11 ஜூன் 2010

ஈழத்தமிழ் இனத்தை இருளில் நசுக்க திட்டம் போட்டுள்ள கொடியவன் ராஜபக்ஷ.-வைக்கோ ஆவேசம்.



''த‌மி‌ழ் இன‌த்தையே அ‌‌ழி‌க்க மு‌ற்படு‌ம் ‌சி‌ங்கள அரசுட‌ன், ‌இ‌ந்‌திய அரசு செ‌ய்து கொ‌ண்டு இரு‌ப்பது ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் அ‌ல்ல, த‌மி‌ழ் ஈழ‌த்தை எ‌ரி‌க்க மு‌ற்படு‌ம் ‌தீ‌ப்ப‌ந்த‌ங்க‌ள்'' எ‌ன்று இந்திய மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,
''ஈழ‌த்த‌‌மி‌ழ் இன‌த்தை ‌நிர‌ந்தர அடிமை இரு‌ளி‌ல் நசு‌க்க‌‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு உ‌ள்ள கொடியவ‌ன் ராஜப‌‌க்ச, ‌டெ‌ல்ல‌ி‌யி‌ல் குரூர‌ச் ‌சி‌ரி‌ப்புட‌ன், இ‌ந்‌திய‌த் தலைநக‌ர் டெ‌‌ல்‌லி‌யி‌ல் பவ‌னி வரு‌கிறா‌ன். குடியரசு‌த் தலைவ‌ர் மா‌‌ளிகை‌யி‌ல் அவனு‌க்கு‌க் கோலாகல வரவே‌ற்பு, அ‌ணிவகு‌ப்பு ம‌ரியாதை! இ‌ந்‌திய‌ப் ‌பிரதமரு‌ம், குடியரசு‌த் தலைவரு‌ம், இருகர‌ம் கூ‌ப்‌பி வரவே‌ற்று‌ப் பாரா‌ட்டு.
இல‌ட்ச‌‌க்கண‌க்கான த‌மி‌ழ் ம‌க்களை, ஈவு இர‌க்க‌ம் இ‌ன்‌றி கொ‌ன்று குவ‌ி‌த்து கொடியவ‌ன் எ‌க்காள‌மி‌ட்டவாறு பா‌ர்வையை ‌வீசுவது‌ம், ‌தி‌மிராக நட‌ப்பது‌ம், ஜ‌ன்ப‌த் தெரு 10ஆ‌ம் எ‌ண் ‌வீ‌ட்டி‌ல், சோ‌னியா கா‌ந்‌தியுட‌ன், கெ‌ந்த‌லி‌ப்புட‌ன் உரையாடுவது‌ம், ஒரு உ‌ண்மையை ந‌ன்றாக உண‌ர்‌த்து‌கிறது.
விடுதலை‌ப்பு‌லிகளை எ‌தி‌ர்‌க்கு‌ம் யு‌த்த‌ம் எ‌ன்று சொ‌ல்ல‌ி‌க்கொ‌ண்டே இல‌‌ட்ச‌‌க்கண‌க்கான த‌மிழ‌‌ர்களையு‌ம் அ‌ழி‌த்த போரை, இய‌க்‌கியது‌ம், நட‌த்த‌ியது‌ம் இ‌ந்‌திய அரசு தா‌ன் எ‌ன்பதா‌ல், அதை‌க் கொ‌ண்டாடுவத‌ற்காகவே இ‌ந்‌தியா வ‌ந்து உ‌ள்ளா‌ன். ஈழ‌த்த‌மிழ‌ர்களை‌க் கா‌லி‌ல் போ‌ட்டு நசு‌க்கவு‌ம், உ‌ரிமை‌ப் போரா‌ட்ட‌த்தை‌த் தடு‌க்கவு‌ம், ராஜப‌க்ச கே‌ட்டதையெ‌ல்லா‌ம் அ‌ள்‌ளி‌த் த‌ந்து ‌வி‌ட்டது இ‌ந்‌திய அரசு.
ஏழு ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் கையெழு‌த்தானதா‌ம். ‌சி‌ங்கள அரசுட‌ன், டெ‌ல்‌லி போ‌ட்ட ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள். டெ‌ல்‌லி ராஜக‌ட்ட‌த்த‌ி‌ல் கா‌ந்‌தியா‌ர் க‌ல்லறை‌யி‌ல், 'ஏழு பாவ‌‌ங்க‌ள்' எ‌ன்று எழுத‌ப்ப‌ட்டு இரு‌க்‌கிறது. அ‌த்தகைய பாவ‌ச் செய‌ல்களை, இ‌ந்‌திய அரசு செ‌ய்து உ‌ள்ளது. 'இ‌ந்‌திய - இ‌ல‌ங்கை இராணுவ‌க் கூ‌ட்டு ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தாக‌‌ப் போ‌கிறது' எ‌ன்று, 2004 நவ‌ம்ப‌ர் 7இ‌ல், ஏடுக‌ளி‌ல் செ‌ய்‌திக‌ள் வெ‌ளியானபோது, பத‌றி‌த் துடி‌த்த நா‌ன், நவ‌ம்ப‌ர் 10 ஆ‌ம் நா‌ள் அ‌ன்று, 'ஒ‌ப்ப‌ந்த‌ம் போடா‌தீ‌ர்! துரோக‌ம் இழை‌க்கா‌தீ‌ர்' எ‌ன்று ‌பிரதம‌ரிட‌ம் நே‌ரி‌ல் ம‌ன்றாடினே‌ன்.
'ஒ‌ப்ப‌‌ந்த‌ம் செ‌ய்ய மா‌ட்டோ‌ம்' எ‌ன்றா‌ர். ஆனா‌ல், கையெழு‌த்து இடாமலேயே ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன் சர‌த்துகளை, இ‌ந்‌திய அரசு ‌நிறைவே‌ற்‌றிய ச‌தி‌‌ச்செய‌ல், அத‌ற்கு அடு‌த்த ஆ‌ண்டு வெ‌ளியானது. பலா‌லி ‌விமான தள‌த்தை, இ‌ந்‌‌திய ‌விமான‌ப்படை பழுதுபா‌ர்‌த்து‌க் கொடு‌த்தது, த‌மிழ‌ர்களை கொ‌ன்று கு‌வி‌த்த கு‌ண்டு ‌வீ‌ச்சு‌க்கு, இ‌ந்‌தியாவே வ‌ழி அமை‌த்தது. இ‌ப்போது, ‌மீ‌‌ண்டு‌ம் பலா‌லி ‌விமான தள‌த்தையு‌ம், கா‌ங்கேச‌ன்துறை துறைமுக‌த்தையு‌ம் ந‌வீன‌ப்படு‌த்த இ‌ந்‌தியா ஏ‌ற்பாடு செ‌ய்‌கிறது.
இல‌ங்கை இராணுவ‌த்து‌க்கு‌ம், கா‌வ‌ல்துறை‌க்கு‌ம், அனை‌த்து உத‌விகளு‌ம் செ‌ய்ய இ‌ந்‌தியா ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு உ‌ள்ளது. ‌சி‌ங்கள இராணுவ‌த்‌தி‌னரு‌க்கு‌ம், காவ‌ல்துறை‌க்கு‌ம், இ‌ந்‌தியா‌வி‌ல் ந‌வீன‌ப் ப‌‌யி‌ற்‌சிக‌ள் ஏ‌ற்பாடு ஆ‌கி‌ன்றன. ஈழ‌த்த‌ி‌ல் நடைபெ‌ற்ற யு‌த்த‌த்த‌ி‌ல், ஜெ‌னீவா நெ‌றிமுறைகளை ம‌ண்‌ணி‌ல் புதை‌த்தது ‌சி‌ங்கள அரசு. போ‌‌ரி‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட த‌மி‌ழ் இளைஞ‌ர்க‌ள், இள‌ம்பெ‌‌ண்களை அ‌ம்மணமா‌க்‌கி, அ‌ந்த உட‌ல்களை ‌வீ‌தி‌வீ‌தியாக இழு‌த்து‌ச் செ‌ன்று, அ‌ந்த உ‌யி‌ர் அ‌ற்ற சடல‌ங்களை‌ச் செரு‌ப்பா‌ல் அடி‌த்து‌ம், காலா‌ல் ‌மி‌தி‌த்து‌ம், கோர ந‌ர்‌த்தன‌ம் ஆடின‌ர் ‌சி‌ங்கள‌க் கொடியோ‌ர்.
த‌மி‌ழ் இளைஞ‌ர்க‌ளி‌ன் க‌ண்களையு‌ம், கைகளையு‌ம் க‌ட்டி அ‌ம்மணமா‌க்‌கி, உ‌ச்ச‌‌ந்தலை‌யி‌ல் சு‌ட்டு‌க் கொ‌‌ன்ற கொடுமையு‌ம், மறு‌க்க முடியாது ஆவண‌ப் பட‌ங்களாக வெ‌ளி‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டது. ஈழ‌த்‌த‌மி‌ழ்‌ப் பெ‌ண்களை ‌மி‌க‌க் கொடூரமாகக் க‌‌ற்ப‌ழி‌த்து‌க் கொ‌ன்று எ‌ரி‌த்த கோர ‌நிக‌ழ்‌ச்‌சிகளை ‌‌நினை‌க்கு‌ம்போதே நெ‌ஞ்சை அடை‌க்‌கிறது.
இ‌த்தகைய ‌சி‌ங்கள இராணுவ‌த்து‌க்கு‌ம், காவ‌ல்துறை‌க்கு‌ம்தா‌ன் இ‌ந்‌தியா‌வி‌ல் ந‌வீன‌ப் ப‌‌யி‌ற்‌சிகளா‌ம்! இல‌ங்கை‌யி‌ல் ‌மி‌ன்சார உ‌ற்ப‌த்‌தி ஆ‌‌யிர‌ம் கோடி ரூபாயு‌ம், ர‌யி‌ல்வே உ‌ள்‌ளிட்ட ம‌ற்ற ‌தி‌ட்ட‌ங்களு‌க்கு 4000 கோடி ரூபாயு‌ம் கொடு‌க்க, இ‌ந்‌தியா ஒ‌ப்பு‌க் கொ‌ண்டு உ‌ள்ளது. ஏ‌ற்கனவே, ராடர்க‌ள் உ‌ள்‌ளி‌‌ட்ட ஆயுத‌ங்களையு‌ம், ஆ‌‌‌யிரம‌் கோடி ரூபாயையு‌ம் இ‌ந்‌தியா கொடு‌த்து இரு‌க்‌கிறது.
த‌மி‌ழ் இன‌த்தை‌ப் பூ‌ண்டோடு அ‌ழி‌க்க‌க் க‌ங்கண‌ம் க‌ட்டி‌க்கொ‌ண்டு செய‌ல்படு‌ம் கொலைகாரனு‌க்கு இ‌ப்பொழுது, மேலு‌ம் 5000 கோடி ரூபாயை‌க் கொடு‌ப்பது, ஈழ‌த்த‌மிழ‌ர்களு‌க்கு ம‌ட்டு‌ம் அ‌ல்ல, த‌மிழக‌த்து‌க்கு‌ம், இ‌ந்‌தியாவு‌க்கு‌மே எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல் பெரு‌ங்கேடாக முடியு‌ம். இல‌ங்கை‌யி‌ல், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளி‌ன் ப‌ண்பாடு, கலா‌ச்சார அடையாள‌ங்களே இ‌ல்லாம‌ல் அ‌‌ழி‌த்து ஒ‌‌ழி‌க்கு‌ம் செய‌ல்க‌ள் ‌தீ‌விரமாக நட‌க்‌கி‌ன்றன. எ‌ல்லாள ம‌‌ன்ன‌னி‌ன் நடுக‌ல்லை உடை‌த்து, த‌மிழ‌ர்‌க‌ளி‌ன் ‌நினைவு‌ச் ‌சி‌ன்ன‌ங்‌களை எ‌ல்லா‌ம் அ‌ழி‌த்து, ‌சி‌ங்கள எழு‌த்துக‌ள், ‌சி‌ன்ன‌ங்களை‌ப் பொ‌றி‌த்து வரு‌கிறா‌ன்.
த‌மிழ‌ர் ஆலய‌ங்களு‌க்கு அருகே, பெள‌த்த ‌விகாரைகளை‌க் க‌ட்டு‌கிறா‌ன். இ‌த்தகைய ‌சி‌ங்கள அரசுட‌ன், கலா‌ச்சார ப‌ரிவ‌‌ர்‌த்தனை ஒ‌ப்ப‌ந்த‌ம் எ‌ன்று சொ‌ல்லுவது, தம‌ி‌ழ் இன‌த்தை, த‌மிழ‌ர் நாக‌ரிக‌த்தை‌ப் புதை‌க்கு‌ம் சவ‌க்கு‌‌ழி ‌மீது, க‌‌ளியா‌ட்ட‌ம் நட‌த்தவா? மூ‌ன்று ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பே, இ‌ந்‌திய- இல‌ங்கை‌க் கட‌ற்படைக‌ளி‌ன் தகவ‌ல் ப‌ரிமா‌ற்ற ஒ‌ப்ப‌ந்த‌ம் போ‌ட்டது‌ம், ந‌ம் கட‌ல் எ‌ல்லை‌யிலேயே க‌ண்ணிவெடிகளை ‌வை‌ப்பத‌ற்கு இல‌ங்கை‌க்கு ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌த்த‌லு‌ம், இ‌ந்‌திய இறையா‌ண்மை‌க்கு‌க் கேடு ‌விளை‌வி‌க்கு‌ம் செய‌ல் ஆகு‌ம்.
செ‌‌ஞ்‌சீனமு‌ம், பா‌கி‌ஸ்தானு‌ம் இல‌ங்கை‌யி‌ல் கா‌ல் ஊ‌ன்ற ‌வி‌டாம‌ல் தடு‌ப்பத‌ற்கு எ‌ன்று சொ‌ல்ல‌ி‌க்கொ‌ண்டே, இ‌ந்‌தியா இல‌ங்கை‌க்கு ப‌ல்லா‌யிர‌ம் கோடி உத‌வியு‌ம், இராணுவ உத‌விகளு‌ம் செ‌ய்வது ‌மிகவு‌ம் தவறான, மு‌‌ட்டா‌ள்தனமான நடவடி‌க்கை ஆகு‌ம். இ‌ந்‌தியா‌விட‌ம் இரு‌ந்து எ‌ல்லாவ‌ற்றையு‌ம் பெ‌ற்று‌க்கொ‌ண்டே, எ‌தி‌ர்கால‌த்‌தி‌ல், ‌சீனமு‌ம், பா‌கி‌‌ஸ்தானு‌ம், இல‌ங்கை‌யி‌ல் பல‌த்த அடி‌த்தள‌ம் அமை‌க்க, ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ப் போவது ராஜப‌க்சதா‌ன்.
இ‌ந்‌‌தியா‌வி‌ன் பாதுகா‌ப்பு‌க்கு‌ம், பெரு‌ம் ஆப‌த்து, ‌சி‌ங்கள‌வர் பகு‌தி‌யி‌ல் இரு‌ந்துதா‌ன் வரு‌ம். அ‌ப்படி ஒரு ‌விப‌‌ரீத‌ம் நேரு‌ம்போது, நேரடி‌ப் பா‌தி‌ப்பு‌க்கு இல‌க்காக‌ப் போவது த‌மி‌ழ்நாடுதா‌ன். கூட‌ங்குள‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌ம், க‌ல்பா‌க்க‌ம் அணு‌மி‌ன் ‌நிலைய‌ம், ‌விஜயநாராயண‌ம் க‌ட‌ற்படை‌த் தள‌ம், ‌திரு‌ச்‌சி து‌ப்பா‌க்‌கி‌த் தொ‌ழி‌‌ற்கூட‌ம், ஆவடி இராணுவ டா‌ங்‌கிக‌ள் வடிவமை‌ப்பு‌க் கூடு‌ம், இவையெ‌ல்லா‌ம் எ‌தி‌ரிக‌ளி‌ன் இல‌க்கா‌கி ‌வி‌ட்டா‌ல், அ‌ழிவு, த‌மிழனு‌க்கு‌ம், த‌மி‌ழ்நா‌‌ட்டு‌க்கு‌ம் அ‌ல்லவா?
இல‌ங்கை‌த் ‌தீ‌வி‌‌ல் த‌மி‌ழ் ஈழ‌ம் அமைவது, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌‌ள் வலு‌ப்பெறுவது‌ம் ம‌ட்டு‌ம்தா‌ன் தா‌ய்‌த் த‌மிழ‌க‌த்து‌க்கு ம‌ட்டும‌் அ‌ல்ல, இ‌ந்‌தியாவு‌க்கே பாதுகா‌ப்பு அரணாக அமையு‌ம். ஆனா‌ல் சோ‌னியா கா‌ந்‌தி‌யி‌ன் கை‌ப்ப‌ிடி‌யி‌ல் ஆ‌டு‌கிற இ‌ந்‌திய அரசு, இதையெ‌ல்லா‌ம் ‌சி‌ந்‌தி‌க்காம‌ல், தம‌ி‌ழ் இன‌த்தை அ‌ழி‌க்க, துரோக‌த்து‌க்கு மே‌ல் துரோக‌த்தை‌த் தொட‌ர்‌ந்து கொ‌ண்டே இரு‌க்‌கிறது.
மா‌வீர‌ர் ‌பிரபாகர‌னி‌ன் தா‌ய் பா‌ர்வ‌தி அ‌ம்மையார் த‌மிழக ம‌ண்‌ணி‌ல் கா‌ல் எடு‌த்து வை‌க்க‌க்கூட அனும‌தி‌க்காத இ‌ந்‌திய அரசு, த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் 1986 நவ‌ம்ப‌ர் 1இ‌ல் ஒரு த‌லி‌த் இளைஞ‌‌ன் ‌திருநாவு‌க்கரசை‌ச் சு‌ட்டு‌க்கொ‌ன்ற கொலை‌க் கு‌ற்றவா‌ளி ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவு‌க்கு, வரவே‌ற்பு கொடு‌ப்பது‌ம், அவனோடு ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கைகுலு‌க்குவது‌ம், த‌மிழ‌ர்க‌ளி‌ன் த‌ன்மான‌த்து‌க்கு இ‌ந்‌திய அரசு ‌விடு‌‌க்‌கி‌ன்ற சவா‌ல் ஆகு‌ம்.
கொலை செ‌ய்தது ம‌ட்டு‌ம் அ‌ல்ல, இர‌ண்டு ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பிறகு, து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ப‌த்து வயது‌ச் ‌சிறுவனை‌க் க‌ட‌த்த‌ி‌ச் செ‌ன்று, ப‌த்து இல‌‌ட்ச‌ம் பணய‌த் தொகை கே‌ட்ட ‌கி‌ரி‌மின‌ல் கு‌ற்றவா‌ளிதா‌ன் ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தா. த‌மிழக‌த்த‌ி‌ன் ஒரு தொ‌ழி‌ல் அ‌திபரை, து‌ப்பா‌க்‌கி முனை‌யி‌ல் ‌மிர‌ட்டிய ட‌க்ள‌ஸ் தேவா‌ன‌ந்தா‌விட‌ம் இரு‌ந்து, ஏ கே 47 ரக‌த் து‌ப்பா‌க்‌கிகளு‌ம் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டன. தேச பாதுகா‌ப்பு‌ச் ச‌ட்ட‌த்த‌ி‌ல் அடைப‌ட்டு‌க் ‌கிட‌ந்த ட‌க்ளசை, கா‌ங்‌கிர‌ஸ் அரசுதா‌ன் ‌விடு‌வி‌த்து, இல‌ங்கை‌க்கு அனு‌ப்‌பி வை‌த்தது.
2006 ஜூ‌ன் இர‌ண்டா‌ம் வார‌த்‌தி‌ல் டெ‌‌ல்‌லி‌க்கு வ‌ந்த ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவு‌க்கு, வெ‌ளி‌விவகார அம‌ை‌ச்சரை‌‌ச் ச‌ந்‌தி‌த்தது‌ம், டெ‌ல்‌லி‌யி‌ல் ப‌த்‌‌தி‌ரிகையாள‌ர்களு‌க்கு‌ப் பே‌ட்டி கொடு‌த்தது கு‌றி‌த்து, ஜூ‌ன் 19ஆ‌ம் தே‌தி, நா‌‌ன் ‌பிரதம‌ரை‌ச் ச‌ந்‌தி‌த்து, ஒரு கொலை‌க் கு‌ற்றவா‌ளியான ட‌க்ள‌ஸ் தேவான‌ந்தாவை, ம‌த்‌திய அர‌சி‌ன் வெ‌ளி‌விவகார‌த்துறை அமை‌ச்சரே வரவே‌ற்றதை எ‌தி‌‌ர்‌த்து புகா‌ர் செ‌ய்ததோடு, இத‌ற்கு ஏ‌ற்பாடு செ‌ய்த இ‌ந்‌தியா‌வி‌ன் பாதுகா‌ப்பு ஆலோசக‌ர் எ‌ம்.கே.நாராயண‌‌ன் ‌மீது‌ம், ‌விசாரணை நட‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று கோ‌ரினே‌ன்.
ஆவன செ‌ய்‌கிறே‌ன் எ‌ன்ற பிரதம‌ர், இ‌ந்‌திய அர‌சி‌ன் நயவ‌ஞ்சக‌ம் வெ‌ளி‌ச்ச‌‌த்து‌க்கு வ‌ந்தது. இ‌ந்‌நிலை‌யி‌ல், த‌மி‌ழ் இன‌த்தையே அ‌‌ழி‌க்க மு‌ற்படு‌ம் ‌சி‌ங்கள அரசுட‌ன், ‌இ‌ந்‌திய அரசு செ‌ய்து கொ‌ண்டு இரு‌ப்பது ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள் அ‌ல்ல, த‌மி‌ழ் ஈழ‌த்தை எ‌ரி‌க்க மு‌ற்படு‌ம் ‌தீ‌ப்ப‌ந்த‌ங்க‌ள். ஆனா‌ல் ஒ‌ன்று, ம‌த்‌திய அரசு‌க்கு எ‌‌ச்ச‌ரி‌க்கை. இ‌ந்த‌‌த் துரோக‌ம் தொடருமானா‌ல், இ‌னி மு‌த்து‌க்குமா‌ர்க‌ள், த‌ங்களை நெரு‌ப்‌பி‌ல் எ‌ரி‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். துரோ‌க‌த்‌தி‌ன் கர‌ங்களை எ‌ரி‌க்க எ‌தி‌ர்கால‌த்த‌ி‌ல், ‌தீ‌ப்ப‌ந்த‌‌ம் ஏ‌ந்துவா‌ர்க‌ள் என எ‌ச்ச‌ரி‌‌க்‌கிறே‌ன்'' எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

நித்தியானந்தா நிபந்தனை ஜாமீனில் வெளியே வருகிறார்.


ஏப்ரல் -23ல் சிறையில் அடைக்கப்பட்ட நித்யானந்தாவுக்கு 50 நாட்களுக்கு பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது.
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது.
இதைத்தொடர்ந்து தலைமறைவுவாழ்க்கை நடத்தி வந்த நித்யானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இப்போது அவர் ராம்நகர் சிறையில் இருக்கிறார்.
ராம்நகர் கோர்ட் ஜாமீ்ன் நிராகரித்ததை அடுத்து நித்தியானந்தா கர்நாடகா ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இன்று விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் நித்யானந்தாவுக்கு நிபந்தனை ஜாமீன் விதித்து உத்தரவிட்டார் நீதிபதி.நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ உண்மையென நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மக்கள் மனதை புண்படுத்திய நித்யானந்தாவின் செயல் கண்டிக்கத்தக்கது என்று கூறிய நீதிபதி, பிடதி ஆசிரமத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது, பாஸ்ப்போர்ட்டை ஒப்படைக்கவேண்டும், ஆன்மீக சொற்பொழிவாற்றக்கூடாது, 15 நாட்களுக்கு ஒரு முறை பிடதி போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும், தனிநபர் ஜாமீனுக்காக 1 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் விதித்தார்.
நிபந்தனை ஜாமீன் கிடைத்துவிட்டதால் நாளை அல்லது திங்கட்கிழமை நித்யானந்தா விடுதலையாவார்.

இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கும் நாடகம் மிகக்கொடுமையானது!



இலங்கையில் நடக்கும் கொடுமையை விட இந்தியாவிலும் தமிழகத்திலும் நடக்கும் நாடகம்தான் மிகக் கொடுமையாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொட‌ர்பாக அவர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல்,
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜப‌க்ச புதுடெ‌ல்‌லி வந்திருக்கிறார். அவருக்கு இந்திய அரசு ஆடம்பர வர​வேற்பை அளித்துள்ளது.
ஏற்கனவே இலங்கை சென்று ராஜ​ப‌க்சவை சந்தித்து வந்த தமிழக எம்.பி.க்கள்,​​ இப்போது மீண்டும் டெல்லியில் அவரைச் சந்​தித்துள்ளனர்.​ இது வெறும் சம்பிரதாய சந்திப்பாக நடை​பெற்றுள்ளது.
தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களில் இன்னும் 3 மாதங்களில் குடிமயர்த்தப்படுவார்கள் என்று எப்​போதும் சொல்வதையே இப்போதும் ராஜப‌க்ச சொல்லியிருக்கிறார்.​ அதனைக் கேட்டு,​​ ஏதோ பெரிய சாதனை செய்து விட்டதைப் போல தமிழக எம்.பி.க்கள் திரும்பி வந்துள்ளனர்.
இலங்கையில் நடைபெறும் கொடுமையை​விட,​​ ஆளும் காங்கிரஸ் கட்சி,​​ தி.மு.க.​ மற்றும் ராஜபக்ச நடத்தும் நாடகம் பெரும் கொடுமையாக உள்ளது.​
இந்​தியா -​ இலங்கை இடையே இப்போது 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ஆனால்,​​ இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி மேம்போக்​கான,​​ கண்துடைப்பான ஒரு ஒப்பந்தம் தவிர,​​ திட்ட​வட்டமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை.​
இதிலிருந்தே, ​​ தமிழர்களை ஒழிப்பதில் இந்தியாவும்,​​ இலங்கையும் கூட்டாக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகிறது.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் ராஜபக்ச தன்னுடன் அழைத்து வந்திருக்கிறார்.​ இந்திய நாட்டின் சட்டம்,​​ ஒழுங்கு எவரையும் விட்டு வைக்காது என்பதை புரிய வைக்க வேண்டும்.​ எனவே,​​ டக்ளஸ் தேவானந்தாவை உட​னடியாக கைது செய்ய வேண்டும்.​
இலங்கையில் நடக்கும் மறு சீரமைப்புப் பணிகளில் சீனர்களைப் பயன்படுத்தக் கூடாது.​ அந்தப் பணி​களை தமிழர்களுக்கு வழங்க ராஜப‌க்சவிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

10 ஜூன் 2010

அமைதி நிலவும் நாடுகள் பட்டியலில் இந்தியா பின்னிலையில்.


இந்த ஆண்டுக்கான, அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை பன்னாட்டு பொருளாதார மற்றும் அமைதி மய்யம் வெளியிட்டு உள்ளது. இதில், இந்தியா 128ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
போர், பயங்கரவாதம், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு எதிராக செயல்படும் நாடுகள் குறித்து ஆய்வு செய்து, பன்னாட்டு பொருளாதார மற்றும் அமைதி மய்யம் கடந்த 2007ஆம் ஆண்டு முதல், அமைதி நிலவும் நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இதில், மொத்தமுள்ள 145 இடங்களில், இந்தியா 128ஆம் இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஆண்டில் 122வது இடம் பெற்றிருந்தது. அதற்கு முன் 2007 இல் வெளியான பட்டியலில் இந்தியா 109ஆம் இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை வெளியான பட்டியலில் இடம்பெறாத பாகிஸ்தான், இந்த பட்டியலில் 145ஆம் இடத்தை பிடித்துள்ளது.
ரஷ்யாவில் இப்போது அமைதி என்பது அதிகம் இல்லை. அதனால், ரஷ்யா இப்பட்டியலில் 143வது இடத்தில் இருக்கிறது. சீனாவும் தரம் இறங்கி 80வது இடத்திற்கு வந்திருக்கிறது. மிகவும் அமைதி நிலவும் நாடுகள் பட்டியலில், நியூசிலாந்து, ஐய்ஸ்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. மேலும், மேற்கு அய்ரோப்பிய நாடுகள் இந்த பட்டியலில் முதல் 20 இடங்களை பிடித்துள்ளன. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த பட்டியலில் மிகமோசமாக அடிமட்டத்தில் உள்ளன.

தமிழர்களின் தலைவனாக தன்னை பிரகடனப்படுத்த துடிக்கும் கருணாநிதியின் முயற்சிக்கு பேராசிரியர் சிவத்தம்பி துணை போவதா?


தமிழரது வாழ்வும் தமிழ் மொழியும் குருதியில் தோய்ந்துள்ள நிலையில் செமமொழி மாநாடு தேவையா என முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர கேள்வி எழுப்பியுள்ளனர்.
பேராசிரியர் சிவத்தம்பி ஐயாவிற்கு என விளிக்கப்பட்ட இந்த அறிக்கையின் முழு விபரமும் வருமாறு:
எமது மதிப்பிற்குரிய பேராசிரியர் சிவத்தம்பி ஐயாவிற்கு.......
ஐயா! இலங்கைத் தமிழர்களாகிய நாம் தற்சமயம் 50,000 ற்கும் அதிகமான எம் உறவுகளை கொடூரமாகப் பலி கொடுத்து, பல ஆயிரக்கணக்கானவர்களை அங்கவீனர்களாக்கி, பல ஆயிரக்கணக்கானவர்களை விதவைகளாக்கி, பல ஆயிரக்கணக்கானவர்களை அனாதைகளாக்கி, உண்ண உணவிண்றி, உடுக்க உடையின்றி, இருக்க வீடின்றி, உறவுகள் பலரை சிறையில் பறிகொடுத்து அகதிகளாகி, ஏதிலிகளாகி வாழ்வதற்கே திராணி அற்றவர்களாக, தெருக்களிலும், பற்றைகளிலும், முகாம்களிலும் உரிமையற்றவர்களாக முடக்கப்பட்டுள்ளோம்.
எங்கள் தமிழ் மொழி எமது குருதியில் தோய்ந்து செம்மொழியாக குற்றுயிராய் துடித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு விழா எடுப்பதற்காக (செத்த வீடு) கருணாநிதி ஜுன் 23 க்கு உங்களையும் அழைப்பதாகவும் தெரிய வருகிறது.
இலங்கைத் தமிழர் சார்பாக நீங்கள் கலந்து எமது உறவுகளின் குருதியில் குளித்த செம்மொழி மாநாட்டு இறுதி ஊர்வலத்தில் (இலங்கைத் தமிழர்களுக்கன செத்த வீட்டில்)கலந்து கொள்ள வேண்டாம் என மிகவும் தாழ்மையுடன் வேண்டுவதோடு, தற்போதைய மாணவர் ஒன்றியத்தினர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், பல்கலைக்கழக நிர்வாகத்தினரையும் இது சார்பாகக் கவனத்தில் கொள்ளும்படி தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.
எமது இப்போதைய இந்த அவலநிலைக்குக் காரணம் கருணாநிதி அவர்களே. அவர் இப்போது இந்த விழா எடுப்பதற்கான காரணம் என்ன? தான் தான் தமிழர் தலைவன் என்று தனக்குத் தானே முடிசூட்டிக் கொள்ளவா? தான் தலைவனாவதற்கு சந்தர்ப்பம் பார்த்து நேர்த்தியாக எங்களைக் கொண்டு தனக்குப் பட்டம் சூட்டி தான் தமிழர் தலைவனாகப் பார்க்கின்றார். இவர் இந்தப் பட்டம் தனக்கு வரவேண்டும என்பதற்காகவே எங்கள் குருதியில் தமிழைத் தோய்த்து செம்மொழியாக்கினார்.
உலகத் தமிழர்களின் ஒரே தலைவன் எமது தேசியத் தலைவர் மேதகு திரு.வே.பிரபாகரன் அவர்களே! அவருக்கு நிகர் யாரும் இல்லை என்பதை இலங்கைத் தமிழர் நாம் மெய்ப்பிப்போம். நாம் யாரும் அதில் பங்கு கொள்ளாதிருப்போம்....
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டக்ளஸ் தேவானந்தா கைதாவாரா?தமிழ் நாட்டில் பரபரப்பு.


ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற தகவல் பரவுகிறது. இத்தகவலால் பரபரப்பு நிலவுகிறது.தமிழகத்தில் இவர் மீதான கொலை,கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும் குற்றவாளியாக அறிக்கப்பட்டவர் டக்ளஸ் தேவானந்தா.
தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி நேற்று ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு கொடுத்தார்.
அம்மனுவில், ’’இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தில் இருந்தார். இவர் அலுவல் ரீதியாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு இன்று வர இருக்கிறார்.
1986-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார்.
இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.வெளியே வந்த பிறகு, 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் போலீசில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
1989-ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்.
இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற தகவல் பரவுகிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏழு உடன்படிக்கைகள் கைச்சாத்து.


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏழு உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று பிற்பகல் ஹைதராபாத் நகரிலுள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, சமூக, சட்ட, மகளிர் விவகாரம், மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறைகளைச் சார்ந்த ஏழு உடன்படிக்கைகள் இச்சந்திப்பின் போது கைச்சாத்திடப்பட்டன.இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க உட்பட பல உயர் அதிகாரிகள் இந்த உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

09 ஜூன் 2010

நெடுங்கேணியில் கொள்ளையர் அராஜகம்,கணவனுக்கு சூடு,மனைவியின் கை துண்டிப்பு!


நெடுங்கேணியில் மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் வயோதிபரான கணவனும் மனைவியும் கொள்ளையர்களினால் தாக்கப்பட்டு நகைகள் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வயோதிபரான இந்தத் தம்பதியினர் இரவு வேளையில் மற்றுமொரு வீட்டிற்குச் சென்று நித்திரை கொள்வது வழக்கம் என்றும் அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது திடீரென பற்றைக்குள் இருந்து வெளிப்பட்ட திருடர்கள் கணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் மனைவியின் கையிலிருந்த காப்புக்காக அவரது கையைத்துண்டித்து எடுத்துச் சென்றதாகவும் தலையணைக்குள் மறைத்து வைத்திருந்த பணம் நகை என்பவற்றையும் கொள்ளையிட்டுள்ளதாகவும் காயமடைந்த இந்த வயோதிபத் தம்பதியினர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நெடுங்கேணி நாவலர் வீதியைச் சேர்ந்த இராசலிங்கம் (வயது 64) விக்னேஸ்வரி (52) ஆகியோரே இந்தச் சம்பத்தில் காயமடைந்துள்ளனர்.

தமிழீழ போராளிகளை கொச்சைப்படுத்தும் படமான ராம ராவணன் படத்தை அனுமதிக்கமாட்டோம்.


ராம ராவணன் என்ற மலையாளப் படத்தின் பத்திரிகையாளர் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இப்படம் தமிழ் ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்று பத்திரிக்கையாளர்கள் கொதித்தனர்.
இந்த விசயம் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் இந்தப்படத்தை உலகம் முழுவதும் திரையிட விடமாட்டோம் என்று அறிவித்துள்ளார்.
அவர், ‘’சிங்களத்தையும் புத்தத்தையும் உயர்த்திப் பிடிக்கும், தமிழினத்தைக் காட்டுமிராண்டிகளாகச் சித்தரிக்கும் இந்தப் படத்தை, சமய சகுனிப் படமாகவே கருதுகிறோம்.
தமிழினத்துக்கும் தமிழீழ விடுதலைக்கும் களங்கம் கற்பிக்கவே இப்படத்தை இங்கு வெளியிட முனைகிறார்கள் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் மறைந்துள்ள சதி எதுவாக இருந்தாலும் அதனை வெளிக் கொணர்வோம்.
இந்தப்படம் வெளியானால் அது மக்கள் மத்தியில் ஈழப் போராட்டம் பற்றிய தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தும். பல்லாயிரக்கணக்காக போராளிகளின் தியாகத்தையும் வீரத்தையும் கொச்சைப்படுத்தும் பதிவாகவும் அது அமையும். அதற்கு இடம் தர முடியாது.
கேரளாவிலிருந்து வந்து ஈழப் போராட்டத்தையும் தமிழர்களின் மனநிலையையும் வேறு கண்ணோட்டத்தோடு புரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களின் வேதனை புரியாது.
தமிழ் ஈழ விடுதலைப்போரின் அடியோ முடியோ தெரியாமல் தற்குறித்தனமாக எடுத்திருக்கும் படம் இது. இந்தத் தவறான படத்துக்கு தமிழ் மண்ணில் இடம் கிடையாது.
மீறித் திரையிட முயன்றால், தமிழகத்திலும், உலகில் தமிழ் மக்கள் வாழும் எந்தப் பகுதியிலும் இந்தப் படத்தைத் திரையிட விடமாட்டோம் என்று எச்சரிக்கிறோம்.
இப்படி ஒரு தவறான படத்தை எடுத்ததற்காக சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கு எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.

கே.பிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம்.-கெஹலிய.



கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளியுறவுத்துறை தலைவர் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கும் சாத்தியம் தென்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் அடிப்படையில் அண்மையில் உள்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வியளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பத்மநாதனுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க தீர்மானித்தால் அது ஆச்சரியப்படத்தக்க விடயம் இல்லை என தெரிவித்துள்ளார். செவ்வியின் போது கேபி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதன் ஒரு காலத்தில் அரசன் போல வாழ்ந்து வந்தவர். எனினும் தற்போது அவர் தமது பெருமைகள் அனைத்தையும் இழந்து சாதாரணமாக வாழ்ந்து வருவுதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அவர் விடுவிக்கப்படுவாரா? என எழுப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே பொது மன்னிப்பு வழங்கும் சாத்தியம் குறித்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.. இதற்கிடையில் இதன் போது கேபிக்கு அரசாங்க பதவி எதுவும் வழங்கப்படுமா என எழுந்த கேள்விக்கு பதில் வழங்கிய அவர் இது குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டம் தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கேபிக்கு தமது குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் வழங்கிய அமைச்சர் தமது இயக்கத்துக்கு எதிராக செயற்பட்டு தற்போது அவர் தண்டணையை அனுபவித்து வருவதாகவும் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகளின் பல்வேறு தரப்புக்களையும் அரசாங்கத்தினால் முடக்கமுடிந்ததாகவும் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

சாட்சிகள் மீது கோத்தபாயவின் கொலை அச்சுறுத்தல் ஐ.நா.விற்கு திருப்தி அளிக்குமா?இன்ன சிற்றி பிரஸ் கேள்வி.


இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்களில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மற்றும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரதம அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரின் பங்களிப்பு பற்றி சர்வதேச நெருக்கடிகள் குழுவும் ஏனைய அமைப்புக்களும் கேள்வி எழுப்பியுள்ளன. இப்பொழுது, நாட்டில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து எந்தவித சுயாதீன விசாரணைக்குழு முன்னிலையிலும் ஜெனரல் சரத் பொன்சேகா சாட்சியமளிக்க துணிந்தாரேயானால் அவரைத் தூக்கிலிடப் போவதாக ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அச்சுறுத்தியிருந்தார்.ஆனால் பான் கீ மூனும் அவரது அலுவலகமும், கோத்தபாய ஜூன் மாதம் 7ஆம் திகதி விடுத்த இந்த அச்சுறுத்தலை அறிந்து கொண்டும் அது பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருக்கின்றனர். வரலாற்றை அடிப்படையாக வைத்து, மனித உரிமை பேணல் அமைப்புக்கள், இலங்கை அரசாங்கத்தின் சுய விசாரணை நம்பகமற்றது என்ற முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பாக ஆலோசனை பெறுவதற்கு நிபுணர்கள் குழுவை நியமிக்கப் போவதாக தெரிவித்து 3 மாதங்களாகியும் தயக்கம் காண்பித்து வரும் செயலாளர்நாயகத்திற்கு தற்போது சாட்சிகள் மீதான கோத்தபாயவின் கொலை அச்சுறுத்தல் திருப்தி அளிக்குமா என்று இன்னர் சிற்றி பிறெஸ் கேள்வி எழுப்பியுள்ளது. கொலை அச்சுறுத்தல் பற்றி ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் அறிந்தள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ள செயலாளர் நாயகம் மூனின் துணை பேச்சாளர் பர்ஹான் ஹான், நிபுணர்கள் குழுவின் அங்கத்தவர்கள் செயல்படும் விதிமுறைகளைத் தயாரிப்பதிலேயே தாமதம் ஏற்படுவதாக பதிலளித்துள்ளார்.இது புதுமையாக இருக்கிறது. உதாரணமாக, இஸ்ரேல், காசா நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரண உதவிப் படகுகள் மீது தாக்குதல் நடத்தி ஒரு வாரம்கூட ஆவதற்குள் அந்தச் சம்பவம் தொடர்பாக நிபுணர்கள் குழுவை நியமிப்பதற்கு செயலாளர் நாயகம் இஸ்ரேலுடனும் துருக்கி பிரதமருடனும் விதிமுறைகள் பற்றி பேச்சுவார்த்தைகளை நடத்த ஆரம்பித்துள்ளார் என்றும் மனித உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பான் கீமூன் வக்காலத்து வாங்குவதும் அவரது அதீதமான மந்தகதியும் ஐக்கியநாடுகள் ஸ்தாபனம் இலங்கையின் யுத்தக் குற்றச் செயல்களில் கொண்டுள்ள பங்களிப்பை எடுத்துக் காட்டுகின்றனவா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

08 ஜூன் 2010

போர்க்குற்றம் தொடர்பான உண்மைகளை கூறுவது என் கடமை,என்கிறார் சரத் பொன்சேகா.


இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகள் தொடர்பாக தமக்குத் தெரிந்த "உண்மைகளை கூறுவது தனது கடமை" என்று முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார் அப்படி செய்வது தேசத் துரோகமாகாது என்றும் அவர் கூறியுள்ளார். சுயாதீன விசாரணையில் ஜெனரல் பொன்சேகா பங்கு கொண்டு சாட்சியம் அளிக்க முடியாது என்று பிபிசியின் ஹாரட் டாக் நிகழ்சியில் கூறியிருந்த பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ, '' பொன்சேகா பொறுப்பு மிக்கவாராக இருக்க வேண்டும். இது ஒரு தேசத் துரோகம். (சாட்சியம் அளிப்பது) அவர் அதனைச் செய்தால் அதற்காக அவரை நாங்கள் தூக்கிலிடுவோம்.'' என்று கூறியிருந்தார். தன்னை பாதுகாப்புச் செயலர் பொய்யர் என்று விளித்திருப்பது பற்றி கருத்து வெளியிட்ட பொன்சேகா, தான் பொய் சொல்லவில்லை என்றும், தான் பொய் சொன்னதாக குற்றம் சாட்டும் பாதுகாப்புச் செயலர் தன்னுடன் தொலைக் காட்சி மூலம் விவாதம் நடத்தத் தயாரா என்று கேள்வி எழுப்பினார். இலங்கையில் நடந்த போரில் தனக்குத் தெரிந்தவரை போர் குற்றங்கள் நடைபெறவில்லை என்றும், இருந்தும் யாராவது புதிய ஆதாரங்களுடன் மேலதிக விபரங்களுடன் புகார்களை முன்வைத்தால் அது பற்றி நிச்சயம் ஆராயப்பட வேண்டும் என்றும் பொன்சேகா கூறினார்.

மகிந்தவிற்கு எதிர்ப்பு திருமாவளவன் உட்பட பல கட்சினர் கைது!


இலங்கை அதிபர் ராஜபக்சே மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
மயிலாடுதுறையில் ராஜபக்சே உருவமொம்மை எரித்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் பேரணி செல்ல முயன்ற புதிய தமிழகம் கட்சியினர் கைது.தேனியில் ராஜபக்சே உருவமொம்மை எரித்த தமிழ் புலிகள் அமைப்பினர் கைது.
ஓசூரி மதிமுக, தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவியை எரித்து செருப்பால் அடிக்கும் நாம் தமிழர்கள்.







இந்தியா வரும் ராஜபக்சேவை கண்டித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வாசலில் நாம் தமிழர் இயக்கத்தின சிவா, கமல் ஆகியோர் ராஜபக்சே உருவமொம்மையை எரித்தனர். பின்னர் செருப்பால் அடித்தனர்.
அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரர் கைது செய்தார்.

07 ஜூன் 2010

பிரயோசனமற்று முடிவடைந்த பேச்சு வார்த்தை!








தமிழத்
தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பு இணக்கம் எதுவும் இன்றி முடிவடைந்துள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது அரசியல் தீர்வு, மீள்குடியேற்றம், அத்துமீறிய குடியேற்றம், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கல், அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல், அரசியல் அமைப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக பேசப்பட்ட போதும் ஆழமான விடயங்கள் எவையும் ஆராயப்படவில்லை.
இந்தநிலையில், பயங்கரவாதிகளின் தீர்வோ அல்லது பிரபாகரனின் தீர்வோ இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குதல் தொடர்பாக பேசப்பட்ட போது ஏற்கனவே இரண்டு பேருக்கு தாம் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தபோதும் அவர்களில் ஒருவர் மாத்தறையில் இருந்து உளவுப்பணிகளில் ஈடுபட்டமை தொடர்பில் தம்மிடம் ஆதாரம் இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
லண்டனில் உள்ள அமைப்புகள், தற்போது ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில் பொதுமன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுவித்தால், அவர்களும் குறித்த அமைப்புகளில் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்படும் நிலை ஏற்படும் என ஜனாதிபதி பதிலளித்தார்.
அவை, குறித்த கைதிகளை இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தக்கூடிய ஆபத்து உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனவே இந்த விடயத்தில் ஆராய்ந்தே முடிவெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார் இதனை தவிர அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம், மீள்குடியேற்றம் உட்பட்ட பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியிடம் இருந்து நம்பிக்கைக்குரிய பதில்களை எதிர்பார்க்க முடியவில்லை என சந்திப்பில் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் மீண்டும் பேசுவது என்ற அடிப்படையில் இன்றைய பேச்சுவார்த்தை நிறைவுக்கு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தியாவின் ஆட்டத்திற்கு ஆட்டம் போடுகிறது இலங்கை.


இந்தியாவின் தாளத்துக்கு நன்றாகவே ஆட்டம்போடுகிறது இலங்கை. நமது நாட்டு அரசியலில் எது,எப்போது நடந்தாலும் அதனை இந்தியா நன்கு அறிந்துவைத்திருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.“ அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஆனால் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் புலி முத்திரை குத்தி பிரிவினைவாதத்தை தூண்டுவதாக அக்கட்சியின் மீது குற்றம் சுமத்தியிருந்தது.இந்நிலையில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே கூட்டமைப்பை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது” என ரில்வின் சில்வா அங்கு மேலும் தெரிவித்தார்.பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து பார்த்தால் நாம் இதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் கோபமான தொனியில் குறிப்பிட்டார்.

சரத்திற்கு மரண தண்டனை வழங்கப்படலாம்.


கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கத்தினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக த கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவினால் விடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா இலங்கையில் 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை முடிக்கு கொண்டு வருவதற்கு, ஆக்ரோசமான இராணுவ முன்னெடுப்பை மேற்கொண்டிருந்தார்.
யுத்த காலக்கட்டங்களில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் கைக்கோர்த்து செயற்பட்ட போதும், பதவியை துறந்து அரசியலில் இறங்கிய பின்னர், அரசாங்கத்தின் எதிரியாக பார்க்கப்பட்டார்.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கம் பல்வேறு வகைகளிலும் சரத் பொன்சேகாவை புறக்கணித்து வந்தமையை மேற்கோள் காட்டி, த கார்டியன் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சரத் பொன்சேகா அரசியலுக்கு வந்த வேளையில், ஊடககங்களுக்கு பதில் வழங்கும் போது, யுத்த காலத்தில் நடைபெற்ற விடயங்களை தாம் ஒரு போதும் மறைக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து, பிபிசியின் ஹார்ட் டோக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடம், சரத் பொன்சேகாவின் கருத்து குறித்து வினவப்பட்டது.
இதற்கு ஆக்ரோசமான பதிலை வெளியிட்டிருந்த கோத்தபாய ராஜபக்ஸ, அவ்வாறு சரத் பொன்சேகா செய்வாரானால், அவரை நாங்கள் தூக்கில் இடுவோம் எனவும், அவர் ஒரு பொய்காரர் எனவும், அவருக்கு அந்த உரிமை இல்லை எனவும் கடும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்தினார்.
இதன் பின்னர், சரத் பொன்சேகா, இறுதி யுத்தத்தின் போது, சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை கொலை செய்யுமாறு உயர் மட்டத்தில் இருந்து உத்தரவிடப்பட்டதாக கூறியிருந்தார்.
இதன் பின்னரே சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு இராணுவ சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
எனவே இந்த கைது, தடுத்து வைப்பு மற்றும் கால தாமதங்களின் பின்னணியில், அரசாங்கம் அவருக்கு மரண தண்டனை விதிக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாக த கார்டியன் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் ஐபாவை காட்டி சீபாவில் கையெழுத்திடப்போகிறது.


அரசாங்கம் நாட்டு மக்களுக்கு "ஐஃபாவை' காட்டி, நாட்டுக்குப் பாதகமான "சீபா' உடன்படிக்கையில் கைச்சாத்திடப் போகிறன்றது. அரசின் இத்தகைய செயல் ""தங்கையைக் காட்டி அக்காவைத் திருமணம் செய்து வைப்பது'' போன்றதாகும் என்று ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார். "சீபா' என்பது என்னவென தனக்கே தெரியாதென்கிறார் ஜனாதிபதி.எனவே அதில் உள்ளடக்கப்பட்டுள்ளவைகளை பாராளுமன்றத்தில் முன் வைக்க வேண்டுமென்றும் அவர் கூறினார். கொழும்பு 7 இலுள்ள ஜனநாயக தேசிய முன்னணியின் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே விஜித ஹேரத் எம்.பி இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 2003 ஆம் ஆண்டு "சீபா' (பரந்தளவிலான பொருளாதார நல்லிணக்க) உடன்படிக்கை தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு நகல் வடிவம் பெற்று இலங்கையில் இடம்பெற்ற சார்க் மாநாட்டின் போது இதில் அரசாங்கம் கைச்சாத்திடவிருந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் அமைப்புக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கைகளால் கையெழுத்திடுவது கைவிடப்பட்டது. தற்போது சீபாவில் கையெழுத்திட வேண்டுமென இந்திய தரப்பிலிருந்து கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் இதில் நிச்சயம் கையெழுத்திடும். எனவே அதற்கு முன்பு பாராளுமன்றத்திடமும் அமைச்சரவைக்கும் முன் வைக்கப்படாத உடன்படிக்கை விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். சீபாவில் என்ன இருக்கின்றதென தனக்கே தெரியாதென அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது நகைப்புக்குரிய விடயமாகும். எது எவ்வாறிருப்பினும் சீபா தொடர்பிலான விபரங்களை அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன் வைக்க வேண்டும். ஏனெனில் இதேபோன்று இந்தியாவுடன் "சப்டா' உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் இலங்கைக்கு சாதகமாக எதுவும் ஏற்படவில்லை. நாம் 100 வீதமான ஏற்றுமதியை மேற்கொண்டோம். ஆனால் இந்தியா 500 வீத ஏற்றுமதியை எமது நாட்டுக்குள் மேற்கொண்டது. இதனை விட பயங்கரமான உடன்படிக்கையே சீபாவாகும். இதனால் இலங்கையின் உற்பத்தியாளர்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். இந்தியாவின் விசாலமான உற்பத்திகள் இங்கு ஆரம்பிக்கப்படும். இதனால் தேசிய உற்பத்தியாளர்கள் பாதிப்படைவார்கள். அத்தோடு இந்தியாவிலிருந்து வைத்தியர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், கணினி நிபுணர்களென, ஊழியர்களுக்கும் இங்கு வந்து தொழில்புரிய கதவுகள் திறக்கப்படுகின்றன. இதனால் தேசிய உற்பத்தியாளர்கள் வீழ்ச்சியடைவார்கள். உள்ளூர் தொழிலாளர்கள் தொழில்களை இழப்பார்கள். மொத்தத்தில் எமது நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடையும். எனவே இதனை பாராளுமன்றத்தில் முன் வைத்து பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அதை விடுத்து ஷல்மான்கானையும், ஐஸ்வர்யாராயையும் காண்பித்து மக்களை மோக வலையில் சிக்க வைத்து அரசாங்கம் சீபா உடன்படிக்கையில் கையெழுத்திட முனைவதை கடுமையாக எதிர்க்கிறோம்.

06 ஜூன் 2010

சல்மான் கானின் படங்களுக்கு ஐந்து மாநிலங்களில் தடை!


இலங்கை அரசு சர்வதேச இந்திய திரைப்பட விழாவை கொழும்பு’வில் நடத்தியது. இதற்கு இந்திய திரையுலக கலைஞர்களுக்கு இலங்கை அரசு அழைப்பு விடுத்தது.
தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொள்ளக்கூடாது தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்கள் இவ்விழாவில் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர். ரஜினிகாந்த் அழைப்பிதழை கூட வாங்கிக்கொள்ளவில்லை.
நாம் தமிழர் இயக்கம் மற்றும் பல அமைப்புகளும் குரல் கொடுத்ததால் இந்திய திரையுலகத்தினர் இலங்கை விழாவை புறக்கணித்தனர்.
சில துக்கடாக்கள் மட்டும் இலங்கை சென்றது.
தடையை மீறி இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், விவேக் ஒபராய், சல்மான்கான், சஞ்சய்தத், கரீனாகபூர், பிபாசா பாசு, ரிதேஷ் தேஷ்முக், சீமாகான் போன்றோர் இலங்கை விழாவில் பங்கேற்றனர்.
இதனால் சென்னையில் சத்தியம், ஈகா, பி.வி.ஆர்., ஐநாக்ஸ் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த ஹிரித்திக் ரோஷனின் கைட்ஸ் படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டனர்.
இதையடுத்து சல்மான்கான் படங்களுக்கு தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, புதுவை ஆகிய 5 மாநிலங்களிலும் தடைவிதிக்கப்படுகிறது.
சல்மான்கான் நடித்து வரும் பந்தா ஏக் பிந்தாஸ் என்ற படம் ஜூலை 9-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் நடிக்கும் டாபங்க் என்ற படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இவ்விரு படங்களும் 5 மாநிலங்களிலும் ரிலீசாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐபா விருது வழங்கும் விழா மகிந்தவும் புறக்கணிப்பு.



கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐஃபா திரைப்பட விருது வழங்கும் விழாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக அவர் நேற்று இரவு நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வதாக இருந்தது. எனினும் இறுதி நேரத்தில் அந்த தீர்மானம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன், விருது நிகழ்வுக்கு வந்திருந்த ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஷவும் சிறிது நேரத்தில் திரும்பியதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று காலை ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த விருந்துபசார நிகழ்விலும் நடிகர்கள் பெரும்பாலோனோர் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் பாதுகாப்பின் காரணமாகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்றைய விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என காரணம் கூறப்பட்டது. எனினும் இது சமாளிப்பு நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் பல அமைப்புகளினாலும் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக பல முன்னணி இந்திய நடிகர்கள் இந்த விருது நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் இதனையும் மீறி கலந்து கொண்ட நடிகர்களை இலங்கை அரசாங்கத்துடன் உறவாடுவதை தவிர்க்கும் பொருட்டே ஹிந்தி திரையுலகத்தினர் ஜனாதிபதியை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் அலரி மாளிகையில் நடைபெற்ற ஹிந்தி நடிகர்களுக்கான விருந்து உபசாரத்துக்கு ஹிந்தி நடிகர்கள் பங்கு பற்றாமையினாலேயே ஜனாதிபதியும் இறுதி விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

தமிழரை கொன்று ஒழித்த பழியை கருணாநிதி சுமந்து நிற்கிறார்,-ரி.ராஜேந்தர்.



ஒரு காலத்தில் தமிழ்மொழியை காத்த தலைவர் என்ற பெயரை சுமந்து நின்ற கருணாநிதி, இன்று இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் என்று இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய. டி. ராஜேந்தர் தெரிவித்தார்.
தமிழினக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நடைபெற உள்ள தமிழர் மீட்சி மாநாடு குறித்த அறிவிப்பு தொடர்பாக நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் ,
நடைபெறவுள்ள தமிழ்ச் செம்மொழி மாநாடு, தமிழர் ஆட்சி மாநாடு! ஆளும் கட்சியின் மாநாடு!. ஆனால் ஜூன் 12ம் தேதி நடைபெறும் மாநாடோ தமிழர்களுக்காக நடத்தப்படும் தமிழர் மீட்சி மாநாடாகும்.
இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் செத்து மடிந்தபோதுகூட இங்குள்ள அரசியல் கட்சிகள் ஒன்று சேரவில்லை.
இலங்கையில் தமிழர்கள் பகுதி சுடுகாடாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் செம்மொழி மாநாடா?
தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நான் எதிர்க்கவில்லை, ஏனென்றால் அது என் மொழி மாநாடு.
கருணாநிதி 5 ஆவது முறையாக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். ஆனால் அவரால் தமிழகத்தில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க முடியவில்லை. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகளாகிவிட்டது. இப்போதும் இதற்காக அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை' என்றார்.

என் தாயிடம் தவறாக நடக்க முயன்றதால் கொன்றேன்,மாணவர் பரபரப்பு வாக்கு மூலம்!


சிட்லபாக்கத்தில் புரோகிதர் கொலை வழக்கில் துப்பு துலங்கியது. இது தொடர்பாக கைதான பள்ளி மாணவர், "வீட்டு வேலைக்கு வந்த தாயிடம் தவறாக நடக்க முயன்றதால் முதியவரை கொலை செய்தேன்" என்று வாக்குமூலம் அளித்தார். சென்னையை அடுத்த சிட்லபாக்கம் ராதாநகர் மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 70). இவர் கடந்த 30-ந் தேதி மாலை வீட்டில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அவரது வீட்டில் பீரோவில் இருந்த நகை, பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது பற்றி தகவல் அறிந்த புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவின்பேரில், பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜ× தலைமையில் உதவி கமிஷனர் முத்தமிழ்மணி, இன்ஸ்பெக்டர்கள் சங்கரநாராயணன், முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், ஆல்வின்ராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்தன. தண்டபாணி பெண்கள் விஷயத்தில் சபலம் கொண்டு செயல்படுவார். இவருடைய மனைவி சுப்புலட்சுமி கடந்த 8 மாதங்களுக்கு முன் உடலநலக் குறைவினால் இறந்து விட்டார். தண்டபாணி கோவிலில் புரோகிதர் வேலை பார்த்து வந்தார். அவரது சொந்த ஊர் பெங்களூர். கடந்த 4 மாதங்களாக அவருடைய வீட்டில் ஒரு பெண் வேலை பார்த்து வந்தார். விசாரணையில், அவர் சென்னை கொளப்பாக்கத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவருடைய மனைவி முத்துலட்சுமி (52) என்பது தெரிய வந்தது. மேடவாக்கத்தில் வாகன சோதனை நடத்திக் கொண்டு இருந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்த முத்துலட்சுமியின் மகன் வெங்கட் என்ற வெங்கட சுப்பிரமணியம் (18) என்பவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்தான் புரோகிதரை கொலை செய்தார் என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது:- நான் பிளஸ்-2 படித்துள்ளேன். தேர்வில் 678 மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பித்து உள்ளேன். கடந்த ஜனவரி மாதம் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் வந்ததை கண்டு நானும் எனது அம்மா முத்துலட்சுமியும் தண்டபாணி வீட்டுக்கு சென்றோம். அவர் எனது அம்மாவை வீட்டு வேலைக்கு சேர்த்துக் கொண்டார். வாரிசு இல்லாததால் சுவீகாரம் செய்துக் கொள்வதாகவும் என்னிடம் கூறினார். பின்னர் நான் பிளஸ்-2 தேர்வுக்காக படித்ததால் அம்மாவுடன் செல்லவில்லை. தண்டபாணி தவறான முறையில் நடக்க முயற்சித்து பல்வேறு தொல்லைகள் தருவதாக அம்மா என்னிடம் கூறினார். இதற்கிடையில் வேலைக்கு சரியாக செல்வில்லை என்றதும் அம்மாவுக்கு போன்செய்து மிரட்டி இருக்கிறார். இந்த செய்தி எனக்கு தெரிய வந்தது. இதை என் நண்பர் அப்துல் சுபான் (20) என்பவரிடம் கூறினேன். ஆடு வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டு தண்டபாணி வீட்டிற்கு சென்றோம். அம்மாவிடம் தவறாக நடந்ததை பற்றி தண்டபாணியிடம் கேட்டோம். இதில் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் தண்டபாணியை கீழே தள்ளி விட்டேன். கீழே விழுந்ததும் தண்டபாணியின் கழுத்தை சுபான் வெட்டினார். நான் வயிற்றில் குத்தினேன். பின்னர் பீரோவில் இருந்த 2 மோதிரம், 2 வளையல், 1 சங்கிலி, ரூ.55 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வந்து விட்டோம். இவ்வாறு வெங்கட் கூறினார். இதைத்தொடர்ந்து 4 பவுன் தங்க நகைகள், ரூ 55 ஆயிரம் பணத்தை போலீசார் கைப்பற்றினார்கள். இதையொட்டி வெங்கட், சுபான் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கொலை நடந்த 2 நாளில் துப்பு துலக்கி கொலையாளிகளை கைது செய்த தனிப்படையினரை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் பாராட்டினார்.

05 ஜூன் 2010

ஜெனிலியா சொல்வது உண்மையா பொய்யா?



நீரோ மன்னனின் வம்சாவளியோ என்ன இழவோ? பத்திகிட்டு எரியுது பிரச்சனை, பல்லை காட்டி ஆட்டம் போட போயிருக்கிறார்கள் கொழும்புக்கு! மும்பை நட்சத்திரங்கள் சிலரை வைத்து இந்திய திரைப்பட விழாவை இலங்கையில் நடத்திக் கொண்டிருக்கிறார் ராஜபக்சே. இதில் கலந்து கொள்ள ஜெனிலியாவும் போயிருக்கிறார் என்றொரு செய்தி. கேள்விப்பட்டவுடன் ஆடிப் போய் விட்டது தமிழ் படவுலகம். இந்தியில் அறிமுகம் ஆனாலும், தமிழ் படமான 'பாய்ஸ்' தான் புறவுலகுக்கு தெரிய வைத்தது ஜெனிலியாவை. இத்தனைக்கும் தமிழில் 'உத்தமபுத்திரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார் இவர்.

உடனடியாக நடிகர் சங்கத்திடம் முறையிட்ட தயாரிப்பாளர் சங்கம், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியது. வெகுண்டு எழுந்த நடிகர் சங்க செயலாளர் ராதாரவி 'இனிமேல் ஜெனிலியா நடிக்கும் எந்த படத்திற்கும் தொழில் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை' என்று ஓப்பனாக அறிக்கை வெளியிட்டார். பெப்சி அமைப்பும் இதே நிலையை எடுத்தது. விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கப் போகிறார் ஜெனிலியா. உடனடியாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமும் இதுகுறித்து பேசப்பட்டது. 'தமிழர்களின் உணர்வை மதிக்காமல் இலங்கைக்கு போன ஜெனிலியாவை படத்திலிருந்தே நீக்கிவிடுகிறேன்' என்று அவரும் முடிவெடுக்க, இத்தனை தகவல்களும் மின்னல் வேகத்தில் போய் சேர்ந்தது ஜெனிலியாவுக்கு.
'நான் இலங்கைக்கு போகவே இல்லை. தமிழர்களின் உணர்வை மதிக்கிறேன். நான் இலங்கைக்கு போனதாக வந்த செய்தியில் உண்மை இல்லை' என்று மறுத்திருக்கிறார். ஆனால் உண்மை அது இல்லை. நிலைமை விபரீதமாக போவதை சற்று தாமதமாக புரிந்து கொண்டவர் இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறி இருக்கலாம் என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத சில திரைப்பட முக்கியஸ்தர்கள்.

இனவெறியன் ராஜபக்ஷவின் இந்திய வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!-திருமாவளவன்.


இனவெறியன் ராஜபக்சே புதுதில்லி வருகையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிங்கள இனவெறியன் ராஜபக்சே எதிர்வரும் 8Š.6.Š2010 அன்று இந்திய ஆட்சியாளர்களைச் சந்திப்பதற்காக புதுதில்லி வருவதாகத் தெரிகிறது. முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்களைப் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவித்த மனிதநேயமில்லாத காட்டுமிராண்டி ராஜபக்சே, அந்தப் பேரவலம் நடந்து முடிந்து ஓராண்டு ஆன நிலையிலும் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவோ அச்சிக்கலுக்கான அரசியல் தீர்வை உருவாக்கவோ சிறிதும் முனைப்புக் காட்டவில்லை. கடந்த ஜனவரி மாதத்திற்குள்ளாக வவுனியாவில் உள்ள வதைமுகாம்களிளுள்ள அனைவரையும் விடுவித்து அவரவருக்கான சொந்த வாழிடங்களில் மீள்குடியமர்த்தம் செய்யப் போவதாகவும் மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளை நிறைவேற்றப் போவதாகவும் இந்திய அரசுக்கு வாக்குறுதி அளித்த ராஜபக்சே அவற்றை நிறைவேற்றுவதற்கு எள்முனையளவும் அக்கறை காட்டவில்லை. இன்னும் இலட்சக்கணக்கானோர் வவுனியா வதைமுகாம்களில் சிக்கிச் சீரழிந்து வருகின்றனர். அம்முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வுப் பணிகள் ஏதும் செய்யப்படாத நிலையில் அனாதைகளாய் அல்லாடி வருகின்றனர். இத்தகைய நிலையில் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அடைக்கலம் தேடித் தப்பித்துச் சென்ற தமிழர்களையும் கடல் பகுதிகளில் சுற்றி வளைத்துத் தாக்குகின்ற கொடுமைகளையும் சிங்கள இனவெறி அரசு தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது. இந்தியாவுக்கோ அல்லது சர்வதேசச் சமூகத்திற்கோ
அச்சப்படாமல், மனிதநேய மரபுகளையும் மதிக்காமல் காட்டுமிராண்டித் தனமாக நடந்துகொள்கிற ஈவிரக்கமில்லாத இனவெறியன் இராஜபக்சேவின் இந்திய வருகை மேலும் ஒரு ஏமாற்று நடவடிக்கையாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எனவே இராஜபக்சேவின் வருகையை எதிர்க்கும் வகையிலும் சிங்கள அரசின் மனிதநேயமற்ற போக்குகளைக் கண்டிக்கும் வகையிலும் 8.6.Š2010 அன்று விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் சென்னையில் எனது தலைமையில் நடைபெறுகிறது. அந்த அறப்போராட்டத்தில் மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் அழைப்பு விடுக்கிறோம் என்று திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

மகிந்தவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசவுள்ளதாம்!


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.அரசியல் தீர்வு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் சிறைச்சாலைகளில் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பிலேயே தாம் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வலியுறுத்தும் விடயங்கள் குறித்து பேசுவதற்கு நாளை ஞாயிற்றுக்கிழமை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இலங்கை ஏதிலிகள் என சந்தேகிக்கப்படும் இரு படகுகள் அவுஸ்திரேலிய கடற்பரப்பில் முற்றுகை!


அவுஸ்திரேலிய கடற்பரப்பில் வைத்து மேலும் இரு அகதிகள் படகுகள் முற்றுகையிடப்பட்டுள்ளளதாக அவுதிஸ்திரேலிய உள்விவகார அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. முற்றுகையிடப்பட்ட முதலாவது படகில் 54 அகதிகளும், இரண்டாவதாக முற்றுகையிடப்பட்ட படகில் 28 அகதிகளும் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்விரு படகுகளிலும் இலங்கை அல்லது ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளே பயணித்திருக்கலாமென அவுஸ்திரேலியா அரசு சந்தேகம் வெளியிட்டுள்ளது. முற்றுகையிடப்பட்டுள்ள இரு படகுகளிலும் பயணித்த அகதிகள் கிறிஸ்மஸ் தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதியில் சுமார் 750 அகதிகள் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் ஊடுருவ முயற்சித்து கைது செய்யப்பட்டு, கிறிஸ்மஸ் தீவுகளிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.தஞ்சம் கோரும் அகதிகளின் விண்ணப்பங்களை ஏற்பதை கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் அவுஸ்திரேலியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

04 ஜூன் 2010

இந்தி திரைப்படங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன!


தமிழ் நாட்டில் பல வருடங்களுக்கு முன்னர், கருணாநிதி தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. இந்தியில் எழுதப்பட்ட பதாகைகளுக்கு தார் பூசினார். இருப்பினும் தனது அரசியல் நலன் காரணமாக தற்போது, இந்திரா காங்கிரசுடன் இணைந்து மத்திய அரசுடன் சொந்த உடன்பிறப்புகளான தமிழர்களை காட்டிக்கொடுத்தும் வருகிறார். இந்நிலையில் இலங்கையில் நடைபெற இருக்கின்ற இந்திய திரைப்படவிழாவில் சில இந்தி நடிகர்கள் தமிழ் நாட்டில் எழுந்த அழுத்தங்களையும் மீறி இலங்கை சென்றுள்ளனர்.இதனால் இன்று சில இந்திப் படங்களை வெளியிட்ட சென்னை திரையரங்குகளை நாம் தமிழர் அமைப்பினர் முற்றுகையிட்டனர். இதனால் அத் திரையரங்குகள் தாம் போடவேண்டிய இந்திப் படங்களை இன்று போடாமல் காட்சிகளை ரத்துச் செய்துள்ளன. சென்னையில் உள்ள "ஈகா" மற்றும் பி.வி.ஆர் திரை அரங்கம் என்பனவே இவ்வாறு தமது படங்களை ரத்து செய்தன.

இலங்கையிலும் உரசிக்கொண்ட ஐஸ்சின் முன்னாள் காதலர்கள்!




தமிழின இயக்கங்களின் எதிர்ப்பால் இந்தி திரையுலகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் புறக்கணித்துவிட்ட நிலையில், கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகத்தின் விருது வழங்கு விழா களையிழந்து துவங்கியது.
வான வேடிக்கைகள் விமரிசையாக நடந்தாலும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாரூக் கான் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்ற மறுத்துவிட்டதால், இரண்டாம் நிலை ஹீரோக்களும், ஜீரோக்களும் தான் கலந்துகொண்டனர்.
இந்த விழாவையொட்டி நடத்தப்பட்ட ஆடை அலங்கார அணிவகுப்பில் சல்மான் கான் பெயரை விவேக் ஓபராய் அழைத்தார். ஆனால் அந்த அழைப்பை புறக்கணித்த சல்மான் கான், விவேக் ஓபராய் அழைத்தால் மேடைக்கு வர மாட்டேன் என்று முரண்டு பிடித்து, பழைய தகராறு(ஐஸ்வர்யாராயின் முன்னாள் காதலர்கள்) இன்னமு்ம தங்களுக்கிடையே கொதித்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதைக் காட்டினார். அதன் பிறகு வேறொரு நடிகர் அவர் பெயரை கூறி அழைக்க மேடைக்கு வந்தார் சல்மான் கான்.
இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையானது. பத்திரிக்கைகளும் ஜஃபா விழாவை விட இந்தச் சர்ச்சையையே பெரிதாக்கின. இதனால் விழா ஏற்பாட்டாளர்கள் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இஸ்ரேல் மனித உரிமை மீறல் குறித்த ஐ,நா விசாரணைக்குழுவின் தலைவராக போர்க்குற்றவாளி பாலித ஹோகென்ன நியமனம்!


பலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசாரணை ஆணைக்குழுவின் தலைமைப் பொறுப்பிற்கு பாலித கொஹன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இஸ்ரேலின் நடவடிக்கைகளினால் பலஸ்தீன மக்கள் மற்றும் ஏனைய அரேபியர்களுக்கு எதிர்நோக்கி வரும் உரிமை மீறல்கள் தொடர்பில் பாலித கொஹணே தலைமையிலான ஆணைக்குழு விசாரணைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் எகிப்து, சிரியா மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளுக்கு இந்தக் குழு விஜயங்களை மேற்கொள்ள உள்ளது.மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயும் விசாரணைக் குழு 1968ம் ஆண்டு முதல் பணிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேற்குக் கரை, காஸா பள்ளத்தக்கு, கிழக்கு ஜெருசேலம் மற்றும் சிரிய மலைப்பிரதேசம் ஆகியவற்றில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து குழுவினர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.இலங்கை, மலேசியா மற்றும் செனகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த விசாரணை ஆணைக்குழுவில் அங்கம் விகிக்கின்றனர்.

தமிழ் திரையுலகினர் கலந்து கொள்ளாமையால் விவேக் ஒபராய் கவலையாம்.


கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவை தமிழ்த் திரையுலகம் புறக்கணித்தது கவலை அளிக்கிறது என்று பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார்.
விருது வழங்கும் விழா இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்று வருகிறது.
தமிழ் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமிதாப் பச்சன், கமல்ஹாசன், மணிரத்னம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் கொழும்பு செல்லவில்லை என்றாலும், இந்த விழாவிற்கு இந்தி திரையுலகைச் சேர்ந்த சல்மான் கான், விவேக் ஓபராய், ஹிருத்திக் ரோஷன், சுனில் ஷெட்டி உள்ளிட்டவர்கள் சென்றுள்ளனர்.
கொழும்பில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விவேக் ஓபராய்,
‘எனக்கும் தமிழகத்திற்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. இந்த திரைப்பட விருது வழங்கும் விழாவை தமிழ்த் திரையுலகினர் புறக்கணித்தது கவலையளிக்கிறது’ என்றார்.

தென்னிந்திய திரைப் படங்களை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.-கெஹலிய ரம்புக்ஹல.


இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (ஐஃபா) அமிதாப்பச்சன் உட்பட முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளாததன் காரணமாக தென்னிந்தியத் திரைப்படங்களை இலங்கையில் திரையிடுவதை தடை செய்ய வேண்டிய அவசியமில்லையெனத் தெரிவிக்கும் அரசாங்கம், சர்வதேச ரீதியில் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தூண்டுதலின் பேரிலேயே தென்னிந்தியாவில் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லையென்றும் அறிவித்துள்ளது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,தென்னிந்தியாவில் எமக்கு எதிராக எவ்வாறான எதிர்ப்புகள் எழுந்தாலும் இந்திய மத்திய அரசாங்கம் எமது நாட்டுக்கு சாதாகமான ரீதியிலேயே தீர்மானங்களை மேற்கொள்கின்றது.அண்மையில் மேலும் இரண்டு வருடங்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக பிரகடனப்படுத்தியமை இதற்கு சிறந்த உதாரணமாகும். எனவே எந்த ரீதியில் அழுத்தங்கள் வந்த போதிலும் ஐஃபா நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுகிறது. இதன் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் முயற்சி தோல்வி கண்டுள்ளது.

செய்து முடி அல்லது செத்து மடி,தியாகி சிவகுமாரன் நினைவு வணக்க நாள்.



தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன் முதலாக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகி சிவகுமாரனின் 36 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெற உள்ளது.
தமிழர்களின் கல்விக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய சிங்கள பெளத்த பேரினவாத அரசின் கல்வித் தரைப்படுத்தல் சட்டத்திற்கு எதிராகவும், தமிழர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராகவும், கொதித்தெழுந்து போராடிய மாணவனான பொன்.சிவகுமாரன் சிங்கள பொலிஸார் சுற்றிவளைத்து மேற்கொண்ட தாக்குதலில் 05-06-1974 இல் படுகாயமுற்று பின்னர் யாழ் வைத்தியசாலையில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 06-06-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள CANONS HIGH SCHOOL மண்டபத்தில் இடம்பெற உள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வு "செய்து முடி அல்லது செத்து மடி" என்ற தாரக மந்திரத்துடன் மிகவும் உணர்வுபூர்வமாக "மாணவர் எழுச்சி நாளாக" இளையோர்களால் நடாத்தப்படவுள்ளது.
பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வில் அனைத்து பிரித்தானிய தமிழர்களையும் வந்து கலந்து கொள்ளுமாறு பிரித்தானிய தமிழ் இளையோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இடம்: CANONS HIGH SCHOOL,
Saldon Road, Edgware,
Middlesex, HA8 6an
காலம்: 06-06-2010
நேரம்: 3pm - 7pm

தமிழின உணர்வாளர்கள் காசு கொடுத்து கூட்டப்பட்ட கூட்டமாம்,இப்படி சொல்கிறது ஐபா என்ற விரோத அமைப்பு.





தமிழின உணர்வாளர்களை காசு கொடுத்து கூட்டிய கூட்டம் என்று அவமானப்படுத்தியது ஐபா என்ற விரோத அமைப்பு.


நேற்று இரவு டைம்ஸ்நவ் (TimesNow) தொலைக்காட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய IIFA விழாவை நடத்தும் விஸ்கிராப்ட் (Wizcraft) நிறுவனத்தின் இயக்குனரும் இந்த நிகழ்வின் முக்கிய காரணகர்த்தாவுமான சபாஸ் ஜோசப் தான் இப்படி திமிர்த்தனமாக பேசினார்.
மும்பையில் பாலிவுட் இன் முக்கிய நடிகரும் IIFA இன் தூதுவருமான திரு.அமிதாப் வீட்டின் முன் முற்றுகை போராட்டமும் பிறகு குடும்பமாக குழந்தைகளுடன் உண்ணாவிரதமும் நடத்தி இலங்கையில் நடக்கும் ஐபா விழாவை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களுக்கு ஆரம்பமாக வித்திட்ட மும்பை தமிழின உணர்வாளர்களை தான் சபாஸ் ஜோசப் இலங்கையில் இருந்துகொண்டு ராஜபக்சேவின் அரவணைப்பில் இப்படி வாய் கொழுப்பு எடுத்து பேசி உள்ளார்.
இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐபா விழாவில் கலந்துகொள்ள இலங்கை செல்லும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தென்னிந்தியாவில் தடை செய்வோம் என்று தமிழினத்திற்காக மனிதாபிமான குரல் கொடுத்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் செயலாளர் மதிற்பிற்குரிய திரு.சுரேஷ் குமார் அவர்களுடன் நடைபெற்ற வாக்குவாதத்தின் போது தான் சபாஸ் ஜோசப் இப்படி தமிழின உணர்வை கொச்சைபடுத்தி பேசினார்.
ஐபா வை இலங்கையில் நடத்தகூடாது என்று போராடிய தமிழர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது என்றால், இலங்கையின் இனப்படுகொலையை மறைக்க நடக்கும் இவ்விழாவை தமிழர்களின் உணர்வை மதித்து தாமாக முன்வந்து புறக்கணித்த எண்ணற்ற திரைத்துறையினர் அமிதாப் உட்பட எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்று சொல்வாரா இந்த ஜோசப். ???
இராஜபக்சேவின் சதிநாடகத்தை செயல்படுத்தி தமிழர் நிலங்களை இந்திய பெரு முதலாளிகளுக்கு கூறு போட்டு விற்க துடிக்கும் இந்த தரகர் குள்ளநரி நம் அனைவரையும் அவமானப்படுத்துகிறது தமிழன் விழிக்கமாட்டான் என்று நினைப்பா? .
இதற்கு ஆதாரமாக சபாஸ் ஜோசப் பேசியதன் காணொளி.

03 ஜூன் 2010

வன்னி முகாம்களில் மக்கள் திண்டாடும் போது,கொழும்பில் கொண்டாட்டம் தேவையா?


வன்னி முகாம்களில் மக்கள் திண்டாடும் போது கொழும்பில் கொண்டாட்டம் தேவையா என ஜனநாயக தேசிய முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கொழும்பில் இன்று ஆரம்பமானதை தொடர்ந்து கொழும்பில் பல இடங்களிலும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. இதே வேளை இவ் விழாவில் கலந்து கொள்ள பல தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.இந்நிலையில் கடந்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முகாம்களில் இருப்பதோடு பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். ஆனால் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றது. வடக்கில் மக்கள் திண்டாடும் போது பொழும்பில் கொண்டாட்டம் தேவையா என ஜனநாயக தேசிய முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது.

ராஜபக்ஷவிற்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்.


ஜூன் 8ல் ராசபக்சேவுக்கு எதிராக சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளிட்ட அறிக்கையில்,
இலங்கையில் கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த இலங்கை குடியரசுத் தலைவர் இராசபக்சே ஜூன் 8ஆம் நாள் இந்திய அரசின் அழைப்பின் பேரில் வர இருக்கிறார்.
அயர்லாந்தின் தலைநகரமான டப்ளினில் கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் இராசபக்சேயை போர்க்குற்றவாளி என முடிவு செய்து, சர்வதேச நீதிமன்றத்திற்குமுன் அவர் நிறுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது. அய்.நா. பேரவையின் பொதுச்செயலாளர் பான்கீமூன் இலங்கையில் நடந்த போர் அத்துமீறல்கள் குறித்து அய்.நா. விசாரனை மன்றம் ஒன்றை அமைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். பல்வேறு நாடுகளும் இராசபக்சேயின் போர்க்குற்றம் குறித்து விசாரனை நடத்தப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன.
உலக சமுதாயத்தினால் போர்க் குற்றம் புரிந்தவர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள இராசபக்சேவுக்கு இரத்தினக் கம்பள வரவேற்பை இந்திய அரசு அளிக்க இருப்பதை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசின் இந்த செயல் தமிழக மக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை இராசபக்சேவுக்கு தெரிவிக்கும் வகையில் ஜூன் 8ஆம் நாள் காலை 10மணிக்கு சென்னையில் இலங்கைத் தூதுவர் அலுவலகம் முன்பாக மாபெரும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதே நாளில் அதே நேரத்தில் தமிழகமெங்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக்கட்சிகள், அனைத்துத் தமிழ் அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளாகக் கலந்துகொண்டு நமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ அழைப்பு கிடைத்தால் அரசுடன் பேசுவோம்!


அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ அழைப்புக் கிடைத்தால் மட்டுமே தாம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்துக் கலந்தாலோசிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அரசாங்கம் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பில் வெறுமனே அறிக்கைகளை விடுப்பதால் பலனில்லை. எனவே, அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் எந்தவித உறுதியான முடிவையும் கூறமுடியாது என அவர் மேலும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள் தொடர்பில் அவரிடம் கேட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

02 ஜூன் 2010

புலி விரைவில் உறுமும்,நரிகள் ஓடி ஒளியும்-பழ.நெடுமாறன்.




தமிழக அரசியலில் மூன்றாவது மையப்புள்ளியாக உருவாகியிருக்கிறார் நெடுமாறன். இலங்கைத் தமிழர் பாது காப்பு இயக்கம் மூலம் போர் நிறுத்தம் கேட்டு அவர் முன்னெடுத்த போராட் டங்கள் மத்திய மாநில அரசுகளின் அச்சாணிகளையே அசைத்துப் பார்த்தன. கடும் ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் சமரசமற்ற போராட்டக்காரனின் வாழ் வாக நீண்டு கொண்டிருக்கும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரான பெரிய வர் நெடுமாறனை சென்னை வளசரவாக் கத்தில் இருக்கும் அவரது அலுவலகத் தில் ஆதவன் இதழுக்காகச் சந்தித்தோம்.... பார்வதியம்மாளை வரவேற்க நீங்களும் வைகோவும் ஏன் தனியாகச் சென் றீர்கள்? ஆயிரக்கணக்கான தமிழுணர் வாளர்களைத் திரட்டி அவரை வரவேற் கச் சென்றிருக்கலாமே? பார்வதியம்மாள் உடல் நலம் நலிந்த நிலையில் இருக்கிறார். கூட்டம் கூடி பரபரப்புச் செய்து அவரை வரவேற்பது என்பது அவரது உடல் நலத்திற்கு உகந் ததல்ல, அவருக்கு மருத்துவ சிகிச் சையை விட மன ரீதியான சிகிச்சை அவசியமாக இருந்தது. கணவரை இழந்து கடந்த ஏழு மாதங்களாக அவர் இராணுவ முகாமுக்குள் அனுபவித்த கொடுமைகள் எல்லாம் சேர்ந்து அவர் மனம் நைந்து போன நிலையில் மலேசி யாவில் இருந்து வருகிறார். அவர் யார் யாருடன் நெருங்கிப் பழகினாரோ அவர் களுடன் அவரைச் சில காலம் தங்க வைத்திருந்தால் அவரது உடல் நிலை யையும் மன நிலையையும் கொஞ்சம் ஆரோக்கியப்படுத்த முடியும் என நாங் கள் நினைத்தோம். அவர் எனது குடும் பத்தாருடனும் வைகோ குடும்பத்தாருட னும் நெருங்கிப் பழகியவர்கள். ஆக நாங்கள் இம்மாதிரியான குடும்பச் சூழலில் அவரை வைத்திருக்க விரும்பி னோமே தவிர அவரை வைத்து அரசி யல் நடத்த வேண்டிய அவசியம் எனக்கோ வைகோவுக்கோ இல்லை. மேலும், 'பார்வதியம்மாள் வருகிறார்!' வர வேற்க வாருங்கள்' என்று ஒரு அறிக்கை விட்டாலே போதும். பல்லாயிரம் இளைஞர்கள் திரண்டிருப்பார்கள். ஆனால் பார்வதியம்மாளின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு நாங்கள் அப்படிச் செய்ய வில்லை. ஆனால் பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பிய கருணாநிதியோ அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்கிறார். அப்படி என்றால் நாங்கள் விமான நிலையம் சென்ற போது புற நகர் கமிஷனர் ஜாங் கிட் தலைமையில் போலீசார் குவிக்கப் பட்டு கமிஷனரே நின்று எங்களை எல் லாம் தடுத்தாரே? போலீஸ் துறையை தன் கையில் வைத்திருக்கும் கருணா நிதி, கமிஷனர் தானாக வந்து எங்க ளைத் தடுத்தார் என்று கூறுகிறாரா? உண்மையில் பார்வதியம்மாள் வருகிறார் என்று தெரிந்த உடன் இவர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்குப் பேசியிருக் கிறார். அவர் குடிவரவு அதிகாரிகளிடம் பேசி இரக்கமில்லாமல் பார்வதியம் மாளைத் திருப்பி அனுப்பி விட்டார்கள் என்பதுதான் உண்மை. திருப்பி அனுப்பி விட்டு மீண்டும் விசா வழங்க விதிக்கப்பட்ட நிபந்தனைகள் லேசானவைகள்தான் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறாரே? விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் லேசானதா. கடுமையானதா என்பதை பாதிக்கப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டுமே தவிர நிபந்தனைகளைப் போட்டவரே சொல்லக் கூடாது. அவர் சொல்லியிருக்கும் நிபந்தனைகள் பார்வதி யம்மாள் இங்கு வந்து விடக்கூடாது என் பதற்காகவே போடப்பட்ட நிபந்தனைகள் போலத் தெரிகிறது. சிங்கள இராணுவ முகாமினுள் விதிக்கப்பட்டுள்ள நிபந்த னைகளுக்கும் இவர்கள் விதித்த நிபந் தனைகளுக்கும் பெரிய வித்தியாச மில்லை. நீங்களும் வைகோவும் பார்வதியம்மாளை வைத்து தமிழின எழுச்சி மாநாடு நடத் தத் திட்டமிட்டிருந்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ சட்டமன்றத்திலேயே குற்றம் சுமத்தினாரே? பார்வதியம்மாளுக்கு இப்போது வயது 81. சுமார் 15 ஆண்டுகாலம் தமிழ கத்தில் அவரும் வேலுப்பிள்ளையும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கு வாழ்ந்த காலத்தில் அவர்கள் இங்குதான் இருக்கிறார்கள் என்பது கூட பலருக்கும் தெரியாது. சில நேரங்களில் எங்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு வருவார்கள், வைகோ வீட்டு நிகழ்வுகளுக்குச் செல் வார்கள். வருவதும் தெரியாது போவ தும் தெரியாது. எந்த விதமான அரசியல் மாநாடுகளுக்கோ கூட்டங்களுக்கோ கூட அவர்கள் சென்றதில்லை என்னும் போது இப்போது வயது முதிர்ந்து நடக்க இயலாத நிலையில் பார்வதி யம்மாள் வந்து செம்மொழி மாநாட்டுப் பந்தலைப் பிரித்தெறிந்து விடுவார் என்று நினைப்பதும் அவரை வைத்து தமிழின எழுச்சி மாநாடு நடத்த நானும் நண்பர் வைகோவும் திட்டமிட்டோம் என்பதும் கருணாநிதி குழுவினரின் வக்கிர மனத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திடீரென ஈழத்துக்கு ஆதரவாகப் பேசினார் ஜெயலலிதா. தேர்தல் முடிந்த தும் ஈழம் பற்றியோ, ஈழ மக்களின் துன்பம் பற்றியோ சுத்தமாக பேசுவதில்லையே? இலங்கைத் தமிழர் பாதுகாப்பியக் கம் சார்பாக நாங்கள் போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது மக்களிடம் ஏற்பட்ட எழுச்சியைப் பார்த்த ஜெயலலிதா ஈழம் பற்றிப் பேசினார். தேர்தல் முடிந்ததும் பேசாமல் விட்டார். அடுத்த தேர்தலில் ஈழத்தால் ஆதாயம் இருக்கும் என்றால் மீண்டும் பேசுவார். அதிமுக மட்டுமல்ல திமுகவும் அப்படித்தான். அதன் தலைவர் கருணாநிதியும் அப்ப டித்தான். ஆதாயம் இருந்தால் பேசுவார்கள் ஆதாயம் இல்லை என்றால் கைவிட்டு விடுவார்கள். அதனால்தான் இந்த இரண்டு கழகங்களுமே மக்களிடம் செல்வாக்கிழந்து வருகின்றன. வலுவான கூட்டணி இருந்தும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட ஒவ்வொரு தொகுதியிலும் நாற்பது கோடி ஐம்பது கோடி செலவு செய்தும் முக்கிய தலைவர்கள் எல்லாம் தோல் வியைத் தழுவினார்களே? அது - இலங்கைத் தமிழர் பாதுகாப்பியக்கம் ஈழத்தை முன் வைத்து மேற்கொண்ட பிரச்சாரம்தான் அவர்களுக்கு தோல்வி யைக் கொடுத்தது. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் துவங்கப்பட்ட போது வலுவான மூன் றாவது அரசியல் சக்தியாக எல்லோரா லும் பார்க்கப்பட்டது. நீங்கள் ஏன் அதை மூன்றாவது சக்தியாக உருவாக்க வில்லை? இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைத் துவங்கும் போதே ஈழப் பிரச்சனையில் ஒத்த கருத்துள்ள ஆனால் திமுக, அதிமுக ஆகிய இரு வேறு கூட்டணிகளில் அங்கம் வகிக்கிற கட்சிகளை ஒருங்கிணைத்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்னும் பெயரில் பொது அமைப்புக் காண நான் பட்ட பாடு பெரும்பாடு. இந்த அணி ஒரு அணியாக உருவாகி அரசியல் ரீதி யாக போராடியிருந்தால் நிச்சயமாக பெரு வெற்றி பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஏற்கெனவே வெவ்வேறு கூட்டணிகளில் இக்கட்சிகள் இருந்ததாலும் திடீரென தேர்தலை சந்திக்க நேர்ந்ததாலும் கூட்டணிகளை விட்டு விலக முடியாத நிலையில் இருந் தார்கள். எனவே இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் நண்பர்களிடம் நான் சொன்னது, 'தேர்தல் திருவிழா என் பது ஒரு மாத கால விழாதான்; ஆனால் நாம் ஈழப் பிரச்சனைக்காக எப்போதும் போராட வேண்டும். அதற்குள் ஒருவர் மனம் புண்படுகிற மாதிரி இன்னொருவர் அறிக்கை விடாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டேன். இப்போதும் கேட்டுக் கொள்கிறேன். என்னால் என்ன செய்ய முடிந்ததோ அதை நேர்மையாகச் செய்தேன். செய்கிறேன். தவிரவும் தமிழ கத்தின் தேவையான மூன்றாவது அணியின் அவசியத்தையும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.தமிழர்கள் துயர் சூழந்த காலச் சகதியில் சிக்கியிருக்கும் போது பிரமாண்டமான செம்மொழி மாநாடு நடத்தப்படுகிறதே? ஈழத் தமிழறிஞர்கள் கூட இதற்கு வருகிறார்களே? யார் வருகிறார்கள்? யார் யார் பேசுகிறார்கள் என்பதல்ல பிரச்சனை. என்ன அவசியத்துக்காக இந்த மாநாடு இப்போது நடத்தப்படுகிறது என்பதுதான் இப்போது முக்கியம். உலகத் தமிழாராய்ச்சி மன்றம் என்பது உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களின் முயற்சியால் உருவான அமைப்பு ஆகும். 1962ஆம் ஆண்டு கீழ்த்திசை அறிஞர் களின் மாநாடு புது டில்லியில் நடந்தது. அதில் கலந்து கொண்ட தமிழறிஞர் களான தனிநாயகம் அடிகளும், வ. அய். சுப்பிரமணியமும், மூத்த தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தலைமையில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார்கள். உலகெங்கிலும் உள்ள தமிழாராய்ச்சி களை ஒழுங்கமைக்கும் நோக்கோடு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைத் துவங்கினார்கள். இந்த அமைப்பு நடத்துவதுதான் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆகும். மலேசியாவில், பிரான் சில், மொரீஷியசில் என வெளிநாடு களில் தமிழ் மாநாடு நடந்த போதெல் லாம் உண்மையான தமிழாராய்ச்சி மாநாடுகளாக நடந்தன. எப்போதெல்லாம் அது தமிழகத்தில் நடந்ததோ அப்போ தெல்லாம் அது வெற்று ஆர்ப்பாட்ட மாநாடாகவே நடந்து வருகிறது. இரண் டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னை யில் நடந்தது. அப்போது கல்வி அமைச் சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் வரவேற்புக் குழு அமைக் கப்பட்டது. அப்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி தனக்கு இந்த மாநாட்டில் முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று கருதினார். தமிழ றிஞர்களின் ஆய்வு மாநாடு சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. ஆனால் தீவுத் திடலில் ஒரு ஆரவார மாநாட்டினை கருணாநிதி நடத்தினார். மெரீனா கடற்கரையில் சிலைகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் என தம் பட்டமடித்து, தமிழாராய்ச்சிக்கான முக்கி யத்துவம் பின் தள்ளப்பட்டது. இதழ்களில் கூட பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வு மாநாட்டைப் பற்றிய செய்திகளை விட தீவுத் திடலில் நடைபெற்ற ஆரவார மாநாட்டைப் பற்றிய செய்திகளே முக்கி யத்துவம் பெற்றிருந்தன. எம்.ஜி.ஆர் மதுரையில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தினார். அப்போது நான் மதுரை சட்டமன்ற உறுப்பினராக இருந் தேன். அந்த மாநாட்டிலும் ஆரவாரத் திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக சிறந்த தமிழறிஞரான தேவநேயப் பாவாணர் அவர்கள் எழு திய ஆய்வுக் கட்டுரையை பிரதி எடுத் துத் தரக் கூட ஏற்பாடு இல்லை. புல நூறு கோடி ரூபாய் அந்த மாநாட்டிற்காக செவழிக்கப்பட்டதுதான் மிச்சம். ஜெய லலிதா முதலமைச்சராக இருந்த போது தஞ்சையில் நடத்தப்பட்ட மாநாட்டிலும் தமிழாராய்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டு வெற்று ஆரவாரத்திற்கு முதன்மை அளிக்கப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஈழத்தமிழறிஞர் சிவத்தம்பி உட்பட பலர் வெளியேற்றப் பட்டார்கள்.இப்போது 300 கோடி ரூபாய் செலவில் கோவையில் கருணாநிதி நடத்துகிற மாநாட்டால் தமிழுக்கு எந்த விதமான நன்மையும் ஏற்படப் போவ தில்லை. இவர் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தையே பிளவு படுத்தி இந்த மாநாட்டை நடத்துகிறார். இந்த மாநாட் டின் நோக்கம் எல்லோருக்கும் தெரிந்தது தான். கொத்துக் கொத்தாக ஈழத்தில் சிங்கள அரசால் தமிழ் மக்கள் கொல்லப் பட்ட போது அதை வேடிக்கை பார்த்த தோடு துரோகம் செய்து பெயரைக் கெடுத்துக் கொண்ட கருணாநிதி செம் மொழி மாநாடு நடத்தி அதைச் சரி செய்யப்பார்க்கிறார். ஆனால் தமிழ் மக்கள் ஒரு போதும் கருணாநிதியை மன்னிக்கப் போவதில்லை. இனக்கொலை குற்றவாளிகளை தண்டிப் பதற்கான சூழல் வருமா? முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாளை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கடைப்பிடிக்கக் கோரி னோம். போர்க்குற்றவாளிகளான இராஜ பட்சே கும்பலை பாதுகாக்கிற வேலையை இந்தியா செய்து கொண்டி ருக்கிறது. ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் கொண்டு வரப் பட்ட போது இந்தியாதான் அந்தத் தீர் மானத்தைத் தோற்கடித்து இலங்கை யைப் பாதுகாத்தது. ஆக இராஜபட்சே, பொன்சேகா மட்டுமல்ல இனக் கொலைக்கு துணைபோன இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் போர்க் குற்றவாளிகள்தான். பாலஸ் தீனத்தில், ருவாண்டாவில், ஆர்மீனியா வில் என எங்குமே இனக்கொலை நடந்த போது வல்லரசுகள் தலையிட் டுத் தடுத்து மக்களைக் காப்பாற்றியதாக வரலாறு இல்லை. சிங்கள பேரினவாதி களிடமிருந்து தமிழ் மக்களைக் காப் பாற்றுவதால் என்ன லாபம் இந்த வல் லரசுகளுக்கு? ஆக தமிழ் மக்களாகிய நாம்தான் இனக்கொலைக் குற்றவாளி களை கூண்டிலேற்ற போராட வேண் டும். தலைவர் பிரபாகரனின் வழியில் நின்று தமிழ் மக்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தொடர்பான சர்ச்சை ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? மீண்டும் ஈழ மக்களின் விடுதலைப் போர் வெடிக்குமா? ஈழ விடுதலைப் போராட்டம் என்பது நீண்ட கால வரலாற்றுப் போக் கைக் கொண்டது. அவர்கள் முப்ப தாண்டுகாலம் அறவழியில் போராடினார் கள் அவை வெற்றி பெறாத நிலையில் தான் ஆயுதப் போருக்குச் சென்றார்கள். 1948 லிருந்து 1977 வரை தனிநாடு கேட்கவில்லை அப்போது கூட அவர் கள் எங்களையும் சமமாக மதியுங்கள் என்றுதான் கேட்டார்கள். வேறு வழியே இல்லை என்னும் நிலையில்தான் ஆயுத மேந்தி முப்பதாண்டுகாலம் வீரம் செறிந்த போரை புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரன் தலைமையில் போராளி கள் நடத்தினார்கள். அந்தப் போராட்டம் ஒரு தற்காலிக பின்னடவைச் சந்தித்தி ருக்கிறது என்றுதான் நான் நினைக் கிறேன். இவ்வளவு வல்லரசுகள் கூடி சிங்கள அரசுக்குத் துணை நின்று தன் னந்தனியாய் போராடிய தம்பியின் படைகளை தற்காலிகமாக வென்றிருக் கிறார்கள். இது ஒரு பின்னடைவு. ஆனால் முன்னிலும் பார்க்க கோடானு கோடி தமிழ் மக்களிடையே சுதந்திர தமிழீழத்தின் தேவையும் அதன் தவிர்க்க முடியாத நியாயமும் பெரு நெருப்பாய் எரியத் துவங்கியிருக்கிறது. தங்களின் அடுத்த தலைமுறையாவது நிம்மதியாய் வாழ சுதந்திர தமிழீழப் போராட்டத்தில் அவர்கள் தங்களை இணைக்க ஆயத்தமாய் இருக்கிறார்கள். தம்பி இருக்கிறார்! தக்க நேரத்தில் புலி உறுமும்.... அப்போது சல சலத்துக் கொண்டிருக்கும் இந்த நரிகள் ஓடி ஒளிய ஒரு இடம் தேட வேண்டி யிருக்கும்.

பார்வதி அம்மா உடல் நலம் தேறி வருவதாக சிவாஜிலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார்.


வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் உடல் நலம் தேறி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு செயலாளருமான சிவாஜிலிங்கம் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். கடந்த சில காலமாக உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருந்த பார்வதியம்மாள் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்அவரது உடல்நிலை தேறி வருவதாக வைத்தியர்கள் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.அதேவேளை, பார்வதியம்மாள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பராமரிக்கப்படுவார் என சிவாஜிலிங்கம் தெரிவித்தார். மலேசியாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பார்வதியம்மாள், பின்னர் மேலதிக சிகிச்சை பெறுவதற்காக இந்தியா சென்றிருந்தார். ஆனால் இந்தியா அவரைத் தடுத்து, இலங்கைக்குத் திருப்பி அனுப்பியது. பின்னர் நிபந்தனைகளுடனான சிகிச்சைகளுக்கு அனுமதி வழங்கியது. எனினும் அங்கு சிகிச்சை பெற விரும்பாத பார்வதியம்மாள் மற்றும் அவரது உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர் வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பலாலிப்பகுதியில் பாரிய வெடிச்சத்தங்கள்!



யாழ் வலிகாமம் வடக்கு பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் நேற்று மாலை வேளையில் இடையிடையே ஏற்பட்ட பாரிய வெடியதிர்வுகள் பல மைல் தூரத்திற்கு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாவனைக்கு உதவாத வெடிபொருட்களை சிங்களப் படையினர் வெடிக்க வைத்த பொழுது வெடியதிர்வுகள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று குடிசார் வட்டாரங்கள் கூறுகின்ற பொழுதும், இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளிவரவில்லை.

01 ஜூன் 2010

காணாமல் போனோர் என பதியப்பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ்!


இலங்கையில் யுத்த சூழலில் காணாமல் போனோர் எனப் பதியப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் காணாமல் போனோரைத் தேடிக் கண்டறியும் குழு வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தது. இலங்கையில் யுத்த சூழலில் காணமல் போனோர் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே, மேற்படிக் குழுவைச் சார்ந்த புதிய இடது சாரி முன்னணி உறுப்பினர் ஒருவர் எமது இணையத்தளத்திற்கு இவ்வாறு தெரிவித்தார். காணாமல் போனவர்கள் எனப் பதியப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் மரணச்சான்றிதழுடன் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தையும் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். காணாமல் போயுள்ள ஒருவர் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஏழு வருடங்களின் பின்னரே மரணச்சான்றிதழ் வழங்கும் நடைமுறை அமுலுக்கு வர உள்ளமை குறிப்பிடத்தக்கது.

துருக்கி கப்பல்கள் மீது இஸ்ரேல் கப்பற்படை தாக்குதல்!


பாலஸ்தீனத்தில் உள்ள காஷா பகுதிக்குச் சென்ற கப்பல்கள் மீது இஸ்ரேல் கப்பற்படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. துருக்கியைச் சேர்ந்த 6 கப்பல்கள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. காஷா பகுதிக்கு உதவி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த இந்தக்கப்பல்களில் சுமார் 600 பேர் பயணம் செய்தனர். கப்பல்கள் அவ்வழியாக வருவதையறிந்த இஸ்ரேலின் கப்பற்படை கமாண்டோ பிரிவினர் அக்கப்பல்கள் மீது நேற்று அதிரடி தாக்குதல் நடத்தினர். துப்பாக்கியால் சுட்டும் கோடாரிகள் மற்றும் கத்தியால் குத்தியும் தாக்கினர். இதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தகவலை இஸ்ரேலில் இருந்து ஒளி பரப்பாகும் தனியார் தொலைக்காட்சி தெரிவித்தது. இஸ்ரேல் கமாண்டோ படையினர் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு அந்நாட்டு மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எழுபது ஏதிலிகள் மெக்சிக்கோ பொலிசாரால் மீட்பு!



பாரிய கொள்கலன் ஒன்றிற்குள் அடைத்து மறைத்து வைத்து மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட சுமார் 70 போ் அடங்கிய அகதிகள் குழுவொன்றை மெக்ஸிகோ பொலிஸார் கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
இவர்கள் மத்திய அமெரிக்கா, இந்திய மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் பாரிய கொள்கலன் ஒன்றிற்குள் மறைந்த நிலையில் கௌதமாலா எல்லைப் புறத்தில் வைத்து மீட்கப்பட்டனர்.
X- கதிர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இவர்கள் இந்த கொள்கலனுக்குள் மறைந்திருந்தமையை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இவர்களில் 45 ஆண்களும் 15 பெண்களும் அடங்கியிருந்தனர். இதில் 7 இலங்கையர்களும் உள்ளடங்கியிருந்தாக மெக்ஸிகோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சட்ட விரோத குடியேறிகளாக வந்த சுமார் 70 ஆயிரம் பேர் மெக்ஸிகோ தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கபப்பட்டு பின்னர் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மன் அதிபர் ஹோர்ஸ்ட் கோலர் பதவியை இராஜினாமாச்செய்தார்.

ஜெர்மன் அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் (67) திங்கள்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆப்கானிஸ்தான் மீதான ஜெர்மனியின் நடவடிக்கை குறித்து ஹோர்ஸ்ட் தெரிவித்த கருத்தால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. தனது ராஜிநாமா குறித்து செய்தியாளர்களிடம் ஹோர்ஸ்ட் கூறியது: ஆப்கானிஸ்தான் குறித்து நான் தெரிவித்த கருத்துகள், தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், எனக்கு இதுவரை ஆதரவளித்து வந்த மக்களுக்கு இந்த வேளையில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது இந்த முடிவு குறித்து பிரதமர் ஏஞ்சலா மெர்கலுக்கும் தெரிவித்துவிட்டேன். ஜெர்மனி அதிபராக பதவிவகித்ததை எனக்கு கிடைத்த கெüரவமாக கருதுகிறேன் என்று உணர்ச்சிப் பொங்க கூறினார் ஹோர்ஸ்ட். முன்னதாக, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஜெர்மனி போன்ற நாடுகள், பிற நாடுகளுடன் ஸ்திரமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் நிலவும் ஸ்திரமற்ற உறவுகள், வர்த்தகம், வேலைவாய்ப்பு, நாட்டின் வருவாய் உள்ளிட்டவற்றில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என ஹோர்ஸ்ட் கருத்துத் தெரிவித்திருந்தார்.