26 பிப்ரவரி 2018

கூட்டமைப்பின் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கவில்லை!

இலங்கை அரசாங்கம் ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்பதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லை என்பது தெளிவாகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புகூறல் தொடர்பாக முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு 2 மாற்று வழிகளாக, போர்குற்றங்களை புரிந்தவர்கள் என அறியப்படுபவர்கள் உறுப்பு நாடுகளுக்கு பயணம் செய்தால் உறுப்பு நாடுகள் தமது நீதிமன்றங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அல்லது, விசேட குற்றவியல் தீர்பாயம் ஒன்றை அமைத்து அதற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.இவ்வாறான நிலையில் கடந்த 24 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு கால அவகாசத்தில் 1 ஆண்டு நிறைவில் இலங்கை அரசு ஒன்றும் செய்யவில்லை.இவ்வாறான நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடைய கருத்தை வலுப்படுத்த வேண்டுமே தவிர ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கக் கூடாது. ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக இல்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஐ.நா வரை செல்ல வேண்டும். அதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்துள்ளது. இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து கையொப்பங்களை இடவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

24 பிப்ரவரி 2018

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மரணம்!


இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி  உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி திடீரென மரணமானார். கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் இன்று அதிகாலை இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 54 வயதான உனா மக்கோலி, மருத்துவ விடுப்பில் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் இலங்கைக்கான ஐ.நாவின் முதல் பெண் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக ஐ.நாவின் 21 அமைப்புகளுக்கு தலைமை தாங்கியிருந்தார். உனா மக்கோலி இலங்கையில் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இரண்டு ஆண்டுகள் அவர் ஐ.நா வதிவிட இணைப்பாளர் மற்றும் ஐ.நா அபிவிருத்தி திட்ட பிரதிநிதியாகவும் அதற்கு முன்னர் யுனிசெப் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார். இவர் பனாமா, டோகோ, சூடான், கென்யா, அங்கோலா போன்ற நாடுகளிலும் பணியாற்றினார்.அயர்லாந்தைச் சேர்ந்த உனா மக்கோரி இரண்டு பிள்ளைகளின் தாயாராவார். இவரது மரணம் ஆழ்ந்த துயரத்தை தருவதாக ஐ.நா வருத்தம் தெரிவித்துள்ளது.

18 பிப்ரவரி 2018

நாமே ஆட்சி அமைப்போம் என்கிறார் மாவை!

மகிந்தவுடன் மாவை,சம்பந்தன்
யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபை ஆகியவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆட்சி அமைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பதற்கு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராஜா, “ நாம் தனித்து கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்களை நியமிப்போம். அந்தச் சபைகளில் நாங்கள் ஆட்சி அமைப்போம். ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி. ஆகியன ஆட்சி அமைக்கும் கட்சிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் என்று தெரிவித்துள்ளன. அவர்கள் ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தெளிவான கருத்து இல்லை. இவ்வாறான நிலையில் இதற்குப் பதில் சொல்வது பொருத்தமாக இருக்காது எனவும் மாவை.சோ.சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

16 பிப்ரவரி 2018

இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு மாற்றக்கோரி கையெழுத்து போராட்டம்-கஜேந்திரகுமார்!

Bildergebnis für kajenthiran kumar ponnambalamஇலங்கைக்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்தை உடனடியாக இடைநிறுத்தி, இவ்விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என வலிறுயுத்தி, கையெழுத்துப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. பேரவையில், இலங்கை அரசாங்கத்துக்கு 30.1 தீர்மானம் நிறைவேற்றுவதுக்கு 2 வருட கால அவசாகம் கடந்த ஆண்டு கூட்டத்தொடரின் போது வழங்கப்பட்டது. அக்கால அவகாசம் வழங்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவதனைக் கூட ஏற்றுக்கொள்ளாத நிலையில்தான் இரண்டு வருட கால அவசாகம் வழங்கப்பட்டது. இன்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் செயற்பட்டது போலவே பொறுப்புக்கூறலில் எதுவித முன்னேற்றகரமான நடவடிக்கைகயும் இன்றியே இலங்கை அரசாங்கம் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதன் செயற்பாடின்மையால் மக்கள் அதனை நிராகரித்திருக்கின்ற நிலையில், ஒரு விதமான முன்னேற்றமும் இல்லை என்ற யதார்த்த நிலைதான் காணப்படுகின்றது.
நாம் ஏற்கனவே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என வலிறுயுத்தி வந்திருந்தோம். இலங்கை ஜனாதிபதியும் சரி பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் 30.1 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை நிறைவேற்றப்போவதில்லை என தெளிவாகக் கூறிய நிலையிலேயே அவர்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களும், காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனப் போராடுகின்ற மக்களும் கடந்த ஒருவருடமாக தெருக்களிலேயே இருக்கின்றனர். எனவேதான் நாங்கள் மேலதிக கால அவகாசத்தை இடைநிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்னிறுத்த வேண்டும். அல்லாவிடின் குறைந்த பட்சம் இலங்கைக்கென சர்வதேச விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றாவது உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்தவுள்ளோம்.
இதன்பொருட்டு, மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கான கையெழுத்துப் போராட்டத்தை விரைவில்; ஆரம்பிக்கவுள்ளோம். இப்போராட்டமானது தமிழ் மக்கள் பேரவை, பேரவையில் இணைத்தலைவராகவுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. வீடு வீடாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று கையெழுத்துகள் பெறப்படும். அம் மக்களுக்கு யதார்த்த நிலைபற்றி தெளிவுபடுத்தப்படும்” என்றார்.

14 பிப்ரவரி 2018

வட்டக்கச்சியில் இளம் பெண் படுகொலை!

வட்டக்கச்சியில் இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண் ஒருவர் இன்று பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வடக்கச்சி 10வது வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா (வயது 24) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கு ஏழு மற்றும் ஒன்றரை வயதுடைய இரு பிள்ளைகள் உள்ளனர்.பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளியே சென்றுள்ளார். சடங்கு நிகழ்வு ஒன்றுக்கு அயலவர்களும் சென்றிருந்த வேளையே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்புறமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளனர். மேலதிக விசாரணைகளை குற்றத்தடயவியல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

12 பிப்ரவரி 2018

தேர்தல் முடிவுகள் கூட்டமைப்புக்கு பின்னடைவே என சித்தார்த்தன் கருத்து!


தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சற்று பின்னடைவே என்று  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். “ தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு மாத்திரமல்லாமல், சிங்களக் கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்திருப்பது வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்த அவர்களது வாக்குறுதிகளுக்காகவேயாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சற்று பின்னடைவே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். “ தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றுக்கு மாத்திரமல்லாமல், சிங்களக் கட்சிகளுக்கும் மக்கள் வாக்களித்திருப்பது வேலைவாய்ப்பு மற்றும் அத்தியாவசிய தேவைகள் குறித்த அவர்களது வாக்குறுதிகளுக்காகவேயாகும்.சமாந்தரமான இரு வழி பாதையாக தமிழர் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவை இருக்க வேண்டும் என்பது தனது கருத்தாக இருக்கின்ற போதிலும், அதில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பல விதமான பிரச்சினைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இரண்டாம் பட்சமாக கருதிவிட்டது என்றும், ஆனால், மக்கள் அவற்றை முதல் பிரச்சினையாக கருதுவதையே தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன. அதுமாத்திரமன்றி தமிழர் பிரச்சினைக்கான தீர்வு நடவடிக்கைகளும் இனி சிரமமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

09 பிப்ரவரி 2018

வாக்களிப்பு நிலையங்களில் கைபேசிக்கு தடை!

Ähnliches Fotoஉள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக 13, 374 வாக்களிப்பு நிலையங்கள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இதுதவிர நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் கையடக்க தொலைபேசிப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த பகுதியில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல், காணொளி எடுத்தல், புகைப்படம் எடுத்தல், புகைத்தல், மதுபானம் அருந்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

08 பிப்ரவரி 2018

மூன்று பிள்ளைகளின் தந்தையான போராளி சாவடைந்துள்ளார்!

விசுவமடுவில் மூன்று பிள்ளைகளின் தந்தையான வீரப்பன் என்று அழைக்கப்படும் சந்திரச்செல்வன் என்ற முன்னாள் போராளியின் மரணம் அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடிய இவர், தனது இரண்டு கால்களை இழந்ததுடன் தனது இரண்டு கைகளின் விரல்களையும் இழந்து கடும் காயத்திற்கு உள்ளாகியிருந்தார்.
விசுவமடுவில் வசித்து வந்த இவர் இன்று மரணமடைந்துள்ளார். நாட்டுக்காக போராட்டத்தில் இணைந்த சந்திரச்செல்வன் தனது உடல் அங்கங்களை இழந்து மிகுந்த வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த இவர் இன்று மரணமடைந்திருப்பது அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

04 பிப்ரவரி 2018

தமிழ்த் தேசியப்பேரவையின் கலந்துரையாடலை தடுக்க குழப்பம் விளைவித்தது ஈபிடிபி!

யாழ்ப்பாணம் - றக்கா வீதி - மருதடிப் பிரதேசத்தில், நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில், நேற்று மாலை மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது, தாம் ஈ.பி.டி.பியினர் எனக் கூறியவாறு, ஈ.பி.டி.பியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள், இப்பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறியவாறு, அங்கிருந்த ஒலி மற்றும் ஒளி சாதனங்களின் வயர்களை அறுத்துவிட்டு மேடைப் பகுதியில் அமர்ந்துள்ளனர்.
பின்னர், மாலை 06.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் கலந்துரையாடலுக்கு மக்கள் திரளத் தொடங்கியபோது, அங்கிருந்து குறித்த தரப்பினர் நழுவிச் சென்றுள்ளனர். இதையடுத்து, யாழ். மாநகர வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் உள்ளிட்டோர் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென முச்சக்கரவண்டிகளில் வந்த சில குண்டர்கள், இது ஈ.பி.டி.பியின் இடம், இங்கு பிரசாரத்தில் ஈடுபட எவருக்கும் அனுமதி இல்லை எனக் கூச்சலிட்டவாறு கலந்துரையாடல் நடைபெற்ற இடத்தை நோக்கி கற்களைக் கொண்டுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

03 பிப்ரவரி 2018

நீதிமன்றுக்குப் பயந்து 5ஆண்டு வனவாசம் இருந்தவர் எம்மை காவாலி என்கின்றார்!


தேர்தல் பரப்புரைக் காலங்களில் மனநோயாளிகளுக்குப் பதிலளிப்பதுக்கு நாம் விரும்பவில்லை. அது நேரத்தை வீணடிக்கும் செயல் என யாழ்.மாநகர சபை முதல்வர் வேட்பாளரும்  சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார்.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பிலேயே, அவர்  இவ்வாறு தெரிவித்தார். 
தேர்தல் பரப்புரைக் காலங்களில் மனநோயாளிகளுக்குப் பதிலளிப்பதுக்கு நாம் விரும்பவில்லை. அது நேரத்தை வீணடிக்கும் செயல் என யாழ்.மாநகர சபை முதல்வர் வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நீதிமன்றில் வழக்கை முன்னெடுப்பது தொடர்பில் பொலிஸாரே அறிவிக்க முடியும். அவர்கள் ஆதாரங்கள், சாட்சியங்களை வைத்து வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா, இல்லையா? என்று தெரிவிக்க பொலிஸாருக்கு முழுச் சுதந்திரம் உண்டு. பாதிக்கப்பட்ட நபரோ அல்லது முறைப்பாட்டாளரோ நீதிமன்றில் தமது விடயங்களைக் கதைப்பதற்கு அனுமதியில்லை. யாரும் விரும்பியபடி வந்து கருத்துத் தெரிவிக்க இது சந்தையில்லை. இது நீதிமன்றம். நீதிமன்றின் மாண்பு தெரியாதவர்களை நீதிமன்றை அவமதிப்பவர்களை பொறுப்புவாய்ந்த பதவியில் வைத்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
தங்களுடைய தனிப்பட்ட பாதிப்புக்காக மதவாதத்தையும் சாதியத்தையும் தூண்டிவிடுவதில் கல்விமான்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் செயற்படுவது வேதனையான விடயம். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட விவகாரம் நீதிமன்றில் சரியாகவே அணுகப்பட்டது.
ஆதாரங்களும் இல்லாமல், குற்றச்செயலும் நடக்காமல் எங்களை மாத்திரம் துரத்தித் துரத்தி எங்களுடைய பரப்புரையை முடக்குகின்றார். எங்களைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டு வருகிறார். எம்மைக் காவலி என்று பேசுகின்ற அவர் யார்? என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு நபர். நீதிமன்ற பிடியாணைக்கு மதிப்பளிக்காது தப்பி ஓடி 5 ஆண்டுகள் வனவாசம் செய்துவிட்டு வந்த நபர் மற்றவர்களைக் குறை கூறுகின்றார்.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் மீது விசாரணை நடத்த முடியாது எனக் கூறுபவருக்கு எதிராக எத்தனை வழக்குகள் போடப்படுகின்றன என, தேர்தல் முடிவடைந்த பின்னர் அறிவீர்கள்” எனத் தெரிவித்தார்.