யாழ்ப்பாண மாநகரசபையின் கடந்த நிர்வாகத்தில் ஈ.பி.டி.பி செய்த ஊழல்கள் தொடர்பாக, யாழ். மாநகர மேயர், விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஊழல் விசாரணைகளுக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஆதரவை வழங்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.“ஈ.பி.டி.பி, கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபையில், செய்த ஊழல் தொடர்பில் தற்போது ஆட்சிப் பீடம் ஏறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விசாரணைகளை செய்ய வேண்டும். அதில் உள்ள உண்மைகளை கண்டறிய வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையும் விசாரணைகளை மேற்கொள்ளும். இவ்விடயத்தை விசாரணை செய்ய ஏற்கனவே வடக்கு மாகாண சபையினால் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக் குழு நடத்திய விசாரணைகளில் ஈ.பி.டி.பி கட்சியின் ஆட்சியில் யாழ்.மாநகர சபை நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்று உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். எனவே தற்போது ஆட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஈ.பி.டி.பி கடந்த காலத்தில் செய்த ஊழல் தொடர்பில் முறையான விசாரணை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.29 மார்ச் 2018
ஈபிடிபி யினரின் ஊழலை யாழ்,மேயர் விசாரிக்கவேண்டும்-விக்னேஸ்வரன்!
யாழ்ப்பாண மாநகரசபையின் கடந்த நிர்வாகத்தில் ஈ.பி.டி.பி செய்த ஊழல்கள் தொடர்பாக, யாழ். மாநகர மேயர், விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஊழல் விசாரணைகளுக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஆதரவை வழங்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.“ஈ.பி.டி.பி, கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபையில், செய்த ஊழல் தொடர்பில் தற்போது ஆட்சிப் பீடம் ஏறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விசாரணைகளை செய்ய வேண்டும். அதில் உள்ள உண்மைகளை கண்டறிய வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையும் விசாரணைகளை மேற்கொள்ளும். இவ்விடயத்தை விசாரணை செய்ய ஏற்கனவே வடக்கு மாகாண சபையினால் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக் குழு நடத்திய விசாரணைகளில் ஈ.பி.டி.பி கட்சியின் ஆட்சியில் யாழ்.மாநகர சபை நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்று உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். எனவே தற்போது ஆட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஈ.பி.டி.பி கடந்த காலத்தில் செய்த ஊழல் தொடர்பில் முறையான விசாரணை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.26 மார்ச் 2018
பிரான்சில் தமிழ் மாணவி கடத்தப்பட்டுள்ளார்!
பிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவியின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த போராட்டமானது, Lycée Romain Rolland, 21 Av de Montmorency, 95190 Goussainville என்ற இடத்தில் நாளை மாலை ஐந்து மணிக்கு (உள்ளூர் நேரம்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.பொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் அனுமதியுடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,“கடந்த 20ம் திகதி பாடசாலைக்குச் செல்லும் போது கால் மற்றும் கைகளை கட்டியவாறு எனது மகள் கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்.மகள் கடத்தப்பட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. என் மகள் இதுவரையிலும் என் கைகளில் கிடைக்கவில்லை. இந்நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து எனது மகளை மீட்டுதர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன.இது போன்ற சம்பவம் வேறு எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.இந்நிலையில், நாளை பொலிஸாரின் அனுமதியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு தமக்கு ஒத்துழைக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும், இதுவரையில் மாணவி குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
20 மார்ச் 2018
தமிழின உணர்வாளரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் காலமானார்!
சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் (வயது 75) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன். பின்னர் அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 1975-ம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.பின் 1980களில் ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பின்புலமாக, ஒருகட்டத்தில் ஆலோசகராகவும் இருந்து வந்தார் நடராஜன்.அண்மையில் அவருக்கு உடநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த 16-ந் தேதியன்று தீவிர சிகிச்சைக்காக நடராஜன் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது.அவரது உடல் எம்பாமிங் செய்வதற்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எம்பாமிங் செய்த பின்னர் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வருகிறார். நடராஜன் இறப்பு சான்றிதழ் கொடுத்த பின்னர் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படும்.18 மார்ச் 2018
சிறீலங்கா எதையும் செய்து விடப்போவதில்லை என்ற புலம்பெயர் அமைப்பின் கூற்றுக்கு பொறுப்போம் என்கிறார் சிறீதரன்!
ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. கால அவகாசம் முடிவடைவதற்குஇன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசாங்கம் எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. இந்த கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க ஜெனிவா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை வௌ்ளிக்கிழமை ஜெனிவா வளாகத்தில் சந்தித்து பேச்சு நடத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான மாணிக்கவாசகர் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.இந்த சந்திப்பின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், '2019 ஆம் ஆண்டுடன் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுக்கு வந்துவிடும். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யாத அரசாங்கம் எதிர்வரும் ஒரு வருட காலத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அரசாங்கம் எதனையும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.அந்தவகையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுத்து அறிவிக்கவேண்டும். நாங்கள் இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதே என்று எம்மிடம் சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்புகின்றன. தற்போது இலங்கை விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்று புலம்பெயர் அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன. இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வைப் பெறலாம் என்றார்.இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிடும்போது 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஒரு வருடம் பொறுமைகாக்கவே விரும்புகின்றது . அதன் பின்னர் சர்வதேசத்துடன் இணைந்து எவ்வாறான திட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதனை ஆராய்வோம்.அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த வழிவகைகளை கூறவேண்டும். நாம் பொறுமை காக்கின்றோம். முடியாத பட்சத்தில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.17 மார்ச் 2018
ஜெனிவா பிரேரணையை நிறைவேற்ற சிறீலங்கா எதனையும் செய்யவில்லை!
ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அலுவலகமும் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திப்படுத்துவதாக இல்லை என்று சமாதானத்திற்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் தலைவர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மனித உரிமை நிலை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தில் உரையாற்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.யுத்தக்குற்றங்கள் மனதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற விடயங்களின் அடிப்படையிலேயே ஜகத் ஜயசூரிய மீது சர்வதேச நியாயாதிக்கம் பிரயோகிக்கப்பட்டது. இதேவேளை யுத்தத்தின்போது என்ன நடந் தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டும். அதனடிப்படையிலேயே தர்ஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவை அன்று பான்கீ மூன் நியமித்தார். நானும் அதில் அங்கத்துவம் பெற்றேன்.யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயுமாறு எமது நிபுணர் குழுவிற்கு பணிக்கப்பட்டது. நாம் சிவிலியன்களின் உயிரிழப்பு தொடர்பாக ஆராய்ந்தோம். எமக்கு கிடைத்த தகவல்களின் படி 40 ஆயிரம் என்று கூறப்பட்டது. நாங்கள் தரவுகளை சேகரித்தோம். எமது பரிந்துரைக்கு அமைவாகவே முன்னாள் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை இலங்கையின் யுத்தம் தொடர்பில் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் நாம் மதிப்பிட்ட எண்ணிக்கையை விட உயிரிழப்புக்கள் அதிகமாக இருக்கும் என கருதப்பட்டது. அது 75 ஆயிரமாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.நாங்கள் மத பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினோம். நாங்கள் சாட்சியாளர்களிடம் ஆதாரங்களைப் பெற்றோம். எமக்கு கிடைத்த முறையான தகவல்களின் பிரகாரமே எமது மதிப்பீட்டை வெளியிட்டோம்.இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, விசேட நீதிமன்றம், காணாமல்போனோர் அலுவலகம் என்பன குறித்து இந்த பிரேரணை வலியுறுத்துகின்றது. நட்டஈடு தொடர்பாகவும் இந்த பிரேரணை வலியுறுத்துகின்றது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இந்தப் பிரேரணையை அமுல்படுத்துவதில் ஏற்பட்டதாக தெரியவில்லை. அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் பல விடயங்களை அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை மட்டுமன்றி முழுநாட்டுக்கும் இந்த விடயத்தை தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். அதனால்தான் ஒரு நாட்டில் நிறுவன ரீதியான கட்டமைப்பில் இதனை செய்யவேண்டுமெனக் கூறப்படுகின்றது.இலங்கை அதிகமான காணாமல்போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றது. காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை நியமித்தமையானது ஒரு சிறந்த நடவடிக்கை என்றே சர்வதேச சமூகம் பார்க்கின்றது. அதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றே சர்வதேச சமூகம் கருதுகின்றது. எனினும் வரைபில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையாத நிலைமையும் இருக்கின்றது. பலர் அது சரியான முறையில் இயங்காது என்று குறிப்பிடுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.16 மார்ச் 2018
இலங்கை குறித்து மாற்றுப்பொறி முறைக்கு ஆதரவு கோரப்படலாம் என நம்பப்படுகிறது!
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ளன. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கா மாற்று பொறிமுறையை முன்னெடுக்குமாறு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஏற்கனவே ஜெனிவா வளாகத்தில் நடைபெற்றுவரும் இலங்கை தொடர்பான உபகுழுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான விடயத்தில் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்பதாக கூறியிருந்தார். அந்தவகையில் இன்று நடைபெறும் விவாதம் மற்றும் எதிர்வரும் 21 ஆம்திகதி நடைபெறும் விவாதங்களின் போது இந்த மாற்றுப் பொறிமுறை தொடர்பில் செயிட் அல் ஹுசைன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.இலங்கையானது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு நீடிக்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையை இலங்கை இதுவரை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்ற விடயத்தை செய்ட் அல் ஹுசைன் அதிருப்தியுடன் வெளிப்படுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.14 மார்ச் 2018
இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் 76 வயதில் மரணம்!
இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76ஆவது வயதில் மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பிரிட்டனை சேர்ந்த இவர், ’கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த பணிகளுக்கு புகழ்பெற்றவர்.
ஏ ஃப்ரீஃப் ஹிஸ்டிரி ஆஃப் டைம்`( A Brief History of Time) என்ற புத்தகம் உட்பட பல புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
"எங்களது அன்புமிக்க தந்தை இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்" என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தன்னுடைய 22ஆம் வயதில், மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் `மோட்டார் நியூரான் நோய்` என்னும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது மேலும் அந்த நோயால் அவர் சில நாட்களே உயிருடன் வாழ்வார் என்றும் கூறினர்.அந்த நோயால் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது; மேலும் அவர் பேச முடியாத நிலைக்கும் போனார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருக்கும் அவரது இல்லத்தில் அவரின் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரின் பிள்ளைகளாகிய லூசி, ராபட் மற்றும் டிம்.
"ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி மேலும் அவரின் பணிகள் ஆண்டாண்டு காலம் நிலைத்திருக்கும்" என தெரிவித்துள்ளனர்
அவரின் மன தைரியம் மற்றும் உறுதியை புகழ்ந்த அவரின் பிள்ளைகள், அவரின் புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும் உலகளவில் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
நன்றி:பிபிசி தமிழ்.01 மார்ச் 2018
தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் அனந்தி, அருந்தவபாலன், ஐங்கரநேசன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருந்த வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அனந்தி சசிதரன், பொ.ஐங்கரநேசன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் புதிதாக வருகை தந்திருந்தனர். இவர்கள் மூவரும், தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சபை ஏற்றுக்கொண்டால் வருகைதந்த மூவரையும் மத்திய குழுவில் இணைத்துக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார். இதனையடுத்து குழு உறுப்பினர்களின் முழு சம்மதத்துடன் மூவரும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.ஈபிஆர்எல்எவ் சார்பில் தெரிவாகி அமைச்சராக பதவி வகித்த ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.இதேவேளை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் க.அருந்தவபாலன் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராகச் செயற்பட்ட அனந்தி சசிதரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.26 பிப்ரவரி 2018
கூட்டமைப்பின் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கவில்லை!
இலங்கை அரசாங்கம் ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்பதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லை என்பது தெளிவாகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புகூறல் தொடர்பாக முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு 2 மாற்று வழிகளாக, போர்குற்றங்களை புரிந்தவர்கள் என அறியப்படுபவர்கள் உறுப்பு நாடுகளுக்கு பயணம் செய்தால் உறுப்பு நாடுகள் தமது நீதிமன்றங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அல்லது, விசேட குற்றவியல் தீர்பாயம் ஒன்றை அமைத்து அதற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.இவ்வாறான நிலையில் கடந்த 24 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு கால அவகாசத்தில் 1 ஆண்டு நிறைவில் இலங்கை அரசு ஒன்றும் செய்யவில்லை.இவ்வாறான நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடைய கருத்தை வலுப்படுத்த வேண்டுமே தவிர ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கக் கூடாது. ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக இல்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஐ.நா வரை செல்ல வேண்டும். அதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்துள்ளது. இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து கையொப்பங்களை இடவேண்டும்” என தெரிவித்துள்ளார்.24 பிப்ரவரி 2018
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மரணம்!
18 பிப்ரவரி 2018
நாமே ஆட்சி அமைப்போம் என்கிறார் மாவை!
![]() |
| மகிந்தவுடன் மாவை,சம்பந்தன் |
16 பிப்ரவரி 2018
இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு மாற்றக்கோரி கையெழுத்து போராட்டம்-கஜேந்திரகுமார்!
இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்தை உடனடியாக இடைநிறுத்தி, இவ்விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என வலிறுயுத்தி, கையெழுத்துப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. பேரவையில், இலங்கை அரசாங்கத்துக்கு 30.1 தீர்மானம் நிறைவேற்றுவதுக்கு 2 வருட கால அவசாகம் கடந்த ஆண்டு கூட்டத்தொடரின் போது வழங்கப்பட்டது. அக்கால அவகாசம் வழங்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவதனைக் கூட ஏற்றுக்கொள்ளாத நிலையில்தான் இரண்டு வருட கால அவசாகம் வழங்கப்பட்டது. இன்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் செயற்பட்டது போலவே பொறுப்புக்கூறலில் எதுவித முன்னேற்றகரமான நடவடிக்கைகயும் இன்றியே இலங்கை அரசாங்கம் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதன் செயற்பாடின்மையால் மக்கள் அதனை நிராகரித்திருக்கின்ற நிலையில், ஒரு விதமான முன்னேற்றமும் இல்லை என்ற யதார்த்த நிலைதான் காணப்படுகின்றது.
நாம் ஏற்கனவே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என வலிறுயுத்தி வந்திருந்தோம். இலங்கை ஜனாதிபதியும் சரி பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் 30.1 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை நிறைவேற்றப்போவதில்லை என தெளிவாகக் கூறிய நிலையிலேயே அவர்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களும், காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனப் போராடுகின்ற மக்களும் கடந்த ஒருவருடமாக தெருக்களிலேயே இருக்கின்றனர். எனவேதான் நாங்கள் மேலதிக கால அவகாசத்தை இடைநிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்னிறுத்த வேண்டும். அல்லாவிடின் குறைந்த பட்சம் இலங்கைக்கென சர்வதேச விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றாவது உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்தவுள்ளோம்.
இதன்பொருட்டு, மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கான கையெழுத்துப் போராட்டத்தை விரைவில்; ஆரம்பிக்கவுள்ளோம். இப்போராட்டமானது தமிழ் மக்கள் பேரவை, பேரவையில் இணைத்தலைவராகவுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. வீடு வீடாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று கையெழுத்துகள் பெறப்படும். அம் மக்களுக்கு யதார்த்த நிலைபற்றி தெளிவுபடுத்தப்படும்” என்றார்.
14 பிப்ரவரி 2018
வட்டக்கச்சியில் இளம் பெண் படுகொலை!
12 பிப்ரவரி 2018
தேர்தல் முடிவுகள் கூட்டமைப்புக்கு பின்னடைவே என சித்தார்த்தன் கருத்து!
09 பிப்ரவரி 2018
வாக்களிப்பு நிலையங்களில் கைபேசிக்கு தடை!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக 13, 374 வாக்களிப்பு நிலையங்கள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இதுதவிர நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் கையடக்க தொலைபேசிப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.குறித்த பகுதியில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல், காணொளி எடுத்தல், புகைப்படம் எடுத்தல், புகைத்தல், மதுபானம் அருந்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
08 பிப்ரவரி 2018
மூன்று பிள்ளைகளின் தந்தையான போராளி சாவடைந்துள்ளார்!
விசுவமடுவில் வசித்து வந்த இவர் இன்று மரணமடைந்துள்ளார். நாட்டுக்காக போராட்டத்தில் இணைந்த சந்திரச்செல்வன் தனது உடல் அங்கங்களை இழந்து மிகுந்த வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த இவர் இன்று மரணமடைந்திருப்பது அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
04 பிப்ரவரி 2018
தமிழ்த் தேசியப்பேரவையின் கலந்துரையாடலை தடுக்க குழப்பம் விளைவித்தது ஈபிடிபி!
யாழ்ப்பாணம் - றக்கா வீதி - மருதடிப் பிரதேசத்தில், நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில், நேற்று மாலை மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது, தாம் ஈ.பி.டி.பியினர் எனக் கூறியவாறு, ஈ.பி.டி.பியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள், இப்பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறியவாறு, அங்கிருந்த ஒலி மற்றும் ஒளி சாதனங்களின் வயர்களை அறுத்துவிட்டு மேடைப் பகுதியில் அமர்ந்துள்ளனர்.பின்னர், மாலை 06.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் கலந்துரையாடலுக்கு மக்கள் திரளத் தொடங்கியபோது, அங்கிருந்து குறித்த தரப்பினர் நழுவிச் சென்றுள்ளனர். இதையடுத்து, யாழ். மாநகர வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் உள்ளிட்டோர் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென முச்சக்கரவண்டிகளில் வந்த சில குண்டர்கள், இது ஈ.பி.டி.பியின் இடம், இங்கு பிரசாரத்தில் ஈடுபட எவருக்கும் அனுமதி இல்லை எனக் கூச்சலிட்டவாறு கலந்துரையாடல் நடைபெற்ற இடத்தை நோக்கி கற்களைக் கொண்டுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.
03 பிப்ரவரி 2018
நீதிமன்றுக்குப் பயந்து 5ஆண்டு வனவாசம் இருந்தவர் எம்மை காவாலி என்கின்றார்!
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நீதிமன்றில் வழக்கை முன்னெடுப்பது தொடர்பில் பொலிஸாரே அறிவிக்க முடியும். அவர்கள் ஆதாரங்கள், சாட்சியங்களை வைத்து வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா, இல்லையா? என்று தெரிவிக்க பொலிஸாருக்கு முழுச் சுதந்திரம் உண்டு. பாதிக்கப்பட்ட நபரோ அல்லது முறைப்பாட்டாளரோ நீதிமன்றில் தமது விடயங்களைக் கதைப்பதற்கு அனுமதியில்லை. யாரும் விரும்பியபடி வந்து கருத்துத் தெரிவிக்க இது சந்தையில்லை. இது நீதிமன்றம். நீதிமன்றின் மாண்பு தெரியாதவர்களை நீதிமன்றை அவமதிப்பவர்களை பொறுப்புவாய்ந்த பதவியில் வைத்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
தங்களுடைய தனிப்பட்ட பாதிப்புக்காக மதவாதத்தையும் சாதியத்தையும் தூண்டிவிடுவதில் கல்விமான்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் செயற்படுவது வேதனையான விடயம். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட விவகாரம் நீதிமன்றில் சரியாகவே அணுகப்பட்டது.
ஆதாரங்களும் இல்லாமல், குற்றச்செயலும் நடக்காமல் எங்களை மாத்திரம் துரத்தித் துரத்தி எங்களுடைய பரப்புரையை முடக்குகின்றார். எங்களைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டு வருகிறார். எம்மைக் காவலி என்று பேசுகின்ற அவர் யார்? என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு நபர். நீதிமன்ற பிடியாணைக்கு மதிப்பளிக்காது தப்பி ஓடி 5 ஆண்டுகள் வனவாசம் செய்துவிட்டு வந்த நபர் மற்றவர்களைக் குறை கூறுகின்றார்.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் மீது விசாரணை நடத்த முடியாது எனக் கூறுபவருக்கு எதிராக எத்தனை வழக்குகள் போடப்படுகின்றன என, தேர்தல் முடிவடைந்த பின்னர் அறிவீர்கள்” எனத் தெரிவித்தார்.
31 ஜனவரி 2018
வடக்கு கிழக்கில் ஆயிரம் புத்த விகாரைகள்!ஐ.தே.கவின் தேர்தல் வாக்குறுதி!
![]() |
இன நல்லிணக்க நடவடிக்கை என்னும் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
29 ஜனவரி 2018
அபிவிருத்திக்கான நிதியெனில் சம்பந்தனும் சிறீதரனும் ஏன் அதை பெறவில்லை?சுரேஷ் கேள்வி!
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுரேஸ் பிரேமசந்திரன் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“இரா.சம்பந்தன் இந்த நிதியை பெற்றுக்கொள்ளாவிட்டால் ஏன் இந்த நிதியை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.நாங்கள் இந்த நிதியை பெற்றுகொள்ளவில்லை என சிறீதரன் கூறுகின்றார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்டவர்கள் நிதியை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.வரவுசெலவு திட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையின் காரணமாகவே கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. வாக்களிக்காதவர்களுக்கு இந்த நிதி கொடுக்கப்படவில்லை. வாக்களித்தவர்களுக்கு மட்டும்தான் இந்த நிதி கொடுக்கப்படுகின்றது என்றால் இதனை ஒரு அரசியல் லஞ்சமாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கின்றது? என அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

