தமிழீழம்
எம் உயிரிலும் மேலான தமிழ்பேசும் மக்களே!
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எமது விடுதலைப் போராட்டம் சந்தித்த சவால்களும்,நெருக்கடிகளும் எண்ணிப்பார்க்க முடியாதவை.உலகமயமாக்கல் என்ற நவீன கொள்கைகளுக்குள்ளும்,உலக பயங்கரவாத எதிர்ப்பு என்ற முரண்பாடான வலைசிக்கல்களுக்குள்ளும் விடுதலைக்காக போராடும் தேசங்கள் காணாமல் போகின்றது என்பதே யதார்த்தம்.இந்த நவீன கொள்கை ஒட்டுமொத்தமாக உலகதமிழினத்தின் விடுதலைக் குரலை நசுக்கி எமது போராட்டத்தை குழிதோண்டி புதைத்திருக்கிறது.எந்த ஒரு நாட்டினது உதவியின்றி எம்கைகளை நம்பியே நாம் போராடினோம்.எம்மை அழிக்கவந்தவரது கைகளை தடுக்க எங்களது வலிமையையே நம்பினோம்.ஆனால் சிங்களபேரினவாதமோ உலகெங்கும் ஓடிச்சென்று ஒப்பந்தங்கள் செய்து,ஆயுதங்களை குவித்து ஈழதேசத்தில் அரக்கதாண்டவத்தை அரங்கேற்றியது.சர்வதேசம் ஒருதேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை புரிந்து கொள்ளாமல் சிங்கள பேரினவாதத்தின் போலிப்பரப்புரைகளை நம்பியது எப்படி?உலகத்தின் தெருக்களெல்லாம் எம்மக்கள் கண்ணீரோடு திரண்டு நின்ற போதும் எமது போராட்ட நியாயத்தை சர்வதேசத்தின் செவிகளுக்குள் உரக்க சொல்வதற்கு நாம் தவறிவிட்டோம்என்பதே உண்மை.எம் வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளுடன் நாம் போரிட்டோம், தாங்க முடியாத சுமைகளை எம்மக்கள் சுமந்து கொண்டனர்.ஆனாலும் எமது நியாயமான குரலை,எவராலும் மனித நேயத்துடன் புரிந்து கொள்ளவில்லையே என்ற கனத்த மனதோடு காத்திருக்காமல் சர்வதேசத்தின் செவிகளுக்கு எமதுஉரிமையின் அவசியத்தை உணர்த்திக் கொண்டே இருப்போம்.இப்போது தாயகத்தில் நடப்பது என்ன?காணமல்போதல்,கடத்தல்கள்,கைதுகள்,படுகொலைகள் மீண்டும் தொடர்கதையாகிறது.கட்டுப்படுத்த முடியாத களையாக கலாசார சீரழிவு தொடர்கிறது.தமிழினம்,தமிழ்நிலம்,சிங்கள மயமாக்கபடுகிறது.இந்நிலை எம் தேசியத்தை அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும் என்பதே உண்மை.இந்நிலையில் தமிழினம் திரண்டெழுந்து உரிமைக்காக குரல் கொடுக்கவேண்டும்.இன்றுவரை தமிழ் மண்ணுக்காக போராடி தம்முயிர்விதைத்த உறவுகளை எங்கள்மனங்களிலிருத்தி அவர்களின் இலட்சியத்தை சுமந்தபடி நடப்போம்.சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்டு உருவாக்கப்படும் புலனாய்வுரீதியான பொய்ப்பரப்புரைகள் உட்பட தமிழ்மக்களுக்குள்உலவுகின்றமுரண்பாடுகளை களைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும்,வழிகாட்டலையும்,ஏற்று மண்ணுக்காக ஆகுதியான மாவீரர்களினதும்,மக்களினதும்,கனவுகளை வென்றெடுக்க உணர்வுரீதியாக ஒன்றுபட்டு ஒன்றுதிரள தமிழ்தேசியத்தின் பெயரால் வேண்டிக்கொள்கிறேன்.
"புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்"
இவ்வண்ணம்,
இன்று வரை களமுனையில் களமாடும்
புலனாய்வுப் போராளி.
மா.ஆதித்தன்.
19 மே 2010
இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படும் வீடியோ காட்சி உண்மையானதுதான் என சிங்கள சிப்பாய் சனல் போர்வுக்கு பேட்டி!

பொதுமக்கள்,சரணடைந்த புலிகளின் தளபதிகள்,கைது செய்யப்பட்டவர்கள் யாவரையும் தாமே சுட்டுக்கொன்றதாக இராணுவ சிப்பாய் ஒருவர் சனல் போர் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியான வீடியோக் காட்சிகள் உண்மை என்று தெரிவித்துள்ள சிப்பாய், தமக்கு உயரதிகாரிகளிடமும், மற்றும் அதிகாரமுடையவர்களிடமும் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின்பேரிலேயே தாம் இவர்களைக் கொண்றதாகத் தெரிவித்துள்ளார். கைகள் மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சுடப்படும் வீடியோக் காட்சிகளில் உள்ளவர்களை முதலில் எடுத்த புகைப்படத்தையும் அவர் கொடுத்துள்ளார். நீங்கள் யாரை சுட்டீர்கள் என்று சனல் 4 தொலைக்காட்சி நிருபர் கேட்ட கேள்விகளுக்கு, நாங்கள் பொதுமக்களைச் சுட்டோம், புலி உறுபினர்களைச் சுட்டோம், சரணடைய வந்த தலைவர்களையும் சுட்டோம், எந்தவிதமானாலும், யாரும் மிஞ்சக் கூடாது என்பதே தமக்கு வழங்கப்பட்ட உத்தரவு என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்று இன்றோடு 1 வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில், இப்படியானதொரு வலுவான ஆதாரத்தை சனல் 4 தொலைக்காட்சி வெளியே கொண்டுவந்துள்ளமை பெரும் பாரட்டுதலுக்குரியது. தமிழர்கள் பலவருடம் நடத்திப் பெறவேண்டிய பலனை, சனல் 4 தொலைக்காட்சி 10 நிமிடத்தில் பெற்றுத் தந்துள்ளது, பல மில்லியன் மக்கள் பார்வையிடும் சனல் 4 தொலைக்காட்சியின், இந்த ஒளிபரப்பு, உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் உடனடியாக பிரித்தானிய அரசுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு, அதன் தூதுவரூடாக, நடவடிக்கை எடுக்கும்படி பணித்துள்ளது.இந்த ஒளிபரப்பைத் தொடர்ந்து, சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவும் , இதனை மறு ஒளிபரப்பு செய்யலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.தாம் மக்கள் வாழும் முள்ளிவாய்க்கால் பகுதியில் கனரக ஆயுதங்கள் எதனையும் பாவிக்கவில்லை எனத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தது இலங்கை இராணுவம். (கடந்த வருடம்) இருப்பினும் சனல் 4 தொலைக்காட்சிக்கு இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கொடுத்த படங்களில், கடற்கரை ஓரமாக பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள் நடாத்தப்படுவதையும் இங்குள்ள படங்களில் காணலாம்.அத்தோடு இரண்டு பெண்களின் கைகளைக் கட்டி அவர்களை சுட்டுக் கொண்றுள்ள படமும் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை.இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களின் கைகளைக் கட்டி தலையில் சுடும் காட்சிகள் கடந்த ஓகஸ்ட் மாதம் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது யாவரும் அறிந்ததே. ஆனால் அதில் சுடப்படும் நபர்கள்களை இலங்கை இராணுவம் முதலில் எடுத்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.
18 மே 2010
கொழும்பு துறைமுகத்தில் இரசாயன கொள்கலனில் தீ!

கொழும்பு துறைமுகத்தில் இன்று இரவு 8 மணியளவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரசாயன கொள்கலன் ஒன்று தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் பின்புறமாக உள்ள துறைமுகப்பகுதியிலேயே இந்த கொள்கலனில் தீப்பற்றியுள்ளது.
இதன் காரணமாக, அந்தப்பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தீப்பற்றிய ரசாயன கொள்கலனில் இருந்து இரசாயன பதார்த்தம் என்ன என்பது இதுவரை தெரியவரவில்லை.
இந்தநிலையில், சுவாசிப்பதில் சிக்கல் ஏற்பட்டால் வைத்தியரை நாடுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
குழியில் போட்டு புதைத்துவிட்டு மேலே ஏறிக்கூத்தாடும் கதை!-தாமரை.

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதை பழையது. குழியில் போட்டுப் புதைத்துவிட்டு மேலே ஏறிக் கூத்தாடும் கதை புதியது. வருகின்ற ஜுலை 3,4,5 தேதிகளில் இலங்கைத் தலைநகர் கொழும்பில் இதுதான் அரங்கேறப்போகிறது. ஆம். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்களை மொத்தமாய்க் கொன்று புதைத்தவர்கள் கும்மாளமிடத்தான் அய்ஃபா (IIFA) விருது வழங்கும் விழாவைக் கொழும்புவுக்கு மாற்றியுள்ளனர்.
தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத்தையும் மறைத்துக்கொள்வதே அது! இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI) இந்த விழாவில் வைத்து புதிய ஆதாய வாசல்களைத் திறக்கவும், இலங்கைச் சந்தையில் விரிவாக வலைவீசவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர் பகுதிகளில் மறுநிர்மாணம் என்ற பெயரில் கிடைக்கப் போகும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ‘கான்ட்ராக்டுகள்’ மீது குறி வைத்துள்ளது. புதிய செல்பேசி சந்தைக்காகவும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
மூன்று நாள் விழாவில் ஒரு நாள் படங்காட்டுவதற்காம்! ஒருநாள் வணிக ஒப்பந்தங்களுக்காம்! ஒருநாள் 20-20 கிரிக்கெட் கேளிக்கைக்காம்! எல்லாவற்றிலும் கவர்ச்சிக்குக் குறைவைக்காமல் இந்திய திரைப்படத் தாரகைகளின் ஆட்டம் பாட்டம் இருக்குமாம்!ஐய்ஃபாவின் முதல் விருது விழா 2000-ல் லண்டனில் நடைபெற்றது. இது புகழையும், பணத்தையும் வற்றாமல் அள்ளிக்கொடுக்கும் அட்சயபாத்திரம் என்று அப்போதே தெரிந்துவிட்டது. அதிலிருந்தே, கனடா, தென்கொரியா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் ‘இந்நிகழ்ச்சியை எங்கள் நாட்டில் நடத்துங்கள்’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டன. இந்நிகழ்ச்சியின் மூலமாகத் தங்கள் சுற்றுலாத்துறை வளம்கொழிக்கும் என்பது இந்நாடுகளின் கணக்கு. நான்காண்டுகளுக்கு முன்பே ஐய்ஃபா விழாவைத் தொலைக்காட்சியில் கண்டுகளித்தவர்கள் 45 கோடிப்பேர். உலக அளவில் ஆஸ்காருக்கு அடுத்த இடம் ஐய்ஃபாவுக்குதான்!
இந்த விழாவை நடத்தவிரும்பும் ஒவ்வொரு நாடும் அதற்காக ஐய்ஃபா அமைப்புக்கு 560கோடி ரூபாய் தரத்தயாராயுள்ளன. அய்ஃபா-2010 விழாவை நடத்துவதற்கான போட்டியில் அயர்லாந்துதான் 2009 இறுதிவரை முன்னணியில் நின்றது. பிறகு தென்கொரியா மூக்கை நீட்டி முந்திக்கொண்டது. 2010 ஜனவரி 26 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தென்கொரிய அதிபர் லீமியூங்பாக் அவர்களிடம் இதற்கான அறிவிப்பை இந்திய தரப்பு அதிகாரப்பூர்வமாக வழங்கியது.2010 பிப்ரவரி 27 வரை இந்தப் பட்டியலிலேயே கொழும்பு இல்லை. பிறகுதான் கொழும்பு பெயர் அடிபட்டது. உடனே அதற்குத்தான் என்று உறுதியும் செய்யப்பட்டு விட்டது. ‘இது இலங்கையின் மாபெரும் உலகசாதனை’ என்று சொல்லி மகிழ்கிறார் அந்நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர் அச்சாலா ஜகோடா.
கொழும்பு ஐய்ஃபா விழாவின் முதன்மைத் தூதர் அமிதாப்பச்சன். அவரும் ஷாருக்கானும், ஐஸ்வர்யாராயும் உலகப்புகழ் பெற்ற பாலிவுட் கலைஞர்களும் மேடையில் தோன்றி இலங்கையில் ‘அழகும் அமைதியும் குடி கொண்டிருப்பதை’ உலகமே பார்க்க உதவப்போகிறார்களாம். உலக மக்கள் தீர்ப்பாயம் (People’s Tribunal) டப்ளினில் வைத்து இலங்கையைப் போர்க்குற்றவாளியாக அறிவித்த இரண்டு மாதங்களில் எப்படி ‘அழகும் அமைதியும்’ அங்கு குடிகொண்டன என்று அவர்கள் விளக்க வேண்டும்.
தமிழர்களின் வேண்டுகோளை மதித்து அமிதாப் விலகிக்கொண்டதாக ஒரு செய்தி! இது உறுதியானால் மகிழ்ச்சி! மற்றவர்களும் விலகிக்கொண்டு, விழாவை வேறிடத்தில் நடத்த வழி செய்ய வேண்டும். (சல்மான்கான் தான் இப்போதைய தூதர் என்பது கடைசிச் செய்தி!)
சர்வதேச இந்திய திரைப்பட விழா என்று பெயருக்குச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இந்தித்திரைப்பட விழாவாகவே இதுவரை நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை தமிழ்த் திரைக்கலைஞர்களையும் இழுக்கச் சந்தடியின்றி ஒரு முயற்சி நடைபெறுகிறது. மணிரத்னத்தின் ‘ராவணன்’ கொழும்பு விழாவில் திரையேறும் என்று வந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். ஃபிக்கியின் ஊடக / கேளிக்கை வணிகப்பிரிவின் தலைவர் திரு. கமலஹாசன் அவர்கள் இவரையும் ரஜினியையும், ரஹ்மானையும் கொழும்பு ஆட்கள் தனித்தனியாக அணுகி அழைத்ததாகவும் இவர்கள் மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி. ‘தமிழன் ரத்தம் படிந்த கொழும்பில் விழா நடத்த நாங்கள்தானா கிடைத்தோம்’ என்று சூடாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ். இந்த செய்திகளெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.
ஆனால் இது போதாது. தமிழ்த்திரைப்பட அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கி, இந்திய அளவில் யாரும் கொழும்பு விழாவில் கலந்து கொள்ளவிடாமல் செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்க முடியவில்லை. கொலைக்களத்தில் கூத்தடிப்பதையாவது தடுக்கலாம்தானே? இது நம் தமிழுறவுகளுக்கு ஆறுதலாக மட்டுமல்ல, கொழும்புக்கும் அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கும் நம் உணர்வுகளைச் சொல்லி எச்சரிப்பதாகவும் அமையும் அல்லவா?
இன அழிப்புப் போரை நிறுத்தக்கோரி தமிழ்த்திரையுலகம் போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ராமேசுவரத்துக்குச் சென்று சிங்களவனுக்குக் கேட்கட்டும் என்று குரல்கொடுத்தோம். நடிகர்கள், தொழிலாளர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் என்று அடுத்தடுத்து உண்ணாவிரதப் போராட்டம் செய்தோம். பாரதிராஜா, செல்வமணி, மணிவண்ணன், சீமான், அமீர் போன்றவர்கள் திரையுலகின் முழுவலிமையோடும், தமிழக மக்களைத் தட்டியெழுப்பப் பாடுபட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்து விடவோ, ஓய்ந்து விடவோ கூடாது. ஐய்ஃபா விழா கொழும்பில் நடைபெற விடாமல் செய்ய நம்மால் முடியும். கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால் அலட்சியப்படுத்த முடியாது.
நிறவெறி தாண்டவமாடிய தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசைத் தனிமைப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகித்த அதே இந்தியாதான், இப்போது தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு உலகில் தனிமைப்பட்டு விடாமல் பாதுகாத்து வருகிறது. இந்தியா செய்வது பச்சை அயோக்கியத்தனம் என்று உணர்த்த இது சரியான தருணம், சரியான வாய்ப்பு! விழிப்புடன் செயல்படவேண்டிய தருணத்தில் தூங்கிவிட்டுப் பிறகுசீனாவில் நடந்த ஒலிம்பிக் பந்தயத்துக்கான சுடர் இந்தியா வந்தபோது அதை ஏந்தி ஓடிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பெயரெல்லாம் மறந்துவிட்டது. திபெத்தில் சீன அரசு நடத்திவரும் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சுடர் ஏந்த மறுத்த இந்தியக் கால்பந்து வீரர் பெய்ச்சுதங் பாட்டியாவின் பெயர் எல்லாருக்கும் நினைவிருக்கிறது.
பாட்டியாவால் சீன ஒலிம்பிக்கைத் தடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்த்திரைப்படக் கலைஞர்கள் மனம் வைத்தால் ஐய்ஃபா 2010 கொழும்பில் நடைபெறாமல் தடுக்க முடியும்.
செய்தக்க அல்ல செயக்கெடும் – செய்தக்க செய்யாமை யானும் கெடும்என்ற குறளை நினைவுபடுத்தி, என் சக திரைப்படக் கலைஞர்களை ஆதரவு தருமாறு அழைக்கிறேன்.
தாமரைசென்னை-24
15-05-2010
தமிழீழ விடுதலை புலிகள் விடுத்துள்ள அறிக்கை!

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
18/05/2010
அன்பார்ந்த தமிழ் மக்களே!
எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் சிங்களப் பேரினவாத சக்திகளால் தொடர்ந்தும் நிராகரிக்கப்பட்ட சூழலில் மக்கள் பலத்தினூடான அரசியல் இராணுவ வழிமுறைகளைக் கைக்கொண்டு போராட்டத்தை முன்னெடுத்த நாம் இன்று இராணுவரீதியான பின்னடைவுக்கு உட்பட்டுள்ளோம். கடந்த ஆண்டு மே 18 ஆம் நாள் வரை எந்த விட்டுக்கொடுப்புமற்ற உறுதிகுலையாத விடுதலைப்போரை முன்னெடுத்து வந்த எமது விடுதலை இயக்கம் தொடர்ந்துவந்த மனிதப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பதற்காக ஆயுதங்களை மெளனித்தது.
தமிழரின் தாயக மண்ணில் பாரிய இன அழிப்பு நிகழ்ந்து முடிந்ததால் அக் கொடிய விளைவுகளுக்கு தமிழ் மக்களே முகங் கொடுத்து வருகின்றனர். நீண்ட கொடிய யுத்தம் இது வரை ஓர் இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களின் உயிர்களைப் பலி கொண்டதுடன் அவர்களின் பொருண்மிய வாழ்வாதாரம் அனைத்தையும் அடியோடு அழித்துள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமாக பல இலட்சம் மக்களை இடம்பெயர வைத்துள்ளது. உயிரழிவும், பொருளழிவுமாக ஒர் இனத்தின் அடையாளத்தைச் சிதைத்து ஏதிலிகளாக்கி வதை முகாங்களுக்குள் தொடர்ந்தும் சிறைப்படுத்தி வைத்துள்ளது.
எமது மக்களுக்கு எதிராக மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் இழைக்கப்படுகின்றன. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டு கைதுகளும் காவல்வைப்பும் காணாமற்போதலும் சித்திரவதையும் பாலியல் வல்லுறவும் கொலைகளுமாக மிகவும் மிருகத்தனமான இராணுவப் பயங்கரவாத ஆட்சி எமது தாயகத்தில் நடைபெறுகின்றது.
தமிழ் மக்கள் சிங்கள இனவாத அரசின் அடக்குமுறைக்கு ஆளாகி நிற்கின்றார்கள். அந்நிய தேசமான சிங்களத்தின் இராணுவ ஆதிக்கத்திற்கும் படையெடுப்பிற்கும் உட்பட்டு நிற்கின்றார்கள். ஆயுத பலத்தால் தமிழ் மக்களை அடிமைப்படுத்தி அவர்களை சிங்கள இராச்சியத்துடன் பலவந்தமாக இணைத்து விட சிங்கள பெளத்த பேரினவாதம் விடாப்பிடியாக முனைந்து வருகின்றது.
மனித உரிமை நிலைமை படுமோசமாகி இருக்கும்போது, உதவி வழங்கும் நாடுகளும் தொடர்ந்து இலங்கைக்கு நிதியுதவியை வழங்கி வருகின்றன. இந்த நிதியில் பெரும் பகுதி அரசாங்கத்தின் சுயநல அரசியலுக்கும், போருக்குச் செலவாகிய நட்டத்தை ஈடுசெய்வதற்கும், கொல்லப்பட்ட காயமடைந்த இராணுவத்தினரின் மறுவாழ்வுக்குமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால், போருக்கு முகங்கொடுத்து இழப்புக்களைச் சந்தித்த மக்களோ தற்பொழுதும் மரங்களின் கீழும் கூடாரங்களின் கீழும் அடிப்படை வசதிகளின்றி துன்பதுயரங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர். மனித உரிமையோடு நிதியுதவியைத் தொடர்புபடுத்தி செல்வந்த நாடுகள் அழுத்தத்தைப் பிரயோகிக்கத் தயக்கம் காட்டுவதால் அது மகிந்த அரசாங்கத்திற்கு ஊக்கத்தை அளித்திருப்பதுடன் அவரது கொடூரமான ஒடுக்குமுறை ஆட்சியை நீடிக்கவும் வழிகோலியுள்ளது.
அன்பார்ந்த தமிழ் மக்களே!
ஆயுதப்போராட்டத்தை பயங்கரவாதமாகக் காட்டி தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை புறம்தள்ளிய சிங்களப்பேரினவாதம் இன்று ஜனநாயக வழிமுறைகளினூடாக தாயகத்தில் எமது உரிமைகளை வென்றெடுக்க மக்களால் மேற்கொள்ளப்படும் ஜனநாயகம் தழுவிய அரசியல் முன்னெடுப்புக்களையும், அவற்றை முன்னெடுக்கும் மக்கள் பிரதிநிதிகளையும், அவர்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளையும் பிரிவினைவாதமாகவும், பயங்கரவாதமாகவும்; காட்டி தடைசெய்ய முனைகின்றது. இதனை முறியடித்து தாயகத்தில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் அபிலாசைகளுக்கு அமைவாக செயற்படுவார்களென எதிர்பார்க்கிறோம்.
புலம்பெயந்த நாடுகளில் மக்கள் தாங்களாகவே மேற்கொள்ளும் மக்களவை மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான ஜனநாயக தெரிவினூடான மக்கள் கட்டமைப்புக்களுக்கு புலம்பெயர்வாழ் மக்கள் ஒற்றுமையுடன் ஒன்று திரண்ட பேராதரவை வழங்க வேண்டும். இத்தகைய ஜனநாயகம் தழுவிய கட்டமைப்புக்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் தமிழீழத் தனியரசுக்கான இலட்சியத்தில் தெளிவும், கொள்கைப்பற்றும், எச்சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காது செயற்படக்கூடியவர்களாகவும் தமிழர் நடத்தி வரும் நியாயமான போராட்டத்தின் உண்மைத் தன்மையை சர்வதேச சமூகத்திற்குத் தெளிவாக உணர்த்தும் பணியை, பொறுப்புடனும், இதயசுத்தியுடனும் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இதுவரை காலமும் எமது விடுதலைக்குத் தோளோடு தோள்கொடுத்த மக்கள், யுத்தத்தினால் பல அழிவுகளையும் இழப்புக்களையும் தாங்கி நாளாந்தம் வேதனைகளையும் மன உளைச்சலையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உறவுகளின் மறுவாழ்வுக்கும் அவர்களுடைய எதிர்கால நலன்பேணலுக்கும் அச்சாணியாக புலம்பெயர் மக்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இந்த உதவிகளை தனிப்பட்ட ரீதியிலும் நிறுவன மயப்படுத்தலூடாகவும் மேலும் அதிகரித்து அவர்களின் ஒளிமயமான வாழ்வுக்கு உதவுமாறு புலம்பெயர்ந்த தமிழர்களை வேண்டி நிற்கிறோம். அத்துடன் பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சந்தேகத்தின் பேரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களையும் எமது விடுதலைப் பயணத்தில் தமது வாழ்க்கையை அர்ப்பணித்து தற்போது தடுப்புக்காவலில் சிறைவைக்கப்பட்டு, சித்திரவதையை அனுபவித்துக் கொணடிருக்கும் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் விடுதலைக்கும், முட்கம்பி வேலிகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் குரல் கொடுக்குமாறு தமிழ்மக்கள் அனைவரையும், அரசியல் மனித உரிமை அமைப்புக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
ஊடக உலகிற்கு!
தமிழ்தேசியத்தின் மீதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் நீங்கள் பற்றுக் கொண்டு ஆற்றி வரும் பணிகளை நாம் பாராட்டுகின்றோம். தமிழ் ஊடகத்துறையின் வளர்ச்சி அளப்பரியது. நீங்கள் எமது மக்களுக்கு ஆற்றி வரும் பணியை நாம் மதிப்பளித்துக்கொள்ளும் அதேவேளை, உங்கள் பணி என்றும் ஆரோக்கியமான பாதையூடாக பயணித்து எமது மக்களை செல்நெறி தவறாத பாதையில் வழிநடத்திச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பும், கடமையும் உங்களைச் சார்ந்தது என்றே நம்புகின்றோம். எதிர்காலத்திலும் தேசியத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலான ஆலோசனைகளையும், புதிய சிந்தனைகளையும் வழங்கி உங்களது தார்மீகப் பணியை முன்னெடுக்க வேண்டுமென வேண்டி நிற்கின்றோம். தனிமனித விமர்சனங்களைத் தவிர்த்து ஒன்றுபட்டவர்களாய் உங்கள் எழுத்தும் கருத்தும் பொது எதிரிக்கு எதிரானதாகவும் எமது மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதாகவும் எழுச்சிகொள்ள வைப்பதாகவும் அமையவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். ஆரோக்கியமான விமர்சனங்களினூடாக தமிழ்த் தேசியம் வளர்வதற்கும் ஒன்றுபடுவதற்குமான ஆயுதமாக ஊடகம் அமைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
அன்பார்ந்த தமிழக உறவுகளே!
நீங்கள் எமது விடுதலைக்காக ஆற்றும் பணி அளப்பரியது. தொடர்ந்தும் நீங்கள் எமது விடுதலைப் பயணத்துக்குப் பேராதரவு வழங்க வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம். நாம் என்றும் இந்திய மக்களுக்கோ அல்லது இந்தியப் பேரரசுக்கோ எதிரானவர்கள் அல்லர். இந்தியப்பேரரசு எமது மக்களின் அபிலாசைகளை உதாசீனம் செய்வதை நாம் வேதனையோடு பார்க்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். நடந்து முடிந்த வடுக்களைக் கவனத்திலெடுத்தாவது சர்வதேச சமூகத்துடன் இணைந்து இந்தியப் பேரரசு எமது மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் பூர்வீகத் தாயகமான தமீழீழ மண்ணில் உரிமையோடு வாழ்வதற்கு ஆவன செய்யவேண்டும். இந்த முயற்சிக்கு அகில இந்திய உறவுகளும், தலைவர்களும், இந்திய ஊடகங்களும் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என எதிர்பார்கின்றோம்.
சர்வதேசத்திற்கு!
தாயக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு போராட்டத்தைத் தலைமை தாங்கிய எமது விடுதலை இயக்கம் ஆயுதங்களை மெளனித்து ஓராண்டு நிறைவடைகிறது. எமது மக்களின் மேல் கொடிய யுத்தத்தைத் திணித்து பல்லாயிரம் உயிர்களைப் பலியெடுத்து வென்ற மமதையில் சிங்கள தேசம் மே 20 ஆம் நாளை வெற்றிவிழாவாகக் கொண்டாடுகிறது. தமிழர்களை அடிமைகொண்ட நாளாகவே தமிழர்கள் இதை நோக்குகின்றனர். இந்நேரத்தில், நாம் சர்வதேசத்திற்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். அரச பயங்கரவாதத்துக்கும், தமிழின அழிப்புக்கும் துணைபோன உங்களின் மனசாட்சியைத் தொட்டு இறுதிநேர யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட பாரிய இனஅழிப்பை முன்னிறுத்தி இலங்கை அரசை யுத்தக் குற்றவாளியாக வெளிப்படுத்துவதுடன், நீதியான விசாரணைகளை நடத்துவதற்கும் தற்போதைய தமிழ்மக்களின் ஜனநாயக அரசியல் கட்டமைப்புக்களை அங்கீகரித்து தமிழர்களின் உரிமைகளை ஜனநாயகரீதியில் வென்றெடுக்க துணைநிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.
கடந்த ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் கொத்துக் கொத்தாகவும், குடும்பம் குடும்பமாகவும் மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது தமது உறவுகளை இழந்த குடும்பத்தினரின் வேதனையிலும் போரின் வடுக்களைச் சுமந்து நிற்பவர்களின் துயரிலும் நாம் பங்கெடுத்துக் கொள்கிறோம். இதுவரை காலமும் எமது விடுதலைப் போரில் தம்முயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூரும் இவ்வேளையில், நாம் அனைவரும் எமது தாயகத்தின் விடிவுக்காக ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் போராட இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்வோமாக.
நன்றி.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம்.
கருத்துக்களை அனுப்ப: comments@viduthalaipulikal.net

17 மே 2010
யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள்,மக்கள் பரபரப்பு,படையினர் மத்தியில் அச்சம்!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இரவு பல்கலைக்கழக வழாகத்தைச் சுற்றியும், மற்றும் சில தெருக்களிலும், மே 18 ஜ துக்கதினமாக அனுஷ்டிக்கச் சொல்லி துண்டுப் பிரசுரம் , மற்றும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் இராணுவத்தினரும், அவர்களுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் இந்தச் சுவரொட்டிகளை அகற்றிவருகின்றனர். அத்தோடு துண்டுப் பிரசுரங்களும் இனம் தெரியாத நபர்களால் யாழ்ப்பாணப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக அதிர்வின் யாழ் நிருபர் தெரிவித்துள்ளார்.அத்தோடு நாளை மே 18 என்பதால் பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் யாழ் வீதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும், இன்று பல்கலைக்கழக மாணவர்கள் அடையாள பகிஷ்கரிப்பு ஒன்றையும் நடாத்தியுள்ளனர் என்றும் அறியப்படுகிறது. பல்லாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் இப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டதும், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதும், மிகவும் துணிச்சலான விடையமாகும். சிவகுமார் எவ்வாறு ஒரு விடுதலை உணர்வை தூண்டினாரோ அதற்கு ஒப்பான நிகழ்வே தற்ப்போது மிகவும் துணிச்சலான முறையில் நடந்தேறியுள்ளது.யாழ் பல்கலைக்கழக வழாகத்தில் ஒட்டப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. துண்டுப் பிரசுரங்களில் உள்ள வாசகங்கள் பின் வருமாறு:வலி சுமந்த நெஞ்சோடு விடுதலை நோக்கி பயணிப்போம் ………. போராட்டமே வாழ்வாகிப்போன எம்மக்கள் ,காந்திய தேசத்தின் சூழ்ச்சியாலும், சிங்களத்தின் அடக்குமுறையினாலும் , முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டனர். 50,000 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள், அவலக்குரல் எழுப்பியும் ,அவர்களது சாவினை சர்வதேசத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை…மரணித்தது மக்கள் மட்டுமல்ல..உலகின் ஜனநாயக பண்புகளும் விழுமியங்களும்தான்…பட்டினி போட்டு, குண்டுகள் வீசி, பாதுகாப்பு வலயத்திற்கு வாவென்று அழைத்து, அம்மக்களை கொன்ற கொடூரம் மன்னிக்கப்பட முடியாத போர்க்குற்றம்.களமாடி விழுப்புண் அடைந்த வேங்கைகளும், எறிகணை வீச்சுக்களால் அங்கங்களை இழந்த பொது மக்களும், சுற்றி வளைத்து நின்ற சிங்கள-பிராந்திய அரக்கர்களால் மே 18 இல் வேட்டையாடப்பட்டனர்.இந்த இன அழிப்பினை தடுத்து நிறுத்தப் போவது போல், சர்வதேச இராஜதந்திரக் கூத்தாடிகள் போக்குக்காட்டினர். இந்தியாவை மீறி, எந்த இராஜதந்திர அணுவும் அசைய மறுத்துவிட்டது.கொதித்தெழுந்த புலம்பெயர் மக்களின் வேண்டுதலை எவருமே செவிமடுக்கவில்லை.தமிழின அழிவை உலகிற்கு உணர்த்த , ஐ .நா.முன்றலில் தனது உடலை தீயில் சங்கமமாக்கினான் வேங்கை முருகதாஸ்.சாஸ்திரி பவனில், தோழன் முத்துக்குமார் மூட்டிய பெரு நெருப்பு ,தமிழகத்தில் தமிழின உணர்வினை தட்டி எழுப்பியது.அனைத்துலக ஆதிக்க மனிதர்களின் நலன்களுக்குள் , ஈழத்தமிழினத்தின் அவலக்குரல் கரைந்து போயிற்று. இன்னமும் அவல வாழ்வு தொடர்கின்றது. ஒரு இலட்சம் மக்களின், வதை முகாம் அவலம் குறித்து பேரினவாத அரசு கவலை கொள்ளவில்லை.மறுபடியும் வெள்ளை வான் கும்பலின் அடக்குமுறைகள் விரிவடைகின்றன. கொதிநிலைப் பூமியாக மாறுகிறது யாழ் குடா.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின், வலிமிகுந்த நினைவு சுமந்து , எழுச்சி கொள்ளும் இந்நாளில், அந்த மாவீரர்களின்-பொது மக்களின் உறுதி தளரா இலட்சிய வேட்கையை, நாம் மனதில் இருத்திக்கொள்வோம்.விழ விழ எழுவோம்.. இலட்சியம் நோக்கிய பயணத்தில், இறுதிவரை இணைந்திருப்போம்..
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
ஈழத்தமிழர்களை காக்கத் தவறியதால் தான்,செம்மொழி மாநாட்டை நிராகரித்தேன்.-ராமசாமி.

மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி நாளை நடக்கவிருக்கும் நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் கலந்துகொள்ள மதுரை வந்துள்ளார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம், ‘’மலேசிய கடலில் 75 இலங்கை தமிழர்கள் கைது செய்யப்பட்டு, முகாம்களில் உள்ளனர். இவர்களை இலங்கைக்கு அனுப்பினால், பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்படுவர். அந்த நிலைக்கு ஆளாகக்கூடாது என போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மொரிஷீயஸ் உட்பட பல நாடுகளில் தமிழர்களின் சமூக, பொருளாதார நிலை மோசமாக உள்ளது. இந்திய அரசு எங்களுக்கு குரல் கொடுக்கவில்லை. இந்திய அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்திய மக்கள் மீது நம்பிக்கை உண்டு.
மலேசிய தமிழர்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. புலம் பெயர்ந்த தமிழர்கள் மாநாடு டெல்லியில் நடந்தபோதும், தற்போது உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்கும் வந்த அழைப்பை நிராகரித்துவிட்டேன்.
காரணம், இலங்கை தமிழர்களை இந்திய மற்றும் தமிழக அரசுகள் காப்பாற்றாமல் கண்களை மூடிக்கொண்டிருந்தன. அதனால்தான் நிராகரித்தேன்’’என்று கூறினார்.

படைகளின் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் நடைபெற இருந்த அஞ்சலி நிகழ்வுகள் இரத்து!

இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் வெற்றிக்கொள்ளப்பட்டதாக கூறி கொழும்பில் விழா எடுக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தில் வன்னி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவதற்காக நடைபெறவிருந்த சர்வமத பிரார்த்தனை படையினரின் நடமாட்டம் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
நல்லூர் ஆதீனத்தி;ல் ஆதீன முதல்வர் மற்றும் யாழ்ப்பாண ஆயர் ஆகியோரின் தலைமையில் இந்த பிரார்த்தனை நடைபெறவிருந்தது
எனினும்,இதற்கு சமுகமளிப்பவர்களை படைத்தரப்பு வீடியோ படம் எடுக்க முயற்சித்தமையை அடுத்து எவரும் இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களும் தமது பாதுகாப்பு கருதி இந்த நிகழ்வுக்கு செல்லவில்லை.
இதேவேளை, நாளையதினம் யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் சர்வமதக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரார்த்தனை நிகழ்வும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று தமிழரசுக் கட்சியின் மார்டின் வீதியில் உள்ள அலுவலகத்தில் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவு கூருவதற்காக நடத்தப்படவிருந்த நிகழ்வும் படையினரின் நடமாட்டம் காரணமாக நடைபெறவில்லை.
எம் மனங்களில் இருந்து எடுக்க முடியாத நாள்!

அன்பார்ந்த உலகத்தமிழினமே!
நாம் இதயங்களிலே வலிகளை சுமந்தவாறுதான்பல்லாண்டுகளாக துயருற்று இருக்கின்றோம்,ஆனாலும்மே 18 என்பது அந்த வலிகளுக்கும் அப்பாற்பட்ட மாபெரும்கொடூரத்தை எம்மனங்கள் அனுபவித்த நாள்,வரலாற்றில் மறக்க முடியாத,எம்மனங்களிலிருந்து எடுக்கமுடியாத ஒரு நாள்,உலகிலே எந்த ஒரு பாதகனும் செய்திருக்காத மாபதகத்தைபிணந்தின்னி பேய்களான மகிந்தசகோதரர்களும்,அவர்களதுநேசநாட்டு பேய்களும் செய்து முடித்தார்கள்,முள்ளிவாய்க்காலிலே இறந்தவர்கள் இறந்துபோக,தமதுஅங்கங்களை இழந்தவர்களும்,உயிருக்கு போராடிக்கொண்டிருந்தசின்னஞ்சிறு குழந்தைகளிலிருந்து,தாத்தா பாட்டிமார்வரை,புலம்பெயர் உறவுகளான எம்மை நோக்கி அபயக்குரல்எழுப்பிக்கொண்டிருந்தார்கள்,எம்மை நம்பிக்கொண்டேபலர் அங்கு மடிந்து போனார்கள்,நாமும் அவர்களை காத்திடலாம் என்ற நம்பிக்கையுடன்ஒவ்வொரு நாட்டு அரசுகளினது வாயில்களிலும் இரவுபகலாக கிடந்து எம் உறவுகளை காத்திடுங்கள் என கெஞ்சினோம்கதறினோம்,பட்டினி கிடந்தோம்,எவனுமே எம்மைகண்டுகொள்ளவில்லை,முள்ளிவாய்க்காலிலே எல்லாமே அரங்கேறி முடிந்தது,எம்மினத்தை காக்க முடியாத பாவிகளாயானோம்,இன்று அவர்களை நினைந்து தலைகுனிந்துகண்ணீர் வடிக்கின்றோம்,மடிந்து போன எம் உறவுகளே நீங்கள் நிம்மதியாய்உறங்குங்கள்,உங்கள் கனவுகளை நிச்சயம் நாம் நனவாக்குவோம்,எம் தமிழினமே இந்த நாளிலாவது பகமைகளை துறந்துஒன்றுபடுவோம்,தமிழனுக்கான தாயகத்தை நிறுவுவோம்,
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
மன்னார் காட்டுப்பகுதிகளில் விடுதலை புலிகளின் நடமாட்டம் இருப்பதாக இராணுவம் மக்களுக்கு எச்சரிக்கை!
மன்னார் பகுதியில் உள்ள காடுகளுக்குள் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் நட மாட்டம் இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது .மன்னர் பகுதி காட்டுக்குள் ரோந்து சென்ற படையினர் மனித நடமாட்டத்தின் காலடி சுவடுகளை கண்டு பிடித்துள்ளனர் .ஆங்காங்கே தமது காலடி சுவடுகளை அழித்த வண்ணம் புலிகள் நகர்ந்து சென்றுள்ளனர் .இந்த பகுதியில் உலவும் புலிகளிட்க்கு உணவுகள் கொடுப்போர் மீதும் அவர்களை பாதுகாப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க படும் என இராணுவம் மக்களை எச்சரித்துள்ளது .மன்னார் பகுதி தொடர் கிளிநொச்சி முல்லை காடுகள் வரை இந்த மனித காலடி சுவடுகளை இராணுவம் பரவலாக கண்டறிந்துள்ளது .இதை அடுத்து மன்னார் மற்றும் பரந்தன் பகுதியை சுற்றியுள்ள மக்களை அழைத்த படையினர் இந்த பகுதியில் விடுதலை புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் அவரக்ளிட்க்கு உணவு மற்றும் அடைக்கலம் மற்றும் தகவல் வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என மக்களை அழைத்து எச்சரிக்கை செய்து படையினர் அனுப்பி யுள்ளனர் .அத்தோடு யாராவது புலிகளின் நடமாட்டத்தை கண்டால் தமக்கு அறியத் தரும்படி படையினர் மக்களிற்க்கு கூறி அனுப்பி யுள்ளனர் என அந்த மக்கள் சிலர் நமக்கு தெரிவித்தனர் .இனிப்பான செய்தி இராணுவம் மூலம் உலகத் தமிழ் மக்களிற்க்கு கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்வுடன் மக்கள்.
(எதிரி.கொம்)
(எதிரி.கொம்)
வலிகளினால் சோர்ந்துவிடாது விடுதலை பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்.-அரசியல்துறை அறிக்கை.

எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. இருப்பினும், இவ்வலிகளினால் சோர்ந்து விடாது நமக்குநாமே ஆறுதல்படுத்திக்கொண்டு விடுதலைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
ஊடக அறிக்கையின் முழுவடிவம் பின்வருமாறு:-
அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 17/05/2010
எமது உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே!
எமது இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மனிதப் பேரவலம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைகின்றது. எமது மக்கள் இன்னமும் அந்தக் கொடூர வலிகளிலிருந்து விடுபடாதநிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் எமது இனத்தின் வலி மிகவும் கொடியது. இருப்பினும், இவ்வலிகளினால் சோர்ந்து விடாது நமக்குநாமே ஆறுதல்படுத்திக்கொண்டு விடுதலைப் பயணத்தில் தொடர்ந்து பயணிப்போம்.
இலங்கை அரசும் எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை புரிந்துகொள்ளாத சில நாடுகளும் சேர்ந்து எமது விடுதலைப் போராட்டத்தை பின்னடைவுக்கு இட்டுசென்றன. எனினும் வரலாறுகள் தந்த படிப்பினையிலிருந்து நம்பிக்கையுடன் மீண்டெழுவோம். எம் ஒவ்வொருவருக்குள்ளும் எரிந்து கொண்டிருக்கும் விடுதலைத் தீயை சுடர்விட்டு எரியச் செய்வோம். எமது வரலாற்றில் இடி விழுந்த இந்நாளில் அனைத்து மாவீரர்களையும் மக்களையும் நினைவுகூர்ந்து வரலாற்றின் வலிகளைப் படிக்கற்களாக மாற்றி சிங்கள தேசத்துக்கும் உலகநாடுகளுக்கும் மீண்டும் நாம் யாரென்பதை உணர்த்துவோம்.
எம்மினத்தின் தாயக, புலம்சார் அரசியல் தலைவர்களே!
எதிரியின் சூழ்ச்சிக்குள் நாம் சிக்குண்டு சிதைந்து போகாமல் எம்மினத்தின் விடுதலையை மனதில் நிறுத்தி அரசியல் ஒருமைப்பாட்டுடனும் இலட்சிய உறுதியுடனும் அணிதிரண்டு எம் தலைவன் காட்டிய விடுதலைப் பாதையில் துணிந்து செல்வோம்.
தாயக உறவுகளே!
இன்று எம்மை சிங்களதேசம் அடிமை கொண்டுள்ளது. எமது உறவுகளை கொன்றொழித்து அனாதைகள் ஆக்கியுள்ளது. சொத்துக்களைச் சூரையாடி ஏதிலிகள் முகாம்களுக்குள் அடைத்துள்ளது. தமிழ்மக்கள் முளுமையாக மீள்குடியேற்றப்படாமல் எமது தாயக பிரதேசமெங்கும் முப்படை முகாம்களும் பொலிஸ் நிலையங்களும் நிறுவப்படுகின்றன. தமிழ்மண்ணில் சமூக பண்பாட்டு சீர்கேடுகள் எதிரியால் திட்டமிட்டு நிகழ்த்தப்படுகின்றன.
தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்களையும் எமது மாவீரச் செல்வங்களின் துயிலுமில்லங்களையும் அழித்து சிங்கள - பெளத்த அடையாளச் சின்னங்களும் இராணுவ நினைவுத் தூபிகளும் நிறுவப்படுகின்றன.
சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு தமிழீழம் சிங்கள மயப்படுத்தப்படுகிறது. இந்நடவடிக்கைகள் எம்மினத்தின் தேசிய ஆன்மாவை மீண்டும் மீண்டும் காயப்படுத்துகிறது. சிங்களத்தின் இச்செயலைத் தடுக்கவேண்டியது ஒவ்வொரு தமிழரினதும் தாயகத்திற்கான கடமையும் பொறுப்புமாகும்.
தமிழ்மக்களினது போராட்டம் உரிமைக்கானதே தவிர சலுகைக்கானது அன்று, தமிழ்மண் உரிமைக்காகத் தொடர்ந்து போராடும், சலுகைகளுக்காக கையேந்தாது என்பதை உலகின் காதுகளுக்கு உரத்துச் சொல்வோம். எமது போராட்டத்திற்கு என்றும் பக்கபலமாக இருப்பது தமிழக மற்றும் புலம்பெயர் தமிழீழ உறவுகளே. தொடர்ந்தும் அவர்களது துணையுடன் சிதைக்கப்பட்டிருக்கும் எம் மாவீரர்களின் கல்லறைகளிலிருந்து நாம் மீண்டும் பிறப்பெடுப்போம் என்று இந்நாளில் உறுதிகொள்வோம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஞா.பாலச்சந்திரன். இணைப்பாளர், அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். தொடர்புக்கு: politicalwing@viduthalaipulikal.net
கருத்துக்களை அனுப்ப: comments@viduthalaipulikal.net
நாடுகடந்த தமிழீழ அரசுக்கான முதலாவது அமர்வு அமெரிக்காவில் கூடுகிறது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலமர்வு முன்னர் அறிவிக்கப்பட்டவாறு மே மாதம் 17 - 19 ஆம் திகதிகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் கூடுகிறது.
இது தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டுக்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் ருத்ரகுமாரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் முதற்கண் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலமர்வு முன்னர் அறிவிக்கப்பட்டவாறு மே மாதம் 17 - 19 ஆம் திகதிகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் கூடுகிறது என்பதனை தாயக, தமிழக மற்றும் உலகத் தமிழ் மக்களுக்கு அறியத்தருவதில் நாம் பெரு மகிழ்வடைகிறோம்.
முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முறியடித்து விட்டதாக இறுமாப்படைந்திருக்கும் சிங்கள இனவாதப்பூதத்துக்கு நாடு கடந்த ஈழத் தமிழர் தேசம் அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்துக்கு தன்னைத் தயார்ப்படுத்தியுள்ளது என்ற செய்தியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வு எடுத்தியம்புகிறது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையானது தனது முதலமர்வினை அரசியல் நிர்ணயசபையாக மாற்றியமைத்து, இவ் அரசாங்கத்துக்கான அரசியலமைப்பு (Constitution) உருவாக்கும் அரசியலமைப்புக்குழுவினை அமைத்துக் கொள்ளும் எனவும் அரசியலமைப்பினை உருவாக்கி முடியும் வரையிலான காலப்பகுதியில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒரு இடைக்கால நிறைவேற்றுக்குழுவினையும் அமைத்துக் கொள்ளும் எனவும் மதியுரைக்குழுவின் அறிக்கை பரிந்துரை செய்திருந்தது.
மேலும், தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர, குறுங்கால திட்டங்களினை முன்னெடுப்பதற்காக பொருத்தமான அமைச்சுக் கட்டமைப்புக்களினையோ, சட்டவாக்க குழுக்களினையோ உருவாக்குவதனையும், இடம்பெயர்ந்த மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் தொடர்பான விடயங்களைக் கையாள்வதற்காக ஒரு செயற்பாட்டணி அமைக்கப்படுதல் பற்றியும் முதலாவது அமர்வு கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் மதியுரைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில,; தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை அமர்வுக்கு அழைத்து, மேற்குறிப்பிடப்பட்ட மதியுரைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசவை நிகழ்வுகள் நடைபெறும் வழிவகைகளை மேற்கொண்டு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை நடத்திச் செல்லும் பொறுப்பை ஒப்படைக்கும் வரை முன்னெடுக்கப்படவேண்டிய பணிகளை அங்குரார்ப்பணக்குழு சார்பில் அதன் தலைவர் பேராசிரியர் நடராஜா சிறீஸ்கந்தராஜா அவர்கள் பொறுப்பேற்று ஒருங்கிணைத்து வருகிறார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்காக நாம் எடுத்து வந்த முயற்சிகளில் மிகுந்த சவால்களைத் தாண்டியே முன்னேறிச் செல்ல வேண்டியிருந்தது. இச் சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவதற்காக மதியுரைக்குழுவும் நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களும் மிகுந்த அர்ப்பணிப்போடு செயற்படவேண்டியிருந்தது. வீண்பழிகளையும், அவதூறுகளையும், சில அவமானங்களையும் தாண்டித்தான் இவர்கள் தமது பணியினை முன்னெடுத்திருந்தார்கள். இவர்களின் துணிச்சலான செயற்பாடுதான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கத்துக்கு வழிகோலியது. இச் செயற்பாட்டாளர்களுக்கு இத் தருணத்தில் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான எமது பணியினை முன்னெடுப்பதற்கு சில ஊடகங்களின் இருட்டடிப்பு மற்றும் அவதூறுப் பரப்புரைகளுக்கு மத்தியிலும் பல தமிழ் ஊடகங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்து வந்தன. இவ் ஊடக நண்பர்களின் கரங்களை நாம் நன்றியுணர்வுடனும் தோழமையுணர்வுடனும் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.
இத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமன்றி வேட்பாளர்களாகப் போட்டியிட்ட அனைவரையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வளர்த்தெடுப்பதற்கு தமது பங்களிப்பை வழங்க முன்வந்தவர்களாகவே நாம் கருதுகிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வளர்த்தெடுப்பதற்கான பங்களிப்பை இவர்கள் தொடர்ந்தும் வழங்குவார்கள் என நம்புகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகளாக நேரடித் தேர்தல்கள் மூலம் 115 பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது நன்றென மதியுரைக்குழு பரிந்துரை செய்திருந்தது.
இவர்களில் 87 பிரதிநிதிகள்,
கனடா (25),
அமெரிக்கா (10),
பிரித்தானியா (17),
சுவிற்சலாந்து (10), பிரான்ஸ் (7),
ஜேர்மனி (3),
நோர்வே (3),
டென்மார்க் (3),
சுவீடன் (1),
அவுஸ்திரேலியா (6),
நியுசிலாந்து (2)
ஆகிய நாடுகளில் இருந்து இதுவரை தெரிவு செய்யப்;பட்டுள்ளார்கள்.
இத்தாலி (3),
ஆகிய நாடுகளில் இருந்து இதுவரை தெரிவு செய்யப்;பட்டுள்ளார்கள்.
இத்தாலி (3),
Benelux (நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸ்;சம்பேர்க்) (3),
பின்லாந்து (1),
அயர்லாந்து (1)
ஆகிய நாடுகளிலில் இருந்து தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படவேண்டிய 8 பிரதிநிதிகளின் தெரிவு சில நடைமுறைப் பிரச்சினைகளால் அடுத்த கட்டத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது.
பிரித்தானியா (3),
ஆகிய நாடுகளிலில் இருந்து தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படவேண்டிய 8 பிரதிநிதிகளின் தெரிவு சில நடைமுறைப் பிரச்சினைகளால் அடுத்த கட்டத்துக்குப் பிற்போடப்பட்டுள்ளது.
பிரித்தானியா (3),
பிரான்ஸ் (3)
ஆகிய நாடுகளில் இடம் பெற்ற தேர்தல்களில் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகள் குறித்த நடவடிக்கைகளால் மேலும் 6 பிரதிநிதிகளின் தெரிவும் தாமதமாகின்றது.
ஜேர்மனியின் இரு தேர்தல் தொகுதிகளில் தேர்தல்களை பொது நிறுவனம் ஒன்று பொறுப்பெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையால் அங்கு இன்னும் தெரிவு செய்யப்படவேண்டிய 7 பிரதிநிதிகளுக்குரிய தேர்தல்கள் யூன் மாதம் 20 ஆம், 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளன.
அவுஸ்திரேலியாவில் இருந்தும் நியு சவுத் வேல்ஸ் (NSW) மாநிலத்தில் இ;ருந்து 4 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டியுள்ளனர். இவ்வகையில் இன்னும் 25 பிரதிநிதிகள் நேரடித் தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
இவற்றை விட, தென்னாபிரிக்காவில் நேரடித் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவதற்கு மதியுரைக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்ட 3 பிரதிநிதிகளின் தெரிவு நேரடித் தேர்தல் தவிர்ந்த வேறுமுறையில் மேற்கொள்ளப்படுவதே நடைமுறையில் பொருத்தமானது என்ற தமது கருத்தினை தென்னாபிக்கா செயற்பாட்டுக்குழு எமக்குத் தெரிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான மக்கள் பிரதிநிதிகள் எல்லோரையும் ஒரு முறையிலேயே தேர்ந்தெடுக்க முடியாது போனாலும், தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர்களில் முக்கால் பங்குக்கும் மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில், மே மாதம் 17-19 ஆம் திகதிகளின் கால மற்றும் குறியீட்டு முக்கியத்துவம் கருதி நாம் முன்னர் அறிவித்;தவாறே அக் காலப்பகுதியில் முதலாவது அமர்வினைக் கூட்டுவது அவசியமானதென நாம் கருதியமையினால் திட்டமிட்டவாறு முதலமர்வு இப்போது கூட்டப்படுகிறது. இயன்றளவு விரைவாக ஏனைய பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவதற்கு ஆவன செய்யப்படும்.
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை அவ்வவ் நாடுகளின் தேர்தல் ஆணையங்களே கையாள்கின்றன. நியாயமான முறையில் இவை கையாளப்பட்டு, இவை தொடர்பான ஒரு வெளிப்படையான அறிக்கைகையை உரிய தேர்தல் ஆணையங்கள் மக்களுக்கு வெளியிடுவார்கள் என்பதே எமது எதிர்பார்ப்பு.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தேர்தல்களில், தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் குழுக்களில் பணியாற்றுபவர்கள் தவிர்ந்த ஏனைய அனைவரும் வேட்பாளர்களாகப் பங்கு பற்றலாம் என்பதே பொதுவான ஏற்பாடாக இருந்தது. இருந்த போதும் சில நாடுகளின் செயற்பாட்டுக்குழுக்கள் இவ்வாறு தேர்தலில் போட்டியிடுவோர் செயற்பாட்டுக்குழுவில் இருந்து விலக வேண்டும் என்ற நடைமுறையினைத் தமக்குள் பின்பற்றியிருந்தனர்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான இடைக்கால நிறைவேற்றுசபை உருவாக்கப்பட்டு அச்சபை கடமைகளைப் பொறுப்பேற்கும் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவும் நாடுவரரி;யான செயற்பாட்டுக்குழுக்களும் தமது பணிகளை நிறைவுக்குக் கொண்டு வரும்.
இவண் விசுவநாதன் ருத்ரகுமாரன்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வின் நேரடி ஒளிபரப்பு!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வு, இன்று மே மாதம் 17 திகதி அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில், அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகிறது
இவ் ஆரம்ப நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை எமது இணையத்தளமாகிய http://www.govtamileelam.org/ ஊடாக ஒளிபரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனை மக்களுக்கு அறியத் தருகிறோம்.
இவ் ஒளிபரப்பு பிலடெல்பியா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பிப்பதால் ரொறன்ரோ நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், பிரித்தானியா நேரப்படி மாலை 6 மணிக்கும், ஐரோப்பிய நேரப்படி மாலை 7 மணிக்கும் ஒளிபரப்பு ஆரம்பமாகும்.
வெளியீடு: அனைத்துலகச் செயலகம்
தொடர்புகளுக்கு: info@govtamileelam.org

16 மே 2010
முத்துக்குமார் சிலை திறப்புக்கு கருணாநிதியின் காவல்துறை அனுமதி மறுப்பு!

ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாருக்கு தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டிப்பட்டியில் இன்று மாலை நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.
பல்லாயிரக்கணக்கானோர் முன்னிலையில் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் இந்த சுடரை ஏற்றினார்.
ஈழத்தமிழருக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாருக்கு முதன் முதலில் தஞ்சை மாவட்டத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி நான்கு சாலை பிரிவில் புலவர் ரத்தினவேலு முத்துக்குமாருக்கு சிலை அமைக்க இடம் கொடுத்தார். இளந்தமிழர் இயக்கத்தினர் தானமாக பெற்ற இந்த இடத்தில் முத்துக்குமாருக்கு சிலை அமைக்கும் பணியை மேற்கொண்டு முடித்துள்ளது.
இன்று(மே-16) இளந்தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியினர் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுடர் ஓட்டம் ஆரம்பித்து மாலை 5 மணிக்கு சிலை அருகே வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் சிலையை திறந்து வைக்கவிருந்தார். இச்சிலை திறப்பு விழாவில் புலமைபித்தன், காசி ஆனந்தன், முத்துக்குமார் தந்தை குமரேசன், இயக்குநர் ராம், இயக்குநர் புகழேந்திதங்கராசு உட்பட பலர் கலந்துகொள்வதற்காக அனைவரும் சிலை திறப்பு விழா இடத்திற்கு வந்துகொண்டிருந்தனர்.
ஆனால், இந்த சிலை திறப்பு விழாவிற்கு போலீஸ் அனுமதி கொடுக்காததால் இன்று மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் மட்டும் நடைபெற்றது.
பொதுக்கூட்ட மேடை அருகே முத்துக்குமார் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது.

பார்வதி அம்மாள் காலைத்தொட்டு வணங்கும் சிங்கள செய்தியாளர்கள்!

மலேசியாவில் தங்கும் அனுமதி முடிந்து, தமிழம் வரமுடியாமல் கொழும்பு சென்ற பார்வதி அம்மாள் அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டு, வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், யாழ்ப்பாணம் வரும் பல சிங்கள செய்தியாளர்கள் பார்வதி அம்மாளை வந்து பார்ப்பதுடன் அவரது காலைத் தொட்டு வணங்கி செல்வதாக அங்கிருக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பிரபாகரனைப் பெற்றத் தாய்க்கு சிங்களவனும் மதிப்பளிப்பது பெருமைக்குறிய விசயம் என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்.

சுப,வீரபாண்டியன் ஆடும் கேலிக்கூத்து!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை வழங்கப்பட்டு விட்டது போல சு.ப. வீரபாண்டியன் பதாகைகளை அடித்து ஒட்டியுள்ளார். அதில் தமிழக அரசுச் செலவில் மருத்துவ உதவி வழங்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை வேதனையும் வேடிக்கையுமான விடயமும் கூட. தள்ளாடும் வயதில் சிகிச்சைக்காக வந்த பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பி, பின்னர் அவர் வரலாம், ஆனால் அரசியல் தலைவர்களை சந்திக்கக்கூடாது என பல நிபந்தனைகளைப் போட்டது தமிழக அரசு.
தற்போது பார்வதி அம்மாளை வைத்து பிழைப்புவாதம் நடாத்துகிறார் சு.ப.வீராபாண்டியன். தமிழீழ உணர்வாளர்போல பல காலம் நடித்து, பின்னர் விலைபோய், தற்போது கருணாநிதியின் அடிவருடியாகச் செயல்படும், மிகக் கேவலமான மனிதர்களுக்குள் சு.ப.வீரபாண்டியனும் ஒருவர். தமிழ் தேசியத்தை, விலைபேசினார் பொறுத்துக்கொண்டோம், தமிழர் மானத்தை கருணாநிதியிடம் அடகு வைத்தார் பொறுத்துக்கொண்டோம், தற்போது தேசிய தலைவரின் தாயை வைத்து பிழைப்பு நடத்தப் பார்க்கிறார். இவர்போன்ற தெருப்பொறுக்கி அரசியல்வாதிகள் இனம்காணப்படவேண்டும்.
இந்த போஸ்டரை வாசிக்கும் பாமரத் தமிழக மக்கள், தேசிய தலைவரின் தாயார் ஏதோ தமிழகம் வந்து அரசு செலவில் சிகிச்சை பெற்றுச் சென்றுவிட்டதாக நினைப்பார்கள். இது போன்ற மாயையில், தமிழக மக்களை கலைஞர் அரசு போட்டு பூட்டிவைத்துள்ளது. நடக்காத பல விடயங்களை நடந்ததாகக் கூறுகிறது. இப்போது அரசியல் நடாத்துவது யார்?

சுப,வீரபாண்டியனை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
குமரப்பா,புலேந்திரன் உட்பட்ட பன்னிரு மாவீரர்களினதும் மற்றும் கேணல் கிட்டு அவர்களினது நினைவுத் தூபியும் படைகளால் அழிப்பு!

யாழ்.மாவட்டம் வடமராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை, தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரனினதும், தளபதி கிட்டுவினதும் நினைவாலயங்களையும் இலங்கை இராணுவம் நேற்று சனிக்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலங்களில் வட பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் நினைவுச் சின்னங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தினர் அதன் ஒரு அங்கமாக வல்வெட்டித்துறை, தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா உட்பட்ட பன்னிரு வேங்கைகளினது நினைவாலயங்களையும், கேணல் கிட்டுவின் நினைவுத்தூபியினையும் முற்றாக அழிக்க தீர்மானித்துள்ளதாகவும், அதில் ஒரு கட்டமாக நேற்றிரவு அவைகளை சேதப்படுத்தியுள்ளதாக அங்கிருந்த கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அண்மையில் விடுதலைப்புலிகளின் வடமராட்சியில் இருந்த மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவம் முற்றாக அழித்துள்ளமை யாவரும் அறிந்ததே.
அழுவதற்கான நாள் அல்ல,நாம் நிமிர்வதற்கான நாள்!

முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்கிறார் பலர்,
நான் சொல்கிறேன் முள்ளிவாய்க்கால்தான் முடிவு,
எம் துன்பங்களின் முடிவாக முள்ளிவாய்க்கால்இருக்கட்டும்,
துன்பங்களின் எல்லையாக முள்ளிவாய்க்கால்இருக்கட்டும்,
அங்கே முடிந்துபோனது எமது இன்னல்களாக இருக்கட்டும்,
தமிழனே எழுந்து கொள்!
மாண்டுபோன எம் உறவுகள் மீதுசத்தியம் செய்!
விடுதலை பெறுவோம் எனசத்தியம் செய்!
உனக்காக இல்லாவிட்டாலும்,
நீ எம்மைதொடர்வாய் என்ற நம்பிக்கையுடன்
வீர காவியமான அந்தமறவர்களுக்காகவெனினும்
தாயக விடுதலைக்காய்உறுதி கொள்!
சிங்களன் புரிந்த கொடூரம்தனை நினைவில் கொள்!
உன் கண்கள்தனில் கோப அனல் தெறிக்கட்டும்,
அதுஇனவாத சிங்களத்தையே எரிக்கட்டும்,
எம் தமிழர் கல்லறை எழுந்து நாளை சிரிக்கட்டும்,
இது அழுவதற்கான நாள் அல்ல,
நாம் நிமிர்வதற்கான நாள்.
வன்னி யுத்தத்தில் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை தெரிந்ததினாலேயே பிரகீத் எக்னேலி கொட கடத்தப்பட்டார்.

வன்னிப் போரின் இறுதி நாள்களில் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருந்த காரணத்தினாலேயே லங்கா ஈ நியூசின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட படைத்துறையின் புலானாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்த றுவான் சேனதீர வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக லங்கா ஈ நியூஸ் நிறு வனத்தின் ஆசிரியர் சந்த றுவான் சேனா தீர வெளிநாடு ஒன்றில் தஞ்சம் கோரியிருந்தார்.தனது சக ஊடகவியலாளர் கடத்தப்பட்டது குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,வன்னிப் போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து செய்திகளை பெற்றுக் கொள்வதற்காக அப்பொழுது வவுனியாவில் கடமையிலிருந்த படைத்தரப்பின் மேஜர் ஒரு வரை நான் பிரகீத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். அந்த மேஜரின் ஊடாக வன்னிப் போர் குறித்த பல தகவல்களை பெற்று பிரகீத் தமது ஊடகத்துக்கு செய்திகளை வழங்கி வந்தார்.இவ்வாறு பணிபுரிந்து கொண்டிருந்த பிரகீத் ஒரு நாள் இனந்தெரியாதோரால் திடீரென கடத்திச்செல்லப்பட்டார். இச் சம்பவத்தின் பின்னணி குறித்து ஆராய்ந்த போது பிரகீத்துக்கு நான் அறிமுகப்படுத்திய வவுனியாவில் கடமையில் ஈடுபட்டிருந்த மேஜர் தொடர்பாக படைத் தரப்பினர் திடீர் விசாரணை ஒன்றை மேற்கொண்ட போது அவரின் கைத் தொலைபேசியில் பிரகீத்தின் தொலை பேசி இலக்கம் இருக்கக் காணப்பட்டு அதன் அடிப் படையில் பிரகீத் கடத்தப்பட்டமை தெரியவந்தது.படைத்தரப்பும் தமிழீழ விடுதலைப்புலிகளும் போர் முனையில் பயன்படுத்தும் ஆயுதங்கள் என்ற தலைப்பில் பிரகீத் கடத்தப்பட்டதற்கு முன்னர் ஒரு கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். இதன் காரணமாக படைத் தரப்பினர்களால் இவர் முதல் முறை கடத்தப்பட்டார். இவ்வாறு கடத்தப்பட்ட பிரகீத் குறிப்பிட்ட படைத்தரப்பு மேஜர் வழங்கிய தகவல்கள் எதையும் வெளியிடக் கூடாது என எச்சரிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இக் கடத்தல் சம்பவம் குறித்து நான் பிரகீத்திடம் கேட்டபோது படையினர் போரின் போது இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.அத்துடன் ஆயுத களஞ்சியத்துக்கு அடிக்கடி வரும் சிலர் இரசாயன பொருட்களை குண்டுகளினுள் பொருத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக வவுனியா ஆயுதக் களஞ்சியம் ஒன்றுக்கு பொறுப்பாக இருந்த மேற் குறிப்பிட்ட மேஜர் தன்னிடம் கூறியதாக வும் பிரகீத் தெரிவித்தார். இவ்வாறு ஆயுதங்களில் இரசாயனப் பொருள் கள் சேர்க்கப்படுவது களமுனையில் நிற்கும் படையின ருக்குத் தெரியாதென்றும் பிரகீத் என்னிடம் கூறியிருந்தார்.மேற்குறிப்பிட்ட மேஜரிற்கு ஊடாக இத் தகவல்கள் வெளியே கசிந்துவிட்டதை தெரிந்து கொண்ட படையினர் தன்னைக் கடத்திச் மிரட்டியதாகவும் பிரகீத் என்னிடம் குறிப்பிட்டிருந்தார் என லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மே,பதினேழு துக்க நாளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு.

உச்சக் கட்டப் போரின்போது பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல இலட்சக்கணக்கானோர் பல்வேறு பாரிய பாதிப்புகளுடன் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு துக்கம் தெரிவித்து நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள துக்க தினத்தைத் தமிழ் மக்கள் அமைதியான முறை யில் அனுஷ்டிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.வருடாந்தம் மே மாதத்தில் வரும் 17 ஆம் திகதியை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது. இதன்படி முதலாவது துக்க தினத்தை நாளை திங்கட்கிழமை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், "வடக்கு, கிழக்கிலுள்ள கோயில்கள், தேவா லயங்களில் நாளை விசேட மதவழிபாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் இந்த வழிபாடுகளில் கலந்து கொண்டு, கொடூர யுத்தத்தில் பலிக்கடாக் களாக்கப்பட்ட தமது உடன் பிறப்புகளின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை புரியுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்' என்றார்.அதேவேளை, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மன்னார், வவுனியா உட்பட முக்கிய இடங்களில் பொதுக் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து ஓராண்டு நிறைவையொட்டி நாடெங்கும் அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெற்றிக் கொண்டாட்டங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, "நாங்கள் அழுது கண்ணீர் விட்டுக் கொண்டிருக்க தென்னிலங்கையில் அரசாங்கம் வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்துவதா, என்று கேள்வி எழுப்பியுள்ளார். "இதனை எங்களால் ஜீரணிக்க முடியாதுள்ளது. ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம். எங்களது மக்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் அரசாங்கமோ இராணுவ ரீதியான கொண்டாட்டங்களை நடத்துவதனை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது' என அவர் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)