புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஊழல் மோசடியில் சிக்கி உயிரைக் காப்பாற்ற தப்பியோடி வந்தவர் தான் கருணா என்று சிறீலங்காவின் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மல்வத்த அஸ்கிரிய பீட மகாநாயக்கவை நேற்று சந்தித்த பின்னர் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்.“கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இயங்க முடியாமல் தப்பியோடியவர். விடுதலைப் புலிகளிடம் ஊழல் மோசடிகளில் சிக்கி, பிரபாகரனினிடம் இருந்து உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி வந்த மனிதனாகும். பிரபாகரனுடன் ஒன்றாக வாழ்ந்த நபர் என்றாலும், அவரால் பிரபாகரனின் வீடு இருந்த இடத்தையேனும் கூறமுடியவில்லை. எங்கள் இராணுவத்தினர் தான் புதுக்குடியிருப்பில் வீட்டை கண்டுபிடித்தார்கள். அவரை வீரனாக்கியது மஹிந்த ராஜபக்ச தான்” என தமிழின அழிப்பில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.29 ஜனவரி 2017
ஊழல் செய்து புலிகளிடமிருந்து தப்பி வந்தவர்தான் கருணா!
புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஊழல் மோசடியில் சிக்கி உயிரைக் காப்பாற்ற தப்பியோடி வந்தவர் தான் கருணா என்று சிறீலங்காவின் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மல்வத்த அஸ்கிரிய பீட மகாநாயக்கவை நேற்று சந்தித்த பின்னர் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்.“கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இயங்க முடியாமல் தப்பியோடியவர். விடுதலைப் புலிகளிடம் ஊழல் மோசடிகளில் சிக்கி, பிரபாகரனினிடம் இருந்து உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி வந்த மனிதனாகும். பிரபாகரனுடன் ஒன்றாக வாழ்ந்த நபர் என்றாலும், அவரால் பிரபாகரனின் வீடு இருந்த இடத்தையேனும் கூறமுடியவில்லை. எங்கள் இராணுவத்தினர் தான் புதுக்குடியிருப்பில் வீட்டை கண்டுபிடித்தார்கள். அவரை வீரனாக்கியது மஹிந்த ராஜபக்ச தான்” என தமிழின அழிப்பில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.26 ஜனவரி 2017
பொறுக்கி சு.சுவாமி பின்கதவால் ஓட்டம்!
24 ஜனவரி 2017
வடமராட்சி இளைஞர் ஆபிரிக்காவில் அடித்துக்கொலை!
சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வருடம் புறப்பட்டுச் சென்ற கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞன், மேற்கு ஆபிரிக்காவில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான சியாராலியோனிலேயே இந்தக கொலை இடம்பெற்றுள்ளது.யுத்தத்தின் போது, காலொன்றை இழந்த இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக முகவரொருவர் மூலம் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளார். இவர்களை அழைத்துச் சென்ற முகவர், ஆபிரிக்காவின் கடற்கரைப் பிரதேசத்தில் இவர்களைத் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, கடந்த 3 நாட்களுக்கு முன் குறித்த இளைஞன் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த இளைஞனின் நண்பர், கரவெட்டியிலுள்ள அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவ்விளைஞன் உயிரிழந்துள்ளதாக பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். குறித்த இளைஞன் போன்று பல இளைஞர்கள் அம்முகவரினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வருவதாக குறித்த பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த சுப்பையா சண்முகம் ஆகியோருக்கு 16 இலட்சம் ரூபாய் பணம் வழங்கியே தமது மகன் சுவிற்ஸர்லாந்துக்கு செல்வதற்காக ஆபிரிக்காவுக்கு சென்றுள்ளார். மேலும் பணம் கேட்டு மகனை துன்புறுத்தியதால் அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவனை தாக்கிக் கொன்று விட்டார்கள். மேலும் தற்போது 15 இலட்சம் ரூபாய் பணம் தந்தாலே அவனுடைய சடலத்தைத் தருவோம். அல்லாவிட்டால் தரமாட்டோம் என தற்போது எம்மை மிரட்டுகின்றனர் என்று இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
23 ஜனவரி 2017
வெட்ட வெளிச்சமான தமிழ்நாடு பொலிஸாரின் வன்முறை வெறியாட்டம்!
மிகவும் கேவலமான முறையில் தமிழ்நாடு பொலிஸ் நடந்துகொண்டிருக்கிறது.தமிழக மாணவர்களின் அமைதி வழிப்போராட்டம் உலகத்திற்கே அறப்போர் என்றால் இதுதான்
என்பதை உணர்த்தி தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்திருக்கும் இத்தருணத்தில்,உலகிலேயே மிகவும் கேவலமான காவல்துறை தமிழக காவல்துறைதான் என்பதும் இன்றைய தினம் பதிவாகி இருக்கிறது.மக்கள் மீது கற்கள்,பொல்லுகள் கொண்டு தாக்குவதும்,வீடுகள்,கட்டிடங்கள்,வாகனங்கள் எரியூட்டப்படுவதும்,கர்ப்பிணிப்பெண்கள்,மூதாளர்கள் என்று கூட பாராமல் அவர்களையும் தாக்கி மிகவும் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு பொலிஸ்.மாபெரும் வன்முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு மாணவர்கள் மீது பழியைப்போட போட முற்பட்டு மானம்கெட்டுப் போய் நிற்கிறது தமிழ்நாடு பொலிஸ்.பொலிஸார் வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் காணொளி ஆதாரங்களாக வெளியாகி உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாக புகைப்படம் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.இளம் பெண்கள்மீது பாலியல் வெறியாட்டங்களிலும் இந்த காடைக்கூட்டம் ஈடுபட்டதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.21 ஜனவரி 2017
உயிரையும் கொடுக்க தயார்-ஜனநாயக போராளிகள் கட்சி!
”கடந்த கால கசப்பான அனுபவங்களை ஓர் படிப்பினையாக எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் நாம், சொகுசு வாகனங்களும் சுகபோக வாழ்க்கைக்கும் அடிமையானவர்களிடம் இனிமேலும் ஏமாறத் தயாரில்லை என்பதனை இடித்துரைக்க கடமைப்பட்டுள்ளோம். எம் அன்பு உறவுகளே நாம் ஒன்றிணைவோம். எம் தமிழ் இன துரோகிகளை வீட்டுக்கு அனுப்புவோம். உங்களுக்காக உயிரையும் கொடுக்க எமது அணி தயாராகவே உள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வித்துக்களை எம் மண்ணில் விதைத்துள்ளோம். இவ் விதைகள் துளிர்விடும் காலம் மலர்ந்துள்ளது. அதன் விழுதுகளாக நாமிருப்போம்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தலாம். போராளிகள் என்பவர்கள் பெறுமதியானவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு இணக்கப்பாட்டடை ஏற்படுத்தி அதனூடாகத்தான் நிலையான சமாதானத்தை உருவாக்கவேண்டும். அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு எங்களுடைய அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக அடுத்த கட்ட நகர்வை ஏற்படுத்துவோம்” என இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
09 ஜனவரி 2017
வேலணையில் மாணவி நீரில் மூழ்கி மரணம்!
வேலணை கிழக்கு மகாவித்தியாலய மாணவி குளத்தில் மூழ்கி சாவடைந்துள்ளார்.வேலணைமேற்கு 6ம் வட்டாரம் நாவலர் சனசமூக நிலையத்திற்கு அண்மையில் வசித்துவரும் சுரேஸ் அவர்களின் மகள் வினோதா (வயது 17) என்பவர் இன்று காலை10.45மணியளவில் தனது தாயார் சகோதரிகள் மற்றும் மைத்துனியார் உடன் சேர்ந்து வீட்டுக்கு அயலிலுள்ள சங்கத்தார் கேணிக்குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி சாவடைந்துள்ளார்.
இவர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில்கல்வி கற்று 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் கா.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:முகநூல்-வேலணை மண்ணின் மைந்தர்கள்.
05 ஜனவரி 2017
கொளத்தூர் மணியை சந்தித்த ஸ்டாலின்,அதிர்ச்சியான வீரமணி!
| ஸ்டாலினுடன் கொளத்தூர் மணி |
| ஸ்டாலினுடன் வீரமணி |
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)