14 டிசம்பர் 2014

தமிழீழத் தேசியத் தலைவரின் மைத்துனர் காலமானார்!

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் மைத்துனர் இராஜேந்திரம் அவர்கள் கனடாவில் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். தலைவர் வே.பிரபாகரனின் சகோதரி விநோதினி அவர்களின் கணவரே திரு.இராஜேந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

27 நவம்பர் 2014

படைகளின் முற்றுகைக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் மாவீரர் சுடர்!

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்களால் சுடர்  ஏற்றப்படலாம் என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்திற்கு வரும் மாணவர்கள்,உத்தியோகத்தர்களை சோதனை செய்த பின்னரே பல்கலைக்கழகத்திற்கு செல்ல அனுமதித்து வருகின்ற நிலையில். பத்துக்கு அதிகமான மாணவர்கள் இன்று மாலை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாவீரர் சுடரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

22 நவம்பர் 2014

பதற்றத்தில் மகிந்த கட்சியினர்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கட்சிதாவலை ஊக்குவிக்கிறார் என குற்றஞ்சாட்டியுள்ள அரசாங்கம் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்கான பெரும் நாடகமொன்றின் ஒரு பகுதியாகவே இது இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த. சந்திரிகா குமாரதுங்கவின் நாடகத்தில் மைத்திரிபால சிறிசேன முக்கிய கதாபாத்திரத்தை வகிக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இதேவேளை இந்த முழு நாடகமும் மேற்குலக சதி என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டலஸ் அழகபெரும, இலங்கையின் உள்விவகாரங்களில் இராஜதந்திரிகளை தலையிடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் சில நாடுகளும் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்காக நிதிவழங்குகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ள அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகப் போட்டியிடுவது என்ற மைத்திரிபாலவின் முடிவு குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்,பல்கலை மாணவனைக் காணவில்லை!

யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை பீடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை பீடத்தில் கல்விபயிலும் மூன்றாம் ஆண்டு மாணவனான அ.நிவாஸ் என்பவரே காணாமல் போயிருப்பதாக தெரியவருகிறது. நீர்வேலியில் உள்ள அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு 7 மணியளவில் புலனாய்வாளர்கள் சென்று சுற்றிவளைத்திருக்கின்றனர். நிலைமையை உணர்ந்த குறித்த மாணவன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
அதன் பின்னர் வீட்டிற்குள் நுழைந்த புலனாய்வாளர்கள் வீட்டிலிருந்தவர்களிடம் நிவாஸ் தொடர்பில் தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கின்றனர். சம்பவத்தினை அடுத்து புலனாய்வாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிய போதிலும் இதுவரையில் நிவாஸின் தொடர்பு வீட்டாருக்கு கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது. அவருடைய தொலைபேசியும் செயற்பாட்டில் இல்லை என்றும் அவருடைய உறவுகள் கவலை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 நவம்பர் 2014

மஹிந்த - மைத்திரி அவசர சந்திப்பு!

மஹிந்த - மைத்திரி அவரச சந்திப்பு: சமரச முயற்சி என்றும் தகவல்!சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசின் அமைச்சருமான மைத்திரிபால பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவரை சமரசப்படுத்தி தன்வசப்படுத்த மஹிந்த அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் மைத்திரிபாலவை அழைத்து மஹிந்த அவசரமாகக் கலந்துரையாடி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சந்திப்பு நிறைவில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றும் நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால இன்று வெள்ளிக்கிழமை தமது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு எதிரணியின் பக்கம் சேருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

16 நவம்பர் 2014

நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் நீதியான விசாரணை தேவை!

வெள்ளாங்குளத்தில் முன்னாள் போராளி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணையை பொலிசார் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு நேற்று சென்று பார்வையிட்ட பின்னர் அப்பகுதி மக்களுடனும், நகுலேஸ்வரனின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடனும் துக்கம் விசாரித்து கலந்துரையாடிய, சிவசக்தி ஆனந்தன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நகுலேஸ்வரனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்துள்ளதாகவும், படுகொலைக்கு பயன்படுத்திய ரி-56 வகை துப்பாக்கியை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் நீதி நியாயமாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றத்துடன் தொடர்புடைய அனைவரும் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படல் வேண்டும். அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
ஏனெனில் யுத்தம் முடிவடைந்து ஐந்தரை வருடங்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் சாதாரண நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் உயிரிழந்திருக்கும் முதலாவது சம்பவம் இதுவாகும். இச்சம்பவம் தொடர்பில், விடுவிக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவரும் தத்தமது எதிர்காலம் தொடர்பில் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர். வடக்கு முழுவதும் இச்சம்பவத்தால் ஒருவித பதட்டம் மேலோங்கி காணப்படுகின்றது.
எனவே பொதுமக்களின் அமைதியை, இயல்பு வாழ்க்கையை குழப்பியுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையும் படுகொலையையும் வன்மையாக கண்டிப்பதோடு, நகுலேஸ்வரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அநுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவிப்பதாகவும், சட்டம் ஒழுங்கைப்பேணி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசு முனைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

15 நவம்பர் 2014

தீவகத்தின் சமகால நிலமைகள் குறித்து விந்தனுடன் தீவக பிரதிநிதிகள் சந்திப்பு!

யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளின் சமாகால நிலமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 13.11.14 அன்று புலம்பெயர்ந்து வாழும் நெடுந்தீவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வர்த்தகருமான செல்வரட்ணம் சுரேஸ் என்பவரின் ஏற்பாட்டில் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் மகாலிங்கசிவத்தின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தீவகத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தீவகத்தின் அபிவிருத்தி குறித்து முக்கிய விடயங்கள் பேசப்பட்டதாக ஏற்பாட்டாளர் சுரேஸ் செல்வரட்ணம் தெரிவித்தார்.

13 நவம்பர் 2014

கட்டளை பிறப்பித்தவர்களே தண்டிக்கப்படுவர்-அமெரிக்கா

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான கட்டளைகளை பிறப்பித்த நபர்களே தண்டிக்கப்படுவர் என அமெரிக்க நிபுணர் பெட்ரிக் ட்ரேனொர் தெரிவித்துள்ளார்.பெட்ரிக் அமெரிக்க நீதிமன்ற திணைக்களத்தின் விசேட விசாரனைப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன கால யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட உத்தரவுகளை, கட்டளைகளை பிறப்பித்த நபர்களே தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்தள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றங்கள், சர்வதேச ரீதியான விசாரணைக் குழுக்கள் போன்றன யுத்தக் குற்றச் செயல்களை தலைமை ஏற்று வழிநடத்தியவர்களுக்கு எதிராகவே விசாரணை நடத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால யுத்தக் குற்றச் செயல் பதிவுகள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதுடன், சாட்சியாளர்களும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.இவ்வாறான நிலைமைகளின் போது நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகளுக்கான கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் அதிகாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். உள்ளுர் ஊடகங்களின் தகவல்களின் தகவல்களை திரட்டி ஆராய்வதன் மூலம் நடவடிககை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நாட்டின் பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதே சர்வதேச சமூகம் சட்ட நவடிக்கை எடுக்கும் எனவும் முன்னரங்கில் கட்டகளை ஏற்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

09 நவம்பர் 2014

‘பிரபாகரன் மாலைப் பொழுது’

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் 60 கவிஞர்கள் கூடி கவியரங்கம் நடைபெற உள்ளது.புலவர் புலமைப் பித்தன் தலைமையில் கூடும் 60 கவிஞர்கள் தலைவரைப் போற்றி கவிபாடும் கவியரங்கம் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் நடைபெற உள்ளது.
கிறித்து பிறப்பிற்கு முந்திய நாளான 24ம் திகதி கிறிஸ்மஸ் மாலை என உலகெங்கும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாடிவருவது போன்று தமிழீழத் தேசியத் தலைவரின் 60வது பிறந்த நாளான 26ம் திகதிக்கு முந்தைய நாளான 25ம் திகதி ‘பிரபாகரன் மாலைப் பொழுது’ என்று கடைப்பிடிக்கும் விதமாக இந்த கவியரங்கு நடைபெற உள்ளது.

07 நவம்பர் 2014

சிறீலங்காவை கண்டிக்கிறார் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ராத் அல் ஹுசைன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த புலன்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும் இலங்கை அரசாங்கம் தடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனை தாக்குவது, அந்த விசாரணைக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது ஆகியவை, இந்த விசாரணைக்கான ஆணையைப் பெற்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதிக்கும் செயலாகும். இந்த புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு ஆணைக்குழு திரும்பத் திரும்பக் கோரிய போதிலும் அதனை ஒரேயடியாக இலங்கை அரசாங்கம் நிராகரித்தமையானது, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேர்மையை குறைப்பதற்கு பதிலாக இலங்கை அரசாங்கத்தின் நேர்மை குறித்த கவலைகளையே ஏற்படுத்தும் என்று ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.

06 நவம்பர் 2014

சிறீலங்காவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ஐக்கிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களை மௌனமாக்க முனையும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட முனைவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது என்பது ஐ.நாவுக்கு எதிரான நடவடிக்கை போன்றது என்பதை இலங்கை விளங்கிக்கொள்ளவேண்டும் என ஐ.நா.மனித உரிமை கவுன்சிலுக்கான அமெரிக்க பிரதிநிதி ஹெய்த் ஹார்ப்பர் டுவிட்டர் செய்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.ஐ.நா.மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த விசாரணைகளில் அந்த அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க முயல்பவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது குறித்தே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலகநாடுகளின் தூதுவர்களை சந்தித்தவேளை, வன்னியில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் திரட்டி ஐ.நாவுக்கு அனுப்ப முயன்றவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்ததன் பின்னணியிலேயே அமெரிக்காவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

03 நவம்பர் 2014

தமிழகத்தில் காங்கிரஸ் உடைந்தது!

புதிய கட்சி தொடங்கப்போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் அறிவித்த சில மணி நேரங்களில் அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ் மேலிடம். தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்ததால், வாசனை நீக்கியதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று சென்னையில் செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்த முன்னாள் மத்திய அமைச்சரான ஜி.கே. வாசன், புதிய கட்சியின் சின்னம் மற்றும் கொடியை விரைவில் திருச்சியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.இதனையடுத்து அவரை கட்சியிலிருந்து விலக வேண்டாம் என தமிழக காங்கிரஸ் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக்கொண்டார். ஆனால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடம் வாசனை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். வாசன் தனிக்கட்சி தொடங்குவதால், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், அவரை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றும் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளார். வழக்கமாக முக்கியத் தலைவர்கள் விலகும் நிலை வரும்போது காங்கிரஸ் தலைமை சமாதானம் பேசிப் பார்க்கும். ஆனால் வாசனை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

01 நவம்பர் 2014

வைகோ திமுகவுடன் சேரக் கூடாது!

வைகோ திமுகவுடன் சேரக் கூடாது... காங்கிரஸிலிருந்து வாசன் விலக வேண்டும்! - தமிழருவி மணியன்திமுகவுடன் வைகோ தேர்தல் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது. ஜிகே வாசன் காங்கிரஸிலிருந்து விலகி வர வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறினார்.காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டபோது அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ் இனத்தின் நலனுக்காக, ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்வு காண்பதற்காக மோடியின் அரசு உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் எந்த செயலையும் செய்யவில்லை. தற்போது 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு மத்திய அரசின் மெத்தனப் போக்கே காரணம். எனவே நடைமுறையில் இல்லாத தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக கட்சிகள் வெளியேற வேண்டும்.ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய சுப்பிரமணிய சுவாமிக்கு எதிராக தமிழக பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினால் இந்த மண்ணை பற்றி சிந்திக்கக் கூடியவர்கள் என ஏற்றுக்கொள்ளலாம்.தமிழ் இனத்துக்காக தொடர்ந்து போராடும் போர்க்குணம் மிக்க போராளி வைகோ. பொது வாழ்வில் நேர்மையான அவர் தி.மு.க.வுடன் கைகோர்க்கக் கூடாது. அவரிடம் பேசியதில் வைகோவுக்கு அந்த எண்ணம் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை. வைகோ தி.மு.க.வுடன் சேர மாட்டார் என நம்புகிறேன். அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க எண்ணும் டாக்டர் ராமதாஸ் தி.மு.க. கூட்டணியில் இடம் பெறுவாரா? என தெரியவில்லை.ஜி.கே.வாசன் என் நெருங்கிய நண்பர். நேர்மையானவர். கடந்த 5 ஆண்டுகள் கப்பல் போக்குவரத்து துறையில் கேபினட் மந்திரியாக இருந்தபோது எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகவில்லை. காங்கிரசில் இருந்து ஜி.கே.வாசன் வெளியேற வேண்டும். அவர் வெளியேறிவிட்டால் தமிழகத்தில் காங்கிரசின் கதை முடிந்து விடும். வாசன் வெளியேறினால் அவரை நான் ஆதரிப்பேன்.
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.

29 அக்டோபர் 2014

வைகோவும் ஸ்டாலினும் சந்திப்பு!கூட்டணிக்கான காய் நகர்த்தலா?

பாமக நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழா காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது. இதனையொட்டி புதன்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.இந்த
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வைகோ, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். அரசியல் நாகரீகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமான அமைந்த சந்திப்பு. அன்பு சகோதரர் ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி. திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். ஸ்டாலின் உடனான சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை.கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி என்றார்.

27 அக்டோபர் 2014

குர்திஸ் பெண் வீராங்கனையின் தலையை துண்டித்த ஐஎஸ்ஐஎஸ்!

குர்திஷ் படையில் இணைந்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு வந்த பெண் வீராங்கனை ரெஹேனா என்பவரை உயிருடன் பிடித்து தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். இவரது மரணச் செய்தி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பல்வேறு இணையதளங்களிலும் இந்த மரணச் செய்தி காட்டுத் தீயாக பரவி வருகிறது. குர்திஷ் படையில் இருந்தபோது நூற்றுக்கணக்கான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை கொன்று குவித்தவர் ரெஹேனா என்பது குறிப்பிடத்தக்கது.குர்திஷ் படையின் வீரத்திற்கு அடையாளமாக பார்க்கப்பட்டவர் இந்த ரெஹேனா. மிகுந்த துணிச்சலுடன் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தன்னை இணைத்துக் கொண்டவர்.ரெஹேனா என்பது இவரது உண்மையான பெயர் அல்ல. புணை பெயர்தான். சிரிய எல்லையில் இவர் தீவிரமான போரில் ஈடுபட்டிருந்தார்.இவர் தனிப்பட்ட முறையில் 100 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பெருமைக்குரியவர் ஆவார்.இவர் வெற்றிக்கான இலச்சினையான வி என்று இரட்டை விரலை காட்டும் படம் ஒன்றை பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் போட்டு விட உலகம் முழுவதும் பிரபலமானார் ரெஹேனா.இந்த டிவிட் 5000 முறை ரீட்வீட் செய்யப்பட்டது. ஆனால் அந்த தீரம் மிகுந்த பெண் தற்போது உயிருடன் இல்லை என்று செய்திகள் வருகின்றன.ரெஹேனா, குர்திஷ் ராணுவத்தின் பெண்கள் பிரிவில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இவரைக் கொன்று தலையைத் துண்டித்து துண்டித்த தலையுடன் போஸ் கொடுப்பது போன்ற படங்கள் உலா வருகின்றன. இது அதிர்ச்சி தருவதாக உள்ளது.சிரியாவில் உள்ள கொபேன் நகரில்தான் போரில் ஈடுபட்டிருந்தார் ரெஹேனா. இந்த கொபேன் நகரமானது 3 பக்கங்கங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் உள்ளது. இன்னொரு பகுதியை குர்திஷ் படையினர் தங்கள் வசம் வைத்திருந்து போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அமெரிக்க விமானப்படை அவ்வப்போது தாக்குதல் நடத்தி ஆதரவு தந்து வருகிறது.கடந்த ஒரு மாதமாக இந்த கொபேன் நகரில் தீவிரவாதிகள் உக்கிரமாக தாக்கி வருகின்றனர். ஆனால் குர்திஷ் படையினர், அமெரிக்கப் படையினரின் உதவியுடன் அதை முறியடித்து சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.குர்திஷ் படையின் மகளிர் பிரிவில் ஆயிரக்கணக்கான பெண்களும் இடம் பெற்றுள்ளனர். ஆண்களுக்கு நிகராக இவர்களும் கலக்கி வருகின்றனர்.

26 அக்டோபர் 2014

புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பிரிட்டன் ஆராய்கிறதாம்!

ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
2000 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பிரிட்டனில் அநத அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது.இது ஐரோப்பிய ஒன்றிய ஏற்பாடுகளிலிருந்து வித்தியாசமானது. அதேவேளை இந்த தீர்ப்பு உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் ரீதியிலான ஒன்றல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.எனினும் நடைமுறை விதிகளின் அடிப்படையில் சட்ட ரீதியாக புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் பற்றிய தீர்ப்பு இது என்பதும் முக்கியமானது.
அந்த வகையில் பிரிட்டனும் ஏனைய உறுப்புநாடுகள் போன்று குறிப்பிட்ட தீர்ப்பு மற்றும் பொருத்தமான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறது.இவேளை அடுத்த மூன்று மாத காலத்திற்க்கு விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் முடக்கம் நீடிக்கும் என இலங்கைக்கான பிரிட்டனின் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

24 அக்டோபர் 2014

படுகொலைகளை நினைவூட்டுகிறது ராஜபக்ஷவின் 4இலட்சம் லைக்!

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமது ஃபேஸ்புக் லைக்குகள் எண்ணிக்கை 4 லட்சம் தாண்டிவிட்டதை பெருமைபொங்க பகிர்ந்து வருகிறார். அவருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 2009-ல் 40 ஆயிரம் தமிழர்களை நினைவூட்டுகிறது 4 லட்சம் லைக்குகள் என்று தமிழர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.ராஜபக்சே திரைப்பட நடிகராகவும் இருந்தவர். அதனால்தான் என்னவோ அரசியல் வாழ்க்கையில் ஆகச் சிறந்த நடிகராகவும் ஜொலிக்கிறார். யுத்தம் முடிந்து 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும் தமிழர் மனங்களை அவரால் வென்றெடுக்க முடியவில்லை. இதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை ஜாலங்களையும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பயன்படுத்த ராஜபக்சே தவறுவதும் இல்லை. தமது ட்விட்டர் பக்கத்தில் சிங்களம், ஆங்கிலம், தமிழ் என மும்மொழிகளிலும் பதிவிட்டு வருகிறார்.இதேபோல் ஃபேஸ்புக் பக்கத்திலும் பெரும்பாலும் சிங்கள்ம, ஆங்கிலம், தமிழ் மொழிகளில் பதிவுகளைப் போட்டு வருகிறார். இந்துக்கள் சார்ந்த பண்டிகைகளில் கலந்து கொள்ளும் புகைப்படங்களை சகட்டுமேனிக்கு பதிவு செய்து "இணக்கமாக" இருப்பதாக காட்டிக் கொள்வதில் ரொம்பவும் முனைப்பு காட்டுகிறார் ராஜபக்சே.இந்துக்களுடன் நேற்று தீபாவளியைக் கொண்டினேன் என்று பதிவை மும்மொழிகளில் போட்டு ஏகப்பட்ட படங்களைப் போட்டுள்ளார் ராஜபக்சே.அதற்கு முன்னர் இலங்கை பட்ஜெட் தாக்கல் பற்றி மும்மொழிகளிலும் பதிவிட்டு அப்டேட் செய்து கொண்டிருந்தார்.இந்த நிலையில்தான் அவரது ஃபேஸ்புக் பக்கம் 4 லட்சம் லைக்குகளை எட்டியிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டார்.இதற்கு பதிலடியாகத்தான் உங்களது 4 லட்சம் லைக்குகள் என்பது 2009ஆம் ஆண்டு 40 ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்ததை நினைவூட்டுகிறது என்று தமிழர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.ஆனால் மகிந்த ராஜபக்சேவை விடவும் 2 ஆயிரம் பேர் கூடுதல் லைக்குகளை அவரது மகன் நமல் ராஜபக்சேவுக்கு கொடுத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

23 அக்டோபர் 2014

இலங்கை தொடர்பிலும் ஐ.நா.பொதுச்சபைக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையொன்றில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் சயிட் அல்ஹுசைன் இலங்கை குறித்தும் குறிப்பிட்டுள்ளார் தன்னுடைய அலுவலகம் முன்னைய ஆணையாளரின் கீழ் கடந்த ஒரு வருட காலப் பகுதியில் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட காலப் பகுதியில் ஆணைக்குழு மூன்று நாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சிரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, இலங்கை ஆகியனவே இந்த நாடுகள். இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பில் மூன்று விசேட குழுக்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் பலஸ்தீனம், எரித்திரியா மற்றும் ஈராக் குறித்தும் விசாரணைகள் இடம்பெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் நான் பதவியேற்றபோது, பெரும் நிதிப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் எனது அலுவலகம் முன்னெடுத்துள்ள பணிகளை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். ஐ.நாவின் முக்கிய தூண்களில் ஒன்றான மனித உரிமைக்கு தற்போது மிக குறைந்தளவு வளங்களே கிடைக்கின்றன. ஏனைய துறைகளுக்கு வழங்கப்படுவதை விட குறைவாகவே மனித உரிமைகளுக்கு வழங்கப்படுகின்றது. இது தொடரமுடியாது. மனித உரிமைகள் மீறப்படும்போது துஷ்பிரயோகங்களும், மீறல்களும் பாரிய மோதல்களை உருவாக்கும் போது, சகலவகைகளிலும் இழப்புகள் மிகப் பெரிதாகக் காணப்படுகின்றன. இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மனித உரிமை மீறல்களை கண்டுபிடித்து எச்சரிப்பதற்கான தனது அமைப்பின் திறனை அதிகரிக்குமாறும், ஆபத்தான சமிக்ஞைகள் வெளியானவுடன் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

22 அக்டோபர் 2014

யாழில்.மக்களை துரத்தி துரத்தி வாழ்த்துகிறது படை!

யாழ்.குடாநாட்டு மக்களிற்கு இலங்கை இராணுவம் வீதியெங்கும் துரத்தி துரத்தித் தீபாவளி வாழ்த்து கூறி வருகின்றது. வீதியில் ரோந்து செல்லும் படைப்பிரிவுகள் ஒருபுறமும் மற்றைய புறம் வீடுவீடாக செல்லும் படையினர் இன்னொருபுறமும் வாழ்த்து கூறிவருகின்றனர்.
யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மற்றும் இராணுவத்தினரின் தீபாவளி வாழ்த்து என அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகளையே இவ்வாறு வழங்கி வருகின்றனர். யாழ்ப்பாண குடாநாடு முழுவதும் பரவலாக கடந்த மூன்று நாட்களாக இராணுவத்தினர் அமோகமாக வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
அத்துடன் தீபாவளியை முன்னிட்டு படையினர் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்வுகளையும் நடத்தவிருப்பதாகவும் அழைப்பிதழ்களினில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளிற்காகவே வீடு வருவதாக அச்சங்கொண்டு மக்கள் முடங்கிவருகின்றனர். மக்களது மனம் கவரும் நோக்கினிலேயே இம்முயற்சி நடப்பதாக கூறப்படுகின்றது.

19 அக்டோபர் 2014

கமிஷனர் அலுவலகத்தில் காத்திருக்கும் ஐங்கரன் கருணா!

லைகா நிறுவனத்தின் கத்தி படம் தீபாவளிக்கு வெளியாவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்துப் பேச கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட ஐங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தி, பல மணி நேரமாக அலுவலகத்திலேயே காத்திருக்கிறார். கத்தி படத்தை லைகா நிறுவனத்தின் பெயரை எடுத்துவிட்டு வெளியிடுமாறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மீறி வெளியிட்டால் பெரும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள், மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.மேலும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் விநியோகஸ்தர்களை நேரில் அழைத்து, படத்தை வெளியிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடப் போவதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். கத்தியை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அறிக்கை வெளியிட்டார். இன்னொரு பக்கம், கத்தி வெளியீடு குறித்தும், டிக்கெட் முன்பதிவு குறித்தும் லைகா நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டு வந்தது. இந்த சூழலில், படத்தை வெளியிடுவது, அதையொட்டி எழுந்துள்ள சூழல் குறித்துப் பேச சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்துக்கு படத்தின் இணை தயாரிப்பாளரான ஐங்கரன் கருணாமூர்த்தி வரவழைக்கப்பட்டார். அவரிடம் லைகா நிறுவனத்தின் பெயரை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு லைகா மற்றும் ஐ
ங்கரன் தரப்பு மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மேற்கொண்டு பேசலாம் எனக் கூறி கருணாமூர்த்தியை கமிஷனர் அலுவலகத்திலேயே காத்திருக்க வைத்துள்ளனர். கத்தி படத்துக்கு இன்று முதல் டிக்கெட் முன்பதிவு என்று அறிவித்திருந்தனர். ஆனால் எந்த அரங்கிலும் முன்பதிவு தொடங்கவில்லை. அதேநேரம், தமிழகத்தில் வெளியாகாவிட்டாலும் பரவாயில்லை, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படத்தை 22-ம் தேதி வெளியிடுவதில் உறுதியாக உள்ளதாம் லைகா.

17 அக்டோபர் 2014

நீதிபதியிடம்'குட்டு'வாங்கிய சு.சுவாமி!

சு.சுவாமி
சொத்துக் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியிடம் கிடுக்குப் பிடி கேள்விகளைக் கேட்க மனிதர் ஆடிப்போய்விட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அனைவரும் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் அம்மனு நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நான்கு பேரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விவாத விவரம்:

ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நாரிமன் தனது வாதங்களை முன்வைத்து வாதாடினார். அவரது வாதங்களுக்கு குறுகிட்டு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியும் கருத்து தெரிவித்தும் வந்தார். பின்னர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரர் என்ற அடிப்படையில் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்பட்டது.

அப்போது சுப்பிரமணியன் சுவாமி ,
தமிழகத்தில் மிகப் பெரிய வன்முறை வெடித்துள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக கேலிசித்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. அதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் தரக் கூடாது. ஜெயலலிதா இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தவில்லை. அவர் ஒருவார்த்தை கூறியிருந்தால் போதும்.. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஒட்டுமொத்த அமைச்சரவையுமே கர்நாடகாவுக்கு வந்துவிட்டது.. அவரது அமைச்சர்கள் எவருமே அழாமல் பதவியும் ஏற்கவில்லை என்றார்.

இதன் பின்னர் இதற்கு பதிலளியுங்கள் என்கிற விவதமாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாரிமன் பக்கம் தலைமை நீதிபதி தத்து திரும்பினார்.

"இந்த நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விவரங்கள் அனைத்தும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். கட்சியினருக்கு ஜெயலலிதா உத்தரவு பிறப்பிப்பார். அவர் அரசியல் தார்மீக நடைமுறைகளை நிச்சயம் கடைபிடிப்பார் என உறுதி கூறுகிறேன் என்றார் நாரிமன்.

இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியமணி சுவாமி பக்கம் திரும்பிய தத்து நன்றாக குட்டு வைத்தார்.
சுப்பிரமணியன் சுவாமியைப் பார்த்தபடி, "ஒரு நபர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர் நாட்டை விட்டு ஓட முயற்சித்தால் மட்டுமே அசாதாரண சூழ்நிலையாக கருதப்படும். ஜெயலலிதாவின் கட்சித் தொண்டர்கள் அப்படி நடந்து கொண்டால் அவர் என்ன செய்ய முடியும்? அவர்தான் வன்முறையில் ஈடுபடச் சொன்னார் என்று ஏதாவது ஆதாரம் உண்டா? என்று கேட்டார் தலைமை நீதிபதி தத்து.
இதை சற்றும் எதிர்பார்க்காத சுப்பிரமணியன் சுவாமி திருதிருவென முழித்தபடி அடங்கிப் போனார்.

16 அக்டோபர் 2014

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய இரு சடலங்கள் மீட்பு!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன ஊறணியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை சின்ன ஊறணி, செழியன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
இவர் சடலம் மீட்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான சுந்தரநாதன் சந்திரகுமார் (57வயது) என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறு பணித்தார்.
குடும்ப பிரச்சினை காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதேபோன்று மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மகிழடித்தீவினை சேர்ந்த அருணாசலம் கிருபாகரன் (32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

15 அக்டோபர் 2014

யாழில் ஐஸ்கிறீம் கடைகளுக்கு சீல்!

யாழ். மாநகர சபைப் பகுதியில் சுகாதார விதிமுறைகளுக்கு முரணாகவும் அனுமதியின்றியும் இயங்கி வந்த எட்டு ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் சுகாதாரக் குழுவினரிடம் அகப்பட்டுக்கொண்டன. இந்த நிலையங்களில் மறுஅறிவித்தல் வரை ஐஸ்கிறீம் உற்பத்தி செய்வதற்குத் தடைவிதித்துள்ள குழுவினர், அங்கு சுகாதாரமற்ற முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்காகக் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்கிறீம் வகைகளைக் கைப்பற்றி அழித்துள்ளனர். குடாநாட்டில் வருமானத்தை மட்டும் கருத்திற்கொண்டு சுகாதார விதிமுறைகளுக்கு முரணாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றியும் ஐஸ்கிறீம் வகைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் பலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களில் இடம்பெறும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாவனையாளர்களைப் பாதுகாக்க முன்வந்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் 12 சுகாதார வைத்திய அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமித்து ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களைக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்திருந்தார். பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய குழுவினர் கடந்த சில நாள்களாக பிரதேச ரீதியாக ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களையும் ஆலயங்கள் உட்பட விற்பனை நிலையங்களையும் நேரில் சென்று பார்வையிட்டு அவற்றின் தரம் குறித்து ஆராய்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் யாழ். மாநகர சபை எல்லைக்குள் இயங்கி வரும் உற்பத்தி நிலையங்களில் சோதனை மேற்கொண்ட சுகாதாரக் குழுவினர், சுகாதார விதிமுறைகளுக்கு மாறாகவும் அனுமதியின்றியும் இயங்கிவந்த எட்டு ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களைக் கண்டுபிடித்தனர். அத்துடன் மறு அறிவித்தல் வரை ஐஸ்கிறீம் உற்பத்தி செய்வதற்குத் தடையும் விதித்தனர்.

14 அக்டோபர் 2014

"மு.அ. டக்ளஸ் தேவானந்தா-முதுகெலும்பில்லாத அமைச்சர் என்று சொல்ல வரவில்லை!

"மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்றால் முதுகெலும்பில்லாத அமைச்சர் என்று நான் சொல்ல வரவில்லை. முக்கிய அமைச்சர் டக்களஸ் தேவானந்தா என்றே கூறுகின்றேன். இந்த அரசும் - அரசுடன் சேர்ந்திருக்கின்ற மேற்படி மு.அமைச்சரும் - தமிழர்களின் உரிமைகளை மறைத்தும் - மறுத்தும்தான் - கதைப்பார்கள்.- இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.வடக்கு மாகாணத்துக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் சேர்ந்து வலம் வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் பேசியபோது மு.விக்னேஸ்வரன் என்று விளித்திருந்தார். அத்துடன் மு.விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என்று அர்த்தமல்ல முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்பதே என்றும் வியாக்கியானம் செய்திருந்தார்.இந்த விடயம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே சிறிதரன் எம்.பி. மேற்சொன்ன கருத்தைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:வடக்கு மாகாண சபையை சரியான ஆட்சி அதிகாரம் கொண்ட சபையாக நாம் கருதவில்லை. எனினும் மக்களின் ஆணையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சபையில் ஆட்சி அமைத்திருக்கின்றது. ஆனால் இங்கு தமிழர்களின் ஆட்சியை விரும்பாதவர்கள் விமர்சிக்கின்றனர். குறிப்பாக வடக்குக்கு வந்த ஜனாதிபதியும் விமர்சித்தார். இதன்போது கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களையும் செய்தார்.இதேபோன்று மு.அ. டக்ளஸ் தேவானந்தாவும் விமர்சித்திருக்கிறார். மு.அ.டக்ளஸ் தேவானந்தா என்று நான் கூறியமை முதுகெலும்பில்லாத அமைச்சர் என்று நான் சொல்ல வரவில்லை. முக்கிய அமைச்சர் என்றே கூறினேன். இப்படிப்பட்ட அமைச்சர்கள் தமிழர்களின் உரிமைகளை மறுத்துத்தான் கதைப்பார்கள் இவர்களால் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா. இவர்களும் முன்னர் தமிழீழத்தையே கேட்டனர் பின்னர் 'மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி' என்றனர். இப்போது அதுவும் இல்லை.இந்நிலையில் இன்று அரசிடம் எதுவும் கேட்க முடியாமல் அரசு கொடுப்பதையும் கூறுவதையுமே வாங்கும், கேட்கும் நிலையில் இருக்கின்றனர். எமது மக்களால் நிராகரிக்கப்பட்ட இத்தகைய அமைச்சர்களின் குழுக்களை வைத்துக் கொண்டு எங்களை நசுக்குவதற்கு அரசு திட்டம் தீட்டிச் செயற்படுகின்றது என தெரி
வித்தார்.

யாழில் சிங்களவர்களை குடியேற்றப்போகும் மகிந்த!

வட மாகாணத்தில் இருந்து வெளியேறிய சிங்கள மக்களை குடியேற்றப் போவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற வடமாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் காணிகள் இருந்ததாகவும், அவர்களை விரைவில் குடியேற்றப்போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.நாம் மகாவலி கங்கையை வடக்கு மாகாணத்திற்கு கொண்டுவர முயற்சிக்கின்றோம். வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுடைய மீள்குடியேற்றம் நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்தக் கட்டமாக இங்கிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களையும் குடியேற்ற வேண்டுமெனவும் அதற்கான காலம் வந்து விட்டதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியிருந்தார்.எனினும் வலிகாமம் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சுமார் ஒரு இலட்சம் வரையான தமிழ் மக்கள் கடந்த 24 வருடங்களாக அகதி வாழ்க்கையினை வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

12 அக்டோபர் 2014

அகதிகள் விடயத்தில் அவுஸ்திரேலியாவில் மாற்றம் வரலாம்!

இலங்கை அகதிகள் தொடர்பான தனது கொள்கையில் ஆஸ்திரேலியா மாற்றத்தை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் அகதிகள் தொடர்பில் ஆஸ்திரேலியா கடுமையான நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது.இந்த விடயம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை உட்பட பல சர்வதேச அமைப்புகளாலும் விமர்சிக்கப்படுகின்றது. தற்போது ஆஸ்திரேலியா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்ஸின் அங்கத்துவத்தை பெற முயற்சி செய்கின்றது.இதனால் அகதிகள் நிலைப்பாடு தொடர்பில் தனது இறுக்கமான கொள்கைகளை சற்றுத் தளர்த்துவதற்கு யோசிக்கின்றது. இதனை அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப்பும் உறுதி செய்தார் என்று அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

10 அக்டோபர் 2014

உலக இளவரசிப்போட்டியில் தமிழ் பெண்!

முதல் முறையாக ஈழத்தை சேர்ந்த தமிழ் பெண் உலக இளவரசி பட்டம் (Miss Princess Of The World) என்ற பட்டதை வெல்லும் தருவாயில் உள்ளார். உலக அழகி போட்டிக்கு அடுத்த படியாக வருடா வருடம் நடத்தப்படும் போட்டி உலக இளவரசி போட்டி. இந்த வருடத்திற்கான போட்டியில் 40 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டிக் களத்தில் உள்ளனர். இதில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட 'அபிஷேகா ல்லயோட்சன்' (Abissheka Lloydson) என்ற பெண்ணும் அடங்குவார். முதல் முறையாக ஒரு தமிழ்
பெண் உலக அளவிலான படத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.போட்டியில் எல்லா சுற்றுகளும் முடிந்து விட்ட நிலையில், இறுதி சுற்றாக மக்களிடம் யாரை தேர்ந்தெடுப்பது என இணையம் மூலம் வாக்கு நடைபெற்று வருகின்றது. இதில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என உலக தமிழர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் அபிஷேகா ல்லயோட்சன். இவர் ஏற்கனவே இளம் வயதினருக்கான மிஸ் கனடா பட்டதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேகா ல்லயோட்சன் (Abissheka Lloydson) உலக இளவரசி பட்டதை வெல்வதற்கு உங்கள் வாக்குகளை பதிவு செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட இணையதளத்திற்கு செல்லுங்கள் உங்களது பதிவுகளை தந்து வெற்றிபெறவையுங்கள் பெருமை சேருங்கள்.
http://contest.missprincessworld.com/

09 அக்டோபர் 2014

"நாஞ்சில் சம்பத் ராசியானவர்"முகநூலில் கிண்டல்!

பேஸ்புக் குசும்பர்களின் லேட்டஸ்ட் ரகளையில் சிக்கியிருப்பவர் நாஞ்சில் சம்பத். அவரை வைத்து ஒரு கிண்டல் போட்டோவை உலா விட்டுள்ளனர். நாஞ்சில் சம்பத் எந்தக் கட்சியில் இருந்தாலும் அந்தக் கட்சியின் தலைவருக்கு சிறைவாசம்தான் கிடைக்கும் என்பதுதான் இந்த கிண்டலின் சாராம்சம். அடுத்து நாஞ்சில் சம்பத் பேசாமல் திமுகவில் சேரட்டும் என்றும் கிண்டலைத் தட்டி விட்டுள்ளனர்.இதுதொடர்பாக பேஸ்புக்கில் போடப்பட்டுள்ள ஒரு போட்டோவில், நாஞ்சில் சம்பத் ராசியான மனிதர் என தலைப்பு கொடுத்துள்ளனர்.மேலும் வைகோவோடு இருந்தபோது வைகோ சிறைக்குச் சென்றார் என்று அதில் வரி வருகிறது.இப்போது ஜெயலலிதாவோடு இருக்கும்போது, ஜெயலலிதா சிறைக்குச் சென்றார் என்று போட்டுள்ளனர்.அடுத்ததாக கருணாநிதியோடு இணைய வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள் என்ற வாசகத்தோடு அந்த நக்கல் முடிகிறது.அதுபோதாதென்று #i support Nanjil Sampath என்று வேறு போட்டுள்ளனர்.

08 அக்டோபர் 2014

முல்லையில் மகளிர் கொள்ளையணி கைது!

முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு மற்றும் உடையார்க்கட்டு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையிட்ட 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.புதுக்குடியிருப்பு பகுதியில் நிலைகொண்டிருக்கும் சிறீலங்கன் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த பெண்கள் கொள்ளையிட்ட பொருட் தொகை ஒன்று புதுக்குடியிருப்பு பிரசேதத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனவாம்.
மின்சார தளபாட விற்பனை நிலையங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் போன்றவற்றை உடைத்து, இந்த பெண்கள் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

07 அக்டோபர் 2014

வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றவில்லை!

இலங்கையில் இன்னமும் மோசமான நிலையிலுள்ள மனித உரிமை நிலைவரத்தை தாம் சீர்செய்துவருகின்றனர் என்று சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை மக்களுக்கும் போலியான வாக்குறுதி அளிப்பதை இலங்கை அரசு கைவிடவேண்டும் என சர்வ தேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை குழு இலங்கை தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமையும் நாளை புதன்கிழமையும் ஆய்வு செய்யவுள்ள நிலையிலேயே மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரதி இயக்குநர் டேவிட் கிரிவ்த்ஸ் தெரிவித்துள்வை வருமாறு:2002 இல் இலங்கை குறித்து இறுதியாக இடம்பெற்ற ஆய்வின் போது சுட்டிக்காட்டப்பட்ட மனித உரிமை பிரச்சினைகளில் பெரும்பாலானவை இன்றும் காணப்படுகின்றன. இவை குறித்து தீர்வு காணப்படும் என அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளது.இலங்கையில் மாற்றுக் கருத்தையும், உடன்பட மறுத்தலையும் கட்டுப்படுத்த மிகமோசமான சட்டங்கள் பயன்படுத்துகின்றன. சித்திரவதையும், பலவந்தமாக காணமற்செய்யப்படுதலும் தொடர்கின்றன. கருத்துச் சுதந்திரமும் ஒன்றுகூடுவதற்கான உரிமையும் மீறப்படுகின்றன. இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தி நபர்களை உரிய நடைமுறையின்றி தடுத்துவைக்கின்றது. அத்துடன் தன்னுடன் உடன்பட மறுப்பவர்களை மௌனமாக்க அதனைப் பயன்படுத்துகிறது. எனவே சிறுபான்மை மதங்களுக்கு எதிராக அதிகரித்துவரும் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் என்று அவர் மேலும் தெரவித்துள்ளார்.

06 அக்டோபர் 2014

நாளை பிணை கிடைக்க வாய்ப்பு-முன்னாள் அரசு வழக்கறிஞர்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நாளை ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, கர்நாடகாவின் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவர் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட உயர்நீதிமன்ற விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா, அதன் மீதான விசாரணையை வழக்கமான பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார்.தசரா விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் கர்நாடக உயர்நீதிமன்றம் நாளை திறக்கப்படுகிறது. கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங்குக்கு முன்பு அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகி வாதாடிய ஆச்சார்யா கூறியுள்ளார்.சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் நான் ஆஜராகி வந்தேன். எனக்கு பல்வேறு இடங்களில் இருந்து நெருக்கடி அதிகமாக வந்தது. வேறு வழியில்லாமல் நான் அந்த பதவியில் இருந்து விலகினேன்.தமிழ்நாட்டில் இந்த வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்ற காரணத்தால் தான் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது. அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரத்தையும் கர்நாடக அரசுக்கு வழங்கியது.ஆனால் கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதில் எனக்கு முக்கிய பங்கு உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன். சட்டப்படி அது நடைபெற்று முடிந்து உள்ளது.குற்றவாளிகள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் 5 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால், அந்த தண்டனையை நிறுத்திவைத்து அவர்களைகூறியுள்ளது.அதன்படி ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு  ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறினார்.

05 அக்டோபர் 2014

புலம்பெயர் அமைப்புக்களின் தடையை நீக்குமாறு கோரிக்கை!

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புக்களையும் தனிப்பட்டவர்களையும் அதில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகத்திடம் இந்தக்கோரிக்கையை உலகத் தமிழர் பேரவை முன்வைத்துள்ளது.இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக தமிழர் பேரவை அமைப்பின் தலைவர், வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இமானுவேல் அடிகளார் கேட்டுள்ளார்.ஓக்டோபர் முதலாம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.இதேவேளை இலங்கை தமிழர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

03 அக்டோபர் 2014

மகிந்த தவறாக கூறியுள்ளார் என்கிறது அமெரிக்கா!

இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.அமெரிக்காவின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் தளர்ச்சி தெரிவதை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான சந்திப்பின்போது தான் உணர்ந்தார் என அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார் என வெளியான செய்திகளையே அமெரிக்கா நிராகரித்துள்ளது.இலங்கை ஊடகங்களில் வெளியான தகவல்களில் ஒரு விடயம் மாத்திரம் சரியானது. வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத் தொடரின்போது இலங்கை ஜனாதிபதியை சந்தித்தார்.இலங்கை தொடர்பான அமெரிக்க கொள்கையில் மாற்றமெதுவும் இல்லை என்ற நோக்கத்தை தெரியப்படுத்தும் நோக்குடனேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. நிச்சயமாக இலங்கை தொடர்பான கொள்கையில் தளர்ச்சியேற்படவுமில்லை.இலங்கையுடனான எமது உறவு முழுமையாக வளர்ச்சி காணவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இலங்கை தனது பல தரப்பட்ட இன, மத குழுக்களுக்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக்கொடுத்தாலே சாத்தியமாகும்.இதன் காரணமாகவே இலங்கை தொடாந்தும் யுத்தத்தில் ஈடுபட்டிராத நாடு என்பதை காண்பிக்கும விதத்திலான அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கெரி வலியுறுத்தினார். - என்று தெரிவித்துள்ளார்.

02 அக்டோபர் 2014

மாணவி மீது பலாத்காரம்!வாகன ஓட்டுனர் கைது!

கண்டியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயது மாணவியை பாடசாலை வேனுக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கண்டி வாவி சுற்றுவட்ட சிவப்பு மதகு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் வல்லுறவு முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை பொலிஸார் சந்தேகநபரை மடக்கிப்படித்துள்ளனர்.குறித்த மாணவி வேன் சாரதியால் மூன்று வருடங்களாக இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.சாரதியின் வேன் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டதெனவும் அது அகில இலங்கை அனைத்து மாவட்ட பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி வைத்திய பரிசோதனைக்கென கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.

01 அக்டோபர் 2014

வழக்கை விசாரிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி!

ஜாமீன் மனு மீதான வாத-விவாதங்களை கேட்காமலே வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி!வாத, விவாதங்களை கூட கேட்காமல் உடனடியாக நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்துவிட்டார் என்று குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள் குற்றம்சாட்டினர்.ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஜாமீன் மனு மீதான விசாரணை விடுமுறைக்கால நீதிபதி ரத்தினகலா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணையை அடுத்த வாரத்தில் ரெகுலர் பெஞ்ச் எடுத்துக்கொள்ளும் என்று கூறிவிட்டு ரத்தினகலா இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார்.இதுகுறித்து குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள்களில் ஒருவரான அஸ்லம் பாட்சா கூறியதாவது: இந்த வழக்கு விசாரணையை நடத்த மாட்டேன் என்று நீதிபதி கூறியது எங்கள் துரதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜரானார். அவரைப் பார்த்த நீதிபதி, நீங்கள்தான் அரசு சார்பில் ஆஜராகப்போகிறீர்களா என்று கேட்டார்.இதற்கு பவானிசிங்கும் ஆம் என்று கூறிவிட்டு, அதற்கான உத்தரவை நீதிபதியிடம் அளித்தார். ஜாமீன் வழங்குவது குறித்து நீங்கள் ஏதும் ஆட்சேபனை செய்ய விரும்புகிறீர்களா என்று நீதிபதி, பவானிசிங்கிடம் கேட்டதற்கு, அவரும் ஆமாம் என்று தெரிவித்தார். ஆட்சேபனை தெரிவிக்க தேவையான கோப்புகளையும் பவானிசிங் நீதிமன்றத்துக்கு கொண்டு வந்திருந்தார்.ஆனால், ரத்தினகலாவோ, இந்த வழக்கை ரெகுலர் பெஞ்ச் விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். நாங்கள் நீதிபதியிடம், எங்கள் தரப்பு வாதத்தை கேளுங்கள் என்று கேட்டோம். ஆனால் நீதிபதி அதை கேட்கவில்லை. நீதிபதியை வழக்கை விசாரிக்குமாறு நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது என்பதால் இதை துரதிருஷ்டம் என்றுதான் சொல்லிக்கொள்ள வேண்டும். அரசு மற்றும் குற்றவாளிகள் ஆகிய இரு தரப்பில் ஒரு தரப்பு வாதத்தை கூட கேட்காமலேயே நீதிபதி கிளம்பிவிட்டார். இவ்வாறு அந்த வழக்கறிஞர் தெரிவித்தார்.நீதிபதியின் செயல்பாடுக்கான காரணம் குறித்து கர்நாடக ஹைகோர்ட் மூத்த வழக்கறிஞர்கள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: இதில் ஆச்சரியம் ஒன்றும் கிடையாது. விடுமுறைக்கால நீதிபதி, வாத, பிரதிவாதங்களை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஏதோ மிகவும் அவசரமான வழக்கு, உடனடியாக பைசல் செய்ய முடியும் என்றால் மட்டுமே விடுமுறை கால நீதிபதி அதில் தலையிடுவார்.ஆனால், ஜெயலலிதா வழக்கில், ஜாமீனுக்கு எதிர்ப்பும் இருப்பதால், இரு தரப்பு வாத, பிரதிவாதங்களையும் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் கால விரையம் ஏற்பட்டு பிற அவசர வழக்குகளை நீதிபதியால் விசாரிக்க முடியாமல்போய்விடும். எனவேதான், ரெகுலர் பெஞ்ச் இதை விசாரிக்கட்டும் என்று நீதிபதி கூறியுள்ளார். இது எதிர்பார்க்கப்பட்டதுதான். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.என செய்திகள் தெரிவிக்கின்றன.

30 செப்டம்பர் 2014

செல்வி ஜெயலலிதா ஜெயராம் நாளை வெளியே வருகிறார்?

அரசு வக்கீல் இல்லாவிட்டாலும் ஜாமீன் மனுவை விசாரிக்கலாம் என்ற ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்று கர்நாடக ஹைகோர்ட்டின் சிறப்பு அமர்வு நாளை மீண்டும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை நடத்த உள்ளது.ஜெ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை இன்று காலை கர்நாடக ஹைகோர்ட்டின் விடுமுறைக்கால அமர்வு விசாரித்தது. பின்னர் அடுத்த வாரம் 6ம்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.இதற்கு காரணம், அரசு தரப்பு வக்கீல் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை என்பதுதான். எனவே அடுத்த விசாரணைக்கு முன்பாக அரசு தரப்பு வக்கீலை நியமனம் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஹைகோர்ட், கர்நாடக அரசுக்கு நோட்டீசும் அனுப்பியது.எனவே ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே எடுப்பதற்கு ஒரு வாரம் காலதாமதம் ஆகும் நிலை உருவானது. இதனால் அதிர்ச்சியடைந்த ராம் ஜெத்மலானி, குமார் உள்ளிட்ட ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள், அதிரடியாக ஒரு வேலையை செய்தனர்.அதாவது, சட்ட விதி 389 (1)படி அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த முடியும் என்பதை சுட்டிக் காண்பித்து கர்நாடக ஹைகோர்ட் பதிவாளர் ஜெனரல் பி.என்.தேசாயிடம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 10 வருடங்களுக்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஜாமீனில் வெளியேவிட கோரும்போதுதான், அரசு தரப்பு பதில் தேவை.எனவே ஜெயலலிதா வழக்குக்கு அந்த விதிமுறை பொருந்தாது. அரசு வக்கீல் இல்லாமலேயே, அவசர வழக்காக கருதி நீதிமன்றம் தனது விசாரணையை நடத்த வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பதிவாளர் ஜெனரல் தேசாய், கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் தொடர்பான வழக்கு என்பதை கருத்தில் கொண்ட தலைமை நீதிபதியும், செவ்வாய்க்கிழமை (நாளை) ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு அமர்வு விசாரிக்க உத்தரவிட்டார். அரசு வக்கீல் இல்லாமலேயே ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. நீதிபதி ரத்னகலாதான் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளார். தற்போது உள்ள நிலவரம், சட்ட விவரங்களைப் பார்த்தால், அநேகமாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது.

29 செப்டம்பர் 2014

மகிந்தவின் அமைச்சர்கள் ஐ.தே.கட்சியில் இணையவுள்ளனராம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சியில் இணையும் முதல் நடவடிக்கையாக இது இருக்கும் எனவும் மேலும் சுமார் 25 அமைச்சர்கள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அந்த தகவல்கள் கூறின. இவர்கள் ராஜபக்ஷவினருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை மாத்தளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹார,அரசாங்கத்தை சேர்ந்த 5 முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக கூறியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டு வரும் ஐக்கியம் காரணமாக இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடியதாகவும் அலுவிஹார குறிப்பிட்டிருந்தார். எனினும், அவர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.

28 செப்டம்பர் 2014

முதல்வருக்கு எதிரான தீர்ப்பிற்கு ஜெத்மலானி கண்டனம்!

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்கா தீர்ப்பளித்ததற்கு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் போது ராம்ஜெத்மலானியே அவருக்காக ஆஜராகி வாதாடக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளதாவது: ஜெயலலிதான மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அரசியல் எதிரிகள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மேன்மை மிக்க வழக்கறிஞர்களால் ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. நீதிபதி குன்கா ஊழல் தடுப்புச் சட்டப்படி தீர்ப்பு வழங்கவில்லை. அதுவும் ஜெயலலிதாவுக்கு அபராதம் விதித்தது சட்டத்தின் எல்லையை மீறிய செயல். நீதிபதி குன்கா நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டார். அவர் ஊழல் தடுப்பு சட்டவிதிகளின்படி தீர்ப்பை வழங்கவில்லை. அபராதம் விதித்ததில் நீதித்துறை கோட்பாடுகளை குன்கா மீறிவிட்டார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை நான் எதிர்க்கிறேன்.இவ்வாறு ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார். ஜெ. வழக்கில் ஆஜராகிறார்? இதனிடையே கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளார். அப்போது ஜெயலலிதா சார்பில் ராம்ஜெத்மலானியே ஆஜராகி வாதாடக் கூடும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

26 ஆகஸ்ட் 2014

மைத்திரியை உளவு பார்த்தார் கோத்தா!

அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவை வேவுபார்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவினால் அனுப்பப்பட்ட நபரை அமைச்சர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆளும்கட்சி வட்டாரங்களில் பெரும்பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரை கோத்தபாய அமைச்சரை வேவு பார்ப்பதற்காக அவரின் மெய்ப்பாதுகாப்பு வட்டத்திற்குள் புகுத்தியுள்ளார்.
அமைச்சரின் மெய்ப்பாதுகாப்பு பிரிவில் சில காலம் பணியாற்றிய இந்த நபர், அமைச்சரின் நடவடிக்கைகள், அவரை சந்திக்க வருபவர்கள் அவரது நண்பர்கள் குறித்த விபரங்களை நாளாந்தம் வழங்கிவந்துள்ளார். இதற்காக அந்நபரிற்கு 50.000 வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அமைச்சரினால் பிடிக்கப்பட்டதும் அந்நபர் சகல உண்மைகளையும் கக்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஏனைய பல மூத்த அமைச்சர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பிரிவினர் குறித்து மாத்திரமல்லாமல் ஏனைய பணியாளர்கள் குறித்தும் அச்சம் தோன்றியுள்ளது. தங்களிடம் பணி புரிபவர்களில் எத்தனை பேர் கோத்தாவின் விசுவாசிகள் என்ற மறைமுக கணக்கெடுப்பை அவர்கள் ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

25 ஆகஸ்ட் 2014

விஜயும் முருகதாசும் லைகாவினரால் மிரட்டப்பட்டார்களாம்?

இப்படி ஒரு கதை சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. கத்தி படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து லைகா நிறுவனம் விலகிக் கொண்டால் போதும், சிக்கலின்றி படம் வெளியாகும் என்பதுதான் படத்தின் தற்போதைய நிலை. அதாவது கிளம்பியிருக்கும் எதிர்ப்பு என்பது கத்தி படத்துக்கு எதிரானதுதான். நடிகர் விஜய்க்கோ, இயக்கநர் ஏ ஆர் முருகதாசுக்கோ எதிரானதல்ல என்று தெளிவாக்கியுள்ளனர் போராட்டக்காரர்கள்.எனவே படத்தை லைகாவிடமிருந்து ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்குக் கைமாற்றிவிட விஜய்யும் முருகதாசும் பெரும் முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்கு லைகாகாரர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாமும் கடந்த சனிக்கிழமை செய்தி வெளியிட்டோம். இப்போது இன்னொரு கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அதாவது படத்திலிருந்து லைகாகாரர்கள் விலக மறுத்ததோடு நில்லாமல், விஜய், முருகதாஸ் தங்களுடன் போட்டுள்ள ஒப்பந்தங்களைக் காட்டி மிரட்டினார்களாம். படத்தில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது நாங்கள்தான். உங்களுக்கு கேட்ட சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது, என்றார்களாம். இந்தப் படம் குறித்தும், இதுபோன்ற செய்திகள் குறித்தும் தெளிவாக விஜய்யும் முருகதாஸும் லைகாகாரர்களும் தெளிவுபடுத்தும் இதுபோன்ற கதைகள் தொடரும் போல் தெரிகிறது!

24 ஆகஸ்ட் 2014

பாஜக ராஜபக்ஷவுக்குத்தான் விசுவாசமாக உள்ளது!

தமிழர்களை விட ராஜபக்சேவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் - நல்லகண்ணுஈழத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை விட ராஜபக்சேவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார். மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில மாநாடு தூத்துக்குடி நற்செய்தி நடுவம் மையத்தில் வைத்து நடந்தது. இதில் கலந்து கொண்ட இகம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் விவகாரத்தில் பாஜக அரசு ஐநா தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியண் சுவாமி மற்றும் சிலர் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர். பாஜக தலைவர்கள் தமிழர்களை விட ராஜபக்சேவுக்குதான் விசுவாசமாக உள்ளனர். இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காங் கட்சியின் கொள்கையை தான் பாஜக பி்ன்பற்றுகிறது. இகம்யூ கட்சியை பொறுத்தவரை இலங்கை தமிழர்கள் சுய கவுரவத்துடன் வாழ தொடர்ந்து குரல் கொடுக்கும்.
தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டும் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. கடைசி பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து போராட விடாமல் மக்கள் சாதி, மதம், மற்றும் இனத்தின் பெயரால் பிரிக்கப்பட்டு வருகின்றனர். தென் மாவட்டத்தில் சாதாரண மனிதராக இருந்த ஒருவர் தாது மணல் விற்று இன்று கோடீஸ்வரராக வலம் வருகிறார். தாது மணல் உள்ளிட்ட கனிம வளத்தையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க தவறினால் வருங்கால வாரிசுகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றார் நல்லகண்ணு.

23 ஆகஸ்ட் 2014

மோடி கூட்டமைப்பினரை சந்தித்தார்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பு இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் அமுல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கூட்டமைப்புப் பிரதிகள் அவரைச் சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

22 ஆகஸ்ட் 2014

லைகாவின் பெயரை நீக்கி புதிய பெயரில் "கத்தி"விளம்பரம்!

கத்தி படத்தின் பிரச்சினையை, சீமான் ஆலோசனைப்படி மெல்ல தீர்த்துவிட முடியும் என நம்புகிறார்கள் முருகதாஸ் அன்ட் கோ. சீமானின் ஆலோசனைப்படி, லைகா நிறுவனத்தின் பெயரை மட்டும் தூக்கிவிட்டு படத்தை வெளியிடலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர்.லைகாவுக்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தை தயாரிப்பாளராக்கியுள்ளார்கள். லைகா போட்ட பணத்தை எப்படி செட்டில் செய்தார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. அந்த செட்டில்மென்ட் முடிந்ததா அல்லது எதிர்ப்புகளைச் சமாளிக்க பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு, சைலன்ட் தயாரிப்பாளர்களாக லைகாகாரர்கள் தொடர்கிறார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும். லைகா வெளியேறிவிட்டது என்பதைக் காட்டும் வகையில், இன்று மாலை கத்தி படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிடவிருக்கிறார்கள். அதில் லைகாவுக்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் கத்தி என்ற மாற்றத்தைச் செய்துள்ளார்களாம். மாலை 6 மணிக்கு மேல் கத்தி புதிய போஸ்டர் வெளியாகும் எனத் தெரிகிறதது.

21 ஆகஸ்ட் 2014

புங்குடுதீவு நபர் நஞ்சருந்தி தற்கொலை!

களவு மற்றும் கொள்ளை ஆகிய குற்றச் செயல்கள் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நஞ்சு விதையொன்றை உண்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்றுறையில் உள்ள பொலிஸார் தெரிவித்தனர் என அறியவருகிறது.
புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசநாயகம் றொனாட்றீகன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை (20) மதியம் நஞ்சு விதையொன்றை உட்கொண்ட இவர் உடனடியாக புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு புதன்கிழமை (20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர் மேலும் கூறப்பட்டுள்ளது.

20 ஆகஸ்ட் 2014

கத்தி,புலிப்பார்வைக்கு தமிழக அரசு தடை விதிக்கக்கூடும்!

சர்ச்சைக்குரிய புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. வேந்தர் மூவிஸின் புலிப்பார்வை திரைப்படம், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகனை சிறார் போராளியாக சித்தரிக்கிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனமானது எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கு சொந்தமானது. இக்குழுமம் இலங்கையிலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதேபோல் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை தயாரிக்கிறது.இந்த இரு படங்களையும் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று 65 இயக்கங்களின் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள் கலந்து கொண்டன. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை வெளியிடக் கூடாது என்ற கோரிக்கையை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை வெளியிட்டால் அனைத்து இயக்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இப்படி விஸ்வரூபமெடுத்திருக்கும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கத்தி மற்றும் புலிப் பார்வை திரைப்படங்களுக்கு அதிரடியாக தமிழக அரசு தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

19 ஆகஸ்ட் 2014

பாலகியை துஷ்பிரயோகம் செய்த அரக்கன் கைது!

கடைக்குச் சென்ற 5 வயதுச் சிறுமியை கடைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்,உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 50 வயதான வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் நேற்று யாழ்.சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்ற நீதிவான் கறுப்பையா ஜீவராணி உத்தரவிட்டார். கடைக்குச் சென்ற சிறுமி வீட்டுக்குத் திரும்பிவர தாமதமானதை அடுத்து அதற்கான காரணம் குறித்து சிறுமியின் தாய் கேட்டுள்ளார்.
இதன்போதே தன்னிடம் கடைக்காரர் நடந்து கொண்ட விதம் குறித்து சிறுமி எடுத்துக் கூறியுள்ளார். இதனையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான குறித்த பெட்டிக்கடை உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

18 ஆகஸ்ட் 2014

தம்பாட்டி மக்களுக்கு நீர் விநியோகம்!

தம்பாட்டி மக்களுக்கு நீர் விநியோகம்!வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஊர்காவற்றுறை தம்பாட்டி கிராமத்துக்கான குடிதண்ணீர் விநியோகம் இன்று திங்கட்கிழமைமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் நிலவும் வழமைக்கு மாறான வரட்சியால் பல்வேறு இடங்களிலும் குடிதண்ணீருக்குக் கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. உள்ளூராட்சி மன்றங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகள் குடிதண்ணீர் வழங்கலை பவுஸர்கள் மூலம் மேற்கொண்டு வந்தபோதும் குடிநீருக்கான தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த நிலையில் அண்மையில் வடமாகாண விவசாய அமைச்சில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுடன் குடிதண்ணீர் வழங்கலை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் உள்ளூராட்சி மன்றங்கள் மேற்கொள்ளும் குடிதண்ணீர் வழங்கும் சேவைக்கு மேலதிகமான உதவி தேவைப்படின் அதனை வடக்கு மாகாண விவசாய அமைச்சு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே தம்பாட்டி கிராமத்துக்கு பவுஸர்கள் மூலம் நீர் வழங்கும் திட்டத்தை வடமாகாண விவசாய கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஊர்காவற்துறை பிரதேசசபையுடன் இணைந்து ஆரம்பித்துள்ளது. தம்பாட்டி கிராமத்துக்கான நீர்வழங்கும் நிகழ்வு அக்கிராமத்தின் பொதுநோக்கு மண்டபத்தில் சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்களான பா.கஐதீபன், விந்தன் கனகரட்ணம், இ.ஆர்னல்ட், ஊர்காவற்துறைப் பிரதேசபையின் செயலாளர் என். சுதர்ஐன், தம்பாட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் அ.அன்னராசா, நீர் வழங்கல் திட்டத்துக்கு நிதி உதவி வழங்கிய அன்பே சிவம் அமைப்பின் வடகிழக்கு மாகாண இணைப்பாளர் கு.குமணன் உட்பட கிராமத்து மக்களும் கலந்துகொண்டனர்.