25 செப்டம்பர் 2016

தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார்!செய்தியால் மக்கள் ஆனந்தம்!

லண்டனில் இருந்து இந்த செய்தி நேற்று வலைத்தளங்களில் பரவியபோது மொத்த தமிழ் இனமும் ஆனந்த கூத்தாடியது. இறுதி போரில், வரமாட்டேன் என்றுதான் தலைவர் கூறியிருக்கிறார்.
நான் என்மக்களோடு தான் இருப்பேன். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது இந்த ஈழ மண்ணில் தான். என் பாதுகாப்பு மட்டும் எனக்கு முக்கியம் அல்ல. என் மக்கள் எல்லோரும் ,எந்தம்பிகள் எல்லோரும் கொத்துக்குண்டுகளுக்கு பலியாகின்றனர்.
என் தளபதிகள் ஈழம் காணாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள்.நான் மட்டும் தப்பிச்செல்வது பெரும் சுயநலம் இப்படித்தான் பொட்டுஅம்மானிடம் கூறியிருக்கிறார் தலைவர்.
அவரை ஒரு குழுவாக நின்று பேசி சமாதானம் கூறி ஒருவழியாக அரைமனதோடு தலையாட்டினார் தலைவர்.அந்த ஒரு நொடி எங்களுக்கு போதுமானதாக இருந்தது.மே பதினாறு சிங்களரின் 57வது பட்டாலியன் கோரத்தாண்டவம் ஆடியது.
பாஸ்பரஸ் குண்டுகள் விடாது பொழிந்தது. கொத்துக்குண்டுகள் வெடித்துச் சிதறியது. நாங்கள் களத்தில் இருந்தோம் கரும் புலிகள் பெரும் ஊடறுப்புத் தாக்குதலுக்கு தயாராகினர்.
புயல் போல் நாலாபுறம் இருந்தும் ஊடறுத்து சிங்களரின் படைக்குள் நுழைந்தனர்.அந்த நொடியில் எம் பொடியன்கள் நடத்திய சாகசம் உலக வரலாற்றில் எங்கும் நடந்ததில்லை .அப்படி ஒரு வீர சாகசம்.
சிங்கள பட்டாளியனுக்கு ஒன்றுமே புரியவில்லை.எங்கிருந்து இவன்கள் வருகிறார்கள்,எந்த திசையில் இருந்து வருகிறார்கள் என்ன நிகழ்கிறது ஏன் எல்லோரும் தூக்கி வீசப்படுகிறோம் என்று திகைத்தனர்.
கொத்து கொத்தாக உடல் சிதறி பறந்தனர். தப்பித்து ஓட ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் தான் தலைவரை தூக்கினோம்.,
ஒரு தேவ தூதனை தூக்குவது போல தூக்கினோம்..இதோ உடல் நலம் தேறி வியூகம் வகுத்துக்க் கொண்டிருக்கிறார் தலைவர்.
கலங்காதீர்கள். சந்தர்ப்பம் எதிர் பார்த்து காத்திருக்கிறார்…இப்படி ஒரு செய்தி நேற்று உலக தமிழர்களிடையே பெரும் ஆனந்த கண்ணீரை வரவைத்தது.
ஒரே மகிழ்ச்சி வெள்ளம்..! எம் தேசியத்தலைவரே உம்மை வரவேற்க உலகத்தமிழ் இனமே தயாராக இருக்கிறது.என்று வாழ்த்துச் செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு இணையமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

புலிகளின் தடை நீக்கம் குறித்து அவதானிக்கிறதாம் சிறீலங்கா!

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படக் கூடிய விளைவுகள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்க வேண்டும் என்று, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில், ஐரோப்பிய ஒன்றிய சமூகத்தின் பிரித்தானிய சட்டமா அதிபர் எலேனர் சாப்ஸ்ரன் கடந்த வியாழக்கிழமை பரிந்துரைத்திருந்தார்.தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் பெயர்களை நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சார்பாக, செய்யப்பட்ட மேன்முறையீட்டை தள்ளுபடி செய்யுமாறு எலேனர் சாப்ஸ்ரன் ஆலோசனை வழங்கியிருந்தார். இவரது பரிந்துரையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் மதிப்பளிப்பது வழக்கம். இதனால், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உறுதி செய்யலாம் என்று கருதப்படுகிறது.இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தீவிரமாக கண்காணிக்குமாறு பிரசெல்சில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டுள்ளது. நிலைமைகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு அங்குள்ள தூதரகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்க உத்தரவிட்டால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சொத்துக்கள், நிதி என்பன விடுவிக்கப்படும். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீதான பயணத் தடையும் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

17 செப்டம்பர் 2016

திலீபனை நினைவு கூர்ந்த முஸ்லீம் சகோதரர்கள்!

திலீபன் நினைவிடத்தில் இன்றைய நினைவு கூர்தல் நிகழ்வில் கலந்துகொண்ட முஸ்லீம் சகோதரர்கள். எங்களின் தியாகங்களை வைத்து அரசியல் செய்யும் கோமாளிகள் மத்தியில் இச்சகோதரர்கள் சுடரேற்றி தமது வணக்கத்தை செலுத்தியது எமக்கு மனநிறைவை தந்துள்ளது.திலீபா யார் உன்னைதொடரமறுப்பினும் உன் மிச்சமாய் நாமிருப்போம்.ஊடகப்பிரிவு ஜனநாயக போராளிகள் கட்சி.இவ்வாறு அவர்களது முகநூலில் பதிவிட்டுள்ளனர்.

15 செப்டம்பர் 2016

உரிமைகளை மீட்கப் போராடுங்கள்... தீக்குளித்த விக்னேஷ்!

Vignesh facebook post on Self immolation Protest நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர்
பா. விக்னேஷ் தீக்குளிப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் உரிமைகளை மீட்க போராடுங்கள் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியின்போது பா. விக்னேஷ் திடீரென தன் மீது நெருப்பு வைத்துக கொண்டார். தீயில் கருகிய அவரை அங்கிருந்தோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.95 சதவீத தீக்காயம் ஆகி விட்டதாக கூறியுள்ள டாக்டர்கள் பிழைப்பது கடினம் என்று கூறி விட்டனர். இந்த நிலையில் தீக்குளிப்புக்கு முன்பு விக்னேஷ் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:காவேரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள்.என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள்.எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூட போராடுங்கள்.இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்ப்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல புதிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக் கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும் அதற்காக போராடுங்கள். * நம் மண்ணில் அந்நிய முதலீட்டை தவிர்த்து தமிழ்த் தேசிய முதலாளிகளை உருவாக்க போராடுங்கள். * நான் வைத்த கோரிக்கைகள் சரியாக இருப்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தமிழர்களுக்கு இனி வாக்குச் செலுத்துங்கள்.
இவன்:பா.விக்னேஷ் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளர்.என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் விக்னேஷ். மாணவரான விக்னேஷின் இந்த முடிவு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

10 செப்டம்பர் 2016

என் தலைமுடி உதிர்வதுபோல் என் தமிழும் உதிர்ந்திடுமோ?

கவிதைகள் எழுதும் திறமையை ஊக்குவிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் சிறுவர், சிறுமியர்களுக்கான நிகழ்ச்சி 2011ல் இருந்து ஆண்டு தோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் எல்லோரும் தங்கள் படைப்புகளை வாசித்து கொண்டிருக்கையில், சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய ஒரு தமிழ் தம்பதியரின் மகளான மாயா ஈஸ்வரன் (17) தன் கவிதையை ஆங்கிலத்தில் வாசித்தார்.
அந்த கவிதை ஒபாமா மனைவி மிச்சேல் மற்றும் அந்த சபையில் கூடியிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்யும் வகையில் இருந்தது.
“என் இத்தனை வருட வாழ்வில் நான் இழந்ததை விட, முக்கியமான ஒன்றை நான் இழந்திருக்கிறேன். என் தலை முடி உதிர்வதை போல, என் இனத்தின் அடையாளமான என் தமிழை உதிர்த்து இழந்து கொண்டிருக்கிறேன். என் தாய்மொழியை நான் பேசியே மூன்றாண்டுகள் ஆகிறது. என் தலைமுடி முழுதும் உதிர்வதை போல், என் தமிழை நான் முழுவதும் மறந்து விடுவேனோ என பயப்படுகிறேன்.” என்று அவரது கவிதை அமைந்திருந்தது.
இதை அவர் வாசித்து முடிப்பதற்குள் அரங்கிலிருந்த மிச்சேல் மற்றும் அனைவரும் உணர்ச்சி வசத்தில், உற்சாகத்தோடு கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். நீ கவிதையை இயற்றிய விதமும், அதை வெளிப்படுத்திய தன்மையும் சிறப்பாக இருந்தது என மிச்சேல் அவர்கள் மாயாவை மனம் மகிழ பாராட்டினாராம்.