அரசு வக்கீல் இல்லாவிட்டாலும் ஜாமீன் மனுவை விசாரிக்கலாம் என்ற ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்று கர்நாடக ஹைகோர்ட்டின் சிறப்பு அமர்வு நாளை மீண்டும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை நடத்த உள்ளது.ஜெ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை இன்று காலை கர்நாடக ஹைகோர்ட்டின் விடுமுறைக்கால அமர்வு விசாரித்தது. பின்னர் அடுத்த வாரம் 6ம்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.இதற்கு காரணம், அரசு தரப்பு வக்கீல் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை என்பதுதான். எனவே அடுத்த விசாரணைக்கு முன்பாக அரசு தரப்பு வக்கீலை நியமனம் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஹைகோர்ட், கர்நாடக அரசுக்கு நோட்டீசும் அனுப்பியது.எனவே ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே எடுப்பதற்கு ஒரு வாரம் காலதாமதம் ஆகும் நிலை உருவானது. இதனால் அதிர்ச்சியடைந்த ராம் ஜெத்மலானி, குமார் உள்ளிட்ட ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள், அதிரடியாக ஒரு வேலையை செய்தனர்.அதாவது, சட்ட விதி 389 (1)படி அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த முடியும் என்பதை சுட்டிக் காண்பித்து கர்நாடக ஹைகோர்ட் பதிவாளர் ஜெனரல் பி.என்.தேசாயிடம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 10 வருடங்களுக்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஜாமீனில் வெளியேவிட கோரும்போதுதான், அரசு தரப்பு பதில் தேவை.எனவே ஜெயலலிதா வழக்குக்கு அந்த விதிமுறை பொருந்தாது. அரசு வக்கீல் இல்லாமலேயே, அவசர வழக்காக கருதி நீதிமன்றம் தனது விசாரணையை நடத்த வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பதிவாளர் ஜெனரல் தேசாய், கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் தொடர்பான வழக்கு என்பதை கருத்தில் கொண்ட தலைமை நீதிபதியும், செவ்வாய்க்கிழமை (நாளை) ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு அமர்வு விசாரிக்க உத்தரவிட்டார். அரசு வக்கீல் இல்லாமலேயே ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. நீதிபதி ரத்னகலாதான் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளார். தற்போது உள்ள நிலவரம், சட்ட விவரங்களைப் பார்த்தால், அநேகமாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது.30 செப்டம்பர் 2014
செல்வி ஜெயலலிதா ஜெயராம் நாளை வெளியே வருகிறார்?
அரசு வக்கீல் இல்லாவிட்டாலும் ஜாமீன் மனுவை விசாரிக்கலாம் என்ற ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்று கர்நாடக ஹைகோர்ட்டின் சிறப்பு அமர்வு நாளை மீண்டும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை நடத்த உள்ளது.ஜெ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை இன்று காலை கர்நாடக ஹைகோர்ட்டின் விடுமுறைக்கால அமர்வு விசாரித்தது. பின்னர் அடுத்த வாரம் 6ம்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.இதற்கு காரணம், அரசு தரப்பு வக்கீல் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை என்பதுதான். எனவே அடுத்த விசாரணைக்கு முன்பாக அரசு தரப்பு வக்கீலை நியமனம் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஹைகோர்ட், கர்நாடக அரசுக்கு நோட்டீசும் அனுப்பியது.எனவே ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே எடுப்பதற்கு ஒரு வாரம் காலதாமதம் ஆகும் நிலை உருவானது. இதனால் அதிர்ச்சியடைந்த ராம் ஜெத்மலானி, குமார் உள்ளிட்ட ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள், அதிரடியாக ஒரு வேலையை செய்தனர்.அதாவது, சட்ட விதி 389 (1)படி அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த முடியும் என்பதை சுட்டிக் காண்பித்து கர்நாடக ஹைகோர்ட் பதிவாளர் ஜெனரல் பி.என்.தேசாயிடம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 10 வருடங்களுக்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஜாமீனில் வெளியேவிட கோரும்போதுதான், அரசு தரப்பு பதில் தேவை.எனவே ஜெயலலிதா வழக்குக்கு அந்த விதிமுறை பொருந்தாது. அரசு வக்கீல் இல்லாமலேயே, அவசர வழக்காக கருதி நீதிமன்றம் தனது விசாரணையை நடத்த வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பதிவாளர் ஜெனரல் தேசாய், கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் தொடர்பான வழக்கு என்பதை கருத்தில் கொண்ட தலைமை நீதிபதியும், செவ்வாய்க்கிழமை (நாளை) ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு அமர்வு விசாரிக்க உத்தரவிட்டார். அரசு வக்கீல் இல்லாமலேயே ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. நீதிபதி ரத்னகலாதான் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளார். தற்போது உள்ள நிலவரம், சட்ட விவரங்களைப் பார்த்தால், அநேகமாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது.29 செப்டம்பர் 2014
மகிந்தவின் அமைச்சர்கள் ஐ.தே.கட்சியில் இணையவுள்ளனராம்?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சியில் இணையும் முதல் நடவடிக்கையாக இது இருக்கும் எனவும் மேலும் சுமார் 25 அமைச்சர்கள் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக அந்த தகவல்கள் கூறின. இவர்கள் ராஜபக்ஷவினருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க இணங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை மாத்தளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசிய, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிஹார,அரசாங்கத்தை சேர்ந்த 5 முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக கூறியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியில் ஏற்பட்டு வரும் ஐக்கியம் காரணமாக இவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இது சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடியதாகவும் அலுவிஹார குறிப்பிட்டிருந்தார். எனினும், அவர்களின் பெயர்களை அவர் வெளியிடவில்லை.28 செப்டம்பர் 2014
முதல்வருக்கு எதிரான தீர்ப்பிற்கு ஜெத்மலானி கண்டனம்!
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்கா தீர்ப்பளித்ததற்கு மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா ஜாமீன் கோரி தாக்கல் செய்யும் போது ராம்ஜெத்மலானியே அவருக்காக ஆஜராகி வாதாடக் கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பாக ராம்ஜெத்மலானி கூறியுள்ளதாவது: ஜெயலலிதான மீதான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை அரசியல் எதிரிகள் வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மேன்மை மிக்க வழக்கறிஞர்களால் ஆழமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. நீதிபதி குன்கா ஊழல் தடுப்புச் சட்டப்படி தீர்ப்பு வழங்கவில்லை. அதுவும் ஜெயலலிதாவுக்கு அபராதம் விதித்தது சட்டத்தின் எல்லையை மீறிய செயல். நீதிபதி குன்கா நீதித்துறையில் மிகப் பெரிய பிழையை ஏற்படுத்திவிட்டார். அவர் ஊழல் தடுப்பு சட்டவிதிகளின்படி தீர்ப்பை வழங்கவில்லை. அபராதம் விதித்ததில் நீதித்துறை கோட்பாடுகளை குன்கா மீறிவிட்டார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் வழக்கறிஞர் என்ற முறையில் இந்த தீர்ப்பை நான் எதிர்க்கிறேன்.இவ்வாறு ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார். ஜெ. வழக்கில் ஆஜராகிறார்? இதனிடையே கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளார். அப்போது ஜெயலலிதா சார்பில் ராம்ஜெத்மலானியே ஆஜராகி வாதாடக் கூடும் என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.26 ஆகஸ்ட் 2014
மைத்திரியை உளவு பார்த்தார் கோத்தா!
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவை வேவுபார்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவினால் அனுப்பப்பட்ட நபரை அமைச்சர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆளும்கட்சி வட்டாரங்களில் பெரும்பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரை கோத்தபாய அமைச்சரை வேவு பார்ப்பதற்காக அவரின் மெய்ப்பாதுகாப்பு வட்டத்திற்குள் புகுத்தியுள்ளார்.
அமைச்சரின் மெய்ப்பாதுகாப்பு பிரிவில் சில காலம் பணியாற்றிய இந்த நபர், அமைச்சரின் நடவடிக்கைகள், அவரை சந்திக்க வருபவர்கள் அவரது நண்பர்கள் குறித்த விபரங்களை நாளாந்தம் வழங்கிவந்துள்ளார். இதற்காக அந்நபரிற்கு 50.000 வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அமைச்சரினால் பிடிக்கப்பட்டதும் அந்நபர் சகல உண்மைகளையும் கக்கியுள்ளார். அதனை தொடர்ந்து ஏனைய பல மூத்த அமைச்சர்கள் மத்தியில் தமது பாதுகாப்பு பிரிவினர் குறித்து மாத்திரமல்லாமல் ஏனைய பணியாளர்கள் குறித்தும் அச்சம் தோன்றியுள்ளது. தங்களிடம் பணி புரிபவர்களில் எத்தனை பேர் கோத்தாவின் விசுவாசிகள் என்ற மறைமுக கணக்கெடுப்பை அவர்கள் ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

25 ஆகஸ்ட் 2014
விஜயும் முருகதாசும் லைகாவினரால் மிரட்டப்பட்டார்களாம்?
இப்படி ஒரு கதை சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. கத்தி படத்தின் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து லைகா நிறுவனம் விலகிக் கொண்டால் போதும், சிக்கலின்றி படம் வெளியாகும் என்பதுதான் படத்தின் தற்போதைய நிலை. அதாவது கிளம்பியிருக்கும் எதிர்ப்பு என்பது கத்தி படத்துக்கு எதிரானதுதான். நடிகர் விஜய்க்கோ, இயக்கநர் ஏ ஆர் முருகதாசுக்கோ எதிரானதல்ல என்று தெளிவாக்கியுள்ளனர் போராட்டக்காரர்கள்.எனவே படத்தை லைகாவிடமிருந்து ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்குக் கைமாற்றிவிட விஜய்யும் முருகதாசும் பெரும் முயற்சி மேற்கொண்டதாகவும், அதற்கு லைகாகாரர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நாமும் கடந்த சனிக்கிழமை செய்தி வெளியிட்டோம். இப்போது இன்னொரு கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அதாவது படத்திலிருந்து லைகாகாரர்கள் விலக மறுத்ததோடு நில்லாமல், விஜய், முருகதாஸ் தங்களுடன் போட்டுள்ள ஒப்பந்தங்களைக் காட்டி மிரட்டினார்களாம். படத்தில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது நாங்கள்தான். உங்களுக்கு கேட்ட சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டது, என்றார்களாம். இந்தப் படம் குறித்தும், இதுபோன்ற செய்திகள் குறித்தும் தெளிவாக விஜய்யும் முருகதாஸும் லைகாகாரர்களும் தெளிவுபடுத்தும் இதுபோன்ற கதைகள் தொடரும் போல் தெரிகிறது!24 ஆகஸ்ட் 2014
பாஜக ராஜபக்ஷவுக்குத்தான் விசுவாசமாக உள்ளது!
தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டும் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை. கடைசி பகுதி வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து போராட விடாமல் மக்கள் சாதி, மதம், மற்றும் இனத்தின் பெயரால் பிரிக்கப்பட்டு வருகின்றனர். தென் மாவட்டத்தில் சாதாரண மனிதராக இருந்த ஒருவர் தாது மணல் விற்று இன்று கோடீஸ்வரராக வலம் வருகிறார். தாது மணல் உள்ளிட்ட கனிம வளத்தையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க தவறினால் வருங்கால வாரிசுகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றார் நல்லகண்ணு.
23 ஆகஸ்ட் 2014
மோடி கூட்டமைப்பினரை சந்தித்தார்!
பிரதமர் நரேந்திர மோடியுடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து பேசினர். இந்தச் சந்திப்பு இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது இலங்கையில் 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் அமுல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் முதன்முறையாக கூட்டமைப்புப் பிரதிகள் அவரைச் சந்தித்து பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.22 ஆகஸ்ட் 2014
லைகாவின் பெயரை நீக்கி புதிய பெயரில் "கத்தி"விளம்பரம்!
கத்தி படத்தின் பிரச்சினையை, சீமான் ஆலோசனைப்படி மெல்ல தீர்த்துவிட முடியும் என நம்புகிறார்கள் முருகதாஸ் அன்ட் கோ. சீமானின் ஆலோசனைப்படி, லைகா நிறுவனத்தின் பெயரை மட்டும் தூக்கிவிட்டு படத்தை வெளியிடலாம் என முடிவு செய்து அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கிவிட்டனர்.லைகாவுக்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தை தயாரிப்பாளராக்கியுள்ளார்கள். லைகா போட்ட பணத்தை எப்படி செட்டில் செய்தார்கள் என்ற விவரம் வெளியாகவில்லை. அந்த செட்டில்மென்ட் முடிந்ததா அல்லது எதிர்ப்புகளைச் சமாளிக்க பெயரை மட்டும் மாற்றிக் கொண்டு, சைலன்ட் தயாரிப்பாளர்களாக லைகாகாரர்கள் தொடர்கிறார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும். லைகா வெளியேறிவிட்டது என்பதைக் காட்டும் வகையில், இன்று மாலை கத்தி படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிடவிருக்கிறார்கள். அதில் லைகாவுக்கு பதில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் கத்தி என்ற மாற்றத்தைச் செய்துள்ளார்களாம். மாலை 6 மணிக்கு மேல் கத்தி புதிய போஸ்டர் வெளியாகும் எனத் தெரிகிறதது.
21 ஆகஸ்ட் 2014
புங்குடுதீவு நபர் நஞ்சருந்தி தற்கொலை!
களவு மற்றும் கொள்ளை ஆகிய குற்றச் செயல்கள் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் நஞ்சு விதையொன்றை உண்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊர்காவற்றுறையில் உள்ள பொலிஸார் தெரிவித்தனர் என அறியவருகிறது.
புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசநாயகம் றொனாட்றீகன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதன்கிழமை (20) மதியம் நஞ்சு விதையொன்றை உட்கொண்ட இவர் உடனடியாக புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு புதன்கிழமை (20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர் மேலும் கூறப்பட்டுள்ளது.

20 ஆகஸ்ட் 2014
கத்தி,புலிப்பார்வைக்கு தமிழக அரசு தடை விதிக்கக்கூடும்!
சர்ச்சைக்குரிய புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. வேந்தர் மூவிஸின் புலிப்பார்வை திரைப்படம், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகனை சிறார் போராளியாக சித்தரிக்கிறது. வேந்தர் மூவிஸ் நிறுவனமானது எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கு சொந்தமானது. இக்குழுமம் இலங்கையிலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதேபோல் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் குடும்பத்தினருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை தயாரிக்கிறது.இந்த இரு படங்களையும் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று 65 இயக்கங்களின் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள் கலந்து கொண்டன. இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை வெளியிடக் கூடாது என்ற கோரிக்கையை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது. கத்தி, புலிப்பார்வை திரைப்படங்களை வெளியிட்டால் அனைத்து இயக்கங்களும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளனர். இப்படி விஸ்வரூபமெடுத்திருக்கும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கத்தி மற்றும் புலிப் பார்வை திரைப்படங்களுக்கு அதிரடியாக தமிழக அரசு தடை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
19 ஆகஸ்ட் 2014
பாலகியை துஷ்பிரயோகம் செய்த அரக்கன் கைது!
கடைக்குச் சென்ற 5 வயதுச் சிறுமியை கடைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில்,உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 50 வயதான வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர் நேற்று யாழ்.சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்ற நீதிவான் கறுப்பையா ஜீவராணி உத்தரவிட்டார். கடைக்குச் சென்ற சிறுமி வீட்டுக்குத் திரும்பிவர தாமதமானதை அடுத்து அதற்கான காரணம் குறித்து சிறுமியின் தாய் கேட்டுள்ளார்.
இதன்போதே தன்னிடம் கடைக்காரர் நடந்து கொண்ட விதம் குறித்து சிறுமி எடுத்துக் கூறியுள்ளார். இதனையடுத்து, மேற்படி சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை முறைப்பாடு செய்தனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான குறித்த பெட்டிக்கடை உரிமையாளர் கைதுசெய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

18 ஆகஸ்ட் 2014
தம்பாட்டி மக்களுக்கு நீர் விநியோகம்!
17 ஆகஸ்ட் 2014
இந்த கயவர்களால் ஆசிரியர்களுக்கு தலைகுனிவு!
மானிப்பாய் பிரதேசத்தில் மாணவி ஒருவரை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தவறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவரை, கையும் மெய்யுமாகப் பிடித்த பொதுமக்கள் அவரை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10.30 மணியளவில் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆசிரியர் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கற்பித்து வருபவர் என்றும் தெரியவருகிறது. குறித்த மாணவி கல்விகற்கும் பாடசாலை அதிபர் வழங்கிய தகவலையடுத்தே ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
16 ஆகஸ்ட் 2014
புலிப்பார்வைக்காக மாணவர்களை தாக்கிய சீமானின் அடியாட்கள்!
புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்துக்கும், அதில் பங்கேற்ற சீமானுக்கும் கண்டனம் தெரிவித்த மாணவர்களை இரும்பு ராடால் கடுமையாகத் தாக்கினர் நாம் தமிழர், பாஜக மற்றும் ஐஜேகே கட்சியைச் சேர்ந்தவர்கள். இதில் மாணவர்களுக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை, கால்களிலும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்காமல், ஜாம் பஜாரில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் காவலர்கள்.தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் சிறுவன் பாலச்சந்திரனை கொடூரமாகக் கொன்றது சிங்கள ராணுவம். இதற்கான ஆதாரங்கள், படங்கள் வெளியான போது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. நீதி விசாரணை வேண்டும் என்ற குரல்கள் ராஜபக்சேவுக்கு நெருக்கடி ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில்தான், ஈழத்துக்கு ஆதரவாகவும், தனக்கு எதிராகவும் பெரும் போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழகத்தில் உள்ள அமைப்புகளை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் இறங்கினார் ராஜபக்சே. சகல பலவீனங்களையும் மறைத்துக் கொண்டு, வெளியில் வீராவேசமாகப் போராடுவது போல நடிக்கும் சில சினிமாக்காரர்களை குறிவைத்துப் பிடித்துள்ளது ராஜபக்சே தரப்பு. அவரது பினாமிகளின் ஊடுருவல் தமிழ் சினிமாவையே திகைக்க வைக்கும் அளவுக்கு பலமாக உள்ளது. இந்த பினாமிகள் தயாரிக்கும் படங்கள்தான் கத்தியும் புலிப்பார்வையும் என்கிறார்கள் தமிழ் சினிமாவின் இயக்கத்தை முற்றாக அறிந்த சில தயாரிப்பாளர்கள். இந்தப் படங்களுக்கு எதிராக மாணவர்களும், தமிழ் உணர்வு கொண்ட கட்சிகளும் அணி திரண்டன. இவர்களில் அரசியல் கட்சிகளை எப்படியோ சரிகட்டிவிட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் தவிர, வேறு எந்த அரசியல் கட்சியும் இந்த இரு படங்களையுமே எதிர்க்காதது பலத்த சந்தேகங்களையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.பாலச்சந்திரனை சிறார் போராளியாகச் சித்தரிக்கும் புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜகவின் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அழைப்பிதழில் பெயர் போடப்பட்டிருந்தாலும், மதிமுக பொதுச் செயலர் வைகோ பங்கேற்கவில்லை. இந்தப் படத்தைத் தயாரித்திருப்பவர் பாரிவேந்தர் எனப்படும் பச்சமுத்து. எஸ்ஆர்எம் குழுமத் தலைவர் மற்றும் வேந்தர் மூவீஸ் உரிமையாளர். இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இவர்தான். விழா நடந்து கொண்டிருக்கும்போதே, மாணவர்கள் சீமானை எதிர்த்து கோஷம் எழுப்பினர். தங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். அதுமட்டுமல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு துரோகம் செய்த சீமானை கைது செய்யுங்கள் என்றும் கோஷம் எழுப்பினர். உடனே, இரும்புக் கம்பிகளுடன் தயாராக இருந்த நாம் தமிழர் கட்சி, பாஜக மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி அடியாட்கள் பாய்ந்து வந்து, கேள்வி கேட்ட மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள். இதில் முற்போக்கு மாணவர் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன், தமிழீழ மாணவர் பேரவையைச் சேர்ந்த செம்பியன் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அரங்கில் இவ்வளவு கைகலப்பு நடந்தும், மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசார் தலையிட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட நின்றிருந்த மாணவர்களை கைது செய்து வெளியே அழைத்துச் சென்றனர். அவர்களுக்கு முதலுதவி கூட அளிக்காமல், ஜாம்பஜார் அருகே உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். மாணவர்கள் தாக்கப்பட்ட இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 ஆகஸ்ட் 2014
தம்பி விஜய்,பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது!
தம்பி விஜய் பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது. காட்டிக்கொடுத்த கருணாவும் பிறப்பால் தமிழர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள், என்று கடிதம் எழுதியுள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
செஞ்சோலையில் அப்பாவி ஈழத் தமிழ்க் குழந்தைகள் 63 பேரை இலங்கைப் பே'ய'ரசு விமானத்திலிருந்து குண்டுவீசிக் கொன்ற ஆகஸ்ட் 14ம் நாளில் கனத்த மனத்துடன் இந்த செய்தி அறிக்கையை எழுதுகிறேன்.ஆகஸ்ட் 14ம் நாள் உலகெங்குமுள்ள 10 கோடி தமிழர்களின் இதயம் அந்தக் குழந்தைகளின் ரத்தத்தால் நனைந்த நாள். இந்த நாளில், ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட அந்த மழலைகளை நினைவு கூரும் விதத்தில், அந்தக் குழந்தைகள் கொல்லப்பட்ட இன்றைய தினமும், அவர்களின் நினைவாக வன்னி மண்ணில் விளக்கேற்றப்பட்ட நாளைய தினமும் ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் குறைந்தபட்சம் ஒரு அகல் விளக்காவது ஏற்றப்படவேண்டும் என்று தமிழ்ப் பெருங்குடி மக்களைப் பணிவோடு வேண்டுகிறேன். ஆண்டுகள் கடந்த பின்னும் இதயத்தை உறைய வைக்கும் அந்தச் சம்பவத்தை மறக்க இயலாமல் நாம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் கண்ணீரில் நம்முடன் இரண்டறக் கலக்க வேண்டிய நண்பர்கள் சிலர், மனிதமிருகம் ராஜபக்சேவின் நண்பர்கள் தயாரித்துள்ள ஒரு திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடுவதை எதிர்க்கலாமா - என்று கண்ணீர் மல்கக் கேட்பது எம்மைக் கவலையடையச் செய்துள்ளது. செஞ்சோலையில் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைக் குண்டுவீசிக் கொல்ல பயன்படுத்தப்பட்ட அதே விமானத்தில் மனித மிருகம் மகிந்த ராஜபக்சேவின் விருந்தினர்களாக விண்ணில் உலா வந்த லைக்காமொபைல் நிறுவனத்தினர் தான் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள் என்பது எம் இனிய நண்பர்களுக்குத் தெரியுமா தெரியாதா? அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் அறிதுயிலில் இருக்கிறார்களா?கத்தி - என்கிற இந்தப் படத்தை எடுத்தவர்கள் தரப்பிலிருந்து, 'தமிழர்களின் ரத்தத்தில் நனைந்த பணத்தில் நாங்கள் படமெடுப்போமா' என்றெல்லாம் தொடக்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. ராஜபக்சேவின் நண்பர்கள் - ராஜபக்சே குடும்பத்தின் கூட்டாளிகள் - ராஜபக்சே குடும்பத்தின் அபிமானத்தைப் பெற்றவர்கள் - எடுக்கிற படம்தான் இது என்பது அம்பலமான பிறகு, 'இந்தப்படத்தில் தமிழர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது' என்கிற அடுத்த கேள்வியோடு அரங்குக்கு வருகிறார்கள் சில நண்பர்கள். அவர்களைப் பார்க்கும்போது, எனக்கு அவமானமாக இருக்கிறது. எம் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நேரடியாக தமிழ்த் திரையுலகில் கால்பதிக்க முடியாது என்பதால்தான், லைக்கா மொபைல் - என்கிற தனக்கு நெருக்கமான சிநேகிதனின் முகமூடியுடன் தமிழ் சினிமாவில் கால் வைக்க முயல்கிறது ராஜபக்சே குடும்பம். இதைக் கூடவா நீங்கள் புரிந்துகொள்ளவில்லை? இன்று நீங்கள் லைக்கா மொபைலை அனுமதித்தால், நாளை - மகிந்த ராஜபக்சேவும் கோதபாய ராஜபக்சேவும் பசில் ராஜபக்சேவும் நமல் ராஜபக்சேவும் தமிழ்த் திரையுலகில் தங்களுக்கு நம்பகமான நண்பர்களை வெவ்வேறு முகமூடிகளுடன் திணிப்பதை உங்களால் எப்படித் தடுக்க முடியும்? 'இந்தப் படத்தில் தமிழர்களுக்கு எதிராக என்ன இருக்கிறது' என்கிற உங்களது கேள்வி, உங்களிடமே அப்போது எழுப்பப்படாதா? உங்கள் வார்த்தைகளாலேயே உங்கள் வாய் அடைக்கப்படாதா? என் இனிய நண்பர்களே, எச்சரிக்கையாயிருங்கள்.கத்தி - திரைப்படத்தின் கதை என்ன என்பதைக் குறித்து இங்கே எவரும் கேள்வி எழுப்பவேயில்லை. வழக்கமான தமிழ் சினிமா ஹீரோக்கள் செய்வதைப் போல், இந்தியாவுக்கு வரும் ஆபத்தை தம்பி விஜய் எப்படித் தடுக்கிறார் - என்பதே கூட கதையாக இருந்துவிட்டுப் போகட்டும். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. இந்தியாவாலும் இலங்கையாலும் எம் ஈழ உறவுகளுக்கு நேரும் ஆபத்துகளிலிருந்து அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதைப் பற்றி மட்டுமே நாங்கள் கவலைப்படுகிறோம். கத்தி திரைப்படத்தின் கதை என்ன? அதில் தமிழ்ச் சினிமாவின் பாரம்பரிய குத்தாட்டம் இருக்கிறதா இல்லையா - என்றெல்லாம் முட்டாள்தனமாகக் கேள்வி எழுப்பாமல், அது எவருடைய முதலீட்டில் எடுக்கப் படுகிறது என்றுதான் கேட்கிறார்கள் தமிழகத்தின் மாணவக் கண்மணிகள். கத்தி படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு என்பதுதான் அவர்களது கேள்வி. அந்த நியாயமான கேள்வியை எழுப்பும் எங்கள் மாணவத் தம்பிகளை மிரட்ட முயற்சிப்பது கடைந்தெடுத்த கோழைத்தனம். ராஜபக்சேவின் பினாமிகளோ - என்கிற சந்தேகம் எழுகிற அளவுக்கு ராஜபக்சேவுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் எடுக்கும் ஒரு படத்தைக் குறித்து கேள்வி எழுப்பும் அந்த மாணவத் தம்பிகள் மீது ஒரு துரும்பு பட்டால்கூட கத்தி படத்துடன் தொடர்புடைய தம்பி விஜய் உள்பட அத்தனைப் பேரும் அதற்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்று பணிவன்போடு எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.நான் ஒரு தெருப் பாடகன். எம் மக்களுக்காகத் திரைப்படம் எடுக்கிற எளிய கலைஞன். என்னுடைய அடுத்த திரைப்படம் முடிவடையும் நிலையில் இப்படியொரு அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், என்னுடைய பட வெளியீட்டின் போது நான் இடைஞ்சல்களைச் சந்திக்க நேரலாம். அதற்காக அஞ்சி இதைப் பேசாதிருப்பது கோழைத்தனம் என்பதாலேயே இதைப் பேசுகிறேன். இப்போது பேசாமல் வேறெப்போது நான் இதைப் பேசமுடியும்? என் இனிய நண்பர்களிடம் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான்... செஞ்சோலையில் கொல்லப்பட்ட எங்கள் குழந்தைகளுக்காகக் கண்ணீர் வடியுங்கள். அவர்கள் மீது குண்டு வீசிய விமானத்தில் உல்லாசப் பயணம் சென்றவர்களுக்காக கண்ணீர் வடிக்காதீர்கள்!
தம்பி விஜய்க்கும் ஒரு வேண்டுகோள்....
பிறப்பால் மட்டுமே தமிழராயிருப்பது அர்த்தமற்றது. காட்டிக்கொடுத்த கருணாவும் பிறப்பால் தமிழர்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். நம்முடைய இருப்பும் நம் இதயத்தில் ஏந்தியிருக்கிற நெருப்பும்தான் தமிழரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும். செஞ்சோலைக் குழந்தைகள் கொல்லப்பட்ட இன்றைய தினமும் நாளைய தினமும் அந்த அப்பாவிக் குழந்தைகளுக்காக அன்புத் தம்பி விஜய் உணர்வோடும் உணர்ச்சியோடும் தன் இல்லத்தில் ஒரே ஒரு அகல் விளக்காவது ஏற்ற வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகிறேன்!

14 ஆகஸ்ட் 2014
கடற்படை காடையனை நையப்புடைத்த மருதங்கேணி மக்கள்!
யாழ்.வடமராட்சி மருதங்கேணி, விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சிறீலங்காவின் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதி வீடொன்றுக்குள் புகுந்த இந்த காடையன் 22 வயதான குடும்பப் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.
இதன்போது, அந்தப் பெண் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து அயல் வீட்டார்கள் ஓடி வந்து குறித்த காடையனை பிடித்து தாக்கியுள்ளனர்.
பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாரிடம் இந்த சிறீலங்காவின் காடையனை ஒப்படைத்துள்ளனர்.
பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான இவனை பளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் குறித்த காடை ஆஜர்படுத்தப்பட்டதும், அவனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதி வீடொன்றுக்குள் புகுந்த இந்த காடையன் 22 வயதான குடும்பப் பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.
இதன்போது, அந்தப் பெண் கூக்குரலிட்டதைத் தொடர்ந்து அயல் வீட்டார்கள் ஓடி வந்து குறித்த காடையனை பிடித்து தாக்கியுள்ளனர்.பின்னர் பொலிஸாருக்கு தகவல் வழங்கி பொலிஸாரிடம் இந்த சிறீலங்காவின் காடையனை ஒப்படைத்துள்ளனர்.
பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான இவனை பளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக பொலிஸார் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் குறித்த காடை ஆஜர்படுத்தப்பட்டதும், அவனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
13 ஆகஸ்ட் 2014
ஊர்காவற்றுறையில் உரம் பயன்படுத்தி வெல்லம் தயாரித்தமை கண்டுபிடிப்பு!
மனித பாவனைக்கு உதவாதது எனக் கருதப்படும் பொஸ்பேட் அடி உரம் பயன்படுத்தி பனைவெல்லம் தயாரித்த ஊர்காவற்றுறை பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பனை வெல்ல நிலையம் இன்று சுகாதாரப் பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டது. நேற்று சுகாதாரப் பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்க பனை வெல்ல நிலையத்தின் ஐலண்ட் பாம் (Island Plam) பனை வெல்ல உற்பத்திக்காக விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் - மனிதப் பாவனைக்கு ஒவ்வாத பொஸ்பேட் (அடி உரம்) பாவித்தமை கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. சுகாதாரப் பரிசேதகர்களால் அங்கு கைப்பற்றப்பட்ட பனைவெல்லம் மற்றும் அடி உரம் என்பன இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் பராப்படுத்தப்பட்டன. விசாரணை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதிவான் எஸ்.லெனின்குமார் பனை வெல்ல நிலையத்தை சீல் வைக்குமாறு சுகாதரப் பரிசோதகர்களுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
12 ஆகஸ்ட் 2014
கத்திக்கு எதிரான முற்றுகை!மாணவர்கள் அறிவிப்பு!
கத்தி படத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இந்தப் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்று கோரி படத்தின் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நாயகன் விஜய் வீடுகள் மற்றும் சென்னையில் உள்ள லைகா நிறுவனத்தின் அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான செம்பியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கத்தி படத்துக்கு எதிரான மிக பலமான போராட்டத்தை அனைத்து மாணவர் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து நடத்தப் போகிறோம். நிச்சயம் எங்கள் போராட்ட முடிவில் மாற்றமிருக்காது. இந்த போராட்டம் குறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கிறோம். மாணவர்களுக்கு தேர்வுகள் முடிய வேண்டுமே என்பதற்காக காத்திருக்கிறோம். ஈழ ஆதரவு அமைப்புகள் அனைத்துடனும் இந்தப் போராட்டம் பற்றி பேசி வருகிறோம். கத்தி படத்தின் நாயகன் விஜய், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோரின் வீடுகள், தயாரிப்பாளரான லைகாவின் தி நகர் மற்றும் அடையாறு அலுவலகங்களை முற்றுகையிடுவோம். தமிழகத்தில் இந்தப் படம் எங்குமே வெளியாகக் கூடாது. அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம். தமிழக அரசு இந்த விஷயத்தில் சரியான முடிவை எடுக்கும் என நம்புகிறோம்," என்று கூறியுள்ளார்.
11 ஆகஸ்ட் 2014
மன்னார் தளபதி ஜானின் மனைவி ஆணைக்குழு முன் சாட்சியம்!
காணமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஜனாதிபதியின் ஆணைக்குழு முன் இன்று சாட்சியமளித்த விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்பு தளபதிகளில் ஒருவரான அந்தோனி இராயப்பு (ஜான்) அவர்களின் மனைவி இராயப்பு மிரேனியா தனது சாட்சியத்தை சற்று முன் மடு பிரதேச செயலகத்தில் பதிவு செய்துள்ளார். அவர் தனது சாட்சியத்தில் - யுத்தம் நடைபெற்ற வேளையில் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களைச் சரணடையுமாறும் அவ்வாறு சரணடைந்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் இராணுவத்தினரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இதயைடுத்து 2009ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 18ஆம் திகதி அப்பகுதியிலுள்ள அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் (மைக்கல்) தலைமையில் அவர்களின் உதவியுடன் 40 விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் முல்லைத்தீவு பகுதியில் சரணடைந்தனர். இதில் எனது கணபுர் அந்தோனி இராயப்புவும் இருந்தார். அவருக்கு அப்போழுது வயது 43 எனது கணவர் 23 வருடங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் பணியாற்றியுள்ளார்.பின் வட்டுவாகல் பகுதியிலுள்ள பாடசாலை முகாமில் கம்பிக்கூட்டில் அடைத்து வைத்தார்கள். அதன் பின் இதுவரை அவரை காணவில்லை. பின் அவரை தேடி பல முகாம்களுக்கு சென்றேன். இருந்தும் அவரை காண முடியவில்லை. பொலிஸ் நிலையம் மற்றும் மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றில் பல முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளேன். ஆனால் அவரை நான் இன்று வரை காணவில்லை. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் சில தளபதிகள் மற்றும் உறுப்பினர்கள் விடுலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் எனது கணவர் மட்டும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை . பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறியதனாலேயே அவர் சரணடைந்தார். ஆனால் அவருடன் சரணடைந்த 40 பேருக்கும் என்ன நடந்தது என இன்றுவரை தெரியவில்லை. இவ்வாறான சூழலில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்து வருகிறேன். ஒரு முறையாவது அவரை பார்த்தால் எனக்குப் போதும். அல்லது அவர் இருக்கிறாரா இல்லையா என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.நான் மிக கஷ்டத்தில் வாழ்ந்து வருகிறேன் இந்த சூழலில் சிலர் மது போதையில் எனது வீட்டிற்கு வந்து,அவர் வந்திட்டாரா? அவர் எங்கே என சொல்லி என்னை அச்சுறுத்தி வருகிறார்கள். நான் முச்சக்கர வண்டியில் சென்றால் முச்சக்கர வண்டி சாரதியை பார்த்து ஏன் ஏற்றி சென்றாய்? எங்கே கூட்டி சென்றாய்? என அச்சுறுத்தி வருகிறார்கள். எனது வீட்டிற்கு வருபவர்கள் அச்சுறுத்தி வருகிறார்கள்.வரவர நான் மிகவும் பயத்தில் வாழ்ந்த வருகிறேன். எனவே எனது கணவன் இருக்கிறாரா இல்லையா என தெரிவிக்க வேண்டும். அவர் நிச்சயமாக இருக்கிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.இதன்போது ஆணைக் குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவிக்கையில் - உங்களைச் சில ஆணைக்குழு அதிகாரிகள் பார்ப்பதற்கு வருவார்கள். அவர்களுக்கு ஒத்துழையுங்கள் அதன் மூலம் கணவரை கண்டு பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை அடுத்து மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி அந்தோனி இராயப்பு வின் மனைவி தெரிவிக்கையில் - இவ்வாறு பல வாக்குகள் ஏற்கனவே எனக்கு வழங்கப்பட்டு இதுவரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனக்கு எதுவித உதவிகளும் வேண்டாம் எனவே எனக்கு எனது கணவரை ஒரு முறையாவது பார்த்தால் போதும். இராணுவத்தினரே அவரை வைத்துள்ளனர். எனவே அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
10 ஆகஸ்ட் 2014
விசுவமடுவில் ஆணின் சடலம் மீட்பு!
முல்லைத்தீவு விசுவமடுப்பகுதியில் பஸ் தரிப்பு கட்டடத்தில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொட்டியடி, விசுவமடுவைச் சேர்ந்த எஸ்.ஜோர்ஜ் (வயது - 40) என்பவரே சடலமாக காணப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை பஸ் தரிப்பிட கட்டடத்துக்குள் சடலம் காணப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்குவந்த பொலிஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)