26 மே 2011

சகோதரனை சிறையில் அடைத்து வைத்துக்கொண்டு சகோதரிக்கு இராணுவப் பயிற்சியா?

அண்ணன் இராணுவ முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளபோது சகோதரிக்கு இராணுவ முகாமில் கட்டாய தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகின்றது எனவும் இது உயர் கல்வியை எதிர்பார்க்கும் மாணவர்களின் மன நிலையை பெரிதும் பாதித்துள்ளதாகவும் சுதந்திரமான உயர் கல்விக்கும் குந்தகம் ஏற்படுத்தி உள்ளது எனவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டாய தலைமைத்துவப் பயிற்சி தொடர்பாகவே அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். சபை நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது, ஐ.தே.க. உறுப்பினரான ஜோன் அமரதுங்க பொது மக்களின் அதி முக்கிய விடயம் தொடர்பாகக் கவன ஈர்ப்பு பிரேரணை ஒன்றை முன்வைப்ப தாகக் கூறி எழுந்தார். ஆனால் சபாநாயகர் அதற்கு இடமளிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.
சபாநாயக்கர் அவர்களே! நாடாளுமன்றின் நிலையியர் கட்டளையின் 17 ஆம் பிரிவின் கீழ் நாட்டின் முக்கியத்துவம் தொடர்பான ஒரு விடயம் தொடர்பாக உறுப்பினர் ஒருவருக்கு சபையின் முன் சமர்ப்பிக்கும் உரிமை உண்டு என அமரதுங்க குறிப்பிட்டார்.
இன்று பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி அளிப்பதன் மூலம் தனி மனித உரிமை மீறப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் சபையில் பேச எனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஜோன் அமரதுங்க கூறினார். ஆனால், சபாநாயகர் அவரது கூற்றை நிராகரித்ததுடன் அடுத்த நிகழ்வுகளை ஆரம்பிக்கும்படி அறிவித்தார்.
இதனால் ஐ.தே.க. உறுப்பினர்கள் அனைவரும் பதாகைகளுடன் எழுந்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சில உறுப்பினர்கள் சபாநாயகருக்கு முன்னால் வந்தும் பதாகைகளைத் தூக்கிப் பிடித்தவாறு நின்றனர்.
சபாநாயகரின் உத்தரவைத் தொடர்ந்து ஆளும் கட்சி கொறடாவான தினேஷ் குணவர்த்தன 'பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்துவது'' தொடர்பான திருத்தச்சட்டமூலத்தை சபையில் முன்வைத்தார்.இந்த சட்டவரைவு தொடர்பாக எந்த விதமான விவாதமும் இடம்பெறாமல் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டதும் சபை நடவடிக்கைகள் இன்று 26 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிவரை ஒத்தி வைக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளுடன் எழுந்து நிற்க, விளையாட்டுத்துறை தொடர்பாக அமைச்சர் அளுத்கமகே சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பெரிதும் பயன்படுத்திக் கொண்டார் ஜே.வி.பி. உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க.பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவது தொடர்பாகப் பேச ஜோன் அமரதுங்காவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும், தனது ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் பெரும் பகுதியை இந்த விடயம் தொடர்பாகப் பேசுவதிலேயே செலவிட்டார்.
இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் ஆட்சேபித்த போதும் இந்த மாணவர்களும் இளைஞர்கள்தான். இவர்களுக்கும் விளையாட்டுடன் தொடர்பு உண்டு. எனவே விளையாட்டுத்துறைகள் தொடர்பாகப் பேசும்போது அவர்களைப் பற்றியும் பேசமுடியும் என்றார் அநுர குமார திஸாநாயக்க.
தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சகோதரன் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள போது தங்கைக்கு இராணுவ முகாமில் கட்டாயப் பயிற்சி என்பது விரும்பத்தகாத ஒன்று. அவர்கள் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனுரகுமார திஸாநாயக்க உரையாற்றும்போதும் ஐ.தே.க. உறுப்பினர்கள் பதாகைகளுடன் எழுந்து நின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.எழுந்து நின்றவாறே அநுர குமார திஸாநாயக்காவின் பிரேரணையை வழிமொழிந்தனர். இப்பொழுதும் கூட காலம் கடந்து விடவில்லை. புத்திஜீவிகளும் மாணவர்களும் பல்கலைக்கழக சமூகமும் மாணவர்களுக்கு இராணுவ முகாமில் பயிற்சி வழங்குவதை எதிர்க்கின்றனர். எனவே அரசாங்கம் இந்தத் திட்டத்தை ரத்துச் செய்யவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியதுடன் பதாகைகளை சுருட்டிக் கொண்டு ஆசனங்களில் அமர்ந்து விட்டனர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி அளிப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல. உயர் கல்வியை ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சியோ துப்பாக்கிப் பயிற்சியோ வழங்கப்படவில்லை.
எதிர்க்காலத்துக்குத் தேவையான விளையாட்டு மற்றும் கணினி ஆங்கில மொழிப்பயிற்சி என்பனவற்றுக்கான ஆரம்பப் பயிற்சிகளே வழங்கப்படுகின்றன. இதனை மாணவர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். அரசியல்வாதிகளே இதனை அரசியல்சாயம் பூசி இலாபம்தேட முனைகின்றனர். எவர் எதிர்த்தாலும் இந்தப் பயிற்சிகள் தொடரும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

25 மே 2011

காங்கிரசை வீழ்த்திய சீமானுக்கு மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் வாழ்த்து!

அன்பு தம்பி செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர்
கதவு எண்.8.மருத்துவமனை சாலை,
செந்தில் நகர்,
போரூர்- 600 116, சென்னை
தமிழகம், இந்தியா.
கரு : காங்கிரசை வீழ்த்தியதற்கு செந்தமிழன் சீமான் மற்றும் நாம் தமிழர் இயக்கத்திற்கு வாழ்த்துகள்
அன்புடையீர்,
கடந்த மே 13 தேதி வெளியான தமிழக தேர்தல் முடிவுகளானது, உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு காரணம், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை இனவெறி அரசு, ஈழத்தில் காவுக்கொள்ள துணைப்போன காங்கிரஸ் கட்சி, தமிழக தேர்தலில் வாங்கிய பலத்த அடிதான். தமிழனை அழிக்க துணைப்போன காங்கிரஸ் கட்சி, இப்பொழுது தமிழ்நாட்டில் அழிந்து போகும் நிலை வந்துள்ளது.
தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளில், 58 தொகுதிகளில் தோல்வியை கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் இரண்டாக பிரிந்ததால்தான், அந்த 5 தொகுதிகளில் கூட காங்கிரஸ் வென்றுள்ளது. தமிழக மண்ணில், காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள இந்த மிகப்பெரும் சரிவுக்கு காரணம், அக்கட்சியின் தமிழர் விரோத நடவடிக்கைகளே. காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோத போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் உண்மையான முகத்திரையை தமிழக மக்கள் முன் கிழித்ததில் நாம் தமிழர் அமைப்புக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், அக்கட்சியின் தமிழர் விரோத போக்கிற்கு உடந்தையாக இருந்த திமுகவும் நடந்து முடிந்த தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் நடந்த மிகப்பெரும் அமைதிப் புரட்சிக்கு காரணம் 2- ஜி காற்றலை ஊழல் விவகாரம் தான் என்பது போன்ற ஒரு தோற்றத்தை முன்வைத்து, தமிழீழ விவகாரமும், நாம் தமிழர் இயக்கம் மற்றும் தங்களின் அரசியல் பிரச்சாரங்கள் ஆகியவை எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க சிலர் முயலலாம். இருப்பினும், தமிழக தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு தமிழருக்கும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அனைவருக்கும் தெரியும் தமிழகத்தில் நடந்த முடிந்துள்ள அமைதிப்புரட்சியில் தங்களின் பங்கும், நாம் தமிழர் இயக்கத்தின் பங்கும் என்னவென்பது.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கயிருக்கும் இத்தேர்தலுக்கு பிறகு, தமிழீழ விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை உலகதமிழர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இலங்கையில் நடந்தது இன அழிப்பு போர் என்றும், அவ்வின அழிப்பை போரை முன்னெடுத்த மகிந்த இராஜபக்சே, கோத்தபய இராஜபக்சே மற்றும் இராணுவ உயரதிகாரிகள் போர் குற்றவாளிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றபட வேண்டும் என்பதே உலகத்தமிழர்களின் ஒருமித்த கருத்தாகும். அத்தீர்மாணம் நிறைவேற்றப்படுவதற்கு, தாங்களும் நாம் தமிழர் இயக்கமும் அழுத்தம் கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன். எதிர்காலத்தில் தமிழகத்திற்கு வருவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமானால், உங்களையும் நாம் தமிழர் இயக்க நிர்வாகிகளையும் கண்டிப்பாக வந்து சந்திக்கின்றேன்.
எனது அன்பிற்கும் மரியாதைக்குமுரிய தம்பி செந்தமிழன் சீமான் அவர்களே, உங்கள் தமிழின சேவை என்றென்றும் தொடர எனது உள்ளம் நிறைந்த வாழ்துகள். நன்றி
இங்கனம்,
பேராசிரியர் இராமசாமி
பினாங்கு மாநில துணை முதல்வர், மலேசியா.

ராஜபக்ஷ,சோனியா உள்ளிட்டோரை சர்வதேச நீதிமன்றில் ஏற்றுவது விரைவில் நடக்கும்.

ராஜபக்ஷே, சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, கருணாநிதி போன்ற எல்லோரும் நம் தமிழ் இன மக்கள் கொடுமையாகச் சாகக் காரணமாக இருந்தார்கள். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவதே நாம் தமிழர் கட்சியின் முடிவு. இது கூடிய விரைவில் நடக்கும்!'' என சீமான் பேச்சு முழுக்க அனல் பறந்தது.
வேலூரில் கடந்த 18-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது.
பாதையைத் தேடாதே... உருவாக்கு!’ கம்பீரமாக பிரபாகரன் சிரித்துக்​கொண்டு இருக்க, கீழே சிறுமி ஒருத்தி, 'வீர வணக்கம்... வீர வணக்கம்!’ என்றபடியே நாம் தமிழர் கட்சிக் கொடியைப் பிடித்துப் பேரணியைத் தொடக்கி வைத்தனர்.
பேரணியின் நடுவே ராஜபக்ஷே வேடத்தில் ஒருவர் செருப்பு மாலையுடன் நின்றார். ராஜபக்ஷே வேடம் அணிந்தவரை பேரணியில் அடித்தபடியே வந்தனர்.
மாலை பொதுக் கூட்டம் தொடங்கியது.
முதலில் இயக்குநர் செல்வமணி உரையாற்றுகையில்,
காங்கிரஸுக்கு யாரும் ஓட்டுப் போடா​தீங்கன்னு எல்லோரும் கத்தினோம். அதற்கு நல்ல பயன் கிடைத்து உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இனி யாரும் இருக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்யப்போகிறோம். காங்கிரஸில் இருப்பவர்கள் அங்கே இருந்து ஓடி​விடுங்கள்.
ஏன்னா இப்ப உங்களுக்கு ஐந்து தொகுதிகள் கிடைச்சிருக்கு. அடுத்த தேர்தல்ல யாருக்கும் டெபாஸிட் கூட கிடைக்காது. ஒரு பேச்சுக்குச் சொல்லுறேன்... தீ என்று சொன்னால் சுடாது. இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிற மேடையில் குண்டு வெடிச்சா என்ன ஆகும்? சீமான், நான், செல்வபாரதி, தீரன், சந்திரசேகர்னு எல்லோரும் மேல போக வேண்டியதுதான்.
ஆனா ராஜீவ் காந்தி இறந்தாரே... அப்ப அவர்கூட இருந்த 7 போலீஸ்காரர்களும் 10 பொதுமக்களும்தான் இறந்தார்கள். அப்போது வாழப்பாடியார், மூப்பனார் எல்லாம் எங்கே இருந்தார்கள்? குண்டு வெடிப்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரியுமா? உண்மையை எப்பவும் மறைக்க முடியாது.
சிறையில் இருக்​கும் என் தம்பி, அக்காமார்களை விரைவில் விடுதலை செய்... இல்லை என்றால், நாங்களும் வருகிறோம். சிறைச்சாலையைத் தயார் செய்....'' என்று முடிக்க, கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
இறுதியில், ஆக்ரோஷத்தோடு வந்து நின்ற சீமான்,
கடந்த ஆண்டு மே 18-ம் தேதி மதுரையில் நாம் தமிழர் கட்சியைத் தொடக்கினோம். அதற்கு முந்தைய ஆண்டு 2009 மே 18-ம் தேதி ஈழத்தில், முள்ளி வாய்க்காலில் நம் தமிழ் சகோதர -சகோதரிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
ஒரு காக்கை இறந்தால், அந்த காக்கை இனம் கூடிக் கரையும். ஒரு தெரு நாய் இறந்தால், அந்தத் தெரு முழுக்கக் குரைத்தபடி திரியும் தெருநாய் இனம்.
நம் தமிழ் சொந்தங்கள் அங்கு வன்புணர்ச்சி செய்யப்பட்டு மடிகிறார்கள். இதை நான் தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். ஆனால், நம் தமிழ்நாட்டில் எத்தனை பேர் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பார்கள்? எல்லோரும் மானாட மயிலாடவும், நாயாட நரியாடவும்தான் பார்த்தார்கள்.
இந்தக் கூட்டம், வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் போடப்பட்ட கூட்டம் அல்ல. தமிழர்களின் இரத்தம் குடித்த கூட்டத்தை விரட்டி அடிக்கப் போடப்பட்ட கூட்டம்.
பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளைப் பார்த்துக் கேட்கிறேன்... பதவி ஆசையில் நம் இனத்தை அழித்தவனிடம் போய் நீங்கள் மண்டியிட்டீர்களே... இப்போது மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?
நடந்து முடிந்தது தேர்தல் களம் அல்ல... அது ஒரு யுத்த களம்! ஐந்து தொகுதியில் ஜெயித்ததை நினைத்துக் கொக்கரிக்காதீர்கள். அந்த ஐந்து தொகுதிகளுக்கு வர எனக்கு நேரம் இல்லை. உங்களை வேரோடு அழிக்கும் வரை நான் ஓயப்போவது இல்லை.
தி.மு.க. தனது வரலாற்றில் எதிர்க் கட்சி அந்தஸ்தை இழந்து உள்ளது. மறுபடியும் நீங்கள் கூட்டணி வைத்தால் 23 ஸீட்டுகள் இல்ல. மூணு ஸீட்டுகள்கூட வாங்க முடியாது. மேலும், சாதி அரசியலை வைத்து இனி எவனும் தமிழ்நாட்டில் அரசியல் பண்ண முடியாது.
ராஜபக்ஷே, சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, கருணாநிதி போன்ற எல்லோரும் நம் தமிழ் இன மக்கள் கொடுமையாகச் சாகக் காரணமாக இருந்தார்கள். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவதே நாம் தமிழர் கட்சியின் முடிவு.
இது கூடிய விரைவில் நடக்கும்!'' என சீமான் பேச்சு முழுக்க அனல் பறந்தது.
வலி இருந்தால்தானே வார்த்தைகளில் தீப்பறக்கும்!
நன்றி - ஜூனியர் விகடன்.

றோவின் சதிதான் கே.பி ஊதிய பீப்பி!

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பின்னணியில் றோ புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதாக இந்திய செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத்துறையான றோ மேற்கொண்டிருக்கின்றது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும் அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது.
இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவை தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததோடு, தேநீர் விருந்துக்கு டில்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிரான உணர்வுகளைக் கொண்டிருந்த ஜெயலலிதா,2009 போரில் இலங்கை இராணுவத்தினரின் கொடூரச்செயல்கள் குறித்த தகவல்கள் மற்றும் அது குறித்த செய்திகளை அறிந்த பின்னர்தான் ஓரளவுக்குத் தனது நிலையை மாற்றிக்கொண்டார்.
குறிப்பாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் முகாம்களில் படும் அவதிகளை நேரில் கண்டறிந்து வந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இது தொடர்பாக எடுத்துக் கூறிய உண்மைகள்தான் அவரை ஓரளவுக்கு மாற்றியது.
அத்துடன் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்கள் வாயிலாகவும் அவருக்கு இலங்கை நிலவரம் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.அதன் பின்னரே இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.
இந்நிலையில் அவரது இந்த மாற்றம், வெறும் வாக்குகளை பெறுவதற்காகத்தானோ அல்லது அவர் மாறவே இல்லையோ என்ற எண்ணம், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தோன்றியது.
அதாவது ஈழத் தமிழர் பிரச்சினை ஒரு சர்வதேச பிரச்சினை என்றும், மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், இதில் மாநில அரசு ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்றும் கூறியதைப் பார்த்தபோது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்களின் மனதில், 'ஐயோ... இவரும் கருணாநிதி கூறியதைப் போன்றே கை கழுவும் பாணியில் பேசுகிறாரே...!' என்ற ஐயம் ஏற்பட்டது. இந்நிலையில், போர்க் குற்றச்சாட்டிலிருந்து இலங்கையையும், ஜனாதிபதி ராஜபக்ஷவையும் முட்டுக்கொடுத்துக் காப்பாற்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ள மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, ஆதரவாகவும், ஜனாதிபதி ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் கருத்துக் கூறிய ஜெயலலிதாவிடமிருந்தும், தமிழகத்திலிருந்தும் குரல் எழும்பாத வகையில் முடக்கிப் போட திட்டமிட்டுள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.
இதன் முதல்கட்டமாக ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'றோ' மூலம் மேற்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன.இதன் ஓர் அங்கமாக, இலங்கையில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் கே.பி. என்கிற பத்மநாதனை இந்திய தொலைக்காட்சி ஒன்றின் மூலம் பேட்டி எடுத்து வெளியிட வைத்துள்ளது.இந்திய தொலைக்காட்சிக்காக அந்தப் பேட்டி எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்தப் பேட்டியில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி. கூறும் பதில்களும், கே.பியை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப 'றோ' முயற்சிப்பது தௌ;ளத் தெளிவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியைக் கொன்றதாகக் குறிப்பிடும் கே.பி., அதற்காக மன்னிப்புக் கோருகிறார். பின்னர் அவர் குறிப்பிடுகையில், ஜெயலலிதா மீது புலிகள் ஆத்திரம் அடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அதன் காரணமகவே 'இசட்' ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டது என்றும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் புலிகள் ஜெயலிதாவையும் சுட்டுக்கொன்றிருப்பார்கள் என்றும் கே.பி. அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

24 மே 2011

கருணாவை அமைச்சராக்கி விட்டு என்னை சிறையில் தள்ளி விட்டனர்"குமுறும் சரத்பொன்சேகா.

தாய் நாட்டை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு சிங்களமக்களையும் படுகொலைகள் செய்த கருணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை ஒழித்த தனக்கோ சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று கொழும்பு மேல்நீதிமன்றில் நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியம் அளிக்கும்போது தெரிவித்தார்.
நாட்டையும் அழித்து, பொதுமக்களையும் அழித்து, பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்திய கருணா நீதிமன்றில் நிறுத்தப்படாமல் இலங்கை அரசாங்கத்தால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு சுகபோகம் அனுபவிக்கின்றார். ஆனால், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை ஒழித்த தான் சிறைத்தண்டனை அனுபவிப்பதாக அவர் தெரிவித்தார்.
தான் இராணுவத்தில் இருந்த போது மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், போரின்போது ஆபத்தான கட்டங்களில் இராணுவத்தினர் சிக்கி தவிக்கும்போது அவர்களை பல தடவைகள் மீட்டதாகவும், இராணுவத் தளபதியாக வருவதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த ஆபத்தான பணிகளைச் செய்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
1986ஆம் ஆண்டின் செப்டெம்பர் நடுப்பகுதியில் யாழ். மண்டைதீவு பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கும் நடவடிக்கையில் தற்போதைய பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றும் கோட்டாபய ராஜபக்ஷ அன்று கட்டளைத் தளபதியாகவும், தான் சிங்கப் படைப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்ததாகவும், மண்டைதீவை மீட்கும் பொறுப்பு அன்று மேஜர் ஜெனரல் கொப்பேகடுவவினால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அன்றைய தினம் மாலை ஊர்காவற்றுறையிலிருந்து மண்டைதீவுக்கு நுழைவாயில் வழியாகச் செல்லாமல், முழுப் படையினரும் களத்தில் இறங்கிப் போராடினர். அதன்போது இராணுவத்தினர் பலர் உயிரிழக்க நேரிட்டது. அந்த அழிவில் இருந்து காப்பாற்ற தனக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் இருந்தும் தான் படைகளுடன் மண்டைதீவு நுழைவாயில் வழியாக உள்நுழைந்து 40 நிமிடங்களில் முழுத் தீவையும் மீட்டெடுத்ததாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
தான் தனது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் ஆகியோரிடத்தில் நேரத்தை செலவழிக்காமல் இராணுவத்துக்காக, நாட்டுக்காக சேவை ஆற்றியதாகவும், தனது தாயாரும், தந்தையும் சுகவீனமுற்று இறக்கும்போது அவர்களுக்கு அருகில் கூட இருக்க நேரம் கிடைக்கவில்லை. அந்த வேளைகளில் தான் போர்க் களத்தில் பணியாற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு மூன்றாவது ஈழப்போரின் பின் யாழ்ப்பாணத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்தோம். அதன்பின்னர் ஜனாதிபதியை சந்தித்தோம். அதன்போது சிரேஷ்ட அதிகாரிகளிடம் யுத்தம் எப்போது முடிவுறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டார். சிலர் 8 வருடங்களாகும் என்றனர். ஆனால் நான் 3 வருடங்களில் முடிவுக்கு கொண்டுவரலாம் என்றேன். அதனை நான்காவது ஈழப்போரில் சாதித்துக் காட்டினேன்.
இந்த வழக்குடன் தொடர்புடைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வேறு எவரையும் இராணுவத் தளபதியாக நியமித்திருந்தாலும் யுத்தத்தில் வெற்றிபெற்றிருப்போம் என்று கூறியுள்ளார். அவ்வாறானால், ஏன் கடந்த 30 வருட காலமாக யுத்தத்தில் வெற்றிபெற முடியாமல் போனது? பாதுகாப்புச் செயலாளரின் கூற்று பொய்யாகிவிட்டது என அவர் தெரிவித்தார்.
நான் இராணுவத்துக்காக எனது சிரமங்களையும் பாராமல் அர்ப்பணிப்புடன் செயற்பட்டபடியால்தான் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை அன்று தளபதியாக நியமித்திருந்தார். ஆனால், இன்றோ அவரும், சகாக்களும் திட்டமிட்டு என்னைத் சிறைக்குள் தள்ளிவிட்டார்கள். இது எந்த வகையில் நியாயம்?� என்றார் சரத் பொன்சேகா.
இதனையடுத்து இந்த வெள்ளைக் கொடி வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிங்களத்து அடிமை கே.பி.இந்திய ஊடகத்திற்கு பேட்டி!

விடுதலைப்புலிகளின் தாக்குதல் பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இருந்ததாக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரும், தற்போது சிறீலங்கா அரசின் கைக்கூலியாகவும் செயற்பட்டுவரும் கே.பி எனப்படும் சிங்களத்து அடிமை குமரன் பத்மநாதன் நேற்று (23) இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள நேர்காணலை தமிழ் இனத்திற்கு எதிரான போக்கை கொண்ட இந்திய ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வருகின்றன.
சிறீலங்காவுக்கு இந்திய படையினரை அனுப்பி பல ஆயிரம் தமிழ் மக்களை படுககொலை செய்த இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டம்மானும் தொடர்ப்புபட்டிருந்ததாக தெரிவித்துள்ள கே.பி, என்ற சிங்களத்து அடிமை அதற்கு தான் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை விடுதலைப்புலிகள் படுகொலை செய்ய முயன்றதாகவும் அவர் மேலும் தெரிவித்து, போர்க்குற்றவாளி மகிந்தாவுக்கு எதிராக தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அலையை திசைதிருப்பவும் முற்பட்டுள்ளார்.
உலக தமிழ் சமூகத்திற்கு எதிரான கொடூர சிந்தனை கொண்ட இந்திய ஊடகம் ஒன்றே திட்டமிட்டு இந்த நேர்காணலை மேற்கொண்டுள்ளதுடன், அதனை பிரபலப்படுத்தி தமிழ் இனத்தின் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை மறைக்கவும் முற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஊடகம் சிறீலங்கா அரசிடம் இருந்து பெருமளவான நிதியை பெற்றுக்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் தமிழ் மகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

22 மே 2011

யாழில் மீண்டும் குடும்பப் பதிவுகளை தொடங்கியுள்ள சிங்களப்படைகள்.

யாழ். குடாநாட்டில் குடும்பப் பதிவுகள் மற்றும் குடும்பப் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கைகளைப் படைத்தரப்பு சத்தமின்றி மீண்டும் ஆரம்பித்துள்ளது எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக வரணி மற்றும் சங்கானை உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேரடியாக இப்பதிவு மற்றும் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
முன்னதாகப் பெருமெடுப்பில் இராணுவப் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கெதிராக நீதிமன்றம் சென்றிருந்தது. இதையடுத்து பதிவு நடவடிக்கைகளை தாம் கைவிடுவதாக படைத்தரப்பு அப்போது அறிவித்திருந்தது.
எனினும் வன்னியில் பெரும்பாலான குடும்பங்களை பதிவு செய்வதிலும் குடும்ப அங்கத்தவர்களை உள்ளடக்கி புகைப்படம் பிடித்து தகவல் திரட்டுவதிலும் படைத்தரப்பு தொடர்ந்தும் ஈடுபட்டே வருகின்றது. இந்நிலையிலேயே யாழ். குடாநாட்டிலும் கிராமங்கள் தோறும் சத்தமின்றி பதிவு நடவடிக்கைகளை மீண்டும் படைத்தரப்பு ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக வரணி மற்றும் சங்கானைப் பகுதிகளில் இப்பதிவு நடவடிக்கைகள் பெரும் பாலும் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படை முகாம்களிலிருந்து நேரடியாக வருகை தரும் படையினரே படிவங்களை விநியோகித்து விபரங்களைத் திரட்டி வருவதாகவும் புகைப்படங்களைத் தாமே கமரா மூலம் எடுத்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது இவ்வாறிருக்கையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் யாழ். குடாநாடு முழுவதிலும் பதிவுகள் ஆட்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்தந்த பகுதிகளுக்கான கிராமசேவகர் பிரிவுகளில் இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து சங்கானை பிரதேச செயலாளர் திருமதி பாபு கூறுகையில், கடந்த சில நாட்களாக யாழ். குடாநாடு முழுவதும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பதிவு நடவடிக்கையானது பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பதிவுக்கான விண்ணப்பங்கள் இங்குள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
யாழ்.குடாநாட்டிலுள்ள மக்களின் விபரங்களை கணனி மயப்படுத்துவதற்காகவே இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

ஸ்ரீலங்காவிற்கு எதிரான பரப்புரையை முறியடிக்க சிறப்புப் பிரிவு அமைத்துள்ள மகிந்த.

சிறிலங்கா அரசுக்கு அடுத்தவாரம் தொடங்கப் போகும் புதிய தலைவலியை சமாளிக்க ஸ்ரீலங்கா அரசானது முன்கூட்டியே பரப்புரைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அடுத்தவாரம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 17வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
மே மாதம் 30ம் திகதி தொடக்கம் ஜுன் 17ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதும் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான தீர்மானம் கொண்டு வரப்படுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது போனாலும் அதனைச் சமாளிப்பதற்கான தயார்படுத்தல்களில் சிறிலங்கா அரசு தற்பொழுது இறங்கியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகளை முறியடிக்க சிறப்பு அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் ஆகியோரைக் கொண்ட உயர்நிலைக் குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக்குழு விரைவில் ஜெனிவா சென்று முன்கூட்டிய தற்பாதுகாப்பு பரப்புரை நடவடிக்கைளில் உடனடியாக இறங்கவுள்ளதுடன் சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொலிப் பதிவு போலியானது என்றும் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி காணொளி படைச் சிப்பாய் ஒருவரால் கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்டது என்றே கூறப்பட்டிருந்தது. ஆனால் அது ஒரு தரமான ஒளிப்படக் கருவியால் எடுக்கப்பட்டதென்று சிறிலங்கா அரசு கூறியுள்ளது. இந்நிலையில் ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து இன்று கருத்து வெளியிட்டுள்ள சண்டே ரைம்ஸ் பத்திரிகை சிறிலங்கா அரசுக்கு புதியதொரு தலைவலி அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக தனது பத்தியொன்றில் கூறியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடருக்கு தாய்லாந்து தலைமை தாங்கவுள்ளதுடன் மேலும் 47 நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

21 மே 2011

கந்தரோடையில் பெளத்த ஆதாரம் என்பதில் உண்மையில்லை.

யாழ். மாவட்டம், கந்தரோடையில் இடம்பெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொடர்பில் சிங்களப் பத்திரிகை ஒன்றில் வெளியான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் இந்தச் செய்தி தொடர்பில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் புஷ்பரட்னம் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
கந்தரோடையில் புராதன காலத்துக் குடியிருப்பு மற்றும் பௌத்த குருமாரின் புராதன வாழ்விடம் என்பன அமைந்திருந்தமைக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க தெரிவித்தார் என்று லங்காதீப என்ற சிங்களப் பத்திரிகை தனது 17ஆம் திகதிய பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியை யாழ்.பல்கலைக்கழக தொல்லியல்துறை மறுத்துள்ளது. அதேவேளை, குறித்த செய்தி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அது பொய்யான செய்தி கலாசார அமைச்சின் அனுமதியின்றி நாம் எந்தவொரு ஆய்வு முடிவுகளையும் வெளியிடுவதில்லை என்று தெரிவித்தார் பிரதி ஆணையாளர் நிமல் பெரேரா.
அத்தகைய எந்த ஒரு ஆதாரமும் கந்தரோடையில் இருந்து இதுவரையில் பெறப்பட்டதாக அறிக்கையிடப்படவில்லை என்று யாழ். பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வுத்துறையும் அடித்துக் கூறியது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் பெருங்கற் கால பண்பாட்டை ஒத்ததானகுடியிருப்புக்கள் அங்கிருந்ததற்கான ஆதாரங்களே கிடைத்துள்ளன. பௌத்த அடையாளத்துக்கான எவையும் கிடைக்கவில்லை. அண்மையில் வெண்கலச் சூலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது'' என்று ஆய்வுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
'கந்தரோடையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வுப் பிரிவின் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் மாணவர்களும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்த அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்'' என்று லங்காதீப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணத்திடம் கேட்டபோது, 'ஆய்வின் இறுதியில் பல்கலைக்கழகமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து முடிவுகளை வெளியிடுவது என்பதே ஒப்பந்தம். அப்படியிருக்கையில் இப்படி ஒரு செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது'' என்றார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள கந்தரோடை தொல்லியல் சான்றுகள் புத்த சமய காலத்திற்கு முற்பட்ட பெருங்கற்காலத்திற்குரியவை என்று பல வரலாற்று ஆய்வாளர்களும் வரலாற்றுப் பேராசிரியர்களும் தெரிவித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் மிகப் பழைய நாகரீகத்திர்க்குரிய ஆதாரமாக அமைந்துள்ள இந்தச் சான்றுகள் தமிழ்பௌத்தத்திற்குரியவை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எந்த இணக்கப்பாடும் இதுவரையில் ஏற்படவில்லை.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் ஆலோசனைகள் தொடர்பில் இலங்கையிடம் இருந்து பதில் தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகிறது ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசர்கி இதனை தெரிவித்துள்ளார்.
இன்னர் சிட்டி பிரஸ், நேற்று எழுபபிய கேள்வி ஒன்றின்போதே மார்டின் நெசர்கி இந்த கருத்தை வெளியிட்டார்.
ஏற்கனவே ருவண்டா பிரச்சினையில் பான் கீ மூனுக்கு அதிகாரமில்லை என்ற காரணத்தினால், விசாரணைகளை இடம்பெறவில்லை.அதேபோல இலங்கை தொடர்பிலும் நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச சுதந்திர பொறிமுறை தவிர்க்கப்படுமா என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.
அத்துடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹனவுக்கும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில், நிபுணர் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளதா? என்றும் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.
அதே நேரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு, பாதுகாப்பு சபை என்பவற்றின் அனுமதியை பெற்ற பின்னரே பான் கீ மூன், நடவடிக்கைகளை மேற்கொள்வாரா? என்ற கேள்வியையும் இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பியது.
இவை யாவற்றும் ஒரு பதிலை வழங்கிய பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி, இலங்கை தொடர்பான நிபுணர் குழு அறிக்கை, பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அது பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அது தொடர்பிலான கருத்து இலங்கையிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது
எனவே, அதற்குள் எந்தவிதமான இணக்கப்பாடுகளோ உடன்படிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டார்.அவ்வாறான இணக்கப்பாடுகள் இருப்பின் அது தொடர்பாக வெளிப்படுத்தப்படும் என்றும் மார்டின் நெசர்க்கி கூறினார்.

20 மே 2011

நெடியவன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன!

நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் நெடியவனை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பேரின்பநாயகம் சிவபரன் எனப்படும் நெடியவனை கைது செய்து ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக நோர்வே ஊடகங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நெடியவனுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது.
நெடியவனிடம் விசாரணை நடத்துவதற்கு நெதர்லாந்தைச் சேர்ந்த நீதவான் ஒருவரும் ஐந்து சட்டத் தரணிகளும் நோர்வேக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
விசாரணை நடத்தும் நெதர்லாந்து அதிகாரிகளுக்கு நோர்வே அரசாங்கம் உதவிகளை வழங்கி வருவதாக ரிவி2 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நெதர்லாந்தில் கைது செய்யப்பட்ட ஏழு விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தும் நோக்கில் நெதர்லாந்து அதிகாரிகள் நோர்வே சென்றுள்ளனர்.
இதேவேளை, நெடிவனிடம் எவ்வாறான விசாரணகைள் நடத்தப்பட்டன தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளரா, அவருடன் வேறும் எவரும் கைது செய்யப்பட்டனரா என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
தற்போது வந்த தகவலின்படி நெடியவன் அவர்கள் பிணையில் விடுதலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நாவே மீண்டும் தவறை செய்யாதே"என அமெரிக்காவில் கூடிய மக்கள் முழக்கம்.

சிறீலங்கா அரசின் இனஅழிப்பின் உச்சக்கட்டமாக கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளின் இரண்டாவது ஆண்டு நிகழ்வு நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு நேற்று (19) நடைபெற்றுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் அதில் கலந்துகொண்டிருந்தனர்.
ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை ஐக்கிய நாடுகள் சபை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
“ஐ.நாவே மீண்டும் தவறைச் செய்யாதே” “ பான் கீ மூன் – உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்” போன்ற கோசங்களும் அங்கு எழுப்பப்பட்டன.
சிறீலங்காவில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தகவல்களை முன்கூட்டியே அறிந்திருந்தபோதும், அதனை தடுப்பதற்கு தவறிவிட்டது என வெள்ளைமாளிகையின் முன் போராட்டத்தை நடத்திவரும் கலாநிதி கே தயாபரன் தமிழ்நெற் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
தற்போது ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் தற்போதைய ஒபாமா அரசு சுயாதீன அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் நல்ல உதாரணம் என அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் அரசியல்த்துறை பேராசிரியர் கிளன் மொறிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவிலும் அவர் அங்கம் வகித்திருந்தார்.
சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இது சிறிலங்கா அரசின் இயங்குநிலையை குறைத்துள்ளதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். நாம் எந்த சூழ்நிலையிலும் எமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

19 மே 2011

வவுனியாவிலும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள்.

முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான இரண்டாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வன்னிப்பிரதேச பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் இதில் கலந்து கொண்டு தீபம் ஏந்தி மலரஞ்சலி மற்றும் மௌனஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் நினைவுரைகளும் இடம்பெற்றன.

என்று என் இலட்சியத்தை தொடுகிறேனோ அன்றுதான் பார்வதியம்மாவின் அஸ்தியை கரைப்பேன்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு அரசு நடத்திய இனப்படுகொலையை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு ஆதரவாகவும், இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் 18.05.2011 அன்று வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து கோட்டை அருகே உள்ள மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்,
கடந்த 2010 இதே மே 18ஆம் தேதி மதுரையில் நாம் தமிழர் என்கிற இயக்கம் அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது. கட்சி தொடங்கி ஏழே மாதத்தில், இரண்டு மாத போராட்டத்தில் ஐந்து மாதம் சிறைப்படுத்தப்பட்டேன். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தேர்தல் வந்துவிட்டது.
ஓராண்டுக்குள் என்ன சாதித்தாய் என்று எல்லோரும் கேட்கலாம். என் இனத்தின் எதிரிகளை கொன்றொழித்தோம். வீழ்த்தி காட்டினோம். அரசியல் களத்திலே எல்லோரும் தேர்தலை, தேர்தலாக பார்த்தார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி அதை யுத்த களமாக பார்த்தோம். யாருக்கு யாருக்குமான யுத்தம். என் இனத்தை கொன்ற காங்கிரஸ் கட்சிக்கும், இன உணர்வுள்ள தமிழர்களுக்கான யுத்தம்.
இந்த தேர்தலை பிரபாகரன் தம்பி சீமானுக்கும், காங்கிரஸ் தலைவி சோனியா மகன் ராகுல் காந்திக்கும் நடக்கும் சண்டையாகத்தான் நான் கருதினேன். என் தாய் ஈழம், தமிழ் ஈழம் மண்ணில் என் இனத்தை கொன்று ஒழிப்பதற்கு, சிங்கள இனவெறி அரசுக்கு இருகரமும் கொடுத்து உதவிய காங்கிரஸ் கட்சி, என் இன்னொரு தாய் ஈழம், தமிழகத்திலே நிர்மூலமாக வீழ்த்தி காட்டுவேன் என்ற லட்சிய உறுதியோடுதான்.
என் அண்ணன் பிரபாகரனை பெற்ற வீரமாதா திருமதி பார்வதி அம்மாள் அவர்களுடைய புனித சாம்பல் எனக்கு வந்தது. என்னைப்போலவே அண்ணன் நெடுமாறன், அண்ணன் வைகோ அவர்களுக்கும் வந்தது. அவர்கள் இருவரும் கடல் நீரிலே கரைத்தார்கள். ஆனால் நான் பத்திரமாக இன்னும் என் அறையில் வைத்திருக்கிறேன். என்றைக்கு என் லட்சியத்தை தொடுகிறேனோ, அன்றுதான் என் தாயின் சாம்பலை நான் கரைப்பேன்.
என் தாயின் சாம்பல் மட்டுமல்ல. தமிழ் சொந்தங்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்களை உசுப்பிவிடுவதற்காக தீக்குச்சாக மாறி வெந்து செத்தானே என் தம்பி முத்துக்குமாரின் புனித சாம்பலும் என்னிடத்தில்தான் இருக்கிறது. அதையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். என் இனம் என்று விடுதலை அடைகிதோ, அன்றுதான் அந்த சாம்பலை நான் கரைப்பேன். அதுவரை ஒவ்வொரு போருக்கும், ஒவ்வொரு களத்திற்கும் நான் செல்லும்போது அந்த சாம்பல் மீது சத்தியம் செய்துதான், நானும் என் தம்பிகளும் களத்திலே இறங்குவோம் என்றார்.

18 மே 2011

அனைத்துலக நடவடிக்கைக்கான நேரம் வந்துள்ளது.

ஐ. நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கும், அதன் பரிந்துரைகளுக்கும் நியூசிலாந்து அரசு பூரண ஆதரவை வழங்கும் எனவும், சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்காது விட்டால் அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்கும் எனவும் நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் முரே மக்கலி தெரிவிதிருந்தார் ஆனால் தற்போது அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைக்கான நேரம் வந்துள்ளது என நியூசிலாந்தின் கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெயித் லொக்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 28 ஆம் நாள் இடம்பெற்ற விவாதத்தின் போது ஐ.நா அறிக்கை தொடர்பில் நியூசிலாந்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் நியூசிலாந்தின் கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் லொக்கே கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் கொடுக்கும்போதே ஐ. நாவின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கும், அதன் பரிந்துரைகளுக்கும் நியூசிலாந்து அரசு பூரண ஆதரவை வழங்கும் என மக்கலி தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது ஐ.நா அறிக்கையை சிறீலங்கா அரசு நிராகரித்து வருவதால் அனைத்துலக சமூகம் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கெய்த் தெரிவித்துள்ளார்.
ஐ.நா அறிக்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளபோதும், விசாரணைகளை சிறீலங்கா அரசிடமே அது விட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை நாம் கைவிட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் துயர்தனை மறப்போமா நாங்கள்!

ஸ்ரீலங்காவின் பேரினவாத சிங்கள அரசான மகிந்த கும்பல் உலக அராஜக அரசுகளுடன் கூட்டிணைந்து தமிழின அழிப்பை மேற்கொண்ட,காட்டு மிராண்டித்தனமாக என்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட எம் சொந்தங்களை கொன்று வீசிய அந்த படு பாதகத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.உணர்வுள்ள,தன்மானம்மிக்க தமிழரெல்லாம் கொதித்தெழுந்த நாளும் இந்நாளே!ஏன் உலகெங்கும் வாழும் மனிதாபிமானிகளும் கிளர்ந்தெழுந்த நாளும் இந்நாளே!இந்நாளை நாம் நினைவு கூர்வதுடன் அங்கே மரணித்துப்போன ஆயிரமாயிரம் உறவுகளுக்கும் எம் அக வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் எமது தாயகத்தில் தன்னாட்சி பெற்ற இனமாக நாம் வாழ்வதற்கு உலக அரங்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பயன் படுத்தி ஒன்று பட்ட இனமாக ஜனநாயக பாதையிலே எம் வெற்றியை இட்டுச்செல்வோம்.அந்த வெற்றியை எம் வீரர்களுக்கும் மக்களுக்கும் காணிக்கையாக்குவோம்.சர்வாதிகாரம் மேலோங்கி நின்றாலும் இறுதியில் ஜனநாயகமே வெல்லும்.

17 மே 2011

ஐ.நா.முன்றலில் அணிதிரளத் தயாராகும் தமிழினம்.

எதிர்வரும் மே-18 புதன்கிழமை நியூ யோர்க் - ஜெனீவா ஐ.நா பீடங்களுக்கு முன்னால் அணிதிரள ஐரோப்பா - அமெரிக்கா வாழ் தமிழர்கள் தயாராகி வருகின்றனர். ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுவருகின்றன.
கடந்த காலங்களில் ஐநாவுக்கு முன்னால் அணிதிரண்டதற்கும் இந்த ஒன்றுகூடலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கடந்த காலங்களில் நாங்கள் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியில் நின்று எடுத்துரைத்தோம். ஆனால் இன்று நிபுணர் குழுவின் அறிக்கையே உண்மையின் சாட்சியமாக ஐநாவுக்குள்ளேயே உள்ள நிலையில் அதனை முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு எங்கள் கைகளிலும் உள்ளதென துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் தெரிவித்தார்.
இந்த ஒன்றுகூடலில் பங்கெடுப்பதற்குரிய பேருந்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
நியூயோர்க்கில் கலந்து கொள்வதற்கான பயண ஒழுங்குகளுக்கு : 416 291 7474 - 647 822 8062 - 514 400 6970 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு கனடா வாழ் தமிழர்கள் தொடர்பு கொள்ளுமாறும் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கீழ் வருகின்ற தொடர்பிலக்கங்களோடு தொடர்பு கொண்டு பயண விபரங்களை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
பிரான்ஸ் : 06 66 90 06 08 - 06 62 36 50 07
பிரித்தானியா : 0208 470 6655 - 0791 220 6171
சுவிஸ் : 076 541 63 26 - 078 850 90 22

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் வாடுகின்றனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நூறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2011 ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1139 குடும்பங்கள் மெனிக்பாம் மற்றும் கொடிகாமம் முகாம்களிலிருந்து வெளியேறியுள்ளன.
அநேகமானவர்கள் இடம்பெயர் முகாம்களை விட்டு வெளியேறியுள்ள போதிலும் சொந்த இடங்களில் இன்னமும் மீள் குடியேறவில்லை என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார இணைப்புக் காரியாலயம் அறிவித்துள்ளது.
நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்கள் மட்டுமே இடம்பெயர் முகாம்களில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பலர் தமது சொந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

16 மே 2011

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கண்டனம்.

போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் தேவை என்ற ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்தும் கண்டித்தும் கொழும்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நடத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இன்று இந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வடபகுதியிலிருந்து சென்றிருந்த தமிழ்த்தரப்பு சட்டத்தரணிகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக துணிந்து நின்று செயற்படுவதிலும் சட்டத்துறை சார்ந்தவர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. ஆனால் அதனை மறந்து எமது சட்டத்தரணிகள் கொழும்பில் செயற்பட்டிருப்பது வேதனைக்கும் வெட்கத்திற்குரியதும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களது முள்ளிவாய்க்கால் படுகொலை சர்வதேச ரீதியாக நீதி வழங்க வேண்டும் என்று உலகெங்கும் குரல் ஒலித்துக் கொண்டிருக்கையில் சட்டத்தரணிகள் சார்ந்த எம்மவர்கள் செயற்படும் விதத்தையே எமது கட்சி கண்டிக்கின்றது என்றும் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்க்க துணிவில்லாது விட்டாலும் அவற்றிலிருந்து ஒதுங்கி நிற்பதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரில் நிற்கும் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டை யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவி செல்வி சாந்தினி அபிமன்னசிங்கம் மறுதலித்திருக்கின்றார். அவ்வாறு தமது பிரதிநிதிகள் எவரும் அக்கூட்டத்திற்கு சென்றிருக்கவில்லை எனவும் தான் அறிந்த வரையில் தமிழ்த் தரப்பு சட்டத்தரணிகள் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை எனவும் வழமையாக இடம்பெறுகின்ற கூட்டம் ஒன்றிற்கென அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் யாராவது விசயம் தெரியாது போய் மாட்டுப்பட்டிருக்கலாமேயன்றி தமிழ் சட்டத்தரணிகள் அதற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றம் தொடர்பில் சுவிஷும் கனடாவும் கலந்துரையாட உள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து சுவிட்சர்லாந்தும், கனடாவும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இது நட்புரீதியற்றது என இலங்கை அரசு தனது எதிர்ப்பைத் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி மற்றும் சுவிஸ் தூதுவர் தோமஸ் லிற்சர் ஆகியோரை அழைத்து வெளிவிவகார அமைச்சு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஒட்டாவா மற்றும் பேர்ன் பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்களும் இந்த கூட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஜெனீவாவில் நடைபெறும் கூட்டம் வழமையாக நடைபெறும் கூட்டம் எனவும், அதில் பல விடயங்கள் கலந்துரையாடப்படுவதாகவும் கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா.நிபுணர்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிஸ் அரசும் தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி பிரான்ஸ் செனிட்டர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும், இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிற்செருக்கும் இடையில் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றிருந்தது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிற்சர்லாந்தும் தனது ஆதரவை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வரானார்.

தமிழக முதல்வராக இன்று ஜெயலலிதா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்றுக்கொண்டார். கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அப்போது ஜெயலலிதா ஏற்றுக்கொண்ட உறுதிமொழி:
பதவிப்பிரமாணம்:
‘’ஜெ. ஜெயலலிதா என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்,
தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக, உண்மையாகவும், உளச்சான்றின் படியும், என் கடமைகளை
நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க, அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.
ரகசிய காப்பு பிரமாணம்:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை நிறைவேற்ற தேவையான அளவுக்கு அன்றி, ஒருவரிடமோ, பலரிடமோ நேர்முகமாகவோ, மறைமுகவாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

15 மே 2011

எனது பிள்ளையை விடுவிப்பதாக கூறி கருணா குழுவினர் காசு வாங்கினர்.

திருகோணமலையில் 13.05.2011 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தாயின் சோகக்கதை:
கருணா குழவைச் சேர்ந்த நாதன், சுரங்க என்ற 2 பேர் எனது பிள்ளையை எடுத்து தரலாம் என காசு வாங்கினார்கள்.
2008 மார்ச் 19 ஆம் திகதி எனது மகனை கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். நாங்கள் எல்லா இடங்களும் அலை அலை என்று அலைந்து திரிஞ்சம். பொலிஸ், ஆமி, நேவி என்று எல்லா இடமும் போய் கேட்டும் எங்கட பிள்ளையை தாங்கள் பிடிக்கயில்லை எண்டு சொல்லியினம். ஆனால் எங்கட வீடுகளுக்கு வந்த சி.ஐ.டீமார் இவ்வளவு காசு தந்தால் பிள்ளையை எடுத்து தருவம் எண்டு சொன்னாங்கள். கருனான்ட ரீமில உள்ளவர்கள் சொன்னார்கள் உங்கட பிள்ளையை நேவிதான் பிடித்தது. இவ்வளவு காசு தந்தால் பிள்ளையை எடுத்து தரலாம் எண்டு அதனால காசும் கொடுத்தோம். ஆனால் எங்களுக்கு எந்த விதமான பலனும் கிடைக்கயில்லை. நாதன், சுரங்க என்ற கருணா குழவைச் சேர்ந்த 2 பேர் என்னட்ட மட்டும் இல்ல எங்கட எல்லாருட்டயும் காசு தந்தால் பிள்ளைகளை விடுவிக்கலாம் என்று சொன்னதனால் பல லட்சம் ரூபாய் கொடுத்து விட்டோம். வாங்கியவர்களை அடையாளம் காட்டுகிறோம். தொலைபேசி இலக்கங்களை தருகிறோம் என்டு சொல்லியும் யாரும் நடவடிக்கை எடுக்ககிறதா தெரியவில்லை.


தமிழ் கைதிகள் மீது சிங்களக் குண்டர்கள் தாக்குதல்.

சிறீலங்கா அரசின் வாவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மேற்கொண்ட உண்ணாநிலை போராட்டத்தின் மீது சிறீலங்கா அரசின் சிறைக்காவலர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை தொடர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்த சிறீலங்கா அரசு, அண்மையில் நான்கு கைதிகளை அனுராதபுரம் சிறைக்கும் மாற்றியிருந்தது.
சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வவுனியா சிறையில் உள்ள 200 இற்கு மேற்பட்ட கைதிகள் கடந்த வெள்ளிக்கிழமை (13) உண்ணநிலைப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் கைதிகளின் இந்த ஜனநாயகப் போராட்டத்தின் மீது சிறீலங்கா சிறை அதிகாரிகளும், சிங்களக் காடையர்களும் மேற்கொண்ட தாக்குதலில் பல தமிழ் கைதிகள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் அகிலன் (29) என்பவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

14 மே 2011

போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக பல நாடுகளில் வழக்கு.

அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கெதிராக 30 நாடுகளில் வழக்குகளைத் தொடர்வதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கெதிரான வழக்குகளைத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது.
தற்போதைக்கு மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மட்டுமன்றி ஆசியாக்கண்டத்தின் சில நாடுகளிலும் அவ்வாறான வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகள் பிரஸ்தாப அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள் சிலரும், நிதி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பலவும் அவர்களுக்கான ஆதரவை வழங்க முன்வந்துள்ள அதே வேளை, ஆரம்ப கட்டமாக இலங்கையின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஒரு சில நாடுகளில் தற்போதைக்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வலிகாமத்தில் பல கிராமங்கள் படைகள் வசம்.

யாழ்மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் 26 தமிழ் கிராமங்களை சிறீலங்கா இராணுவத்தினர் கையகபப்படுத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த சிறீலங்கா அரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் சகோதரருமான பசில் ராஜபக்சா வடக்கில் உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லை என தெரிவித்திருந்தார்.
நாடு முழுவதும் அமைதிவலையம் எனவும் அவர் பொய்யுரைத்திருந்தார். ஆனால் யாழ் மாவட்டத்தில் உள்ள வலிகாமம் பகுதியில் 26 கிராமங்கள் சிறீலங்கா படையினர் வசம் உள்ளன. அங்கிருந்து 17,108 குடும்பங்களைச் செர்ந்த 43,700 தமிழ் மக்களை சிறீலங்கா அரசு துரத்தியுள்ளது.
எனினும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பலர் வெளிநாடுகளிலும் வாழ்வதால் அதன் எண்ணிக்கை 70,000 ஆக இருக்கும் என நம்பப்படுகின்றது. இந்த பகுதிகளில் படையினரால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அவர்களே அகற்றுவதற்கு 8 வருடங்கள் எடுக்கும் என சிறீலங்கா அரசு தெரிவிப்பதால் தாம் தமது வீடுகளை மீண்டும் பார்க்க முடியாது போகலாம் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலையத்தின் எல்லைகளில் உள்ள 13 கிராமங்களில் மீள்குடியேற்றங்களை மேற்கொள்வதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளபோதும், அந்த பிரதேச மக்களும் மிகப்பெரும் நெருக்கடிகளை சந்தித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆபத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவுவது நோர்வேயின் நீண்டகால வரலாறு.

விடுதலைப்புலிகளை நோர்வேக்கு அழைத்துவந்து, அவர்களுக்கு அரசியல் புகலிடம் வழங்கும் பணிகளை சிறீலங்காவில் உள்ள நோர்வே தூதரகம் இரகசியமாக மேற்கொண்டிருந்ததாக நோர்வேயை தளமாகக் கொண்ட நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பல வருடங்களாக நோர்வே இந்த பணியை இரகசியமாக முன்னெடுத்து வந்துள்ளது. கொழும்பில் பணியாற்றிய நோர்வே இராஜதந்திரிகள் 12 விடுதலைப்புலிகளுக்கு அரசியல் புகலிடம் வழங்கியுள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு விரைவாக நுளைவு அனுமதிகளை வழங்கி, அவர்களுக்கு தேவையான விமானச்சீட்டையும் நோர்வே தூதரகமே பெற்று, அவர்களை தமது வாகனத்தில் விமானநிலையத்திற்கு கொண்டு சென்று விமானத்தில் ஏற்றிவிட்டுள்ளனர்.
இது இரு நாடுகளினதும் உறவுகளை பாதிக்கும் என நோர்வேயின் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஆனால் ஆபத்துக்களை சந்திக்கும் மக்களுக்கு உதவுவது நோர்வேயின் நீண்டகால வரலாறு என நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரும், சமாதான நடவடிக்கைகளின் முன்னாள் அனுசரணையாளருமான எரிக் சொல்கெய்ம் தெரிவித்துள்ளார்.
நாம் அமைதி முயற்சிக்கான அனுசரணையாளர்களாகச் செயற்பட்டோம். எமது பணிகளில் மனிதாபிமானப் பணிகளும் அடங்கும். எனவே மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் தவறில்லை. சிறீலங்காவில் மக்கள் துன்புறுத்தப்படுவது அதிகம். போரின் இறுதி நாட்களிலும் அங்கு மோசமான வன்முறைகள் இடம்பெற்றிருந்தன என அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மே 2011

மே பதினெட்டில் அனைத்து தமிழ் அமைப்பினரும் ஒன்று சேர்கின்றனர்.

தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாக அமைந்த முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போதான 40,000ற்க்கும் மேற்பட்ட தமிழர்களின் படுகொலையை நினைவுகூர நாடு கடந்த அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று வட அமெரிக்காவின் அனைத்துத் தமிழ் அமைப்புக்களும் நாடு கடந்த அரசோடு கரம் கோர்த்து செயலாற்றுகின்றன. நாடுகடந்த அரசு, அமெரிக்க தமிழ் அரசியல் விவகார அமைப்பு, கனடியத் தமிழ்க் காங்கிரஸ், கனடிய தமிழ் தேசிய மக்களவை, இலங்கைத் தமிழர் சங்கம், நாம் தமிழர் இயக்கம் - வட அமெரிக்கா, உலகத் தமிழ் அமைப்பு அமெரிக்கா, ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு, இனப்படுகொலைக்கெதிரான தமிழர் அமைப்பு என சகல அமைப்புகளும் ஒரே குரலில் தமிழர்களின் வேதனைகளை உலகிற்கு ஓங்கிச் சொல்ல முடிவெடுத்துள்ளன.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் குழு வெளியிட்ட அறிக்கையில் இந்த இனப்படுகொலை மனித குலத்திற்கும் சர்வதேச சட்டங்களிற்கும் எதிரான ஒரு கோர வன்முறை எனச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபை இந்தப் படுகொலையைத் தடுக்கத் தவறி விட்டது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.ஈழத்தில் வாழும் தமிழர்களின் குரல் அடக்குமுறைகளாலும், மிரட்டல்களாலும் அடக்கப்பட்டுள்ள இப் பொழுதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அவர்களின் குரலாக எமது விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் காத்திரமான பங்களிப்பை செய்யவுள்ளதாக மேற்படி அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் சார்பாகவும் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே 18ம் திகதி புதன்கிழமை காலை 10 மணியிலிருந்து 4 மணி வரை ஐ.நாவிற்கு முன்னால் நீதி வேண்டிய போராட்டமும், இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரை மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி நிகழ்வும் அதே இடத்தில் இடம்பெறும்.

இப்படி ஒரு ஈனத்தமிழன் சுவிசில் இருப்பது உண்மையா?

புலிப் பயங்கரவாதிகளை அழித்ததற்கு நன்றி தெரிவித்து, சுவிற்சர்லாந்தில் இருந்து தமக்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு- நேற்று (11-05-2011) அறிவித்துள்ளது.
சூசை அருளானந்தம் என்ற பெயரில் இந்தக் கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, அந்தக் கடிதத்தில் விடுதலைப் புலிகளை அழித்ததற்கு, போர்க்குற்ற நபர்களான சிறீலங்கா அரச அதிபரும், முப்படைத் தளபதியுமான மகிந்த ராஜபக்ச, மற்றும் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச ஆகியோருபக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உண்மையில் இவ்வாறான ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அப்பால், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையும், அதனைத் தொடர்ந்து கிலிகொண்டுள்ள சிறீலங்கா அரசாங்கமும், குறிப்பிட்ட கடிதத்தை ஒரு செய்தியாக்கி வெளியிட்டதன் பின்னணி என்ன என்பது பற்றி புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆராய வேண்டும்.
உண்மையில் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தால், அனுப்பியவர் ஒரு ஈழத்தமிழனா? அல்லது ஈனத்தமிழனா என்பதையும் கண்டறிய வேண்டும். சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு தமக்கு கிடைத்ததாகக் கூறி வெளியிட்டுள்ள கடிதத்தின் தமிழாக்கம்:
மேன்மை தங்கிய சிறீலங்கா அரச அதிபருக்கு,
அன்புள்ள ஐயா, அருளானந்தம் ஆகிய நான் மன்னாரில் பிறந்து, பின்னர் கந்தானை நாகொடவில் வசித்திருந்தேன். திரு. ஜோர்ஜ் ராஜபக்ச மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்தில் நான் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி இருக்கின்றேன். 66 அகவையுடைய நான் தற்பொழுது சுவிசில் வசித்து வருகின்றேன். பயங்கரவாதிகளிடம் இருந்து எனது சகோதரர்களையும், சகோதரிகளையும், உறவினர்களையும் மீட்டதற்காக நன்றி தெரிவிக்கும் நோக்கில் இந்த உளமார்ந்த மடலை வரைகின்றேன். கடந்த அரசாங்கங்களால் செய்ய முடியாது எனக் கூறியதைச் செய்துமுடித்த படையினக்கும், உயிரிழந்த வீரர்களுக்கும், கால்களை இழந்த வீரர்களுக்கும் எனது தலைசாய்த்த வணக்கங்கள். மிக்க நன்றி ஐயா, தாங்கள் ஒருவர்தான் இந்தப் பணியைச் செய்து முடிக்கும் சக்தி கொண்டவர். நீங்கள் உங்கள் கடமையைச் செய்துள்ளீர்கள். ஐரோப்பாவில் வாழும் குட்டிநாய்களைப் பற்றி அசட்டை செய்ய வேண்டாம். குரைக்கிற நாய் கடிக்காது. எனது அம்மா எனக்கு தமிழில் சொல்வார், எப்பொழுது நாய் குரைக்கின்றதோ அது ஒன்று செய்யாது என. அத்துடன், உங்களது இந்த சிறந்த பணிக்கு உதவிய திரு. கோட்டாபய ராஜபக்சவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். வாழ்த்துக்கள் ஐயா. ஏனது இதயம் நிறைந்த தலைசாய்த்த வணக்கங்கள். நான் இப்பொழுது நிம்மதியாகச் சாக முடியும், காரணம் எனது ஒருயொரு வாழ்நாள் கனவை நீங்கள் நிறைவேற்றி இருக்கின்றீர்கள். அதுதான் புலிப் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட, எப்பொழுதும் எதனையும் ஏற்றுக்கொள்ளாத அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றியுள்ளீர்கள். நான் ஐயா தங்கள் உண்மையுள்ள, சூசை அருளானந்தம்

சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள கடிதத்தின் ஆங்கில வடிவம்:
Hon. President of Sri Lanka, Dear Sir, I am Arulanantham a Sri Lankan born at Mannar lived at Nagoda Kandana and worked at the Fisheries Horbour corporation when Mr.George Rajapakse was the Minister of fisheries. I am now 66 years of age living in Switzerland. Through this e-mail comes my sincere thanks for saving my brothers and sisters and my relatives from the terrorist. I also wish to salute our heroes who lost their lives and limbs in this mission which was declared impossible by those past Governments.Thank you very much Sir, you are the one who had the courage to do this job, and you have done your duty. Forget about the tiger pups living in Europe. The barking dogs don’t bite. My mother use to tell this in Tamil, “When the dog barks it doesn’t kill the Cow”. I also wish to thanks Mr. Gothabaya Rajapakse who assisted you in this wonderful job. Well done Sir, my heartfull salute for you. I can die now peacefully. Soosai Arulanantham.
Thank you very much Sir, you are the one who had the courage to do this job, and you have done your duty. Forget about the tiger pups living in Europe. The barking dogs don’t bite. My mother use to tell this in Tamil, “When the dog barks it doesn’t kill the Cow”. I also wish to thanks Mr. Gothabaya Rajapakse who assisted you in this wonderful job. Well done Sir, my heartfull salute for you. I can die now peacefullyBecause you have fulfilled my only dream in my life. That is saving the Tamils from the tiger terrorists and the politicians selected by the same terrorists who will also play the same disk, and they will be never satisfied.
நன்றி :eelamdaily

ஸ்ரீலங்கா தூதுவரின் கூட்டத்தில் தமிழ் வர்த்தகர்கள்

கனடாவுக்கான சிறீலங்கா தூதுவர் கரு.பரணவிதாணா நடத்திய வர்த்தகசபைக் கூட்டத்தில் கனடாவைத் தளமாகக் கொண்ட பல தமிழ் வியாபாரிகள் கலந்துகொண்டது புலம்பெயர் தமிழ் மக்களிடம் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடனாவின் ரொறொன்டோ பிரதேசத்தின் மார்க்கம் பகுதியில் உள்ள சரட்டன் ஆடம்பர விடுதியில் கடந்த 30 ஆம் நாள் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தது. அதில் கனடாவுக்கான சிறீலங்கா தூதுவர் கரு பரணவிதான மற்றும் துணைத்தூதுவர் ஹெரத் ஆகியோருடன் பெருமளவான தமிழ் வியாபாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சபையின் தலைவராக பணியாற்றி வந்த தமிழரான குல செல்லத்துரை கூட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றியிருந்தார். எனினும் ஓய்வுபெற்றுச் செல்லும் செல்லத்துரையின் இடத்திற்கு மற்றுமொரு தமிழரான கணேசன் சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அந்த குழுவில் றொசான் நவரட்ணம் உட்பட பல சிங்கள இனத்தவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கனடாவில் உள்ள தமிழ் மக்களின் எழுச்சிகளை அடக்குவதற்காக 1990ஆம் ஆண்டு இந்த சபையை சிறீலங்கா அரசு மிகவும் தந்திரமாக அமைத்திருந்தது.

11 மே 2011

சூடானைப்போல் ஒரு தீர்மானம் இலங்கையிலும் ஏற்படுத்த அமெரிக்காவிடம் வலியுறுத்தப்படுகிறது.

சூடானில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை போன்றதொரு தீர்மானத்தை சிறீலங்கா விடயத்திலும் கொண்டுவருவது தொடர்பில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருவதாக கொழும்பில் இருந்து வெளிவரும் த ஐலன்ட் நாளேடு தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எதிர்வரும் 18 ஆம் நாள் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தயாராகி வருகின்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பே ஏற்பாடு செய்துள்ளது. ஐ.நாவுக்கு முன்பாக மேற்கொள்ளப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீன அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்தை பான் கீ மூனுக்கு கொடுப்பதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முயன்று வருகின்றனர்.
தடைசெய்யப்பட்ட இராசாயண ஆயுதங்களை பயன்படுத்தியமை.
40,000 மக்களை படுகொலை செய்தது.
தமிழ் மக்களையும், முன்னாள் விடுதலைப்புலிகளையும் துன்புறுத்தியமை.
தமிழ் பெண்களையும், விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளையும் கூட்டமாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியமை.
நீதிக்குப்புறம்பான படுகொலைகள்.
போன்றவற்றையே புலம்பெயர் தமிழ் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேசயம், சூடானில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை போன்றதொரு தீர்மானத்தை சிறீலங்கா விடயத்திலும் கொண்டுவருவது தொடர்பில் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்க அரசுடன் பேச்சுக்களை மேற்கொண்டு வருகின்றது.
அதற்கான அழுத்தங்களை தமிழ் மக்கள் அமெரிக்க அரசுக்கு ஏற்படுத்தி வருகின்றனர். ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடந்த தேர்தலில் ஒபாமாவை வலுவாக ஆதரித்த அமைப்பாகும். என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமளிப்போம் ஆனால் விளக்கமளிக்க மாட்டோம் சிங்களத்தின் முரண்பாடுகள்.



இலங்கையின் வடபகுதியில் இடம் பெற்ற யுத்தம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பான் கீ மூனுக்கு விளக்கமளிக்கப்படும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.எனினும் இலங்கையின் யுத்தக் குற்றச் சாட்டுகள் தொடர்பிலான தருஸ்மன் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று ஊடக பிரதானிகளுடன் இடம் பெற்ற சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை தொடர்பிலான அறிக்கையில் இலங்கையில் போர்க் குற்றம் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும், இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதையே அரசாங்கம் இலக்காக கொண்டிருந்தது. இறுதி யுத்தம் நடைபெற்ற போது,பாதிக் கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சின்னத்துடனான கப்பல் ஒன்று கோரப்பட்டது. எனினும் ஐக்கிய நாடுகள் சபை இதனை வழங்கவில்லை.எனினும் அரசாங்கம் அந்த பணிகளை சிறப்பாக மேற் கொண்டது.
எமது அரசாங்கம் மாறினாலும், சர்வதேசத்தின் அழுத்தங்கள் தொடர்ந்தும் காணப்படும் என்றார்.மேலும் தம்மால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,இந்தக் குழு முழுமையான அறிக்கை ஒன்றை வழங்கும் பொருட்டு, காலத்தை நீடிக்குமாறு கோரியுள்ளது.
எனினும் தற்போது இந்த ஆணைக்குழு இடைக்கால அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 7 அமைச்சின் செயலாளர்கள் உள்ளடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்திய விசேட குழுவொன்று இலங்கைக்கு வருவதாக தெரிவித்துள்ள போதும் அந்தக்குழு தற்போதைக்கு இலங்கை வராது என்றார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற சந்திப்புக்கள் குறித்து கருத்துரைத்த ஜனாதிபதி, இரண்டு தரப்பின் இணக்கப்பாடு தொடர்பிலும் பொது செனட்சபை ஒன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த யோசனைகள் குறித்து ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் பேசவுள்ளோம். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு கட்சியில்லை.
விடுதலைப்புலிகள் கோரியதை ஒரு போதும் வழங்க முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பீரிஸின் முரண்பட்ட கருத்து:
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் அந்த அறிக்கைக்கு அரசு பதில் அளிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
யதார்த்த நிலை குறித்து ஐ.நா.பொதுச் செயலாளருக்கு அரசு விரைவில் விளக்கம் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.நேற்றுக் காலை அலரிமாளிகையில் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவும் உடனிருந்தனர்.
அப்போது ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அமைச்சர் பீரிஸ், நிபுணர் குழுவின் அறிக்கைக்குப் பதில் அளிக்கப் போவதில்லை என்ற அரசின் இறுதி முடிவு பற்றித் தெளிவுபடுத்தினார். ”தஸ்ருமன் அறிக்கைக்குப் பதில் அளிப்பதை விடுத்து, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு செய்யும் நற்பணிகள் குறித்தும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசு செய்துவரும் மனிதாபிமானப் பணிகள் குறித்தும் ஆதாரபூர்வமான அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு அதன் செயலாளர் நாயகம் ஊடாக அனுப்பி வைப்பதற்கான ஒழுங்குகளைச் செய்து வருகிறோம்” என்றார் அமைச்சர்.
தருஸ்மன் அறிக்கை ஒரு தலைப்பட்சமான அறிக்கை என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.இந்த அறிக்கை குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பீரிஸ் பதில் அளிக்கையில், “நாம் இந்தியாவுடன் பேசி வருகிறோம். இந்தியா எங்களுக்கு எதிராகச் செயற்படவில்லை” என்றார்.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை நிராகரித்த கோத்தபாய.

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கான வாய்ப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவு தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பதற்கு அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தை 'நாங்கள் அந்தக் கட்டத்தைத் தாண்டி விட்டோம்'என்று கூறி பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்ச நிராகரித்து விட்டுள்ளார்.
போர் பிராந்தியத்திற்கு செல்ல சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் கோரப்பட்ட அனுமதியும் மறுக்கப்பட்டிருந்ததாக கசிந்த விக்கி லீக்ஸ் ஆவணம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் மறுபடியும் மறுபடியும் மறுத்து வருகிறது.
இலங்கையின் உள்நாட்டுயுத்தம் மே 2009 இல் முடிவுக்கு வந்தது.
'போராளிகள் எந்த நிபந்தனையுமின்றி நடுநிலையான ஒரு மூன்றாம் தரப்பினரிடம் சரணடையத் தயாராக இருக்கிறார்கள் என்று 2009 மே 16ஆம் திகதி கே.பி என அழைக்கப்படுகின்ற செல்வராசா பத்மநாதன் என்பவரிடமிருந்து தனக்குத் தொலைபேசி அழைப்புக் கிடைத்ததாக நோர்வேத் தூதுவர் அமெரிக்கத் தூதுவருக்கு தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது என நோர்வேஜியப் பத்திரிகையான Aftenposten தெரிவித்துள்ளது.
அமெரிக்கத் தூதுவர் இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்ட போது, தங்களுடைய அலுவலர்கள் சரணடைவதற்கு மத்தியஸ்தம் வகிக்க இராணுவ ஹெலிகொப்டர்களில் மோதல் பிரதேசத்திற்குச் செல்லத் தயாராக இருக்கிறார்கள் என்று அது தெரிவித்ததாகவும் அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு செயலர் கோட்டாபேய ராஜபக்ச முதலில் இதற்கு உடன்பட்டதாகவும், அதற்கு முதல் சரணடைய விரும்பும் போராளிகளுடைய பெயர்கள் தனக்குத் தேவை என அவர் கேட்டதாகவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் தலைவராக இருந்த போல் கஸ்ரெல்லா தெரிவித்ததாகவும் அவ்வாவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் போராளிகளால் அவ்வாறான ஒரு பெயர்ப்பட்டியலைக் கொடுக்காததால் நோர்வேயால் சாதகமான முயற்சிகள் எதனையும் இது தொடர்பில் எடுக்க முடியாமல் போய் விட்டது என்றும் அவ்வாவணம் குறிப்பிடுகிறது.
ஏராளமானோர் இறந்தும் காயப்பட்டும் இருந்த போர்ப்பிராந்தியத்துக்கு உதவி புரியச் செல்வதற்கு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் மீளவும் மீளவும் நிராகரித்து வந்தது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ச சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுமதி வழங்குவதை கடுமையாக மறுத்து வந்தார் என்றும் அக்குறிப்புக்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

10 மே 2011

தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பஷில் ராஜபக்ஷ.

வெளிநாடுகள் இலங்கை மீது சுமத்தும் போர்க்குற்றச்சாட்டுக்களுக்குத் வெறும் டொலர்களுக்காகவோ சுயலாபங்களுக்காகவோ துணை போகாதீர்கள். அறிக்கைகள் விட்டோ, வேறு வழிகளிலோ வெளிநாடுகளின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் அது உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும் என்று தமிழர்களை எச்சரித்துள்ளார் பஸில் ராஜபக்ஷ.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பிலேயே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கில் மேலும் சில பகுதிகளில் நேற்று மீள்குடியமர்வு இடம் பெற்றது. 9 கிராமசேவகர் பிரிவுகளில் 3,000 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. அமைச்சர்கள் பஸில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், அ.விநாயகமூர்த்தி, சி.சிறிதரன், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சில்வெஸ்திரி அலென்ரின் மற்றும் யாழ். மாநகர முதல்வர் ப.யோகேஸ்வரி ஆகியோர் இந்த மீள் குடியமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர். மக்களின் மீள்குடியமர்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் மேற்கொண்டிருந்தார்.
மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளை அடுத்து மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 20 வருடங்களின் பின்னர் சொந்த மண்ணுக்கும் வீடுகளுக்கும் சென்ற மக்கள், உணர்ச்சிப் பெருக்கோடு காணப்பட்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பஸில், நாட்டின் எப்பகுதியிலும் பாதுகாப்பு வலயம் என்ற ஒன்று இல்லை; சமாதான வலயங்களே இல்லை என்கிற ஜனாதிபதியின் செய்தியுடனேயே தான் இங்கு வந்திருக்கிறார் என்று தெரிவித்தார். எதிரிகள் எவரும் இல்லாத காரணத்தால் ஒரே நாட்டில் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ்வதால் பாதுகாப்பு வலயங்களுக்குத் தேவை ஏதும் இல்லை என்றார் அவர்.
"மீண்டும் எதிரிகளுக்கு இடமளிக்கும் வகையில் வெளிநாட்டுச் சக்திககளுக்கு ஊக்கமளிக்கக்கூடாது. வெளிநாட்டின் உதவியுடன் வந்த ஒப்பந்தத்தால் இந்த நாட்டில் சமாதானம் வரவில்லை. 30 வருடங்களின் பின்னர் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுத்தான் இந்த மண்ணை இன்று உங்களிடம் கையளிக்கிறார்கள். இங்கு மீளக்குடியமரும் மக்கள் வெளிநாடுகள் திணிக்கும் தவறான குற்றச்சாட்டுக்களுக்கு துணைபோகக் கூடாது. அது அழிவுக்கே வழி ஏற்படுத்தும் என்று அமைச்சர் பஸில் கூறினார்.
இந்தப் பகுதியில் மீள்குடியமர்வை நீண்டகாலத்துக்கு முன்பே செய்வதற்குத் திட்டமிட்ட போதும் சிலரின் சதி வேலை காரணமாக அது சாத்தியப்படாமல் போனதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால் அந்தச் சிலர் யார் என்பதை அவர் குறிப்பிடவில்லை. நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் உடனிருந்தார்.

பொதுமக்களை நிர்ப்பந்தித்து கையெழுத்து வேட்டை,மாவை சேனாதிராஜா கண்டனம்.

தமிழ் மக்களின் விருப்பத்துக்குமாறாக, ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக பிரதி அமைச்சர் ரத்நாயக்கா தலைமையிலான குழுவினர் பொதுமக்களை நிர்ப்பந்தித்து கையொப்பம் பெற்றமை ஜனநாயக விரோதமான செயற்பாடாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் மாவை சேனாதிராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதியமைச்சர் ரத்நாயக்க தலைமையிலான குழுவினர் யாழ்.நகர வீதிகளில் போக்குவரத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கையொப்பம் பெற்றமை கவலைக்குரியதாகும்.
நிபுணர் குழு அறிக்கையைத் தமிழ் மக்களின் சார்பில் வரவேற்பாதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ் மக்களின் கருத்துக்கு மாறாக வெளியிடங்களில் இருந்து வந்து கையொப்பத்தை பெறுவது மக்களின் உண்மையான கருத்தை வெளிப்படுத்தாது.இந்தச் சம்பவம் படையினர், காவற்துறையினர் ஆகியோரின் பிரசன்னத்துடன், நிர்ப்பந்தத்துடன் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.
இது ஒரு ஜனநாயக விரோதச் செயற்பாடு. கருத்துக்களை சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் வெளிப்படுத்துவதே நியாயமானது. மக்களை நிர்ப்பந்தித்து கையொப்பம் பெற்ற இந்தச் செயலை நாம் கண்டிப்பதுடன், இந்த நடவடிக்கைக்கு துணை போக வேண்டாம் என இங்குள்ள நிறுவனங்கள், அமைப்புகளை வேண்டுகிறோம் என மாவை சேனாதிராஜா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

09 மே 2011

சிதம்பரத்தின் மனைவியுடன் தொடர்பிலிருந்த மகிந்த!

இந்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஊடாக புலிகள் குறித்த விபரங்களைத் திரட்டுவதற்காக மகிந்த, அவரது மனைவியைக் கையுக்குள் போட்டு வைத்திருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்ட போர் நடைபெற்றவேளை, புலிகளின் மனநிலை குறித்து அறியவும், அவர்கள் நிலைப்பாடு மற்றும் சில உள்ளக தகவல்களைத் திரட்ட மகிந்த ராஜபக்ஷ இந்திய அமைச்சர் சிதம்பரத்தை பயன்படுத்தியதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் சிதம்பரத்தின் மனைவியான நளினியுடன் நெருங்கிய நட்புறவைப் பேணியதோடு, அவர் பெயரில் இருந்த நளினி தொழில் நிலைக்கூட்டு நிறுவனத்திற்கு இலங்கையின் எரிபொருள் அகழ்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியுள்ளார் என அறியப்படுகிறது.
நளினி கூட்டு நிறுவனம் அதன் உரிமையை பல கோடி இலஞ்சம் பெற்றுக் கொண்டு ரஸ்யாவிற்கும், மலேசியா ஊடாக சீனாவிற்கும் விற்றதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் செய்திகள் இந்தியாவில் இருந்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்க விடையமாகும். ஸ்பெக்ரம் ஊழல் தொடர்பாக ராசா அவர்கள் கைதான நிலையில், தற்போது காங்கிரஸ் அமைச்சர் ப.சிதம்பரத்தின் வண்டவாளங்களும் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்டப் போரில் தாம் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர முயல்வதுபோல சிதம்பரம் நாடகமாட, அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் தனது கள்ளத் தொடர்பான கனிமொழியோடு சேர்ந்து, போதாக்குறைக்கு காஸ்பர் அடிகளாரையும் இணைத்து பெரும் நாடகம் ஆடினர்.
புலிகளின் அரசியல் தலைவர்களான, ப.நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். அதன்மூலமாக அவர்கள் பல விடையங்களை தெரிந்து அதனை சிதம்பரமூடாக மகிந்தவுக்குச் சொல்லுயும் உள்ளனர். இதற்காகவே மகிந்தர் இலங்கையில் எரிபொருள் அகழ்ந்தெடுக்கும் உரிமையையும் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட மஹிந்த அரசாங்கம் காங்கிரஸ் அரசில் உள்ள பல இராஜதந்திரிகளுக்கு முதலீடுகளுக்கு இலங்கையில் நீண்டகால குத்தகைக்கு காணிகள் வழங்குதல், கறுப்புப் பணத்தை முதலீடாக மாற்றுதல், சீனா மற்றும் பல நாடுகளில் தொழில் ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொடுத்தல் ஆகிய உதவிகளை செய்து வருகின்றமையும் தற்போது தெரியவந்துள்ளது.

தென்னாபிரிக்கா பக்கம் திரும்புகிறது பார்வை.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைக்கு ஆதரவாக ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தென்னாபிரிக்காவின் ஆளும்கட்சி வெளியிட்டுள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் கவனம் தென்னாபிரிக்கா மீது திரும்பவுள்ளது.
ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் அறிக்கையால் விசனமடைந்துள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக தென்னாபிரிக்காவுக்கு விளக்கமளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இராஜதந்திர முனையில் ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு கூட்டிணைவான மூலோபாயம் ஒன்று தேவைப்படுவதாக சிறிலங்காவின் மூத்த அமைச்சர் டியு.குணசேகர தெரிவித்துள்ளார்.
தாம் விரைவில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசுக்கு நிலைமைகளை விளக்குவோம் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதனிடையே, தென்னாபிரிக்காவின் ஆளும்கட்சியான ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பிரிட்டோரியாவில் உள்ள தமது தூதுவர் டி.விஜேசிங்கவிடம் இருந்து விளக்க அறிக்கை ஒன்றைக் கோரியுள்ளது.
இந்த அறிக்கையைத் தாம் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளின் அரசாங்கங்கள் ஐ.நா அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தென்னாபிரிக்காவில் இருந்து ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் என்ற கட்சியிடம் இருந்தே ஆதரவு அளிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஐ.நாவுக்கு எதிராக யாழில் சிங்களவர்கள் ஊர்வலம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக தமிழ் மக்கள் செறிந்துவாழும் யாழ் நகரப்பகுதியில் சிங்கள காடையர்கள் நேற்று (08) ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்த ஊர்வலத்தில் சிறீலங்கா இராணுவத்தினரின் புலனாய்வுப்பிரிவினரும் கலந்துகொண்டிருந்தனர். ஊலவம் சென்ற பாதையால் சென்ற தமிழ் மக்களை வழிமறித்த சிங்கள காடையர்கள், ஐ.நாவுக்கு எதிரான மனுவில் கையொப்பங்களை இடுமாறு மிரட்டி கையொப்பங்களை சேகரித்து சென்றுள்ளனர்.
கையொப்பம் இட மறுத்தவர்களை சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்தியுள்னர். கத்தோலிக்க மதகுருவும் மிரட்டப்பட்டுள்ளார். ஐ.நாவுக்கு எதிராக நடைபெற்ற ஊர்வலத்தில் தென்னிலங்கையில் இருந்த வந்த 50 தொடக்கம் 80 வரையிலான சிங்கள காடையர்கள் பங்குபற்றியிருந்தனர்.
வேம்படி வீதியால் சென்ற இந்த ஊர்வலத்தை கண்ட தமிழ் மக்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு தப்பியோடியபோதும், பேரூந்துக்காக காத்து நின்ற தமிழ் மக்களை மிரட்டி அவர்கள் கையொப்பங்களை பெற்றுள்ளனர்.
சில இடங்களில் கையொப்பம் இடமறுத்தவர்கள் தாக்குதலுக்கும் உள்ளாகியுள்ளனர் என அவை மேலும் தெரிவித்துள்ளன.

08 மே 2011

வன்னியில் சிங்களத்தின் கோரத் தாண்டவம்!(படங்கள் கொடூரமானவை)

போரில் காயமடைந்து, மயக்கமுற்ற நிலையிலும் மற்றும் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சிக்கிய சில பெண் போராளிகளை இலங்கை இராணுவம் கொடுமைப்படுத்தி அவர்களின் தலைகளை வெட்டி துண்டித்துள்ளது. சர்வதேச போர் மரபுகளுக்கு அப்பால், ஒரு மனிதநேயம் இல்லாமல் தம்மிடம் சிக்கிய பெண் போராளிகளைக் கொடுமைப் படுத்திக் கொண்றுள்ளது இலங்கை இராணுவம். சில பெண்களின் மார்பகங்களை வெட்டி துண்டாடியுள்ளது . போர் முனையில் காயமடைந்து துரதிஷ்டவசமாக இராணுவத்திடம் மாட்டிக்கொண்ட பெண்போராளிகளை, மரியாதையோடு நடத்தவேண்டாம் நன்றிபடுத்தாமல் இருந்தாலே போதும். ஆனால் இலங்கை இராணுவமோ அதனைக் கூட விட்டுவைக்கவில்லை.
பெண்கள் என்று கூடப் பாராமல் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் துப்பாக்கியால் சுட்டும், சில பெண்களை கொடூரமாகக் கற்பழித்தும் கொலைசெய்துள்ளது இலங்கை இராணுவம். இறந்த பெண் போராளிகளின் சீருடைகளைக் களைந்து, அவர்களை மானபங்கப்படுத்தி அவமதித்து, பின்னர் அதனை மோபைல் போன்களில் வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு காட்டி மகிழ்கிறது இலங்கை இராணுவம். கொழும்பிலும் அதன் புற நகர்ப்பகுதிகளில் உள்ள மதுபாண களியாட்ட இடங்களில், மது அருந்தும் இராணுவத்தினர், அங்கே வரும் தமது நண்பர்களுக்கு பொழுதுபோக்காக இப் புகைப்படங்களை காட்டி சிரித்து மகிழ்கின்றனர். தமிழ் பெண்களை நிர்வாணமாகப் பார்க்க அவர்களது நண்பர்களும் குடிக்கச் செல்கின்றனர்.
இப்படியான ஒரு இனத்துடன் தான் எம்மை சேர்ந்து வாழச் சொல்கிறது உலக நாடுகள். இப்படியான ஒரு இனத்துடன் தான் ஒத்துப் போகச் சொல்கிறது உலக நாடுகள் ! இது சாத்தியமா, ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழுவோ, இலங்கை சென்று வந்தேன் அங்கே இப்போது ஒன்றுமே இல்லை, எல்லாம் வழமைக்கு திரும்பிவிட்டது என்று கூறும் தமிழர்களுக்கு உண்மையாகவே அங்கே என்ன நடக்கிறது என்று தெரிகிறதா ? கேளிக்கை விடுதிகளிலும், களியாட்ட இடங்களிலும் எம் தமிழ் பெண்களின் மானத்தை கப்பல் ஏற்றுகிறது சிங்கள இராணுவம். இன அழிப்பு நாளான மே 18ம் திகதி தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு எமது ஒற்றுமையை உலகிற்கு காட்டவேண்டும். போர் குற்றம் இடம் பெற்ற நாளை நாம் அனைவரும் நினைவு கூர்ந்து அதனை உலகிற்கு பறைசாற்ற வேண்டும் !
இது தொடர்பாக மேலதிகப் புகைப்படங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை நாம் ஆவனப்படுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அனுப்பிவைக்கவும் உள்ளோம். மனித நேய செயல்பாட்டாளர்கள் மற்றும் போர் குற்றம் தொடர்பாக செயல்படும் அமைப்புகள் எங்களிடம் உள்ள புகைப்படங்களப் பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி:அதிர்வு

நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பான ஸ்ரீலங்காவின் பதிலை எதிர்பார்க்கிறோம்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான நம்பகமான விசாரணை நடத்தப்படுவதையே பிரித்தானியா விரும்புவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரும், பிரதி வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதை ஐ.நாவின் அறிக்கை உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக ஐ.நாவுக்கு பரிந்துரை செய்ய பிரித்தானிய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது? சிறிலங்கா கொமன்வெல்த் உறுப்பு நாடாக உள்ள நிலையில், போர்க்குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படுவதை ஆதரிக்கிறதா? - என்று கடந்த செவ்வாய்க்கழமை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபையில் லிபரல் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் சைமன் ஹியூஜெஸ், கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கி, இது ஒரு முக்கியமான விடயம். இந்த அறிக்கையைப் பெறுவதற்கு ஐ.நா பொதுச்செயலருக்கு பிரித்தானிய அரசாங்கம் பலமான ஆதரவை வழங்கியது. இந்த அறிக்கையை நாம் கவனமாக ஆராய்ந்து வருகிறோம்.
அதேவேளை, சிறிலங்கா அரசாங்கம் இதற்கு என்ன பதில் கூறப் போகிறது என்றும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுபற்றி அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அது தெளிவுபடுத்தும். என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, கடந்த வெள்ளியன்று பொதுச்சபையில் பிரித்தானியாவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தகவல்வெளியிடுகையில்,
சிறிலங்கா அரசாங்கம நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாம் மே 15ம் நாள் எதிர்பார்க்கிறோம். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுதந்திரமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணை நடத்தப்படுவதையே நாம் விரும்புகிறோம். நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான எமது கரிசனைகளையும் நாம் வெளிப்படுத்தியுள்ளோம். அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையில் என்ன கூறப் போகிறது என்பதை அனுமானிக்க முடியாது.
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாம் சிறிலங்கா அரசைக் கேட்டுக் கொள்கிறோம். என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐ.நாவுக்கு எதிராக செயற்படக்கூடாது என சீனா,ரஷ்யா அறிவுறுத்தல்.

இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு எதிராக செயற்படக் கூடாது என சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அதன் பணியாளர்களுக்கு நெருக்கடி ஏற்படக் கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது என குறித்த இரு நாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன.
குறிப்பாக நிபுணர் குழு அறிக்கை பிரசூரிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் அதன் பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை இடம்பெறலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனை அவமரியாதை செய்யும் வகையிலான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தவிர்க்க வேண்டுமென சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றால் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொள்வது தொடர்பில் தீர்மானிக்க நேரிடும் என இரண்டு பலம்பொருந்திய நாடுகளும் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அரசியல்வாதிகள் ஐக்கிய நாடுகள் அமைப்பை விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துக்கள் வெளியிடுவதனை தடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் கொழும்புக் காரியாலயம் மற்றும் அதன் பணியாளர்களுக்கு உச்சளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை கவனத்திற் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

07 மே 2011

ஸ்ரீலங்காவிற்கான உதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்.

ஐரோப்பிய ஆணைக்குழு இலங்கைக்கான தனது மனிதாபிமான உதவித் தொகை யை மேலும் 10 மில்லியன் யூரோவினால் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
இடம்பெயர்ந்த மக்கள் தமது வீடுகளுக்கு திரும்பிச் செல்லவும் அவர்களுக்கான அடிப் படை வசதிகள் ஏற்படுத்தப்படுவதை உறுதிப் படுத்துவதற்காகவும் மேலதிக இந்நிதி அளிக் கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இம் மேலதிக நிதியானது இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் மற்றும் இவ்வருட ஆரம் பத்தில் கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் மனிதாபி மான உதவிகளை வழங்கும் எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. ஐரோப்பா இலங்கையில் ஆபத்தை எதிர் நோக்கும் சமூகங்களுக்கு பாரபட்சமின்றி தொடர்ந்து சேவையாற்றும். அத்துடன் இந் நாட்டில் நிவாரண உதவிகளுக்கும் நீண்ட கால அபிவிருத்திக்குமான இடைவெளி யைக் குறைப்பதற்காகவும் செயற்படும் என சர்வதேச ஒத்துழைப்பு மனிதாபிமான உதவி மற்றும் நெருக்கடி பதிலளிப்புக்கான ஐரோப் பிய ஆணையாளர் கிறிஸ்டாலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

சுயாதீன விசாரணை தேவை என்கிறது ஆபிரிக்கா.

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐ.நா. தலைமைச் செயலர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும் என அக்கட்சி கேட்டுள்ளது.
இந்த நிபுணர் குழுவில் யாஸின் சூகா என்ற முன்னணி தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் இடம்பெற்றுள்ளார்.
இலங்கையில் இறுதி கட்ட யுத்தத்தின் சமயத்தில் இலங்கை அரச படையினரும் சரி விடுதலைப் புலிகளும் சரி இருதரப்பாருமே சர்வதேச மனித உரிமை விதிகளையும் மனிதாபிமானச் சட்டங்களையும் மோசமான வகையில் மீறியிருந்தனர் என்று இந்த நிபுணர் குழு முடிவு தெரிவித்திருந்தது.
இந்த சட்டமீறல்களில் சில போர்க்குற்றங்களாகவும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களாகவும் அமையக்கூடியவை என்றும் அந்த நிபுணர் குழு கூறியிருந்தது.
இந்த நிபுணர்குழுவின் பரிந்துரைகளுக்கு தாங்கள் முழுமையான ஆதரவு தருவதாக ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தமிழ்ச் சமூகத்தின் முக்கியக் குறைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், அரசாங்கம் உண்மையான ஒரு சமூக நல்லிணக்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கேட்டுள்ளது.