14 டிசம்பர் 2014
27 நவம்பர் 2014
படைகளின் முற்றுகைக்கு மத்தியிலும் யாழ்.பல்கலையில் மாவீரர் சுடர்!
அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்களால் சுடர் ஏற்றப்படலாம் என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்திற்கு வரும் மாணவர்கள்,உத்தியோகத்தர்களை சோதனை செய்த பின்னரே பல்கலைக்கழகத்திற்கு செல்ல அனுமதித்து வருகின்ற நிலையில். பத்துக்கு அதிகமான மாணவர்கள் இன்று மாலை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாவீரர் சுடரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
22 நவம்பர் 2014
பதற்றத்தில் மகிந்த கட்சியினர்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கட்சிதாவலை ஊக்குவிக்கிறார் என குற்றஞ்சாட்டியுள்ள அரசாங்கம் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்கான பெரும் நாடகமொன்றின் ஒரு பகுதியாகவே இது இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த. சந்திரிகா குமாரதுங்கவின் நாடகத்தில் மைத்திரிபால சிறிசேன முக்கிய கதாபாத்திரத்தை வகிக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இதேவேளை இந்த முழு நாடகமும் மேற்குலக சதி என குறிப்பிட்டுள்ள அமைச்சர் டலஸ் அழகபெரும, இலங்கையின் உள்விவகாரங்களில் இராஜதந்திரிகளை தலையிடவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். விடுதலைப் புலிகள் சார்பு புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் சில நாடுகளும் நாட்டை ஸ்திரத்தன்மை இழக்க செய்வதற்காக நிதிவழங்குகின்றன எனவும் குற்றம்சாட்டியுள்ள அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகப் போட்டியிடுவது என்ற மைத்திரிபாலவின் முடிவு குறித்து தான் ஏமாற்றமடைந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்,பல்கலை மாணவனைக் காணவில்லை!
யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை பீடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை பீடத்தில் கல்விபயிலும் மூன்றாம் ஆண்டு மாணவனான அ.நிவாஸ் என்பவரே காணாமல் போயிருப்பதாக தெரியவருகிறது. நீர்வேலியில் உள்ள அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு 7 மணியளவில் புலனாய்வாளர்கள் சென்று சுற்றிவளைத்திருக்கின்றனர். நிலைமையை உணர்ந்த குறித்த மாணவன் அவர்களிடம் இருந்து தப்பி ஓடியுள்ளார்.அதன் பின்னர் வீட்டிற்குள் நுழைந்த புலனாய்வாளர்கள் வீட்டிலிருந்தவர்களிடம் நிவாஸ் தொடர்பில் தீவிரமாக விசாரணை நடத்தியிருக்கின்றனர். சம்பவத்தினை அடுத்து புலனாய்வாளர்கள் வீட்டைவிட்டு வெளியேறிய போதிலும் இதுவரையில் நிவாஸின் தொடர்பு வீட்டாருக்கு கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது. அவருடைய தொலைபேசியும் செயற்பாட்டில் இல்லை என்றும் அவருடைய உறவுகள் கவலை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 நவம்பர் 2014
மஹிந்த - மைத்திரி அவசர சந்திப்பு!
16 நவம்பர் 2014
நகுலேஸ்வரன் கொலை தொடர்பில் நீதியான விசாரணை தேவை!
வெள்ளாங்குளத்தில் முன்னாள் போராளி நகுலேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து வெளிப்படையான விசாரணையை பொலிசார் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு நேற்று சென்று பார்வையிட்ட பின்னர் அப்பகுதி மக்களுடனும், நகுலேஸ்வரனின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுடனும் துக்கம் விசாரித்து கலந்துரையாடிய, சிவசக்தி ஆனந்தன், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,நகுலேஸ்வரனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்துள்ளதாகவும், படுகொலைக்கு பயன்படுத்திய ரி-56 வகை துப்பாக்கியை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் நீதி நியாயமாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றத்துடன் தொடர்புடைய அனைவரும் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படல் வேண்டும். அவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டு அவர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.
ஏனெனில் யுத்தம் முடிவடைந்து ஐந்தரை வருடங்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் சாதாரண நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளில் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு அவர் உயிரிழந்திருக்கும் முதலாவது சம்பவம் இதுவாகும். இச்சம்பவம் தொடர்பில், விடுவிக்கப்பட்டுள்ள போராளிகள் அனைவரும் தத்தமது எதிர்காலம் தொடர்பில் அச்சமும் கவலையும் கொண்டுள்ளனர். வடக்கு முழுவதும் இச்சம்பவத்தால் ஒருவித பதட்டம் மேலோங்கி காணப்படுகின்றது.
எனவே பொதுமக்களின் அமைதியை, இயல்பு வாழ்க்கையை குழப்பியுள்ள துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையும் படுகொலையையும் வன்மையாக கண்டிப்பதோடு, நகுலேஸ்வரனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அநுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவிப்பதாகவும், சட்டம் ஒழுங்கைப்பேணி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசு முனைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
15 நவம்பர் 2014
தீவகத்தின் சமகால நிலமைகள் குறித்து விந்தனுடன் தீவக பிரதிநிதிகள் சந்திப்பு!
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளின் சமாகால நிலமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.கடந்த 13.11.14 அன்று புலம்பெயர்ந்து வாழும் நெடுந்தீவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வர்த்தகருமான செல்வரட்ணம் சுரேஸ் என்பவரின் ஏற்பாட்டில் சிரேஸ்ட்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் மகாலிங்கசிவத்தின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
தீவகத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த புலம்பெயர் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தீவகத்தின் அபிவிருத்தி குறித்து முக்கிய விடயங்கள் பேசப்பட்டதாக ஏற்பாட்டாளர் சுரேஸ் செல்வரட்ணம் தெரிவித்தார்.
13 நவம்பர் 2014
கட்டளை பிறப்பித்தவர்களே தண்டிக்கப்படுவர்-அமெரிக்கா
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான கட்டளைகளை பிறப்பித்த நபர்களே தண்டிக்கப்படுவர் என அமெரிக்க நிபுணர் பெட்ரிக் ட்ரேனொர் தெரிவித்துள்ளார்.பெட்ரிக் அமெரிக்க நீதிமன்ற திணைக்களத்தின் விசேட விசாரனைப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன கால யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட உத்தரவுகளை, கட்டளைகளை பிறப்பித்த நபர்களே தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்தள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச நீதிமன்றங்கள், சர்வதேச ரீதியான விசாரணைக் குழுக்கள் போன்றன யுத்தக் குற்றச் செயல்களை தலைமை ஏற்று வழிநடத்தியவர்களுக்கு எதிராகவே விசாரணை நடத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால யுத்தக் குற்றச் செயல் பதிவுகள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதுடன், சாட்சியாளர்களும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.இவ்வாறான நிலைமைகளின் போது நாடுகளின் உயர் மட்ட அதிகாரிகளுக்கான கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் அதிகாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். உள்ளுர் ஊடகங்களின் தகவல்களின் தகவல்களை திரட்டி ஆராய்வதன் மூலம் நடவடிககை எடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நாட்டின் பொறுப்பு வாய்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மீதே சர்வதேச சமூகம் சட்ட நவடிக்கை எடுக்கும் எனவும் முன்னரங்கில் கட்டகளை ஏற்று குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.09 நவம்பர் 2014
‘பிரபாகரன் மாலைப் பொழுது’
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் 60 கவிஞர்கள் கூடி கவியரங்கம் நடைபெற உள்ளது.புலவர் புலமைப் பித்தன் தலைமையில் கூடும் 60 கவிஞர்கள் தலைவரைப் போற்றி கவிபாடும் கவியரங்கம் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பின்புறம் நடைபெற உள்ளது.கிறித்து பிறப்பிற்கு முந்திய நாளான 24ம் திகதி கிறிஸ்மஸ் மாலை என உலகெங்கும் உள்ள கிறித்தவர்கள் கொண்டாடிவருவது போன்று தமிழீழத் தேசியத் தலைவரின் 60வது பிறந்த நாளான 26ம் திகதிக்கு முந்தைய நாளான 25ம் திகதி ‘பிரபாகரன் மாலைப் பொழுது’ என்று கடைப்பிடிக்கும் விதமாக இந்த கவியரங்கு நடைபெற உள்ளது.
07 நவம்பர் 2014
சிறீலங்காவை கண்டிக்கிறார் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர்!
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ராத் அல் ஹுசைன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த புலன்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும் இலங்கை அரசாங்கம் தடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனை தாக்குவது, அந்த விசாரணைக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது ஆகியவை, இந்த விசாரணைக்கான ஆணையைப் பெற்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதிக்கும் செயலாகும். இந்த புலன் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு ஆணைக்குழு திரும்பத் திரும்பக் கோரிய போதிலும் அதனை ஒரேயடியாக இலங்கை அரசாங்கம் நிராகரித்தமையானது, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நேர்மையை குறைப்பதற்கு பதிலாக இலங்கை அரசாங்கத்தின் நேர்மை குறித்த கவலைகளையே ஏற்படுத்தும் என்று ஆணையர் குறிப்பிட்டுள்ளார்.06 நவம்பர் 2014
சிறீலங்காவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!
ஐக்கிய நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களை மௌனமாக்க முனையும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளுடன் இணைந்து செயற்பட முனைவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது என்பது ஐ.நாவுக்கு எதிரான நடவடிக்கை போன்றது என்பதை இலங்கை விளங்கிக்கொள்ளவேண்டும் என ஐ.நா.மனித உரிமை கவுன்சிலுக்கான அமெரிக்க பிரதிநிதி ஹெய்த் ஹார்ப்பர் டுவிட்டர் செய்தியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.ஐ.நா.மேற்கொண்டுள்ள இலங்கை குறித்த விசாரணைகளில் அந்த அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க முயல்பவர்களை அச்சுறுத்தி மௌனமாக்க முயல்வது குறித்தே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உலகநாடுகளின் தூதுவர்களை சந்தித்தவேளை, வன்னியில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் திரட்டி ஐ.நாவுக்கு அனுப்ப முயன்றவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்ததன் பின்னணியிலேயே அமெரிக்காவின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.03 நவம்பர் 2014
தமிழகத்தில் காங்கிரஸ் உடைந்தது!
01 நவம்பர் 2014
வைகோ திமுகவுடன் சேரக் கூடாது!
இவ்வாறு தமிழருவி மணியன் கூறினார்.
29 அக்டோபர் 2014
வைகோவும் ஸ்டாலினும் சந்திப்பு!கூட்டணிக்கான காய் நகர்த்தலா?
பாமக நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழா காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது. இதனையொட்டி புதன்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வைகோ, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். அரசியல் நாகரீகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமான அமைந்த சந்திப்பு. அன்பு சகோதரர் ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி. திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். ஸ்டாலின் உடனான சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை.கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி என்றார்.
27 அக்டோபர் 2014
குர்திஸ் பெண் வீராங்கனையின் தலையை துண்டித்த ஐஎஸ்ஐஎஸ்!
குர்திஷ் படையில் இணைந்து, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு வந்த பெண் வீராங்கனை ரெஹேனா என்பவரை உயிருடன் பிடித்து தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். இவரது மரணச் செய்தி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பல்வேறு இணையதளங்களிலும் இந்த மரணச் செய்தி காட்டுத் தீயாக பரவி வருகிறது. குர்திஷ் படையில் இருந்தபோது நூற்றுக்கணக்கான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை கொன்று குவித்தவர் ரெஹேனா என்பது குறிப்பிடத்தக்கது.குர்திஷ் படையின் வீரத்திற்கு அடையாளமாக பார்க்கப்பட்டவர் இந்த ரெஹேனா. மிகுந்த துணிச்சலுடன் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தன்னை இணைத்துக் கொண்டவர்.ரெஹேனா என்பது இவரது உண்மையான பெயர் அல்ல. புணை பெயர்தான். சிரிய எல்லையில் இவர் தீவிரமான போரில் ஈடுபட்டிருந்தார்.இவர் தனிப்பட்ட முறையில் 100 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற பெருமைக்குரியவர் ஆவார்.இவர் வெற்றிக்கான இலச்சினையான வி என்று இரட்டை விரலை காட்டும் படம் ஒன்றை பத்திரிகையாளர் ஒருவர் டிவிட்டரில் போட்டு விட உலகம் முழுவதும் பிரபலமானார் ரெஹேனா.இந்த டிவிட் 5000 முறை ரீட்வீட் செய்யப்பட்டது. ஆனால் அந்த தீரம் மிகுந்த பெண் தற்போது உயிருடன் இல்லை என்று செய்திகள் வருகின்றன.ரெஹேனா, குர்திஷ் ராணுவத்தின் பெண்கள் பிரிவில் இடம் பெற்றிருந்தவர் ஆவார்.தற்போது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இவரைக் கொன்று தலையைத் துண்டித்து துண்டித்த தலையுடன் போஸ் கொடுப்பது போன்ற படங்கள் உலா வருகின்றன. இது அதிர்ச்சி தருவதாக உள்ளது.சிரியாவில் உள்ள கொபேன் நகரில்தான் போரில் ஈடுபட்டிருந்தார் ரெஹேனா. இந்த கொபேன் நகரமானது 3 பக்கங்கங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் உள்ளது. இன்னொரு பகுதியை குர்திஷ் படையினர் தங்கள் வசம் வைத்திருந்து போரிட்டு வருகின்றனர். இவர்களுக்கு அமெரிக்க விமானப்படை அவ்வப்போது தாக்குதல் நடத்தி ஆதரவு தந்து வருகிறது.கடந்த ஒரு மாதமாக இந்த கொபேன் நகரில் தீவிரவாதிகள் உக்கிரமாக தாக்கி வருகின்றனர். ஆனால் குர்திஷ் படையினர், அமெரிக்கப் படையினரின் உதவியுடன் அதை முறியடித்து சமாளித்துக் கொண்டிருக்கின்றனர்.குர்திஷ் படையின் மகளிர் பிரிவில் ஆயிரக்கணக்கான பெண்களும் இடம் பெற்றுள்ளனர். ஆண்களுக்கு நிகராக இவர்களும் கலக்கி வருகின்றனர்.
26 அக்டோபர் 2014
புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பிரிட்டன் ஆராய்கிறதாம்!
ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.2000 ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே பிரிட்டனில் அநத அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது.இது ஐரோப்பிய ஒன்றிய ஏற்பாடுகளிலிருந்து வித்தியாசமானது. அதேவேளை இந்த தீர்ப்பு உறுப்பு நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் ரீதியிலான ஒன்றல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.எனினும் நடைமுறை விதிகளின் அடிப்படையில் சட்ட ரீதியாக புலிகளுக்கு எதிரான தடை நீக்கம் பற்றிய தீர்ப்பு இது என்பதும் முக்கியமானது.
அந்த வகையில் பிரிட்டனும் ஏனைய உறுப்புநாடுகள் போன்று குறிப்பிட்ட தீர்ப்பு மற்றும் பொருத்தமான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய்ந்து வருகிறது.இவேளை அடுத்த மூன்று மாத காலத்திற்க்கு விடுதலைப்புலிகளின் சொத்துக்கள் முடக்கம் நீடிக்கும் என இலங்கைக்கான பிரிட்டனின் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
24 அக்டோபர் 2014
படுகொலைகளை நினைவூட்டுகிறது ராஜபக்ஷவின் 4இலட்சம் லைக்!
23 அக்டோபர் 2014
இலங்கை தொடர்பிலும் ஐ.நா.பொதுச்சபைக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது!
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு சமர்ப்பித்துள்ள தனது அறிக்கையொன்றில் ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் சயிட் அல்ஹுசைன் இலங்கை குறித்தும் குறிப்பிட்டுள்ளார் தன்னுடைய அலுவலகம் முன்னைய ஆணையாளரின் கீழ் கடந்த ஒரு வருட காலப் பகுதியில் மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்து சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட காலப் பகுதியில் ஆணைக்குழு மூன்று நாடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சிரியா, மத்திய ஆபிரிக்க குடியரசு, இலங்கை ஆகியனவே இந்த நாடுகள். இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பில் மூன்று விசேட குழுக்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் பலஸ்தீனம், எரித்திரியா மற்றும் ஈராக் குறித்தும் விசாரணைகள் இடம்பெறலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் நான் பதவியேற்றபோது, பெரும் நிதிப்பற்றாக்குறைக்கு மத்தியிலும் எனது அலுவலகம் முன்னெடுத்துள்ள பணிகளை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். ஐ.நாவின் முக்கிய தூண்களில் ஒன்றான மனித உரிமைக்கு தற்போது மிக குறைந்தளவு வளங்களே கிடைக்கின்றன. ஏனைய துறைகளுக்கு வழங்கப்படுவதை விட குறைவாகவே மனித உரிமைகளுக்கு வழங்கப்படுகின்றது. இது தொடரமுடியாது. மனித உரிமைகள் மீறப்படும்போது துஷ்பிரயோகங்களும், மீறல்களும் பாரிய மோதல்களை உருவாக்கும் போது, சகலவகைகளிலும் இழப்புகள் மிகப் பெரிதாகக் காணப்படுகின்றன. இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மனித உரிமை மீறல்களை கண்டுபிடித்து எச்சரிப்பதற்கான தனது அமைப்பின் திறனை அதிகரிக்குமாறும், ஆபத்தான சமிக்ஞைகள் வெளியானவுடன் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரியுள்ளார்.
22 அக்டோபர் 2014
யாழில்.மக்களை துரத்தி துரத்தி வாழ்த்துகிறது படை!
யாழ்.குடாநாட்டு மக்களிற்கு இலங்கை இராணுவம் வீதியெங்கும் துரத்தி துரத்தித் தீபாவளி வாழ்த்து கூறி வருகின்றது. வீதியில் ரோந்து செல்லும் படைப்பிரிவுகள் ஒருபுறமும் மற்றைய புறம் வீடுவீடாக செல்லும் படையினர் இன்னொருபுறமும் வாழ்த்து கூறிவருகின்றனர்.யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மற்றும் இராணுவத்தினரின் தீபாவளி வாழ்த்து என அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகளையே இவ்வாறு வழங்கி வருகின்றனர். யாழ்ப்பாண குடாநாடு முழுவதும் பரவலாக கடந்த மூன்று நாட்களாக இராணுவத்தினர் அமோகமாக வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
அத்துடன் தீபாவளியை முன்னிட்டு படையினர் பல்வேறு பகுதிகளில் கலைநிகழ்வுகளையும் நடத்தவிருப்பதாகவும் அழைப்பிதழ்களினில் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளிற்காகவே வீடு வருவதாக அச்சங்கொண்டு மக்கள் முடங்கிவருகின்றனர். மக்களது மனம் கவரும் நோக்கினிலேயே இம்முயற்சி நடப்பதாக கூறப்படுகின்றது.
19 அக்டோபர் 2014
கமிஷனர் அலுவலகத்தில் காத்திருக்கும் ஐங்கரன் கருணா!
லைகா நிறுவனத்தின் கத்தி படம் தீபாவளிக்கு வெளியாவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்துப் பேச கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்ட ஐங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தி, பல மணி நேரமாக அலுவலகத்திலேயே காத்திருக்கிறார். கத்தி படத்தை லைகா நிறுவனத்தின் பெயரை எடுத்துவிட்டு வெளியிடுமாறு தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. மீறி வெளியிட்டால் பெரும் போராட்டத்தைச் சந்திக்க நேரிடும் என தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள், மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன.மேலும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் விநியோகஸ்தர்களை நேரில் அழைத்து, படத்தை வெளியிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடப் போவதாகவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். கத்தியை எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அறிக்கை வெளியிட்டார். இன்னொரு பக்கம், கத்தி வெளியீடு குறித்தும், டிக்கெட் முன்பதிவு குறித்தும் லைகா நிறுவனம் விளம்பரங்களை வெளியிட்டு வந்தது. இந்த சூழலில், படத்தை வெளியிடுவது, அதையொட்டி எழுந்துள்ள சூழல் குறித்துப் பேச சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்துக்கு படத்தின் இணை தயாரிப்பாளரான ஐங்கரன் கருணாமூர்த்தி வரவழைக்கப்பட்டார். அவரிடம் லைகா நிறுவனத்தின் பெயரை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு லைகா மற்றும் ஐங்கரன் தரப்பு மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து மேற்கொண்டு பேசலாம் எனக் கூறி கருணாமூர்த்தியை கமிஷனர் அலுவலகத்திலேயே காத்திருக்க வைத்துள்ளனர். கத்தி படத்துக்கு இன்று முதல் டிக்கெட் முன்பதிவு என்று அறிவித்திருந்தனர். ஆனால் எந்த அரங்கிலும் முன்பதிவு தொடங்கவில்லை. அதேநேரம், தமிழகத்தில் வெளியாகாவிட்டாலும் பரவாயில்லை, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் படத்தை 22-ம் தேதி வெளியிடுவதில் உறுதியாக உள்ளதாம் லைகா.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)






