19 டிசம்பர் 2011

அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை அமைக்க ஐ.நாவிடம் கோரிக்கை.

ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் , தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர் தயாகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் - இவையல்லாம் அனைததுலக பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தை உணர்தி நிற்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தை இத்தீர்மானம் கோரியுள்ளது.
மேலும்,சிறிலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகைள கிராம ரீதியாகக் கண்காணிப்பதற்காக உலகின் முக்கியமான நாடுகளில் கண்காணிப்புக்குழுக்களை அமைப்பது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை 2012 ஆம் ஆண்டை சிறிலங்கா அரசின் மீதான அனைத்துலக விசாரணைக்குரிய ஆண்டாhகப் பிரிகடனப்படுத்தும் தீர்மானம் ஒன்றையும் நா.த.அரசாங்கத்தின் பாராளுமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டிசம்பர் 14ம் திகதி முதல் 17 திகதி வரை இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடர் அமர்வின் நிறைவுநாளில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஆற்றிய உரையில்....
தமிழீழமே ஈழத் தமிழர் தேசத்தின் இலக்கு - அந்த இலக்கு நோக்கிய பயணத்தை நாம் உறுதியுடன் தொடருவோம் என்பதை எதிரிக்கும் உலகத்துக்கும் முரசறைந்து கூறக்கூடிய வகையில் நமது மூன்றாவது அமர்வு நிகழ்கள் நடைபெற்று நிறைவேறியிருக்கின்றன.
இந்தியாவிலிருந்தும் தென்னாபிரிக்காவிலிருந்தும் முதலாவது நியமன அரசவை உறுப்பினர்கள் இந்த அமர்வில் சத்தியப்பிரமாணம் செய்து அமர்வில் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
உலகளாவியரீதியில் தமிழர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்பின் அணிவகுக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்தக்காட்டு.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது வலுவினை அதிகரிக்கும் முயற்சியில் இது ஒரு முக்கியமான படிக்கட்டு.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பிரதிநிதிகள்;, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அறிஞர்கள் நேரடியாகப் பங்கு பற்றி வழங்கிய கருத்துரைகள் , பிரித்தானிய அரசியற்தலைவர்களின் வாழ்த்துக்கள் போன்றவையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னைத் ஈழத் தமிழர் தேசத்தின் வலுமையமாக ஆக்கிக் கொள்வதற்கு வலுச் சேர்க்கக் கூடியவை.
இவையெல்வாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மென்வலுவினைக் கம்பீரமாககப் பயன்படுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லத் துணைபுரியக்கூடியவை.
புதிதாய் அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனப்படுகொலை நிபுணர்குழு முதற்தடமையாகக்கூடித் தனது செயற்பாடுகளை ஆராய்ந்துள்ளது.
சிறிலங்கா அரசின் ஈழத் தமிழ் தேசத்தின் மீதான இனப்படுகொலையினை அனைத்துலக அரங்கிலும் உள்நாடுகளிலும் காத்திரமாக வெளிப்படுத்தக்கூடிய பல்வேறுவகையிலானன அணுகுமுறைகளை இந் நிபுணர்குழு ஆராய்ந்தது.
உள்நாடுகளில் கூடுதலான சட்டநடவடிக்கைககைளை மேற்கொள்வது குறித்தும் அனைத்துலக அரங்கில் மக்கள் நீதிமன்றங்களை அமைத்து சிறலங்கா அரசின் இனப்படுகொலை குறித்த விசாரணைகளை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டன.
2012 ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படவேண்டிய முறை குறித்து ஆராய்வதற்காக ஒரு விசேட மூலோபாயச் சந்திப்பும் மேற்கொள்ளப்பட்டது.
நள்ளிரவுவரை நீடித்த இந்தச் சந்திப்பில் உறுப்பினர்கள் காட்டிய உற்சாகம் மிகுந்த நம்பிக்கையினைத் தந்தது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திக் போரட்டப்பாதை குறித்து சமர்பிக்கப்பட்ட ஆவணம் குறித்தும் நாம் விவாதித்தோம்.
இது குறித்த விவாதங்களைத் தொடரந்து மேற்கொண்டு நாம் பயணிக்க வேண்டிய திசையினை தெளிவாக வரையறுத்துக் கொள்வதற்கு இந்த அமர்வு வழிகோலியுள்ளது.
அறிஞர்களும் செயற்பாட்டார்களும் இந்த அமர்வில் முன்வைத்த கருத்துக்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணை செய்யக்கூடியவையாக அமைந்தன. புத்தாக்கச் சிந்தனைகளுக்கு களம் அமைப்பவையாகவும் அமைந்தன.
முஸ்லீம் சகோதரர்களுக்கும் சகோதரர்களுக்குமான அரசியல் உறவுகள் தொடர்பான உரையாடல் இங்கே ஆரம்பமானது.
தமிழீழத் தாயகத்தில் சிங்களத்தின் இன அழிப்புக்கெதிராக அனைத்துலக பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது தொடர்பான ஆவணம் மீதும் சபை விவாத்தித்தது.
ஈழத் தமிழர்தயாககத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும்; அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் - இவையல்லாம் அனைததுலக பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தை உணர்தி நிற்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கியநாடு சபை செயலாழர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிநிற்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் இத்தகையதொரு அனைத்துலகப் பாதுகாகப்புப் பொறிமுiயினை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோருகிறது.
மேலும்,சிறிலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகைள கிராமரீதியாகக் கண்காணிப்பதற்காக உலகின் முக்கியமான நாடுகளில் கண்காணிப்புக்குழுக்களை அமைப்புது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா அரசு தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் குடியேற்றங்கள் தொடர்பாகவும் நாம் இச் சபையில் விவாதித்திருந்தோம்.
2012 ஆம் ஆண்டை சிறிலங்கா அரசின் மீதான அனைத்துலக விசாரணைக்குரிய ஆண்டாhகப் பிரிகடனப்படுத்தும் தீர்மானம் ஒன்றையும் நாம் இச்சபையில் நிறைவேற்றியுள்ளோம்.
இப்படியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த மூன்றாவது அமர்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் முன்னேறுவதற்கு உதுணையாகப் பல்வேறு விடயங்களை விவாதித்திருந்தது.
ஈழத் தமிழர் தேசத்தின் அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்தில் 2012 ஆம் ஆண்டு தீரக்கமான பாத்திரத்தை வகிக்கப் போகிறது எனவும் - இவ் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் ஈழத் தமிழர் தேசத்துக்கும் சவால் மிக்கதொரு ஆண்டாக அமையும் எனவும் - இந்த ஆண்டில் எவர் முன்னோக்கி ஒடுகிறார்களோ அவர்களே அடுத்த கட்ட வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன எனவும் நான் எனது மூன்hவது அமர்வுக்கான ஆரம்ப உரையில் தெரிவித்திருந்தேன்.
நடைபெற்று முடிந்த மூன்றாம் அமர்வு நிகழ்வுகள் 2012 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் தேசத்தின் ஆண்டாகவே அமையப் போகிறது என்பதனை எமக்கு உள்ளுணர்த்தி நிற்கின்றன.
2012ம் ஆண்டை நமது ஆண்டாக வென்றெடுக்க அனைவரும் திடசங்கற்பம் பூண்டு உழைப்போமாக என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனதுரையில் தெரிவித்தார்.
இதேவேளை அமர்வில் உணர்வுபூர்வ நிகழ்வாக பார்வையாளராக கலந்து கொண்ட தாயொருவர் தமிழீழக் கொடியேற தன் (தாலி) கொடியை தமிழீழ அரசாங்கத்துக்கு வழங்கிய உணர்வுபூர்வ நிகழ்வு குறித்து குறிப்புரைத் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள்....
தாயகத்தில் எமது தாய்மார்களினதும் சகோதிரிகளினதும் கழுத்துக்களில் தொங்கும் தாலிகள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு தாலிக்கொடி இறங்கியது. ஈழத் தமிழர் தேசம் தனக்கெனச் சுதந்திரமான இறைமையுடைய தமிழீழத் தனியரசினை அமைத்து, தமிழீழத் திருநாட்டின் தேசியக் கொடி உலக அரங்கில் பட்டொளி வீசப் பறக்க வேண்டும் என்பதற்காக - இந்த அமர்வில் நமது தேசத்தின் தாய் ஒருவர் தனது கழுத்திலிருந்த தனது தாலிக்கொடியினை தானே இறக்கி - நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் ஒப்படைத்த நிகழ்வை நாம் இந்த அரங்கில் கண்டோம்.
இது நம் எல்லோர் நெஞ்சையும் நிகழச் செய்தது. நமது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
இந்தத் தாய் நமது மக்களின் விடுதலை உணர்வின் குறியீடு.
தேசியத்தலைவரின் தiமையில் தமிழீழ மண்ணிலே தமிழீழ நடைமுறை அரசு அமைக்கப்பட்டு, விடுதலைப் போராட்டம் வீச்சாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இத்தகைய நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். அந்த உணர்வுகளுக்கு சற்றும் குறையாத வகையில் தமிழ் மக்களின் அர்பணிப்பு உணர்வைததான் இந்தத்தாயின் வடிவில் நாம் இந்தச் சபையில் கண்டோம்.
இதனைத் தொடர்து இங்கு கூடியிருந்தோர் பலரும் தம்மிடம் இருந்த தங்கச் சங்கிலிகளையும் பணத்தையும: பங்களிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்களாக வழங்கியமையும் நாம் கண்டோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றிகரமாக தனது இலக்கு நோக்கிய பயணத்தைத் தொடர வேண்டும் என்பதில் அனைவரும் கொண்டிருக்கும் பற்றுதியை இவை வெளிப்படுத்தி நிற்கின்றன என பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.

- நாதம் ஊடகசேவை -

18 டிசம்பர் 2011

வேடிக்கையான ஸ்ரீலங்கா நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்ற விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வேடிக்கையளிப்பதாக சனல்4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
அது மேலும் தெரிவித்துள்ளதாவது,
வெளியாகியுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொதுமக்களை குறிவைத்து இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக யுத்த சூனியப் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் எத் தாக்குதலையும் நடத்தவில்லை என அவ்வறிக்கையில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சிறிய அளவு பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடயம் என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அது செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஐ.நாவின் அறிக்கையை அது இணைத்து சில ஆதாரங்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தை தயாரித்த “காலம் மக்ரே” அவர்கள் இதில் பல விளக்கங்களைக் கொடுத்துள்ளார்.
மேலும் “தண்டிக்கப்படாத குற்றங்கள்” என்ற தலைப்பில் மற்றுமொரு 30 நிமிட ஆவணப்படம் ஒன்றை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளது.
வரும் ஜனவரி மாதம் வெளியாகவுள்ள இந்த ஆவணத் திரைப்படத்தில் புதிய பல போர்க்குற்ற ஆதாரங்கள் இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



அவுஸ்ரேலியா சென்ற அகதிகள் படகு கடலில் மூழ்கியது!

சுமார் 380 அகதிகளுடன் அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற படகு ஒன்று இந்தோனேசியக் கடற்பரப்பில் நேற்றுக் கவிழ்ந்ததில் 300 இற்கும் அதிகமானோர் காணாமற்போயுள்ளனர்.
கிழக்கு ஜாவா கடற்பகுதியில் கவிழ்ந்த இந்தக் கப்பலில் பயணம் செய்த 76 அகதிகளை மீட்டுள்ளதாக ஜாவா அவசரகால மீட்பு பணியகத்தின் தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
மரத்தினாலான இந்தப் படகில் அளவுக்கதிகமானோர் பயணம் செய்துள்ளதாகவும், இராட்சத அலைகளால் தாக்கப்பட்டு அது கவிழ்ந்திருக்கலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இநதப் படகில் பல்வேறு நாட்டவர்கள் பயணம் செய்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரையில் இருந்து 90 கி.மீ தொலைவில் மூழ்கிய இந்தப் படகில் 40 சிறுவர்கள் வரை பயணம் செய்ததாக, தப்பிப் பிழைத்த ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர் கூறியுள்ளார்.
அங்குமிங்குமாக சாய்ந்த கப்பல் உடைந்து நீரில் மூழ்கியதாகவும், அப்போது உடைந்து போன பாகங்களை பற்றிப் பிடித்தவாறு தத்தளித்துக் கொண்டிருந்த தம்மை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படகில் பயணம் செய்த 200 இற்கும் அதிகமானோர் மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சிறிலங்காவில் இருந்தும் அண்மையில் அகதிகள் அவுஸ்ரேலியா நோக்கி சென்றுள்ள நிலையில் இந்தப் படகில் சிறிலங்காவைச் சேர்ந்தவர்களும் பயணம் மேற்கொண்டனரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

ஒட்டுசுட்டான் ஆலய தீர்த்தக்கேணியில் குளித்த சிங்களவர் பலி!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் கேணியில் அத்துமீறி நீராடிய சிங்களவர் ஒருவர் இன்று அதிகாலை நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தென்னிலங்கையில் இருந்து வன்னிக்குச் செல்கின்ற சிங்களவர்கள் ஒட்டுசுட்டான் சிவன்கோவிலில் தங்கி கோவில் கேணியில் குளித்து கேணியினை அசிங்கப்படுத்திவந்திருக்கின்றனர். இது தொடர்பில் கோவில் நிர்வாகமும் ஊர் மக்களும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்ற போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. கோவில் வளாகத்தில் மாமிச உணவுகளை உட்கொள்வது, மதுபோதையில் நடமாடுவது போன்ற நடவடிக்கைகளை சிங்களவர்கள் தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு நேற்று இரவு அங்கு தங்கியிருந்த சிங்களவர்களில் ஒருவர் கோவில் கேணியில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றார். அவரது உடலம் முற்பகல் வரையில் மீட்கப்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சில உடைகளும், 30 ரூபா பணமும் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
ஆலய கேணியில் ஊர் மக்கள் எவரும் நீராடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் சிங்களவர்கள் அத்துமீறி குடியேறியுள்ளனர்.

முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் தொடர்ந்தும் தெற்கில் இருந்து வந்தவர்களால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இப் பகுதியில் 240 இற்கும் மேற்பட்ட தெற்குக் குடும்பங்கள் குடியேறியுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறினர்.முல்லைத்தீவு முகத்துவாரம் பகுதியில் உள்ள காணிகள் அனைத்தும் பூர்வீகமாகத் தமிழர்கள் வாழ்ந்த காணிகள் என அந்த மக்கள் கூறுகின்றனர். அதற்கு அரசினால் வழங்கப்பட்ட சட்ட ஆவணங்களும் தம்மிடம் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிங்களக் குடும்பங்களே தொழில் நிமித்தம் முகத்துவாரம் பகுதியில் தங்கியிருந்தன. எனினும் தற்போது நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்த 240 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் முகத்துவாரம் பகுதியில் உள்ள தமிழர்களின் காணிகளை அபகரித்து அடாத்தாகக் குடியமர்ந்துள்ளன.
அத்துடன் முகத்துவாரம் கடற்பகுதியையும் அவர்கள் முழுமையாகத் தமது கட் டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அங்கு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு நீர்கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளிலும் சொந்தமான வீடுகள், காணிகள் என்பன உள்ளன.
தமிழரின் நிலங்களைத் திட்டமிட்டு ஆக்கிரமிக்கும் நோக்கிலேயே இந்த மக்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளனர். இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இது குறித்து உடனடிக் கவனம் செலுத்தி பிரச்சினைகள் ஏற்படுவதைச் சம்பந்தப்பட்டோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

இலங்கைக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு சர்வதேச பொலிஸ் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளதாம்.

இலங்கைக்கு எதிராக செயற்பட்ட 70 பேருக்கு சர்வதேச பொலிஸார் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளனர் என திவயினபத்தரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இவர்களில் 29 பேர் பாரிய பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பல கோடி ரூபா வெட் வரி மோசடியில் ஈடுபட்ட கயிப் குதுப்தீனின் பெயரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உப தலைவராக கடமையாற்றிய வேலுப்பிள்ளை ரேமன் என்பவருக்கு எதிராகவும் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள், இணைய தளமொன்றை நடத்திய நபர் ஒருவர் ஆகியோரது பெயர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முதல் தடவையாக பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் பெயரையும் இதில் உள்ளடக்கியுள்ளதாக திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

17 டிசம்பர் 2011

நாம் அஞ்சியது போன்று பக்கச்சார்பான அறிக்கையாகவே அமைந்துள்ளது.

சிறிலங்காவில் பிரச்சினைகள் இருப்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஒப்புக்கொண்டுள்ள போதும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மோசமான குற்றங்கள் குறித்த சான்றுகளையும் போர் தொடர்பான ஏனைய சட்டமீறல்களும் இந்த அறிக்கையில் அலட்சியம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச்சபை கூறியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரீபி,
“நாங்கள் ஏற்கனவே அஞ்சியது போன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பானதாகவே அமைந்துள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்த மனிதஉரிமைகள் நிலைமையை முன்னேற்றுவது தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் கண்டறிவுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்“ என்றும் சாம் சரீபி தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க(மகிந்த)ஆணைக்குழு அறிக்கையை கூட்டமைப்பு ஏற்கவில்லை.

நல்லிணக்கத்திற்கான (மகிந்த ஆணைக்குழு) படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “அடிப்படையில் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறி நிராகரித்துள்ளது. அறிக்கை குறித்த தமது நிலைப்பாட்டை விளக்கி ஒரு விரிவான அறிக்கையை கூட்டமைப்பு விடும் என்றும் அதன் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
குற்றம் எதுவும் புரியவில்லை என்று கூறி இராணுவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே அறிக்கை இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுக்கான பரிந்துரைகள் அர்த்தமற்றவை, பொருளற்றவை, அது குறித்து விரிவாக ஆய்ந்தறியாமல் தெரிவிக்கப்பட்டவை என்று மேலும் அவர் கூறி உள்ளார்.

16 டிசம்பர் 2011

கேகாலையில் தமிழர்கள் மீது சிங்கள இனவெறியர்கள் வாளால் வெட்டி அட்டூழியம்!

கேகாலை, எட்டியாந்தோட்டையில் இந்து ஆலயத்துக்குள் அத்துமீறிப் புகுந்து சிங்கள இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வெறியாட்டத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து குறித்த பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதன்போது, வாள்வெட்டுக்கு இலக்கான தமிழ் இளைஞர்கள் ஐவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் இருந்த சிங்கள இளைஞர்கள் எட்டியாந்தோட்டை, எதுராபொல தோட்டம் கீழ்ப் பிரிவில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்துக்குள் நேற்றுமுன்தினம் மாலை நுழைவதற்கு முயற்சித்துள்ளனர்.
போதையில் ஆலயத்துக்குள் வரவேண்டாம் எனக்கூறி அங்கிருந்த தமிழ் இளைஞர்கள் அவர்களை ஆலயத்திற்குள் பிரவேசிக்கவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் தமிழ் இளைஞர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டது.
கடும் கோபத்துடன் திரும்பிச்சென்ற சிங்களவர்கள் தங்களது கோஷ்டியினர் சகிதம் மீண்டும் ஆலய வளாகத்துக்குள் வந்து, தமிழ் இளைஞர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.
வாள்வெட்டுக்கு இலக்கான தமிழ் இளைஞர்கள் ஐவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவத்தையடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதியால் வீட்டுக்குள்ளேயே உறைந்துப்போயுள்ளனர். தங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு குறித்த பிரதேசத்தில் வாழும் மக்கள் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அசுரவேகத்தில் செயற்பட்ட மனோ, புளத்கொஹுபிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திஸாநாயக்கவுடன் தொடர்பு கொண்டு இது விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். அவிசாவளை பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு இந்தச் சம்பவத்தை அவர் கொண்டுசென்றுள்ளார்.
எதுராபொல கீழ் பிரிவு தோட்டத்துக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படுமென பொலிஸார் மனோவிடம் உறுதியளித்துள்ளனர். அத்துடன், இச்சம்பவத்தை மனோ கணேசன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கடற்படையின் இரகசிய தடுப்பு முகாமில் காணாமல் போனோரில் பலர் உள்ளனர்?

திருகோணமலை கடற்படை முகாம் அமைந்துள்ள வளாகத்தில் இரகசியத் தடுப்பு முகாம்கள் இயங்கிவருகின்றன என்று தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது காணாமற்போனோரைத் தேடியறியும் குழு.கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் இந்த முகாம்களில் காணாமல்போனோர்களில் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தமக்குத் தகவல் கிடைத்துள்ளது என்றும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல்களின் உண்மைத் தன்மை என்னவென்பதை அரசு உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும் என்று காணாமற்போனோரைத் தேடியறியும் குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக “உதயனு”க்குக் கருத்து வெளியிட்ட, காணாமல்போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் எஸ்.மகேந்திரன் கூறியவை வருமாறு:
திருகோணமலை கடற்படை முகாம் அமைந்துள்ள அடர்ந்தக் காட்டுப் பிரதேசத்தில் இரகசிய முகாம்கள் இயங்கிவருகின்றன என்று எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. காணாமல்போனோரின் உறவினர்கள் தமது உறவுகள் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என எம்மிடம் முறையிட்டுள்ளனர்.
காணாமல்போன தனது கணவரை திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள இரகசியத் தடுப்பு முகாமொன்றில் தான் சந்தித்துப் பேசினார் என பெண்ணொருவர் எம்மிடம் கூறியுள்ளார். பாதுகாப்புக் காரணங்களைக் கருத்திற்கொண்டு அவர் மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.
எது எப்படியிருப்பினும், இரகசிய முகாம்கள் குறித்து எமக்கு நம்பகரமான தகவல் கிடைத்துள்ளது. இரகசிய முகாம்கள் அங்கு இயங்குகின்றனவா என அது தொடர்பான உண்மைத்தன்மையை அரசு கட்டாயம் வெளியிடவேண்டும். காலத்தைக் கடத்தாது வெகுவிரைவில் இது தொடர்பாக தெளிவுப்படுத்துமாறு நாம் அரசைக் கோருகின்றோம் என்றார்.

15 டிசம்பர் 2011

யாரடா நீ?வெளியே போய் குப்பை கிடந்தால் பொறுக்கு"!

“யார் ஊழல் செய்தாலும் நான் அதை சுட்டிக் காட்டுவேன்” மேயரைப் பார்த்து உரையாற்றிய மங்கள நேசனால் சபை அல்லோல கல்லோசப்பட்டுள்ளது.
“நான் பேசும் போது யாரும் பேசக் கூடாது! யார் ஊழல் செய்தாலும் நான் அதை சுட்டிக் காட்டுவேன்” என ஆவேஷமாக யாழ் மாநகர சபை மேயரைப் பார்த்து காட்டமாக கடிந்து கொண்டார் ஈபிடிபி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மனுவல் மங்களநேசன்.
யாழ் மாநகர சபையின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்.மாநகர சபை முதல்வர் தலமையில் யாழ் மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ் மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசன் முதல்வரை தரக் குறைவாக பேசியதாகவும் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையே முரண்பாடும் மோதலும் வெடித்தது.
பிரதி மேயர் றீகன் மேயருடன் மரியாதையாக நடந்து கொள்ளவேண்டும் என்று மங்களநேசனிடம் கூறியதும் “நீ யாரடா? யார்? உனக்கு இங்கு என்ன வேலை வெளியில் குப்பை ஏதும் கிடந்தால் போய் பொறுக்கு” என்று கோவத்துடன் பேசினார் மனுவல் மங்கள நேசன்.
உங்களுக்கு பேசுவதற்கு உரிமையிருக்கிறது. ஆனால் மரியாதையாக பேச வேண்டும் என சபை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதும் அமைதியாகி தனது உரைமுடிந்ததும் உடனே சபையை விட்டு வெளியேறிச் சென்றார்.
இதேவேளை மங்களநேசன் சபையில் இருந்து வெளியேறியதுடன், தான் லெபனானில் ஆயுதப் பயிற்சி பெற்ற பலத்தை யாழ்.மாநகர சபையில் தான் அங்கம் வகித்த கட்சிக்கு எதிராகப் பயன்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
இருந்தும் மூன்று மொழி தெரிந்தவர் ஒரு மொழியிலேயே இவ்வாறு என்றால் மிகு இரண்டு மொழியும் பேசினால்...?
இதேவேளை தான் வகித்த கட்சிக்கு எதிராக இவ்வாறு துணிவுடன் சபையில் போராடிய மங்களநேசனைப் பார்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் திருந்திக் கொள்ள வேண்டும்.
இல்லாவிடில் மங்களநேசனிடம் போய் கற்றுக் கொள்ள வேண்டும்.
நன்றி:tamilcnn

அனைத்துலக ஆணைக்குழு என்ற சம்பந்தனின் கனவு பலிக்காதென்கிறார் பீரிஸ்.

போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக விசாரிக்க அனைத்துலக ஆணைக்குழுவைக் கொண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று கூறியுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
"தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சம்பந்தன், ஐதேக உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல போன்றோர் எமது வெளிநாட்டுக் கொள்கை பற்றிப் பேசுகின்றனர். அது தவறானது, நிராகரிக்கப்பட்டது என்று கூறுகின்றனர். எமது வெளிநாட்டுக் கொள்கை எமது நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதாகவும், எமது மக்களின் தேவைகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவுமே இருக்க வேண்டும்.
இரா.சம்பந்தன் அறிவுபூர்வமாக பேசவில்லை. உணர்வுபூர்வமாகப் பேசுகிறார். பிரச்சினைகளுக்கு அறிவுபூர்வமாகப் பேச்சு நடத்தித் தான் தீர்வுகளைப் பெறமுடியும். கடந்த செப்ரெம்பரில் ஐ.நா மனிதஉரிமை பேரவை மாநாட்டில் சிறிலங்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஒரே ஒரு நாடு மட்டுமே எமக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்தது. அப்போது நான் சிறிலங்கா அதிபருடன் நியுயோர்க்கில் இருந்தேன். அங்கிருந்து கொண்டே சுமார் 15 நாடுகளின் அமைச்சர்களுடன் எம்மால் கலந்துரையாட முடிந்தது. இதனால் எமக்கு எதிராக அறிக்கை சமர்ப்பித்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரே தமது அறிக்கையை விலக்கிக் கொண்டார்.
பின்னர் ஒக்டோபரில் கொமன்வெல்த் மாநாட்டின் போது அவுஸ்ரேலிய ஊடகங்கள் சிறிலங்காவை விமர்சித்து பரப்புரைகளை மேற்கொண்டன. 2013 கொமன்வெல்த் மாநாட்டை நடத்தும் வாய்ப்பு சிறிலங்காவுக்கு கிடைக்காது என்று சிறிலங்காவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் ஊடகங்கள் வெளியிட்டன.
இதன்போதும் நாம் பல நாடுகளுடன் நடத்திய பேச்சுக்களுக்கு வெற்றி கிடைத்தது. பெரும்பாலான நாடுகளின் ஆதரவு, எமக்குக் கிடைத்த போதும் ஒரே ஒரு நாடு எமக்கெதிராக செயற்பட்டது. இதன்போதும் மேலும் 15 நாடுகள் எமது நியாயத்தை, ஏற்றுக் கொண்டு ஆதரவளிக்க முன்வந்தன. முடிவில் 2013ம் ஆண்டு கொமன்வெல்த் மாநாடு எமது நாட்டுக்கு வழங்கப்பட்டது. இது எமக்கு கிடைத்த பெரியவெற்றி.
எமது வெளிநாட்டுக் கொள்கை தவறானதோ அல்லது நிராகரிக்கப்பட்டதோ அல்ல என்பதை எடுத்துக் காட்ட இவற்றை சிறந்த ஆதாரமாகக் காட்டலாம். விமர்சனங்கள் இருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு, இறைமை போன்ற விடயங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.
போர்க்கால சம்பவங்களை ஆராய உள்ளக விசாரணைகளை நிராகரித்து விட்டு அனைத்துலக விசாரணைகளைக் கோருகிறார் இரா.சம்பந்தன். இதனை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது. லூயிஸ் ஆபர் அம்மையாரின் கருத்துக்களை அவர் ஆதரிக்கிறார். இது எமது நாட்டுக்கள் எந்த சர்வதேச அமைப்பும் பிரவேசிக்கலாம் என்பதையே கொண்டுள்ளது.
சர்வதேச தலையீட்டை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. அதற்கு இடமளிக்கவும் போவதில்லை. போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக விசாரிக்க அனைத்துலக ஆணைக்குழுவைக் சிறிலங்காவுக்குள் கொண்டு வரும் கூட்டமைப்பின் கனவு ஒருபோதும் பலிக்காது.
தருஸ்மன் அறிக்கையானது (ஐ.நா நிபுணர்குழு) யாரிடம் சாட்சிகளைப் பெற்று தயாரிக்கப்பட்டது என்பது எவருக்குமே தெரியாது. இந்தநிலையில் அது எப்படி உண்மைத்தன்மையானதாக இருக்க இருக்க முடியும்? அது அரசியல் இலாபங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று.
அனைத்துலக காவல்துறையிடம் எமது பிரச்சினைகளை ஒப்படைக்க நாம் தயாரில்லை. சில கொள்கைகள் எமது நாட்டுக்குப் பொருத்தமானதல்ல என்பதை ரணில் விக்கிரமசிங்கவும் உணர வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

எனக்கு தேசிய விருது கொடுத்திருந்தால் முகத்தில் வீசி எறிந்திருப்பேன்!

சென்னையில் ‘கொள்ளைக்காரன்’ பட விழாவில் இயக்குநர்கள் செல்வமணி, தங்கர்பச்சான், அமீர், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் தங்கர்பச்சான், ’’தமிழன் எப்படி வஞ்சிக்கப்படுகிறானோ? அதே மாதிரி தமிழ் சினிமாவும் புறக் கணிக்கப்படுகிறது. தேசிய விருதை நாம் கவுரவமாக நினைத்துக்கொள்ளக்கூடாது. மத்திய அரசு நமக்கு கொடுத்திருக்கும் தேசிய விருதுகளை நாம் தூக்கி வீசுவோம்.
எனக்கு அப்படி ஒரு விருது கொடுத்திருந்தால், முகத்தில் வீசி எறிந்திருப்பேன். என்றைக்கு காவேரி பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ? என்றைக்கு முல்லைப்பெரியாறு பிரச்சனை தீர்க்கப்படுகிறதோ? என்றைக்கு தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படுகிறதோ? அன்றைக்கு வாங்கிக்கொள்வோம் தேசிய விருதுகளை’’ என்று ஆவேசமாக பேசினார்.
அவர் மேலும், ‘’டெல்லியில்தான் நம்மை மதிக்கமாட்டேங்கிறார்கள். நம்மை நாமே ஒதுக்கி வைப்பதுதான் வேதனை.
சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் அனைவராலும் பாராட்டப்பெற்ற தென்மேற்கு பருவக்காற்று, செங்கடல் படங்கள் தேர்வாகவில்லை’’ என்று பேசினார்.

14 டிசம்பர் 2011

நந்திக்கடலில் நடந்ததென்ன என விசாரித்த சீன படையதிகாரி.

போரின் இறுதிக்கட்டத்தில் நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த தரை நடவடிக்கைகள் பற்றிய குறிப்பிடத்தக்க சில விபரங்களை சீனாவின் உயர்மட்ட படைஅதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தரப்பை மேற்கோள் காட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுக்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள சீன இராணுவத்தின் அதிகாரிகளுக்கான பிரதி தலைலர் ஜெனரல் மா சியாவோரியன் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவைச் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின் போதே, போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க சிறிலங்கா இராணுவத்தினால் தரை நடவடிக்கையின் போது கையாளப்பட்ட வழிமுறைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பாக சீனப் படை அதிகாரிகள் குழு விசாரித்து அறிந்து கொண்டுள்ளது.
சிறிலங்கா இராணுவம் போர் வெற்றி கொள்ளப்பட்ட முறைமை தொடர்பாக பலமுறை விளக்கமளித்திருந்த போதும், சில குறிப்பிட்ட விடயங்கள் குறித்து சீன அதிகாரிகள் சிறிலங்கா இராணுவத் தளபதியிடம் விசாரித்துள்ளதில் இருந்து, அவை வெளிவராத இரகசியத் தகவல்களாகவே இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதேவேளை சிறிலங்கா இராணுவத்துக்கான பயிற்சிகள் மற்றும் உதவிகளை அதிகரிப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனிடையே சீன ஜெனரல் மா சியாவோரியன் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவையும் சீனப் படையதிகாரிகள் நேற்று சந்தித்துப் பேசியுள்ளனர்.
இவர்கள் கூட்டுப்படைகளின் தளபதி எயர் மார்சல் றொசான் குணதிலக உள்ளிட்ட பாதுகாப்புத் துறைசார்ந்த பலரையும் சந்திக்கவுள்ளனர்.
அத்துடன் சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு நிலைகளுக்கும் இவர்கள் பயணம் செய்யவுள்ளனர்.
இந்தக் குழுவில் சீனப் பாதுகாப்பு அமைச்சின் வெளிவிவகாரப் பணியகத்தின் பிரதித் தலைவர் றியர் அட்மிரல் குவான் யூபி, ஜெனரல் மா சியாவோ ரியனின் செயலர் மூத்த கேணல் குவோ ஹொங்வெய், பாதுகாப்பு அமைச்சின் ஆசிய விவகாரப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் மூத்த கேணல் சொங் யன்சாவோ, கேணல் சா ஓ மெங், கேணல் லியூ பின், கப்டன் ஜியாங் பின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

13 டிசம்பர் 2011

சரத் பொன்சேகா விடயத்தில் அமெரிக்கா தலையிட தயார்.

போதியளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டால் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் தலையீடு செய்யத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் இணையத்தின் ஊடாக, அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது.
சரத் பொன்சேகாவின் குடும்ப அங்கத்தினர்கள் இந்த மகஜருக்கான கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். 25ஆயிரம் கையொப்பங்கள் திரட்டப்பட்டால் சரத் பொன்சேகா விவகாரத்திலை தலையீடு செய்ய முடியும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் 25ஆயிரததிற்கு மேற்பட்ட கையொப்பங்களுடன் மகஜர் அனுப்பி வைக்கப்பட்டால் அந்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை தலையீடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. சரத்பொன்சேகாவின் சிரேஸ்ட புதல்வி அப்சரா பொன்சேகா இந்த மகஜருக்கான கையொப்பங்களை திரட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோபல் பரிசின் மகிமை புரியாத அஸ்வர்!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர்.
தீவிரவாதத்தை முற்றாக அழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதற்காகவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
முப்பதாண்டு கால தீவிரவாதத்தினால் கொலைகளும் இரத்தக்களரியும் வழக்கமாக இருந்தது. தினமும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதத்தை தோற்கடிப்பதில் உலகில் எந்தவொரு தலைவராலும் சாதிக்க முடியாததை மகிந்த ராஜபக்ச சாதித்துள்ளார்.“ என்றும் அஸ்வர் மேலும் கூறியுள்ளார்.

12 டிசம்பர் 2011

மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கனடா கடுமையாக நடக்கும்.

கனடியப் பிரதமர் ஹார்ப்பர் தலைமையிலான அரசானது மனிதவுரிமைகளை, மதவுரிமைகளை மதிக்காத எவரையும் இனிவரும் காலங்களில் கண்டிப்பான அணுகுமுறையுடனே நடாத்தும் என கனடிய விளையாட்டுத்துறை அமைச்சரான பால் கோசல் கனடிய மனிதவுரிமை மையத்தால் நடாத்தப்பட்ட வருடாந்த நிகழ்வில் பேசும் போது குறிப்பிட்டார்.
கனடிய கொன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் ஆகியோருடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேசும் போது இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக கனடியப் பிரதமர் அக்கறை செலுத்துகிறார் என்பதை தாங்கள் அண்மைய காலங்களில் காண்பதாகத் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்வில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் பீற்றர் சில்வமன் பேசுகையில்
உலகம் எப்போதுமே ஒரு துண்ப நிகழ்வு இடம்பெறும் போது அது மீண்டும் இடம்பெறாது என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும் ஆனால் உலகின் போக்கில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்க முடியவில்லை என்றும், யூதர்களான தாங்கள் 1940க்களில் பட்ட துன்பத்தையொத்த ஒரு நிலையில் ஈழத் தமிழர்கள் இருப்பதை தான் நன்கு உணர்ந்தே கனடிய மனிதவுரிமை மையத்துடன் இணைந்து செயற்பட ஒத்துக் கொண்டதாகவும் தெரிவித்ததோடு தனது மனைவி கூட ஜேர்மனியிலிருந்து ஹிட்லரால் வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவர், அகதி முகாம்களில் வசித்து உயிர் தப்பியவர் என்பதையும் நினைவு கூர்ந்ததோடு, இதுவரை நடந்தவற்றிக்கு சிறீலங்கா அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் பலம், தகுதி என்பன புலம்பெயர்ந்த தமிழர்களிடமே இருக்கிறது என்றும் அவர்கள் அதனைச் செய்யாவிட்டால் எஞ்சியிருக்கும் தமிழர்களிற்கு பாதிப்பு ஏற்படும் போதும் உலகம் மௌனமாக இருக்க வழி செய்தவர்களாக புலம்பெயர்ந்த தமிழர்கள் மாறிவிடுவார்கள் என்றும் தெரிவித்தார்.
உலகின் போக்கை மாற்ற புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு இன்று தேவையானது கனடிய மனிதவுரிமை மையம் போன்ற ஒரு தலைமையும் உலகை வெல்லக்கூடிய ஒரு படிமுறையான சாதக வேலைத் திட்டமுமே என்றும் குறிப்பிட்டார்.
கனடாவில் இருக்கும் பதின்ம வயதைக் கடந்த தமிழர்கள் ஆளுக்கு 50 ரூபா வீதம் இதற்காக அன்பளிப்புச் செய்தாலே ஆகக் குறைந்தது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழின ஆண், பெண்பாலரிடமிருந்து எவ்வளவு நிதி கிடைக்கும் என்பதை கருத்திற் கொண்டு செயலாற்ற வேண்டும் எனவும்,
பணமே சிறீலங்கா போன்ற நாடுகளிற்கு எதிரான படிமுறைத் திட்டங்களை எடுத்துச் செல்வதற்கு தேவையான முதன்மைக் காரணி என்றும் யுதர்கள் தங்கள் நாட்டிற்குச் செய்தது போல கனடியத் தமிழர்களும் ஒன்றுபட்டு, ஒருமித்து சிறீலங்கா அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஆவன செய்து இனி இருக்கும் ஈழத் தமிழ்ச் சந்ததியையாவது காப்பாற்ற உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் ஈழத்தமிழர்களின் நண்பரான பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
யூத இனத்தவரான பீற்றர் சில்வமன் மேலும் கூறுகையில் ஒருநாள் கனடிய மனித உரிமைமையமானது [ www.chrv.ca ] சிறீலங்காவின் ஆட்சி பீடத்துடன் கனடியத் தமிழர்களின் பிரதிநிதிகளாக ஈழத்தமிழர்களின் உரிமைகளிற்காக அழுத்தங்கொடுத்துப் பேசக் கூடிய இராசதந்திர அமைப்பாக மாற வேண்டும் அதுவே ஈழத்தமிழர்களின் உச்சக்கட்ட அரசியல் சாணக்கியம் என்றும் அத்தகைய அழுத்தமே எஞ்சியுள்ள ஈழத்தமிழர்களை எழுச்சிபெற வைக்கும் எனவும் தெரிவித்தார்.

11 டிசம்பர் 2011

ஜே.வி.பி.கிளர்ச்சிக்குழுவில் விடுதலையான போராளிகளை இணைக்க திட்டமாம்.

ஜே.வி.பி கட்சியிலிருந்து பிளவடைந்துள்ள கிளர்ச்சிக் குழுவினர் முன்னாள் விடுதலைப் புலி போராளிகளை தமது அமைப்பில் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்தில் மீள இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஆகியோரை தமது இயக்கத்தில் இணைத்துக் கொள்ள அவர்கள் முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தமது இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளுக்காக பேராதனை மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
எட்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளை மாணவர்கள் மேற்கொள்வார்கள் என்று இலங்கையின் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் வடக்கின் சிவில் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம்.
அத்துடன் முன்னாள் போராளிகளின் உதவியுடன் வடக்கிலிருந்து தெற்கிற்கு ஆயுதங்கள் கடத்தப்படலாம் எனவும் புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை ஜே வி பியின் கிளர்ச்சிக்குழு மற்றும் நாம் இலங்கையர் அமைப்பின் வடக்கு இணைப்பாளரான லலித்குமார் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொலைபேசியில் அழைத்து மகிந்தவை கண்டித்த பெண்!

அலரி மாளிகையின் தொலைபேசி இயக்குனருக்கு அந்த அழைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தொலைபேசியில் சிங்களத்தில் பேசிய பெண், தன்னை அனோமா பொன்சேகா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சிறிலங்கா அதிபருடன் பேச வேண்டும் என்று கேட்டார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடும்பத்தின் சார்பில் அவர் சிறிலங்கா அதிபரிடம் பொதுமன்னிப்புக் கோரவுள்ளதாக தொலைபேசி இயக்குனர் நினைத்துக் கொண்டார்.
உடனடியாக அவர் மகிந்த ராஜபக்சவிடம், அனோமா பொன்சேகா இணைப்பில் இருப்பதாகவும் உங்களிடம் பேச வேண்டும் என்று கேட்பதாகவும் கூறினார்.
தொலைபேசியை எடுத்து “என்ன பிரச்சினை? எங்களால் என்ன செய்யமுடியும்?“ என்று கேட்டார் மகிந்த ராஜபக்ச.
அழைத்தவர் ஓரளவுக்கு தயவாகப் பேசினார்.
வாழ்க்கைச்செலவு உயர்வினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குறைபட்டுக் கொண்ட அந்தப் பெண், “ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? தயவு செய்து எங்களுக்கு நிவாரணம் அளியுங்கள்“ என்று கேட்டார்.
சந்தேகம் கொண்ட சிறிலங்கா அதிபர் யார் பேசுவது என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் அனோமா என்று பதிலளித்து விட்டு சத்தமாக சிரிக்கத் தொடங்கினார்.
அந்தப் பெண் தன்னை ஏமாற்றுவதாக சந்தேகம் கொண்ட ராஜபக்ச, “நீங்கள் பொய் சொல்கிறீர்கள். எனக்கு அனோமாவை தெரியும். அவருடன் நான் பேசியுள்ளேன். உங்களைப் போல் அவர் ஒரு வாயாடிப் பெண் அல்ல. அவர் நன்றாக நடந்து கொள்வார். நீங்கள் அனோமாவாக இருந்தால், உங்களின் கணவன் சிறையில் இருக்கும் போது சிரிக்கிறீர்களே“ என்று கூறிவிட்டு கோபத்துடன் தொலைபேசியை வைத்து விட்டார்.
உடனடியாக அவர் தொலைபேசியில் அழைத்த பெண் யார் என்று விசாரிக்குமாறு உத்தரவிட்டார். விரைவாகவே அந்தப் பெண் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் ஒரு மனநலம் குன்றிய பெண் என்பது தெரிய வந்ததும், அந்த விவகாரம் அத்துடன் முடிக்கு வந்தது.

10 டிசம்பர் 2011

யாழில் பொலிசார் பொது மக்களிடையே முறுகல்!

மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல்போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு யாழில் இன்று நடைபெறும் பேரணியின்போது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுள்ளது. ஊடகவியலாளர்கள் சிலரும் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுமாறு கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த மக்கள் இன்று காலை பஸ் நிலையத்தின் முன்பாகக் கூடினர். அவ்வேளையில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸாரும் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் சமுகமளிக்காத காரணத்தினால் பொதுமக்களை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு பொதுமக்களைப் பொலிஸார் கேட்டுள்ளனர். பொலிஸாரின் கூற்றுக்குச் செவிமடுக்காத பொதுமக்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பின்னர் அங்கு வருகை தந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி பொலிஸாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துமாறு அவரிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேரணி நடைபெறுவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
‘ஊடகவியலாளர்களுக்கு எச்சரிக்கை:
இன்று காலையில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் பஸ் நிலையத்துக்கு அருகில் காத்திருந்தனர். அங்கு ஜீப்பில் வந்த பொலிஸார் புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை எச்சரித்ததுடன், படங்களைக் கெமராவிலிருந்து அழிக்குமாறும் கூறிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் போராளிகள் அவமானப் படுத்தப்படுகிறார்கள்"வேதனையில் கொதித்தார் விஜயகலா மகேஸ்வரன்.

"நீங்களும் மனிதர்கள்தானே! உங்களுக்கு சகோதரர்கள் இல்லையா?, உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா? ஏன் இப்படி எங்கள் தமிழ்ச் சகோதரர்களை அவமானப்படுத்துகிறீர்கள்?" நாடாளுமன்றத்தில் இவ்வாறு நேற்றுக் கொதித்தெழுந்தார் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன். அரச தரப்பினரைப் பார்த்து அவர் ஆக்ரோஷமாகச் சீறினார். புனர்வாழ்வு வழங்கப்படுவதாகக் கூறிக் கடந்த இரண்டரை வருடங்களாக அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளில் 104 பேர் நேற்று நாடாளுமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் வெள்ளை நிற ரீசேர்ட்டுகள் அணிவிக்கப்பட்டிருந்தன. அந்த ரீசேர்ட்டுகளில் பெயர்களும், அடையாளங்களும் இடப்பட்டிருந்தன. பெண் போராளிகளுக்கு அவர்கள் அணிந்திருந்த உடையின் மேல் இந்த ரீசேர்ட் அணிவிக்கப்பட்டிருந்தன. இதனால் அவர்கள் பல நிற குட்டைப் பாவாடைகளின் மேல் வெள்ளைநிற ரீசேர்ட்கள் அணிந்திருந்ததைப் போன்று தோன்றியது.
வெள்ளை நிற ரீசேர்ட்டுகளுடன் அவர்கள் பார்வையாளர்கள் கலரியில் அமர்ந்திருந்தமை காட்சிக்கு இருத்தியிருந்ததைப் போல் இருந்தது என்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலைப்பட்டனர். முன்னாள் போராளிகள் இவ்வாறு காட்சிப் பொருள்களாக அமர்த்தப்பட்டிருந்ததை அவதானித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா ஆவேசம் வந்தவர்போல் எழுந்து ஆத்திரத்துடன் கொட்டித் தீர்த்தார்.
"இங்கே என்ன நடக்கின்றது? இங்கே காட்சிப் பொருளாக அழைத்து வரப்பட்டுள்ளவர்கள் எனது சகோதரிகள். கௌரவமான குடும்பத்தில் பிறந்தவர்கள். இவர்கள் குற்றம் இழைத்தவர்களாக இருக்கலாம். அதற்காக இவர்களை இப்படி அவமானப்படுத்தக்கூடாது. நாடாளுமன்றத்திற்கும் அழைத்து வந்துவிட்டோம் என்று பெருமைபடக்கூடாது. இது எங்களுக்கு பெரும் வேதனையை உண்டாக்கியுள்ளது" என்றார் விஜயகலா.
போராளிகளுக்குப் புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் மீள இணைக்கிறீர்கள் என்று கூறும் அரசு, அவர்களை சாதாரண பெண்களைப் போன்று சிவில் உடையில் அழைத்து வருவதில் என்ன சிக்கல் இருக்கப்போகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். "திட்டமிட்டே அவர்களை வேறுபடுத்திக் காட்டி அவமானப்படுத்துகின்றார்கள்" என்றும் அவர் கூறினார்.
"முன்னாள் போராளிகளுக்குத் தளபதியாக இருந்தவருக்கு கோட்டைமாட்டிவிட்டு பிரதி அமைச்சராக குந்தவைத்துள்ளீர்கள். அவர் சூடு, சொரணையின்றி இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றார். இதனைப் பார்த்து கண்டித்து வேதனைப்படவேண்டிய இஸ்லாமிய உறுப்பினரோ பாராட்டுகின்றார்.(ஏ.எச்.எம்.அஸ்வர் ஆரம்பத்தில் பாராட்டினார்) இது வேதனைப்படக்கூடிய ஒரு விடயம். இன்று இவர்களை இங்கு அழைத்துவந்து அவமானப்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று முழங்கினார் விஜயகலா மகேஸ்வரன்.

09 டிசம்பர் 2011

சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை தமிழர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனும் அவசியம் இல்லை.

தமிழ் இனம் எவரிடமும் கையேந்தியோ அல்லது சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வை பெற்றுக்கொள்ளவோ வேண்டிய அவசியம் இல்லை. தமிழினம் தனித்துவமான இனம் வடகிழக்கை தாயகமாகக் கொண்ட இறைமையுள்ள பண்டைய இனம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கையின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பாகவே ஜெயானந்தமூர்த்தி தனது கண்டனத்தைத் வெளியிட்டுள்ளார்.
ஜெயானந்தமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழர்கள் சிங்களவர்கள் விரும்புத் தீர்வைப் பெற்றுக் கொள்வதாயின் அதை அரை நூற்றாண்டுக்கு முன்பே பெற்றிருக்க முடியும். அது எமது நோக்கமல்ல. தனிநாடே எமது இனத்திற்கான ஒரே தீர்வு. அதற்காகவே இன்று நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகளும் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். அதன் வலி எமது இனத்திற்கே தெரியும். அதைவிடுத்து தமது அரசியல் இலாபத்திற்காக தனித்துவமான இனத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாமென கேட்டுக் கொள்கின்றேன்.
இலங்கயின் வடகிழக்கு அனுராதபுரம், கண்டி உட்பட பெரும்பாலான பகுதிகளை பண்டைய காலம் தொட்டு தமிழர்களே ஆட்சி செய்துவந்தனர். அதிலும் வடகிழக்கு தமிழர்களின் தாயகம். ஆனால் எமது தாயகம் சிங்கள இனத்தினால் சட்டத்திற்கு முரணாக பறிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது.
எனவே தமிழர்களை தமிழர்களே ஆழக்கூடிய தனிநாட்டை கோரும் உரிமை தமிழர்களுக்கு உண்டு. இந்த வரலாற்று உண்மைகளை மறந்துவிட்டு இன்று தமிழினம் சிறுபான்மை இனம், சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே தமிழர்கள் பெறவேண்டும் என்றெல்லாம் கருத்துத் தெரிவிப்பது தமிழினத்தைப் புண்படுத்தும் அதேவேளை சிறுமைப்படுத்தும் செயலாகவும் உள்ளது.
இலங்கையில் நடைபெற்றது ஒரு இனத்தின் சுதந்திரப்போராட்டமே தவிர பயங்கரவாதப் பிரச்சினை இல்லை என்பதையும் அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எந்த ஒரு இனத்தின் சுதந்திரப்போராட்டமும் தோற்றதில்லை. சில பின்னடைவுகளைச் சந்தித்தாலும் இறுதியில் அப்போராட்டம் வெற்றி பெற்றதே வரலாறு. அதுபோன்றே எமது சுதந்திரப்போராட்டமான தமிழீழப் போராட்டமும் இன்று சில பின்னடைவுகளைச் சந்தித்து தற்காலிகமாக மௌனித்திருந்தாலும் அது தனது இலக்கை நோக்கி தொடரவே செய்யும் என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் மாத்திரமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வைப் பெற்றுக்கொள்ளவே தாம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இக்கருத்தை கூட்டமைப்பின் ஏனைய சக பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இவற்றுக்கொல்லாம் மேலாக திரு.சம்பந்தன் அமெரிக்காவில் வைத்து வடகிழக்கு தமிழர்களுக்கு சொந்தமானதல்ல அதை நாம் கேட்கவில்லை என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். இவ்வாறான கருத்துக்களுடன் இவர்கள் சிறிலங்கா அரசுடனோ அல்லது சர்வதேச மட்டத்திலோ தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக பேச்சு நடத்த முற்படுவார்களானால் பாரிய பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி நேரிடும்.
தமிழ் மக்கள் தனியான தமிழீழத்திற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள் என்பதை இவர்கள் மறந்துவிடக் கூடாது. அது தமிழர்களின் இலட்சிய அவா. அந்த இலட்சியத்தைக் குழிதோண்டிப் புதைத்து அதன் மேல் நடக்க முற்பட்டால் அதற்கான தீர்ப்பை தமிழ் மக்கள் வழங்கியே தீர்வார்கள். என்பதையும் இக்கட்டத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
புலம் பெயர் மக்கள் ஒரே கொள்கையுடனும் உறுதியுடனும் தமிழீழம் என்ற இலட்சியத்தை நோக்கி செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இலங்கையின் மனித உரிமை மீறல், இனப்படுகொலை என்பனவற்றை சர்வதேசத்திற்கு முன் கொண்டுவரும் இக்கால கட்டத்தில் தமது அரசியல் நோக்கத்திற்காக இலங்கை அரசைக் காப்பாற்றும் நோக்கில் இவர்கள் செயற்படுவதையும் தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜெயானந்தமூர்த்தி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று கோரிக்கைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு கூட்டமைப்பு பேச்சுக்கு வரவேண்டுமாம்.

இலங்கையில் நிலவும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அரசாங்க தரப்பால் நிராகரிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய 3 கோரிக்கைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (08) காலை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இனப்பிரச்சினை தீர்வு திட்டத்திற்காக கடந்த 16ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம் மற்றும் மாகாண அரசுக்கான காணி உரிமம் போன்ற கோரிக்கைகளை அரச தரப்பு நிராகரித்திருந்தது.
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,
கூட்டமைப்பு முன்வைத்துள்ள அந்த 3 கோரிக்கைகளும் பிரச்சினைக்குரியது. ஆனால் அந்த மூன்று அம்சங்களைத்தவிர பல பிரச்சினைகள் தமிழர்களுக்கு உள்ளது.
பேச்சுவார்த்தை இடம்பெறும் போது முகத்துக்கு முகம் நேரடியாக உரையாடிவிட்டு, வெளியே சென்று பேச்சுவார்த்தையை முறிவுக்குட்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருத்துக்களை வெளியிட்டு நடந்து கொள்கிறது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு அமைக்கத் தீர்மானித்துள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் எந்தவொரு தெளிவான முடிவையும் அறிவிக்கவில்லை.
என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

08 டிசம்பர் 2011

முகாமை பார்வையிட ஜே.வி.பி மாற்றுக் குழுவுக்கு தடை.

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார தலைமையில் ஜே.வி.பி. மாற்றுக்குழுவைச் சேர்ந்த அங்கத்தவர்கள் வவுனியா செட்டிக்குளத்திலுள்ள கதிர்காமர் நலன்புரி முகாமுக்குச் செல்ல முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி. மாற்று அணியைச் சேர்ந்த அஜித் குமார எம்.பியுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன, ஜே.வி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் லலித் குமார் வீரராஜூ ஆகியோரும் கதிர்காமர் நலன்புரி கிராமத்தில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்திக்கச் சென்றனர்.
எனினும் அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. அம்மக்களை சந்திப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என மீள்குடியேற்ற அமைச்சர் உறுதியளித்த பின்னர் இவ்விஜயத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாகவும் ஆனால் இக்குழுவினர் நுழைவாயிலில் தடுக்கப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

கோத்தபாயவின் மூலம் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தோல்வி.

தேவைப்படும் காணிகளை அரசுடமையாக்குவதற்கு அதிகாரமளிக்கும் நகர மற்றும் நாடு திட்டமிடல் திருத்தச் சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரிலேயே சிறிலங்கா அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ஆளும்கட்சி கொரடா தினேஸ் குணவர்த்தன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முன்னர், மாகாணசபைகளின் பார்வைக்காக சமர்ப்பிக்கப்பட்டு அவற்றின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகருக்கு அறிவித்திருந்தது.
மாகாணசபைகளின் பார்வைக்கு இந்தச் சட்டமூலம் அனுப்பப்படாததால் இதனை சட்டமாக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதாலேயே சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளது.
பொருளாதார, சமூக, வரலாற்று, சுற்றாடல் மற்றும் மத காரணங்களுக்காக மாநகர மற்றும் நகரசபைகளுக்குட்பட்ட, எந்தவொரு நிலத்தையும் சுவீகரிக்க சிறிலங்கா அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்தத் திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருந்தது.
கோத்தாபய ராஜபக்சவின் பொறுப்பில் உள்ள நகர அபிவிருத்தி அமைச்சுக்கே இதன் மூலம் அதிகாரங்கள் வழங்கப்படவிருந்தன.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினால் தாம் நினைத்த காணிகளை அரசுடமையாக்குவதற்கு கோத்தாபய ராஜபக்சக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற முடியாது போயுள்ளது.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி செயற்படுகிறது.

அரசுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கும் தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது எனவும் இதில் தமிழர்கள் பிரச்சினைகள் எதுவும் உள்வாங்கப்படவில்லை என்பதால் அவ்வாறான ஆர்ப்பாட்டத்தைப் புறக்கணிப்பதற்கு இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன எனவும் தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் சிரால் லக்திலக்கவின் இல்லத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்றுமுன்தினம் இரவு இடம் பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போது சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம் பெற்றுள்ளன. கட்சித் தலைவர்கள் சிலர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பும் செய்துள்ளனர்.ஐக்கிய தேசியக் கட்சியின் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் கொள்கை இன வாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என இதன்போது கடும் எதிர்ப்பை வெளியிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களான விக்கிரம பாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோர் தமிழர் விடயங்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் முதன்மை வகிக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் விக்கிரமபாகுக்கும் இடையே இக்கூட்டத்தின்போது கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதனால் சஜித் கூட்டத்திலிருந்து வெளியேறினார். “சிங்களபௌத்த கூட்டமே அங்கு நடைபெற்றது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்து விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினேன்” என்று நேற்று மாலை தெரிவித்தார் ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய.
அதேசயம், எதிர்க்கட்சிகளின் இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து வெளியிட்ட நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிமபாகு கருணாரட்ன கூறியவை வருமாறுஐக்கிய தேசியக் கட்சி, சிங்கள இனவாதப் போக்கைக் கடைப்பிடிக்கின்றது. அதனை முன்வைத்தே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவே அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு விவகாரம், மீள்குடியேற்றம் உட்படத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆகிய விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என நான் உறுதியாகக் கூறினேன்.
சரத் பொன்சேகாவின் விடுதலையைப் பிரதானமாகக் கொண்டே நாம் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்தக் கூட்டத்தில் கூறினார்.இதற்கு நான் கடும் எதிர்ப்பை வெளியிட்டேன். இவ்வாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டால் அது சிங்கள இனவாத ஆர்ப்பாட்டமாகவே கருதப்படும் எனச் சுட்டிக்காட்டினேன்.
எனது கருத்தை ஏற்க மறுத்த சஜித் கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டார். அவரும் ஜாதிக ஹெல உறுமயவின் அரசியல் கொள்கையைக் கடைப்பிடித்தே செயற்படுகின்றார் என்று நான் சாடினேன்.சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே ஐக்கிய தேசியக் கட்சிக்கு அமோக ஆதரவு வழங்கியுள்ளனர். அதனை மறந்து பிரதான எதிர்க்கட்சி செயற்படக் கூடாது. அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் தமிழர் விவகாரங்களும் உள்ளடக்கபட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு என்றும் நான் வலியுறுத்திக் கூறினேன்.
இந்தக் கூட்டத்தின்போது, சரத்பொன்சேகாவின் விடுதலைக்கு உதவுமாறு கட்சித் தலைவர்களிடம் அனோமா பொன்சேகா கோரிக்கை விடுத்தார்.ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் எனது கருத்தை ஆதரித்துக் கருத்து வெளியிட்டனர் என்றார் விக்கிரமபாகு.இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுமந்திரன், ஐ.தே.க. உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, புத்திக பத்திரண,ரோஸி சேனநாயக்க மற்றும் அர்ஜூன ரணதுங்க எம்.பி. உட்பட பல அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

07 டிசம்பர் 2011

அமெரிக்காவில் திரையிடப்பட்ட "இலங்கையின் கொலைக்களங்கள்"மற்றும் இலங்கையின் போலி ஆவணப்படம்.

சனல்-4 தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படமும் அதற்குப் போட்டியாக சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட Lies Agreed Upon ஆவணப்படமும் ஒரே அரங்கில் நேற்று திரையிடப்பட்டதுடன் அதுபற்றிய விவாதம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது.
‘சிறிலங்காவின் உள்நாட்டுப் போர்: ஊடக சுதந்திரங்களும் போர்க்குற்றச்சாட்டுகளுக்கான பதிலும்‘ என்ற தலைப்பில் நியுயோர்க்கில் பார்க் அவென்யூவில் ஆசிய சொசைற்றியில் இந்த நிகழ்வு நேற்று மாலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.
இரு ஆவணப்படங்களும் திரையிடப்பட்ட பின்னர், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லும் மக்ரே, முரண்பாடுகளுக்கான அனைத்துலக குழுவைச் சேர்ந்த பொப் ரெம்லர் ஆகியோருடன், கொழும்பிலிருந்து வெளியாகும் ‘தி நேசன்‘ வார இதழின் ஆசிரியர் மலிந்த செனிவிரட்ண இணைய வழியிலும் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
நியூஸ்வீக் இன்ரநசனல் இதழின் ஆசிரியர் துன்கு வரதராஜனின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் சிறிலங்கா அரச மற்றும் அனைத்துலக சமூகப் பிரதிநிகளும் பங்கேற்பர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறிலங்கா அரசின் தரப்பு நியாயங்களை ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர விதிவிடப் பிரதிநிதி பாலித கொகன்ன எடுத்துக் கூறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்தநிகழ்வில் பங்கேற்று விளக்கமளிக்க ஒப்புக்கொண்ட பாலித கொகன்னவோ அல்லது சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவோ இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்முறையாக இரு ஆவணப்படங்களும் ஒரே அரங்கில் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடத்தப்பட்டள்ளதுடன் இணையமூலம் நேரலையாகவும் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளது.

06 டிசம்பர் 2011

மகிந்த ஐ.நா.வில் உரையாற்ற எழுதிக்கொடுத்த பிரித்தானிய நிறுவனம்!

ஐ.நாவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையை தாமே எழுதிக் கொடுத்ததாக பிரித்தானியாவின் பொதுஉறவுகள் நிறுவனமான பெல் பொட்டிங்கர் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஐ.நாவில் நிகழ்த்திய உரையில், மனிதாபிமானப் போர் தொடர்பாக மீளாய்வு செய்வதாகக் குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் விபரித்திருந்தார்.
அத்துடன் பொறுப்புக்கூறும் கொள்கையை முழுமையாக வெளிப்படுத்த தாம் ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் விருப்பத்தின் பேரில், இந்த அறிக்கையை தாமே தயாரித்ததாக பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக தனிநபர்களை பொறுப்புக் கூறுவதற்கு இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனிதஉரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்திருந்தன.
“சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நாங்கள் ஒரு குழுவை வைத்து பணியாற்றினோம். நாங்களே கடந்த ஆண்டு ஐ.நாவில் சிறிலங்கா அதிபர் நிகழ்த்திய உரையை எழுதிக் கொடுத்தோம். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது“ என்று பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் தலைவர் டேவிட் வில்சன் கூறியுள்ளார்.
அத்துடன் 2010ம் ஆண்டில் சிறிலங்கா அதிபர் லண்டன் வருவதற்கு முன்னர் தமது நிறுவனம் பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் நவ சமசமாசக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண ஆகியோரை தமது நிறுவனம் சந்தித்ததாகவும், அவர் கூறியுள்ளார்.
ஆனால் தாம் சிறிலங்கா அரசுடனான தொடர்புகளில் சட்டவிரோதமாக எதையும் செய்யுமாறு ஆலோசனை கூறவில்லை என்றும் டேவிட் வில்சன் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக ஊடகங்களில் சிறிலங்காவுக்கு சார்பாக செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடும் பொறுப்பை பெல் பொட்டிங்கர் நிறுவனமே ஏற்றிருந்தது.

மகிந்த-சம்பந்தன் தொலைபேசியில் உரையாடினர்,மீண்டும் இன்று பேச்சுவார்த்தைக்கு இணக்கம்.

இனப்பிரச்சினை தொடர்பான 16வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி ஏற்கனவே திட்டமிட்டது போல் இன்றைய தினம் (06) செவ்வாய்கிழமை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இன்று மாலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அதன் ஊடாகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஏற்கனவே 15ம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் முன்பு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றாது பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக கூட்டமைப்பு அறிவித்த நிலையில் இன்று மீண்டும் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் சம்பந்தனுடன் மகிந்த தொலைபேசி மூலம் உரையாடியதாகவும் அதன் பின்னர் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பிற்கும் அரசிற்குமிடையான சிக்கல் சீர்செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. மகிந்த-சம்பந்தன் தொலைபேசி உரையாடலில் என்ன உறுதிமொழிகள் வழங்கப்பட்டது தொடர்பான விடயங்கள் தெரியவரவில்லை.

05 டிசம்பர் 2011

கோத்தபாயவிடம் பேசச்சொன்ன கடத்தல்காரர்கள்!

பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த ருவன் சந்திமால் டீப் நேற்றுமுன்தினம் மாலை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவரது மனைவி சிறிலங்கா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறையினராலேயே அவர் கடத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேவி ருவான் என்று அறியப்பட்ட தனது கணவரது கடத்தல் பற்றிய முறைப்பாட்டை ஏற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா காவல்துறையினர் இழுத்தடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கதிர்காமத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது கெரில்லா பாணியில் மறைந்திருந்து தம்மைத் தாக்கிய கடத்தல்காரர்களில் ஒருவர் தனது கணவரைச் சுட முனைந்தாகவும், அவர் மீது தனது கணவர் கல் ஒன்றை வீசியதாகவும் நேவி ருவானின் மனைவி கூறியுள்ளார்.
நினைவிழக்கும் வரை கடத்தல்காரர்கள் தனது கணவரைத் தாக்கியதாகவும், அதன் பின்னர் அவரை வெள்ளை வான் ஒன்றில் கடத்திச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடத்தல்காரர்களில் சிலர் வரக்காபொல நகரில் சுதந்திரமாக நடமாடியதை கண்டதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இதுபற்றி கோத்தாபயவுக்கு மட்டுமே தெரியும் என்றும் தாம் சிறிலங்கா அரசாங்கத்தின் மீதே சந்தேகம் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் நேவி ருவானி மனைவியான லக்சிகா சாமலி.
சிறிலங்கா பாதுகாப்புஅ மைச்சின ஆலோசகராக இருந்த துமிந்த சில்வாவின் நெருங்கிய உதவியாளர் என்று நேவி ருவான் ஊடகங்களால் குறிப்பிடப்பட்டு வந்தார்.
துமிந்த சில்வா முல்லேரியா துப்பாக்கி மோதலின் போது படுகாயமடைந்து சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனது கணவரைக் கொன்று விடாதீர்கள் என்று நான் அவர்களிடம் கோரினேன், கடத்தல்காரர்களில் ஒருவர் கோத்தாபய ஐயாவுக்கு தொலைபேசி எடுக்குமாறு கூறியதாகவும் லக்சிகா சாமிலி குறிப்பிட்டுள்ளார்.
எமக்கு கோத்தாய பற்றி மட்டுமே தெரியும். எம்மால் அரசாங்கத்தையே சந்தேகிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித றோகண, இது தமக்கும் சிறிலங்கா அரசு மற்றும் படையினருக்கும் சேறுபூசும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே துமிந்த சில்வாவில் மற்றொரு உதவியாளராக செயற்பட்ட நேவி தம்மிகவும் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரத லக்ஸ்மன் பிறேமச்சந்திர கொலையுடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழுத் தலைவர் தெமட்டகொட சமிந்த, கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சடலத்தை துமிந்த சில்வாவின் பணிப்பின் பேரில் நீர்கொழும்பு கடலேரிக்கு அப்பாலுள்ள கடலில் புதைத்ததாகவும், துமிந்த சில்வாவின் பணிப்பின் பேரில் பல சடலங்களை தான் இவ்வாறு கடலில் புதைத்தாகவும் கூறியிருந்தார்.
ஒவ்வொரு முறை சடலங்களை புதைக்கும் போதும், பெரியமுதலாளியின் (கோத்தாபய ராஜபக்ச) உத்தரவின் பேரிலேயே இதைச் செய்வதாக தனது முதலாளி (துமிந்த) கூறுவார் என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்க கூட்டமைப்பு முடிவு.

இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுகளில் தற்போது ஏற்பட்டுள்ள தடங்கல் பின்னடைவு நிலைமை தொடர்பாக கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை விவரமாக தெளிவாக விளக்குவதற்குத் தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகிறது.
தீர்வுப் பேச்சில் திடீரென ஏற்பட்டுள்ள முடக்கம் குறித்த தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு உள்ளது. அதற்காக கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அரசு கூட்டமைப்பின் பேச்சின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்வதில் சர்வதேச நாடுகளின் கவனம் திரும்பி உள்ளது என்றும் அதேசமயம் தற்போதைய இலங்கையின் அரசியல் நிலைமை குறித்தும் அந்த நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன என்றும் அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பேச்சு ஒழுங்கின்படி அல்லாமல் நேற்று முன்தினம் திடீரென நடைபெற்ற அரசு கூட்டமைப்புப் பேச்சில் தெரிவுக்குழு நியமிக்கும் விடயத்தில் சர்ச்சை எழுந்தது.
தெரிவுக்குழுவுக்கான தமது உறுப்பினர்கள் பெயர்களைக் கூட்டமைப்பினர் தரவேண்டும் என்று அரச தரப்பு ஒரே பிடியாக இருந்தது. ஆனால் அதனை ஏற்க கூட்டமைப்பினர் அடியோடு மறுத்துவிட்டனர்.”முதலில் தீர்வு பற்றிய இரு தரப்பு இணக்கம்; பின்னரே தெரிவுக்குழு” இதுதான் எமது நிலைப்பாடு என்றும் அடித்துக் கூறிவிட்டனர் கூட்டமைப்பினர்.
இவ்வாறான நிலையில், அரசியல் தீர்வு விவகாரத்தில் அரசு தரப்பு முன்னர் தெரிவித்த உறுதிப்பாட்டை மீறியுள்ளதே பேச்சில் ஏற்பட்டுள்ள தடங்கல் நிலைக்குக் காரணம் ஆகும். இந்தச் சூழ்நிலையிலேயே கூட்டமைப்பினர் மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு தமது நிலைப்பாட்டை விவரமாக விளக்க உள்ளனர்.

04 டிசம்பர் 2011

மாவீரர் தின வரவு செலவுக்கணக்கு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும்.

பிரான்ஸ் - ஸ்தான் மைதானத்தில் நடாத்தப்பட்ட மாவீரர் தின நிகழ்வு குறித்த கணக்கு விபரங்கள் எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னதாக மக்களது பார்வைக்கு சமர்ப்பிக்கப்படும் என தலைமைச் செயலகம், தமிழர் நடுவம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஆகிய அமைப்புக்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.
இது குறித்து இடம்பெற்ற கணக்காய்வு நிகழ்வில்,
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், புலம்பெயர் நாடுகளில் நாம் நடாத்தும் அனைத்து நிகழ்வுகளிலும், சேகரிக்கும் பணத்திலும் வெளிப்படைத் தன்மை பேணப்படும் என அறிவித்திருந்தோம். அந்த எமது வாக்குறுதியைக் காப்பாற்றும் பொருட்டு, மாவீரர் தினம் குறித்த கணக்கு அறிக்கையை வெளிப்படுத்த உள்ளோம் எனத் தலைமைச் செயலகத்தின் பிரஞ்சுப் பொறுப்பாளர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
எமது அழைப்பினை ஏற்று மூவாயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் எமது மாவீரர் தின நிகழ்வுகளில் உணர்வு பூர்வமாகக் கலந்து கொண்டனர். அவர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதி, 3000 பூக்கள் விற்ற பணம், மாவீரர் தினத்துக்காகப் பொதுமக்களிடம் பற்றுச் சீட்டுக்கள் மூலம் பெற்ற பணம் ஆகியவற்றுக்கான கணக்கு விபரங்கள் மக்கள் பார்வைக்காக இணையத் தளங்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழர் நடுவம் தனது ஒரு வருடக் கணக்கு அறிக்கையையும் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தத் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தாம் நடாத்திய தேர்தல் காலத்தில் திரட்டப்பட்ட நிதி தொடக்கம், இது நாள் வரையான அத்தனை கணக்குக்களையும் மக்கள் முன் சமர்ப்பிக்க உள்ளதாகவும், அது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே 'வாரம் 1 டொலர்' திட்டத்திற்காக மக்கள் மத்தியில் செல்ல உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த முறையையே அமெரிக்கா முதல், அவுஸ்திரேலியா வரையிலான அனைத்து நாடுகளிலும் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். அத்துடன், சரியான கணக்கைச் சமர்ப்பிக்காத நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் மக்கள் எந்த வகையிலான பங்களிப்பினையும் வழங்க வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

- நாதம் ஊடக சேவை

கூட்டமைப்புக்கும் அரசதரப்பிற்குமான பேச்சுக்களில் இழுபறி நிலை.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்காது போனால், ஏற்கனவே உடன்பட்டவாறு, பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமாக இருக்காது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளதால், சிறிலங்கா அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
முன்னர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமது பிரதிநிதிகளை நியமிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கருத்துகள் இரண்டு கூட்டங்களில் அரச தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த போதும் நேற்றைய கூட்டத்தில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன் வைத்த இந்தக் கருத்து பேச்சுக்களில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில்,“பேச்சுக்களை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் இருக்கிறது.
அதேநேரம் ஏற்கனவே எழுதப்பட்ட பரஸ்பர உடன்படிக்கையை கௌரவிக்கும் படியும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும், மக்கள் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அரசியல்தீர்வை அமைவதற்கு புதிய இடையூறுகளை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அரசை வலியுறுத்துகின்றோம்.
கடந்த நவம்பர் 16ம் திகதி அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே நடைபெற்ற இருதரப்புப் பேச்சுக்களின் போது அரசியல் தீர்வொன்றினை உருவாக்குவதில் கலந்துரையாட வேண்டிய அம்சங்களை இரு தரப்புகளும் அடையாளம் கண்டறிந்தன.
குறிப்பிட்ட ஒழுங்கில் இந்த அம்சங்கள் குறித்து கலந்துரையாட இரு தரப்புகளும் உடன்பட்டதுடன், இந்த நோக்கத்திற்காக பேச்சுக்களை நடத்துவதற்காக இம்மாதம் (டிசம்பர்) 1ம், 6ம், 14 ம் மற்றும் 15 ம் திகதிகள் கால அட்டவணைப்படுத்தப்பட்டன.
கால அட்டவணையும் கலந்துரையாட வேண்டிய அம்சங்களும் அடங்கிய பிரசுரம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இம் மாதம் 1ம் திகதி கூடிய போது ஆரம்பத்திலேயே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்காத பட்சத்தில் இருதரப்பு பேச்சுக்களை ஏற்கனவே உடன்பட்டபடி முன்கொண்டு செல்ல முடியாதெனச் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பேச்சுக்களில் அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் உடன்பாடு ஏற்பட்டவுடன், அது முன்னரே பிரேக்கப்பட்டபடி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் வைக்கப்படும், அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழு நடவடிக்கைளில் இணைந்து கொள்ளும்” என இரு தரப்பினடையேயும் ஏற்பட்டிருந்த உடன்பாட்டுக்கு அமைச்சர் ஜி.எல். பீரிசின் வேண்டுகோள் முரணாயுள்ளது என்பது அவருக்கு ஞாபகப்படுத்தப்பட்டது.
இந்த உடன்பாடு கடந்த செப்ரெம்பர் 11 ம் திகதி நடைபெற்ற கூட்டு அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கடுத்து அக்டோபர் 20 ம் திகதி நடந்த கூட்டத்திலே அவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அதற்கடுத்ததாக நடைபெற்ற நவம்பர் 16ம் திகதி கூட்டத்தில் டிசம்பர் முற்பாதியில் நான்கு கூட்டங்கள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.
இந்த விடயம் நவம்பர் 24 ம் திகதி அமைச்சர் ஜி.எல். பீரிசினால் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.
ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட தீர்மானங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஞாபகப்படுத்திய போதும் அரசு இக்காரியத்தை நிதானித்துச் செய்ய காலஅவகாசம் கோரியதுடன் அதன் விளைவாக இன்று (டிசம்பர் 3) ஒரு புதிய பேச்சுக்கு நாள் குறிக்கப்பட்டது.
இன்று அரசதரப்பு பிரதிநிதிகளின் நிலைப்பாடு தெளிவற்றதாகவும் ஒரு முடிவுக்கு வராத நிலையிலுமாக இருந்ததாகவும் இரா.சம்பந்தன் தனது அறிக்கையில கூறியுள்ளார்.

03 டிசம்பர் 2011

கே.பி.க்கு ஆப்பிறுக்கும் ஜெயலத் ஜெயவர்த்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.க்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஆயுத பயன்பாடு, பயங்கரவாதம், வெடிபொருட்கள் பயன்பாடு மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குமரன் பத்மநாதனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான ஆவணமொன்றை ஜயலத் ஜயவர்தன பாராளுமன்றில் நேற்று சமர்ப்பித்துள்ளார்.
இன்டர்போலினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவிராந்தின் பிரதி ஒன்றையும் அவர் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குமரன் பத்மநாதனை இலங்கை அதிகாரிகள் மலேஷியாவில் வைத்து கைது செய்திருந்தனர்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் குமரன் பத்மநாதன் நீடோ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை நடத்தி வருகின்றார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு நலன்களை வழங்கும் நோக்கில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

அவுஸ்ரேலியாவை நோக்கி படையெடுக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள்!

சுமார் 100 வரையான அகதிகளுடன் மேலும் இரண்டு அகதிகள் படகுகள் மேற்கு அவுஸ்ரேலியக் கடற்பரப்பில் அந்த நாட்டின் எல்லைக் காவல் படகுகளினால் இடைமறிக்கப்பட்டுள்ளன.
அஸ்மோர் தீவுக்கு வடகிழக்காக நேற்று பிற்பகல் முதலாவது படகு இடைமறிக்கப்பட்டது. இதில் 19 அகதிகளும் 3 மாலுமிகளும் இருந்தனர்.
இதன்பின்னர், நேற்றுமாலை மற்றொரு அகதிகள் படகு கிறிஸ்மஸ்தீவுக்கு மேற்கே மீட்கப்பட்டது.
இந்தப் படகில் இருந்து உதவி கோரப்பட்டதை அடுத்தே எல்லைக் காவல் படகுகள் அங்கு சென்று அதனை மீட்டனர்.
இந்தப் படகில் 75 அகதிகளும், 3 மாலுமிகளும் இருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன
இவற்றில் இருந்த அகதிகள் பாதுகாப்பு, மருத்துவ சோதனைகளின் பின்னர் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
வியாழக்கிழமை இரண்டு படகுகளில் சுமார் 200 அகதிகள் அவுஸ்ரேலியாவுக்குச் சென்ற நிலையில் நேற்றும் 100 வரையான அகதிகள் அங்கு சென்றுள்ளது அவுஸ்ரேலிய அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தமாதம் மட்டும் அவுஸ்ரேலியாவில் 800 வரையிலான அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர்.
ஆனால் இந்த வாரத்தில் இரண்டு நாட்களிலேயே 300 இற்கும் அதிகமான அகதிகள் அவுஸ்ரேலியா சென்றுள்ளனர்.
ஆபத்தான மழைகாலம் ஆரம்பித்துள்ள நிலையிலும் நான்கு படகுகள், சென்றுள்ளதும், திடீரென படகுகளில் நூற்றுக்கணக்கானோர் வரத் தொடங்கியுள்ளதும் அவுஸ்ரேலிய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

02 டிசம்பர் 2011

ஈழம்..இந்த நூற்றாண்டின் சொல்லிமாளாத சோகம்!

ஈழம்... இந்த நூற்றாண்டின் சொல்லி மாளாத சோகம்!
இரண்டரை ஆண்டுகளைக் கடந்த பிறகும், மரண பீதி இன்னும் விலகவில்லை. கடவுளின் வரைபடத்தில்கூட இல்லாத தேசமாகிவிட்டது. சிதைக்கப்பட்ட இடங்களின் சிதிலங்கள் மீது சிமென்ட் பூசி மறைக்கும் காரியங்கள் மட்டும்தான் இந்த 30 மாதங்களில் நடந்துள்ளன. மிச்சம் இருப்பவர்களை உரிமை பெற்றவர்களாக அல்ல... உயிர் உள்ளவர்களாகக்கூட மதிக்க இலங்கை அரசு தயாராக இல்லை என்பதே உலகத்துக்கான சேதி!
இன்னமும் முறியாத முள் வேலி!
'விடுதலைப் புலிகள் மட்டும் அல்ல... மொத்தத் தமிழர்களும் போராளிகள்தான். அவர்களை வெளியே விடுவது ஆபத்து!’ என்று அனைத்துத் தமிழர்களையும் நடுக் காட்டுக்குள் திறந்தவெளிச் சிறைவைத்து... சுற்றிலும் இரும்பு முள் வேலி அமைத்தார் கள். அதில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் அடைக்கப்பட்டார்கள். இப்படி ஒரு மனித உரிமை மீறல் உலகத்தில் எங்கும் நடந்தது இல்லை என்று ஐ.நா. சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் திரும்பத் திரும்பச் சொல்லி, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் சூழ்நிலை வந்த பிறகுதான்... வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளை வெளியே விட்டார்கள். முள் வேலிக்குள் இருப்பவர்களுக்கும் சரியான சாப்பாடு, குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்காமல்விட்டதில் பலரும் நொந்தே செத்துப்போனார்கள். கையில் பணமும் நகையும் வைத்திருந்தவர்கள், அங்கே இருந்த சிங்கள அதிகாரிகளுக்கு அதைக் கொடுத்து வெளி நாடுகளுக்குத் தப்பித்தார்கள். இப்படிப் பலரும், பல வழிகளில் தப்பியது போக.... இன்னமும் கதிர்காமர் மற்றும் ஆனந்த குமாரசாமி ஆகிய இரண்டு முகாம்கள் இருக்கின்றன. கதிர்காமர் முகாமில் 1,017 குடும்பங்களும் ஆனந்த குமாரசாமி முகாமில் 1,262 குடும்பங்களும் என, மொத்தம் 7,540 பேர் மட்டுமே இருப்பதாகக் கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது.
முகாமைவிட்டு வெளியே வந்து தங்களது சொந்த ஊருக்குச் சென்ற பலருக்கும் அவர்களது வீடு இருந்த சுவடே இல்லை. மரங்கள் உள்ள இடத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள். அவர்களது சொந்த நிலம் எங்கே என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. 'அரசாங்கம் எடுத்துக் கொண்டுவிட்டது. பழைய பத்திரங்கள் செல்லாது!’ என்று சொல்லிவிட்டார்கள். மீன் பிடிக்கக் கடற்கரைக்கும் செல்ல முடியாது. இடிபாடுகள்கொண்ட பழைய கட்டடங்களையும் தெருக்களையும் பார்த்த படியே படுத்துக்கிடக்கின்றன தமிழ்க் குடும்பங்கள். 80 ஆயிரம் விதவைகள், 5,000 உடல் ஊனமுற்றோர் அநாதைகளாக அலைகிறார்கள். எங்கள் குழந்தைகளைக் காணவில்லை என்று குவிந்த புகார்களில் இருந்து 49 குழந்தைகள் மட்டும் மீட்கப்பட்டு உள்ளன. 50 ஆயிரம் வீடுகள் கட்ட இந்தியா கொடுத்த கோடிக்கணக்கான பணத்தைவைத்து இதுவரை 50 வீடுகள்கூடக் கட்டித் தரவில்லை என்கிறார் எம்.பி-யான சீ.யோகேஸ்வரன். 'எங்களை யாரும் கேள்வியே கேட்க முடியாது’ என்பதுதான் ராஜபக்ஷே, தமிழர்களுக்குச் சொல்லும் ஒரு வரிச் செய்தி!
எங்கும் ராணுவமயம்!
''வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தின் ஆட்சிதான் நடக்கிறது!'' என்று தமிழ் எம்.பி-க்கள் கூட்டமைப்பு சொல்கிறது. அதை உறுதிப்படுத்துவது மாதிரியே திரும்பிய பக்கம் எல்லாம் ராணுவம்... ராணுவம்... ராணுவம் மட்டுமே!
''போர் முடிந்துவிட்டதே... அப்புறம் எதற்கு ராணுவத்தினரை இந்த அளவுக்கு நிறுத்திவைத்து இருக்கிறீர்கள்? அவர்களை வாபஸ் வாங்க வேண்டியதுதானே?'' என்று தன்னைச் சந்தித்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷேவிடம், ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் பான் கீ மூன் கேட்டார். ''அவர்கள்தான் இப்போது தமிழர்களுக்குச் சேவை செய்கிறார்கள். அரசாங்கத்தின் அனைத்துத் திட்டங்களை யும் அமல்படுத்த அவர்களைத்தான் பயன் படுத்துகிறோம்!'' என்றார் ராஜபக்ஷே. துப்பாக்கியை வைத்துக்கொண்டு சமூக சேவை செய்பவர்களை இலங்கையில்தான் பார்க்க முடியும். வடக்கில் போர் முடிந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. கிழக்கில் போர் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், யாழ்ப்பாணத்தில் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்படிப்பட்ட யாழ்ப்பாணத்திலேயே இன்னும் 44 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருப்பதாக, அந்த மாவட்டத்து எம்.பி. சொல்கிறார். அதன் மொத்த மக்கள் தொகையே 6 லட்சம்தான்!
இலங்கை முழுவதும் ஆறு ராணுவப் படைத்தளங்கள் உள்ளன. அதில் நான்கு, தமிழர் பகுதிகளான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி ஆகிய இடங்களில் உள்ளன. ராணுவத்தின் 17 டிவிஷன்கள் அங்கு உள்ளன. சிங்களப் பகுதியில் நான்கு டிவிஷன்கள் மட்டுமே இருக்கின்றன. 'இன்னமும் தமிழ் மக்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதற்காகவே இவர்களை நிறுத்திவைத்து இருக்கிறார்கள்!’ என்று தமிழ் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டுகிறார்கள்!
சிங்களமயமாகும் தமிழ் நிலம்!
''வடக்கும் கிழக்கும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம். எனவே, இது தமிழர் தாயகம். இவை இரண்டையும் இணைத்து தமிழ் ஈழம் அமைப்போம்!'' என்பதுதான் தமிழர்கள் இதுநாள் வரை வைத்த கோரிக்கை. வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களைப் பெரும்பான்மை ஆக்கிவிட்டால்? தமிழர் தாயகம், இணைப்பு, தமிழ் ஈழம் என்ற கோரிக்கையே செல்லாததாக ஆகிவிடும் அல்லவா? ராஜபக்ஷேவின் திட்டம் இதுதான். இப்போது தமிழர் பகுதியில் இதுதான் நடக்கிறது.
தமிழர் கையில் இருந்த நிலங்களை வித்தியாசமான தந்திரத்தின் மூலம் பறிக்கிறார்கள். 'ஊர்க் காவல் படைக்கு இடம் வேண்டும்’, 'ராணுவத்துக்கு இடம் வேண்டும்’ என்று சொல்லி, மொத்தமாக அரசாங்கம் எடுத்துக்கொள்கிறதாம். பிறகு, இந்த இடங் கள் ராணுவ வீரர்களுக்குத் தரப்படுகின்றன. அவர்கள் சிங்கள மக்களுக்கு விற்பனை செய்கிறார்கள். பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இந்த மாதிரி கையகப்படுத்தப்பட்டு சிங்களவர்களுக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. ''புதிய முகாம் அமைத்தல், ராணுவத்துக்கான இடவசதிகள், ராணுவத்தின் தேவைகள் ஆகியவற்றுக்காக காணிகளை எடுப்பது என இடங்கள் பறிக்கப்படுகின்றன. மக்கள் தங்களது சொந்த இடங்களுக்குச் சென்று தங்களது வாழ்க்கையைத் தொடங்க முடியாமல், அவர்களது வாழ்க்கையே ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது!'' என்கிறார் தமிழ்த் தலைவர்களில் ஒருவரான இரா.சம்பந்தம். இதனால், ஓமந்தை என்ற இடம் 'ஓமந்த’ என்ற சிங்கள உச்சரிப்புடன் சொல்லப்படுகிறது. கொச்சன்குளம் என்ற ஊர் 'கால பொவசெவெள’ என்று மாற்றப்பட்டு விட்டது. தமிழில் எழுதப்பட்ட பலகை கள் அழிக்கப்பட்டு... சிங்களம், ஆங்கிலத் தில் எழுதப்படுகின்றன. கிளிநொச்சியில் பிரதான தெருவுக்கு 'மகிந்த ராஜபக்ஷே மாவத்தை’ என்று சூட்டப்பட்டு உள்ளது. இந்து, கிறிஸ்துவக் கோயில்கள் இடிந்த நிலையில் கிடக்க... புத்த விகாரைகள் புத்துணர்வு பெற்று எழுகின்றன!
நடுங்கும் ராஜபக்ஷே!
''இலங்கைக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொடர்ந்து அச்சுறுத்தல் இருக்கிறது. எந்த நாட்டுக்குச் சென்றாலும் என் மீது தாக்குதல் நடப்பதற்கான சூழல் இருக்கிறது. அதனால்தான் ராணுவ பலத்தை நான் அதிகப்படுத்தி வருகிறேன்!'' என்று கொழும்பு கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் அதிபர் ராஜபக்ஷே பேசும்போது சொன்னார். இலங்கைப் பகுதியில் அதிக அளவில் விழாக்களில் அவர் பங்கேற்பது இல்லை. பெரும்பாலும் அலரி மாளிகை விழாக்களில் மட்டுமே கலந்துகொள்கிறார். லண்டனுக்கு அவர் சென்றிருந்தபோது புலம்பெயர் ஈழத் தமிழர்கள், அவர் தங்கி இருந்த இடத்தைச் சுற்றி வளைத்தபோது 'எப்படித் தப்பினார்?’ என்று வெளியே தெரியாத அளவுக்கு கொழும்பு வந்து குதித்தார். இதன் பிறகு அவரது வெளிப் பயணங்கள் பலதும் தள்ளிவைக்கப்பட்டன!
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் ராஜபக்ஷே மீது 'போர்க் குற்றவாளி’ என்று குற்றம்சாட்டும் வழக்குகள் பாய்ந்துவருகின்றன. இதனாலும் பயணங்கள் தள்ளிவைக்கப்படுகின்றன. ராஜபக்ஷேவுக்கு அடுத்த நிலையில் அவரது தம்பி பசில் வருவாரா அல்லது அவரது மகன் நிமல் வருவாரா என்ற உள்வீட்டுக் குழப்பம் இப்போதே தொடங்கிவிட்டது. தனது மகனைக் கொண்டுவர வேண்டும் என்பதில் மகிந்தாவின் மனைவி ஆர்வமாக இருக்கிறார். விடுதலைப் புலிகள் பேரால் கூறப்படும் ஆபத்து ஒரு பக்கம் இருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக இலங்கை அதிகப்படியான கடன் சுமைகளில் மூழ்கிவருவதும்... இதனால் பொருட்களின் விலை அதிகமாகி வருவதும் சிங்கள மக்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கி உள்ளன. என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ராணுவத்துக்கு மட்டும் 229.9 மில்லி யன் ஒதுக்கிவிட்டு உட்கார்ந்துவிட்டார் ராஜபக்ஷே. நாடாளுமன்றத்தில் இந்த பட்ஜெட் மீதான விவாதம் நடந்துகொண்டு இருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் இருந்து ஒருவர் தண்ணீர் பாக்கெட்டைத் தூக்கிப் போட... வெடிகுண்டு விழுந்ததைப் போல அத்தனை பேரும் பதறிப்போனார் கள். அனைவரையும்விட அதிகமாகப் பதறியவர் ராஜபக்ஷே!
கண்துடைப்பு கமிஷன்!
''ராஜபக்ஷே மீது போர்க் குற்ற வழக்கைப் பதிவுசெய்துக் கைது செய்'' என்பதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களின் குரல். இதற்கு அவர் சொன்ன பதில், ''இலங்கையில் போர் விதிமீறல் நடந்திருக்கிறதா என்று நாங்களே ஆய்வு நடத்தி, அப்படித் தவறு செய்தவர்களைக் கண்டிப்போம்!'' என்பது. அதாவது, இலங்கை ராணுவத்தினர் செய்த தவறுகளை இலங்கை அரசே விசாரிக்கும் காமெடி இது!
'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு’ என்று இதற்குப் பெயர். 338 பக்கம்கொண்ட இந்தக் குழுவினரின் அறிக்கை ராஜபக்ஷேவிடம் கடந்த 20-ம் தேதி தரப்பட்டது. ''மொத்த சம்பவங்களைப் பூசிமெழுகும் காரியம் இது'' என்று கொழும்பு பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். சிங்கள மொழி பேசியபடியே தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கும் காட்சியும்... தமிழ் இளைஞர்களை ராணுவத்தினர் நிர்வாணமாக்கி, கண்ணைக் கட்டி சுட்டுக் கொல்லும் காட்சியும்... சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளி பரப்பானது. உலகத்துக்கு உண்மையைச் சொன்ன ஒரு சில நிமிடங்கள் அவைதான். அந்தக் காட்சியே பொய்யா னது என்று இந்த அறிக்கை சொல்கிறதாம். ''ராணுவத் துக்கு வேறு வழி இல்லை. பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ராணுவம் நினைத்திருந்தால், தீவிரவாதிகளது கை ஓங்கி இருக்கும்!'' என்று காரணமும் சொல்கிறதாம். அதையும் மீறிச் சில சம்பவங்கள் நடந்திருந்தால், அதற்கு சரத் ஃபொன்சேகாவும் அவரது ஆதரவு ராணுவ அதிகாரிகள் சிலரும்தான் காரணம் என்று கைகாட்டுகிறதாம் இந்த அறிக்கை. நாடாளுமன்றத்தில் இன்னமும் தாக்கல் செய்யப்படாத அந்த அறிக்கையின் சில தகவல்களை சிங்களப் பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்து உள்ளன. ''இந்த அறிக்கையை ஏற்க முடியாது!'' என்று சிங்களக் கட்சிகளே சொல்ல ஆரம்பித்துஉள்ளன!
எப்படி இருக்கிறார் ஃபொன்சேகா?
மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சரத் ஃபொன்சேகா, கொழும்பு வெலிக்கடைச் சிறையில் இருக்கிறார். அவரது விடுதலைக்காக எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் பொய்த்துவிட்டன. தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுத் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தார் ஃபொன்சேகா. யார் இந்தத் தண்டனையைக் கொடுத்தாரோ... அதே நீதிபதிக்குப் பதவி உயர்வைக் கொடுத்து, அந்த அப்பீல் மனுவையும் அவரையே விசாரிக்கச் சொல்லிவிட்டார் ராஜபக்ஷே. பிரிந்த இந்த இரண்டு மாஜி நண்பர்களுக்குள் நடக்கும் அரசியல்தான் இன்றைய இலங்கை அரசியல். ''என் கணவரைக் காப்பாற்றுங்கள்!'' என்று ஃபொன்சேகாவின் மனைவி தான் தினமும் அறிக்கை விடுகிறார். ஃபொன் சேகாவை எப்போது எல்லாம் மருத்துவமனையில் காட்ட வேண்டுமோ... அப்போது எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அங்கு அழைத்துச் செல்ல மறுத்துவிடுகிறார்களாம். இந்த நிலையில், ஃபொன்சேகாவின் விடுதலைக்காக சிங்க ளக் கட்சிகளை ஒன்றுதிரட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே குரல் கொடுத்துள்ளார். உடனே, ரணில் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் (ஹோமோ செக்ஸ் மாதிரியான புகார்கள்) சொல்லிக் கேவலப்படுத்தும் காரியங்கள் தொடங்கி இருக்கின்றன. 'ஃபொன்சேகா உயிரோடு வெளியே வர மாட்டார்!’ என்கிற அளவுக்கு அவருக்கு நெருக்கடிகள்ஏற்பட்டு விட்டனவாம்!
பேசிப்பார்க்கும் தமிழ் எம்.பி-க்கள்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் அணி திரண்டுள்ள தமிழ் எம்.பி-க்கள் மட்டும்தான் ஈழத் தமிழர்களுக்காக அந்த மண்ணில் இருந்தபடி தயங்காமல் பேசுகிறவர்கள். நாடாளுமன்றத்திலும் இவர்கள் பேச்சு நம்பிக்கை தருவதாக உள்ளது. பயன் இருக்கிறதோ இல்லையோ, இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். இதுவரை 13 முறை இவர்கள் பேசி இருக்கிறார்கள். டிசம்பர் மாதம் மட்டும் நான்கு நாட்கள் பேசுவதற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது. மீள் குடியமர்வு, புனர்வாழ்வு, வீட்டுவசதி, தொழில்வாய்ப்பு, அத்தியாவசியத் தேவைகள் ஆகிய கோரிக்கைகளை இவர்கள் முன்வைப்பதோடு, அரசியல் தீர்வையும் வலியுறுத்துகிறார்கள். ''நாங்கள் எங்களுக்குத் தேவையானதைச் சொல்லிவிட்டோம். அரசு இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை!'' என்கிறார் சம்பந்தம்.
''இந்தப் பேச்சுவார்த்தையில் நாங்கள் நிதானமாகச் செயல்படுவோம். எமது மக்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய மாட்டோம். விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களை விட்டுத்தர மாட்டோம்!'' என்கிறார் சம்பந்தம். இன்னும் எத்தனை சுற்று பேசுவார்கள் எனப் பார்ப்போம்!
தமிழர்களின் மௌன எழுச்சி!
தமிழர்கள் முதலில் அடி வாங்கியதும், திருப்பி அடிக்க ஆரம்பித்ததும் யாழ்ப்பாணம்தான். எல்லாவற்றுக்கும் ஆரம்பம் அதுதான். இப்போது அங்கும் சில ஒளி மின்னல்கள் கடந்த வாரத்தில் தெரிந்தன. உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நவம்பர் 27 மாவீரர் நாளுக்கான நிகழ்வாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டதாம்.
'சத்திய லட்சிய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் சத்திய வழியில் பயணித்து, சுதந்திரத் தமிழீழத்தை வென்றெடுக்க உறுதி பூணுவோம்!’ என்று எழுதப்பட்டதைப் பார்த்து, தமிழ் மாணவர் கள் உணர்ச்சி அடைய... அடுத்த சில நிமிடங்களிலேயே ஆறு பைக்குகளில் முகமூடி அணிந்து (ராணுவத்தினர் என்று சொல்லப்படுகிறது!) வந்தவர்கள் அந்த சுவரொட்டியைக் கிழித்துச் சென்றுவிட்டார்களாம். கானா நகர் மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயத்துக்கும் பண்டத்தரிப்பான் குளம் ஸ்ரீசுந்தரேசன் பெருமாள் கோயிலுக்கும் வந்த கடற்படை வீரர்கள், 'இந்த ஒரு வாரத்துக்கு கோயிலில் மணி அடிக்கக் கூடாது!’ என்று உத்தரவிட்டார்களாம்.
மீறி ஒலித்திருக்கிறது 'மாவீரர்’ மணிஓசை!

மூலம்: ஆனந்த விகடன்.

நிபுணர்குழு குழு அறிக்கையை நிராகரித்தவர்கள் இப்போ பதிலளிக்கப் போகிறார்களாம்!

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையில் சிறிலங்கா படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில், அறிக்கை ஒன்றைத் தயாரிப்பதற்கு மூத்த இராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நியமித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழுவினர், இந்த அறிக்கை தயாரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இந்த அறிக்கை விரைவில் அனைத்துலக சமூகத்திடம் கையளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையின் சில பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை அமைந்திருக்கும்.
புதிய அறிக்கையை சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து தயாரித்து வருகின்றன.
பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படாத வகையில் மனிதாபிமானப் போர் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது பற்றிய விபரமான விளக்கங்ளை இந்த அறிக்கை கொண்டிருக்கும்“ என்றும் லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மேலும் கூறியுள்ளார்.
முன்னதாக, போரின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கு நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிட்ட ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருந்ததுடன், அந்த அறிக்கைக்குப் பதிலளிக்கப் போவதில்லை என்றும் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் சர்வாதிகாரம் வளர்ச்சிபெற்று வருகிறது.

25 வருட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து பொறுப்புக் கூறவேண்டிய தேவை, கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பாய்ர்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொது நலவாய நாட்டுத் தலைவர் உச்சி மாநாட்டில் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் இலங்கை மனித உரிமை மீறல் குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில் வெளிவிவகாரக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன் கனேடிய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
சில நாடுகள் சமரசத்தை, புனர்வாழ்வை ஏற்படுத்த 10 வருடங்கள் எடுத்ததாகவும் எனினும் அது நம்பகத்தன்மை அற்றது எனவும் ஜோன் பாய்ர்ட் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் போர் குற்றச்சாட்டையும் மறுத்து தமது படையின் மீதான விசாரணையையும் மறுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை போர் தொடர்பில் ஐநா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை இலங்கையை மிகவும் ஆழமாக தொந்திரவு செய்துள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
புலிகளுடனான யுத்தத்தின் போது இடம்பெற்ற போர் குற்றம் குறித்து மேற்குலக நாடுகள் பாரிய அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.
இலங்கையில் யுத்தம் முடிந்து தமிழ் சிறுபான்மையின மக்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களில் அர்த்தமுள்ள எதனையும் காண முடியவில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கை அரசாங்கத்திடம் வளர்ந்து வரும் சர்வாதிகாரப் போக்கை கண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளளார்.
2009ம் ஆண்டு யுத்தத்தின் போது பொது மக்கள் மீது எரிகணைத் தாக்குதல், வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இலங்கை சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், 2013ம் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்போம் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பாய்ர்ட் எச்சரித்துள்ளார்.

01 டிசம்பர் 2011

அரசியல் ஆலோசகரை சிலர் ஓரம்கட்ட முயன்றதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவ ஆசிரியருமான அன்ரன் பாலசிங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சமாதான நகர்வுகள் பற்றி விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்குள் முரண்பாடுகள் தோன்றியிருந்தன என்று அமைச்சர் மிலிந்த மொறகொட தெரிவித்தார். இவ்வாறு 2002 ஆம் ஆண்டு ஒக்ரோபர் முதலாம் திகதி அப்போதைய அமெரிக்கத் தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பியுள்ள கேபிள் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
சமாதான நடவடிக்கைகளின் போது இலங்கை அரசு தொடர்பாகஅன்ரன் பாலசிங்கம் மென்போக்கோடு செயற்படுவதாகப் புலிகளின் ஒரு சாரார் கருதுகின்றனர். கிழக்கில் கடும் போக்குடைய கருணா, கரிகாலன் ஆகியோருக்கும் வடக்கில் இருந்த புலிகளுக்கும் இடையேயான உறவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்தத் தகவலை புலிகளின் தொடர்பாடலை ஊடறுத்துக் கேட்ட போது தெரியவந்துள்ளதாக மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார். எனினும் அத்தகவலின் உறுதித் தன்மை பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.
சமாதான நடவடிக்கைகள் புலிகளின் இராணுவ தயார் நிலையை மோசமாகப் பாதித்திருப்பதாக புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு உட்பட பலர் கருத்தினர். எந்த முடிவுகளையும் இறுதியாக புலிகளின் தலைவர் பிரபாகரனே எடுப்பார். எனினும் அவரின் முடிவுகளில் அதிக தாக்கம் செலுத்துவோராக கடும் போக்குடைய புலித்தலைவர்களே இருந்தனர். அத்தகைய கடும்போக்குடைய புலிகள் சமாதான நடவடிக்கைகளில் இருந்து பாலசிங்கத்தை ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். இவ்வாறு அமெரிக்கத் தூதர் கேபிள் தகவல் அனுப்பியதை விக்கிலீக்ஸ் இப்போது அம்பலப்படுத்தியுள்ளது.

அரியாலையில் புதிய படைமுகாம் அமைக்கப்படுகிறது!

அரியாலை கிழக்கு போக்கறம்பைக்குளம் பிள்ளையார் கோயிலை அண்டிய பகுதிகள் இராணுவத்தினர் பாரிய முகாம் ஒன்றை அமைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் இவ்வருட ஆரம்பத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. மக்கள் படிப்படியாக மீள் குடியேறி தங்களது இயல்பு நிலைக்கு மாறிவரும் நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதிக்கு வந்த இராணுவக் குழு, எந்தவித அனுமதியுமின்றி மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து எல்லைகளை அடையாளமிட்டு வருகின்றனர். மேலும் இராணுவ வேலிகள் அடைப்பதற்கு பனைமரங்கள், மற்றும் காட்டுமரங்களை வெட்டிக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.
படையினரின் இந்த நடவடிக்கையினால் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் இப்பகுதியில் தொடர்ந்தும் வாழ முடியுமா என்ற சந்தேகத்தில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.