09 ஜூன் 2012

மகிந்தவை பாதுகாக்க கில்டனில் தங்கியிருந்த சிங்களக் குடும்பங்கள்!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவில் தங்கியிருந்த ஹில்டன் விடுதியின் 50 அறைகள் அவரது பாதுகாப்புக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அறைகளில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் லண்டனில் உள்ள குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
மகிந்த ராஜபக்ச லண்டனில் தங்கியிருந்த காலத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் குடும்பத்தினர் இந்த அறைகளில் குடும்பத்தோடு குடியேறியிருந்தனர்.
இவர்கள் அனைவரையும் கடந்த 6ம் நாள் காலையில் குடும்பத்தோடு ஹில்டன் விடுதிக்கு வெளியே, சிறிலங்கா தேசியக்கொடிகளை ஏந்தியவாறு நிற்குமாறு, சிறிலங்கா அதிபரின் பிரித்தானியப் பயணத்துக்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த அவரது வெளிவிவகார ஆலோசகர் சஜின் வாஸ் குணவர்த்தன கேட்டிருந்தார்.
விடுதிக்கு வெளியே சிறிலங்கா கொடிகளுடன் நின்ற அவர்களிடம் நடந்து சென்று உரையாடி, ஊடகங்களுக்கு ஒரு சாகசம் காண்பிக்க முயன்றார் மகிந்த ராஜபக்ச.
அவர் லண்டனில் ஒரு நாள் தங்குவதற்கு செலவிட்ட பணம், 2012ம் ஆண்டுக்கு லண்டனில் உள்ள தூதரகம் மற்றும் அதன் பணியாளர்களுக்காக ஒதுக்கிய பணத்தை விட அதிகம் என்று லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஹில்டன் விடுதியில் மட்டுமன்றி, அதனைச் சுற்றியுள்ள பல்வேறு விடுதிகளிலும் சிறிலங்கா அதிபரின் பரிவாரங்கள் தங்குவதற்காக 35 அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

விடுதலை கிடைத்தோர் பூசாவிற்கு மாற்றம்!கைதிகள் அவசரக் கடிதம்.


உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் பூசாவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதனையிட்டு தற்பொழுது சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மிகுந்த அச்சத்துடன் சிறைச்சாலையிலிருந்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அவர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:மதிப்பிற்குரிய உறவுகளே!
உங்களுக்கோர் அன்பானதும் அவசரமானதுமான அழைப்பு. நீங்களே நாங்கள். நாங்களே நீங்கள் பல்லாண்டு காலமாக இலங்கையின் சிறைகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்தவர்கள், முற்றிலும் வலுவிழந்தவர்கள், முதியோர், குழந்தைகள், தாய்மார்கள், அநாதைகள் என பல்வேறு பட்டவர்களாக இருக்கும் அரசியல் கைதிகளாகிய எங்களுக்கு, வழக்குகளிலும் முன்னேற்றமில்லாத நிலையில், தேசிய பாதுகாப்புச் சட்டம் என்னும் பெயரில் நீண்ட காலத்தின்பின் உயர்நீதிமன்றத் தீர்ப்பினூடாக விடுதலை செய்யப்பட்டிருந்த சிலரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் பூசாச் சிறைச்சாலைக்கு மீண்டும் அழைத்துச் சென்றுள்ளனர்.
இதேபோல் இன்னும் எவரையெல்லாம் இவர்கள் கொண்டுசெல்லப்போகிறார்களோ தெரியவில்லை. கொண்டு செல்லப்படுபவர்கள் காணாமல் போகலாம், சுட்டுக்கொல்லபப்டலாம் அல்லது இரகசிய சித்திரவதைக் கூடங்களில் யாருடைய தொடரபுளுமில்லாமல் வைக்கப்படலாம். ஏற்கனவே இப்படிப்பலர் உள்ளனர் என்பதும், இப்படியெல்லாம் நடந்ததும், நடந்துகொண்டிருப்பதும் உலகம் அறிந்த உண்மை.
இப்படியான நீதிக்குப்புறம்பான அரசின் செயல்களை அனைத்து தமிழ் உறவுகளும் நான்பெரிது, நீ பெரிது என்று பாராமல், பல்கலைக்கழக சமூகத்தினூடாகவும், வர்த்தக சமூகத்தினூடாகவும், தமிழ் கலை கலாசாரச் சங்கங்களூடாகவும், புலம்பெயர் சமூகத்தினூடாகவும், மனித உரிமை, மனிதஉரிமைக் கண்காணிப்பகத்தினூடாகவும், சாத்வீகப் போராட்டத்தினூடாகவும் கண்டித்து நிறுத்திவைக்க வேண்டுமென்றும், தமிழ் அரசியல் கட்சிகளின் உன்னத பலத்தோடு இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து உங்கள் உறவுகளாகிய எங்கள் விடுதலை கிடைக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்வியலின் வேதனைகளைப் பிரிவுகளைப் புரிந்துகொள்ளாமல் சிலர் அரசியல் சுயஇலாபங்களுக்காகவும், தமது இருப்புக்காகவும், கபடநாடக சூத்திரதாரிகளாக மாறி எங்கள் விடுதலைக்கான போராட்டத்தைக் கேவலப்படுத்த வேண்டாமெனவும் அப்படிச் செய்பவர்கள் தமிழ் மக்களால் தமிழ் மக்களின் மனச்சாட்சிகளில் இருந்து அகற்றப்படுவர் என்பதையும் ஆணித்தரமாகக் கூறுகின்றோம்.
இதே நேரத்தில் எமது வழக்குகளில் ஆயராகும் சட்டவாளர்கள் அனைவரும் எம்மைப் புரிந்துகொள்ளுங்கள். காலங்காலமாகப் பிரிந்துகிடக்கும் எமது குடும்பப் பொருளாதாரம் மிகவும் வறுமைக்கோட்டின் கீழுள்ள நிலையில் நீங்களும் அளவுக்கதிகமான பணத்தைக் கேட்பதால் எங்கள் குடும்பங்கள்தான் என்ன செய்யமுடியும்? எனவே அனைவரும் ஒன்றிணைந்து எமது விடுதலைக்கான வழியைப் பிறநலத்தோடு செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி.
அரசியல் கைதிகள்.
வெற்றி நிச்சயம்
விடுதலை நிச்சயம்

08 ஜூன் 2012

அதிர்ச்சி தரும் சிறிலங்காவின் போர்குற்றங்கள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைத்துள்ள ஆதாரங்கள்!

தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பிலான புதிய ஆதாரங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த இன்டிபென்டன்ட்' ஊடகத்திடம் குறித்த ஆதாரங்களை கையளித்திருந்த வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்கள், குறித்த ஆதாரங்களை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடமும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான காணொளிப்பதிவும் அவ் ஆதாரங்களாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பில், சுதந்திரமான அனைத்துலக விசாரணையின் அவசியத்தினையே மீண்டும் ஒருதடவை, இந்த ஆதாரங்கள் வலியுறுத்தி நிற்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தீவில் இயங்கி வரும் சிறிலங்காவின் அரசியல், இராணுவக் கட்டமைப்பின் உயர் மட்டத் தலைவர்களுக்கு, இக் காட்டுமிராண்டித் தனமான குற்றங்களில் பெரும் பங்குண்டு என்பதுடன், அவர்களின் பங்களிப்புடனேயே, இக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன என்பதை இந்த ஆதாரங்கள் தெளிவாக காட்டுவதோடு, இதுவரை வெளிவந்துள்ள எல்லாவகை ஆதாரங்களின் அடிப்படையில், இன்றைய தேவை சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஒன்று மட்டுமேயாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை. 

07 ஜூன் 2012

மகிந்தரை உரையாற்ற வைக்க இந்தியா எடுத்த முயற்சி படுதோல்வியில்!

பிரித்தானிய அரச நிகழ்வு ஒன்றில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராசபக்சவை பேச வைப்பதற்காக ஒரு வருடகாலமாக பெருமுயற்சி எடுக்கப்பட்டதன் விளைவாகவே பொதுநலவாய கருத்தரங்கில் மகிந்தவுக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு உரையாற்றுவதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களின் முகத்தில் கரியை பூசலாம் என எண்ணியிருந்த சிறிலங்கா அதிபருக்கு அந்த உரையும் இரத்து செய்யப்பட்டமை பெரும் ஏமாற்றத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
மகிந்த ராசபக்சவை பிரித்தானியாவில் உரையாற்ற வைப்பதற்கு எவ்வாறு முயற்சி எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கடந்த 2010ம் ஆண்டு ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தில் சிறீலங்காவின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச ஆற்றவிருந்த உரை லண்டன் வாழ் தமிழர்களின் போராட்டம் காரணமாக நிறுத்தப்பட்டதால் அவர் இராஜதந்திர தோல்வியுடன் அவசர அவசரமாக நாடு திரும்பியதை அடுத்து இந்த வருடம் நடைபெறும் பிரித்தானிய மகாராணியின் முடிசூட்டு வைரவிழாவில் எப்படியும் அவரை கலந்து கொள்ள செய்விப்பதுடன் பிரித்தானியாவில் நடைபெறும் ஏதாவது ஒரு முக்கிய நிகழ்வில் சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்வதற்கான வேலைத் திட்டம் ஒன்று கடந்த வருடம் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்காக 3 இராஜதந்திரிகள் இராஜதந்திர சேவையில் அனுபவம் பெற்ற உள்நாட்டு வெளிநாட்டு அதிகாரிகள் 7 பேர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும் இந்தக் குழுவினர்; பிரித்தானியாவில் உள்ள கொள்கை வகுப்பு தொடர்பாடல் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் பிரித்தானிய அரசை அணுகியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் கடந்த டிசம்பர் மாதம் வரை பிரித்தானிய அரசு இதற்கு சாதகமான சமிக்ஞை எதையும் காணப்பிக்காததால் இந்தியாவின் உதவியை நாடியதாகவும் இந்தியா பொதுநலவாய நாடுகளின் அமைப்பினூடாக சிறீலங்காவுக்கு இந்த உதவியை செய்துகொடுத்ததாகவும் இந்தியா மலேசியா பாகிஸ்த்தான் பங்களேதேஷ் உள்ளிட்ட பெதுநலவாய அமைப்பிலுள்ள 16 நாடுகள் சிறீலங்காவின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவை மகராணியின் முடிசூட்டு வைரவிழாவுக்கு அழைக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுநலவாய அமைப்பின் கருத்தரங்கிலும் இம்முறை மகிந்த ராசபக்ச உரையாற்ற முடியாமல் போனமை சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு மட்டுமல்ல அவரை பேச வைப்பதற்கு முயற்சி எடுத்த இந்தியாவிற்கும் படுதோல்வியாக அமைந்துள்ளது. லண்டன் தமிழர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தால் மகிந்தவின் உரை நிறுத்தப்பட்டதால் மகிந்தவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் பலத்த அவமானம் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

மகிந்தாவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழர்களுடன் இணைந்த பிரித்தானிய காவல்துறை!

பிரித்தானிய மகாராணியின் வைரவிழாவில் மகிந்தா கலந்துகொள்வதை தடுத்து நிறுத்தி சர்வதேசத்தின் முன் அவர் ஒரு இனப்படுகொலையாளி என்பதை அடையாளப்படுத்த பிரித்தானியா தமிழர்கள் பல்வேறுபட்ட கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தியதுடன் துண்டுப்பிரசுரங்களையும் வழங்கி பிரித்தானியா உள்ளிட்ட மாற்றின மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தனர். இந்த நிகழ்வுகளில் அதனைத் தொடர்ந்து தமிழர் அமைப்புக்கள் பல முறைப்பாட்டுக் கடிதங்களையும் மாகாராணிக்கு அனுப்பி வைத்திருந்ததைத் தொடர்ந்து பிரித்தானியா அரசினால் மகிந்தரின் உரை தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததும் அனைவரும் அறிந்ததே.
இலங்கைத் தீவில் தமிழீழ மக்கள் மீது, மகிந்தா தலைமையிலான சிறீலங்கா அரசாங்கம் நடத்திய இனப்படுகொலை,மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், போர் குற்றம், மற்றும் அடக்கு முறைகளை கண்டிக்கும் வகையில் சுலோக அட்டைகளை தாங்கியும், கோசங்களை எழுப்பியும், மகிந்தாவின் உருவப் பொம்மைகளை வீதிகளில் கட்டியிழுத்தும், தூக்கில் தொங்கவிட்டும் சிங்கள தேசியக் கொடிகளை வீதிகளில் இழுத்தும் அதனை ஏறிமிதித்தும், இறுதியில் உருவப்பொம்மையும் ஸ்ரீலங்கா தேசியக்கொடியும், அதன் யாப்பும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. காலை 8 மணி முதல் மாலை 5.மணியையும் தாண்டி தொடர்ந்தது.
மாலை 5.30 மணியளவில் பிரித்தானியா காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் விமான நிலையம் நோக்கி புறப்பட்ட மகிந்தாவின் வாகன அணி விடுதியில் இருந்து புறப்பட்டு சில வினாடிகளில் தமிழர்களின் தாக்குதலுக்கு உள்ளானது.
வாகனங்களில் சிறு சிறு நெளிவுகள் ஏற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வேளை அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்து சிரித்ததையும் அவதானிக்க முடிந்தது.
போராட்டம் நடைபெற்ற வேளை மகிந்தாவுக்கு ஆதரவான சில சிங்களவர்களும் தமிழர்களுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் தமிழர்கள் பெரும் திரளாக திரண்டு வருவதை அறிந்த சிங்களவர்கள் சில நிமிடங்களில் அந்த இடத்தில் இருந்து காணாமல் போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மகிந்தாவின் வாகன அணி புறப்படவிருந்த சமயம் மகிந்தா புறப்படத் தயாரான செய்தியை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களுக்கு தெரியப்படுத்தி அவர்கள் தயாராகும் வரை காத்திருந்து மகிந்தாவை அழைத்துவந்து கல்லெறி வாங்கிக் கொடுத்து, தன்மானத் தமிழர்களுடன் பிரித்தானிய காவல்துறையினரும் இணைந்து மகிந்தாவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

06 ஜூன் 2012

காவல்துறையினரின் கட்டுப்பாடுகள் உடைக்கப்பட்டு பிரதான வீதிகளில் பேரணி!

பொதுநலவாய நாடுகளின் செயலகத்தினை நோக்கி நடைபெற்றுவரும் பேரணி நடைபாதை வழியாக நகர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில் தற்போது லண்டன் மாநகரக் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு வீதிகளில் இறங்கி பேரணியைத் தொடர்ந்து வருவதாக அங்கிருந்து செய்திகள் கிடைத்துள்ளது.
இதேவேளை மகிந்தரின் கொடும்பாவி லண்டன் நகரப் பகுதிகளில் கட்டி இழுத்துவரப்பட்டு முதலில் தூக்கில் இடப்பட்டது. பின்னர் தூக்கில் இருந்து இறக்கப்பட்டு பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டது. அத்தோடு இலங்கையின் சாசனமும், சேர்த்து எரிக்கப்பட்டு தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காட்டினர். பிரித்தானிய இராணி வரவிருப்பதால், தமிழீழக் கொடிகளை இறக்குமாறு பொலிசார் வற்புறுத்தியுள்ளனர், ஆனால் இளையோர்கள் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து பிரித்தானிய இராணி முன்பாகவே, தமிழீழக் கொடி காட்டப்பட்டது, பெரும் பரபரப்பைத் தோற்றுவித்துள்ளது.
எட்டுத் திசைகள் அதிர புலத்துப் புலிப்படைகளின் படையெடுப்பால் நடைபாதை கொள்ளதாக மக்கள் வெள்ளம் திரண்டுள்ளதால் காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து பிரதான வீதிகளில் இறங்கி பேரணியை தொடரந்து வருகின்றனர்.
பேரணிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவந்த லண்டன் காவல்துறையினர் கூட திரண்டு வந்துகொண்டிருக்கும் புலத்துப் புலிப்படையினை கண்டு செய்வது அறியாது திகைத்து நிற்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக எமது செய்தியாளர்கள் அங்கிருந்து தற்போது தெரிவித்துள்ளார்கள்.
வெள்ளையினத்தவர்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கின்றதால் ஏனைய வெள்ளையினத்தவர்கள் ஆர்வமுடன் அந்த துண்டுப்பிரசுரங்களை வாங்கிப் படிப்பதையும் அவதானிக்க முடிகின்றது. அவ்வாறு துண்டுப்பிரசுரங்களை வாங்கிய வெள்ளையினத்தவர்கள் சிலர் தம்மை போராட்டத்தில் இணைத்துக் கொண்டு வருகின்றார்கள்.
இந்த அதிர்ச்சிகரமான எழுச்சி ஒருபக்கம் என்றால் லண்டன் மாநகர காவல்துறையினரின் முன்னேற்பாடுகளை பார்க்கும் போது மிகவும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான விடையமாக உள்ளது.
கடந்த காலங்களில் பிரித்தானிய வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பல்வேறு போராட்டங்களை பார்த்து அனுபவப்பட்ட லண்டன் மாநகரக் காவல்துறையினர் இன்று பல்லாயிரக் கணக்கில் தமிழர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்து பல்வேறு ஏற்பாடுகளை முன்னெச்சரிக்கையாக செய்துள்ளார்கள.
லண்டன் மாநகர காவல்துறையினர் நிகழ்விடத்து பிரதான வீதிகளுடனான போக்குவரத்தை நிறுத்தி வீதியின் ஒரு பகுதியை போராட்டத்திற்கு ஒதுக்கி சிறப்பான ஏற்பாடுகளை செய்து ஒத்துழைப்பினை செய்து வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளில் வீதித்தடைகளை ஏற்படுத்தி புலத்துப் புலிகளின் வீராவேசப் போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்கு முன்முயற்சிகளை எடுத்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
கடந்த சில நாட்களாக பிரித்தானிய வாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்களின் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அரங்கக் கூட்டம் முற்று முழுதாக நிறுத்தப்பட்டுவிட்டது.
இன்று மதியம் பொதுநலவாய நாடுகளின் செயலகத்திற்கு அருகாமையில் வந்துள்ள நாடுகளின் அதிபர்களிற்கான விருந்துபசார நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ளது. அதனையும் தடுத்து புலத்துப் புலிகளின் எழுச்சியும் புரட்சியுமான போராட்டத்தின் காரணமாக பொதுநலவாய நாடுகளின் நிகழ்வுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது அறியப்படுகின்றது.

மகிந்தரை விரட்டியடிக்கும் வரை ஆர்ப்பாட்டம்! தமிழர்கள் சபதம்!

இலண்டனை விட்டு சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவை விரட்டியடிக்கும் வரை இன்று (புதன்கிழமை) முழுவதும் தொடர் ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்துவதற்கு பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை 8:00 மணிக்கு மன்சன் இல்லத்திற்கு முன்பாக அணிதிரளும் ஈழத்தமிழர்கள், அங்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நிகழ்த்திய பின்னர் அங்கிருந்து காலை 10:00 மணிக்கு அருகில் அமைந்திருக்கும் போல் மால் பகுதியில் மகிந்தர் விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளும் மல்பரோ ஹவுஸ் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நிகழ்த்தவுள்ளனர்.
இப்போராட்டம் நடைபெறும் ஏககாலத்தில் மகிந்தரும் அவரது குழுவினரும் அடிக்கடி சென்று வரும் பார்க் லேன் பகுதியில் உள்ள ஹில்ரன் விடுதியையும் முற்றுகையிட்டு ஈழத்தமிழர்களால் போராட்டம் நிகழ்த்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை இலண்டனை விட்டு மகிந்தர் புறப்படும் பொழுது ஹீத்ரோ விமான நிலையத்திலும் முற்றுகைப் போராட்டம் நிகழ்த்துவதற்கு ஈழத்தமிழர்கள் திட்டமிட்டுள்ளனர்.

05 ஜூன் 2012

மஹிந்தவின் பயணத் திட்டம்! தமிழரிடம் இரகசியங்களை கசிய விட்ட ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிசார்?

மஹிந்தவின் பயணத் திட்டம்! தமிழரிடம் இரகசியங்களை கசிய விட்ட ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிசார்?லண்டன்- ஹீத்ரோ விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க புலம்பெயர் தமிழர்கள் ஒன்று கூடுவதை அறிந்து, அவரது பயணம் இறுதி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக மகிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் மதியம் 1.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வழக்கமாகப் புறப்படும் யுஎல்-503 விமானம் மூலம் லண்டனுக்குப் பயணிக்கவிருந்தார்.
இந்த விமானம் நேற்றுமுன்தினம் இரவு லண்டனை வந்தடையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் – அவருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக தமிழர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் ஒன்று கூடியிருந்தனர்.
ஹீத்ரா விமான நிலையத்தில் எதிர்ப்புத் தெரிவிக்க தமிழர்கள் தயாராவதாக கிடைத்த தகவலை அடுத்து அந்தப் பயணத்திட்டம் இறுதி நிமிடங்களில் மாற்றியமைக்கப்பட்டது.
இறுதிநேரத்தில் ராஜபக்சவின் பயணம் மாற்றியமைக்கப்பட்ட தகவலை ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினரே புலம்பெயர் தமிழருக்கு தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் பயணத்திட்டம் குறித்த தகவல்கள் வெளியே கசிவதைத் தடுக்கும் வகையில் – உள்நாட்டுப் போரின் போது கையாளப்பட்டதைப் போன்று – கொழும்பில் ஒவ்வொரு இரண்டு மணிநேரத்துக்கும் ஒருமுறை கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
இந்தநிலையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் நேற்றுமுன்தினம் இரவே மிகவும் இரகசியமாக லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்ச லண்டனில் எங்கு தங்கியுள்ளார் என்ற விபரம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டது.
ஆனாலும் சிறிலங்கா அதிபர் ஹில்டன் விடுதியில் தங்கியுள்ளார் என்பதையறிந்த புலம்பெயர் தமிழர்கள் ஹில்டன் விடுதிக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“சிறிலங்கா அதிபர் போர்க்குற்றவாளி”, “தமிழருக்கு நீதி வேண்டும்”, “தமிழருக்கு சுதந்திரம் வேண்டும்” என்று அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
பாக் லேனில் அமைந்துள்ள அந்த விடுதியின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழிகளில் அதிகளவு காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் தங்கலாம் என்று முன்னர் கருதப்பட்ட டோசெஸ்டர் விடுதிக்கு முன்பாகவும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அங்கு அதிகளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் இருக்கவில்லை.
ஹைட்பார்க் கார்டனில் அமைந்துள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு வெளியே இரண்டு காவல்துறை கண்காணிப்பு நிலைகள் அமைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களை ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர் ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவதாக சிறிலங்கா அரசதரப்பு விசனமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

04 ஜூன் 2012

இனப்படுகொலை அரக்கனை துரத்தியடிப்போம் – பரமேஸ்வரன் [காணொளி]

பிரித்தானிய ராணியின் வைர விழாவுக்கு வருகை தரும் இனப் படுகொலைவாதிக்கு எதிரான போராட்டத்திற்கு பிரித்தானிய மற்றும் ஜரோப்பிய தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் வெளியிட்ட காணொளி.

மஹிந்தவின் வருகையினை எதிர்த்து ஹீத்துரோ விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டம்.

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ச லண்டன் வருகின்றார் என்ற தகவலையடுத்து கீத்துறூ விமான நிலையத்தில பெருந்திரளான தமிழ் மக்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரித்தானிய காவற்துறையினர் மக்கள் கூடுவதை தடுப்பதற்காக எடுத்த முயற்சிகளையும் தாண்டி மக்கள் Terminal 4 இல் தேசியக்கொடிகளை கையில் ஏந்தியவாறு "Sri Lanka President War Criminal" என்ற கோசத்துடன் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினர்.
மகிந்த ராஜபக்ச இலண்டனுக்குள் வந்துவிட்டாரா என்பதை உறுதியாக அறிந்திருக்காத மக்கள் இனியும் அவரின் வருகை தெரியவரும் பட்சத்தில் தவறாது அங்கு வந்து அவர் நாடு திரும்பும் வரை அவர் செல்லுமிடமெல்லாம் சென்று எமது எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்று உறுதியாகக்கூறி தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று எழுச்சியாக 3 தடவைகள் உரத்த குரலில் உறுதியெடுத்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டு கலைந்து சென்றனர்.

03 ஜூன் 2012

போர்க்குற்றவாளி மகிந்தவை கைதுசெய்யக் கோரி பிரித்தானியாவில் வழக்கு!

பிரித்தானிய மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வரும் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக இனக்கொலைக்கு எதிரான தமிழர்கள் (TAG) அமைப்பு பிரித்தானியாவின் இலண்டன் மாநகரக் காவல்துறைச் சேவையிடம் ஒரு முறையான புகார் மனுவை சமர்ப்பித்துள்ளது. அத்துடன், மகிந்தவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று இலண்டன் மாநகரக் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்ட அந்த முறைப்பாட்டு மனுவில் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றங்களை மகிந்த ராஜபக்ச இழைத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, உலகளாவிய அதிகார விதிகளுக்கு உட்பட்ட பிரித்தானியாவின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு ராஜபக்சவை கைதுசெய்து, இந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு அந்த அமைப்பு மாநகரக் காவல்பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதில் விதிவிலக்குச் சிக்கல்கள் இருந்தாலும், மாநகரக் காவல்துறையினர் வழக்குப் பதிவொன்று செய்து விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்வதை தடுக்கவியலாது என இனக்கொலைக்கு எதிரிரான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த முறைப்பாட்டு மனுவுடன் ராஜபக்சவுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட வழக்குத்தாக்கல் நகலொன்றையும் இணைத்து, அதில் 2005 ஆம் ஆண்டு திருகோணமலையில் சிறீலங்கா பாதுகாப்புப் படைகளால் கொலைசெய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தையான கலாநிதி காசிப்பிள்ளை மனோகரனின் வழக்கு விடயமும் முதன்மைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதுடன், அவர் ஒரு பிரித்தானியக் குடியுரிமை பெற்றவர் என்பதும் குறிப்பிடப் பட்டுள்ளது.
மேலும், இந்த முறைப்பாட்டில் ஐ.நா. வல்லுநர் குழு அறிக்கையின் பிரிவுகளும் மேற்ககோள் காட்டப்பட்டுள்ளது,
பொதுமக்களுள் கணிசமான பகுதி அழிவை ஏற்படுத்தக்கூடியவாறு கணக்கிட்டு உணவு மற்றும் மருந்து அவர்களை அணுகவிடாது வேண்டுமென்றே தடுத்ததோடு, பொதுமக்கள் மீது திட்டமிட்ட எறிகணை வீச்சுக்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது,என்பதை அந்த அறிக்கை வவரிக்கிறது. அது இனப்படுகொலையைத் தடுத்தலும் தண்டனை விதித்தலும் என்னும் ஐ.நா. உடன்படிக்கையின் சரத்து 2(சி)இல் கூறப்பட்டுள்ள இனப்படுகொலை வரையறையை ஒத்ததாக உள்ளது எனவும் அந்த முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வலிமையான நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கூண்டில் நிறுத்தப்படுவதற்கான ஒரு ஆரம்பநிலையை சந்திக்கிறது தெளிவாகவுள்ளது என்பதோடு, பிரித்தானியாவின் உலகளாவிய அதிகாரம் மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களின் பொருட்டு ராஜபக்சவை கைதுசெய்து, நீதியின் முன் நிறுத்துவதற்கு இலண்டன் மாநகரக் காவல்துறை அவசிய படிமுறைகளை எடுக்கவேண்டுமென இனக்கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளது.

ஜயா சுமந்திரன் அவர்களே – வரலாறு தெரியாதவர்கள் வாய்மூடியிருப்பது நல்லது!

தாயக விடுதலைவேட்கை கொண்ட மனிதர்கள், மகாத்மாக்கள் சிந்திய இரத்தம் இன்னமும் காயவில்லை. சுதந்திர எண்ணத்தோடு அவர்கள் நடந்து சென்ற பாதையில் காலடித்தடங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றது. துப்பாக்கிச் சன்னங்கள், வெடிகுண்டுகள் உடல் கிழித்தபோது வான்முட்ட அவர்கள் போட்ட கூச்சல் இன்னமும் காதோடு நிற்கின்றது. போர் சென்று வரச்சொன்னவர்கள் அவர்களின் கல்லறைகளை கூட தொலைத்துவிட்டு நிற்கின்றோம்.
ஒரு நிமிடம் வெயிலில் நின்று பழகாதவர்கள், துப்பாக்கியின் கனமறியாதவர்கள், சொகுசு பங்களாவில் வாழ்ந்தவர்கள் இன்று எங்கள் மகாத்மாக்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஊமயாய், குருடராய், செவிடராய் இருந்துவிட்டு வருகின்றோம். என்னே மனிதர்கள் நாங்கள்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா கடந்த 30வருடம் போராடினார்கள்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா எங்களுக்காக இரத்தம் சிந்தினார்கள்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா எங்களுக்காக உயிர் துறந்தார்கள்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களின் உடல்களையா சிங்களவன் சிதைத்து வீசினான்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா சிறைகளில் வாடுகின்றனர்? வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா எங்கள் அடையாளங்களை தேடிக் கொடுத்தார்கள்?
வரலாறு தெரியாதவர்கள் வாய்மூடியிருப்பது நல்லது. இதை ஐயா சுமந்திரன் நன்றாக காதில் இருத்திக் கொள்ளுங்கள். தமிழீழம் என்பது தனிநாடு அல்ல. அது தமிழ் நாடு. ஈழம் என்ற நாட்டில் தமிழர்கள் வாழும் அவர்தம் பூர்வீக நிலம் வடகிழக்குத்தான் தமிழீழம். தமிழீழம் என்பது தனிநாடு என்பதும், அதை நாம் இப்போது கேட்கவில்லை என்பதும் அடி நிலை மடையர்கள் பேசும் பேச்சு. தமிழீழம் கேட்கவில்லை என கருத்துக்கூறும் உரிமையை யார் உமக்கு கொடுத்தது? தமிழீழம் என்ற சிந்தனையை எத்தனை தமிழர்கள் உயிரில் தரித்துக் கொண்டு சரித்திரமானார்கள் என்பது தெரியுமா?
எத்தனை தமிழர்களின் இரத்தம் ஆறாகப் பெருகி ஓடியது என்பது உமக்குத் தெரியுமா? தமிழீழம் ஒன்றும் தந்தை செல்வநாயகத்தினதோ, தேசியத் தலைவர் வே.பிரபாகரனினதோ சொத்துக் கிடையாது. அவர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட அப்பாவித்த தமிழர்களின் சொத்து. உம்மைப்போன்ற கைக்கூலிகள் தமிழீழம் பற்றிப் பேசக்கூடாது. நீங்கள் இராஜதந்திரம் என்று பேசும் வார்த்தை ஜாலங்களை விட தெருக்கடையில் நிற்கும் சில்லறை வியாபாரி அதிகம் அறிந்திருக்கின்றான்.
வடகிழக்கு வாழ் தமிழர்களின் வாக்களிப்பில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்ல நீர். தமிழீழம் என்பது மகாத்மாக்களின் திருவாயிலிருந்து வந்த தமிழர்களின் வாழ்க்கை. அது வெறும் வார்த்தையென்று நீர் பிதற்றித் தள்ளியதால் இன்று அது மாசுபட்டிருக்கின்றது. தமிழீழம் வேண்டாமென்று பேசுவீர் அதை நியாயப்படுத்த பூசி மெழுக உமக்குப் பின்னால் ஒரு கூட்டம். நாடக மாந்தரைப் போல உங்களுக்கெல்லாம் ஒரு வாழ்க்கை.
இப்போது புதிதாக உணர்ச்சி வசப்பட்டவர்கள்தான் போராடினார்கள். 30வருடப் போராட்டம் ஒரு அர்த்தமற்ற போராட்டம். வன்முறை உணர்வுள்ளவர்கள் அந்த வழியை கைவிடுங்கள் அதற்காக சத்தியப் பிரமாணம் செய்யுங்கள் என்றெல்லாம் மட்டக்களப்பில் பேசியிருக்கின்றார் இதே சுமந்திரன் ஜயா. அப்படியென்றால் இவரின் கருத்து போராட்டத்தை நடத்தியவர்களும். அதற்காக உயிரிழந்தவர்களும் வெறும் உணர்ச்சி மடையர்களா?
இதில் சுமந்திரன் தரப்பில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவரை இவ்வாறு, இவ்வளவு தூரம் பேசவிட்டு விட்டு வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் எம்மில்தான் தவறிருக்கின்றது. எமக்காக உயிர் துறந்தவர்களை, எமக்காக சுடுகலன் சுமந்தவர்களை, எமக்காக மரணத்தின் போதும், மரணத்தின் பின்னும் அவமானம் சுமந்தவர்களை, எமக்காக வாழ்க்கையை இழந்தவர்களைப் பற்றி இழிவாக யாரும் பேசினால் அடுத்த கணமே காலிலுள்ள செருப்பை கழற்றி வீசியிருக்கவேண்டும். நாங்கள்தான் உணர்சியற்று மௌனிகளாகிப் போனோமே. பிறகென்ன வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லோரும் ஏறி மிதிக்கத்தானே செய்வார்கள்.
இதே சுமந்திரனுக்கு யுத்தத்தின் கொருரம், அகதி வாழ்வின் அவலம், உறவுகளை பறிகொடுத்த வேதனை தெரியுமா? தெரியாது வாய்க்கு வந்தபடி உணர்ச்சிவசப்பட்டவர்கள் என்கிறார். உணர்சிவசப்பட்டவர்கள்தான் நிச்சயமாக தன்னுடைய உறவுகளின் உயிர் பறிக்கப்பட்டபோது, உரிமைகள் பறிக்கப்பட்டபோது, தெருக்கள் தோறும் தமிழன் கொன்று வீசப்பட்டபோது உணர்ச்சி வசப்பட்டவர்கள்தான்.
அன்று அவர்கள் உணர்ச்சி வசப்பட்டிருக்காவிட்டால், இன்று சுமந்திரனின் சந்ததி எங்கேயோ அடிமை உத்தியோகத்தில் இருந்திருக்கும். தேசியத் தலைவரும், அவருடனிருந்த தளபதிகளும், 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களும், ஆயிரமாயிரம் போராளிகளும் போர் வெறியர்கள் இல்லை. அல்லது ஆயுதங்கள் மீது காமம் கொண்டவர்கள் கிடையாது.
ஆயுதப்போராட்டமென்பது எங்கிருந்தோ திடீரென முளைத்த ஒன்றல்ல. அதற்கு முன்னய 30வருட ஜனநாயகப் போராட்டத்தின் நீட்சி. காலம் தமிழர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்தது. வீதிக்கு வீதி சுடப்பட்டோம், ஆயிரமாயிரமாய் காணாமல்போனாம், ஆனாலும் அப்போதும் எங்கள் அடி நெஞ்சில் ஒரு நின்மதி, சந்தோஷம் இருந்தது தமிழர்களின் ஆயுதங்கள் பேசிக் கொண்டிருந்தபோது.
ஜனநாயகம் மலர்ந்திருக்கின்றது என்கிறீர்கள், அரசுடன் பேசித் தீர்வு காணலாம் என்கிறீர்கள். யுத்தம் முடிந்துபோனது, தமிழர்களின் ஆயுதங்கள் மௌனித்துப்போனது 3வருடங்கள் கடக்கப்போகின்றது இந்த அரசாங்கத்துடன், சிங்கள பேரினவாத சக்திகளுடன் பேசி எதை கிழித்தீர்கள்? இன்றும் ஒருவேளை சோற்றுக்கு ஏங்கித் தவித்துக் கொண்டு முகாம்களில் இராணுவ வேலிக்குள் ஆறாயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள் தெரியுமா?
சொந்த மண்ணில் சென்று வாழ முடியாமல் வீதியில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் கிடந்து ஆயிரக்கணக்கில் தவிக்கும் மக்கள் பற்றித் தெரியுமா? சிறையில் கணவனை, பிள்ளையை விட்டுவிட்டு சென்று பார்க்கச் செலவுக்குப் பணமில்லாமல் நகர வீதியில் பிச்சை எடுக்கும் எம் குலப் பெண்களின் கதை தெரியுமா? சொகுசு வாகனங்களிலிருந்து வெளியில் வந்து இவர்களிடம் போய் சொல் உணர்ச்சி வசப்பட்ட போராட்டம் என்று. மறுகணம் அவர்கள் காலிலுள்ள கிழிந்த செருப்புத்தான் பேசும்.
தமிழரசுக் கட்சி இப்போது புலி எதிர்ப்புவாதிகளின் கூடாரமாகிக் கொண்டிருக்கின்றது. உலகில் சுதந்திரத்திற்காக எம்மைப்போல போராடிய ஏராளமான நாடுகள் இருக்கின்றன. அங்கும் கூட காலத்திற்குக் காலம் போராட்ட வடிவங்கள் மாற்றம் கண்டன. ஆனால் புதிதாக ஆரம்பிக்கும் ஒரு போராட்டம் அதற்கு முன்னைய போராட்டத்தின் நீட்சியாகவே அங்கெல்லாம் இருந்திருக்கின்றது. இங்குள்ளதைப் போன்று முன்னைய போராட்டத்தை கொச்சைப் படுத்தியிருக்கவில்லை.
இங்கு இதுதானே நடந்து கொண்டிருக்கின்றது. இராஜதந்திரப் போராட்டம் எனப் பேசுவோர் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தி, அதுவொரு உணர்ச்சி வசப்பட்ட போராட்டம் என்றும். அதன் மூலம் எந்த பயனும் கிடைக்கவில்லை என்றும் பிதற்று கின்றார்கள்.
சரி நாம் கேட்கின்றோம். தந்தை செல்வநாயகம் ஈழத்தமிழர்கள் குறித்துப்பேசிய போது இந்தியாவின் தமிழகத்தில் உள்ளவர்களுக்கே தெரியாது இலங்கையில் சுயத்திற்காக தமிழர்கள் போராடும் விடயம். ஆனால் அடுத்து வந்த 30வருட விடுதலைப் போராட்டம் இலங்கையில் சுயத்திற்காக போராடும் ஒரு இனமிருக்கின்றது, வரலாற்றில் அந்தளவுள்ள வேறு எந்த இனமும் செய்திராதளவு அளப்பரிய தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் இந்த இனம் செய்திருக்கின்றது என்பது முதற்கொண்டு தமிழர் போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் இன்று சர்வதேசம் முளுவதும் புரிந்து கொண்டிருக்கின்றது. அல்லது அறிந்து கொண்டிருக்கின்றது.
அதுபோக உங்களையும் ஒரு மனிதர்களாக கணித்து, மக்கள் பிரதிநிதிகளாக கணித்து சர்வதேச நாடுகள் அழைத்துப் பேசுகின்றனவே அதற்கு காரணம் யார் தெரியுமா? அதற்குப் பின்னால் எவ்வளவு இரத்தம் தோய்ந்த சரித்திரங்கள் இருக்கின்றது தெரியுமா? எதுவுமே தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டவர்கள் போராடினார்கள், ஆயுதப் போராட்டத்தால் எதுவும் பயனில்லை என்று பேசுகிறார். ஓன்றை விளங்கிக் கொள்ளவும் ஜயா சுமந்திரன் அவர்களே நீங்கள் இன்று இந்த இடத்தில் நின்று பேசுவதற்குக் கூட நீங்கள் சொன்ன உணர்ச்சி வசப்பட்ட போராட்டம்தான் காரணம்.
ஆயுதப் போராட்டத்தை எம் தலைவன் சரியான நிலைப்புள்ளியில் கொண்டு சென்றான். ஆயுதங்கள் கைகளில் புகுந்து கொண்டபோதே என் தலைவனுக்குத் தெரியும் 30வருடங்களின் பின்னால் இது நடக்கும், இப்படித்தான் நடக்கும் என்று. அதேபோல் இது இப்படி நடக்காது போனால் தொடர்ந்து சிங்களத்தின் கால்களில் தமிழ் இனம் கிடந்து நசுங்கி அழிந்து போகும் என்பதும் எம் தலைவனுக்குத் தெரியும். ஆயுதப்போராட்டம் மௌனித்த இடத்திலிருந்து நீட்சி பெறத் துப்பற்ற நீங்கள் ஆயுதங்களை யாரும் சுமக்க கூடாதென சத்தியப் பிரமாணம் பெறுகிறீர்கள்.
ஏன் ஆயுதங்களை யார் தமிழரசுக் கட்சிக்காரனா சுமக்கப்போகிறான்? விடுதலையின் தேவையறிந்த, ஆக்கிரமிப்பின் அருவருப்பை உணரத்தக்கவன்தான் ஆயுதத்தை சுமக்கப் போகின்றான். தந்தை செல்வா சொன்னார் எம் அடுத்த சந்ததி ஆயுதங்களுடன்தான் உங்களிடம் பேசும் என்று. அந்த தீர்க்க தரிசனம் நடந்தது. இனிமேல் தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய பின்புதான் ஆயுதங்கள் உரத்து முழங்கத் தொடங்கின.
தமிழர் ஆயுதங்களை விரும்பிச் சுமக்கவில்லை, சுமக்கத் தூண்டப்பட்டார்கள், அல்லது காலம் அந்தக் கடமையினை கொடுத்தது. தமிழனை தமிழனாக உலகத்திற்குச் சொன்னது கடந்த 30வருட விடுதலைப் போராட்டமேதான். நீங்கள் கிடையாது. கிடைத்த சந்தர்ப்பங்கயும் நழுவ விட்டுவிட்டு கையாலாக நிலையில் இராஜதந்திரம் பேசுகிறீர்கள் இப்படி எம் தலைவன் எப்போதும் பேசியது கிடையாது. அதனால்தான் அவன் வரலாறு, நீங்கள் யார்? ஏன்ன?
எம் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழர்களே, அகத்திலுள்ள தமிழர்களே விடுதலையைப் பற்றி, புலிகளைப் பற்றி, போராட்டத்தைப்பற்றி, தலைவனைப் பற்றி பேசும் அருகதை எவனுக்கும் கிடையாது. பேசினால் எறியுங்கள் செருப்பை கழற்றி, அதுவும் நாளைய வரலாற்றில் எழுதப்படும் என்ற நம்பிக்கையுடன்…….!

ஈழமகன்

02 ஜூன் 2012

தமிழர்கள் கூலிப்படைகளாக வந்தே குடியேறினர்"வந்தேறு குடியான தேரரின் திமிர் பேச்சு!

வந்தேறுகுடிகள் தொடர்பிலான விவாதம் தேவையில்லைதமிழர்கள் வந்தேறுகுடிகள்தான் என்பதை நிரூபிப்பதற்கு விவாதம் தேவையில்லை. வரலாற்றுச் சான்றுகள் உள்ளன எனக் கூறி கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவின் சவாலை ஏற்கமறுத்துவிட்டார் எல்லாவ மேதானந்த தேரர்.தமிழர்கள் எந்த உலகிலிருந்து வந்திருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் சிங்களவர்களுடன் ஒத்துத்தான் வாழவேண்டும் என்றும் தேரர் கூறுகின்றார்.
வடக்கு, தமிழர்களுக்கு மட்டும் உரிய பிரதேசம் அல்ல. யார் வேண்டுமானாலும் எங்கும் வாழலாம் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னர் பி.பி.சிக்கு தெரிவித்திருந்தார். பாதுகாப்புச் செயலரின் கூற்றை வரவேற்று அதற்குப் பக்கவாத்தியம் வாசிக்கும் வகையில், “வந்தேறு குடிகளான தமிழர்கள் வடக்குக்கு உரிமை கோருவதா” எனக் கடும் போக்கிலான கருத்துகளை முன்வைத்தார் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர்.
இதனால் கொதிப்படைந்த தமிழ்த் தலைவர்கள், பாதுகாப்புச் செயலர், எல்லாவல மேதானந்த தேரர் ஆகியோரின் கருத்துகளை வன்மையாகக் கண்டித்ததுடன், வரலாறு தெரியாமல் உளறுகின்றனர் என்றும் தக்கவகையில் பதிலடி கொடுத்தனர்.
இதற்கு ஒருபடி மேலே சென்று நவ சமசமாஜக் கட்சியின் தலைவரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, ”இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயாராகவே உள்ளேன். சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள். எனவே, முதுகெலும்பிருந்தால் வரலாறு தெரிந்தால் தமிழர்களை வந்தேறுகுடிகள் எனக் கூறும் எல்லாவல மேதானந்த தேரர் பகிரங்க விவாதமொன்றுக்கு வரவேண்டும்” என்று சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில், விக்கிரமபாகு கருணாரட்ன விடுத்த சவாலை ஏற்று நீங்கள் விவாதத்திற்குத் தயாராகுவீர்களா? என எல்லாவல மேதானந்த தேரரிடம் வினவியபோது அவர் கூறியவை வருமாறு:
“தமிழர்கள் வந்தேறு குடிகள்தான். கூலிப்படைகளாக வந்தே அவர்கள் இலங்கையில் குடித்தனம் புகுந்தனர். இதனை நிரூபிப்பதற்கு விவாதம் தேவையில்லை. வரலாற்றுச் சான்றுகள் உரியவகையில் உள்ளன.
தமிழர்கள் எந்த உலகிலிருந்து வந்திருந்தாலும் எமக்குப் பரவாயில்லை. அவர்கள் சிங்களவர்களுடன் ஒத்துத்தான் வாழவேண்டும். ஒற்றுமையாக வாழ்வதற்கு முன்வரவேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று தமிழர்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்கின்றனர் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

01 ஜூன் 2012

வந்தேறு குடிகள் சிங்கவர்களே ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயார்"-விக்கிரமபாகு கருணாரட்ன.

newsஇலங்கைத் தீவு தமிழர் தேசம் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டுவேன். வரலாறு தெரிந்தால் முது கெலும்பிருந்தால் எல்லாவல மேதானந்த தேரர் என்னுடன் பகிரங்கமான விவாதமொன்றுக்கு வரவேண்டும்.
இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சவால் விடுத்துள்ளார்.சிங்களவர்கள்தான் வந்தேறுகுடிகள் என்பதையும், வடக்கு தமிழர்களின் பூர்வீகம் என்ற யதார்த்தபூர்வமான உண்மையையும் தேரருக்குக் கற்பிப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.
வந்தேறுகுடிகளான தமிழ்மக்கள் எப்படி வடக்கிற்கு உரிமை கோருவது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் காரசாரமான முறையில் கருத்துத் தெரிவித்துள்ளமை தொடர்பில் கேட்டபோதே விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
எல்லாவல மேதானந்த தேரர் ஒரு கல்விமானாக இருந்துகொண்டும், வரலாறு தெரிந்தும் சிங்கள மக்களைக் குஷிப்படுத்துவதற்கு போலிக் கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு இதுதான் வரலாறு இதிகாசம் என்றும் சுட்டிக் காட்டுகின்றார்.இலங்கைத் தீவு தமிழர் தேசமாகும். விஜய மன்னன் இங்கு வந்த பின்னர்தான் பௌத்த மதம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் இலங்கையைத் தமிழ் மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். இராவணன், குவேனி என வரலாற்றுப் பட்டியலை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள். பாகு என்ற பெயர் பங்களாதேசத்துக்குரியது. பராக்கிரமபாகு, விக்கிரமபாகு என சிங்களவர்களுக்குப் பெயர்கள் இருக்கின்றன. இது இந்தியாவில் இருந்து வந்தவர்கள்தான் சிங்களவர்கள் என்பதைப் பறைசாற்றுகின்றது.
அத்துடன், இலங்கை தமிழர்களின் பூர்வீகம்தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. விஜய மன்னன் இங்கு வந்துதான் தமிழர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டார்.
பௌத்த மதம் கூட இந்தியாவில் இருந்துதான் வந்தது. எனவே, வடக்கு மட்டுமல்ல, இலங்கையின் பூர்வீகம் தமிழ்தான் என்பது தெளிவாகத் தென்படுகின்றது.மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் இந்தியாவில் இருந்து வந்திருந்தாலும் அவர்கள் நூறு, இருநூறுக்கும் மேற்பட்ட வருடங்கள் இங்குதான் வாழ்கின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ளவேண்டும்.
வடக்கு தமிழர் பிரதேசம் அல்ல என்றும், தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் இனவாதம் பேசித்திரியும் எல்லாவல மேதானந்த தேரர் இது விடயம் தொடர்பில் விவாதம் நடத்துவதற்குத் தயாரா?அவர் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் என நான் சவால் விடுக்கிறேன். இப்படித் தெரிவித்தார் நவசமசமாஜக்கட்சியின் பொதுச் செயலாளரும், தெஹிவளை கல்கிஸை மாநகரசபை உறுபினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன.

பிரித்தானிய தமிழ் மக்களுக்கு அவசர அழைப்பு!

மானிடத்திற்கெதிரான மாபெரும் படுகொலையினை அரங்கேற்றிய சிறிலங்கா சனாதிபதி இனப்படுகொலையாளி மகிந்த இராசபக்ச முக்கிய உரை ஒன்றினை பொதுநலவாயநாடுகளின் அழைப்பின்பேரில் யூன் 6ம் திகதி காலை 10.00 மணிக்கு ஆற்றுகின்றார்.
பொதுநலவாய அமைப்பின் இவ் மனிதாபிமானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் பொறுப்பற்ற செயலைக் கண்டித்தும் இனப்படுகொலையாளி மகிந்தாவின் உரையினை நிறுத்துமாறுகோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று அவசரமாக பொதுநலவாயஅமைப்பின் செயலகத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம்: Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX
நேரம்: Friday 1st of June 4.00pm-7.00pm
போராட்டத்தின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடுகள் அவசரஅவசரமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. எனவே தயவுசெய்து பெருந்தொகையான எண்ணிக்கையில் கலந்து கொண்டு இனப்படுகொலையாளி மகிந்தாவின் உரையினைதடுத்து நிறுத்துவதற்கு உதவுமாறு அனைத்து இலண்டன் வாழ் ஈழத்தமிழரையும் அழைத்து நிற்கின்றோம்.

- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா.

31 மே 2012

சிங்களவர்களே வந்தேறு குடிகள்"தேரரின் கருத்துக்கு சிறிதரன் பதிலடி!

இலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை பெளத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும். என தமிழரசுக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.கடும் போக்கு கருத்துக்களைக் கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது:
இலங்கை வரலாற்றில் சிங்கள் பௌத்த பிக்குகளின் செயற்பாடு என்பது, இலங்கையை முற்று முழுதாக சிங்கள நாடு என காட்டுவதாகவே அமைந்துள்ளது. அவர்கள் எப்போதுமே, இலங்கை தமிழ் மக்களின் மண் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அந்த வகையிலேயே அண்மையில், மோதானந்த தேரரின் கருத்தும் அமைந்துள்ளது.
வடக்குக் கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகப் பகுதி. இதனை கடும் போக்குடைய பெளத்த பிக்குகள் ஏந்தவெரு காலப்பகுதியிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியாது. இலங்கையில் வாழ்கின்ற தமிழருக்கு என்று தனியான வரலாறு இருக்கின்றது. ஆதியிலிருந்து இயக்கர், நாகர் என்ற இனம் இலங்கையில் வாழ்ந்ததாக ஆதாரங்கள் இருகின்றன. அவர்கள் தமிழர்களே.
ஆனால் சிங்கள் மக்களின் மூதாதையரான விஜயன் குழுவினர் இலங்கைக்கு தற்செயலாகவே வந்து குடியேறியுள்ளார்கள். அவர்களே வந்தேறு குடிகள். அண்மையில் கூட பொலநறுவை,காலி மற்றும் அநுராதபுர பகுதிகளில் சிவன் ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆதியிலிருந்து இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தமைக்கான சான்றாகவே காணப்படுகின்றது. இதனை பெளத்த பிக்குகள் மறைக்க முற்படுகிறான்றார்கள்.
அண்மைக்காலமாக தமிழர்களின் நிலங்களில் திட்டமிட்ட வகையிலே சிங்கள பெளத்த பிக்குகள் விகாரைகளை அமைத்து வருகின்றார்கள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பான கடும் போக்கு கருத்துக்களை கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள்.
தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக உண்மையான விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை உலகத்திற்கு பயங்கரவாதிகளாக காட்டி தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்காமல் தடுத்தவர்கள் இப்பிக்குகளே. இவர்கள் காலத்திற்கு காலம் இவ்வாறான கருத்துக்களை கூறிவருபவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் இனத்துக்கு என ஒரு தனிப்பட்ட பூர்வீக, பண்பாடு, மொழி, மதம் என பலதும் கொண்டது.. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல எனவும் தெரிவித்திருந்தார்.

30 மே 2012

வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொள்கிறார் மகிந்த ராஜபக்ஷ!

மகிந்த ராஜபக்ச அடுத்து வரும் வாரங்களில் பல நாடுகளுக்கு உத்தியோகபூர்வமான விஜயங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், இந்த வாரம் தாய்லாந்துக்கான நான்கு நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொள்ளவிருந்த அதனை இரண்டு கட்டங்களாக சென்று வர திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தாய்லாந்து சென்றுள்ள அவர், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மகளின் திருமணத்தில் பங்கேற்பதற்காக ஒரு நாள் இரவு மட்டும் கொழும்பு திரும்பவுள்ளார்...
பின்னர் மீண்டும் தாய்லாந்து திரும்பி தனது உத்தியோகபூர்வ பணிகளை தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது..
இதன்போது தாய்லாந்து பிரதமர் யிங்லக் சின்வத்ராவை சந்திப்பதுடன், பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் உள்ளவர்களையும் சந்திக்கவுள்ளார்.
தாய்லாந்துப் பயணத்தை அடுத்து இலங்கை ஜனாதிபதி அடுத்த மாத தொடக்கத்தில் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அதையடுத்து வத்திக்கானுக்குப் பயணம் செய்து பாப்பரசரைச் சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் பிறேசில், கியூபா ஆகிய நாடுகளும் ஜனாதிபதி மஹிந்த விரைவில் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார்.
கியூபாவுக்கான தூதுவர் பதவியை, தாமரா குணநாயகம் நிராகரித்துள்ள நிலையில், கியூபாவுக்கு இலங்கை ஜனாதிபதி பயணம் மேற்கொள்ளும் வரை அங்கு தற்காலிகத் தூதுவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். தற்போது வொசிங்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பிரதி தூதுவராகப் பணியாற்றும் எசல வீரக்கோனே ஹவானாவுக்கான தற்காலிகத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுத்தக்கருவியாக வல்லுறவு,விசாரிக்க பிரித்தானியா தயாராகிறது!

உலகில் போர் இடம்பெறும் பிராந்தியங்களில் வல்லுறவை யுத்தத்துக்கான கருவியாக பயன்படுத்துவது தொடர்பான ஆதாரத்தை திரட்டுவதற்கு துரிதமாக அந்தப் பகுதிகளுக்கு ஆட்களை அனுப்பிவைப்பதற்கு தேவையான விசேட செயலணிப் பிரிவை பிரிட்டன் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பிரித்தானிய அரசின் இந்தச் செயற்பாடு இலங்கை அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது.முன்னாள் யூகோஸ்லாவியா, ருவாண்டா, மத்திய ஆபிரிக்கா, இப்போது சிரியா வென இத்தகைய போர்க்குற்றங்களை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் ஓரங்கமாக விரிவான முன்முயற்சியை பிரிட்டன் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தது.
இந்தவிசேட செயலணிக் குழுவானது நிபுணர்களைக் கொண்டிருக்கும், வெளிவிவகார அமைச்சே இக்குழுவை அமைப்பதாக த கார்டியன் பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.
பிரிட்டிஷ் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள், சட்டத்தரணிகளை கொண்டதாக இக்குழு அமைந்துள்ளது. இந்த வருட இறுதியில் இக்குழுவானது நடவடிக்கையில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரியளவில் பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக அறிகுறிகள் தென்பட்டால் குறுகிய கால முன்னறிவித்தலுடன் போர் வலயத்துக்கு அனுப்பப்படுவதற்கு தயாராக இந்த விசேட குழு இருக்கும்.
இக்குழுவினர் முதலாவதாக செல்லும் இடமாக சிரியா இருக்குமென கூறப்படுகிறது. சிரியாவில் வல்லுறவுகள் இடம்பெற தொடங்கியிருப்பதாக திகிலான அறிக்கைகள் கிடைத்திருப்பதாக பிரிட்டிஷ் வெளிவிகார அமைச்சர் வில்லியம் ஹேக் கூறியிருக்கிறார்.
தனிப்பட்டவர்களும் அமைப்புகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டாலும் மோசமான பாலியல் குற்றங்களை இழைத்தவர்கள் தண்டிக்கப்படாமல்போகும் பொதுவான தன்மை காணப்படுகிறது என்று ஹேக் கூறியுள்ளார். இந்தக் குழுவுக்கு அவசர நடவடிக்கைக்கான நிதியாக 20 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
பொஸ்னியா யுத்தத்தின் போது இடம்பெற்ற வல்லுறவினால் பாதிக்கப்பட்டோரின் முகாம்கள் பற்றிய அஞ்சலினா ஜொலியின் திரைப்படமான இரத்தமும் தேனும் நிறைந்த மண், விசேட செயலணிக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வின் போது நேற்று காண்பிக்கப்படவிருந்தது.
பொஸ்னிய யுத்தத்தின்போது 50 ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர் என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் வல்லுறவு போர் குற்றங்களுக்காக 30 விசாரணைகள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றது.
ருவாண்டா இனப்படுகொலையில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பெண்கள் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாக ஐ.நா. மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 1990 களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சியாராலியோனில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேவேளை லைபீரியாவிலுள்ள பெண்களின் தொகையில் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் படைவீரர் அல்லது துணைப் படைக்குழுவைச் சேர்ந்தவர்களினால் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு இலக்காகியிருந்தனர்.
இரு வருடங்களுக்கு முன்னர் யுத்தத்தின் போதான பாலியல் வன்முறைகள் தொடர்பான விசேட பிரதிநிதியை ஐ.நா. நியமித்திருந்தது. இந்த விவகாரங்களுக்கான ஐ.நா. விசேட பிரதிநிதியான வோல்ஸ்ராம் கடந்த பெப்ரவரியில் பாதுகாப்பு சபைக்கு சமர்ப்பித்த தனது அறிக்கையில் மோசமான குற்றங்களை இழைத்தவர்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.
மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் தென் சூடானின் இராணுவம், ஜவரிகோஸ்ட்டிலுள்ள போராளிகள், கொங்கோ ஆயுதப்படைகள் என்பவற்றின் பெயர்களை வால்ஸ்ராம் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேவேளை யுத்தத்துக்குப் பின்னரான வலயங்களில் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை பாலியல் வன்முறைகள் எவ்வாறு புறந்தள்ளி வைத்தன என்பதற்கும் வோல்ஸ்ராம் உதாரணங்களை முன்வைத்திருந்தார் சாட், நேபாளம், சிறிலங்கா, கிழக்கு தீமோர், செஸ்னியா போன்ற நாடுகளை அவர் உதாரணங்களாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த வகையில் இலங்கை நிலைமைகள் தொடர்பாகவம் பிரித்தானியா ஆராயலாம் என்பதால் கொழும்பு அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிகின்றது.

29 மே 2012

சந்திரநேரு சந்திரகாந்தன் கைதாகி விடுதலை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் 3மணிநேரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்!
கடந்த வருடம் திருக்கோயில் நடந்த கலவரம் தொடர்பாக பொத்துவில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்றுக்கு வந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்று மணித்தியாலங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப் பட்டுள்ளார்.
கடந்த வருடம் திருக்கோவில் பகுதியில் (12.8.2011 ) மூன்று மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடித்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். ஆனால் பொலிசார் இவ் மர்ம மனிதர்களை (கிறீஸ் மனிதன்) விடுவிக்க முயற்சி யெடுப்பதாக அறிந்த பொதுமக்கள் மிகவும் கோபமுற்று பொலிஸ் நிலை யத்தை முற்றுகையிட்டனர்.
அதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையங்களைச் சுற்றி பொல்லுகள், தடிகள் சகிதம் திரண்ட பொது மக்கள் மர்ம மனிதர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி கோசங்களை எழுப்பினர். பின்னர் பொதுமக்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தையும் மேற்கொண்டதுடன் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர்.
இவ் வேளையில் அங்கு சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திர காந்தன் சந்திரநேரு இப்பிரச்சனையை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பொதுமக்கள் சார்பில் பொலிசாருடன் பேசினார்.
மக்களின் எதிர்ப்பு அதிகமானதால் படையினர் ஸ்தலத்துக்கு வந்து துப்பாக்கி பிரயோகம் செய்தனர் படையினரை கற்களால் திருப்பி தாக்கினர். பின்னர் மீண்டும் மீண்டும் துப்பாக்கி பிரயோகம் செய்தே மக்களை விரட்டியடித்தனர் படையினர்.
இச்சம்பவத்தில் மக்களைத்திரட்டி கலகத்தில் ஈடுபட்டதாக திருக்கோயில் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாறு சந்திரநேருவை அழைத்திருந்தும் கூட அவர் லண்டன் சென்றிருந்ததால் அவரால் சமூகமளிக்க முடியவில்லை. இதனால் இவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று நிதிமன்றிற்கு ஆஜராகியிருந்தார். இதன்போது வழக்கை விசாரித்த நிதிபதி மூன்று மணித்தியாலங்கள் அவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் சாட்சிகள் வரவழைக்கப்பட்டு சந்திரகாந்தனை பிணையில் செல்ல அனுமதியளித்தார். மீண்டும் அடுத்த மாதம் 30அம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பதவி போனபின் தமராவிற்கு பிறந்த ஞானம்!

ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றும் தாமரா குணநாயகம் சிறிலங்காவின் இராஜதந்திர சேவையில் இருந்து விலகிக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அண்மையில் கியூபாவுக்கான தூதுவராக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இவரை இடமாற்றம் செய்ததை அடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
கியூபாவுக்கான தூதுவர் பதவியை அவர் ஏற்கனவே நிராகரித்திருந்தார்.
இந்தநிலையில் அவர் ஆங்கில இணையத்தளம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், சிறிலங்காவின் இராஜதந்திர சேவையில் தொடர்ந்து பணியாற்ற தாம் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன் பிறேசில் அல்லது கியூபாவுக்கான தூதுவர் பதவியை ஏற்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிலங்கா அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கொள்கையில் இருந்து தடம்புரள்வதாகவும் தாமரா குணநாயகம் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசாங்கம் அணிசேராக் கொள்கையில் இருந்து விலகி அணிசேரும் கொள்கைக்கு மாறத் தொடங்கியுள்ளதாகவும், இது சோசலிச அணிக்கு கவலையை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தை ஊடகங்களுக்கு தான் கசிய விடவில்லை என்றும் கூறியுள்ள அவர், எந்தவொரு இராஜதந்திர பதவிக்கும் அரசியல் ரீதியாக நியமனம் பெற விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

28 மே 2012

வலிகாமம் பகுதி வீடுகளில் படையினர் சோதனை நடவடிக்கை!

யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வீடுகளுக்குச் செல்லும் படையினர் குடும்பப் பதிவு அட்டைகளைப் பெற்று சோதித்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் அதிருப்தியும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
வீடுகளுக்குச் செல்லும் படையினர் "ஆமி காட்" என அழைக்கப்படும் குடும்பப் பதிவு அட்டையை பார்வையிட்டு அதில் பதிவிலுள்ளவர்கள் வீட்டில் உள்ளனரா என விசாரிக்கின்றனர்.
அத்துடன், வீட்டிற்கு உறவினர் எவரேனும் வந்து செல்கின்றனரா? எனவும் விசாரிப்பதோடு அவ்வாறு எவரேனும் வருகை தந்திருப்பின் அவர் பற்றிய விபரங்களை விசாரிக்கின்றனர்.
முன்னாள் போராளிகள் குறித்த விடயங்களையும் அவர்கள் அவதானிப்பதாகவும் மக்களால் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று, விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு செல்லும் படையினர் மற்றும் காவற்றுறையினர் அவர்களின் செயற்பாடு குறித்தும், நாட்டின் மீதும் அரசின் தற்போது அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களை கேட்டுச் செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் போராளிகள் குறித்து மாதம் ஒருமுறை புலனாய்வுப் பிரிவினர், படையினர் மற்றும் காவற்றுறையினர், நேரடியாக சென்று விசாரித்து வரும் நிலையில், இம்முறை, முன்னாள் போராளிகளை புகைப்படம் எடுத்தும் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கைதான ஆயுததாரிகளை விடுவித்தார் கோத்தபாய!

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்னும் சட்டவிரோதமான ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்றை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன 
நேற்று முன்தினம் அதிகாலை களுவாஞ்சிக்குடியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் கருணா அம்மானின் குழுவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. அதிகாலைவேளை விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிக்குடி அம்பாறை வீதியில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். 12.30 மணிக்கு கொழும்பு நோக்கி வந்த ஜீப் மற்றும் பிக்கெப் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.
பிக்கெப் வாகனத்தில் சாரதியும் இரு தமிழ் இளைஞர்களும் ஜீப் வாகனத்தில் சாரதியும் மூன்று தமிழ் இளைஞர்களும் இருந்துள்ளனர். அதில் இருந்த ஒருவர் தன்னை கருணா அம்மானின் நெருங்கி அதிகாரி என அறிமுகப்படுத்தியுள்ளார். ஏனையோர் கருணா அம்மானின் ஆதரவாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வாகனங்களை பரிசோதனை செய்தபோது அதில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் நான்கு மீட்கப்பட்டுள்ளன. துப்பாக்கிக்கு அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை ரவைகள் நிரம்பிய மெகசின் நான்கு இருந்துள்ளது. இவர்களை விசாரணை செய்தபோது இவர்கள் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஒருவரின் கையில் எரிகாய அடையாளமும் இருந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் என்ன நோக்கத்துடன் கொழும்பு வந்தார்கள் என சந்தேகமடைந்துள்ளனர் பொலீசார். அவர்களை சிறைவைக்க முயன்றபோது கொழும்பில் இருந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய கதைத்துள்ளார். அவர் விசேட அதிரடிப்படையினரை திட்டியதுடன் உடனே அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரியுள்ளார்.
அதன் பின்னர் வேறு வழியின்றி அவர்களை ஆயுதங்களுடன் விடுவித்த விசேட அதிரடிப்படையினர் அம்பாறைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் இவர்கள் துப்பாக்கியுடன் கொழும்பு வருவது எதற்காக? தினமும் இவ்வாறு சட்டவிரோத ஆயுதம் கொண்டுவரப்படுகிறதா? என பாதுகாப்பு பிரிவு சந்தேகிக்கிறது. 

27 மே 2012

குழப்பத்தை ஏற்படுத்த முனைந்து குழம்பிப்போன பிள்ளையான்!


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு 2012.05.25ம் திகதி தொடக்கம் 2012.05.27ம் திகதி இன்று வரை மட்டக்களப்பு அமெரிக்கமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 27.05.2012 இன்று மிகவும் சிறப்பான முறையில் 3000க்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்தது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அடாவடித் தனம் தோல்வி கண்டது. இம்மாநாட்டை குழப்பும் முகமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது அடிவருடிகளைக் கொண்டு பல துண்டுப் பிரசுரங்களை கடந்த இரு வாரமாக மாவட்டம் முழுவதும் வெளியிட்டார். "எதிர்ப்பு தெரிவிப்போம்", "மானமுள்ள மட்டக்களப்பு மக்கள்" என்ற தலைப்புகள் உட்பட 10க்கு மேற்பட்ட தலைப்புக்களில் மாவட்டம் முழுவதும் உள்ள தமது பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் அடிவருடிகளை பயன்படுத்தி துண்டுப் பிரசுரங்களை இலட்சக் கணக்கில் அச்சிட்டு மாவட்டம் முழுவதும் வினியோகித்தனர்.
இதில் பிரசுரம் எழுதுதல், அச்சிடல் பணிகளில் செங்கலடி செல்லம் தியேட்டர் முதலாளியும், பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த முக்கிய பிரதிநிதியுமான மோகன் என்பவர் செயற்பட்டார். யாழ்ப்பாண மக்களை அதாவது வடபகுதி மக்களை இழிவுபடுத்தி இப்பிரசுரம் பிள்ளையானாலும் அவர்களது கூலிப் படையாலும் வெளியிடப்பட்டது.
அதுமட்டுமின்றி கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், பிள்ளையானின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் என்பவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அமைப்பாளருமான பிரதீப் மாஸ்டர் உட்பட்ட குழுவினர் மாவட்டத்தின் பல பாகங்களிலும் மட்டக்களப்பு நகரிலும் தமிழரசுக் கட்சியை தூற்றியும், அதன் தலைமையை கண்டித்தும், வடபகுதி மக்களை இழிவுபடுத்தியும் பிரசுரங்களை ஒட்டியதுடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பிரசுரங்கள் மற்றும் பதாதைகளை பிடுங்கி எறிவதிலும், கிளிப்பதிலும் கவனம் செலுத்தினார்கள்.
அதுமட்டுமின்றி பொலித்தீன் மூலம் கறுப்பு கொடிகளை, நகரிலும் மாவட்டங்களிலும் தொங்கவிட்டனர். ஆனாலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோர் மிகவும் சாதூரியமாக செயற்பட்டு மகாநாட்டை மிகவும் சிறப்பாக நடாத்த ஏற்பாடு செய்தனர்.
இதனை பொறுக்க முடியாத பிள்ளையான் தனது கையாள்களை பயன்படுத்தி மகாநாடு நடாத்த இருந்த மட்டக்களப்பு தேவநாயகம் மண்டப திரை பகுதியை (மேடை) இரு நாட்களுக்கு முன் எரித்தனர். ஆனால் இதிலும் உடனடி நடவடிக்கையை மேற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு ஊறணி அமெரிக்கமிஷன் மண்டபத்தை ஒழுங்கு செய்தனர்.
அதனை பொறுக்க முடியாத தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழுவினர் பிள்ளையானின் ஆலோசனையில் மாநாட்டை குழப்ப தீர்மானித்தனர். 2012.05.27ம் திகதி அன்று பெரும் திரளான மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட மக்கள் காலை 9.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்திலும் அதற்கு வெளியிலும் அமைக்கப்பட்ட கொட்டகைகளிலும் குழுமியிருந்தனர்.
இவ்வேளை ஒவ்வொரு நாளும் பிள்ளையான் மாநாட்டு மண்டப வழியாக வாகனத்தில் மெதுவாக கண்ணாடியை திறந்து பார்த்துக் கொண்டு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தது. 2012.05.27ம் திகதி அன்று மக்கள் திரளை கண்ட பிள்ளையான் (வாகனம் மூலம் வருகை தந்து பார்வையிட்டதுடன்) பெரும் கொதிப்புக்கு உள்ளாகி தனது அடிமைகளை அழைத்து மதுபானம் கொடுத்து மாநாட்டு மண்டபத்தில் சென்று குழப்புமாறும் வாகனங்களை உடைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிநிதிகளும் பிள்ளையானின் அடிமைகளும் மாநாட்டு மண்டபத்துள்ளும் வெளியிலும் நுழைந்து இருந்தனர். இவர்கள் பிள்ளையானின் ஏற்பாட்டில் இராணுவம், பொலிஸ், புலனாய்வுத்துறை ஆகியோரின் உதவியுடன் அங்கு செயற்பட தொடங்கினர். கிட்டத்தட்ட எட்டுப்பேர் நுழைந்தனர்.
இவர்களில் பிள்ளையானின் உறவினரும், வாழைச்சேனை பேத்தாழை கிராமத்தை சேர்ந்த செல்வநாயகம் ஈவெரா என்பவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் உரையாற்றும் போது அவர் வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் கோட்பாட்டை வெளிப்படுத்திய போது கிழக்கு மாகாணம் தனி;த்துவம் கோரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என்பதால் இவரது கதையை அவமதித்து மண்டபத்துள் சொற் பிரயோகம் பாவிக்க முற்பட்ட போது மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் அவரை தாக்க முற்பட்டனர்.
ஆனாலும் சிலர் தாக்கினர். உடனடியாக புறடியில் பிடித்து எல்லைக்குள் அப்பால் ஈவெரா என்பவர் தள்ளப்பட்டார். ஈவெராவுக்கு மட்டக்களப்பு அம்பாறை மக்கள் அடியும் கொடுத்தனர். இதன் பின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் குழுவினர் வீதியில் நின்றிருந்த வடபகுதி மக்கள் வருகை தந்த பஸ் வண்டிக்கு கல் வீசினர். இதன் பின்னணியில் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் செயற்பட்டார்.
அத்தோடு பிரசாந்தன் மாகாணசபை உறுப்பினர் மகாநாடு நடைபெறும் மண்டபத்தின் அருகில் உள்ள பிரதான வீதியால் தமது வாகனத்துக்கு பின் ஆட்டோவில் சவப்பெட்டி (வெற்றுப்பெட்டி) கட்டிக் கொண்டு பல தடவை போக்குவரத்து மேற்கொண்டார்.
இவ்வேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக வருகை தந்த பிள்ளையானின் அடிமைகள் ஒரு சிலர் மாநாட்டை பார்வையிட்டு தமது வருகை தந்திருந்த நண்பர்கள், உறவினர்களுடன் மாநாட்டை பாராட்டி கூறியுள்ளனர். பிள்ளையான் பொலநறுவை, திருகோணமலை, அம்பாறைகளில் இருந்து 16 பஸ் வண்டிகளில் சிங்கள மக்களை இறக்கி நடாத்திய தமது மாநாட்டை விட இங்கு மக்கள் பெரும் எழுச்சியுடன் சம்பந்தர் ஐயாவை வரவேற்று கொண்டு வந்து நடாத்தும் இம் மகாநாடு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.
இவ்வேளை ஒரு சில அடிமைகள் தம்மை இதனை குழப்புமாறு பிள்ளையான் அனுப்பியதையும் தெரிவித்துள்ளனர். பிள்ளையானிடம் இருந்து எப்படி வெளியேறுவது என்று யோசித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஏனெனில் பிள்ளையானிடம் இரந்து விலகினால் தமது உண்மைகள் எல்லாம் வெளியில் சென்று விடும் என்பதால் தங்களை சுட்டுவிடுவார் எனக் கவலைப்பட்டுள்ளனர். இந்நிகழ்வுக்கு வருகை தந்த பிள்ளையானின் பிரதேச சபை உறுப்பினர் பிள்ளையான் போகச் சொன்னததால் வந்ததாக கூறியதுடன் பிள்ளையானால் தமக்கு கஷ்ரமாக உள்ளதாகவும் ஒருவரிடம் கவலைப்பட்டுள்ளார். பாவம் பிள்ளையானுடன் இணைந்தவர்கள் இவ்வேளை செ.ஈவெரா என்பவர் தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதும் பயந்த பிள்ளையானின் அடிமைகள் மெதுவாக நழுவி வெளியேறினர்.
இம்மாநாட்டுக்கு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மலையகம் உட்பட பல பகுதிகளில் இந்து தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவும், முஸ்லிம்கள் சிலரும் சமூகமளித்தனர். மாநாட்டில் கலந்து கொண்டோர் இக்கட்சி தமது சொத்து என்ற வகையில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
இம்மாநாட்டை குழப்ப வேண்டும் என்ற பிள்ளையானில் செயற்பாடு அனைத்தும் தோல்வி கண்டது. மாநாட்டு குழுவே எதிர்பார்க்காத வகையில் மக்கள் பெரும் திரளாக கலந்து சிறப்பித்தனர். மாநாடு பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற்றது. பாவம் பிள்ளையான் இம்மாநாட்டை குழப்ப பல இலட்சம் ரூபாய் செலவு செய்தும் தமது எண்ணம் நிறைவேறவில்லை என்ற வேதனையுடன் தமது சகாக்கள் மீது கோபத்துடன் இருக்கின்றார். என தகவல் கிடைத்துள்ளது. 

இனவழிப்பு குற்றவாளியை அனுமதிக்காதே!லண்டனில் திரண்ட தமிழ் மக்கள்.

பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவது வருட நிறைவுவிழாவே களங்கம் சூழப்போகிறது. அந்த விழாவுக்கு சிங்களதேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதை அனுமதிக்க வேண்டாம்.
இலட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்து தமிழர் பிரதேசங்களில் இன்றும் இராணுவ ஆட்சியை நடாத்திவரும் மகிந்த ராஜபக்ச இந்த விழாவில் கலந்து கொள்வது உலக மானுட பண்புகளுக்கும் மனித உரிமைகளுக்கும் பெருத்த அவமானம் ஆகும்.
அத்துடன் பாரம்பரியம் மிக்க பிரித்தானிய முடியாட்சிக்கும் இது மிகப்பெரும் களங்கத்தையும் வரலாற்று அவமானத்தையும் தந்துவிடும்.
மனிதஉரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்து அதன்மீது ஏறிநின்று கொடும்ஆட்சி புரியும் மகிந்த ராஜபக்சவை பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கவேண்டாம் எனக்கோரி நடாத்தப்பட்ட இக்கவனஈப்புப் போராட்டத்தில் காவற்துறை அனுமதியளித்திருந்த எண்ணிக்கையை விட பல மடங்குமக்கள் கலங்து கொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர். 

26 மே 2012

லண்டன் வரும் மகிந்தவை விரட்ட அணிதிரள்வோம்!

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராசபக்ச லண்டன் வருதை எதிர்த்து இன்று பிற்பகல் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிங்களப் பேரினவாதம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர் தாயகத்தில் மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பின் உச்சமாய் 2009 ஆம் ஆண்டில் வகை தொகையின்றி ஒரு இலட்சத்திற்கும் மேலாக தமிழ் மக்களை கொன்று மிகப்பெரும் தமிழின அழிப்பினை செய்த போர்க்குற்றவாளியான சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச லண்டன் வருவதை புறக்கணித்து மேற்கொள்ளப்படும் போராட்டத்தில் பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும் பிரித்தானிய தமிழர் ஒன்றியம் கேட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் பொது எதிரிக்கு எதிராக அணி திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் எனவே இன்று மாலை 4.00 மணியிலிருந்து 7.00 மணிவரை பிரித்தானிய தலைமை அமைச்சரின் காரியாலயம் அமைந்திருக்கும் டவ்னிங் வீதி லண்டன் என்ற இடத்தில் அனைவரையும் கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வாழ் தமிழ் அமைப்புக்கள், ஆலய, பாடசாலை நிர்வாகங்கள், மற்றும் ஊர் சங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள் என அனைவரையும் இந்த போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தெகிவளையில் காவிகள் போராட்டம்,காத்தான்குடியில் தீ வைப்பு,முஸ்லீம்களுக்கும் ஆப்பு!

seithy.com gallery news
தெஹிவளை மிருகக்காட்சி சாலை கல்விஹார பிளேஸில் அமைந்திருக்கும் தாருர் ரஹ்மான் குர்ஆன் மத்ரசாவின் செயற்பாடுகளை எதிர்த்து நேற்று (25.05.2012) ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் மதரசாவை அங்கிருந்து அகற்றுமாறு கோசமிட்டதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர்.
அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸ் மதரசா பகுதியில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர். இவ்வார்ப்பாட்டத்தில் ஐம்பது தொடக்கம் நூறு பேர் வரை கலந்துகொண்டனர். மேலும் இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் இந்தப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், வேறு இடங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பி.ப. 2:30 மணியளவில் முச்சக்கர வண்டிகளில் வந்த இனந்தெரியாத நபர்கள் மதரசா மீது கற்களை வீசிவிட்டுச் சென்றிருந்ததுடன் பின்னர் பிற்பகல் 4 மணியளவில் கல்விஹாரவில் இருந்து பிக்குமார் மற்றும் பொதுமக்களைக் கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று புறப்பட்டு மத்ரசாவைத் தாண்டி மிருகக்காட்சி வீதி சந்திக்கு வந்து சேர்ந்தது. குறித்த இடம் மாடுகளை அறுக்கும் மடுவமாக பாவிக்கப்படுவதாகவும் அதை மூட வேண்டும் என்பதும் முக்கியமான கோசமாக ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தது.
ஜாமியுஸ் ஷபாப் நிறுவனத்தின் காணியில் அமைந்திருக்கும் மேற்படி பள்ளிவாயல் மற்றும் குர்ஆன் மதரசா முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், பதினைந்து வருடங்களாக இவ்விடத்தில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்பதற்றத்தை அடுத்து இவ்விடயத்தை ஆராயவென தெஹிவலை பொலிஸாரால் இன்று தெஹிவளை, கல்கிஸ்ஸை மாநகர சபை கட்டிடத்தில் பிற்பகல் 03.00 மணிக்கு பள்ளிவாயல் நிருவாகிகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கலந்துகொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது. 


காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இன்று மாலை 4 மணிக்கு திறக்கப்படவிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய காத்தான்குடி அலுவலகம் இனந்தெரியாத நபர்களினால் தீவைத்து எரிகப்பட்டுள்ளது. இதனால் அலுவலக கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் அமைக்கப்பட்டிருந்த இவ் அலுவலகம் இன்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான றவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கபடபடவிருந்நமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

25 மே 2012

செங்கல் ஆலையில் இரகசியமான முறையில் சடலங்கள் எரிப்பு!


செங்கல் ஆலையில் இரகசியமான முறையில் மனித சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளன!இராணுவத் தூபிகளை நிர்மாணிக்க செங்கற்களை உற்பத்தி செய்த அநுராதபுரம் செங்கல் ஆலையொன்றில் கடந்த காலங்களில் மிகவும் இரகிசயமான முறையில் இளைஞர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஜெதவனாராம, அபயகிரி போன்ற புனிதத் தளங்களின் புனர்நிர்மாணப் பணிகளுக்கும் ஆலையிலிருந்தே செங்கல் பெறப்படுகிறது. இந்த ஆலை யுனிஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட ஒன்றாகும். ஒரே தடவையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான செங்கற்களை உற்பத்திசெய்யும் வசதிகள் இங்கு காணப்படுகின்றன.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவ நினைவுத்தூபி நிர்மாணத்திற்குத் தேவையான செங்கற்களை உற்பத்தி செய்வதாகக் கூறி, இந்த செங்கல் ஆலையையும், அதற்குச் சொந்தமான ஏக்கர் கணக்கான காணிகளையும் பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர் ஆலை சிவில் பாதுகாப்பு படையணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்பின்னர் வெளி நபர்கள் ஆலைக்குள் உட்பிரவேசிப்பது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சில சமயங்களில் பாதுகாப்பு அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களே கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த காலங்களில் அடிக்கடி வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பல இளைஞர்களின் சடலங்கள் இங்கு எரிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலையில் தொடர்ச்சியாக செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுவதால் சடலங்கள் எரிக்கப்பட்டதற்கான எந்தவித தடயமும் கிடைக்காது. இதனாலேயே சடலங்களை எரிக்க இந்த ஆலை தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.