08 நவம்பர் 2020
அமெரிக்காவுக்குப் புதிய நாளை உறுதி செய்துள்ளீர்கள்;கமலா வெற்றிப் பேச்சு!
அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடனைத் தேர்வு செய்து, தேசத்துக்குப் புதிய நாளை நீங்கள் உறுதி செய்துள்ளீர்கள். எங்கள் முன் இருக்கும் பாதை எளிதானது அல்ல. இப்போதிருந்து உண்மையான பணி தொடங்கியுள்ளது என்று துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
அமெரிக்க வரலாற்றில் துணை அதிபராக முதன்முதலில் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றால் அது கமலா ஹாரிஸ்தான். இந்தியாவை, குறிப்பாகத் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர், அமெரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் முதன்முதலில் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பின் அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடனும், துணை அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸும் மக்களுக்கு வில்மிங்டனில் உள்ள டெலாவேர் நகரில் சனிக்கிழமை இரவு உரையாற்றினர்.
இதில் துணை அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் கமலா ஹாரிஸ் பேசியதாவது:
''அடுத்த 4 ஆண்டுகளுக்கான நல்லதொரு தீர்ப்பை தேசத்தின் மக்கள் இன்று வழங்கியுள்ளார்கள். உண்மையான பணி இப்போதுதான் தொடங்கி இருக்கிறது.
இந்த நாளுக்காக நீ தயாராக இருக்கவேண்டும் என்று தாய் ஷியாமளா கோபாலன் அடிக்கடி கூறுவார். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம் அது பிரச்சினையில்லை. நான் துணை அதிபராகவும், ஜோ பைடன் அதிபராகவும் செயல்படுவோம்.
முன்னாள் அதிபர் ஒபாமா விசுவாசிகளாக, நேர்மையாக, ஒவ்வொரு நாள் தூக்கத்திலிருந்து எழும்போதும் உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தைப் பற்றியும் சிந்திப்போம். ஏனென்றால்தான் இப்போதுதான் உண்மையான பணி தொடங்கியுள்ளது. அமெரிக்காவுக்குப் புதிய நாளை உறுதியளித்துள்ளீர்கள்.
அதிபர் அலுவலகத்துக்குள் நுழையும் முதன் பெண் நான்தான். ஆனால், நானே கடைசியாக இருந்துவிடக்கூடாது. என்னுடைய வாழ்வில், நான் இங்கு நிற்க முக்கியக் காரணமாக இருந்தவர் என்னுடைய தாய் ஷியாமளா கோபாலன். என் மனதில் எப்போதும் நிறைந்தவர்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அவர் வந்தபோது 19 வயது இருக்கும். இந்தத் தருணத்தை நிச்சயம் அவர் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கமாட்டார். ஆனால், அமெரிக்காவில் இதுபோன்ற தருணங்கள் சாத்தியம் என்று என் தாய் நம்பினார்.
ஆதலால், நான் என் தாயைப் பற்றியும், அவரின் தலைமுறைகளான கருப்பினப் பெண்களைப் பற்றியும் சிந்திக்கிறேன். எனக்கு ஆதரவளித்த ஆசிய மக்கள், வெள்ளையின மக்கள், அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
சமத்துவம், சுதந்திரம், அனைவருக்குமான நீதி ஆகியவற்றுக்காக பெண்கள் போராடியுள்ளார்கள், தியாகங்களைச் செய்துள்ளார்கள். அதிலும் கருப்பினப் பெண்கள் அதிகமான தியாகங்களைச் செய்துள்ளார்கள். அதிகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெண்கள்தான் இந்த ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதை அடிக்கடி நிரூபித்து வருகிறார்கள்.
அனைத்துப் பெண்களும் நூற்றாண்டுகளாக தங்களின் உரிமையைப் பாதுகாக்கப் போாரடியும், பணியாற்றியும் வருகிறார்கள். 100 ஆண்டுகளுக்கு முன் 19-வது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. 55 ஆண்டுகளுக்கு முன் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றோம். இப்போது 2020ஆம் ஆண்டு புதிய தலைமுறைக்கான பெண்கள் தங்களின் வாக்களிக்கும் உரிமையால், தொடர்ச்சியான போராட்டத்தால், இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.
அமெரிக்காவில் உள்ள ஒவ்வொரு சின்னஞ்சிறு பெண் குழந்தையும், இந்த தேசம் சாத்தியத்துக்கான வாய்ப்புகளை வழங்குகிறது என்று பார்க்கிறது. நம் தேசத்தின் குழந்தைகள், பாலின வேறுபாடின்றி, தெளிவான செய்தியை வழங்கியிருக்கிறது.
லட்சியத்துடன் கனவு காணுங்கள். உறுதியுடன் வழிநடத்துங்கள். மற்றவர்கள் உங்களைப் பார்க்காத கோணத்தில் உங்களைப் பாருங்கள். ஏனென்றால் அவர்கள் இதற்கு முன்பு அவ்வாறு உங்களைப் பார்த்ததில்லை. மேலும் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நாங்கள் உங்களைப் பாராட்டுவோம்.
கடினமான பணி, அத்தியாவசியமான பணி, சிறந்த பணி. அத்தியாவசியமான பணிதான் மக்களைக் காத்து, கரோனாவைத் தோற்கடிக்கும். நம் தேசத்தின் பொருளாதாரத்தைக் கட்டமைக்க தொழிலாளர்களுக்காக உழைக்க வேண்டும்.
நம்முடைய நீதிமுறையிலிருந்தும், சமூகத்திலிருந்தும் இனவெறியைப் பிடுங்கி எறிய வேண்டும். நம் தேசத்தை ஒற்றுமைப்படுத்தி, தேசத்தின் ஆன்மாவைக் குணப்படுத்த வேண்டும். இதற்கான பாதை நமக்கு எளிதானது அல்ல என்பதை அறிவேன். ஆனால் அமெரிக்காவும் தயாராக இருக்கிறது. நானும் ஜோ பைடனும் தயாராக இருக்கிறோம்''.
இவ்வாறு கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.
21 அக்டோபர் 2020
பிரித்தானிய அரசின் புலிகள் மீதான தடை தவறானது!
விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியா அரசாங்கத்தின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விசேட ஆணையம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது.
இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.
இரகசிய விசாரணையின்போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.
எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச் சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.
இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.
இந்த நிலையில் இன்று வெளியான 38 பக்கத் தீர்ப்பின்படி விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது தீர்ப்பையும், அது குறித்த சிபார்சையும் ஆணையம் பிரித்தானிய அரசுக்கு அனுப்பிவைக்கும்.
அதன் அடிப்படையில் இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தனது முடிவை அடுத்த சில வாரங்களில் அறிவிக்கும் எனத் தெரியவருகின்றது.
14 அக்டோபர் 2020
பிரபாகரன் போல இருக்கும் நீங்கள் முரளீதரன் படத்திலா?கவிஞர் தாமரை காட்டம்!
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதற்கு கவிஞர் தாமரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் போற்ற தோற்றப் பொருத்த உள்ளவர் என்பதால் அவரது வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நீங்கள் நடியுங்கள் என்றும் கவிஞர் தாமரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன். முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின்வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம்.இந்த அளவுக்கு அது வளருமுன்பாகவே உங்களை எச்சரித்து விட வேண்டுமென்றுதான் விரும்பினேன். முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்தது கூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப் பட்டுவந்தது. ஆரம்ப காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளான போது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத்தலைவர் ''அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்" என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது. அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்.முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே ஐயகோ! சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, 'இந்தநாள் இனியநாள்' என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்....காணாமல் போன தம்வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, 'நாடகம்' என்று வர்ணித்தார். இனப்படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே???. அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள் !? ஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும் ?!வரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே !. அது தன்பாட்டுக்கு எழுதிப் போகும்.... எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் 'எட்டப்பன்' என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரியுமல்லவா?. உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா? நானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள், எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள்!என்னது...நட்டமென்றா சொன்னேன் ??! மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன், என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன், என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன், இதில் நட்டமென்ன வந்தது நட்டம் ?? ஒரு தமிழ்ப்பெண் தன் 'பங்களிப்பாக' இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல் !. நாமென்ன போர்முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா? போராட்டங்களில் முன்வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா? அண்ணனைக் காணோம் அக்காவைக் காணோம் அம்மாவை சாகக் கொடுத்தோம் என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா ?? இசைப்பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா ? இல்லை அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தோமா ? ஒரு பாடலை எழுத மறுக்கிறோம், ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம் அவ்வளவுதானே ? என்ன 'நட்டம்'? நமக்குத் தெரிந்தவகையில் 'பங்களி'க்கிறோம், அவ்வளவுதானே ?? நான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலைநிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும், நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும்.தமிழர்களாகப் பிறந்து விட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம்,புறம்,அடுப்படி, மூன்றுவேளை சோறு ???? தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது !. காலக்கோளாறு இது ! தமிழன் தாழலாம் ஆனால் வீழக்கூடாது. வீழ்த்த முனைபவர்கள் பலவேடமிட்டு வரத்தான் செய்வார்கள், ஏமாந்து விடக்கூடாது. நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள், தூங்கிவிடக் கூடாது. முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது !.மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள். என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம் ! உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள். பி.கு : சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது !. அதை ஏற்று நடியுங்கள், வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம்! தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை ! படம் வெளியிட்டிருக்கிறேன், கண்ணாடி முன்நின்று ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு கவிஞர் தாமரை கூறியுள்ளார்.
22 ஆகஸ்ட் 2020
கூட்டமைப்பின் பேச்சாளராக செல்வம்?

26 நவம்பர் 2019
பின்வாங்கா போர்த்திறன்,அறம் வழுவா ஆட்சித்திறன்,மதுவை மக்களிடம் நெருங்க விடா மாவீரன்!ராமதாஸ் வாழ்த்து!
22 நவம்பர் 2019
தமிழர் தேசத்தை பாதுகாக்க தமிழ்த் தேசியப் பேரியக்கம்!
தமிழ் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களால் நிறைப்பார்கள். அனைத்துலக அரசுகளுடன் நலன் சாரந்த உறவுகளைப் பேணி அவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு தமது திட்டங்களை முன்னெடுப்பார்கள். இத்தகையதொரு சூழலில் தமிழர் தேசத்தை பாதுகாக்க தமிழ்த் தேசிய பேரியக்கம் ஒன்றை கட்டியெழுப்ப நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் ஒன்றினை விடுத்துள்ளது.
இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய இராஜபக்ச சிங்கள மக்களின் வாக்குகளால் பெருவெற்றியடைந்திருப்பது சிங்கள பௌத்த தேசியவாதம் சிங்களதேசத்தில் ஆழமாக வேருன்றியிருப்பதனை நன்கு வெளிப்படுத்துகிறது. சிங்கள மக்களது வாக்குகளால் மட்டும் என்னால் வெற்றிகொள்ளமுடியும், தமிழ் முஸ்லீம் மக்களது வாக்குகள் எனக்குத் தேவையுமில்லை எனத் திடமாகக் கூறி அதன் வாறே கோத்தாபய இராஜபக்ச வெற்றி பெற்றிருப்பதும்கூட சிறிலங்காவை முன்னிருந்ததைவிடத் தீவிரமான இனவாதத்தின் ஒரு தோற்றமாகவே வெளிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த இனவாதநிறுவனமாக இவ்வாறு இறுகிப்போயிருக்கும் நிலையில், புதிய அரச அதிபரின் செயற்பாடுகள் சிறிலங்கா அரசை மேலும் சிங்கள பௌத்தமயப்படுத்தும் வகையில்தான் அமையும். எல்லாளனைத் தோற்கடித்த பின்னர் துட்டகைமுனுவால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ருவான்வெலிசாய விகாரை வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்தமையின் ஊடாக கோத்தாபய தன்னைத் தமிழர்களை வெற்றி கொண்ட நவீன துட்டகைமுனுவாக சிங்கள மக்கள் மனதில் பதிய வைக்க முயல்கிறார் என்றுதான் நாம் பார்க்கிறோம்.
ஒரு இனவழிப்புக் குற்றவாளியை அந்த இனவழிப்புக்குத் துணைபோன மக்கள் கூட்டம் ஆதரித்து நி;ற்பதனால் மட்டும் அவர் புனிதராகி விட முடியாது. உலகத் தமிழ் மக்களின் ஆன்மபலத்துடன், உலகில் நீதிக்காகப் போராடும் தோழமைகளுடன் இணைந்து, தமிழின அழிப்புக் குற்றவாளி கோத்தபாய இராஜபக்சவினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திலும் (ICC), சிறிலங்கா நாட்டினை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக நீதிமன்றிலும் (International Court of Justice) நிறுத்தும் போராட்டத்தை நாம் வீச்சாக முன்னெடுப்போம்.
சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்துக்கு முன்னால், அரசு அதிபருக்கான விலக்கு( head of state immunity) என்ற திரைக்கு பின்னால் கோத்தபயவும், சிறிலங்கா நாடு என்ற வகையில் உலக நீதிமன்றத்தின் முன்னால் இறைமைக்கான விலக்கு (sovereign immunity) என்ற திரைக்கு பின்னாலும் ஒளித்து கொள்ள முடியது சுட்டிக்காட்டுகின்றோம்.
எமது இந்தப் பிரகடனம் எமது தார்மீகக்கோபத்தில் இருந்து மட்டுமல்ல, ஒரு இனஅழிப்புக் குற்றவாளி அரச தலைவராக இருக்கும் நிலையினை உலக மனச்சாட்சிக்குச் சுட்டிக்காட்டும் நோக்கத்தினையும் தன்னகத்தே கொண்டது. இவ்வேளையில் நடைமுறை யதார்த்தத்துக்கு இசைவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் சிலர் எண்ணலாம்.
இவ்விடத்தில் நாம் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். தமிழ் மக்கள் தமது தேசத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ்த் தேசியப் பேரியக்கமொன்றைக் கட்டியெழுப்பி அர்ப்பணிப்பு மிக்க ஜனநாயகவழிப் போராட்டங்களுக்குத் தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. புதிய ஆட்சியாளர்களிடம் இருந்து கருணை எதனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் புதிய அரசதலைவரும், தொடர்ந்து அமைந்துள்ள மகிந்த ஆட்சியும் தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் வேலைகளை வேகப்படுத்துவார்கள். சிறிலங்கா என்பது ஒரே மக்களைக் கொண்ட நாடு என்ற கொள்கையின் கீழ் சிங்கள மேலாண்மைக்குள் தமிழ் முஸ்லீம் மக்களைச் சிறைப்பிடிக்க முனைவார்கள். தமிழ் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களால் நிறைப்பார்கள். அனைத்துலக அரசுகளுடன் நலன் சாரந்த உறவுகளைப் பேணி அவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு தமது திட்டங்களை முன்னெடுப்பார்கள்.
இத்தகையதொரு சூழலில் தமிழ் மக்களுக்கு இரு தெரிவுகள் மட்டுமே இருக்கும்.
ஒன்று, யதார்த்தம் என்று கூறி புதிய ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேண முயன்று சிங்கள மேலாண்மைக்குள் அமிழ்ந்து போவது.
அடுத்தது, நமது சக்தி அனைத்தையும் திரட்டி, நம்மைத் தேசமாக ஒருங்கிணைத்து நமது இருப்புக்கும் உரிமைக்காகவும் போராடுவது.
முதலாவது தெரிவு மிகவும் அவமானகரமானது. இது இனஅழிப்புக்கு வழிகோலும். இதனை நாம் தெரிவு செய்ய முடியாது. தமிழ் மக்கள் இரண்டாவது தெரிவினை மேற்கொண்டேயாக வேண்டும். இதனைத் தமிழ் மக்களின் தேசிய அரசியற் தலைவர்களாகத் தம்மை அடையாளப்படுத்துவோர் தாமே முன்னின்று எடுத்துச்செல்ல வேண்டும். அரபு வசந்தம், பிரான்சின் மஞ்சள் அங்கிப் போராட்டம், மற்றும் தற்போது நடைபெறுகின்ற கொங் கொங் மக்கள் போராட்டம், பொலிவியா மக்கள் போராட்டம், ஈரான் மக்கள் போராட்டம் ஆகியன மக்கள் போராட்டங்களின்; வலிமையினை எடுத்தியம்புகின்றன.
எமது பார்வையில் தமிழ் மக்கள் போராடினால்தான் வாழ்வு என்ற கட்டத்தை அடைந்துள்ளார்கள் என்றே கருதுகிறோம். இது சவால் நிறைந்த காலகட்டமாகவே இருக்கும். இதனைத் தமிழ் மக்கள் எதிர்கொள்வது நெருப்பாற்றை நீந்திக் கடப்பது போன்றதாகவே அமையும். இருந்த போதும் இதுதான் யதார்த்தமாக அமையப் போகிறது. இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ளத் தாயகத் தமிழ் மக்கள், புலர்பெயர் தமிழ் மக்கள், தமிழ்நாடு மக்கள், உலகத் தமிழ் மக்கள் என அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாக இருக்கும்.
சிறிலங்காவின் தமிழின அழிப்பாளிகளை அனைத்துலக அரங்கில் நீதியின் முன் நிறுத்தும் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு கோத்தாபய இராஜபக்ச அரசதலைவராகத் தேர்வு செய்யப்பட்டமை தார்மீகத் தளத்தில் பலம் சேர்க்கும். நீதியின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவை எமக்குப் பெற்றுத் தரும். தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தை நடத்தும் வகையில் தமிழ் தேசம் மாவீரர்கள் நினைவுடன் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும். என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
02 அக்டோபர் 2019
லலிதா யுவல்லரியில் 50 கோடி பெறுமதியான நகைகள் கொள்ளை!
சுவரில் உள்ள அந்த ஓட்டையை பார்த்தால் அவ்வளவு பெரிசாக இருக்கிறது. ஒரு ஆள் உள்ளே புகுந்து வெளியே வரும் அளவுக்கு கனகச்சிதமாக ஓட்டைய போட்டு.. லலிதா ஜுவல்லரியில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை ஆட்டைய போட்டுள்ளனர் கொள்ளையர்கள்! திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே லலிதா ஜூவல்லரி நகைக் கடை உள்ளது. 5 வருஷமாக இங்குதான் செயல்பட்டு வருகிறது. நேத்து ராத்திரி வழக்கம்போல, கடை ஊழியர்கள் வேலையை முடித்து வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். எப்பவுமே 6 வாட்ச்மேன்கள் இந்த கடைக்கு வெளியே நைட் டியூட்டியில் இருப்பார்களாம். அப்படிதான், கடைக்கு வெளியே இரவெல்லாம் காவல் இருந்துள்ளனர்.ஆனால் இன்று காலை கடையை திறந்து பார்த்தால், நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது 3 மாடி கட்டிடம்.. இங்குள்ள முதல் தளத்தில்தான் கொள்ளை நடந்துள்ளது. ஷோ-கேஸில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் எல்லாமே அபேஸ் ஆகி இருந்தது. இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.விஷயத்தை கேள்விப்பட்டு, திருச்சி மாநகர கமிஷனர் அமல்ராஜே நேரடியாக கடைக்கு வந்துவிட்டார். பிறகு போலீஸ் அதிகாரிகள் கடையை ஆய்வு செய்தனர். அப்போது, கடையின் மேற்கு பகுதியில் உள்ள சுவரில் ஒரு பெரிய துளை இருப்பதை பார்த்தனர். ஒரு ஆள் உள்ளே நுழைந்து வெளியே ஈஸியாக வந்துவிடும் அளவுக்கு அந்த ஓட்டை இருந்தது. அந்த துளை வழியாகத்தான் கொள்ளையர்கள் உள்ளே வந்திருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.ஆனால் கொள்ளையர்கள் யார் என உறுதியாக தெரியவில்லை. அநேகமாக வடமாநில கொள்ளைக் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எப்படியோ கொள்ளை போன வைரம், தங்க நகைகளின் மதிப்பு 50 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து விசாரணை நடந்து வருகிறது.நைட் டியூட்டி வாட்ச்மேன்களையும் போலீசார் விசாரித்து வருவதுடன், கடைக்கு உள்ளே, கடைக்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து வருகிறார்கள். இதில் 2 பேர் கடைக்கு உள்ளே வருவது தெரிகிறது. ஆனால் அவர்கள் முகமூடி அணிந்துள்ளனர். இன்னொரு பக்கம் மோப்பநாய், வரவழைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 100 கிலோ நகைகளுடன் மாயமான அந்த கொள்ளையர்களை 7 தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.ஆனால் கொள்ளையர்கள் உஷாராக, கொள்ளையடித்து சென்ற வழி வரைக்கும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். கிட்டத்தட்ட ஒன்றே முக்கால்மணி நேரம் வரை கடைக்குள் பொறுமையாக இருந்து நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். திருச்சி நகரின் மையப்பகுதியில், அதுவும் கடையை சுற்றி இவ்வளவு கேமராக்கள் இருப்பது தெரிந்தும்.. துணிகரமாக இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது சாமான்ய மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.08 செப்டம்பர் 2019
மூவரின் தூக்கு கயிற்றை அறுத்த வீரவாள் ராம் ஜெத்மலானி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குக் கயிற்றை அறுத்த வீரவாள் ராம் ஜெத்மலானியின் வாதம் தான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். ராம் ஜெத்மலானிக்கு வயது 95. அவரின் மரணம் அரசியல் தலைவர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்காக கடுமையான சட்ட போராட்டம் நடத்தியவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி என்பது குறிப்பிடத்தக்கது. அழைத்து வந்த வைகோ.. நீதிமன்றத்தை அசர வைத்த வாதம்.. 7 தமிழர்களின் உயிரை காத்த ராம் ஜெத்மலானி!இந்த வழக்கில் இவர் செய்த வாதங்கள் மிக முக்கியமானது ஆகும். 7 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு ராம் ஜெத்மலானி வைத்த வாதங்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மூலம் இந்த வழக்கிற்காக அழைத்து வரப்பட்டவர்தான் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. இவர்தான் நண்பர் நான் வைகோவின் நீண்ட கால நண்பன். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேருக்காக தொடர்ந்து போராடுவேன். 7 பேரும் விடுதலை அடைய வேண்டும் என்பதுதான் வைகோவின் ஆசை. அவரின் ஆசையை கண்டிப்பாக நான் சட்ட போராட்டம் மூலம் நிறைவேற்றுவேன், என்று குறிப்பிட்டவர்தான் ராம் ஜெத்மலானி.இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மறைவுக்கு வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குக் கயிறை அறுத்த வீரவாள் ராம் ஜெத்மலானியின் வாதம் தான். ராம் ஜெத்மலானி என்ற மாமனிதரின் நினைவுகள் என் இதயத்தில் என்றும் சுழன்றுகொண்டே இருக்கும்.அவர் நீதிக்காகக் கடைசிவரை போராடினார். அவரின் மறைவு நீதித்துறை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று வைகோ குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று ராம் ஜெத்மலானி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்காக வைகோ இன்று டெல்லி செல்ல இருக்கிறார்.12 ஆகஸ்ட் 2019
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஜனநாயகவிரோதம்-விஜய் சேதுபதி!
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது என்று நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார். பெரியாரின் பழமொழியை குறிப்பிட்டு விஜய் சேதுபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனை தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. இது தொடர்பாக நேற்று ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதே சமயம் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் விஜய் சேதுபதி இதில் கருத்து தெரிவித்துள்ளார். எங்கு ஆஸ்திரேலியாவிற்கு விருது விழாவிற்கு சென்று இருந்த விஜய் சேதுபதி சர்வதேச தமிழ் வானொலி ஊடகம் ஒன்றுக்கு காஷ்மீர் பிரச்சனை குறித்து பேட்டி அளித்தார். காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு செய்த நடவடிக்கை தவறு என்று அவர் வெளிப்படையாக குரல் கொடுத்து பேசினார். இது உலகம் முழுக்க வைரலாகி உள்ளது. என்ன சொன்னார் அவர் தனது பேட்டியில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார். அப்போதே அவர் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லிவிட்டார். வீட்டு அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது . காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மிகுந்த மன வருத்தம் தருகிறது என்று மிகவும் உருக்கமாக பேட்டி அளித்து இருந்தார். மக்கள் பக்கம் பொதுவாக விஜய் சேதுபதி சமுதாய பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது வழக்கம். முக்கியமாக தமிழர் சார்ந்த பிரச்சனைகளில் தமிழக மக்களுடன் இவர் சேர்ந்து பேசி இருக்கிறார். அதேபோல் தற்போது காஷ்மீர் பிரச்சனையிலும் பெருவாரியான தமிழக மக்களின் குரலுக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளார்.26 மே 2019
கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை,திமுகவை சாடுகிறது நமது அம்மா!
உதியமரம் பெருத்தாலும் உத்தரத்துக்கு உதவாது என்றும் கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை என கருணாநிதி கூறியது தற்போது அக்கட்சிக்கே திரும்பி விட்டது என்றும் திமுக வெற்றியை நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் இந்த வெற்றியால் திமுகவுக்கு சந்தோஷம் இல்லை என்றே கூறப்படுகிறது. மத்தியில் திமுக நினைத்தது நடக்கவில்லை. அது போல் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்து ஏமார்ந்ததுதான் மிச்சம். இதுகுறித்து நமது அம்மா நாளிதழில் தலையங்கத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.அதில் கூறுகையில் திமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் இந்த உதியமரம் பெருத்தாலும் உத்திரத்துக்கு உதவாது. முருங்கைமரம் முற்றினாலும் முட்டுக் கொடுக்க ஆகாது எனும் கதைதான். அதிகப்பட்சம் என்ன நடக்கும். மது ஆலைகளை விஸ்தரிக்க மகாபிரபு டிஆர் பாலு பாடுவார்.மருத்துவக் கல்லூரி வளர்ச்சிக்கு ஜெகத்ரட்சகன் போராடுவார். ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கிலிருந்து தலை தப்பித்தால் போதும் என கனிமொழியும் ராசாவும் கடுமையாக உழைப்பார்கள். பிஎஸ்என்எல் முறைகேட்டு வழக்கில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற தயாநிதி திட்டமிடுவார். இப்படிதான் இந்த முப்பத்தெட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னெடுப்புகள் இருக்கும்.ஒன்றும் மட்டும் நிச்சயம். நாடாளுமன்றக் கேண்டீனில் பஜ்ஜி, வடை வியாவாரம் திமுகவால் படுஜோராய் நடக்கும். அதிலும் ஓசி பிரியாணி அரங்கேற்றம் நடக்காமல் இருந்தால் சரி. அதுவன்றி வேறு பயனேதும் தமிழகத்திற்கு சத்தியமாய் இருக்காது.கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை என்று 2014-ஆம் ஆண்டு கழகத்தின் சார்பில் தனித்து நின்று 37 பேர் வெற்றி பெற்றபோது கருணாநிதி செய்திட்ட விமர்சனம் இப்போது பூமராங் ஆகி அவரது கட்சிக்கே அன்னாரது பொன்மொழி புண் மொழியாகியிருக்கிறது என நமது அம்மாவில் விமர்சனம் எழுந்துள்ளது.23 ஏப்ரல் 2019
எனது பேத்தியின் தலையில் கைவைத்து விட்டு உள்ளே சென்றார் குண்டுதாரி!
நீர்கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த நிலையில் குண்டுடன் வெடித்தவரை நேரில் பார்த்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் திலீப் பெர்ணாண்டோ (66) மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.இது குறித்து திலீப் கூறுகையில், குண்டு வெடிப்புக்கு முன்னர் காலை 7.30 மணிக்கு எனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செண். செபஸ்டின் தேவாலயத்துக்கு வந்தேன். அப்போது அங்கு கூட்டமாக இருந்ததால் வேறு தேவாலயத்துக்கு செல்ல நானும் என் மனைவியும் முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பினோம். என்னுடைய இரண்டு பேத்திகள் உட்பட என் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தேவாலயத்தின் வாசலிலேயே நின்றிருந்தனர்.அப்போது 30 வயதான இளைஞர் ஒருவர் கையில் கனமான பையுடன் வந்துள்ளார். பின்னர் என் பேத்தியின் தலையில் கை வைத்து விட்டு தேவாலயத்தின் உள்ளே சென்றார், அவர் தான் வெடிகுண்டோடு வந்த நபர் என கூறியுள்ளார். அவரை பார்க்க அப்பாவியாக இருந்தது, அவர் எந்த வித பயமும், பதட்டமும் இன்றி நிதானமாகவே காணப்பட்டார். அவர் உள்ளே சென்றவுடன் வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பின்னர் என் குடும்பத்தார் அங்கிருந்து பதறியடித்து கொண்டு ஓடினார்கள். இப்படி தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என கூறியுள்ளார்.14 ஏப்ரல் 2019
மோடி வாக்கு சேகரிக்க வந்ததே ஒரு வாரிசுக்காகத்தான்!
வாரிசு அரசியலை ஒழிப்போம் என கூறும் மோடி வாக்கு சேகரிக்க தேனிக்கு வந்ததே ஒரு வாரிசுக்குத்தான் என்பதை மறந்துவிட்டார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் அனல் கக்க வைக்கின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் 40 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூடான பிரசாரத்தை செய்து வருகிறார்.இந்நிலையில் வடசென்னை வேட்பாளர் காளியம்மாளுக்கு ஆதரவாக சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது ராயபுரம் பகுதியில் அவர் பேசினார்.அவர் பேசுகையில் ஊழலுக்கான முதல் விதை எது தெரியுமா அது ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான். நாங்கள் அரசியல் அமைப்பு சரியில்லை என்று கூறி வருகிறோம். ஆனால் சிலரோ சிஸ்டம் சரியில்லை என்று கூறி வருகின்றனர்.வீட்டுக்கு வீடு மழை நீரை சேகரிக்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த சொல்லும் அரசு இதுவரை மக்களுக்காக எதையும் சேர்த்து வைத்ததில்லை. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் பிரச்சாரக் கூட்டங்களிலும் ஊழலை ஒழிப்போம் என கூறும் அரசியல் கட்சிகள், இதையே பல காலமாக சொல்லி வருகிறார்கள் மத்தியில் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் 5 ஆண்டு ஆட்சி செய்த பாஜகவும் இதுவரை தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் சொல்ல முடியுமா? கல்வியும் மருத்துவமனையும் ஏழைகளுக்கு ஒன்று , பணக்காரர்களுக்கு வேறு என உள்ளது.இதை மாற்ற வேண்டும். மோடி நேற்று தேனியில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று பேசினார். ஆனால் தேனியில் அவர் வாக்கு கேட்க வந்ததே ஒரு வாரிசுக்குத்தான் (ஓபிஎஸ் மகன்) என்பதை அவர் மறந்துவிட்டார் போலும் என சீமான் விமர்சனம் செய்தார்.03 ஏப்ரல் 2019
இயக்குனர் மகேந்திரன் மறைவு!சீமான் அறிக்கை!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது,
நாடகங்களிலிருந்து அறிவியல் கண்டுபிடிப்பான திரை வடிவத்திற்கு கலை வடிவம் மாறுதல் பெற்றாலும் நாடகங்களின் இறுக்கமான கதைசொல்லல் முறைமையையும், நுட்பமான உணர்வுகள் அற்ற நடிப்பு முறைமையையும் திரைக் கலை கைவிடாமல் நாடகப் பாணியிலான திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில்..இயல்பான காட்சிகள், அசலான மனிதர்கள் , வியக்க வைக்கும் திரைக்கதை என தமிழ் திரையுலகிற்கு புது ரத்தம் பாய்ச்சிய மாமேதை மறைந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள். அவருடைய உதிரிப்பூக்கள் உலகத் திரைப்பட வரிசைக்கு தமிழ் திரை உலகின் மறக்கமுடியாத பூங்கொத்து. புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்கின்ற சிறு நாவலை தழுவி உருவாக்கப்பட்ட உதிரிப்பூக்கள் திரைப்படக் கலையை பயில விரும்பும் மாணவர்களுக்கு முதன்மைப் பாடமாக இன்னுமும் திகழ்கிறது. அதேபோல இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் உச்ச நட்சத்திரம் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடித்த முள்ளும் மலரும் தமிழ் திரையுலகின் மறக்க முடியாத மாபெரும் படைப்பாக திகழ்ந்து வருகிறது. காட்சிகளின் இடையே நிகழுகின்ற வேதியியல் மாற்றத்தை சரியாகப் புரிந்துகொண்டு உயிரோட்டமாக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் இயக்குனர் மகேந்திரன் ஒரு மாமேதை.
கதாபாத்திரங்களின் நுட்பமான உணர்வுகளை, மென்மையான காட்சிகள் மூலம் அழகாக திரையில் வடித்தெடுப்பதில் அவருக்கு இணையானவர் இந்திய திரை உலகில் எவரும் இல்லை.
தனது இறுதி காலத்தில் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தேர்ந்த நடிகராகவும் நடித்து புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர் . சிறந்த எழுத்தாளர். அவரின் கலைத் திறமையை கண்டு கவரப்பட்ட நம் தேசிய தலைவரும் என்னுயிர் அண்ணனும் ஆகிய மேதகு வே பிரபாகரன் அவர்கள் நேரில் சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்து இயக்குனர் மகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து திரைப்படக் கலை குறித்து விவாதித்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு.
தமிழ் தேசிய இனத்தின் ஆற்றல்மிக்க கலையாளராக தமிழ் திரை உலகின் மூத்த படைப்பாளியாக திகழ்ந்த இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் தமிழ் திரை உலகின் மாபெரும் இழப்பில் அவர்களோடு ஒருவனாக நானும் பங்கேற்கிறேன். மாமேதை இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் திரைக்கலையின் மகத்தான மகுடம் ஐயா இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084
21 மார்ச் 2019
18 மார்ச் 2019
28 பிப்ரவரி 2019
அபிநந்தனை வரவேற்க புறப்பட்டார் தந்தை!
இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதை அடுத்து சென்னையில் அவர் வீடு உள்ள பகுதியில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.அந்த பகுதி மக்கள் இனிப்பு வழங்கி அபிநந்தன் விடுதலையாவதை கொண்டாடினர்.
விடுதலை செய்தி மகிழ்ச்சி தருவதாக மக்கள் தெரிவித்தனர்.இந்த சூழலில் அபிநந்தனை வரவேறக் அவரது தந்தை சிம்மக்குட்டி வர்தமான் டெல்லி புறப்பட்டார்.
செய்தியாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார்.
அந்தப் பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.முன்னதாக பல அரசியல் கட்சி தலைவர்கள், காவல் படை அதிகாரிகள் அபிநந்தனின் தந்தயை அவரது வீட்டில் சந்தித்து உரையாடினர்.
இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்றார்.
இதனை அடுத்து இன்று மாலை பத்தரிகையாளர்களை முப்படை தளபதிகள் சந்தித்தனர்.
வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானி அபிநந்தனை அமைதி நிமித்தம் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவிப்பதை அவர்கள் தவிர்த்தனர்.
நன்றி:பிபிசி தமிழ்
06 ஜனவரி 2019
தம்பி சிம்புதான் நிஜ சூப்பர் ஸ்டார்-சீமான் புகழாரம்!
சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,உண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே என் தம்பி சிலம்பரசன்தான். மூன்று படம் சிம்புவை வைத்து எடுக்கப்போவதாக முடிவு செய்தாச்சு. அதோட பலபேர் நெஞ்சு வெடிக்க போகுது. தனக்கு நேர்மையானவன், துணிவானவன், அச்சப்படாதவன் அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். கொளுத்தி எடுக்குறோம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து.எல்லார்கிட்டையும் கதையை சொன்னேன் எல்லாரும் பயந்துட்டாங்க ஆனா நான் நடிக்கிறேன் அண்ணா என்று என் தம்பி சிம்பு மட்டும்தான் சொன்னார். ஏன் சொன்னார் அவர்தான் தமிழன். அண்ணாவுக்கு எம்ஜிஆர் அண்ணனுக்கு நீதான்'னு சொல்லிட்டேன் என்றார் நகைச்சுவையாக.
01 டிசம்பர் 2018
அமெரிக்க முன்னாள் அதிபர் சீனியர் ஜோர்ச் புஷ் காலமானார்!
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் காலமானார் என்று அவரின் மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்துள்ளார். அவருக்கு வயது 94.ஜார்ஜ் புஷ் சீனியர் என்று அறியப்படும் அவர், வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் நேரப்படி 22:10 மணிக்கு காலமானார், என அக்குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எட்டு மாதங்களுக்கு முன்புதான் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் மனைவி பார்பாரா காலமானார்.
"அன்பிற்குரிய எங்கள் தந்தை 94 ஆண்டுகள் வாழ்ந்து, தற்போது இறந்துவிட்டார் என்ற செய்தியை ஜெப், நீல், மார்வின், டொரோ மற்றும் நான் வருத்தத்துடன் அறிவிக்கிறோம்." என் 43வது அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் ஜூனியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"அவர் மிக உயர்ந்த குணமுடைய மனிதர் மட்டுமல்லாது, எங்களுக்கு சிறந்த தந்தையாகவும் இருந்தார்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1924ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் மசட்ச்சூசஸில் பிறந்தார். முதலீட்டு தொழிலில் இருந்த இவரது தந்தை, பின்னர் அமெரிக்க சென்னட் சபை உறுப்பினரானார்.
பர்ல் ஹார்பர் தாக்குதலை தொடர்ந்து தானே முன்வந்து அமெரிக்கக் கடற்படையில் புஷ் சேர்ந்தார். பசிஃபிக் பெருங்கடலில் பணிக்காக நியமிக்கப்படும் முன், விமான ஓட்டியாக பயிற்சி பெற்றார்.
இரண்டாம் உலகப்போரில் இவர் அமெரிக்க கடற்படை விமானியாகவும் பணியாற்றியுள்ளார். செப்டம்பர் 1944இல் இவர் விமானத்தில் குண்டு வீச சென்றபோது ஜப்பானியர்களால் சுடப்பட்டபோது தப்பியவர் புஷ்.41வது அமெரிக்க அதிபராக 1989 முதல் 1993 வரை அவர் இருந்தார். அதற்கு முன் ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்த போது, ஜார்ஜ் புஷ் இரண்டு முறை துணை அதிபராக இருந்தார்.
ஜார்ஜ் புஷ் சீனியர் அதிபராக இருந்த காலத்தில், கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அப்போது இவரது அரசு வெளியுறவுக் கொள்கைகளை வகுத்ததற்கு பெயர் பெற்றது.
எனினும், உள்நாட்டு விவகாரங்களில் போதிய கவனம் செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டப்பட்ட இவர், 1992 தேர்தலில் பில் கிளின்டனால் தோற்கடிக்கப்பட்டார்.
வரிகளை உயர்த்தப் போவதில்லை என்று வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்றாமல் போனதில் இவர் விமர்சிக்கப்பட்டார்.
எண்ணெய் தொழில் தொடங்கி தனது 40 வயதில் பணக்காரரான புஷ், 1964ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார்.
1945ல் கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், 18 வயதுடைய பார்பாரா பியர்ஸை திருமணம் செய்து கொண்டார். 73 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் 6 குழந்தைகள் பெற்றனர்.
அவருக்கு 17 பேரக் குழந்தைகள் மற்றும் 8 கொள்ளுப்பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள்.
1966 - பிரதிநிதிகள் சபையில் இடம் பிடித்தார்.
1971 - அதிபர் நிக்சன் புஷ்ஷை ஐ.நா தூதராக நியமித்தார்.
1974 - பெய்ஜிங்கில் தொடங்கப்பட்ட புதிய வெளியுறவு அலுவலகத்துக்கு தலைமை வகித்தார்.
1976 - அதிபர் ஃபோர்ட் புஷ்ஷை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் இயக்குநராக நியமித்தார்
1981-1989 - அதிபர் ரீகன் ஆட்சியில் துணை அதிபராக பணியாற்றினார்.
1989-1993 - அமெரிக்க அதிபர், முதல் வளைகுடா போரில் அமெரிக்காவை வழிநடத்தினார்; கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிச வீழ்ச்சியை சமாளிக்க கொள்கை வகுத்தார்.


நன்றி:பிபிசி தமிழ்
18 நவம்பர் 2018
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான நிதியை நிறுத்தியது!
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியான நிலைமை முடிவடைந்து விட்டது என்பது தெளிவாகும் வரை திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் அதிகரித்து வரும் நிலைமைகளை கண்காணித்து வருவதாக இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.சர்வதேச நாணய நிதியம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்களை வழங்குவதற்காக அனுமதியை வழங்கியதுடன், அதில் தவணை கொடுப்பனவை வழங்க ஏற்பாடுகளை செய்திருந்தது.
முக்கியமான பொருளாதார சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டும் என நிபந்தனைகளின் அடிப்படையில், இந்த நிதியை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணங்கியிருந்தது.எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் வரி சீர்த்திருத்தங்கள் அந்த நிபந்தனைகளில் அடங்கியிருந்தன. இதற்கு அமைய எரிபொருள் விலை சூத்திரத்தை முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்தியிருந்தார்.
09 நவம்பர் 2018
சிறீலங்கா நாடாளுமன்றம் கலைப்பு!
இலங்கை நாடாளுமன்றத்தை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுடன் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாக அரசாங்கத்தின் பதில் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.கடந்த 26ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தையும் நவம்பர் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் போதிய எம்பிக்களின் ஆதரவை பெற மகிந்த தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவை மகிந்த தரப்புக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தன.
அரசில் நேரெதிர் துருவங்களான தமிழ் தேசிய கூட்டணி, ஜனதா விமுக்தி பெரமுன ஆகியவற்றின் தலைவர்கள் சந்தித்து பேசியதுடன் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்துழைக்கப் போவதாகவும் அறிவித்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
