06 மே 2011

ஸ்ரீலங்காவின் போர்க் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நாடுகள்.

சிறீலங்கா இராணுவத்தினரின் பெருமளவான போர்க்குற்றவாளிகளுக்கு ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சலாந்து, மலேசியா, வத்திக்கான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு வழங்கிவருவதாக மனித உரிமைகளுக்கும், அரசியல் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈ.சி.சி.எச்.ஆர். அமைப்பும் அதன் துணை அமைப்புக்களும் இணைந்து இதனை வலியுறுத்தியுள்ளன.
ஜகத் டயஸ், சிறிலங்கா இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் தளபதியாக இருந்த காலத்தில் போர்க்குற்றங்களை புரிந்துள்ளார் என்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தார் என்றும் 2009ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தில் இவர் மீது பல
இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரியான ஜகத் டயஸ் என்பவருக்கு ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, வத்திக்கான் ஆகிய நாடுகள் வழங்கியிருக்கும் இராஜதந்திர அந்தஸ்த்தை விலக்கி கொள்ளுமாறு மனித உரிமைகளுக்கும், அரசியல் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் வலியுறுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த படுகொலைகளுக்கு ஜயத் டயஸ் முக்கிய பொறுப்பாளி என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவர் யுத்தம் முடிந்த பின் சிறிலங்கா அரசாங்கத்தினால் பேர்ளினில் உள்ள ஜேர்மன் தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒருவர் என்றும் மனித உரிமைகளுக்கும் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இவர் ஜேர்மன், சுவிட்சர்லாந்து, வத்திக்கான் ஆகிய நாடுகளின் சிறிலங்கா தூதரகங்களில் பணியாற்றி வருகிறார் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2011 ஜனவரி மாதம் ஜேர்மன் சமஸ்டி வெளிவிவகார அமைச்சு, சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றிற்கு இவரின் விபரங்களை வழங்கியதாகவும், ஏப்ரல் மாதத்தில் வத்திக்கான் வெளிவிவகார அலுவலகத்திற்கும் இவ்விபரங்கள் வழங்கப்பட்டதாகவும் ஈ.சி.சி.எச்.ஆர். தெரிவித்துள்ளது.
இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இராஜதந்திர விசாவை உடனடியாக ரத்து செய்யுமாறு தாம் இந்த மூன்று நாடுகளையும் கேட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நாடுகள் தமது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்த போதிலும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை என மனித உரிமைகளுக்கும் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரி ஜகத் டயஸிற்கு இராஜதந்திர விசா வழங்கப்பட்டிருப்பது ஒரு தந்திரமான நடவடிக்கை என்றும், மிகப்பெரிய மனித உரிமை மீறல்களையும் போர்குற்றங்களையும் புரிந்த ஒருவருக்கு ஜேர்மனி சுவிட்சர்லாந்து வத்திக்கான் ஆகிய நாடுகள் இராஜதந்திர அந்தஸ்த்து வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜகத் டயஸ் தலைமைதாங்கிய 57ஆவது படைப்பிரிவு திட்டமிட்டு ஏறிகணைத்தாக்குதல்களை நடத்தி பொதுமக்களை கொன்றதாகவும், வைத்தியசாலை, தேவாலயங்கள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்களில் எறிகணைத்தாக்குதல்களை நடத்தி 40ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை கொலை செய்திருப்பதாகவும் அந்த அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
57ஆவது படைப்பிரிவு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்ததற்கான ஆதாரபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை நீதியான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் முதல் தடவையாக ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு போர் குற்றம் பற்றி அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவிற்கு மனித உரிமைகளுக்கும் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் பூணர ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றத்திற்கான ஆதாரங்களையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்ட சிரே~;ட இராணுவ தளபதிகளை சிறிலங்கா அரசாங்கம் உலகளாவிய ரீதியில் இராஜதந்திர பிரதிநிதிகளாக அனுப்பவைத்திருப்பதாகவும் ஈ.சி.சி.எச்.ஆர் சுட்டிக்காட்டியுள்ளது.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியாகவும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும், மேஜர் ஜெனரல் உதய பெரேரா மலேசிய தூதரகத்திற்கும், மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி இந்தோனேசியா தூதரகத்திற்கும், மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர எரித்திரியாவுக்கும், ஜயத் டயஸ் ஜேர்மன் சுவிட்சர்லாந்து வத்திக்கான் தூதரகங்களுக்கும் இராஜதந்திர பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என ஈ.சி.சி.எச்.ஆர் சுட்டிக்காட்டியுள்ளது.

பிளேக் தமிழ் மக்களை பிழையாக வழி நடத்தக்கூடாது.

போர் முடிவடைந்தவுடன் உடனடியாகவே இலங்கை அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் என்ற எண்ணத்தை அப்போது ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் வெளியிட்டு பிரச்சாரப்படுத்தியதனூடாக இந்நாட்டின் தமிழ் மக்களை அவர் தவறாக வழிநடத்தி உள்ளார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளராக முன்னர் இருந்த கொண்டலிஸா ரைஸ் மனித உரிமைகளினதும் சுதந்திரத்தினதும் காவலன் என்று மனோ கணேசனை முன்னர் ஒரு முறை பாராட்டியிருந்தார்.
மனோகணேசன் தனது அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது, போர் நடைபெற்ற காலப்பகுதி முழுவதும் பிளேக், 13வது திருத்தச் சட்டம் பற்றியே உபதேசித்து வந்தார். அவர் சென்னைக்கு விரிவுரை ஒன்றிற்காகச் சென்றிருந்த போது கூட இலங்கைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அவர் 13வது திருத்தச் சட்டத்தையே அரசியல் தீர்வாக வலியுறுத்தினார்.
அன்று அவர் 13வது திருத்தச் சட்டத்திற்குமதிகமான அதிகாரங்கள் பற்றி உத்தரவாதம் வழங்கி இருந்தார். ஐக்கிய அமெரிக்கா போருக்கு ஆதரவளிப்பதனை நியாயப்படுத்தும் நோக்கிலேயே இந்த 13வது திருத்தச் சட்டம் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். இவ்வளவு அழிவுகளும் நடைபெற்று போரும் முடிவடைந்த பின்னரும் கூட இந்நாட்டில் உள்ள தமி;ழ் மக்கள் 13வது திருத்தச் சட்டத்தின் அறிகுறியைக் கூடக் காணவில்லை.
போர் நடைபெற்ற காலப்பகுதி முழுவதும் நாங்கள்பொதுமக்களுடைய பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தோம். மக்கள் கண்காணிப்புக்குழுவில் இருந்த நாங்கள் எங்களுக்கு வந்த உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கூட சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராகப் போராட்டத்தை நடாத்திக் கொண்டே இருந்தோம். அதன் போது தான் ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திரத்தைக் காப்பதற்கான விருது எனக்கு அளிக்கப்பட்டது. அப்போது தூதுவராக இருந்த பிளேக் இதற்குக் காரணமாக இருந்தார். இந்த விருது என்னில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக எனக்கு மேலும் அச்சுறுத்தல்களையே கொண்டு வந்தது.
இந்த விருதுக்கான நிகழ்வை நாம் இரத்து;ச செய்தோம். ஆனால் பிளேக் இந்த விருதை தனது அலுவலகத்தில் தனது தனிப்பட்ட அலுவலர் முன்னிலையில் வைத்து கட்டாயப்படுத்தி எனக்கு வழங்கினார். பின்னர் தான் நாங்கள் உணர்ந்தோம் இந்த விருது அவருடைய ஒரு பிரச்சாரத் தாக்குதல் என. ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் தனக்குச் சாதகமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்தது. அதேவேளை உண்மையிலேயே அமெரிக்க அரசு பாதிப்பிற்குள்ளான தமிழ் மக்கள் பற்றி அக்கறைப்படவில்லை. போருக்கான அவர்களுடைய ஆதரவு நிபந்தனைகள் எதுவுமற்றதாக இருந்தது.
சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக இறுதி நேரத்தில் போரை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இது வன்னி மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதல்ல. எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைப் பாதுகாப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. மக்களைப் பாதுகாப்பதற்கான காலம் மிகவும் கடந்திருந்தது. மீளத்திரும்ப முடியாத ஒரு கட்டத்திற்குப் போர் சென்று விட்டது. இப்போது இன்னொரு பிரச்சாரப் பணி நடைபெற்று வருகிறது. இது புலம் பெயர்ந்த தமிழர்களைச் சாந்தப்படுத்துவதை நோக்காகக் கொண்டது.
இவையெல்லாவற்றுக்குமப்பால் ஐநா நிபுணர்களின் குழு அறிக்கை இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒன்று பொறுப்புக் கூறும் கடப்பாடு பற்றியது.
இரண்டாவது ஒரு அரசியல் தீர்வுக்கான வழிகளைத் திறப்பது பற்றியது.
போர் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், இலங்கைச் சமூகம் இனச்சிக்கலால் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளது. ஒரு உண்மையான அரசியல் தீர்வு ஒன்றினாலேயே இது சரி செய்யப்படக் கூடியது.
போருக்கு நிபந்தனை எதுவுமற்ற ஆதரவை வழங்கியவர்களுக்கு இலங்கைத் தமிழ் சமூகம் குறித்த பொறுப்புணர்வு ஒன்று இருத்தல் அவசியம். ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பதில் தீர்மானகரமாகச் செயலாற்றுவதில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் எவரும் திருப்பித் தரப் போவதில்லை.
ஒரேயொரு சாத்தியமான வழி மட்டுமே இப்போது உள்ளது. அது தான் ஒரு நியாயமான அரசியல் தீர்வு.
இது தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துடன் தீர்மானகரமான செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும். ஐக்கிய அமெரிக்காவுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் தனது முன்னைய உபதேசத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் இதுவே.
அவர் மீளவும் ஒரு முறை தமிழ் மக்களைத் தவறாக வழிநடாத்தக் கூடாது.

05 மே 2011

போர்க் குற்ற விசாரணைகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடையாக விளங்கக் கூடாது.

அன்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு!
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் பற்றிய பொறுப்பிற்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்களின் அறிக்கைக்கு பங்கம் விளைத்தக்கதாக எந்த காரணத்துக்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படக்கூடாது என்றும், குறிப்பாக, சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைகளும் அந்த காரணங்களுக்குள் அடங்கும் என்றும், ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு வேண்டிக்கொண்டுள்ளது. சர்வதேச ஆணைக்குழு ஒன்று சிறிலங்கா போர்க்குற்றங்களை விசாரணை செய்ய அமைக்கப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
போரின் இறுதிநாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதை இந்த ஐ.நா. அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் பாலியல் வல்லுறவுகள், மருத்துவமனைகளும் பொதுமக்களும் அடையாளம் காணப்பட்டு குண்டுவீசி அழிக்கப்பட்டது, உணவு தடுக்கப்பட்டு மக்கள் பட்டினியால் மரணிக்க செய்யப்பட்டது, மருந்துகள் தடுக்கப்பட்டு மக்கள் இரத்தம் பெருகி இறக்க வழி செய்தது ஆகியவற்றை இந்த அறிக்கை குறிப்பிட்டு காட்டியுள்ளது. மேலும், கற்றறிந்த பாடங்களுக்கும் மீளிணைதலுக்குமான ஆணைக்குழு சுதந்திரமான ஆணைக்குழு அல்ல என்றும் இந்த ஐ.நா. அறிக்கை குறை கூறியுள்ளது. சிறிலங்கா அரசின் கடுமையாள எதிர்ப்புக்கு மத்தியில் பல சர்வதேச நிறுவனங்களின் முயற்சியின் விளைவாகவே இந்த ஐ.நா. அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கிக்கொள்ள வேண்டும்.
சிறிலங்கா அரசுடன் தொடரும் பேச்சுவார்த்தைகளில் சில விட்டுக்கொடுப்புகளுக்கு பதிலீடாக போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுக்க கூடும் என கருதப்படுகின்றது. சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படுவதை எவ்வாறாயினும் தடுப்பதற்கு சிறிலங்கா அரசு தீவிரமான முயற்சிகளை செய்துவருவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கிக்கொண்டு, அதற்கு இடங்கொடுக்க கூடாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைகளில் செய்யப்படும் எந்தவிதமான விட்டுக்கொடுப்புகளுடனும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படுவது சம்பந்தப்படுத்தப்பட மாட்டாது என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
சிறிலங்கா அரசுடன் ஏதாவது உடன்பாட்டை முடிவு செய்தவுடன் சர்வதேச சமுகம் எமது விடயங்களில் இருந்து வெளியேறிவிடும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்து கொள்ளவேண்டும். இதனை தவிர்த்து கொள்வதற்காக, எந்தவிதமான உடன்பாட்டுக்கும் சர்வதேச சமுகம் பிணையாளராக செயற்பட வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுக்க முடியாத கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். எந்தவிதமான உடன்பாடும், சிறிலங்கா அரசு உடன்பாட்டின் அம்சங்களை நிறைவேற்ற தவறும் போது அதனை கையாள்வதற்கு சர்வதேச சமுகம் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட உத்தரவாதங்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
நன்றி.
ஒபாமாவுக்கான தமிழர்கள்:
தமிழ் அமெரிக்கர்களின் ஒரு அரசியல் செயற்பாட்டு குழுவான ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு, ஹில்லரி கிளின்ரனையும், பரக் ஒபாமாவையும் அமெரிக்க மக்களாட்சி கட்சியின் வேட்பாளர் தெரிவிலும் பின்னர் 2008 தேர்தலிலும் ஆதரித்தது. சிறிலங்காவின் உள்நாட்டு போரில் இறுதி வாரங்களில் 70.000 க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என நாம் நம்புகிறோம். வெற்றி கொண்ட சிறிலங்கா சிங்களவரின் செயற்பாடுகளை நாம் அவதானித்ததில் இருந்து, இந்த கவலைக்குரிய தீவு இரண்டு நாடுகளாக பிரிவதே தமிழர்கள் அங்கு பாதுகாப்பாக வாழ வழிவகுக்கும் என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம்.

போர்க்குற்றம் தொடர்பில் கடமை தவறினால் சர்வதேசம் அதை நிறைவேற்றும்.

இலங்கையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கொழும்பு அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது. இவ்வாறு கொழும்பில் செய்தியாளர்களிடம் அமெரிக்க துணைச்செயலாளர் பிளேக் தெரிவித்தார்.அதுவே நீடித்த அமைதியை ஏற்படுத்த வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவின் துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓபிளேக். மூன்று நாள் பயணமாக இலங்கை வந்த பிளேக் நேற்று அமைச்சர் பீரிஸ் மற்றும் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட அரச பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.
மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிளேக், தமிழ்ச் சிறுபான்மையினருடன் அரசியல் அதிகாரங்களைக் கொழும்பு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் விடயத்தில் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை உறுதியளித்திருக்கின்றது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
எனினும் "உறுதி மொழிகளில் அல்லாமல் செயலில் காட்ட வேண்டும்'' என்றும் பிளேக் தெரிவித்தார்.
உள்ளூர் அதிகாரிகள், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறுவார்களாயின், சர்வதேச பொறிமுறை ஒன்றின் மூலம் அதனை நிறைவேற்ற வேண்டிவரும் என்றும் பிளேக் எடுத்துக் கூறினார்.
முதலில் விசாரணைக்கான பொறுப்பை இலங்கை அரசு எடுத்துக் கொள்கிறதா என்பதை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கும் என்றார் அவர்.

04 மே 2011

வன்னி மக்களிடம் ரகசிய விசாரணை நடத்தியது அமெரிக்கக் குழு.

இராணுவத்தினரும் அவர்களது புலனாய்வாளர்களும் பார்த்துக் கொண்டிருக்க யுத்தகாலத்தில் பொதுமக்கள் அனுபவித்த இன்னல்கள் தொடர்பாக தென்னாசியாவுக்கான அமெரிக்காவின் உதவி வெளிவிகார அமைச்சர் தலைமையிலான குழு இரகசிய இடத்தில் வைத்து பொதுமக்களோடு பேசியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த மேற்படிக்குழு அங்கு வேலை வாய்ப்புப் பணியகத்திற்குச் சென்று இளைஞர்களிடம் கலந்துரையாடியது.
பின்னர் நடைபெற்ற காலை 11மணியளவில் விவசாயிகளுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமெரிக்காவின்; நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட சில திட்ங்களை பார்வையிட்டது.
நிகழ்வின் முடிவில் பிரத்தியேகமான இடத்தில் பொதுமக்கள் சிலரை சந்தித்து யுத்தகாலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் கேட்டறிந்தது. இதன்போது அரச அதிகாரிகள் உட்பட எவரும் அனுமதிக்கப்படவில்லை மேலும் இந்த நிகழ்வில் மூக்கை நுழைக்க இராணுவப் புலனாய்வாளர்கள் சிலர் முயற்சித்தபோதும் அது பலிக்கவில்லை.
அமெரிக்க அதிகாரிகள் பொதுமக்களிடம் யுத்தகாலத்தில் மக்கள் எப்படி பார்க்கப்பட்டார்கள்? இராணுவத்தினராலோ புலிகளாலோ மக்கள் யுத்தத்தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டர்களா? புலிகள் மக்களை கேடயங்களாக பயன்படுத்தினார்களா? இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்றபோது எப்படி நடத்தப்பட்டீர்கள்?
போன்ற கேள்விகளும் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் தற்போது மக்கள் எவ்வாறான நிலையிலுள்ளனர்? சுதந்திரமாக நடமாடும் நிலையுள்ளதா? போன்றனவும் கேட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு விளக்கமளித்த பொதுமக்கள் நடந்த சம்பவங்களை அப்படியே தெரிவித்துள்ளனர்.
மேலும் கண்முன்னால் தங்கள் பிள்ளைகள் சொந்தங்கள் இறந்து போனமை கணவன்மார் பிள்ளைகளை கண்முன்னால் கையளித்தபோதும் அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாமை தற்போது முறையான வீட்டுத்திட்ட வசதிகள் கிடைக்கப்பெறாமை வாழ்வாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் தடுப்பிலுள்ள பிள்ளைகள் தொடர்பாகவும்; கூறினார்.
சந்திப்பின் பின்னர் இராணுவப் புலனாய்வாளர்கள்; விளக்கமளித்த பொதுமக்களிடம் என்ன கேட்டார்கள் பேசினார்கள் என கேட்டறிந்தனர். இந்த நிகழ்விற்கு காலையிலிருந்தே பெருமெடுப்பில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் கிளிநொச்சி மாவட்டக் கட்டளைத்தளபதியும் கலந்து கொண்டிருந்தார்.
எனினும் அவர்கள் எவரையும் அமெரிக்காவின் அதிகாரிகள் குழு கண்டுகொள்ளவேயில்லை. அதனோடு யார் நிகழ்வுகளை நடத்தினாலும் அழையா விருந்தாளிகளாக வந்து மேடையில் அமரும் இராணுவத்தினர் வீதிகளில் மட்டும் நின்றனராம்.

ரத்னசிறியை பார்த்தாவது தமிழ் பச்சோந்திகள் திருந்த வேண்டும்.

சிங்கள மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த ரட்ணசிறி விக்ரமநாயக்கர்போல் எம்மில் உள்ள பச்சோந்தி தமிழ் அரசியல்வாதிகளும் தமது தமிழ் உணர்வுகளை வெளிக்காட்டவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கதிரவன் கலாமன்றம் 35வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய மென்பந்து கிறிக்கட்சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
புதுக்குடியிருப்பு கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தனித்துவமிக்க கிராமமாக செயற்படுவது எமக்கு பெரும் மகிழ்ச்சியை தருகின்றது. இந்தக்கிராமத்தில் ஒரு விளையாட்டுகழகம், ஒரு கலைக்கழகம், ஒரு ஆலய நிர்வாகம் இருந்து தனித்தவமாக அனைவரையும் அரவணைத்து செயற்படுவது ஒற்றுமையின் எடுத்துக்காட்டாக இந்தக் கிராமம் உள்ளது.
அத்தோடு இந்த புதுக்குடியிருப்பு மண்ணில் கடந்த 35 வருடமாக இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடாத்திவரும் கதிரவன் கலைக்கழகம் பாராட்டப்படவேண்டியது.எவன் ஒருவன் ஒழுக்கத்துடன் கல்வியை சிறந்த முறையில் பெறுகின்றானோ அவன் சமூகத்தில் ஒற்றுமையுடன் ஒழுக்கத்துடன் வாழ்வான்.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்க தரப்புக்கு தலைமை தாங்கியிருந்த ரட்ணசிறி விக்ரமநாயக்க என்கின்ற சிரேஸ்ட அனுபவம் வாய்ந்த அதிகாரி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.நாவின் அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்ததாகக்கூறி அந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பில் நான் உண்மையில் மகிழ்ச்சியடைகின்றேன். அவர் ஒரு சிங்கள அரசியல்வாதியாக உள்ளார். அவர் தனது இனத்துக்கும், நாட்டுக்கும் பிரச்சினைவரும் போது அங்கு அவர் தனது இன, மொழியுணர்வை வெளிப்படுத்துகின்றார். உண்மையில் நான் அதனை பாராட்டுகின்றேன். இதனை சிங்கள மக்கள் ஒரு கவரிமான் போன்று பார்க்கின்றனர்.
இவ்வாறு சிங்கள அரசியல் தலைமைகள் தமது இன, மொழியுணர்வை வெளிப்படுத்தும் போது எம்மில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் இன்னும் பச்சோந்திகளாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது. இவர்கள் ரட்ணசிறி விக்ரம நாயக்கவிடம் இருந்து பாடம்கற்றுக் கொள்ளவேண்டும்.எந்த சமூகத்தை சேர்ந்தாலும் நாங்கள் சமூகப்பற்று மொழிப்பற்று இனப்பற்று உடையவர்களாக இருக்கவேண்டும். தமிழ் மக்களாகிய நாம் அனைத்து முரண்பாடுகளையும் உதறித்தள்ளிவிட்டு தமிழன் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே நாங்கள் விடுதலையை பெறமுடியும்,எமது சமூகம் தலைநிமிர்ந்து வாழும்.
இன்று பச்சோந்தியாக உள்ள எமது தமிழ் அரசியல்வாதி நண்பர்கள் ரட்ணசிறி விக்ரமநாயக்காவை பார்த்து திருந்தவேண்டும். தமிழ் உணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இன்று இலங்கையில் உள்ள சிறைச்சாலையில் ஒரு தமிழ் அரசியல்கைதியொருவர் தன்மீது எதுவித விசாரணையும் இன்றி தடுத்துவைத்துள்ளதை கண்டித்தும் தன் விடுதலைக்கு நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவருகின்றார். அவர் ஐ.நா.வந்து விசாரிக்கவேண்டும் என்று அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை, அல்லது ஐ.நா.அறிக்கையினை ஆதரித்து அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை. அவர் தனது விடுதலைக்காகவே இவ்வாறு உண்ணாவிரதம் இருந்துவருகின்றார்.
அதனை தடுத்து நிறுத்தமுடியாத நிலையில், அவருக்கு நீதி கிடைக்காத நிலையிலேயே இன்று தமிழ் இனம் உள்ளது. இதுவே தமிழர்களுக்கும் – சிங்களவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகவுள்ளது. என்றார்.

03 மே 2011

ஒசாமா மீதான தாக்குதலை நேரடியாக பார்த்த ஒபாமா.

அல் குவைதா அமைப்பின்தலைவர் ஒசாமா பின் லேடன் மீதான முற்றுகையை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிரத்தியேக நேரடி ஒளிரப்பு மூலம் வெள்ளை மாளிகையிலிருந்து பார்வையிட்டுள்ளார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்த 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அபோதாபாத்தில் ஒசாமா தங்கியிருந்த பாரிய வீட்டின்மீது அமெரிக்க கடற்படையின் விசேட தாக்குதல் அணியான – கடல், ஆகாய, தரை தாக்குதல் குழு) பாகிஸ்தானின் நேரப்படி நேற்று திங்கட்கிழமை அதிகாலை முற்றுகை மேற்கொண்டது.
தாக்குதலில் பங்குபற்றிய அமெரிக்க படைவீரர்களின் தலைக் கவசங்களில் வீடியோ கமெராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. இதன்மூலம் பெறப்பட்ட ஒளிப்பதிவுகள் செய்மதி ஊடாக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பப்பட்டன.
அப்போது அமெரிக்காவில் நேரம் ஞாயிறு பிற்பகலாக இருந்தது. இத்தாக்குதல் ஆரம்பிப்பதற்கு சற்றுமுன்னர் வெள்ளை மாளிகயிலுள்ள அறையொன்றில் ஜனாதிபதி பராக் ஒபாமா, உப ஜனாதிபதி ஜோ பிடென், பாதுகாப்புச் செயலாளர் ரொபர்ட் கேட்ஸ், இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் படை உயரதிகாரிகள் சிலர் கொண்ட சிறிய குழுவொன்று ஒன்றுகூடினர்
அந்த அறையிலிருந்து சுமார் 11,000 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் நடைபெறும் தாக்குதல் நடவடிக்கைகளை ஒபாமாவும் ஏனையோரும் பார்வையிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.’தாக்குதலின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை நேரடியாக நாம் பார்வையிட முடிந்தது’ என அமெரிக்காவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஜனாதிபதி ஒபாமாவின் பயங்கரவாத ஒழிப்பு விவகார ஆலோசகருமான ஜோன் பிரென்னன் தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின் லேடனை காப்பாற்றுவதற்கு அவரின் மனைவிகளில் ஒருவர் மனிதக் கேடயமாக ஒசாமாவின் முன்னால் நிற்க முயற்சித்ததாகவும் ஆனால் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படை வீரர் ஒருவரின் ஏகே 47 துப்பாக்கியினால் சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒசாமாவின் இடது கண்ணில் துப்பாக்கி ரவை பாய்ந்தது. பின்னர் ஒசாமா கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதற்காக மீண்டுமொரு தடவை அவ்வீரர் நெஞ்சில் சுட்டாராம்.
இத்தாக்குதலில் ஒசாமா பின்லேடன், அவரின் மனைவி, மகன்களில் ஒருவர், மற்றும் இருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள மயப்படுத்தும் நோக்கில் பெருமளவு நிலங்கள் படை வசம்.

சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னோடியாக வன்னிப் பகுதியில் அதிகளவான பிரதேசங்களை தற்போது இராணுவம் தமது தேவைகளுக்காக கையகப்படுத்தியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக, சமய நிறுவனங்கள் குரல்கொடுக்க வேண்டும். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பிரமுகரும் புவியியல் துறைப் பேராசியர் இரா.சிவசந்திரன் மேதின கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
யாழ். நகரிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மேதின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டார்.மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது. கிழக்கில் அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதியில் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வவுனியாவிலும் 30 வீதமான சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மன்னார் பூநகரி வீதி (ஏ32) நவீன முறையில் செப்பனிடப்பட்டு வருகிறது. அந்தப் பிரதேசத்தில் சிங்களக்குடியேற்றம் இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. பூநகரியில் மர முந்திரிகை செய்கைக்காக 2 ஆயிரம் பரப்பளவு நிலத்தை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. மல்லாவி, துணுக்காய்ப் பகுதியில் விவசாயப்பண்ணைக்கு என அதிகளவு நிலத்தை இராணுவம் எடுத்துள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகரை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத் தில் 70 ஆயிரம் இராணுத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதே வேளை அங்கு 70 ஆயிரம் பொது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மக்களும் இராணுவமும் சம அளவில் உள்ளனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் எப்படி மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.எனவே வன்னிப் பெருநிலப்பரப்பில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சுதந்திரமாகச் சென்று பணியாற்ற அனுமதி கிடைக்க வேண்டும்.
இவற்றுக்காக பல நிறுவனங்கள், அமைப்புகள் உருவாகி குரல் கொடுக்க வேண்டும்.அத்துடன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மறக்கப்பட முடியாதவை. தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

02 மே 2011

போர்க் குற்றத்தை விசாரிக்க விஷேட சர்வதேச நீதிமன்றம்.

யூகோஸ்லாவியா, லைபீரியா போன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார கொள்கைகளுக்கான ஆராய்ச்சி நிலையம் தயாரித்த இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதியிடப்பட்ட இந்த ரகசிய ஆவணத்தை இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் இலங்கை தொடர்பான விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானவை என குறிப்பிடப்பட்டுள்ளதோடு ஐக்கிய நாடுகள் சபை கடந்த காலத்தில் முன்னெடுத்த இலங்கையின் போர்க்குறறங்களுக்கான பொறுப்புக் கூறும் கடமைப்பாடுகளை நிறைவேற்றும் முயற்சிகளுக்கு இந்தியாதான் மிகுந்த தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு பகிரங்கமாக தெரிவிக்கப்பட வேண்டும் என இந்திய மனித உரிமை கழகம் வலியுறுத்தியுள்ளதையும் தி.மு.க போன்ற கட்சிகளின் ஆதரவை இந்திய ஆட்சியாளர்கள் எதிர்பார்ப்பதையும் குறித்துள்ள மேற்படி அறிக்கை இவ் விவகாரத்தில் இந்தியா எத்தகையதொரு நிலைப்பாட்டை எடுக்கும் என்பது கவனத்திற்கு உரியது எனவும் தெரிவித்துள்ளது.
வன்னிப் போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தை சர்வதேச போர்க்குற்ற நீதி மன்றத்தில் முன்னிறுத்தி விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என உறுதிப்படுத்தியுள்ள இந்த ஆவணம் இலங்கை அரசாங்கம் மனித குலத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையால் விசேட நீதிமன்றம் நியமிக்கப்பட வேண்டும் எனவும் யூகோஸ்லாவியா, லைபீரியா போன்ற நாடுகளுக்காக உருவாக்கப்பட்டது போன்று இந்த நீதிமன்றம் அமையலாம் என்றும் இவ் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போர்க்குற்றங்கள் தொடர்பான ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கையயழுத்திடாத போதிலும் கொழும்பு மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க வகை செய்யும் ஜெனிவா ஒப்பந்தம் உட்பட குறைந்தது நான்கு முக்கியமான சர்வதேச ஒப்பந்தங்களில் இலங்கை கையயாப்பம் இட்டுள்ளதாகவும் இந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை ஆரம்பித்தால் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் நேரடியாக எதிர்க்காதெனவும் இந்த ஆய் வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பாதுகாப்புப் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் வாக் கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நடந்து கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார கொள்கை தொடர்பான இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழனாக இருந்தும் தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகமிழைக்கும் டக்ளஸ்.

தமிழனாக இருந்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் மன்னிக்க முடியாதளவுக்கு தொடர்ந்தும் குற்றம் இழைத்துவருகிறார். அதே சமயம் ஐ.நா. சபையில் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் அபத்தமானவை கண்டிக்கப்பட வேண்டியவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா நேற்று யாழ். நகரில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மேதினக் கூட்டம் நேற்று யாழ். நகர் மார்ட்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரசு சார்ந்த டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்கள் விடயத்தில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகிறார்.வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்கால் நோக்கி 4 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் சென்றனர். இதனை அப்போது அரச அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார் உறுதிப்படுத்தியிருந்தார். அத்துடன் உலக உணவுத் திட்டத்தில் மூன்று லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பதியப்பட்டிருந்தனர்.இவ்வாறு ஆதார ரீதியாக நிரூபிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசுடன் இணைந்து 70 ஆயிரம் மக்கள் மட்டுமே அங்கு உள்னர் என எண்ணிக்கையைக் குறைத்துக் கூறினார். அது தொடர்பாக தொடர்ச்சியாகக் கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார். இது டக்ளஸ் தமிழ் மக்களுக்குச் செய்த முதலாவது தவறு ஆகும்.
எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டும், கலாசாரம் சிதைக்கப்பட்டும், சிங்கள மயமாக்கப்படும் நிலையில் தமிழனாக உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு உண்மையை மூடி மறைத்துக் கூறுவது எவ்வளவு பெரிய குற்றம்.வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததை ஐ.நாவின் அறிக்கை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் ஒன்றுமே இறுதிப் போரில் இடம்பெறவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டிருப்பது இரண்டாவது மாபெரும் தவறு ஆகும்.
தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல் தீர்வு காண்பதற்காக அரச தரப்பு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சு நடத்தியது. அதன்போது 13 ஆவது அரசியல் திருத்தத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தியிருக்கிறார். இது அவரது மூன்றாவது மிகப்பெரிய தவறு ஆகும்.
13ஆவது அரசியல் திருத்தம் தமிழ் மக்களுக்கென எந்த அதிகாரமும் இல்லாத வெறும் எலும்புக் கூடு போன்றது ஆகும்.
தமிழ்மக்களது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என இந்தியத் தலைவர்கள் அவ்வப்போது கூறியிருக்கின்றனர்.இந்த நிலையில் டக்ளஸ் தமிழ் மக்களது அரசியல் தீர்வு குறித்து அவசரப்பட்டு இப்படிக் கூறுவது ஏன்?அரசுடனும் ஏனைய அமைச்சர்களுடனும் இணைந்து சர்வதேசத்துக்கு இவ்வாறு உண்மைகளை மறைத்து டக்ளஸ் தேவானந்தா நடந்துகொள்வதைத் தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என மாவை சோனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா மேதினத்தில் பான் கீ மூனுக்கு எதிரான கோஷங்கள்.

சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் ஆளும்கட்சியினர் நடத்திய மேதின ஊர்வலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கும், அதன் செயலாளர் நாயகத்திற்கும் எதிராக கடுமையான கோசங்கள் எழுப்பப்பட்டதாக கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நேற்று (01) நடைபெற்ற ஊர்வலத்தி;ல் உரையாற்றிய சிறீலங்கா அரச தலைவர், ஐ.நாவை நேரிடையாக தாக்காது, மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார்.
நாம் எமது நாட்டை கட்டியெழுப்பும்போது வெளியாரின் பல அச்சுறுத்தல்களை சந்தித்துவருகின்றோம். மக்களும் பிரச்சனைகளை ஏற்படுத்துக்கின்றனர். ஆனால் நாம் அவர்களுக்கு அடிபணியப்போவதில்லை என மகிந்தா தெரிவித்துள்ளார்.
நான் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் சிலர் பணத்திற்காக நாட்டைப் பற்றி தவறாக எழுதி வருகின்றனர். தமிழ் மக்களுக்கு உணவும், உடையும் நாம் தான் வழங்கினோம். அவர்களுக்கு வீடுகளையும் வழங்கினோம். அது போர்க்குற்றமா? ஏன மகிந்தா மேலும் தெரிவித்திருந்தார்.
அதேசமயம், கூட்டத்தில் கலந்துகொண்ட அரச ஆதரவாளர்கள் “பான் கீ மூன் எமக்கு வேண்டாம்” “நாம் ஐ.நாவை புறக்கணிக்கிறோம்” “பன்கீ ஒரு யான்கீ” என்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.
சிறீலங்கா அரசின் பெருமளவான நிதி உதவிகளுடன் கொழும்பு வீதிகள் ஆளும் தரப்பினரின் கட்சிக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதுடன், பெருமளவான மக்களும் ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர். அவர்களில் பலர் பலவந்தமாக கொண்டுவரப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்காவில் தலையீடுகளை மேற்கொள்ள உங்களால் முடியாது என்பதை நான் அனைத்துலக சமூகத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் சுனில் பிரேமஜெயந்தா தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரச தலைவரின் இந்த ஊர்வலத்தை தொடர்ந்து கொழும்பின் பாதுகாப்பு பல மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தது. 8,000 சிறீலங்கா காவல்துறையினரும், பெரும்தொகையான இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் தமது வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டனர். எனினும் வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் தருவதாக கூறிய ஈ.பி.டி.பி துணைஇராணுவக்குழுவினர், அவர்களை மகிந்தாவின் கூட்டத்திற்கு அழைத்து வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

01 மே 2011

சிங்களப்படைகளால் கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்!

இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பல போராளிகளை மற்றும், அரசியல் தலைவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொண்றுள்ளது என்பது தொடர்பான விடையம் தற்போது மேலும் வெளிவந்துள்ள ஆதரங்களால் மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த புலித்தேவன், ப.நடேசன் உட்பட பல போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இராணுவத்திடம் சரணடைந்த கதிர் என்னும் போராளியும் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சமீபத்தில் கேணல் ரமேஷ் அவர்களின் படம் வெளியாகி அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ள நிலையில், போராளி கதிர் அவர்களின் படமும் வெளியாகியுள்ளது.
கதிர் என்று அழைக்கப்படும் போராளி, கைகள் கட்டப்பட்ட நிலையில் இராணுவத்தால் நிலத்தில் இருத்திவைக்கப்பட்ட நிலையில் உள்ள புகைப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதில் உயிருடன் உள்ள பல போராளிகள் தற்போது கொல்லப்பட்டு உள்ளனர். அதற்கான புகைப்படங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இப் புகைப்படத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ள போராளி கதிர் என்பவரை இலங்கை இராணுவம் சித்திரவதைகளின் பின்னர் கொலைசெய்துள்ளது ஆதாரங்களோடு நிரூபனமாகியுள்ளது.
இதனை ஐ.நா மனித உரிமைக் கழகத்துக்கும், சட்டத்துக்கு புறம்பான கொலக்களுக்கான ஐ.நாவின் அதிகாரிக்கும் அனுப்பியுள்ளதாக உயர்வு இணையம் தெரிவித்துள்ளது. இப் புகைப்பட ஆதாரங்கள் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சட்டத்துக்கு புறம்பான கொலைகளையும், மனித உரிமைமை மீறல்களையும் மற்றும் போர் குற்றங்களையும் எமக்கு தெளிவுபடுத்தி நிற்கிறது.தளபதி கேணல் கஜன் அவரது மனைவியால் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே.

பான் கீ மூனுக்கு எதிரான ஸ்ரீலங்காவின் மே தினம்.

இன்று கொழும்பில் நடைபெறும் ஊர்வலத்தில் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளே அதிகம் காணப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அவரால் அமைக்கப்பட்ட போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோரை கேவலப்படுத்தும் ஓவியங்களையும், உருவப் பொம்மைகளையும் சிறீலங்கா அரச ஆதரவாளர்கள் அதிகளவில் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஏற்பாடுகளுக்கான நிதியை சிறீலங்கா அரசே வழங்கியுள்ளது. அதிகளவான ஓவியங்களையும், பொம்மைகளையும் உருவாக்குவதற்காக பெருமளவான அரச ஆதரவாளர்கள் நேற்று (30) இரவு முழுவதும் கண்விழித்து பணியாற்றியதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இன்று (01) மாலை ஒரு மணியளவில் பொரளையில் உள்ள கம்பல் பிளேசில் ஆரம்பிக்கும் ஊர்வலம் நகர மண்டபத்தை அடையும்போது அங்கு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் சிறீலங்கா அரச ஆதாரவாளர்கள் ஐ.நாவுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடலாம் என அஞ்சப்படுகின்றது.

30 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்கா அரசு பொய்க்குமேல் பொய் கூறுவதால் தப்பித்து விடமுடியாது.

பொய்க்கு மேல் பொய்களைக்கூறிக்கொண்டு நீண்டகாலம் தப்பிக்க முடியாது. வேண்டுமானால் மஹிந்த தனது குறுகிய அரசியல் இலாபத்திற்காக சிங்கள மக்களை அணி திரட்டி மேற்குலகத்திற்கு எதிராக போராடலாம். ஆனால் அது நீண்டகாலத்திற்கு எடுபடாது. இவ்வாறு எகொனொமிஸ்ட் கூறியுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தொடர்பில் மூன்று வழிகள் உள்ளன. ஒன்று விசாரணை ஒன்றினை ஏற்றுக்கொள்வது. இரண்டாவது நல்லிணக்க தீர்வு ஒன்றினை ஏற்படுத்திக்கொடுப்பது.
மூன்றாவது மிகப்பெரிய பொய்களைகூறி ஒன்றுமே நடக்காதது போல் எதிர்த்து நிற்பது. சிறிலங்கா அரசாங்கமானது மூன்றாவதனையே பற்றிப்பிடித்துள்ளது. போரில் பூச்சிய இழப்பு என்பது மிகப்பெரிய பொய் அதனை வைத்து நீண்டகாலம் பிளைக்க முடியாது. போரில் என்ன நடந்தது என்பதற்கு இலட்சக்கணக்கான பொதுமக்களே சாட்சி. அவர்கள் உள்ளூர் விசாரணைக்குழு முன் தோன்றி தங்கள் கண்ணீர் கதைகளை கூறியுள்ளார்கள்.
இதனைவிட என்ன ஆதாரம் தேவை. சிங்கள அரசாங்கம் மிருகத்தனமாக பொதுமக்களை இலக்குவைத்து தாக்கியுள்ளது. பொதுமக்களைக்கொன்று உள்ளது. பாதுகாப்பு வலையத்தில் மக்கள் எண்ணிக்கையினை குறைத்து பொய் கூறியது. இதெல்லாம் கண்முன் சாட்சி. ஆகவே இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் பொய்களைகூறி தப்பித்துவிடலாம் என நினைப்பது குறுங்கால அரசியல் நோக்கம். இவ்வாறு கூறியுள்ளது எகொனொமிஸ்ட்.

ஸ்ரீலங்காவின் உயரதிகாரிகள் வெளிநாடுகளில் கைதாகும் சாத்தியம்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் காரணமாக இலங்கையின் உயரதிகாரிகளை கைது செய்யக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் இலங்கையின் முக்கிய பிரமுகளை கைது செய்வதற்கு தேவையான பிடிவிராந்தினைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவையானவர்கள் ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கையை ஆதாரம் காட்டி இவ்வாறு பிடிவிராந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளும் இலங்கைத் தலைவர்களை கைது செய்ய முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட சிரேஸ்ட அதிகாரிகள் பலர் அமெரிக்கக் குடியுரிமை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்படக் கூடிய அபாயம் காணப்பட்ட போதிலும், இராஜதந்திர ரீதியில் சம்பந்தப்பட்ட நாடு இறுதித் தீர்மானத்தை எடுக்க முடியும் என விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு உருவாக்கமே சட்டவிரோதமானது என தெரிவித்துள்ள விஜயதாச,
இலங்கை அரசாங்கத்தின் எழுத்து மூல கோரிக்கை இன்றி இலங்கைக்கு எதிராக விசாரணைகளை நடாத்தும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் இலங்கைக்கு எதிராக விசாரணைகளை நடத்தக் கூடிய சாத்தியம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

படுகொலைக்குள்ளான மற்றுமொரு முக்கியஸ்தர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரை சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவுக்கமைவாக கொடூரமாக படுகொலை செய்துள்ளனர்.
கேணல் ரமேஸ் இன் படுகொலை தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது விடுதலைப்புலிகளின் பொருளியல் ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளர் திரு சிவலிங்கம் சுகுணன் (திலக்) என்பவரையும் சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
அரச சார்பற்ற நிறுவனமாக சிறீலங்காவில் பதிவுசெய்யப்பட்டிருந்த இந்த நிறுவனத்தில் பணியாற்றிய திலக் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருமலைமாவட்ட அரசியல் பிரிவுத் தலைவருமாவார். பொருளியல் ஆலோசனை அமைப்பில் பணியாற்றிய உறுப்பினர் ஒருவரே திலக்கின் சடலத்தை அடையாளம் காண்பித்துள்ளார். சடலத்தின் புகைப்படம் சிறீலங்கா இராணுவத்தினரால் எடுக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் காலை 6.15 மணியளவில் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட திலக், தான் சாராதரண உடையில் சிறீலங்கா இராணுவத்தினரிடம் சரணடையவுள்ளதாக தெரிவித்திருந்தார். சரணடைந்த அவரை சிறீலங்கா இராணுவத்தினர் கோரமாக அடித்துப்படுகொலை செய்துள்ளனர்.
சிறீலங்கா இராணுவத்தின் தடுப்பு முகாமில் இருந்து தப்பிய திலக்கின் முன்னாள் உதவியாளர் ஒருவர் முகாமில் தடுத்துவைக்கப்;பட்டிருந்த முக்கிய நபர்கள் மற்றும் சிறீலங்கா இராணுவத்தினரின் இனஅழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் மேலதிக தகவல்களையும் வெளியிட்டுள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் காலம்சென்ற பேராசிரியர் துரைராஜாவின் ஆலோசனையின் அடிப்படையில் தான் பொருளியல் ஆலோசனை இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. கேயர், போரம் போன்ற அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய இந்த நிறுவனம் வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தியில் பெரும் பங்கு வகித்திருந்தது.
அதன் பணிப்பாளராக கடமையாற்றிய சுகுணன் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

29 ஏப்ரல் 2011

உலகிலேயே மிகவும் ஒழுக்கமானவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

தமிழீழ விடுதலைப்புலிகளைச் சுதந்திரப் போராளிகள் என்றும் ஒழுக்கமான போராளிகளைக்கொண்ட கட்டமைப்பாக இருந்தார்கள் என்றும் தெரிவித்துள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கையை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? இப்படி காடைத்தனத்திற்கு பெயர் பெற்ற சிங்கள அரசின் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பான அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சிங்கள் அமைச்சர் ஒருவர் பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
நிபுணர் குழுவின் அறிக்கையின் 8ஆம் பக்கத்தில் புலிகள் சுதந்திரப் போராளிகள், உலகிலேயே மிக ஒழுக்கமானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அறிக்கையை தமது அரசு ஏற்காது என மற்றுமொறு பேட்டியில் பீரிஸ் கூறியுள்ளார்.
மேலும் அறிக்கைய ஏற்காததால் போராட்டங்கள் எதுவும் தீவிரமாக நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்தார். ஆனால் புலனாய்வு அறிக்கையே போராட்டம் நடத்தினால் அரசு நினைக்கும் அளவு வெற்றிபெறாது என தெரிவித்துள்தாலேயே வீரியமான போராட்டங்கள் இல்லையென பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரத்திலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் அரசாங்கம் சர்வசே தரத்திலான விசாரணைகளை நடத்த வேண்டுமென தேசிய சமாதானப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு பரிந்துரைகளுக்கு நிகரான வகையில் சர்வதேச தரத்திலான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது.
இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரித கதியில் மேற்கொள்ள முனைப்பு காட்ட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை புள்ளி விபரங்கள் உள்ளிட்ட தரவுகளை அரசாங்கம் வெளியிட வேண்டுமென தெரிவித்துள்ளது.
பிரச்சினைகளுக்கான மூல காரணிகளை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.
அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பிலான தமது அமைப்பின் நிலைப்பாட்டை வெளியிடும் நோக்கில் தேசிய சமாதானப் பேரவை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவில் நடைமுறைப்படுத்தப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிற்கு நிகரான ஓர் கட்டமைப்பு இலங்கையில் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உள்நாட்டு ரீதியான பொறிமுறையில் அமைந்த தீர்மானங்கள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 ஏப்ரல் 2011

நிபுணர் குழு பரிந்துரைகளை ஸ்ரீலங்கா ஏற்று நடக்கவேண்டும்.

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை தாம் ஆதரிப்பதாகவும், சிறீலங்கா அரசு அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சகம் இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:
சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை வரவேற்கத்தக்கது. சிறீலங்காவில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் தேவை என பிரித்தானியா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.
எனவே நாம் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கைக்கும் முழுமையான ஆதரவுகளை வழங்குவோம். நீதியான, சுயாதீன விசாரணைகள் தேவை என்பதை அறிக்கை வலியுறுத்தியுள்ளது. சிறீலங்கா அரசு அதனை ஏற்றுக்கொண்டு, பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
சிறீலங்காவில் இனநல்லிணக்கப்பாடுகன் ஏற்படுவதற்கு நீதியான விசாரணைகள் அவசியம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேணல் ரமேஸ் அவர்கள் சிங்களப்படைகளால் கொடூரமான முறையில் படுகொலை!

ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரின் ஏற்பாட்டில் சிறீலங்கா இராணுவத்தின் 58 ஆவது படையணியிடம் சரணடடைந்த விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதி கேணல் ரமேஸ் சிறீலங்கா இராணுவத்தால் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நெற் இணையத்தளம் புதிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளது.
ரமேஸ் இடம் சிறீலங்கா இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொள்ளும் காணொளிகள் வெளியாகிய நிலையில் தற்போது அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் சிறீலங்கா இராணுவத்தினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் கொக்கட்டிச்சோலை அரசடித்தீவை பிறப்பிடமாகக் கொண்ட துரைராஜசிங்கம் தம்பிராஜா (18.08.1964) என ரமேசின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
காணொளியில் சாதாரண உடையில் இருந்த ரமேசிடம் இரணுவ உடைகளை அணுயுமாறு பலவந்தப்படுத்திய சிறீலங்கா படையினர் அதன் பின்னர் அவரை படுகொலை செய்துள்ளனர்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான ரமேஸ் விடுதலைப்புலிகள் அமைப்பின் சிறப்புத் தளபதியாக பணியாற்றியிருந்தார். அவர் 1986 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்தார்.
ரமேசிடம் விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா படையினரின் அடையாளங்கள் காணொளியில் தெளிவாக காணப்படுகின்றன.
இதனிடையே, விடுதலைப்புலிகளின் காவல்துறை பொறுப்பாளாராக கடமையாற்றிய ரமேஸ் என அழைக்கப்படும் இளங்கோவும் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் நடேசனுடன் சரணடைந்திருந்தார். ஆனால் அவரின் நிலை என்ன என தெரியவில்லை.
இளங்கோ சரணடைந்ததை சிறீலங்காவின் அதிகாரி பாலிதா கோகன்னா உறுதிப்படுத்தியிருந்தார்.இதே வேளை கேணல் பானு அவர்களுடைய புகழுடல் என நம்பப்படும் ஒரு படமும் நேற்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

27 ஏப்ரல் 2011

ஐ.நா.அலுவலர்களை ஸ்ரீலங்கா அரசு துப்பாக்கி முனையில் மிரட்டியதா?

போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்ற மனிதப் படுகொலைகள் வெளித்தெரியவராது ஐநா அலுவலர்களை இலங்கை அரசாங்கம் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதா என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமைதியாக ஐநா செயலாளர் நாயகம் அளிக்கை செய்த பின்னர் இன்னர் சிற்றி பிரஸ் பான் கீ மூனிடம் இரண்டு பிரதானமான கேள்விகளை எழுப்பியது.
பான் அளித்த பதில்களில் தொக்கி நிற்பது என்வென்றால் இலங்கையின் இறுதிப் போரின் போது பாதிக்கப்பட்டவர்கள் படுகொலையானவர்கள் பற்றிய விபரங்களை ஐநா மறைத்துள்ளது என்பது தான்.
பொதுமக்களைப் பாதுகாக்க ஐநா தவறி விட்டது என்றும், உண்மையில் பாதிக்கப்பட்டவர்களது விபரங்களை திரட்டுவதிலும் வெளியிடுவதிலும் அது தவறிவிட்டது என்றும், நிபுணர் குழு அறிக்கை முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பான் கீ முனிடம் கேட்ட போது அவ்வாறு செயற்பட்டால் 'ஐநா அலுவலர்களின் பாதுகாப்புக்கு தம்மால் உத்தரவாதம் தர முடியாது' என இலங்கை அதிகாரிகள் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.
'மோதலின் இறுதிக்கட்டத்தில் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தைப் பெற முடியாதிருந்தது. ஐநாவின் குழுவுக்கு அங்கே எத்தகைய பாதுகாப்பையும் அபாயமற்ற நிலையையும் இலங்கை அரசால் உறுதிப்படுத்த முடியாது என இலங்கை அரசாங்கத்தால் எங்களுக்குச் சொல்லப்பட்டதாகவே எனக்கு ஞாபகம் இருக்கிறது' என பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.
இதனுடைய சாரம் என்னவென்றால் ராஜபக்சக்கள் துப்பாக்கி முனையில் ஐநா அலுவலர்களை வைத்திருந்ததால், அப்போது அங்கு எவ்வளவு மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதனை ஐநா மறைத்தது. அந்நேரத்தில் தாம் படுகொலை தொடர்பில் கணக்கெடுப்பொன்றைச் செய்து கொண்டிருப்பதாக ஐநாவின் ஊதுகுழல்கள் இன்னர் சிற்றி பிரஸிடம் தெரிவித்திருந்தன. பின்னர் இன்னர் சிற்றி பிரஸ் படுகொலைகள் தொடர்பான விபரங்களை வெளியிட்ட போதும் ஐநா அதனை உறுதிப்படுத்த மறுத்து விட்டது.
வெள்ளைக் கொடி விவகாரப் படுகொலையில் விஜய் நம்பியாரின் பங்கு பற்றி இன்னர் சிற்றி பிரஸ் பான் கீ மூனிடம் கேட்ட போது அக்கேள்விக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்த பான் கீ மூன் ஐநாவின் செயற்பாடுகள் தொடர்பில் தனது சிரேஸ்ட ஆலோசகர்களின் ஆலோசனையுடன் ஒரு மீள்பார்வை செய்ய இருப்பதாகத் தெரிவித்தார்.
கேள்வி என்வென்றால் அந்தச் சிரேஸ்ட ஆலோசகர் விஜய் நம்பியார் தானா? 'அந்நேரத்தில் இலங்கையில் ஐநா தூதுக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் பணிகள் தொடர்பாக ஒரு மீள் பார்வை செய்யவுள்ளேன். இது தொடர்பில் நான் எனது சிரேஸ்ட ஆலோசகர்களுடன் கலந்துரையாட உள்ளேன்' எனப் பான் கீ மூன் தெரிவித்தருந்தார்.
இலங்கையின் போர்க்குற்ற நிபுணர் குழுவின் அறிக்கையுடன் இணைக்கப் பட்டிருந்த பான் கீ மூனின் கடிதத்தில் விசாரணைக்கான பொறிமுறை சம்பந்தப்பட்ட நாட்டின் ஆதரவுடன் அல்லது உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கியது யார் எனக் கேட்டதுடன் பான் மூன்று முறை நிபுணர் குழு இலங்கைக்குச் செல்லும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இறுதிவரை செல்லவேயில்லையே ஏன் என்றும் இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியது.
தனக்கு ஆலோசனை வழங்கியது யார் என்று பான் கீ மூன் சொல்லவில்லை. உறுப்புநாடுகளால் வாக்களிப்பினூடாக மேற்கொள்ளப்படும் தீர்மானத்தை தான் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
நிபுணர் குழுவின் இலங்கை விஜயத்திற்கு இலங்கை அரசை ஒத்துக்கொள்ள வைக்க நாம் பெரிதும் முயன்றோம். ஆனால் அவர்கள் நிபுணர் குழுவை அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை. இறுதியாக அவர்கள் தமது உயரதிகாரிள் சிலர் நிபுணர்குழுவை வந்து சந்திக்க அனுமதித்தனர். அந்த அடிப்படையில் மோஹபன் பீரிஸ்உடன் சந்திப்பு நடைபெற்றது என்றார்.
இச்சந்திப்புக் குறித்து முன்னர் ஐநா மறுத்து வந்தது. ஆனால் இப்போது ஒத்துக் கொண்டுள்ளது.

போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியம்!

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நாவின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சி தருகின்றது. எனவே அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த மேலதிக சுயாதீன விசாரணைகள் அவசியம் என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை இன்று (27) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்காவில் நடைபெற்ற சமரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை காத்திரமானது.
மூவர் கொண்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல கவலைப்படும் தகவல்கள் உள்ளன. அங்கு இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக சமூகம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
நேரில் கண்டவர்களின் சாட்சியங்களையும், பல காத்திரமான ஆதாரங்களையும் அறிக்கை கொண்டுள்து. எனவே முழுமையான, சுயாதீனமான, காத்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அறிக்கை வலியுறுத்தியுள்ளது.
அறிக்கையின் பரிந்துரைகளை சிறீலங்கா அரசு முற்றாக மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. விசாரணைகளை மேற்கொள்ள சிறீலங்கா அரசு தொடர்ந்து மறுத்தால் அனைத்துலக விசாரணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

26 ஏப்ரல் 2011

படு பயங்கரமான வீடியோ காட்சிகளை சனல் போர் வெளியிடவுள்ளது!

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பிலான புலனாய்வில் இதுவரையில் காட்டப்பட்டவற்றைவிட மிக மிகப் பயங்கரமான வீடியோக் காட்சிகளை சனல் 4தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளதாக ஐக்கிய இராச்சிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின் இறுதி வாரங்களில் இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்களை ஆராய்வது பற்றி பான் கீ மூன் அறிவித்ததற்கு அடுத்த நாள் சனல் 4 இந்த அறிவிதலை விடுத்துள்ளது. இதன்மூலம் நடந்த கொடூரங்கள் ஆவணப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்த வீடியோக் காட்சிகள் படு பயங்கரமானவை என்பதால் இவை பின் இரவிலேயே ஒளிபரப்பப்படும். படு பயங்கரமான காட்சிகள் காட்டப்படுமுன் உரிய எச்சரிக்கை வழங்கப்படும் என சனல் 4 அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள கட்சிகள் ஒன்றுபட வேண்டிய நேரம் இது!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வரவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே .சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்தகாலச் சோக வரலாறு எமக்குத் தந்திருக்கும் மிக இறுக்கமான சந்தர்ப்பம் இது. கடந்த காலங்களைப் போலவே இந்தச் சந்தர்ப்பத்தையும் தவறவிடக்கூடாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். நேற்று யாழ்ப்பாணத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்தக் கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர்.
நிபுணர் குழு அறிக்கையில் பொது மக்கள் இழப்புக்களுக்கான பிரதான குற்றவாளியாக இலங்கை அரசு குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மட்டுமல்ல இந்தியாவும் இந்த விடயத்தில் குற்றவாளிதான். படுகொலைகளை நிறுத்துவதற்கு மத்திய அரசுக்குப் போதிய அழுத்தங்களைக் கொடுக்காத தமிழ்நாடு அரசும் குற்றவாளிதான். இந்தப் பட்டியல் இதனுடன் நின்றுவிடாது.
அது நீளும்போது ஈழத் தமிழர்கள் சிலரும் அதில் சேர்க்கப்படுவார்கள். அதனை நாம் விவரிக்க வேண்டியதில்லை. போர் உக்கிரமாக நடைபெற்ற காலத்தில் அமைதியாக இருந்த மேற்கு நாடுகள், எமது மக்கள் நம்பிக்கை இழந்து போய் இருக்கின்ற இன்றைய நிலையில் போர்க் குற்றங்கள் குறித்து உரத்துப் பேசுகின்றன.
எனினும் அதனை நாம் வரவேற்கலாம். இந்த நிலையில் எம் முன்னால் உள்ள கேள்வி நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான். தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்த விடயத்தில் ஒத்த கருத்துக்கும் அணுகுமுறைக்கும் வரவேண்டும். இதற்கான கோரிக்கையை நாம் பகிரங்கமாக விடுக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு தமிழ் மக்களுடன் அரசியல் ரீதியான உடன்பாட்டுக்கு வருவது நாட்டுக்கும் அரசுக்கும் மக்களுக்கும் நல்லது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே விசாரணை என்கிறார் பான் கீ மூன்!

ஸ்ரீலங்காவில் நடைபெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்தால் மட்டுமே விசாரணைகள் நடத்தப்படும் என ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட நாடு அல்லது உறுப்பு நாடுகளின் இணக்கமின்றி குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகளை நடத்தப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கப்படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிபுணர் குழு தகவல் வெளியிட்டுள்ளது.

சில படைத் தளபதிகளினால்தான் இன்றைய நிலை என்கிறார் மற்றொரு படைத் தளபதி!

வன்னியில் நடைபெற்ற போரின் போது அனைத்து படைத் தளபதிகளும் போர்தர்மங்களைக் கடைப்பிடித்திருந்தால் போர்க்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் நிலையேற்பட்டிருக்காது என்று சிறீலங்கா இராணுவத்தின் முன்னாள் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பிரித்தானிய தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தனது நண்பர்கள் மட்டத்தில் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறீலங்கா இராணுவத்தின் 55 மற்றும் 59வது படைப் பிரிவுகளை வழிநடாத்தியிருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, தற்போது பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றுகின்றார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
யுத்த காலத்தின் போது நான் வழிநடாத்திய படைப்பிரிவின் எந்தவொரு படைவீரரும் பொதுமக்களின் இலக்குகளைத் தாக்கவில்லை என்பதுடன், யுத்தத்தில் இறந்த விடுதலைப்
புலி உறுப்பினர்களின் உடல்களை போர் தர்மங்களுக்கு ஒப்ப புதைப்பதற்கு நடவடிக்கை எடுந்திருந்தனர்.
மேலும் அவ்வாறு புதைக்கப்பட்ட இடங்களை வரைபடமாக பதிவு செய்து அதனை இராணுவத் தலைமையகத்துக்கு அனுப்பி வைத்திருந்தோம். சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் சாதாரண உறுப்பினர்களைக் கூட பாதுகாப்புடன் அழைத்துச் சென்று ஓமந்தை சோதனைச் சாவடியில் ஒப்படைத்திருந்தோம்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்களான தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் மட்டுமன்றி விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய், தந்தையும் எனது படையணியினரிடம் சரண் அடைந்தவர்களே.
ஆயினும் ஏனைய படைத்தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆகியோர் போர் தர்மங்களை மதித்து நடக்காததே இன்றைய சர்வதேச நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறீலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் வலுவடைந்து வரும் நிலையில் சிறீலங்கா அரசு தான் தப்புவதற்காக கட்டளைத் தளபதிகளை பலி கொடுக்கலாம் என்ற அச்சம் சிறீலங்கா இராணுவத்தரப்பினரிடம் ஏற்பட்டுள்ளது.
எனவே தான் பிரசன்னா டி சில்வா போன்றவர்கள் தாம் தப்பிக்கவும், பழியை ஏனைய கட்டளைத் தளபதிகள் மீது சுமத்தவும் முற்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

நிபுணர் குழுவின் முழுமையான அறிக்கை வெளிவந்துள்ளது.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அமைத்த போர்க்குற்ற ஆலேசனைக்குழுவின் அறிக்கையை ஐ.நா முழுமையான வெளியிட்டுள்ளது.
வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது.
இந்த அறிக்கை சிறீலங்கா அரசினதும்இ விடுதலைப்புலிகளினதும் போர்க் குற்றங்கள் என அறியப்பட்டவற்றை அப்படமாகப் பட்டியலிடுகிறது.
அறிக்கையை வெளியிடவேண்டாம் என சிறீலங்கா அரசு மன்றாடியபோதும் அறிக்கை வெளிவந்துள்ளது சிறீலங்காவுக்கு பலத்த பின்னடைவாகவே இருக்கப்போகின்றது.
ஆங்கில அறிக்கையை முழுமையாக பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்.
http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf
அறிக்கையின் முக்கிய விடயங்களை தமிழில் பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்.
http://www.eelamenews.com/archives/99950

25 ஏப்ரல் 2011

நம்பியாரின் பெயரை தவிர்த்திருக்கும் நிபுணர் குழு!

ஐ.நா இதுவரை இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை வெயிளிடாமல் வைத்திருக்கிறது. ஆனால் இலங்கையிலிருந்து வெளியாகும் ஐலண்ட் பத்திரிகை மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பகுதிகளை வெளியிட்டு வருகிறது. இறுதியாக வெள்ளைக் கொடி விவகாரம் சம்பந்தமான பகுதியை வெளியிட்டிருக்கிறது.
ஐலண்டில் வெளியான நிபுணர் குழுவின் அறிக்கையில் வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பாகவும் அதனுடன் சம்பந்தப்பட்ட மகிந்த ராஜபக்ச, கோட்டாபேய ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இப்போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஐ.நாவுக்கான நிரந்தரத் தூதுவர் பாலித கோகண ஆகியோருடைய பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஐ.நா நிபுணர் குழுவின் விபரிப்பின்படி நடேசன்,புலித்தேவன் மற்றும் கேர்ணல் ரமேஸ் ஆகியோர் சரணடைவதற்கான கோரிக்கையை ஐ.நா அலுவலருக்கு அனுப்பி உள்ளனர். இதன் விளைவாக சரணடைந்தால் அவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதம் அவர்களுக்கு இவ்விடயத்தில் தொடர்பாளர்களாகச் செயற்பட்டவர்களால் வழங்கப்பட்டது. எனினும்; அவர்கள் சரணடைந்ததன் பின்னர் கொல்லப்பட்டார்கள்.
எனினும் நிபுணர் குழு இதில் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் ஐ.நா அலுவலரான விஜய் நம்பியாரின் பெயரை குறிப்பிடவில்லை.
பதிலாக இதில் சம்பந்தப்பட்ட ஐ.நா அலுவலர் ஒருவர் சரணடைபவர்கள் கொல்லப்பட மாட்டார்களய் என்ற உறுதி மொழியை வழங்கியிருந்தார் என்றே குறிப்பிட்டிருக்கிறது. நம்பியார் தான் இதில் சம்பந்தப்பட்டிருந்தார்.
2009இல் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து இன்னர் சிற்றி பிரஸ் தொடர்ந்து பலமுறை திரும்பத் திரும்ப நம்பியாரின் பாத்திரம் இதில் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. நம்பியார் தான் இவ்விடயத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறி ஒரு சிறிய நேர்காணலையும் இன்னர் சிற்றி பிரஸுக்குக் கொடுத்திருந்தார். ஆனால் நிபுணர்குழு அசட்டையான முறையில் நம்பியாரின் பெயரை இதில் தவிர்த்திருக்கிறது.
இவ்வகையில் இந்நிபுணர் குழு அறிக்கை தனிப்பட்ட நலன்கள் சார்ந்ததாக இருப்பது தெளிவாகிறது.
இவ்வாறு அஜாக்கிரதைத் தனத்துடன் அறிக்கையை வெளியிட அனுமதித்த பான் கீ மூனும் ஐ.நாவும் அடுத்து என்ன செய்யக் கூடும்? அதுவும் இவ்வாறான தனிப்பட்ட நலன்கள் ஊடுருவியிருக்கும் போது?

பொது மக்கள் இழப்புக்களை ஐ.நாவால் தடுத்திருக்க முடியும்!

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்புக்களை ஐநா தவிர்த்திருக்க முடியுமென ஐநாவின் முன்னாள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நிறுத்த இலங்கை அரசாங்கத்தின் மீது ஐநா கடுமையான அழுத்தங்களை பிரயோகித்திருக்க வேண்டுமென, இலங்கைப் போர் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலத்தில் கொழும்பில் ஐநா தலைமையகத்தின் பேச்சாளராக இருந்த கோர்டன் வைஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரின் இறுதி ஐந்து மாதக் காலப்பகுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லையென சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசாங்கம் அடிக்கடி வாக்குறுதிகளை அளித்த போதிலும் பெருமளவிலான பொதுமக்கள் அரச படைகளின் ஷெல் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா நிபுணர் குழு கண்டறிந்துள்ளதாகவும் கோர்டன் வைஸ் பிபிசி சிங்கள சேவையான சந்தேஷயவிடம் கூறினார்.
பொதுமக்களின் ஆட்சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை ஐநா எடுக்க முற்பட்ட போதெல்லாம் இலங்கை அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டைகளைப் போட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா அறிந்திருந்தது
விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்திய அரசாங்கமும் இருந்ததால், பொதுமக்கள் உயிரிழப்புகளை அது கண்டு கொள்ளவில்லையெனவும் ஐநாவின் முன்னாள் பேச்சாளர் தெரிவித்தார்.
போர்ப்பிரதேசத்தில் பொதுமக்கள் இருந்த வலயத்துக்குள்ளிருந்தும் இந்தியாவுக்கு பலமான புலனாய்வு வசதிகள் இருந்துள்ளன என்பதும் கோர்டன் வைஸின் கருத்து.
இதேவேளை, விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் அரசாங்கத்திடம் சரணடைந்தனர் எனவும் கூறும் ஐநாவின் கொழும்புத் தலைமையக முன்னாள் பேச்சாளர், அவர்கள் பின்னர் கொல்லப்பட்டுவிட்டதாக குற்றஞ் சாட்டப்படுவதாகவும் பிபிசியிடம் கூறினார்.
இலங்கை இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக கண்டறிந்துள்ள ஐநா தலைமைச் செயலரின் ஆலோசனைக்கான நிபுணர குழு, அந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கத்தின் மீதும் வடுதலைப் புலிகளின் மீதும் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொகான் பீரிசை தடுமாறவைத்த அமெரிக்க தூதர்!

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு சமர்பித்துள்ள அறிக்கை தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கு சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் நடத்திய விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்ட சிறீலங்கா நீதி ஆணையாளர் நாயகம் மோஹான் பீரீஸ் இற்கும் கொழும்புக்கான அமெரிக்க தூதுவர் பற்றீசியா பூற்றனீசிற்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வியாழக்கிழமை (22) நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட மோஹான் பீரீஸ் ஐ.நாவின் பரிந்துரைகள் தொடர்பில் சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவே விசாரணைகளை மேற்கொள்ளும் என தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்தால் விசனமடைந்த அமெரிக்கத் தூதுவர் சரமாரியாக பல கேள்விகளை தொடுத்ததால் நிலை தடுமாறிய பீரீஸ் ஒரு அடி நகர்ந்துபோய் மலைத்து நின்றதாக கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தன்னை சுதாகரித்துக்கொண்ட பீரீஸ், நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாட்டில் சிறீலங்கா அரசு தலையிடாது என தெரிவித்திருந்தார். ஆனால் இந்த உறுதிமொழிகளை சிறீலங்கா அரசு காப்பாற்றுமா? என்பது தான் முதன்மையான கேள்வியாக உள்ளது.

24 ஏப்ரல் 2011

அராலியில் ஈ.பி.டி.பி.ஆதரவுடன் கள்ளுத்தவறணை.

எங்களை வெட்டிக் கொன்றாலும் பரவாயில்லை.உங்கள் அடாவடித்தனம் ஈடேற இடம் கொடோம் என்னும் கோஷத்தோடு, ஈ.பி.டி.பி யினரின் ஆதரவுடன் அடாவடித்தனமாகத் தவறணை ஒன்றை அமைக்கும் சமூகவிரோதச் செயலுக்கு எதிராக அராலி மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
அராலி மத்தி, ஊரத்தி என்னும் இடத்தில் முன்பள்ளி, 3 ஆலயங்கள், பொதுநோக்கு மண்டபம் என்பன அமைந்துள்ள கேந்திர இடத்தில் ஈ.பி.டி.பி அமைப்பின் துணையோடு கள்ளுத்தவறணை ஒன்றை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் குறித்த இடம் ஆலயங்கள் மற்றும் கல்விச்சாலை என்பன அமைந்துள்ள இடம் என்பதாலும், பொதுமக்களுக்கு இங்கு தவறணை அமைப்பதால் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படும் என்பதாலும் இத்தவறணையை கடற்கரையை அண்டிய பகுதியில் அமைக்குமாறு ஊர்மக்கள் கோரினர். இது குறித்து கிராம சேவையாளர், பிரதேச செயலர் ,அரச அதிபர் ஆகியோருக்கும் அவர்கள் முறையிட்டனர்.
அதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளாத ஈ.பி.டி.பியினர் அவ்விடத்திலேயே தவறணை அமைப்பது என்ற முடிவில் விடாப்பிடியாக நின்று , கட்டடம் கட்டுவதற்காக கற்களையும் குறித்த காணியினுள் கொண்டு வந்தனர். இந்நிலையில் அவர்களின் அச்செயலுக்கு மக்கள் ஒன்றுதிரண்டு தம் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தம்மை எதிர்த்தால் அவர்கள் தேவையற்ற விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் என ஈ.பி.டி.பியினர் அச்சுறுத்தினர். எனினும் " எம்மை நீங்கள் வெட்டிக் கொன்றாலும் பரவாயில்லை. உங்கள் அடாவடித்தனத்தால் எங்கள் கிராமம் அழிந்துபோக விடமாட்டோம்� என ஊர் மக்கள் தம் எதிர்ப்பைத் தொடர்ந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்து, அவ்விடத்துக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் விரைந்து சென்று மக்களின் பிரச்சினை குறித்துக் கேட்டறிந்தார்.பின்னர் அவர்கள் மத்தியில் உரையாற்றிய சரவணபவன் எம்.பி தென்னிலங்கையில் ஒரு இடத்தில் இவ்வாறு மதுபான நிலையம் ஒன்றை அமைக்க முடியுமா? ஆனால் இங்கு 3 ஆலயங்கள் இருக்கும் புனிதமான இடத்தில் தவறணை அமைக்க ஒரு கட்சி கங்கணம் கட்டுகிறது. ஊர் மக்களின் எதிர்ப்பையும் மீறி நிகழும் இந்த அராஜகத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் மக்களின் போராட்டத்துக்கு இறுதிவரை நான் துணையிருப்பேன் என்று உறுதி வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிடம் அறிக்கையை கையளித்தது ஸ்ரீலங்கா!

ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் அறிக்கையை வாசித்து அதில் இருந்து தம்மை காப்பாற்றுமாறு சிறீலங்கா அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன் அறிக்கையையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்கா அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஆய்வு செய்வதற்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையில் குழு ஒன்றை இந்தியா அமைத்துள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட மகிந்தா அறிக்கை தொடர்பில் கலந்துரையாடியதுடன், அதனை இந்திய அரசுக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.

23 ஏப்ரல் 2011

மகிந்தவின் பெயர் நீக்கத்தால் துன்பப்படுகிறது ஜாதிக ஹெல உறுமய!

உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலிலிருந்து ஜனாதிபதியின் பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் டைம்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர் குழாம் விளக்கமளிக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி வலியுறுத்தியுள்ளது.
இணைய கருத்துக் கணிப்பின் அடிப்படையில் முதல் பத்து நிலைகளில் இடம்பிடித்திருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பெயர் இறுதி நேரத்தில் நீக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் சூழ்ச்சி இருக்கலாம் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
இணைய கருத்துக் கணிப்பின் போது ஜனாதிபதி நான்காம் நிலையில் காணப்பட்டதாகவும், இதனையிட்டு இலங்கையர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக ஜனாதிபதியின் பெயர் நீக்கப்பட்டது என்பது தொடர்பில் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியர் குழாம் விளக்கமளிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சில மேற்குலக நாடுகளும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும் ஜனாதிபதியின் பெயர் நீக்கப்பட்டமையின் பின்னணியில் செயற்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

புலிகளின் தேவைக்கமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை என்கிறார் கோத்தபாய!

நான் நினைத்ததை செய்பவன்; எவரும் கருத்துக் கூறும்வரைப் பார்த்துக்கொண்டிருப்பவன் அல்ல என பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இரிதா லங்கா பத்திரிகையில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா.செயலர் பான் கீ மூன் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு முன்னர் நீங்கள் ஏன் அது குறித்து கருத்து வெளியிட்டீர்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் உள்ள எவரும் பான் கீ மூனின் அறிக்கைக்கு எதிராக எதனையும் செய்ய முடியும். நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கைக்கு எதிராக விடுதலைப்புலிகளின் தேவைக்கு அமைய தயாரிக்கப்பட்ட அறிக்கை.யுத்தகாலத்தில் கூட விசேட பொறுப்புடன் செயற்பட்ட நாடு இலங்கை.
நிபுணர்கள் குழுவின் அறிக்கை சர்வதேச சட்டத்திற்கு முரணாக தயாரிக்கப்பட்ட அறிக்கை என அண்மையில் ரஷ்ய தூதுவர் தெரிவித்தார்.பிரபாகரனின் தேவைதான் அறிக்கையில் உள்ளது. இலங்கையை அடிப்படைவாத பெளத்த நாடாக மாற்றப்போவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அத்துடன் விடுதலைப் புலிகள் ஒழுக்கம் நிறைந்த அமைப்பு எனவும் அதில் கூறப்பட்டுள்ளது எனவும் கோத்தபாய கூறியுள்ளார்.இதேவேளை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் கே.பி.யாழ்ப்பாணத்திற்கு சுற்றுப் பயணம் மேற் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான முன்னாள் பொறுப்பாளர் கே.பியை கடும் சிரமத்தின் மத்தியில் பிடித்து கைது செய்து,தடுப்புக்காவல் உத்தரவின் பெயரில் தடுத்து வைத்துள்ளோம்.அவ்வாறான ஒருவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

நிபுணர் குழு அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என இலங்கை விடுத்த வேண்டுகோளை ஐ.நா நிராகரித்துள்ளது. 195 பக்கங்களை கொண்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐ.நா அதிகாரிகளால் அண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை துணை நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் அறிக்கையின் பிரதிகள் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனை தவிர ஐ.நாவுடன் சம்பந்தப்பட்ட அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றுக்கும், போத்துக்கல் தூதுவருக்கும் அறிக்கையின் பிரதிகள் வழங்கப்பட்டிருந்தன. நிபுணர்கள் குழுவின் அறிக்கை நேற்று வெளியிடப்படவிருந்த போதிலும் பெரிய வெள்ளி என்பதால், அது இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 ஏப்ரல் 2011

ஸ்ரீலங்காவின் கோரிக்கையை நிராகரித்து,அறிக்கையை வெளியிட உள்ளது ஐ.நா.

ஐ.நா.நிபுணர் குழுவின் இலங்கை தொடர்பான முழுமையான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என ஸ்ரீலங்கா அரசாங்கம் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும், அதனை தாம் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளாது முழுமையாக வெளியிட எண்ணியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரது பதில் பிரதி ஊடகப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறு தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பான ஸ்ரீலங்கா அரசின் நிலைப்பாட்டை, குறித்த அறிக்கையில் சேர்த்துக் கொள்வது தொடர்பாக ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ-மூனின் நிபுணர் குழு அறிக்கையை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இதனால் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக தாம் எவ்வித கருத்துக்களையும் முன்வைக்க போதில்லை என அவர் உறுதியளித்துள்ளார்.

வன்னியில் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு வரும் சிங்களப்படைகள்!

சிறீலங்காவில் போர் நிறைவுபெற்று இரு வருடங்கள் அண்மிக்கும் நிலையிலும் வன்னியில் மீள்குடியேறிய மக்கள் இராணுவ வலையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு தொடர்ந்தும் இராணுவத்தினர் இளம் தமிழ் பெண்களை கூட்டமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திவருவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் 4 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அதன் செய்தித் தொகுப்பில் அண்மையில் வன்னி சென்று திரும்பிய அதன் ஊடகவியலாளர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வன்னியில் போர் நிறைவடைந்த பின்னரும் மக்கள் மீதான வன்முறைகள் தொடர்கின்றன. போரில் தப்பியவர்களே அதிக துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுவருகின்றனர்.
அங்கு சென்ற எமது ஊடகவியலாளர் சில தகவல்களை படம் பிடித்தும் வந்துள்ளார். ஆனால் அவை சிறீலங்கா இராணுவத்தினருக்கு தெரியாது திரட்டப்பட்ட தகவல்கள், அவர்களின் கையில் அவை கிடைத்திருந்தால் தண்டனையின் அளவு விபரீதமாக இருந்திருக்கும்;.
வன்னியில் கிராமம், கிராமமாக இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் இராணுவத்தினர் தமது வசப்படுத்திவருகின்றனர். மக்கள் தமது வாழ்வுக்கு வேறு இடங்களை தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சிப் பகுதியில் 57 ஆவது படையணியின் தலைமையகம் உள்ளது. எங்கு பார்த்தாலும் இராணுவத்தனரையே காணமுடிந்துள்ளது.
தனது வீடு முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது ஏதுவுமற்ற ஒரு பிரதேசத்தில் தான் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தெரிவத்துள்ளார். அவரின் கணவர் போரில் கொல்லப்பட்டுவிட்டார்.
இடம்பெயர்ந்த மக்களில் பெருமளவானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு வேறு வீடுகள் வழங்கப்படவும் இல்லை.
மேலும் அங்கு வாழும் இளம் பெண்களை சிறீலங்கா இராணுவத்தினர் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வருகின்றனர். தன்னை ஏழு இராணுவத்தினர் கூட்டமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அண்மையில் மீள்குடியேற்றப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்கான அவரின் அடையாளத்தை நாம் வெளியிடவில்லை. தனது வீட்டுக்கு வந்த இராணுவத்தினரே தன்னை இழுத்துச் சென்று இந்த வன்முறையை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிறீலங்காவில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுவதை அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் பிரதிநிதி அலன் கீனனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அங்கு வாழும் தமிழ் மக்கள் மீது போர் முடிந்த பின்னரும் வன்முறைகள் தொடர்வதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் பிரதிநிதி ஜொலந்தா போஸ்ரர் என்வரும் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 ஏப்ரல் 2011

புலிகள் மருத்துவ மனைகளை தமது தேவைக்கு பயன்படுத்தவில்லை!

இறுதி நேரம்வரை விடுதலைப்புலிகள் வைத்தியசாலைகளை தமது தேவைக்காக பாவிக்கவில்லை என நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009 தை மாதம் தொடக்கமே இலங்கை அரசு படைகள் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்களை கோத்தபாய புலிகளின் இராணுவ இலக்கு என குறிப்பிட்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் தாக்குதல் நடந்தது உண்மை ஆனால் புலிகள்தான் அங்கு இருந்தார்கள் எனவும் அங்கு பொதுமக்களோ நோயாளர்களோ இருக்கவில்லை எனவும் கூறியிருந்தார். தைமாதம் முல்லைத்தீவு வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் வீடியோ ஆதாரங்கள், மற்றும் கண்கண்ட சாட்சிகளால சர்வதேச செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் உள்ளார்கள் .
இந்த நிலையில் வைத்தியசாலை மீதான தாக்குதல்கள் பக்கசார்பின்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நிபுணர் குழு அறிக்கை கூறியுள்ளது. இதே வேளை விடுதலைப்புலிகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். ஆனால் இறுதிவரை அவர்கள் இராணுவ தேவைக்கு வைத்தியசாலைகளை பாவிக்கவில்லை எனவும் கூறியுள்ளது நிபுணர் குழு அறிக்கை.

போராட்டத்திற்கு தயாராகுமாறு பிரதமர் உருத்திரகுமாரன் வேண்டுகோள்!

மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான கால பகுதியை துக்கத்தினங்களாக அனுஷ்டிக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் மே மாதம் 19 ஆம் திகதி ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தயாராகுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை ருத்ரகுமாரன் தலைமையிலான விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள், நிபுணர்கள் குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போர் குற்ற விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு பாரிய அழுத்தங்களை கொடுக்க முயற்சித்து வருவதாக பிரித்தானியாவில் இயங்கும் சிங்கள அமைப்பான பயங்கரவாதத்திற்கு எதிரான ஒன்றியம் தெரிவித்துள்ளது.

20 ஏப்ரல் 2011

தமிழர்கள் விழித்தெழ வேண்டிய தருணம் வந்து விட்டது!

இன்று மாலை 7.00 மணிக்கு சனல் 4, மற்றும் அல்ஜசீரா தொலைக்காட்சியில் இலங்கை போர்குற்றம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது. ஐ.நா நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக இது அமையவுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக சிங்களம் சுமார் 10 லட்சம் கையெழுத்துக்களை திரட்ட ஆரம்பித்துள்ளது. ஆனால் தமிழ் மக்கள் இன்னும் விழிப்படையாது அப்படியே உள்ளனர் என்பது வேதனைக்குரிய விடையமாக உள்ளது. சனல் 4 தொலைக்காட்சி, மற்றும் அல்ஜசீரா போன்ற சர்வதேச தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் இலங்கை குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவதால், ஐ.நா வுக்கான அழுத்தங்கள் அதிகரித்துவருகிறது. இச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களும் சரிவர கையாளவேண்டும். தமிழர்கள் ஐ.நா வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவர்களின் அலுவலகங்களை தமிழர்கள் முற்றுகையிடவேண்டும்.
லிபியாவுக்கு உடனடி நடவடிக்கை எடுத்ததுபோல, இலங்கைக்கும் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி மக்கள் வீதிக்கு இறங்கவேண்டும். அதற்கான காலமும் நேரமும் கூடியுள்ளது என்றே கூறவேண்டும். ஐ.நா அறிக்கை குறித்து அல்ஜசீரா தொலைக்காட்சி கோத்தபாய ராஜபட்க்ஷவிடம் கேட்டபோது, அவர் மிகவும் காட்டமாகப் பதிலளித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இன்று ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சிகளில், இதுவும் வெளியாகவுள்ளது. சர்வதேச ஊடகங்கள் தமிழர் பக்க நியாயங்களைப் பற்றிப்பேச ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர்கள் மெளனாக இருப்பது பயன்தராது.
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடைபெற்றவேளை தமிழர்கள் எவ்வாறு வீதிக்கு இறங்கிப் போராடினார்களோ, அவ்வாறானதொரு போராட்டம் உடனடியாக, உலகளாவியரீதியில் நடாத்தப்படவேண்டும். அதற்கான தரணமும் இதுவே ! இதனை விடுத்தால் தமிழர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது. ஐ.நாவின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கவேண்டும் இல்லையேல், அதனை ஏற்கவைக்க ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே தமிழர்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கவேண்டும்.

ஐ.நாவுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு சமயத்தலைவர்களை நிர்ப்பந்திக்கிறது ஸ்ரீலங்கா!

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக கடும் கண்டணத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுமாறு சகல சமயத் தலைவர்களையும் அரசாங்கம் பலவந்தப்படுத்தி வருவதாக தெரியவருகிறது.
நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்குடன் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கைக்கு ஒட்டுமொத்த கண்டனத்தை சமயத் தலைவர்கள் வெளிப்படுத்த வேண்டும் எனவும் பெளத்த சிங்கள பேரினவாத அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த தலைவர்களிடம் இந்த விண்ணப்பத்தை அரசாங்கம் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.ஐ.நாவைக் கண்டிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிகளிலும் கலந்து கொள்ளுமாறும் சமயத் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது.

நாற்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை புறம்தள்ள முடியாது!

இலங்கையின் இறுதிக்கட்டப் யுத்தத்தின் போது பொதுமக்கள் நாற்பதாயிரம் பேர் வரையிலானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற மதிப்பீடுகளை தற்போதைக்கு புறந்தள்ள முடியாது என ஊடகங்களில் கசிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தெரிவிக்கிறது என பீபீசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ்வறிக்கையில் ஐ.நா. நிபுணர் குழுவின் முழுமையான அறிக்கை இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடப்படாதுள்ளது.
இந்நிலையில் அந்த அறிக்கையின் பாகங்கள் சில கசிந்துள்ளதாகக் கூறி இலங்கையிலுள்ள நாளிதழ்கள்-குறிப்பாக அரச சார்பு செய்தி நாளிதழ்கள் கட்டம் கட்டமாக அவ்வறிக்கையின் தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் யுத்தத்தின்போது, யுத்தகுற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று கூறும் அளவுக்கு சர்வதேச சட்டங்களை மீறும் வகையிலான பெரும் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா. நிபுணர் குழு கண்டறிந்துள்ளது என இலங்கையில் அண்மையில் கசிந்த ஐ.நா. குழுவின் அறிக்கையுடைய சுருக்கங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
அதற்கு இலங்கை அரச தரப்பிலிருந்தும், அங்குள்ள பெரும்பான்மைக் கட்சிகளிடமிருந்தும் பலத்த எதிர்ப்பு கிளம்பியிருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை வரவேற்பதாக பீபீசியிடம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, இவ்வாறு வெளியாகியுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள் சரியானவை தான் என்பதை ஐ.நா. அதிகாரிகள் பீபீசிக்கு மின்னஞ்சல் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆக கசிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் வெளியாகியுள்ள முக்கிய விடயங்கள் பின்வருமாறு:
1) இலங்கையில் யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டு காலம் கடந்துவிட்டுள்ளது என்றாலும், இறுதிப் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கையை உறுதிப்படக் கூறமுடியாதுள்ளது. ஆயினும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் பேர் என்று பல்வேறு வழிகளிலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை நிராகரித்துவிட முடியாது என்று ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.
2) முழுமையான விசாரணைகளின் மூலமே கொல்லப்பட்ட மக்களின் மொத்தக் கணக்குப் பற்றிய முடிவொன்றுக்கு வரமுடியும் என்பதையும் ஐ.நா. நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.
3) வன்னியில் யுத்தத்தின் போது அங்கு சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கை எத்தனை என்பது தெரியாத நிலையில், அந்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 30 ஆயிரம் வரை இருக்கலாம் என்றளவில் கணிக்கப்பட்டிருந்தது.
4) அத்தோடு யுத்த வலயத்திலிருந்து வந்த மக்களை பிரித்து அவர்களை முகாம்களுக்கு அனுப்பிய நடைமுறை வெளிப்படையாக நடைபெறாத காரணத்தினால் அங்கிருந்து எத்தனை பேர் வந்தார்கள் என்ற விபரங்கள் இல்லை.
5) இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளும் கட்டாயப்படுத்தி ஆட்களைப் படையில் சேர்தததால் புலிகளின் எண்ணிக்கை பற்றிய விபரங்களும் இல்லை.
6) அதுமட்டுமன்றி பெருமளவிலான கொல்லப்பட்ட மக்களின் இறப்புகள் எதுவும் பதியப்படாமலேயே அவர்கள் புதைக்கப்பட்டுவிட்டார்கள்.
என்று ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலிருந்து கசிந்த விபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலிருந்த ஐநா அலுவலக அதிகாரிகள் கொடுத்த புள்ளிவிபரங்களையும் நிபுணர் குழு கருத்தில் எடுத்துள்ளது.
ஐ.நா. இதுவரை வெளியிடாது வைத்திருந்த புள்ளிவிபரங்களின் படி, ஓகஸ்ட் 2008 முதல் மே 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொதுமக்கள் 7,721 கொல்லப்பட்டும் 18,479 பேர் காயமடைந்தும் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் 2009 பெப்ரவரியில் ஐ.நா. அதிகாரிகள் உயிர்ச் சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முயற்சித்த போதிலும் அதன் பின்னர் போர் வலய மக்களை சென்றடைவதற்காக வழிகள் இல்லாமையால் அந்த முயற்சிகளும் கைகூடவில்லை எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் இழப்புகளின் புள்ளி விபரங்கள் பற்றி ஐ.நா. எடுத்துக்கூறிய போதெல்லாம் அந்த எண்ணிக்கைகளை கட்டுக்கதைகள் என இலங்கை அரசு புறந்தள்ளியது என்பதையும் ஐ.நா. நிபுணர் குழு தனது அறிக்கையில் பொதுமக்களின் இழப்புகள் பற்றிய பாகத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனவாத ஸ்ரீலங்கா அரசுக்கு ரஷ்யா ஆதரவு!

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற ஆலோசனைக்குழு கடந்த வாரம் சமர்பித்த அறிக்கை நேற்று முன்தினம் (18) நடைபெற்ற ஐ.நாவின் பாதுகாப்புச்சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார தலைவர் லியன் பெஸ்கோ அறிக்கையை சமர்ப்பித்திருந்தார். எனினும் சிறீலங்கா தொடர்பான அறிக்கையை ரஸ்யா எதிர்த்துள்ளது.
ஆனால் ஐவேரி கோஸ்ட் பிரச்சனை தொடர்பிலும் ரஸ்யா தனது எதிர்ப்பை காண்பித்தபோதும், ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக மேற்குலக நாடுகள் படை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தன.
இதனிடையே, சிறீலங்கா அரசே ஐ.நாவின் அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கியதாக ஐ.நா அதிகாரிகள் உறுதிபடத் தெரிவிப்பதாக ஐ.நாவின் உள்ளகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை கொன்று குவித்தும்,பல்லாயிரக்கணக்கில் மக்களை அங்கவீனர்களாக்கியும் உள்ள ஒரு இனவாத அரசான ஸ்ரீலங்காவிற்கு ஆதரவு வழங்குவதென்பது அந்த நாடுகளின் ஜனநாயகம் எந்தளவிற்கு உள்ளது என்பதை தெளிவு படுத்தி நிற்கிறது.