15 செப்டம்பர் 2010

சுப்பிரமணியசாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும்!

அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் மதிமுகவின் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த மாநாட்டிற்கு தலைமையேற்றார். மாநாட்டில் 15ஆயிரம் தொண்டர்கள் குவிந்தனர். இம்மாநாட்டில் மதிமுக துணைபொதுச்செயலாளர் மல்லைசத்யா பேசினார். அவர், ‘’எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சிப்புயல், உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் சென்று உரையாற்றிவிட்டு வந்துள்ளார். ஐநா சபையிலும் உரையாற்றிய பெருமை எங்கள் தலைவனுக்கு உண்டு. இது ஆட்சி அதிகாரத்தில் உள்ள யாருக்கும் கிடைக்காத அறிய வரலாற்று நிகழ்வுகள். அவர் உரையாற்றாத ஒரே இடம் தமிழக சட்டமன்றம்தான். விரைவில் அங்கேயும் உரையாற்றுவார்’’என்று பேசினார். அவர் மேலும், ‘’இலங்கை மண்ணில் தனித்தமிழ் ஈழம் கேட்டுப்போராடும் மக்களுக்கும், போராளிகளின் உரிமைப்போராட்டத்திற்கு ஆதரவளித்ததால் இங்குள்ள சுப்பிரமணிய சாமி எங்கள் தலைவர் வைகோவை நாடுகடத்தவேண்டும் என கூறியுள்ளார். ஈழத்தமிழினத்தை அழிக்க சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்கும் சுப்பிரமணியசாமியின் தலை துண்டிக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படும்’’என்று ஆவேசமாக பேசினார்.

தந்தை 700 மீட்டர் ஆழச் சுரங்கத்தில்: குழந்தை சுகப் பிரசவம்!

சில்லி நாட்டில் கடந்த 40 தினங்களாக சுமார் 700 மீட்டர் ஆழச் சுரங்கத்தில் பலர் அடைபட்டுள்ளனர். அடைபட்டுள்ள சுரங்கத் தொழிலாளர்களை மீட்க சில்லி நாட்டு அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த சமயம் அதன் வாயில் இடிந்து கற்பாறைகளால் அது மூடப்பட்டது. இருப்பினும் பலர் அச் சுரங்கத்தினுள் இன்றுவரை உயிரோடு உள்ளனர். சிறிய ஓட்டை வழியாக அவர்களுக்கு உணவுகள் மற்றும் தேவையான அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள சுரங்கத் தொழிலாளர் ஒருவரின் மனைவி அவரின் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அதனை உடனடியாக வீடியோ எடுத்த குடும்பத்தினர் அதனை சிறு ஓட்டை வழியாக சுரங்கத்திற்குள் செலுத்தி அதைக் காண்பித்தும் உள்ளனர். சுரங்கத்தில் உள்ள பலரின் மனநிலை பாதிப்படைந்து வருவதால், அவர்களையும், தந்தையையும் உற்சாகப்படுத்தும் விதமாக இக் காட்சிகள் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

இலங்கையில் மனித உரிமை மீறலினை தொடர்ந்தும் அவதானிக்கின்றோம். பிரித்தானியா!

நேற்று பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்றது. இதில் மக்களின் மனிதாபிமான பிரச்சினை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மனித உரிமைகள் குறித்து பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மத்தியகிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான பிரித்தானிய அமைச்சர் அலெஸ்டெயார் பர்ட் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பாராளுமன்றில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் வட பகுதி மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பிரித்தானியா அதிகூடிய கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவென 13.5 மில்லியன் பவுன்களை ஒதுக்க தீர்மானித்துள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்னளுடன் இணைந்து துரிதமாக செயற்பட்டு வருவதாக மத்தியகிழக்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான பிரித்தானிய அமைச்சர் அலெஸ்டெயார் பர்ட் கூறியுள்ளார்.

14 செப்டம்பர் 2010

வைரத்தாலான கிரகம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

பூமியில் வைரக் கற்கள் பெரும் விலைக்கு விற்க்கப்படும் ஒரு பொருள். சிறிய குண்டூசியளவு வைரக் கல் கூட பல லட்சம் விலை பெறுமதியானது. அத்தோடு இதுவரை காலமும் உலகில் தோண்டி எடுக்கப்பட்ட வைரக் கற்களில் மிகப்பெரியது என்று கருதப்படுவது கோகினூர் வைரம் என்றழைக்கப்படும். அதன் அளவு ஒரு தேசிக்காயின் அளவை ஓத்தது. அது பல மில்லியன் டாலர் பெறுமதி, ஆனால் அண்டவெளியில் உள்ள ஒரு கிரகம் வைரத்தால் ஆனது என தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 4,000 கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இக் கிரகம் முழுக்க முழுக்க வைரக் கல் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாதாரணமாக காபன் என்னும் மூலப்பொருள் இறுக்கமடைந்து பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் வைரக் கல்லாக மாறுகிறது. தங்கத்தை கரட் கொண்டு, 24 கரட் அல்லது 18 அல்லது 9 கரட் என்பது போல வைரத்தை அதன் அடர்த்தியை வைத்தே மதிப்பிடுவார்கள். சுமாரான வைரக் கற்கள், 0.05 கரட் ஆக இருக்கும். 1 கரட் வைரக் கற்கள் மிகுந்த விலையானவை. அதிலும் 2 கரட் என்றால் அதி உச்ச விலை மதிப்பானவை. ஆனால் அண்ட வெளியில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைர கிரகத்தில் உள்ள வைரத்தின் அடர்த்தி என்ன என்றுகேட்டால் பூமியில் உள்ளவர்கள் தலைசுற்றி விழுவது நிச்சயம்.

அந்த வைரத்தின் அடர்த்தி சுமார் 1 மில்லியன் கரட் ஆகும். அக் கிரகத்தில் இருந்து எடுக்கப்படும் ஒரு சிறு அணுத்துகள் கூட பூமியில் பல மில்லியன் பெறுமதியாக இருக்கும். ஒரு காலத்தில் எமது சூரியக் குடும்பத்தில் உள்ள சூரியனைப்போல ஒளிர்விட்டு எரிந்த இச் சிறுகிரகம், தற்போது அணைந்து, மிகவும் குளிர்ந்து இறுகி வைரக் கட்டியாக மாறியுள்ளதாம். அது பூமியில் இருந்து 50 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது. அக்கிரகத்திற்கு எந்த நாடு முதலில் தனது செய்மதியை அனுப்பப்போகிறதோ தெரியவில்லை. அப்படி ஒரு நாடு அனுப்பினால் அந்நாடே உலகில் செல்வம் மிக்க நாடாகத் திகழும்.

ஆனால் 50 ஒளியாண்டுகள் என்றால் என்ன என்று தெரியுமா?
ஒளி சுமார் 1லட்சத்தி 87,000 மைல் தூரம் செல்லும் 1 செக்கனுக்கு. அப்படியானால் 1,87,000 ஐ 60 ஆல் பெருக்கி, அதை 24 ஆல் பெருக்கி வரும் விடையை 365 ஆல் பெருக்கினால் வரும் தூரமே 1 ஒளியாண்டு ஆகும். அப்படி என்றால் 50 ஒளியாண்டுகள் என்றால் எவ்வளவு தூரம்வரும் என்று நீங்களே கணக்குப் பார்த்து மண்டையை பிய்த்துக்கொள்ளலாம். இதைத்தான் கண்ணுக்கு எட்டியது, கைக்கு எட்டாமல் போய்ச்சு என்று சொல்லுவார்கள், டெலஸ்கோப்பில் பார்த்து மகிழலாம் ஆனால் போவது நடக்காத காரியம்.

பான் கீ மூனுக்கு இன்னர் சிட்டி பிரஷ் கண்டனம்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரது பேச்சாளர் மார்ட்டின் சினர்கீ ஆகியோர், இலங்கை, மற்றும் சூடான் போன்ற நாடுகளின் முக்கிய விடயங்கள் குறித்து நீண்ட மௌனம் சாதிப்பதை இன்னர் சிட்டி பிரஸ் கணடித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று நடைப்;பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது இலங்கை, சூடான் மற்றம் கொங்கோ போன்ற நாடுகளின் முக்கியமான பிரச்சினைகள் குறித்து எந்த கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை குழுவும் நியமிக்ப்பட்ட பல மாதங்கள் கடந்தும் அது இயங்கவில்லை என்பதுடன், அதன் நான்கு மாத கால அவகாசம் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் பான் கீ மூன் குறித்த நாடுகளில் பிரச்சினைகளை மூடிமறைக்க முயற்சிப்பதாக இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
கொங்கோவில் இடம்பெற்ற இனப்படுகொலை மூடி மறைப்பதற்காககவே அவரது விஜயமும் அமையவுள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை இந்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டத்தை, தமது இரண்டாவது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்தற்காக பயன்படுத்தும் முயற்சியில் பான் கீ மூன் இருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

13 செப்டம்பர் 2010

அரச ஆதரவு தொலைக்காட்சி சேவையில் செய்திப் பணிப்பாளராக தயா மாஸ்ரர்!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர் தற்போது அரச ஆதரவுத் தொலைக்காட்சி ஒன்றின் செய்திச் சேவைப் பணிப்பாளராக யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் கடமையாற்றி வருகின்றார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு மிகவும் நெருக்கமான தொலைக்காட்சிச் சேவை என்று நம்பப்படும் டான் ரி.வியின் செய்திச் சேவைப் பணிப்பாளராகவே இவர் செயற்பட்டு வருகின்றார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முன்பு வெளியான ஈழநாடு பத்திரிகையின் ஊடகவியலாளராக இருந்த ஒருவர் பிரான்ஸில் இருந்து இத்தொலைக்காட்சிச் சேவையை நடத்துகின்றார்.தயா மாஸ்ரர், புலிகளின் மொழிபெயர்ப்பாளராக செயற்பட்ட ஜோர்ஜ் மாஸ்ரர் ஆகியோர் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அரச படையினரிடம் சரண் அடைந்திருந்தார்கள்  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டியவர்களில் தயா மாஸ்ரரும் ஒருவர். பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதய நோயாளியான தயா மாஸ்ரர் முன்பு கொழும்பில் அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார். தற்போது பருத்தித்துறை அரச வைத்தியசாலையில் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றார்.
இவர் ஐந்து மில்லியன் ரூபாய் செலவில் பருத்தித்துறையில் வீடு ஒன்றைக் கட்டி வருகின்றார் என்று சண்டே லீடர் பத்திரிகை செய்தி பிரசுரித்துள்ளது. இவர் புலிகள் இயக்கத்தில் இணைகின்றமைக்கு முன் அரச பாடசாலை ஒன்றில் ஆங்கில பாட ஆசிரியராக கடமையாற்றி இருந்தார்.
ஆயினும் இவரின் மனைவி பருத்தித்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் தற்போதும் ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார்.

தமிழீழத்தின் விடுதலை நோக்கி, தொடரும் நீதிக்கான தார்மீக நடைப் பயணங்கள்…! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்…..!


இலங்கை அரசினால் கடந்த வருடம் ஈழத்தமிழ் மீது மக்கள் நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு போரில், உடல், உள, வாழ்வியல் ரீதியில் இன்று வரை மீளமுடியாது அல்லற்படும் மக்களிற்கு, நீதி வழங்கும் நடவடிக்கைகளில் அசமந்தப் போக்கை கடைப்பிடித்து வரும் சர்வதேச மன்றங்களை தட்டியெழுப்பும் வகையில் நீதி தேடி தொடரும் நீண்ட மனிதப் பயணங்கள்…! தமிழீழ மக்களிற்கு, இலங்கை இனவாத அரசினாலும், அதன் இராணுவ, காவற்றுறை, புலனாய்வுத் துறை படைகளினாலும் ஏற்படுத்தப்பட்டன வழிப்புக்கு எதிரான சட்டங்களுக்கு முறனான குற்றங்களுக்கும் மானிடத்திற்கு எதிரானகுற்றங்களுக்கும் போர்க் குற்றங்களிற்கும், தமிழீழ மக்கள் இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கும் பேரவலங்களிற்கும், சர்வதேசத்திடம் நீதி கேட்டு, சர்வதேச சமூகத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும், மனித நேய உணர்வாளர்களின் மகத்தான விடுதலை நோக்கிய அமைதி வழி செயற்பாடுகளை, நாடுகடந்த அரசாங்கம் வரவேற்று ஆதரவளிக்கிறது! அந்த வகையில் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் நாள் கனடா ரொரன்ரோ நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்னால் 5 மாணவர்கள் சமாதானத்தை நோக்கி ஒபரா வின்ப்பிரேயை சந்திக்கழூ என்று அமெரிக்கா சிக்காக்கோ மாநகரில் உள்ள ஹார்போ கலையகம் நோக்கி, கடும் குளிர் காலத்தில் 60 நாட்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள்.
அண்மையில் யூலை 2010ல் திரு.சிவந்தன் அவர்கள் பிரித்தானியாவில் இருந்து, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் செயலகத்தை நோக்கி «நீதிக்கான நடை» என்று கடும் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
 இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
 எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
 மனித உரிமைகள் மதிக்கப்படும் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
 தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.என்கிற கோரிக்கைகளை முன் வைத்து பெல்ஜியம் ஐரோப்பியத் தலைமை ஒன்றியம் நோக்கிய தமிழ் மக்களுக்கான அடுத்த நீதிப்பயணத்தை மேற்கொண்டிருக்கும்,
திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ், ஆகியோருக்கு, அவர்களின் இந்த மனித நேய முயற்சி அதன் இலக்கினை எட்டவும், இந்த நீதிக்கான நடைப் பயணத்தை ஒருங்கமைத்தோருக்கும் நாடு கடந்த அரசாங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
மனித நேய உணர்வாளர்களின் மகத்தான விடுதலை நோக்கிய இத்தகைய செயற்பாடுகள் தொடரப்பட வேண்டும், என்பதில் நாடுகடந்த அரசாங்கம் தனது அக்கறையை வெளிப்படுத்துகின்றது.

செயலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

12 செப்டம்பர் 2010

கூட்டமைப்பு அரசில் சேர்ந்தால் தமிழர்களுக்கு நன்மை! கருணா.


தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணையும் பட்சத்தில் தமிழ் மக்கள் நன்மை அடைவார்கள் என்று மீள்குடியேற்றத்துறைப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கி இருக்கும் பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார். அவர் அப்பேட்டியில் இது சம்பந்தமாக முக்கியமாக தெரிவித்துள்ளவை வருமாறு:
”தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரயோசனம் அற்ற ஒன்று என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன்.ஆயினும் தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து அக்கட்சி அதன் கொள்கையிலும்,நிலைப்பாட்டிலும் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் தமிழ் மக்களின் நம்பிக்கையை கூட்டமைப்பு வென்றெடுக்க முடியும். உதாரணமாக தமிழ் மக்கள் பட்டினி கிடக்கின்றார்கள்.
இந்நேரத்தில் கொள்கைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியாது.மக்கள் பலவீனம் அடைந்து விடுவார்கள்.அரசின் ஆதரவைப் பெற்று இம்மக்களின் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். மக்கள் மரத்துக்குக் கீழ் வசிக்கின்றபோது கொள்கைகளைப் பற்றிப் பேசுவது பொருத்தம் அற்றது.தமிழ் மக்கள் கடந்த 30 வருட யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
எனவே அம்மக்களின் எதிர்காலத்தைச் சிந்தித்துக் கூட்டமைப்புச் செயற்பட வேண்டும்.காலத்தை அனுசரித்து நடக்க வேண்டும். அதுதான் உலக நியதி. அரசு தற்போது மிகவும் பலம் பொருந்திய நிலையில் உள்ளது.எனவே கூட்டமைப்பு அரசுடன் இணைந்தால் தமிழ் மக்கள் நன்மை அடைவார்கள்.கூட்டமைப்பு அதன் கொள்கைகளை விட்டுக் கொடுக்காமலேயே அரசுடன் இணைந்து செயற்பட முடியும்.
கூட்டமைப்பு அதன் கொள்கைகளைக் கைவிட்டு விட வேண்டும் என்று நான் கூறவில்லை.கூட்டமைப்பு உட்கட்சிப் பிளவுகளுக்கு உட்பட்டு விடக் கூடாது. கூட்டமைப்பின் எம்.பி ஒருவர் அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளார். கட்சியின் போக்கில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
அரசை எதிர்ப்பதால் எதையும் சாதித்து விட முடியாது என்பதைக் கூட்டமைப்பு உணர்தல் வேண்டும். அரசுடன் பரஸ்பர இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்து இணைந்து செயற்பட வேண்டும்.”

சோமாலியக் கடற்கொள்ளையரை விரட்டிய கப்பல் பணியாளர்கள்!


சோமாலியக் கடலில் சென்று கொண்டிருந்த ஜேர்மனுக்குச் சொந்தமான ஒரு கப்பலைக் கைப்பற்றி கப்பத் தொகை பெற முயன்ற சோமாலியக் கடற்கொள்ளையர்களை அக்கப்பல் பணியாளர்கள் விரட்டிய சம்பவம் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது. கப்பலின் இயந்திரத்தை நிறுத்தி கப்பலைக் கைப்பற்ற வந்த கொள்ளைக்காரர்களைக் கண்ட 11 கப்பல் பணியாளர்கள், உடனும் கப்பல் உரிமையாளர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டனர். எனவே கப்பலைச் சுற்றியிருந்த கொள்ளைக்காரர்கள் ஜேர்மனியிலுள்ள கப்பல் உரிமையாளர்களுடன் நேரடியாகப் பேசக்கூடிய அவசர தொலைத்தொடர்பையே இறுதியில் கண்டுள்ளனர். கொள்ளைக்காரர்கள் கப்பலுக்குள் நுழைந்தும், அங்கு கப்பல் மாலுமி எவரும் இருக்கவில்லை என்பதால் அவர்களால் கப்பலை ஓட்டிச்செல்ல முடியவில்லை. மாலுமி எங்கே எனக் கேட்ட கொள்ளைக்காரர்களுக்கு, அவர்கள் விடுமுறையில் இருப்பதாகப் பதில் கிடைத்ததும் கோபப்பட்டுள்ளனர். இதனால் கப்பலை கடுமையாக சேதப்படுத்தினர்.
அடுத்த நாள் விடிவதற்கு முன்னர் அமெரிக்க படையின் கமாண்டோக்கள் கப்பலுக்கு வந்து தேடுதல் நடத்தி, ஒரு துப்பாக்கிச் சூடும் இல்லாமல் கடற்கொள்ளையர்களைச் சுற்றி வளைத்தனர். கமாண்டோக்களிடம் பாரிய ஆயுதங்கள் இருப்பதைக் கண்ட கொள்ளையர்கள் உடனும் அவர்களிடம் சரணடைந்துவிட்டனர்.

வீதியில் கைவிடப்பட்ட ஆண்குழந்தை மீட்பு!


யாழ்ப்பாணம் கொக்குவில் சம்பியன் வீதியில் அநாதரவாகக் கைவிடப்பட்ட நிலையில், பிறந்து ஒரு நாளேயான ஆண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணியளவில் உரப் பையில் சுற்றப்பட்ட நிலையில் இப்பகுதியில் இச்சிசு காணப்பட்டுள்ளது.
இவ்வீதியால் சென்றவர்கள் குழந்தையின் அழுகைக் குரல் கேட்டு பார்த்தபோது சிசு கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் ,அப்பகுதிக் கிராம சேவகருக்கு அறிவித்ததை அடுத்து கிராம சேவகர், பொலிஸார் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சிசுவை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

11 செப்டம்பர் 2010

ஏகாதிபத்தியத்தை சித்தரிக்கும் சுவரொட்டியை அச்சிட்ட குற்றச்சாட்டில் மங்கள எம்.பியைக் கைதுசெய்ய நடவடிக்கை!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் சர்வாதிகார நோக்கத்தை எடுத்துக் காட்டும் வகையில் சுவரொட்டியை நிர்மாணித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் இணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீரவை கைதுசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே நேற்று முன்தினம் காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறைத் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
மங்கள சமரவீரவைக் கைதுசெய்வதற்குத் தேவையான பின்புலத்தை ஏற்படுத்தும் பொறுப்பு
அரச ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், அரசாங்கத்தின் தினமின பத்திரிகை ஜனாதிபதிக்கு சேறுபூசும் சுவரொட்டி மங்களவினால் நிர்மாணிக்கப்பட்டது என செய்தி வெளியிட்டிருந்தது.
சந்தேக நபர்களை விடுவிக்க மிரிஹான காவல்நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர் எனவும் அந்தப் பத்திரிகை உபதலைப்பையும் வெளியிட்டிருந்தது.
அதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே விற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஜே.வி.பியின் அச்சகம் ஒன்றில் இந்த சுவரொட்டியை அச்சிட்ட சம்பவமானது மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினரின் சூழ்ச்சியென காவல்துறை விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக தினமின கூறியுள்ளது.
இதுசம்பந்தமாக வாக்குமூலமொன்றைப் பெறுவதற்காக மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் பிரத்தியேக செயலாளர் சுதத் சந்திரசேகர ஆகியோர்காவல்துறைக்கு அழைக்கப்படவிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சுவரொட்டியை அச்சிட்ட பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் இணைப்பாளர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாக மங்கள சமரவீர பகிரங்கமாக ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

ஈழ போராட்ட லட்சியம் என்றும் தோற்காது: வைகோ.

ஈழ போராட்ட லட்சியம் என்றும் தோற்காது என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
கோவை சிங்காநல்லூரில் மதிமுக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்தச் சுயமரியாதை திருமணத்துக்கு தலைமை வகித்து, பேசிய வைகோ,
கோவையில் மதிமுகவின் தொழிற்சங்கப் பிரிவுக்குச் சொந்தமான கட்டடத்தை அத்துமீறி திமுகவினர் ஆக்கிரமித்தனர். அந்தக் கட்டடத்தைக் கைப்பற்றுவதற்காக போலி ஆவணங்களையும் சிலர் தயாரித்துள்ளனர். அந்தக் கட்டடத்தை மீட்கும் பொருட்டு, நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டத்தை மதிமுக நடத்தி வருகிறது. அறவழியிலான இந்தப் போராட்டத்தில் முதல்கட்ட வெற்றி பெற்றுள்ளோம். இந்தப் பிரச்னையில் முழு வெற்றியை பெறும் வரை தீவிரமாகப் போராடுவோம்.
வரலாறு காணாத துயரமும், துன்பமும் ஈழத்தில் அரங்கேறியுள்ளது. தமிழர்களது விடுதலைப் போராட்டத்துக்கு தலைமை வகித்த பிரபாகரன் உருவப் படத்தை எங்கும் வைக்கக் கூடாது என தமிழக அரசு கூறுகிறது. அதே சமயத்தில் ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணமான போருக்கு தலைமை வகித்த ராஜபட்சே இந்தியாவிற்கு வந்தால் ராஜமரியாதை வழங்கப்படுகிறது.
ஈழ போராட்ட வரலாற்றில் சிறிய பின்னடைவு ஏற்பட்டாலும், எத்தகைய சூழலிலும் ஈழ போராட்ட லட்சியம் மட்டும் தோற்காது. அண்ணா திராவிட நாடு கோரி கடுமையாக போராடிய கால கட்டத்தில் அவருக்கு எதிராக பல போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டனர். முதல்வரான பின்னர் தனக்கு எதிராக செயல்பட அதிகாரிகளை அண்ணா பழிவாங்கவில்லை. அதற்கு பதிலாக அவர்களுக்கு பதவி உயர்வை வழங்கினார்.

தன்னலமற்ற அந்தத் தலைவருக்கு பிறகு வந்த தலைமை சுயநல நோக்குடன் மட்டுமே செயல்படுகிறது என்றார்.

10 செப்டம்பர் 2010

தாம் பயிற்சியளிக்கவில்லை என்கிறார் கோத்தபாய.

பாகிஸ்தானைச் சேர்ந்த எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இலங்கையில் பயிற்சி பெறவே இல்லை என்று இலங்கையின் பாதுகாப்பமைச்சுச் செயலாளர் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் பயிற்சி முகாம் ஒன்றில் இராணுவ பயிற்சிகளைப் பெற்றார் என்று அவ்வியக்கத்தின் தீவிரவாதி ஒருவர் இந்தியாவின் மராட்டிய மாநில பொலிஸாருக்கு வழங்கி இருக்கும் வாக்குமூலத்தை கோட்டாபய முற்றாக நிராகரித்துள்ளார். இலங்கையில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இயங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆயுதக் களஞ்சியத்தில் வெடிவிபத்து: 3 இராணுவத்தினர் காயம்.

வவுனியாவிலுள்ள இராணுவத்தின் 211 ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்ற வெடி விபத்தில் மூன்று இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர் .
ஆயுதக் களஞ்சியம் துப்பரவு செய்யப்பட்டபோது கிரனேட் ஒன்று தவறுதலாக வீழ்ந்து வெடித்ததில் இந்த இராணுவ வீரர்கள் காயமடைந்திருந்தனர் என படைத்தரப்பினர் தெரிவித்தனர்.
இவர்கள் தற்போது வவுனியா அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெடிசம்பவம் குறித்து இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

09 செப்டம்பர் 2010

நாமலின் ஆதரவாளராக நடித்தவரால் இளம் யுவதி கற்பழிப்பு!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும்-அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவின் ஆதரவாளர் என்கிற போர்வையில் 24 வயதுடைய இளம் யுவதி ஒருவரை ஏமாற்றி, கடத்தி, கற்பழித்து, கட்டாய திருமணம் செய்துகொண்ட ஒருவரை மாத்தறைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் இன்று கைது செய்துள்ளார்கள்.
இன்னொரு சகா மூலமாக இளம் யுவதிக்கு இப்பேர்வழி அறிமுகம் ஆகி இருந்தார். நாமல் ராஜபக்ஸ எம்.பி மூலமாக வேலை பெற்றுத் தருவார் என்று உறுதிமொழி வழங்கி இருந்தார். நாமல் ராஜபக்ஸ எம்.பியிடம் இருந்து சிபாரிசுக் கடிதம் ஒன்றை பெறுகின்றமைக்காக அக்குரஸ்ஸ பிரதேசத்துக்கு வர வேண்டும் என்று கேட்டிருந்தார். இளம் யுவதி கடந்த செவ்வாய்க்கிழமை அக்குரஸ்ஸவுக்கு சென்றிருக்கின்றார். இளம் யுவதியை ஏமாற்றுப் பேர்வழி அம்பாந்தோட்டைக்கு அழைத்துச் சென்று கற்பழித்தார். பின் மிரட்டி பலாத்காரமாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஒருவாறு இப்பேர்வழியிடம் இருந்து தப்பி வந்த இளம்யுவதி மாத்தறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டு விட்டார். இதையடுத்தே ஏமாற்றுப் பேர்வழி கைது செய்யப்பட்டார்.
இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் இவருக்கும் நாமல் ராஜபக்ஸவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட இளம் யுவதி மாத்தறை வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

அச்சகம் சீல் வைக்கப்பட்டு இருவர் கைதுசெய்யப்படுவதற்கு காரணமான சுவரொட்டிகள் வெளியாகியுள்ளன.

அச்சகம் சீல் வைக்கப்பட்டு அச்சக உரிமையாளரது மனைவியையும், சகோதரரையும் தடுத்துவைப்பதற்கு காரணமான சுவரொட்டியின் பிரதியொன்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவினால் இணையத்திற்குஅனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‘வை ஹிட்லர் போல சித்தரித்து ஒரு சுவரொட்டி வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய சுவரொட்டி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் குடும்ப ஆட்சியை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த சுவரொட்டிகளை அச்சிட்ட அச்சகத்திற்கு சீல் வைத்த மிரிஹான காவல்துறையினர் அச்சகத்தின் உரிமையாளரது மனைவியையும், சகோதரரையும் தடுத்துவைத்துள்ளனர். அச்சக உரிமையாளர் காவல்துறையினரிடம் சரணடையும் பட்சத்தில் இவர்கள் விடுவிக்கப்படுவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

08 செப்டம்பர் 2010

தற்கொலை படையை சேர்ந்தவரென்ற சந்தேகத்தில் செட்டிக்குளத்தில் யுவதி கைது.

விடுதலைப் புலிகளின் தற்கொலை படையைச் சேர்ந்தவரென்ற சந்தேகத்தின் பேரில் இளம் யுவதி ஒருவர் செட்டிகுளம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரண கிராமத்தில் வசித்து வந்த நிலையில் பின்னர் உறவினர்களுடன் செட்டிகுளத்தில் தங்கியிருந்தபோதே இவர் கைது செய்யப்பட்டதாக செட்டிகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறினார்.
தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான பயிற்சிகளை பெற்றதாக சந்தேகிக்கப்படும் குறித்த யுவதி முல்லைத்தீவைச் சேர்ந்தவரென விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர் மீதான மேலதிக விசாரணைகளை விசேட பொலிஸ் குழுவொன்று தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

சீமான் பேசியதில் தவறில்லை அவரை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இயக்குனர் சீமானை ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் சந்தித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இருவரும் சீமானை சந்தித்து பேசினர். பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கைத் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சே அரசை எதிர்த்து குரல் கொடுத்ததற்காக இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டார். இலங்கை தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசு நமது கடல் எல்லையில் தமிழக மீனவர்களையும் கொடுமைப்படுத்தியதையே சீமான் தட்டிக் கேட்டார். சீமான் பேசியதில் தவறு எதுவும் இல்லை.அண்ணா பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போரை பொது மன்னிப்பு மூலம் விடுவிக்க வேண்டும். அதே போல், பரோலில் சென்று தாமதமாக சிறை திரும்பியவர்களுக்குப் பொதுமன்னிப்பு கிடையாது எனும் மனிதாபிமானமற்ற நிலையை அரசு கைவிட வேண்டும். சிறையில் இருப்பவர், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தால் பரோல் கிடையாது என்பதும் மனிதாபிமானமற்ற போக்கு. சீமானை அரசு விடுவிக்க வேண்டும் என்று வைகோ கூறினார்.

07 செப்டம்பர் 2010

சரத் ஆதரவு படையதிகாரி இலங்கையை விட்டு ஓட்டம்..

சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய என்ற முன்னாள் இராணுவ அதிகாரி விசாரணைக்கு முகம் கொடுக்காமல் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது மேஜர் ஜெனரல் அசோக தோரதெனிய ஆயுத தளபாடப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர்.
இவரே ஆயுத தளபாடக் கொள்வனவுகள் மற்றும் படையினருக்குத் தேவையான ஆயுததளபாடங்கள் பற்றிய மதிப்பீடுகளை மேற்கொண்டு வந்தார்.
இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இவர் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டதும் அவருக்கு நெருக்கமானவராக இருந்த மேஜர் ஜெனரல் தோரதெனியவும் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதக்கொள்வனவு முறைகேடுகள் பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தில் இவரை முன்னிலையாகும்படி கடந்த வாரம் அழைப்பு விடுக்கப்பட்டது.
இவரைச் சந்தித்து அழைப்பைக் கொடுப்பதற்காக ஒரு இராணுவ காவல்துறை அதிகாரி சென்றிருந்தார்.
ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. இதனால் அந்த அழைப்புக் கடிதத்தை அவரது வீட்டுச் சுவரில் ஒட்டிவிட்டு வந்தார்.
தற்போது அவர் சிறிலங்காவை விட்டு வெளியேறியுள்ளது தெரியவந்துள்ளது. அவர் சிங்கப்பூர் விமானம் ஒன்றில் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பூலித்தேவன் மீது ஆணையிட்டுச்சொல்கிறேன் பிரபாகரன் வருவார்.


நெல்லை மாவட்டம் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் விடுதலைப்போராட்ட வீரர் புலித்தேவனின் 295வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன், நடிகர் கருணாஸ்,சசிகலா கணவர் எம்.நடராஜன் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
புலித்தேவர் அறக்கட்டளை தலைவர் ம.நடராஜன் பேசும் போது,
’’ஈழத்தில் தமிழர்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இங்கிருப்பவர்களோ கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட ஆட்சி தேவையா? ஆட்சிக்கு யார் வருவது என்பது முக்கியமல்ல. யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம். எனவே அனைவரையும் ஒற்றுமையாக இருந்து இந்த ஆட்சியை தோற்கடிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
பழ.நெடுமாறன், ‘’பூலித்தேவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். பிரபாகரன் மீண்டும் வருவார். இயக்கத்திற்கு தலைமையேற்று வழிநடத்துவார்.