28 டிசம்பர் 2016

ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதல்ல!

Karate Husseini says Jayalalitha was murderedஅதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதல்ல, அவரை திட்டமிட்டு படுகொலை செய்து விட்டனர் என்று கராத்தே வீரர் ஹூசைனி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலா நடராஜன் அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும் என்று அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.சசிகலா நடராஜனின் தலைமையை ஏற்றுக்கொள்ள முடியாத நிர்வாகிகள் சிலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இன்று காலையில் கட்சியில் இருந்து விலகிய ஆனந்தராஜ், கட்சிச் தலைமைக்கு சசிகலா ஏற்றவர் அல்ல என்று கூறினார். இந்த நிலையில் கராத்தே வீரர் ஹூசைனி சசிகலா மீதும் நடராஜன் மீதும் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதல்ல என்று கூறினார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை ரத்தத்தினால் வரைந்து அவரிடம் கொடுத்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே, அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியிருப்பதாக 40 பக்க கடிதம் எழுதி கொடுத்திருந்ததாகவும் ஹூசைனி கூறினார். ஜெயலலிதாவை திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். இதில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். ஓபிஎஸ் மீது நம்பிக்கை வைத்து முதல்வர் பதவி அளித்துள்ளார் ஜெயலலிதா. தயவு செய்து மன்னார்குடி கும்பலிடம் ஆட்சியை கொடுத்து விட வேண்டாம். இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. முள்ளிவாய்க்கால் பிரச்சினை வந்த போது சசிகலாவின் கணவர் நடராஜன் பற்றி வாக்குமூலம் கொடுத்தேன். அப்போதே நான் கடிதம் எழுதினேன். 40 பக்க கடிதம் கொடுத்தேன். எனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுத்தனர் என்றும் கராத்தே வீரர் ஹூசைனி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். முதன் முறையாக மன்னார்குடி குடும்பத்தைப் பற்றி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றினை கூறியுள்ளார் ஹூசைனி.

25 டிசம்பர் 2016

தொடரும் போராளிகளின் திடீர் மரணம்!


வவுனியா- புளியங்குளத்தில் ஏ-9, வீதியில் பஸ்ஸூக்காக காத்து நின்ற முன்னாள் போராளி ஒருவர்,நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து மரணமானார். மயங்கி வீழ்ந்ததையடுத்து சக பயணிகளால் மீட்கப்பட்டு, புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சை வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது, இவர் இடை வழியில் உயிரிழந்தார்.
வவுனியா- புளியங்குளத்தில் ஏ9 வீதியில் பயணிகள் ஊர்திக்காக காத்திருந்த போராளி ஒருவர்,நேற்று திடீரென மயங்கி வீழ்ந்து மரணமானார் என தெரிவிக்கப்படுகிறது.மயங்கி வீழ்ந்ததையடுத்து சக பயணிகளால் மீட்கப்பட்டு புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது இவர் வழியில் உயிரிழந்தார் என மேலும் தெரியவருகிறது.நெடுங்கேணி குழவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆசீர்வாதம் ஸ்ரிபன் (வயது 36) என்பவரே உயிரிழந்தவராவார். நேற்றுமாலை இவர் யாழ்ப்பாணத்திலிருக்கும் தனது உறவினரின் வீட்டிற்கு செல்வதற்கு புளியங்குளம் சந்தியில் உள்ள பயணிகள் ஊர்தி தரிப்பிடத்தில் காத்திருந்த போதே மயங்கி விழுந்துள்ளார்.உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக, வவுனியா வைத்தியசாலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ரஷ்ய இராணுவ விமானம் விழுந்து நொருங்கியுள்ளது!

High-speed: A Russian jet came within 10ft of a U.S. plane over international waters. Which type of plane was not clear, but an SU-27 Flanker, shown above, was involved in a similar incident in April92 பயணிகளுடன் சென்ற ரஷ்யாவின் ராணுவ விமானம் கருங்கடலில் விழுந்து விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சோச்சி நகரிலிருந்து ரஷ்ய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.20 மணிக்கு கிளம்பிய இந்த விமானம், கிளம்பிய 20 நிமிடங்களில் ரேடார் (தரைத்தொடர்பு) பார்வையிலிருந்து விலகியுள்ளது.
இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் டியு-154 ரக விமான வகையை சேர்ந்த இந்த விமானத்தில், ரஷ்ய ராணுவத்தினர், புகழ்ப்பெற்ற அலெக்ஸான்ட்ராஃப் ராணுவ இசைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள லடாகியா மாகாணத்தை நோக்கி இந்த விமானம் சென்று கொண்டிருந்தது.மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், சோச்சி நகரில் உள்ள அட்லெர் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.

20 டிசம்பர் 2016

மரணத்தில் மர்மம் ஜெயலலிதாவின் தோழி வழக்கு!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெயலலிதாவின் தோழி என கூறும் கீதா என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனு தாக்கலுக்கு பிறகு, நிருபர்களிடம் கீதா கூறியது: நான் ஜெயலலிதாவுடன் பள்ளி காலத்திலிருந்து நட்புடன் இருந்தேன். அவரது மரணம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்தேகிக்கிறேன்.ஜெயலலிதா விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதாவின் உறவினர் தீபாவுக்கு எனது ஆதரவு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். சசிகலா, நடராஜன், இளவரசி, அப்பல்லோ பிரதாப் ரெட்டி, முதல்வர் பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், ஆலோசகர் ஷீலா பாலா கிருஷ்ணன், சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும்.பதவி, அதிகாரம், சொத்து ஆகிய காரணங்களுக்காக கொலை செய்ய, தவறான சிகிச்சை அளிக்க முன்வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துகளை கைப்பற்ற கொலை செய்ததாக, இந்திய தண்டனை சட்டம் 327, 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் போயஸ் கார்டன், அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீதா சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வாதிடுகிறார்.

17 டிசம்பர் 2016

நெடுந்தீவில் குதிரை ஓடியவர் விளக்கமறியலில்!

நெடுந்தீவில் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் முடிவடையும் இந்தப் பரீட்சையில் குறித்த நபர் வேறொருவருக்காக பரீட்சை எழுதிய நிலையில் கடந்த 15ஆம் திகதி சித்திர பாடத்தன்று கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.ஊர்காவற்றுறை பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன் அவரது அடையாள அட்டை, பரீட்சை சான்றிதழ்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார். இதேவேளை மற்றைய நபர் தலைமறைாவாகியுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

12 டிசம்பர் 2016

புனர்வாழ்வு பெற்று விடுதலையான மற்றோர் போராளி மரணம்!


முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் நேற்று உயிரிழந்தார். சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் வசித்து வந்த இராசதுரை திக்சன் (வயது 26) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.

முல்லைத்தீவு, வற்றாப்பளை பகுதியை சேர்ந்த புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் நேற்று உயிரிழந்தார். சுகவீனம் காரணமாக திருகோணமலை குச்சவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் வசித்து வந்த இராசதுரை திக்சன் (வயது 26) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார்.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் வெலிக்கந்தை திருகோணமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திக்சன், இரண்டரை வருடங்களின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். விடுதலை செய்யப்பட்ட நிலையில் திக்சன், சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

06 டிசம்பர் 2016

"துரோகிகள்" புடைசூழ துயில் கொள்கிறாரே ஜெ... அதிமுகவினர் கடும் விரக்தி!

ADMK men upset over Sasikala's relatives in Rajaji Hall மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துரோகிகள்; சதிகாரர்கள் என அடையாளம் காட்டப்பட்ட அத்தனை பேரும்தான் அவரது உடலை சுற்றி நிற்கிறார்கள்...இது எவ்வளவு பெரிய அநியாயம் என கொந்தளிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக ஒரு நடவடிக்கை மேற்கொண்டார். அதாவது சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜன், உறவினர்கள் டி.டி.வி தினகரன், வி.என். சுதாகரன், வி. பாஸ்கரன், வி.கே. திவாகர், வி.மகாதேவன், வி. தங்கமணி, டாக்டர் வெங்கடேஷ் என 13 பேரை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கினார் ஜெயலலிதா.இதைத் தொடர்ந்து சசிகலா, போயஸ் கார்டனை விட்டு வெளியேற நேரிட்டது. பின்னர் சசிகலா மட்டும் மன்னிப்பு கேட்டு மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்து கொண்டார். அப்போது சசிகலா வெளியிட்ட அறிக்கையிலும் கூட, தமது குடும்பத்தினரின் துரோகங்களை சுட்டிக்காட்டியிருந்தார். ஜெயலலிதா உடல்நலத்துடன் இருந்தவரை சசிகலாவை தவிர அவர் சுட்டிக்காட்டிய அதிமுகவின் துரோகிகள் எவரையும் கட்சிக்குள் தலைகாட்ட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ந் தேதி ஜெயலலிதா சேர்க்கப்பட்டது முதல் துரோகிகள் பட்டியலில் இடம்பெற்ற அத்தனை பேரும் மீண்டும் அதிமுக விவகாரங்களில் கோலோச்ச தொடங்கினர். அதிமுகவை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டில் ஜெயலலிதா சுட்டிக்காட்டிய அந்த துரோகிகள்தான் கைவசம் எடுத்துக் கொண்டனர். ஜெயலலிதா காலமாக போயஸ் கார்டனில் வைத்து இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டது. தற்போது அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருக்கிறது. ராஜாஜி ஹாலில் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதா உடலுக்கு கீழே படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா உடலைச் சுற்றி அவர் யாரையெல்லாம் துரோகிகள் என சுட்டிக்காட்டினாரோ அவர்கள்தான் நிற்கிறார்களே... இது எவ்வளவு பெரிய துரோகம்... கொடுமை என கொந்தளிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள். அத்துடன் அமைச்சர்களுக்கு அவர்கள் கட்டளை இடுவதும் அதை பவ்யமாக ஏற்று அவர்கள் செயல்படுவதும் சகிக்க முடியவில்லையே எனவும் புலம்புகின்றனர் அதிமுக நிர்வாகிகள்.

04 டிசம்பர் 2016

முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு!லண்டன் மருத்துவர் அவசர ஆலோசனை!

அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உடல் நலன் குன்றியதால், மருத்துவமனையின் முன் தற்போது கட்சித் தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட பெருங் கூட்டம் திரண்டுள்ளது.முன்னதாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்துவருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வருகைத்தந்துள்ளார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயிலுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அவருடைய உடல் நலம் பெற மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அப்போலோ கேட்டு கொண்டுள்ளது.முன்னதாக, கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் சிகிச்சை பெற்று வந்தார்.
சற்று உடல் நலம் பெற்று, பொது வார்டுக்கு மாற்றப்பட்டு, சீக்கிரம் முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என்று இன்று முற்பகல் அதிமுக தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ தெரிவித்தது.அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்அப்பல்லோ மருத்துவமனையின் முன் குழுமியிருக்கும் கூட்டம்