ஜெயலலிதாவின் மகன் நான்தான், அவரது மொத்த சொத்துகளும் எனக்குதான், என்னை உலகுக்கு அறிமுகப்படுத்த ஜெயலலிதா முற்பட்டபோது சசிகலா அவரை மாடியிலிருந்து கீழே தள்ளினார் என்று தமிழக தலைமைச் செயலாளருக்கு ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அனுப்பியுள்ளார்.ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி நீர் சத்துக் குறைபாடு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் காத்து கிடந்தனர்.இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் திட உணவுகளை உட்கொள்கிறார் என்றும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் அப்பல்லோ நிர்வாகம் தகவல் தெரிவித்து வந்தது.75 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச சிகிச்சைகள் அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.நல் ஆளுமை, பன்முகத்திறமை, திறமையான நிர்வாகம் ஆகியவற்றை கொண்ட ஜெயலலிதாவை இழந்ததால் நாட்டு மக்கள் மட்டுமல்ல அண்டைய மாநில தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி கிடந்தது. சசிகலா மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பி.எச். பாண்டியன், ஜெயலலிதாவை அவரது வீட்டிலிருந்து யாரோ கீழே தள்ளிவிட்டதாகவும், சிபிஐ விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே வரும் என்றும் தெரிவித்திருந்தார்.ஜெயலலிதாவின் தோழியான கீதாவும் இதேபோல் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறிவந்தார். மக்களின் சந்தேகத்தை தீர்க்க அப்பல்லோவும், எய்ம்ஸ் மருத்துவமனையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கைகளை வெளியிட்டும் யாரும் நம்பவில்லை.ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகமே குழப்பத்தில் உளள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழக தலைமை செயலாளருக்கு ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.அதில், நான் தான் ஜெயலலிதாவின் மகன். அவரது உண்மையான வாரிசு நான்தான். அவரது சொத்துகள் எனக்கு மட்டுமே சொந்தம். ஜெயலலிதா இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு 4 நாள்கள் அவருடன் போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தேன்.இந்நிலையில் ஜெயலலிதா என்னை அவரது மகனாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று சசிகலாவிடம் கூறினார். ஆனால் அதற்கு சசிகலா வேண்டாம் என்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எனது அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியில் இருந்து தள்ளிவிட்டார் என்று பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். தலைமைச் செயலருக்கு வந்துள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.15 மார்ச் 2017
என் அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியிலிருந்து தள்ளி விட்டார்!
ஜெயலலிதாவின் மகன் நான்தான், அவரது மொத்த சொத்துகளும் எனக்குதான், என்னை உலகுக்கு அறிமுகப்படுத்த ஜெயலலிதா முற்பட்டபோது சசிகலா அவரை மாடியிலிருந்து கீழே தள்ளினார் என்று தமிழக தலைமைச் செயலாளருக்கு ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அனுப்பியுள்ளார்.ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி நீர் சத்துக் குறைபாடு, காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தொண்டர்கள் அப்பல்லோ வாசலில் காத்து கிடந்தனர்.இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை தேறி வருவதாகவும், அவர் திட உணவுகளை உட்கொள்கிறார் என்றும், அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார் என்றும் அப்பல்லோ நிர்வாகம் தகவல் தெரிவித்து வந்தது.75 நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அதிகபட்ச சிகிச்சைகள் அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.நல் ஆளுமை, பன்முகத்திறமை, திறமையான நிர்வாகம் ஆகியவற்றை கொண்ட ஜெயலலிதாவை இழந்ததால் நாட்டு மக்கள் மட்டுமல்ல அண்டைய மாநில தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி கிடந்தது. சசிகலா மீதும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதிமுகவின் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பி.எச். பாண்டியன், ஜெயலலிதாவை அவரது வீட்டிலிருந்து யாரோ கீழே தள்ளிவிட்டதாகவும், சிபிஐ விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளியே வரும் என்றும் தெரிவித்திருந்தார்.ஜெயலலிதாவின் தோழியான கீதாவும் இதேபோல் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறிவந்தார். மக்களின் சந்தேகத்தை தீர்க்க அப்பல்லோவும், எய்ம்ஸ் மருத்துவமனையும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அறிக்கைகளை வெளியிட்டும் யாரும் நம்பவில்லை.ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழகமே குழப்பத்தில் உளள நிலையில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தமிழக தலைமை செயலாளருக்கு ஒரு புகார் மனுவை அளித்துள்ளார்.அதில், நான் தான் ஜெயலலிதாவின் மகன். அவரது உண்மையான வாரிசு நான்தான். அவரது சொத்துகள் எனக்கு மட்டுமே சொந்தம். ஜெயலலிதா இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர், அதாவது கடந்த ஆண்டு 4 நாள்கள் அவருடன் போயஸ் தோட்டத்தில் தங்கியிருந்தேன்.இந்நிலையில் ஜெயலலிதா என்னை அவரது மகனாக இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று சசிகலாவிடம் கூறினார். ஆனால் அதற்கு சசிகலா வேண்டாம் என்றார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எனது அம்மா ஜெயலலிதாவை சசிகலா மாடியில் இருந்து தள்ளிவிட்டார் என்று பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். தலைமைச் செயலருக்கு வந்துள்ள இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.12 மார்ச் 2017
முன்னாள் அதிபர் சரோஜினி ஞானசோதியனின் அன்பான வேண்டுகோள்!
அன்பான மக்களே! இன்றய உலகில் மனித உயிர்களுக்கு பெறுமதி இல்லை என்ற ஒரு நிலை உருவாகிவிட்டதை நாளாந்தம் நடக்கும் விபத்துக்களில் இருந்து அறிகின்றோம் .காரணம் என்ன??ஒவ்வொரு வாகன ஓட்டிகளினதும் பொறுப்பற்ற செயல்களே !கூடுதலாக பலரிடமும் (லீசிங் ,)என்ற முறையில் அளவுக்கதிகமாக வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அரை குறை சாரதிப் பயிற்சியுடன் வாகனங்கள் ஓட்டிமற்றவர்களை தட்டுவதும் ,மதுப்பாவனை அதிகரித்து குடித்துவிட்டு ஒடுவதும் பண ஆசையில் நான் முந்தி நீமுந்திஎனப் போட்டி போட்டு ஓடுவதும் ,காப்பெற் வீதியில் வேகமாக ஓடலாம் என்ற பாணியில் இளைஞர்கள் ஓடுவதும் கூடி விட்டது .இவற்றைவிட டிப்பர் வாகனங்கள் கூடி அவற்றின் மூலமும் பலர் அடிபட்டு இறந்துள்ளனர் .அத்துடன் வீதிகளில் பொருட்களை ஏற்றி வரும் போது பழுதடைந்ததும் அப்படியே விட்டு விட்டு அதற்குப் பாதுகாப்பு விளக்குப் போடாமல் விட்டுச் சென்றதனால் ஏற்படும் விபத்துக்களும் தற்போது கூடியுள்ளது கடந்த 9-3-2017 அன்று என் அன்பு மாணவி விஜயரூபன் சர்மிளா மரணமாக வேண்டி வந்ததே டிராக்டர் ஒன்று நடு வீதியோரம் நிறுத்திவைத்திருந்தமையே அநியாய மரணம் அவரது மாமா ஒரு திறமையான சாரதி வேக்க்கட்டுப்பாட்டை மதிப்பவர் என்பதாலேயே மாமனுடன் அன்று ச்மிளா பயணித்தாள் அவளின் விதியா??இல்லை யாஎன்பது வேறு,உழவுயந்திரம் அப்படி நிறுத்தி வைக்காதிருந்தால் சர்மிளாவுக்கு இப்படி நடந்திருக்காது .தயவு செய்து வாகன ஓட்டிகளே மனித உயிர்களை பலியெடுக்காதீர்கள் .உங்கள் உயிர்களையும் மதியுங்கள் பிற உயிர்களையும் மதியுங்கள் நிதானம் பொறுமை கண்ணியம் என்பவற்றைக் கைக்கொள்ளுங்கள் சாரதிப் பணி சமூகப்பணி என எண்ணுங்கள் உங்கள் ஒருவர் கைகளிலேயே பல மனித உயிர்களின் காப்புறுதி உள்ளது "உயிர்களைக்காப்போம் விபத்துக்களைத் தவிர்ப்போம் ""எமது கோரிக்கையை பணிவோடு ஏற்றுக் கொள்ளுங்கள் .முகநூல் நண்பர்களே நீங்களும் ஒவ்வொருவரும் விழிப்பணர்வை உங்கள் மூலமாகவும் ஏற்படுத்துங்கள்.08 மார்ச் 2017
நாங்கதான் சி.எம் ; ஒரு தலையணை போதும் ; கூறினார் நடராஜன் !
இதில் ஓ.பி.எஸ் அணி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போரட்டத்தை மேற்கொண்டுள்ளது. இதில், பொன்னையன், மதுசூதனன், பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அங்கு வந்து பேசிய அகில இந்திய மூவேந்தர் முன்னனி கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். 7மாதங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை சசிகலா கணவர் நடராஜன் நடத்தினார். அப்போது சில நெருங்கிய பத்திரிக்கையாளர்களிடம் அவர் மனம் திறந்து பேசினார். இன்னும் 2 மாதங்கள் கழித்து நாங்தான் முதலமைச்சர் எனக் கூறியுள்ளார். அதுகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த செய்தியாளர், தற்போதுதான் 4 ஆயிரம் கோடி செலவு செய்து தேர்தல் நடத்தப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த நடராஜன், கோடியெல்லாம் எங்களுக்கு ஒரு பிரச்சனை கிடையாது. நாங்கள் நினைத்தால் சி.எம் ஆகிவிடுவோம். அதற்கு ஒரு தலையணை இருந்தால் போதும் எனக் கூறினார் என்ற அதிர்ச்சி தகவலை சேதுராமன் வெளியிட்டார்.
சேதுராமன் கூறிய செய்தி கேட்டு, ஓ.பி.எஸ் உட்பட மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
19 பிப்ரவரி 2017
காயம்பட்ட நிலையில் போராளியின் உடலம்!
15 பிப்ரவரி 2017
நடராஜனை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா!
10 பிப்ரவரி 2017
பேரெழுச்சியுடன் நடைபெற்றது எழுக தமிழ் பேரணி!
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில் இருந்து வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்களுடன் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த எழுச்சி பேரணியில் கலந்து கொண்டனர். இந்த எழுச்சிப் பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாவற்குடா விவேகாந்தா விளையாட்டு மைதானத்தை பேரணி வந்தடைந்ததும் அங்கு தமிழ் வாழ்த்துப்பா இசைக்கப்பட்டு எழுக தமிழ் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இங்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார். மேலும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
07 பிப்ரவரி 2017
பன்னீர்செல்வத்தின் புரட்சியால் அதிர்கிறது தமிழகம்!
சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டார். அம்மாவின் சாவில் சந்தேகம் உள்ளது என்று நாம் கூறியது இப்போது உறுதியாகி உள்ளது. இப்படியெல்லாம் உட்கிராமங்கள்தோறும் அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து வரும் நிலையில் அதிமுக செல்வாக்காக உள்ள மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளின் மனநிலை எப்படி உள்ளது என பலரிடம் பேசினோம்.
இதில் தற்போது எம்எல்ஏவாக உள்ள ஒருவரும், கடந்த மாநகராட்சி மேயராக இருந்த ஒருவரும் நம்மிடம் கொந்தளித்துப் பேசியது இதுதான்.
எம்எல்ஏவாக உள்ள நான் கோடிக்கணக்கில் செலவு செய்து வெற்றி பெற்றேன். என்னிடம் தற்போது உள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூறியது, சின்னம்மா சசிகலா இருந்தால்தான் நீ செலவு செய்த காசைவிட இரண்டு மடங்கு எடுக்கலாம் என்று உறுதி கூறினார்கள். வேறுவழியில்லாமல்தான் நான் கடனாளியாக இருககக் கூடாது என்பதற்காகத்தான் சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டோம். ஆனால் எனது மனச்சாட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று அம்மாவின் மனசாட்சியாக பன்னீர்செல்வம் கொட்டி தீர்த்துவிட்டார். இதைத்தான் எதிர்ப்பார்த்தோம். இப்போது எங்களைப்போன்ற எம்எல்ஏக்களிடம் முன்பு உள்ள பிரச்சனை செலவை செய்ததை திரும்ப எடுப்பதல்ல. மனசாட்சி இல்லாமல் வாழ்வது முடியாது. கட்சியின் பொதுச்செயலாளராக கட்சிக்குள் உள்ள நிர்வாகிகள் வந்திருந்தால் இந்த கேவலம் நிகழ்ந்திருக்காது. ஆனால் அதற்கு நேர் எதிராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது யாருக்குமே பிடிக்கவில்லை.
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் வெளிப்பாட்டை அதிமுகவின் 130 எம்எல்ஏக்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆதரிப்பார்கள். இதனை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் எங்கள் கட்சியின் தொண்டர்கள் ஒன்று செய்ய வேண்டும். அம்மாவின் இறப்புக்கு காரணமான சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து விரட்ட வேண்டும். அதற்கு தொண்டர்கள் தயாராகி சென்னை நோக்கி வர வேண்டும். இங்கு சசிகலா எந்த அரசு பொறுப்பிலும் இல்லை. அப்படிப்பட்ட ஒருவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. தொண்டர்கள் நினைத்தால் சசிகலாவை போயஸ் கார்டனில்இருந்துவிரட்டிவிட்டு அம்மாவின் இல்லத்தை அதிமுக கட்சியின் கோயிலாக மாற்றுவோம். பன்னீர்செல்வத்துக்கு, அவருடைய குரலுக்கு உறுதுணையாக தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
நன்றி:நக்கீரன்-
ஜீவா தங்கவேல்
02 பிப்ரவரி 2017
என்ன செய்கிறார் கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு மற்றும் வயோதிகம் காரணமாக நினைவு இழந்து, மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக கடந்த டிசம்பர் 15ஆம் தேதி இரவு காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி, டிச.23ம் தேதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். தற்போது அவர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின், அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அவர் பெயரில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பாக, அத்தனை போராட்டங்கள் நடந்த போதும் அவர் எந்த கருத்தும் கூறவில்லை.
கை, கால், முதுகு, இடுப்பு, கழுத்து ஆகியவற்றில் என அவரது உடலில் ஏற்பட்ட கொப்பளங்கள், வயோதிகம் ஆகியவற்றில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் கருணாநிதி. கொப்பளங்களை முழுமையாக போக்க அளிக்கும் மருந்துகளை ஏற்றுக்கொள்ளும் வலிமை அவரின் உடலுக்கு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து விட்டதாக தெரிகிறது.தற்போது அவருக்கு, குழாய் வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அவரால் பேச முடியாமலும் போனது. அரிதாக சில நேரம் மட்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை அவர் அடையாளம் கண்டு கொள்கிறாராம். சில சமயம் முகத்தில் புன்னகை மட்டும் பதிலாக வருகிறதாம்.
அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக கட்சி பிரமுகர்கள் உட்பட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், செயற்கை சுவாம் அளிக்க பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் அகற்றபப்ட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்கு முன்பு, மாடியில் உள்ள அவரது அறையிலிருந்து கீழ் தளத்திற்கு அவரை அழைத்து வந்தனர் எனவும், அப்போது அவர் குடும்பத்தினரை பார்த்து புன்னகைத்தார் எனவும் திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
மேலும், அவர் உடல் நிலையில் எந்த குறையும் இல்லை. பேச்சு திறனும், ஞாபக சக்தியும் வந்து விட்டால், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என அவர்கள் கூறி வருகிறார்கள்.
29 ஜனவரி 2017
ஊழல் செய்து புலிகளிடமிருந்து தப்பி வந்தவர்தான் கருணா!
புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஊழல் மோசடியில் சிக்கி உயிரைக் காப்பாற்ற தப்பியோடி வந்தவர் தான் கருணா என்று சிறீலங்காவின் பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மல்வத்த அஸ்கிரிய பீட மகாநாயக்கவை நேற்று சந்தித்த பின்னர் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார்.“கருணா அம்மான் என்பவர் புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இயங்க முடியாமல் தப்பியோடியவர். விடுதலைப் புலிகளிடம் ஊழல் மோசடிகளில் சிக்கி, பிரபாகரனினிடம் இருந்து உயிரை காப்பாற்றுவதற்காக தப்பி வந்த மனிதனாகும். பிரபாகரனுடன் ஒன்றாக வாழ்ந்த நபர் என்றாலும், அவரால் பிரபாகரனின் வீடு இருந்த இடத்தையேனும் கூறமுடியவில்லை. எங்கள் இராணுவத்தினர் தான் புதுக்குடியிருப்பில் வீட்டை கண்டுபிடித்தார்கள். அவரை வீரனாக்கியது மஹிந்த ராஜபக்ச தான்” என தமிழின அழிப்பில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.26 ஜனவரி 2017
பொறுக்கி சு.சுவாமி பின்கதவால் ஓட்டம்!
24 ஜனவரி 2017
வடமராட்சி இளைஞர் ஆபிரிக்காவில் அடித்துக்கொலை!
சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வருடம் புறப்பட்டுச் சென்ற கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞன், மேற்கு ஆபிரிக்காவில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடான சியாராலியோனிலேயே இந்தக கொலை இடம்பெற்றுள்ளது.யுத்தத்தின் போது, காலொன்றை இழந்த இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக முகவரொருவர் மூலம் தென்னாபிரிக்காவுக்குச் சென்றுள்ளார். இவர்களை அழைத்துச் சென்ற முகவர், ஆபிரிக்காவின் கடற்கரைப் பிரதேசத்தில் இவர்களைத் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, கடந்த 3 நாட்களுக்கு முன் குறித்த இளைஞன் தாக்கப்பட்டு படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறித்த இளைஞனின் நண்பர், கரவெட்டியிலுள்ள அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவ்விளைஞன் உயிரிழந்துள்ளதாக பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து பெற்றோர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். குறித்த இளைஞன் போன்று பல இளைஞர்கள் அம்முகவரினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைகளை அனுபவித்து வருவதாக குறித்த பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த மோகன் மற்றும் வத்தளை பகுதியைச் சேர்ந்த சுப்பையா சண்முகம் ஆகியோருக்கு 16 இலட்சம் ரூபாய் பணம் வழங்கியே தமது மகன் சுவிற்ஸர்லாந்துக்கு செல்வதற்காக ஆபிரிக்காவுக்கு சென்றுள்ளார். மேலும் பணம் கேட்டு மகனை துன்புறுத்தியதால் அவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவனை தாக்கிக் கொன்று விட்டார்கள். மேலும் தற்போது 15 இலட்சம் ரூபாய் பணம் தந்தாலே அவனுடைய சடலத்தைத் தருவோம். அல்லாவிட்டால் தரமாட்டோம் என தற்போது எம்மை மிரட்டுகின்றனர் என்று இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
23 ஜனவரி 2017
வெட்ட வெளிச்சமான தமிழ்நாடு பொலிஸாரின் வன்முறை வெறியாட்டம்!
மிகவும் கேவலமான முறையில் தமிழ்நாடு பொலிஸ் நடந்துகொண்டிருக்கிறது.தமிழக மாணவர்களின் அமைதி வழிப்போராட்டம் உலகத்திற்கே அறப்போர் என்றால் இதுதான்
என்பதை உணர்த்தி தமிழ் மக்களுக்கு பெருமை சேர்த்திருக்கும் இத்தருணத்தில்,உலகிலேயே மிகவும் கேவலமான காவல்துறை தமிழக காவல்துறைதான் என்பதும் இன்றைய தினம் பதிவாகி இருக்கிறது.மக்கள் மீது கற்கள்,பொல்லுகள் கொண்டு தாக்குவதும்,வீடுகள்,கட்டிடங்கள்,வாகனங்கள் எரியூட்டப்படுவதும்,கர்ப்பிணிப்பெண்கள்,மூதாளர்கள் என்று கூட பாராமல் அவர்களையும் தாக்கி மிகவும் காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு பொலிஸ்.மாபெரும் வன்முறையை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டு மாணவர்கள் மீது பழியைப்போட போட முற்பட்டு மானம்கெட்டுப் போய் நிற்கிறது தமிழ்நாடு பொலிஸ்.பொலிஸார் வன்முறையில் ஈடுபடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் காணொளி ஆதாரங்களாக வெளியாகி உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாக புகைப்படம் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.இளம் பெண்கள்மீது பாலியல் வெறியாட்டங்களிலும் இந்த காடைக்கூட்டம் ஈடுபட்டதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.21 ஜனவரி 2017
உயிரையும் கொடுக்க தயார்-ஜனநாயக போராளிகள் கட்சி!
”கடந்த கால கசப்பான அனுபவங்களை ஓர் படிப்பினையாக எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் நாம், சொகுசு வாகனங்களும் சுகபோக வாழ்க்கைக்கும் அடிமையானவர்களிடம் இனிமேலும் ஏமாறத் தயாரில்லை என்பதனை இடித்துரைக்க கடமைப்பட்டுள்ளோம். எம் அன்பு உறவுகளே நாம் ஒன்றிணைவோம். எம் தமிழ் இன துரோகிகளை வீட்டுக்கு அனுப்புவோம். உங்களுக்காக உயிரையும் கொடுக்க எமது அணி தயாராகவே உள்ளது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வித்துக்களை எம் மண்ணில் விதைத்துள்ளோம். இவ் விதைகள் துளிர்விடும் காலம் மலர்ந்துள்ளது. அதன் விழுதுகளாக நாமிருப்போம்.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தலாம். போராளிகள் என்பவர்கள் பெறுமதியானவர்கள். அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு இணக்கப்பாட்டடை ஏற்படுத்தி அதனூடாகத்தான் நிலையான சமாதானத்தை உருவாக்கவேண்டும். அதனை அடிப்படையாக வைத்துக்கொண்டு எங்களுடைய அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக அடுத்த கட்ட நகர்வை ஏற்படுத்துவோம்” என இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
09 ஜனவரி 2017
வேலணையில் மாணவி நீரில் மூழ்கி மரணம்!
வேலணை கிழக்கு மகாவித்தியாலய மாணவி குளத்தில் மூழ்கி சாவடைந்துள்ளார்.வேலணைமேற்கு 6ம் வட்டாரம் நாவலர் சனசமூக நிலையத்திற்கு அண்மையில் வசித்துவரும் சுரேஸ் அவர்களின் மகள் வினோதா (வயது 17) என்பவர் இன்று காலை10.45மணியளவில் தனது தாயார் சகோதரிகள் மற்றும் மைத்துனியார் உடன் சேர்ந்து வீட்டுக்கு அயலிலுள்ள சங்கத்தார் கேணிக்குளத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி சாவடைந்துள்ளார்.
இவர் வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில்கல்வி கற்று 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் கா.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:முகநூல்-வேலணை மண்ணின் மைந்தர்கள்.
05 ஜனவரி 2017
கொளத்தூர் மணியை சந்தித்த ஸ்டாலின்,அதிர்ச்சியான வீரமணி!
| ஸ்டாலினுடன் கொளத்தூர் மணி |
| ஸ்டாலினுடன் வீரமணி |
28 டிசம்பர் 2016
ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதல்ல!
25 டிசம்பர் 2016
தொடரும் போராளிகளின் திடீர் மரணம்!
ரஷ்ய இராணுவ விமானம் விழுந்து நொருங்கியுள்ளது!
இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் டியு-154 ரக விமான வகையை சேர்ந்த இந்த விமானத்தில், ரஷ்ய ராணுவத்தினர், புகழ்ப்பெற்ற அலெக்ஸான்ட்ராஃப் ராணுவ இசைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் உள்ள லடாகியா மாகாணத்தை நோக்கி இந்த விமானம் சென்று கொண்டிருந்தது.மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், சோச்சி நகரில் உள்ள அட்லெர் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.
20 டிசம்பர் 2016
மரணத்தில் மர்மம் ஜெயலலிதாவின் தோழி வழக்கு!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஜெயலலிதாவின் தோழி என கூறும் கீதா என்பவர் சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மனு தாக்கலுக்கு பிறகு, நிருபர்களிடம் கீதா கூறியது: நான் ஜெயலலிதாவுடன் பள்ளி காலத்திலிருந்து நட்புடன் இருந்தேன். அவரது மரணம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சந்தேகிக்கிறேன்.ஜெயலலிதா விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதாவின் உறவினர் தீபாவுக்கு எனது ஆதரவு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கீதா தாக்கல் செய்துள்ள மனுவில், ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். சசிகலா, நடராஜன், இளவரசி, அப்பல்லோ பிரதாப் ரெட்டி, முதல்வர் பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ், ஆலோசகர் ஷீலா பாலா கிருஷ்ணன், சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும்.பதவி, அதிகாரம், சொத்து ஆகிய காரணங்களுக்காக கொலை செய்ய, தவறான சிகிச்சை அளிக்க முன்வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துகளை கைப்பற்ற கொலை செய்ததாக, இந்திய தண்டனை சட்டம் 327, 304 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் போயஸ் கார்டன், அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை பத்திரப்படுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீதா சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வாதிடுகிறார்.17 டிசம்பர் 2016
நெடுந்தீவில் குதிரை ஓடியவர் விளக்கமறியலில்!
நெடுந்தீவில் க.பொ.த சாதாரணதர பரீட்சையில் ஆள்மாறாட்டம் செய்து பரீட்சை எழுதியவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் முடிவடையும் இந்தப் பரீட்சையில் குறித்த நபர் வேறொருவருக்காக பரீட்சை எழுதிய நிலையில் கடந்த 15ஆம் திகதி சித்திர பாடத்தன்று கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.ஊர்காவற்றுறை பொலிஸார் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன் அவரது அடையாள அட்டை, பரீட்சை சான்றிதழ்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்குமாறு உத்தரவிட்டார். இதேவேளை மற்றைய நபர் தலைமறைாவாகியுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)