18 மே 2011

முள்ளிவாய்க்கால் துயர்தனை மறப்போமா நாங்கள்!

ஸ்ரீலங்காவின் பேரினவாத சிங்கள அரசான மகிந்த கும்பல் உலக அராஜக அரசுகளுடன் கூட்டிணைந்து தமிழின அழிப்பை மேற்கொண்ட,காட்டு மிராண்டித்தனமாக என்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட எம் சொந்தங்களை கொன்று வீசிய அந்த படு பாதகத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.உணர்வுள்ள,தன்மானம்மிக்க தமிழரெல்லாம் கொதித்தெழுந்த நாளும் இந்நாளே!ஏன் உலகெங்கும் வாழும் மனிதாபிமானிகளும் கிளர்ந்தெழுந்த நாளும் இந்நாளே!இந்நாளை நாம் நினைவு கூர்வதுடன் அங்கே மரணித்துப்போன ஆயிரமாயிரம் உறவுகளுக்கும் எம் அக வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் எமது தாயகத்தில் தன்னாட்சி பெற்ற இனமாக நாம் வாழ்வதற்கு உலக அரங்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பயன் படுத்தி ஒன்று பட்ட இனமாக ஜனநாயக பாதையிலே எம் வெற்றியை இட்டுச்செல்வோம்.அந்த வெற்றியை எம் வீரர்களுக்கும் மக்களுக்கும் காணிக்கையாக்குவோம்.சர்வாதிகாரம் மேலோங்கி நின்றாலும் இறுதியில் ஜனநாயகமே வெல்லும்.

17 மே 2011

ஐ.நா.முன்றலில் அணிதிரளத் தயாராகும் தமிழினம்.

எதிர்வரும் மே-18 புதன்கிழமை நியூ யோர்க் - ஜெனீவா ஐ.நா பீடங்களுக்கு முன்னால் அணிதிரள ஐரோப்பா - அமெரிக்கா வாழ் தமிழர்கள் தயாராகி வருகின்றனர். ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுவருகின்றன.
கடந்த காலங்களில் ஐநாவுக்கு முன்னால் அணிதிரண்டதற்கும் இந்த ஒன்றுகூடலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கடந்த காலங்களில் நாங்கள் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியில் நின்று எடுத்துரைத்தோம். ஆனால் இன்று நிபுணர் குழுவின் அறிக்கையே உண்மையின் சாட்சியமாக ஐநாவுக்குள்ளேயே உள்ள நிலையில் அதனை முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு எங்கள் கைகளிலும் உள்ளதென துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் தெரிவித்தார்.
இந்த ஒன்றுகூடலில் பங்கெடுப்பதற்குரிய பேருந்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
நியூயோர்க்கில் கலந்து கொள்வதற்கான பயண ஒழுங்குகளுக்கு : 416 291 7474 - 647 822 8062 - 514 400 6970 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு கனடா வாழ் தமிழர்கள் தொடர்பு கொள்ளுமாறும் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கீழ் வருகின்ற தொடர்பிலக்கங்களோடு தொடர்பு கொண்டு பயண விபரங்களை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
பிரான்ஸ் : 06 66 90 06 08 - 06 62 36 50 07
பிரித்தானியா : 0208 470 6655 - 0791 220 6171
சுவிஸ் : 076 541 63 26 - 078 850 90 22

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் வாடுகின்றனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நூறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2011 ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1139 குடும்பங்கள் மெனிக்பாம் மற்றும் கொடிகாமம் முகாம்களிலிருந்து வெளியேறியுள்ளன.
அநேகமானவர்கள் இடம்பெயர் முகாம்களை விட்டு வெளியேறியுள்ள போதிலும் சொந்த இடங்களில் இன்னமும் மீள் குடியேறவில்லை என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார இணைப்புக் காரியாலயம் அறிவித்துள்ளது.
நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்கள் மட்டுமே இடம்பெயர் முகாம்களில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பலர் தமது சொந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

16 மே 2011

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கண்டனம்.

போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் தேவை என்ற ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்தும் கண்டித்தும் கொழும்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நடத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இன்று இந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வடபகுதியிலிருந்து சென்றிருந்த தமிழ்த்தரப்பு சட்டத்தரணிகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக துணிந்து நின்று செயற்படுவதிலும் சட்டத்துறை சார்ந்தவர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. ஆனால் அதனை மறந்து எமது சட்டத்தரணிகள் கொழும்பில் செயற்பட்டிருப்பது வேதனைக்கும் வெட்கத்திற்குரியதும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களது முள்ளிவாய்க்கால் படுகொலை சர்வதேச ரீதியாக நீதி வழங்க வேண்டும் என்று உலகெங்கும் குரல் ஒலித்துக் கொண்டிருக்கையில் சட்டத்தரணிகள் சார்ந்த எம்மவர்கள் செயற்படும் விதத்தையே எமது கட்சி கண்டிக்கின்றது என்றும் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்க்க துணிவில்லாது விட்டாலும் அவற்றிலிருந்து ஒதுங்கி நிற்பதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரில் நிற்கும் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டை யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவி செல்வி சாந்தினி அபிமன்னசிங்கம் மறுதலித்திருக்கின்றார். அவ்வாறு தமது பிரதிநிதிகள் எவரும் அக்கூட்டத்திற்கு சென்றிருக்கவில்லை எனவும் தான் அறிந்த வரையில் தமிழ்த் தரப்பு சட்டத்தரணிகள் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை எனவும் வழமையாக இடம்பெறுகின்ற கூட்டம் ஒன்றிற்கென அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் யாராவது விசயம் தெரியாது போய் மாட்டுப்பட்டிருக்கலாமேயன்றி தமிழ் சட்டத்தரணிகள் அதற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றம் தொடர்பில் சுவிஷும் கனடாவும் கலந்துரையாட உள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து சுவிட்சர்லாந்தும், கனடாவும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இது நட்புரீதியற்றது என இலங்கை அரசு தனது எதிர்ப்பைத் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி மற்றும் சுவிஸ் தூதுவர் தோமஸ் லிற்சர் ஆகியோரை அழைத்து வெளிவிவகார அமைச்சு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஒட்டாவா மற்றும் பேர்ன் பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்களும் இந்த கூட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஜெனீவாவில் நடைபெறும் கூட்டம் வழமையாக நடைபெறும் கூட்டம் எனவும், அதில் பல விடயங்கள் கலந்துரையாடப்படுவதாகவும் கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா.நிபுணர்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிஸ் அரசும் தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி பிரான்ஸ் செனிட்டர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும், இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிற்செருக்கும் இடையில் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றிருந்தது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிற்சர்லாந்தும் தனது ஆதரவை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வரானார்.

தமிழக முதல்வராக இன்று ஜெயலலிதா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்றுக்கொண்டார். கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அப்போது ஜெயலலிதா ஏற்றுக்கொண்ட உறுதிமொழி:
பதவிப்பிரமாணம்:
‘’ஜெ. ஜெயலலிதா என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்,
தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக, உண்மையாகவும், உளச்சான்றின் படியும், என் கடமைகளை
நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க, அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.
ரகசிய காப்பு பிரமாணம்:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை நிறைவேற்ற தேவையான அளவுக்கு அன்றி, ஒருவரிடமோ, பலரிடமோ நேர்முகமாகவோ, மறைமுகவாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

15 மே 2011

எனது பிள்ளையை விடுவிப்பதாக கூறி கருணா குழுவினர் காசு வாங்கினர்.

திருகோணமலையில் 13.05.2011 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தாயின் சோகக்கதை:
கருணா குழவைச் சேர்ந்த நாதன், சுரங்க என்ற 2 பேர் எனது பிள்ளையை எடுத்து தரலாம் என காசு வாங்கினார்கள்.
2008 மார்ச் 19 ஆம் திகதி எனது மகனை கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். நாங்கள் எல்லா இடங்களும் அலை அலை என்று அலைந்து திரிஞ்சம். பொலிஸ், ஆமி, நேவி என்று எல்லா இடமும் போய் கேட்டும் எங்கட பிள்ளையை தாங்கள் பிடிக்கயில்லை எண்டு சொல்லியினம். ஆனால் எங்கட வீடுகளுக்கு வந்த சி.ஐ.டீமார் இவ்வளவு காசு தந்தால் பிள்ளையை எடுத்து தருவம் எண்டு சொன்னாங்கள். கருனான்ட ரீமில உள்ளவர்கள் சொன்னார்கள் உங்கட பிள்ளையை நேவிதான் பிடித்தது. இவ்வளவு காசு தந்தால் பிள்ளையை எடுத்து தரலாம் எண்டு அதனால காசும் கொடுத்தோம். ஆனால் எங்களுக்கு எந்த விதமான பலனும் கிடைக்கயில்லை. நாதன், சுரங்க என்ற கருணா குழவைச் சேர்ந்த 2 பேர் என்னட்ட மட்டும் இல்ல எங்கட எல்லாருட்டயும் காசு தந்தால் பிள்ளைகளை விடுவிக்கலாம் என்று சொன்னதனால் பல லட்சம் ரூபாய் கொடுத்து விட்டோம். வாங்கியவர்களை அடையாளம் காட்டுகிறோம். தொலைபேசி இலக்கங்களை தருகிறோம் என்டு சொல்லியும் யாரும் நடவடிக்கை எடுக்ககிறதா தெரியவில்லை.


தமிழ் கைதிகள் மீது சிங்களக் குண்டர்கள் தாக்குதல்.

சிறீலங்கா அரசின் வாவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மேற்கொண்ட உண்ணாநிலை போராட்டத்தின் மீது சிறீலங்கா அரசின் சிறைக்காவலர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை தொடர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்த சிறீலங்கா அரசு, அண்மையில் நான்கு கைதிகளை அனுராதபுரம் சிறைக்கும் மாற்றியிருந்தது.
சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வவுனியா சிறையில் உள்ள 200 இற்கு மேற்பட்ட கைதிகள் கடந்த வெள்ளிக்கிழமை (13) உண்ணநிலைப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் கைதிகளின் இந்த ஜனநாயகப் போராட்டத்தின் மீது சிறீலங்கா சிறை அதிகாரிகளும், சிங்களக் காடையர்களும் மேற்கொண்ட தாக்குதலில் பல தமிழ் கைதிகள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் அகிலன் (29) என்பவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

14 மே 2011

போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக பல நாடுகளில் வழக்கு.

அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கெதிராக 30 நாடுகளில் வழக்குகளைத் தொடர்வதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கெதிரான வழக்குகளைத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது.
தற்போதைக்கு மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மட்டுமன்றி ஆசியாக்கண்டத்தின் சில நாடுகளிலும் அவ்வாறான வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகள் பிரஸ்தாப அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள் சிலரும், நிதி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பலவும் அவர்களுக்கான ஆதரவை வழங்க முன்வந்துள்ள அதே வேளை, ஆரம்ப கட்டமாக இலங்கையின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஒரு சில நாடுகளில் தற்போதைக்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வலிகாமத்தில் பல கிராமங்கள் படைகள் வசம்.

யாழ்மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் 26 தமிழ் கிராமங்களை சிறீலங்கா இராணுவத்தினர் கையகபப்படுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த சிறீலங்கா அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் சகோதரருமான பசில் ராஜபக்சா வடக்கில் உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லை என தெரிவித்திருந்தார்.
நாடு முழுவதும் அமைதிவலையம் எனவும் அவர் பொய்யுரைத்திருந்தார். ஆனால் யாழ் மாவட்டத்தில் உள்ள வலிகாமம் பகுதியில் 26 கிராமங்கள் சிறீலங்கா படையினர் வசம் உள்ளன. அங்கிருந்து 17,108 குடும்பங்களைச் செர்ந்த 43,700 தமிழ் மக்களை சிறீலங்கா அரசு துரத்தியுள்ளது.
எனினும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பலர் வெளிநாடுகளிலும் வாழ்வதால் அதன் எண்ணிக்கை 70,000 ஆக இருக்கும் என நம்பப்படுகின்றது. இந்த பகுதிகளில் படையினரால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அவர்களே அகற்றுவதற்கு 8 வருடங்கள் எடுக்கும் என சிறீலங்கா அரசு தெரிவிப்பதால் தாம் தமது வீடுகளை மீண்டும் பார்க்க முடியாது போகலாம் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலையத்தின் எல்லைகளில் உள்ள 13 கிராமங்களில் மீள்குடியேற்றங்களை மேற்கொள்வதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளபோதும், அந்த பிரதேச மக்களும் மிகப்பெரும் நெருக்கடிகளை சந்தித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவது நோர்வேயின் நீண்டகால வரலாறு.

விடுதலைப்புலிகளை நோர்வேக்கு அழைத்துவந்து, அவர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்கும் பணிகளை சிறீலங்காவில் உள்ள நோர்வே தூதரகம் இரகசியமாக மேற்கொண்டிருந்ததாக நோர்வேயை தளமாகக் கொண்ட நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பல வருடங்களாக நோர்வே இந்த பணியை இரகசியமாக முன்னெடுத்து வந்துள்ளது. கொழும்பில் பணியாற்றிய நோர்வே இராஜதந்திரிகள் 12 விடுதலைப்புலிகளுக்கு அரசியல் புகலிடம் வழங்கியுள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு விரைவாக நுளைவு அனுமதிகளை வழங்கி, அவர்களுக்கு தேவையான விமானச்சீட்டையும் நோர்வே தூதரகமே பெற்று, அவர்களை தமது வாகனத்தில் விமானநிலையத்திற்கு கொண்டு சென்று விமானத்தில் ஏற்றிவிட்டுள்ளனர்.
இது இரு நாடுகளினதும் உறவுகளை பாதிக்கும் என நோர்வேயின் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஆனால் ஆபத்துக்களை சந்திக்கும் மக்களுக்கு உதவுவது நோர்வேயின் நீண்டகால வரலாறு என நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரும், சமாதான நடவடிக்கைகளின் முன்னாள் அனுசரணையாளருமான எரிக் சொல்கெய்ம் தெரிவித்துள்ளார்.
நாம் அமைதி முயற்சிக்கான அனுசரணையாளர்களாகச் செயற்பட்டோம். எமது பணிகளில் மனிதாபிமானப் பணிகளும் அடங்கும். எனவே மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் தவறில்லை. சிறீலங்காவில் மக்கள் துன்புறுத்தப்படுவது அதிகம். போரின் இறுதி நாட்களிலும் அங்கு மோசமான வன்முறைகள் இடம்பெற்றிருந்தன என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மே 2011

மே பதினெட்டில் அனைத்து தமிழ் அமைப்பினரும் ஒன்று சேர்கின்றனர்.

தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாக அமைந்த முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போதான 40,000ற்க்கும் மேற்பட்ட தமிழர்களின் படுகொலையை நினைவுகூர நாடு கடந்த அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று வட அமெரிக்காவின் அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் நாடு கடந்த அரசோடு கரம் கோர்த்து செயலாற்றுகின்றன. நாடுகடந்த அரசு, அமெரிக்க தமிழ் அரசியல் விவகார அமைப்பு, கனடியத் தமிழ்க் காங்கிரஸ், கனடிய தமிழ் தேசிய மக்களவை, இலங்கைத் தமிழர் சங்கம், நாம் தமிழர் இயக்கம் - வட அமெரிக்கா, உலகத் தமிழ் அமைப்பு அமெரிக்கா, ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு, இனப்படுகொலைக்கெதிரான தமிழர் அமைப்பு என சகல அமைப்புகளும் ஒரே குரலில் தமிழர்களின் வேதனைகளை உலகிற்கு ஓங்கிச் சொல்ல முடிவெடுத்துள்ளன.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் குழு வெளியிட்ட அறிக்கையில் இந்த இனப்படுகொலை மனித குலத்திற்கும் சர்வதேச சட்டங்களிற்கும் எதிரான ஒரு கோர வன்முறை எனச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபை இந்தப் படுகொலையைத் தடுக்கத் தவறி விட்டது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.ஈழத்தில் வாழும் தமிழர்களின் குரல் அடக்குமுறைகளாலும், மிரட்டல்களாலும் அடக்கப்பட்டுள்ள இப் பொழுதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களின் குரலாக எமது விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் காத்திரமான பங்களிப்பை செய்யவுள்ளதாக மேற்படி அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் சார்பாகவும் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 18ம் திகதி புதன்கிழமை காலை 10 மணியிலிருந்து 4 மணி வரை ஐ.நாவிற்கு முன்னால் நீதி வேண்டிய போராட்டமும், இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரை மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி நிகழ்வும் அதே இடத்தில் இடம்பெறும்.

இப்படி ஒரு ஈனத்தமிழன் சுவிசில் இருப்பது உண்மையா?

புலிப் பயங்கரவாதிகளை அழித்ததற்கு நன்றி தெரிவித்து, சுவிற்சர்லாந்தில் இருந்து தமக்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு- நேற்று (11-05-2011) அறிவித்துள்ளது.
சூசை அருளானந்தம் என்ற பெயரில் இந்தக் கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, அந்தக் கடிதத்தில் விடுதலைப் புலிகளை அழித்ததற்கு, போர்க்குற்ற நபர்களான சிறீலங்கா அரச அதிபரும், முப்படைத் தளபதியுமான மகிந்த ராஜபக்ச, மற்றும் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச ஆகியோருபக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உண்மையில் இவ்வாறான ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அப்பால், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையும், அதனைத் தொடர்ந்து கிலிகொண்டுள்ள சிறீலங்கா அரசாங்கமும், குறிப்பிட்ட கடிதத்தை ஒரு செய்தியாக்கி வெளியிட்டதன் பின்னணி என்ன என்பது பற்றி புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆராய வேண்டும்.
உண்மையில் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தால், அனுப்பியவர் ஒரு ஈழத்தமிழனா? அல்லது ஈனத்தமிழனா என்பதையும் கண்டறிய வேண்டும். சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு தமக்கு கிடைத்ததாகக் கூறி வெளியிட்டுள்ள கடிதத்தின் தமிழாக்கம்:
மேன்மை தங்கிய சிறீலங்கா அரச அதிபருக்கு,
அன்புள்ள ஐயா, அருளானந்தம் ஆகிய நான் மன்னாரில் பிறந்து, பின்னர் கந்தானை நாகொடவில் வசித்திருந்தேன். திரு. ஜோர்ஜ் ராஜபக்ச மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்தில் நான் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி இருக்கின்றேன். 66 அகவையுடைய நான் தற்பொழுது சுவிசில் வசித்து வருகின்றேன். பயங்கரவாதிகளிடம் இருந்து எனது சகோதரர்களையும், சகோதரிகளையும், உறவினர்களையும் மீட்டதற்காக நன்றி தெரிவிக்கும் நோக்கில் இந்த உளமார்ந்த மடலை வரைகின்றேன். கடந்த அரசாங்கங்களால் செய்ய முடியாது எனக் கூறியதைச் செய்துமுடித்த படையினக்கும், உயிரிழந்த வீரர்களுக்கும், கால்களை இழந்த வீரர்களுக்கும் எனது தலைசாய்த்த வணக்கங்கள். மிக்க நன்றி ஐயா, தாங்கள் ஒருவர்தான் இந்தப் பணியைச் செய்து முடிக்கும் சக்தி கொண்டவர். நீங்கள் உங்கள் கடமையைச் செய்துள்ளீர்கள். ஐரோப்பாவில் வாழும் குட்டிநாய்களைப் பற்றி அசட்டை செய்ய வேண்டாம். குரைக்கிற நாய் கடிக்காது. எனது அம்மா எனக்கு தமிழில் சொல்வார், எப்பொழுது நாய் குரைக்கின்றதோ அது ஒன்று செய்யாது என. அத்துடன், உங்களது இந்த சிறந்த பணிக்கு உதவிய திரு. கோட்டாபய ராஜபக்சவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். வாழ்த்துக்கள் ஐயா. ஏனது இதயம் நிறைந்த தலைசாய்த்த வணக்கங்கள். நான் இப்பொழுது நிம்மதியாகச் சாக முடியும், காரணம் எனது ஒருயொரு வாழ்நாள் கனவை நீங்கள் நிறைவேற்றி இருக்கின்றீர்கள். அதுதான் புலிப் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட, எப்பொழுதும் எதனையும் ஏற்றுக்கொள்ளாத அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றியுள்ளீர்கள். நான் ஐயா தங்கள் உண்மையுள்ள, சூசை அருளானந்தம்

சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள கடிதத்தின் ஆங்கில வடிவம்:
Hon. President of Sri Lanka, Dear Sir, I am Arulanantham a Sri Lankan born at Mannar lived at Nagoda Kandana and worked at the Fisheries Horbour corporation when Mr.George Rajapakse was the Minister of fisheries. I am now 66 years of age living in Switzerland. Through this e-mail comes my sincere thanks for saving my brothers and sisters and my relatives from the terrorist. I also wish to salute our heroes who lost their lives and limbs in this mission which was declared impossible by those past Governments.Thank you very much Sir, you are the one who had the courage to do this job, and you have done your duty. Forget about the tiger pups living in Europe. The barking dogs don’t bite. My mother use to tell this in Tamil, “When the dog barks it doesn’t kill the Cow”. I also wish to thanks Mr. Gothabaya Rajapakse who assisted you in this wonderful job. Well done Sir, my heartfull salute for you. I can die now peacefully. Soosai Arulanantham.
Thank you very much Sir, you are the one who had the courage to do this job, and you have done your duty. Forget about the tiger pups living in Europe. The barking dogs don’t bite. My mother use to tell this in Tamil, “When the dog barks it doesn’t kill the Cow”. I also wish to thanks Mr. Gothabaya Rajapakse who assisted you in this wonderful job. Well done Sir, my heartfull salute for you. I can die now peacefullyBecause you have fulfilled my only dream in my life. That is saving the Tamils from the tiger terrorists and the politicians selected by the same terrorists who will also play the same disk, and they will be never satisfied.
நன்றி :eelamdaily

ஸ்ரீலங்கா தூதுவரின் கூட்டத்தில் தமிழ் வர்த்தகர்கள்

கனடாவுக்கான சிறீலங்கா தூதுவர் கரு.பரணவிதாணா நடத்திய வர்த்தகசபைக் கூட்டத்தில் கனடாவைத் தளமாகக் கொண்ட பல தமிழ் வியாபாரிகள் கலந்துகொண்டது புலம்பெயர் தமிழ் மக்களிடம் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடனாவின் ரொறொன்டோ பிரதேசத்தின் மார்க்கம் பகுதியில் உள்ள சரட்டன் ஆடம்பர விடுதியில் கடந்த 30 ஆம் நாள் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தது. அதில் கனடாவுக்கான சிறீலங்கா தூதுவர் கரு பரணவிதான மற்றும் துணைத்தூதுவர் ஹெரத் ஆகியோருடன் பெருமளவான தமிழ் வியாபாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சபையின் தலைவராக பணியாற்றி வந்த தமிழரான குல செல்லத்துரை கூட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றியிருந்தார். எனினும் ஓய்வுபெற்றுச் செல்லும் செல்லத்துரையின் இடத்திற்கு மற்றுமொரு தமிழரான கணேசன் சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அந்த குழுவில் றொசான் நவரட்ணம் உட்பட பல சிங்கள இனத்தவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் உள்ள தமிழ் மக்களின் எழுச்சிகளை அடக்குவதற்காக 1990ஆம் ஆண்டு இந்த சபையை சிறீலங்கா அரசு மிகவும் தந்திரமாக அமைத்திருந்தது.

11 மே 2011

சூடானைப்போல் ஒரு தீர்மானம் இலங்கையிலும் ஏற்படுத்த அமெரிக்காவிடம் வலியுறுத்தப்படுகிறது.

சூடானில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை போன்றதொரு தீர்மானத்தை சிறீலங்கா விடயத்திலும் கொண்டுவருவது தொடர்பில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் த ஐலன்ட் நாளேடு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எதிர்வரும் 18 ஆம் நாள் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தயாராகி வருகின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பே ஏற்பாடு செய்துள்ளது. ஐ.நாவுக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை பான் கீ மூனுக்கு கொடுப்பதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முயன்று வருகின்றனர்.
தடைசெய்யப்பட்ட இராசாயண ஆயுதங்களை பயன்படுத்தியமை.
40,000 மக்களை படுகொலை செய்தது.
தமிழ் மக்களையும், முன்னாள் விடுதலைப்புலிகளையும் துன்புறுத்தியமை.
தமிழ் பெண்களையும், விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளையும் கூட்டமாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியமை.
நீதிக்குப்புறம்பான படுகொலைகள்.
போன்றவற்றையே புலம்பெயர் தமிழ் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேசயம், சூடானில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை போன்றதொரு தீர்மானத்தை சிறீலங்கா விடயத்திலும் கொண்டுவருவது தொடர்பில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றது.
அதற்கான அழுத்தங்களை தமிழ் மக்கள் அமெரிக்க அரசுக்கு ஏற்படுத்தி வருகின்றனர். ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடந்த தேர்தலில் ஒபாமாவை வலுவாக ஆதரித்த அமைப்பாகும். என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமளிப்போம் ஆனால் விளக்கமளிக்க மாட்டோம் சிங்களத்தின் முரண்பாடுகள்.



இலங்கையின் வடபகுதியில் இடம் பெற்ற யுத்தம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கீ மூனுக்கு விளக்கமளிக்கப்படும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.எனினும் இலங்கையின் யுத்தக் குற்றச் சாட்டுகள் தொடர்பிலான தருஸ்மன் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று ஊடக பிரதானிகளுடன் இடம் பெற்ற சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான அறிக்கையில் இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதையே அரசாங்கம் இலக்காக கொண்டிருந்தது. இறுதி யுத்தம் நடைபெற்ற போது,பாதிக் கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சின்னத்துடனான கப்பல் ஒன்று கோரப்பட்டது. எனினும் ஐக்கிய நாடுகள் சபை இதனை வழங்கவில்லை.எனினும் அரசாங்கம் அந்த பணிகளை சிறப்பாக மேற் கொண்டது.
எமது அரசாங்கம் மாறினாலும், சர்வதேசத்தின் அழுத்தங்கள் தொடர்ந்தும் காணப்படும் என்றார்.மேலும் தம்மால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,இந்தக் குழு முழுமையான அறிக்கை ஒன்றை வழங்கும் பொருட்டு, காலத்தை நீடிக்குமாறு கோரியுள்ளது.
எனினும் தற்போது இந்த ஆணைக்குழு இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 7 அமைச்சின் செயலாளர்கள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்திய விசேட குழுவொன்று இலங்கைக்கு வருவதாக தெரிவித்துள்ள போதும் அந்தக்குழு தற்போதைக்கு இலங்கை வராது என்றார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்புக்கள் குறித்து கருத்துரைத்த ஜனாதிபதி, இரண்டு தரப்பின் இணக்கப்பாடு தொடர்பிலும் பொது செனட்சபை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த யோசனைகள் குறித்து ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் பேசவுள்ளோம். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு கட்சியில்லை.
விடுதலைப்புலிகள் கோரியதை ஒரு போதும் வழங்க முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பீரிஸின் முரண்பட்ட கருத்து:
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அந்த அறிக்கைக்கு அரசு பதில் அளிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
யதார்த்த நிலை குறித்து ஐ.நா.பொதுச் செயலாளருக்கு அரசு விரைவில் விளக்கம் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.நேற்றுக் காலை அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் உடனிருந்தனர்.
அப்போது ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் பீரிஸ், நிபுணர் குழுவின் அறிக்கைக்குப் பதில் அளிக்கப் போவதில்லை என்ற அரசின் இறுதி முடிவு பற்றித் தெளிவுபடுத்தினார். ”தஸ்ருமன் அறிக்கைக்குப் பதில் அளிப்பதை விடுத்து, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செய்யும் நற்பணிகள் குறித்தும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசு செய்துவரும் மனிதாபிமானப் பணிகள் குறித்தும் ஆதாரபூர்வமான அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு அதன் செயலாளர் நாயகம் ஊடாக அனுப்பி வைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்து வருகிறோம்” என்றார் அமைச்சர்.
தருஸ்மன் அறிக்கை ஒரு தலைப்பட்சமான அறிக்கை என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.இந்த அறிக்கை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பீரிஸ் பதில் அளிக்கையில், “நாம் இந்தியாவுடன் பேசி வருகிறோம். இந்தியா எங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை” என்றார்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை நிராகரித்த கோத்தபாய.

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கான வாய்ப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவு தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பதற்கு அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை 'நாங்கள் அந்தக் கட்டத்தைத் தாண்டி விட்டோம்'என்று கூறி பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்ச நிராகரித்து விட்டுள்ளார்.
போர் பிராந்தியத்திற்கு செல்ல சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கோரப்பட்ட அனுமதியும் மறுக்கப்பட்டிருந்ததாக கசிந்த விக்கி லீக்ஸ் ஆவணம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் மறுபடியும் மறுபடியும் மறுத்து வருகிறது.
இலங்கையின் உள்நாட்டுயுத்தம் மே 2009 இல் முடிவுக்கு வந்தது.
'போராளிகள் எந்த நிபந்தனையுமின்றி நடுநிலையான ஒரு மூன்றாம் தரப்பினரிடம் சரணடையத் தயாராக இருக்கிறார்கள் என்று 2009 மே 16ஆம் திகதி கே.பி என அழைக்கப்படுகின்ற செல்வராசா பத்மநாதன் என்பவரிடமிருந்து தனக்குத் தொலைபேசி அழைப்புக் கிடைத்ததாக நோர்வேத் தூதுவர் அமெரிக்கத் தூதுவருக்கு தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது என நோர்வேஜியப் பத்திரிகையான Aftenposten தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தூதுவர் இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்ட போது, தங்களுடைய அலுவலர்கள் சரணடைவதற்கு மத்தியஸ்தம் வகிக்க இராணுவ ஹெலிகொப்டர்களில் மோதல் பிரதேசத்திற்குச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்று அது தெரிவித்ததாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு செயலர் கோட்டாபேய ராஜபக்ச முதலில் இதற்கு உடன்பட்டதாகவும், அதற்கு முதல் சரணடைய விரும்பும் போராளிகளுடைய பெயர்கள் தனக்குத் தேவை என அவர் கேட்டதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் தலைவராக இருந்த போல் கஸ்ரெல்லா தெரிவித்ததாகவும் அவ்வாவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் போராளிகளால் அவ்வாறான ஒரு பெயர்ப்பட்டியலைக் கொடுக்காததால் நோர்வேயால் சாதகமான முயற்சிகள் எதனையும் இது தொடர்பில் எடுக்க முடியாமல் போய் விட்டது என்றும் அவ்வாவணம் குறிப்பிடுகிறது.
ஏராளமானோர் இறந்தும் காயப்பட்டும் இருந்த போர்ப்பிராந்தியத்துக்கு உதவி புரியச் செல்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் மீளவும் மீளவும் நிராகரித்து வந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதி வழங்குவதை கடுமையாக மறுத்து வந்தார் என்றும் அக்குறிப்புக்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

10 மே 2011

தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பஷில் ராஜபக்ஷ.

வெளிநாடுகள் இலங்கை மீது சுமத்தும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்குத் வெறும் டொலர்களுக்காகவோ சுயலாபங்களுக்காகவோ துணை போகாதீர்கள். அறிக்கைகள் விட்டோ, வேறு வழிகளிலோ வெளிநாடுகளின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் அது உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும் என்று தமிழர்களை எச்சரித்துள்ளார் பஸில் ராஜபக்ஷ.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கில் மேலும் சில பகுதிகளில் நேற்று மீள்குடியமர்வு இடம் பெற்றது. 9 கிராமசேவகர் பிரிவுகளில் 3,000 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. அமைச்சர்கள் பஸில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், அ.விநாயகமூர்த்தி, சி.சிறிதரன், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சில்வெஸ்திரி அலென்ரின் மற்றும் யாழ். மாநகர முதல்வர் ப.யோகேஸ்வரி ஆகியோர் இந்த மீள் குடியமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். மக்களின் மீள்குடியமர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேற்கொண்டிருந்தார்.
மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளை அடுத்து மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 20 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணுக்கும் வீடுகளுக்கும் சென்ற மக்கள், உணர்ச்சிப் பெருக்கோடு காணப்பட்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பஸில், நாட்டின் எப்பகுதியிலும் பாதுகாப்பு வலயம் என்ற ஒன்று இல்லை; சமாதான வலயங்களே இல்லை என்கிற ஜனாதிபதியின் செய்தியுடனேயே தான் இங்கு வந்திருக்கிறார் என்று தெரிவித்தார். எதிரிகள் எவரும் இல்லாத காரணத்தால் ஒரே நாட்டில் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ்வதால் பாதுகாப்பு வலயங்களுக்குத் தேவை ஏதும் இல்லை என்றார் அவர்.
"மீண்டும் எதிரிகளுக்கு இடமளிக்கும் வகையில் வெளிநாட்டுச் சக்திககளுக்கு ஊக்கமளிக்கக்கூடாது. வெளிநாட்டின் உதவியுடன் வந்த ஒப்பந்தத்தால் இந்த நாட்டில் சமாதானம் வரவில்லை. 30 வருடங்களின் பின்னர் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுத்தான் இந்த மண்ணை இன்று உங்களிடம் கையளிக்கிறார்கள். இங்கு மீளக்குடியமரும் மக்கள் வெளிநாடுகள் திணிக்கும் தவறான குற்றச்சாட்டுக்களுக்கு துணைபோகக் கூடாது. அது அழிவுக்கே வழி ஏற்படுத்தும் என்று அமைச்சர் பஸில் கூறினார்.
இந்தப் பகுதியில் மீள்குடியமர்வை நீண்டகாலத்துக்கு முன்பே செய்வதற்குத் திட்டமிட்ட போதும் சிலரின் சதி வேலை காரணமாக அது சாத்தியப்படாமல் போனதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால் அந்தச் சிலர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடனிருந்தார்.

பொதுமக்களை நிர்ப்பந்தித்து கையெழுத்து வேட்டை,மாவை சேனாதிராஜா கண்டனம்.

தமிழ் மக்களின் விருப்பத்துக்குமாறாக, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பிரதி அமைச்சர் ரத்நாயக்கா தலைமையிலான குழுவினர் பொதுமக்களை நிர்ப்பந்தித்து கையொப்பம் பெற்றமை ஜனநாயக விரோதமான செயற்பாடாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் மாவை சேனாதிராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதியமைச்சர் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் யாழ்.நகர வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றமை கவலைக்குரியதாகும்.
நிபுணர் குழு அறிக்கையைத் தமிழ் மக்களின் சார்பில் வரவேற்பாதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் கருத்துக்கு மாறாக வெளியிடங்களில் இருந்து வந்து கையொப்பத்தை பெறுவது மக்களின் உண்மையான கருத்தை வெளிப்படுத்தாது.இந்தச் சம்பவம் படையினர், காவற்துறையினர் ஆகியோரின் பிரசன்னத்துடன், நிர்ப்பந்தத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
இது ஒரு ஜனநாயக விரோதச் செயற்பாடு. கருத்துக்களை சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் வெளிப்படுத்துவதே நியாயமானது. மக்களை நிர்ப்பந்தித்து கையொப்பம் பெற்ற இந்தச் செயலை நாம் கண்டிப்பதுடன், இந்த நடவடிக்கைக்கு துணை போக வேண்டாம் என இங்குள்ள நிறுவனங்கள், அமைப்புகளை வேண்டுகிறோம் என மாவை சேனாதிராஜா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

09 மே 2011

சிதம்பரத்தின் மனைவியுடன் தொடர்பிலிருந்த மகிந்த!

இந்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஊடாக புலிகள் குறித்த விபரங்களைத் திரட்டுவதற்காக மகிந்த, அவரது மனைவியைக் கையுக்குள் போட்டு வைத்திருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்ட போர் நடைபெற்றவேளை, புலிகளின் மனநிலை குறித்து அறியவும், அவர்கள் நிலைப்பாடு மற்றும் சில உள்ளக தகவல்களைத் திரட்ட மகிந்த ராஜபக்ஷ இந்திய அமைச்சர் சிதம்பரத்தை பயன்படுத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் சிதம்பரத்தின் மனைவியான நளினியுடன் நெருங்கிய நட்புறவைப் பேணியதோடு, அவர் பெயரில் இருந்த நளினி தொழில் நிலைக்கூட்டு நிறுவனத்திற்கு இலங்கையின் எரிபொருள் அகழ்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளார் என அறியப்படுகிறது.
நளினி கூட்டு நிறுவனம் அதன் உரிமையை பல கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு ரஸ்யாவிற்கும், மலேசியா ஊடாக சீனாவிற்கும் விற்றதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் செய்திகள் இந்தியாவில் இருந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும். ஸ்பெக்ரம் ஊழல் தொடர்பாக ராசா அவர்கள் கைதான நிலையில், தற்போது காங்கிரஸ் அமைச்சர் ப.சிதம்பரத்தின் வண்டவாளங்களும் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்டப் போரில் தாம் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர முயல்வதுபோல சிதம்பரம் நாடகமாட, அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் தனது கள்ளத் தொடர்பான கனிமொழியோடு சேர்ந்து, போதாக்குறைக்கு காஸ்பர் அடிகளாரையும் இணைத்து பெரும் நாடகம் ஆடினர்.
புலிகளின் அரசியல் தலைவர்களான, ப.நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். அதன்மூலமாக அவர்கள் பல விடையங்களை தெரிந்து அதனை சிதம்பரமூடாக மகிந்தவுக்குச் சொல்லுயும் உள்ளனர். இதற்காகவே மகிந்தர் இலங்கையில் எரிபொருள் அகழ்ந்தெடுக்கும் உரிமையையும் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட மஹிந்த அரசாங்கம் காங்கிரஸ் அரசில் உள்ள பல இராஜதந்திரிகளுக்கு முதலீடுகளுக்கு இலங்கையில் நீண்டகால குத்தகைக்கு காணிகள் வழங்குதல், கறுப்புப் பணத்தை முதலீடாக மாற்றுதல், சீனா மற்றும் பல நாடுகளில் தொழில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய உதவிகளை செய்து வருகின்றமையும் தற்போது தெரியவந்துள்ளது.

தென்னாபிரிக்கா பக்கம் திரும்புகிறது பார்வை.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு ஆதரவாக ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தென்னாபிரிக்காவின் ஆளும்கட்சி வெளியிட்டுள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் கவனம் தென்னாபிரிக்கா மீது திரும்பவுள்ளது.
ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் அறிக்கையால் விசனமடைந்துள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக தென்னாபிரிக்காவுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இராஜதந்திர முனையில் ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு கூட்டிணைவான மூலோபாயம் ஒன்று தேவைப்படுவதாக சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.
தாம் விரைவில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசுக்கு நிலைமைகளை விளக்குவோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே, தென்னாபிரிக்காவின் ஆளும்கட்சியான ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பிரிட்டோரியாவில் உள்ள தமது தூதுவர் டி.விஜேசிங்கவிடம் இருந்து விளக்க அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளது.
இந்த அறிக்கையைத் தாம் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் ஐ.நா அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவில் இருந்து ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியிடம் இருந்தே ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஐ.நாவுக்கு எதிராக யாழில் சிங்களவர்கள் ஊர்வலம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக தமிழ் மக்கள் செறிந்துவாழும் யாழ் நகரப்பகுதியில் சிங்கள காடையர்கள் நேற்று (08) ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த ஊர்வலத்தில் சிறீலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுப்பிரிவினரும் கலந்துகொண்டிருந்தனர். ஊலவம் சென்ற பாதையால் சென்ற தமிழ் மக்களை வழிமறித்த சிங்கள காடையர்கள், ஐ.நாவுக்கு எதிரான மனுவில் கையொப்பங்களை இடுமாறு மிரட்டி கையொப்பங்களை சேகரித்து சென்றுள்ளனர்.
கையொப்பம் இட மறுத்தவர்களை சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்தியுள்னர். கத்தோலிக்க மதகுருவும் மிரட்டப்பட்டுள்ளார். ஐ.நாவுக்கு எதிராக நடைபெற்ற ஊர்வலத்தில் தென்னிலங்கையில் இருந்த வந்த 50 தொடக்கம் 80 வரையிலான சிங்கள காடையர்கள் பங்குபற்றியிருந்தனர்.
வேம்படி வீதியால் சென்ற இந்த ஊர்வலத்தை கண்ட தமிழ் மக்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு தப்பியோடியபோதும், பேரூந்துக்காக காத்து நின்ற தமிழ் மக்களை மிரட்டி அவர்கள் கையொப்பங்களை பெற்றுள்ளனர்.
சில இடங்களில் கையொப்பம் இடமறுத்தவர்கள் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர் என அவை மேலும் தெரிவித்துள்ளன.

08 மே 2011

வன்னியில் சிங்களத்தின் கோரத் தாண்டவம்!(படங்கள் கொடூரமானவை)

போரில் காயமடைந்து, மயக்கமுற்ற நிலையிலும் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சிக்கிய சில பெண் போராளிகளை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்தி அவர்களின் தலைகளை வெட்டி துண்டித்துள்ளது. சர்வதேச போர் மரபுகளுக்கு அப்பால், ஒரு மனிதநேயம் இல்லாமல் தம்மிடம் சிக்கிய பெண் போராளிகளைக் கொடுமைப் படுத்திக் கொண்றுள்ளது இலங்கை இராணுவம். சில பெண்களின் மார்பகங்களை வெட்டி துண்டாடியுள்ளது . போர் முனையில் காயமடைந்து துரதிஷ்டவசமாக இராணுவத்திடம் மாட்டிக்கொண்ட பெண்போராளிகளை, மரியாதையோடு நடத்தவேண்டாம் நன்றிபடுத்தாமல் இருந்தாலே போதும். ஆனால் இலங்கை இராணுவமோ அதனைக் கூட விட்டுவைக்கவில்லை.
பெண்கள் என்று கூடப் பாராமல் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும், சில பெண்களை கொடூரமாகக் கற்பழித்தும் கொலைசெய்துள்ளது இலங்கை இராணுவம். இறந்த பெண் போராளிகளின் சீருடைகளைக் களைந்து, அவர்களை மானபங்கப்படுத்தி அவமதித்து, பின்னர் அதனை மோபைல் போன்களில் வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு காட்டி மகிழ்கிறது இலங்கை இராணுவம். கொழும்பிலும் அதன் புற நகர்ப்பகுதிகளில் உள்ள மதுபாண களியாட்ட இடங்களில், மது அருந்தும் இராணுவத்தினர், அங்கே வரும் தமது நண்பர்களுக்கு பொழுதுபோக்காக இப் புகைப்படங்களை காட்டி சிரித்து மகிழ்கின்றனர். தமிழ் பெண்களை நிர்வாணமாகப் பார்க்க அவர்களது நண்பர்களும் குடிக்கச் செல்கின்றனர்.
இப்படியான ஒரு இனத்துடன் தான் எம்மை சேர்ந்து வாழச் சொல்கிறது உலக நாடுகள். இப்படியான ஒரு இனத்துடன் தான் ஒத்துப் போகச் சொல்கிறது உலக நாடுகள் ! இது சாத்தியமா, ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழுவோ, இலங்கை சென்று வந்தேன் அங்கே இப்போது ஒன்றுமே இல்லை, எல்லாம் வழமைக்கு திரும்பிவிட்டது என்று கூறும் தமிழர்களுக்கு உண்மையாகவே அங்கே என்ன நடக்கிறது என்று தெரிகிறதா ? கேளிக்கை விடுதிகளிலும், களியாட்ட இடங்களிலும் எம் தமிழ் பெண்களின் மானத்தை கப்பல் ஏற்றுகிறது சிங்கள இராணுவம். இன அழிப்பு நாளான மே 18ம் திகதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எமது ஒற்றுமையை உலகிற்கு காட்டவேண்டும். போர் குற்றம் இடம் பெற்ற நாளை நாம் அனைவரும் நினைவு கூர்ந்து அதனை உலகிற்கு பறைசாற்ற வேண்டும் !
இது தொடர்பாக மேலதிகப் புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை நாம் ஆவனப்படுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அனுப்பிவைக்கவும் உள்ளோம். மனித நேய செயல்பாட்டாளர்கள் மற்றும் போர் குற்றம் தொடர்பாக செயல்படும் அமைப்புகள் எங்களிடம் உள்ள புகைப்படங்களப் பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி:அதிர்வு

நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பான ஸ்ரீலங்காவின் பதிலை எதிர்பார்க்கிறோம்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான நம்பகமான விசாரணை நடத்தப்படுவதையே பிரித்தானியா விரும்புவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரும், பிரதி வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை ஐ.நாவின் அறிக்கை உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நாவுக்கு பரிந்துரை செய்ய பிரித்தானிய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது? சிறிலங்கா கொமன்வெல்த் உறுப்பு நாடாக உள்ள நிலையில், போர்க்குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதை ஆதரிக்கிறதா? - என்று கடந்த செவ்வாய்க்கழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் லிபரல் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் சைமன் ஹியூஜெஸ், கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கி, இது ஒரு முக்கியமான விடயம். இந்த அறிக்கையைப் பெறுவதற்கு ஐ.நா பொதுச்செயலருக்கு பிரித்தானிய அரசாங்கம் பலமான ஆதரவை வழங்கியது. இந்த அறிக்கையை நாம் கவனமாக ஆராய்ந்து வருகிறோம்.
அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் இதற்கு என்ன பதில் கூறப் போகிறது என்றும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுபற்றி அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அது தெளிவுபடுத்தும். என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, கடந்த வெள்ளியன்று பொதுச்சபையில் பிரித்தானியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தகவல்வெளியிடுகையில்,
சிறிலங்கா அரசாங்கம நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் மே 15ம் நாள் எதிர்பார்க்கிறோம். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்தப்படுவதையே நாம் விரும்புகிறோம். நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான எமது கரிசனைகளையும் நாம் வெளிப்படுத்தியுள்ளோம். அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் என்ன கூறப் போகிறது என்பதை அனுமானிக்க முடியாது.
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாம் சிறிலங்கா அரசைக் கேட்டுக் கொள்கிறோம். என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நாவுக்கு எதிராக செயற்படக்கூடாது என சீனா,ரஷ்யா அறிவுறுத்தல்.

இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக செயற்படக் கூடாது என சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படக் கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என குறித்த இரு நாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன.
குறிப்பாக நிபுணர் குழு அறிக்கை பிரசூரிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை இடம்பெறலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை அவமரியாதை செய்யும் வகையிலான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்க்க வேண்டுமென சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொள்வது தொடர்பில் தீர்மானிக்க நேரிடும் என இரண்டு பலம்பொருந்திய நாடுகளும் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அரசியல்வாதிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பை விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துக்கள் வெளியிடுவதனை தடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் கொழும்புக் காரியாலயம் மற்றும் அதன் பணியாளர்களுக்கு உச்சளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை கவனத்திற் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

07 மே 2011

ஸ்ரீலங்காவிற்கான உதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்.

ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கைக்கான தனது மனிதாபிமான உதவித் தொகை யை மேலும் 10 மில்லியன் யூரோவினால் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்லவும் அவர்களுக்கான அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிப் படுத்துவதற்காகவும் மேலதிக இந்நிதி அளிக் கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இம் மேலதிக நிதியானது இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மற்றும் இவ்வருட ஆரம் பத்தில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மனிதாபி மான உதவிகளை வழங்கும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஐரோப்பா இலங்கையில் ஆபத்தை எதிர் நோக்கும் சமூகங்களுக்கு பாரபட்சமின்றி தொடர்ந்து சேவையாற்றும். அத்துடன் இந் நாட்டில் நிவாரண உதவிகளுக்கும் நீண்ட கால அபிவிருத்திக்குமான இடைவெளி யைக் குறைப்பதற்காகவும் செயற்படும் என சர்வதேச ஒத்துழைப்பு மனிதாபிமான உதவி மற்றும் நெருக்கடி பதிலளிப்புக்கான ஐரோப் பிய ஆணையாளர் கிறிஸ்டாலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

சுயாதீன விசாரணை தேவை என்கிறது ஆபிரிக்கா.

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என அக்கட்சி கேட்டுள்ளது.
இந்த நிபுணர் குழுவில் யாஸின் சூகா என்ற முன்னணி தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் இடம்பெற்றுள்ளார்.
இலங்கையில் இறுதி கட்ட யுத்தத்தின் சமயத்தில் இலங்கை அரச படையினரும் சரி விடுதலைப் புலிகளும் சரி இருதரப்பாருமே சர்வதேச மனித உரிமை விதிகளையும் மனிதாபிமானச் சட்டங்களையும் மோசமான வகையில் மீறியிருந்தனர் என்று இந்த நிபுணர் குழு முடிவு தெரிவித்திருந்தது.
இந்த சட்டமீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் அமையக்கூடியவை என்றும் அந்த நிபுணர் குழு கூறியிருந்தது.
இந்த நிபுணர்குழுவின் பரிந்துரைகளுக்கு தாங்கள் முழுமையான ஆதரவு தருவதாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தமிழ்ச் சமூகத்தின் முக்கியக் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், அரசாங்கம் உண்மையான ஒரு சமூக நல்லிணக்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கேட்டுள்ளது.

06 மே 2011

ஸ்ரீலங்காவின் போர்க் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நாடுகள்.

சிறீலங்கா இராணுவத்தினரின் பெருமளவான போர்க்குற்றவாளிகளுக்கு ஜேர்மனி, பிரித்தானியா, சுவிற்சலாந்து, மலேசியா, வத்திக்கான் ஆகிய நாடுகள் பாதுகாப்பு வழங்கிவருவதாக மனித உரிமைகளுக்கும், அரசியல் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈ.சி.சி.எச்.ஆர். அமைப்பும் அதன் துணை அமைப்புக்களும் இணைந்து இதனை வலியுறுத்தியுள்ளன.
ஜகத் டயஸ், சிறிலங்கா இராணுவத்தின் 57ஆவது படைப்பிரிவின் தளபதியாக இருந்த காலத்தில் போர்க்குற்றங்களை புரிந்துள்ளார் என்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டிருந்தார் என்றும் 2009ஆம் ஆண்டு நடந்த யுத்தத்தில் இவர் மீது பல
இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரியான ஜகத் டயஸ் என்பவருக்கு ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, வத்திக்கான் ஆகிய நாடுகள் வழங்கியிருக்கும் இராஜதந்திர அந்தஸ்த்தை விலக்கி கொள்ளுமாறு மனித உரிமைகளுக்கும், அரசியல் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் வலியுறுத்தியுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த படுகொலைகளுக்கு ஜயத் டயஸ் முக்கிய பொறுப்பாளி என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இவர் யுத்தம் முடிந்த பின் சிறிலங்கா அரசாங்கத்தினால் பேர்ளினில் உள்ள ஜேர்மன் தூதரகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒருவர் என்றும் மனித உரிமைகளுக்கும் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இவர் ஜேர்மன், சுவிட்சர்லாந்து, வத்திக்கான் ஆகிய நாடுகளின் சிறிலங்கா தூதரகங்களில் பணியாற்றி வருகிறார் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
2011 ஜனவரி மாதம் ஜேர்மன் சமஸ்டி வெளிவிவகார அமைச்சு, சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றிற்கு இவரின் விபரங்களை வழங்கியதாகவும், ஏப்ரல் மாதத்தில் வத்திக்கான் வெளிவிவகார அலுவலகத்திற்கும் இவ்விபரங்கள் வழங்கப்பட்டதாகவும் ஈ.சி.சி.எச்.ஆர். தெரிவித்துள்ளது.
இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் இராஜதந்திர விசாவை உடனடியாக ரத்து செய்யுமாறு தாம் இந்த மூன்று நாடுகளையும் கேட்டிருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நாடுகள் தமது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்த போதிலும் இன்றுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை என மனித உரிமைகளுக்கும் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் இராணுவ அதிகாரி ஜகத் டயஸிற்கு இராஜதந்திர விசா வழங்கப்பட்டிருப்பது ஒரு தந்திரமான நடவடிக்கை என்றும், மிகப்பெரிய மனித உரிமை மீறல்களையும் போர்குற்றங்களையும் புரிந்த ஒருவருக்கு ஜேர்மனி சுவிட்சர்லாந்து வத்திக்கான் ஆகிய நாடுகள் இராஜதந்திர அந்தஸ்த்து வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜகத் டயஸ் தலைமைதாங்கிய 57ஆவது படைப்பிரிவு திட்டமிட்டு ஏறிகணைத்தாக்குதல்களை நடத்தி பொதுமக்களை கொன்றதாகவும், வைத்தியசாலை, தேவாலயங்கள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்களில் எறிகணைத்தாக்குதல்களை நடத்தி 40ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களை கொலை செய்திருப்பதாகவும் அந்த அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
57ஆவது படைப்பிரிவு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்ததற்கான ஆதாரபூர்வமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை நீதியான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் முதல் தடவையாக ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு போர் குற்றம் பற்றி அறிக்கை வெளியிட்டிருப்பதாகவும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவிற்கு மனித உரிமைகளுக்கும் சட்டவாக்கத்திற்குமான ஐரோப்பிய நிலையம் பூணர ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாகவும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றத்திற்கான ஆதாரங்களையும் வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்ட சிரே~;ட இராணுவ தளபதிகளை சிறிலங்கா அரசாங்கம் உலகளாவிய ரீதியில் இராஜதந்திர பிரதிநிதிகளாக அனுப்பவைத்திருப்பதாகவும் ஈ.சி.சி.எச்.ஆர் சுட்டிக்காட்டியுள்ளது.
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியாகவும், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கும், மேஜர் ஜெனரல் உதய பெரேரா மலேசிய தூதரகத்திற்கும், மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி இந்தோனேசியா தூதரகத்திற்கும், மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர எரித்திரியாவுக்கும், ஜயத் டயஸ் ஜேர்மன் சுவிட்சர்லாந்து வத்திக்கான் தூதரகங்களுக்கும் இராஜதந்திர பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என ஈ.சி.சி.எச்.ஆர் சுட்டிக்காட்டியுள்ளது.

பிளேக் தமிழ் மக்களை பிழையாக வழி நடத்தக்கூடாது.

போர் முடிவடைந்தவுடன் உடனடியாகவே இலங்கை அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் என்ற எண்ணத்தை அப்போது ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக் வெளியிட்டு பிரச்சாரப்படுத்தியதனூடாக இந்நாட்டின் தமிழ் மக்களை அவர் தவறாக வழிநடத்தி உள்ளார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்கச் செயலாளராக முன்னர் இருந்த கொண்டலிஸா ரைஸ் மனித உரிமைகளினதும் சுதந்திரத்தினதும் காவலன் என்று மனோ கணேசனை முன்னர் ஒரு முறை பாராட்டியிருந்தார்.
மனோகணேசன் தனது அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது, போர் நடைபெற்ற காலப்பகுதி முழுவதும் பிளேக், 13வது திருத்தச் சட்டம் பற்றியே உபதேசித்து வந்தார். அவர் சென்னைக்கு விரிவுரை ஒன்றிற்காகச் சென்றிருந்த போது கூட இலங்கைச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அவர் 13வது திருத்தச் சட்டத்தையே அரசியல் தீர்வாக வலியுறுத்தினார்.
அன்று அவர் 13வது திருத்தச் சட்டத்திற்குமதிகமான அதிகாரங்கள் பற்றி உத்தரவாதம் வழங்கி இருந்தார். ஐக்கிய அமெரிக்கா போருக்கு ஆதரவளிப்பதனை நியாயப்படுத்தும் நோக்கிலேயே இந்த 13வது திருத்தச் சட்டம் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். இவ்வளவு அழிவுகளும் நடைபெற்று போரும் முடிவடைந்த பின்னரும் கூட இந்நாட்டில் உள்ள தமி;ழ் மக்கள் 13வது திருத்தச் சட்டத்தின் அறிகுறியைக் கூடக் காணவில்லை.
போர் நடைபெற்ற காலப்பகுதி முழுவதும் நாங்கள்பொதுமக்களுடைய பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டே இருந்தோம். மக்கள் கண்காணிப்புக்குழுவில் இருந்த நாங்கள் எங்களுக்கு வந்த உயிரச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கூட சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களுக்கு எதிராகப் போராட்டத்தை நடாத்திக் கொண்டே இருந்தோம். அதன் போது தான் ஐக்கிய அமெரிக்காவின் சுதந்திரத்தைக் காப்பதற்கான விருது எனக்கு அளிக்கப்பட்டது. அப்போது தூதுவராக இருந்த பிளேக் இதற்குக் காரணமாக இருந்தார். இந்த விருது என்னில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. பதிலாக எனக்கு மேலும் அச்சுறுத்தல்களையே கொண்டு வந்தது.
இந்த விருதுக்கான நிகழ்வை நாம் இரத்து;ச செய்தோம். ஆனால் பிளேக் இந்த விருதை தனது அலுவலகத்தில் தனது தனிப்பட்ட அலுவலர் முன்னிலையில் வைத்து கட்டாயப்படுத்தி எனக்கு வழங்கினார். பின்னர் தான் நாங்கள் உணர்ந்தோம் இந்த விருது அவருடைய ஒரு பிரச்சாரத் தாக்குதல் என. ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் தனக்குச் சாதகமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைந்தது. அதேவேளை உண்மையிலேயே அமெரிக்க அரசு பாதிப்பிற்குள்ளான தமிழ் மக்கள் பற்றி அக்கறைப்படவில்லை. போருக்கான அவர்களுடைய ஆதரவு நிபந்தனைகள் எதுவுமற்றதாக இருந்தது.
சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக இறுதி நேரத்தில் போரை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இது வன்னி மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதல்ல. எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைப் பாதுகாப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. மக்களைப் பாதுகாப்பதற்கான காலம் மிகவும் கடந்திருந்தது. மீளத்திரும்ப முடியாத ஒரு கட்டத்திற்குப் போர் சென்று விட்டது. இப்போது இன்னொரு பிரச்சாரப் பணி நடைபெற்று வருகிறது. இது புலம் பெயர்ந்த தமிழர்களைச் சாந்தப்படுத்துவதை நோக்காகக் கொண்டது.
இவையெல்லாவற்றுக்குமப்பால் ஐநா நிபுணர்களின் குழு அறிக்கை இரண்டு விடயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒன்று பொறுப்புக் கூறும் கடப்பாடு பற்றியது.
இரண்டாவது ஒரு அரசியல் தீர்வுக்கான வழிகளைத் திறப்பது பற்றியது.
போர் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், இலங்கைச் சமூகம் இனச்சிக்கலால் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளது. ஒரு உண்மையான அரசியல் தீர்வு ஒன்றினாலேயே இது சரி செய்யப்படக் கூடியது.
போருக்கு நிபந்தனை எதுவுமற்ற ஆதரவை வழங்கியவர்களுக்கு இலங்கைத் தமிழ் சமூகம் குறித்த பொறுப்புணர்வு ஒன்று இருத்தல் அவசியம். ஐக்கிய அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையும் பொதுமக்கள் இழப்பை தவிர்ப்பதில் தீர்மானகரமாகச் செயலாற்றுவதில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். உயிரிழந்தவர்கள் எவரும் திருப்பித் தரப் போவதில்லை.
ஒரேயொரு சாத்தியமான வழி மட்டுமே இப்போது உள்ளது. அது தான் ஒரு நியாயமான அரசியல் தீர்வு.
இது தொடர்பில் சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்துடன் தீர்மானகரமான செயற்பாடுகளில் ஈடுபடல் வேண்டும். ஐக்கிய அமெரிக்காவுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் தனது முன்னைய உபதேசத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நேரம் இதுவே.
அவர் மீளவும் ஒரு முறை தமிழ் மக்களைத் தவறாக வழிநடாத்தக் கூடாது.

05 மே 2011

போர்க் குற்ற விசாரணைகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடையாக விளங்கக் கூடாது.

அன்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு!
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் பற்றிய பொறுப்பிற்கான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்களின் அறிக்கைக்கு பங்கம் விளைத்தக்கதாக எந்த காரணத்துக்காகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படக்கூடாது என்றும், குறிப்பாக, சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைகளும் அந்த காரணங்களுக்குள் அடங்கும் என்றும், ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு வேண்டிக்கொண்டுள்ளது. சர்வதேச ஆணைக்குழு ஒன்று சிறிலங்கா போர்க்குற்றங்களை விசாரணை செய்ய அமைக்கப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
போரின் இறுதிநாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதை இந்த ஐ.நா. அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் பாலியல் வல்லுறவுகள், மருத்துவமனைகளும் பொதுமக்களும் அடையாளம் காணப்பட்டு குண்டுவீசி அழிக்கப்பட்டது, உணவு தடுக்கப்பட்டு மக்கள் பட்டினியால் மரணிக்க செய்யப்பட்டது, மருந்துகள் தடுக்கப்பட்டு மக்கள் இரத்தம் பெருகி இறக்க வழி செய்தது ஆகியவற்றை இந்த அறிக்கை குறிப்பிட்டு காட்டியுள்ளது. மேலும், கற்றறிந்த பாடங்களுக்கும் மீளிணைதலுக்குமான ஆணைக்குழு சுதந்திரமான ஆணைக்குழு அல்ல என்றும் இந்த ஐ.நா. அறிக்கை குறை கூறியுள்ளது. சிறிலங்கா அரசின் கடுமையாள எதிர்ப்புக்கு மத்தியில் பல சர்வதேச நிறுவனங்களின் முயற்சியின் விளைவாகவே இந்த ஐ.நா. அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கிக்கொள்ள வேண்டும்.
சிறிலங்கா அரசுடன் தொடரும் பேச்சுவார்த்தைகளில் சில விட்டுக்கொடுப்புகளுக்கு பதிலீடாக போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படுவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுக்க கூடும் என கருதப்படுகின்றது. சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படுவதை எவ்வாறாயினும் தடுப்பதற்கு சிறிலங்கா அரசு தீவிரமான முயற்சிகளை செய்துவருவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விளங்கிக்கொண்டு, அதற்கு இடங்கொடுக்க கூடாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி, சிறிலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைகளில் செய்யப்படும் எந்தவிதமான விட்டுக்கொடுப்புகளுடனும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய சர்வதேச ஆணைக்குழு அமைக்கப்படுவது சம்பந்தப்படுத்தப்பட மாட்டாது என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
சிறிலங்கா அரசுடன் ஏதாவது உடன்பாட்டை முடிவு செய்தவுடன் சர்வதேச சமுகம் எமது விடயங்களில் இருந்து வெளியேறிவிடும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்து கொள்ளவேண்டும். இதனை தவிர்த்து கொள்வதற்காக, எந்தவிதமான உடன்பாட்டுக்கும் சர்வதேச சமுகம் பிணையாளராக செயற்பட வேண்டும் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விட்டுக்கொடுக்க முடியாத கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். எந்தவிதமான உடன்பாடும், சிறிலங்கா அரசு உடன்பாட்டின் அம்சங்களை நிறைவேற்ற தவறும் போது அதனை கையாள்வதற்கு சர்வதேச சமுகம் சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட உத்தரவாதங்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.
நன்றி.
ஒபாமாவுக்கான தமிழர்கள்:
தமிழ் அமெரிக்கர்களின் ஒரு அரசியல் செயற்பாட்டு குழுவான ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு, ஹில்லரி கிளின்ரனையும், பரக் ஒபாமாவையும் அமெரிக்க மக்களாட்சி கட்சியின் வேட்பாளர் தெரிவிலும் பின்னர் 2008 தேர்தலிலும் ஆதரித்தது. சிறிலங்காவின் உள்நாட்டு போரில் இறுதி வாரங்களில் 70.000 க்கும் அதிகமான தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என நாம் நம்புகிறோம். வெற்றி கொண்ட சிறிலங்கா சிங்களவரின் செயற்பாடுகளை நாம் அவதானித்ததில் இருந்து, இந்த கவலைக்குரிய தீவு இரண்டு நாடுகளாக பிரிவதே தமிழர்கள் அங்கு பாதுகாப்பாக வாழ வழிவகுக்கும் என்ற முடிவுக்கு நாம் வந்திருக்கிறோம்.

போர்க்குற்றம் தொடர்பில் கடமை தவறினால் சர்வதேசம் அதை நிறைவேற்றும்.

இலங்கையில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துங்கள் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறும் கொழும்பு அரசுக்கு அறிவுரை கூறியுள்ளது. இவ்வாறு கொழும்பில் செய்தியாளர்களிடம் அமெரிக்க துணைச்செயலாளர் பிளேக் தெரிவித்தார்.அதுவே நீடித்த அமைதியை ஏற்படுத்த வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவின் துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓபிளேக். மூன்று நாள் பயணமாக இலங்கை வந்த பிளேக் நேற்று அமைச்சர் பீரிஸ் மற்றும் பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட அரச பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.
மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிளேக், தமிழ்ச் சிறுபான்மையினருடன் அரசியல் அதிகாரங்களைக் கொழும்பு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
போர்க் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் விடயத்தில் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை உறுதியளித்திருக்கின்றது என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
எனினும் "உறுதி மொழிகளில் அல்லாமல் செயலில் காட்ட வேண்டும்'' என்றும் பிளேக் தெரிவித்தார்.
உள்ளூர் அதிகாரிகள், போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறும் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறுவார்களாயின், சர்வதேச பொறிமுறை ஒன்றின் மூலம் அதனை நிறைவேற்ற வேண்டிவரும் என்றும் பிளேக் எடுத்துக் கூறினார்.
முதலில் விசாரணைக்கான பொறுப்பை இலங்கை அரசு எடுத்துக் கொள்கிறதா என்பதை அமெரிக்கா கூர்ந்து கவனிக்கும் என்றார் அவர்.

04 மே 2011

வன்னி மக்களிடம் ரகசிய விசாரணை நடத்தியது அமெரிக்கக் குழு.

இராணுவத்தினரும் அவர்களது புலனாய்வாளர்களும் பார்த்துக் கொண்டிருக்க யுத்தகாலத்தில் பொதுமக்கள் அனுபவித்த இன்னல்கள் தொடர்பாக தென்னாசியாவுக்கான அமெரிக்காவின் உதவி வெளிவிகார அமைச்சர் தலைமையிலான குழு இரகசிய இடத்தில் வைத்து பொதுமக்களோடு பேசியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் செய்த மேற்படிக்குழு அங்கு வேலை வாய்ப்புப் பணியகத்திற்குச் சென்று இளைஞர்களிடம் கலந்துரையாடியது.
பின்னர் நடைபெற்ற காலை 11மணியளவில் விவசாயிகளுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமெரிக்காவின்; நிதியுதவியுடன் செயற்படுத்தப்பட்ட சில திட்ங்களை பார்வையிட்டது.
நிகழ்வின் முடிவில் பிரத்தியேகமான இடத்தில் பொதுமக்கள் சிலரை சந்தித்து யுத்தகாலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் கேட்டறிந்தது. இதன்போது அரச அதிகாரிகள் உட்பட எவரும் அனுமதிக்கப்படவில்லை மேலும் இந்த நிகழ்வில் மூக்கை நுழைக்க இராணுவப் புலனாய்வாளர்கள் சிலர் முயற்சித்தபோதும் அது பலிக்கவில்லை.
அமெரிக்க அதிகாரிகள் பொதுமக்களிடம் யுத்தகாலத்தில் மக்கள் எப்படி பார்க்கப்பட்டார்கள்? இராணுவத்தினராலோ புலிகளாலோ மக்கள் யுத்தத்தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டர்களா? புலிகள் மக்களை கேடயங்களாக பயன்படுத்தினார்களா? இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் சென்றபோது எப்படி நடத்தப்பட்டீர்கள்?
போன்ற கேள்விகளும் மீள்குடியேற்றப்பட்டதன் பின்னர் தற்போது மக்கள் எவ்வாறான நிலையிலுள்ளனர்? சுதந்திரமாக நடமாடும் நிலையுள்ளதா? போன்றனவும் கேட்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு விளக்கமளித்த பொதுமக்கள் நடந்த சம்பவங்களை அப்படியே தெரிவித்துள்ளனர்.
மேலும் கண்முன்னால் தங்கள் பிள்ளைகள் சொந்தங்கள் இறந்து போனமை கணவன்மார் பிள்ளைகளை கண்முன்னால் கையளித்தபோதும் அவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறாமை தற்போது முறையான வீட்டுத்திட்ட வசதிகள் கிடைக்கப்பெறாமை வாழ்வாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் தடுப்பிலுள்ள பிள்ளைகள் தொடர்பாகவும்; கூறினார்.
சந்திப்பின் பின்னர் இராணுவப் புலனாய்வாளர்கள்; விளக்கமளித்த பொதுமக்களிடம் என்ன கேட்டார்கள் பேசினார்கள் என கேட்டறிந்தனர். இந்த நிகழ்விற்கு காலையிலிருந்தே பெருமெடுப்பில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்ததுடன் கிளிநொச்சி மாவட்டக் கட்டளைத்தளபதியும் கலந்து கொண்டிருந்தார்.
எனினும் அவர்கள் எவரையும் அமெரிக்காவின் அதிகாரிகள் குழு கண்டுகொள்ளவேயில்லை. அதனோடு யார் நிகழ்வுகளை நடத்தினாலும் அழையா விருந்தாளிகளாக வந்து மேடையில் அமரும் இராணுவத்தினர் வீதிகளில் மட்டும் நின்றனராம்.

ரத்னசிறியை பார்த்தாவது தமிழ் பச்சோந்திகள் திருந்த வேண்டும்.

சிங்கள மக்களின் உணர்வுகளை பிரதிபலித்த ரட்ணசிறி விக்ரமநாயக்கர்போல் எம்மில் உள்ள பச்சோந்தி தமிழ் அரசியல்வாதிகளும் தமது தமிழ் உணர்வுகளை வெளிக்காட்டவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கதிரவன் கலாமன்றம் 35வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்திய மென்பந்து கிறிக்கட்சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
புதுக்குடியிருப்பு கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தனித்துவமிக்க கிராமமாக செயற்படுவது எமக்கு பெரும் மகிழ்ச்சியை தருகின்றது. இந்தக்கிராமத்தில் ஒரு விளையாட்டுகழகம், ஒரு கலைக்கழகம், ஒரு ஆலய நிர்வாகம் இருந்து தனித்தவமாக அனைவரையும் அரவணைத்து செயற்படுவது ஒற்றுமையின் எடுத்துக்காட்டாக இந்தக் கிராமம் உள்ளது.
அத்தோடு இந்த புதுக்குடியிருப்பு மண்ணில் கடந்த 35 வருடமாக இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை தொடர்ந்து நடாத்திவரும் கதிரவன் கலைக்கழகம் பாராட்டப்படவேண்டியது.எவன் ஒருவன் ஒழுக்கத்துடன் கல்வியை சிறந்த முறையில் பெறுகின்றானோ அவன் சமூகத்தில் ஒற்றுமையுடன் ஒழுக்கத்துடன் வாழ்வான்.
இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அரசாங்க தரப்புக்கு தலைமை தாங்கியிருந்த ரட்ணசிறி விக்ரமநாயக்க என்கின்ற சிரேஸ்ட அனுபவம் வாய்ந்த அதிகாரி தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐ.நாவின் அறிக்கைக்கு வரவேற்பு தெரிவித்ததாகக்கூறி அந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பில் நான் உண்மையில் மகிழ்ச்சியடைகின்றேன். அவர் ஒரு சிங்கள அரசியல்வாதியாக உள்ளார். அவர் தனது இனத்துக்கும், நாட்டுக்கும் பிரச்சினைவரும் போது அங்கு அவர் தனது இன, மொழியுணர்வை வெளிப்படுத்துகின்றார். உண்மையில் நான் அதனை பாராட்டுகின்றேன். இதனை சிங்கள மக்கள் ஒரு கவரிமான் போன்று பார்க்கின்றனர்.
இவ்வாறு சிங்கள அரசியல் தலைமைகள் தமது இன, மொழியுணர்வை வெளிப்படுத்தும் போது எம்மில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் சிலர் இன்னும் பச்சோந்திகளாக இருப்பது கவலையளிப்பதாக உள்ளது. இவர்கள் ரட்ணசிறி விக்ரம நாயக்கவிடம் இருந்து பாடம்கற்றுக் கொள்ளவேண்டும்.எந்த சமூகத்தை சேர்ந்தாலும் நாங்கள் சமூகப்பற்று மொழிப்பற்று இனப்பற்று உடையவர்களாக இருக்கவேண்டும். தமிழ் மக்களாகிய நாம் அனைத்து முரண்பாடுகளையும் உதறித்தள்ளிவிட்டு தமிழன் என்ற உணர்வுடன் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே நாங்கள் விடுதலையை பெறமுடியும்,எமது சமூகம் தலைநிமிர்ந்து வாழும்.
இன்று பச்சோந்தியாக உள்ள எமது தமிழ் அரசியல்வாதி நண்பர்கள் ரட்ணசிறி விக்ரமநாயக்காவை பார்த்து திருந்தவேண்டும். தமிழ் உணர்வை வளர்த்துக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
இன்று இலங்கையில் உள்ள சிறைச்சாலையில் ஒரு தமிழ் அரசியல்கைதியொருவர் தன்மீது எதுவித விசாரணையும் இன்றி தடுத்துவைத்துள்ளதை கண்டித்தும் தன் விடுதலைக்கு நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவருகின்றார். அவர் ஐ.நா.வந்து விசாரிக்கவேண்டும் என்று அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை, அல்லது ஐ.நா.அறிக்கையினை ஆதரித்து அவர் உண்ணாவிரதம் இருக்கவில்லை. அவர் தனது விடுதலைக்காகவே இவ்வாறு உண்ணாவிரதம் இருந்துவருகின்றார்.
அதனை தடுத்து நிறுத்தமுடியாத நிலையில், அவருக்கு நீதி கிடைக்காத நிலையிலேயே இன்று தமிழ் இனம் உள்ளது. இதுவே தமிழர்களுக்கும் – சிங்களவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகவுள்ளது. என்றார்.

03 மே 2011

ஒசாமா மீதான தாக்குதலை நேரடியாக பார்த்த ஒபாமா.

அல் குவைதா அமைப்பின்தலைவர் ஒசாமா பின் லேடன் மீதான முற்றுகையை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிரத்தியேக நேரடி ஒளிரப்பு மூலம் வெள்ளை மாளிகையிலிருந்து பார்வையிட்டுள்ளார்.பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்த 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அபோதாபாத்தில் ஒசாமா தங்கியிருந்த பாரிய வீட்டின்மீது அமெரிக்க கடற்படையின் விசேட தாக்குதல் அணியான – கடல், ஆகாய, தரை தாக்குதல் குழு) பாகிஸ்தானின் நேரப்படி நேற்று திங்கட்கிழமை அதிகாலை முற்றுகை மேற்கொண்டது.
தாக்குதலில் பங்குபற்றிய அமெரிக்க படைவீரர்களின் தலைக் கவசங்களில் வீடியோ கமெராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. இதன்மூலம் பெறப்பட்ட ஒளிப்பதிவுகள் செய்மதி ஊடாக வெள்ளை மாளிகைக்கு ஒளிபரப்பப்பட்டன.
அப்போது அமெரிக்காவில் நேரம் ஞாயிறு பிற்பகலாக இருந்தது. இத்தாக்குதல் ஆரம்பிப்பதற்கு சற்றுமுன்னர் வெள்ளை மாளிகயிலுள்ள அறையொன்றில் ஜனாதிபதி பராக் ஒபாமா, உப ஜனாதிபதி ஜோ பிடென், பாதுகாப்புச் செயலாளர் ரொபர்ட் கேட்ஸ், இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் படை உயரதிகாரிகள் சிலர் கொண்ட சிறிய குழுவொன்று ஒன்றுகூடினர்
அந்த அறையிலிருந்து சுமார் 11,000 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் நடைபெறும் தாக்குதல் நடவடிக்கைகளை ஒபாமாவும் ஏனையோரும் பார்வையிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.’தாக்குதலின் ஆரம்பத்திலிருந்து முடிவுவரை நேரடியாக நாம் பார்வையிட முடிந்தது’ என அமெரிக்காவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ஜனாதிபதி ஒபாமாவின் பயங்கரவாத ஒழிப்பு விவகார ஆலோசகருமான ஜோன் பிரென்னன் தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின் லேடனை காப்பாற்றுவதற்கு அவரின் மனைவிகளில் ஒருவர் மனிதக் கேடயமாக ஒசாமாவின் முன்னால் நிற்க முயற்சித்ததாகவும் ஆனால் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படை வீரர் ஒருவரின் ஏகே 47 துப்பாக்கியினால் சுடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒசாமாவின் இடது கண்ணில் துப்பாக்கி ரவை பாய்ந்தது. பின்னர் ஒசாமா கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதற்காக மீண்டுமொரு தடவை அவ்வீரர் நெஞ்சில் சுட்டாராம்.
இத்தாக்குதலில் ஒசாமா பின்லேடன், அவரின் மனைவி, மகன்களில் ஒருவர், மற்றும் இருவர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள மயப்படுத்தும் நோக்கில் பெருமளவு நிலங்கள் படை வசம்.

சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கு முன்னோடியாக வன்னிப் பகுதியில் அதிகளவான பிரதேசங்களை தற்போது இராணுவம் தமது தேவைகளுக்காக கையகப்படுத்தியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக, சமய நிறுவனங்கள் குரல்கொடுக்க வேண்டும். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் பிரமுகரும் புவியியல் துறைப் பேராசியர் இரா.சிவசந்திரன் மேதின கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
யாழ். நகரிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மேதின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டார்.மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது. கிழக்கில் அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதியில் ஏற்கனவே சிங்களக் குடியேற்றங்கள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.வவுனியாவிலும் 30 வீதமான சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
மன்னார் பூநகரி வீதி (ஏ32) நவீன முறையில் செப்பனிடப்பட்டு வருகிறது. அந்தப் பிரதேசத்தில் சிங்களக்குடியேற்றம் இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. பூநகரியில் மர முந்திரிகை செய்கைக்காக 2 ஆயிரம் பரப்பளவு நிலத்தை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது. மல்லாவி, துணுக்காய்ப் பகுதியில் விவசாயப்பண்ணைக்கு என அதிகளவு நிலத்தை இராணுவம் எடுத்துள்ளது. கிளிநொச்சி அறிவியல் நகரை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத் தில் 70 ஆயிரம் இராணுத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதே வேளை அங்கு 70 ஆயிரம் பொது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மக்களும் இராணுவமும் சம அளவில் உள்ளனர். இந்த நிலையில் அந்தப் பகுதியில் எப்படி மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.எனவே வன்னிப் பெருநிலப்பரப்பில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சுதந்திரமாகச் சென்று பணியாற்ற அனுமதி கிடைக்க வேண்டும்.
இவற்றுக்காக பல நிறுவனங்கள், அமைப்புகள் உருவாகி குரல் கொடுக்க வேண்டும்.அத்துடன் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மறக்கப்பட முடியாதவை. தமிழ் மக்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

02 மே 2011

போர்க் குற்றத்தை விசாரிக்க விஷேட சர்வதேச நீதிமன்றம்.

யூகோஸ்லாவியா, லைபீரியா போன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார கொள்கைகளுக்கான ஆராய்ச்சி நிலையம் தயாரித்த இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதியிடப்பட்ட இந்த ரகசிய ஆவணத்தை இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணத்தில் இலங்கை தொடர்பான விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானவை என குறிப்பிடப்பட்டுள்ளதோடு ஐக்கிய நாடுகள் சபை கடந்த காலத்தில் முன்னெடுத்த இலங்கையின் போர்க்குறறங்களுக்கான பொறுப்புக் கூறும் கடமைப்பாடுகளை நிறைவேற்றும் முயற்சிகளுக்கு இந்தியாதான் மிகுந்த தடையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பில் போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு பகிரங்கமாக தெரிவிக்கப்பட வேண்டும் என இந்திய மனித உரிமை கழகம் வலியுறுத்தியுள்ளதையும் தி.மு.க போன்ற கட்சிகளின் ஆதரவை இந்திய ஆட்சியாளர்கள் எதிர்பார்ப்பதையும் குறித்துள்ள மேற்படி அறிக்கை இவ் விவகாரத்தில் இந்தியா எத்தகையதொரு நிலைப்பாட்டை எடுக்கும் என்பது கவனத்திற்கு உரியது எனவும் தெரிவித்துள்ளது.
வன்னிப் போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தை சர்வதேச போர்க்குற்ற நீதி மன்றத்தில் முன்னிறுத்தி விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என உறுதிப்படுத்தியுள்ள இந்த ஆவணம் இலங்கை அரசாங்கம் மனித குலத்திற்கு எதிரான மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையால் விசேட நீதிமன்றம் நியமிக்கப்பட வேண்டும் எனவும் யூகோஸ்லாவியா, லைபீரியா போன்ற நாடுகளுக்காக உருவாக்கப்பட்டது போன்று இந்த நீதிமன்றம் அமையலாம் என்றும் இவ் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போர்க்குற்றங்கள் தொடர்பான ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கையயழுத்திடாத போதிலும் கொழும்பு மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க வகை செய்யும் ஜெனிவா ஒப்பந்தம் உட்பட குறைந்தது நான்கு முக்கியமான சர்வதேச ஒப்பந்தங்களில் இலங்கை கையயாப்பம் இட்டுள்ளதாகவும் இந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை ஆரம்பித்தால் இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் நேரடியாக எதிர்க்காதெனவும் இந்த ஆய் வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பாதுகாப்புப் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் வாக் கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நடந்து கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் வெளிவிவகார கொள்கை தொடர்பான இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழனாக இருந்தும் தமிழர்களுக்கு தொடர்ந்து துரோகமிழைக்கும் டக்ளஸ்.

தமிழனாக இருந்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் மன்னிக்க முடியாதளவுக்கு தொடர்ந்தும் குற்றம் இழைத்துவருகிறார். அதே சமயம் ஐ.நா. சபையில் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட கருத்துக்கள் அபத்தமானவை கண்டிக்கப்பட வேண்டியவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா நேற்று யாழ். நகரில் இடம்பெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மேதினக் கூட்டம் நேற்று யாழ். நகர் மார்ட்டின் வீதியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரசு சார்ந்த டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்கள் விடயத்தில் தொடர்ந்தும் தவறிழைத்து வருகிறார்.வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளி வாய்க்கால் நோக்கி 4 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் சென்றனர். இதனை அப்போது அரச அதிபராக இருந்த திருமதி இமெல்டா சுகுமார் உறுதிப்படுத்தியிருந்தார். அத்துடன் உலக உணவுத் திட்டத்தில் மூன்று லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பதியப்பட்டிருந்தனர்.இவ்வாறு ஆதார ரீதியாக நிரூபிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசுடன் இணைந்து 70 ஆயிரம் மக்கள் மட்டுமே அங்கு உள்னர் என எண்ணிக்கையைக் குறைத்துக் கூறினார். அது தொடர்பாக தொடர்ச்சியாகக் கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார். இது டக்ளஸ் தமிழ் மக்களுக்குச் செய்த முதலாவது தவறு ஆகும்.
எமது மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டும், கலாசாரம் சிதைக்கப்பட்டும், சிங்கள மயமாக்கப்படும் நிலையில் தமிழனாக உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு உண்மையை மூடி மறைத்துக் கூறுவது எவ்வளவு பெரிய குற்றம்.வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது போர்க் குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததை ஐ.நாவின் அறிக்கை தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் ஒன்றுமே இறுதிப் போரில் இடம்பெறவில்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டிருப்பது இரண்டாவது மாபெரும் தவறு ஆகும்.
தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல் தீர்வு காண்பதற்காக அரச தரப்பு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சு நடத்தியது. அதன்போது 13 ஆவது அரசியல் திருத்தத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தியிருக்கிறார். இது அவரது மூன்றாவது மிகப்பெரிய தவறு ஆகும்.
13ஆவது அரசியல் திருத்தம் தமிழ் மக்களுக்கென எந்த அதிகாரமும் இல்லாத வெறும் எலும்புக் கூடு போன்றது ஆகும்.
தமிழ்மக்களது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காது இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என இந்தியத் தலைவர்கள் அவ்வப்போது கூறியிருக்கின்றனர்.இந்த நிலையில் டக்ளஸ் தமிழ் மக்களது அரசியல் தீர்வு குறித்து அவசரப்பட்டு இப்படிக் கூறுவது ஏன்?அரசுடனும் ஏனைய அமைச்சர்களுடனும் இணைந்து சர்வதேசத்துக்கு இவ்வாறு உண்மைகளை மறைத்து டக்ளஸ் தேவானந்தா நடந்துகொள்வதைத் தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என மாவை சோனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா மேதினத்தில் பான் கீ மூனுக்கு எதிரான கோஷங்கள்.

சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் ஆளும்கட்சியினர் நடத்திய மேதின ஊர்வலத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கும், அதன் செயலாளர் நாயகத்திற்கும் எதிராக கடுமையான கோசங்கள் எழுப்பப்பட்டதாக கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நேற்று (01) நடைபெற்ற ஊர்வலத்தி;ல் உரையாற்றிய சிறீலங்கா அரச தலைவர், ஐ.நாவை நேரிடையாக தாக்காது, மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளார்.
நாம் எமது நாட்டை கட்டியெழுப்பும்போது வெளியாரின் பல அச்சுறுத்தல்களை சந்தித்துவருகின்றோம். மக்களும் பிரச்சனைகளை ஏற்படுத்துக்கின்றனர். ஆனால் நாம் அவர்களுக்கு அடிபணியப்போவதில்லை என மகிந்தா தெரிவித்துள்ளார்.
நான் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை, ஆனால் சிலர் பணத்திற்காக நாட்டைப் பற்றி தவறாக எழுதி வருகின்றனர். தமிழ் மக்களுக்கு உணவும், உடையும் நாம் தான் வழங்கினோம். அவர்களுக்கு வீடுகளையும் வழங்கினோம். அது போர்க்குற்றமா? ஏன மகிந்தா மேலும் தெரிவித்திருந்தார்.
அதேசமயம், கூட்டத்தில் கலந்துகொண்ட அரச ஆதரவாளர்கள் “பான் கீ மூன் எமக்கு வேண்டாம்” “நாம் ஐ.நாவை புறக்கணிக்கிறோம்” “பன்கீ ஒரு யான்கீ” என்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.
சிறீலங்கா அரசின் பெருமளவான நிதி உதவிகளுடன் கொழும்பு வீதிகள் ஆளும் தரப்பினரின் கட்சிக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டதுடன், பெருமளவான மக்களும் ஊர்வலத்தில் கலந்துகொண்டிருந்தனர். அவர்களில் பலர் பலவந்தமாக கொண்டுவரப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்காவில் தலையீடுகளை மேற்கொள்ள உங்களால் முடியாது என்பதை நான் அனைத்துலக சமூகத்திற்கு தெரிவித்துக்கொள்கிறேன் என அமைச்சர் சுனில் பிரேமஜெயந்தா தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரச தலைவரின் இந்த ஊர்வலத்தை தொடர்ந்து கொழும்பின் பாதுகாப்பு பல மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தது. 8,000 சிறீலங்கா காவல்துறையினரும், பெரும்தொகையான இராணுவத்தினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் தமது வீடுகளுக்குள் முடங்கிக்கொண்டனர். எனினும் வடபகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் தருவதாக கூறிய ஈ.பி.டி.பி துணைஇராணுவக்குழுவினர், அவர்களை மகிந்தாவின் கூட்டத்திற்கு அழைத்து வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

01 மே 2011

சிங்களப்படைகளால் கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள்!

இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்த பல போராளிகளை மற்றும், அரசியல் தலைவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொண்றுள்ளது என்பது தொடர்பான விடையம் தற்போது மேலும் வெளிவந்துள்ள ஆதரங்களால் மேலும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த புலித்தேவன், ப.நடேசன் உட்பட பல போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இராணுவத்திடம் சரணடைந்த கதிர் என்னும் போராளியும் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சமீபத்தில் கேணல் ரமேஷ் அவர்களின் படம் வெளியாகி அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ள நிலையில், போராளி கதிர் அவர்களின் படமும் வெளியாகியுள்ளது.
கதிர் என்று அழைக்கப்படும் போராளி, கைகள் கட்டப்பட்ட நிலையில் இராணுவத்தால் நிலத்தில் இருத்திவைக்கப்பட்ட நிலையில் உள்ள புகைப்படத்தை சனல் 4 தொலைக்காட்சி ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அதில் உயிருடன் உள்ள பல போராளிகள் தற்போது கொல்லப்பட்டு உள்ளனர். அதற்கான புகைப்படங்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இப் புகைப்படத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ள போராளி கதிர் என்பவரை இலங்கை இராணுவம் சித்திரவதைகளின் பின்னர் கொலைசெய்துள்ளது ஆதாரங்களோடு நிரூபனமாகியுள்ளது.
இதனை ஐ.நா மனித உரிமைக் கழகத்துக்கும், சட்டத்துக்கு புறம்பான கொலக்களுக்கான ஐ.நாவின் அதிகாரிக்கும் அனுப்பியுள்ளதாக உயர்வு இணையம் தெரிவித்துள்ளது. இப் புகைப்பட ஆதாரங்கள் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட சட்டத்துக்கு புறம்பான கொலைகளையும், மனித உரிமைமை மீறல்களையும் மற்றும் போர் குற்றங்களையும் எமக்கு தெளிவுபடுத்தி நிற்கிறது.தளபதி கேணல் கஜன் அவரது மனைவியால் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே.

பான் கீ மூனுக்கு எதிரான ஸ்ரீலங்காவின் மே தினம்.

இன்று கொழும்பில் நடைபெறும் ஊர்வலத்தில் ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகளே அதிகம் காணப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் அவரால் அமைக்கப்பட்ட போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோரை கேவலப்படுத்தும் ஓவியங்களையும், உருவப் பொம்மைகளையும் சிறீலங்கா அரச ஆதரவாளர்கள் அதிகளவில் தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஏற்பாடுகளுக்கான நிதியை சிறீலங்கா அரசே வழங்கியுள்ளது. அதிகளவான ஓவியங்களையும், பொம்மைகளையும் உருவாக்குவதற்காக பெருமளவான அரச ஆதரவாளர்கள் நேற்று (30) இரவு முழுவதும் கண்விழித்து பணியாற்றியதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
இன்று (01) மாலை ஒரு மணியளவில் பொரளையில் உள்ள கம்பல் பிளேசில் ஆரம்பிக்கும் ஊர்வலம் நகர மண்டபத்தை அடையும்போது அங்கு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் சிறீலங்கா அரச ஆதாரவாளர்கள் ஐ.நாவுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடலாம் என அஞ்சப்படுகின்றது.