31 ஜனவரி 2018

வடக்கு கிழக்கில் ஆயிரம் புத்த விகாரைகள்!ஐ.தே.கவின் தேர்தல் வாக்குறுதி!


வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. வவுனியா கலைமகள் மைதானத்தில், இன்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வழங்கப்பட்ட கிராமத்தை சீரமைக்கும் அரசாங்கம் என்னும் பெயரிலான தேர்தல் விஞ்ஞாபனத்திலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
இன நல்லிணக்க நடவடிக்கை என்னும் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

29 ஜனவரி 2018

அபிவிருத்திக்கான நிதியெனில் சம்பந்தனும் சிறீதரனும் ஏன் அதை பெறவில்லை?சுரேஷ் கேள்வி!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ள பணம் அபிவிருத்திக்கானது என இரா.சம்பந்தன் கூறுகின்றார். >எனினும், நானும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அந்த நிதியினை பெற்றுக்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சவால் விடுகின்றார். உண்மையிலேயே இது அபிவிருத்திக்கான நிதியென்று கூறுவதாக இருந்தால் இரா.சம்பந்தனும், சிறீதரனும் ஏன் அந்த நிதியை பெற்றுக்கொள்ளவில்லை என சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ள பணம் அபிவிருத்திக்கானது என இரா.சம்பந்தன் கூறுகின்றார்.எனினும், நானும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அந்த நிதியினை பெற்றுக்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சவால் விடுகின்றார். உண்மையிலேயே இது அபிவிருத்திக்கான நிதியென்று கூறுவதாக இருந்தால் இரா.சம்பந்தனும், சிறீதரனும் ஏன் அந்த நிதியை பெற்றுக்கொள்ளவில்லை என சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுரேஸ் பிரேமசந்திரன் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“இரா.சம்பந்தன் இந்த நிதியை பெற்றுக்கொள்ளாவிட்டால் ஏன் இந்த நிதியை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.நாங்கள் இந்த நிதியை பெற்றுகொள்ளவில்லை என சிறீதரன் கூறுகின்றார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்டவர்கள் நிதியை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.வரவுசெலவு திட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையின் காரணமாகவே கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. வாக்களிக்காதவர்களுக்கு இந்த நிதி கொடுக்கப்படவில்லை. வாக்களித்தவர்களுக்கு மட்டும்தான் இந்த நிதி கொடுக்கப்படுகின்றது என்றால் இதனை ஒரு அரசியல் லஞ்சமாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கின்றது? என அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.

23 ஜனவரி 2018

பொப்பிசை புகழ் ஏ.ஈ.மனோகரன் மறைவு!

Bildergebnis für a.e.manokaranசுராங்கனி புகழ், பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் சென்னை- திருவான்மையூர், கந்தன்சாவடியில் நேற்றிரவு 7.20 மணியளவில் காலமானார். இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார்.
இவரது சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா... என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார். பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார். இவருக்கு இலங்கை மட்டுமன்றி தமிழகம் உள்ளிட்ட உலகில் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் இரசிகர்கள் உள்ளனர்.இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் வந்தார். தமிழ், ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை சென்னையில் நடைபெறும்.

21 ஜனவரி 2018

அரசின் பசப்பு வார்த்தையில் மயங்கிக் கிடக்கிறது கூட்டமைப்பு-வடக்கு முதல்வர்!

இலங்கை ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கிக் கிடப்பதாக வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தமிழர்களின் அரசியல் இன்று சுயநலவாதத்துடன் வெறும் கட்சி அரசியலாகவே முன்னெடுக்கப்படுகின்றது. அனுபவசாலிகள் என்றும் வயதில் மூத்தவர்கள் என்றும் பெருமித்துக் கொள்கின்ற ஒரு சிலரின் சர்வாதிகாரப் போக்கினால் இன்று ஒற்றுமையாக இருந்த கட்சிகள் சிதறுண்டு போயுள்ளன. அதனால் அரசியல்வாதிகளுக்கு ஏதேனும் நன்மைகள் கிட்டலாம். ஆனால் பாதிக்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களே. இந் நிலையில் இருந்து மீண்டெழுந்து தமிழர்கள் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வார்களா? அதற்காக அவர்கள் செய்ய வேண்டியது என்ன? என ஊடகவியலாளர்கள் நேற்று முதலமைச்சரிடம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், வெறும் சுயநலக் காரணங்களுக்காக மட்டும் பெரும்பான்மை மக்கள் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயக்கம் அடைந்துள்ளார்கள் அவர்கள் என்று கூற என் மனம் விடவில்லை.உண்மையில் 'நம்பினார் கெடுவதில்லை' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மைத் தலைவர்களை அவர்கள் நம்பி வருகின்றார்கள் என்று கூடக் கூறலாம். ஆனால் அவர்களின் செயலில் எனக்கிருக்கும் ஆதங்கம் வேறு. 'தருவதைத் தாருங்கள்' அல்லது 'தருவதைப் பெறுவோம்' என்று கூறுவது ஒன்று.
'தந்ததுடன் நாங்கள் திருப் தி அடைகின்றோம்' என்று கூறுவது வேறு. எங்கே எமது தலைமைத்துவங்கள் குறைந்ததையேற்று எமது வருங்காலத்தை குறைபாடுடையதாக ஆக்கிவிடுவார்களோ என்றே அஞ்சுகின்றேன். அரசாங்கம் தருவதைத் தருவது அவர்கள் இஷ்டம். ஆனால் எமது வாழ்வுரிமை, வரலாற்றுரிமை, வள உரிமை வேறு. அதை நாம் விட்டுக்கொடுக்க முடியாது. விட்டுக்கொடுத்தால் வட கிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை இனத்தவரைப் பெரும்பான்மையாகப் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு 25 வருடங்கள் தேவையில்லை.
இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரியாமல் நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என்று ஆக்ரோஷமாக அடித்துப்பேச முற்பட்டோமானால் எமது அழிவு வெகு தூரத்தில் இல்லை. பெரும்பான்மை இனத்தவர்கள் சிறுபான்மையினரை இளைய சகோதரர்களாகப் பார்ப்பார்கள், பண்புடன் நடந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே ஆங்கிலேயர்கள் எமது முதல் அரசியல் யாப்பை எமக்குத் தந்துதவிடச் சென்றார்கள்.
ஆனால் அப்போதைய பெரும்பான்மை இனத் தலைவர்களிடம் உள்ளொன்றும் புறமொன்றும் இருந்ததை ஆங்கிலேயர்கள் அறிந்திருக்கவில்லை. ஏன் எமது தமிழ்த் தலைவர்கள் கூட அப்போது புரிந்திருக்கவில்லை. புகழ்ச்சிக்கு மயங்கிவிட்டார்கள் அவர்கள் என்றே கொள்ளவேண்டியிருக்கின்றது.
உதாரணத்திற்கு விண்ணாதி விண்ணனான பேராசிரியர் சி.சுந்தரலிங்கம் கூட டி.எஸ்.சேனாநாயக்கவின் பசப்பு வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டுச் சிறைப்பட்டு விட்டார் என்றே கொள்ள வேண்டியுள்ளது. 'சிங்களவர் மட்டும்' அமைச்சரவையை ஏற்படுத்திக் கொடுத்தது அவரே.
அதனால்தான் இன்று நாம் நேரடியான எதிரிகளை வரவேற்கின்றோம். சேர்ந்திருந்து குழி தோண்டும் எமது நண்பர்கள் மீது விழிப்பாய் இருக்கின்றோம். சூடுபட்ட பூனை அடுப்பங்கரை ஏறாது! எமது நாட்டின் ஆங்கிலேய ஆளுநர் நாயகமாகத் திகழ்ந்த சோல்பரிப் பிரபு தமது நண்பரிடம் என்பவரிடம் தாங்கள் கொடுத்த அரசியல் யாப்பு தோல்வியுற்றது என்று கூறி 1958ஆம் ஆண்டில் நடந்தவற்றைப் பார்க்கும் போது இலங்கைக்கு ஒரு சமஷ்டி ரீதியான அரசியல் யாப்பைக் கொடுத்திருக்க வேண்டும் என்று எண்ண வேண்டியுள்ளது என்று கருத்துத் தெரிவித்தாராம்.
இவ்வாறான சிறுபான்மையோரை முடக்கும் அரசியலானது சிறுபான்மை மனோநிலை கொண்ட பெரும்பான்மை அரசியல்த் தலைவர்களால் அரங்கேற்றப்பட்டதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஏதோ காரணத்தினால் அப்போதைய சிங்களத் தலைவர்கள் தென்னிந்திய தமிழர்களையும் சேர்த்துக் கூட்டி சிங்களவர் உலகில் ஒரு சிறுபான்மையினமே என்றும் தம்மைப் பாதுகாத்தல் அவசியம் என்ற எண்ணத்திலும் தமிழ் மக்களை வதைத்து, வருத்தி, வாழவிடாது செய்யத் துணிந்தார்கள்.
நீங்கள் கூறும் தமிழ்த் தலைமைகள் ஒரு வேளை அதைப் புரிந்து கொள்ளாது நடக்கின்றார்களோ நான் அறியேன். இதை உணர்ந்தே எம் சகோதரர்கள் மக்கள் பாற்பட்ட, மக்கள் மயப்பட்ட ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.அதாவது மக்களின் தலைவர்கள் என்று கூறப்படுபவர்கள் எங்கே மக்கள் மனம் அறியாமல் எமது மாண்பை மலினப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் பலர் மனதிலும் இப்பொழுது எழுந்துள்ளது.
ஆனால் கட்சிகள் சிதறுண்டமையின் காரணம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். காரணங்களை இவைதான் என்று மிக எளிமையாகச் சுட்டிக்காட்ட முடியாது.அது எமக்குத் தேவையுமில்லை. ஏன் என்றால் நீங்கள் கூறுவது போல அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்துப் போராட வேண்டிய நிலைமையே இன்று பரிணமித்துள்ளது.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் தருவதாகக் கூறியவற்றை பெரும்பான்மையினம் தருவதாக இல்லை. 2016ல் தரப்படுவன என்று எதிர்பார்த்த எமது கனவான் நெஞ்சங்கள் கருகியுள்ளன.இன்று கனன்று கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் நடக்க வேண்டியது என்ன என்று கேட்டு உங்கள் கேள்வியே பதிலைத் தந்துள்ளது. மக்கள் போராட்டமே அது. மக்கள் போராட்டத்திற்கு சில அடிப்படைகள் தேவையாகவுள்ளன.
எமது போராட்டம் நாம் மனமுவந்து போராடும் ஒன்றாக இருக்க வேண்டும். போராட்டத்துக்கான காரணம் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். வெறுப்பு, கோபம், ஆத்திரம் ஆகியவற்றைக் களைந்திருக்கத் தெரிய வேண்டும்.வெறும் பொருளாதார நன்மைகள் பெறப்பட்டால் நாம் போராட்டத்தை கைவிட்டுவிடுவோம் என்று இருக்கக்கூடாது. கேப்பாப்புலவு மக்களைப் பாருங்கள். தொடர்ந்து போராடி வருகின்றார்கள். தாம் அடையவேண்டிய வாழ்வுரிமை இலக்கை எட்ட அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருந்து வருவதே இதற்குக் காரணம்.
எம்முள் பலர் கூடி எமக்கென ஒரு வழி சமைத்தோம். எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அவற்றை உள்ளடக்கினோம். அவை கிடைக்கமாட்டா என்று தமிழ்த் தலைமைகள் தீர்மானித்தால் தமது தலைமைத்துவத்தை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதே உசிதம். நாம் கேட்பவை கிடையாது. ஆகவே தருவதை ஏற்போம் என்று கூறுவது தர்மம் ஆகாது. நாம் போராடுவது ஒரு தார்மீக உரிமைக்காக. நியாயமற்ற காரணங்களுக்காக அல்ல. எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் எங்களிடம் திருப்பித் தருமாறு கேட்பது தவறானதொரு கோரிக்கையாகாது.
ஆகவே ஒன்றிணைந்து ஒருமித்து எமது தேவைகளை, உரிமைகளைக் கோர வேண்டியதே தற்போது எமக்கிருக்கும் தார்மீகக் கடமை. உலகில் வாழும் சகல தமிழ்ப்பேசும் மக்களும் எமக்கு இது சம்பந்தமாக உதவி அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

18 ஜனவரி 2018

தேர்தல் நேரத்தில் சம்பந்தர் இப்படித்தான் பேசுவார்!

நாம் தற்­போது நிதா­ன­மாக, நியா­ய­மாக, நேர்­மை­யாக ஒருமித்த நாட்­டுக்­குள் மதிப்­பைப் பெற்­றுக்கொள்ள முயற்­சிக்­கின்றோம். அது நடை­பெ­றா ­விட்­டால் எமது சம்­ம­தம் இல்­லா­மல் நடை­பெ­றும் ஆட்­சியை மாற்ற வேண்­டிய நிலை ஏற்­ப­டும் என்று எதிர்க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் எச்­ச­ரித்­துள்­ளார்.திரு­கோ­ண­ம­லை­ நக­ர­ச­பை­யில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் கீழ் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து நேற்று நடத்­தப்­பட்ட மக்­கள் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.வடக்கு, கிழக்­கில் உள்ள மக்­கள் ஒருமித்து நிற்­கின்­றார்­களா என்­ப­தைப் பன்­னாட்டு ரீதி­யில் இந்த தேர்­தலை பலர் உற்று நோக்­கு­கின்­ற­னர். தமிழ் மக்­கள் மிக நீண்ட கால­மாக போராடி வரு­கின்­றார்­கள். ஐக்­கிய நாடு­கள் சபை­யின் அடிப்­படை பிர­க­டத்­தின் படி ஒரு மக்­களை அவர்­க­ளின் சம்­ம­தம் இல்­லா­மல் ஆட்சி புரிய முடி­யாது. எமக்கு சுயாட்சி உரித்து உண்டு. அந்த உரிமை மதிக்­கப்­பட வேண்­டும். நாம் தற்­போது நிதா­ன­மாக, நியா­ய­மாக, நேர்­மை­யாக ஒரு­மித்த நாட்­டுக்­குள் நியா­ய­மான மதிப்­பைப் பெற்­றுக் கொள்ள முயற்­சிக்­கின்­றோம். அது நடை­பெறா விட்­டால் எமது சம்­ம­தம் இல்­லா­மல் நடை­பெ­றும் ஆட்­சியை மாற்ற வேண்­டிய நிலை ஏற்­ப­டும்.நாங்­கள் இன்று அர­சுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்­றோம் என்­றும், மக்­க­ளு­டைய பல கரு­மங்­களை தீவி­ர­மாக கையா­ள­வில்லை என்­றும் எம்­மீது குற்­றம் சாட்ட சிலர் முயற்­சிக்­கி­றார்­கள். அது தவறு நாங்­கள் அர­சின் பங்­கா­ளி­கள் அல்ல. நாங்­கள் அர­சின் அமைச்­சர்­க­ளும் அல்ல. எமது பிரச்­சினை தீரும் வரை அமைச்­சர்­க­ளாக வர­மாட்­டோம். எமது மக்­கள் தமது உள்­ளக சுய­நிர்­ணய உரி­மை­யின் அடிப்­ப­டை­யில் அவர்­கள் வாழ்­கின்ற பிர­தே­சங்­க­ளில் அவர்­க­ளு­டைய கரு­மங்­களை அவர்­களே கையா­ளக் கூடிய நிலை ஏற்­ப­டும் வரை நாம் அமைச்­சுப் பத­வி­களை ஏற்க மாட்­டோம்.நாட்­டில் ஒரு கொடு­ர­மான ஆட்சி நடை­பெற்­றது.அதை எமது மக்­க­ளின் வாக்­குப் பலத்­தால் நாம் மாற்­றி­னோம் அதன் நிமித்­தம் எமது மக்­க­ளின் காணிப் பிரச்­சினை காணா­மல் போனோர் பிரச்­சினை தொடர்­பான விட­யங்­க­ளுக்கு தீர்வு பெற்று வரு­கின்­றோம் என்­றார்.

12 ஜனவரி 2018

வாக்கு சேகரிக்க புலி வேஷம் போட்ட பேரினவாதக் கட்சி!


யாழ்ப்பாணத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில், “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற  விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் ஒலிக்க விடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று  காலை யாழ். நகரிலுள்ள “பிள்ளையார் இன்” விருந்தினர் தங்ககத்தில் நடைபெற்றது. 
யாழ்ப்பாணத்தில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில், “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல் ஒலிக்க விடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வு இன்று காலை யாழ். நகரிலுள்ள “பிள்ளையார் இன்” விருந்தினர் தங்ககத்தில் நடைபெற்றது.
நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலான “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற எழுச்சிப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. இப்பாடலில் அரசாங்கத்தையும் அதன் படையினரையும் கடுமையாக விமர்சிக்கும் “ அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா.... அப்புகாமியை ஆளயிங்கு விட்டதாரடா.... இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா....” போன்ற வரிகள் அடக்கியிருக்கின்ற நிலையில் குறித்த பாடல் மைத்திரியின் கட்சியின் நிகழ்வில் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று வேட்டையாடிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி, விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிபரப்பி வாக்குக் கேட்கும் இழி நிலைக்கு வந்திருப்பதாக பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

04 ஜனவரி 2018

மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுகள்!

யாழ்ப்பாணம், வடமராட்சியில் ஜி. ஜி. பொன்னம்பலம், அழகுமணி மண இணையருக்கு 12.08.1940ல் மகனாகப் பிறந்தவர் குமார்.இவருக்கு ஒரு சகோதரியும் உண்டு.யாழ்ப்பாணம் அரச அதிபராக இருந்த முருகேசம்பிள்ளை என்பவரின் மகள் யோகலட்சுமியை மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்.தந்தையைப் போலவே இவரும் சட்டம் பயின்று பாரிஸ்டர் ஆகி வழக்கறிஞராகப் பணியாற்றினார்.1966 ஆம் ஆண்டு முதல் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம், 1977 ஆம் ஆண்டில் தந்தை ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் இறந்த பின்னர் அக்கட்சியின் தலைவரானார்.
தெற்கில் இருந்துகொண்டே  தமிழ் மக்களின் உரிமைகளுக்காக துணிவோடு போராடி வந்தார். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார்.ஐ.நா.வில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களுக்கு முன்பே குரல் கொடுத்தவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது.சிறந்த சட்டவாளரான இவரது துணிச்சலான செயற்பாடுகளால் சிங்கள இனவாதிகள் பெரும் சீற்றம் கொண்டனர்.சிங்கள இன வெறியின் உச்சக் கட்டமாக சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் சூழ்ச்சியால் வரவழைக்கப்பட்டு கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் 05.01.2000மாம் ஆண்டு மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவரை மாமனிதராக தமிழீழ விடுதலைப் புலிகள் கௌரவித்தனர்.மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களுடைய புதல்வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தந்தை வழியில் அரசியல் ரீதியாக தொடர்ந்து போராடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.