த நிலையில் அண்மையில் பள்ளிக்கூட மாணவி ஒருவரை பலவந்தமாக கடத்திக் கொண்டுபோய் கட்டாய திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது அவரை இலக்குவைத்து கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அம்பாறையில் குறித்த ஒரு கோவிலுக்கு பஜரோ வாகனத்தில் இனியபாரதி சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த கோயிலுக்கு அருகாமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டை இயக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கிளைமோர் தாக்குதலில் பஜரோ வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் அதில் வந்தவர்கள் கோயிலுக்கு முன்னதாக சென்றதால் உயிர்தப்பியுள்ளார்கள். இனியபாரதி வழக்கமாக கோயிலுக்கு வரும்போது பஜரோவை நிறுத்தும் இரண்டு இடங்களை நன்கு அவதானித்து அந்த இடங்களில் இரண்டு கிளைமோரை மறைத்து வைத்துள்ளனர். இவற்றில் ஒன்றே வெடித்துள்ளது.
இனியபாரதி பயன்படுத்தும் பஜரோ வாகனத்தை ஒத்த இன்னொரு பஜரோ வாகனத்தில் வந்த வேறு ஒருவர் மீதே தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரம் அந்த சுற்றுவட்டாரத்தை சல்லடை போட்டு தேடுதல் நடத்திய போதே அருகாமையில் இன்னொரு கிளைமோர் வெடிக்கவைக்க தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அது வெடிக்கவைத்து செயலிழக்க வைக்கப்பட்டது. ஒரே மாதிரியான பஜரோ வாகனத்தினால் ஏற்பட்ட குழப்பத்தால் தாக்குதல் இலக்கு தவறியுள்ளது. இதனால் இனியபாரதி தப்பித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐ.நா விற்கு வாக்குமூலம் வழங்கியவரை இலங்கையிடம் கையளிக்க முயலும் அவுஸ்திரேலிய அரசு!

2009 ம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து உறவினர்களின் கடும் முயற்சியால் விடுதலை செய்யப்பட்ட டயான் அந்தோனி எனப்படும் "அன்பு" தற்போது அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோரியுள்ளார்.
2010 ம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவிற்கு அகதியாகச் சென்ற இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழுவினருக்கு தனது சாட்சியினை வழங்கியிருந்தார். அவ்விசாரணை இன்னும் முடிவுறாத பட்சத்தில், விசாரணை முடிவுறும் வரை இவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழு, அவுஸ்திரேலிய அரசினைக் கேட்டுக்கொண்டுள்ள போதும், அவுஸ்திரேலியா இவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பவுள்ளவர்களின் பட்டியலில் இணைத்துள்ளது.
2009 ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வன்னிப் பெருநிலப்பரப்பு இருந்த காலத்தில் வன்னியில் சேரன் வாணிபத்தின் கொள்வனவுப் பிரிவில் வேலைசெய்து வந்த "அன்பு" என்ற குறித்த இளைஞன், முள்ளிவாய்க்கால் சமரின் பின்னர் இலங்கை இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார்.
இராணுவத்தின் மோசமான சித்திரவதையின் காரணமாக சற்று மனநிலை குன்றிய அன்பு இராணுவ முகாமிற்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தார்.
விடுதலையாகிய பின்னர் அன்பு இலங்கையில் தனது பாதுகாப்பிற்று அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து அவுஸ்திரேலியாவிற்குத் தப்பிச்சென்றார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழுவினருக்கு அவுஸ்திரேலியாவில் அடைபட்டுக்கிடைந்த அன்பு தனது சாட்சியினை வழங்கியிருந்தார்.
அவ்விசாரணை இன்னும் முடிவுறாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக் குழு இவரை விசாரணை முடிவுறும் வரை இலங்கைக்கு அனுப்பவேண்டாம் என்று அவுஸ்திரேலிய அரசினைக் கேட்டுக்கொண்டுள்ள போதும், அவுஸ்திரேலியா அவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளவர்களின் பட்டியலில் இணைத்து அவரை அனுப்புவதற்கு முடிவு செய்துள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி மீண்டும் இவருக்கான பிடியாணையை இலங்கை அரசு வழங்கியுள்ளமையும், தற்போது அவுஸ்திரேலிய அரசு இவரை இலங்கைக்கு திருப்பியனுப்பவுள்ளவர்கள் பட்டியலில் இணைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஏற்கனவே கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து மனநிலை பாதிக்கப்பட்டிருந்த "அன்பு" அவர்கள் தற்போது இலங்கை அரசிற்கும், அரச படைகளுக்கும் எதிராக அவர்களின் குற்றச்செயல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் அவர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டால் அவரின் உயிருக்கு ஆபத்து நிச்சயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் உறவினர்கள் உள்ளனர்.
இவரின் நாடுகடத்தலுக்கு எதிராக தமிழ் அமைப்புக்கள், மனித நேய செயற்பாட்டாளர்கள் ஆவன செய்யவேண்டும் எனவும் உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவர் தொடர்பான மேலதிக விபரம்:-- http://riserefugee.org/post/27393935429/urgent-call-for-action-deportation-of-sri-lankan-asylum  

21 ஜூலை 2012

மோட்டார் சைக்கிள் இலக்கம் தெரியவந்தால் புலிக் கொடியுடன் பறந்தவர்கள் உடன் கைது செய்யப்படுவர்.

flag05யாழ். நெல்லியடியில் புலிக் கொடி விவகாரம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வதற்கு அவர்கள் பயணித்த மோட்டர் சைக்கிள் இலக்கங்களை தெரியப்படுத்தினால் உடனே கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டி.ஐ.ஜி) எரிக் பெரேரா தெரிவித்தார்.
யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தர்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
நெல்லியடி பஸ் நிலையத்தில் மோட்டர் சைக்கிளில் புலிக்கொடியுடன் சென்றவர்கள் தொடர்பாக இதுவரையும் எவரும் முறையிடவில்லை. ஊடகங்கள் வாயிலாகவே இந்த விடயத்தை அறிந்து கொண்டேன்.
அந்தப் பகுதியில் கடமையில் ஈடுபட்ட பொலிஸாரிடம் இவ்விடையம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மோட்டர் சைக்கிளில் புலிக்கொடியுடன் பறந்தவர்கள் யார் என்பது இதுவரை இனங்காணப்படவில்லை. அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தை தந்து உதவினால் பொலிஸார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்யமுடியும்' என்றார்.

நிமலரூபன் குறித்து பாராளுமன்றில் கேட்கக்கூடாதாம்!சிங்கள இனவாதியின் கூச்சல்.

தமிழ் அரசியல் கைதி நிமலரூபனின் இறப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார,நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சபையில் கேள்வியெழுப்புகையில்,இது பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புபட்டகைதி குறித்தான கேள்வி.
எனவே, இதற்குச் சந்தர்ப்பம் வழங்கக்கூடாது என்று பிரதிக் கல்வி அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா தெரிவித்தார்.நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம்,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சரிடம் கேள்விகளை எழுப்பியிருந்தார்.
அந்தச் சமயத்தில் புனர்வாழ்வு,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரோ அல்லது அதன் பிரதி அமைச் சரோ சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. இதனால், நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு ஆளுந்தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன பதிலளித்தார்.
அத்துடன்,அகிலவிராஜின் மேலதிக கேள்விகளுக்கு முன்னாள் சிறைச்சாலைகள் பிரதி அமைச்சராகப் பதவிவகித்தவர் என்ற அடிப்படையில் பிரதிக் கல்வி அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா பதில் அளிப்பார் என்று கூறி அமர்ந்துவிட்டார்.
இதனையடுத்து,தனது மேலதிக இரண்டு கேள்விகளை அகிலவிராஜ் பிரதிக்கல்வி அமைச்சரிடம் எழுப்பினார்.வெலிக்கடைச் சிறையில் இருக்கின்ற 75 பெண் கைதிகளுக்கு இரண்டு குளியலறைகள்தான் இருக்கின்றன எனவும்,அதனால் அவர்கள் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர் எனவும் இதன் போது அகிலவிராஜ் சுட்டிக்காட்டினார்.
அகிலவிராஜின் கேள்விகளைத் தொடர்ந்து இடைக்கேள்வியொன்றை எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்குமார,தாம் ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து கேள்வி எழுப்பினார்.
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளுக்கு ஒருமாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தற்போது ஒரு மாதம்தான் கடந்துள்ளது. ஆனால் நடவடிக்கை எது வுமில்லை.
இந்தநிலையில், வவுனியா, மஹர போன்ற சிறைச்சாலைகளில் சில சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்க் கைதி நிமலரூபனின் மரணம் குறித்து அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? இந்த விடயத்தில் அரசின் கடப்பாடு எது என்று அஜித்குமார உரையாற்றிக் கொண்டிருந்த போது குறுக்கீடு செய்து எழும்பிய பிரதிக் கல்வி அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா,
இவர் சாதாரண கைதி குறித்து கேள்வி எழுப்புவார் என எதிர்பார்த்தேன். ஆனால், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கைதிகள் குறித்து கேள்வி எழுப்புகிறார்.
இதற்குச் சந்தர்ப்பம் வழங்கக் கூடாது என்று கூறினார்.

20 ஜூலை 2012

சுவிசில் தமிழ் பெண் கொலை! கணவன் கைது.

சுவிசில் தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகச் சந்தேகப்படும் காவல்துறையினர் அவரது கணவரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த மாத இறுதிப் பகுதியில் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் இந்தப் பெண்ணின் உடலம் இந்த மாதம் 2ஆம் நாள் யெனிவாவில் (Geneva) உள்ள றோன் (Rhone) ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் பிரான்சின் பிரசாவுரிமை பெற்றவர் எனவும் யெனீவாவில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்தவர் என்றும் சுவிசிலுள்ள யேர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிப் பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றன.
மனைவியை கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்திருப்பதாகவும் அதனை பிள்ளைகள் கதவின் துவாரம் வழியாகப் பார்த்திருப்பதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் இந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவைச் சேர்ந்த கணவனை பாசலில்(Basel) வைத்துக் கைது செய்துள்ள யெனீவா காவல்துறையினர் சாம் டொலோன் (Champ-Dollon) சிறையில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக மற்றொரு தமிழரை சுவிச்சர்லாந்து காவல்துறையினர் தேடி வருவதுடன் குறித்த நபர் கொலைக்கு அல்லது கொலையின் பின்னர் உடலத்தை ஆற்றில் வீசுவதற்கு உதவி செய்திருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றது.

நீதிமன்ற முடக்கத்தால் நிமலரூபனின் இறுதி நிகழ்வும் இழுபறி நிலையில்!

மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து சட்டத்தரணிகளும் நீதிவான்களும் இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டுவருவதால் நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களின் நடவடிக்கைகளும் முடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சகல நீதிமன்றங்களினதும் இன்றைய வழக்குகள் வேறு திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அனைத்து வழக்குகளும் எதிர்வரும் 27ஆம் திகதிக்கும் நீதிவான் நீதிமன்ற வழக்குகள் எதிர்வரும் 23ஆம் திகதிக்கும் மாவட்ட நீதிமன்ற வழக்குகள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நிமலரூபனின் இறுதி சடங்கு பற்றிய முடிவு இன்று நீதிமன்ற விசாரணையின்போது தெரியவரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இதனால் நிமலரூபனின் இறுதி சடங்கு பற்றிய முடிவு இழுபடும் நிலை தோன்றியுள்ளது.

19 ஜூலை 2012

புலிக் கொடி ஏந்தும் ராஜபக்ஷ அரசு!

சிங்கள பிரிவினைவாத ராஜபக்ஷ அரசு வடக்கில் தமிழர்களை அடக்கி ஆளும் இராணுவ மயமாக்கலை முன்னெடுத்து வரும் நிலையில், வடக்கில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு புலி முத்திரை குத்தி அதனையும் அடக்க முனைகிறது.
நேற்று நெல்லியடியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் சிலரை புலிக் கொடி ஏந்தவைத்து ராஜபக்ஷ அரசு அடக்குமுறை மேற்கொண்டுள்ளது.
நிமலரூபன் படுகொலை, வடக்கில் காணி அபகரிப்பு என்பவற்று எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் முழுமையாக முகத்தை மூடிய நால்வர் இரு மோட்டார் சைக்கிளில் வந்து புலிக் கொடியை அசைத்து வட்டமிட்டு திரிந்துள்ளனர்.
புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது குற்றமாகும். இது வட, கிழக்கில் உள்ள பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு நன்கு தெரியும். ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது அங்கு 100 க்கும் மேற்பட்ட பொலிஸார் இருந்த நிலையில் புலிக் கொடி ஏந்தியவர்களை எவரும் கைது செய்யவில்லை. இது பாதுகாப்பு பிரிவின் திட்டம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் காண்டீபன் மற்றும் உபதலைவர் அனந்தராஜா ஆகியோர் வீட்டின் மீது கழிவு எண்ணெய் ஊற்றி சேதம் ஏற்படுத்தப்பட்டது.இவ்வாறான நிலையில் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு பொலிஸார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் கோரியிருந்தனர். ஆனால் நிறுத்த முடியாது என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிவித்திருந்தார்.
பொது எதிர்க்கட்சியின் மே தின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது புலிக் கொடி ஏந்திய ஒருவர் சென்றதை சுயாதீன தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால், அது குறித்து புகைப்படத்துடன் ஆதாரம் இருந்த போதும் புலிக் கொடி ஏந்திய நபரை கைது செய்ய முடியாது போயுள்ளது. அதுவும் பாதுகாப்பு பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம் என தெளிவாகியுள்ளது.
(எக்ஸ் தமிழ் நியுஸ்)

தேர்தலுக்காக மட்டுமே முஸ்லீம் காங்கிரஸ் பிரிகிறது அதன் பின் எம்முடனேயே இருக்கும் என்கிறார் கெகலிய!

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்த செயற்படுவதான உடன்படிக்கையின் பிரகாரமே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்படி தேர்தலில் தனித்து போட்டியிடுவதான தீர்மானத்தை எடுத்துள்ளது என அரசாங்கம் இன்று அறிவித்தது.
தேர்தலைப் பொறுத்தவரையில் இவ்வாறான நடைமுறைகள் அடிக்கடி இடம்பெறுவது வழமையே. இந்நிலையில் தனியானதொரு அரசியல் பயணத்தை நோக்கிச் செல்வதற்காகவே தனித்துப் போட்டியிடுவதான முடிவுக்கு வந்தோம் என அக்கட்சியின் உறுப்பினர்கள் நேற்று அறிவித்திருந்தாலும் அந்த தீர்மானம் இன்று மாறியிருக்கிறது என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சரிடம் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் குறித்து கேட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் கெஹெலிய
'தேர்தல் காலங்களின் போது தங்களது பிரதேசத்தினதும் அப்பிரதேச மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக முன்வரும் அரசியல் கட்சிகள் பல்வேறு உடன்படிக்கைகளை மேற்கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது வழமை.
இருப்பினும் அரசாங்கத்துடன் இணைவதற்கு அக்கட்சிகள் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்ற போதிலும் அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என்பதே ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பு விதிக்கும் ஒரே நிபந்தனையாகும்.
அரசியல் கட்சிகளுக்குள் இடம்பெறும் சிக்கலான நிலைமைகளைப் பொறுத்தே அரசியல் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் பயணத்தில் பல்வேறு விவாதங்கள் இடம்பெறுவது வழமை.
அந்தவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பத்தில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்திருந்த போதிலும் தற்போது தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதான உடன்படிக்கையின் பிரகாரம் தனித்துப் போட்டியிடுவதான தீர்மானத்துக்கு வந்துள்ளது' என்று அமைச்சர் மேலும் கூறினார்.

18 ஜூலை 2012

முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது.


கிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லீம் காங்கிரஷ் தனித்து போட்டிகிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித் போட்டியிடவுள்ளதாக, தெரியவருகிறது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானித்திருந்த போதிலும் தாம் கோரிய 12வேட்பாளர்களுக்கான இடம் வழங்கப்படாததால் தனித்து போட்டியிடுவதற்கான முடிவை தற்போது எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் அக்கட்சியின் மர சின்னத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தலைமையகமான தாருஸ்ஸலாமில் தற்போது வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றவாளிகளை மட்டுமே வெள்ளை வானில் கடத்துகிறோம் என்கிறார் கோத்தபாய!

குற்றவாளிகள் மாத்திரமே இலங்கையில் வெள்ளை வானில் கடத்தப்படுகிறார்கள் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வெள்ளை வானால் ஆள்கள்; கடத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அரச சார்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்துகின்றவர்கள் உட்பட்ட குற்றவாளிகளை சமூகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவ்வாறானவர்களே வெள்ளை வானில் கடத்தப்படுகிறார்கள்.
இவர்களை சமூகத்தில் இருந்து பொதுமக்களால் வெளியேற்ற முடியாது எனவேதான் இவ்வாறான உத்தி கையாளப்டுவதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

17 ஜூலை 2012

கூட்டமைப்பு சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் போட்டி.

கிழக்கு மாகாணசபை தேர்தலில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போட்டியிட உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைராசசிங்கம் ( சட்டத்தரணி) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ( ஜனா) ஆகியோர் போட்டியிட உள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசசிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக போட்டியிட உள்ளார். 1989ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கருணாகரன் ( ஜனா) ரெலோ சார்பில் போட்டியிட உள்ளார். லண்டனில் வசித்து வந்த ஜனா தற்போது மட்டக்களப்புக்கு சென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தல் களத்தில் குதித்துள்ளார். ரெலோ சார்பில் இந்திரகுமார் பிரசன்னாவும் போட்டியிட உள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் போட்டியிட உள்ளார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியல் நாளை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட உள்ளனர். சுவிஸில் அகதி தஞ்சம் கோரி கடந்த 5வருடங்களாக சுவிஸில் வாழ்ந்து வந்த சங்கர் அண்மையில் இலங்கைக்கு சென்றிருந்தார். அவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட உள்ளார்.
அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராக முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் போட்டியிட உள்ளார். இவர் ரெலோவின் செயலாளராவார். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்நேசன் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் போட்டியிட உள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இரு முஸ்லீம்களும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக அகதிகள் முகாமில் 6 வயதான சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 6 வயதான சிறுமியொருத்தி, பாலியல் வல்லுறவுக்குட்பட்டு கொலைசெய்யப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்முகாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிரிஜா அல்லது ஸ்ரீநிதி எனும் இச்சிறுமியின் உடல், மேற்படி முகாமிலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மதகு ஒன்றின் கீழிருந்து நேற்று மீட்கப்பட்டது. இச்சிறுமியின் கழுத்திலும் கைகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. இச்சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு இப்பாலத்தின் கீழ் சடலம் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்படி அகதிகள் முகாமைச் சேர்ந்த கண்ணன் (27) என்பவர் கைது செய்யப்பட்டள்ளார். பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என தினமலர் பத்திரிகை தெரிவித்துள்ளது.
20 வருடகாலமாக இயங்கும் இந்த அகதிகள் முகாமில் இத்தகையதொரு சம்பவம் நடைபெற்றமை இதுவே முதல்தடவை எனக்கூறப்படுகிறது.

சிறீலங்கா படையதிகாரிகள் தமிழகத்திலிருந்து வெளியேற்றம்.

தமிழகத்தில் பயிற்சிக்குச் சென்ற இலங்கை இராணுவ அதிகாரிகள் இன்று காலை வெளியேற்றம்தமிழகம் குன்னூரில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பங்கேற்க சென்றிருந்த இலங்கை இராணுவ அதிகாரிகள் இன்று காலை அங்கிருந்து வெளியேறினர்.
இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அங்கு ஒரு கருத்தரங்கில் பங்கேற்க சென்றிருந்த இலங்கை அதிகாரிகள் இன்று காலை அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த கருத்தரங்கு நாளை 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எவ்வாயினும், குறித்த அதிகாரிகளை இந்தியாவில் இருந்து பயிற்சிகளை பெறாமல் நாட்டிற்கு மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குன்னூரில் வான்படை பயிற்சி பெறும் இலங்கை அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் நேற்று தனித்தனியே அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இந்த அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

16 ஜூலை 2012

கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு ஆப்பிறுக்குகிறார் சம்பந்தர்!

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து போட்டியிடுவதற்கு முன்வந்துள்ள போதிலும், அதன் அங்கத்துவ கட்சிகளிடையே வேட்பாளர்களை பங்கிடுவதில் சுமுகமான உடன்பாடு இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவான ஒரு தேர்தல் சின்னத்தின் கீழ், வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையில் கிழக்கு மாகாண சபைக்கான வேட்பாளர் தெரிவு குறித்த பேச்சுக்கள் நடைபெற்றன.
இருப்பினும் அதில் சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கான வேட்பாளர்களைப் பகிர்ந்து கொள்வதிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.
திருகோணமலையில் 10 வேட்பாளர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 3 வேட்பாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஏனைய நான்கு கட்சிகளுக்கும் வழங்குவது என தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததாகவும், அதனை ஏற்பதற்குத் தாங்கள் மறுத்ததையடுத்து நீண்ட இழுபறிக்குப் பின்னர் 4 வேட்பாளர்களை தருவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாகவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தின் அரசியல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்த முடிவை ஏற்று, தமது கட்சிகள் நான்கும் தலா ஒரு வேட்பாளரை நியமிக்க உடன்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான 14 வேட்பாளர்களில் 7 பேரை தமிழரசுக் கட்சிக்கும் மிகுதி 7 பேரை ஏனைய நான்கு கூட்டணிக் கட்சிகளுக்கும் ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு தமிழரசுக் கட்சி உடன்பட மறுத்து 4 பேரை மட்டுமே ஒதுக்குவதற்கு முன்வந்ததாகவும் பின்னர் 5 பேராக அது அதிகரிக்கப்பட்டதாகவும் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டினார்.
தங்களது கோரிக்கையான 7 பேர் தேவை என்பதை பிடிவாதமாக வலியுறுத்திய போதிலும், உடன்பாடு எட்டப்படாத நிலையில், தமிழரசுக் கட்சியை மட்டும் போட்டியிடச் செய்து தமது 4 கட்சிகளும் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருப்பது அல்லது தமிழரசுக் கட்சியை விட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தனியாக போட்டியிடுவது என்ற முடிவுக்கு வருவது பற்றியும் தாங்கள் சிந்தித்ததாக செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.
இருப்பினும் இந்த முடிவுகள், இன்றைய அரசியல் சூழலில் மட்டக்களப்பு பிரதேசத்தின் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமது கட்சி ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, மட்டக்களப்பில் 5 பேரை தாங்கள் வேட்பாளர்களாக நியமிப்பதற்கு விருப்பமின்றி உடன்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

சிறையில் கொலை செய்யப்பட்ட நிமலரூபன் தொடர்பில் மூன்று நீதிமன்றங்களில் வழக்குகள்!

வவுனியா சிறைச்சாலை சம்பவத்தின் பின்னர் அடிகாயங்களுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் மரணமடைந்த கணேசன் நிமலரூபன் தொடர்பில் வெவ்வேறு நீதிமன்றங்களில் மூன்று வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன.
நிமலரூபனின் சடலத்தை அவரது சொந்த ஊராகிய வவுனியா நெளுக்குளத்திற்குக் கொண்டு செல்வதற்கான உத்தரவைக் கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ௭திர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை, நிமலரூபனின் மரணம் தொடர்பாக ராகம நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கு விசாரணை 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது, சமூகமளித்து சாட்சியமளிக்க வேண்டும் ௭ன்று நிமலரூபனின் தாய், தந்தையரை நீர்கொழும்பு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
நிமலரூபனின் சடலத்தை வவுனியா பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க, மஹர - கடவத்தை நீதிமன்ற நியாயாதிக்கப் பகுதிக்குள்ளேயே அடக்கம் செய்ய வேண்டும் ௭ன்று இம் மாதம் 23 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கியுள்ள மஹர - கடவத்தை நீதிமன்றத்தில் 23 ஆம் திகதி வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது ௭ன்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா சிறைச்சாலை சம்பவத்தையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 38 பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மனித உரிமை அமைப்புகளும் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருப்பது தெரிந்ததே.

15 ஜூலை 2012

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஹசன் அலி மறுப்பு.

newsகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்படி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை கட்சியின் செயலாளர் ஹசன் அலி நேற்று மாலை உறுதியாக நிராகரித்து விட்டார் என நம்பகரமாகத் தெரியவருகிறது.
அரசுக்கும் மு.காவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது என்றும் முதலாம் பிரிவு ஆசனப் பங்கீடுகள் குறித்தும் இரண்டாவது பிரிவு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி இருந்தது என்றும்
இருப்பினும் முதலாவது பிரிவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே அரசு உடனடியாக கையெழுத்து இட முன்வந்தது என்றும் இரண்டாவது பிரிவில் கையெழுத்து இடுவதற்கு அரசு தயக்கம் காட்டியது என்றும்
இதன் காரணமாகவே மு.கா. சார்பில் கையெழுத்து இடுவதற்கு ஹசன் அலி மறுத்தார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டாவது பிரிவில் அரசு கையெழுத்து இடாதவரை எந்தவொரு புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் அரசுடன் தான் கையெழுத்திடப்போவதில்லை என ஹசன் அலி ஹக்கீமிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து கட்சிக்குள் ஏற்கனவே இருந்து வந்த கருத்துப்பிளவுகள் மேலும் அதிகரித்துள்ளது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

14 ஜூலை 2012

நாயை உசுப்பேத்தினால் என்ன செய்யும்?

கோத்தபாய ராஜபக்ஸ யார்? விக்கிரமபாகு கருணாரத்ன பதில்கோத்தபாய ராஜபக்ஸ ஒழுக்கமான முறையில் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எமக்குத் தெரியும். நாய் ஒன்றை உசுப்பேத்தினால் ஊ.. பௌ.. என்று கத்தும் அதனைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.
தவளையை அடித்தால் ஊ பக.. பக.. என்று சத்தமிடுவதை தவிர வேறு ஒன்றும் அதற்குத் தெரியாது.
ஒழுக்கமான முறை என்று இவரை நினைத்தால் நாம் குற்றவாளிகள்..
அவர் இருக்கும் நிலையில் பதிலளித்துள்ளார். அதுதான் உண்மையான கதை.
அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிகா ஜேன்ஸை தொலைபேசி ஊடாக மிரட்டிய சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவே இவ்வாறு தெரிவித்தார்.
ஜயவர்த்தனபுர கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடக அடக்கு முறைக்கு எதிரான மாநாட்டில் உரையாற்றிய அவர், ராஜபக்ஸ அரசின் மனநிலை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றினால் வடக்கு கிழக்கு இணைப்புக்கு வாய்ப்பு.

இரண்டு மாகாணங்களினதும் ஆட்சியைக் கூட்டமைப்பு கைப்பற்றும் பட்சத்தில் வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பில் இரண்டு மாகாண அரசுகளும் பேசி சில முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
எனவே இந்தத் தேர்தலில் நாங்கள் முழு மூச்சாகப் பங்குபற்றி ஆட்சியைக் கைப்பற்றுவதே நோக்கமாகும் என வன்னி மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு பயணம் செய்த அவர் மட்டக்களப்பு ரெலோ அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்தமுறை நாங்கள் போட்டியிடவில்லை. இம்முறை நாங்கள் போட்டியிடுவதன் நோக்கத்தை நாங்கள் ஏற்கனவே சொல்லியுள்ளோம். இந்தத் தேர்தலானது வரலாற்று முக்கியத்துவமிக்க தேர்தலாகும்.
காரணமென்னவென்றால் உலக நாடுகளுக்குத் தமிழ் மக்களின் உரிமை மற்றும் இன்று என்ன மனநிலையில் உள்ளனர் என்பதை வெளிக்காட்டவேண்டிய ஒரு தேர்தலாகவே நாங்கள் நோக்குகின்றோம்.
இதில் அரசு கூடுதலான ஆசனங்களைப் பெறும் பட்சத்தில் கிழக்கு மாகாண மக்கள் தங்களை ஆதரிக்கின்றனர், கிழக்கு மாகாணத்தில் எதுவித பிரச்சினையும் இல்லை. அதேபோன்று வடக்கு மக்களையும் நாங்கள் சரியான முறையில் வழிநடத்திச் செல்லும்வாய்ப்பு இருக்கின்றது என்று நியாயப்படுத்தி ஐ.நா அழுத்தங்களைக் குறைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும்.
கிழக்கு மாகாண மக்கள் கடந்த தேர்தல்களிலும் சரி உரிமை பிரச்சினைகளிலும் சரி உணர்வோடு, தேசியத்தோடுதான் இவ்வளவு காலமும் வாழ்ந்துவருகின்றனர். இன்றும் அதற்கான உதாரணங்கள் பலவற்றைக் கூறலாம்.கடந்த தேர்தல்களில் பல அழுத்தங்கள் இருந்தும் கூட மிரட்டல்கள் இருந்தும் கூட தங்களது வாக்குகளைத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அளித்திருந்தனர்.
இன்று அரசோடு இருக்கின்ற பிள்ளையான் போன்றவர்களுக்கும் முரளிதரன் போன்றவர்களுக்கும் இங்கு மக்கள் ஆணை வழங்கவில்லை.குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனைய கட்சிகளுடன் இருந்த தமிழர்கள் வெல்லப்படவில்லை.
அவர்களை வெல்ல வைக்க கிழக்கு மக்கள் விரும்பவில்லை. இதிலிருந்து கிழக்கு மாகாண மக்களின் உணர்வுதெட்டத்தெளிவாக தெரிகின்றது. இதில் மிக முக்கியமாக அனைவரும் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் நிச்சயமாக ஆட்சியை கைப்பற்றலாம்.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்வேண்டும் என்ற சிந்தனை அனைவருக்கும் வரவேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி இந்த மக்கள் அதனை உருவாக்கியுள்ளனர்.
என்றைக்கும் இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கம்தான் மக்கள் இருக்கின்றார்கள் என்று இந்த இலங்கை அரசும் உலக நாடுகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் இந்த மாகாணசபைத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்றார்.

13 ஜூலை 2012

மன்மோகன் சொன்ன நன்றியால் நெகிழ்ந்துபோனதாம் சிறுத்தை.


திண்டிவனம் பகுதியில் கட்சி கொடியேற்றுதல், திருமண விழாக்கள், படத்திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-
ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனையை கேட்கக்கூடிய தேசிய அளவில் நாம் முக்கியத்துவம் பெற்றுள்ளோம்.
இதை பெருமைக்காக கூறவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பில் பேசியவர் இந்தியாவில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினார். எனவே ஆச்சரியமாக, எதிர்பார்க்காததுமாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றேன். சில நொடிகளில் பிரதமரின் குரல் ஒலித்தது. குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வில் தங்கள் ஆலோசனை வேண்டும் என்றார். அதற்கு நான், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நாங்கள், கூட்டணி சார்பில் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் ஆதரிப்போம் என்றேன். அதற்கு பிரதமர் நன்றி என்று 3 முறை கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தார்.
நாளை (14-ந் தேதி) டெல்லியில் இதுதொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம். உங்களின் சார்பாக நான் கலந்து கொள்ள இருக்கிறேன். இதற்கெல்லலாம் காரணம் என் உயிரினும் மேலான 45 லட்சம் தொண்டர்களின் அன்பும், பாசத்தாலும் தான் முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

படைகள் வெளியேறவேண்டும் என சுரேஸ் விடுத்த கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டதாம்.

வடபகுதியில் உள்ள இராணுவப்படையணிகள் 1983 ஆம் ஆண்டில் நிலைக்கொண்டிருந்த இடங்களில் மாத்திரமே வரையறுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கை கூட்டமைப்பின் உள்நோக்கத்தை வெளிகாட்டியுள்ளதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக திவயின தெரிவித்துள்ளது.
1983 ஆம் ஆண்டு வவுனியா, பலாலி இராணுவ முகாம்களை தவிர ஏனைய முகாம்கள் அகற்றப்பட்டதால், விடுதலைப்புலிகள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் 29 வருடங்களுக்கு பின்னர், இராணுவத்தினரை, அவர்கள் நிலைக்கொண்டுள்ள இடங்களில் இருந்து வெளியேறுமாறு பிரேமச்சந்திரன் விடுத்துள்ள கோரிக்கையானது மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்த வழிவகுப்பதாகும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்ததாக திவயின கூறியுள்ளது. 

முள்ளிவாய்க்கால் புதைகுழிகளை வெளிப்படுத்திய அமெரிக்க செய்மதிப் படங்களை நிராகரிக்கிறார் கோத்தாபய!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் பற்றிய, அமெரிக்க செய்மதியினால் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகளை அமெரிக்க செய்மதி ஒன்று படம்பிடித்திருந்தது.
இந்தப் படங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதைக்கப்பட்ட தற்கு ஆதாரமாக, மூன்று புதைகுழிப் பிரதேசங்கள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கத்தின் செய்மதி ஆய்வாளர்கள் தகவல்கள் வெளியிட்டிருந்தனர்.
இவற்றில் ஒன்றில் 1436 புதைகுழிகளும், மற்றொரு இடத்தில் 960 புதைகுழிகளும் புதிதாக தோன்றியிருப்பது தெளிவாகத் தெரிந்தது.
அதற்கு முன்னர் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களில் அந்தப் புதைகுழிகள் காணப்படவில்லை.
இதனால், இவை போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின் புதைகுழிகள் என்று அறிவியல் மேம்பாட்டுக்கான அமெரிக்க சங்கத்தின் செய்மதி ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில், இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, இவை பொதுமக்களின் புதைகுழிகளே அல்ல என்றும் விடுதலைப் புலிகளின் புதைகுழிகள் என்றும் கூறியுள்ளார்.
“மனிதாபிமான நடவடிக்கையின் போது முல்லைத்தீவில், விரிவாக்கப்பட்ட இந்த மூன்று புதைகுழிப் பகுதிகளில் ஒன்றில் அதிகபட்சமாக 1346 புதைகுழிகள் காணப்படுகின்றன.
விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான இடுகாடு என்று அடையாளம் காணப்பட்ட மற்றொரு இடத்தில் 960 புதைகுழிகள் காணப்படுகின்றன.
இவற்றையும் இணைத்து இறுதிக்கட்டப் போரில் பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கற்பனையில் செய்யப்பட்டு, மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன“ என்று சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார்.
தியத்தலாவவில் கடந்தவாரம் சிறிலங்கா இராஜதந்திரிகள் மத்தியில் பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

12 ஜூலை 2012

தமிழினத்தைப் பாதுகாக்கக் கூடிய ஒரே வழி நாடு கடந்த தமிழீழ அரசுதான்.

இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உள்ளான நமது இலங்கைத் தமிழினம், தன்னை தொடர்ந்து பாதுகாக்கக் கூடிய ஒரே வழி நாடு கடந்த தமிழீழ அரசுதான் என்று நிச்சயமாக நம்பியபடியால் நாம் அந்த அரசை நிறுவியுள்ளோம் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமார் தெரிவித்துள்ளார்.கடந்த 7ம் திகதி சனிக்கிழமை அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாணத்தில் உள்ள பல்டிமோர் நகரில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிபோது தெரிவித்தார்.
மேற்படி கருத்தரங்கில் கனடாவிலும் அமெரிக்காவிலும் இருந்து சென்றவர்கள் பங்கு கொண்டார்கள். நாடு கடந்த அரசாங்கத்தின் கனடாவிற்கான அங்கத்தவர் நிமால் விநாயகமூர்த்தி மேற்படி கருத்தரங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாடு கடந்த அரசின் உண்மையான நோக்கங்களை நமது மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக தமிழ் மக்கள் தற்காலத்து அரசியல் விஞ்ஞானத்திற்கு அளித்த மரியாதை என்றுதான் நான் நாடு கடந்த அரசாங்கத்தை கூறுவேன்.
தமிழ் மக்கள் தாங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு கொடுத்த மரியாதையும் இதுதான். நாடு கடந்த அரசாங்கம் தாயகத்தில் வாழும் தமிழர்களும் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள தமிழர்களும் இணைந்துள்ளனர். அத்துடன் தமிழீழம் என்ற கோட்பாட்டை மிகுந்த உயிர்த்துடிப்புடன் பேணிவருவதும் நமது நாடு கடந்த தமிழீழ அரசு.
உதாரணமாக நமது தாயகத்தில் நமது மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடி வீர மரணமடைந்த நமது போராளிகள் மற்றும் போராளித் தலைவர்களின் நினைவாக நாம் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்யக்கூட இலங்கை அரசு தடை விதிக்கின்றது.
ஆனால் இலங்கையில் ஆயுதப் புரட்சி செய்து மரணித்த மக்கள் விடுதலை முன்னணியின் கொல்லப்பட்ட போராளிகளின் நினைவாக இலங்கையில் அரச அனுமதி கிடைக்கின்றது. எனவே இவ்வாறான நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தி மறைந்த போராளிகளுக்கு மரியாதை செய்யவும் அதற்கான நிகழ்வுகளை நடத்தவும் நமது நாடுகடந்த அரசாங்கம் முயன்று வருகின்றது.
மேலும் நாடு கடந்த அரசாங்கத்திற்கு உலகில் பெரும்பாலான நாடுகளின் ஆதரவோ அன்றி அங்கீகாரமோ இல்லை. இவ்வாறு நமக்கு அங்கீகாரம் இல்லை என்பதை அறிந்து கொண்டு நாம் இயங்காமல் இருந்து விட முடியாது.
அந்தந்த நாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு நாம் ஆளாகி விட முடியாது. அவர்கள் விரும்பவில்லை என்பதற்காக நாம் போராடாமல் இருக்க முடியாது.
பேச்சுவார்த்தைகளின் போது இடைக்கால முயற்சியாகவும் தமிழீழத்தை நோக்கிய போராட்டத்திற்கு ஒரு உந்து சக்தியாகவும் நாம் சர்வதேச பாதுகாப்பு பொறிமுறை ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளோம் என்பதையும் நான் எமது தமிழ் மக்களுக்கு சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்.
முள்ளிவாய்க்காலில் நமது மக்களுக்கு எதிராகவும் நமது போராளிகளுக்கு எதிராகவும் 2009 ம் ஆண்டு கொடிய யுத்தம் நடைபெற்றபோது, முள்ளிவாய்க்கால் மட்டுமல்ல உலகம் முழுவதுமே போராட்டக் களங்களாக மாறியிருந்தன.
தமிழகத்தில் கூட பல போராட்டங்களை நமது உறவுகளுக்காக அங்குள்ள தலைவர்களும் தமிழ் நாட்டு மக்களும் நடத்தினார்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது.
மேலும் தாயகத்தில் தற்போது அரசாங்கத்தின் நில அபகரிப்புக்கு எத்pராக நடைபெறும் பல போராட்டங்களுக்கு உலகெங்கிலம் பல ஆதரவுப் போராட்டங்கள் நடைபெற்றவண்ணம் உள்ளன. இலங்கையில் பல சமயங்களைச் சேர்ந்த மக்களும் நமது போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவைத் தருகின்றனர் என்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது.
எனவே நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்த்திற்கு புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் அனைவரும் தங்கள் பேராதரவைத் தரவேண்டும். ஒரு பலமுள்ள அமைப்பாக நமது அரசு உலகின் கண்களுக்கு தெரியும் ஒரு நாளுக்காக நாம் மேலும் உறுதியுடன் போராட வேண்டும் என தெரிவித்தார்.

11 ஜூலை 2012

இலங்கை அகதிகளுக்கு நிதி சேகரித்தவர் மீது கொலை வெறி தாக்குதல்!

மலேசிய லிட்டில் இந்தியா பிரதேசத்தில் மக்கள் நீதி கட்சியின் உறுப்பினர் மீது தாக்குதல்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள தமிழர்கள் செறிந்து வாழும் லிட்டில் இந்தியா (பிரிக்பீல்ட்ஸ்) பிரதேசத்தில் இலங்கை அகதிகளுக்கு நிதி சேகரித்த மக்கள் நீதி கட்சியின் உறுப்பினர் ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மக்கள் நீதி கட்சியின் செய்தி பிரிவு தலைவரான எம்.எஸ். அர்ஜூன், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரில் ஒருவர், தனது முகத்தில் பல தடவைகள் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறியுள்ளார்.
பங்ஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அர்ஜூனனுக்கு முகத்தில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளதாக அவரது மகன் கலைமுகிலம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மலேசிய அரச காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசுக்கு முண்டுகொடுத்து அரசியல் தீர்விற்கான வாய்ப்பை சிதறவிடக்கூடாது!


தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைக்கு நிலைத்து நிற்கக்கூடிய நியாயமான அரசியல் தீர்வு ஒன்று காணப்படுவதை சர்வதேச சமூகம் பொறுப்பேற்றுள்ள இந்த தருணத்தில் அந்த வாய்ப்பை சிதறடிப்பதற்கு அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தான் வலியுறுத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு உதவக்கூடாது என்றும் வலியுறுத்தியதாக அவர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை குறிப்பிட்டார்.
எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபையின் தேர்தல் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் பதவி வகிக்கும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
"கிழக்கு மாகாண சபை தேர்தல் தமிழ்ப்பேசும் மக்களின் பிரச்சனை சர்வதேச மயமாக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் சந்திக்க போகும் முதலாவது ஜனநாயக சோதனையாகும்.
இச்சோதனையில் தமிழ் பேசும் மக்கள் வெற்றியிட்ட வேண்டும். அவ்வெற்றி தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியில் இடம்பெறும் ஒரு தமி;ழ் வேட்பாளர் கூட வெற்றி பெற முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும்.
வெற்றி பெறும் தமிழ் உறுப்பினர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். தமிழ் மக்கள் இதனை தனது தலையாய கடமையாக எடுத்துக்கொண்டு செயற்பட வேண்டும்" என்றார்.

தமிழ்க்கைதிகளின் உறவுகள் ஐ.நாவுக்கு கடிதம்.

சிறைச்சாலைகளுக்குள் தங்களின் உறவுகள் எதிர் நோக்கும் அவலங்கள் குறித்து விளக்கியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமெனக் கோரி தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் சபைக்கு விரைவில் கடிதமொன்றை அனுப்பி வைக்கவுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் சிபார்சு செய்துள்ள போதிலும், இந்த விடயம் குறித்து அரசு காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன் னெடுக்கவில்லை எனவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்படவுள்ளது.
அத்துடன், தமிழ் அரசியல் கைதிகள் அண்மைக் காலமாக தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டுவரும் சம்பவங்கள் தொடர்பில் ஆதாரபூர்வமான தகவல்களை இந்தக் கடிதத்துடன் இணைக்கவுள்ள கைதிகளின் உறவுகள், தங்களின் உறவுகளின் விடுதலை விடயத்தில் சர்வதேசத்தினதும் மனித உரிமை அமைப்புகளினதும்
தலையீடு இன்றியமையாத தேவை எனவும் கடிதத்தினூடாக வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் வவுனியா சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகள் மூவரைத் தமிழ்க் கைதிகள் சிறைப்பிடித்ததையடுத்து அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. தமிழ்க் கைதிகளைச் சிறைச்சாலை அதிகாரிகள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கி அவர்களின் கை, கால்களை முறித்துள்ளனர். இதனால் கைதிகளின்
நிலைமை கவலைக்கிடமானது.
ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சத்திரசிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த கணேசன் நிமலரூபன் என்ற தமிழ் அரசியல் கைதி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.
நிமலரூபனுக்கு நேர்ந்த கதி தங்களது உறவுகளுக்கும் நேர்ந்துவிடுமோ என்ற அச்ச நிலைமை உருவாகியுள்ளதையடுத்தே தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும், விடுதலையை வலியுறுத்துமாறு குறிப்பிட்டும் தமிழ்க் கைதிகளின் உறவுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மனித உரிமைகள் சபைக்குக் கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.