30 செப்டம்பர் 2012

விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகுவார்கள்!

இன்று வாய்களை மூடிக் கொண்டிருந்தாலும் இன்னும் 15 வருடங்களில் விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும் என சம உரிமைகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பை ஆரம்பித்து வைக்கும் வைபவம் அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் உரையாற்றிய செயற்பாட்டாளர்கள் இதனை கூறியுள்ளனர்.
இங்கு உரையாற்றிய சம உரிமைகளுக்கான அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஜூட் சில்வா புள்ளே:
மக்களை இன, மத, சாதி என பிரித்து ஆட்சி செய்யும் முதலாளித்துவ தேவையை தோற்கடித்து, சம உரிமைகளை உறுதிப்படுத்தும் வேண்டும் என்பதை இங்கு வந்துள்ள பலர் ஏற்று கொண்டுள்ளனர்.
இந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ள பலர் நாட்டில் பரந்துப்பட்டு வாழ்கின்றனர். நாம் அவர்கள் மத்தியில் செல்ல வேண்டும். தமிழர்களுக்காக போராடும் சிங்களவர்கள், முஸ்லிம்கள், முஸ்லிம்களுக்காக போராடும் தமிழர்கள், சிங்களவர்கள், சிங்களவர்களுக்காக போராடும், தமிழர்கள், முஸ்லிம்கள், இருக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே சம உரிமைகளுக்கான அமைப்பின் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இங்கு உரையாற்றிய, சம உரிமை அமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர் கே. கிருபாகரன், போர் முடிந்த பின்னர், சிங்களவர்கள் வெற்றிப்பெற்றனர், தமிழர்கள் தோல்வியடைந்தனர் என அரசாங்கம் கூறியது. அரசாங்கம் எப்படி அவ்வாறு கூறமுடியும். அனைவரும் தோற்று போய் விட்டனர் என நாம் எண்ணுகிறோம். போர் நடைபெற்ற காலத்தில் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என தெரிவித்தனர். தற்போது போர் முடிந்து விட்டது. ஆனால் போர் நடைபெற்ற காலத்தை விட பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
தற்போது வடக்கு, கிழக்கில் தமிழர்கள் வாழும் கிராமங்களுக்கு சிங்கள பெயர்களை சூட்டுகின்றனர். விகாரைகளை அமைக்கின்றனர். வெசாக், பொசோன் பௌர்ணமி நாட்களில் தானம் வழங்குகின்றனர். நாம் முன்னர் இருந்த காலத்தில் இருந்த பெயர்கள் அந்த கிராமங்களில் இல்லை. சிங்களவர்கள் எவரும் இல்லாத கிராமங்களுக்கு சிங்கள பெயர்களை சூட்டுவதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமானால், விகாரைகளை அமைப்பதை ஏற்றுக்கொள்ளுமானால், தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசல் இருப்பதை ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது?. அப்படியானால் அதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தற்போது அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் பிரச்சினை உள்ளது. அவ்வாறு அங்கு செல்பவர்களில் 75 வீதமானவர்கள் தமிழர்கள். தற்போது போர் முடிந்து விட்டது. சமாதானம் நிலவுகிறது என்றே கூறுகின்றனர். அப்படியானால் ஏன் அவர்கள் செல்கின்றனர். இங்கு (தெற்கில்) போல் அல்ல வடக்கு கிழக்கில், அங்கு ஆட்சி செய்வது இராணுவம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், காவற்துறைக்கு அல்ல இராணுவ முகாமுக்கு சென்றே முறையிட வேண்டும். இராணுவத்தினால் தீர்க்க முடியாது போனால் மாத்திரமே காவற்துறையினரிடம் செல்ல வேண்டும்.
அடுத்தது, வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் புகைப்படம் ஒன்றை எடுத்து வீட்டில் மாட்டி வைக்க வேண்டும். இராணுவ அதிகாரி வந்தால், அவர் எங்கே இவர் எங்கே என விசாரிப்பார். இந்த மக்கள் இவ்வாறு இருப்பதை விட வெளிநாடுகளுக்கு செல்வது மேலென நினைக்ககூடும்.
தற்போது, இந்த பிரச்சினையை சிங்களவர், தமிழர், முஸ்லிம் என தனித்தனியாக தீர்க்க முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் இணைந்து இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். இப்படி பேசுவதால் என்னையும் அச்சுறுத்தக் கூடும். எனினும் நாங்கள் இதனை பேச வேண்டும். இன்று நாம் வாய்களை மூடி கொண்டிருந்தால், இந்த நிலைமை தொடரும்.
இன்னும் 15 வருடங்களில் நாங்கள் இருக்க போவதில்லை. அப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு விடுதலைப்புலிகள் யார் என்பது தெரியாது. போர் இருந்ததா என்பதை கூட அறிந்திருக்க மாட்டார்கள். இந்த பிரச்சினை தெரியாது. இன்று நாம் வாய்களை மூடிக் கொண்டிருந்தால், இன்னும் 15 வருடங்களில் விடுதலைப்புலிகள் மீண்டும் உருவாகுவார்கள் எனவும் கிருபாகரன் கூறியுள்ளார்.

29 செப்டம்பர் 2012

லண்டனில் இன்று தியாக தீபம் திலீபனின் 25 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

1987 ம் ஆண்டு மக்கள் புரட்சிக்கு வித்திட்டு அகிம்சை எனும் சொல்லுக்கு சரியான அர்த்தம் கொடுத்து உலகையே வியக்கவைத்து தன் உயிரிலும் மேலாக நேசித்த மக்களுக்காக நீராகரம் கூட அருந்தாது பன்னிரண்டு நாட்கள் தியாகப் போர் புரிந்து வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் லெப்.கேணல். திலீபன் அவர்களின் 25 ஆம் ஆண்டை முன்னிட்டு லண்டனில் நினைவுவணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
29.09.2012 இன்று சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் மாலை 9:00 மணிவரை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள Nower Hill High School. George V Avenue. Pinner. HA55RP எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சுதந்திரத் தமிழீழ திருநாட்டின் விடுதலைக்காய், தன் உயிர் ஈந்து வீரச்சாவைத் தழுவிய அந்த தியாகச் செம்மல் தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்றி மலர்கொண்டு சிரம்தாழ்த்தி வணங்கிட அனைத்து பிரித்தானியா வாழ் தமிழர்களையும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-நிகழ்வு ஏற்பாபட்டுக் குழு-

28 செப்டம்பர் 2012

தமிழரைச் சுட்ட தீ இன்று சிங்களத்தை மீளச் சுடுகிறது!

ஈழத் தமிழர் தேசத்தின் மீது சிங்களம் மூட்டிய தீ இன்று சிங்களத்தையே மீளச் சூழத் தொடங்கியுள்ளது. தமிழரைச் சிங்களம் சுட்ட தீ இன்று சிங்களத்தை மீளச் சுடுகிறது. சிங்கள அரசின் தலைவர் சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ச செல்லும் இடமெங்கும் அவரை இத் தீ கலைத்து கலைத்துத் துரத்துகிறது. இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுநவாதன் ருத்ரமாரன் இராஜபச்சவின் ஐக்கிய நாடுகள் சபை விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக விடுத்த ஊடக அறிக்கையில் குறிப்பட்டுள்ளார்.
இவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
மகிந்த இராஜபக்ச தனது ஜக்கிய நாடுகள் சபைக்கான பயணத்தை இரத்துச் செய்ய வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளார். தமிழ் மக்களின் எதிர்ப்பினையும் அனைத்துலக அழுத்தங்களையம் ஒரு சேர எதிர் கொள்ள வேண்டியிருந்த சூழலிலேயே இவரது பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இது தற்செயலானதொன்றல்ல. முக்கியமான கருமம் ஒன்றுக்காக கைவிடப்பட்ட பயணமும் அல்ல. இது ஒரு அரசியல் முடிவு. அனைத்துலக சமூகத்தின் மத்தியில் தமிழர் தேசத்துக்கு இழைத்த கொடுமைகள் குறித்து கேள்விக்குள்ளாக்கபடுவதைத் தவிர்ப்தபதற்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவு. சிங்கள அரசாங்கம் அனைத்துலக சமூகத்தின் மத்தியல் அந்நியப்பட்டு வரும் நிலையினை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு.
இம் மாத நடுப்பகுதியில் மகிந்த இராஜபக்ச இந்தியா சென்றபோதும் தமிழரைக் கொன்ற தீ அவரைத் துரத்தியது. தமிழரைக் கொன்ற கொலைகாரனை இந்திய மண்ணில் அனுமதிக்காதே என்று நீதிக்குரல் எழுப்பியவர்று தனக்குத்தானே தீ மூட்டி விஜயராஜ்; என்ற தமிழினப் போராளி தனது உயிரை ஈகம் செய்து இராஜபக்சவுக்கெதிரான உலகத் தமிழினத்தின் எதிர்ப்பை உயிர்ப்பாய் வெளிப்படுத்தினான். நமது நெஞ்சங்களிலெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்திய இத் தியாகிக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தலைவணங்கி வணக்கம் செய்கிறது.
இராஜபக்சாவின் இந்திய வருககைக்கு எதிரப்புத் தெரிவித்து மத்தியப்பிரதேசம் வரை தனது தோழர்களுடன் அணிவகுத்துச் சென்று தமிழகத்தினதும் உலகத் தமிழர்களதும் உணர்வுகளை இந்திய தேசமெங்கும் வெளிப்படுத்திய மறுமலர்ச்சிக் திராவிடர் கழகத் தலைவர் வைகோ மற்றும் தோழர்கள், சென்னையில் அமைந்திருந்த சிறிலங்கா துணைத்தூதுவராலயம் முன்பாகப் போராட்டம் நடாத்திய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் தோழர்கள், இராஜபக்சவின் வருகையினை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடாத்திய நாம் தமிழர் இயக்க மற்றும் வாழ்வுரிமைக்கட்சித் தோழர்கள்; உட்பட இராஜபச்சவின் இந்திய வருகைக்கு எதிராகப் போராடிய அனைத்துத் தமிழன உணர்வாளகளதும் கரங்களையும் நாம் தோழமையுடன் பற்றிக் கொள்கிறோம்.
இராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் ஒரு தனமனிதனுக்கு எதிரானத போராட்டமல்ல. வெறும் உணர்சிமயப்பட்டு மேற்கொள்ளப்படுமொன்றுமல்ல. இது சிங்கள அரசுக்கு எதிரான போராட்டம். தமிழர்களைக் கொன்றொழித்த சிங்களத்தின் தலைவனும் தளபதியும் இராஜபக்சவேதான். மானுட உலகம் வெட்கித் தலைகுனியும் வகையில் நடைபெற்ற மனிதப்படுகொலையினை நிகழ்த்தி முடித்த அரச இயந்திரத்துக்கு தலைமை வகித்தவரும் இவரேதான். இதனால் இராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் ஓர் அரசியல் இலக்குக் கொண்டது. சிங்கள அரசுக்கு சார்பாக இருக்கும் அனைத்துலக நாடுகள் தமது வெளியுறவுக் கொள்கையினை மீளப்பரிசீலனை செய்யவும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவும் கோரும் முனைப்புக் கொண்டது.
அரசுகளில் தமது சுயஇலாபம் கொண்டு இயங்கும் நிலை கொண்டவை என்பதால் இவற்றின் வெளியுறவுக் கொள்கைளில் மாற்றம் ஏற்படுத்துவதும் இலகுவானதல்ல. எனினும் இது என்றும் சாத்தியமாகமுடியாத விடயமும் அல்ல. இந்திய அரசின் வெளியறவுக் கொள்கைக்கும் இது பொருந்தும். உள்நாட்டுச் சூழல் ஒரு நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைகளில் மாற்றத்தை எற்படுத்தும் வல்லமை கொண்டது என்பது இன்று பலராலும உணரப்படுகிறது. இச் சூழலில் நமது பிரதான பணி அனைத்துலக அரசுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் சிங்களதுக்கு எதிரானதும் நமக்குச் சாதகமானதுமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நமது செயற்பாடுகளை முன்னெடுப்பதே. இவ் விடயத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டில் நமக்குச் சாதகமான மாற்றம் ஏற்படின் அது அனைத்துலக அரங்கில் நமக்குச் சாதகதான மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் தமிழகத்தின் தற்போதய முக்கியமான பணி இந்திய அரசின் நிலைப்பாட்டில், வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முறையில் வியூகம் அமைத்துச் செய்படுவதாகத்தான் அமைய முடியும்.
தமிழீழ விடுதலைப்போர் தற்போது அடைந்துள்ள காலகட்டம் நிதானமான அரசியல் இராஜதந்திர நகர்வுகiளையே மையமாகக் கொண்டுள்ளது. இது நாம் விரும்பும் வேகத்தில் கருமங்களை வென்றெடுப்பதற்கான வாய்ப்புக்களை உடனடியாகத் தந்து விடாது. உரிய சூழலுக்கும் தருணத்துக்கும் காத்திருக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்கு மிகுந்த சகிப்புத்தன்மையும் பொறுமையும் தேவைப்படும். இதேவேளை மிகுந்த உறுதியும் அதிகாரத்துக்கு பயந்தோ பணிந்தோ தலைவணங்காத பண்பும் சாமர்த்தியமாக காய்களை நகர்த்தும் ஆற்றலும் அவசிமானதாக இருக்கும். நமது சுதந்திரரமான கௌரவமான வாழ்வக்கு சுதந்திரத் தமிழீழ அரசினை அமைத்தலே ஒரேவழி என்பதிலும் நாம் உறுதி கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
அமைதி வழியில், நீர்கூட அருந்துர்து உண்ணாநோன்பிருந்து தனது உயிரை உருக்கி நமது தேசத்துக்கு அரசியல் வலுவூட்டிய தியாகி திலீபனின் 25வது ஆண்டு நினைவுதினத்தை உலகத் தமிழனம் நினைவுகூரும் இவ்வேளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தியாகி திலீபனுக்கு தனது வீரவணக்கத்தைச் செலுத்தி நிற்கிறது. அமைதிவழியில் நாம் தொடரும் விடுதலைப் பணயத்ணத்துக்குத் தேவையான ஆன்மபலத்தையும் உறுதியையும் திலீபனின் நினைவுகள் என்றும் நமக்கு வழங்கிக் கொண்டேயிருக்கும்.
இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுநவாதன் ருத்ரமாரன் விடுத்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுடன் உலகத்தமிழர் பேரவை பேச்சு!

இலங்கை நிலைமை குறித்து GTF தென் ஆபிரிக்காவுடன் பேச்சுவார்த்தைஇலங்கை நிலைமைகள் குறித்து உலகத் தமிழர் பேரவை அமைப்பு தென் ஆபிரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.உலகத்தமிழர் பேரவை  அமைப்பின் சார்பில் அருட்தந்தை எஸ்.ஜே. இமானுவெல் அடிகளார் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தென் ஆபிரிக்க அரசாங்கப் பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகக் குறப்பிடப்படுகிறது. இலங்கைத் தமிழர்களின் நிலைமைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச சுயாதீன விசாரணைகளின் மூலம் மட்டுமே குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென உலகத் தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவினால் செய்யப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ள தமிழர் பேரவை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிட்டும் வரையில் உலகத் தமிழர் பேரவை அமைப்பு தொடர்ச்சியாக சர்வதேச நாடுகளுடன் இந்த விடயம் குறித்து வலியுறுத்தி வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தாயகம்,தேசியம்,சுய நிர்ணயம் ௭ன்பவற்றையும் ஐ.நா.சபை அங்கீகரிக்க வேண்டும்",மனோ

அரசாங்கம் தற்போது வட மாகாணத்தில் இருந்து பல தமிழ் கிராமங்களை அழித்துக்கொண்டிருக்கின்றது ௭ன்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றம்சாட்டினார். தமிழ் மக்களின் காணி இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படுவதை ௭திர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும்அங்கு கருத்து தெரிவித்த அவர்:
மருதநகர், கிருஷ்ணபுரம், இரணைதீவு ஆகிய கிராமங்கள் திட்டமிட்ட முறையிலே வட மாகாண வரைபடத்தில் இருந்து அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கேப்பாபிலவு கிராமம் கூட இன்று வரை படத்தில் இருந்து அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றமை அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு தமிழ் கிராமங்கள் அகற்றப்படுகின்றன ௭ன்றால் தமிழர்களது இருப்பு, வரலாறு, பாரம்பரியம், கலாசாரம் ௭ன்பனவும் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன ௭ன்பதுதான் பொருள். சுவரின்றி சித்திரம் வரைய முடியாது. அந்த வகையில் ௭மது சுவர் ௭மது மண்.
௭னவே மண்ணிருந்தால்தான் நாம் ஓர் இனமாக வாழ முடியும். நாம் ஒரு இனமாக வாழக்கூடாது. வாழ முடியாது ௭ன்ற அகங்காரம் காரணமாகத்தான் மஹிந்த அரசாங்கம் தமிழர்களை அவர்களது கிராமத்திற்கு செல்ல முடியாது தடுத்துக் கொண்டிருக்கின்றது.
யுத்தம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகின்றன. அண்மையில் கிளிநொச்சியில் வைத்து, தெற்கில் வாழும்மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை வடக்கு மக்களும் அனுபவிப்பதாக ஜனாதிபதி சொல்லியிருக்கிறார். ஆனால் தெற்கில் வாழும் சிங்கள, முஸ்லிம் மக்கள் பெற்றுள்ள சுதந்திரம் வடக்கில் மக்கள் அனுபவிக்கவில்லை ௭ன்பது கண்கூடு.
ஆயினும் தமிழர்கள் சொந்த மண்ணுக்கு செல்லமுடியவில்லை. சொந்த மண்ணில் விவசாயம் செய்ய முடியவில்லை. தெற்கில் வாழும் மக்களுக்குள்ள சுதந்திரங்கள்அனைத்தும் வடக்கில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்காகத்தான் நாம் ஜனநாயக ரீதியாக போராடிக் கொண்டிருக்கின்றோம். தமிழர்களை பொறுத்தவரை ௭மக்குள்ள ஒரே வழி ஜனநாயக ரீதியாக ௭மது உரிமைக் குரலை ஒலிக்க செய்வதுதான் ௭ன்றார். ஸ்ரீதரன் ௭ம்.பி. உரை இங்கு உரையாற்றிய கூட்டமைப்பு ௭ம்.பி. ௭ஸ். ஸ்ரீதரன், காணாமல் போனவர்கள் தொடர்பாக ௭ங்கள் மக்களுக்கு ஒரு பதிலை சொல்ல வேண்டும்.
௭ங்களுடைய தாயகம் ௭ங்களுடைய தேசியம், சுய நிர்ணயம் ௭ன்பவற்றையும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும். தமிழர்கள் இந்த மண்ணிலே அநியாயமாக கொல்லப்படுகின்றார்கள். தமிழர்கள் இந்த மண்ணிலே புதைக்கப்படுகின்றார்கள். அவர்களுடைய நிலம் அபகரிக்கப்படுகின்றது. இது அவர்கள் நிர்மூலம் ஆக்கப்படுகின்றார்கள் ௭ன்பதனை ௭டுத்துக்காட்டுகின்றது. ௭னவே இவற்றை சர்வதேசத்திற்கு கொண்டு வருவது தொடர்பாகவே நாம் இந்த போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். தொடர்ந்தும் ௭மது இனத்தின் விடுதலைக்காகவும் ௭மது இனத்தின் வாழ்வுக்காகவும்தொடர்ந்தும் போராட்டங்களை தமிழர் பகுதியெங்கும் நடத்துவோம் ௭ன்றார்.
ஆர்ப்பாட்டத்தின்போது கருத்து தெரிவித்த கூட்டமைப்பு ௭ம்.பி. விநோ னோகராதலிங்கம், இந்த அரசாங்கம் ௭மது தாய்க் குலத்தின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஏனென்று சொன்னால் நாம் ௭மது மக்களுக்காக பல்வேறு முறையில் போராட்டங்களை நடத்துகின்றோம். அங்கு வரும் மக்கள் தமது உறவுகளை காணவில்லை ௭ன கண்ணீரும் கம்பதையுமாக பங்கேற்கின்றனர்.
இருந்தபோதிலும் போராட்டங்கள் ஏதோ ஒரு வழியில் நசுக்கப்படுகின்றன. ஆனாலும் இவர்கள் விடும் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இந்த மக்களின் குரல்களும் உரிமைக் கோரிக்கைகளும் அரசாங்கத்திடம் சென்று விடக்கூடாது ௭ன்பதில் பலரும் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர். ௭னினும் ௭மது போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும். அது பரவலடையும். ௭மக்கான தீர்வு கிட்டும் வரை நாம் ௭மது போராட்டங்களை கைவிடப் போவதில்லை ௭ன்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அங்கு உரையாற்றுகையில், தமிழ் மக்களின் நியாமான கோரிக்கைகளையும் அவர்களின் உரிமைகளையும் கொடுக்க அரசு மறுத்து வருகிறது. கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான், மருதநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ் மக்களுடைய காணிகளில் இராணுவத்தினர் அடாத்தாக முகாமமைத்துள்ளனர்.
தமிழர்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வகை தொகையின்றி தமிழ் இளைஞர்களை கைது செய்துள்ளனர். தமிழ் இளைஞர்கள் காணாமல் போயுள்ளனர். இவற்றை இந்த அரசு மூடி மறைக்கின்றது. ௭னவே இவ்வாறான நடவடிக்கைகளுக்குத் தீர்வுகாண பொது மக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது தற்போதைய தேவையாக உள்ளது ௭னத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் தனது உரையில், இவ்வாறான போராட்டங்கள் மூலமாகவே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கும் அவர்களது உரிமைகளைப் பெறுவதற்கும் வழிபிறக்கும் ௭ன்றார்.

27 செப்டம்பர் 2012

மாற்றங்கள் இல்லையேல் கடும் விளைவுகளை இலங்கை சந்திக்கும்!

எங்கும் இராணுவ பிரசன்னமாகவே உள்ளது. நாட்டின் வடபகுதியில் நாம் பார்த்தோம், கிழக்கிலும் பெரும் பகுதிகளில் அதுவே உண்மையாக உள்ளது. மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டோம் எனக் கூறும் எந்தவொரு நாட்டிலும் இத்தகைய இராணுவப் பிரசன்னம் நியாயப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. மாற்றத்தை இலங்கை வெளிப்படுத்த வில்லையென்றால் கடுமையான விளைவுகளை அது சந்திக்க வேண்டிவரும்.
இவ்வாறு இலங்கையில் நிலைமைகளை கண்டறியும் கனேடிய அரசின் உத்தியோகபூர்வக் குழுவில் அண்மையில் இங்கு வந்து திரும்பிய கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஸ் அலெக்ஸ்டாண்டர் தெரிவித்துள்ளார்.
கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
இலங்கை விடயத்தில் பிரதமர் காப்பர், வெளிவிவகார அமைச்சர் ஜொன் பெயாட், மற்றும் அரசில் உள்ள ஏனையவர்கள் அதீதமான பல கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அந்தக் கரிசனை இலங்கை குறித்த எமது செயற்பாடுகளில் வெளிப்படுகிறது. மனித உரிமைகள் பெருமளவில் இலங்கையில் மதிக்கப்படவில்லை.
அது இல்லாமல் சமாதானம் என்பது சாத்தியப்படாத ஒன்று. எமக்கு கரிசனையுள்ள பல விடயங்கள் குறித்து காத்திரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாதவரை எமது நோக்கில் நிலைமைகள் ஏற்புடையதாக இருக்காது.
பொலீஸ் மற்றும் உள்ளுர் சிவில் நிர்வாக்கக்கட்டமைப்புக்கள் மிகவும் பலவீனமாக உள்ளன. உள்ளுர் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்து காத்திரமான பல அறிக்கைகள் தொடர்ந்தும் வந்த வண்ணமுள்ளன. மக்கள் காணாமல் போகின்றனர். மக்கள் ஏதோ ஒரு வழியில் எழுந்தமான தடுப்புக் காவலை எதிர்கொள்கின்றனர் அல்லது எழுந்தமான துன்புறுத்தல்களை அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருந்து எதிர்கொள்கின்றனர்.
இந்த விடயங்களை நாம் இலங்கை பயணத்தின் போது எழுப்பினோம். நாங்கள் இது குறித்த நடவடிக்கைகளை எதிர்பார்க்கின்றோம். இது குறித்த நடவடிக்கைகள் குறித்து நீண்ட காலமாக வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இந்த கோடையிலும் அரசு ஒரு புதிய செயல்திட்டத்தை வெளியிட்டது. ஆனால் தளத்தில் எந்தவொரு மாற்றத்தையும் இது வெளிப்படுத்தவில்லை.
இந்த நிலைமை எமக்கு ஆழ்ந்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட நிலைமைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லையாயின், எமது கனடிய பிரதமர் அடுத்த வருடம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தயாரில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளார்.
எதிர்பார்க்கின்ற மாற்றங்கள் எதனையும் நாம் இதுவரை காணவில்லை. இலங்கையில் இரு தரப்பிலும் நீண்டகாலப் போரில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் குறிப்பாக தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக 2009இல் முல்லைத்தீவு, கிளிநொச்சியில் நடைபெற்ற இறுதிப்போரில் பெருமளவில் தமிழ் மக்கள் கொல்லக்பட்டுள்ளனர். இதில் பலியானவர்களின் குடும்பங்கள், காயமடைந்தோர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆகியோர் என்ன நடந்தது என்பதை அறிய உரித்துடையவர்கள். யார் இறந்தார்கள்? அவர்களுடைய சடலங்கள் எங்கு உள்ளன?
என்ன நடந்தது? என்பதைக் கண்டறிய எந்தவித காத்திரமான முயற்சிகளும் செய்யப்படவில்லை. இது தமிழர்களுக்கு மட்டும் கடினமான விடயம் அல்ல, இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும், சர்வதேச பங்காளர்களுக்கும் இலங்கையின் இருண்ட சரித்திரத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர அத்தியாவசியமாகின்றது.
மக்கள் ஒரளவு இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும், முழுமையான இயல்புநிலையை எட்ட இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. மக்கள் தங்கள் முன்னைய வாழ்விடங்களுக்கு திரும்புகின்ற போது ஒன்றில் அவர்கள் வதிவிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது எரிக்கப்பட்டுள்ளன அல்லது காணிப்பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றனர். இது ஒரு வலியுள்ள திரும்புகையாக அமைகின்றது.
இலங்கை விடயத்தில் ஒரு காத்திரமான சர்வதேச அணுகுமுறை இல்லை. கடந்த இலைதளிர் காலத்தில் ஜெனிவாவில் இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒரு கடுமையான செய்தியை சொல்லியுள்ளது. தொடர்ந்தும் இது குறித்து ஏனையவர்களுடன் பேசவேண்டும்.
மாற்றத்தை இலங்கை வெளிப்படுத்தவில்லையென்றால் கடுமையாளன விளைவுகளைஅது சந்திவேண்டிவரும். நீதியில்லாத சமாதானம் ஒருபோதும் நீண்ட கால அமைதியைக் கொண்டுவராது, அதுவே உலகின் பெரும்பாலான பகுதிகளில் கற்றுக்கொண்ட பாடம் என்றார்.

26 செப்டம்பர் 2012

தேசத்தின் குரலின் பாரியார் மீது நடவடிக்கைக்கு கோருகிறதாம்சிங்களம்!

ஆறாயிரம் தமிழ் பெண்களை பயங்கரவாத செயற்படுகளில் ஈடுபடுத்துவதற்காக, விடுதலைப்புலிகள் அமைப்பில் அவர்களை கட்டாயமாக சேர்த்த அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக போர் குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கம், பிரித்தானியா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான பல சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அரசாங்கம்; கூறியுள்ளது.
அடேல் பாலசிங்கம் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளார். தற்கொலை குண்டு தாக்குதல்களை அங்கீகரித்து அவர் ஆற்றிய உரை அடங்கிய பதிவுகள் வன்னி பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என திவயின தெரிவித்துள்ளது.

25 செப்டம்பர் 2012

பதவிக்காக வாழமாட்டேன்,தமிழீழ விடுதலைக்காக போராடுவேன்",வைகோ

நான் பிறரைப் போன்று பதவிக்காக வாழவில்லை. தமிழீழ விடுதலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற இலட்சியத்துக்காக போராடுவேனே தவிர பதவிக்காக எப்போதும் உயிர் வாழ மாட்டேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சேலத்தில் கூறினார்.
சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா, இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 17-ம் தேதி தீக்குளித்தார்.
பலத்த தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி 18-ம் தேதி இறந்தார்.
ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக, மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்த வைகோ ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பினார்.
அவர் விஜயராஜாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, சேலம் நெத்திமேடுக்கு நேற்று திங்கட்கிழமை மாலை வந்தார்.
திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உள்ளிட்டோருடன் விஜயராஜாவின் வீட்டுக்குச் சென்ற வைகோ, சுமார் ஒரு மணி நேரம் அவரது பெற்றோர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சமூக நீதிக்காக பாடுபட்ட பெரியாரின் பிறந்த நாளில், ஈழத் தமிழர்களின் நீதிக்காக தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜாவுக்கு அவரது பிறந்த நாளன்றே இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.
விஜயராஜா உயிரிழந்த தகவல் கிடைத்ததும் சாஞ்சியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மதிமுக தொண்டர்கள் சார்பில் அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.
நான் பிறரைப் போன்று பதவிக்காக வாழவில்லை. தமிழீழ விடுதலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக போராடுவேனே தவிர பதவிக்காக எப்போதும் உயிர் வாழ மாட்டேன் என்றார் வைகோ.
முன்னதாக, விஜயராஜா எழுச்சி இயக்கத்தின் பெயர்ப் பலகையை வைகோ திறந்து வைத்தார்.
பின்னர் விஜயராஜாவின் பெற்றோர், சகோதர, சகோதரிகளுக்காக மதிமுக சார்பில் ரூ.2.25 லட்சம் நிதியுதவியை வைகோ வழங்கினார்.
மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, சேலம் மாவட்டச் செயலர் தாமரைக் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

24 செப்டம்பர் 2012

தமிழ் ஈழம் நிச்சயம்.. கலாமின் ஆலோசகர் பரபரப்புப் பேச்சு!

 Tamil Eelam Will Born Says Kalam Adviser Ponraj இலங்கையில், இந்தியா, அமெரிக்காவில் உள்ளதைப் போன்ற ஜனநாயக அமைப்பு, நடைமுறை வராவிட்டால் நிச்சயம் தமிழ் ஈழம் அமையும். அதை யாராலும் தடுக்க முடியாது. அப்படி தமிழ் ஈழம் அமைந்தால் அது இந்தியாவின் நட்பு நாடாகவே திகழும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகரான பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாமின் ஆலோசகர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனது அறிக்கையில் ராஜபக்சேவை எதிர்த்து வைகோ ம.பியில் நடத்திய போராட்டத்திற்கும் பொன்ராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பொன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய பிரதேசம் மாநிலத்தில், புத்தமத பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்ட வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கறுப்பு கொடி காட்டுவதற்கு தமிழகத்தில் இருந்து வைகோ தலைமையில் பலர் சென்று அங்கு கைதாகியுள்ளனர். இதுபோன்ற ஒரு போராட்டம் உலக வரலாற்றில் இதுவரை நடந்தது இல்லை.
இந்த போராட்டத்தினால், இலங்கையில் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை பிற மாநிலத்தவர்கள் உணர்ந்துள்ளனர். முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் காலம் முதல், இலங்கை தமிழர்களின் அகிம்சை வழி மற்றும் ஆயுதம் ஏந்திய போராட்டங்களின் வரலாற்றை உயர் அதிகாரிகள் திரித்துக் கூறிவருகின்றனர்.
இதனால், பெரும்பான்மையான வடமாநில தலைவர்கள், ஈழத் தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்கள் இல்லை என்று தவறாக நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், புராண காலம் முதல் இலங்கையில் தமிழர்கள் வசிக்கின்றனர் என்பதை ராமாயணம் நிரூபிக்கிறது. எனவே இலங்கை அரசின் மனித தன்மையற்ற செயலையும், ஈழத் தமிழர்களின் நியாயமான போராட்டத்தையும், நாமெல்லாம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வடமாநில தலைவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.
இந்த பணியை வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செய்து முடிக்கவேண்டும். இல்லையென்றால், நாட்டின் முக்கிய பொறுப்புக்கு வரவுள்ள அடுத்த தலைவருக்கும், இலங்கை தமிழர்களின் போராட்டத்தை உயர் அதிகாரிகள் திரித்துக்கூறிவிடுவார்கள். இதனால், புதிதாக தலைமை ஏற்கும் தலைவரும், ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபடக்கூடும்.
இலங்கை தமிழர்களின் நியாயமான போராட்டத்தை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு மிகப்பெரிய தேசிய தலைவரை காண்பது அரிதாக உள்ளது. எனவே, தமிழக அரசியல் தலைவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, இலங்கையுடன் இந்தியா மேற்கொண்டு வரும் வெளிவிவகார கொள்கைகளை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும். ஜனநாயக முறையை அமலுக்கு கொண்டு வர இலங்கைக்கு கொஞ்சம்கூட விருப்பம் இல்லை. பொதுத்தேர்தலில், தமிழ் தலைவர்கள் வெற்றி பெறுவதை தடுக்கும் விதமாக, தமிழர்கள் குடியிருப்பு பகுதிகளில் எல்லாம் சிங்களவர்களை குடியமர்த்துகின்றனர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்தியதற்கு, இலங்கை அரசுதான் முக்கிய காரணம். விடுதலைப்புலிகளை தவிர, உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும், ஒழுக்கம், தியாகம் கொண்ட மூப்படை ராணுவத்தை கொண்டிருக்கவில்லை.
இந்தியாவை தூண்டில் போல் பயன்படுத்திக்கொண்டு, அரசியல், பொருளாதார, ராணுவ உதவிகளை எல்லாம் இலங்கை பெற்று அனுபவிக்கிறது. அதே நேரம், சீனாவின் தீவிர நட்பு நாடாக இலங்கை திகழ்கிறது. இந்த விஷயத்தில், இந்தியாவின் வெளிவிவகார கொள்கை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
சீனாவின் அச்சுறுத்தல், மிரட்டல் ஆகியவைகளை எதிர்க்க இந்தியாவுக்கு பலம் இருந்தும், வெளிவிவகார கொள்கையில் தோல்வியடைந்துள்ளதால், அண்டை நாடுகள், இந்தியாவுடன் நல்ல உறவுகளை வைத்துக்கொள்வது இல்லை. இதனால், அந்த நாடுகள் சீனாவை துருப்பு சீட்டாக பயன்படுத்தி, இந்தியாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மிகப்பெரிய நாடாக இருந்தும், கேலிக்கூத்தான வெளிவிவகார கொள்கையை வைத்துள்ளதால், இந்தியாவை இலங்கை வஞ்சித்து ஏமாற்றுகிறது.
ஆசிய கண்டத்தில், மிகப்பெரிய சக்தியாக திகழும் இந்தியாவும், சீனாவும் எதிர்காலத்தில் உலக பொருளாதாரத்தின் 60 சதவீத பங்களிப்பை கொண்டு இருக்கும். இதனால், இந்தியாவை ஒருபோதும் எதிரி நாடாக சீனா கருதாது. ஆனால், இலங்கையுடன் பொருளாதார உறவுகளை கொண்டுள்ள சீனா எதிர்காலத்தில், ராணுவ தளத்தை இலங்கையில் அமைக்கும்.
எனவே, இலங்கைக்கு இந்தியா உதவி செய்வதை நிறுத்தவேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில், அது உள்நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரம், இலங்கையில் அரசியல் தீர்வுகாண இந்தியா முயற்சித்தால், அதை ஒருபோதும் சீனா எதிர்க்காது. எனவே இலங்கையில் ஜனநாயகம் மலர இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தமிழக அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, ஆலோசனை நடத்தி, இந்திராகாந்திக்கு பின் இந்திய அரசு மேற்கொண்டு வரும் வெளிவிவகார கொள்கையை மாற்றியமைக்க செய்யவேண்டும். இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜனநாயக முறையை இலங்கையில் ஏற்படுத்த வேண்டும். இது ஒன்றே இலங்கை தமிழர்களுக்கு நம்மால் வழங்கக்கூடிய உடனடி தீர்வாகும். இதன்பின்னரும், இந்த ஜனநாயக முறையை இலங்கை அரசு ஏற்கவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை பூமியில் உள்ள எவராலும் தடுக்க முடியாது.
அதே நேரம், தொலைநோக்கு பார்வை கொண்ட அரசியல் தலைவர் முக்கிய பதவிக்கு வந்து, இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை மாற்றி அமைத்துவிட்டால், தனி ஈழம் என்ற கனவு நிறைவேறுவது நெடுந்தொலைவில் இல்லை. இந்த கனவு நிறைவேறினால், தமிழ் ஈழம் நாடு, இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும்.
இந்த தேசத்தின் நல்ல மனிதர்களுடன் என் தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்காக இதையெல்லாம் கூறுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவ நிர்வாகமே நடைபெறுகிறது; விக்கிரமபாகு கருணாரத்ன குற்றச்சாட்டு.

newsவடக்கில் சிவில் நிர்வாகம் நடைபெறவில்லை முழு மை யாக இராணுவமே நிர்வாகமே நடைபெற்று வருவதாக நவ சமச மாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கரு ணா ரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் வடபகுதி தமிழ் மக்க ளு க்கு சிவில் நிர்வாகம் வழங்க ப்பட் டுள் ளதாக அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. ஆனால் அங்கு நேரில் சென்று பார்த்தால் உண் மையை புரிந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கேப்பாப்பு ல வில் தமிழ் மக் கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை இரா ணு வம் பலாத்காரமாக பறித்தெடுத்து ள் ளது. அதனை மக்களுக்கு வழங்குமாறு வலியு றுத்தி நாம் ஜனநாயக ரீதியில் ஆர்ப் பா ட்டம் நடத்தினோம்.
இதன்போது பொ லி ஸா ரும் பெரு மள விலான இரா ணு வ மும் காவல் கடமை யில் ஈடுபட்டிருந்தனர். அவ் வாறானதோர் சூழ் நிலையில் ௭ம்மீது ‘௭ன்ஜின் ஒயில்’ தாக்குதல் நடத்தப்பட்டது. கல்வீச்சு இடம்பெற்றது. அனைத்தும் இரா ணுவ பாதுகாப்புடனேயே இடம் பெ ற்றது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்று வெள்ளை வான் கடத் த லு க்குப் பதி லாக கல் வீச்சும், ௭ன்ஜின் ஒயில் வீச் சும் மக்கள் மீது நடத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

23 செப்டம்பர் 2012

பிரிட்டன் ஆதரவுடன் மற்றொரு தீர்மானம்?

ஐ.நா பொதுச் சபையில் இலங்கைக்கு கண்டனம்! பிரிட்டன் ஆதரவுடன் மற்றொரு தீர்மானம்?ஐ.நா. பொதுச்சபையின் 67ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம் பெறுவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற் கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டனின் ஆதரவுடனேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
ஐ.நா. பொதுச் சபையின் 67ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 19ஆம் திகதி முடிவடைகிறது.
இந்தக் கூட்டத் தொடரிலேயே இலங்கையின் மனித உரிமை விவகாரம் பற்றிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுச் சபைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத்தின் மூன்றாவது அமர்விலேயே இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சிகள் நடப்பதாகத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாகப் பிரிட்டன் அரசின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று நியூயோர்க்கில் ஐ.நாவின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு எதிரான இந்தத் தீர்மானம் எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகதி கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஐ.நாவில் இந்தத் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களில் இலங்கை அரச அதிகாரிகள் பலரும் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏழைகளுக்காக எதையும் கண்டுபிடிக்காத, முதலாளிகளுக்காகப் பேசும் கலாம்!

ஏழைகளுக்கு பயன்படும் எதையும் கண்டுபிடிக்காத முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் அணுஉலைக்கு ஆதரவாக, அரசகட்டமைப்புக்களை தூக்கிநிறுத்தும் முதலாளிகளுக்காகப் பேசுவதில் ஆச்சரியமில்லை என அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமாரன் தெரிவித்துள்ளார். அணுமின் நிலையம் ஏன்வேண்டாம் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய விரிவான செவ்வி:

22 செப்டம்பர் 2012

கைதான வைகோ மாலை மரியாதையுடன் விடுதலை!

கைதான வைகோ மாலை மரியாதையுடன் விடுதலைமஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிந்த்வாராவில் 3 நாட்களாகப் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய பிரதேசப் பொலிஸார் கைது செய்து,பின்னர் விடுதலை செய்தது மட்டுமல்லாது பொலிஸார் வைகோவிற்கு மாலை அணிவித்து மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்.போராட்டம் நடத்தச் சென்ற வைகோவை, மத்திய பிரதேச மாநில எல்லையான சிந்த்வாராவில் பந்துர்னா அருகில் உள்ள கட்சிகோலி என்ற இடத்தில் பொலிஸார் தடுத்த நிறுத்தனர்.40 மணிநேரமாக தடுத்து வைக்கப்பட்ட இடத்திலே உண்டு உறங்கி தொடர் போராட்டங்களை வைகோ நடத்தி வந்தார்.இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலையில் சிந்த்வாராவில் ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்துவிட்டு சாஞ்சி நோக்கி தமது தொண்டர் படையுடன் வைகோ புறப்படத் தயாரானார்.அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்களை முன்னேறவிடாமல் தடுத்த மத்திய பிரதேச மாநில பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர்.அங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமண மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்தனர்.இதன் பின்னர் சில மணிநேரம் கழித்து வைகோவை விடுதலை செய்த பொலிஸார் அவருக்கு மாலை அணிவித்து மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்.

ஜனாதிபதி சகிப்புத்தன்மை பற்றி இந்தியாவில் பேசிய வேளையில் - அவரது படைகள் இங்கே எங்களை தாக்கினார்கள்!

பகைமையும், வெறுப்புணர்வும் வன்முறைக்கு எம்மை இட்டு செல்வதால் சகிப்புத்தன்மையே இன்றைய தேவை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்தியாவில் வைத்து கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று சென்று மத்திய பிரதேச சாஞ்சி நகரில் பெளத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டி விட்டு அவர் இந்த மகத்தான கருத்துகள் தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் இதை இந்தியாவில் சொல்லிக்கொண்டிருந்த அதேவேளையில் அவரது இராணுவத்தின் புலனாய்வுதுறை நபர்கள் முல்லைத்தீவில் நாம் நடத்திகொண்டிருந்த ஜனநாயக போராட்டத்தின் மீது சகிப்புத்தன்மையற்ற, வெறுப்புடன் கூடிய வன்முறை தாக்குதல்களை நடத்தினார்கள்.
இந்த குற்றச்சாட்டை எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் பொறுப்புடன் நான் முன் வைக்கின்றேன். என்னுடன் இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெருந்தொகையானோரும் இதற்கு கண்கண்ட சாட்சியாக இருக்கின்றார்கள். முதல் தாக்குதல் நடத்திய நபரை என்னால் அடையாளம் காட்ட முடியும்.
இந்நிலையில் இங்கே யாருடைய உத்தரவின் பேரில், சகிப்புத்தன்மை மறைந்து வெறுப்பும், வன்முறையும் தலைதூக்கியது என இந்த அரசாங்கத்தை நான் கேட்க விரும்புகிறேன், என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்பட தமிழ் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் மேலும் கூறியதாவது, தமிழ் கட்சிகள் மீதான இத்தகைய இராணுவ புலனாய்வுதுறை தாக்குதல்கள் தொடந்து நடைபெறுகின்றன. இது முதன்முறையுமல்ல. கடைசி முறையாகவும் இருக்க போவதில்லை. ஜனநாயக அஹிம்சா போராட்டங்களை சகித்துகொள்ளமுடியாமலேயே இந்த தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, இடதுசாரி முன்னணி ஆகியவை இணைந்து முல்லைத்தீவு கோப்பாபிலவு மக்களை சேர்த்துக்கொண்டு இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த கிராமத்தின் அப்பாவி மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் குடியமர்த்தும்படியும், அந்த பிரதேசத்தில் சுமார் 2 ,500 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து பாரிய இராணுவ முகாம் அமைக்கும் திட்டத்தை கைவிடும்படியும் நாம் கோஷங்களை ஜனநாயக வரம்புக்குள் நின்று எழுப்பினோம்.
கோஷங்களை எழுப்பி, கட்சித்தலைவர்கள் உரையாடிகொண்டிருந்த வேளையில் எம்மீது மாட்டு சாணத்தையும், கழிவு எண்ணெயையும் கலந்து தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் நமது ஜனாநாயக ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்த வேளையில் அந்த இடத்துக்கு வந்த புலனாய்வுதுறை நபர்கள், அசிங்கமாக ஊளையிட்டு கூச்சல் எழுப்பி பதட்ட நிலைமையை ஏற்படுத்த முயன்றார்கள்.
அதன்பின்னர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வாகனத்தை தாக்கி சேதப்படுத்தினார்கள். இந்த தாக்குதல் சம்பவம் தேராவில் இராணுவ முகாமுக்கு நேர் எதிரில் நடைபெற்றுள்ளது. அதேபோல் இக்கட்சியின் செயலாளர் கஜேந்திரன் செல்வராஜாவின் வாகனமும், அவரது வாகனத்தை துரத்தி வந்த மோட்டார் சைக்கள்தாரிகளால், முள்ளியவளை பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் உரிய காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தாக்குதல்கள் எவரது உத்தரவின் பேரில் நடத்தப்பட்டன என்பதை அறியும் தேவை எங்களுக்கு இருக்கின்றது.
இந்த தாக்குதல்கள் எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வேளையில் நாட்டின் ஜனாதிபதி இந்திய மண்ணில் இருந்து தெரிவித்த மகத்தான கருத்துகள் எம்மை பரவசப்படுத்துகின்றன. மகாத்மா காந்தியையும், டாக்டர் அம்பேத்கரையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். அவர்கள் சொல்லி சென்ற அஹிம்சை, சமாதானம், பரிவு ஆகியவை உள்ளடங்கிய உன்னத செய்திகள இன்று நாம் உலகெங்கும் எடுத்து செல்ல வேண்டும் என அவர் காந்தியின் மண்ணில் இருந்து கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் கோரிக்கையை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அவரது இராணுவத்தினர் ஜனாதிபதி சொன்ன கருத்துகளை ஏற்றுக்கொண்டுள்ளார்களா, என்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். நேற்று நடைபெற்ற தாக்குதல்களை அடுத்து நாம் எமது ஜனநாயக போராட்டங்களை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை. அவை தொடந்து முன்னெடுக்கப்படபோகின்றன. எனவே எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து வன்முறைகளுக்கும் இலங்கை இராணுவமே பதில் சொல்ல வேண்டும்.இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

21 செப்டம்பர் 2012

போராட்டம் நடத்தியோர் மீது கழிவு எண்ணெய் ஊற்றிய விஷமிகள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், கேட்பார்குளம் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும், காணி அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும் காணாமல் போனோர் விடுவிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், செயலாளர் கஜேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன், நவசமசமாஜக்கட்சித் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் மீது கழிவு எண்ணெய் மற்றும் சாணம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

முதலமைச்சை ஐந்து ஆண்டுகளுக்கு அடகு வைத்த ஹக்கீம்! அமைச்சு வேண்டாம் அடம்பிடிக்கும் பிள்ளையான்!

கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நஜீப் அப்துல் மஜீத்தே தொடர்ந்து 5 வருடங்களுக்கும் முதலமைச்சராகப் பதவி வகிப்பாரென அரசின் அதிஉயர் மட்டமொன்று நேற்று உறுதிப்படுத்தியது.
கிழக்கு முதலமைச்சர் பதவி எக்காரணம் கொண்டும் பங்கீடு செய்யப்படமாட்டாதென்றும் அவ்வுயர் மட்டம் சுட்டிக்காட்டியது. கிழக்கு முதலமைச்சர் பதவிக்கு, முதல் இரண்டரை வருடங்களுக்குத் தற்போதைய முதலமைச்சர் நஜீப்பும், மீதி இரண்டரை வருடங்களுக்கு மு.கா. உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்படுவர் என வெளிவரும் தகவல்கள் இந்த அறிவிப்பையடுத்து முடிவுக்கு வருகின்றன.
கிழக்கு முதல்வராக மீதி இரண்டரை வருடங்களும், மு.கா. தனது கட்சி மாகாணசபை உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமதை முன்மொழிந்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இது தொடர்பில் ஏற்கனவே மு.கா. தலைவருக்கு உத்தியோக பூர்வமாக அரசு எடுத்துக்கூறியிருப்பதாகவும், அதனை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அந்த அரச உயர்மட்டம் பிரத்தியேகமாகச் சுட்டிக்காட்டியது.
கிழக்கு மாகாணசபையில் மு.காவுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளை மட்டும் வழங்குவது குறித்தே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதை விடுத்து வேறு எந்தவொரு இணக்கப்பாடும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அந்த உயர்மட்டம் குறிப்பிட்டுக்காட்டியது.
மாகாண முதலமைச்சர்களாக சு.க. சார்பானவர்களே நியமிக்கப்படுவர் என்பது சு.கவின் கொள்கை என்றும் இது அனைத்துத் தரப்பினருக்கும் தெரிந்த விடயமென்றும் அந்த உயர்மட்டம் மேலும் சுட்டிக்காட்டியது.
அதேவேளை, கிழக்கு அமைச்சரவையில் தமிழர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக அரசு அதி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது எனத் தெரியவருகின்றது.
தமிழர் சார்பில் அமைச்சரவையில் ஒருவர் அங்கம் வகிப்பதன் அவசியத்தை கிழக்கு முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், அரசிடம் வலியுறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எனினும், அமைச்சுப் பதவியை தான் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் உறுதியாக அரசிடம் எடுத்துக் கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 செப்டம்பர் 2012

இப்பவாவது வெளியேறிவிடலாமா?: இன்னும் தீவிர யோசனையில் கருணாநிதி

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளலாமா? அல்லது என்னதான் மக்கள் விரோத அரசாங்கமாக இருந்தாலும் எப்பவுமே பங்காளி கட்சியாகவே நீடிப்பதா? என்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி "மிகத் தீவிரமாக" ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிரடியாக விலக்கிக் கொண்டது. இன்று சமாஜ்வாதி கட்சியும் தமது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளது.
இந்த நிலையில் திமுக நிலைப்பாடு என்ன என்பதை அறிவதற்காக நேற்று முழுவதும் கருணாநிதிக்காக செய்தியாளர்கள் காத்திருந்து பார்த்தனர். அங்கு சந்திப்பார்- இங்கு சந்திப்பார் என்று அழைகழிக்கப்பட்டதுதான் மிச்சம்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுத்து அறிவித்த பிறகு செய்தியாளர்களை சந்திக்கலாம் என்று கருணாநிதி கணக்குப் போட்டிருந்தார். ஆனால் அப்படி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.
கருணாநிதியைப் பொறுத்தவரையில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழு அடைப்பில் கலந்து கொண்டதே மிகப் பெரிய விஷயம் என்பதுதான் அவரது கருத்து. சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்ட பிறகு ஆட்சிக் கவிழ்ந்துவிடும் என்று உறுதியாகத் தெரிந்த பின்னர் நாங்களும் ஆதரவை விலக்குகிறோம் என்று அறிவிக்கலாம் என்பதுதான் கணக்கு என்று கூறப்படுகிறது. அதுவரை கருணாநிதி உறுதியாக எந்த ஒரு நிலைப்பாட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றே கூறப்படுகிறது.

தொடர்ந்தும் செறிவான இராணுவப் பிரசன்னம்!

யுத்தம் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் செறிவான இராணுவப் பிரசன்னம் தொடர்ந்தும் நீடித்து வருவதாக இந்திய ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தம் முடிவுறுத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு கிழக்கில் இராணுவப் பிரசன்னம் குறைந்தபாடில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் 19 படைப்பிரிவுகளில் 16 படைப்பிரிவுகள் தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா மூன்று இராணுவப் படைப்பிரிவுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தின் உள்ளகத் தகவல்களின் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எத்தனை படைவீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என்ற துல்லியமான புள்ளி விரபங்கள் வெளியிடப்படாத போதிலும், சுமார் 85000 முதல் 86000 வரையிலான படையினர் வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழர் பிரதேசங்களில் கூடுதலான இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலைமையான தேசிய நல்லிணக்க முனைப்புக்களுக்கு முட்டுக்கட்டையாக அமையலாம் என குறித்த இந்திய ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

பள்ளிவாசல்களை உடைப்பதற்கான அங்கீகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கியுள்ளது!

பள்ளிவாசல்களை உடைப்பதற்கான அங்கீகாரத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான குழுவினரை நம்பி மோசம் போய்விட்டனர் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் மேல்மாகா ணசபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இனி வரும் காலங்களில் முஸ்லிம் சமூ கத் தினர் முஸ்லிம் காங்கிரஸை புறக் கணித் துவிட்டு ஐக்கிய தேசியக்கட்சியை ஆதரிக்க வேண்டும். அமைச்சுப் பதவிகளுக்காக முஸ் லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்து முஸ் லிம் காங்கிரஸாரை வரலாற் றுத்துரோ கிக ளாகவே முஸ்லிம்கள் நோக்குவார்கள் ௭ன்றும் அவர் குறிப் பிட்டார்.
இது குறித்து முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் கூறுகை யில், கிழக்கு மாகாண தேர்தல் மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ௭திரான பிரசாரங்களையே முன்னெடுத்தது. பள்ளிவாசல்களை உடைப்பதை நிறுத்தி ஆளும் கட்சிக்கு ௭திரான சக்தியை கிழக்கு மாகாணத்தில் உருவாக்க வேண்டும். இதற்காக முஸ்லிம் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் ௭ன்று மேடைகளில் பேசிய ஹக் கீம் தேர்தல் முடிந்தவுடன் அரசுடன் இணை ந்து முஸ்லிம்களை காட்டிக் கொடு த்து விட்டார்.
முஸ்லிம்களுக்கு ௭திரான அரசு முன் னெடு க்கும் நடவடிக்கைகளுக்கும் முஸ் லிம் காங்கிரஸுக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை. ௭னவே இனிவரும் கால ங்களில் ஐ.தே.க வின்ஆட்சி ஒன்றுக்காக முஸ் லிம் சமூகத்தினர் செயற்படவேண் டும் ௭ன்றார்.

19 செப்டம்பர் 2012

மஹிந்த,சம்பந்தன் பேசியது இதுதானா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைத் தனியாக அவசரமாக அழைத்து தனிப்பட்ட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். சம்பந்தனை மஹிந்தராஜபக்ச தனியாகச் சந்திக்கும் சந்திப்புக்களில் கூட்டமைப்பின் சார்பில் வேறெவரும் கலந்துகொள்வதில்லை. இந்நிலையில் கிழக்கு மாகாணசபையைக் கைப்பற்றிய மஹிந்த அவசரமாக சம்பந்தனை அழைத்துச் சந்தித்திருந்தார். இருப்பினும் குறித்த சந்திப்புத் தொடர்பில் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.
குறித்த அறிக்கையின் பிரகாரம் நேற்றைய அவசர சந்திப்பில் இவை தானா? பேசப்பட்டிருக்கின்றன? என்ற கேள்வி தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கின்றது. மஹிந்தராஜபக்சவையோ, கோத்தாபய ராஜபக்சவையோ சம்பந்தன் தனிப்பட்ட ரீதியில் சந்திப்பது தொடர்பிலும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையோ புறக்கணிப்பது தொடர்பிலும் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது?
இந்தப் பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்கவிடமிருந்து 17 ஆம் திகதி இரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனுக்கு அழைப்பிதழ் ஒன்று வந்தது. அதில் 18 ஆம் திகதி (நேற்று) காலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டிருந்தது.
இதற்கிணங்க, 18 ஆம் திகதி (நேற்று) காலை ஜனாதிபதிக்கும், சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் கலந்துகொண்டனர்.
இதில் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு இரண்டாமிடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி தம் பாராட்டுதலைத் தெரிவித்துக்கொண்டார். இச்சமயத்தில் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றிருக்குமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முதலிடத்தை ஈட்டியிருக்குமென சம்பந்தன் தெரிவித்துக்கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் பெற்றுள்ள ஆணையைக் கருத்திற்கொண்டு இணைந்து ஆட்சியமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. அத்துடன், முதலமைச்சர் பதவியை அதற்கு வழங்கவும் முன்வந்தது என்றும் சம்பந்தன் இச்சந்திப்பில் தெரிவித்துக்கொண்டார்.
இத்தகைய ஓர் ஏற்பாட்டை ஐ.தே.கவும் ஆதரிக்கக்கூடுமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இச்சமயத்தில் பதிலிறுத்த ஜனாதிபதி, எதிரணியில் அமரவே நான் தயாரானேன். இதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடமும் சுட்டிக்காட்டினேன்.
அதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்த விருப்பத்தையும் குறிப்பிட்டேன். எனினும், இப்போது இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன என்றார்.
சம்பந்தன் தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கிழக்கு மாகாணசபைக்கு 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் எத்தகைய தடையோ, பாரபட்சமோ இன்றி சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்படமுடியும் என்றும் குறிப்பிட்டார்.
இது நடைபெறாவிட்டால் இது தமிழ் மக்களைத் தண்டனைக்குட்படுத்தும் ஒரு காரியமாகவே அமைந்துவிடும். இதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபையின் ஐந்து உறுப்பினர்களைத் திசைதிருப்புவதற்கான நடவடிக்கைகள் கையாளப்பட்டுள்ளன. அரசுப்பக்கம் தாவினால் உங்களுக்கு வாகனங்கள், வீடுகள், பணம், ஒப்பந்தச் சலுகைகள் ஆகியவை வழங்கப்படும் என இவர்களை அணுகிய நபர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள் என்றும் சம்பந்தன் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு அணுகிய நபர்களின் தொலைபேசி இலக்கங்கள், வாகன இலக்கங்கள் ஆகியவற்றின் மூலமாக இவர்கள் இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமே எழுகிறது. அந்த இலக்கங்கள் எம்மிடம் உள்ளன என்றும் சம்பந்தன் விளக்கினார்.
ஜனாதிபதி இக்கூற்றை முதன்முதலாக மறுத்தார். பின்னர் இது குறித்துக் கவனிக்கப்படும் எனத் தெரிவித்துக்கொணடார். அதேவேளை, சம்பூர், வலிகாமம் மீள்குடியேற்றத்திட்டங்கள் குறித்தும் சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிவிலியன்களை ஆளுநர்களாக நியமித்தல், திருகோணமலையிலும் அம்பாறையிலும் தமிழ் பேசும் சிவில் அதிகாரிகளை அரச அதிபர்களாக நியமித்தல் ஆகியவை தொடர்பாகவும் சம்பந்தன் பிரஸ்தாபித்தார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளுமாறு சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்தார். இதன் முன்னெடுப்புகள் ஆரம்பமானதும், இவ்விடயங்களுக்குத் தீர்வு கண்டுவிடலாமென்றும் குறிப்பிட்டார்.
இதற்குச் சம்பந்தன் பதிலளிக்கையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குபற்றக்கூடாது என்ற நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எட்டவேயில்லை. இக்குழுவில் பங்குபற்றுவதற்கு முன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவேண்டுமென்றே கூட்டமைப்பு வலியுறுத்துகிறது எனக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தமது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும் இவ்விவகாரங்கள் சம்பந்தமான பேச்சுகளைத் தொடர்வதற்கு இச்சந்திப்பில் இணக்கப்பாடு ஏற்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

18 செப்டம்பர் 2012

ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்ட தொண்டர்களுடன் வைகோ பயணம்!

 Vaiko Leaves Sanchi Protest Against மத்திய பிரதேச மாநிலம் போபாலுக்கு வருகை தர உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொண்டர்களுடன் 15 பேருந்துகளில் அம்மாநிலத்துக்கு சென்றுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடைபெற உள்ள புத்த மத நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 21-ந் தேதி இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தருகிறார். ஆனால் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவின் வருகைக்கு தமிழக மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்தைக் கைவிடுமாறு வைகோவுக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை வைகோ நிராகரித்துவிட்டார். திட்டமிட்டபடி பேருந்துகளில் தொண்டர்களுடன் மத்தியப் பிரதேசம் செல்வோம் என்று வைகோ அறிவித்திருந்தார்.
காந்தி படத்துக்கு கோட்சே மாலை போடுவதா?
இதைத் தொடர்ந்து நேற்று மத்திய பிரதேசம் செல்வதற்கு முன்பாக அண்ணா நினைவிடத்துக்கு சென்ற வைகோ அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசு நடத்தும் விழாவில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை தமிழர்கள் பட்ட வேதனையை உலகத் தமிழர்களிடம் எடுத்து செல்வதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். நாதியில்லாமல் போய்விட்டதா தமிழ் ஜாதி. மகாத்மா காந்தி படத்துக்கு மாலைபோட கோட்சேவை கூப்பிடுவதா?. இலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில், தமிழர் வாழ்ந்த பகுதியில் 1,607 இந்து கோவில்களை இடித்ததாக 1993-ம் ஆண்டு இலங்கை அரசே கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது, இந்து கோவில்களை இடித்த இலங்கை அரசின் அதிபரை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேச அரசு அழைத்திருக்கிறது. சொரணை உள்ள தமிழன் தமிழ்நாட்டில் இருக்கிறான் என்பதை காட்டவே போராட்டம் நடத்த செல்கிறோம். எங்கள் போராட்டம் அறவழியில்தான் நடக்கும். போபால் போலீஸ் எங்களை உள்ளே விடவில்லை என்றால், எல்லையிலேயே போராட்டம் நடத்துவோம். தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்றால், மத்தியபிரதேச மக்கள் ராஜபக்சேவை உள்ளே விடாமல் விரட்ட வேண்டும் என்றார் அவர்.
அதன் பின்னர் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தின் முன்பு இருந்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் 600 பேர், 15 பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர்.

இலங்கை நோக்கிப் பயணித்த தீவிரவாதி கைது!

இலங்கைப் நோக்கிப் பயணித்த பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அல் கய்தா அமைப்புடன் தொடர்புடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருச்சியில் வைத்து குறித்த நபரை இந்திய க்யூ காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 38 வயதான தமீம் அன்சாரி என அடையாளம்காணப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை தொடர்பான இரகசிய தகவல்களுடன் குறித்த நபர்இலங்கைக்குப் புறப்பட்டு செல்ல ஆயத்தமாகியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மிக முக்கியமான தகவல்களை இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகத்திடம்ஒப்படைக்கும் நோக்கில் குறித்த தீவிரவாதி முயற்சித்திருக்கக் கூடும் எனக்குறிப்பிடப்படுகிறது.

17 செப்டம்பர் 2012

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் தலைமறைவாகி உள்ளாராம்!

முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரான பொட்டம்மான் உயிருடன் தப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதனை இராணுவ புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக இனவாத அரசியல்வாதி ஒருவர் தனது சகாக்களிடம் பதற்றத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போர் முள்ளிவாய்க்காலில் நிறைவடைந்தது.
போரின் இறுதிக் கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் அரச படைகளால் கொல்லப்பட்டனர்.
எனினும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளரின் நிலைமை தொடர்பில் தொடர்ச்சியாக மர்மம் நீடித்து வந்தது.
இலங்கை அரசும் சரி, அரச படைகளும் சரி பொட்டம்மானின் நிலைமை பற்றி இது வரை வாயே திறக்கவில்லை.
இறுதியாக பொட்டம்மான் 2009 மே 13 ஆம் திகதி சக விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலருடன் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் தப்பித்துள்ளதாக குறித்த இனவாத அரசியல்வாதி தனது நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்தமை தற்போது உறுதியாகத் தெரிய வந்துள்ளது.

மக்கள் விரும்பும் ஆட்சியை தடுத்தால் அரசுக்கு ஆபத்து;சோ­சலிசக் கட்சி

"கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்கள் தமது உணர்வுகளை இந்தத் தேர்தலினூடாக அரசுக்குத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இதன் பின்னரும், கிழக்கு மாகாண ஆட்சியை அரசு தன் கைக்குள்ளும், பைக்குள்ளும் அடக்கி வைத்திருப்பது நல்லதல்ல.
எனவே, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதற்குத் தலைசாய்த்து கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை அரசு அவர்களுக்கு வழங்க வேண்டும். இன்றேல் அது ஒட்டு மொத்த இலங்கைக்கே பேராபத்தை ஏற்படுத்தும்.''
இவ்வாறு நேற்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார் ஐக்கிய சோஷலிஸக் கட்சித் தலைவர் சிறிதுங்க ஜய சூரிய. மூன்று மாகாணத் தேர்தல் முடிவுகளினூடாக அவதானமாக இருங்கள் என்ற அபாய எச்சரிக்கையுடன் கூடிய சிவப்புநிற சமிக்ஞையையே மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷ அரசுக்குக் காண்பித்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
நடந்துமுடிந்த கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய ஆகிய மூன்று மாகாணங்களின் தேர்தல்களும் நீதியானதும் சுதந்திரமானதுமாக நடைபெற்றவை அல்ல. இது மஹிந்த அரசால் திட்டமிட்டு, தினம் ஒதுக்கி, முழுமையாக அரசவளத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஒரு மோசடியான தேர்தலே.
இருப்பினும், இந்தத் தேர்தலினூடாக கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களில் வாழும் மக்கள் அரசுக்கு நல்ல பதிலொன்றைக் கொடுத்துள்ளனர். அவதானமாக இருங்கள் என சிவப்பு நிற சமிக்ஞை காட்டி அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை அதிகாரத்தை அரசு பெற்றிராத போதிலும், அம்மாகாண ஆட்சியைத் தமது கைக்குள்ளும், பைக்குள்ளும் வைத்திருக்கிறது.
79 சதவீதமான கிழக்குவாழ் மக்கள் அரசுக்கு எதிராகத் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். 36.5 சதவீதமான தமிழ் மக்கள் அங்கு வாழ்கின்றனர். இவர்களுள் 31 சதவீதமானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்துள்ளனர். அதாவது, நூற்றுக்கு 60 சதவீதமான தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது முழு ஆதரவையும் வழங்கியுள்ளனர்.
ஒரு பகுதி மக்கள் தமது உள்ளத்து உணர்வுகளைத் தெளிவாக எடுத்துக்கூறிய பின்னரும் அதற்கு அரசு தலைசாய்க்காது செயற்படுகின்றது. அரசின் இந்தச் செயற்பாடு நாட்டுக்கு நல்லதல்ல. இது முழு இலங்கைக்குமே பேராபத்தை ஏற்படுத்திவிடும். எனவே, இவற்றைக் கருத்திற்கொண்டு அரசு தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.
13 ஆவது அரசியல் சீர்திருத்தமானது, தமிழ் மக்களின் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டதொன்றாகும். அதனைக் கருத்திற்கொண்டும் அரசு செயற்படவேண்டும் என்றார்.
சரத் மனமேந்திர:
இதன் போது கருத்துத் தெரிவித்த புதிய சிஹல உறுமய கட்சித் தலைவர் சரத் மனமேந்திர கூறியவை வருமாறு:
கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மைப் பலம் பெற்று அரசுக்கு ஆட்சியமைக்க முடியாமல் போயுள்ளது. இதனால் நான் கூறுவது என்னவெனில், கிழக்கில் 12 தமிழ் உறுப்பினர்களும், 15 முஸ்லிம் உறுப்பினர்களும், 8 சிங்கள உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆகையால் கிழக்கில் 12 தமிழ் உறுப்பினர்களும், 15 முஸ்லிம் உறுப்பினர்களும் இணைந்து ஓர் ஆட்சியை ஏற்படுத்துங்கள். இந்த அரசு இனவாதத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கின்றது. மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சின் பின்னணியில் ஒரு பில்லியன் ரூபா பணம் இருக்கிறது.
அத்துடன், முதலமைச்சர், அமைச்சர், பிரதி அமைச்சர் என்ற பதவிகளும் இருக்கின்றன. இதற்கு ஆசைப்பட்டு அரசின் பின்னால் ஹக்கீம் செல்வாராயின் கிழக்கில் பொம்மை ஆட்சியொன்றை உருவாக்குவதற்கே அவரும் வழி வகுப்பார் என்றார்.
அருண சொய்ஸா:
இதன்போது கருத்துத் தெரிவித்த ருஹுணு மக்கள் கட்சித் தலைவர் அருண சொய்ஸா கூறியவை வருமாறு:
தென்மாகாணசபையைக் கலைத்து அங்கு தேர்தல் நடத்தினால் அரசு தோற்பது உறுதி. அரசு தனது அனைத்து வளங்களையும் பயன்படுத்தி முடிந்தால் தென்மாகாணத்தில் வெற்றிபெற்றுக் காட்டட்டும் என நான் சவால் விடுக்கிறேன். அரசின் இறுதிப்பயணம் தெற்கில்தான் என்றார்.

டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து வரக்கூடாது!

போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் 19 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள நிலையில் அவருடன் வடபகுதி ஒட்டுக்குழு தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து வரக்கூடாது என புதுடில்லி வட்டாரங்கள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.
பாரதீய ஜனதாக் கட்சியின் அழைப்பினை ஏற்றே அவர் புதுடில்லி செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், காஸ்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசவுள்ளமை தெரிந்ததே.
இந்த நிலையிலேயே புதுடில்லி அரசு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அழைத்து வரவேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. டக்ளஸ் இந்தியாவுக்கு வருவதன் காரணமாக உள்ளுர் அரசியல், விசேடமாகத் தமிழக மக்களின் எதிர்ப்பினை காங்கிரஸ் சந்திக்க வேண்டியுள்ளதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

16 செப்டம்பர் 2012

ராஜபக்சேவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரி சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அதிமுக மனு.

இலங்கை தமிழினப் படுகொலை தொடர்பாக அதிபர் ராஜபக்சேவிடம் போர்க் குற்றவிசாரணை நடத்த வலியுறுத்தி சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் தல்வீர் பண்டாரியிடம் அதிமுக வழக்கறிஞர்கள் மனு கொடுத்துள்ளனர்.
செப்டம்பர் 20-ந் தேதி இந்தியாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தர உள்ளார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் அதிமுக வழக்கறிஞர்கள் குழு டெல்லியில் உள்ள சர்வதேச நீதிமன்ற நீதிபதியான தல்வீர் பண்டாரியிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற நீதிபதியிடம் அரசியல் கட்சி ஒன்று இத்தகைய மனு கொடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அழைப்பின் பேரிலேயே ஐ.நா.பிரதிநிதிகள் வந்துள்ளனராம்!

பாலித கோஹன 
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் இருந்து இலங்கை ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். குழுவொன்றை அனுப்பி வைக்குமாறு இலங்கை அரசாங்கம், மனித உரிமை பேரவையிடம் அழைப்பு விடுத்தது. எனினும் பல மாதங்களுக்கு பின்னரே அந்த அழைப்பு செயற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான கொள்கை தொடர்பாக இந்த குழுவினர் இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் பரிந்துரைகளை வழங்கிஈ இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவார்கள் என பாலித கோஹன குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இறுதிக்கட்ட போரின் போது, மனித உரிமை பேரவையின் குழுவினர் இலங்கை செல்வது சம்பந்தமாக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்கள் பல்வேறு எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தனர். தற்போது அந்த எதிர்ப்புகள் அனைத்தும் கீழடிப்பு செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டின் பிரச்சினையை நாங்கள் தீர்த்து கொள்கிறோம். எமது நாட்டின் பிரச்சினையில் எவரும் தலையிடக் கூடாது. எம்மீது போர் குற்றங்களை சுமத்த முயற்சிக்கின்றனர். ஜனாதிபதியை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர் என அரசாங்கத்தினர் தெரிவித்து வந்தமை குறிப்பிடதக்கது.

15 செப்டம்பர் 2012

வன்னி மந்துவிலில் கண்ணி வெடியில் சிக்கி மூன்று படையினர் சாவு!

எவ்வளவு மூடிமறைத்தாலும் வன்னிச் செய்திகள் வெளிவரத் தான் செய்கின்றன. சில நாட்களுக்கு முன்பு இனந் தெரியாதவர்கள் வைத்த கண்ணிவெடியில் குறைந்தது மூன்று இராணுவத்தினர் உயிரிழந்தனர், வேறு சிலர் படுகாயம் அடைந்தனர். மந்துவில் கிராமம் ஆனந்தபுரம் தேவிபுரத்திற்கு அருகாமையில் முல்லை மாவட்டத்தில் இருக்கிறது.
தமிழீழத்திற்கான போராட்டத்தில் மந்துவில் ஒரு வரலாற்று மைய்யமாக இடம்பெறுகிறது. 2009 ஏப்ரல் மாதத்தில் நடந்த திருப்புமுனை போர் இங்கு நடந்தது. இராணுவம் பெரும் இழப்புக்களை இந்த இடத்தில் சந்தித்தது. தோல்வியின் விளிம்பில் நின்ற இராணுவம் நச்சு வாயுக் குண்டுகளை வீசி நிலமையைச் சமாளித்தது.
சூழ்ச்சியாலும் நவீன போர் விதிமுறைகளை மீறுவதாலும் பெற்ற அப்போதைய வெற்றியைக் கொண்டாடும் நோக்கில் ஒரு நினைவுத் தூபியை சிங்கள இராணுவம் மந்துவிலில் நிறுவியுள்ளது. விடுதலைப் புலிகள் விட்டுச் சென்ற ஆயுத தளபாடங்களைப் பொறுக்கி எடுத்து ஒரு காட்சியகத்தையும் சிங்கள இராணுவம் மந்துவிலில் அமைத்துள்ளது.
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வரும் சிங்கள உல்லாசப் பயணிகளை சிங்கள இராணுவம் மந்துவிலுக்கு அழைத்துச் சென்று உபசரிக்கின்றது. இது வன்னியில் வழமையாக நடக்கும் நிகழ்ச்சி.
இதன் மூலம் இராணுவம் உயர் வருமானத்தைப் பெறுவதோடு தனக்குத் தானே பாராட்டுத் தெரிவிக்கும் சந்தர்ப்பமாகவும் பயன்படுத்துகிறது.
மந்துவில், ஆனந்தபுரம், தேவிபுரம் என்பன தொடர்ச்சியாகக் காணப்படும் ஈழத் தமிழர்களின் பாரம்பரிய பூமியாகும். விடுதலைப் போருக்கும் இந்த மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மாவீரன் லெப் கேணல் ஜொனி விக்னேஸ்வரன் விஜயகுமார் இந்திய அமைதிப் படையால் பேச்சு வார்த்தைக்கு அழைத்து வரப்பட்டு தேவிபுரத்தில் வைத்து 13 மார்ச்சு 1988ல் நயவஞ்சகமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜொனி நினைவாக விடுதலைப் புலிகள் ஜொனி கண்ணிவெடிகளைத் தயாரித்தார்கள். அந்தக் கண்ணிவெடி எதிரிகளுக்கு இன்றுவரை சிம்மசொப்பனமாக இருக்கிறது. மந்துவில் பற்றிய மேலதிக செய்திகளை மிக விரைவில் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

பேச்சுக்கு வருவதாக கூறி பின்னர் அநாகரிகமான முறையில் முஸ்லீம் காங்கிரஸ் தவிர்த்துக்கொண்டது!

நேற்றிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திப்பதாக கூறி, இறுதி நேரத்தில் அநாகரிகமான முறையில் சந்திப்பை தவிர்த்துக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்... 'நேற்றிரவு எமது கட்சி தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் இரு கட்சியினருக்கும் ஏற்கனவே அறிவித்து அனுமதியும் பெற்றிருந்தோம். இந்நிலையில் நேற்றிரவு எமது கட்சி தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்காக நீண்டநேரம் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் குறித்த நேரத்திற்கு வருகை தரவில்லை. எமது கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் - ரவூப் ஹக்கீமுக்கு பலமுறை தொடர்பை ஏற்படுத்தியபோதும் பதிலில்லை. ஒருகட்டத்தில் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தொடர்புக்கு பதிலளித்தார். எமது விடயம் தொடர்பாக அவருக்கு கூறியதும், தொலைபேசியை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயலாளர் ஹஸன் அலியிடம் கொடுத்தார்.
முஸ்லிம் காங்கிரஸுடனான சந்திப்புக்காக காத்திருப்பதாக சுமந்திரன் கூறினார்.தாங்களும் ரவூப் ஹக்கீமின் வருகையை எதிர்பார்த்திருப்பதாகவும், அலரி மாளிகையில் ஹக்கீம் சந்திப்பொன்றில் இருப்பதால் தொடர்புகொள்ள முடியவில்லை, தலைவர் வந்ததும் சொல்வதாக கூறினார். ஆனால் நீண்ட நேரமாகியும் பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து தொடர்பினை ஏற்படுத்த முயன்றபோது அனைவரது தொலைபேசிகளும் ஓஃப் செய்யப்பட்டிருந்தது.
எங்களுடனான சந்திப்பை அநாகரிகமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் தவிர்த்திருக்கிறது. நாகரிகமான முறையில் சந்திப்பை தவிர்த்திருக்கலாம், ஆனால் எங்களை காத்திருக்க வைத்து அநாகரிகமான முறையில் முஸ்லிம் காங்கிரஸ் நடந்துகொண்டமை வருத்தமளிக்கிறது' என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறினார்.

14 செப்டம்பர் 2012

மீனவர்கள் போராட்டம் பரவுகிறது!

கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூடக்கோரி போராட்டக்குழுவினர் இன்று 2வது நாளாக இடிந்தகரை கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் கடலோர கிராமங்கள் முழுவதும் பரவி வருகிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் யுரேனியம் நிரப்ப கூடாது, அணு மின் நிலையத்தை மூட வேண்டும், முற்றுகை போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி நேற்று காலை இடிந்தகரை கடலில் ஒரு குறிப்பிட்ட பகுதி வரை சென்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 2வது நாளாகவும் போராட்டக்குழுவினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இடிந்தகரை பகுதி மக்களுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் கடலோர கிராமங்களுக்கு பரவி வருகிறது. தூத்துக்குடி, குமரி மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் இன்று காலை மீனவர்கள் படகில் கறுப்புக்கொடி கட்டிக்கொண்டு கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகளுடன் கடற்கரையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

அடுத்த வருட தொடக்கத்தில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்படும் - அமெரிக்கா எச்சரிக்கை!

றொபேட் ஓ பிளேக்
சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்துள்ளபடி பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகி இலங்கை அரசு தொடர்ந்து இதே கொள்கையில் சென்றுகொண்டிருந்தால் அடுத்த வருட முற்பகுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிவருமென அமெரிக்கா நேற்று முன்னெச் சரிக்கை விடுத்திருக்கிறது.
கொழும்பில் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்தை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை றொபேட் ஓ பிளேக் நேற்றுக்காலை கொழும்பு ஹில்டன் நட்சத்திர ஹோட்டலில் சந்தித்தார். இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே சிஸெனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.
மீள்குடியேற்றம், தேசிய நல்லிணக்கம் மற்றும் நிரந்தர அமைதித் தீர்வொன்றை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு அக்கறையின்றி இருப்பதாகவும், இதனால் தமிழ் மக்கள் மிகவும் நம்பிக்கையிழந்து விரக்தியான நிலைக்குச் சென்றிருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பேச்சுமேசைக்கு வருவதற்கு கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றபோதிலும், அரசுக்கு அதில் போதிய ஆர்வமில்லாமல் இருப்பதை அவர்களின் செயற்பாடுகளிலிருந்து அறியமுடிகின்றதென்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் மேலும் இங்கு எடுத்துக்கூறியிருக்கின்றனரெனத் தெரிகிறது.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ரொபர்ட் ஓ பிளேக், இலங்கையின் மனித உரிமை மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் அமைதி முயற்சிகள் பற்றியும் அமெரிக்கா உன்னிப்புடன் அவதானித்துவருவதாகவும், இந்த நிலைமை தொடருமாயின் அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படுமென்றும் தெரிவித்திருக்கிறாரென அறியமுடிகின்றது.

13 செப்டம்பர் 2012

தன்மானம் உள்ளவர்கள் இலங்கை தமிழர் பற்றி பேசலாம்",கருணாநிதிக்கு முதல்வர் சாட்டையடி!

இலங்கையின் தமிழினப் படுகொலையை தமிழக அரசு கண்டிக்கும் அதே நேரத்தில் தமிழகத்துக்கு பயணம் மேற்கொள்ளும் சிங்களருக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாகவும் இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல், முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை அளித்திட உத்தரவிட்டு, அவ்வாறே வழங்கப்பட்டு வருகிறது.
துணிச்சல் மிகக் தீர்மானங்கள்:
இலங்கை அப்பாவித் தமிழர்கள் மீது போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்; தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும், தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில்; அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில்; மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் துணிச்சலுடன் தீர்மானம் நிறைவேற்றினேன்.
தமிழக அரசின் எதிர்ப்பு:
இலங்கை ராணுவத்தினருக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் இன்னமும் கிடைக்கவில்லை என்பதால், அதற்கு நம் தமிழகத்தின் எதிர்ப்பை, உணர்வுகளை தெரிவிக்கும் வகையில் இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை தடை செய்தேன். இவை காரணமாக, தமிழக மக்கள் மட்டுமல்லாமல், உலக வாழ் தமிழர்களும் எனது அரசின் நடவடிக்கைகளை பாராட்டி வருகின்றனர். எனினும் இலங்கையிலிருந்து சுற்றுலா, ஆன்மீகப் பயணம் போன்றவற்றிற்காக தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சிங்களர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் எனது அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
மெளனியாக மத்திய அரசு- கருணாநிதி மீது தாக்கு:
ஆனால், தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்து இலங்கையில் தமிழினம் அழியக் காரணமாயிருந்தவர், இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பது போல் நாடகமாடுகிறார்.
இலங்கையில் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்ட போது, இலங்கை அரசிற்கும், ராணுவத்திற்கும் ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய இடங்களில் மீன் பிடிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிற நிலையில், அதற்கு ஒரு வலுவான எதிர்ப்பினை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
இருப்பினும், மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க இயலாதவர், இலங்கைத் தமிழர்களுக்காக என கூட்டப்பட்ட கூட்டத்தின் பெயரையே மாற்றிவிட்டார். இவ்வாறு தமிழர் மானத்தை காப்பாற்றுபவர்தான் இலங்கைத் தமிழர் நலன் காக்கும் எனது அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறார்.
சர்.பிட்டி தியாகரயரின் தன்மானக் கதை:
தன்மானம் பெரிது என்று வாடிநயன் தான் தமிழன். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை இந்தத் தருணத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சர். பிட்டி தியாகராயர் என்ற ஒரு மிகப் பெரிய அரசியல் தலைவர். பதவிக்காக எதையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இல்லாதவர். இவர் சென்னை மாநகராட்சியின் மேயராக சில காலம் இருந்தார். அந்த சமயத்தில், வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வந்திருந்தார். இளவரசரை வரவேற்பதற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. அப்போதைய கவர்னரான லார்டு வெல்லிங்டன் சர் தியாகராயரைப் பார்த்து, " சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் இளவரசரை முதலில் நீங்கள் தான் வரவேற்க வேண்டும்" என்று கூறினார்.
அதற்கு சர். தியாகராயரும் சம்மதம் தெரிவித்தார்.
பின்னர் கவர்னரிடமிருந்து வேறு ஒரு தகவல் வந்தது.
"இளவரசரை சந்திக்கும் போது நீங்கள் கோட், சூட் உடையில் தான் இளவரசரை வரவேற்க வேண்டும்" என்பது தான் அந்தத் தகவல்.
உடனே, சர்.பிட்டி தியாகராயர் அரசாங்கத்திற்கு ஒரு பதில் எழுதினார் . அதில் "என்னுடைய வெள்ளை வேட்டி, வெள்ளைக் கோட்டு, வெள்ளைத் தலைப்பாகை இந்த ஆடைகளோடு என்னை இளவரசர் பார்க்க விரும்பினால் நான் அவரை உளமார வரவேற்கிறேன். இந்த ஆடையுடன் நான் அவரை பார்க்க முடியாது என்று நீங்கள் முடிவெடுத்தால், இளவரசரை வரவேற்கும் பாக்கியம் எனக்கு இல்லை என்று நினைத்து அமைதி பெறுவேன். இளவரசரை வரவேற்பதற்காக நான் என்னுடைய வழக்கமான ஆடைகளை மாற்றிக் கொள்வதற்கில்லை" என்று உறுதிபட தெரிவித்து இருந்தார்.
அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?
அந்த ஆங்கிலேய அரசு பணிந்து வந்து, அவருடைய வழக்கமான உடையிலேயே இளவரசரை வரவேற்க அனுமதி அளித்தது. சர். தியாகராயர் நடந்து கொண்ட விதம் தான் தமிழனின் தன்மானம். அதனால் தான் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருடைய கோரிக்கையை ஏற்றது.
இத்தகைய தன்மானம் உள்ளவர்கள் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பேசலாம். மற்றவர்கள் பேசாமல் இருப்பது நல்லது. தன்னலம் காரணமாக தன்மானத்தை இழந்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் நலனை சீர்குலைக்கும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எனது நடவடிக்கைகளுக்கு களங்கம் கற்பிக்காமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார் ஜெயலலிதா.

மெகாலி இலங்கை வருவதையிட்டு கிலிகொண்டுள்ள குணதாஸ.

UNனின் குழுத் தலைவர் மொகாலி குற்றவியல்  தண்டனை வழங்கும் செயற்பாடுகளில் 33 வருட அனுபவம் பெற்ற நிபுணர்இலங்கை செல்ல உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் தொழிற்நுட்ப அதிகாரிகள் குழுவின் தலைவரான மொகாலி, குற்றவியல் தொடர்பாக தண்டனை வழங்கும் செயற்பாடுகளில் 33 வருட அனுபவம் பெற்ற நிபுணர் எனவும் சூடான் ஜனாதிபதி அல் பஷீருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டதன் பின்னணியில் இருந்த குற்றவியல் விசாரணை நிபுணர் இவர் எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் கூறுவது போல், மெகாலி, வசதிகளை ஏற்பாடு செய்து கொண்ட பாதுகாப்பு அதிகாரியோ, நவநீதன் பிள்ளையின் அதிகாரிகள் குழுவின் உதவியாளரோ அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
மெகாலி கூறியுள்ளபடி அவரது இரண்டு செயல் முறைகள் உள்ளன. அவருடன் வரும் இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் நடத்தப்படும் முதல் கட்ட மீளாய்கள். அதன் பின்னர் மீளாய்வு அறிக்கை என்ற மதிப்பீட்டு அறிக்கை மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படும். கூட்டத் தொடரில் சமர்பிக்கப்படும் மீளாய்வு அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச விசாரணை குழு ஒன்றை நியமிக்கப முடியும்.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தருஸ்மன் குழுவின் அறிக்கையை போன்றால்லது, ஹெனி மெகாலி விசாரணை குழுவினால் வழங்கப்படும் அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ அறிக்கையாக ஏற்றுக்கொள்ளப்படும். அவ்வாறு நியமிக்கப்படும் விசாரணைக்குழுவை இலங்கைக்கு அனுமதிக்கா விட்டாலும் எந்த பயனும் ஏற்பட போவதில்லை. சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மெகாலியின் அறிக்கை மற்றும் அதற்கு முன்னர் வெளியிடப்பட்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை என்பன இதற்கு காரணமாக அமையும்.அத்துடன் தருஸ்மன் குழுவின் அறிக்கை தொடர்பாக சிறிய விசாரணை ஒன்று நடத்தப்படும். இதன் மூலம் தருஸ்மன் குழுவின் அறிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
ஏற்கனவே எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த ஆரம்ப கூட்டத் தொடருக்கு இலங்கை எதிராக 47 அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது அறிக்கைகளை சமர்பித்துள்ளன. ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் அலுவலகத்தின் தகவல்களின்படி இந்த நிறுவனங்கள் மெகாலி குழுவினரை இலங்கையில் சந்தித்து சாட்சியங்களை வழங்க உள்ளன.
மெகாலி தான் தங்கும் விடுதி அறையை அவரது அலுவலகமாக மாற்றி கொள்ள அனுமதி உள்ளது. யேமன் மற்றும் மொரோக்கோ ஆகிய நாடுகளில் இவர்கள் இவ்வாறே செய்தனர். எனினும் அண்மையில் இவர்கள் சிரியாவுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அமைச்சர் பீரிஸ் எதனை கூறினாலும் மெகாலி குழுவினர், அமெரிக்காவின் யோசனையை செயற்படுத்தவே இலங்கை வருகின்றனர் என்பது மிகவும் தெளிவானது.இந்த பயங்கரமான நிலைமையை மூடி மறைக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை நாம் மீண்டும் ஒரு முறை வன்மையாக கண்டிப்பதுடன் எதிர்கால ஆபத்து குறித்தும் எதிர்வுகூறுகிறோம் என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

ஆட்களை பறித்தெடுத்து ஆட்சியமைப்பது அரசு தனக்கே உலை வைக்கும் செயல்;ஹக்கீம்

தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளுக்கும், தமிழ் பேசும் உறவுகளுக்கும் குந்தகம் விளைவிக்காமல் அரசியல் நேர்மையுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவுகளை எடுக்குமெனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களைப் பறித்தெடுத்து ஆட்சியமைக்க எவராவது முயற்சிப்பார்களாயின் அவர்கள் தமது விரல்களால் தமது கண்களையே குத்திக்கொண்டவர்களாகி விடுவார்களென்றும் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண அரசியல் நிலைவரம் குறித்து நேற்று கருத்துத் தெரிவித்த ரவூப் ஹக்கீம், மேலும் கூறியவை வருமாறு:
கிழக்கில் தமிழர்கள் முஸ்லிம்களை ஆள்கிறார்களா, முஸ்லிம்கள் தமிழர்களை ஆள்கிறார்களா என்பதல்ல இப்போதுள்ள பிரச்சினை. பிரிந்து நிற்கின்ற கிழக்கில் இணக்கப்பாட்டுடனான ஆட்சியே முக்கியம்.
முஸ்லிம்களின் சுயாட்சி, சுயநிர்ணயம், அவர்களின் அபிலாஷைகள் என்பன இந்த வெற்றிக்குப் பின்னர் பேசவேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் அதிகாரப்பகிர்வை நுகரும் இடம் கிழக்கு என்பதால் மாகாண ஆட்சி வெறுமனே தலையாட்டும் பொம்மை ஆட்சியாக இல்லாமல், நீதியாக செயற்படும் அதிகாரமுள்ள ஆட்சியாக இருக்கவேண்டும்.
இந்த நிலைமைகளை நாம் எமது உறுப்பினர்களுக்குத் தெளிவாகச் சொல்லியுள்ளோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களை எடுத்து ஆட்சியமைக்கும் முயற்சிகள் நடைபெறுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இப்படியானதொரு நடவடிக்கை நடந்திருந்தால் அது உண்மையில் ஓர் ஆரோக்கியமான விடயமல்ல.
சிறுபிள்ளைத்தனமானதாகவே அது கருதப்படும். சர்வதேசமே இந்த அரசியல் சூழ்நிலையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது ஆட்களைப் பறித்து ஆட்சியமைக்க முயற்சித்தால் அது தமது விரல்களாலேயே அவர்கள் கண்களைக் குத்திக்கொள்கிறார்கள் என்றே அர்த்தம்.
தமிழ் பேசும் சமூகங்களின் அபிலாஷைகளுக்குக் குந்தகமான விதத்தில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது. அதை மட்டும் இப்போது குறிப்பிட விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

12 செப்டம்பர் 2012

ரகசிய இடத்தில் வைத்து உதயகுமாரை சந்தித்த கெஜ்ரிவால்.

 Kejriwal Meet Udhayakumar A Secret Place கூத்தங்குழியில் உள்ள ரகசிய இடத்தில் இருக்கும் கூடங்குளம் போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது அவர் உதயகுமாரை சரணடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
கூடங்குளம் காவல் நிலையத்தில் நேற்று இரவு சரணடைவதாக இருந்த போராட்டக்குழு தலைவர் உதயகுமாரை 50 இளைஞர்கள் படகில் ஏற்றி கடலுக்குள் சென்றுவிட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் உதயகுமார் கூத்தங்குழி மீனவ கிராமத்தில் ரகசிய இடத்தில் தங்க வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையே சமூக ஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு 9 மணிக்கு இடிந்தகரை வந்தார். அவர் முன்னிலையில் உதயகுமார் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உதயகுமார் இடிந்கரையில் இருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து கெஜ்ரிவால் அங்குள்ள பாதிரியார் பங்களாவில் தங்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில் ரகசிய இடத்தில் இருக்கும் உதயகுமாரை சந்திக்க அவர் இன்று அதிகாலை இடிந்தகரையில் இருந்து படகு மூலம் கூத்தங்குழிக்கு சென்றார். அங்கு அவர் உதயகுமாரை சந்தி்த்து பேசியுள்ளார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
உதயகுமாரை சந்தித்து அவரை போலீசில் சரணடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். இடிந்தகரையில் போலீசார் நடத்திய தாக்குதலில் 40 படகுகள், 53 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன. பொதுமக்களின் வீடுகளை அடித்து, நொறுக்கிய போலீசார் அவர்கள் வைத்திருந்த பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர் என்றார்.

கிழக்கில் தேசிய அரசு அமைப்பதற்கு அரசு கடும் முயற்சி!

கிழக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கி உள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.
தேர்தலில் 14 ஆசனங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வந்தபோதும் கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவை பெறுவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தால் மட்டுமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கில் மாகாண அரசை அமைக்க முடியும். ஆனால்,அரசுடன் சேர்வதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஒரு சாரார் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதால் இதுகுறித்து நேற்று நள்ளிரவு வரை தீர்க்கமான முடிவு எதனையும் எடுக்கமுடியாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது.
இந்த நிலையில் கிழக்கில் தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான சமிக்ஞைகள் அரசிடம் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நம்பகமாகத் தெரிய வருகிறது. சர்வதேச நாடுகள் பலவற்றின் அழுத்தங்களைத் தொடர்ந்தே அரசு, கிழக்கில் தேசிய அரசை அமைக்கும் நிலையை நோக்கி நகர்வதாக கொழும்பில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்ட போது "தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசு இதய சுத்தியுடன் செயற்படுவதை நிரூபித்தால் எமது மக்களின் நலன் கருதி கிழக்கில் தேசிய அரசு அமைக்கும் திட்டத்தை பரிசீலிப்பதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்' என்று தெரிவித்தார்.
இதேவேளை நேற்று மகாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும "தேசிய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் இலங்கையில் கட்டியெழுப்புவதற்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்திருந்தமை இதன் ஒரு பகுதியே என்றும் கொழும்பு இராஜதந்திரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் பாதுகாப்பு நகர்வுகளை ஒட்டுக்கேட்பதற்காக பாகிஸ்தான் யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையம்!

இந்தியாவின் பாதுகாப்பு நகர்வுகளை ஒட்டுக்கேட்பதற்காக பாகிஸ்தான் யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையம் ஒன்றை அமைத்துள்ளதாக இந்திய புலனாய்வுத்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர் தெ பயனீர் என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது
இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகளையும் தொலைதொடர்புகளையும் ஒட்டுக்கேட்பதற்காகவே இந்த நிலையத்தை பாகிஸ்தானிய படையினர் யாழ்ப்பாணத்தில் அமைத்துள்ளதாக இ;ந்திய புலனாய்வுப்பிரிவான ரோ சந்தேகம் வெளியிட்டுள்ளது
கடந்த மூன்று நான்கு மாதங்களாக பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ யாழ்ப்பாணத்தில் தமது நடவடிக்கைகளை அதிகப்படு;த்தியுள்ளது
இதன்போதே அந்தப்புலனாய்வுப்பிரிவு யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்கேட்டல் நிலையத்தை அமைத்துள்ளதாக இந்திய புலனாய்வுப்பிரிவு சந்தேகம் கொண்டுள்ளது
ரோவின் இந்த விசாரணை அறிக்கையை அடுத்து நேற்று செவ்வாய்கிழமை புதுடில்லியில் கூடிய இந்திய படைத்தரப்பு உயரதிகாரிகள், இந்த விடயத்தை இலங்கையின் உயர்மட்டத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர்
பாகிஸ்தானின் இந்த நிலையம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ளமை குறி;த்து இலங்கை அதிகாரிகள் விசாரணையை நடத்தவேண்டும் என்று கோருவதென்று இந்த சந்திப்பின் போது முடிவெடுக்கப்பட்டது
அத்துடன் ஒரு நாட்டுக்கு எதிராக இன்னும் ஒருநாட்டின் எல்லையை பயன்படுத்துவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது விமர்சனம் முன்வைக்கப்பட்டது
சீனா, ஏற்கனவே அந்தமான் தீவுகளின் கப்பல் நகர்வுகளை அவதானிப்பதற்காக கொக்கோ தீவுகளில் இவ்வாறான அவதானிப்பு நிலையத்தை அமைத்திருந்ததையும் இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்
இந்தநிலையில் இந்திய படைகளின் நகர்வுகளை அவதானிப்பதற்காக பாகிஸ்தானின் புலனாய்வுப்பிரிவினர், யாழ்ப்பாணத்தி;ல் உள்ள இ;;ந்திய கரையோரப்பகுதிகளிலேயே அவதானிப்பு நிலையத்தை அமைத்துள்ளதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்
இதன் மூலம், விசாகப்பட்டிணத்தில் உள்ள ரஸ்யாவின் ஐஎன்எஸ் சக்ரா அணு நீர்மூழ்கி கப்பல் மற்றும் இந்தியாவின் ஏனைய நீர்மூழ்கிக்கப்பல்களின் நகர்வுகளை அவதானிக்க பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொள்கிறது
எனவே இதனை அதியுயர் மட்ட எச்சரிக்கையாக எடு;த்து நடவடிக்கை மேற்கொள்வது என்று இந்திய பாதுகாப்பு தரப்பினர் முடிவெடு;த்துள்ளனர்

11 செப்டம்பர் 2012

யாருக்கு ஆதரவளிப்பது?ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்குள் முரண்பாடு!

கிழக்கில் மாகாண சபை ஆட்சியமைப்பதற்காக சிறிலங்கா ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவளிப்பதா அல்லது சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஒரு தரப்பினர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். எனினும் அரசாங்கத்திற்கு எதிராகவே மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு வாக்களித்தனர் எனவும் அரசாங்கத்துடன் இணைவது மக்களின் விருப்பதிற்கு விரோதமானது என மற்றைய தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். இதனால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இரண்டாம் தரப்பு வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மக்களின் பாதுகாப்புக்காக சரணடைய தயார்: சுப. உதயகுமார்

 Reday Surrender With Conditions கூடங்குளம் சுற்றுவட்டார மக்களின் பாதுகாப்புக்காக முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் முன்னிலையில் இன்று இரவு 9 மணிக்கு கூடங்குளம் காவல்நிலையத்தில் சரணடைய தயாராக இருப்பதாக அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
நாங்கள் ஆயுதம் எடுத்து போராடுவதாக இருந்தால் 400 நாட்களுக்கு முன்பே அதை செய்திருப்போம். ஆனால் அமைதி வழியில் போராட்டம் நடத்தியோரை கொடுமையாக தாக்கியிருக்கிறது காவல்துறை. கூடுதலாக போலீஸ் படையை திரட்டி வரப்போவதாக மக்களிடையே அச்சத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்த நிலைமை நீடிக்காமல் இருக்க.. வன்முறை தொடராமல் இருக்க நாங்கள் போலீசில் சரணடைய தயாராக இருக்கிறோம்.
மக்களின் பாதுகாப்புக்காக இன்று இரவு 9 மணிக்கு முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் முன்னிலையில் கூடங்குளம் காவல்நிலையத்தில் போராட்டக் குழுவினராகிய நாங்கள் சரணடைய தயாராக இருக்கிறோம் என்றார்.

அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம்!

அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரேரணை இந்த வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உள்ளக ரீதியான புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் என்பவற்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைத் தொடர்பான இந்தப் பிரேரணை சில நேரங்களில் நிறைவேற்றப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
புனர்வாழ்வு, புனரமைப்பு, இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், வடக்கு உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போன்ற விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றமடைந்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இலங்கையில் ஆணைக்குழுக்கள் நிறுவப்படுதலும் அதன் மூலம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமையும் மிக நீண்ட காலமாக தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதனை வலியுறுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கப் படையினர் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை உருவாக்க ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட சர்வதேச தரப்புக்கள் முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்படக் கூடிய பின்னணியை அரசாங்கம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் மூலம் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உத்தேச தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.