09 மே 2010

புதிய ஆணைக்குழு அமைக்கும் சிறிலங்காவின் அறிவிப்பு,சர்வதேச விசாரணையை திசைதிருப்பும் முயற்சி!



தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் சர்வதேச மரபுகள் மீறப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கம் புதிய ஆணைக்குழுவொன்றை அமைக்கும் திட்டமானது சுயாதீனமான சர்வதேச விசாரணையொன்றை திசை திருப்புவதற்கான மற்றொரு முயற்சியென மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சித்துள்ளது.அத்துடன், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவொன்றின் மூலம் உறுதிப்படுத்துவதற்கு ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:.இலங்கை விவகாரம் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் நிபுணர் .குழுவொன்றை அமைப்பதை தடுப்பதற்கு பல மாதகால பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம்' தொடர்பான ஆணைக்குழு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி வுற்ற பின்னர், சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் சாட்டுகள் குறித்து அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என உறுதியளிக்கும் ஆவண மொன்றில் பான் கீ மூனுடன் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ கையெழுத்திட்டார். ஆனால், காத்திரமான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட வில்லை.."பொறுப்புடைமை தொடர்பாக சர்வதேச சமூகம் குரல் எழுப்பும் ஒவ்வொரு தடவையும் இலங்கை நீண்டகாலத்தை எடுத்துக்கொண்டு, எதையும் சாதிக்காத ஓர் ஆணைக்குழுவை அமைக்கும்' என மனித உரிமைகள் கண்காணிப்பதற்கனான ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார். யுத்த விதி மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு கடந்த நவம்பர் மாதம் அமைக்கப்பட்ட குழு கண்டறிந்த விபரங்களை வெளியிடுவதற்கு 2010 ஆண்டு ஆண்டு ஏப்ரல் மாதம் கால எல்லையாக நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் இன்னும் அதை வெளியிடவில்லை. அக்குழு அமைக்கப்பட்ட போது அது பொறுப்புக்கூறுவதை தவிர்த்துக்கொள்வதற்கான வெறும் கண்துடைப்பே என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருந்தது. ஐ.நா.வின் மதிப்பீட்டின்படி 2009 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 7000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 13000 பேர் காயமடைந்துள்ளனர். வேறு சில மதிப்பீடுகள் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. அரசாங்கப் படையினரால் மீறல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை..ஜனாதிபதி உட்பட அரசாங்கத் தரப்பினர் மீண்டும் மீண்டும் வலியுறுதியுள்ளனர். ஆனால் பொறுப்புடைமையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்த்தபுஷ்டியான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மே 6 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் மோதல்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பாகவும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் ஆணைக்குழுவொன்றை அமைக்கப்போவதாக அறிவித்தது..சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுகள் மீறப்பட்டமை தொடர்பாகவும் அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் தொடர்பாக வும் அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் தொடர் பாகவும் ஆராயப்படும் என அரசாங்க இணை யத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையின் கிரிமினல் சட்டத்தின்படி அத்தகைய சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் தொடர்பாகவோ இலங்கை அல்லது சர்வதேச சட்டங்களை மீறியவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தோ அதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அரசாங்க அறிக்கையின்படி இந்த ஆணைக்குழுவில் 7 இலங்கையர்கள் இடம்பெறுவர். ஆனால் சர்வதேச பங்களிப்பு எதுவும் இல்லை. மோசமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குற்றமிழைத்தவர்களை மன்னித்தல் தொடர்பான சர்வதேச விமர்சனங்களை திசை திருப்புவதற்காக இத்தகைய ஆணைக்குழுக் களை அமைக்கும் நீண்டகால வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரமடைந்ததிலிருந்து குறைந்த பட்சம் 10 ஆணைக்ழுக்களை அமைத்துள்ளது. ஆனால் அவற்றில் எதுவும் குறிப்பிடத்தக்க பெறுபேற்றை ஏற்படுத்தவில்லை. .இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் பாரிய மனித உரிமை மீறல் சம்பங்கள் குறித்து விசாரிப்பதற்கு 2006 ஆம் ஆண்டு நவம்பர் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முற்றிலும் தோல்விகரமானதாக இருந்தது. சர்வதேச நிபுணர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆணைக்குழுவொன்று விசாரணைகள் வெளிப்படையாகவும் சர்வதேச முறைமைகளுக்கு ஏற்ற வகையிலும் இல்லாததால் 2008 ஆம் ஆண்டு இராஜினாமாச் செய்தது. .குறிப்பிடப்பட்ட 16 மனித உரிமை மீறல் சம்பவங்களில் 7 சம்பவங்கள் தொடர்பாக மாத்திரம் அக்குழு விசாரணை நடத்தியிருந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்த ஆணைக்குழுவை கலைத்தார். அதன் அறிக்கையை ஜனாதிபதி வெளியிடவில்லை. பான் கீ மூன் இலங்கை விவகாரம் தொடர்பாக தனக்கு ஆலோனை வழங்குதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிக்கும் முயற்சியைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் பல வாரகாலம் மேற்கொண்ட முயற்சிகளின் பின்னர் புதிய ஆணைக்குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


மகிந்தவால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் திஷ்ஷநாயகம் எங்கே?



ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகம், எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திஸ்ஸநாயகத்தின் தந்தையாரை இது தொடர்பில் கேட்டபோது, திஸ்ஸநாயகம் தம்முடன் தங்கியிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். அவரை நீண்ட நாளாக தாம் காணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸநாயகத்தின் சட்டத்தரணிகளும் இது தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க மறுத்துவருகின்றனர்.
இந்தநிலையில் அவர் பாதுகாப்புடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திஸ்ஸநாயகத்தின் மனைவி ரொனாட் தற்போது வெளிநாடு ஒன்றில் இருக்கும் நிலையில் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என ஆங்கில வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த வார நாடாளுமன்ற அமர்வின் போது கருத்துரைத்த உறுப்பினர்கள் பலரும் திஸ்ஸநாயகத்திற்கு காலம் தாழ்த்தியே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
திஸ்ஸநாயகம், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2009 ஆகஸ்ட் 31 ஆம் திகதி 20 வருட கடுழிய சிறைத்தண்டனைக்கு ஆளானார்.
எனினும் மேன்முறையீட்டின் கீழ் பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

08 மே 2010

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாடு கடந்த அரசின் மீள் வாக்குப் பதிவு.


இக் கட்டுரையில் நாம் நாடுகடந்த அரசாங்கத்திற்கு பாதகமாக எதையும் எழுதவில்லை. மாறாக அங்கு நடைபெறும் சில தவறுகளையும், பலவீனங்களையும் மற்றும் ஒற்றுமையின்மை என்பனவற்றையே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். காலத்தின் தேவை கருதி இக் கட்டுரை எழுதப்படுகிறது.

கடந்த மே மாதம் 2ம் திகதி உலகளாவிய ரீதியில் நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல்கள் நடைபெற்றன. மே 18ம் திகதிக்கு முன்னதாக அதன் முதல் அமர்வு ஜெனீவாவில் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. இருப்பினும் தற்போது தேர்தல்களில் முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடாவில் உள்ள சில தொகுதிகளில் மீள் தேர்தல் நடைபெற உள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்குழு அறிவித்துள்ளது. பிரித்தானியாவைப் பொறுத்தவரை காலநிலை சீர்கேடு, பிரயாண இடைஞ்சல் மற்றும் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.

தற்போது மீள் தேர்தலை வைக்க நாடுகடந்த அரசு முற்படுவதனால், மே 18க்கு முன்னதாக அதன் அமர்வு இடம்பெறாது, பெரும் பொருள் விரயம், மற்றும் பொதுமக்களுக்கு சிரமங்களைக் கொடுக்கவே ஏதுவாக இது அமையும். தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என்பது தேர்தல் ஆணையகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஒரு தேர்தல் நிலையத்தில் நடந்த முறைகேட்டிற்காக, அம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்தல் முடிவுகளையும் ரத்துச் செய்வது ஏன் என்ற கேள்விகள் மக்களால் முன்வைக்கப்படுகின்றன.

அத்தோடு விடுதலைப் புலிகளுக்கு அல்லது தமிழ் தேசியத்திற்கு ஆதரவான பலர் இத் தேர்தலில் தெரிவானதன் காரணமாகவே, நாடுகடந்த அரசானது சில இடங்களில் மீள் தேர்தல்களை நடாத்துகிறது என பலராலும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதன் மூலம் நாடுகடந்த அரசாங்கத்தின்மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இழக்கப்படக்கூடும். நடைபெற இருக்கும் மீள்தேர்தலில் மக்கள் அதிக நாட்டம் காட்டாமல் இருக்கும் நிலை தோன்றலாம்.

ஜனநாயக விழுமியங்களை மனதில் கொண்டு நடைபெற்ற முறைகேடுகளுக்காக திரும்பவும் ஒரு மீள் தேர்தலை தாம் வைப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசானது கூறிக்கொண்டாலும், கள்ள ஓட்டுகள் அல்லது, முறைகேடுகள் நடைபெறுவதை இவர்கள் முதலிலேயே தடுத்திருக்கவேண்டும். வாக்குச் சீட்டுகள் வேற்றின கண்காணிப்பாளர்களால் தேர்தல் நிலையங்களில் வழங்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம். அப்படி இருக்கும்போது இதில் முறைகேடுகள் ஏதும் இடம்பெற்றிருப்பின் அதனைத் தவிர்த்து, மீதமுள்ள சரியான வாக்குகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவித்திருக்கலாம் என்பதே பலரது கருத்தாக அமைகிறது.

அத்தோடு இத் தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றன என்று தொடர்ந்தும் பரப்புரைகளை மேற்கொள்வது, சிங்கள அரசின் வாய்க்கு நாமே அவல்பொரி போடுவது போல அமைந்துள்ளது. இதை அவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, சர்வதேச அரசுகளிடம் நாடுகடந்த தமிழீழ அரசின் நன்மதிப்பை குறைக்கமுடியும். முதலில் நாம் சுதந்திரத் தமிழீழம் மற்றும் சுயாட்சி, தமிழரின் இறையாண்மை என்பனவற்றிற்காகப் போராடுகிறோம் என்பதை நினைவுகூருங்கள். ஒற்றுமையாக நாம் செயல்பட, அதன் அவசியத்தை உணருங்கள்.

தனி நபர் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை விடுத்து, எமது இலக்கை அடைய பாடுபடுங்கள். தேர்தல் காலங்களில் சில இணையத்தளங்கள், தவிர்க்கப்படவேண்டிய வேட்பாளர்கள், ஆதரிக்கப்படவேண்டிய வேட்பாளர்கள் இவர் இவர் என படத்துடன் செய்திகளை வெளியிட்டன. அந்த இணையங்கள் யார் இதைச் சொல்ல? மக்கள் தான் முடிவெடுக்கவேண்டும் யாருக்கு வாக்களிப்பது என்று. அதனை தமிழ் மக்கள் செவ்வனவே செய்து முடித்துள்ளார்கள். சில இணையங்கள் தவிர்க்கப்படவேண்டிய வேட்பாளர்கள் என்று பட்டியலிட்ட அனைவரும் இத் தேர்தலில் வெற்றியடைந்துள்ளனர். இதில் இருந்து ஒன்று தெளிவாகப் புலப்படுகிறது. மக்கள் தெளிவாக உள்ளார்கள்.

பிரான்ஸ் மீள் தேர்தல், மற்றும் கனடாவில் மீள் தேர்தல் என்பன குறித்து நன்கு ஆராய்வது நல்லது. பிரித்தானியாவில் தென் மேற்கு தொகுதி, மற்றும் வெளிமாவட்ட தொகுதியில் மீள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்குழு நல்லதொரு முடிவை எடுக்கவேண்டும். விடுதலைப் புலிகள் குறித்து பல விமர்சனங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் உள்ள மக்களால் முன்வைக்கப்பட்டாலும், அவர்களின் ஒழுக்கம் குறித்தும் கட்டுப்பாடுகள் குறித்து பல வெளிநாட்டவர்களே வியந்துள்ளார்கள். குறிப்பாக மதுபானம், சிகரெட் போன்ற பழக்கவழக்கங்கள் முற்றாகத் தடைசெய்யப்பட்டிருந்தன. அவர்கள் வழியில் வந்த நாம், அதன் தலைமையை ஏற்றுச் செயல்படும் நாம் எவ்வாறு கட்டுக்கோப்போடு இருக்கவேண்டும் என்பதை ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

தேசிய தலைவரது கனவும், மாவீரரின் எண்ணங்கள் என்பனவும் செயல்வடிவம் பெறவேண்டும். குறுகிய மனப்போக்கை கைவிட்டு, புலம்பெயர் மக்களின் பலம் நிரூபிக்கப்படவேண்டும். நாடுகடந்த அரசாங்கம் உருவாகி அது போர்க்குற்ற விசாரணைகளை முடக்கிவிடவும், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிக்க சர்வதேச அரசாங்கங்களுக்கு அழுத்தத்தை கொடுக்கவேண்டும். தமிழர்களின் ஒரு அதி உச்ச அரசியல் பீடமாக உள்ள நாடுகடந்த தமிழீழ அரசு, தனது பணியைச் செவ்வனவே செய்யவேண்டும். அனைத்துத் தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும். இதன் மூலமே ஒரு ஜனநாயக நீரோட்டத்தில் நாம் இணைந்து எமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். மக்கள் ஆணை மதிக்கப்படவேண்டும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பாகும் என்ற சொல்லுக்கமைவாகச் செயல்பட்டு வெற்றியடையவேண்டும்.


கலங்க வைக்கும் கருப்பு "மே"நினைவுகள்-புகழேந்தி தங்கராஜ்.








மும்பையில் சுமார் 170 பேர் கண்மூடித்தனமாகக் கொன்றுகுவிக்கப்பட்ட வழக்கில், அஜ்மல் கசாப்புக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்- என்பதுதான் வட இந்தியத் தொலைக்காட்சிகளின் இந்தவார ஹாட் டாபிக். கல்லால் அடித்துக் கொல்லலாம், சித்திரவதை செய்து கொல்லலாம், அப்படியே தூக்கில் போடலாம் - என்றெல்லாம் சகட்டு மேனிக்கு ஆலோசனைகள். ஆஹா... இதுவல்லவோ நாட்டுப்பற்று என்று மெய்யாலுமே மெய்சிலிர்க்கிறது! வட இந்தியத் தொலைக்காட்சிகள் என்று குறிப்பிடுவதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. சென்ற ஆண்டு ஜனவரி முதல் மே வரை, தமிழ்நாட்டிலிருந்து இருபத்தாறே மைலில் ஒருலட்சம் தமிழர்கள் விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டபோது, கள்ளத்தனத்துடன் கண்மூடிக் கொண்டிருந்தவை இந்தத் தொலைக்காட்சிகள். மே 18-ம் தேதி மட்டும் அவசர அவசரமாகக் கண்-விழித்துக்கொண்ட இந்த உண்மை மறைப்பு சாதனங்கள், சிங்கள வெறியர்கள் ராஜபக்ஷேவும் பொன்சேகாவும் கொடுத்த ஒரு வீடியோ காட்சியை மீண்டும் மீண்டும் காட்டி, பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவித்தன. ஒருலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது என்ன கிழித்துக் கொண்டிருந்தீர்கள்- என்று நம்மால் கேட்க முடியவில்லை. நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த ஒரு முதலமைச்சரிடமே கேட்கமுடியாத ஒரு கேள்வியை இந்த செய்தி வியாபாரிகளிடம் நாம் எப்படிக் கேட்டிருக்கமுடியும்? கண்ணெதிரிலேயே விரட்டி விரட்டிக் கொல்லப்பட்டார்கள் ஒரு லட்சம் பேர். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராக ஓடினார்கள். ஒரே நாளில் ஓடிவிடவில்லை. வாரக் கணக்கில் மாதக் கணக்கில் ஓடிக்கொண்டே இருந்தார்கள். அவ்வளவு நாளும் மத்திய மாநில அரசுகள் மயக்கத்தில்தான் இருந்தன, தொலைக்காட்சிகள் தூக்கத்தில் தான் இருந்தன. இந்தக் கொதிப்பை ஊசி-முனையளவு கூட உணராமல், 170 பேருக்காகப் பதறித் துடிப்பதுதான் இந்தியா என்றால், நான் யார் என்கிற கேள்வி எழுமா எழாதா? கலைஞரே கொதித்து எழுந்து, ‘ஒருமைப்பாடு என்பது ஒருவழிப் பாதை இல்லை’ என்று சொல்வாரா மாட்டாரா? விடுதலைப்புலிகள் பற்றிப் பேசினாலோ, பிரபாகரன் பெயரைக் குறிப்பிட்டாலோ, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்று பீதி கிளப்பிக் கொண்டிருந்தவர்களே, தேசிய ஒருமைப்பாடு குறித்து வேதனையுடன் பேசும் நிலை தானாகவே தலையெடுத்திருக்கிறது. அந்த அளவுக்குப் படாதபாடு படுகிறது தேசிய ஒருமைப்பாடு. ‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’ என்ற முழக்கத்திலேயே கழிந்தது தலைவர்களின் காலம். வெற்று முழக்கங்களால் வளருமா தமிழ்? செத்துச் சுண்ணாம்பாகிக் கொண்டிருந்தது, இந்த வாய்ச்சொல் வீரர்களால். அந்த நேரத்தில், கடலின் மறுபுறம், இனவெறிக்கு இரையாகிக்கொண்டிருந்த நம் சொந்தங்களை, தங்களது தீரத்தாலும் தியாகத்தாலும் வாழவைத்தார்கள் பிரபாகரனின் தோழர்கள். இதைத் தவிர வேறு எது பிரபாகரனின் பால் தமிழகத்தை ஈர்த்திருக்குமென்று நினைக்கிறீர்கள்! இந்த ஈடுபாட்டைத் தடுக்க சோனியாவாலோ சிதம்பரத்தாலோ முடியுமா? இத்தாலியின் தலைநகர் ரோம் டெல்லியிலிருந்து 6000 மைல். சோனியாவுக்கு ராஜீவ் மீதிருந்த ஈடுபாட்டுக்கு... காதலுக்கு... இந்த 6000 மைல் தடையாயிருந்ததா என்ன! தமிழ்நாட்டுக்கும் ஈழத்துக்கும் வெறும் 26 மைல்தான். இங்கே ஊழல் அரசியலையும், குடும்ப அரசியலையும் பார்த்துப் பார்த்து வெறுத்துப்போன நமக்கு, பிரபாகரன் என்கிற ஒரு நேர்மையான வீரன் மீது இன்றுவரை ஈடுபாடு இருக்கிறதே... இந்த ஈடுபாட்டுக்கு, குறுக்கே கிடக்கிற 26 மைல் கடல் தடையாயிருந்து விடுமா என்ன!விமர்சனங்களையெல்லாம் மீறி, இந்திராகாந்தி ஒரு மாபெரும் தேசியத் தலைவர். அவரது மருமகள் என்ற தகுதி சோனியா என்கிற இத்தாலிப் பெண்மணியை இந்தியாவின் அதிகார மையமாகவே மாற்றி விட்டிருக்கலாம். காங்கிரஸின் கொத்தடிமைக் கலாசாரத்தில் இதெல்லாம் சகஜம். காங்கிரஸ்காரர்களும் சகஜத்திலேயே ஆனந்தமடைகிற சகஜானந்தாக்கள். காதலித்த ஆடவனையே மணந்துகொள்வதென்பது ஐரோப்பியக் கலாசாரத்தில் வியப்பான ஒன்றுதான். அந்த வியப்பும் மதிப்பும் நமக்கும்தான் இருக்கிறது சோனியா மீது. அதற்காக, எங்கள் சொந்தங்களைக் கொல்ல ஆயுதம் வழங்கிவிட்டு, 26வது மைலில் அவர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ‘‘அதுவேறு நாடு, இது வேறு நாடு’’ என்று எங்களுக்கு அறிவுரை வழங்க 6000 மைலுக்கு அப்பாலிருந்து வந்திருக்கும் சோனியாவின் தயவில் நடமாடும் காங்கிரஸுக்கு என்ன தகுதி இருக்கிறது? சகோதரி சோனியாவே! நீங்கள் காங்கிரஸின் தலைவரானது ஒரு விபத்து. அது நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்தியாக உங்களை மாற்றிவிட்டது என்பதை யாரும் மறுக்கமுடியாது. பெரும்பான்மை பலத்தின் அடிப்படையில், இந்த நாட்டிலுள்ள 110 கோடி பேரின் வாழ்வை நீங்கள் தீர்மானிக்கலாம். அது வரமா, சாபமா என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும். ஆனால், கடலுக்கு மறுபுறம், இந்திய எல்லைக்கு வெளியே, தங்களுடைய தாய்மண்ணில் உரிமைக்காகப் போராடினார்களே எங்கள் சொந்தங்கள்.... அவர்களைக் கொன்று குவிக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எங்கள் இனத்தின் மீது தொடுக்கப்பட்ட அராஜக யுத்தத்தாலும், ஒருலட்சம் தமிழரின் ரத்தத்தாலும் நனைந்த கருப்பு மே இது. ஒரு லட்சம் தமிழர் கொல்லப்பட்டதற்கும் சோனியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த படாத பாடுபட்டேன்- என்கிற பொய் பித்தலாட்டத்தையெல்லாம் கலைஞர் இந்தக் கருப்பு மாதத்திலாவது மூட்டை கட்டி வைக்கவேண்டும். தமிழர் பிரச்னைக்குத் தீர்வுகாண இலங்கையில் விரைவில் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்- என்ற ராஜபக்ஷேவின் அறிவிப்பெல்லாம் நீர்மேல் எழுத்து என்பதை அறியாதவரா கலைஞர்? குடும்பத்துக்குள் யார் யாருக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது என்கிற குழப்பத்துக்கிடையே இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட அவருக்கு நேரம் இல்லை என்பதுதான் உண்மை. இலங்கையில் அதிகாரப் பகிர்வு முயற்சியே காணோமே- என்று அவரிடம் கேட்டால், கடிதம் எழுதப் போவதாகச் சொல்லாமல் வேறென்னதான் அவரால் சொல்லமுடியும்? கொஞ்சம் அசந்தால் ‘பிரபாகரன் தான் பிரச்னை’ என்று முதல் ரீலிலிருந்து ஆரம்பித்துவிடுகிறார்கள். இவர்கள் புரிந்துகொள்வதற்காகவாவது, இவர்களது திரைக்கதைகளையெல்லாம் தூக்கி-யெறிந்துவிட்டு, மூலக் கதையிலிருந்து ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. பிரபாகரன் என்பவன், அந்த மக்களின் தேசியத் தலைவன். ஈவிரக்கமின்றி அவர்களை நசுக்கிக் கொண்டிருந்த ஓர் இனவெறி அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியவன். அந்த மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவன். அந்த மக்கள் அவனை உயிருக்குயிராக நேசித்தனர். அவனது அப்பழுக்கற்ற தலைமையை முழுமையாக நம்பினர். ஒருமுறையல்ல, இரண்டு முறை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் அவனோடு சேர்ந்து, தங்களது வாழ்விடங்களிலிருந்து வெளியேறியிருக்கிறது. ராமன் இருக்கும் இடம் அயோத்தி- என்று கதைகள் பேசலாம். வீரஞ் செறிந்த எங்கள் ஈழச் சொந்தங்கள் அதை நிரூபித்துக் காட்டினர். பிரபாகரன் இருக்குமிடம்தான் ஈழம்- என்று மீண்டும் மீண்டும் அவர்கள் நிரூபித்தார்கள். புலிகள் வேறு, மக்கள் வேறு என்கிற பொய்ப் பிரசாரத்தை ஒவ்வொரு முறையும் முறியடித்தார்கள். எத்தனை தலைவர்கள் மீது இப்படியொரு நம்பிக்கையும் உண்மையான மதிப்பும் இருந்திருக்கிறது வரலாற்றில்? விரல்விட்டு எண்ணிவிடலாம்! சோனியா தான் தங்கள் உயிர் என்கிறார்களே இங்கிருக்கும் காங்கிரஸ்காரர்கள்... சோனியா தன்னுடைய தாய்நாடான இத்தாலிக்கே திரும்பிப் போய்விடுவதென்று முடிவெடுத்தால், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, சிதம்பரம், குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸெல்லாம் அவருடன் போய்விடுவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? வாய்ப்பேயில்லை. வெவ்வேறு காலகட்டங்களில் யாழ்ப்பாணத்-திலிருந்தும் கிளிநொச்சியிலிருந்தும் தங்களது வீடு வாசல்களையெல்லாம் விட்டுவிட்டு லட்சக் கணக்கான மக்கள் பிரபாகரனைப் பின்தொடர்ந்து போனார்களே, ஏன்? ஆண்களை விடுங்கள்... இடம்பெயர்வதில் பெண்களுக்குத்தான் பிரச்னை அதிகம். ஒரு மறைப்போ தடுப்போ இல்லாத காடுகளுக்குள் தாங்கள் நம்பிய ஒரு தலைமையுடன் ஆயிரமாயிரமாய்ப் பெண்களும் இடம்பெயர்ந்தது, தமிழினத்தின் தன்மானத்துக்குப் பொன்மகுடம் சூட்டிய நிகழ்வு. புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த சகோதரி தமிழினி ஒருநிகழ்வில் பேசியதுதான் நினைவுக்கு வருகிறது. ‘‘எம் இயக்கம் ஒரு மக்கள் இயக்கம். மக்கள் வேறு, இயக்கம் வேறல்ல. மக்கள்தான் இயக்கம். மக்கள் ஆதரவு இல்லாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு விடுதலை இயக்கம் வெற்றிகரமாகச் செயல்பட முடியாது’’ என்றார் தமிழினி. அதுதான் உண்மை. சென்ற ஆண்டுத் தொடக்கத்தில், இலங்கை ராணுவத்தை முறியடிக்க மிகவும் உறுதியான வியூகம் ஒன்றை வகுத்தனர் விடுதலைப் புலிகள். அந்த வியூகத்தை உடைக்கமுடியாத இலங்கை ராணுவம், உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை வீசி, நூற்றுக்கணக்கான போராளிகளைக் கொன்று குவித்தது. ரசாயனக் குண்டு என்பதால் போராளிகளில் பலர் உடல் கருகி இறந்திருந்தனர். சுற்றியிருந்த மரங்களெல்லாம் கருகியிருந்தன. உலகம் முழுக்க இலங்கையின் போர்க்குற்றம் அம்பலமானது. பல நாடுகள் கண்டித்தன. இலங்கையின் அந்தக் கொடூரச் செயலைக் கண்டிக்காத ஒரே நாடு, இந்தியாதான். இந்தியாவின் இந்த கள்ள மௌனம்தான் ஒவ்வொரு முறையும் இந்திய-இலங்கை கள்ளக்கூட்டைத் தோலுரித்தது. அந்தச் சம்பவத்தில் சகோதரி தமிழினியும் உயிரிழந்ததாக அப்போது ஒரு தகவல் கிடைத்தது. கருகிய உடல்களை வைத்து சரிவர அடையாளம் காண முடியவில்லையென்றும், தமிழினி நலமென்றும் பின்னர் வந்த இன்னொரு தகவல் ஆறுதலாக இருந்தது. பிரபாகரன் பற்றியும் நல்ல செய்தி வருமென்ற நம்பிக்கையை ஊட்டிய தகவல் இது. மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை அந்த மாவீரர்கள். தங்களது லட்சியம் நியாயமானது என்பதைத் தெளிவாக அறிந்திருந்ததால், அதற்காக எந்த விலையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர். உண்மையான விடுதலை வேட்கை கொண்ட ஒவ்வொருவரும் அப்படித்தான் இருக்கமுடியும். ஈழத்தில் தமிழர்கள் கேட்ட விடுதலை எது? அந்த மண் அவர்களது பூர்வீக பூமி. அந்தத் தீவு முழுக்க அவர்கள் ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். மதத்தின் பெயரிலும் மற்ற போர்வைகளிலும் உள்ளே நுழைந்து ஆக்கிரமிக்கத் தொடங்கிய சிங்களர்கள், பூர்வகுடியினரான தமிழர்களைத் தீவின் வடகிழக்குப் பகுதி வரை விரட்டினர். அடிப்படை உரிமைகளையெல்லாம் சிங்களர்கள் பறிக்கத் தொடங்கியபிறகுதான், தங்கள் தாயகத்தை சிங்களரின் பிடியிலிருந்து மீட்டெடுப்பது முக்கியமானது என்பதை உணர்ந்தனர் தமிழர்கள். பிரபாகரன் என்கிற வலுவான தலைமையின் கீழ் அதில் பெருமளவு வெற்றியும் பெற்றனர். இந்த விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்ன தவறு இருக்கிறது! ‘‘நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். எங்கிருந்தோ வந்து ஆக்கிரமித்து நாடு பிடித்த நீங்கள் எங்கள் உரிமைகளை எப்படிப் பறிக்கலாம்’’ என்று அவர்கள் கேட்டது தவறா? அடித்து உதைத்துத் துன்புறுத்தப்பட்ட பிறகு, பிரிந்துபோவது என்கிற முடிவுக்கு வந்தது தவறா? எது தவறு? ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒளிவுமறைவெல்லாம் இல்லை. எல்லாமே வெளிப்-படையான போராட்டங்கள். இதில் மர்மமான பக்கம் ஒன்று உண்டென்றால், அது ராஜீவும் ஜெய-வர்தனேயும் செய்துகொண்ட ஒப்பந்தம் தான். உன்னிப்பாகக் கவனிப்பவர்களுக்கு ஒன்று புரியும். 1987 ஜூலை 29-ம் தேதி எந்த நோக்கத்-துக்காக ராஜீவும் ஜெயவர்தனேவும் கையெழுத்து போட்டார்களோ, அந்த நோக்கம்தான் 2009 மே 18&ம் தேதி நிறைவேறியது. லட்சம் தமிழரின் கொலைக்குப் பின்னணியாக இருந்தவர்கள், கசாப்பை என்ன செய்வதென்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை என்ன செய்வதென்று நாம் முதலில் முடிவெடுத்தாக வேண்டும்.


கேரள பொலிசாரால் கைதான ஈழத்தமிழர்களை,தமிழகம் பொறுப்பேற்க வேண்டும்-சீமான் வேண்டுகோள்.





கேரள மாநிலம் கொல்லத்தில் நேற்று முப்பதுக்கும் மேற்பட்ட ஈழ அகதிகளை அம்மாநில போலீசார் கைது செய்திருப்பதாக தெரிகிற நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை,
இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடம் நிறைவடையும் சூழலில் இன்னமும் முள் வேலி முகாம்களுக்குள் ஒரு லட்சம் மக்களை அடைத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது. முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சொல்லப்படும் மக்களைக் கூட பேரினவாத இலங்கை அரசு எவ்விதமான அடிப்படை வசதிகளும் இல்லாத வனாந்தரங்களிலும் வெட்ட வெளி பொட்டல் காடுகளிலும் கொண்டு கொட்டுவதாகத் தெரிகிறது. உடுத்த உடையோ, உணவோ குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து மிக்க உணவுகளோ இல்லாமல் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இலங்கைக்குள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். வன்னி மக்களின் பாரம்பரீய வாழ்விடங்களை எல்லாம் ஆக்ரமித்து விட்ட சிங்களர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் பேரினவாத சிங்கள இராணுவம் தமிழ் மக்களை அவர்களின் வீடுகளில் குடியேற விடாமல் தடுத்து வருகிறது. அவர்களின் விவாசய நிலங்கள் எல்லாம் சிங்களர்களால் ஆக்ரமிக்கப்பட்ட நிலையில் கொட்டப்பட்ட இடங்களில் இருந்து அவர்கள் கொத்துக் கொத்தாக உயிர் தப்ப ஓடுகிறார்கள். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இப்படி ஓடுகிற ஈழ மக்கள் மலேஷியாவில், ஆஸ்திரேலியாவில், இந்தோனேஷியாவில் என சிறைபடுகிறார்கள். சித்திரவதைக்குள்ளாகிறார்கள். ஈழ மக்களின் நிராதரவான இந்நிலை ஆழ்ந்த துக்கத்தையும் கவலையையும் கண்ணீரையும் ஏற்படுத்தும் நிலையில் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவது போல கேரளத்தில் நேற்று முப்பத்துக்கும் மேற்பட்ட ஈழ மக்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது. அவர்களிடம் முறையான் பாஸ்போர்ட்டோ, வீசாவோ இருக்கிறதா? என விசாரித்த கேரள போலீசார் வழக்கம் போல அவர்கள் விடுதலைப் புலிகளா? என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்களாம். நிராதரவான முறையில் உயிர் தப்பி ஓடும் ஈழ மக்களிடம் எப்படி பாஸ்போர்ட்டும், வீசாவும் இருக்கும். நிற்கவோ, படுத்துறங்கவோ, உறவுகளோடு வாழவோ முடியாத நிலையில் ஓடும் ஈழ அகதிகளின் துன்ப வாழ்வை புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு கேரளத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஈழ அதிகளை பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைத்து விடும் மனித நேயமற்ற செயலைச் செய்து விடக் கூடாது என்பதோடு, அபாயகரமான சூழலுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் ஈழ மக்களின் துன்பங்களை தமிழக அரசு புரிந்து செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசால் அனுப்பப்பட்ட ஒன்பது தமிழர்கள் இத்தாலிய பொலிசாரால் கைது!


இத்தாலியில் வைத்து 9 இலங்கைத் தமிழர்களை இத்தாலியப் பொலிசார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இலங்கை அரசின் அனுசரணையுடன் ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன?
எனினும் இந்தத் திட்டம் என்ன என்பது குறித்து தமக்கு இத்தாலியில் வைத்தே அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அறிய வருகிறது.

புலம் பெயர் தமிழ் மக்களின் அரசியல் நகர்வுகளை முறியடிப்பதற்கும் அதற்கேற்ற வகையில் இவர்கள் மூலமாக வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டங்களும் தீட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளைத் தாம் எப்படியாவது முறியடிப்போம் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்திருந்த நிலையில் இவவாறான குழுவொன்று புலம் பெயர்தேசத்தில் கைதாகியிருப்பதானது இலங்கை அரசை சர்வதேச மட்டத்தில் மேலும் நெருக்கடிக்கு ஊள்ளாக்குமென எதிர்வு கூறப்படுகிறது.

இவ்வாறு இத்தாலியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களின பெயர் விபரம்.

அருமைநாதன் கிருஷ்ணஜெகன் (22) ‐ சாவகச்சேரி

பாக்குலகிருஷ்ணா கோபாலகிருஷ்ணன் (20) சாவகச்சேரி.

கஜிதா ரஞ்சிதநாதன் (23) யாழப்பாணம்.

சிவநேஸ்வரன் கோகிலதாஸ் (31) காரைநகர்.

தர்மகஜனி சிறிதரன் (26) யாழ்ப்பாணம்.

ஸ்டெலின்ராசா துஷ்யந்தன் (29) யாழ்ப்பாணம்.

தர்மகுலசிங்கம் துஷ்யந்தன் (24) மானிப்பாய்.

எட்வட் யேசு ஜெய்சன் (27) மன்னார்‐ பேசாலை.

நந்தகுமார் உதயபுத்திரன் (25) உடுவில்

ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களை இத்தாலிய இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் கிருஷ்ணன் என்பவர் இவர்களை சந்தித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.


07 மே 2010

இன்னிசை மழை இப்போது தேவையா?வன்னி மக்கள் பேரவை கேள்வி!





வவுனியா நகரசபைத் தலைவர் (நகரபிதா) முன்னின்று நாளை வவுனியாவில் நடத்தவுள்ள இன்னிசை மழை நிகழ்ச்சி தொடர்பில் வன்னி மக்கள் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு;
வன்னியின் இறுதிப் பேரழிவு நடந்தேறி ஆண்டு ஒன்றை அண்மித்த தற்போதைய சூழலில் தாயகத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் நினைவுத் திதிகள் நடைபெறுகின்றன. உறவுகளைப் பிரிந்த உறவுகள் தேடித் தேடிச் சோர்ந்து போயுள்ளன. அங்கங்களை இழந்தோர் மாற்றுவலுவுக்காக பாடுபடுகின்றனர். சொத்துக்களையும், தொழில்களையும் இழந்த மக்கள் அடுத்த வேளை உணவிற்காக திண்டாடுகின்றனர்.
இந்தச் சூழலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரைந்தாற்ற வேண்டிய ஒரு கடப்படாடு பற்றி வன்னிமக்கள் பேரவை சுட்டிக்காட்ட முற்படுகின்றது.
இலங்கை அரசாங்க வானொலியான தென்றல் வானொலியின் அனுசரணையுடன் வவுனியாவில் 'இன்னிசை மழை' என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு அதற்கான விளம்பரங்களும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இலங்கை அரசு அவ்வாறான நிகழ்வினை முன்னெடுப்பது ஒன்றும் அதிசயமானது அல்ல என்பது உண்மைதான். ஆனாலும் அந்த நிகழ்விற்கு தலைமை தாங்குவது யார் என்ற செய்திதான் வன்னி மக்கள் பேரவையினராகிய எம்மைக் கடுமையாக நோகடிக்கிறது.
வவுனியா நகர பிதாவாகச் செயற்படுகின்ற நபரே நிகழ்விற்கு தலைமை தாங்குவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன. இந்த நிகழ்வு நாளை (08-05-2010) வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இன்று (07-05-2010) வவுனியா நகரசபை மைதானத்தில் தமிழக சின்னத்திரைக் கலைஞர்கள் பங்குகொள்விருந்த பிரமாண்ட நிகழ்ச்சி தமிழ்மக்களின் உணர்வுகளை மதித்து குறித்த கலைஞர்களாலேயே கைவிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ் தேசியத்தினை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட குறித்த நபரினை தமிழ் தேசியத்திற்காக வவுனியா மக்கள் தேர்வு செய்திருந்தனர். சிங்கள கொரூர அரசு தமிழின அழிப்பினை பெருவிழாவாக நிகழ்த்துவதில் குறித்த நபர் முன்னின்று செயற்படுவது அனைத்து மக்கள் மனதிலும் பாதிப்பையே எற்படுத்தியுள்ளது.
பொறுப்பாக தமிழ் மக்களுக்கு முன்னுதாரணமாகச் செயற்படவேண்டிய குறித்த நபர் இந்த விடயம் தொடர்பில் கதைக்கச் செல்லும் உணர்வாளர்களிடம் சிங்கள அரசு வெற்றிவிழா கொண்டாடுவதில் தவறில்லை என்றும், தான் ஒரு ரசிகன் என்பதால் நிகழ்வினை ரசிக்கப் போவதாகவும் பொறுப்பற்றவிதத்தில் பதிலளித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கான அனுசரணையினை மேற்கொண்டுள்ள குறித்த வானொலி தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும், தமிழ் தேசியச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் இரவு வேளையில் இரண்டு மணி நேரத்தினை ஒதுக்கி நாள்தோறும் எதிர்ப்பரப்புரையினை மேற்கொண்டே வருகின்றது. இந்த வானொலியினை வன்னி மக்கள் எந்த நாட்களிலும் திரும்பிப் பார்ப்பதே இல்லை. அந்தளவிற்கு எமது உணர்வுகளை இழிவு படுத்தும் குறித்த வானொலியுடன் இணைந்து எமது இனம் அழிக்கப்பட்ட வெற்றிவிழாவில் பங்கெடுப்பது எந்தவிதத்தில் சரியானது என்ற கேள்வியை வன்னி மக்கள் பேரவை முன்வைக்கின்றது.
இதேவேளை குறித்தநபர் நகரபிதா என்ற பதவியை மிகக் கேவலமாக பயன்படுத்துவது தொடர்பிலும் எமக்கு உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. நகரசபை ஊழியர்களைத் தாக்குவது, வீதியோரங்களில் வியாபாரம் செய்தால் குறித்த வியாபாரிகளை வாகனங்களில் ஏற்றிச் சென்று தாக்குவது, முட்டுத்தாளிட்டுத் தண்டிப்பது போன்ற இழி செயல்களையும் குறித்த நபர் முன்னெடுத்து வருகின்றார்.
தமிழ் தேசியத்தை வலியுறுத்தி வெற்றி பெற்றவர்கள் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு மக்களை அன்பாக அணுகவேண்டுமே தவிர வன்முறையைக் கைக்கொள்ள எந்த அதிகாரமும் குறித்தவர்களுக்கு இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தால் கூட்டமைப்பு எந்தவிதத்தில் ஏனைய கட்சிகளில் இருந்து தன்னைப் பிரித்துக் காட்டப் போகின்றது? என்ற கேள்வி எழுக்கின்றது.
இந் நிலையில் இவ்வாறானவர்களை தொடர்ந்தும் கூட்டமைப்பு தன்னுடன் இணைத்து வைத்துக் கொள்ளுமாக இருந்தால் கூட்டமைப்பு தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை இது உறுதி செய்வதாகவே அமைந்துவிடும் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ளும் என நம்புகின்றோம்.
இழப்புக்களுக்கு மேலான இழப்புக்களை எதிர்கொண்டு அந்த நினைவுகளைக் கூட மீட்ட முடியாத சூழலில் சிக்குண்டுள்ள நாம் எமது உணர்வுகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ளும் என்ற நம்பிக்கையிலேயே இந்த அறிக்கையினை விடுக்கின்றோம்.
கூட்டமைப்பு விரைந்து செயற்பட்டு குறித்த நிகழ்ச்சியினை இடைநிறுத்த அல்லது குறித்த நபர் அதில் பங்கெடுக்காது தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன், குறித்த நபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் முற்படவேண்டும் எனவும் வன்னிமக்கள் பேரவை உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றது.
நன்றி.
வன்னிமக்கள் பேரவை. 07.05.2010

நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர் பிணையில் விடுதலை.


தாயகத்தில் தமிழீழ மக்களை சிறீலங்கா பயங்கரவாத அரசு கொன்ற வேளையில் மக்களை காப்பாற்ற மருந்துப்பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர் முத்துக்குமார் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

யாழ்,மானிப்பாயில் கடத்தப்பட்ட மாணவி மயக்கமுற்ற நிலையில் மீட்பு!


யாழ்ப்பாணம் மானிப்பாயில் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட மாணவி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 11 வயது மாணவி நேற்று மாலை இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார்.

எனினும் சற்று முன்னர் மானிப்பாயில் உள்ள கைவிடப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து இராணுவத்தினர் இவரை மீட்டுள்ளனர்.

நவாலி விவேகானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த மேற்படி மாணவி தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06 மே 2010

யாழ்ப்பணத்தில் மீண்டும் சோதனைச்சாவடிகள்.






யாழ்ப்பாண நகர நுழைவாயில்களில் மீண்டும் சோதனை நடவடிக்கைள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்குப் பின்னரே நகருக்குள் அனுமதிக்கப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

யுத்தம் முடிவடைந்த பின் நிலவிய சுமூகமான நிலையை அடுத்து யாழ்ப்பாண நுழைவாயில்களில் இருந்த சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டிருந்தன. தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் கடத்தல், கப்பம் கோரல் போன்ற செயல்களையடுத்து, இராணுவத்தினர் மீண்டும் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர்.

யாழ். நகர நுழைவாயில்களான தட்டதெருச் சந்தி, ஓட்டுமடச் சந்தி, இலுப்பையடிச் சந்தி போன்ற இடங்களிலேயே மீண்டும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவற்றைவிட, யாழ். நகரின் மத்தியில், ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு இசைக்குழுக்கள் செல்லக் கூடாது.-திருமாவளவன் எச்சரிக்கை!

இலங்கையில் சிங்கள அரசு கொண்டாடும் போர் வெற்றி விழாவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து எந்தக் குழுவும் செல்லக் கூடாது என்று விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 50 ஆயிரம் தமிழர்களும் விடுதலைப்புலிகளும் புலிகளின் தளபதிகளும் ஈவிரக்க மற்ற முறையில் கொன்றொழிக்கப்பட்ட மனித அவலத்தை சிங்களர்களின் வெற்றித் திருவிழாவாக எதிர் வரும் மே 18 அன்று கொண்டாடுவதற்கு சர்வதேசப் போர்க் குற்றவாளிகளான ராஜபக்சேக்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக மே 12 லிருந்து மே 20 வரையில் இலங்கை முழுவதும் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதிகளெங்கும் சிங்களவர்களின் வெற்றிப் பேரணி மற்றும் இசை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்ற பெயரில் நடத்திட தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை கொன்றொழித்த நாளாகவும் அந்த நாள் சிங்களவர்களின் வெற்றித்திருநாள் எனவும் வெளிப்படையாக அறிவித்து மே 18 அன்று மாபெரும் பேரணியையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். இத்தகைய வேதனைகள் நிறைந்த செய்திகளுக்குகிடையில் கொடுமையிலும் கொடுமையாக தமிழர்களே இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். என்னும் செய்தி கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தமிழகத்திலிருந்து இசைக் குழுவினரும் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைக் குழுவினரும் வரும் மே 12 ந்தேதியில் இருந்து பங்கேற்க உள்ளனர் என்பது சகித்துக் கொள்ள முடியாத வேதனையை அளிக்கிறது. காசுக்காக கூலிக்கு மாரடிக்கும் கும்பலைப்போல் இத்தகைய இசை மற்றும் கலைக் குழுவினர் சிங்கள இனவெறியர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்குச் செல்வது மிகவும் வெட்கக்கேடான தலைக்குனிவான இழி செயலே ஆகும். இதனால் தமிழகத்தைச் சார்ந்த ஒட்டு மொத்த தமிழர்களும் மாபெரும் களங்கத்தை சுமக்க வேண்டி வரும். இனமான உணர்வுகள் இல்லாமல் வெறும் பிழைப்புவாதப் போக்குகளைக் கொண்ட இவர்கள் தமிழினப் பகைவர்களுக்கு ஆதரவாக செயல்பட துணிந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இந்நிலையில், இனமானத்தைக் காக்கும் வகையில், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மீதான களங்கத்தைத் துடைக்கும் வகையில், சிங்களவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முற்றிலுமாக இப்பயணத்தை கைவிட வேண்டும். இல்லையேல் காலா காலத்திற்கும் இந்த அவமானத்தை துடைத்தெறியவே முடியாது. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த இசை மற்றும் கலைக்குழுவினர் முள்ளி வாய்க்காலின் பேரவலத்தை எண்ணிப் பார்த்து இந்தப் பயணத்தை முற்றிலும் கைவிட வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10.5.2010 அன்று எனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில், தமிழின உணர்வுள்ள அனைவரும் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

யாழ் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது தாக்குதல்!







யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், அங்குள்ள சிறைச்சாலை அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:சம்பந்தப்பட்ட எட்டு அரசியல் கைதிகளின் கூடத்தின் ஜன்னல் கம்பிகள் கடந்த 30 ஆம் திகதி விலக்கப்பட்டு இருந்தது. அதனை அவதானித்த சிறைக் காவலர்கள இவர்கள் தப்பிப்பதற்காகவே கம்பிகளை விலக்கியதாக நினைத்துக் கைதிகளைத் தாக்கியுள்ளனர்.நிர்வாணமாக வைத்து மிக மோசமான முறையில் தாக்கப்பட்ட கைதிகள் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு கை முறிந்தும், மற்றும் சிலருக்கு சிறுநீரூடன் இரத்தமும் வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலையிலிருந்து மாலை வரை இவர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தமிழ் சிறைச்சாலை அதிகாரிகளே என்பது குறிப்பிடத்தக்கது.

05 மே 2010

தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடும் சிறி வாத்தி எம்.பி.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிவாத்தி எம்.பி அவர்கள் நேற்றைய தினம் பாராளுமன்றில் கன்னி உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அவர் உரையைக் கூர்ந்து கவனிப்போமேயானால், முதலில் ஏதோ தமிழர்கள் அழிக்கப்பட்டதை படம்போட்டுக் காட்டி, பின்னர் சர்வதேசம் சிங்கள அரசை நசுக்க முனைகிறது, எனவே தோழர்களே (சிங்களவரை) நாம் கரம்கோத்து நிற்போம் என்ற பாணியில் உரையை நிகழ்த்தியுள்ளார்.அதாவது முதலில் தமிழர்கள் அழிக்கப்பட்டதைச் சொல்லி, பின்னர் 2ம் உலகப் போரில் ஜப்பான் அழிந்து மீண்டெழுந்த கதையைச் சொல்லி, அதன் பின்னர் சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை ஒன்றுபட்டு முறியடிக்கவேண்டியது அவசியம் என்கிறார் சிறிவாத்தி. அப்படியாயின் நடந்த யுத்தக்குற்றங்களை நியாப்படுத்துகிறாரா சிறிவாத்தி எம்.பி. அல்லது சர்வதேசத்தை பிழை என்கிறாரா? யுத்தக்குற்றம் இழைத்த சிங்களதேசத்தை நியாப்படுத்துகிராரா ?தனது பாராளுமன்ற உரையின் தொடக்கத்தில், தமிழர்களின் துயர் துடைப்பது போலப் பேசி, பின்னர் சிங்களவர்களுடன் நட்புப் பாராட்டியுள்ளார் சிறிவாத்தி எம்.பி. அதாவது இதைத் தான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பார்கள். மெல்ல மெல்ல தமிழ் மக்களின் மனதில் நஞ்சைக் கலப்பது. நடந்த போர்க்குற்றங்களை மறைத்து, கொலைகளை மறைத்து, சிங்கள அரசின் அடிமைக்குள் தமிழனை நிரந்தரமாக தள்ள இவர் முயற்சிக்கிறார். அதுமட்டுமல்லாது சிங்கள தமிழ் இனப்பிரச்சனை ஏதோ சர்வதேசத்தால் தொடக்கப்பட்டது போல சர்வதேசத்தை சாடுகிறார்.சர்வதேச அரசுகளை குறைகூற இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளே உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள் ஆகும். இவர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டி பல விடயங்கள் உள்ளன. உதாரணமாக எத்தனை லட்சம் தமிழர்கள் மற்றும் வேற்று நாட்டவர்கள் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு அடக்குமுறைகள் இல்லையே. வேற்றின மக்களாக இந்த அரசாங்கங்கள் இவர்களைப் பார்ப்பது இல்லையே. சர்வதேச அரசியல் புரியாத இவரைப் போன்ற சில ஞானசூனியங்களால், தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளத்தான் முடியும். பாவம் வேறு அரசியல் இவர்களுக்குத் தெரியாது.
(அதிர்வு இணையம்)

ஏதாவது ஒரு பதவி மகளுக்கு போட்டுகொடுங்கம்மா தயவு பண்ணி.....


சோனியாம்மா, நல்லா இருக்கீங்களா...? அந்தக்காலத்துல்ல என் தமிழர்களைக் கொன்ன அமைதிப்படையை வரவேற்க போக மாட்டேன்னு வீர வசனம் பேசினேன்.இப்ப பாருங்க இனத்தையே அழிச்ச உங்களை வீடு தேடி வந்து பாராட்ட வந்துருக்கேன்.எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் பார்த்தீங்களா? அதுக்காக ஏதாவது ஒரு பதவி மகளுக்கு போட்டுக் கொடுங்கம்மா தயவு பண்ணி....
(நாம் தமிழர்.ஒர்க்.)

பார்வதி அம்மாவுக்கு கருணாநிதியின் மூன்று நிபந்தனைகள்!

சிகிச்சைக்காக ஆறு மாத விசா பெற்று சென்னைக்கு வந்த பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகத்தில் அதிருப்தி எழ சில நிபந்தனைகளோடு பார்வதியம்மாளை அனுமதிக்கும் படி மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதினார் கருணாநிதி. ஆனால் அது என்ன நிபந்தனைகள் என்பது ரக்சியமாக இருந்த நிலையில் நிபந்தனைகள் ஊடகங்களில் வெளியாக நேற்று டில்லியில் பேசிய கருணாநிதி நிபந்தனைகள் குறித்துக் கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்துள்ளார். ஆனால் அவர் போட்டுள்ள கராரான மூன்று நிபந்தனைகளுமே நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு முதிய பெண்ணின் மனித உரிமைகளை மறுப்பதாக உள்ளது.
நிபந்தனை-1 அரசுச் செலவில் மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அவரது பாதுகாப்புப் பொறுப்பை தமிழக அரசே ஏற்கும்.
நிபந்தனை-2 அவர் எங்கு சிகிச்சை பெற வேண்டும் என்பதை தமிழக அரசே தீர்மானிக்கும்.
நிபந்தனை-3 சிகிச்சை முடிந்தவுடன் அவர் எந்த நாட்டிலிருந்து வந்தாரோ அங்கு திரும்பிச் செல்ல வேண்டும் .
முதிய வயதில் பார்வதியம்மாளை குடும்பத்தினரின் மேற்பார்வையிலிருந்து பிரித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதன் மூலம் அவரை தமிழக ஈழ ஆதரவாளர்கள் சென்று பார்ப்பதை தடுக்க நினைக்கிறது கருணாநிதி அரசு. தவிறவும்.பார்வதியம்மாள் எந்த வகையிலும் தமிழகத்தில் நிரந்தரமாக தங்கியிருப்பதை கருணாநிதி விரும்பவில்லை. காரணம் இன்னமும் அவர் பிரபாகரனைப் பார்த்து அச்சம் கொள்கிறார். அதனால்தான் பார்வதியம்மாளுக்கு இங்கிருக்கிற காலத்தில் ஏதாவது ஒன்று ஆனால் அது தனக்கு எதிராகத் திரும்பும் என்கிற அச்ச உணர்வில் இப்படி முதிய பெண்ணுக்கு மனித நேயமற்ற முறையில் நிபந்தனைகளை விதிக்கிறார் கருணாநிதி.

தமிழினத்திற்கு சிறந்த தலைமைத்துவமே தேவை,அதிக தலைவர்கள் அல்ல.-பினாங்கு துணை முதல்வர் ராமசாமி.


மலேசியத் தலைநகர் அம்பாங்கில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டின் எழுச்சி முகாம் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்றார்.

உலகத் தமிழினத்திற்கு முற்போக்குச் சிந்தனை மிகவும் அவசியமாகும். அதேவேளை சிந்தனைப் பரிமாற்றங்களை உலகளாவிய நிலையில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும் தமிழினத்திற்கு அதிகமான தலைவர்கள் தேவையில்லை.சிறந்த தலைமைத்துவமே வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி கூறினார்.


உலக தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி தெரிவிக்கையில் உலகெங்கும் வாழ்கிற தமிழர்களுக்குச் சொந்த நாடும் அரசாங்கமும் இல்லாதது பெரும் குறையாகும், இலங்கைத் தமிழர்கள் கொடூரமாக நடத்தப்படுகிறார்கள். இதனைக் கண்டு ஐக்கிய நாட்டு நிறுவனம் மெளனம் சாதிக்கிறது. மூன்று லட்சம் தமிழர்கள் நிலை குறித்து உலக நாடுகள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்றார். தமிழர்களுக்குச் சொந்த நாடு வேண்டும் என்று போராடிய தலைவனின் தாயாருக்கு மருத்துவம் பார்க்கக்கூட அனுமதி இல்லை.இந்த அவலம் கண்டு மனம் வேதனைப்படுகிறது.

6 கோடி மக்களால் 3 லட்சம் மக்களைக் காப்பாற்ற முடியாமல் போனது வேதனை மிக்க கொடுமையாகும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டார்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன்.சுங்கை சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவநேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிறிலங்கா பாராளுமன்றில் த.தே.கூ.பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆற்றிய உணர்ச்சிமிகு கன்னியுரை.






கெளரவ சபாநாயகர் அவர்களே மதிப்பிற்குரிய சக உறுப்பினர்களே என்னை தங்கள் பிரதிநிதியாக உங்கள் முன் அனுப்பி இருக்கும் எமது மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் எனது வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் முதலில் உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
இறந்துபோன உறவுகளின் எலும்புத்துண்டங்கள் என் பாதங்களை முத்தமிட அழிந்துபோன எம் தேசத்தின் சாம்பல் மேட்டிலிருந்து எனது மக்களின் நிரந்தர பூர்வீக வாழ்வியல் உரிமைக்கான அங்கீகாரம் மக்களின் அங்கீகாரத்தோடு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தமது கெளரவமிக்க உயிரினும் மேலான உரிமைக்காக காலமெல்லாம் போராடி தவமிருக்கும் தமிழ்பேசும் மக்களிடமிருந்து வருகின்றேன்.
இரண்டாவது உலக யுத்தம் முடிவடையும் தறுவாயில் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு சரணடையும் நிலையிலிருந்த போதிலும் அணுகுண்டு வீச்சுக்குட்படுத்தப்பட்டு இரு பெரும் நகரங்களையும் இரண்டு லட்சம் மக்களையும் இழந்து இன்றுவரை கதிர்வீச்சு தாக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடாத போதிலும் மீண்டுமொரு பொருளாதார வல்லரசாக இடிச்சு பெருப்பித்திருக்கும் இரசாயண தேசத்தின் அன்பளிப்பான இக்கட்டிடத்தொகுதியில் இருந்து என் கன்னி உரையை எதிர்காலம் பற்றிய உயர்வான நம்பிகையுடன் ஆரம்பிப்பதில் பெருமையடைகின்றேன்.
தோற்கடிக்கப்பட்டவர்கள் எல்லோரும் தோற்றுப்போனவர்கள் அல்லர், அழிக்கப்பட்டவர்கள் எல்லோரும் அழிந்துபோனவர்களும் அல்லர் என்பதற்கு உலக வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உண்டு.
துருக்கிய பேரரசாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளாலும் காலத்திற்கு காலம் அழிக்கப்பட்டு வெறும் கற்குவியலாக்கப்பட்ட உரோமானிய தேசம். அந்தக் கற்களையே தம் மூலதனமாக்கி சீமெந்து உற்பத்தியில் பெரும் சாதனையீட்டி இன்று தலை நிமிர்ந்து நிற்கின்றது. அந்தக் கற்களில் எழுதப்பட்ட சோக காவியங்கள் இன்று வசந்த கீதங்களாக மாற்றப்பட்டுவிட்டன.
ஒரு தேசமோ ஒரு இனமோ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பேரழிவுகளுக்கு முகங்கொடுக்கும்போது மீளெழுவதற்கு இன்னுமொரு பாதை உண்டு என்பதை ஜப்பானியர்களும் உரோமானியர்கள் இன்று முழு உலகத்திற்கும் நிரூபித்துவிட்டனர். நாம் பயங்கரவாதிகளாக பட்டம் சூட்டப்பட்டோம்.
உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் எமது இராணுவ பலத்தையும் எமது சந்ததியையும் அழிப்பதற்கு உரிய நியாயப்பாட்டை எம்மை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துக்கொண்டதன் மூலம் ஏற்படுத்திக்கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் தமிழ்மக்களுக்கெதிராக ஒரு பெரும் யுத்தம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
பல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் ஆயிரமவர் ஊனமாக்கப்பட்டனர், காணாமல் போனோரின் தொகை இன்னமும் கணக்கிடப்படவில்லை, பலகோடி பெறுமதியான சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சூறையாடப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் இழந்து அகதிகளாக வெறுங்கைகளுடன் முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டோர் தொகை லட்சங்களாக உயர்ந்தது.
இப்பேரழிவின் பின்னால், இலங்கை அரசுக்கு உலக வல்லரசுகளும் பிராந்திய வல்லரசும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பெரும்பங்களிப்பை வழங்கின. இன்று இப்போரின் எம்மீது போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தி சிங்கள தேசத்தின் கழுத்தை நெரிக்க, வல்லரசுகள் தங்கள் கரங்களை நீட்டுகின்றன. அதாவது எங்களை அழிக்க உங்களுக்கு தோள்கொடுத்தவர்கள் இன்று உங்களை அடிமைப்படுத்த எங்களைப் பாவிக்கின்றனர்.
மதிப்பிற்குரிய எங்கள் சகோதர்களே எங்களுக்கெதிராக உங்களையும் உங்களுக்கெதிராக எங்களையும் பாவித்து எங்கள் எல்லோரையும் அடிமைகொள்ள முயலும் இவர்களின் வழியில் நாம் தொடர்ந்து விழத்தான் வேண்டுமா?
நாம் ஒரு தேசத்தின் இரு தேசிய இனங்களாக அங்கீகரிக்கப்பட்டதுண்டு. நாங்கள் எங்களையும், எங்கள் தேசத்தையும் தற்காத்துக்கொள்ள வேண்டாமா? இரு இனங்களுக்குமிடையேயான புரிந்துணர்வும் நல்லடக்கமும் வேறு இப்போது அவசியம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நமது இராணுவ வலிமை அழிக்கப்பட்ட பின்பு, எமது உரிமைகளுக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்பு, எங்கள் பலவீனமான நிலைமையை மீறி மேலாதிக்கம் செலுத்துவதன் மூலம் ஒரு ஐக்கியத்தை உருவாக்கிவிட முடியும் என்ற ஒரு தவறான பார்வை உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கலாம்.
இத்தகையதோர் பார்வையும் அதன் வேர்களில் இருந்து எழுந்த சிந்தனைப்போக்குமே நமது அறுபது வருட போராட்டத்திற்கும் முப்பது வருட ஆயுதப்போராட்டத்திற்கும் அடிப்படை என்ற உண்மையை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய காலமிது. மீண்டும் குருதி சிந்தும் நாட்களை உருவாக்கும் காரணிகளை தயவுசெய்து உங்கள் எண்ணங்களிலிருந்து தூக்கி தூர வீசிவிடுங்கள். அடக்குபவர்களுக்கும் அடக்கப்படுபவர்களுக்கும் இடையே ஐக்கியம் நிலவியதாக வரலாறு இல்லை. நிம்மதி கிடைத்ததாக உதாரணங்கள் இல்லை. நாங்கள் நாங்களாகவும் நீங்கள் நீங்களாகவும் கரங்கோத்து நின்று எங்கள் தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.
எங்கள் கழுத்தை உங்கள் கரங்கள் நெரிக்கவேண்டாம். உங்கள் கரங்களை எங்கள் பற்கள் காயப்படுத்த வேண்டாம். உங்களுக்கென ஒரு பாரம்பரிய வாழ் நிலம், மொழி, பொருளாதாரம், தனித்துவமான கலாச்சாரம் உண்டு. எமக்கும் இவை அனைத்தும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
அன்புக்குரியவர்களே இலங்கை மக்களாகிய நாங்களும் நீங்களும் பேரழிவுகளைச் சந்தித்த அதேவேளையில் அந்நிய ஆயுத வியாபாரிகளும் தரகர்களும் கோடிகோடியாக இலாபம் வைத்து எம்மைக் கொள்ளையடித்தார்கள். இதுமட்டுமா போரின்போதும் அதன்பின்பும் எமக்குப் பலவித நெருக்கடிகளைக் கொடுத்து எமது மூலவளங்களையும் மனித உழைப்பையும் கொள்ளையிடுகின்றார்கள்.
புல்மோட்டையில் இல்மனைட் வளமும் கொள்ளையடிக்கப்படுகின்றது. வடக்கின் சுண்ணக்கல் வளமும் எண்ணெய் வளமும் இந்தியாவால் அபகரிக்கப்பட திட்டம் தீட்டப்பட்டுவிட்டன. இன்னொருபுறம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ரஷ்யா ஒப்பந்தம் எழுதிவிட்டது. சேது சமுத்திர திட்ட மூலம் எமது கடல்வாழ் உயிரினங்களின் வளம் அழிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் கரங்களுக்கு போய்விட்டது. சுதந்திர வர்த்தக வலயம் அந்நிய முதலீடுகளைக் கவர்தல் என்ற பெயரில் எமது மக்களின் மனித உழைப்பு மலிவான விலையில் கொள்ளையிடப்படுகின்றது.
இலங்கை "பெண்களின் சொர்க்கம்" என்ற விளம்பரம் செய்யப்படும் அளவிற்கு உல்லாசப் பயணத்துறை என்ற பெயரில் கலாச்சார பாரம்பரியமூட்டல்களால் பெண்கள் கேவலப்படுத்தப்படுகின்றனர். பதினான்காயிரத்திற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர் வெளிநாட்டவரின் பாலிய வக்கிரத்திற்கு பலியாகி எதிர்காலத்தை இழக்கின்றார்கள்.
ஆம், எங்கள் மூலவளங்களும் மனித உழைப்பும் கொள்ளையிடப்பட்டு எமது தேசம் ஒட்டாண்டி நிலைக்கு தள்ளப்படுகின்றது. இப்பேராபத்தில் இருந்து எம்மை நாம் மீட்க நாம் உரிமை கொண்டு ஐக்கியப்பட்டு எழுச்சிபெற வேண்டும். இந்நாட்டில் பெரும்பான்மை சிறுபான்மை என எதுவுமில்லை என்பது வெறும் வெற்றுக்கோசமாக இருந்துவிடக்கூடாது. இனியும் அடக்குபவர்களோ அடக்கபடுபவர்களோ இல்லை என மிளிருபடவேண்டும் என்பதே நமது அவாவாகும்.
நிற்க, இப்படியான ஒரு புறச்சூழலில் இப்போரின் கொடுமைகளையும் அதன் பின்னரான காலத்தில் கொடுமைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் கிளிநொச்சி முல்லத்தீவு மாவட்ட மக்களின் இடர்களை கவனித்து களைவதில் முக்கிய பணி எனக்கு அதிகமாக உள்ளதாகவே நான் உணர்கின்றேன். நாம் போருக்கு நேரடியாகவே முகங்கொடுத்தவர்கள். இந்த போர் எங்கள் மீது விமானங்கள் குண்டுகளை வீசியது, எறிகணைகள் எங்கள் உடல்களை துளைத்தன. துப்பாக்கி வேட்டுக்கள் எங்களை துளை போட்டன. மரணம் எங்களை விரட்ட விரட்ட இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து ஓடினோம், போகுமிடம் தெரியாமலேயே வெட்டவெளிகளில் வீதியோரங்களிலும் கூடார வாழ்க்கையை ஏற்றோம். மீண்டும் மீண்டும் போர் எங்களை துரத்திய போதும் ஓடினோம். இருப்பினும் மரணங்களைத் தவிர்க்க முடியவில்லை. உடலுறுப்புக்கள் இழப்பதை தவிர்க்க முடியவில்லை. இறந்த உடல்களை எடுத்து புதைக்கவும் வழியின்றி ஓடினோம். உணவில்லை குடிக்க நீரில்லை இயற்கை கடன்களை கழிக்க இடமில்லை, அடுத்த நிமிட உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கைக்கு இடமில்லை, முள்ளிவாய்க்காலுக்குள் மூன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் முடக்கப்பட்டோம்.
உலகின் நற்பண்புகளுக்கும் மனிதாபிமானமாக காட்டப்பட்ட நடவடிக்கைகள் எங்களை மரணக்குழிகளுக்குள் தள்ளின. இறந்தவர் போக எஞ்சியோர் நந்திக்கடல் தாண்டினோம். வவுனியாவில் அகதிமுகாமுக்குள் எங்கள் வாழ்வு முடக்கப்பட்டது. உணவுக்களஞ்சியமான வன்னிமண்ணில் உற்பத்தியைப் பெருக்கி மற்றவருக்கு உண்டி கொடுத்த நாம் ஒருபிடி சோற்றுக்கு கையேந்தி வரிசையில் நின்றோம். இன்று எம்மில் ஒரு பகுதியினர், ஆறு தகரங்களுடனும் ஆறுமாத நிவாரண பொருட்களுடனும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். ஏனையோர் இன்னும் முகாம்களில். போர் முடிந்து ஓர் வருடம் ஓடிப்போய்விட்டது. எம் துயரங்கள் முடிய இன்னும் எத்தனை வருடங்கள் போகும் என்பது எமக்குள்ள கேள்வி. போராளிகள் என்ற பெயரில் இன்னமும் பல ஆயிரமவர் தடுப்புமுகாம் அவலங்களுக்குள் தவிக்கின்றனர். பெற்றோர்கள் தம் பிள்ளைகளைப் பார்த்துவிட மணிக்கணக்காக மழையிலும் வெயிலிலும் காத்துநிற்கின்றனர். இன்னும் எத்தனையோ பெண்களும் பிள்ளைகளும் எங்கையென்று அறியமுடியாது உறவினர் அலைந்து திரிகின்றனர் . ஒவ்வொரு நாளும் காயப்பட்டு சிகிச்சைக்காக உலங்குவானூர்தியில் ஏற்றப்பட்ட எத்தனையோ பேரை தேடி விளம்பரங்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இச்சபையில் பெருமைக்குரிய உறுப்பினர்களே ஒரு ஜனநாயக தேசத்தில் இதுதான் எங்கள் வாழ்வு. இதிலிருந்து நாம் மீளெழ வேண்டும். அந்நிய தேசங்கள் நமது நாட்டின் மூலவளங்களையும் மனித வளங்களையும் கொள்ளையடிப்பதுடன் எமது இறைமையை நிறைவேற்றுவதுடன் பாதுகாக்கவும் நாம் உங்களுடன் ஒன்றிணைய காத்திருக்கின்றோம். ஆனால் நாம் மனிதர்களாக வாழும்போது மட்டும்தான் அது சாத்தியப்படும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எல்லோரும் இந்நாட்டு மக்களென மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் வார்த்தைகளை நேசிக்க முயலுங்கள். உரிமை பறிக்கப்பட்டவர்களும் உரிமை பறிப்பவர்களும் ஒரே சகோதரர்களாக எப்படி வாழமுடியும்? எங்கள் சகோதர்களே மக்கள் சார்பில் மீண்டும் நான் உங்களைக் கேட்பது, மீண்டும் எங்கள் வாழ்வை ஆரம்பிக்க எமக்கு வழிவிடுங்கள். உருளும் உலகப்பந்தின் இந்த அழகிய மாங்கனித் தீவிலே கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால வரலாற்று சிந்தனையை கைவிட்டு, இருபத்தோராம் நூற்றாண்டுக்குரிய நவீன சிந்த்னையின்படி இனப்பிரச்சினையை அணுகவேண்டும். சிங்கள மக்களும் தமிழ்பேசும் மக்களும் இலங்கைத் தீவின் இணை உரிமையாளர்களும் இணைப் பங்காளர்களும் என்ற மனபாங்குடன் ஒரு புதிய அரசியலை அணுக அரசாங்கம் தயாராக வேண்டும்.
தற்போது சிங்கள மக்களிடம் தமிழரை வெற்றிகொண்ட மனப்பாங்கும், தமிழரிடம் வேதனையும் வெறுப்பும் நிறைந்த நிலையும் காணப்படுகின்றது. ஒரே நாடு ஒரே மக்கள் என்று சொல்லிக்கொண்டே பூநகரி வெற்றி விழாவையும், கிளிநொச்சி வெற்றி விழாவையும், முள்ளிவாய்க்கால் வெற்றி விழாவையும் கொண்டாடிய தினமும், இனிவரும் நாட்களில் மே மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதிவரை கொண்டாடப்படவுள்ள இராணுவ வெற்றிவிழாவும், தமிழர்களின் மனங்களை எப்படி உடைத்து சிதறிடிக்கப்போகின்றது என்பதை சிந்தியுங்கள். இராணுவத்தால் தீவு நிரம்பி வழிந்து ஒன்றுபட்டது போல் காணப்பட்டாலும், மனத்தால் தீவு இரண்டுபட்டே இருக்கின்றது. புத்தபகவான் பரிநிர்வாணம் அடைவதற்காக தவமிருந்தார் என்ற மகிமை சிங்கள மக்களுக்கு தெரியும்.
சுதந்திர இலங்கையில் இதுவரை இரண்டரை லட்சத்திற்கும் மேலான உயிர்களை இழந்து தமிழ்மக்கள் தமது உரிமைக்காக தவமிருக்கின்றார்கள் என்ற உண்மையை சிங்கள சகோதரர்களும் இந்த உலகமும் புரியும் நாள் வந்திருக்கின்றது. தன் சொந்த சகோதர இனத்துடன் அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்ள தயாரில்லாமல், அந்நிய நாடுகளிடம் கையேந்தி தனது சொந்த தமிழ் மக்களுக்கெதிரான அரசியலை வலைவீசி வரும் அரசாங்கங்கள் நடத்தியதன் விளைவாய் இலங்கைத் தீவை அந்நிய அரசுகளின் காலடிக்குள் சிக்குண்டிருப்பதையும் ஆட்சியாளர்கள் உணர இன்னும் எவ்வளவு காலம் எடுக்குமோ தெரியாது.
ஒரு இனத்தை எந்த இனம் ஒடுக்குகின்றதோ அந்த இனமும் அமைதியாக இருக்க முடியாது அந்த நாடும் சுபீட்சம் அடைய முடியாது. அத்துடன் எம் ஓரினத்தை ஒடுக்க எடுத்த நடிவடிக்கைகளின் விளைவால் அந்நிய தேசங்களிடம் அடிமைப்பட்டு போகவும் நேரும். சுதந்திரமும் சுபீட்சமும் நிறைந்த இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென்றால், அது ஏனைய இனங்களின் தனித்துவ உரிமைகளை அங்கீகரிப்பதிலும் அவர்களுடன் அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்வதிலுமே அதனை ஆரம்பிக்க வேண்டும். அதற்கான துணிச்சலையும், தூரப்பார்வையையும், இன்றைய அரசாங்கம் முன்னெடுக்குமா என்பதே இன்றைய கேள்வியாகும்.
முதிர்ந்த அரசியல் அனுபவமிக்க சம்பந்தர் ஐயா தலைமையில் இதற்கான வாய்ப்பை அளிக்க எமது கட்சி தயாராக உள்ளது. இத்தகைய அரிய வரலாற்று வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல தீர்வை ஏற்படுத்தி, புதிய இலங்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக வேண்டும். இதனை தவறவிட்டால், வரலாறு தான் விரும்பும் இன்னொரு திசைக்கு தீர்வை இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.
சுனாமியாலும் யுத்தத்தாலும் அழிந்து சின்னாபின்னப்பட்டிருக்கும் தமிழ்பேசும் மக்களின் மனங்களைப் புரிந்து அவர்களின் துன்பங்களைப் பகிர்ந்து அவர்களின் தனித்துவமான உரிமைகளை புரிந்து அதற்கேற்ப நியாய பூர்வமானதும் நீதியானதுமான தீர்வை காணவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. நாம் இரு சுதந்திரமான தேசிய இனங்களாக ஒரு நாட்டின் மக்களாக ஒன்றினைந்து நம் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற பிரகடனத்தை மனமுவந்து நாம் அனைவரும் நினைப்போம் என்று கூறி என் கன்னி உரையை நிறைவு செய்கின்றேன்.

04 மே 2010

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்காக சட்ட சபையில் குரல் எழுப்புகிறார் துணை முதல்வர் ராமசாமி!







இலங்கையில் வடக்கு பகுதியில் உள்ள வதை முகாம்களில் அடைபட்டுக்கிடந்த ஈழத் தமிழர்கள் தங்கள் உயிர்களை பாதுகாத்துக்கொள்ள 6 பெண்கள், 8 குழந்தைகள் உட்பட 75 பேர் கடந்த 19ஆம் தேதி சிறிய கப்பல் மூலம் அடைக்கலம் கொடுக்கும் நாட்டை நோக்கி புறப்பட்டனர்.
மலேசிய அரசால் இறக்கப்பட்ட அவர்கள் கையில் விலங்கு பூட்டப்பட்டு அங்குள்ள முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
அதன்பிறகு பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என தனித்தனியாக முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்குள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் உள்ள முகாம்களில் ஆண்களையும், மற்றொரு முகாமில் பெண்களையும், வேறொரு முகாமில் குழந்தைகளையும் என தனித்தனியாக பிரித்து அடைத்து வைக்கப்பட்டுள்ளளனர்.
மலேசியாவின் பிணாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, நாளை சட்டசபையில் இந்த விவகாரம் தொரபாக குரல் எழுப்புகிறார்.
மலேசிய அரசு இலங்கை தமிழர்களை திருப்பு அனுப்பக்கூடாது. அவர்களை சுதந்திரமாக இருக்க விட வேண்டும். ஆண்கள், பெண்கள்,குழந்தைகள் என்று தனித்தனியே பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.
பெண்களையும் குழந்தைகளையும் சேர்ந்து இருக்க செய்ய வேண்டும். அவர்கள் விரும்பு தேசத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்பனவற்றை வலியுறுத்து நாளை குரல் எழுப்பப்போகிறார்.
முன்னதாக அவர், அகதிகளுக்கான ஐநா அவை அதிகாரிகளிடம் இந்த விவகாரம் தொடர்பாக கோரிக்கை விடுத்து வலியுறுத்தவிருக்கிறார்.

ஓய்வறியா தலைவன்-கண்மணி.

நெடுந்தூரத்திற்குஅப்பால் இருந்து வரும்பாடலைப்போலதெளிந்த நீரோடை ஒலிக்கிறது.உயரமான மரக்கிளைகளைஊடுருவி நிலவொளி வருகிறது.இரவு நீண்டு செல்கிறது.அந்த மனிதர் இன்னும்விழித்திருக்கிறார்.நாட்டைப் பற்றியகவலையால்அவர் இன்னும் தூங்கவில்லை.
அவர் தொடர்ந்து தமது மண்ணின் விடுதலைக்காக உழைத்தார். இன்றுவரை, இந்த வினாடிவரை அறிவியல் பூர்வமான அவருடைய சிந்தனையும், ஆக்கப்பூர்வமான லட்சியமும், அடக்கமான உழைப்பும், அகலமான பார்வையும், ஆழமான அன்பும் கொண்ட ஒரு மகத்தான மனிதர், நமது தாய் மண்ணின் விடுதலைக்காக, தமிழ் மண்ணின் மானத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறார். அவர் கரங்களில் சுமந்த கருவிகள், பகைவனின் பகை முறித்தது. அவரின் மனங்களில் தோன்றிய பேராற்றல் பகைவனின் சதி முறித்தது. ஆனால் நமக்குள் உள்ள ஒற்றுமையை அவரால் உண்டாக்க முடியவில்லை. அது நம் மனங்களுக்குள் இருக்கும் மாசு என்பதை அவர் உணர்ந்திருந்தார். இயக்கம் என்பது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது என்பதை நம்மைக் காட்டிலும் அவர் நன்கு அறிந்திருந்தார். ஓடாத நதி, குட்டையாகி விடும். பாயாத மின்சாரம், இருளடைந்துவிடும்.
அவர் நதியைப் போலவும், மின்சாரத்தைப் போலவும் ஓய்வென்பது அறியாமல் உழைக்கும் ஒப்பற்ற தலைவராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். நமக்கான சிறப்பு தன்மை வாய்ந்த ஒரு வரலாற்றை உருவாக்கித்தர வேண்டும் என்பதிலே அவர் அளவில்லா ஆசைக் கொண்டிருக்கிறார். ஆசை, அழிவிற்கு காரணம் என புத்தன் சொன்னான். ஒரு கவிஞன் சொன்னான். ஆசைப்படாமல் இருக்க, புத்தன் ஆசைப்பட்டான் என. எம் தலைவனுக்குக்கூட ஆசை இல்லை தான். ஆனால் எமது மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்ற ஆசை அவரின் குருதியோட்டங்களில் குவிந்து கிடந்தது. அவர் இரத்த நாளங்கள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், அதில் ஓடும் அணுக்கள் அளவிட முடியாத ஆற்றலை அவரின் மூளைக்குள் பாய்ச்சிக் கொண்டிருந்தது.
மூளையிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு சொல்லும் செயலும் நமக்கான விடியலைக் குறித்தே நிகழ்ந்து கொண்டிருந்தது. அவர் நிம்மதியாக உறங்கி எத்தனை ஆண்டுகள் ஆனதோ? அவர் மகிழ்வோடு சிரித்து எத்தனை காலங்கள் ஆனதோ? அவரின் கவலை எல்லாம் தமது நாட்டின் விடுதலை ஒன்றுதான். அந்த தலைவன் உயிரைவிட மேலாக விடுதலையையும், தன்மானத்தையும் உயர்த்திப்பிடித்தார். கவரிமான் பரம்பரைக்கு இவன் ஒரு கோனார் உரை. எப்படி மானத்தோடு வாழ்வது என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு. சிங்கள பேரினவாத அரசு ராசபக்சே சகோதரர்களின் பேயாட்டம் ஏதோ எம்மை தோற்கடித்ததைப்போன்ற ஒரு பிரம்மையை பரப்பிக் கொண்டிருக்கிறது.
இந்திய-பார்ப்பனிய பனியா கூட்டாட்சி எமது மக்களை கொன்று போட்டதை வெற்றியாக கருதிக் கொண்டிருக்கிறது. பரிதாபத்திற்குரிய அவர்களை நாம் நினைத்து கவலைப்படுகிறோம். வெற்றி என்பது எங்கிருந்து தோன்றுகிறது என்பதை அவர்கள் உணராதவர்களாக இருக்கிறார்கள். இதுவரை வரலாற்றில் மக்கள் என்றுமே தோற்றது கிடையாது. மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் எல்லாம் மண்மேடாய் ஆனபோதும் மக்கள் மகத்தான வெற்றிப்போரொளியாய் இந்த மண்ணில் வளம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மக்களை தோற்கடித்ததாய் இருமாப்போடு பேசும் இவர்களுக்கு வரலாறு மீண்டுமாய் பதில் சொல்லும்.
வியெட் – பாக் கார்டுவேடிக்கையானது.குரங்குகள் கூச்சல்,பறவைகளின் இன்னிசைநாள்முழுவதும் கேட்கும்.பார்வையாளர்களுக்குசோளப்பொறி.வேட்டை முடிந்து இறைச்சி.நீல நிறம் மலைகளைதெளிவான நீரோடையைநிதானமாக ரசிக்கலாம்.இனிக்கும் ஒயினும்,சூடான தேனீரும்சுவைக்கலாம்.நிலாவின் அழகையும்வசந்தத்தின் எழிலையும்ரசித்து மகிழ்வதற்குஎதிர்ப்பு வெற்றியடைந்த பிறகுநாங்கள் மீண்டும் வருவோம்
என்பதை எமது பகைவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்கிறோம். நாம் சந்தித்திருப்பது வெறும் எதிர்ப்புத்தானே தவிர, தோல்வி அல்ல. எங்கள் இனம் சூரியனை தலையில் சுமக்க சும்மாடு கேட்கும் இனம். எமது இனம் சுண்டுவிரலில் இந்த பூமியை சுழற்றிப் பார்க்கும் இனம். எமது இனம் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு வாளோடு முன் தோன்றிய மூத்த தமிழினம். எம்மை ஒழித்து வெற்றிக் கொடி கட்டுவதென்பது, சூரியனை வெட்டிவந்து அடுப்பெறிப்பதற்கு சமமாகும். எம்மை வெற்றிக் கொண்டு அரசாட்சி நீடிப்பதென்பது கடலை உறிஞ்சி காலத்தை கடத்துவதாகும். நாம் வெற்றிப் பெறுவதற்காகவே பிறந்திருக்கிறோம். இந்த நேரத்தில் எமது தேசிய தலைவரிடமிருந்து நமக்கு சொல்லும் அழைப்பு இதுதான்.
எந்த பொறுப்பையும்நிறைவேற்றி,எந்த துயரையும் சமாளி.எந்த எதிரியையும்முறியடித்துவெற்றிக் கொள்
என்பதுதான். ஆகவே, இந்த காலக்கட்டம் நாம் பொறுப்புகளை தோள்மீது சுமக்கும் காலக்கட்டம். துயர்களை அசட்டை செய்து, அதை தூக்கி எறியும் காலக்கட்டத்தில் நம்முடைய போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிறது. லட்சியத்தை அடைவதற்கு நாம் தயக்கம் கொள்ளும் நிலையை கடந்துவிட்டோம். இந்த உலகமே தாங்காத அளவிற்கு நாம் எமது மண்ணை குருதியால் குளிப்பாட்டினோம். அவலக்குரலால் அடக்கினோம். எமது சத்தம் இந்த பிரபஞ்சத்தின் காற்றை கிழித்துப்போட்டது. எமது போராட்டத்தின் பேரொளி வீர விளைவுகளாய் காற்றிலே பதிவு செய்யப்பட்டது.
காற்று போகும் திசையெல்லாம் எமது வீரம் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும். காற்று நடக்கும் பாதையெங்கும் எமது வீரம் விதைக்கப்பட்டிருக்கும். வீரத்தை எம் குருதியில் பாய்ச்சிய ஆற்றல் வாய்ந்த ஒரு தலைவனை நமது இனம் பெற்றிருப்பதே இந்த வரலாற்றில் சிறப்பு தன்மையாகும். ஒருபோதும் வீழ்ந்ததற்காக நாம் கவலைப்பட்டது கிடையாது. ஆனால் எழாமல் இருப்பதற்காகத்தான் கவலைப்பட்டிருக்கிறோம்.
விடுதலைக்கும் விடுதலைக்கும்சிங்களர்கள் வெளியேறும் வரைபொம்மை அரசுகள்குப்புற விழும் வரைநாம் போர் செய்வோம்போர் வீரர்களே!சகோதரர்களே!முன்னேறுங்கள்.வடக்கும் தெற்கும்ஒன்றுகூடினால்அந்த வசந்தத்தைக் காட்டிலும்ஆனந்தம் உண்டோ!
என்று நாம் நமது மகிழ்வை கொண்டாடி, கடந்து செல்லும் காலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். எந்த இனத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு எமது இனத்திற்கு இருக்கிறது. உலகெங்கும் நாம் பரந்து விரிந்திருக்கிறோம். மொழியால், உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம். ஆனால் பிரிவால் வலியோடு வாழ்கிறோம். நமக்குள் இருக்கும் பிரிவினை அடையாளத்தை கழற்றி எறிவோம். தமிழர் என்கின்ற ஒரே அடையாளத்தின் கீழ் நம்மை ஒன்றிணைப்போம். ஓய்வறியா ஒரு தலைவனை நாம் பெற்றிருக்கிறோம்.
அத்தலைவனின் வழிகாட்டுதலும், அத்தலைவனின் நடத்தல்களும் நம்மை நானிலத்தில் சிறக்க வைக்கட்டும். லட்சக்கணக்கில் வாழும் இனங்களுக்கெல்லாம் சொந்த நாடு இருக்கிறது. கோடிக்கணக்கில் வாழும் நாம் அன்னியனுக்கு அடிமையாய் இருப்பது அவமானம் என கருதுவோம். நாம் நம்பியவர்கள் எல்லாம், சொந்த சுகத்திற்காய் நம்மை களப்பலியாக்கினார்கள். அவர்கள் குரல்களில் இருந்த உறுமல் உள்ளத்தில் இல்லை. அவர்கள் புலிகளைப்போல் வேடம் தரித்த பொல்லாத நரிகளாய் நம்மை புரட்டித் தள்ளினார்கள். விடியலுக்காய் ஏங்கும் போது, நமது விழிகளை குருடாக்கிய வீணர்களை, நாம் இங்கே தலைவர்களாக பெற்றோம். ஆனால் நாம் அடிமை விலங்கை உடைத்தெறிய, நமது மனக்குமுறல்களை சீர் செய்ய, மாண்புமிக்க தலைவன் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவரோடு கரம் இணைப்போம். அவரோடு இணைந்த வாழ்வு நமது எதிர்காலத்தை வளமாக்கும். அவர் குறித்த தவறான செய்திகளை இருட்டறைக்குள் வைத்து எறித்து சாம்பலாக்குவோம். அவரே நம் தலைவர். அவர் தான் நமது வழிக்காட்டி. நம்மை அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்த ஆற்றலாளர் என்பதை நமது மனத்தசைகளில் பதிவு செய்வோம். ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவரின் குரல் சம்மட்டியாய் கேட்கும். அடக்கப்பட்டவர்களுக்கு அவரின் செயல் ஆனந்தமாய் இருக்கும். அந்த தலைவனின் பாதையே, நமது பாதை என நம்மை நாம் உறுதிப்படுத்துவோம். கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட நமக்கு அந்த மாபெரும் சிந்தனையாளனின் ஆற்றலுக்குள் புதைந்து போனோம். அதுவே நம்மை எழுச்சியோடு வாழ வைக்கும். நமக்கான ஒரு நாடு, நமக்கான ஒரு அரசு. அது தமிழர்களுக்கான அரசு. தமிழர்களுக்கான நாடு. அதை அடையும் வரை ஓய்வு வேண்டாம். உறக்கம் வேண்டாம். தலைவனோடு இணைந்து பணியாற்றுவோம்.
(இதில் உள்ள கவிதைகள் அனைத்தும் தோழர் ஹோசிமின் படைப்புகளிலிருந்து எடுத்தாளப்பட்டது)

உடுப்பிட்டி மாவீரர் துயிலும் இல்லம் படையினரால் அழிப்பு!

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி எல்லாளன் குளத்தில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள், இலங்கைப்படையினரால் புல்டோசர் மூலம் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமையன்று இரவு இடம்பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

உடுப்பிட்டியில் உள்ள மக்கள் இதனை தொலைபேசியின் மூலம் தமக்கு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

1996 ஆம் ஆண்டு படையினர் இந்த மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்தனர்

எனினும் 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்தக்காலப்பகுதியில் இந்த இல்லங்கள் புனரமைக்கப்பட்டன.

அண்மையில் வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடும் படையினரால் அழிக்கப்பட்டது.

அத்துடன், நெல்லியடியில் அமைக்கப்பட்டிருந்த கரும்புலி மில்லர் நினைவுத்தூபியும் படையினரால் அழித்தொழிக்கப்பட்டுள்ளது.

03 மே 2010

காரியம் முடிந்ததும் சுட்டுக்கொலை!

யுத்தம் முடிந்ததை தொடர்ந்து முகாமிலிருந்து தப்பி வந்த போராளிகள், யாழ்ப்பாணம் வவுனியா பகுதியில் முன்னமே நடவடிக்கைகளுக்காக அனுப்பபட்ட போராளிகள் என பலரை சிநேகபூர்வமான பேசி, ஆசைவார்த்தைகாட்டி இராணுவத்திடம் சரணடையவைக்கவும் அவர்களை இலங்கை புலனாய்வு துறையுடன் இணைக்கும் வேலையையும் நேற்றுவரை கச்சிதமாக செய்து வந்தார் இவர். இறுதியாக நெல்லியடிப்பகுதியில் இராணுவத்திடமிருந்து பெற்றுகொண்ட பலகோடி ரூபாயில் ஒரு புகைப்பட நிலையமொன்றை திங்கட்கிழமை ஆரம்பிக்க இருந்தார். இன்நிலையில் இன்று அதிகாலை தனது புதிய வர்தக நிலையத்துக்கு செல்லும்வழியில் இடைமறிக்கப்ட்ட சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது சடலத்தில் எட்டு கைத்துப்பாக்கி ரவைகள் சல்லடை பேடப்பட்டிருந்ததாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய இவரை இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே சுட்டுக்கொன்றுவிட்டு, இப் பழியை புலிகள் மீது சுமத்த தற்போது எத்தணிக்கின்ற அதேவேளை இதனை ஒரு காரணமாகக் காட்டி, யாழில் சோதனைச் சாவடிகளை மீண்டும் உருவாக்கவும், இராணுவம் நிலைகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்த முயல்கிறார்கள் பொய்யாக.இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் அனைவருக்கும் இது ஒரு நல்ல பாடமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

செய்தி:அதிர்வு இணையம்.

நாடு கடந்த அரசாங்கத்திற்கான தேர்தல்,அச்சத்தில் சிறிலங்கா அரசு.



புலம்பெயர்ந்த நாடுகளில் வெற்றிகரமாக இடம்பெற்ற நாடுகடந்த அரசாங்கத்தின் தேர்தலையடுத்து சிறலங்கா அரசாங்கம் பீதியடைந்துள்ளதாக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் வெளிப்பாடாகவே சிறீலங்கா அரசாங்கம் அது சட்டவிரோதமானது என அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் விடுத்துள்ள செய்தியில் இது புலிகளின் நடவடிக்கைகளுக்கு உயிர்கொடுக்க முயல்வதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.
நாடுகடந்த அரசாங்கத்தில் 135 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள் என்பதுவும் கனடாவில் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளது தெரிந்ததே.
கனடாவில் பெருமளவில் மக்கள் வாக்களித்ததே இவ்வாறு சிறீலங்கா அரசை அச்சமடைய வைத்துள்ளதாகவும் இதனையடுத்தே கனடாவிற்கான இலங்கை தூதுவர் சித்திராங்கனி வாகிஸ்வரா இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

மலேசியாவில் தடுத்துவைத்துள்ள தமிழர்களை அவர்கள் விரும்பும் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்-சீமான்.



இது குறித்து நாம் தமிழர் இயக்கத் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
காக்கை குருவிக்கு கூட உலகில் எங்கும் செல்லலாம்,வாழலாம் என்ற நிலை உள்ளது.ஆனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கு பாடிய தமிழன் இன்று தன் தாய் நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கும் உயிர் வாழ முடியாத நிலை உள்ளதை நினைத்தால் வேதனையில் நெஞ்சம் விம்முகின்றது.மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள 75 தமிழர்கள் நிலையும் இவ்வாறே உள்ளது.
சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீது தொடுத்த போரினால் பாதிப்புற்று, வன்னி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் பெண்கள்,குழந்தைகள் உட்பட 75 பேர், தங்களால் இனி இலங்கையில் வாழ முடியாத நிலையில் வேறு ஏதாவது நாட்டிற்கு அகதிகளாகப் போய் பிழைத்துக்கொள்வோம் என்று கப்பலில் தப்பித்துச்சென்றனர்.ஆனால் அப்படிச் சென்றவர்களின் படகை மலேசியா காவல்துறையினர் நடுக்கடலில் சுற்றிவளைத்துக் கைது செய்து,தற்பொழுது அவர்களை கோலாலம்பூருக்கு அருகில் உள்ள முகாமில் வைத்து விசாரணை செய்து வருகின்றது.தற்பொழுது உள்ள நிலவரப்படி அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் திட்டத்தில் மலேசிய அரசு இருப்பதாகத் தெரிகின்றது.இது அவர்களை மரணக்குழிக்குள் தள்ளுவதாகும். நாம் மலேசிய அரசிடம் வைக்கும் கோரிக்கை எல்லாம் எங்கள் தமிழர்களை,தங்கள் தாய் நாட்டில் உயிருக்கும் உடமைக்கும் உத்தரவாதம் இல்லாமல் எங்காவது சென்று பிழைத்துக்கொண்டால் போதும் என்று அகதிகளாகச் சென்ற தமிழர்களை அவர்கள் விரும்பினால் உங்கள் நாட்டில் அனுமதியுங்கள், அல்லது அவர்களுக்கு உரிய உணவு,மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்து அவர்களை ஏற்றுக்கொள்ள விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வையுங்கள்.இதனை பன்னாட்டுச் சட்டங்களின் படி செய்யாவிட்டாலும் மனிதாபிமான அடிப்படையிலாவது செய்வீர்கள் என்று நம்புகின்றோம்.மீண்டும் அவர்களை சிங்கள இன வெறியனிடம் அனுப்ப வேண்டாம் எனக்கேட்டுக்கொள்கின்றோம்.
நம் தாய்த்தமிழ் உறவுகளின் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் இயக்கம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மலேசிய தூதரிடம் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு எனது தலைமையில் சென்று மனு கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.தமிழினச் சொந்தங்கள் அனைவரும் திரண்டு வந்து தமிழர் வாழ்வுரிமைக்கான இந்தப்பயணத்தில் இணைந்து கொண்டு ஆதரவு தரும் படி கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்கள் மலேசிய அரசுக்கும் அவரவர் நாட்டில் உள்ள மலேசிய தூதரகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் அனுப்ப வேண்டுமாயும் கேட்டுக்கொள்கின்றேன்.

நெல்லியடியில் இளைஞர் சுட்டுக்கொலை!

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து தடுப்பு முகாமிலிருந்து, பின்னர் யாழ்ப்பாணம் வந்து மீளக்குடியேறிய 26 வயதான சிவலிங்கம் சபேசன் என்பவரை இனந்தெரியாத நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 அளவில் சுட்டுக்கொன்றுள்ளனர். கொலைதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், இவர் நெல்லியடியில் யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் வைத்துச் சுடப்பட்டதாகவும் எமது நிருபர் கூறுகிறார். இலங்கை ராணுவத்தினர் பாதுகாப்புக் கொடுக்கும் சிலிங்கோ காப்புறுதி நிறுவனம் மற்றும் வடமராட்சி தொலைத்தொடர்பு கட்டடம் ஆகியவற்றுக்கு அண்மையாகவே இந்த நபர் சுடப்பட்டுள்ளார். ஈழப் போர் 4 முடிவடைந்து ஒரு வருடம் ஆகும் நிலையில், துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டு நடந்த முதலாவது கொலை இதுவாகும். இலங்கை பாதுகாப்புச் செயலாளர் யாழ் குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள 2, 3 நாட்களில் இவ்வாறான ஆயுததாரிகள் பிரசன்னமாகியிருப்பது அப்பகுதியில் பதற்றத்தை உண்டுபண்ணியுள்ளது. மேற்படி சபேசன், 2004 இன் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது அப்போதைய பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக பிரச்சாரங்கள் செய்திருந்தார். அதையடுத்து ராணுவத்தினர் தொந்தரவு கொடுத்ததால் அவர் வன்னிக்குச் சென்று, அங்கு போர் நடந்ததால் திரும்பி வந்து தும்பளையில் குடியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:அதிர்வு இணையம்.

02 மே 2010

தமிழனா பொறந்திருந்தா எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்கமுடியும்-பிரகாஷ்ராஜ்.

என் தேசத்துமண்ணே!உனக்கு என் ரத்தத்தை தருவேன்.இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்...`அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இறந்தாரா இல்லையானு மர்மம் ஈழத்தமிழர்களைத் தூங்க விடாம பண்ணிட்டிருக்கிற நேரத்தில் பிரபாகரன் எனக்கு எப்படி தொடுவானம் ஆனாருன்னு யோசிச்சேன். நாம தொடணும் நினைக்கிற, ஆனால் தொடமுடியாத வானமா இருக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை. சரி, தவறு முடிவுகளைத் தாண்டி பிரபாரகனின் வாழ்வுக்கும் அர்த்தம் இருக்கு. மரணத்துக்கும் பெருமை இருக்கு.கன்னடாதான் எனக்கு தாய்மொழி. இந்தியாதான் என் தாய்நாடு. இலங்கையில் தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும். அடக்கு முறை உங்களை எந்தத் திசையில் செலுத்தும்னு யாருக்கும் தெரியாது. எல்லா வசதிகளோடும், வாய்ப்புகளோடும் வாழுற நமக்கு நம்பிக்கையான நாலுபேரை சேர்க்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு. ஆனா, பிரபாகரன் பின்னால் உயிரை துச்சமா மதிக்கும் பெரிய இளைஞர் கூட்டம் சேர்ந்ததுக்கு முக்கியமான காரணம், அவர்கிட்டே இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான். ஒரு பேட்டியில் முதன்முதலா நான் அவரை கவனிக்க ஆரம்பிச்சேன். ``புல்லைக்கூட மிதிக்கக்கூடாது நினைக்கிற அப்பாவுக்கு மகனா பிறந்து நீங்க, வன்முறையைக் கையில் எடுக்கலாமா?``னு கேள்வி கேட்கிறார் நிருபர். `புல்லும் துன்பப்படக்கூடாது`னு நினைக்கிறவருக்கு ஒரு பையன் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் நான் இருக்கிறேன்` என்பது பிரபாகரனின் பதில். சக மனிதர்கள் துன்பப்படும்போது அதைப் பொறுத்துக்கொள்ளாத இயல்புதான் அவரின் மாபெரும் கௌரவம். அதை சிந்தனையா மட்டும் வெச்சுக்காம உயிரைப் பணையம் வைத்து மக்களின் துன்பத்தை நீக்க போராடியது அவரின் பெருமிதம். குழந்தை இயேசுவை பிரதிபலித்த ஒரு முகம், முப்பது வருஷத்துக்குப் பிறகு, இயேசுவை சிலுவையில் அறைந்தவனின் கொடூர முகத்தை பிரதிபலித்ததுனு ஒரு கதை கேட்டிருக்கோம். துப்பாக்கி தூக்கி ஒரு வாழ்க்கை நடத்தணும்னு பிரபாகரனுக்கோ, ஆயுதம் தூக்கிய புலிகளுக்கோ பிறக்கும்போதே இலட்சியம் இருந்திருக்க முடியாது. என் அம்மா தீவிரமான கிறிஸ்டியன். இப்பவும் இயேசுவைத் தவிர அவளுக்கு வேற உலகம் தெரியாது. தலைவலி வந்தாலும் இயேசு கிறிஸ்துதான் முதல் டாக்டர். வாரம் தவறாம சர்ச்க்குப் போறதும், நாள் தவறாம பிரார்த்தனைப் பண்றதும் எனக்கு பழக்கமான விஷயம். நியாயமா நானும் தீவிரமான கிறிஸ்டியனா மாறி இப்ப வாரம் தவறாம சர்ச்சுக்கு போகவேண்டியவன். ஆனா, சின்ன வயசுல ஏற்பட்ட அனுபவங்களால், சர்ச் எனக்கு அலர்ஜியாகிடுச்சு. நான் படிச்ச கிறித்துவ பள்ளியில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சிஸ்டரை எப்பவும் பெரிய மூங்கில் குச்சியோடுதான் பார்த்திருக்கேன். என்னுடைய சின்ன சின்ன தவறுகளுக்கு அவங்களுடைய முரட்டு அடி, என் பாதங்களில் பட்டி உயிர்ப்போகிற வலி தெறிக்கும். அடிச்சவங்ளே, `அன்பான இயேசுவும் தூரமாகிட்டார். ஜெபமும் தூரமாகிடுச்சு. எனக்கு ஏற்பட்ட சின்ன சின்ன கசப்பான அனுபவங்களே என் கடவுள் நம்பிக்கை தீர்மானித்து, இப்ப வரைக்கும் சர்ச் மேல அலர்ஜி இருக்கு. நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ எல்லாத்துக்குமே நாம சின்ன வயசில் கேட்டு வளர்கிற விஷயங்களுக்கு, நம்ம குணத்தைத் தீர்மானிக்கிற சக்தி உண்டு. காந்தி அதற்கு சிறந்த உதாரணம். துப்பாக்கி வெச்சிருந்த வெள்ளைக்காரங்களை காந்தி அகிம்சையால எதிர்க்கலையான்னு நிறையபேர் கேட்கிறாங்க. சின்ன வயசுல அரிச்சந்திரன் கதையைக் கேட்டு, `உண்மையை மட்டும் பேசுவது` என்று முடிவெடுத்தார் காந்தினு படிக்கிறோம். ஒவ்வொருத்தரோட பால்ய வயதில் எந்த விஷயம் பாதிக்குமோ அதுவாகவே மாறிப்போகிறதுதான் இயற்கை. உலகம் முழுக்க லட்சக்கணக்கான உதாரணம் இருக்கு. மனிதர்களை மாடுமாதிரி வேலிப்போட்டு அடைத்து கதற கதற அடித்து கொன்ற ஜாலியன் வாலாபாக் கொடுமையை நேரடியா பார்த்து வளர்ந்த ஒரு சின்னப் பையன் பகத்சிங்கா மாறத்தான் செய்வான். உலகத்துக்கு அது நியாயமா இல்லையானு விவாதிக்கலாமே தவிர, பகத்சிங் உருவாவதை யாரும் தடுக்க முடியாது. கேட்டு வளர்ந்த கதையே காந்தியைப் பாதிக்கும்போது, பிரபாகரன் பார்த்து வளர்ந்த துயரம் அவரைப் பாதிக்காதா? கண்ணுக்கு முன்னால ஒரு தவறும் செய்யாத கோயில் குருக்களை உயிரோடு எரித்ததைப் பார்த்த சின்னப் பையன் மனதில் வன்முறை விதைக்கப்படுவதை தடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? சாதாரண ஒரு ஃபுட்பால் மேட்சில் பிரான்ஸ் கால்பந்து வீரர் ஜிடேன், சக விளையாட்டு வீரரை தலையால் வன்மத்தோடு முட்டியதை நிறைய சின்னக் குழந்தைகள் பார்த்திருப்பாங்கன்னு அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டார். அந்த நிகழ்வால் பிள்ளைகள் மனதில் வன்முறை விதை விழும்னு உலகமே பதறுச்சு. `அக்கா, அக்கா`னு பேசிக்கிட்டிருந்த ஒருத்தியை சீரழித்து கொலை செய்கிற காட்சியை ஒரு சிறுவன் பார்த்தா என்னா ஆகுமோ, அதுதான் பிரபாகரன். ஒரு பிரபாகரனை ஜெயிக்கிறதுக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிச்சிருக்கு இலங்கை அரசு. உலகமே வேடிக்கைப் பார்க்க, விலங்குகளைவிட மோசமாக வேட்டையாடப்பட்டார்கள் ஈழத்தமிழர்கள். அதை பல சின்னக் குழந்தைகள் நேர்ல பார்த்திருக்காங்களே நினைக்கும்போது ஈரக்குலை அதிருது. இன்னும் நூறு பிரபாகரன்கள் உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிற அரசாங்கத்தின் அதிகார அறியாமையை என்ன சொல்றது? `ரொம்ப கொடூரமான சர்வாதிகாரி பிரபாகரன்`னு சொல்றாங்க. இனவெறியில் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் இல்லை அவர். இன மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்காக கடைசிவரை களத்தில் நிற்க நினைக்கிற போராளி. தாக்குதல் அல்ல பிரபாகரனின் நோக்கம். தற்காப்பு மட்டுமே. பாம்பின் விஷம்கூட தற்காப்புக்கான ஆயுதமா மாறும். விஷம் கொடுமையானது என்பதில் கருத்து வேறுபாடு யாருக்கும் இல்லை. சம உரிமையை இலங்கை தமிழர்களுக்கு உறுதி செய்திருந்தால் எதற்காக இந்த வன்முறை? தனிப்பட்ட மனிதனின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கு. ஆனால், ஒரு சமூகத்தின் மொத்த கோபமும் ஒண்ணு சேருதுன்னா, அதில் நூறு சதவீதம் நியாயம் இருந்தே தீரணும். அதை ஆதாரங்கள் தேடி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அடிமட்ட வேலைகள் செய்து சேர்க்கும் காசுல, பெரிய பங்கை தன்னுடைய போராட்டத்துக்கு அனுப்பறாங்கன்னா அதில் எப்படி நியாயம் இல்லாம இருக்கும்? ஆயுதம் தாங்கிய இயக்கம் எப்படி ராணுவம் மாதிரி எதிர்தாக்குதல் நடத்தலாம்னு கேட்கிறாங்க. அடிக்கிறதுதான் அராஜகம். திரும்பி அடிக்கிறது தற்காப்புதான். உலகம் முழுவதும் தன்னுடைய ராஜாங்கத்தை பரப்பி அதில் மன்னனா முடிசூடணும்னு நினைக்கிற வல்லரசு தோரணை பிரபாகரன்கிட்டயோ, அந்த போராட்டத்திலோ இல்லை. தன்னுடைய வேரை, அடையாளத்தைப் பாதுகாப்பதுதான் முதன்மை நோக்கம். அதில் வெறும் லட்சியவாதியாக மட்டும் இல்லாமல், தேர்ந்த செயல்வீரனாவும் இருந்தார் பிரபாகரன். சொந்த மண்ணில் வேரைக் காக்கும் போராட்டத்தில் இறந்து போறவங்களும் வேராகிடுறாங்க. கொள்கைக்காக, லட்சியத்துக்காக சாகவும் தயாரா கழுத்தில் எப்பவும் சயனைடு குப்பியோடு இருந்த பிரபாகரன் இப்பவும் எப்பவும் இளைஞர்களுக்கு ரோல்மாடல்தான். என்னுடைய மகன் உயிரோடு இருந்தால், பிரபாகரன் கதை சொல்லி, `உன்னுடைய ரோல்மாடலா அவ`னு சொல்ற அளவு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்திருக்காரு. லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதித்த சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சுகதேவ் எல்லாமே நாம கேட்டு வளர்ந்த ஹீரோக்கள், பிரபாகரன் நாம பார்த்து வளர்ந்த ஹீரோ, ஒரு வேளை அவர் இறந்திருந்தால், அவரைபோன்றவர்கள் நம் கண் முன் இறந்துபோக சம்மதிச்சோம் என்பது நம்முடைய அவமானமே தவிர அவருக்கு அது வீர மரணம்தான். முப்பது வருஷத்துக்கு மேல் ஒரு இயக்கத்தை, அதுவும் உலகமே தடைவிதித்த ஒரு இயக்கத்தை கட்டிக் காத்ததும், வெற்றி பெற்றதும் சாதாரண காரியம் இல்லை. பிரபாகரனைப் போன்ற அர்ப்பணிப்பு உள்ள தலைவர்கள் பெற்றெடுக்கிற ஈரம், ஈழத்தமிழ் மண்ணுக்கு இருக்கிறதே பெருமையான விஷயம்.

உயிர் கண்மணி

நாம் தமிழர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.


கடந்த 24 - 04 - 2010 ராஜபாளையத்தில் குவைத் ராஜா என்பவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் பல்வேறு இதழ்கள், நாளிதழ்களில் அறிவிப்புகள் வந்த போதிலும் 25 -04 -2010 வந்த பத்திரிக்கை செய்திகளில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் இணை ஜெயலாளர் அபே குணரத்தினே கலந்து கொண்ட செய்தி வெளியானது. தமிழின உணர்வாளர்கள் குமுறி எழுந்தார்கள் செய்திகளின் உண்மையறிந்து சிங்களவன் தங்கிய உணவு விடுதி இரவு 9 மணிக்கு முற்றுக்கைகுள்ளனது. ஈழத்தில் எம் தொப்புள் கொடி உறவுகளை கொன்ற சிங்களவனை விரட்டியடிப்போம் என்ற முழக்கத்துடன் திரண்ட ம.தி.மு.க. நாம் தமிழர் இயக்கம், பா.ம.க. மற்றும் தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பால் இரவோடு இரவாக சிங்களக் கும்பல் காவல் துறை உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது. 28 - 04 - 2010 தமிழ் தமிழர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மலை 5 மணிக்கு தொடங்கி இரவு 7 .30 வரை நடைபெற்றது. பொது மக்கள் அனைத்து தரப்பு உணர்வாளர்களும் பெருமளவில் திரண்டு வந்து இந்திய தமிழக அரசுகளை கண்டித்து சிங்களவனுக்கு துணை செய்யும் குவைத் ராஜா போன்ற புல்லுருவிகளை களையெடுப்போம் எனவும் உறுதி ஏற்றனர்.

கொலை அச்சுறுத்தல் காரணமாக யாழ் பேரணி நிறுத்தம்.



யாழ்ப்பாணத்தில் இன்று காலை மக்கள் சக்தி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கடத்தல் காணாமல் போதல் கொலைகள் மற்றும் பயமுறுத்தலகளுக்க எதிராக நடைபெற விருந்த ஊர்வலம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.
மக்கள் சக்தி என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த ஊர்வலத்திற்க்கான அனுமதியை, படைத்தரப்பு குறிப்பாக பொலிசார் அனுமதி வழங்கி இருந்ததாகவும் இன்று காலை அதறக்கான அனுமதியை பொலிசார் மேலிடத்தின் உத்தரவுக்கு அமைவாக மீளப் பெற்றுள்ளதாகவும் ஏற்பாட்டாளரான க.குமாரவேல் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
காலையில் தனக்கு இனம் தெரியாத நபர்களிடம் இருந்து தொலைபேசி மூலம் கொலை பயமுறுத்தல் விடப்பட்டதுடன் தனது குடும்பத்தவர்களை கடத்தப் போவதாக கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் குறிப்பாக பொலிசார் அனுமதி வழங்காமையாலும் தொடர்ந்து இத்தகைய அச்சுறத்தலகள் விடப்பட்டமையாலும் தாம் இந்தப் ஊர்வலத்தை நிறுத்துவததாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலையில் ஊர்வலம் ஆரம்பமாவதாக இருந்த யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்புறத்தில் அதிக எண்ணிக்கையான பொலிசாரும் மற்றும் இராணுவத்தினர் படைகளின் புலனாய்வாளர்களும் குவிக்கப்பபட்டு

இருந்தனர்.

01 மே 2010

தமிழ் மக்களின் ஆதரவை கோருகிறது பிரித்தானிய தொழில் கட்சி.

நாடுகடந்த அரசு உட்பட பிரித்தானியாவில் இருக்கின்ற பிரித்தானிய தமிழர் பேரவை, மற்றும் உலகத் தமிழர் பேரவை அமைப்புக்களுடன் இணைந்து, போரின்போது இடம் பெயர்ந்த தமிழ் மக்களை மீள் குடியேற்றுவது, போரினால் சிதைக்கப்பட்ட தமிழர் தாயகத்தை மீளக்கட்டியெழுப்புதல், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பதற்கு ஜனநாயக ரீதியில் இவ் அமைப்புக்களால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லா வகையான நடவடிக்கைகளையும் முன் எடுப்பதற்கு நாம் ஆதரவு வழங்கி செய்படுவோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம் என பிரித்தானிய தொழில் கட்சியால் வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள விபரங்கள் கீழே !பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்கு எமது உறுதிமொழிநோக்கம்:சிறிலங்கா அரசால் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்படுகின்றனர். சிறிலங்காப் படையினரால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம் பெயர்ந்தும் உள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், தமிழ் மக்களின் அமைதிக்கான போராட்டம் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றது.தமிழ் மக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு தனது கொள்கைகளையும், அணுகுமுறைகளையும் மாற்றுவதோடு, தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மதிக்கவும் வேண்டும். இதுகுறித்து சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஏன் தொழிற்கட்சி?தொழிற்கட்சியின் முக்கிய பெறுமானங்களான சர்வதேசியம், சுதந்திரம் மற்றும் சமூக நீதி போன்ற அடிப்படை அம்சங்கள் தமிழ் மக்களின் அடிப்படை அம்சங்களாக அமைகின்றன. அதேவேளை, இப்பெறுமானங்களே இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரத்தையும், அமைதியையும் பெறுவதற்கு முக்கிய அடிப்படை அம்சங்களாக அமைகின்றன. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் நாம் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் வெற்றி கண்டுள்ளன.சிறிலங்காவுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிறுத்தப்படுவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான ஏற்றுமதி வரிச்சலுகை தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதற்கும் தொழிற்கட்சியின் அழுத்தங்களும், புதிய கொள்கைகளும் காரணமாக அமைந்துள்ளன.2011ஆம் ஆண்டில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கொழும்பில் நடாத்துவதற்கு தொழிற்கட்சி தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக, அம்மாநாட்டை அங்கு நடாத்துவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.போர் நடைபெற்ற காலங்களில் சிறிலங்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் நீதியான, சுதந்திரமான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்பதை தொழிற்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வலியுறுத்தியுள்ளது.எமது வேண்டுகை!தமிழ் மக்கள் நீதியையும், சுதந்திரத்தையும் பெறுவதற்கான நீண்ட பயணத்தில் தொழிற்கட்சி உங்களுடன் தொடர்ந்து தோளுக்கு தோள் நின்று உழைத்து வரும் என்பதை உறுதி செய்கின்றோம்.சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகள் நடாத்தப்படுவதற்கு நாங்கள் முழுமையாக செயலாற்றுவோம்.அத்துடன், பிரித்தானியா தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை மற்றும் நாடு கடந்த அரசு உட்பட பிரித்தானியாவில் இருக்கின்ற எல்லா அமைப்புகளுடனும் இணைந்து போரின்போது இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக்குடியேற்றுவது.போரினால் சிதைக்கப்பட்ட தமிழர் தாயகத்தை மீளக் கட்டியெழுப்புவது,இலங்கையின் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வு காண்பதற்கு ஜனநாயக ரீதியில் இவ்வமைப்புகளால் மேற்கொள்ளப்படுகின்ற எல்லா வகையான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு நாம் ஆதரவு வழங்கிச் செயலாற்றுவோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம்.இந்நிலையில், பிரித்தானியாவில் மட்டுமல்ல - இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நலன்களிலும் தொழிற்கட்சி சர்வதேச ரீதியில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமானால், அக்கட்சி ஆட்சிபீடத்தில் மீண்டும் அமரும் வகையில் எதிர்வரும் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதன் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டியது உங்களின் கடமையாகும்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் தமிழர் இயக்க நிர்வாகிகள் அமோக வெற்றி!






தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.இதில் பலத்த போட்டி நிலவியது.இதில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அலைமகன் பிரபு,பொன்ராஜ் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்குகள் நேற்று மாலை எண்ணப்பட்டன.இதில் தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் இயக்க ஒருங்கிணைபாளர் அலைமகன் பிரபு செயலாளர் பதவிக்கு போட்டியிட்டு 185 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வழக்கறிஞர் 63 வாக்குகள் மட்டுமே பெற்றார்.பிரபு வழக்கறிஞர் சங்க செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட வழக்கறிஞர் பொன்ராஜ் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வழக்கறிஞரை விட 65 வாக்குகள் அதிகம் பெற்று பொருளாளராகத்தேர்வு செய்யப்பட்டார்.
வெற்றி பெற்ற நிர்வாகிகள் விரைவில் பொறுப்பேற்க உள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் அனுப்பிய வாழ்த்து செய்தியில் இன மேன்மைக்கும் ஒற்றுமைக்கும் பாடுபட்ட என் தம்பிமார்கள் இனி வழக்கறிஞர்கள் சங்கப்பணியிலும் மிகச்சிறப்பாகப் பணியாற்றுவார்கள் என நம்புகின்றேன்.அவர்கலுக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

பார்வதி அம்மாவை திருப்பி அனுப்பிய அன்று நடந்தது என்ன?-பூங்குழலி.

கடந்த 16-ஏப்ரல்-2010 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டதானது உலகத் தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழகத் தமிழர்களை ஆற்றாமையில் தள்ளிவிட்டிருக்கிறது. இந்த நிலையில், அன்றைய நிகழ்வின் நேரடி சாட்சி என்ற முறையில் நடந்தவற்றை பதிவு செய்ய வேண்டியது எனது கடமை என உணர்ந்தேன். அதன் வெளிப்பாடே இந்த பதிவு.

16-ஏப்ரல்-2010 - தில்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய `பேசப்படாத படுகொலை - இலங்கையின் போர்க் குற்றங்கள்` என்ற தலைப்பிலான மாநாட்டில் கலந்து கொண்டு இரவு 7:30 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு வந்து சேர்ந்தேன்.

8:30 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்தபோது வாசலிலேயே காத்திருந்த அப்பா, `உடனடியாக சாப்பிட்டுவிட்டு கிளம்பு. அவங்க வர்றாங்க. அழைக்கப் போகணும்` என்றார். கடந்த ஒரு வார காலமாக எந்நேரமும் வரலாம் என காத்திருந்ததால் அப்பா யாரை பற்றிச் சொல்கிறார் என்பது உடனே புரிந்தது.

தமிழீழத் தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மையார் அவர்கள் வர இருக்கிறார்கள் என்பதை தெரிந்த உடன் அவ்வளவு நேரமும் இருந்த பயணச் சோர்வு மறைந்து பரபரப்புத் தொற்றிக் கொண்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சைப் பெற்று வந்த பார்வதி பாட்டி அவர்களின் உடல்நிலை ஒரு வார காலத்திற்கு முன் நலிவுற்றதாக செய்தி வந்தபோது அனைவரும் பதறிவிட்டோம்.

இந்தியாவிற்கும் கனடாவிற்கும் விசா விண்ணப்பித்திருந்தும் இரு நாடுகளிடமிருந்தும் இன்னமும் பதில் வரவில்லை. ஒரு வேளை இந்திய விசா கிடைத்தால் உடனடியாக அவர்களை அழைத்து வர அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. நம் வீட்டிலேயே தங்க வைத்து சிகிச்சை மேற்கொள்ள அறையும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் 16-ஏப்ரல், 2010 அன்று காலை மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் பார்வதி பாட்டிக்கு இந்தியாவில் தங்கி சிகிச்சை பெற 6 மாத காலம் விசா வழங்கியது. அன்று மாலை விமானத்திலேயே பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அன்று இரவு வந்து சேருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. உடனடியாக கிளம்பினோம்.

வைகோ அய்யாவிற்கும் தகவல் அளிக்கப்பட்டு அவரும் விமான நிலையம் நோக்கிப் பயணப்பட்டார். அப்பாவும் வைகோ அய்யாவும் விமான நிலையத்திற்குள் வந்தால் பரபரப்பாகிவிடும். கூட்டம்கூடி அதனால் பாட்டிக்குத் தொந்தரவு ஏற்படலாம் என கருதி, விமான நிலையத்திற்கு அருகிலேயே நானும், இளவழகன் அய்யா அவர்களும் எங்களுக்குத் துணையாக வழக்கறிஞர் தம்பி ஒருவரும் மற்றொரு தம்பியும் மட்டும் வேறொரு வாகனத்தில் மாறிக் கொண்டு உள்ளே சென்றோம்.

அப்பாவும் வைகோ அய்யாவும் விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு வாகனத்திலேயே காத்திருந்தனர்.

நானும் இளவழகன் அய்யாவும் அந்த தம்பிகளும் வருகைப் பகுதிக்குச் சென்றோம். அப்போது மணி 10:15. பன்னாட்டு வருகையின் முகப்புக்குச் செல்ல நெடுந்தூரம் நடக்க வேண்டும். நடந்து சென்று அங்கிருந்த வருகைப் பட்டியலில் பாட்டி வரவேண்டிய விமானம் வந்து விட்டதா என பார்த்தோம். வரவில்லை. அப்போது மணி 10:30.

வருகைப் பட்டியல் பலகைக்கு கீழேயே நின்று கொண்டு பட்டியலில் ஒரு கண்ணும்.. வெளியே வருபவர்கள் மீது ஒரு கண்ணுமாக நின்ற கொண்டிருந்தோம். 10:40-க்கு திடீரென பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் வந்தனர். வெளிவருபவர்கள் நடந்து வரக்கூடிய வழி நெடுகிலும் 3 அடிக்கு ஒரு காவலர் என அணிவகுத்து நின்றனர்.

நானும் தம்பிகளும் பார்வையாலேயே ஒருவருக்கொருவர் கேள்விக் கேட்டுக்கொண்டோம். `அவசரப்பட வேண்டாம். ஒருவேளை வேறு யாரும் முக்கியமானவர்கள் வர்றாங்களோ என்னவோ` என்று நான் சொன்னேன்.

அடுத்தபடியாக காவல்துறை ஆட்கள் பார்வையாளர் வரிசையில் நின்றிருந்த அனைவரையும் வரிசையாக விடியோ எடுக்கத் தொடங்கினர். அதற்குள் பாட்டி வர இருந்த விமானம் வந்துவிட்டதாகப் பலகையில் விளக்கு எரிந்தது.

வருகை முகப்பை நோக்கினால், சென்னை புறநகர் ஆணையர் ஜாங்கிட் நின்று கொண்டிருந்தார். அவரைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட காவல் உயர் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். உயர் அதிகாரிகளைப் பார்த்தவுடன் நிச்சயம் இது பாட்டிக்காகத்தான் என புரிந்தது. எப்படியோ செய்தி தெரிந்து வந்து விட்டிருக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டேன்.

எனது அச்சம் என்னவாக இருந்தது என்றால், பாட்டி வெளியே வந்த உடன், காவல்துறை அவரை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு போய்விடுமோ என்பதுதான். அப்படி காவல் துறை செய்ய முற்பட்டால் அதை நானோ, இளவழகன் அய்யாவோ, அந்த தம்பிகள் இருவருமோ மட்டும் தனியாகக் கையாள முடியாது என்பது புரிந்தது. எங்களைத் துரும்பாகத் தூக்கி எறிந்து விட்டு பாட்டியைக் கொண்டு சென்று விடுவார்கள் என பயந்தேன்.

இதற்கு மேலும் தாமதிக்க வேண்டாம் என்று உடனடியாக அப்பாவிற்கு தகவல் கொடுத்தேன். உடனடியாகக் கிளம்பி வாருங்கள் இல்லையென்றால் தவறு நடந்துவிடும் என்று கூறினேன். அடுத்து வழக்கறிஞர் சந்திரசேகரன் அவர்களைத் தொடர்பு கொண்டு வழக்கறிஞர்களை அனுப்புமாறு கூறினேன்.

மூன்றாவதாக ஊடக நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துச் சொல்லி அனைத்து ஊடகங் களுக்கும் தெரிவிக்குமாறு கூறினேன்.

இதற்குள் தலைவர்கள் இருவரும் வருகை முகப்பிற்கு வந்து விட்டனர். அவர்களைச் சுற்றி பல காவல் அதிகாரிகளும் அவர்களைத் தடுக்க முற்பட்டபடி வந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களைக் கடந்து நடையை எட்டி வைத்து தலைவர்கள் விரைவாக வந்து கொண்டிருந்தனர்.

இதற்கிடையே வைகோ அய்யா அவர்களின் உதவியாளர் பாலன் அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்ததையும் அவர் அவசரம் அவசரமாக நுழைவுச் சீட்டுக்கள் வாங்குவதையும் பார்த்தேன். நல்லது என நினைத்து தடுப்புக் கம்பியை தாண்டி நானும் உள் சென்று ஒரு நுழைவுச் சீட்டுப் பெற்றுக் கொண்டு தலைவர்களுக்கு முன் பார்வையாளர் அறைக்குள் சென்றேன்.

அதற்குள் பார்வையாளர் அறை வாயிலுக்கு வந்த தலைவர்களைச் சுற்றி அரண் அமைத்த காவல் துறையினர் அவர்களை உள்ளேவிட முடியாது என தடுத்தனர்.

பாலன் அவர்கள் நுழைவுச் சீட்டை காட்டி அனைவருக்கும் நுழைவுச் சீட்டு இருக்கிறது என்றார். வைகோ அய்யா அவர்களும் “நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? அனுமதிக்கப்பட்ட எல்லைவரைதானே நாங்கள் செல்கிறோம். அதை ஏன் தடுக்கிறீர்கள்?” என்றார்.

ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே ஒரு காவல்துறை அதிகாரி சட் டென வைகோ அய்யா அவர்கள் கையைப் பற்றி அவர் தோளில் கைவைத்து `உள்ளே விட முடியாதுங்க` என்று தள்ளினார். வைகோ அய்யா அவர்களும் அவரை ஒட்டி நின்றிருந்த அப்பாவும் தடுமாறி விட்டனர். அப்பா மிகுந்த கோபத்துடன் “ஏன் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறீர்கள்? எந்த சட்டத்தின் அடிப்படையில் எங்களைத் தடுக்கிறீர்கள்?” எனக் கேட்டார்.

வைகோ அய்யா அவர்களுடன் வேளச்சேரி மணிமாறன் அவர்களும் இன்னமும் இரண்டு தோழர்களும் மட்டுமே வந்திருந்தனர். அவரும் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டாம்.. பத்திரமாக பாட்டியைக் வெளிக் கொணர்வதுதான் முக்கியம் என இரண்டு தோழர்களை மட்டும் அழைத்து வந்திருந்தார்.

தலைவர்களைத் தள்ளியது கண்டு அந்த தோழர்கள் கொதித்து விட்டனர். பெரும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் நடந்தது. எனக்கென்ன கவலை என்றால், தலைவர்களிடம் தேவையற்ற வாக்கு வாதத்தை வளர்ப்பதன் நோக்கமே அவர்கள் கவனத்தை திசைத் திருப்பி பாட்டியைக் கொண்டு சென்று விடுவார்களோ என்பதாக இருந்தது.

அந்த நிமிடம்வரை பாட்டியைத் தமிழகத்திற்குள் நுழையவே விடாமல் திருப்பி அனுப்புவார்கள் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. இந்த பயத்தின் காரணமாக வாக்குவாதத்தில் காதையும் பயணிகள் வரும் வழியில் கண்ணையும் வைத்த வாறே நின்றிருந்தேன்.

இதற்குள் என்னுடன் வந்த தம்பிகள் நுழைவுச் சீட்டு பெற முற்பட்டதால் நுழைவுச் சீட்டுக் கொடுப்பதையே நிறுத்திவிட்டு அனைத்தையும் மூடிவிட்டனர். கூடியிருந்த மக்களையும் விரைவாக விரட்டிவிட்டனர். ஏதோ பெரும் கலவரம் நடப்பது போன்ற சூழலை காவல்துறையினர் ஏற்படுத்தினர்.

என்னுடன் வந்த தம்பி தான் வழக்கறிஞர் உள்ளே விடுங்கள் என்று கேட்டபோதும் விடவில்லை. பெரும் வாக்குவாதத்திற்கு பின் ஒரு வழியாக தலைவர்கள் உள்ளே வந்து அமரும் போது மணி 11:30.

இதற்குள் ஊடகத் துறை நண்பர் ஒருவர் அழைத்து `அம்மாவைத் திருப்பி அனுப்பிட்டாங்களாம்` என்று கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. பொய்ச் செய்தியாக இருக்கும். காவல்துறை வேண்டுமென்றே பரப்புகிறது என்று நினைத்தேன். இருந்தபோதும் தலைவர்களிடம் வந்த செய்தியை தெரிவித்தேன்.

ஊடகத்தினரும் தோழர்களும் கூடத் தொடங்கிவிட்டனர். ஒவ்வொருவராக ஊடகத்தினர் மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதாகவே சொல்லிக் கொண்டிருந்தனர். உண்மையாக இருக்குமோ என்பதை நினைப்பதற்கே கவலையாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இப்படிகூட செய்வார்களா? ஒரு மூதாட்டியை அனுமதிக்கக்கூடவா இவர்களால் முடியாது? முறையான விசா இருக்கிறதே.. பின் என்ன? என கேள்விகள்.

அவர்கள் நம் வீட்டில்தான் தங்குவதாக இருந்ததால், அவர்களிடம் நம் வீட்டு முகவரியும் தொலைபேசி எண்ணும் அளிக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் நுழைவு பதிவேட்டில் எழுதி இருப்பார்கள். ஓரு வேளை திருப்பி அனுப்புவதாக இருந்தால் சட்டப்படி அவர்கள் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கோ, தொலைபேசி எண்ணுக்கோ தெரிவிக்க வேண்டும். ஆனால் அப்படியான அழைப்பு எதுவும் வரவில்லை. முறையான தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அதனால் அப்படியான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாம் என நினைத்தோம்.

மணி 11:45, 12:00, 12:30 என கடந்து கொண்டிருந்தது. ஒரு ஊடக நண்பர் அழைத்து `அவர்கள் வந்த அதே விமானத்திலிருந்து இறக்காமலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். 11:40-க்கு அந்த விமானம் கிளம்பியது` என்றார். தலைவர்களிடம் அச்செய்தியை தெரிவித்தேன். இருந்தபோதும் கிளம்ப மனமில்லை.

அவர்கள் பயணித்த விமானத்தின் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அது மீண்டும் மலேசியாவுக்கு பயணப்பட்டு விட்டதா? எத்தனை மணிக்கு என்று கேட்டபோது அவர்களும் `ஆம். 11:40-க்கு` என்றனர். அப்போ, வந்த செய்தி உண்மைதானா? பெரும் இயலாமை மனதை கவ்வியது. இயலாமையின் முதல் வெளிப்பாடான கண்ணீர் எட்டிப் பார்த்தது. அவ்வளவுதானா?

அவரின் உடல்நலம் மீண்டும் ஒரு பயணத்தைத் தாங்குமா? படுக்கையிலே படுத்தபடியே பயணித்த அவரை அப்படியே திருப்பி அனுப்பி இருக்கின்றனரே? குறைந்தபட்ச முதலுதவியாவது செய்தனரா? மலேசியாவில் இருந்து வெளியேறிய பிறகு மலேசிய அரசு மீண்டும் அனுமதிக்க மறுத்தால் என்னாவது? அப்படி மறுத்தால் மீண்டும் கொழும்புக்கே அனுப்புவார்களே? அந்த பயணத்தை அவர் உடல் தாங்குமா? அவருடன் பயணித்த பெண் மலேசியாவை சேர்ந்தவராச்சே.. அவரை மலேசியாவிலேயே இறக்கி விட்டு விடுவார்களே? அப்படியானால் கொழும்புக்கு யார் அவருடன் செல்வார்? குறைந்தபட்ச மனித நேயம் கூடவா இந்த அரசுக்கு இல்லை? அப்படியா தலைவர் மீது காழ்ப்புணர்ச்சி? மீண்டும் மீண்டும் தோற்றுக் கொண்டிருக்கிறோமா? என்ன செய்யப் போகிறோம்? ஒவ்வொரு முறையும் தோற்று விட்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கப் போகிறோமா? இயலாமையும் ஆற்றாமையும் பொங்கியது.

வரிசையாக தோழர்களும் வெளிநாட்டு மற்றும் உள்ளுர் ஊடகத்தினரும் அழைத்துக் கொண்டிருந்தனர். விளக்கிக் கொண்டிருந்தேன்.

மலேசியாவுக்கு அழைத்து உறுதிப்படுத்தச் சொன்னோம். அவர்கள் 1 மணி அளவில் உறுதிப்படுத்தினர். அதன் பிறகு தலைவர்கள் ஊடகத்தினரிடம் உணர்ச்சிப் பெருக்குடன் தங்கள் கண்டனத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்திவிட்டு கிளம்பினர். வெளியே வந்து வாகனத்தில் ஏறினோம்.

வீடு வந்து சேர்ந்த போது மணி 2:30. நடந்தவற்றை விளக்கி அப்பாவின் அறிக்கையை அடித்து ஊடகங்களுக்கு அனுப்பி முடிக்கும் போது மணி 4. இந்நேரம் விமானம் மலேசியாவில் இறங்கி இருக்குமே என்று மலேசியாவுக்கு அழைத்துக் கேட்டேன். விமானம் வந்து விட்டது. இன்னமும் என்ன நிலை என்று தெரியவில்லை. காத்திருக்கிறோம் என்றனர்.

இலங்கையில் சிவாஜிலிங்கம் அய்யாவுக்கும் தகவல் கொடுத்திருந்தோம். ஒருவேளை கொழும்புக்கு அனுப்பினார்கள் என்றால் அவர் அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமே?

காலை 6:15 மணி அளவில் மலேசியாவில் இருந்து தகவல் வந்தது. ஒரு மாத விசாவுடன் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள் என்று. சிவாஜிலிங்கம் அய்யாவும் அழைத்துச் சொன்னார்.

பாட்டியின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும். உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் சொன்னார்கள். இந்தியாவிற்கு இல்லாத மனித நேயம் மலேசிய அரசிற்காவது இருக்கிறதே என்ற எண்ணம் தோன்றியது. தாங்கொணா இயலாமை, ஆற்றாமை மற்றும் அவமானத்துடனும் கழிந்த அன்றைய இரவு மலேசிய அரசின் மனித நேயமும், பாட்டியின் உடல்நலம் சீராக இருப்பதாக வந்த செய்தியும் அளித்த குறைந்தபட்ச நிம்மதியுடன் முடிவுக்கு வந்தது.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான நடவடிக்கையை முறியடிக்கவேண்டும்-கோத்தபாய.

விடுதலைப் புலிகளை ஒரு ஆண்டுக்கு முன்னர் அழித்து விட்டதாகக் கூறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ, தமது அடுத்த கட்ட நடவடிக்கை சர்வதேச மட்டத்திலுள்ள வலையமைப்பை அழிப்பதே எனத் தெரிவித்தார். ஆனையிறவில் அமைக்கப்பட்டுள்ள படை வீரர்களுக்கான நினைவுத் தூபி திறப்பு வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு அவர் கூறினார். மேலும், புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும், தவறான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்கும் வெளிநாட்டிலுள்ளவர்கள் முயற்சி செய்கின்றனர், இவற்றையெல்லாம் செய்துவரும் சிறிய குழுவை இல்லாதொழிக்க வேண்டும். இதற்கான கடப்பாடு இலங்கை வெளிநாட்டு அமைச்சுக்கு உள்ளது என கோத்தபாய கூறினார்.

ஆரம்ப காலத்தில் சிறு சிறு குழுக்களாகத் தொடங்கியே பின்னர் புலிகள் பெருமளவில் பெருகினர். எனவே சிறு குழுக்கள் உருவாகுவதைக்கூட நாங்கள் அனுமதிக்கப்போவதில்லையாம் என்கிறார் கோத்தபாய. நாடு கடந்த தமிழீழ அரசின் தேர்தல் நடக்கவுள்ள இக்காலகட்டத்தில் கோத்தபாய இவ்வாறு தெரிவித்திருப்பதானது, நாடு கடந்த அரசு மூலம் தமக்கு ஏற்படவுள்ள அழுத்தங்களை அவர் உணர்ந்துள்ளமையைக் காண்பிக்கிறது.
நன்றி:அதிர்வு இணையம்.