28 டிசம்பர் 2016
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதல்ல!
25 டிசம்பர் 2016
தொடரும் போராளிகளின் திடீர் மரணம்!
ரஷ்ய இராணுவ விமானம் விழுந்து நொருங்கியுள்ளது!
இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் டியு-154 ரக விமான வகையை சேர்ந்த இந்த விமானத்தில், ரஷ்ய ராணுவத்தினர், புகழ்ப்பெற்ற அலெக்ஸான்ட்ராஃப் ராணுவ இசைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள லடாகியா மாகாணத்தை நோக்கி இந்த விமானம் சென்று கொண்டிருந்தது.மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், சோச்சி நகரில் உள்ள அட்லெர் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.
20 டிசம்பர் 2016
மரணத்தில் மர்மம் ஜெயலலிதாவின் தோழி வழக்கு!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெயலலிதாவின் தோழி என கூறும் கீதா என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனு தாக்கலுக்கு பிறகு, நிருபர்களிடம் கீதா கூறியது: நான் ஜெயலலிதாவுடன் பள்ளி காலத்திலிருந்து நட்புடன் இருந்தேன். அவரது மரணம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்தேகிக்கிறேன்.ஜெயலலிதா விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதாவின் உறவினர் தீபாவுக்கு எனது ஆதரவு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். சசிகலா, நடராஜன், இளவரசி, அப்பல்லோ பிரதாப் ரெட்டி, முதல்வர் பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், ஆலோசகர் ஷீலா பாலா கிருஷ்ணன், சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும்.பதவி, அதிகாரம், சொத்து ஆகிய காரணங்களுக்காக கொலை செய்ய, தவறான சிகிச்சை அளிக்க முன்வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துகளை கைப்பற்ற கொலை செய்ததாக, இந்திய தண்டனை சட்டம் 327, 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் போயஸ் கார்டன், அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீதா சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வாதிடுகிறார்.17 டிசம்பர் 2016
நெடுந்தீவில் குதிரை ஓடியவர் விளக்கமறியலில்!
நெடுந்தீவில் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் முடிவடையும் இந்தப் பரீட்சையில் குறித்த நபர் வேறொருவருக்காக பரீட்சை எழுதிய நிலையில் கடந்த 15ஆம் திகதி சித்திர பாடத்தன்று கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.ஊர்காவற்றுறை பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன் அவரது அடையாள அட்டை, பரீட்சை சான்றிதழ்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார். இதேவேளை மற்றைய நபர் தலைமறைாவாகியுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.12 டிசம்பர் 2016
புனர்வாழ்வு பெற்று விடுதலையான மற்றோர் போராளி மரணம்!
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் வெலிக்கந்தை திருகோணமடு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த திக்சன், இரண்டரை வருடங்களின் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். விடுதலை செய்யப்பட்ட நிலையில் திக்சன், சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
06 டிசம்பர் 2016
"துரோகிகள்" புடைசூழ துயில் கொள்கிறாரே ஜெ... அதிமுகவினர் கடும் விரக்தி!
04 டிசம்பர் 2016
முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு!லண்டன் மருத்துவர் அவசர ஆலோசனை!
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து தெரிந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வருகைத்தந்துள்ளார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயிலுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக அப்போலோ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அவருடைய உடல் நலம் பெற மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டுமென்று அப்போலோ கேட்டு கொண்டுள்ளது.முன்னதாக, கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் சிகிச்சை பெற்று வந்தார்.
சற்று உடல் நலம் பெற்று, பொது வார்டுக்கு மாற்றப்பட்டு, சீக்கிரம் முழு உடல் நலத்துடன் வீடு திரும்புவார் என்று இன்று முற்பகல் அதிமுக தெரிவித்திருந்த நிலையில் அவருக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ தெரிவித்தது.
27 நவம்பர் 2016
தமிழீழத்தில் பெரும் எழுச்சி கொண்ட மாவீரர் நாள் நிகழ்வுகள்!
26 நவம்பர் 2016
தமிழர் பகுதிகளில் நாளை துயிலுமில்லங்களில் சுடரேற்றல்!
24 நவம்பர் 2016
புலிகளின் தலைவர் ஒருவரை கொல்வோமா எனக் கேட்டார்கள்!
புலிகளின் தலைவர் ஒருவரை கொல்வோமா எனக் கேட்டார்கள்!எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?’ என, கருணா அமைப்பைச் சேர்ந்த சாமி என்பவர் கேட்டார். அதற்கு நான், சரி எனக் கூறினேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முதலாவது சாட்சியாளரான பிருதிவிராஜ் மனம்பேரி, நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.அதுமட்டுமின்றி, இந்த வழக்கின் சந்தேகநபரான சாமி என்றழைக்கப்படும் பழனிச்சாமி சுரேஷை, கொழும்பு கங்காராமை, லொன்றிவத்தை பகுதியில் வைத்து, ரவிராஜ் எம்.பி கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் சந்தித்தபோது, அவருடன் இருந்த கடற்படை வீரர்கள் மூவரையும் மன்றுக்கு அடையாளம் காட்டினார்.த.தே.கூ எம்.பியான நடராஜா ரவிராஜ், படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய ஜூரிகள் சபை முன்னிலையில், நேற்று முற்பகல் 11.17 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இருந்து, அரச தரப்புச் சாட்சியாக மாறிய பிருதிவிராஜ் மனம்பேரி சாட்சியமளிக்க, சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டார்.அவரிடம், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரலான ரோஹந்த அபேசூரிய கேள்வி கேட்டபோதே, அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறியதோடு, பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கேள்விகளுக்குப் பதிளித்து, சாட்சியம் வழங்கினார். அவர் சாட்சியமளித்த போது “கிழக்கு மாகாணத்தில், பொலிஸ் அதிகாரியாக நான் பணியாற்றியபோது, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து பிரிந்த கருணா குழுவினர் எங்களுடன் சேர்ந்து செயற்பட்டனர். இதன்போதே சாமி என்றழைக்கப்படும் பழனிச்சாமி சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுடன் இணைந்து, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முகாமொன்றைத் தாக்க முயன்றபோது, விசேட அதிரடிப்படையினர் எங்களைத் தடுத்தனர்.அதனையடுத்து, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு நான் மாற்றப்பட்டேன். நான், கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில், கருணா குழுவைச் சேர்ந்த சாமி என்பவர், கொட்டாஞ்சேனைப் பகுதியிலேயே தங்கியிருந்தார். 2006.11.09 அன்று மாலை 4.30 மணியளவில், சாமியிடமிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பின் பின்னர், கங்காராமை, லொன்றிவத்தை பகுதியிலுள்ள கட்டடத்தில் அவரைச் சந்தித்தேன். அங்கேயே, கடற்படை அதிகாரிகளான பிரசாத் ஹெட்டியாராச்சி, செனவிரத்ன, வஜிர என்ற கடற்படை அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னரும், அப்பகுதியில் வைத்து அவர்களைச் சந்தித்துள்ளேன்.எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?” என, சாமி கேட்டார். நானும் சரி என்றேன். அன்றையதினம், தனது மோட்டார் சைக்கிளையும் தலைக்கவசங்கள் இரண்டையும் என்னிடம் தந்த சாமி, நாளை (2006.11.10) காலை 6 மணிக்கு பொரளை கனத்தை மயானத்துக்கு அருகில் வருமாறு என்னிடம் கூறினார். நானும், அந்த இடத்துக்குச் சென்றேன்” எனச் சாட்சியமளித்தார்.
அத்துடன், சாட்சியமளிப்பு நிறுத்தப்பட்டது. முதலாவது சந்தேகநபரின் சாட்சியமளிப்பு, இன்றும் தொடரவுள்ள நிலையில், வழக்கு விசாரணையை, இன்று காலை 10.30க்கு, நீதிபதி ஒத்திவைத்தார்.
13 நவம்பர் 2016
முதல்வர் ஜெயலலிதா பெயரில் அறிக்கை!
கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெயரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஓர் அறிக்கை வெளியாகியிருக்கிறது.அனைவரது பிரார்த்தனையாலும், தான் மறுபிறவி எடுத்துள்ளதாக அதில் அவர் தெரிவித்துள்ளார். வெகு விரைவில் முழு உடல் நலன் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.வரும் 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.
அதேபோல், தனது கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில், தொண்டர்கள் அனைவரும் அதிமுக வெற்றிக்காகப் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
ஆனால், அந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் கையொப்பம் இடம்பெறவில்லை. பெயர் மற்றும் பதவி மட்டுமே குறி்ப்பிடப்பட்டுள்ளது.
அவரது உடல்நிலை தேறிவிட்டதாக அப்போலோ மருத்துமவனை தலைவர் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்த நிலையில், அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே, அவரது உடல் நிலை குறித்த தெளிவு இல்லாத நிலையில், இந்த அறிக்கை வந்திருக்கிறது.இடைத் தேர்தலில் கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கவும், வாக்காளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, தனது கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யவுமே இந்த நடவடிக்கை என அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.
03 நவம்பர் 2016
போராளி ஒருவர் திடீர் மரணம்!
21 அக்டோபர் 2016
யாழ்,பல்கலை மாணவர்கள் படுகொலை!ஐவர் கைது என தெரிவிப்பு!
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 3 ஆம் வருட மாணவர்களான கந்தரோடையைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்ஷ்ன் என்ற 24 வயதுடைய மாணவனும், 155 ஆம் கட்டை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த நடராசா கஜன் என்ற 23 வயதுடைய மாணவனும் மோட்டார் சைக்கிளில் சென்ற நிலையில் உயிரிழந்திருந்தனர். கந்தரோடையில் இருந்து யாழ்ப்பாணம் - பல்கலைக்கழக விடுதிக்கு, சென்று கொண்டிருந்த போது, கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதிலொன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இவர்கள் இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு 11.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக மாணவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மாணவன் சுலக்சனின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதை சட்ட மருத்துவ அதிகாரி தனக்குக் காட்டியதாக அவரது தந்தையார் தெரிவித்தார்.
இதனால் மாணவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அங்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம், இந்தக் கொலைகளுக்கு நீதியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை பகிஷ்கரித்துள்ளதுடன், உயிரிழந்த மாணவர்களின் உருவப் படங்கள் பொறிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பதாதைகளையும் தொங்கவிட்டுள்ளனர். அத்துடன் பல்கலைக்கழகத்தில் கருப்புக் கொடிகளும் தொங்கவிடப்பட்டுள்ளன.
14 அக்டோபர் 2016
அவுஸ்திரேலியாவில் மேயர் தர்மராசாவான ஈழத்தமிழன்!
ஆனால் எதுவும் எண்ணியபடி நடப்பதில்லை. சீவியத்திற்குரிய பிளைப்பைத்தேட வேண்டும். நாம் ஒரு குடிபெயர்ந்த சமூகம். கிடைத்ததைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எப்படியோ சீவியம் பண்ணவேண்டும்.
லவன் சிட்னிக்குப் போனான். அங்கே ஆமி சேமப்படையில் பதிந்து கெண்டான். பட்டதாரித் தொழிலுக்கு விண்ணப்பிக்கவில்லை. அம்மாவுக்காகப் படித்த பட்டம்தானே! அவனுக்கு தான் என்ன செய்கிறேன் என்பதே தெரியாது.
அமைதியாக றோயல் மிலிரறி கொலீச்' சில் சேர்ந்தான். மனைவிக்குக்கூடத் தெரியாது. யாருக்கும் சொல்லவில்லை. தன் வருங்காலத்தைப் பணயம் வைத்தான்.
காலத்தின் விளைவாலும் விதி விட்ட வழியாலும் அவனுடைய விடா முயற்சியாலும் சரித்திரம் படைத்தான்.
தியாகங்களுடன் பிரயாணம் ஆனால் அன்பின் உழைப்பு லவனுடைய இளவயது ஆசை நிறைவேறியது. ஆனால் இன்னமும் தியாகங்கள் செய்ய வேண்டியிருந்தது. அவனுடைய பாதை சுலபமானதாக இல்லை. குடும்பத்தைப் பிரிந்து கடமை நிமித்தம் அவுஸ்திரேலியாவின் பல பாகங்களுக்கும் சென்றான். ஆனால் மிக உபயோகமானது என்றே சொல்ல வேண்டும்.
எதற்கும் ஒரு குழுத் தேவை. நான் அறிந்த மட்டில் லவன் நண்பர்களுடன் ஒளிவு மறைவின்றிப் பழகுவான். அவனுடைய மனைவி அவனுக்கு உறு துணை. அவனுடைய எல்லா முயற்சியிலும் அவளே கதாநாயகி. ஏன் லவனுக்கு அவளே வழிகாட்டி. லவனால் கட்டப்பட்ட கோட்டையின் அத்திவாரமே அவள்தான். உங்களுக்கு ஒரு கனவு நனவாக வேண்டுமானால் புத்திசாலித்தனமாக குழுவைத் தெரிவு செய்யவேண்டும். தனி மரம் தோப்பாகாது. தினமும் சிறிய செயல்கள் மீட்டவல்லவன் ஆமையும் முயலும் போட்டிபோல தன்னுடைய செயல்கள் ஒவ்வொன்றிலும் நிதானமாக இருப்பான்.
ஒவ்வொரு அடிக்கும் பின்னால் அடுத்த அடியை வைத்துக் கொண்டே இருப்பான்.
வேர்களை மதியுங்கள். உங்கள் வினைச்சலுக்குக் காரணமானவர்களைப் பெருமைப் படுத்துங்கள்.
லவன் பெருமையுடன் ஒரு அவுஸ்திரேலியன்! பெருமையுடன் ஒரு தமிழன். இரண்டும் அவனுக்கப் பெறுமதியானவை. இது எல்லா குடியேற்ற வாசிகளுக்கும் அகதிகளுக்கும் பொருந்தும்.
லவன் இலங்கையிற் பிறந்து தமிழனாக வளர்க்கப்பட்டவன். போரின் கொடுமைகளை அனுபவித்த குடும்பம். லவன் பெருமையுடன் தமிழ் பேசவும் எழுதவும் செய்வான்.
அவனுக்கு தன் மொழி பண்பாடு சரித்திரம் யாவற்றிலும் அபாரப் பெருமை. யார் என்ன கூறினாலும் விட்டுக் கொடுக்க மாட்டான்.
ஆனால் அவுஸ்திரேலியாதான் அவனுக்கு வாழ்வு கொடுத்தது என்பதைக் கூறத்தவறமாட்டான். தன் நாடு தரத் தவறியதை தந்தது அவுஸ்திரேலியாதான் என்ற விசுவாசம் அவனுக்கு என்றும் உண்டு.
அதனால் அவன் அதனைப் பெருமைப் படுத்துவான். அவுஸ்திரேலியன் போலவும் இருப்பான் இலங்கையன்போலவும் இருப்பான்.
வேர்களை நினையுங்கள். உங்கள் விளைச்சலுக்குக் காரணமானவர்களை மறவாதீர்கள்.
லவன் பட்டாளத்தில் சேர எண்ணிய போது எனக்குப் புரியவில்லை. அது அவனுடைய கனவு! அவன் இன்று அதனை நனவாகக் காண்கிறான்! மேயர் தருமராசாவாக! அவனுடைய 35வது பிறந்த நாளில்! ஒரு பெரிய சாதனை! ஒரு சிறிய அகதிப் பையனுக்கு! வாழ்த்துக்கள்!
இது வெறும் தொடக்கம்தான்...! உனக்கு ஒரு பெரிய எதிர்காலம் உண்டு.
நன்றி:செய்தி இணையம்
02 அக்டோபர் 2016
பிரபாகரன் தெய்யோ…சிங்கள பெண் சிப்பாய்கள் நெகிழ்ச்சி!
அவர்கள் தெறிக்க விட்டவற்றிலிருந்து ஒரு பகுதியே இது…
பிரதான வீதியிலிருந்து உள்ள பஸ்ஸே ஓடாத எட்டு பத்து கிலோமீற்றர்கள் கால் நடையாக நடந்தே வரவேண்டிய குக்கிராமங்களிலிருந்து முன்பெல்லாம் நாங்க சரியா கஸ்டப்பட்டிருக்கிறம். சுமாரா படிச்சிருந்தும் வேலையில்ல. எங்கட வாழ்க்கை எப்புடி அமையும், எப்பிடி குடும்பத்தை கொண்டு நடத்தப்போறம் என்ற பயம் வேற மனசுக்குள்ள ஓடிக்கொண்டேயிருக்கும்.
ஆனா… எங்களுக்கு பிரபாகரன் தான் தெய்யோ (தெய்வம்). இந்த தொழில், வாழ்க்கை, சந்தோசம் எல்லாமே எங்களுக்கு அவரால தான் கிடைச்சது. தெய்யோ… இல்லாட்டி இப்பயும் நாங்க ஊரில சரியா கஸ்டப்பட்டுக்கொண்டு தான் இருப்பம். இப்பயும் நெறைய புள்ளைங்க ஊரில கஸ்டப்பட்டுக்கொண்டிருக்காங்க.
அதப்பார்க்கேக்க எங்களுக்கு தெய்யோ… பிரபாகரன் தான் நெனைப்புக்கு வரும். தெய்யோ… இருந்தா இப்ப அவையளுக்கும் ஆமியில வேலை கெடைச்சிருக்கும்.
ஆமியில சேர்ந்தாப்புறம் ஆரம்பத்தில எங்களுக்கு பயமாய் தான் இருந்திச்சு. ‘கொட்டியா தாக்கும் எப்பயும் உஸ்ஸாரா இருங்கன்னு’ மேலதிகாரிகள் பயமுறுத்திக்கிட்டே இருப்பாய்ங்க. அப்புறம் எங்க மேல (பெண் இராணுவ படைகள் மீது) தாக்க வேணாம்முன்னு தெய்யோ… தன்ட கொட்டியாவுக்கு (விடுதலைப்புலிகளின் படையணிகளுக்கு) கொம்மாண்ட் (உத்தரவு) கொடுத்திருப்பதாக எங்கட மேல்மட்டத்தில பேசிச்சினம். அப்பத்தான் எங்களுக்கு உசிர் மேல நம்பிக்கையே வந்திச்சு.
(தங்களுக்குள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரிக்கிறார்கள்)
(அப்புறம் மேல சொல்லுங்க என்று கேட்கிறோம்)
ம்… எப்பவாய்ச்சும் வீட்டில இருந்து போனில அம்மா அப்பா நங்கி தம்பின்னு பேசுவாங்க. மாசத்தில மூனு காகிதமாய்ச்சும் (கடிதம்) போடுவாங்க. ஜாக்கிரத… ஜாக்கிரதன்னு சொல்லித்தான் எழுதியிருப்பாங்க. கவலையாய்யிருக்கும். லீவுல வீட்லப்போய், ‘எங்க மேல தாக்க வேணாம்முன்னு’ பிரபாகரன் தன்ட கொட்டியாவுக்கு கொம்மாண்ட் போட்டிருப்பதாகச் சொன்னம். ஊரில எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க. அதுக்கு மேல வீட்ல உசிர் பத்தி பயம் இல்லாம எல்லாரும் சந்தோசமா இருக்க ஆரம்பிச்சிட்டாங்க.
ஆனா… பிரபாகரன் கவுரம் பிடிச்சவர். தன்ட பெண் கொட்டியாவக்கொண்டு (விடுதலைப்புலிகளின் மகளிர் படையணிகள்) உங்கள தாக்குவினம். உஸ்ஸாரா இருங்கன்னு மேலதிகாரிகள் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. ஆனா… எங்களுக்கு அப்பிடியொரு சம்பவமே நடக்கேல்ல.
(தெய்யோ… தெய்யோ தான் என்று கோரஸ்ஸாக சத்தம் போட்டு சிரிச்சுக்கொண்டு சொன்னவர்கள். சட்டென சீரியஸ் ஆகி, ஹலோ… தெய்யோ இருக்கா? என்று மறுகேள்வி கேட்டு விட்டார்கள்)
எதிர்பாராத இந்தக் கேள்வியால் அப்படியே நிலைகுலைந்து போய்விட்டோம். (அவர்களுடைய முகம் விகாரமடைவதை உணர முடிந்தது)
ஹலோ… என்ன சொல்லுங்க… தெய்யோ இன்னவா? என்று மறுபடியும் அவர்கள் குரல் கேட்டு சுதாகரித்துக்கொண்ட நாம்,
‘இருக்கிறான் என்றாலும்
இல்லைதான் என்றாலும்
இருக்கும் அவன் மீதொரு
பயமும் – பக்தியும்’
எனும் பா.விஜய்யின் கவிதை வரிகள் நினைவில் வந்துபோக, மெல்லிய புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு அவர்களிடமிருந்து அப்பால் நகர்ந்தோம்.
இவ்வாறு ஒரு இணையத்தில் பிரசுரிக்கப் பட்டிருந்தது.
25 செப்டம்பர் 2016
தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார்!செய்தியால் மக்கள் ஆனந்தம்!
லண்டனில் இருந்து இந்த செய்தி நேற்று வலைத்தளங்களில் பரவியபோது மொத்த தமிழ் இனமும் ஆனந்த கூத்தாடியது. இறுதி போரில், வரமாட்டேன் என்றுதான் தலைவர் கூறியிருக்கிறார்.நான் என்மக்களோடு தான் இருப்பேன். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது இந்த ஈழ மண்ணில் தான். என் பாதுகாப்பு மட்டும் எனக்கு முக்கியம் அல்ல. என் மக்கள் எல்லோரும் ,எந்தம்பிகள் எல்லோரும் கொத்துக்குண்டுகளுக்கு பலியாகின்றனர்.
என் தளபதிகள் ஈழம் காணாமல் இறந்து கொண்டிருக்கிறார்கள்.நான் மட்டும் தப்பிச்செல்வது பெரும் சுயநலம் இப்படித்தான் பொட்டுஅம்மானிடம் கூறியிருக்கிறார் தலைவர்.
அவரை ஒரு குழுவாக நின்று பேசி சமாதானம் கூறி ஒருவழியாக அரைமனதோடு தலையாட்டினார் தலைவர்.அந்த ஒரு நொடி எங்களுக்கு போதுமானதாக இருந்தது.மே பதினாறு சிங்களரின் 57வது பட்டாலியன் கோரத்தாண்டவம் ஆடியது.
பாஸ்பரஸ் குண்டுகள் விடாது பொழிந்தது. கொத்துக்குண்டுகள் வெடித்துச் சிதறியது. நாங்கள் களத்தில் இருந்தோம் கரும் புலிகள் பெரும் ஊடறுப்புத் தாக்குதலுக்கு தயாராகினர்.
புயல் போல் நாலாபுறம் இருந்தும் ஊடறுத்து சிங்களரின் படைக்குள் நுழைந்தனர்.அந்த நொடியில் எம் பொடியன்கள் நடத்திய சாகசம் உலக வரலாற்றில் எங்கும் நடந்ததில்லை .அப்படி ஒரு வீர சாகசம்.
சிங்கள பட்டாளியனுக்கு ஒன்றுமே புரியவில்லை.எங்கிருந்து இவன்கள் வருகிறார்கள்,எந்த திசையில் இருந்து வருகிறார்கள் என்ன நிகழ்கிறது ஏன் எல்லோரும் தூக்கி வீசப்படுகிறோம் என்று திகைத்தனர்.
கொத்து கொத்தாக உடல் சிதறி பறந்தனர். தப்பித்து ஓட ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் தான் தலைவரை தூக்கினோம்.,
ஒரு தேவ தூதனை தூக்குவது போல தூக்கினோம்..இதோ உடல் நலம் தேறி வியூகம் வகுத்துக்க் கொண்டிருக்கிறார் தலைவர்.
கலங்காதீர்கள். சந்தர்ப்பம் எதிர் பார்த்து காத்திருக்கிறார்…இப்படி ஒரு செய்தி நேற்று உலக தமிழர்களிடையே பெரும் ஆனந்த கண்ணீரை வரவைத்தது.
ஒரே மகிழ்ச்சி வெள்ளம்..! எம் தேசியத்தலைவரே உம்மை வரவேற்க உலகத்தமிழ் இனமே தயாராக இருக்கிறது.என்று வாழ்த்துச் செய்தி அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறு இணையமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
புலிகளின் தடை நீக்கம் குறித்து அவதானிக்கிறதாம் சிறீலங்கா!
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படக் கூடிய விளைவுகள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை நீக்க வேண்டும் என்று, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில், ஐரோப்பிய ஒன்றிய சமூகத்தின் பிரித்தானிய சட்டமா அதிபர் எலேனர் சாப்ஸ்ரன் கடந்த வியாழக்கிழமை பரிந்துரைத்திருந்தார்.தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்புகளின் பெயர்களை நீடிக்க உத்தரவிட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சார்பாக, செய்யப்பட்ட மேன்முறையீட்டை தள்ளுபடி செய்யுமாறு எலேனர் சாப்ஸ்ரன் ஆலோசனை வழங்கியிருந்தார். இவரது பரிந்துரையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் நீதிபதிகள் மதிப்பளிப்பது வழக்கம். இதனால், விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் உறுதி செய்யலாம் என்று கருதப்படுகிறது.இதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்ற உத்தரவு தொடர்பாக தீவிரமாக கண்காணிக்குமாறு பிரசெல்சில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டுள்ளது. நிலைமைகளை உன்னிப்பாக கண்காணிக்குமாறு அங்குள்ள தூதரகத்துக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்க உத்தரவிட்டால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சொத்துக்கள், நிதி என்பன விடுவிக்கப்படும். அத்துடன் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீதான பயணத் தடையும் நீக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.17 செப்டம்பர் 2016
திலீபனை நினைவு கூர்ந்த முஸ்லீம் சகோதரர்கள்!
திலீபன் நினைவிடத்தில் இன்றைய நினைவு கூர்தல் நிகழ்வில் கலந்துகொண்ட முஸ்லீம் சகோதரர்கள். எங்களின் தியாகங்களை வைத்து அரசியல் செய்யும் கோமாளிகள் மத்தியில் இச்சகோதரர்கள் சுடரேற்றி தமது வணக்கத்தை செலுத்தியது எமக்கு மனநிறைவை தந்துள்ளது.திலீபா யார் உன்னைதொடரமறுப்பினும் உன் மிச்சமாய் நாமிருப்போம்.ஊடகப்பிரிவு ஜனநாயக போராளிகள் கட்சி.இவ்வாறு அவர்களது முகநூலில் பதிவிட்டுள்ளனர்.
15 செப்டம்பர் 2016
உரிமைகளை மீட்கப் போராடுங்கள்... தீக்குளித்த விக்னேஷ்!
பா. விக்னேஷ் தீக்குளிப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் உரிமைகளை மீட்க போராடுங்கள் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி நடைபெற்றது. அதில் சீமான், அமீர், சேரன் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியின்போது பா. விக்னேஷ் திடீரென தன் மீது நெருப்பு வைத்துக கொண்டார். தீயில் கருகிய அவரை அங்கிருந்தோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.95 சதவீத தீக்காயம் ஆகி விட்டதாக கூறியுள்ள டாக்டர்கள் பிழைப்பது கடினம் என்று கூறி விட்டனர். இந்த நிலையில் தீக்குளிப்புக்கு முன்பு விக்னேஷ் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது:காவேரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள்.என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள்.எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூட போராடுங்கள்.இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்ப்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல புதிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக் கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும் அதற்காக போராடுங்கள். * நம் மண்ணில் அந்நிய முதலீட்டை தவிர்த்து தமிழ்த் தேசிய முதலாளிகளை உருவாக்க போராடுங்கள். * நான் வைத்த கோரிக்கைகள் சரியாக இருப்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தமிழர்களுக்கு இனி வாக்குச் செலுத்துங்கள்.
இவன்:பா.விக்னேஷ் திருவாரூர் மேற்கு மாவட்ட மாணவர் பாசறை செயலாளர்.என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் விக்னேஷ். மாணவரான விக்னேஷின் இந்த முடிவு அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)