27 ஏப்ரல் 2018

கனடாவின் பிரதமர் சிங்களவர்களுக்கு வாழ்த்து கூறவில்லை எனக் குற்றச்சாட்டு!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவுகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இலங்கையின் பெரும்பான்மையினரான சிங்கள மக்களை புறக்கணித்திருப்பதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டேனியல் ஜேன் குற்றம்சாட்டியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் புத்தாண்டு வாழ்த்து செய்திகளில் தமிழ் மக்களுக்கு மாத்திரமே வாழ்த்து கூறப்பட்டிருப்பதாகவும், பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களை அவர் புறக்கணித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் ஊடாக கனடாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும், இந்த நிலையில், எதிர்வரும் விசாகப்பூரணை தினத்தை முன்னிட்டு, சிங்கள பௌத்த மக்களுக்கு வாழ்த்து செய்தியை பிரதமர் அனுப்ப வேண்டும் என்றும் கனேடிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் பதில் வழங்கியுள்ள கனடாவின் பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர், தமிழர்கள் விடயத்தில் முன்னைய அரசாங்கம் கடைபிடித்த நடைமுறையையே பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.

22 ஏப்ரல் 2018

கோமாளி நடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவு!

Image result for s.v.sekarபத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது எஸ்.வி. சேகர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து தெரியவரவில்லை. பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தட்டியது சர்ச்சையானது. இச்சம்பவம் தொடர்பாக திருமலை என்பவர் முகநூலில் மிக மோசமாக பதிவிட்டிருந்தார்.பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் இந்த பதிவை நடிகர் எஸ்.வி.சேகரும் தம்முடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் இப்பதிவை நீக்கிய எஸ்.வி.சேகர், மன்னிப்பு கேட்டார். இவ்விவகாரம் குறித்து எஸ்.வி.சேகர் மீது போலீசில் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. தற்போது எஸ்.வி.சேகர் அவர் வீட்டில் இல்லை என்றும் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வரவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே எஸ்.வி.சேகர் வீடு மீது தாக்குதல் நடத்தியதாக 30 பத்திரிகையாளர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 ஏப்ரல் 2018

அன்னை பூபதியின் நினைவு இல்லத்தில் பாதணிகளுடன் நின்ற பொலிஸார்!

தியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் நிகழ்வுகள் நடைபெற்றுவந்த நிலையில் சமாதிக்கு அருகில் பொலிஸார் தமது பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்ட நிலையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களை அங்கிருந்துவெளியேற்றினார் என தெரிவிக்கப்படுகிறது.அன்னை பூபதியின் இந்த சமாதியென்பது எம்மை பொறுத்தவரையில் புனித இடமாக கருதுகின்றோம் எனவே தயவுசெய்து உங்களது பாதணிகளை வெளியே கழற்றிவிட்டு வாங்கள் என்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பொலிஸாரிடம் தெரிவித்தார் என்றும் இதனை தொடர்ந்து பொலிஸார் சமாதிக்கு வெளியில் நின்று தமது கடமைகளை மேற்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு புனித இடமாக கருதப்படும் அன்னை பூபதியின் சமாதிப்பகுதியில் பொலிஸார் பாதணிகளுடன் நின்றது தொடர்பில் அங்கு நின்ற பலரும் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தினர் எனக் கூறப்படுகிறது.

18 ஏப்ரல் 2018

ஜோர்ஜ் புஷ்ஷின் தாயார் காலமானார்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயார் காலமானார்முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயார் தனது 92ஆவது வயதில் காலமானார்.
இவர் ஜார்ஜ் எச் டபள்யு புஷ்ஷின் மனைவியும், ஜார்ஜ் டபள்யு புஷ்ஷின் தாயும் ஆவார்.
1989ஆம் ஆண்டிலிருந்து 1993ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் முதல் குடிமகளாக இருந்த இவரின் உடல்நலம், சிறிது நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் அவருக்கு மேல் சிகிச்சை நிறுத்தப்பட்டது.
அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இவரின் கணவருக்கு 93வயதாகிறது அவர் நீண்டகாலம் வாழ்ந்த அமெரிக்க அதிபர் என்ற பெயரை பெறுகிறார். பார்பராவின் மகன் ஜார்ஜ் புஷ் 2000ஆம் ஆண்டு அமெரிக்காவின் 43ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இருமுறை அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"எனது அன்பு அம்மா தனது 92ஆவது வயதில் காலமானார். லாரா, பார்பரா, ஜென்னா மற்றும் நான் துக்கத்தில் இருக்கிறோம், ஆனால் எனது அம்மாவின் ஆன்மா அமைதியில் உள்ளது என்பதால் எங்களின் மனதும் அமைதியாக உள்ளது. பார்பரா புஷ் மிகச் சிறந்த முதல் குடிமகளாக இருந்தார். பிறரை போல் இல்லாமல் உத்வேகம், அன்பு மற்றும் கல்வியை மில்லியன் கணக்கானவர்களுக்கு வழங்கியவர்.
அவரின் கடைசி காலம் வரை அவர் எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். பார்பரா புஷ்ஷை தாயாக பெற்ற நான் அதிர்ஷ்டசாலி; எனது குடும்பம் அவரை இழந்து வாடுகிறது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி" என ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
பார்பரா புஷுக்கு ஜெப் புஷ் என்ற மற்றொரு மகனும் உள்ளார். அவர் 1999ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டுவரை ஃபுளோரிடாவின் ஆளுநராக செயல்பட்டார். மேலும் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
அமெரிக்காவின் முதல் குடிமகளுக்கான சில வரைமுறைகளை தகர்த்து, பார்பரா புஷ் அமைப்பை தொடங்கினார் அதில் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கல்வி அறிவுபெற வழிவகைச் செய்தார்.

நன்றி:பிபிசி தமிழ்

17 ஏப்ரல் 2018

நிதியுதவிகளைப் பெற இலங்கைக்கு அமெரிக்கா நிபந்தனை!

இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு, அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ள சட்டமூலம் குறித்தே அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.இலங்கையின் ஜனநாயக திட்டங்களிற்காக அமெரிக்கா 35 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. காணாமல்போனோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளிற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த நிதியை பெறுவதற்காக இலங்கை மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு ஏற்ப நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு இணங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் உறுதிசெய்யவேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இதனை உறுதிசெய்து நிதி ஒதுக்கீட்டு குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை சித்திரவதைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்கும் இணங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் உறுதிசெய்ய வேண்டும்.
இலங்கை குறிப்பிட்ட நிதியை பெறுவதற்காக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை அமைக்க வேண்டும், யுத்தத்தின் இறுதி தருணத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும். படையினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.இலங்கையின் படையினருக்கு என 500,000 டொலர்களையே ஒதுக்கீடு செய்துள்ள அமெரிக்கா அதனை மனிதாபிமான மற்றும் இயற்கை அனர்த்தங்களை கையாள்வதற்கான பயிற்சிகளிற்கும் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளிற்குமே பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.பாலியல் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த அமைதிப்படையினருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வலுவான நடவடிக்கையை எடுத்தால் மாத்திரமே அமைதிப்படை நடவடிக்கைகளிற்கான நிதியை இலங்கைக்கு வழங்கவேண்டும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

15 ஏப்ரல் 2018

சிகரெட் உயிரைக் குடித்தது..கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி பாரதிபுரத்தில் சிகரெட் புகைத்தவாறு பெற்றோல் போத்தலுடன் பயணித்தவர், தீ பற்றிக் கொண்டதால், படுகாயமடைந்து உயிரிழந்தார். அதே இடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் றெனோல்ட் றீகன் (வயது – 34) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 16 ஆம் திகதி இவர் வேலைதேடி மோட்டார் சைக்கிளில்
பயணித்துள்ளார். மூடி இல்லாத போத்தலில் பெற்றோல் கொள்வனவு செய்து சிகரெட் புகைத்தவாறு பயணித்தார். போத்தல் நழுவி விழ பெற்றோல் ஊற்றுப்பட்டது. அதனை எடுக்கக் குனிந்தபோது வாயிலிருந்த சிகரெட் நெருப்புப்பட்டு தீ பற்றியது. அவரது நெஞ்சு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீ பற்றியது. கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன்தினம் உயிரிழந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

12 ஏப்ரல் 2018

சீமான் கைது...அதிரடிப்படை குவிப்பு...திரளும் தொண்டர்கள்!

அதிரடி படை கொலை முயற்சி வழக்கில் சீமானை கைது செய்யவும், போராட்டம் நடத்திய பிற தலைவர்களை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளநரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, நடந்த போராட்டத்தில், போலீசாரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து, இன்று காலை போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டு பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.இதேபோல மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தியதற்காக இன்று கைது செய்யப்பட்ட மணியரசன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதமன், அமீர் ஆகியோரும் சிட்லபாக்கத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தங்க வைக்கப்பட்டுள்ள பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தை சுற்றி மதியம் திடீரென அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. நாம் தமிழர் கட்சியினர் சீமான் கைது செய்யப்படுவதை தடுக்க முற்படுவார்கள் என்பதால் அதிரடி படை குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்டபத்திற்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாததால் தொண்டர்கள் அங்கே குவிந்த வண்ணம் உள்ளனர்.பிரதமர் மோடி தமிழகத்தில் சாலை மார்க்கமாக தமிழகத்தில் பயணிக்க முடியாததாலும், ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இவை இரண்டுமே டெல்லியில், உள்ளோருக்கு கோபத்தை உருவாக்கியுள்ளது என்பதால்தான், எங்களை கைது செய்கிறார்கள் என தமிமுன் அன்சாரி தொலைபேசி வாயிலாக ஊடகங்களில் தெரிவித்தார்.போராட்ட தலைவர்கள்

11 ஏப்ரல் 2018

பிரான்சில் கடத்தப்பட்ட தமிழ் சிறுமி மீட்பு!

பிரான்சில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட 17 வயதான ஈழச் சிறுமி ஒருவர் மூன்று வாரங்களின் பின் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20ம் திகதி Goussainville நகரில் இருந்து குறித்த சிறுமியை மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த சிறுமி வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுமியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் 28 வயதான உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஏப்ரல் 2018

புரட்சியாக உருவெடுத்த சேப்பாக்க போராட்டம்!

வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் நடக்கும் காவேரி போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. இது ஒரு தேசிய பிரச்சனை என்று நிரூபிக்க நடத்தப்பட்ட இந்த போராட்டம் பெரிய அளவில் மாறி உலக அளவில் வைரலாகி உள்ளது. கொல்கத்தா அணிக்கும் சென்னைக்கும் இடையில் இன்று ஐபிஎல் போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் செல்லும் வழியில் தற்போது காவிரி போராட்டம் நடக்கிறது. இதனால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் குறித்துதான் தற்போது மொத்த இந்தியாவும் பேசிக்கொண்டு உள்ளது.தற்போது காவிரி பிரச்சனை இருமாநில பிரச்சனையாக இல்லாமல் தேசிய பிரச்சனையாக மாறியுள்ளது. மற்ற மாநில அணி வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதால் இந்த பிரச்சனை இந்தியா முழுக்க பேசப்பட்டு வருகிறது. காவிரி பிரச்சனையை துச்சமென கருதிய தேசிய மீடியாக்கள் கூட இதை பற்றித்தான் இப்போது பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.சென்னை அணியிலும், கொல்கத்தா அணியிலும் நிறைய வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர்கள், ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளை சேர்ந்த வீரர்கள் கூட இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் தெரியாமல் இருந்த காவிரி பிரச்சனை இப்போது வெளியே வந்து இருக்கிறது.இந்த போராட்டம் ஒரு வகையில் வெற்றியை பெற்று இருக்கிறது என்று கூட கூறலாம். போராட்டம் செய்த மக்களின் முக்கியமான ஒரு எதிர்பார்ப்பு, தேசிய அளவில் இந்த பிரச்சனையை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த போட்டி இப்போது உலக அளவில் வைரல் ஆகி உள்ளது.ஆனால் இந்த போராட்டம் இன்னும் முடியவில்லை. இன்று இரவு 11 மணிக்கு போட்டி முடியும் வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதே டிவிட்டரில் சேப்பாக்கம் சென்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் வைரலாகிவிட்டது. இதனால் உலக அளவில் இன்னும் சில நிமிடத்தில் இந்த ஹேஷ்டேக் வைரலாக வாய்ப்பு உள்ளது.

07 ஏப்ரல் 2018

ஜெர்மனியின் முன்ஸ்ரர் நகரில் வாகனத்தால் மோதித் தாக்குதல்!

ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலிஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முன்ஸ்ரர் நகரில் பாதசாரிகளிடையே வாகனம் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவத்தில், அந்த வாகன ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.அந்த நகரின் கீபேன்கெர்ல் சிலை அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சரக்கு வாகனம் ஒன்று நத்தார் பொருட்கள் வாங்குவதற்கான சந்தையில் பார ஊர்தி ஏற்றப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று தாக்குதல் நடந்த இடத்துக்குச் செல்லவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கீபேன்கெர்ல் சிலை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேசை மற்றும் நாட்காலிகள் சேதமடைதிருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நன்றி:பிபிசி தமிழ்

02 ஏப்ரல் 2018

சுங்கச்சாவடி தகர்த்த சோழன்,வேல்முருகனுக்கு குவியும் வாழ்த்துகள்!

Velmurugan Arrested for Protesting at Ulundurpet Tollgate காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும்,போராட்டக்காரருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுங்கச்சாவடி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இதனால் வேல்முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் வேல்முருகனின் போராட்டத்திற்கு ஆதரவு வலுத்து வருகிறது.வேல்முருகனின் போராட்டத்திற்கு மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதரவாக பதிவிட்டுவருகிறார்கள். ஒரு ட்விட்டரில் பதிவில், போராட்டம் என்றால் இதுதான் போராட்டம்.. இது போன்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க தமிழர்கள் முன் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.தமிழர்கள் என்றால் மத்திய அரசு எப்போதும் கிள்ளுக்கீரையாக பார்க்கிறது. இதைத்தான் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிட்டு இருக்கிறதா என்று இன்னொரு பதிவில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தின் பெரிய கட்சிகள் எல்லாம் வழக்கு, பின் விளைவுகள் என்று பயந்து கொண்டு இருக்கும்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் செய்திருப்பது தரமான சம்பவம் என்றும், வேல்முருகனுக்கு வாழ்த்துகளும் என்றும் ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்னொரு ட்விட்டரில் பதிவில், நீதி மறுப்பதும், நீர் மறுப்பதும் தான் வன்முறை. வரி மறுப்பது அல்ல ; எங்களுக்கு நீர் இல்லையென்றால் உங்களுக்கு வரி இல்லை என்று பதிவிடப்பட்டுள்ளது.இன்னொரு ட்விட்டர் பதிவில், அன்றைய சோழன் சுங்கம் தவிர்த்தான். இன்றைய சோழன் சுங்கம் தகர்த்தான் என்றும் வேல்முருகனைக் குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். வேல்முருகனின் இந்தப் போராட்டத்தால், சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவு பெருகியுள்ளது.