16 அக்டோபர் 2011

கருணாவின் மிரட்டலால் ஆடிப்போன இமெல்டா!

பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபர் தொடர்பான கருத்துக்களை ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்திவிட்டதாக அந்தர் பல்டி அடித்துவிட்டார் அரச அதிபர் இமெல்டா சுகுமார். பிரதி அமைச்சர் கருணாவினூடாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையடுத்தே தனது கடும் போக்கிலிருந்து அரச அதிபர் பின்வாங்கியுள்ளதாக செயலக அதிகாரிகள் கூறுகின்றனர்.
"பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை ஆசிரிய மாணவிகள் பாலியல் நுகர் பொருளாகப் பார்க்கப்படுகின்றனர் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தேனே தவிர பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபரினால் ஆசிரிய மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக நான் கூறவில்லை" என யாழ் அரச அதிபர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
தனக்கு கிடைக்கப்பெற்ற குறித்த கடிதத்தில் அதிபரின் சிரிப்பு, பேச்சு, செயற்பாடுகள் அனைத்தும் பெண்களைப் பாலியல் நுகர் பொருளாகவே பார்க்கப்படுகின்றது என குறிப்பிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பக்க நியாயத்தினை மட்டும் பார்த்து தீர்வு வழங்க முடியாது. பரிசீலனை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுடன் ஆராய்ந்து தீர்வு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் கலாசாலை அதிபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவே முடிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளில் குழப்பம் இருப்பின் அதனை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அல்லது இது தொடர்பாக கல்வித் திணைக்களங்கள் ஊடாக எனக்கு அறியப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு உரிய பதிலை நான் வழங்கியிருப்பேன். என்னை வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஜி.எல்.பீரிசின் ஊடகவியலாளர் சந்திப்பை புறக்கணித்தனர் பிரான்ஸ் ஊடகவியலாளர்கள்!

பிரான்சுக்கு கடந்த புதன் கிழமை விஜயம் செய்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அங்குள்ள இலங்கை தூதரகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பை பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் புறக்கணித்துள்ளனர். இதனால், அந்த ஊடகவயலாளர் சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டது.
12 ஊடக நிறுவனங்களுக்கு, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஒரே ஒரு ஊடகவியலாளர் மாத்திரமே கலந்துக்கொண்டார்.
பிரான்ஸ் சென்றிருந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதியின் வெளிவிவகார ஆலோசகர் ஆகியோரை சந்தித்ததுடன் கடந்த வெள்ளிக் கிழமை இலங்கை திரும்பினார்.

15 அக்டோபர் 2011

வல்வெட்டித்துறையில் புத்தவிகாரை தடுக்குமாறு சிவாஜிலிங்கம் வேண்டுகோள்!

வல்வெட்டித்துறை நகரப்பகுதியினில் படைத்தரப்பால் அமைக்கப்பட்டுவரும் புதிய விகாரைக்கான பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான கே.சிவாஜிலிங்கம் வத்திக்கானுக்கு அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.
வரலாற்றுப்பெருமை மிக்கதும் மூன்று நூற்றாண்டுகளை கடந்ததுமான வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் தேவாலயத்தின் முன்பதாகவே இவ்விகாரை அமைக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஒரிரு தினங்களாக படையினர் முழுவீச்சினில் இந்நிர்மாணப் பணிகளினில் ஈடுபட்டுவருகின்ற நிலையிலேயே கே.சிவாஜிலிங்கம் வத்திக்கானுக்கு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
1996ம் ஆண்டு யாழ்.குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்டது முதல் வல்வெட்டித்தறை சந்தியிலுளள பொதுமக்களுக்குச் சொந்தமான குடியிருப்புக்கள் பலவற்றையும் ஆக்கிரமித்து படையினர் முகாமிட்டுள்ளனர். யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசு கூறி இரண்டு வருடங்கள் கடந்து விட்ட போதும் இம்முகாம்கள் எவற்றையும் மூடிவிட படைத்தரப்பு மறுத்தே வருகின்றது.
யாழ்-பருத்தித்துறை வீதி பருத்தித்துறை-தொண்டமனாறு வீதி ஆகியவை சந்திக்கும் வல்வெட்டித்துறை சந்தியினிலேயே படையினர் முகாமிட்டுள்ளனர். இம்முகாமினுள் ஏற்கனவே விகாரை ஒன்றை அமைத்திருக்கும் படையினர் தற்போது முகாமிற்கு வெளியே புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு முன்பதாக வீதியோரமாக மற்றொரு விகாரையொன்றினை அமைத்து வருகின்றனர். திட்டமிட்ட வகையினில் அமைக்கப்பட்டுவரும் இவ்விகாரைக்கே கே.சிவாஜிலிங்கம் தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
இவ்விகாரை அமைப்பு வேலைகளை தடுத்து நிறுத்துமாறு வல்வெட்டித்தறை நகர சபை தலைவரிடமும் யாழ்.ஆயர் அதி வண தோமஸ் சௌந்திரநாயகத்திடமும் நாளை நேரில் சந்தித்து வேண்டுகோள்களை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். குறிப்பாக வல்வெட்டித்தறை நகர சபை விகாரைக்கான கட்டுமானப்பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த உத்தரவு பிறப்பிக்கவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லியாம் பொக்ஸின் இடத்திற்கு பிலிப் ஹேமண்ட் நியமனம்!

கடந்த ஒரு வார காலமாக பாதுகாப்பு செயலாளருக்கும், அவரின் தனிப்பட்ட ஆலோசகர் அடம் வெரிற்றிக்கும் உள்ள தொடர்பு குறித்து சர்வதேச ஊடகங்கள் சர்ச்சையினைக் கிளப்பியிருந்தன. இதனைத் தொடர்ந்து பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் தமது பதவியில் இருந்து விலகினார்.
ராஜதந்திர முறையிலான பல்வேறு சந்திப்புக்களின் போது, லியம் பொக்ஸ், அடம் வெரிற்றியையும் தன்னுடன் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.ராஜதந்திர அந்தஸ்து இல்லாத நிலையிலும், அடம் வெரிற்றி, பாதுகாப்பு செயலாளருடன் 18 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லியம் வொக்ஸ் அண்மையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரை இலங்கையில் சந்தித்த போதும் கூட அடம் வெரிற்றி அங்கு பிரசன்னமாகியிருந்தமை குறித்து சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
இந்த நிலையில், பிரித்தானிய பாதுகாப்பு செயலர் லியம் பொக்ஸ் தாம், பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனுக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, லியம் வொக்ஸ்ஸுக்கு பதிலாக பிரித்தானியாவிற்கான புதிய ராணுவ அமைச்சராக பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.லியம் வொக்ஸ்ஸின் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் டேவிட் கேமரூன் அவரின் உண்மையான விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
லியம் வொக்ஸ்ன் விலகலுக்கு பின்னர் புதிய செயலாளராக 55 வயதாகும் பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் கூட்டணி கட்சிகளின் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 97-ல் முதல்முறையாக பிரித்தானிய நாடாளுமன்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து வர்த்தகதுறை, உற்பத்திதுறை மற்றும் இயற்கை எண்ணெய், எரிவாயு, நிர்மாணப் பணிகள் துறைகளில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

14 அக்டோபர் 2011

மகிந்தவிற்கெதிரான அழைப்பாணை தமிழ் நெற்றில் போட நீதிமன்று உத்தரவு!

அமெரிக்காவில் மகிந்தர் மீது போடப்பட்ட வெவ்வேறு வழக்குகள் இருக்கிறது. இதில் சட்டவல்லுனராகச் செயல்படும் திரு புரூஸ் பெஃயின் அவர்கள் தொடுத்த வழக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மகிந்தருக்கு எதிராக டாக்ட்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். இவ்வழக்கிற்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மகிந்தர் மறுத்து, அனுப்பப்பட்ட அனைத்து கடிதங்களையும் வழமைபோல திருப்பி அனுப்பியது அலரி மாளிகை. எனவே இந்த அழைப்பாணையை அவருக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது அமெரிக்க சட்டவரைபில் குற்றஞ்சாட்டப்பட்டவர் இந்த வழக்கு குறித்து நிச்சயம் அறிந்திருக்கவேண்டும் என்பது அவசியமாகும்.
அழைப்பாணையை அனுப்புவதன் மூலமோ இல்லை கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலமோ குற்றஞ்சாட்டப்படும் நபர் தனக்கு எதிராக நீதிமன்றில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதை அறியவேண்டும். எனவே தற்போது சட்ட வல்லுனரான திரு புரூஸ் பெஃயின் அவர்கள் இலங்கையில் இருந்து வெளிவரும் 2 பத்திரிகையில் முதல் பக்கத்தில் மகிந்தருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அழைப்பாணையை விளம்பரமாக பிரசுரிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாது நீதிமன்ற அனுமதியோடு அதனை தமிழ் நெட் இணையத்திலும் பிரசுரிக்க அவர் ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தரவை வழங்கியுள்ளது.
எனவே மகிந்தருக்கு எதிரான அழைப்பாணையை தமிழ் நெட் இணையமும் இலங்கையில் இருந்து வெளியாகும் 2 பத்திரிகைகளும் பிரசுரிக்கின்றன. இதன் மூலம் மகிந்தருக்கு உத்தியோகபூர்வமாக அவர் மேல் அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற செய்தி சென்றடையும் என நம்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மகிந்தர் தனது பக்க நிலையை தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயம் தோன்றும். அதற்குமேலும் அவர் மெளனமாக இருக்க முடியாது. அப்படி அவர் இருந்தால் மேற்கொண்டு பல பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். திறமையாக வாதாடியும் பல வித்தியாசமான கோணங்களில் சிந்தித்தும் இந்த வழக்கை திறம்பட நகர்த்திவரும் சட்டவல்லுனர் திரு புரூஸ் பெஃயின் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

பதுமனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

திருகோணமலை பாலம்பட்டாறு பிரதேசத்தின் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதனை எதிர்வரும் 29 திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி எஸ் தைகேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான கால பகுதியில் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியமை, இராணுவத்தினரை கொலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதுமன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

புலிகளிடம் பணம் பெற்றுகொண்டு சில ஊடகங்கள் எமக்கு பிடியாணையை அனுப்புகின்றன என்கிறார் மகிந்த!

புலிகளிடம் பணத்தை எடுத்துக்கொண்டு செயற்படும் பத்திரிகைகள் ஊடாகவே செய்யாத குற்றத்திற்காக எனக்குப் பிடியாணை அனுப்பப்படுகிறது. இறுதிப் போரில் பெருமளவில் சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் எனக் கூறுவதை ஏற்க முடியாது. சிவிலியன்களை நாம் கொல்வதாக இருந்தால், இறுதிநேரத்தில் எவ்வாறு ஒன்றரை இலட்சம் சிவிலியன்கள் பாதுகாப்பாக எமது பக்கம் வந்திருப்பார்கள்? இவ்வாறு நேற்று கேள்வி எழுப்பினார் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
பத்திரிகை ஆசிரியர்களை நேற்றுக்காலை அலரிமாளிகையில் சந்தித்தபோதே மகிந்த மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
இறுதிச் சண்டையின்போது நாம் மனிதாபிமான நடவடிக்கைகளையே மேற்கொண்டோம். சிலர் இதையும் தவறு என்கின்றனர். இது தவறு என்றால், அதனையும் நாம் ஏற்கிறோம். சிவிலியன்கள் உயிரிழப்புகள் குறித்து எம்மீது குற்றஞ்சாட்டுவதை ஏற்கமுடியாது.
புலிகளுடன் இணைந்து சண்டையில் ஈடுபட்ட ரமேஷின் மனைவியே எமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளார். சிவிலியன்களை நாம் கொன்றிருந்தால் ஒன்றரை இலட்சம் பேர் எமது பக்கத்திற்கு வருவார்களா?.இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எமது தரப்பிலிருந்து இப்போது பதிலளிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறோம்.
இப்போதெல்லாம் ஊடகங்கள் ஊடாகத்தான் எமக்குப் பிடியாணை அனுப்புகின்றனர். எமது கையில் கொடுக்காமல் இவற்றை பத்திரிகைகளின் ஊடாக அனுப்புகின்றனர். புலிகளின் பணத்தை எடுத்துக்கொண்டு செயற்படும் பத்திரிகைகளே இவ்வாறான பிடியாணைகளை அனுப்புகின்றன என்றார் மகிந்த ராஜபக்ஷ.

13 அக்டோபர் 2011

தமிழர்களுக்கு எதிராக வசைபாடும் கேடுகெட்ட ராஜேஸ்வரி!

நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் இலங்கை அரசானது தனது வீடியோவை எம்.பீக்களுக்கு போட்டுக் காட்டியது. இது சனல் 4 தயாரித்து வெளியிட்ட ஆவணப்படத்தை எதிர்த்து இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும். சுமார் 150 சிங்களவர்கள் அங்கே இருந்தபோதும் 3 தமிழர்கள் மட்டுமே அங்கே இலங்கை அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டனர். மற்றுமொரு தமிழ் பெண்மணியான ராஜேஸ்வரி என்பவர் எழுந்து தான் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பேசுவதாகவும் ஒரு தமிழ் தாயாக நான் கேட்க்கிறேன் சனல் 4 கொலைக்களம் போன்ற ஆவணப்படங்களை இனி வெளியிடக்கூடாது என்றார். சனல் 4 கொலைக்களத்தை ஆவணப்படமாக்கிய பெண் டரைக்டர் அங்கே உட்காந்திருந்தார்.
அவரைப் பார்த்து இலங்கையில் மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவே நீங்கள் இதுபோல ஆவணப்படங்களை வெளியிடுகிறீர்கள் என்று திருமதி ராஜேஸ்வரி சாடினார். கேடுகெட்ட பிரபாகரனால் தான் எமது பிள்ளைகள் பலர் இறந்தனர் என எமது தேசிய தலைவரை அவமதித்து மிகவும் தரைக்குறைவாக அவர் பேசினார். உடனே சிங்களவர்கள் அதனை கைதட்டி ஆராவாரப்படுத்தினர். தொடர்ந்து அவர்பேச சுமார் 7 நிமிடங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டது. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் இனிவேண்டாம், தமிழர்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று சனல் 4 டரைக்டரைப் பார்த்து அவர் உரக்கக் கத்தினார்.
தான் ஏதோ பிரித்தானியாவில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக ஒலிப்பதாக அவர் பேச்சு அமைந்திருந்தது. இவர் இலங்கை அரசின் கைக்கூலி என்பது பலருக்கும் தெரிந்த விடையம். சமீபத்தில் தீபம் தொலைக்காட்சிக்கு இவர் ஒரு பேட்டிகொடுக்கப்போய், இலங்கை அரசைப் பற்றி நல்லமாதிரிக் கதைத்து பொதுமக்களிடம் தொலைபேசிவாயிலாக வாங்கிக்கட்டியது சிலருக்கு ஞாபகம் இருக்கும். அந் நிகழ்ச்சியின் முடிவில் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய சபா நாவலன் மீது மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றினார் திருமதி ராஜேஸ்வரி. பின்னர் படுகெட்ட வார்த்தைகளாலும் அவர் சபா நவலனைத் திட்டித் தீர்த்தார் என்பது நிகழ்ச்சிக்குப் பின் நடந்த வெளிவராத நிகழ்வு.
இவரைப் போன்ற இலங்கை அரசின் அடிவருடிகளை சமுதாயத்தில் முன்னணியில் உள்ளோர் ஏன் தமது கூட்டங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளை எதிர்த்துப் பேசினால் கூடப் பரவாயில்லை அவர் அதற்கு எதிரானவர் என்று சொல்லாம். ஆனால் தமிழர்கள் பிழைவிட்டுவிட்டார்கள் என்றுகூற இவர் யார் ? மக்கள் தான் முடிவெடுக்கவேண்டும்.

ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக் குழுவிற்கு புலிகளின் ஆதரவாளர்கள் நிதியுதவி வழங்குகிறார்களா என விசாரணை!

ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு தலைவராகக் கருதப்படும் பிரேம்குமார் குணரட்னத்திற்கு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் நிதி உதவி வழங்குகின்றார்களா என புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள் பிரேம்குமாருக்கு பண உதவிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடா மற்றும் ஸ்கென்டினேவிய நாடுகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் ஜே.வி.பி கிளர்ச்சிக் குழுவிற்கு பணம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு உறுப்பினர்களான திமுத்து அட்டிகால்ல மற்றும் வருண ராஜபக்ஷ ஆகியோரின் வங்கிக் கணக்குகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 19ம் திகதி ஜே.வி.பியில் பிளவு ஏற்பட்டது முதல் இதுவரையில் கிளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் 6 மில்லியன் ரூபா பிரச்சாரத்திற்காக செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரச்சாரப் பணிகளுக்காக ஆறு மில்லியன் ரூபா செலவிட்டதாக கிளர்ச்சி குழு ஒப்புக் கொண்டுள்ளது. ஜே.வி.பிக்கு நிதி உதவிகளை வழங்கி முக்கியஸ்தர்கள் தற்போது கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும், இனமத மொழி பேதமின்றி சிலர் உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் தொலைபேசி இலக்கங்களை சிங்களத்துக்கு வழங்கியது சுவிஸ்!

ஐரோப்பாவின் அமைதியான, ஜனனாயக பண்புகளை மதிக்கும் நடு நிலையான நாடு என தன்னை மார்தட்டிக்கூறிக்கொள்ளும் சுவிஸ் அரசாங்கம். சட்டவிரோதமாக தொலைபேசி இலக்கங்களை பரிமாறியுள்ளது.
மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தபப்ட்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒரு போர்க்குற்றவாளியூடாகவே தமிழர்களின் இலக்கங்கள் பரிமாறப்பட்டுள்ளன.
2010 காலப்பகுதியில் 235 வரையான தொலைபேசி இலக்கங்கள் உட்பட்ட விபரங்கள் ஜெகத் டயஸ் ஊடாக வழங்கப்பட்டிருக்கின்றது என சுசிஸ் தொலைக்காட்சி கூறியுள்ளது. சுவிசில் இருந்து தாயகத்தில் இவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளார்கள். புலி ஆதரவாளர்கள் என நம்பப்பட்டு இவர்கள் கடத்தல், கப்பம், கொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் சட்டத்தரணி மாக்ஸ் கூறுகையில் இது ஒரு சட்டவிரோத நடவடிக்கை என கூறியுள்ளார். மேலும் பீதிக்குள்ளாகும் சமூகங்களை காக்கும் அமைப்பின் இணைப்பாளர் அஞ்சலா மற்றி இது பற்றி கூறுகையில் சிறிலங்காவில் விடுதலைப்புலி ஆதரவாளர்களை கொல்வதற்கு இந்த செயல் பயன்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

இலங்கை இராணுவம் போன்று செயற்படக்கூடிய இராணுவம் உலகில் வேறெங்கும் இல்லை என்கிறார் கோத்தபாய!

இலங்கை இராணுவத்தினருக்கு சர்வதேசத்தில் பாரிய அச்சுறுத்தல்கள் உள்ளன. இதற்கு அரசியல் உள் நோக்கங்களே பிரதான காரணமாகும். இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களை இராணுவத்தினர் கொலை செய்ததாகக் கூறும் குற்றச்சாட்டானது சர்வதேசத்தின் சோடிக்கப்பட்ட கதையாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டிற்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்நாட்டிலிருந்தும் உதவி ஒத்தாசைகள் வழங்கப்படுகின்றது. எவ்வாறாயினும் எதிரிகளுக்கு அடி பணியாத கொள்கையுடன் சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவத்தின் ஊடுருவி தாக்கும் விசேட படையணி தொடர்பான நூல் வெளியீட்டு விழா நேற்று புதன்கிழமை பத்தரமுல்லை வோட்டர் எஞ் ஹோட்டலில் நடைபெற்றது.
இங்கு உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் அரசியல் மற்றும் இராணுவ தலைவர்கள் உட்பட ஏனைய பிரமுகர்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையே அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் காணப்பட்டது. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இடத்தில் அவர்கள் சுதந்திரமாக நடமாடினார்கள். பிரபாகரன் கூட எவ்விதமான அச்சுறுத்தலும் இன்றி அவர்களது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உலா வந்தார்.
ஆனால் இந்த சுதந்திரம் எமக்கு காணப்படவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் சிறு குழுக்களாக ஆழ ஊடுருவி எதிரிகளை தாக்கியழிக்கும் விசேட படையணியை இராணுவம் ஸ்தாபித்தது. இந்த படையணியின் நடவடிக்கைகளுக்கு அஞ்சி பிரபாகரன் “”பதுங்கு குழியை விட்டுக் கூட வெளியே வராத நிலை ஏற்பட்டது. சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும் வடக்கில் விசேட படையணியின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு புலிகள் வலியுறுத்தி வந்தனர்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் முப்பது ஆண்டு கால யுத்தத்தை மூன்று வருடம் என்ற குறுகிய காலத்திற்குள் முடிவிற்கு கொண்டு வந்தோம். கடந்த கால அனுபவங்களைக் கொண்டு முறையாக போர் வியூகங்களை அமைத்து எதிரிகளுக்கு பதிலடி கொடுத்தோம். புலிகள் பின்னடைவுகளை சந்தித்து வருகையில் அரசியல், இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் நெருக்கடிகளைக் கொடுத்து போரை நிறுத்த சர்வதேசம் முற்பட்டது.
இதற்கும் அனுபவ ரீதியாக முகம் கொடுத்து சவால்களை வெற்றி கொண்டோம். இலங்கை இராணுவத்தைப் போன்று எந்த சூழலிலும் செயற்படக் கூடிய வேறு இராணுவம் உலகத்தில் எங்கேயும் இல்லை. பூரணமான நிபுணத்துவம் அடைந்த இலங்கை இராணுவத்தை இழிவுபடுத்தாது அனுபவங்களைப் பெற்றுக் கொண்டாலே உலக பயங்கரவாத சவாலை எதிர்கொள்ள முடியும்.
ஆனால் இன்று இலங்கை இராணுவத்திற்கு சர்வதேசத்தில் அச்சுறுத்தலான சூழலே காணப்படுகின்றது. மனிதாபிமான நடவடிக்கையின் போது பொது மக்களை படுகொலை செய்ததாக சர்வதேசம், எம் மீது குற்றம் சுமத்துகின்றது. இதனை ஒப்புவிக்க போலிக் சாட்சிகளையும் ஆதாரங்களையும் கூட தயாரித்துள்ளது. இந்த சவாலையும் அரசாங்கம் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளும்.
பொதுமக்கள் இச் சூழலை புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இலங்கைக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுகளுக்கு உள்நாட்டிலிருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்காலிக நலனுக்காக நாட்டை காட்டிக் கொடுப்பவர்களும் உள்ளார்கள். ஆனால் உலக நாடுகளில் இராணுவத் தளபதிகள் எமக்கு ஆதரவளிக்கின்றனர். அரசியல் ரீதியாக குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றமையால் அவர்களாலும் ஒன்றும் கூற முடிவதில்லை என்றார்.

12 அக்டோபர் 2011

ஜெர்மனியில் கைதான தமிழ் செயற்பாட்டாளர்கள் விடுதலை!

யேர்மனியில் கடந்த 2009 ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டிருந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் பலகட்ட விசாரணைகளை அடுத்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த போதும் தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூறி பல கட்ட நீதிமன்ற விசாரணையை அடுத்து இன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியையும் உச்சாகத்தையும் கொடுத்துள்ளது.

இராஜதந்திரிகளுக்கான வரப்பிரசாதம் சவேந்திர சில்வாவிற்கு கிடையாது!

இராஜதந்திரிகளுக்கான விடுபாட்டுரிமை சவேந்திர சில்வாவிற்குக் கிடையாது என்று அமெரிக்க சட்டவாளர்கள் திரும்பவும் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சவேந்திர சில்வா தொடர்பில் அவரது வழக்கில் இருந்து இராஜதந்திரிகளுக்கான சலுகைகள் பாதுகாக்கும் என கூறியதாக சிறிலங்கா அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
இது தொடர்பில் அமெரிக்க சட்டவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பொதுவான உரிமை பற்றியே நீதிமன்றத்திற்கு அறிவித்ததே ஒழிய அந்த இராஜதந்திரிகளுக்கான உரிமைகள் சவேந்திர சில்வாவை பாதுகாக்கும் என கூறவில்லை மாறாக அப்படி கூறவும் அவர்களால் முடியாது. அது தொடர்பில் நீதிமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும்.
ஆனால் நீதிமன்றங்கள் சவேந்திர சில்வா வழக்கு போன்றதொரு வழக்கை முன்னர் நடத்தியுள்ளது. அந்த வழக்கில் இராஜதந்திரிகளுக்கான சலுகைகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட வெளி நாட்டு பிரஜை ஒருவருக்கு பொருந்தாது என தீர்ப்பளித்துள்ளது.
மேலும் வெளி நாட்டு இராஜதந்திரிகளுக்கான சலுகைகளானது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட ஒரு வெளி நாட்டு அரச அதிகாரிக்கு பொருந்தாது என அந்த தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆகவே சவேந்திர சில்வாவின் வழக்கிற்கும் இது பொருந்தும என்றும் அமெரிக்க சட்டவாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜே.வி.பி.கிளர்ச்சிக்குழு பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பு!

ஜே.வி.பியின் கிளர்ச்சி அணியினருக்கு உள்ளக ரீதியாக ரகசியமான தலைமைத்துவத்தை வழங்கி வரும், பிரேம்குமார் குணரட்னம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி திருகோணமலை சீனக்குடா பிரதேசத்தில் வைத்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தரப்பினருடன் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹபரணை, மட்டக்களப்பு, வாகரை ஊடாக கறுப்பு நிற டொல்பின் வேன் ஒன்றில், திருகோணமலை சென்ற குணரட்னம், சுழியோடியாக தொழில்புரியும் ஒருவரின் நண்பரின் வீட்டில் உணவை உடக்கொண்டுள்ளார்.
இதன் பின்னர், பிரேமகுமார் தரப்பை சேர்ந்த ஜே.வி.பியின் சுசந்த என்பவரின் வீட்டில், பிள்ளையானின் செயலாளரான சீலன் என்பவருடன் மிக நீண்ட நேரம் கலந்துரையாடி விட்டு, பின்னர், சீலன் சென்ற காரில் ஏறி, குணரட்னம் புறப்பட்டுச் சென்றுள்ளார். குணரட்னம் சென்ற வேன் கொழும்புக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குணரட்னம், பிள்ளையான் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் யாருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
அதேவேளை சீலன் என்பவர் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய குழுக்களை வழி நடத்தி வந்துள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு தரப்பினர், அவர் இந்திய புலனாய்வு பிரிவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் கூறிவருகின்றனர். பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் தொடர்புடைய சகல செயற்பாடுகளுடனும், சீலன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி அதாவது, குணரட்னம், சந்தித்ததற்கு இரண்டு தினங்களுக்கு பின்னர், குணரட்னம் தரப்பை சேர்ந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் உந்துல் பிரேமரட்ன, ஜே.வி.பியின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் மாலன் மற்றும் குணரட்னம் தரப்பின் திருகோணமலை பொறுப்பாளராக செயற்பட்டு வரும் நபர் ஒருவரும், சீலனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் இலங்கையின் கொலைக்களம் காணொளி இன்று வெளியிடப்படுகிறது!

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் எனும் ஆவணப்படம் இன்று காட்சிப்படுத்தப்படவுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று நண்பகல் ஒரு மணிக்கு இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்படுவதைத் தொடர்ந்து குழுநிலை விவாதமும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகிய அரச சார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தபடவுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரம் வரையிலான பொதுமக்களின் படுகொலைகளைத் தடுப்பதில் சர்வதேச சமூகம் தவறியமை குறித்து பாரதூரமான கேள்விகளை இந்த ஆவணப்படம் எழுப்புவதாக இந்நிகழ்வு குறித்து வெளியிடப்பட்ட அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நியூசிலாந்து, நோர்வே ஆகிய நாடாளுமன்றங்களில் ஏற்கெனவே காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அத்துடன் நியூயோர்க்கிலும் ஜெனிவாவிலும் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்களிலும் இந்த ஆவணப் படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் தொலைக்காட்சி சேவைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இந்த ஆவணப்படத்திற்கு எதிராக பாதுகாப்பு அமைச்சு தயாரித்த ‘லைஸ் அக்ரி அப்போன்’ எனும் வீடியோ இன்று மாலை 5மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் அலுவலகம் அமைந்திருக்கும் போர்ட்கல்லிஸ் ஹவுஸில் ஒளிபரப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் அரசாங்கத்தின் தரப்பில் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

11 அக்டோபர் 2011

புலிகள் பற்றிய அறிக்கை தவறென நிராகரித்தது அமெரிக்கா!

விடுதலைப் புலிகள் பேரழிவு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான 'றெட் மேர்க்குரி' இரசாயனத்தை அமெரிக்காவில் கொள்வனவு செய்ய முயற்சித்ததாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கொடுத்த அறிக்கையை நம்பகமற்றது என்று அமெரிக்கா நிராகரித்தாக விக்கிலீக்ஸ் தகவல்கள் கூறுகின்றன. 2006 ஜுலை 27ம் நாள் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பாலிக்ககார, விடுதலைப் புலிகளிடம் இராசாயன அயுதங்கள் இருப்பது பற்றிய, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆவணம் ஒன்றை கொழும்பில் இருந்த அமெரிக்க பதில் தூதுவரிடம் கையளித்தார்.
இந்த அறிக்கை சிறிலங்கா அரசுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதன் அடிப்படையில் சிறிலங்காவுக்குத் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதற்கு பதில் தூதுவராக இருந்த ஜேம்ஸ் என்ட்விசில், அந்த ஆவணத்தை வொசிங்டனுக்கு அனுப்பி அதன் பதிலைப் பெற்றுத் தருவதாக கூறியிருந்தார்.
பேரழிவு ஆயுதங்களை தயாரிக்கப் பயன்படும் 'றெட்மேக்குரி' என்ற இரசாயனப்பொருளைக் கொள்வனவு செய்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சித்துள்ளதாக நம்பகமாக தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அணுகுண்டுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தக் கூடிய ஒரு அரைப் புராணப் பொருளே றெட்மேர்க்குரி என்றும் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தை சிறலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை ஆதாரம் காட்டியிருந்தது.
இது மரபுரீதியாகப் பயன்படுத்தப்படும் சக்திவாய்ந்த வெடிபொருளே என்றும், இதனை சிறிய அல்லது எளிதில் காவிச் செல்லக் கூடிய குண்டுகளுடன் இணைத்து பேரழிவு ஆயுதமாகப் பயன்படுத்த முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
2002ம் ஆண்டின் முதலாவது காலாண்டில் கொழும்பில் விஜேராம மாவத்தையில் சதொசவுக்கு அருகில் உள்ள ஆய்வு மற்றும் கருவிகள் முகவர் நிறுவனம் ஒன்றிடம் விடுதலைப் புலிகள் இந்த இரசாயனம் குறித்து விசாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதேகாலப் பகுதியில் தமது அனைத்துலக ஆயுத முகவர்களின் மூலம் விடுதலைப் புலிகள் இந்த இரசாயனப் பொருளைக் கொள்வனவு செய்ய முயற்சித்ததாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆவணத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த இரசாயனப் பொருளை உற்பத்தி செய்யும் நிறுவனம் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியது. ஹேர்குலிஸ் கெமிக்கல் கொம்பனி லிமிட்டெட் என்ற அந்த நிறுவனத்தின் முகவரியும் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் கடந்த சில ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் தமது சில போராளிகளை அனைத்துலக அளவில் நடைபெறும் அணுவாயுதப் போர்முறை பற்றிய கருதரங்குகளுக்கு அனுப்பி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
லண்டனில் ஹற்றன் என்ற இடத்தில் 2001 செப்ரெம்பர் 30 தொடக்கம் நவம்பர் 1 வரை நடைபெற்ற எஸ்.எம்.ஐ பாதுகாப்பு கருத்தரங்கிலும் புலிகளின் போராளிகள் பங்குபற்றியதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்தக் கருத்தரங்கில் அணுவாயுதப் போர்முறை பற்றியும் ஆராயப்பட்டதாகவும், போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகள் அணுவாயுதப் போர்முறையுடன் தொடர்புடைய நூல்களை குறிப்பிட்டதக்களவில் கொள்வனவு செய்துள்ளதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டிருந்தது.
கவனத்துக்குரிய உணர்வுபூர்வமான இந்தத் தகவல்களின் அடிப்படையில், விடுதலைப் புலிகளுக்கு இரசாயன ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுப்பதற்கு பொருத்தமான அனைத்துலக சமூகத்தை நாட வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு பரிந்துரை செய்வதாகவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்த ஆவணத்தை 2006 ஜுலை 31ம் நாள் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வொசிங்டனுக்கு அனுப்பியதாக விக்கிலீக்ஸ் தகவல் கூறியுள்ளது. இதையடுத்து 2006 ஓகஸ்ட் 15ம் நாள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இருந்து, அப்போதைய இராஜாங்கச் செயலர் கொன்டலிசா ரைஸ் கொழும்புக்கு அனுப்பிய பதிலையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
'றெட்மேர்க்குரி'யை பேரழிவு ஆயுதங்களாக வழக்கமான வெடிபொருள் அல்லது வேறு ஆயுதங்களில் இணைத்துப் பயன்படுத்த முடியாது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
றெட்மேர்க்குரியை பேரழிவு ஆயுதமாகப் பயன்படுத்தலாம் என்று வொசிங்டனிடம் நம்பகமான தகவல் இல்லை என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முகவரியில் எந்தவொரு இரசாயன நிறுவனமும் இருப்பதை அடையாளம் காண முடியவில்லை என்றும் இதன் அடிப்படையில் அந்த அறிக்கை நம்பகமானது அல்ல என்றும் கொன்டலிசா ரைஸ் கூறியுள்ளார்.
இந்தக் காரணிகளின் அடிப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை நம்பகமானது அல்ல என்றும் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை என்றும் சிறிலங்கா அரசுக்கு கூறுமாறும் அந்த தகவல் பரிமாற்றக் குறிப்பில் கொன்டலிசா ரைஸ் குறிப்பிட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் கூறுகிறது.

தமிழினிக்கு மீண்டும் தடுப்புக் காவல் உத்தரவு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அணித் தலைவியான தமிழினியின் தடுப்புக்காவல் இம்மாதம் 29 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழினி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனைகள் குறித்தும் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளாதாகவும் ஆனால் இதுவரை பதில் கிடைகக்வில்லைஎன குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று நீதிமன்றத்துக்குத் தெரிவித்ததனையடுத்தே இந்தத் தடுப்பக் காவல் நீடிக்கப்பட்டது.
இதற்கு முன்னரும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவ்வாறே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

10 அக்டோபர் 2011

தேர்தல் திணைக்களம் குழம்பவில்லை,இணையங்கள்தான் குழம்பியுள்ளன!

இலங்கையின் தேர்தல் சட்டங்களும் நடைமுறைகளும் அறவே தெரியாத சில தமிழ் இணையத்தளங்கள் தேர்தல் திணைக்களம் விருப்பு வாக்கில் குழப்பமான முடிவை அறிவித்ததாக செய்திகளை வெளியிட்டுள்ளன. ஒரு தமிழ் இணையத்தளம் ஆரம்பத்தில் அச்செய்தியை வெளியிட அதை அறியாத வேறு சில இணையத்தளங்களும் அதனை அப்படியே பிரதிபண்ணி செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளுராட்சி தேர்தல் முறைபற்றி சாதாரண மக்கள் அறிந்து வைத்திருப்பது கூட இவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லை என்பதுதான் பரிதாபத்துக்குரிய விடயம்.
கொழும்பு மாநகரசபை தேர்தலில் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு கொழும்பு மாநகரசபையில் கிடைத்த மொத்த வாக்குகள் 26,229 மட்டுமேயாகும். ஆனால் ஜனாநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசனுக்கு 28,433 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்துவதாக இந்த தமிழ் இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
தேர்தல் திணைக்களம் குழப்பத்தை ஏற்படுத்தவில்லை. தமிழ் இணையத்தளங்களை நடத்துபவர்களுக்குதான் உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பு முறை விளங்காது வாசகர்களை குழப்பியிருக்கிறார்கள். உள்ளுராட்சி தேர்தல் சட்டத்தில் ஒரு வாக்காளர் ஒரு வேட்பாளருக்கு மூன்று வாக்குகளை அளிக்கலாம் என்ற விடயம் தெரியாததால் இந்த தமிழ் இணையத்தளங்கள் தேர்தல் திணைக்களம் குழப்பத்தை ஏற்படுத்துவதாக செய்திகளை வெளியிட்டுள்ளனர். மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு கொழும்பு மாநகரசபையில் 26229 வாக்குகள் கிடைத்திருந்தால் மனோ கணேசனுக்கு 50ஆயிரம் விருப்பு வாக்குகள் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் ஒரு வாக்காளர் ஒரு வேட்பாளருக்கு மூன்று வாக்குகளையும் அளிக்கலாம்.
ஆனால் நாடாளுமன்ற தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றில் அப்படி அல்ல. ஒரு வாக்காளர் ஒரு வேட்பாளருக்கு ஒரு வாக்கை மட்டும்தான் வழங்க முடியும். விரும்பினால் ஏனைய வேட்பாளர்களுக்கும் ஒவ்வொரு வாக்கை வழங்கலாம். குழப்புவது தேர்தல் திணைக்களம் அல்ல- விடயம் தெரியாமல் குழம்பி நிற்பது தமிழ் இணைத்தளங்கள் தான்.

துமிந்தவின் ஆதரவாளர் பாரதலக்ஷ்மன் மீது தாக்குதல் நடத்தினார்!

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் ஆதரவாளர் ஒருவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவரது சாரதி தெரிவித்துள்ளார்.
முல்லேரியா வல்பொல சந்தியில் வைத்து இரு தரப்பினரும் சந்தித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். பயணம் செய்த வாகனங்களை விட்டு கீழே இறங்கிய இரு தரப்பினரும் முதலில் வாக்குவாதம் செய்ததாகவும் பின்னர் துமிந்த சில்வா, பாரத மீது தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
துமிந்த மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக கீழே விழுந்த பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் காலில் துமிந்தவின் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பாரதவின் தலையில் சுடுமாறு சத்தமிடப்பட்டதாகவும் பின்னர் சராமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த பாரதவை ஜீவ் வண்டிக்கு பின்னால் தூக்கிச் செல்ல அவரது மெய்ப்பாதுகாவலர்கள் முயற்சித்தபோது துமிந்தவின் ஆதவரவாளர்கள் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் குறித்த இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளார். எனினும் துமிந்த தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது பாரத தரப்பினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக காவல்துறை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன் போதே துமிந்த சில்வாவின் தலையில் காயம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர மற்றும் துமிந்த சில்வா ஆகிய இருவரினதும் ஆதரவாளர்களிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வாக்கு மூலங்களை பதிவு செய்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கொலன்னாவ பிரதேசத்தில் போதைப் பொருள் வர்த்தகம் இடம்பெற்று வருவதாகவும் அதற்கு பாரத கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்ததாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் போதைப் பொருள் வர்த்தகமும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 5ம் திகதி கொலன்னாவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் போதைப் பொருள் வர்த்தகர்களை இந்த பிரதேசத்தை விட்டு துரத்தியடிக்கப் போவதாக பாரத தெரிவித்திருந்தார்.
கொலன்னாவ பிரதேசத்தில் பாரத கலந்து கொண்ட இறுதிப் பிரச்சாரக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும் போதைப் பொருள் வர்த்தகத்தை வளர விட மாட்டேன் என அவர் பகிரங்க அறைகூவல் விடுத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.

09 அக்டோபர் 2011

சிங்கள படைகளின் ஏற்பாட்டில் யாழில் அரங்கேறிய தமிழ் பெண்களின் குத்தாட்டம்!(காணொளி)

இறுதி யுத்தம் என்ற பெயரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் எம்மினப் பெண்கள் பாலியல் வக்கிரம் கொண்ட சிங்கள இராணுவக் காடையர்களால் கதறக் கதறக் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டது நீங்கள் அறிந்த ஒன்று.
இவ்வாறான இராணுவக் காடேறிகள் முன்னிலையில் குத்தாட்டம் போடுகின்றனர் யாழ்ப்பாண இளம் குமரிகள்.
நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மகிழ்வரங்கு ஒன்று நடைபெற்றது.
முழுக்க முழுக்க இராணுவ மயமாக்கப்பட்ட இம் மகிழ்வரங்கில் தமது பாடல்களுக்கு தமிழ் இளம் குமரிகளை ஆடவிட்டு அழகு பார்த்தது சிங்களம்.
இவ்வாறு ஆடும் தமிழ்ப் பெண்களை இரகசியமான முறையில் தமது வீடியோக் கமராவினால் வித்தியாசமான பதிவுகளைச் செய்தமையையும் காணக் கூடியதாக இருந்தது.
இதேவளை தமது இளம் பெண் பிள்ளைகளை இராணுவக் களியாட்டத்தில் கலந்து கொள்ள விட்டுவிட்டு அருகில் நின்று கைதட்டி உற்சாகப்படுத்தும் பெற்றோர்களை நினைக்கும் போது நெஞ்சு வெடிக்கின்றது.
காலப் போக்கில் கைதட்டிய இரு கைகளாலும் தமது கண்ணீரைத் துடைக்கும் காலம் வெகுவிரைவில் வரும் என்பதை அறியாதிருக்கும் பெற்றோர்களே யாழ்ப்பாணத்தில் அரங்கேறும் அனைத்து கலாசாரச் சீரழிவுகளுக்கும் காரணமானவர்கள் ஆவர்.
இவ்வாறு களியாட்டத்தில் கலந்து கொள்ள விட்டு விட்டு, பின்னர் எனது பிள்ளையை ஏமாற்றி விட்டு கருவையும் சுமக்க விட்டுவிட்டான் என கதறி அழுவதும் நீங்கள்தான்.
எனவே பிள்ளைகளைப் பொறுப்புடன் அவர்களின் இனத்தின், மதத்தின் கலாசாரத்திற்கேற்ப வளர்த்து ஆளாக்குவதை விடுத்து அந்நியனுடன் ஆட விட்டுக் கூத்துப் பார்க்கும் நீங்கள்தான் அவர்கள் தப்பான வழிக்குப் போவதற்குக் காரணம் ஆகின்றீர்கள்.
தமிழினத்தின் தனிநாட்டுக்காக எத்தனையோ இளம் பிள்ளைகள் தங்களின் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய இனத்தில் பிறந்தவர்களா இவர்கள் எனச் சந்தேகப்பட வைக்கின்றது.
தமிழ்த் தேசியத்தின் உணர்வலைகளை அறுக்கும் ஒரு கபட நோக்கத்துடன் சிங்களம் மேற்கொள்ளும் இவ்வாறான நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் புறக்கணிப்பது காலத்தின் தேவையாகும்.
இதேவேளை புலம்பெயர் தேசத்தில் இருந்து தமிழீழம் காணத் துடித்துக் கொண்டிருக்கும் உறவுகளே! யாழ்ப்பாணத்தில் நடக்கும் குத்தாட்டங்களைப் பாருங்கள்.
அங்கிருந்து கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து பலதரப்பட்ட வட்டமேசை மாநாடுகளை நடத்திக் கொண்டிருக்கும் நீங்கள், கனவு காணும் தமிழீழத்தில் தற்போது என்ன நடக்கிறது என்பதை சற்றுத் திரும்பிப் பாருங்கள்.
தமிழிழனத்தை அழிக்க சிங்கள இராணுவம் இலகுவான வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றது. அதனை தடுக்க முயற்சி செய்யுங்கள்.
அதைவிடுத்து நீங்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு பதவிக்காகவும், கௌரவத்திற்காக ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது, தமிழினத்தை அழிக்க சிங்களம் போடும் திட்டத்திற்கு நீங்கள் சல்லாரி போடுவது போன்று இருக்கின்றது.