13 மே 2010

வடமராட்சி படை முகாமினுள் குண்டு வெடிப்பு!



வடமராட்சி பருத்தித்துறையில் அமைந்துள்ள இலங்கை 524 வது படைப்பிரிவினரது முகாமினுள் நேற்று புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் குண்டுகள் வெடித்ததுடன் துப்பாக்கிச்சூட்டு சத்தங்களும் கேட்டுள்ளதாக தெரியவருகிறது.
இராணுவத்தினரின் ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்ட போதிலும், வெடி விபத்துக்கு மின் ஒழுக்குத்தான் காரணம் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இழப்புக்கள் தொடர்பான விபரங்களைப் படைத்தரப்பு இதுவரை வெளியிடவில்லை. நேற்று அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இராணுவப் பாதுகாப்பு அதிகரித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பும், துப்பாக்கி சத்தங்களும் தொடர்ந்து ஒலித்ததையடுத்து, வடமராட்சி பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக