30 டிசம்பர் 2017

மண்டைதீவு கடலில் மீனவர் மரணம்!

மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.2ம் வட்டாரம் அல்லைப்பிட்டி பகுதியினை சேர்ந்த பொடிபாஸ் ஸ்ரான்லிலாஸ் வயது (64) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்று உயிரிழந்த குறித்த நபர் தனது மைத்துனருடன் மண்டைதீவு துறைப்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் மீன்பிடித்துள்ளார். அவருக்கு ஒவ்வாமை காரணமாக திடிரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.அவரை மைத்துனர் அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இறப்பு விசாரணையினை யாழ்,போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

26 டிசம்பர் 2017

சொந்த மக்கள் முன் வரப்பயத்தால் சுமந்திரனுக்கு அதிக பாதுகாப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி என்பது புதிதான விடயமல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.சுமந்திரன் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய நபர், மக்கள் மத்தியில் சென்றால் அடி விழும் என்பதற்காக அவருக்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கம், அதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டதோ, இல்லையோ, தமது சொந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை நல்லாட்சி அரசாங்கம் வைத்திருக்கின்றதென்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும், பேச்சாளருக்கும் உள்ளது.தமது சொந்த மக்களை சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அடி விழும் என்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுகின்றதெனில் எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்.இந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி, கடந்த அரசாங்கத்திலும் 3ஆவது அதி உயர் பாதுகாப்புக்கள் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், நீலம் திருச்செல்வத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு எதிராக போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் சென்று வாக்குகளைக் கேட்கின்றார்கள்.ஆனால், அந்த அரசாங்கம் தான் அவர்களை அதிகமாக பாதுகாப்பதற்கு விரும்புகின்றது. யார் அரசாங்கத்துடன், எந்தக் கோணங்களில் இருக்கின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக்கொள்வார்கள்.இந்த விடயங்களை காலம் தாழ்த்தி ஊடகங்கள் தெரிவிப்பது தனக்கு கவலையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

24 டிசம்பர் 2017

தமிழக அரசியல் வரலாற்றில் தினகரன் புரிந்த சாதனை!

சுயேச்சை வேட்பாளர் வெற்றி தமிழக அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முந்தி சென்று வெற்றி பெற்றுவிட்டார். ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு பிறகு மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் அமில சோதனையாகவே பார்க்கப்பட்டது.திமுக ஆட்சியில் நடந்த அவலங்களை அதிமுகவும், அதிமுகவில் நடப்பதை திமுக, தினகரன் அணியினரும் மாறி மாறி மக்கள் முன்பு வைத்தனர். குற்றச்சாட்டுகளை முன்வைத்தே தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது. மேலும் நீட் தேர்வு, ஜெயலலிதா மரணம், குட்கா ஊழல், ஓகி புயல் உள்ளிட்டவை இந்த தேர்தலில் பிரதிபலித்தன.சுமார் 19 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில் தினகரன் 89,013 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரை குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டார். மதுசூதனனை காட்டிலும் 40707 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் சாதனை பெற்றுவிட்டார்.தினகரன் வெற்றி பெற்றதன் மூலம் இடைத்தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் என்ற சாதனையை படைத்துவிட்டார். அதேபோல் தமிழகத்தில் இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்து விட்டது.

23 டிசம்பர் 2017

வேட்பாளர்களாக திருடர்களும் மோசடிக்காரர்களும் என்கிறது பவ்ரல் அமைப்பு!


உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளவர்களில் குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
மாட்டு திருடர்கள், கொள்ளையர்கள், நிதி மோசடிக் காரர்கள், சட்ட முரணான போதைப் பொருள் வியாபாரிகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் காணப்படுவதாக பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளவர்களில் குற்றவாளிகள் இருப்பதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. மாட்டு திருடர்கள், கொள்ளையர்கள், நிதி மோசடிக் காரர்கள், சட்ட முரணான போதைப் பொருள் வியாபாரிகள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் காணப்படுவதாக பெப்ரல் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இத்தகையவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் உள்ளதாகவும் தகவல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் அவர்களின் பெயர்களை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இத்தகையவர்களுக்கு வாக்களிப்பதிலிருந்து தவிர்த்து கொள்ளுமாறு தாம் வாக்காளர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கேட்டுள்ளார்.

16 டிசம்பர் 2017

தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஏழு பேர் விலகல்!


 சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.  இது தொடர்பாக கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு தமது உறுதிப்படுத்தப்பட்ட கையொப்பத்துடனான கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்த இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஏழு வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு தமது உறுதிப்படுத்தப்பட்ட கையொப்பத்துடனான கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனு பட்டியல் தயாரிப்பின்போது இடம்பெற்ற முறைகேடுகளை மறைத்து தம்மிடம் கையொப்பம் பெறப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், குறித்த செயலுக்கு தமது வன்மையான கண்டனத்தினையும் பதிவு செய்துள்ளனர்.

சம்பவத்தன்று காலையில் தம்மிடம் முறையான வேட்பாளர் பட்டியலைக் காட்டி அடையாள அட்டைப் பிரதி மற்றும் கையொப்பம் பெறப்பட்டதன் பின்னர், மீண்டும் மதியவேளை வேறொரு வேட்பாளர் பட்டியலில் முறைகேடாக கையொப்பம் பெறப்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமது சக வேட்பாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் மன உணர்வினைக் கருத்திற்கொண்டு இந்த தேர்தலில் நிற்பதிலிருந்து தாம் ஒருமித்தவகையில் விலகிக்கொள்வதாகவும், மிகுந்த மனவருத்தத்துடன் எடுக்கப்பட்ட இந்த முடிவிற்கு கீழ்த்தரமான சம்பவங்களே காரணமாக அமைந்துள்ளது என்று அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கடிதத்தினை தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளதோடு அதன் பிரதிகளை ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

10 டிசம்பர் 2017

ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது தேர்தல் அல்ல.. யுத்தம்:சீமான்!

ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியும் பயனில்லை என்று சீமான் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். டிசம்பர் 21ஆம் நாள் நடைபெற உள்ள ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.இன்று காலையில் காசிமேட்டில் சீமான் தனது கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஒன்பது ஹெலிகாப்டர்களைக் கொண்டு தொலைந்துபோன மீனவர்களைத் தேடுகிறது கேரள அரசாங்கம். இங்கு தெருவுக்குத் தெரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்றார். விஷால் வேட்புமனு நிராகரிப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என்று கூறிய சீமான், ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியும் பயனில்லை என்றார். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார்கள் என்றும் சீமான் தெரிவித்தார். இந்த இடைத்தேர்தல் தேர்தல் மட்டுமல்ல ஒரு போர் என்றும் சீமான் கூறினார்.

25 நவம்பர் 2017

முதல்வரை சந்தித்தார் கஜேந்திரகுமார்!

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையே நேற்றுக் காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றது.அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உடனான சந்திப்பின் போது, அரசின் தீர்வு மக்களுக்கு போதாமை தொடர்பாக கருத்திற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வடக்கு முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“அரசியல் ரீதியாக சேர்ந்திருக்காவிட்டாலும், கொள்கை ரீதியாக சில விடயங்களில் ஆராய வேண்டிய நிலை மற்றும் தற்போதைய அரசின் தீர்வு மக்களுக்கு போதாது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், அரசியல் ரீதியாக எதுவும் கலந்துரையாடவில்லை. இருவரும் மக்கள் அமைப்பின் தலைவர் என்ற வகையில் கொள்கை ரீதியான ஒருமைப்பாடு தொடர்பாக கலந்துரையாடினோம்” என கூறினார்.

01 நவம்பர் 2017

80 வயது மகனை பராமரிக்கும் 98 வயது தாய்!

பிரித்தானியாவில் முதியோர் இல்லத்தில் வசித்துவரும் 80 வயது மகனை பராமரிக்கும் பொருட்டு 98 வயது தாயார், அதே முதியோர் இல்லத்தில் சென்று தங்கியுள்ளார்.
பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் அமைந்துள்ள Moss View முதியோர் இல்லத்தில் தான் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இங்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்தே வசித்து வருபவர் 80 வயதான டோம்.
இதுவரை திருமணம் செய்து கொள்ளாத டோமுக்கு தினமும் காலை வணக்கம் சொல்லவும், உணவு தயாரானதும் சென்று கூப்பிடவும், அவருக்கு யாரும் இல்லை என்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக Ada Keating என்ற டோமின் 98 வயது தாயார் தெரிவித்துள்ளார்.
எப்போதெல்லாம் தாம் வீட்டை விட்டு வெளியே செல்கின்றேனோ அப்போதெல்லாம் டோம் தமக்காக காத்திருந்ததாகவும், தாம் வீட்டுக்கு வந்த அந்த நொடி ஓடி வந்து தம்மை இறுக்கமாக அணைத்து அன்பை வெளிப்படுத்துவார் எனவும் Ada Keating நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
முதியோர் இல்லத்தில் அனைவரும் தமது தாயாரை அன்புடன் கவனிப்பதாக கூறும் டோம், சமயங்களில் தமது தாயார் தம்மை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதெல்லாம் அடாவின் பேரப்பிள்ளைகளும் தவறாமல் வந்து டோமையும் அடாவையும் சந்தித்துவிட்டு செல்கின்றனர்.
முதியோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் பிலிப் தெரிவிக்கையில், இந்த தள்ளாத வயதிலும் தாய் மகன் பாசத்தை கண்கூடாக பார்க்கும் போது உண்மையில் நெகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

23 அக்டோபர் 2017

வேட்டி அணிந்து விமானம் செலுத்திய ஈழத்தமிழன்!

அமெரிக்காவில் வானூர்தி செலுத்தவே வேட்டி கட்டித்தான் வருவேன். என் பாரம்பரிய உடையை அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? என சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி கட்டி விமானம்
செலுத்திய ஒரே தமிழன் ரவிகரன் ரணேந்திரன்.இவர் அகரன் என்ற ஏவுகணையை உருவாக்கியவர். தமிழ் வார்த்தைகளை தவிர்த்து பிறமொழி சொற்களை பயன்படுத்த விரும்பாத அனுமதிக்காத ஒரே தமிழன்.
ஈழத்தமிழரான முல்லை மண்ணின் வாரிசு ரணேந்திரன் மட்டுமே. இவரை கர்வமாக சொல்லலாம் வேட்டி கட்டிய தமிழன் என்று.இவர் விண் பொறியியல் ஆய்வுத்துறை மாணவனாக அமெரிக்காவில் கல்விகற்று வருகின்றார்.
தனது வெற்றி குறித்து அவர் தெரிவிக்கையில்,
'தொடர் செயற்திட்டங்களின் முதல் படிநிலையாக எனது ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு பகலாக கடினமாக உழைத்து ‘அகரன்’ஐ உருவாக்கியுள்ளேன்.இது ஒரு மாதிரி ஏவுகணை முயற்சியாகும்.இதைக்கொண்டு மிகவும் திறன்வாய்ந்த ஏவுகணை அளவுகளை எளிதில் உருவாக்கிடமுடியும்.
ஏவுகணையின் உந்துசக்தி தொடர்பில் நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுத்த முறைமையால் இந்த ஏவுகணை மிகவும் வினைத்திறன் கொண்டதென ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்று ரவிகரன் ரணேந்திரன் கூறியுள்ளார்.

நன்றி:அதிர்வு

10 அக்டோபர் 2017

மாலதி 30ம் ஆண்டு நினைவு வணக்கம்!

விடுதலைப் போரில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று மாலை 3.30 மணியளவில் மன்னார் ஆண்டாங்குளத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. ஆண்டாங்குளத்தில் உள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவட்ட இணைஞர் அணி அலுவலகத்தில், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வடமாகாண இளைஞர் அணித் தலைவர் சி.வேந்தன் தலைமையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.இதன் போது சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் 2 ஆம் லெப்.மாலதியின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் மாலதியின் நினைவாக, அப்பிரதேசத்தில் உள்ள போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களில் உள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சியினரினால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

26 செப்டம்பர் 2017

சிங்களவர்களின் மிரட்டலால் வைகோவிற்கு ஐ.நா.பாதுகாப்பு!

தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வைகோவை சிங்களர்கள் மிரட்டிய நிலையில் அவருக்கு ஐ.நா சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார்.மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்து அவரை திட்டியுள்ளார். பின்னர் அவருடன் சேர்ந்து வந்த சில சிங்களர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வைகோவை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்று வைகோ வாதாடினார். பிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டுள்ளனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள், காணாமல் போன கணவன், தந்தையை தேடி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள்.210 நாட்களாக பெண்கள் கிளிநொச்சியல் உண்ணாவிரதம்இருக்கிறார்கள். எங்கள் மக்கள் அழிக்கப்பட்டு எங்கள் இனமே அழிக்கப்படும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. 2015 தீர்மானத்தை ஏற்கவேண்டியதில்லை என்று ரணில் விக்ரமசிங்கேயும் மைத்ரிபாலா சிறிசேனாவும் சொல்கிறார்கள். எனவே, மனித உரிமை ஆணையம் இதனை ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அனுப்பி அவர் நேரடியாக இலங்கை வந்து பார்வையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று பேசினேன். இதற்கு சிங்களப் பெண் ஒருவர் திட்டினார். போர்க்குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் வீரசேகரா தலைமையிலான சிங்களர்களே தகராறு செய்தனர். நீங்கள் தற்கொலை தீவிரவாதிகள், கொலைகாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நானும் பதில் பேசினேன். ஆனால், அவர்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே வந்துள்ளனர். நான் பேசுவதை மட்டுமே வீடியோவில் பதிவு செய்தனர் என்று வைகோ சொன்னார். ஜெனிவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தமிழ் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

17 செப்டம்பர் 2017

கள்ளிச் செடி கூட எங்க ஊரில் வளரும்.. பாஜக வளரவே வளராது:சீமான்

தமிழகத்தில் கள்ளிச் செடி கூட வளரும்.. பாஜக வளரவே வளராது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:பாஜக தேசிய செயலாளர் ராஜா, நான் சாரணர் இயக்கத்தின் முன்னாள் மாணவர்; நான் பொறுப்புக்கு வந்தால் தேசப்பற்று, ஒழுக்கத்தை கற்பிப்பேன் என்றார்.ஆனால் உங்க ஒழுக்கமும் பற்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். 51 ஓட்டுகள்தான் வாங்கியிருக்கிறார். அவரை எதிர்த்து நின்ற மணி 236 ஓட்டுகள் வாங்கியிருக்கிறார். இதுதான் உங்க நிலைமை.தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு வருகிறது என்கிறார்கள்... எங்க வளருது? கள்ளிச்செடி கூட எங்க ஊரில் வளரும். பாஜக வளரவே வளராது.
இவ்வாறு சீமான் கூறினார்.

01 செப்டம்பர் 2017

நீட் தேர்வால் ஏமாற்றம் மாணவி அனிதா தற்கொலை!

Anithaஅரியலூரை சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் அனிதா. ப்ளஸ் டூ தேர்வு அடிப்படையில் அனிதாவின் கட் ஆப் மதிப்பெண் 196.5 ஆகும். நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண்களே பெற்றிருந்தார் அனிதா, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து நன்றாக படித்தவர் அனிதா. அவர் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீட் தேர்வு அடிப்படையிலேயே கவுன்சிலிங் நடைபெற்றது.இதனால் விரக்தியடைந்த அனிதா,தன்னுடைய மருத்துவ கனவு கலைந்து போனதாக உறவினர்களிடம் கூறி வந்துள்ளர். இந்த நிலையில் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காத காரணத்தால் விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அதேவேளை,மாணவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர்.பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்தெழலாம் என நம்பப்படுகிறது.

28 ஆகஸ்ட் 2017

வித்தியா படுகொலைக்கு கடற்படைதான் காரணம்-சசீந்திரன்

கடற்படையினரே புங்குடுதீவு மாணவி வித்தியாவை வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்துள்ளனர் என்று தீர்ப்பாயத்தில் தெரிவித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான ம.சசீந்திரன். இவர் இந்தக் கொலை வழக்கின் மற்றோரு சந்தேகநபரான சுவிஸ்குமாரின் தம்பியாவார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணை செய்யப்படுகின்றது. வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று எதிரித் தரப்பினரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் இன்று சாட்சியமளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
சாரதாம்பாள், தர்சினி கொல்லப்பட்ட சம்பவங்களில் கடற்படையினர் ஏற்கனவே இவ்வாறு செய்துள்ளனர். இந்தக் கொலையும் கடற்படையினரே செய்துள்ளனர். அதை மறைக்கவே எம்மைக் கைது செய்துள்ளனர். ஊர் முழுக்க அறிவித்து எமக்கு எதிரான எண்ணப்பாட்டை உருவாக்கிவிட்டனர். சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்களிலும் எமது படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளனர். அதனால் எங்கள் குடும்பம் நஞ்சருந்தி இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நாம் இந்தக் குற்றத்தைச் செய்யாததாலேயே உயிரோடு இருக்கின்றோம் என்று அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

27 ஆகஸ்ட் 2017

தமிழர் தெரு விழாவில் கனடிய பிரதமர் உரை!

இலங்கையில் தமிழ் மக்கள்; பெரும்பான்மை மக்களாலும் அந்த அரசாங்கத்தாலும் மிதிக்கப்படுகின்ற நிலை மாறி மதிக்கப்படுகின்ற ஒரு இனமாக மாற வேண்டும். அதற்காக அரசியல் ரீதியாக உரிமைகள் தொடர்பான சட்ட மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதற்காக கனடிய அரசு சர்வதேச ரீதியாக குரல்கொடுக்கும்" என்று இன்;று மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற "தமிழர் தெரு விழாவில்" சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய கனடாவின் பிரதமர் திரு ஜஸ்டின் ரூடுடோ தெரிவித்தார்.
அவர் மேடையில் உரையாற்றும் போது கனடாவின் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினராக திரு ஹரி ஆனந்தசங்கரியும் உடனிருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றிய பின்னர் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கா பிரதமர் விடைபெற்றார்.
இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் இந்த தமிழர் தெருவிழா இடம்பெறும். நூற்றுக்கணக்கான தமிழ்ர் வர்த்தக நிலையங்களும் பிரதான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தஙகள் வர்த்தகச் சாவடிகளை இங்கு அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி:கனடா உதயன் செய்திப் பிரிவு

22 ஜூலை 2017

வானில் இருந்து விழுந்த திரவத்தால் மாணவிகள் பாதிப்பு!      

வானத்தில் இருந்து விழுந்த மஞ்சள் நிற திரவம் உடலில் பட்டதால் யாழ்ப்பாண நகரில் உள்ள வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 18 பேர் மயக்கமடைந்தனர். இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மாணவிகள் மைதானத்தில் நின்றிருந்த வேளையில் வானிலிருந்து விழுந்த ஒருவகை திரவம்பட்டே 18 மாணவிகள் பாதிக்கப்பட்டனர். மதிய இடைவேளையின்போது மாணவர்கள் மைதானத்தில் நின்றிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மஞ்சள் நிற திரவமொன்று வானிலிருந்து வீழ்ந்ததாக பாடசாலை மாணவிகள் குறிப்பிட்டனர்.
குறித்த திரவம் மாணவிகளின் உடலில்பட்ட நிலையில் அவர்களது கைகள் சிவந்துள்ளன. அதனை தொடர்ந்து பாடசாலைக்கு வந்த சுகாதார வைத்திய அதிகாரி மாணவர்களை பார்வையிட்டதுடன், உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பணித்துள்ளார். இந்நிலையில், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

18 ஜூலை 2017

மரணத்தை ஏமாற்றிய மனிதன்!

தன்னை காப்பாற்றிய காவல்துறை அதிகாரிகளுடன் ஜான் ஆக்பர்ன்
காப்பாற்றிய காவல்துறையினருடன் 

மாரடைப்பினால் நாடித் துடிப்பு நின்று போயிருந்த ஒருவருக்கு 40 நிமிடங்கள் தொடர்ந்து முதலுதவி செய்து அவரை மரணத்தின் பிடியிலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவு ஊழியர்கள் இருவர் மீட்டுள்ளனர் .
கடந்த ஜுன் 26-ஆம் தேதி தனது வீட்டில் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்த அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த 36 வயதான ஜான் ஆக்பர்னுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இது குறித்து அவசரப்பிரிவு எண்ணான 911-க்கு தெரிவிக்கப்பட்டதும் , மூன்று குழந்தைகளின் தந்தையான ஆக்பர்னின் வீட்டிற்கு உடனடியாக வந்த இரண்டு காவல்துறையினர் அவருக்கு சி.பி.ஆர் (Cardiopulmonary resuscitation) எனப்படும் இதயத்தை இயங்க வைக்கும் முதலுதவி முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அவருடைய நாடித்துடிப்பு மீண்டும் வரும் வரை சுமார் 42 நிமிடங்கள் அவர்கள் இருவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சி.பி.ஆர் முதலுதவி செய்தும், பாதிக்கப்பட்டவருக்கு 20 நிமிடங்கள் வரை மீண்டும் நாடித்துடிப்பு வரவில்லை எனில் அந்த நபருக்கு மீண்டும் சி.பிஆர் முதலுதவி செய்வது அவசியமில்லை. ஆனால் சார்லெட்-மெக்லென்பர்க் காவல்துறை அதிகாரிகளான லாரன்ஸ் கைலர் மற்றும் நிக்கோலினா பஜிக் ஆகியோர் 40 நிமிடங்களுக்கு மேலாக சி.பி.ஆர் முதலுதவி செய்து ஆக்பர்னின் உயிரை காப்பாற்றியுள்ளது போற்றுதலுக்குரியது.

நான் நலமாக இருக்கிறேன்`:

நாடித்துடிப்பு வந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஆக்பர்ன், விரைவில் குணமடைவதற்காக மருத்துவர்களால் ஒரு வாரத்திற்கு கோமா நிலையில் வைக்கப்பட்டார்.
மீண்டும் பணிக்கு செல்வதை எளிதாக்குவதற்காக, இன்னும் ஆறு மாதங்கள் அவர் வாகனங்களை இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மார்பில் உள்ள புண்களைத் தவிர, தான் முழுமையான குணமடைந்துவிட்டது போல உணர்வதாக அவர் கூறியுள்ளார்.
`என்னுடைய இரண்டாவது வாழ்க்கையை எப்படி சிறப்பாக உருவாக்கிக் கொள்வது என யோசித்து வருகிறேன். அவர்களுடைய பணியையும் தாண்டி என்னை காப்பாற்ற முயற்சி எடுத்து, என்னுடைய ஒவ்வொரு நாளையும் வாழ எனக்கு வாய்ப்பளித்துள்ள அவர்களுக்கு கடன்பட்டுள்ளேன்.` என ஆக்பர்ன் தெரிவித்துள்ளார்.

தங்க நிமிடங்கள்:

இதயத்துடிப்பு நின்ற ஒருவருக்கு உடனடியாக சி.பி.ஆர் முதலுதவி செய்யப்படவில்லை என்றால் அடுத்த ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதம் குறைவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.` என அலபாமா பல்கலைகழகத்தின் மருத்துவ கல்வித்துறை இணைப் பேராசிரியரான மைக்கேல் குர்ஸ் தெரிவித்துள்ளார்.
`வடக்கு கரோலினாவில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், சி.பி.ஆர் முதலுதவி உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதை உணர்த்துகிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டர்களுக்கு உடனடியாக அளிக்கப்படும் சி.பி.ஆர் சிகிச்சை, அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை மும்மடங்காக்குகிறது.பெரும்பாலான அமெரிக்க பணியாளர்கள் திடீரென ஏற்படும் மாரடைப்பை கையாளத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.` என அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் 3,50,000க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். மருத்துவமனைக்கு வெளியில் மாரடைப்பால் பாதிக்கப்படும் 46 சதவீதம் பேர், மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு முன்னர் வேறு எந்த வித முதலுதவியும் கிடைக்காததால் உயிரிழக்கின்றனர்.

நன்றி:பிபிசி தமிழ்

10 ஜூலை 2017

மணற்காட்டில் மக்கள் கொந்தளிப்பு!இரு பொலிஸார் கைதாம்!

வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலையைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது இடுப்புக்கு மேற் பகுதியில் சூட்டுக்காயம் காணப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
“சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனவும் ஹன்ரர் ரக வாகனம் மணலுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதன்பின்னரே முழுமையாக தகவல்களைத் தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 10 நாள்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நேற்று மதியம் உணவு உண்டுவிட்டு யாழ்ப்பாணம் சென்று வந்து மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்திய அவர் வல்லிபுரம் கோயிலுக்குச் சென்று வருகின்றேன் என்று கூறிச் சென்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.அவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் மீண்டும் வெளிநாடு செல்லவிருந்தார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தினர். மந்திகை மருத்துவமனைப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்து காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மகாசிங்க, காங்கேசன்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட 50 பொலிஸாரும் அவர்களுடன் இரு வாகனங்களில் சிறப்பு அதிரடி படையினரும் மந்திகை ஆதார மருத்துவனைக்குச் சென்றனர்.
அதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல்லியடியில் அமைந்துள்ள அவரது வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினர். சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் முகத்தை துணியால் மூடிக் கட்டியவாறு தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது.
துன்னாலையில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஒன்றும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்தன. அதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

03 ஜூலை 2017

மீண்டும் உதயமாகிறது நவம் அறிவுக்கூடம்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி, பூ, இயற்கை மற்றும் வெளிப்புறம்வியட்னாமில் இருக்கின்ற அதிகமான பிச்சைக்காரர்கள் அந்தநாட்டின் விடுதலைக்காக போராடி விழுப்புண்அடைந்த போராளிகளே. அதேபோன்றதொரு நிலமை எமது இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற போராளிகளுக்கும்  ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே நாம் நவம் அறிவுக்கூடத்தை நிறுவுகின்றோம்.இன்றையகால அவசியத்தின் பொருட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சி தளத்திலும் புலத்திலும் இன்றும் தலைவரையும் போரளிகளையும் நேசிக்கும் உறவுகளின் பலத்துடனும் ஆசியுடனும் தாயகத்தில் நவம்அறிவுகூடத்தை 15-07-2017உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றோம்.

ஊடகப்பிரிவு
ஜனநாயகபோராளிகள்கட்சி
தலைமைச்செயலகம்
கைவேலி புதுக்குடியிருப்பு

25 ஜூன் 2017

பக்கபலமாக இருந்த மக்களுக்கு முதல்வர் நன்றி தெரிவிப்பு!

நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


எனதினிய தமிழ் நெஞ்சங்களே!

அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன.

முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள்.

இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனமுற்றிருந்த வேளையிலே தான் ‘ நீங்கள் போகும் பாதை சரி! நாமும் உங்களுடன் தான்’ என்று நம்பிக்கை ஒளி ஊட்டியுள்ளீர்கள்.

மூன்றாவதாக மக்கள் பலம் என்பதென்ன என்ற கேள்விக்கு விடையை உலகறியச் செய்து விட்டீர்கள்.

நான்காவதாக நந்தவனத்து ஆண்டிகளுக்கு நயமான பாடங்கள் புகட்டி விட்டீர்கள். போட்டுடைத்தவர்களை அடையாளம் காண அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளீர்கள்.

ஐந்தாவதாக தமிழர் அரசியல் பிரச்சினைகளை ‘ இந்தா அந்தா’ தீர்க்க வருகின்றோம் என்றவர்களுக்கு அவர்களின் 13 ஆம் திருத்தச் சட்ட அடிப்படையிலான தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற செய்தியை ஓங்கி உரைத்துள்ளீர்கள்.

ஆறாவதாக ஊழலுக்கு எம் மக்கள் எதிரானவர்கள் என்ற செய்தியை உலகறியச் செய்து விட்டீர்கள்.

இவ்வாறு பல செய்திகளை நீங்கள் உங்கள் எழுச்சியால் எடுத்தியம்பி விட்டீர்கள். என்னையும் உங்களுள் ஒருவனாக ஏற்றுள்ளீர்கள். தமிழ் மக்களின் எதிர்காலம் எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் என்பதை ஊரறிய உலகறியச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!

முக்கியமாக இளைஞர்களின் எழுச்சி என்னைப் பரவசம் கொள்ளச் செய்தது. எம்மவர்களின் அன்பு நெஞ்சங்களின் அரவணைப்பு மனதுக்கு இதமாய் அமைந்தது. அவர்களின் கரிசனையும் ஊக்குவிப்பும் என் கடமைகளை எனக்குணர்த்தின.

நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று நம்புகின்றேன்.

உங்கள் யாவருக்கும் இறைவனின் அருள் கிட்டுவதாக எனப் பிரார்த்திக்கின்றேன்.

நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணம்

15 ஜூன் 2017

விக்னேஸ்வரன் மீது சூழ்ச்சி அரங்கேறுகிறது!

பன்னாட்டு சக்திகளின் சதியினால் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டம் முள்ளிவாய்க்காலில் குருதி தோய்ந்த காவியமாய் முடிவுரை எழுதப்பட்டு மக்கள் நிர்க்கதியாக நின்றவேளை தமிழ்மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுக்கவென தமிழ்மக்களின் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்ற ஒரு தனிப்பெருந் தலைமையாக தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே வடக்கின் முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன்.
அரசு மக்களின் காணிவிவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இழுத்தடிப்பான ஓர் போக்கினைக் கடைப்பிடித்து வந்தபோது அரசிற்கு அழுத்தங்களைக் கொடுத்துவந்த ஒரேயொரு மக்கள் பிரதிநிதி விக்கினேஸ்வரன் அவர்களே!
மக்களின் கொள்கைகளை மனதில் நிறுத்தி அரசியல் பாதையில் மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக மீட்டெடுப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்ட இவரை, தென்பகுதி அடுத்த பிரபாகரன் என்றே வர்ணித்தது. சிறுபான்மையினரை அடிமைப்படுத்துவதில் பெருந்தடையாக இருந்த இவரை எவ்வழியில் வீழ்த்தலாம் என்பதில் எந்நேரமும் குறியாக இருந்த அரசு கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது நாட்டில் புலிகளை மீளவும் உருவாக்க முனைகின்றார் எனும் ஓர் குற்றச்சாட்டை இவர்மீது முன்வைத்து பௌத்த மதகுருக்களைத் தூண்டிவிட்டது. அதுவும் பயனற்றுப்போனது.
அடுத்தகட்டமாக விலைபோன சில தமிழ்த் தலைமைகளை வைத்து அரசு தனது நாடகத்தினை அரங்கேற்றி வலுவாக இருந்த தமிழரசுக்கட்சியிடையே ஓர் பிளவினை ஏற்படுத்தி அதனை வலுக்குன்றச் செய்துள்ளது.இதனால் மீண்டும் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
அரசிற்கு சிம்மசொப்பனமாக இருந்த வடக்கு மாகாணசபையில் இடம்பெற்ற ஊழலை எதிர்த்து அவ் ஊழல்ப் பேர்வழிகளை பதவிநீக்கம் செய்தமைக்காக இன்று ஓர் உன்னதமான, அரசியலில் அத்தனை தந்திரோபாயங்களையும் அறிந்து அதன்படி தமிழ்மக்களுக்கான அரசியல்த் தீர்வுக்கான ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்துவைத்த முதல்வரை அரசு விலைபோன சில தமிழ்த் தலைமைகளை வைத்து பதவியிலிருந்து நீக்கியுள்ளது. இங்குதான் மக்கள் விழிப்படையவேண்டிய கட்டாயமுள்ளது. இப்படியோர் தமிழின மீட்பரை அரசு திட்டமிட்டு சதியால் வீழ்த்தியதைக் கண்டும் மௌனம் காத்து மறுபடியும் அரசின் அடக்குமுறைக்குள் சிக்குண்டு நாதியற்று வாழ்வதா, இல்லை முதல்வரின் பின்னின்று நீதிக்காகக் குரல்கொடுத்து உரிமைகளை வென்றெடுத்து சுதந்திரமாக வாழ்வதா என்பதை முடிவுசெய்து புதிய வரலாற்றினை மக்கள் எழுத வேண்டுமென தமிழ்த்தாய் கண்விழிக்கின்றாள்.

தமிழ் இளைஞர்ளே!!!

முள்ளிவாய்க்காலில் தமிழனின் விடிவுக்காக பொராடியவர்களை துரோகம் எப்படி தோற்கடித்ததோ அதேபோல இன்று மற்றுமொரு துரோகம் நடந்து கொண்டிருக்க நாம் அனைவரும் வீடுகளில் படுத்துறங்கிங்கொண்டிருக்கிறோம். நாளை விடிந்ததும் எமக்காக பாடுபட்ட இன்னொரு மரமும் துரோகிகளால் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கும் வேதனையோடு கடந்து செல்லப்போகிறோமா? முடிவெடுங்கள் இளைஞர்கள் முடிவெடுத்தால் இயலாது என்று ஒண்றில்லை.
வடக்கில் உள்ள எல்லா மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்னால் ஒண்று கூடுங்கள் அவர்களை துரோகத்திற்கு துணைபோகவேிடாது தடுத்து நிறுத்துங்கள் உடனடியாக செயற்படுங்கள் இல்லையேல் நாளை ஒரு மாபெரும் துரோகத்தினை கண்டுகளித்த பார்வையாளராகிவிடுவீர்கள்..

-வடமாகாண இளைஞர் பேரவை-

05 ஜூன் 2017

இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி - மறுக்கிறது அரசாங்கம்!

இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன தெரிவித்துள்ளன. அண்மைக்காலமாக இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானிலிருந்து சதொச நிறுவனம் பிளாஸ்டிக் கலந்த பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தித் தளங்களில் பரவலான செய்தி பரப்பப்பட்டிருந்தது.எனினும் குறித்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று மறுக்கும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன, உரிய பரிசோதனைகளின் பின்னரே பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. அத்துடன் இவ்வாறான செய்திகள் பரவத் தொடங்கியதன் பின்னர் மீண்டுமொரு முறை குறித்த அரிசியை பரிசோதனைக் கூடமொன்றில் சமைத்து பரிசோதனைக்குட்படுத்திய போதிலும் எதுவித பிளாஸ்டிக் கலவைகளும் அடங்கியிருக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
எனவே பொதுமக்களின் நன்மை கருதி குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்கப்படும் பாகிஸ்தான் பாஸ்மதி அரிசியை பொதுமக்கள் எதுவித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என்றும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன உறுதிப்படுத்தியுள்ளன.

02 ஜூன் 2017

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு!

தமிழின் முதுபெரும் கவிஞரும், நக்கீரன் குழும இலக்கிய ஏடான இனிய உதயத்தின் நெறியாளருமான கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு எய்தினார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. செய்தி கேட்டு கவிஞர்களும், தமிழ் அன்பர்களும், இலக்கிய வாதிகளும், அவரது பனையூர் இல்லத்தை நோக்கி திரண்டு கொண்டிருக்கிறார்கள். அவரது இறுதி சடங்குகள் 03.06.2017 சனிக்கிழமை மதியம் 12 மணி அளவில் திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற உள்ளது. அண்மையில்தான் கவிக்கோ ரகுமானை, திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா திரைப்படத்திற்கு பாட்டெழுத அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்த அப்துல் ரகுமான் புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.
இவர் பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1999-ம் ஆண்டு ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றிருந்தார். மேலும் இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி இலக்கியங்களை தமிழில் புனைந்திருக்கிறார்.
இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர். இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி' 1974ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், 1999ல் 'ஆலாபனை' கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வென்றார். கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

நன்றி:நக்கீரன்

28 மே 2017

சட்டவாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.  அப்பாத்துரை வினாயகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவராகவும் முன்னர் செயற்பட்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை வினாயகமூர்த்தி இன்று பிற்பகல் 1 மணியளவில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும். அப்பாத்துரை வினாயகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவராகவும் முன்னர் செயற்பட்டிருந்தார்.2000ஆம் ஆண்டு, 2001ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டவர். அப்பாத்துரை வினாயகமூர்த்தியின் இறுதிச் சடங்கு யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உரிமை செயற்பாட்டாளரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல் வழக்குகளுக்காக ஆயராகி வாதாடி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவரின் இழப்பானது தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் பேரிழப்பாகும்.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் தனது அகவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

09 மே 2017

மொன்றியலில் வெள்ளம்,இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது!

கனடாவில், மொன்றியல், கியுபெக் பகுதிகளில் வெள்ளம் அதிகரித்ததால் இராணுவத்தினர் அழைக்கப்பட்டிருப்பதுடன் மொன்றியலில் அவசர கால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மொன்றியலிற்கும் Île-Perrotற்கும் இடையில் Galipeault பாலம் மூடப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் மழை தொடர்ந்து பெய்ததால் அவசர கால நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளை மேற்கொள்வதற்கு 1,200 துருப்புக்கள் அனுப்பபட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மொன்றியலில் 179 குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மொன்றியல் Sacré-Coeur Hospital in Ahuntsic வைத்தியசாலையிலிருந்து 86 மனநோயாளர்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
கியுபெக்கில் பல இடங்களில் போக்குவரத்து பாதைகள் மூடப்பட்டன. பிரதான பாலங்கள் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளும் இயங்கவில்லை. மொன்றியலில் 100ற்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கியு பெக்கிலும் 100ற்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கியுபெக் பூராகவும் 146 நகராட்சிகள் வெள்ள மண்டலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன. இப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கியுபெக்கின் மேற்கு பகுதிகளான றிகாட் கற்ரினோ மற்றும் ஹட்சன் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

04 மே 2017

ரொறன்றோவிற்கு காலநிலை எச்சரிக்கை!

தேசிய காலநிலை உதவி மையம் காலநிலை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ரொறொன்ரோ பெரும்பாகம் உட்பட்ட இடங்களில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கும் மழை ஞாயிற்றுகிழமை வரை தொடரும். வியாழக்கிழமை கிட்டத்தட்ட 10-15 மில்லி மீற்றர்கள் வரை மழை பெய்யலாம் என வானிலை கணிப்பு கூறுகின்றது. மழையின் பெரும்பகுதி வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படுகின்றது.ஒரு மாதத்தின் மதிப்புள்ள மழை மே மாதம் முதல் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு ஒரு வாரத்தில் பெய்யும். மழையுடன் குளிரான கால நிலையும் இணைந்து கொண்டு வெப்பநிலை அடுத்த நான்கு நாட்கள் 6-8 C ஆக காணப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

03 ஏப்ரல் 2017

புலிகளை ஆதரித்துப்பேசிய வழக்கில் சிறை சென்றார் வைகோ!

தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புகளுக்கு ஆதரவாக வைகோ பேசக்கூடாது என்று வைகோவிற்கு தடையிருந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசினார்.அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தார் வைகோ. தேசதுரோக வழக்கை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்த வைகோ, வழக்கை விரைவாக நடத்தவில்லையெனில் கைது செய்யவும் கோரி இன்று மனு ஒன்றை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்மனு மீது எழும்பூர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வைகோவை சிறையிலடைக்க உத்தரவிட்டது. ஜாமீனில் செல்ல விரும்பவில்லை என கூறியதால் வைகோ கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து வைகோவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் இன்று தாமாக முன் வந்து மனுத்தாக்கல் செய்து கைதாகி புழல் சிறைக்கு சென்றுள்ளார் வைகோ.

15 மார்ச் 2017

என் அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியிலிருந்து தள்ளி விட்டார்!

ஜெயலலிதாவின் மகன் நான்தான், அவரது மொத்த சொத்துகளும் எனக்குதான், என்னை உலகுக்கு அறிமுகப்படுத்த ஜெயலலிதா முற்பட்டபோது சசிகலா அவரை மாடியிலிருந்து கீழே தள்ளினார் என்று தமிழக தலைமைச் செயலாளருக்கு ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அனுப்பியுள்ளார்.ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி நீர் சத்துக் குறைபாடு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் காத்து கிடந்தனர்.இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் திட உணவுகளை உட்கொள்கிறார் என்றும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் அப்பல்லோ நிர்வாகம் தகவல் தெரிவித்து வந்தது.75 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச சிகிச்சைகள் அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.நல் ஆளுமை, பன்முகத்திறமை, திறமையான நிர்வாகம் ஆகியவற்றை கொண்ட ஜெயலலிதாவை இழந்ததால் நாட்டு மக்கள் மட்டுமல்ல அண்டைய மாநில தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி கிடந்தது. சசிகலா மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பி.எச். பாண்டியன், ஜெயலலிதாவை அவரது வீட்டிலிருந்து யாரோ கீழே தள்ளிவிட்டதாகவும், சிபிஐ விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே வரும் என்றும் தெரிவித்திருந்தார்.ஜெயலலிதாவின் தோழியான கீதாவும் இதேபோல் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறிவந்தார். மக்களின் சந்தேகத்தை தீர்க்க அப்பல்லோவும், எய்ம்ஸ் மருத்துவமனையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கைகளை வெளியிட்டும் யாரும் நம்பவில்லை.ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகமே குழப்பத்தில் உளள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழக தலைமை செயலாளருக்கு ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.அதில், நான் தான் ஜெயலலிதாவின் மகன். அவரது உண்மையான வாரிசு நான்தான். அவரது சொத்துகள் எனக்கு மட்டுமே சொந்தம். ஜெயலலிதா இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு 4 நாள்கள் அவருடன் போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தேன்.இந்நிலையில் ஜெயலலிதா என்னை அவரது மகனாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று சசிகலாவிடம் கூறினார். ஆனால் அதற்கு சசிகலா வேண்டாம் என்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எனது அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியில் இருந்து தள்ளிவிட்டார் என்று பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். தலைமைச் செயலருக்கு வந்துள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 மார்ச் 2017

முன்னாள் அதிபர் சரோஜினி ஞானசோதியனின் அன்பான வேண்டுகோள்!

அன்பான மக்களே! இன்றய உலகில் மனித உயிர்களுக்கு பெறுமதி இல்லை என்ற ஒரு நிலை உருவாகிவிட்டதை நாளாந்தம் நடக்கும் விபத்துக்களில் இருந்து அறிகின்றோம் .காரணம் என்ன??ஒவ்வொரு வாகன ஓட்டிகளினதும் பொறுப்பற்ற செயல்களே !கூடுதலாக பலரிடமும் (லீசிங் ,)என்ற முறையில் அளவுக்கதிகமாக வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அரை குறை சாரதிப் பயிற்சியுடன் வாகனங்கள் ஓட்டிமற்றவர்களை தட்டுவதும் ,மதுப்பாவனை அதிகரித்து குடித்துவிட்டு ஒடுவதும் பண ஆசையில் நான் முந்தி நீமுந்திஎனப் போட்டி போட்டு ஓடுவதும் ,காப்பெற் வீதியில் வேகமாக ஓடலாம் என்ற பாணியில் இளைஞர்கள் ஓடுவதும் கூடி விட்டது .இவற்றைவிட டிப்பர் வாகனங்கள் கூடி அவற்றின் மூலமும் பலர் அடிபட்டு இறந்துள்ளனர் .அத்துடன் வீதிகளில் பொருட்களை ஏற்றி வரும் போது பழுதடைந்ததும் அப்படியே விட்டு விட்டு அதற்குப் பாதுகாப்பு விளக்குப் போடாமல் விட்டுச் சென்றதனால் ஏற்படும் விபத்துக்களும் தற்போது கூடியுள்ளது கடந்த 9-3-2017 அன்று என் அன்பு மாணவி விஜயரூபன் சர்மிளா மரணமாக வேண்டி வந்ததே டிராக்டர் ஒன்று நடு வீதியோரம் நிறுத்திவைத்திருந்தமையே அநியாய மரணம் அவரது மாமா ஒரு திறமையான சாரதி வேக்க்கட்டுப்பாட்டை மதிப்பவர் என்பதாலேயே மாமனுடன் அன்று ச்மிளா பயணித்தாள் அவளின் விதியா??இல்லை யாஎன்பது வேறு,உழவுயந்திரம் அப்படி நிறுத்தி வைக்காதிருந்தால் சர்மிளாவுக்கு இப்படி நடந்திருக்காது .தயவு செய்து வாகன ஓட்டிகளே மனித உயிர்களை பலியெடுக்காதீர்கள் .உங்கள் உயிர்களையும் மதியுங்கள் பிற உயிர்களையும் மதியுங்கள் நிதானம் பொறுமை கண்ணியம் என்பவற்றைக் கைக்கொள்ளுங்கள் சாரதிப் பணி சமூகப்பணி என எண்ணுங்கள் உங்கள் ஒருவர் கைகளிலேயே பல மனித உயிர்களின் காப்புறுதி உள்ளது "உயிர்களைக்காப்போம் விபத்துக்களைத் தவிர்ப்போம் ""எமது கோரிக்கையை பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள் .முகநூல் நண்பர்களே நீங்களும் ஒவ்வொருவரும் விழிப்பணர்வை உங்கள் மூலமாகவும் ஏற்படுத்துங்கள்.

08 மார்ச் 2017

நாங்கதான் சி.எம் ; ஒரு தலையணை போதும் ; கூறினார் நடராஜன் !

ஓ.பி.எஸ் அணி நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு பெற்று பேசிய அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன், சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியதாக ஒரு செய்தியை கூறி ஓ.பி.எஸ் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடை செய்தார்.ஜெ.வின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் ஓ.பி.எஸ் அணி எழுப்பி வருகிறது. அவரின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ அல்லது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 33 இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.
இதில் ஓ.பி.எஸ் அணி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போரட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதில், பொன்னையன், மதுசூதனன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அங்கு வந்து பேசிய அகில இந்திய மூவேந்தர் முன்னனி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 7மாதங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை சசிகலா கணவர் நடராஜன் நடத்தினார். அப்போது சில நெருங்கிய பத்திரிக்கையாளர்களிடம் அவர் மனம் திறந்து பேசினார். இன்னும் 2 மாதங்கள் கழித்து நாங்தான் முதலமைச்சர் எனக் கூறியுள்ளார். அதுகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த செய்தியாளர், தற்போதுதான் 4 ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த நடராஜன், கோடியெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனை கிடையாது. நாங்கள் நினைத்தால் சி.எம் ஆகிவிடுவோம். அதற்கு ஒரு தலையணை இருந்தால் போதும் எனக் கூறினார் என்ற அதிர்ச்சி தகவலை சேதுராமன் வெளியிட்டார்.
சேதுராமன் கூறிய செய்தி கேட்டு, ஓ.பி.எஸ் உட்பட மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

19 பிப்ரவரி 2017

காயம்பட்ட நிலையில் போராளியின் உடலம்!

வவுனியா – கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் முன்னாள் போராளியான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோதாண்டர்நொச்சிக்குளம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 33 வயதான கோபு என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குடும்பத்தினருடன் நேற்றிரவு உறங்கச்சென்றவர், இன்று காலை வீட்டின் முன் மண்டபத்தில் சடலமாக காணப்பட்டுள்ளார். இந்நிலையில் அருகில் உறங்கிய கணவனைக் காணவில்லை என தேடியபோது அவர் தூங்கில் தொங்கியவாறு காணப்பட்டதாகவும், சடலத்தை கீழ் இறக்கி விட்டு உறவினர்களை அழைத்ததாகவும் உயிரிழந்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது சடலம் நிலத்தில் இருந்துள்ளதுடன் அவரது நெற்றியில் காயம் ஒன்றும் காணப்படுவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஈச்சங்குளம் பொலிசார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி எஸ்.சுரேந்திரன், சடலத்தைப் பார்வையிட்டதுடன், பிரதே பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மனைவி வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

15 பிப்ரவரி 2017

நடராஜனை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா!

Sasikala weeps before leaving prisonசொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த வழக்கு 21 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அதன்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்றும் 4 ஆண்டுகள் தண்டனை பெற வேண்டும் என்பது உறுதியானது.இதனையடுத்து, ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், சசிகலாவும் இளவரசியும் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்கள். பின்னர், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர், உறவினர்களிடம் பேசுவதற்கு 15 நிமிடங்கள் இளவரசிக்கும் சசிகலாவிற்கும் நேரம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்த சசிகலா தன் கணவர் நடராஜனுடன் பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, சிறைக்கும் செல்லும் துக்கம் தாங்க முடியாமல் நடராஜனை கட்டிப் பிடித்து ஓ வென்று கதறி அழுதார் சசிகலா. பின்னர், அவரை நடராஜன் சமாதானம் செய்தார். தனக்கு வழங்கப்பட்ட 15 நிமிடங்கள் முடிந்த நிலையில் சிறைக்கு சென்றார் சசிகலா.

10 பிப்ரவரி 2017

பேரெழுச்சியுடன் நடைபெற்றது எழுக தமிழ் பேரணி!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று நடத்தப்பட்ட எழுக தமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற இந்த எழுக தமிழ் நிகழ்வில் "சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை திணி க்க வேண்டாம், அரசியல் கைதிகளை விடுதலை செய், பயங்கரவாத தடை சட்டத்தை நிறுத்து" போன்ற கோசங்களை எழுப்பியவாறு மக்கள் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில் இருந்து வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்களுடன் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த எழுச்சி பேரணியில் கலந்து கொண்டனர். இந்த எழுச்சிப் பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாவற்குடா விவேகாந்தா விளையாட்டு மைதானத்தை பேரணி வந்தடைந்ததும் அங்கு தமிழ் வாழ்த்துப்பா இசைக்கப்பட்டு எழுக தமிழ் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இங்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார். மேலும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.

07 பிப்ரவரி 2017

பன்னீர்செல்வத்தின் புரட்சியால் அதிர்கிறது தமிழகம்!

Bildergebnis für panneerselvamமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு ஜெ. நினைவிடத்திற்கு சென்று மவுன அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, முதல்வர் ஜெ. உயிருடன் இருக்கும்போதே கட்சியின் பொதுச்செயலாளராக மதுசூதனனையும், முதல் அமைச்சராக நீங்களும் இருக்க வேண்டும் என்று என்னிடம் கூறினார் என்று பன்னீர்செல்வம் கூறியதும், ஆனால் அம்மாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக சசிகலா ஈடுபட்டதையும் இன்று மக்கள் மத்தியில் வெளிப்படுத்தினார் பன்னீர்செல்வம். இந்த செய்தி தமிழகம் முழுக்க தீயாக பரவியதில் கொந்தளித்தத்துப்போன அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தூக்கமில்லாமல் ஆங்காங்கே கூடி பரபரப்பாகவும், பதட்டமாகவும் பேசி வருகிறார்கள்.

சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டார். அம்மாவின் சாவில் சந்தேகம் உள்ளது என்று நாம் கூறியது இப்போது உறுதியாகி உள்ளது. இப்படியெல்லாம் உட்கிராமங்கள்தோறும் அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து வரும் நிலையில் அதிமுக செல்வாக்காக உள்ள மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளின் மனநிலை எப்படி உள்ளது என பலரிடம் பேசினோம்.

இதில் தற்போது எம்எல்ஏவாக உள்ள ஒருவரும், கடந்த மாநகராட்சி மேயராக இருந்த ஒருவரும் நம்மிடம் கொந்தளித்துப் பேசியது இதுதான்.

எம்எல்ஏவாக உள்ள நான் கோடிக்கணக்கில் செலவு செய்து வெற்றி பெற்றேன். என்னிடம் தற்போது உள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூறியது, சின்னம்மா சசிகலா இருந்தால்தான் நீ செலவு செய்த காசைவிட இரண்டு மடங்கு எடுக்கலாம் என்று உறுதி கூறினார்கள். வேறுவழியில்லாமல்தான் நான் கடனாளியாக இருககக் கூடாது என்பதற்காகத்தான் சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டோம். ஆனால் எனது மனச்சாட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று அம்மாவின் மனசாட்சியாக பன்னீர்செல்வம் கொட்டி தீர்த்துவிட்டார். இதைத்தான் எதிர்ப்பார்த்தோம். இப்போது எங்களைப்போன்ற எம்எல்ஏக்களிடம் முன்பு உள்ள பிரச்சனை செலவை செய்ததை திரும்ப எடுப்பதல்ல. மனசாட்சி இல்லாமல் வாழ்வது முடியாது. கட்சியின் பொதுச்செயலாளராக கட்சிக்குள் உள்ள நிர்வாகிகள் வந்திருந்தால் இந்த கேவலம் நிகழ்ந்திருக்காது. ஆனால் அதற்கு நேர் எதிராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது யாருக்குமே பிடிக்கவில்லை.

இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் வெளிப்பாட்டை அதிமுகவின் 130 எம்எல்ஏக்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆதரிப்பார்கள். இதனை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் எங்கள் கட்சியின் தொண்டர்கள் ஒன்று செய்ய வேண்டும். அம்மாவின் இறப்புக்கு காரணமான சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து விரட்ட வேண்டும். அதற்கு தொண்டர்கள் தயாராகி சென்னை நோக்கி வர வேண்டும். இங்கு சசிகலா எந்த அரசு பொறுப்பிலும் இல்லை. அப்படிப்பட்ட ஒருவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. தொண்டர்கள் நினைத்தால் சசிகலாவை போயஸ் கார்டனில்இருந்துவிரட்டிவிட்டு அம்மாவின் இல்லத்தை அதிமுக கட்சியின் கோயிலாக மாற்றுவோம். பன்னீர்செல்வத்துக்கு, அவருடைய குரலுக்கு உறுதுணையாக தொண்டர்கள் திரண்டு வர வேண்டும்  என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

நன்றி:நக்கீரன்-
ஜீவா தங்கவேல்

02 பிப்ரவரி 2017

என்ன செய்கிறார் கருணாநிதி!

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக நினைவு இழந்து, மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக கடந்த டிசம்பர் 15ஆம் தேதி இரவு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, டிச.23ம் தேதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். தற்போது அவர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின், அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அவர் பெயரில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பாக, அத்தனை போராட்டங்கள் நடந்த போதும் அவர் எந்த கருத்தும் கூறவில்லை.
கை, கால், முதுகு, இடுப்பு, கழுத்து ஆகியவற்றில் என அவரது உடலில் ஏற்பட்ட கொப்பளங்கள், வயோதிகம் ஆகியவற்றில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் கருணாநிதி. கொப்பளங்களை முழுமையாக போக்க அளிக்கும் மருந்துகளை ஏற்றுக்கொள்ளும் வலிமை அவரின் உடலுக்கு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து விட்டதாக தெரிகிறது.தற்போது அவருக்கு, குழாய் வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அவரால் பேச முடியாமலும் போனது. அரிதாக சில நேரம் மட்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை அவர் அடையாளம் கண்டு கொள்கிறாராம். சில சமயம் முகத்தில் புன்னகை மட்டும் பதிலாக வருகிறதாம்.
அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக கட்சி பிரமுகர்கள் உட்பட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், செயற்கை சுவாம் அளிக்க பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் அகற்றபப்ட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்கு முன்பு, மாடியில் உள்ள அவரது அறையிலிருந்து கீழ் தளத்திற்கு அவரை அழைத்து வந்தனர் எனவும், அப்போது அவர் குடும்பத்தினரை பார்த்து புன்னகைத்தார் எனவும் திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
மேலும், அவர் உடல் நிலையில் எந்த குறையும் இல்லை. பேச்சு திறனும், ஞாபக சக்தியும் வந்து விட்டால், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என அவர்கள் கூறி வருகிறார்கள்.

29 ஜனவரி 2017

ஊழல் செய்து புலிகளிடமிருந்து தப்பி வந்தவர்தான் கருணா!

புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஊழல் மோசடியில் சிக்கி உயிரைக் காப்பாற்ற தப்பியோடி வந்தவர் தான் கருணா என்று சிறீலங்காவின் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மல்வத்த அஸ்கிரிய பீட மகாநாயக்கவை நேற்று சந்தித்த பின்னர் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்.“கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இயங்க முடியாமல் தப்பியோடியவர். விடுதலைப் புலிகளிடம் ஊழல் மோசடிகளில் சிக்கி, பிரபாகரனினிடம் இருந்து உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி வந்த மனிதனாகும். பிரபாகரனுடன் ஒன்றாக வாழ்ந்த நபர் என்றாலும், அவரால் பிரபாகரனின் வீடு இருந்த இடத்தையேனும் கூறமுடியவில்லை. எங்கள் இராணுவத்தினர் தான் புதுக்குடியிருப்பில் வீட்டை கண்டுபிடித்தார்கள். அவரை வீரனாக்கியது மஹிந்த ராஜபக்ச தான்” என தமிழின அழிப்பில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

26 ஜனவரி 2017

பொறுக்கி சு.சுவாமி பின்கதவால் ஓட்டம்!

Subramanya Swamyதமிழர்களை 'பொறுக்கி' என்று விமரிசித்த பா.ஜ.க தலைவர் சுப்ரமணிய சாமி, தமிழர்களின் எதிர்ப்பைக் கண்டு பின்வாசல் வழியாக அரங்கத்திற்குள் ஓடினார். இந்தியப் பாரம்பரியமும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் பேசுவதற்காக சுப்ரமணியசாமி சியாட்டலுக்குக்கு வருகை தந்திருந்தார். தகவல் அறிந்த சியாட்டல் வாழ் தமிழர்கள் திரளாக திரண்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க குவிந்தனர்.அரங்கம் அமைந்துள்ள சமாமிஸ் நகர தென் கிழக்கு சாலையிலும், அரங்க வாசலிலும் பதாகைகளுடன் முழக்கமிட்டவாறே நின்று கொண்டிருந்தனர். இன்னும் சிலர் பார்வையாளர்கள் போல் அரங்கத்திற்குள் சென்று விட்டனர். அங்கும் வெவ்வேறு வாசல்களில் மறியல் செய்யத் தயாராக இருந்தனர். வெளியே தமிழர்களின் போராட்ட முழக்கங்களைப் பார்த்த விழாக்குழுவினர், சுப்ரமணியசாமியை ஒரு பழைய காரில் யாருக்கும் தெரியாத வகையில் அழைத்து வந்தனர். ஆனாலும் அதைக் கவனித்து விட்ட தமிழர்கள் எல்லோருக்கும் புரியும் வகையில் ஆங்கிலத்தில் முழக்கமிட்டனர்."நாங்கள் தமிழர்கள்.. நாகரீகம் மிக்கவர்கள் தமிழனம் தொன்மையானது தமிழர் நாகரீகம் மேன்மையானது நாகரீகம் தெரியாத 'பொறுக்கி' சுப்ரமணிய சாமியே திரும்பிப் போ நாகரீகம் தெரியாதவர் இந்தியப் பாரம்பரியம் பற்றிப் பேசுவதா " போன்ற முழக்கங்களை ஆங்கிலத்தில் உரக்கக்கூவிய படி முன்னேறினார்கள். நிலைமையை உணர்ந்த காவல் துறையினர், போராட்டக்காரர்களிடம் வந்து என்னவென்று கேட்டார்கள். தமிழனத்தை தரக்குறைவாக பேசியவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்துள்ளோம் என்றவுடன், அமைதியாக போராடுங்கள் என்று கூறி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். அமெரிக்காவில் தமிழர்களின் எதிர்ப்பை சற்றும் எதிர்ப்பார்க்காத சுப்ரமணியசாமி பதற்றமடைந்து விட்டார். அரங்க வாசலிலும் தமிழர்கள் குழுமியிருந்ததைப் பார்த்த விழாக்கமிட்டியினர் அவரைப் பின்வாசல் வழியாக அரங்கத்திற்கு அழைத்துச் சென்றனர்.சுப்ரமணிய சாமி பேசும் வரை அமைதியாக அரங்கத்திற்குள் இருந்த தமிழர்கள், அவர் பேச ஆரம்பித்ததும் கைத்தட்டி ஆரவாரம் செய்து கவனத்தை திருப்பினார்கள். அதைப் பார்த்த சுப்ரமணிய சாமி, பேச்சை நிறுத்தி சத்தம் வந்த திசையைப் திரும்பிப் பார்த்தார். உடனே, அனைவரும் 'நாங்கள் தமிழர்கள், தமிழர்களை இழிவாக பேசியதைக் கண்டித்து வெளி நடப்பு செய்கிறோம், தமிழர்கள் வாழ்க, தமிழ் வாழ்க என்று முழக்கமிட்டனர். வெளியே வந்த தமிழர்கள், நிகழ்ச்சி முடியும் வரையிலும் காத்திருந்தனர். தமிழர்கள் போய்விட்டனர் என்று நம்பி வந்த சுப்ரமணிய சாமி மீண்டும் தமிழர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்.அங்கிருந்து ஒரு தமிழ்ப் பெண் மிகவும் ஆவேசத்துடன், "தமிழர்களை எப்படி பொறுக்கி என்ற சொல்லலாம். எங்கள் தமிழக இளைஞர்களின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் பார்த்தீர்களா? என் அண்ணன் தம்பிகளையை பொறுக்கி என்று பேச உங்களுக்கு யார் உரிமை தந்தார்கள். நாகரீகமாக பேசத் தெரியாத நீங்களா இந்தியக் கலாச்சாரம் பற்றி பேசுகிறீர்கள்," என்று ஆங்கிலத்தில் உரத்த குரலில் முழங்கினார். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடுமோ என்று பதறிய விழாக்குழுவினர் சுப்ரமணிய சாமியை விரைவாக அழைத்துச் சென்று விட்டனர். மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் என கடும் குளிராக இருந்த போதிலும் குழந்தைகளுடன் குடும்பமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டு விட்டனர். இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலும் அங்கேயே இருந்து, சுப்ரமணிய சாமி திரும்பிப் போகும் வரையிலும் போராட்டம் நடத்தியுள்ளனர். கைக் குழந்தை ஒருவர் தமிழன் டா என்ற பதாகையுடனும், அடுத்தவன் பொண்டாட்டிக்கு தாலி கட்டினவனுக்கு ஹார்வர்ட் ஒரு கேடா போன்ற பதாகைகளையும் தமிழில் வைத்திருந்தனர்.மேலும் ஆங்கில வாசங்களுடனும் பல பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். சியாட்டல் தமிழர்களின் இந்த திடீர்ப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

24 ஜனவரி 2017

வடமராட்சி இளைஞர் ஆபிரிக்காவில் அடித்துக்கொலை!

சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வருடம் புறப்பட்டுச் சென்ற கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞன், மேற்கு ஆபிரிக்காவில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான சியாராலியோனிலேயே இந்தக கொலை இடம்பெற்றுள்ளது.யுத்தத்தின் போது, காலொன்றை இழந்த இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக முகவரொருவர் மூலம் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளார். இவர்களை அழைத்துச் சென்ற முகவர், ஆபிரிக்காவின் கடற்கரைப் பிரதேசத்தில் இவர்களைத் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, கடந்த 3 நாட்களுக்கு முன் குறித்த இளைஞன் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த இளைஞனின் நண்பர், கரவெட்டியிலுள்ள அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவ்விளைஞன் உயிரிழந்துள்ளதாக பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். குறித்த இளைஞன் போன்று பல இளைஞர்கள் அம்முகவரினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வருவதாக குறித்த பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த சுப்பையா சண்முகம் ஆகியோருக்கு 16 இலட்சம் ரூபாய் பணம் வழங்கியே தமது மகன் சுவிற்ஸர்லாந்துக்கு செல்வதற்காக ஆபிரிக்காவுக்கு சென்றுள்ளார். மேலும் பணம் கேட்டு மகனை துன்புறுத்தியதால் அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவனை தாக்கிக் கொன்று விட்டார்கள். மேலும் தற்போது 15 இலட்சம் ‌ரூபாய் பணம் தந்தாலே அவனுடைய சடலத்தைத் தருவோம். அல்லாவிட்டால் தரமாட்டோம் என தற்போது எம்மை மிரட்டுகின்றனர் என்று இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

23 ஜனவரி 2017

வெட்ட வெளிச்சமான தமிழ்நாடு பொலிஸாரின் வன்முறை வெறியாட்டம்!

மிகவும் கேவலமான முறையில் தமிழ்நாடு பொலிஸ் நடந்துகொண்டிருக்கிறது.தமிழக மாணவர்களின் அமைதி வழிப்போராட்டம் உலகத்திற்கே அறப்போர் என்றால் இதுதான்
என்பதை உணர்த்தி தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்திருக்கும் இத்தருணத்தில்,உலகிலேயே மிகவும் கேவலமான காவல்துறை தமிழக காவல்துறைதான் என்பதும் இன்றைய தினம் பதிவாகி இருக்கிறது.மக்கள் மீது கற்கள்,பொல்லுகள் கொண்டு தாக்குவதும்,வீடுகள்,கட்டிடங்கள்,வாகனங்கள் எரியூட்டப்படுவதும்,கர்ப்பிணிப்பெண்கள்,மூதாளர்கள் என்று கூட பாராமல் அவர்களையும் தாக்கி மிகவும் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு பொலிஸ்.மாபெரும் வன்முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு மாணவர்கள் மீது பழியைப்போட போட முற்பட்டு மானம்கெட்டுப் போய் நிற்கிறது தமிழ்நாடு பொலிஸ்.பொலிஸார் வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் காணொளி ஆதாரங்களாக வெளியாகி உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாக புகைப்படம் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.இளம் பெண்கள்மீது பாலியல் வெறியாட்டங்களிலும் இந்த காடைக்கூட்டம் ஈடுபட்டதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

21 ஜனவரி 2017

உயிரையும் கொடுக்க தயார்-ஜனநாயக போராளிகள் கட்சி!

தமிழ் மக்களுக்காக உயிரையும் கொடுக்க எமது அணி தயாராக இருக்கின்றது என ஜனநாயகப் போராளிகளின் கட்சி செயலாளர் இரா. கதிர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- கல்லடி வெய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலைய மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்-
”கடந்த கால கசப்பான அனுபவங்களை ஓர் படிப்பினையாக எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் நாம், சொகுசு வாகனங்களும் சுகபோக வாழ்க்கைக்கும் அடிமையானவர்களிடம் இனிமேலும் ஏமாறத் தயாரில்லை என்பதனை இடித்துரைக்க கடமைப்பட்டுள்ளோம். எம் அன்பு உறவுகளே நாம் ஒன்றிணைவோம். எம் தமிழ் இன துரோகிகளை வீட்டுக்கு அனுப்புவோம். உங்களுக்காக உயிரையும் கொடுக்க எமது அணி தயாராகவே உள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வித்துக்களை எம் மண்ணில் விதைத்துள்ளோம். இவ் விதைகள் துளிர்விடும் காலம் மலர்ந்துள்ளது. அதன் விழுதுகளாக நாமிருப்போம்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தலாம். போராளிகள் என்பவர்கள் பெறுமதியானவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு இணக்கப்பாட்டடை ஏற்படுத்தி அதனூடாகத்தான் நிலையான சமாதானத்தை உருவாக்கவேண்டும். அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு எங்களுடைய அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக அடுத்த கட்ட நகர்வை ஏற்படுத்துவோம்” என இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

09 ஜனவரி 2017

வேலணையில் மாணவி நீரில் மூழ்கி மரணம்!

வேலணை கிழக்கு மகாவித்தியாலய மாணவி குளத்தில் மூழ்கி சாவடைந்துள்ளார்.
வேலணைமேற்கு 6ம் வட்டாரம் நாவலர் சனசமூக நிலையத்திற்கு அண்மையில் வசித்துவரும் சுரேஸ் அவர்களின் மகள் வினோதா (வயது 17) என்பவர் இன்று காலை10.45மணியளவில் தனது தாயார் சகோதரிகள் மற்றும் மைத்துனியார் உடன் சேர்ந்து வீட்டுக்கு அயலிலுள்ள சங்கத்தார் கேணிக்குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி சாவடைந்துள்ளார்.
இவர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில்கல்வி கற்று 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் கா.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:முகநூல்-வேலணை மண்ணின் மைந்தர்கள்.

05 ஜனவரி 2017

கொளத்தூர் மணியை சந்தித்த ஸ்டாலின்,அதிர்ச்சியான வீரமணி!

செயல் தலைவர் ஸ்டாலின்
ஸ்டாலினுடன் கொளத்தூர் மணி
அதிமுக பொதுச்செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட வேண்டும் என்று முதல் குரல் கொடுத்த திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, நேற்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கேக் ஊட்டி சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச்செயலர் பதவியை கைப்பற்ற வேண்டும் என திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார் சசிகலா. அவருக்கு ஆதரவாக முதல் குரலை வெளிப்படுத்தினார் கி. வீரமணி.
சரண்டர் வீரமணி
ஸ்டாலினுடன் வீரமணி
திமுகவுடன் மிக நெருக்கமாக இருந்து வந்த வீரமணியின் இந்த அறிக்கை அக்கட்சி தலைவர்களையும் தொண்டர்களையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து வீரமணிக்கு எதிரான கொளத்தூர் மணி உள்ளிட்டோரை ஸ்டாலின் கோபாலபுரம் வரவழைத்து பேசினார்.ஸ்டாலினின் இந்த வியூகத்தை சற்றும் எதிர்பார்க்காத வீரமணி தரப்பு அதிர்ச்சியில் உறைந்தது. இதையடுத்து திமுகவுடன் சமாதானமாகும் முயற்சியாக நாங்க ஏன் அப்படி ஒரு நிலை எடுத்தோம் என வழக்கம் போல தத்துவ வியாக்யானம் சொல்ல ஆரம்பித்தது.ஆனாலும் திமுகவினரால் வீரமணியின் சசிகலா ஆதரவு நிலையை ஜீரணிக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் திமுகவின் செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது ரொம்பவே ஸ்டாலினுடன் குழைந்தபடிதான் வீரமணி பேசினார்.ஸ்டாலினுக்கு கேக் ஊட்டி கொஞ்சியதைப் பார்த்த திமுக தொண்டர்கள், தளபதி ஒரு போடு போட்ட உடனே எப்படி சரணடைகிறார் பாருங்க.. என கமெண்ட் அடித்ததையும் கேட்க முடிந்தது.. திக தொண்டர்கள் ரொம்பவே அப்செட் ஆகியிருந்ததையும் பார்க்க முடிந்தது.