27 ஏப்ரல் 2018

கனடாவின் பிரதமர் சிங்களவர்களுக்கு வாழ்த்து கூறவில்லை எனக் குற்றச்சாட்டு!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவுகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இலங்கையின் பெரும்பான்மையினரான சிங்கள மக்களை புறக்கணித்திருப்பதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டேனியல் ஜேன் குற்றம்சாட்டியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் புத்தாண்டு வாழ்த்து செய்திகளில் தமிழ் மக்களுக்கு மாத்திரமே வாழ்த்து கூறப்பட்டிருப்பதாகவும், பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களை அவர் புறக்கணித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் ஊடாக கனடாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும், இந்த நிலையில், எதிர்வரும் விசாகப்பூரணை தினத்தை முன்னிட்டு, சிங்கள பௌத்த மக்களுக்கு வாழ்த்து செய்தியை பிரதமர் அனுப்ப வேண்டும் என்றும் கனேடிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் பதில் வழங்கியுள்ள கனடாவின் பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர், தமிழர்கள் விடயத்தில் முன்னைய அரசாங்கம் கடைபிடித்த நடைமுறையையே பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.

22 ஏப்ரல் 2018

கோமாளி நடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவு!

Image result for s.v.sekarபத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது எஸ்.வி. சேகர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து தெரியவரவில்லை. பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தட்டியது சர்ச்சையானது. இச்சம்பவம் தொடர்பாக திருமலை என்பவர் முகநூலில் மிக மோசமாக பதிவிட்டிருந்தார்.பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் இந்த பதிவை நடிகர் எஸ்.வி.சேகரும் தம்முடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் இப்பதிவை நீக்கிய எஸ்.வி.சேகர், மன்னிப்பு கேட்டார். இவ்விவகாரம் குறித்து எஸ்.வி.சேகர் மீது போலீசில் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. தற்போது எஸ்.வி.சேகர் அவர் வீட்டில் இல்லை என்றும் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வரவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே எஸ்.வி.சேகர் வீடு மீது தாக்குதல் நடத்தியதாக 30 பத்திரிகையாளர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 ஏப்ரல் 2018

அன்னை பூபதியின் நினைவு இல்லத்தில் பாதணிகளுடன் நின்ற பொலிஸார்!

தியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் நிகழ்வுகள் நடைபெற்றுவந்த நிலையில் சமாதிக்கு அருகில் பொலிஸார் தமது பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்ட நிலையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களை அங்கிருந்துவெளியேற்றினார் என தெரிவிக்கப்படுகிறது.அன்னை பூபதியின் இந்த சமாதியென்பது எம்மை பொறுத்தவரையில் புனித இடமாக கருதுகின்றோம் எனவே தயவுசெய்து உங்களது பாதணிகளை வெளியே கழற்றிவிட்டு வாங்கள் என்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பொலிஸாரிடம் தெரிவித்தார் என்றும் இதனை தொடர்ந்து பொலிஸார் சமாதிக்கு வெளியில் நின்று தமது கடமைகளை மேற்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு புனித இடமாக கருதப்படும் அன்னை பூபதியின் சமாதிப்பகுதியில் பொலிஸார் பாதணிகளுடன் நின்றது தொடர்பில் அங்கு நின்ற பலரும் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தினர் எனக் கூறப்படுகிறது.

18 ஏப்ரல் 2018

ஜோர்ஜ் புஷ்ஷின் தாயார் காலமானார்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயார் காலமானார்முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயார் தனது 92ஆவது வயதில் காலமானார்.
இவர் ஜார்ஜ் எச் டபள்யு புஷ்ஷின் மனைவியும், ஜார்ஜ் டபள்யு புஷ்ஷின் தாயும் ஆவார்.
1989ஆம் ஆண்டிலிருந்து 1993ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் முதல் குடிமகளாக இருந்த இவரின் உடல்நலம், சிறிது நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் அவருக்கு மேல் சிகிச்சை நிறுத்தப்பட்டது.
அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இவரின் கணவருக்கு 93வயதாகிறது அவர் நீண்டகாலம் வாழ்ந்த அமெரிக்க அதிபர் என்ற பெயரை பெறுகிறார். பார்பராவின் மகன் ஜார்ஜ் புஷ் 2000ஆம் ஆண்டு அமெரிக்காவின் 43ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இருமுறை அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"எனது அன்பு அம்மா தனது 92ஆவது வயதில் காலமானார். லாரா, பார்பரா, ஜென்னா மற்றும் நான் துக்கத்தில் இருக்கிறோம், ஆனால் எனது அம்மாவின் ஆன்மா அமைதியில் உள்ளது என்பதால் எங்களின் மனதும் அமைதியாக உள்ளது. பார்பரா புஷ் மிகச் சிறந்த முதல் குடிமகளாக இருந்தார். பிறரை போல் இல்லாமல் உத்வேகம், அன்பு மற்றும் கல்வியை மில்லியன் கணக்கானவர்களுக்கு வழங்கியவர்.
அவரின் கடைசி காலம் வரை அவர் எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். பார்பரா புஷ்ஷை தாயாக பெற்ற நான் அதிர்ஷ்டசாலி; எனது குடும்பம் அவரை இழந்து வாடுகிறது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி" என ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
பார்பரா புஷுக்கு ஜெப் புஷ் என்ற மற்றொரு மகனும் உள்ளார். அவர் 1999ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டுவரை ஃபுளோரிடாவின் ஆளுநராக செயல்பட்டார். மேலும் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
அமெரிக்காவின் முதல் குடிமகளுக்கான சில வரைமுறைகளை தகர்த்து, பார்பரா புஷ் அமைப்பை தொடங்கினார் அதில் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கல்வி அறிவுபெற வழிவகைச் செய்தார்.

நன்றி:பிபிசி தமிழ்

17 ஏப்ரல் 2018

நிதியுதவிகளைப் பெற இலங்கைக்கு அமெரிக்கா நிபந்தனை!

இலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு, அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ள சட்டமூலம் குறித்தே அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.இலங்கையின் ஜனநாயக திட்டங்களிற்காக அமெரிக்கா 35 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. காணாமல்போனோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளிற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த நிதியை பெறுவதற்காக இலங்கை மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு ஏற்ப நம்பகதன்மை மிக்க பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு இணங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் உறுதிசெய்யவேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.
மேலும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இதனை உறுதிசெய்து நிதி ஒதுக்கீட்டு குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை சித்திரவதைகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் பொதுமக்களின் நிலங்களை விடுவிப்பதற்கும் இணங்கியுள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் உறுதிசெய்ய வேண்டும்.
இலங்கை குறிப்பிட்ட நிதியை பெறுவதற்காக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை அமைக்க வேண்டும், யுத்தத்தின் இறுதி தருணத்தில் படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும். படையினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.இலங்கையின் படையினருக்கு என 500,000 டொலர்களையே ஒதுக்கீடு செய்துள்ள அமெரிக்கா அதனை மனிதாபிமான மற்றும் இயற்கை அனர்த்தங்களை கையாள்வதற்கான பயிற்சிகளிற்கும் கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகளிற்குமே பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.பாலியல் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த அமைதிப்படையினருக்கு எதிராக இலங்கை அரசாங்கம் வலுவான நடவடிக்கையை எடுத்தால் மாத்திரமே அமைதிப்படை நடவடிக்கைகளிற்கான நிதியை இலங்கைக்கு வழங்கவேண்டும் எனவும் அமெரிக்க காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது.

15 ஏப்ரல் 2018

சிகரெட் உயிரைக் குடித்தது..கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி பாரதிபுரத்தில் சிகரெட் புகைத்தவாறு பெற்றோல் போத்தலுடன் பயணித்தவர், தீ பற்றிக் கொண்டதால், படுகாயமடைந்து உயிரிழந்தார். அதே இடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் றெனோல்ட் றீகன் (வயது – 34) என்ற குடும்பத் தலைவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கடந்த 16 ஆம் திகதி இவர் வேலைதேடி மோட்டார் சைக்கிளில்
பயணித்துள்ளார். மூடி இல்லாத போத்தலில் பெற்றோல் கொள்வனவு செய்து சிகரெட் புகைத்தவாறு பயணித்தார். போத்தல் நழுவி விழ பெற்றோல் ஊற்றுப்பட்டது. அதனை எடுக்கக் குனிந்தபோது வாயிலிருந்த சிகரெட் நெருப்புப்பட்டு தீ பற்றியது. அவரது நெஞ்சு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீ பற்றியது. கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன்தினம் உயிரிழந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

12 ஏப்ரல் 2018

சீமான் கைது...அதிரடிப்படை குவிப்பு...திரளும் தொண்டர்கள்!

அதிரடி படை கொலை முயற்சி வழக்கில் சீமானை கைது செய்யவும், போராட்டம் நடத்திய பிற தலைவர்களை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளநரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 10ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது, நடந்த போராட்டத்தில், போலீசாரை தாக்கியதாக சீமான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து, இன்று காலை போராட்டம் நடத்திய சீமான் கைது செய்யப்பட்டு பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.இதேபோல மோடிக்கு கருப்பு கொடி காண்பித்து போராட்டம் நடத்தியதற்காக இன்று கைது செய்யப்பட்ட மணியரசன், தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு, இயக்குநர்கள் பாரதிராஜா, கவுதமன், அமீர் ஆகியோரும் சிட்லபாக்கத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தங்க வைக்கப்பட்டுள்ள பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தை சுற்றி மதியம் திடீரென அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. சீமான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. நாம் தமிழர் கட்சியினர் சீமான் கைது செய்யப்படுவதை தடுக்க முற்படுவார்கள் என்பதால் அதிரடி படை குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்டபத்திற்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாததால் தொண்டர்கள் அங்கே குவிந்த வண்ணம் உள்ளனர்.பிரதமர் மோடி தமிழகத்தில் சாலை மார்க்கமாக தமிழகத்தில் பயணிக்க முடியாததாலும், ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன. இவை இரண்டுமே டெல்லியில், உள்ளோருக்கு கோபத்தை உருவாக்கியுள்ளது என்பதால்தான், எங்களை கைது செய்கிறார்கள் என தமிமுன் அன்சாரி தொலைபேசி வாயிலாக ஊடகங்களில் தெரிவித்தார்.போராட்ட தலைவர்கள்

11 ஏப்ரல் 2018

பிரான்சில் கடத்தப்பட்ட தமிழ் சிறுமி மீட்பு!

பிரான்சில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட 17 வயதான ஈழச் சிறுமி ஒருவர் மூன்று வாரங்களின் பின் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 20ம் திகதி Goussainville நகரில் இருந்து குறித்த சிறுமியை மூன்று நபர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த சிறுமி வீடு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறுமியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் 28 வயதான உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஏப்ரல் 2018

புரட்சியாக உருவெடுத்த சேப்பாக்க போராட்டம்!

வெளிநாட்டு வீரர்கள் சென்னையில் நடக்கும் காவேரி போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. இது ஒரு தேசிய பிரச்சனை என்று நிரூபிக்க நடத்தப்பட்ட இந்த போராட்டம் பெரிய அளவில் மாறி உலக அளவில் வைரலாகி உள்ளது. கொல்கத்தா அணிக்கும் சென்னைக்கும் இடையில் இன்று ஐபிஎல் போட்டி நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் செல்லும் வழியில் தற்போது காவிரி போராட்டம் நடக்கிறது. இதனால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டம் குறித்துதான் தற்போது மொத்த இந்தியாவும் பேசிக்கொண்டு உள்ளது.தற்போது காவிரி பிரச்சனை இருமாநில பிரச்சனையாக இல்லாமல் தேசிய பிரச்சனையாக மாறியுள்ளது. மற்ற மாநில அணி வீரர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதால் இந்த பிரச்சனை இந்தியா முழுக்க பேசப்பட்டு வருகிறது. காவிரி பிரச்சனையை துச்சமென கருதிய தேசிய மீடியாக்கள் கூட இதை பற்றித்தான் இப்போது பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.சென்னை அணியிலும், கொல்கத்தா அணியிலும் நிறைய வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர்கள், ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர்கள், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளை சேர்ந்த வீரர்கள் கூட இருக்கிறார்கள். இவர்கள் யாருக்கும் தெரியாமல் இருந்த காவிரி பிரச்சனை இப்போது வெளியே வந்து இருக்கிறது.இந்த போராட்டம் ஒரு வகையில் வெற்றியை பெற்று இருக்கிறது என்று கூட கூறலாம். போராட்டம் செய்த மக்களின் முக்கியமான ஒரு எதிர்பார்ப்பு, தேசிய அளவில் இந்த பிரச்சனையை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த போட்டி இப்போது உலக அளவில் வைரல் ஆகி உள்ளது.ஆனால் இந்த போராட்டம் இன்னும் முடியவில்லை. இன்று இரவு 11 மணிக்கு போட்டி முடியும் வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இப்போதே டிவிட்டரில் சேப்பாக்கம் சென்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் வைரலாகிவிட்டது. இதனால் உலக அளவில் இன்னும் சில நிமிடத்தில் இந்த ஹேஷ்டேக் வைரலாக வாய்ப்பு உள்ளது.

07 ஏப்ரல் 2018

ஜெர்மனியின் முன்ஸ்ரர் நகரில் வாகனத்தால் மோதித் தாக்குதல்!

ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலிஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முன்ஸ்ரர் நகரில் பாதசாரிகளிடையே வாகனம் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர்.இந்தச் சம்பவத்தில், அந்த வாகன ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.அந்த நகரின் கீபேன்கெர்ல் சிலை அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சரக்கு வாகனம் ஒன்று நத்தார் பொருட்கள் வாங்குவதற்கான சந்தையில் பார ஊர்தி ஏற்றப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று தாக்குதல் நடந்த இடத்துக்குச் செல்லவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கீபேன்கெர்ல் சிலை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேசை மற்றும் நாட்காலிகள் சேதமடைதிருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நன்றி:பிபிசி தமிழ்

02 ஏப்ரல் 2018

சுங்கச்சாவடி தகர்த்த சோழன்,வேல்முருகனுக்கு குவியும் வாழ்த்துகள்!

Velmurugan Arrested for Protesting at Ulundurpet Tollgate காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும்,போராட்டக்காரருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சுங்கச்சாவடி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இதனால் வேல்முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் வேல்முருகனின் போராட்டத்திற்கு ஆதரவு வலுத்து வருகிறது.வேல்முருகனின் போராட்டத்திற்கு மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆதரவாக பதிவிட்டுவருகிறார்கள். ஒரு ட்விட்டரில் பதிவில், போராட்டம் என்றால் இதுதான் போராட்டம்.. இது போன்ற போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க தமிழர்கள் முன் வர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.தமிழர்கள் என்றால் மத்திய அரசு எப்போதும் கிள்ளுக்கீரையாக பார்க்கிறது. இதைத்தான் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிட்டு இருக்கிறதா என்று இன்னொரு பதிவில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தின் பெரிய கட்சிகள் எல்லாம் வழக்கு, பின் விளைவுகள் என்று பயந்து கொண்டு இருக்கும்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் செய்திருப்பது தரமான சம்பவம் என்றும், வேல்முருகனுக்கு வாழ்த்துகளும் என்றும் ஒரு பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இன்னொரு ட்விட்டரில் பதிவில், நீதி மறுப்பதும், நீர் மறுப்பதும் தான் வன்முறை. வரி மறுப்பது அல்ல ; எங்களுக்கு நீர் இல்லையென்றால் உங்களுக்கு வரி இல்லை என்று பதிவிடப்பட்டுள்ளது.இன்னொரு ட்விட்டர் பதிவில், அன்றைய சோழன் சுங்கம் தவிர்த்தான். இன்றைய சோழன் சுங்கம் தகர்த்தான் என்றும் வேல்முருகனைக் குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளனர். வேல்முருகனின் இந்தப் போராட்டத்தால், சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவு பெருகியுள்ளது.

29 மார்ச் 2018

ஈபிடிபி யினரின் ஊழலை யாழ்,மேயர் விசாரிக்கவேண்டும்-விக்னேஸ்வரன்!

யாழ்ப்பாண மாநகரசபையின் கடந்த நிர்வாகத்தில் ஈ.பி.டி.பி செய்த ஊழல்கள் தொடர்பாக, யாழ். மாநகர மேயர், விரிவான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஊழல் விசாரணைகளுக்கு வடக்கு மாகாண சபை முழுமையான ஆதரவை வழங்கும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.“ஈ.பி.டி.பி, கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபையில், செய்த ஊழல் தொடர்பில் தற்போது ஆட்சிப் பீடம் ஏறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விசாரணைகளை செய்ய வேண்டும். அதில் உள்ள உண்மைகளை கண்டறிய வேண்டும். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையும் விசாரணைகளை மேற்கொள்ளும். இவ்விடயத்தை விசாரணை செய்ய ஏற்கனவே வடக்கு மாகாண சபையினால் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக் குழு நடத்திய விசாரணைகளில் ஈ.பி.டி.பி கட்சியின் ஆட்சியில் யாழ்.மாநகர சபை நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்று உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர். எனவே தற்போது ஆட்சியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஈ.பி.டி.பி கடந்த காலத்தில் செய்த ஊழல் தொடர்பில் முறையான விசாரணை செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

26 மார்ச் 2018

பிரான்சில் தமிழ் மாணவி கடத்தப்பட்டுள்ளார்!

Bildergebnis für franceபிரான்ஸ் - பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் பகுதியில் ஈழத்தமிழ் மாணவி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் கடந்த 20ம் திகதி இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாணவியின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.குறித்த போராட்டமானது, Lycée Romain Rolland, 21 Av de Montmorency, 95190 Goussainville என்ற இடத்தில் நாளை மாலை ஐந்து மணிக்கு (உள்ளூர் நேரம்) ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.பொலிஸாரின் பாதுகாப்பு மற்றும் அனுமதியுடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடத்தப்பட்ட மாணவியின் தாயார் கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த 20ம் திகதி பாடசாலைக்குச் செல்லும் போது கால் மற்றும் கைகளை கட்டியவாறு எனது மகள் கடத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்.மகள் கடத்தப்பட்டு ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. என் மகள் இதுவரையிலும் என் கைகளில் கிடைக்கவில்லை. இந்நிலையில், அனைவரும் ஒன்று சேர்ந்து எனது மகளை மீட்டுதர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன.இது போன்ற சம்பவம் வேறு எந்த பிள்ளைக்கும் வரக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.இந்நிலையில், நாளை பொலிஸாரின் அனுமதியுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு தமக்கு ஒத்துழைக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதேவேளை, மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள போதிலும், இதுவரையில் மாணவி குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

20 மார்ச் 2018

தமிழின உணர்வாளரும் சசிகலாவின் கணவருமான நடராஜன் காலமானார்!

உடலுக்கு எம்பாமிங் சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் (வயது 75) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சசிகலா பரோலில் வருகிறார்.தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன். பின்னர் அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 1975-ம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.பின் 1980களில் ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பின்புலமாக, ஒருகட்டத்தில் ஆலோசகராகவும் இருந்து வந்தார் நடராஜன்.அண்மையில் அவருக்கு உடநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த 16-ந் தேதியன்று தீவிர சிகிச்சைக்காக நடராஜன் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது.அவரது உடல் எம்பாமிங் செய்வதற்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எம்பாமிங் செய்த பின்னர் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் வருகிறார். நடராஜன் இறப்பு சான்றிதழ் கொடுத்த பின்னர் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்படும்.

18 மார்ச் 2018

சிறீலங்கா எதையும் செய்து விடப்போவதில்லை என்ற புலம்பெயர் அமைப்பின் கூற்றுக்கு பொறுப்போம் என்கிறார் சிறீதரன்!

ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. கால அவகாசம் முடிவடைவதற்குஇன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசாங்கம் எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. இந்த கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க ஜெனிவா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை வௌ்ளிக்கிழமை ஜெனிவா வளாகத்தில் சந்தித்து பேச்சு நடத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான மாணிக்கவாசகர் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.இந்த சந்திப்பின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், '2019 ஆம் ஆண்டுடன் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுக்கு வந்துவிடும். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யாத அரசாங்கம் எதிர்வரும் ஒரு வருட காலத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அரசாங்கம் எதனையும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.அந்தவகையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுத்து அறிவிக்கவேண்டும். நாங்கள் இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதே என்று எம்மிடம் சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்புகின்றன. தற்போது இலங்கை விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்று புலம்பெயர் அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன. இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வைப் பெறலாம் என்றார்.இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிடும்போது 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஒரு வருடம் பொறுமைகாக்கவே விரும்புகின்றது . அதன் பின்னர் சர்வதேசத்துடன் இணைந்து எவ்வாறான திட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதனை ஆராய்வோம்.அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த வழிவகைகளை கூறவேண்டும். நாம் பொறுமை காக்கின்றோம். முடியாத பட்சத்தில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.

17 மார்ச் 2018

ஜெனிவா பிரேரணையை நிறைவேற்ற சிறீலங்கா எதனையும் செய்யவில்லை!

Bildergebnis für yasmin sookaஜெனி­வாவில் 2015ஆம் ஆண்டு நிறை­வேற்றப்­பட்ட பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதற்கு இலங்கை அர­சாங்கம் எத­னையும் செய்யவில்லை. காணாமல் போனோர் குறித்து விசா­ரிக்கும் அலுவல­கமும் பாதிக்­கப்­பட்ட மக்­களை திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக இல்லை என்று சமா­தா­னத்­திற்கும் நீதிக்­கு­மான சர்வதேச அமைப்பின் தலை­வ­ர் ஜஸ்மின் சூக்கா தெரி­வித்தார்.ஜெனி­வாவில் நேற்று முன்­தினம் நடைபெற்ற இலங்கை மனித உரிமை நிலை தொடர்­பான விசேட உப­கு­ழுக்­கூட்­டத்தில் உரை­யாற்­­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.யுத்­தக்­குற்­றங்கள் மன­தகுலத்திற்கு எதி­ரான குற்­றங்கள் என்ற விட­யங்­களின் அடிப்படையி­லேயே ஜகத் ஜய­சூ­ரிய மீது சர்­வ­தேச நியா­யா­திக்கம் பிர­யோ­கிக்­கப்­பட்­டது. இதே­வேளை யுத்­தத்­தின்­போது என்ன நடந் தது என்ற உண்மை கண்­ட­றி­யப்­ப­ட­வேண்டும். அதனடிப்படையிலேயே தர்ஸ்மன் தலை­மை­யி­லான நிபுணர் குழுவை அன்று பான்கீ மூன் நிய­மித்தார். நானும் அதில் அங்கத்துவம் பெற்றேன்.யுத்தக் குற்­றங்கள் தொடர்­பான குற்றச்சாட்­டுக்கள் குறித்து ஆரா­யு­மாறு எமது நிபுணர் குழு­விற்கு பணிக்­கப்­பட்­டது. நாம் சிவி­லி­யன்­களின் உயி­ரி­ழப்பு தொடர்­பாக ஆராய்ந்தோம். எமக்கு கிடைத்த தக­வல்­களின் படி 40 ஆயிரம் என்று கூறப்­பட்­டது. நாங்கள் தர­வு­களை சேக­ரித்தோம். எமது பரிந்துரைக்கு அமை­வா­கவே முன்னாள் ஐ.நா. செய­லாளர் பான் கீ மூன் உள்­ளக விசா­ரணை பொறி­முறை ஒன்றை இலங்­கையின் யுத்தம் தொடர்பில் அமைக்­கு­மாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் நாம் மதிப்­பிட்ட எண்­ணிக்­கையை விட உயி­ரி­ழப்­புக்கள் அதி­க­மாக இருக்கும் என கரு­தப்­பட்­டது. அது 75 ஆயி­ர­மாக இருக்கும் என்றும் கரு­தப்­பட்­டது.நாங்கள் மத பிர­தி­நி­தி­க­ளு­டனும் கலந்துரையாடினோம். நாங்கள் சாட்­சி­யா­ளர்­க­ளிடம் ஆதாரங்களைப் பெற்றோம். எமக்கு கிடைத்த முறை­யான தகவல்களின் பிர­கா­ரமே எமது மதிப்­பீட்டை வெளி­யிட்டோம்.இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக ஜெனி­வாவில் ஒரு பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. அந்த பிரேரணைக்கு இலங்கை அர­சாங்­கமும் அனு­ச­ரணை வழங்­கி­யது. உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு, விசேட நீதி­மன்றம், காணா­மல்­போனோர் அலு­வ­லகம் என்­பன குறித்து இந்த பிரே­ரணை வலி­யு­றுத்­து­கின்­றது. நட்­ட­ஈடு தொடர்­பா­கவும் இந்த பிரே­ரணை வலி­யு­றுத்­து­கின்­றது. ஆனால் இது­வரை எந்த முன்­னேற்­றமும் இந்தப் பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதில் ஏற்­பட்­ட­தாக தெரியவில்லை. அர­சாங்கம் எத­னையும் செய்­ய­வில்லை.உண்மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை நிறு­வுவதன் மூலம் பல விட­யங்­களை அறிந்­து­கொள்ள முடியும். குறிப்பாக பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்தது என்­பதை மட்­டு­மன்றி முழு­நாட்­டுக்கும் இந்த விட­யத்தை தெரிந்­து­கொள்­வ­தற்­கான சந்­தர்ப்பம் கிடைக்கும். அத­னால்தான் ஒரு நாட்டில் நிறு­வன ரீதி­யான கட்­ட­மைப்பில் இதனை செய்யவேண்டு­மெனக் கூறப்­ப­டு­கின்­றது.இலங்கை அதி­க­மான காணா­மல்­போ­னோர்கள் தொடர்­பான முறைப்­பா­டு­களை கொண்டுள்ள நாடு­களில் ஒன்­றாக காணப்­ப­டு­கின்­றது. காணாமல்போனோர் குறித்த அலு­வ­ல­கத்தை நிய­மித்­த­மை­யா­னது ஒரு சிறந்த நடவடிக்கை என்றே சர்வதேச சமூகம் பார்க்கின்றது. அதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றே சர்வதேச சமூகம் கருதுகின்றது. எனினும் வரைபில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையாத நிலைமையும் இருக்கின்றது. பலர் அது சரியான முறையில் இயங்காது என்று குறிப்பிடுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

16 மார்ச் 2018

இலங்கை குறித்து மாற்றுப்பொறி முறைக்கு ஆதரவு கோரப்படலாம் என நம்பப்படுகிறது!

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ளன. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கா மாற்று பொறிமுறையை முன்னெடுக்குமாறு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஏற்கனவே ஜெனிவா வளாகத்தில் நடைபெற்றுவரும் இலங்கை தொடர்பான உபகுழுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான விடயத்தில் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்பதாக கூறியிருந்தார். அந்தவகையில் இன்று நடைபெறும் விவாதம் மற்றும் எதிர்வரும் 21 ஆம்திகதி நடைபெறும் விவாதங்களின் போது இந்த மாற்றுப் பொறிமுறை தொடர்பில் செயிட் அல் ஹுசைன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.இலங்கையானது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு நீடிக்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையை இலங்கை இதுவரை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்ற விடயத்தை செய்ட் அல் ஹுசைன் அதிருப்தியுடன் வெளிப்படுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.

14 மார்ச் 2018

இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் 76 வயதில் மரணம்!

ஸ்டீஃபன் ஹாக்கிங்இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76ஆவது வயதில் மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனை சேர்ந்த இவர், ’கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த பணிகளுக்கு புகழ்பெற்றவர்.
ஏ ஃப்ரீஃப் ஹிஸ்டிரி ஆஃப் டைம்`( A Brief History of Time) என்ற புத்தகம் உட்பட பல புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
"எங்களது அன்புமிக்க தந்தை இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்" என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தன்னுடைய 22ஆம் வயதில், மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் `மோட்டார் நியூரான் நோய்` என்னும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது மேலும் அந்த நோயால் அவர் சில நாட்களே உயிருடன் வாழ்வார் என்றும் கூறினர்.அந்த நோயால் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது; மேலும் அவர் பேச முடியாத நிலைக்கும் போனார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருக்கும் அவரது இல்லத்தில் அவரின் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரின் பிள்ளைகளாகிய லூசி, ராபட் மற்றும் டிம்.
"ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி மேலும் அவரின் பணிகள் ஆண்டாண்டு காலம் நிலைத்திருக்கும்" என தெரிவித்துள்ளனர்
அவரின் மன தைரியம் மற்றும் உறுதியை புகழ்ந்த அவரின் பிள்ளைகள், அவரின் புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும் உலகளவில் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றும் தெரிவித்தனர்.ஸ்டீஃபன் ஹாக்கிங்நன்றி:பிபிசி தமிழ்.

01 மார்ச் 2018

தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் அனந்தி, அருந்தவபாலன், ஐங்கரநேசன்!

Bildergebnis für தமிழ் மக்கள் பேரவைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருந்த வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அனந்தி சசிதரன், பொ.ஐங்கரநேசன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் புதிதாக வருகை தந்திருந்தனர். இவர்கள் மூவரும், தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சபை ஏற்றுக்கொண்டால் வருகைதந்த மூவரையும் மத்திய குழுவில் இணைத்துக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார். இதனையடுத்து குழு உறுப்பினர்களின் முழு சம்மதத்துடன் மூவரும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.ஈபிஆர்எல்எவ் சார்பில் தெரிவாகி அமைச்சராக பதவி வகித்த ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.இதேவேளை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் க.அருந்தவபாலன் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராகச் செயற்பட்ட அனந்தி சசிதரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

26 பிப்ரவரி 2018

கூட்டமைப்பின் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கவில்லை!

இலங்கை அரசாங்கம் ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்பதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லை என்பது தெளிவாகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புகூறல் தொடர்பாக முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு 2 மாற்று வழிகளாக, போர்குற்றங்களை புரிந்தவர்கள் என அறியப்படுபவர்கள் உறுப்பு நாடுகளுக்கு பயணம் செய்தால் உறுப்பு நாடுகள் தமது நீதிமன்றங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அல்லது, விசேட குற்றவியல் தீர்பாயம் ஒன்றை அமைத்து அதற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.இவ்வாறான நிலையில் கடந்த 24 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு கால அவகாசத்தில் 1 ஆண்டு நிறைவில் இலங்கை அரசு ஒன்றும் செய்யவில்லை.இவ்வாறான நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடைய கருத்தை வலுப்படுத்த வேண்டுமே தவிர ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கக் கூடாது. ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக இல்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஐ.நா வரை செல்ல வேண்டும். அதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்துள்ளது. இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து கையொப்பங்களை இடவேண்டும்” என தெரிவித்துள்ளார்.