27 ஜூன் 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது நல்லதல்ல-டேவிட் கமரூன்

யாழில் டேவிட் கமெரூன்
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் தீர்மானம் நாட்டின் நன்மைக்குரியதல்ல. ஆனால் அந்த தீர்மானம் மதிக்கப்பட்டு சிறந்த சாத்தியமான முறையில் நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்திருக்கிறார்.நிறைந்திருந்த மக்கள் பிரதிநிதிகளின் மத்தியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.அவர் பதவி விலக போவதாக அறிவித்த பிறகு ஆற்றுகின்ற முதல் உரையில், முறையாக விலகல் நடைமுறை குறித்து தனக்கு அடுத்து வரும் பிரதமர் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பிரிவு 50 என்று அறியப்படும் பொறிமுறையில் எந்த மாதிரியான புதிய உறவை உருவாக்குவது என்று பிரிட்டன் முடீவு செய்ய வேண்டும்.ஐரோப்பிய அண்டை நாடுகளோடு வலிமையான சாத்தியமான பொருளாதார பிணைப்பை பிரிட்டன் உருவாக்க வேண்டும் என்று கேமரூன் பேசினார்.

18 ஜூன் 2016

இலங்கைத்தமிழர் தற்கொலை எச்சரிக்கை!

தமிழகம் திருச்சியில் சிறப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக எச்சரித்தமையை அடுத்து நேற்று (17) தீவிரநிலை ஏற்பட்டுள்ளது.
தயாபரராஜா என்ற இந்த இலங்கையரை ஏற்கனவே விடுவிக்க உத்தரவு வழங்கப்பட்ட போதும் இன்னும் அவர் விடுவிக்கப்படவில்லை.
ஏற்கனவே தயாபரராஜாவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இராமேஸ்வரம் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டனர்
எனினும் தயாபரராஜாவை விடுவிப்பதாக அதிகாரிகள் கூறிய போதும் அவர் விடுவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் நேற்று தயாபரராஜாவின் மனைவியும் பிள்ளைகளும் திருச்சி முகாமுக்கு சென்றிருந்த போது தயாபராஜாவை விடுவிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தமது அறைக்கு விரைந்த தயாபரராஜா அறையின் கதவை தாழிட்டு தாம் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து அந்த இடத்தில் தீவிரநிலை தோன்றியது.
இதேவேளை தாம் விடுவிக்கப்படாவிட்டால் குடும்பத்துடன் கடும் முடிவு ஒன்றை எடுக்க நேரிடும் என்று தயாபராஜா முகாம் அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

15 ஜூன் 2016

சோமவன்ச அமரசிங்க மரணமடைந்துள்ளார்!

மக்கள் விடுதலை முன்னணியின்(ஜேவிபி) முன்னாள் தலைவரும் மக்கள் சேவை கட்சியின் பொதுச் செயலாளருமான சோமவன்ஸ அமரசிங்க காலாமானார். இராஜகிரியவிலுள்ள தனது சகோதரரின் வீட்டில் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார் என தெரிவிக்கப்படுகிறது. இறக்கும்போது அவருக்கு வயது 73. 1969ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து கொண்ட சோமவன்ஸ அமரசிங்க, அக் கட்சியின் நான்காவது தலைவராக பதவியேற்றார். பின்னர், 2015ஆம் ஆண்டு அக் கட்சியில் இருந்து விலகி மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை நிறுவினார். மக்கள் விடுதலை முன்னணியின் நிறுவுநரான ரோஹன விஜயவீரவுக்கு பின்னர், அக்கட்சியின் தலைமை பீடத்தில் நீண்டகாலம் பதவி வகித்தவர் சோமவன்ஸ என்பது குறிப்பிடத்தக்கது.இறுதிக்காலங்களில் மகிந்த சார்பு கொள்கையை கடைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மரணம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.