29 மே 2016

தமிழருவி மணியனின் முடிவுக்கு விவேக் வருத்தம்!

Comedy Actor Vivek Photo Gallery | Actor Vivek - Photo Galleryகாந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதற்கு, நடிகர் விவேக் வருத்தம் தெரிவித்துள்ளார். நான் இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை அரசியல் உலகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பதில்லை என்ற முடிவுடன் போகிறேன் என்று சிறந்த பேச்சாளரும், காந்திய மக்கள் கட்சியின் தலைவருமான தமிழருவி மணியன் [26-05-16] வியாழனன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு நடிகர் விவேக் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழருவி மணியன் பொது வாழ்வு மற்றும் அரசியல் வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளாராம். நேர்மை உறங்கலாமா? நீங்கள் விலகலாமா?” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், ஒரு பதிவில், “ஒரு முறை தமிழருவி மணியன் என் அலுவலகம் வந்தார். அவருக்கு ஒரு பேனா பரிசளித்தேன். வாங்க மறுத்து, சொன்னார், ’இலவசம் அனைத்தும் லஞ்சமே. எவ்வளவு பெருந்தன்மை!

26 மே 2016

வீரப்பனைப் பற்றி வீரப்பனே சொல்கிறார்!(காணொளி)

இப்பதிவை வெளியிட்ட முகநூல் நண்பருக்கு எம் நன்றிகள்!

15 மே 2016

விஜய் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு!

731639077நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கே தமது ஆதரவு என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.அவர் இதனை தனது பிரத்தியேக செயலாளர் ஊடாக அனைத்து இந்திய ரசிகர் மன்ற அமைப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த அறிவிப்பின் காரணமாக ரசிகர்களும் தமிழ் உணர்வாளர்களும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.இதேவேளை நாம் தமிழர் கட்சிக்கும் சீமானுக்கும் தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் பற்று கொண்ட சகாயம் ஐ.ஏ.எஸ், நடிகர் கமலகாசன், சத்தியராஜ், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, சிவக்குமார், இயக்குநர் பாரதிராஜா, தங்கர்பச்சான், ஆர்.கே. செல்வமணி, பாலா, சசிகுமார், சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், அமீர் மேலும் சிலர் மறைமுகமாக கூறியுள்ளமை வரவேற்கத்தக்கது என இந்திய தமிழ் எழுத்தாளர் ஒருவர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீமானுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் வாக்களிக்கும்படி புலம்பெயர் விஜய் ரசிகர் மன்ற தலைவர் அண்டோனி தெரிவித்திருந்தார். அத்துடன் நடைபெறவுள்ள தமிழக சட்டபை தேர்தலில் சீமானுக்கு தமது வாக்குகளை வழங்கி அவரை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இவ்வாறு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

10 மே 2016

ஜெர்மனியில் பயணிகள் மீது கத்திக்குத்து ஒருவர் பலி!

ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு - ஒருவர் பலிஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள்.இந்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா என்று போலிஸார் புலன்விசாரணை செய்கிறார்கள்.இன்று காலை 5 மணியளவில் கிரஃபிங் ரயில் நிலையத்தில் வைத்து 4 பயணிகளை அந்த 27 வயதான நபர் தாக்கியுள்ளார், காயமடைந்த ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கின்றது.
தாக்குதலாளியை போலிஸார் மடக்கிப் பிடித்ததாக தெரியவருகின்றது. அவர் அல்லாஹ் அக்பர் என்று கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர். ஆனால், தாக்குதலாளியின் நோக்கம் தெரியவில்லை.இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்ற சந்தேகத்தை தாம் புறந்தள்ளவில்லை என்று போலிஸ் தரப்பு பேச்சாளர் கூறியுள்ளார்.

நன்றி:பிபிசி தமிழ்

29 ஏப்ரல் 2016

தமிழகத்தில் 130 வயதிற்கு மேற்பட்ட 28 வாக்காளர்கள்!

தமிழகத்தில் 130 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் 28 பேர் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் வசிக்கும் அதிக வயதுள்ள வாக்காளர்களின் பட்டியல் தனியாக தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 627 பேர் உள்ளனர். மேலும் 130 வயதிற்கு மேற்பட்டவர்கள் 28 பேர் உள்ளனர்.வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு தினத்தன்று வரிசையில் நின்று வாக்களிக்கத் தேவையில்லை. அவர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 100 வயதிற்கு மேற்பட்டவர்களின் விபரம் வருமாறு, வேலூர் - 597,கோவை-440,சென்னை-434,திருப்பூர்-403, நெல்லை-359,விழுப்புரம்-355,காஞ்சிபுரம்-339,சேலம்-328,ஈரோடு-311,திண்டுக்கல்-306,திருவண்ணாமலை-303, கிருஷ்ணகிரி-282,திருச்சி-277,தஞ்சாவூர்-261,திருவள்ளூர்-260,தருமபுரி-230,கடலூர்-217,கன்னியாகுமரி-212, விருதுநகர்-190,மதுரை-183,நாகப்பட்டினம்-168,ராமநாதபுரம்-166,தூத்துக்குடி-154,சிவகங்கை-149,தேனி-145,புதுக்கோட்டை-130,திருவாரூர்-120-நாமக்கல்-113,அரியலூர்-64,பெரம்பலூர்-48,நீலகிரி-45,கரூர் 38.

27 ஏப்ரல் 2016

நாரந்தனையில் கிணற்றில் வீழ்ந்த சிறுமி மரணம்!

நாரந்தனைப்பகுதியில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீழ்ந்து சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று மாலை குறித்த ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிசாரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.சிறுமியின் உடலம் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் உடலம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

21 ஏப்ரல் 2016

தாயொருவர் கூண்டில் அடைத்து வைப்பு!


வவுனியா சாந்தசோலை கிராமத்தில் ஒருவர்  95 வயதான தனது பெற்ற தாயை 5 வருடங்களாக கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்படுள்ளது. அதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், தாயை  மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில்  அனுமதித்தனர். 
சாந்தசோலை கிராமத்தில் ஒருவர் 95 வயதான தனது பெற்ற தாயை 5 வருடங்களாக கூண்டில் அடைத்து வைத்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது. அதனையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்ற வவுனியா பொலிஸார், தாயை மீட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.இதேவேளை, குறித்த நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, தாயை கொடுமைப்படுத்தவில்லை எனவும் அவரை நல்லமுறையில் பராமரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், தன் மீது தவறான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இவ்வாறு செய்தியொன்று தெரிவிக்கின்றது.

16 ஏப்ரல் 2016

தமிழகத்தை கன்னடர்,தெலுங்கர்,மலையாளர் ஆள்வது சரி தமிழர் ஆண்டாள் இன வெறியா?

கோவை சிங்காநல்லூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்துப்பேசிய அக்கட்சியின் தலைவர் சீமான், சொன்னதைச் செய்தோம் எனக் கூறும் ஜெயலலிதா, தன் ஆட்சியில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போவதாக சொன்னாரா? என கேள்வி எழுப்பினார்.
"கன்னடர் வந்து நம் தமிழகத்தை ஆண்டுவிட்டார், வாழ்ந்திட்டீர்கள். மலையாளர் வந்து நம் தமிழகத்தை ஆண்டார் வாழ்ந்திட்டீர்கள். தெலுங்கர் வந்து நம் தமிழகத்தை ஆண்டார் வாழ்ந்திட்டீர்கள். அது போல தமிழகத்தை ஒரு முறை தமிழன் கையில்தான் கொடுத்துப்பாருங்களேன். கன்னடர் ஆளலாம் அது சரி, மலையாளர் ஆளலாம் அது சரி, தெலுங்கர் ஆளலாம் அதுவும் சரி, தமிழகத்தை தமிழர் ஆண்டால் அது வெறியா ?!
கலைஞர் அவர்கள் கூறுகிறார், மதுவை மூட வேண்டும் என்று. ஆம் உண்மைதான் நீங்கதான திறந்து வெச்சீங்க. உங்ககிட்டதான சாவி இருக்கும், நீங்கதான் மூடணும். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 'தலை நிமிர்ந்த தமிழகமாக மாற்றுவேன்' என்கிறார். முதலில் உங்கள் மந்திரிகளை தலை நிமிர்ந்து நடக்க வையுங்கள். மேலும் அவர் சொன்னதைச் செய்தோம் எனக் கூறிக்கொண்டு வருகிறார். தன் ஆட்சியில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்கு போவதாக எங்களிடம் சொன்னீர்களா ?!
தஞ்சாவூர் தி.மு க கோட்டை, கோவை அ.தி.மு.க.கோட்டையா? இந்த கோட்டை எல்லாம் எதுனால வந்தது? இந்த தமிழக மக்கள் போட்ட ஒவ்வொரு ஓட்டினாலும், ஒரு தடவ மாத்திப் போட்டுப்பாருங்க, நீங்க இல்லைனா இவுங்களாம் யாரு? ஜெயலலிதா மார்கெட் குறைந்த பழைய சினிமா நடிகை, கலைஞர் அவர்களும் அவர் கால கட்டத்தில் மார்கெட் இழந்த ஒரு கதாசிரியர், மத்தபடி ஒண்ணும் இல்ல.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெள்ளை சர்க்கரை எல்லாம் தடை செய்வொம். கருப்பட்டி, பனங்கற்கண்டுகளை பயன்படுத்த சொல்லுவோம். 'இல்ல.. எனக்கு அதுதான் பழகிப் போச்சு!' என்று சொன்னால், அந்த வெள்ளை சர்க்கரைக்கு இரட்டிப்பு வரியைக் கூட்டுவோம், நீ சாகறது சாவு எங்களுக்கு வரி கொடுத்திட்டு சாவு. மேம்பாலங்களை இடிப்பேன். அனைத்தும் பாதாள வழிப்பயணமாக மாத்துவேன். தானியங்கி பேருந்துகளை கொண்டு வந்து அதைக் கண்காணித்துக் கொள்ள ஊனமுற்றோரையும், திருநங்கைகளையும் பணியமர்த்துவேன்.
தமிழகத்துக்கு தலை நகரையே மாற்றுவேன். நம் தமிழகத்திற்கு ஐந்து தலை நகரம், அதாவது நிர்வாக வசதிக்காக சென்னையை திரை மற்றும் கணினி துறையின் தலைநகராக தொடர வைப்போம், அடுத்து திருச்சியை நிர்வாகத் தலை நகராக மாற்றுவோம், கன்னியாகுமரியை மெய்யியல் தலைநகராக மாற்றுவோம், மதுரையை கலை, பண்பாடு, இலக்கிய தலை நகராக மாற்றுவோம், அடுத்து தென்னகத்தின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த கோவையை தொழிற்துறையின் தலை நகராக மாற்றுவோம்.
அடுத்து மந்திரிகளில் எவருக்கு உடல் சரி இல்லை என்றாலும் அரசு மருத்துவமனையில்தான் அனுமதிக்க வேண்டும், அவ்வாறு இருந்தால் மட்டுமே அரசு மருத்துவமனைகளின் தரம் உயரும். இலவசமென கல்வியைத் தவிர எதுவும் இருக்காது. அனைவரது வாழ்வாதரத்தையும் உயர்த்துவோம். நிலங்களை உரிமையாளர்களிடமிருந்து குத்தகைக்கு வாங்கி அரசே அதில் விவசாயம் செய்யும். விவசாயம் என்பது அரசு வேலையாக்கப்படும்.
மொழிக் கொள்கை என்று பார்த்தால் தமிழ் வழி கல்வித் திட்டம், ஆங்கிலக் கல்வி கட்டாயம் ,சிறப்புக் கல்வி அனைவருக்கும் உண்டு. ஒரு குழந்தைக்கு ஓவியம் விருப்பப் பாடமாக இருந்தால், அதற்கு ஓவியம்தான் சிறப்புப் பாடம். அந்த குழந்தை அந்த பாடத்தில் தோற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு செல்ல முடியாது. இதன் மூலம் தனித்திறன் வளரும்.
அடுத்து நீர் சேமிக்கும் திட்டத்தை மேம்படுத்துவோம். அடுத்து எது தமிழ்த்தாய் வாழ்த்து? நீராரும் கடலுடுத்த பாடலா? திராவிடர் நல் திருநாடா? மானத் தமிழ் நாட்டுல எங்கடா திராவிடர் நாடு? கொளுத்தி விடுவோம்.தமிழுக்கு அமுதென்று பேர், அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' போடுவோம். இதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக அத்தனையும் மாற்ற போகிறோம்" எனக் கூறினார்.

நன்றி:விகடன்

12 ஏப்ரல் 2016

இது பணநாயகத்திற்கும் ஜனநாயகத்திற்குமான போர்!சீமான் முழக்கம்!

இதுவரை நான் தூங்க விடாமல் தடுத்தேன்.இப்போ உலகம் முழுதும் இருப்பவர்கள் என்னை தூங்க விடாமல் தடுக்கிறார்கள் என இன்றைய குன்னூர் எழுச்சியுரையில் செந்தமிழன் சீமான் தெரிவித்தார்.நல்லதொரு ஆட்சி மலரவும் தமிழர்கள் தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் தமிழக மக்கள் முன்வரவேண்டும்.தமிழக மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு அளிக்கப் போகும் வாக்கு உலகத்தமிழர்களின் விடிவுக்கான வாக்கு என்பதை புரிந்து கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென புளியங்கூடல்.கொம் வலைக்குழுமம் தமிழக வாக்காளர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.

08 ஏப்ரல் 2016

இலங்கையில் அதிகரித்து வரும் சடலங்கள் மீட்பு!

மட்டக்களப்பு,பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள காட்டுப் பாலத்தடி பகுதியில் இருந்து நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் சடலத்திற்கு அருகில் துவிச்சக்கர வண்டி ஒன்று காணப்படுவதாகவும்,குறித்த நபர் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது பாலத்திற்குள் வீழ்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.அண்மைக்காலங்களில் தொடர்ந்து சடலங்கள் மீட்கப்படுவதான செய்திகள் வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

30 மார்ச் 2016

மறவன்புலோவில் வெடி பொருட்கள் மீட்பாம்!

தென்மராட்சி மறவன்புலோ மத்தியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் பல நேற்றிரவு செய்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது,தற்கொலை அங்கி-1,கிளைமோர்-4 கிளைமோர் பற்றறி-2 C4 வெடிமருந்து - 12kg 9MMகைதுப்பாக்கி ரவை-100, சிம் காட்டுகள் 5 என்பன மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த அவர்கள் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனராம்.

20 மார்ச் 2016

உலகத் தமிழர்களை காயப்படுத்திய வைகோவின் பேச்சு!

காலம் காலமாக தமிழர்களுக்கு துரோகம் இளைக்கும் படலம் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது,அந்த வழியிலே தன்னையும் வெளிக்காட்டி இருக்கின்றார் தமிழர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட,மரியாதைக்கு உரியவராக கருதப்பட்ட வைகோ அவர்கள்.தமிழீழப் போராட்டம் தனிலே தன்னையும் ஒரு போராளியாகக் காட்டிக்கொண்ட வைகோ அண்மையில் தமிழ் தேசியத்திற்கு எதிராக பேசியிருப்பது அவரின் வேடம் கலைந்து விட்டதையே காட்டுகிறது.தானும் ஒரு அற்ப அரசியல்வாதிதான் என்பதையே அவரின் பேச்சு நிலை நிறுத்தி நிற்கிறது.அவரின் இப்பேச்சுக் குறித்து தமிழ் உணர்வாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள் எத்தகைய கண்டனங்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் உன்னத நோக்கங்களுக்காக போராடி வரும் சீமான் அவர்களின் கரங்களை பலப்படுத்த வேண்டியது உலகத் தமிழர்களின் தலையாய கடமையாகும் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

11 மார்ச் 2016

திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் அவர்களுக்கு சம்பந்தன் அனுதாபம்!

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக சளைக்காது குரல் கொடுத்தவர் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். காலம் சென்ற மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் தொடர்பில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- 1977ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்ட தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் துணைவியார் மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் குடும்பம், அரசியல் என இரண்டறக் கலந்து வாழந்தவர்.அத்துடன், தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காகச் சளைக்காது குரல் கொடுத்த ஒருவராவார். தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் நடவடிக்கைகள் காரணமாக கைதுசெய்யப்ட்டு அரசியல் கைதியாக திருமதி மங்கையர்க்கரசியும் சிறைவாசம் அனுபவித்தவராவார். தான் இளம் சட்டத்தரணியாக தொழில்புரிந்த காலத்திலிருந்தே தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் அவரின் மனைவியுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளேன். தமிழரசுக் கட்சியின் முன்னணிச் செயற்பாட்டாளர்கள் அனைவராலும் "மங்கை அக்கா" என அன்புடன் அவர் அழைக்கப்பட்டார்.
தமிழ் மக்களின் விடிவுக்காக மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டு வந்த அவரது இழப்பு அன்னாரது குடும்பத்திற்கு மட்டுமல்ல, தமிழ் பேசும் அனைவருககுமே ஒரு பேரிழப்பாகும். சத்தியாக்கிரகம் உள்ளிட்ட எமது கட்சியால் முன்னெடுக்கப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்று செயற்பட்ட துணிச்சல்மிக்க ஒரு பெண்மணியாவார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அவரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 பிப்ரவரி 2016

மீண்டும் ஒப்பந்தம் இட்டனர் தி.மு.கவும் காங்கிரசும்!

தி.மு.க.காங்கிரஸ் கூட்டணி
வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை தி.மு.க.காங்கிரஸ் இணைந்து சந்திக்கும் என இருகட்சிகளும் தெரிவித்துள்ளன. தி.மு.க.தலைவர் மு.கருணாநிதி,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் இடையேயான சந்திப்பையடுத்து இந்த அறிவிப்பு வெளியானது.காங்கிரஸ் கட்சியின் தமிழகத்திற்கான மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் ஆகியோர் சனிக்கிழமையன்று காலை 11.30 மணியளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுர இல்லத்திற்கு வந்து சந்தித்தனர்.இந்த சந்திப்பின்போது மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், தி.மு.க. - காங்கிரஸ் இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்கும் என்று தெரிவித்தார்.எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது இனிமேல்தான் முடிவுசெய்யப்படும் என்றும் இந்தக் கூட்டணியில் வேறு கட்சிகள் இடம்பெறுமா என்பதை தி.மு.க. தலைமையே முடிவுசெய்யும் என்றும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.ஈழப் பிரச்சனையை முன்வைத்து 2013ஆம் ஆண்டில் தி.மு.க.வும் காங்கிரசும் பிரிந்த நிலையில், இப்போது மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது குறித்துக்கேட்டபோது, அரசியலில் பல்வேறு நெருக்கடிகள், சூழல் காரணமாக பல்வேறு விதமான முடிவுகளை எடுக்கவேண்டியிருப்பதாகவும் ஆனால், பெரும்பலான தருணங்களில் இந்த இரண்டு கட்சிகளுமே இணைந்து தேர்தலை சந்தித்திருப்பதாகவும் குலாம் நபி ஆசாத் கூறினார்.இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், தே.மு.தி.கவுக்கு கருணாநிதி ஏற்கனவே ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவும் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டன. 2013ஆம் ஆண்டில், ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மாநாட்டில் இந்தியா மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு தொடர்பாக எழுந்த பிரச்சனையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை இரு கட்சிகளுமே தனித் தனியாக சந்தித்தன.

09 பிப்ரவரி 2016

யாழ்,பிரதேச செயலகங்களுக்கு மாகாணசபை உறுப்பினர்கள் நியமனம்!

வட,மாகாணசபை
யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களிலுமுள்ள தேவைகள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் செயற்படுவதற்காக, வட மாகாண சபை உறுப்பினர்களை ஒவ்வொரு பிரதேச செயலகம் ரீதியாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார்.பிரதேச செயலகங்களுக்குரிய அபிவிருத்தி, ஏனைய துறைசார் பௌதீக வள தேவைகள் தொடர்பாக தமது செயற்பாடுகளை மாகாண சபை உறுப்பினர்கள் முன்னெடுப்பதுடன், அவர்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளை மட்டும் தன்னிடம் முறையிடுமாறு முதலமைச்சர் தெரிவித்ததுள்ளார். இதன்மூலம், வட மாகாணத்துக்குட்பட்ட ஒவ்வொரு பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி, ஏனைய துறைசார் செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றை இலகுவில் நடைமுறைப்படுத்துவதற்கு வடமாகாண சபையால் முடியும் என எதிர்பார்ப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

நியமனம் பெற்றோர் பெயர்விபரம்:
01.அனந்தி சசிதரன்- வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை)
02. எம்.கே.சிவாஜிலிங்கம்- வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி)
03. விந்தன் கனகரட்ணம் - காரைநகர்
04. பா.கஜதீபன்- நல்லூர்
05. ச.சுகிர்தன் - வேலணை தெற்கு, நெடுந்தீவு
06. கே.சயந்தன்- யாழ்ப்பாணம்
07. கே.சர்வேஸ்வரன்- கரவெட்டி
08. ஆ.பரஞ்சோதி- உடுவில்
09. சி.தவராசா- பருத்தித்துறை
10. வே.சிவயோகன்- கோப்பாய்
11. எஸ்.அகிலதாஸ் - ஊர்காவற்றுறை
12. கே.தர்மலிங்கம்- சங்கானை, சண்டிலிப்பாய்
13. இமானுவல் ஆர்னோல்ட்- சாவகச்சேரி

03 பிப்ரவரி 2016

தமிழீழம் குறித்துப் பேசுவதில் பயனில்லை-சிறீதரன்

தமிழீழம் என்ற பேச்சை எடுத்தால் புத்திஜீவிகள் பயப்பிடுகின்றார்கள். தமிழீழம் குறித்து இனியும் பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் கிளிநொச்சி மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான சிறிதரன் தெரிவித்ததாக ஊடகங்கள் பல செய்தி வெளியிட்டுள்ளன.புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிவது தொடர்பாக கிளிநொச்சியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி கருத்தை வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சிவஞானம் சிறிதரன்,
“தமிழீழத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். சிங்கள மக்கள் மத்தியில் நின்று தமிழீழத்தை வேண்டிப் பேச இயலாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது விஞ்ஞாபனத்தில் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து போட்டியிடவில்லை. தமிழீழ கோரிக்கைக்கு அப்பால் சென்று தீர்வை முன்வைத்து போட்டியிட்டவர்களையும் மக்கள் நிராகரித்துள்ளனர். கிடைக்கப்போகும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலுள்ள அரசியலமைப்புக்களை போன்றதொரு அரசியலமைப்பை இலங்கையில் கொண்டுவர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். இதனை ஆதரிக்க வேண்டும். தமிழீழம் பற்றி பேசி, புதிய அரசியலமைப்பு முயற்சிகளை குழப்பாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.
இன்று சிறிதரன் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியின் நிறுவனத் தலைவரான தந்தை செல்வா அவர்கள் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி 1976 ஆம் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின்மூலம் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்தது. “மேலும் இம்மாநாடு, சுதந்திரத்திற்கான இப்புனிதப்போரில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்க முன்வரும்படியும் இறைமையுள்ள தமிழ் ஈழ அரசென்ற இலக்கு எட்டப்படும்வரை அஞ்சாது போரிடும் படியும் பொதுவில் தமிழ்த் தேசிய இனத்துக்கும் குறிப்பாக தமிழ் இளைஞர்களுக்கும் அறைகூவல் விடுக்கின்றது.” என தீர்மானத்தின் இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தை செல்வா அவர்கள் தீர்மானத்துடன் நின்றுவிடாது, மக்கள் கருத்தை அறியும் முகமாக 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியானது இந்த தீர்மானத்தை முன்வைத்து மக்கள் ஆதரவைக் கோரியது. தமிழ் மக்களும் அமோக ஆதரவைத் தெரிவித்து கூட்டணியை வெற்றிபெறச் செய்தார்கள் என்பது வரலாறு,
ஆனால் அதன் பிறகு தமிழரசுக் கட்சியோ அல்லது தமிழர் விடுதலைக் கூட்டணியோ தாம் தமிழீழக் கோரிக்கையைக் கைவிடுவதாக தீர்மானம் நிறைவேற்றவில்லை. தமிழீழத்தை கைவிடுகிறோம் என எந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டு மக்களைச் சந்தித்ததில்லை . நிலைமை இப்படியிருக்கும்போது தமிழ் மக்கள் தமிழீழத்தை நிராகரித்துவிட்டார்கள் என்று சிறிதரனால் எப்படி முடிவுக்குவர முடிந்தது. அடுத்து வரும் தேர்தல்களில் சிறிதரனாவது கிளிநொச்சியில் ‘தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம்’ ‘என் தலைவர் பிரபாகரன் இல்லை சம்பந்தன் தான் ‘ என்ற உண்மையைச் சொல்லி வாக்குச் சேகரிப்பாரா என்பது சமானியர்களின் கேள்வி.

நன்றி:தமிழ் லீடர்

31 ஜனவரி 2016

ஒரு பெண் போராளியின் வாழ்க்கைப் போராட்டம்!

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகளாகவுள்ளன. இந்த நிலையில் போருக்குப் பின்னரான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் பற்றி பேசுகின்ற இலக்கியப் படைப்புகள் பல வெளிவருகின்றன.
அந்த வகையில், முன்னாள் போராளிகளான பெண்களின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரிக்கும் விதத்தில் யாழிசை என்ற நாவல் ஒன்று வெளிவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட இந்த நாவல், இலக்கிய உலகில் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த நாவலை எழுதிய சிவ ஆரூரன் என்ற சிவலிங்கம் ஆரூரன் ஒரு பொறியியல் பட்டதாரி.
மெகசின் சிறைச்சாலையில் கடந்த 8 ஆண்டுகளாக 'அரசியல்' கைதியாக தடுத்துவைக்கப்பட்டுள்ள சிவ ஆரூரனின் முதல் இலக்கிய முயற்சி இந்த நாவல் தான்.
சிறைச்சாலையில் நூல் வாசிப்பு மூலம் பெற்ற இலக்கிய அறிவையும் வாழ்க்கை அனுபவத்தையும் கொண்டு அவர் இந்த நாவலை எழுதியுள்ளார்.இந்த நாவல் பற்றி பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட வவுனியாவில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளரும் திறனாய்வாளருமாகிய நடராஜா பார்த்தீபன், 'அண்மைக் காலத்திலே நான் வாசித்த நாவல்களிலேயே இந்த நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல் என்று கூற விரும்புகிறேன்' என்றார்.'யாழிசை நாவலின் கதாநாயகி சமூகத்திலே படுகின்ற துன்பங்களையும், கஸ்டங்களையும் இந்தக் கதையின் ஊடாகக் காட்டுகின்ற நாவலாசிரியர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் இன்றைய சமூக வாழ்க்கையை குறியீடாக சித்தரித்திருக்கின்றார் என்பதை மறுக்க முடியாது' என்றார் பார்த்திபன்.
எம் மண்ணின் மைந்தர்கள் பற்றி தத்ரூபமான கதையை நாவலாசியர் அமைத்துள்ளார் என்றார் பார்த்திபன்.

நன்றி:பிபிசி தமிழோசை

23 ஜனவரி 2016

வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் ஜெர்மனி!

ஜெர்மனியின் எசன் நகர்
உலகிலே வாழ்வதற்கான சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 41 ஆவது இடத்திலுள்ளது. இதில் ஜெர்மனி முதலாம் இடத்திலும் கனடா, பிரித்தானியா ஆகியன இரண்டாம், மூன்றாம் இடத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

அண்மையில் உலகப் பொருளாதார மாநாடு சுவீடனில் உள்ள லாவோஸ் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களிடையே இது தொடர்பான கருத்துக்கணிப்பு நடைபெற்றபின்னரே இந்தப் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளது. இதில் முன்னணியில் இருக்கும் 60 நாடுகளின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்து. உலகின் 60 நாடுகளின் கலாசாரம், தொழில், பாரம்பரியம், வர்த்தகம், வாழ்கை தரம் போன்ற 24 வகை தகுதிகளின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்தப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மதிப்பெண்களின் அடிப்படையில் இதில் முதலாம் இடத்தினை ஜேர்மனி, இரண்டாம் மூன்றாம் இடத்தினை முறையே கனடா, பிரித்தானியாவும் பெற்றுள்ள நிலையில் 4 ஆம் இடத்தினை அமெரிக்காவும் பெற்றுக்கொண்டன. மேலும் ஐந்து தொடக்கம் 10 வரையில் முறையே சுவீடன் (5), அவுஸ்திரேலியா (6), ஜப்பான் (7), பிரான்ஸ் (8), நெதர்லாந்து (9), டென்மார்க் (10) ஆகிய நாடுகளும் பெற்றுக்கொண்டன. இதில் சீனா 17ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

11 ஜனவரி 2016

குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை!

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (38). இவரது மனைவி கலைச்செல்வி (32). இவர்களுக்கு கவிப்பிரபா (13), நவீனா (7) என்று இரு பெண் குழந்தைகளும், பத்து மாதத்தில் குகன் என்ற ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.நவீனாவுக்கு காது கேட்கும் திறன் குறைபாடு இருந்தது. கோவை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல, பத்து மாத குழந்தை குகனுக்கும், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது, சில நாட்களுக்கு முன் தெரியவந்தது.குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு குறித்து, கலைச்செல்வி தொடர்ந்து கவலையுற்று வந்துள்ளார். இதனால், மேலும் விரக்தியடைந்த கலைச்செல்வி, நேற்று காது குறைபாடுள்ள இரு குழந்தையும் தன்னுடைய உடலுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டு, கயிற்றின் இன்னொரு முனையில் பெரிய கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.இந்நிலையில், அதிகாலையில் தூங்கி எழுந்த மூத்த மகள் கவிப்பிரபா, தனது தாய், தங்கை, தம்பியை காணாததைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அருகில் தூங்கிக்கொண்டிருந்த தந்தையை எழுப்பியுள்ளார்.கதவை திறந்து பார்த்தபொழுது வீட்டின் வெளிப்பக்கக் கதவு பூட்டியிருந்ததால், அருகில் உள்ள ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து திறக்கச் சொல்லியுள்ளார். பின்னர், கலைச்செல்வியையும் குழந்தைகளையும் தேடிப்பார்த்துள்ளனர்.எங்கும் காணாததால், மீண்டும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கலைச்செல்வி எழுதி வைத்திருந்த கடிதம் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த செல்வராஜ, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன் பேரில், உடுமலை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கிணற்றிலிருந்து, சடலங்களை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

29 அக்டோபர் 2015

தமிழரின் உரிமைகளை போராடியே பெறவேண்டும்-சொல்ஹெய்ம்!

இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற புத்தக வெளியிட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழர்கள் தமது உரிமைகளைப் போராடியே பெறவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைப் பங்கு குறித்து லண்டனில் நூல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. மார்க் சோல்டர் என்ற ஆய்வாளரினால் இயற்றப்பட்ட 'சிவில் யுத்தமொன்றை முடிவுக்குக் கொண்டுவர இலங்கையில் நோர்வேயின் சமாதான முயற்சி' என்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில், நோர்வேயின் இலங்கைக்கான சமாதான தூதுவராகப் பலவருடங்கள் பணிபுரிந்த எரிக் சொல்ஹெய்மும், முன்னாள் நோர்வே அமைச்சர் விதார் ஹெல்கிசனும் கலந்துகொண்டனர். அங்கு உரையாற்றிய எரிக் சொல்ஹெய்ம், இலங்கையில் புதிய ஆட்சி ஏற்பட்டிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கின்றபோதிலும், ஈழத்தமிழர்கள் களத்திலும், புலத்திலும் தொடர்ச்சியாகப் பல்வேறு வழிகளில் போராட்டங்களை மேற்கொள்வதன் ஊடாகவே தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், சிங்களவர்கள் தமிழர்களின் அரசியல் உரிமைகளை ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவது கிடையாது என்றும் தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற தேர்தலில் பெரும்பான்மையான சிங்கள மக்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கே வாக்களித்திருந்தனர் என்றும், தமிழர்களும், முஸ்லிம்களும் இணைந்தே ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடிந்தது என்றும் சுட்டிக்காட்டிய அவர், புதிய அரசு நேர்த்தியான வழியில் சமாதான முயற்சிகளில் ஈடுபட சர்வதேச சமூகம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.