30 மார்ச் 2016

மறவன்புலோவில் வெடி பொருட்கள் மீட்பாம்!

தென்மராட்சி மறவன்புலோ மத்தியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் பல நேற்றிரவு செய்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது,தற்கொலை அங்கி-1,கிளைமோர்-4 கிளைமோர் பற்றறி-2 C4 வெடிமருந்து - 12kg 9MMகைதுப்பாக்கி ரவை-100, சிம் காட்டுகள் 5 என்பன மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த அவர்கள் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனராம்.

20 மார்ச் 2016

உலகத் தமிழர்களை காயப்படுத்திய வைகோவின் பேச்சு!

காலம் காலமாக தமிழர்களுக்கு துரோகம் இளைக்கும் படலம் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது,அந்த வழியிலே தன்னையும் வெளிக்காட்டி இருக்கின்றார் தமிழர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட,மரியாதைக்கு உரியவராக கருதப்பட்ட வைகோ அவர்கள்.தமிழீழப் போராட்டம் தனிலே தன்னையும் ஒரு போராளியாகக் காட்டிக்கொண்ட வைகோ அண்மையில் தமிழ் தேசியத்திற்கு எதிராக பேசியிருப்பது அவரின் வேடம் கலைந்து விட்டதையே காட்டுகிறது.தானும் ஒரு அற்ப அரசியல்வாதிதான் என்பதையே அவரின் பேச்சு நிலை நிறுத்தி நிற்கிறது.அவரின் இப்பேச்சுக் குறித்து தமிழ் உணர்வாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள் எத்தகைய கண்டனங்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் உன்னத நோக்கங்களுக்காக போராடி வரும் சீமான் அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டியது உலகத் தமிழர்களின் தலையாய கடமையாகும் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

11 மார்ச் 2016

திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களுக்கு சம்பந்தன் அனுதாபம்!

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக சளைக்காது குரல் கொடுத்தவர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். காலம் சென்ற மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- 1977ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்ட தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் குடும்பம், அரசியல் என இரண்டறக் கலந்து வாழந்தவர்.அத்துடன், தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காகச் சளைக்காது குரல் கொடுத்த ஒருவராவார். தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக கைதுசெய்யப்ட்டு அரசியல் கைதியாக திருமதி மங்கையர்க்கரசியும் சிறைவாசம் அனுபவித்தவராவார். தான் இளம் சட்டத்தரணியாக தொழில்புரிந்த காலத்திலிருந்தே தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் அவரின் மனைவியுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளேன். தமிழரசுக் கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் அனைவராலும் "மங்கை அக்கா" என அன்புடன் அவர் அழைக்கப்பட்டார்.
தமிழ் மக்களின் விடிவுக்காக மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டு வந்த அவரது இழப்பு அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் அனைவருககுமே ஒரு பேரிழப்பாகும். சத்தியாக்கிரகம் உள்ளிட்ட எமது கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்று செயற்பட்ட துணிச்சல்மிக்க ஒரு பெண்மணியாவார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.