09 செப்டம்பர் 2018

ஏழுபேர் விடுதலை ஆளுநர் ஏற்றே ஆகவேண்டும்,ஜெயக்குமார் அதிரடி!

யார் பெரியவர்? மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களின் விடுதலையில் அரசின் முடிவை கவர்னர் ஒப்புக்கொள்ள வேண்டும், வேறு வழியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 4 மணியளவில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டம் முடிந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அதில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் பற்றி ஆலோசனை நடத்தினோம். உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் கருணை மனுவை 161வது சட்ட பிரிவின்கீழ் பரிசீலிக்கலாம் முடிவு எடுக்கப்பட்டது.161வது பிரிவு தெளிவாக உள்ளது.அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்றாக வேண்டும். அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதைதான் பின்பற்ற வேண்டும். சட்டத்தில் அப்படித்தான் உள்ளது.இதில் எந்தக் குழப்பமும் இல்லை, தெளிவாக உள்ளது.இன்றே தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். உடனடியாக இப்போதே பரிந்துரையை அனுப்பி வைக்க உள்ளோம்.ஒட்டுமொத்த தமிழரின் எண்ணம் 7 தமிழரையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான். ஜெயலலிதா நிறைவேற்றிய தீர்மானம்தான் இது.அன்று நிறைவேறாமல் போய் விட்டது, இன்று நிறைவேறும். இந்த முறை கண்டிப்பாக அரசின் பரிந்துரை ஏற்கப்படும்.மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டுத்தான் 7 பேரையும் விடுவிக்க முடிவு. உச்ச நீதிமன்றம் அதைத்தான் சொல்லி இருக்கிறது. உச்சநீதிமன்றம்தான் முக்கியமானது, அதற்கு மேலானவர்கள் யாருமில்லை. அதனால் ஆளுநர் இதை ஏற்றே ஆக வேண்டும்.

06 செப்டம்பர் 2018

ஏழுபேர் விடுதலை தமிழக அரசே முடிவு செய்யலாம்-நீதிமன்றம் உத்தரவு!

Tamilnadu govt can release 7 tamils on the Rajiv gandhi murder case: Supreme court ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் கடந்த 2013ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. இதற்கு எதிரான மத்திய அரசின் வழக்கையும் சுப்ரீம் கோர்ட் முடித்து வைத்துள்ளது.

31 ஜூலை 2018

எழுந்து வா தலைவா என கோஷமிட்டவர்களிடம் ஐயா வந்துடுவாரா எனக்கேட்டவர் மீது தாக்குதல்!

அடி, உதை ஐயா வந்துருவாரா என்று நக்கலாக கேள்வி எழுப்பிய நபரை காவேரி மருத்துவமனை அருகே, திமுக தொண்டர்கள் அடித்து உதைத்தனர். சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, இன்று 4வது நாளாக சிகிச்சை தொடர்கிறது. இதையடுத்து மருத்துவமனை வெளியே, தொண்டர்கள் பலரும் குழுமியிருந்து வாழ்க கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர்.இன்று மதியம், இப்படி குழுமியிருந்த தொண்டர்களை அணுகிய, நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர், ஐய்யா வந்துவிடுவாரா என கேலியாக கேள்வி எழுப்பினாராம். இதனால் தொண்டர்கள் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர். அதில் சிலர் அந்த நபரை பிடித்து அடிக்க தொடங்கியதால் அங்கு பெரும் கூச்சல், சத்தம் எழுந்தது.கருப்பு சிவப்பு வண்ணத்தில் சேலை கட்டிய பெண் தொண்டர் ஒருவர், அந்த நபரை பார்த்து கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்துவிட்டார். நாங்கள், எழுந்து வா என கோஷம் போட்டபடி இருக்கிறோம். ராத்திரி பகலாக இங்கேயே தங்கியிருக்கிறோம். இவர் என்னடான்னா, ஐயா வந்துடுவாரா என நக்கலாக கேள்வி எழுப்புகிறார் என்று சத்தம் போட்ட காட்சிகள் அங்கிருந்த ஊடகத்தாரின் கேமராக்களில் பதிவாகியுள்ளது.இதையடுத்து ஆண் தொடர்கள் சிலர் அந்த நபரை அடித்து தள்ளி விட, அப்போது போலீசார் அங்கு வந்து, அந்த நபரை மீட்டு வெளியே போகச் சொல்கிறார்கள். இந்த காட்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இப்படி பேசினால் அடிப்பார்கள், பேசாமல் போய்விடு என ஒரு இளைஞர், அந்த நபரிடம் எச்சரிக்கும் காட்சியும் வீடியோவில் உள்ளது.காவேரி மருத்துவமனை வெளியே குவிந்துள்ள தொண்டர்களுக்கு திமுக சார்பில் இலவச உணவு, தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களும் அங்கேயே குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

28 ஜூலை 2018

தா.பாண்டியன் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

Senior Communist leader Tha Pandian hospitalised மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தா.பாண்டியனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக இருந்தவர் தா.பாண்டியன். முதுபெரும் கம்யூனிச தலைவர்களில் ஒருவர். அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
85 வயதான தா.பாண்டியன் சமீப காலமாக சிறுநீரக பிரச்சினை தொடர்பாக டயாலிசிஸ் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அராலியில் குள்ள மனிதர்கள் அட்டகாசம்,மக்கள் பீதி!


மரத்­துக்கு மரம் தாவும் குள்­ளர்­கள் பெண்­கள், குழந்­தை­கள் மீதும் வீடு­க­ளின் மீதும் கல்­வீ­சித் தாக்­கு­ம் சம்பவங்களால்,   அராலியில் நேற்­றி­ர­வு பெரும் பதற்­றம் நில­வி­யது.
மரத்­துக்கு மரம் தாவும் குள்­ளர்­கள் பெண்­கள், குழந்­தை­கள் மீதும் வீடு­க­ளின் மீதும் கல்­வீ­சித் தாக்­கு­ம் சம்பவங்களால், அராலியில் நேற்­றி­ர­வு பெரும்
பதற்­றம் நில­வி­யது.நேற்று இரவு அராலி, ஐய­னார் ஆல­யத்­தைச் சூழ­வுள்ள பகு­தி­க­ளில் இந்­தக் குள்ள மனி­தர்­க­ளின் தாக்­கு­தல் இடம்­பெற்­ற­தா­கக்
கூறப்­ப­டு­கின்­றது. அரா­லி­யில் உள்ள அதி­க­மான வீடு­கள் மீது நேற்­றி­ரவு கல் வீசப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. கல் எறிந்­து­விட்டு மரத்­துக்கு மரம் தாவி­யும் ஒடி­யும் மறை­யும் குள்­ளர்­க­ளைத் தேடி ஊர­வர்­கள் திரண்­ட­னர். இத­னால் அந்த இடம் பதற்­றக் கள­மா­னது. மக்­களை அச்­சு­றுத்­து­வ­தற்­காக திட்­ட­மிட்டு இவ்­வான சம்­ப­வங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்று இளை­ஞர்­கள்
தெரி­வித்­த­னர்.
சம்­ப­வம் தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வ­னுக்கு தக­வல் வழங்­கப்­பட்­டது. அவர் உட­ன­டி­யாக அந்த இடத்­திற்கு விரைந்­தார். நில­மை­களை அறிந்து வட்­டுக் கோட்­டைப் பொலி­ஸா­ருக்கு தக­வல் வழங்­கி­னார்.
இரவு 8.30 மணி­ய­ள­வில் வட்­டுக்­கோட்டை பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி உள்­ளிட்ட பொலி­ஸார் குழு­வி­னர் சம்­பவ இடத்­துக்கு வந்­த­னர். விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.
கடந்த சில தினங்­க­ளா­கவே வீடு­கள் மீது கல்­வீச்சு நடப்­ப­தாக மக்­கள் முறை­யிட்­ட­னர். குள்­ளர்­கள் வீடு­க­ளின் கூரை­க­ளில் தாவு­வ­தால் வீட்­டில் உள்ள பெண்­கள், சிறு­வர்­கள் பயத்­து­ட­னேயே வாழ்­கின்­ற­னர் என்­ற­னர். வீட்­டுக் கூரை­யில் ஏதோ ஒன்று விழு­வது போன்று சத்­தம் கேட்டு வெளி­யில் வந்­தால் குள்ள மனி­தர்­களை ஒத்­த­வர்­கள் கூரை­யில் இருந்து மதி­லுக்­குப் பாய்ந்து மதி­லில் இருந்து வீதிக்­குப் பாய்ந்து சில நொடி­க­ளில் தப்­பித்­துச் சென்­று­ வி­டு­கின்­ற­னர் என்­றும் மக்­கள் தெரி­வித்­த­னர்.
அண்­மை­யில் பொது­மக்­கள் அவர்­க­ளைத் துரத்­திச் சென்­ற­னர். அவர்­கள் அரா­லித் துறை நோக்கி ஓடித் தப்­பி­னர். நேற்று முன்­தி­னம் கட­லுக்­குச் சென்று வந்த ஒரு­வரை மடக்­கிய குள்ள மனி­தர்­கள், அவரை விசா­ரித்­துள்­ள­னர். இத­னால் அவர் பயத்­தில் உள்­ளார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. மிக­வும் குள்­ள­மாக இருக்­கும் அவர்­கள் கைக் கோட­ரி­யை­யும் வைத்­துள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.
சில­ருக்கு கைக் கோட­ரி­யைக் காட்­டிப் பய­மு­றுத்­தி­யுள்­ள­னர். எனவே பாது­காப்பு ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ளுங்­கள் என்று மக்­கள் பொலி­ஸாரை கேட்­ட­னர். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சர­வ­ண­ப­வ­னி­ட­மும் அந்­தக் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.
இது தொடர்­பான கூட்­ட­மொன்று இன்று மாலை 5 மணிக்கு அராலி மாவத்தை விளை­யாட்டு மைதா­னத்­தில் பொலி­ஸா­ரால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. அதில் பொலி­ஸார், மற்­றும் கிராம மக்­க­ளைக் கலந்­து­கொள்­ளு­மாறு மூத்­த­வர்­கள் வேண்­டு­கோள்­வி­டுத்­த­னர். மேல­திக விசா­ர­ணை­களை பொலி­ஸார் மேற்­கொண்­ட­னர்.

24 ஜூலை 2018

நாம் தமிழர் இடும்பாவனம் கார்த்திக் விடுதலை!

Naam Tamilar Party’s student leader Idumbavanam Karthik released from jail காவிரி உரிமைக்காக ஐபிஎல் முற்றுகையில் ஈடுபட்டதற்காக, குண்டர் சட்டத்தில் கைதான நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் விடுதலை செய்யப்பட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "காவிரி நதிநீர் உரிமைக்காகத் தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்றுவந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மக்களைப் திசைதிருப்புவதாக அமைந்ததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தாமல் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்துகொள்ளுங்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டும் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகள் நடைப்பெற்றதால் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டது. மேலும் கட்சியைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்துவிட்டனர். அதே வழக்கில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் கடந்த மே-18 அன்று சென்னை, பெருங்குடியில் நடைபெற்ற மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிவிட்டு இரவு அலுவலகம் திரும்புகையில் காவலர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். கடந்த ஜூலை 4 அன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் நீதிபதிகள் அமர்வில் நேர் நிறுத்தப்பட்டு ஜூலை 14 அன்று குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இன்று நேற்று ஜூலை 23 ஆம் தேதி பிணை கிடைத்ததையொட்டி இன்று ஜூலை 24 இல் புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். அவ்வயம் சிறப்பான வரவேற்பு அளிக்கும் விதமாக நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புரிமையுடன் அழைக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 ஜூன் 2018

இத்தாலியில் வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் ஊர்காவற்றுறையை சேர்ந்த இளையோர் போட்டி!


இத்தாலியில் இடம்பெறவுள்ள வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில்  இரண்டு ஈழத் தமிழ் இளையோர் களமிறங்கியுள்ளனர். இத்தாலி பலெர்மோ மாநகரில் இன்று  வெளிநாட்டவர்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டவர்கள் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.இத்தாலியில் இடம்பெறவுள்ள வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இரண்டு ஈழத் தமிழ் இளையோர் களமிறங்கியுள்ளனர். இத்தாலி பலெர்மோ மாநகரில் இன்று வெளிநாட்டவர்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டவர்கள் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.குறித்த தேர்தலில், ஈழத் தமிழர்களான தியாகராஜா ரமணி, மற்றும் அருள்நேசன் தயாராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும், யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையைச் சேர்ந்தவர்களாவர்.

10 ஜூன் 2018

கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் போராட்டத்திற்கு ஆதரவு!

10-06-2018
ஊடக அறிக்கை

கடற்தொழிலாளர் சம்மேளனத்தின் போராட்டத்திற்கு ஆதரவு!

வடபகுதி மீனவர்களின் மீன்பிடித்தொழிலை அழிக்கும் வகையில் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ் மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.
வடபகுதி மீனவர்களின் மீன்டிபிடித் தொழிலை பாதிக்கும் வகையில் தென்பகுதி மீனவர்களுக்கு கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை சிறீலங்கா அரசு வழங்குவதன் மூலம் வடபகுதி மீனவர்களின் தொழிலை அழிக்கும் நடவடிக்கைகள் 2015 ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரும் தொடர்ந்து வருகின்றது.வடமராட்சி கிழக்கின் கடற்கரையோரமாக ஐநூறுக்கும் அதிகமான மீன்வாடிகளை அத்துமீறி அமைத்துள்ள வெளிமாவட்ட மீனவர்களின் நடவடிக்கைகளால் அப்பிதேச மீனவர்களின் மீன்பிடித் தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வெளிமாவட்ட மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள வாடிகளை உடனடியாக அகற்ற வேண்டும், கடலட்டை பிடிப்பதற்கு வெளிமாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிகள் உடனடியாக இரத்துச் செய்யப்பட வேண்டும்
என்ற கோரிக்கைகள் உள்ளடங்கலாக மீன்பிடித் தொழிலை பாதுக்காக்கும் வகையில் யாழ் மாவட்ட கடற்தொழில் சம்மேளத்தினால் நாளை
திங்கட்கிழமை 11.06.2018
அன்று யாழ் மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்வதுடன்,
மீனவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தமிழ்த் தேசத்தின் கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் அனைவரும் ஒற்றுமையாக அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
செல்வராசா கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

08 ஜூன் 2018

பெளத்த இனவாதப் போக்குடன் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மோசமான சிங்கள பௌத்த பேரினவாத நிலைப்பாட்டில் இருப்பதாக நவ சமசமாஜக்கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன குற்றம்சாட்டியுள்ளார். அதனாலேயே தமிழ் மக்களின் தேசியப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்காக தயாரிக்கப்பட்டு வந்த புதிய அரசியல்யாப்பு உருவாக்கம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நவ சமசமாஜக் கட்சியின் ஏற்பாட்டில் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்ட நிகழ்வொன்று கொழும்பு மருதானையில் நேற்று நடைபெற்றது. நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகுகருணாரத்ன, இலங்கை சமாதானப்பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா, புரவெசி பலயஅமைப்பின் இணை ஏற்பாட்டாளர் காமினி வெயங்கொட, காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் இணைப்பாளர் சுந்தரம் மகேந்திரன் மற்றும் தென்னிலங்கை பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.ஏற்படுத்தப்பட்டுள்ளஆணைக்குழுவின் அறிக்கையிலும் பயங்கரமான முறையில் படுகொலைகளும், காணாமல்ஆக்கப்பட்டவைகளும் உள்ளன. அவற்றை ஆராய்ந்து நீதியை வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இன்றும் செயற்படுத்தப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகமும்இதே நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் இறுதித்தீர்மானத்தை எடுத்து கைது செய்து, தண்டனையை வழங்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாத அளவுக்கு இன்று சிங்கள பேரினவாத சக்திகளின் இடையூறுகள் நாட்டில் செயற்பட்டு வருகின்றன. சாலியபீரிஸ் அவர்களும் காணாமல் போகவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்களே உள்ளனர் என்றும் கூறியுள்ளார். ஆனால் விசாரணைசெய்வதற்கும், நீதிபதிகளின்குழுக்களை அமைப்பதற்கும் சாத்தியங்கள் இல்லை என்றுதான் தெரிகிறது.
சர்வதேசத்தின்உதவிகளையும் பெறமுடியாது. இவற்றை கூறும்போதே சிங்கள இனவாத சக்திகள் கூச்சலிட்டு பல்வேறு எதிர்கருத்துக்களை கூற ஆரம்பிக்கின்றன. அதனால் முதலாவதாக சிங்கள இனவாத சக்திகளை அழிப்பதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையும் சுத்தப்படுத்துவதற்கான கருத்தாடலை ஆரம்பிக்க வேண்டும். இப்போது பணங்களை விரயம்செய்து அமைப்புக்களை ஏற்படுத்தியும்ஒன்றையும் செய்யமுடியாவிட்டால் அதில் பயனில்லை.80களில் மாகாண சபை முறையை எதிர்த்து ஜே.வி.பியினர் கிளர்ச்சி செய்தனர். மாகாண சபை வேண்டாம், அதற்கு உதவினால் கொலை செய்வோம், வாக்களித்தால் விரல்களை வெட்டுவோம் என்று அன்று அறிவித்தனர். இரண்டாவது வேறுமொழிகளுக்கு சமவுரிமை அளிக்கமுடியாது, தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜாவுரிமை அளிக்கமுடியாது என்ற மூன்று விதமான விடயங்களை முன்வைத்தே ஜே.வி.பியினர் கிளர்ச்சிகளை செய்தனர்.இன்று அந்தவிதமானஇனவாத சிந்தனைகளும் ஜனாதிபதிக்கு இருப்பதால்தான் அவரும் சற்று தடுமாற்றம் அடைகின்றார். அசியல்யாப்பை மாற்றுவதற்கு பெரிதும் கஷ்டப்பட்டு வரைபுகளைகொண்டுவந்தனர். இன்று அந்த முயற்சி ஸ்தம்பிதமடைந்துள்ளது.இனவாத சக்திகளால் அதற்கு தடைக் கற்கள் இடப்பட்டுள்ளன. அதனை எதிர்கொள்ள வேண்டும் அல்லது அவற்றை தகர்த்தெறிய வேண்டும். ஆனால் அவற்றை செய்யாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் பிரச்சினைகள் தீராது. ரணில் விக்கிரமசிங்கவிடம் ஏன் பேசுகிறீர்கள், அவர் வங்கிக் கொள்ளையாளர் அல்லவா என பலரும் என்னிடம் வினவுகின்றனர். வங்கிக் கொள்ளையாளரா அல்லது கொள்ளைக்காரரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதனைப் பார்க்கிலும் இனவாதமே பயங்கரமானது. இனவாதத்தை அழிப்பதற்காக வங்கிக் கொள்ளையரானாலும் அவருடன் சேர்ந்து செயற்பட நான் தயார்” என்றார் விக்கிரமபாகு.

27 மே 2018

பசுவதை தொடர்பில் மறவன்புலவு சச்சிதானந்தம் காட்டம்!


இலங்கை இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.இலங்கை இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல என சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.பசுக்கள் மீதான வதைகளை எதிர்த்து இந்து பௌத்த மத தலைவர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,“எங்கள் பகுதிகளுக்கு வந்தால் எங்கள் மரபுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். இலங்கையானது இந்து மற்றும் பௌத்த பூமியாக இருக்கிறது. வேறெந்த மக்களுக்கும் சொந்தமானது அல்ல. எங்களுக்குரிய பண்பாட்டு மரபிருக்கிறது.எமது பகுதிகளுக்கு வந்தால் எங்கள் மரபுகளோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள். அப்படியில்லையாயின் அவுஸ்திரேலியப் பிரதமர் சொல்லவதைப் போல உங்கள் நாட்டுக்கே போய் விடுங்கள்.
இந்த மண் புனிதமான மண். பசுக்களைப் பேணுவதால் அது புனிதமானது. எமது புனிதமான மண்ணைக் கெடுக்காதீர்கள்.எப்படி ஒரு ஆணை, பெண்ணை, குழந்தையை கொல்வது கொடுமையோ அவ்வாறே பசுவைக் கொல்வதும் கொடுமையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

23 மே 2018

புரட்சிகர இயக்கத்தினர் மட்டும் எப்படி இலக்கானார்கள்?

தப்பிய அரசியல் கட்சிகள் நிர்வாகிகள் தூத்துக்குடிப் படுகொலைகள் பல அபாயகரமான கேள்விகளை எழுப்பாமல் இல்லை. புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் போன்ற இயக்கங்கள், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என குறிப்பிட்டுச் சொல்லும்படியானவர்கள் இலக்கு வைக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு அரசியல் கட்சியினருமே இக்கோர துப்பாக்கிச் சூட்டில் பாதிக்காமல் தப்பியது எப்படி என்பது ஆகப் பெரும் கேள்வி. தூத்துக்குடிப் படுகொலைகளின் பின்னால் மாபெரும் சதி இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 3 மாதங்களாக பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அந்த மக்களைச் சந்திக்க முடியாத நிலைதான் இருந்தது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் பிரதான அரசியல் கட்சிகள் மீது மக்கள் கடும் கோபத்தில்தான் இருந்தனர். அதனால்தான் சிறு சிறு இயக்கங்கள், கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் அங்கே வந்து ஆதரவு தெரிவிக்க அவர்கள் அனுமதித்தனர்.ஆனால் பிரதான கட்சியினரை உள்ளேவிடாமலேயே விமர்சனங்களை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர். ஸ்டெர்லைட்டை முன்வைத்து பிரதான கட்சிகள் மீது மக்களுக்கு சந்தேகமும் இருந்தது.ஸ்டெர்லைட்டிடம் தூத்துக்குடி அரசியல் பிரமுகர்கள் பெற்ற ஆதாயங்கள் போராட்ட களத்தில் மக்களின் பேசுபொருளாகவும் இருந்ததை மறுக்க முடியாது. இந்த நிலையில் மேம்போக்காக மக்கள் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என பசப்பு வார்த்தைகளைத்தான் இந்த அரசியல் கட்சிகள் தெரிவித்தும் வந்தனர்.மேலும் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இந்த போராட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வரக்கூடாது என தடுக்கின்றனர் என்றும் பகிரங்கமாக பொதுவெளிகளில் ஊடகங்களிலும் பேசப்பட்டது. இந்த நிலையில் உச்சகட்டமாக 100-வது நாள் தன்னெழுச்சிப் புரட்சியில் திட்டமிட்ட வகையில் பலர் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது.போராட்டத்துக்கு முதல் நாள் 65 பேரை இலக்கு வைத்து போலீஸ் தேடியது.. இதில் 10 பேர் மட்டுமே சிக்கினார்கள் என்பது அப்பகுதி ஊடகத்தார் அவர்களது ஊடகங்களில் சொன்ன செய்தி. இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களில் புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழரசன், மக்கள் அதிகாரம் ஜெயராமன் இருவரும் அடக்கம். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்திருக்கிறார்.ஆனால் பிரதான கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர் அல்லது போலீசாரின் பாதுகாவலில் இருந்திருக்கின்றனர். அப்படியெனில் போராட்டக்காரர்கள் மீதான வன்மங்களைத் தீர்க்க கட்சிகளும் அரசும் போலீஸும் இணைந்து திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டை நடத்தியதா? என்கிற கேள்வி இப்போது விவாதத்துக்குரியதாக மாறியிருக்கிறது.மக்கள் தன்னெழுச்சி போராட்டங்களை ஆதாயமாக்கிக் கொண்டு அரசியல் அறுவடை செய்ய திராணியற்றவர்களும் அதிகார வர்க்கத்துடன் இப்படுகொலையில் கை கோர்த்து உள்ளனரா? அரசியலில் போணியாகவே முடியாதவர்களுக்கு மக்களின் போராட்டங்கள் எரிச்சலைத்தான் தரும்.. ஆதாய அரசியல் மட்டுமே போதும்... கொள்கை கோட்பாடு நாடகமெல்லாம் நமக்கு மட்டும் தெரியும் என்கிற மமதையில் இருக்கும் அந்த அரசியல்வாதிகளின் கள்ளக் கூட்டில்தான் இந்த 'இனப்படுகொலை' நிகழ்த்தப்பட்டதா?வரலாறு விடை சொல்லும்!

18 மே 2018

நாரந்தனையில் தொடரும் பசுக்கொலைகள்!

2018-05-18 நாரந்தனை வடக்கில் தொடரும் பசுவதைகள்! முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை நினைவுநாளான இன்று கோமாதா என அழைக்கப்படும் பசுவைக் கொன்று இறைச்சியாக்கும் ஈனச்செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.கட்டாக்
காலிகள் அழிக்கப்படவேண்டும் என கடந்தகாலங்களில் கோஷமிட்ட சிலர் இந்த பசுக்கொலைக்கு ஆசீர்வாதம் வழங்குவதாக அறியப்பட்டுள்ளது.கோயில் திருவிழாவுக்கு பால் கொண்டுவா, தயிர் கொண்டுவா என விளம்பரம் விடும் கோயில் நிர்வாகிகள் பசுக் கொலையைக்கண்டிப்பதில்லை. மனச்சாட்சி இருந்தால் இதைக் கண்டிக்கலாமே!
பொது அமைப்புகள் எவையும் கண்டிப்பதாகத் தெரியவில்லை.
என்னினமே! என் சனமே! எமக்கேன் இந்த ஈன நிலை?
ஒவ்வொரு நாளும் கொலைசெய்யப்பட்டு இறைச்சிவாரப்பட்டுக் கிடக்கும் பசுக்களின் உடலைத் தரிசனம் செய்வது தான் எமது தலைவிதியா? சைவசமயிகள் என்று பட்டை அடித்துக்கொண்டு திரிய வெட்கம் இல்லையா? நாரந்தனைக் கந்தசாமி கோயில் திருவிழா நாளை ஆரம்பமாம்! 12 நாளும் தவறாமல் செல்லுங்கள்! மாடுகள் செத்தால் உங்களுக்கென்ன? நீங்கள் எல்லாம் சைவசமயிகள் அல்லவா?
யாராவது கேணைப்பயல்கள் மாடுகளைப்பற்றி விசனப்படட்டும்!

நன்றி:முன்னாள் அதிபர் திரு,ஞானசோதியன்(முகநூல்)

17 மே 2018

ஈபிடிபி ஆசிரியையின் செயலால் கொந்தளிப்பு!

Related imageஇருபாலை பகுதியில் மாணவர்களை முன்பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டுச் சென்ற முன்பள்ளி ஆசிரியை தொடர்பான தகவல் வெளியானதை அடுத்து கல்வி திணைக்கள அதிகாரிகளால் குறித்த முன்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.இருபாலை தெற்கு ஞான ஒளி சனசமூக நிலையத்தில் இயங்கி வந்த குறித்த முன்பள்ளியில் மாணவர்கள் கற்று கொண்டு இருந்த நேரம் திடீரென ஆசிரியை மாணவர்களை முன்பள்ளிக்குள் வைத்து பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டார்.மூடப்பட்ட முன்பள்ளிக்குள் மாணவர்கள் தனித்து இருந்தபோது, அச்சம் காரணமாக அவலக்குரல் எழுப்பினர்.அதனை அவதானித்த அயலவர்கள் முன்பள்ளி ஆசிரியையின் பொறுப்பற்ற தன்மையை கண்டித்ததுடன் மாணவர்களை மீட்கும் முகமாக ஆசிரியையை தேடி சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கும் அயலவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து குறித்த முன்பள்ளிக்கு விரைந்த அதிகாரிகள் மாணவர்களை மீட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டனர். அத்துடன் தற்காலிகமாக முன்பள்ளியை மூடுமாறு பணித்துள்ளனர்.
குறித்த முன்பள்ளியின் ஆசிரியை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் என்று தெரிவிக்கப்படுகிறது.

13 மே 2018

இந்தோனீசியாவில் தேவாலயங்கள் மீது தற்கொலைத் தாக்குதல்!

தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல் - 9 பேர் பலிஇந்தோனீசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் உள்ள மூன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது தற்கொலை படையினர் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் குறைந்தது 9 பேர் இறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சில நிமிட இடைவெளியில் நடந்த இந்த தாக்குதல்களில் பல டஜன் மக்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.
தாக்குதல் நடந்த ஒரு தேவாலயத்தின் நுழைவாயிலில் குப்பைகள் மற்றும் சிதிலங்கள் சிதறிக் கிடப்பதை தொலைக்காட்சியில் வெளியான படங்கள் காண்பித்துள்ளன.
முஸ்லீம்கள் பெருமான்மையாக வாழும் இந்தோனீசியாவில், அண்மைய மாதங்களில் இஸ்லாமிய தீவிரவாதம் அதிகரித்து வருகிறது.இந்த குண்டுவெடிப்புகள் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு நடந்துள்ளது.இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களை, இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஜெம்மா அன்ஷுரட் தவ்லா என்ற குழுவால் நடத்தியிருக்கலாம் என்று இந்தோனீசியாவின் உளவுத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

நன்றி:பிபிசி தமிழ்

06 மே 2018

ரணிலுடன் எழுத்து மூல ஒப்பந்தம் என்கிறார் சிவசக்தி ஆனந்தன்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நாம் வெறுமனே ஆதரவளிக்கவில்லை. எழுத்து மூலம் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்ட பிறகே ஆதரவினை வழங்கியுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, பாவற்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அண்மையில் நானும் எனது கட்சியின் தலைவரும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உரையாடி இந்தோம். இந்த சந்திப்பு குறித்த உண்மையை தெரியாத சிலர் பொய்யாக வதந்திகளை பரப்பி வந்தனர். ஆனால் அந்த சந்திப்பின் உண்மைத் தன்மையினை தற்போது வெளிப்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது.நாம் அரசியல் கைதிகள் விடுதலை, மீள்குடியேற்றத்தில் உள்ள பிரச்சினைகள், காணி விடுவிப்பு, காணாமல் போனோர் ஆகிய விடயங்கள் உள்ளடக்கிய சில கோரிக்கைகளையே பிரதமருக்கு எழுத்து மூலமாக முன்வைத்தோம்.இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு பிரதமர் ரணில் உடன்பட்டதுடன், எழுத்து மூலமாக கையெழுத்திட்டு ஒப்பந்தமொன்றை வழங்கியுள்ளார்.
நாம் வெறுமனே பிரதமருக்கு ஆதரவளிக்கவில்லை. எழுத்துமூல உறுதிப்பாட்டின் அடிப்படையிலேயே ஆதரவினை வழங்கியுள்ளோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தனும் 3 வரவு செலவுத் திட்டத்துக்கும் ஆதரவளிக்க எவ்வித எழுத்து மூல ஒப்பந்தத்தையும் செய்ய முடியாதுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதால் எதனையும் கோர முடியாதவர்களாக உள்ளனர்.ஒரு தனி மனிதனாகிய என்னால் ரணில் விக்ரமசிங்கவுடன் நிபந்தனை போட முடியுமாக இருந்தால் 15 பேராக உள்ள கூட்டமைப்பினர் மக்களுக்காக எவ்வளவு விடயங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.பிரதமருடன் செய்து கொண்ட ஒப்பந்த நகலையும் சிவசக்தி ஆனந்தன் மக்கள் முன்பு காண்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

01 மே 2018

புலிகள் இயக்கப் போராளி பிரதீபனுக்கு மக்கள் இறுதி அஞ்சலி!

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளி பிரதீபனின் இறுதிக்கிரியைகள் நேற்று மதியம் முல்லைத்தீவு முத்தையன்கட்டிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் பணியாற்றிய ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த  போராளி பிரதீபன் நேற்றுமுன்தினம் உயிரிழந்திருந்தார்.உயிரிழந்த போராளியின் இறுதி வணக்கக் கூட்டம் முத்தையன்கட்டு இளந்தளிர் கல்வி நிலையத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. அவரது இறுதி வணக்க ஊர்வலமும் மிகவும் உணர்வெழச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது. இந்த இறுதி நிகழ்வின்போது பெருந்திரளான பொதுமக்கள்,மற்றும் போராளிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

27 ஏப்ரல் 2018

கனடாவின் பிரதமர் சிங்களவர்களுக்கு வாழ்த்து கூறவில்லை எனக் குற்றச்சாட்டு!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உணவுகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இலங்கையின் பெரும்பான்மையினரான சிங்கள மக்களை புறக்கணித்திருப்பதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டேனியல் ஜேன் குற்றம்சாட்டியுள்ளார். ஜஸ்டின் ட்ரூடோவின் புத்தாண்டு வாழ்த்து செய்திகளில் தமிழ் மக்களுக்கு மாத்திரமே வாழ்த்து கூறப்பட்டிருப்பதாகவும், பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களை அவர் புறக்கணித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் ஊடாக கனடாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும், இந்த நிலையில், எதிர்வரும் விசாகப்பூரணை தினத்தை முன்னிட்டு, சிங்கள பௌத்த மக்களுக்கு வாழ்த்து செய்தியை பிரதமர் அனுப்ப வேண்டும் என்றும் கனேடிய பாதுகாப்பு ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பில் பதில் வழங்கியுள்ள கனடாவின் பிரதமர் அலுவலக பேச்சாளர் ஒருவர், தமிழர்கள் விடயத்தில் முன்னைய அரசாங்கம் கடைபிடித்த நடைமுறையையே பின்பற்றுவதாக தெரிவித்துள்ளார்.

22 ஏப்ரல் 2018

கோமாளி நடிகர் எஸ்.வி.சேகர் தலைமறைவு!

Image result for s.v.sekarபத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் பேரில் நடிகர் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. தற்போது எஸ்.வி. சேகர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து தெரியவரவில்லை. பெண் பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தட்டியது சர்ச்சையானது. இச்சம்பவம் தொடர்பாக திருமலை என்பவர் முகநூலில் மிக மோசமாக பதிவிட்டிருந்தார்.பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் இந்த பதிவை நடிகர் எஸ்.வி.சேகரும் தம்முடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார். இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின்னர் இப்பதிவை நீக்கிய எஸ்.வி.சேகர், மன்னிப்பு கேட்டார். இவ்விவகாரம் குறித்து எஸ்.வி.சேகர் மீது போலீசில் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து எஸ்.வி.சேகர் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. தற்போது எஸ்.வி.சேகர் அவர் வீட்டில் இல்லை என்றும் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வரவும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனிடையே எஸ்.வி.சேகர் வீடு மீது தாக்குதல் நடத்தியதாக 30 பத்திரிகையாளர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 ஏப்ரல் 2018

அன்னை பூபதியின் நினைவு இல்லத்தில் பாதணிகளுடன் நின்ற பொலிஸார்!

தியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் சமாதியில் நிகழ்வுகள் நடைபெற்றுவந்த நிலையில் சமாதிக்கு அருகில் பொலிஸார் தமது பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்ட நிலையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களை அங்கிருந்துவெளியேற்றினார் என தெரிவிக்கப்படுகிறது.அன்னை பூபதியின் இந்த சமாதியென்பது எம்மை பொறுத்தவரையில் புனித இடமாக கருதுகின்றோம் எனவே தயவுசெய்து உங்களது பாதணிகளை வெளியே கழற்றிவிட்டு வாங்கள் என்று மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் பொலிஸாரிடம் தெரிவித்தார் என்றும் இதனை தொடர்ந்து பொலிஸார் சமாதிக்கு வெளியில் நின்று தமது கடமைகளை மேற்கொண்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஒரு புனித இடமாக கருதப்படும் அன்னை பூபதியின் சமாதிப்பகுதியில் பொலிஸார் பாதணிகளுடன் நின்றது தொடர்பில் அங்கு நின்ற பலரும் தமது அதிர்ப்தியை வெளிப்படுத்தினர் எனக் கூறப்படுகிறது.

18 ஏப்ரல் 2018

ஜோர்ஜ் புஷ்ஷின் தாயார் காலமானார்!

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயார் காலமானார்முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தாயார் தனது 92ஆவது வயதில் காலமானார்.
இவர் ஜார்ஜ் எச் டபள்யு புஷ்ஷின் மனைவியும், ஜார்ஜ் டபள்யு புஷ்ஷின் தாயும் ஆவார்.
1989ஆம் ஆண்டிலிருந்து 1993ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் முதல் குடிமகளாக இருந்த இவரின் உடல்நலம், சிறிது நாட்களாக பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் அவருக்கு மேல் சிகிச்சை நிறுத்தப்பட்டது.
அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இவரின் கணவருக்கு 93வயதாகிறது அவர் நீண்டகாலம் வாழ்ந்த அமெரிக்க அதிபர் என்ற பெயரை பெறுகிறார். பார்பராவின் மகன் ஜார்ஜ் புஷ் 2000ஆம் ஆண்டு அமெரிக்காவின் 43ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இருமுறை அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"எனது அன்பு அம்மா தனது 92ஆவது வயதில் காலமானார். லாரா, பார்பரா, ஜென்னா மற்றும் நான் துக்கத்தில் இருக்கிறோம், ஆனால் எனது அம்மாவின் ஆன்மா அமைதியில் உள்ளது என்பதால் எங்களின் மனதும் அமைதியாக உள்ளது. பார்பரா புஷ் மிகச் சிறந்த முதல் குடிமகளாக இருந்தார். பிறரை போல் இல்லாமல் உத்வேகம், அன்பு மற்றும் கல்வியை மில்லியன் கணக்கானவர்களுக்கு வழங்கியவர்.
அவரின் கடைசி காலம் வரை அவர் எங்களை சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். பார்பரா புஷ்ஷை தாயாக பெற்ற நான் அதிர்ஷ்டசாலி; எனது குடும்பம் அவரை இழந்து வாடுகிறது. உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி" என ஜார்ஜ் புஷ் தெரிவித்துள்ளார்.
பார்பரா புஷுக்கு ஜெப் புஷ் என்ற மற்றொரு மகனும் உள்ளார். அவர் 1999ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டுவரை ஃபுளோரிடாவின் ஆளுநராக செயல்பட்டார். மேலும் 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
அமெரிக்காவின் முதல் குடிமகளுக்கான சில வரைமுறைகளை தகர்த்து, பார்பரா புஷ் அமைப்பை தொடங்கினார் அதில் வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கல்வி அறிவுபெற வழிவகைச் செய்தார்.

நன்றி:பிபிசி தமிழ்