21 டிசம்பர் 2012

மகிந்தவிற்கும் சம்பந்தனுக்குமிடையே இரகசிய ஒப்பந்தம் உள்ளதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களுக்கும் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையிலான உடன்பாடு என்ன என்பதை சம்பந்தன் அவர்கள் உடனடியாக அம்பலப்படுத்த வேண்டுமென்று யாழ். மற்றும் திருமலை மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த இரகசிய ஒப்பந்தத்தை தமிழ் மக்கள் அலட்சியமாக விட்டுவிடக்கூடாது. அவ்வாறு விட்டால் அது தமிழ் மக்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும். எனவே, இந்த ஒப்பந்தம் என்ன என்பதை சம்பந்தன் வெளிப்படுத்த வேண்டுமென்று ஈழத்திலும் புலத்திலும் உள்ள ஏனைய மக்கள் அனைவரும் சம்பந்தன் அவர்களை வலியுறுத்த வேண்டுமென்றும் மேற்படி மக்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாள் தினத்தன்று அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இரா. சம்பந்தனின் காலத்திலேயே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முயற்சியெடுப்பதாக கூறியிருந்தார். இக் கூற்றானது தமிழ் மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சம்பந்தன் அவர்கள் அடிக்கடி இரகசியமான முறையில் ஜனாதிபதியைச் சந்தித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதியின் மேற்படி கூற்று தங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தன் அவர்கள் கடந்த தடவை நாடாளுமன்றில் ஆற்றிய உரையில் புலிகளை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார். புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டமையாலேயே அழிந்தார்கள் என்றும் சம்பந்தனின் கடுமையான விமர்சமனமானது தமிழ் மக்களைக் கொதிப்படைய வைத்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி சம்பந்தனின் காலத்தில் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்று விருப்பத்தை வெளியிட்டமை இருவருக்கும் இடையே உள்ள இரகசிய ஒப்பந்தத்தை படம் பிடித்துக் காட்டுவதாக தமிழ் மக்கள் கருத்து வெளியிட்டுள்னர்.
இந்த நிலையில் சம்பந்தன் அவர்கள் கடந்த தடவை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடார்பாக தமிழீழத்திலுள்ள தேசியப் பற்றாளர் ஒருவர் தனது ஆதங்கத்தை மிக வெளிப்படையாகவே கொட்டியுள்ளார். சம்பந்தன் அவர்களுக்கு எதிராக எழுந்த அந்த ஆதங்கத்தை நீங்களும் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின்னர், அழுத கண்ணீர் கன்னத்தில் காய்ந்திருந்தபோது, முகா ம் வாழ்வில் தமிழன் முகமிழந்திருந்தபோது, சொந்தங்களை சிறைகளில் விட்டுவிட்டு தமிழர் ஏங் கிக்கொண்டிருந்தபோது, உலகமே இனி தமிழருக்கு எதிர்காலம் இல்லை என முற்றுப்புள்ளியிட்டி ருந்த ஒரு சந்தர்ப்பத்தில், அத்தனை அழிவுகளையும், இழிவுகளையும் தாண்டி தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலத்தை நீட்டிக்கும் வல்லமையினை யாருக்கு கொடுத்தார்களோ, அவர்கள் இன்று அந்த நம்பிக்கையை ஏளனம் செய்வதுபோன்றும், மக்களுடைய நம்பிக்கைகளை உதாசீனம் செய்வது போன்றும் எண்ணத்தோன்றுகின்றது.
அண்மையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தலைவருமா ன இரா.சம்மந்தன் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றியிருந்த ஒரு உரை நாம் மேலே கூறிய கருத் துக்களுக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக வெளியேற்ற வேண்டியதில்லை, படைக்குறைப்பை மேற்கொண்டு, படைகளை அவர்கது முகாம்களுக்குள் முடக்கினால்போதும்; என்றும் குறிப்பிட்டதுடன், விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பென்றும், குறிப்பிட்டிருந் தார்.
கடுமையான விமர்சனங்களை உருவாக்கி விட்டிருக்கும் இக்கூற்றுக்களின் நீள அகலம் தாற்பரியம் என்பவற்றையும், இக்கூற்றுக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிர்வலைகள் பற்றியும் இன்றுவi ரயில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தன்னும் மக்களுக்கு பதிலளிக்க வில்லை. வெளியே தம்மையொரு கடும்தேசியவாதிகளாக காட்டிக்கொள்ளும் இவர்கள் உள்ளே ஒளித்து வைத்திருக்கும் தங்கள் மாயத்தோற்றங்களை மக்களுக்கு காண்பிப்பதே கிடையாது.
இந்நிலையில் இரா.சம்மந்தன் இந்த கருத்து நிலைப்பாட்டை என்ன அடிப்படையில் நின்று கொண் டு பேசியிருக்கின்றார் என்பதை நாம் இங்கு பேசுவது சாலப்பொருத்தமானதாக இருக்கும்.தனது அரசியல் வாழ்க்கையே தமிழ் மக்களை ஏமாற்றித்தான் தொடங்கியது என்பது அவரே பல தடவை ஒப்புக் கொண்ட விடயம். தமிழ் மக்கள் ஒருபோதும் தனித் தமிழீழத்தை கோரியதில்லை என பல தடவைகள் கூறும் சம்பந்தன் முதன்முதலில் 1977ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி இதே தமிழ் மக்களிடம் தனித்தமிழீழத்திற்கான ஆணையை கோரியதும், அதற்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு என்பதும் அரசியல் கத்துக்குட்டிகள் கூட மறுக்கமுடியாத உண்மை.
தன்னை புலிகள் சுடப்படவேண்டியவர்கள் பட்டியலில் வைத்திருந்ததாக கூறிப்பிடும் சம்மந்தர் அது எதற்காக என்பதை மறந்திருக்கின்றார். 1977ம் ஆண்டு தமிழீழத்திற்கான ஆதரவை கோரி மக்களிடம் ஆதரவினை பெற்றுவிட்டு, ஜனநாக வழியிலான போராட்டங்கள் தோற்றுப்போனபோது அந்த தமிழீழ சிந்தனையை இளைஞர்கள் கையிலெடுத்தனர். அதற்கு துரோகமிழைக்கும் வகையில் செயற்பட்டமையாலேயே சம்பந்தன் சுடப்படுவோர் பட்டியலில் இணைக்கப்பட்டார் என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனை சம்பந்தன் அவர்கள் மறைக்கவோ மறுக்கவோ வேண்டாம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பல தியாகங்களை ஏற்று, உலகமே வியந்து பார்க்குமளவில் பல யுத்தங்களை செய்து வெற்றியீட்டிய காலப்பகுதியில் இதே சம்மந்தர் எங்கிருந்தார், என்ன செய்தார்? எப்படியிருந்தார் என்பதை நாம் கூறவேண்டிய அவசியம் கிடையாது.
இதன் பின்னர் புலிகள் ஆனையிறவை வீழ்த்தி, கட்டுநாயக்கா விமான நிலையத்தினை தாக்கி போரியல் வரலாற்றில் பல திருப்பங்களை ஏற்படுத்தியதன் பின்னரே இவர் புலிகளின் பாதங்களில் சரணடைந்து கொண்டிருந்தார். இப்போது புலிகள் தன்னை சுடப்படுவோர் பட்டியலில் வைத்திருந் ததாக கூறும் இதே சம்மந்தர் அன்று ஏன் புலிகளிடம் சென்றார்.
தனக்கு தலைமைப் பதவி கிடைக்குமென்பதற்காகவா?? புலிகள் அழிக்கப்படுவதற்கு இந்தியாவினதும், இலங்கை அரசாங்கத்தினதும் ஆசீர்வாதத்துடன், அரியாசனம் ஏறியிருக்கும் இவர் தமிழினத்தை மெல்லச் சிதைத்து வருகின்றார். ஜெனிவாவில் தெரிந்த ஒளிக்கீற்று தமிழினம் ஆவலகாக எதிர்பார்த்திருக்க அதை காலால் எட்டி உதைத்தவர், பின்னர் சிங்கக்கொடி அசைத்து மகிழ்ந்தவர். இறுதியில் மாகாண சபைக்குள் மண்டியிட்டு தமிழனத்தின் அரசிலையே முடக்கினார். இத்துடன் முடியவில்லை. தற்போது போராட்டத்தை பயங்கரவாதம் என்று குறிப்பிடுகின்றார். போராடியது யார்? எங்கள் ஒவ்வொருவரினதும் அக்கா, அண்ணா, தங்கை, தம்பி, அப்பா, அம்மா, மச்சாள், மச்சாள் தானே!
அப்போ போராடிய நாமனைவரும் பயங்கரவாதிகள். சம்மந்தரையும் அவருக்கு ஆலவட்டம் வீசும் சிலரையும் தவிர, சரி,பிழைகளுக்கு அப்பால் பச்சை ஆக்கிரமிப்புக்களிலிருந்தும் சிங்களவரின் கொடிய ஒடுக்குமுறையிலிருந்தும் எம்மைப்பாதுகாத்தது இந்த விடுதலைப்போராட்டமே என்பதை தமிழ் மக்களே ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
இது யாவரும் அறிந்த உன்மை. இவரது கருத்தின் படி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கூட பயங்கரவாதிகளா? இந்தப் பயங்கரவாதிகளுக்காக ஏன் இவரது தலைமயிலான கூட்டமைப்பு போராட்டம் நடத்துகின்றது? மக்களை ஏமாற்றி வாக்குப்பறிக்கவா?
இவர் இராணுவம் வெளியேற கூடாது என்பதற்கு ஒரு நியாயமான காரணம் உண்டு அதாவது இராணுவம் இல்லாவிட்டால் தன்னையும் தனது போலிக்கூட்டத்தையும் மக்கள் துரத்தி விடுவார்கள் என்பதாலாகும். சம்மந்தர் தலைமையிலான கூட்டமைப்பு துரோகங்களைச் செய்யும்போது அதை எப்போதும் நியாப்படுத்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தம்மையொரு தேசியவாதிகளாக காட்டிக்கொண்டு, கூட்டமைப்பின் துரோகங்களை மூடிமறைக்கும் ஓர் முகத்திரையாக இருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமலிருக்க வேண்டுமாயின் சம்பந்தன் போன்ற ஆணவம் பிடித்தவர்களை மக்கள் விரைவில் தூக்கியெறிய வேண்டும்.

தாயகத்திலிருந்து வீரமணி

யாழில் தொடரும் அராஜகம்; கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்தை கலைக்கும் முயற்சி தோல்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடை இனம் தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக நேற்றைய தினம் தற்காலிக பந்தல் ஒன்றினை அமைந்தது.
எனினும் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அவ் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடை சேதப்படுத்தப்பட்டுள்ளது
பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர்.
அத்துடன் அந்த இடத்தில் கழிவு தண்ணீரை ஊற்றி நாசப்படுத்தியும் உள்ளனர். அவ்விடத்திற்கு இன்று காலை வருகை தந்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது நிலத்தில் தரைப்பாள் விரித்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

20 டிசம்பர் 2012

குஜராத் தமிழர்கள் பேராதரவு! 86,373 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் மோடி!

 Narendra Modi Wins From Maninagar குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் மணிநகர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் நரேந்திர மோடி 86,373வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளார். குஜராத் மாநிலத்தின் மணிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக முதல்வர் நரேந்திர மோடி போட்டியிட்டார். அவரை எதிர்த்து கேசுபாய் பட்டேலின் குஜராத் பரிவர்த்தன் கட்சி வேட்பாளரை நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதா பட் இறக்கப்பட்டார். தாம் மோடிக்கு எதிராக களம் இறக்கப்பட்டிருப்பதால் தம்மை பிற கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று ஸ்வேதாவுக்கு ஆதரவாக கேசுபாய் கட்சி தமது வேட்பாளரை விலக்கிக் கொண்டது. இந்த மணிநகர் தொகுதியில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களும் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டு தொலைக்காட்சி ஊடகங்கள் பலவும் கடந்த சில நாட்களாக இந்தத் தொகுதியில் முகாமிட்டிருக்கின்றன. தமிழக பாஜக தலைவர்கள் குழுவும் இந்த மணி நகர் தொகுதியில் இறங்கி பிரச்சாரம் செய்தது. இந்த நிலையில் இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டது முதலே நரேந்திர மோடி வெற்றி முகத்தில்தான் இருந்தார். தொடக்கத்தில் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் என்று கூறப்பட்டாலும் 86,373 வாக்குகள் வித்தியாசத்தி வென்றிருக்கிறார் மோடி. நரேந்திர மோடிக்கு கிடைத்த வாக்குகள் - 1,20,470 , காங்கிரஸ் வேட்பாளர் ஸ்வேதா பட்- 34,097! மணிநகரில் மோடியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த குஜராத் வாழ் தமிழர்கள், இந்த தொகுதியில் நாங்கள் பாதுகாப்பாக பணிகளை செய்யவதற்கு மோடியின் அரசு உதவியாக இருக்கிறது. அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இங்கு வசிக்கும் தமிழர்களில் 90 விழுக்காட்டினர் மோடியைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றனர்.

நிலம் உள்ளிறங்கி 60 அடி பள்ளம் திடீரென தோற்றம்!

திடீரென நிலம் உள்ளிறங்கி 60 அடிக்கும் மேலான பள்ளம் தோன்றியது. பெரிய மரங்கள் அதில் புதையுண்டன. மாத்தளை துங்கொலவத்தையிலுள்ள தொரகும்புர பகுதியிலேயே இந்த நில வெடிப்பு இடம் பெற்றுள்ளது.
சுமார் 25 அடி விட்டமும் 60 அடி க்கும் மேலான ஆழமும் உடைய குழி அங்கு தோன்றியுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த புவிச்சரிதவியல் திணைக்களத்தினர், ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியிலேயே வெடிப்பு இடம்பெற்றதால் உயிராபத்துக்கள் எதுவும் இடம்பெறவில்லை. பலா, கித்துள் போன்ற உயரமான மரங்கள் புதையுண்டுள்ளன.
2005 ஆம் ஆண்டிலும் இதுபோன்ற வெடிப்புக்கள் இடம்பெற்றதாகவும், நிலத்தடியில் உள்ள சுண்ணக்கற்களின் கசிவே முன்னர் நடந்த வெடிப்புக்குக் காரணமெனக் கண்டறியப்பட்டதாகவும், தற்போதும் இதே நிகழ்வே இடம்பெற்றிருக்கலாமெனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

விஜேதாஸ ராஜபக்சவின் இல்லத்தின் மீது துப்பாக்கி சூடு!மகிந்த ராஜபக்ஷ நேரில் சென்று ஆறுதல்.

இன்று (20) அதிகாலை துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷவின் வீட்டு வளாகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் விஜேதாஸ ராஜபக்ஷவின் நாவல பகுதியில் உள்ள வீட்டுக்கு முன்னால் இன்று அதிகாலை மூன்று மணியளவில் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்படி இன்று விஜேதாஸ ராஜபக்ஷவின் வீட்டுக்குச் சென்ற மகிந்த ராஜபக்ஷ  அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

19 டிசம்பர் 2012

ஐந்து கோள்களில் மனிதன் உயிர் வாழலாமாம்!

News Serviceபூமியைப் போன்று 5 புதிய கோள்கள் இருப்பதாகவும், அவற்றில் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அவுஸ்திரேலியா, சிலி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் கடந்த 14 ஆண்டுகளாக சூரியனைப் போன்ற டாவ் செட்டி என்ற நட்சத்திரம் மற்றும் அதன் அருகில் உள்ள கோள்கள் பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் 5 கோள்கள் டாவ் செட்டி நட்சத்திரத்தை சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள்களில் மிகச்சிறிய கோளானது, பூமியைவிட கிட்டத்தட்ட 2 மடங்கு பெரியதாகும். இந்த கோள்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டுள்ளன.
இவை மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை வழங்கும். அந்த கோள்கள் மிக தொலைவில் இருக்கின்றன. ஒளியின் வேகத்தில் சென்றால் 12 ஆண்டுகளில் இந்த கோள்களை அடைய முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மன்மோகன் சிங்கிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய 11வயது சிறுமி!

"தகவல் அறியும் உரிமை சட்டத்தை பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மன்மோகன்சிங் அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல் மன்னிப்பு கேட்கவேண்டும்.இல்லாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என 11 வயது பள்ளி மாணவி பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்."காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?' என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு வட்டாரங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவ செலவு பற்றி தகவல் கேட்பதா என காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். இதற்கிடையில் அக்டோபர் 12ம் தேதி டில்லியில் நடந்த தகவல் உரிமை சட்ட மாநாட்டில் பேசிய பிரதமர், மன்மோகன் சிங், "தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சிலர் தேவையே இல்லாத தகவல்களையும் தனிப்பட்ட தகவல்களையும் ஒன்றுக்குமே உதவாத தகவல்களையும் கேட்கின்றனர். ஆம்னி பஸ் அளவிற்கு அவர்கள் கேட்கும் தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது'" என கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த தகவல் உரிமை சட்ட ஆர்வலர் 11 வயது ஊர்வசி சர்மா என்ற பள்ளி மாணவி பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு தன் வழக்கறிஞர் மூலம் திங்கட்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில் சிறுமி ஊர்வசி, அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட நான் நீங்கள் தெரிவித்த கருத்துகளால் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். இந்த நோட்டீஸ் மூலம் தெரிவிப்பது என்னவென்றால் எதன் அடிப்படையில் நீங்கள் அவ்வாறு கூறினீர்கள்? அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.இல்லையேல், இன்னும் 60 நாட்களுக்குள் அவ்வாறு பேசியதற்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதைச் செய்ய தவறினால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமி அனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவித்துள்ளார்.

அதிக சேதம் மட்டக்களப்பிற்கு, அதிக மரணம் மாத்தளைக்கு!

அதிக சேதம் மட்டக்களப்பிற்கு, அதிக மரணம் மாத்தளைக்குநாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதோடு மாத்தளை மாவட்டத்தில் அதிக மரணங்கள் பதிவாகியுள்ளன.
காலநிலை சீர்கேட்டால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் மாவட்ட அடிப்படையில் பின்வருமாறு,

மட்டக்களப்பு மாவட்டம்:-
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 34,753 குடும்பங்களைச் சேர்ந்த 1,35,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் இரு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஒருவர் காணாமற்போயுள்ளார். சுழல் காற்று காரணமாக 115 வீடுகள் முழுமையாகவும் 607 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. நிர்க்கதியான 556 குடும்பங்களைச் சேர்ந்த 2169 பேர் 7 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்டம்:-
சீரற்ற காலநிலையால் மாத்தளை மாவட்டத்தில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 2,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாத்தளையில் அதிகூடிய 8 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு 13 பேர் காயமடைந்த நிலையில் 10 பேர் காணாமல் போயுள்ளனர். 32 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை 82 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 628 குடும்பங்களைச் சேர்ந்த 1,583 பேர் 15 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டம்:-
கண்டி மாவட்டத்தில் இதுவரை 101 குடும்பங்களைச் சேர்ந்த 402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் மரணித்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளனர். 5 வீடுகள் முழுமையாகவும் 44 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்த 35 குடும்பங்களைச் சேர்ந்த 160 பேர் 3 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டம்:-
இம்மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் 138 குடும்பங்களைச் சேர்ந்த 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்த 19 குடும்பங்களைச் சேர்ந்த 123 பேர் 3 தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டம்:-
இம்மாவட்டத்தில் 2,271 குடும்பங்களைச் சேர்ந்த 5,967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 18 பேர் காயமடைந்துள்ளனர். 30 வீடுகள் முழுமையாகவும் 147 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. 2,135 குடும்பங்களைச் சேர்ந்த 5,582 பேர் 17 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்டம்:-
இங்கு 62 குடும்பங்களைச் சேர்ந்த 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். 5 வீடுகள் முழுமையாகவும் 4 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களைச் சேர்ந்த 49 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாவட்டம்:-
இங்கு 3,283 குடும்பங்களைச் சேர்ந்த 13,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் காணாமற் போயுள்ளனர்.

மொனராகலை மாவட்டம்:- இம் மாவட்டத்தில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட 06 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் ஒரு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

குருணாகல் மாவட்டம்:- 3,558 குடும்பங்களைச் சேர்ந்த 12,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டம்:- 706 குடும்பங்களைச் சேர்ந்த 3,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

18 டிசம்பர் 2012

மகிந்தவுக்கு யாழ்ப்பாணத்தில் கழிவு ஒயில்- தலைதெறிக்க ஓடித்திரியும் இராணுவம்

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகளுக்கு யாழ்ப்பாணத்தில் கழிவு ஒயில் ஊற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மகிந்த ராசபக்சவின் பெரிய அளவிலான பதாகைகள் தொங்கவிடப்பட்டள்ளன.
இவற்றில் பிரதான வீதியை அண்டிய பகுதியில் உள்ள பதாகைகளுக்கே கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.
கழிவு ஒயிலை யார் ஊற்றினார்கள் என விசாரித்து இராணுவ புலனாய்வு பிரிவினர் தலைதெறிக்க ஓடித்திருகின்றனர். இதனை அடுத்து அந்த பகுதிகளில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி!

குடிசை மீது மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலிதிருக்கோவில் வட்டமடு வயல் பிரதேசத்தில் வீசிய சுழல் காற்றினால் வேளாண்மைக்கு காவலுக்காக நின்றவரின் குடிசை மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் விவசாயி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வயல் பிரதேசத்தில் காட்டு விலங்குகளிடம் இருந்து வேளாண்மையை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் சிலர் காவலிருந்தனர்.
இதன்போது நேற்று (17) மாலை 3.00 மணியளவில் கடும் மழையுடன் வீசிய சுழல் காற்று வீசியது.
இந்நிலையில் மரத்துக்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த குடிசைக்குள் 4 விவசாயிகள் தஞ்சமடைந்துள்ளனர்.
திடீரென மரம் முறிந்து குடிசை மீது வீழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை உயிரிழந்துள்ளார்.
கண்ணகிபுரம் 2ம் பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சுப்பையா மகேஸ்வரன் என்ற விவசாயியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

17 டிசம்பர் 2012

சம்பந்தனின் காலத்துக்குள்ளேயே தீர்வு காண விரும்புவதாக மகிந்த மனோவிடம் தெரிவித்தாராம்!

தெற்கில் ஜேவிபியினர் நடத்திய போராட்டத்திற்கும் விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. ஜேவிபி நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தவில்லை. புலிகள் நாட்டை பிரிக்க போராட்டம் நடத்தினார்கள். அத்துடன் ஜேவிபி இன்று தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. யுத்தம் முடிந்து சில ஆண்டுகளே ஆன நிலையில் புலிகள் இன்று தடை செய்யப்பட்ட அமைப்பு. புலிகளை நினைவு கூறுவதை நாம் அனுமதிக்க முடியாது. எனவே விடுதலை புலிகள் நடத்திய போராட்டத்திற்கும், ஜேவிபியினர் நடத்திய போராட்டத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை பல்கலைக்கழக மாணவர்களுக்கு எடுத்து கூறுங்கள் என, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.
மாண்டுபோனவர்கள நினைவுகூர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுங்கள். கடந்த காலங்களுக்கு நாட்டை மீண்டும் இந்த சம்பவங்கள் அழைத்து செல்வதை அனுமதிக்காதீர்கள். நாட்டின் முதன் குடிமகன் என்ற அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் விவகாரத்தில் நேரடி தலையீடு செய்யுங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்ததிற்கு பதிலளித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக மனோ கணேசனுக்கு இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இருந்த வேளையிலேயே இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது,
வேலைப்பளுவின் இடையில் இந்த மாணவர் விவகாரம் தொடர்பாக தனக்கு முழு விபரம் இன்னமும் கிடைக்கவில்லை. இதுபற்றி எவரும் முழுமையாக விபரம் தெரிவிக்கவும் இல்லை. உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தற்சமயம் நாட்டில் இல்லை. அவர்தான் இந்த விவகாரம் தொடர்பான அமைச்சர். இன்னும் சில தினங்களில் அவர் நாடு திரும்புவார். அவர் வந்தவுடன் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனினும் மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரம் தற்சமயம் பல்கலைக்கழக விவகாரமாக இல்லாமல் பாதுகாப்பு அமைச்சு விவகாரமாக மாறியுள்ளதாக நான் சுட்டிகாட்டினேன். அதை ஏற்றுகொண்ட ஜனாதிபதி, எனினும் இதை பல்கலைக்கழகங்களுக்கு பொறுப்பான அமைச்சரின் மூலமே தான் அணுக விரும்புவதாக சொன்னார்.
இந்த சம்பவங்கள் இனப்பிரச்சனையை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளன என ஜனாதிபதி கூறினார். அத்தகைய நோக்கம் எனக்கு கிடையாது என்பதாலேயே இதை நான் நேரடியாக உங்களிடம் கூறுகிறேன் என நான் தெரிவித்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் காலத்துக்குள்ளேயே தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வை தனது ஆட்சி காலத்தில் காணுவதை தான் பெரிதும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தமிழர் போராட்டத்தின் ஆதரவாளர் பிரைன் செனிவிரட்னவை சிங்கப்பூர் நாடு கடத்தியுள்ளது.

News Serviceதமிழீழ போராட்டத்தின் தீவிர ஆதரவாளரும், அவுஸ்திரேலியாவின் மனித உரிமைகள் நடவடிக்கையாளருமான இலங்கையில் பிறந்த கலாநிதி பிரைன் செனவிரட்னவை சிங்கப்பூர் அரசாங்கம் நாடு கடத்தியது. 81 வயதான பிரைன் செனவிரட்ன, மலேசியாவுக்கு செல்லும் வழியில் கடந்த வெள்ளிக்கிழமை சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். அங்கு மலேசியாவில் இலங்கையர்களின் அரசியல் அடைக்கலம் குறித்து இரண்டு சந்திப்புகளை நடத்தவிருந்தார். இந்த நிலையில் சிங்கப்பூரின் விமானநிலையத்தில் இறங்கிய அவர் மலேசிய நகரான ஜொஹொர் பஹ்ருக்கு தரைவழியாக செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும் சிங்கப்பூரின் அதிகாரிகள், அவரை விமான நிலையத்தில் சுமார் 4 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்தினர்.
பின்னர், அவரை, அவுஸ்திரேலிய பிரிஸ்பேனுக்கு விமானம் மூலம் திருப்பியனுப்பினர். இதன்போது செனவிரட்னவிடம் குறிப்பு ஒன்றை கையளித்த சிங்கப்பூர் அதிகாரிகள், சிங்கப்பூரில் பிரவேசிப்பதற்கு அனுமதியில்லை என்று குறிப்பிட்டனர். எனினும் காரணங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து தமக்கு நேர்ந்த நிலைக்குறித்து பிரைன் செனவிரட்ன, அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மற்றும் குடிவரவு அமைச்சர் கெவின் ருட் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். பிரைன் செனவிரட்ன 1976 ம் ஆண்டு அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டவர்.

16 டிசம்பர் 2012

சாளம்பைக்குளத்திலிருந்து தமிழர்களை வெளியேறுமாறு முஸ்லீம்கள் பெயரில் சுவரொட்டி!

வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் வாழும் தமிழர்களை வெளியேறும் படி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகள் அப்பகுதி கிராம சேவகரான வை.நாயர் என்பவரின் றப்பர் முத்திரையுடன் இஸ்லாமிய கலாசார தலைவர் ஹசன் என்பவரின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் சுவரொட்டிகளில் சாம்பைக் குளத்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் இம்மாதம் 16 ஆம் திகதிக்கு முன் வெளியேற வேண்டுமென கிராம சேவையாளர் ஊடாக கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் அப்படி வெளியேறாத பட்சத்தில் வன்முறையாக வெளியேற்றப்படுவீர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சாளம்பைக்குளத்தில் உள்ள காணிகள் அனைத்தும் முஸ்லீம்களுக்கு சொந்தமானது என்றும் அந்தச் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விடயம் குறித்து நாளை வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஆராயப்படுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சாளம்பைக்குளம் என்பது ஒரு தமிழ் கிராமமாகும். அங்கு பிற்பட்டகாலத்தில் முஸ்லீம்கள் குடியேறியிருந்தார்கள். திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் போல திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றம் அங்கு இடம்பெற்றது. அரசியல் செல்வாக்கின் மூலம் தற்போது பலம் பெற்றிருக்கும் முஸ்லீம்கள் தற்போது அங்குள்ள பூர்வீககுடிகளான தமிழ் மக்களை வெளியேறுமாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றிவிட்டார்கள் என கூக்குரல் இடுவோர் இந்த விடயத்தில் வாய் திறப்பார்களா?

யாழில் சிங்களத்தால் மேலும் தமிழர்கள் கைது செய்யப்படலாம்!

யாழ்ப்பாணத்தில் மேலும் சிலர் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறித்த கைதுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கனவே புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் யாழ்ப்பாணத்தில் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைதுகள் தொடர்பில் யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய்பபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
எந்த அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது பற்றி தெளிவுபடுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் போராளிகள் என்ற அடிப்படையில் இந்த கைதுகள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கடந்த காலங்களில் தொடர்புகளைப் பேணியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

15 டிசம்பர் 2012

மாணவர்களின் பெற்றோரையும் சந்திக்கவேண்டி இருக்கிறது:கோத்தாவின் மிரட்டல்

மாணவர்கள் மீது காடைகள் அராஜகம் 
வெலிகந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் விசாரணைகளுடனான புனர் வாழ்வுக் காலம் நிறைவடைந்த பின்னரே விடுவிக்கப்படுவர் என கோத்தபாய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தில் இவ்வாறான நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு நிர்வாகம் அனுமதுயளிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள கோத்தபாய  தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்களையும் சந்திக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களின் விடுதலை தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கோத்தபாயவுக்கும், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்வி.வசந்தி அரசரட்ணம் தலைமையிலான பேராசிரியர்கள் குழுவுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே கோத்தா  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட பேராசிரியர் குழுவினர், தமது மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர்களது கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே அவர்களை விடுவிப்பதற்கு ஆவண  செய்யுமாறும் கோத்தபாயவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
எனினும் கைது செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருப்பதால் மேலதிக விசாரணைகள் இடம்பெற இருப்பதாகவும், அத்துடன் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்றும் கோத்தா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளர்.
அத்துடன் மாணவர்கள் இனியும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு இடம்பெற்றால் நிர்வாகத்தின் ஆதரவுடனேயே இத்தகைய செயல்கள் இடபெறுவதாகக் கருதப்படும். மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்படும் மாணவர்கள் நிர்வாகத்தின் பொறுப்பிலேயே விடப்படுவார்கள் இதன் பின்னரும் ஏற்கத்தகாத செயல்கள் இடம்பெறின் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்புக் கூற வேண்டி ஏற்படும் எனவும் பேராசிரியர் குழுவுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக கலைப் பீடத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும், முகாமைத்துவ பீடத்தைச்ச் சேர்ந்த ஒரு மாணவரும், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த ஒருவருமாக நான்கு மாணவர்களே வெலிகந்தை புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணிகள் ஒன்று கூடி மூன்று முக்கிய யோசனைகளை நிறைவேற்றினர்.

இன்று (15) இடம்பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டத்தில் முக்கிய மூன்று யோசனைகள் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதை அடுத்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்தே மூன்று யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்க கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.
இன்று முன்வைக்கப்பட்ட மூன்று யோசனைகளுக்கு ஆதரவு மற்றும் எதிர் கருத்துக்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு இறுதியில் யோசனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
01.பிரதம நீதியரசர் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சுயாதீன குழுவால் ஆராயப்படும் என கடந்த 11ம் திகதி ஜனாதிபதி அறிவித்துள்ளார். அதன்படி குற்றப்பிரேரணைனை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்.
02.மீள்பரிசீலனை செய்யப்பட்ட பின் தொடர் விசாரணைகள் இடம்பெறுமாயின் அந்த விசாரணைகளை நியாயமான முறையில் நடத்த சட்ட ஒழுங்குகளை மேற்கொள்ள ஜனாதிபதி மற்றும் சபாநாயகரை வலியுறுத்தல்.
03.அப்படியல்லாமல் பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டு புதிய பிரதம நீதியரசர் தெரிவு செய்யப்பட்டால் அவரை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்காது.
மேற்கூறிய மூன்று யோசனைகள் இன்றைய கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் ததேகூ பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்  தெரிவித்ததாக அததெரண  செய்தி வெளியிட்டுள்ளது.

14 டிசம்பர் 2012

அடடா..!இவரையுமா?

டக்ளஸ்&பசில் 
உளநலப்பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட யுவதிகளை பார்வையிட சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் படையினர் திருப்பி அனுப்பிய பரிதாபம் நேற்று நடந்துள்ளது.படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட குறித்த யுவதிகள் உள நலப்பாதிப்பிற்குள்ளாகிய நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டமை கடந்த சில தினங்களாக பெரும் வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்திருந்தது.
முன்னதாக அவர்களை பார்வையிடச்சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.வன்னி படை கட்டளைத்தலைமையக பணிப்பினை மேற்கோள் காட்டியே தம்மை உள்நுழைய வைத்தியர்கள் அனுமதி மறுத்ததாக சிறீதரன் தெரிவித்தார்.இந்நிலையினில் இரண்டாவது தடைவையாக நேற்றும் எஞ்சிய இரு யுவதிகளையும் பார்வையிட அவர் முற்பட்ட போது ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டியிருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் பார்வையிடுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளது.பாதுகாப்பு அமைச்சக உத்தரவின் பிரகாரம் அவர் திருப்பி அனுப்பபட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே வைத்தியசாலையில் தொடர்ந்தும் இரு யுவதிகளே சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ஏனையவர்களை ஆற்றுப்படுத்த திருக்கோணேச்சரம் கோவிலுக்கு படைத்தரப்பு சுற்றுலா அழைத்து சென்றுள்ளது.

நாஞ்சில் சம்பத்துக்கு புதிய கார் வழங்கினார் தமிழக முதல்வர்!

மதிமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, இன்னோவா கார் ஒன்றை வழங்கியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று அதிமுக அலுவலகத்தில், அதிகமுவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு கழகப் பணியாற்றுவதற்கு ஏதுவாக, புதிய இன்னோவா கார் ஒன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மதிமுகவில் நீண்ட காலம் இணைந்திருந்த நாஞ்சில் சம்பத், வைகோவுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக மதிமுகவில் இருந்து விலகி சில நாட்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவு நாள்!

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 04.03.1938ம் ஆண்டு யாழ்பாணத்தில் குழந்தைவேலு மார்கண்டு தம்பதியினருக்கு பிறந்தார். ஆரம்பகாலத்தில் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய அன்ரன் பாலசிங்கம் அவர்கள், பின்னர் கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியதால் இங்கிலாந்து குடியுரிமையும் பெற்றார்.
1970ம் ஆண்டு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய கெரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் தேசத்தின் குரல் அவர்களை தொடர்பு கொண்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கும் இடையே தொடர்புகள் எற்ப்பட்டுள்ளன.
இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடாத்தினார். 1985ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றியதால் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராகவும்; பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.
2002ம் ஆண்டு தமிழீழத்தில் நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊடகவியளாளர்கள் சந்திப்பின் பொழுது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான தெளிவான விளக்கங்களை அளித்தார்.
சித்திரை மாதம் 2002ம் ஆண்டு நோர்வே அரசின் மேற்பார்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டது. அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்தைக் குழுவின் பொறுப்பாளராக செயற்;பட்டார். தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை தமிழீழ மக்களின் இராயதந்திரியென சர்வதேச நாடுகள் அங்கிகரித்தன.
2000ம் ஆண்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட வேளையிலும் ஆயுதம் ஏந்தாத போராளியாக இங்கிலாந்து நாட்டில் இருந்து உறுதியுடன் தமிழீழ விடுதலைக்காக உழைத்தார். அவருக்கு எற்ப்பட்ட நோயால் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக உடல் எங்கும் புற்று நோய் பரவியது. புற்று நோயால் துடிதுடித்த வேளையிலும் தமிழீழ அரசியலை எவ்வாறு முன்னெடுக்க வேண்டுமென குறிப்புகளில் எழுதி வைத்தார். மேலும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் உடல் நலம் பற்றியும் தமிழீழ மக்கள் பற்றியும் கேட்டறிந்த வண்ணம் இருந்தார். கொடிய புற்று நோயால் 14.12.2006 அன்று இங்கிலாந்து தேசத்தில் வீரமரணம் அடைந்தார்.
தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு செய்த பணி என்றும் மறக்க முடியாதது. அவருடைய இழப்பை தமிழீழ தேசத்தால் என்றும் ஈடுசெய்ய முடியாது.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்: �எமது இயக்கத்தின் வளர்ச்சியிலும் அதன் இன்றைய விரிவாக்கத்திலும் பாலாண்ணைக்கு ஒரு நிரந்தரமான இடம் இருக்கின்றது. ஒரு மூத்த அரசியல் போராளியாக மதியுரைஞராக ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தார். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர்.
எனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, எனது பளுக்களையும் பங்கிட்டுக்கொண்டவர். எமது விடுதலை இயக்கம் தோற்றம்பெற்ற ஆரம்பகாலம் முதல் என்னோடு இருந்து, எல்லாச் சோதனைகளையும், வேதனைகளையும், சவால்களையும், சங்கடங்களையும் தாங்கிக்கொண்டவர். எமது அரசியல், இராயதந்திர முன்னெடுப்புக்களுக்கு மூலாதாரமாக முன்னால் நின்று செயற்பட்டவர். ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேச சுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன் நிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டபணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப் பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகின்றேன்.
எமது அன்பான தமிழீழ உறவுகளே, தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் போன்ற ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடைய தமிழீழக் கனவை வென்றெடுப்போம் என இன்றைய நாளில் நாம் அனைவரும் உறுதிகொள்வோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி
ஊடகப்பிரிவு

13 டிசம்பர் 2012

அதிமுகவை விமர்சிக்க எந்த கட்சிக்கும் தகுதி இல்லை: நாஞ்சில் சம்பத்

மக்கள் நலனுக்காக பாடுபடும் அதிமுகவை விமர்சிக்க தமிழகத்தில் உள்ள எந்த கட்சிக்கும் தகுதி இல்லை என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். மேலும் ஜெயலலிதாவின் அருமை, பெருமையை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பிரச்சாரம் செய்யப் போவதாக அவர் மேலும் தெரிவித்தார். மதிமுகவில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் சேர்ந்து அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளரான நாஞ்சில் சம்பத் கலந்து கொண்ட முதல் கட்சி பொதுக்கூட்டம் சென்னை மைலாப்பூர் மாங்கொல்லையில் நேற்று இரவு நடந்தது. அந்த கூட்டத்தில் சம்பத் பேசியதாவது, அதிமுகவுக்கு நான் புதிதாக வந்திருக்கலாம். ஆனால் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும், தமிழக மக்களு்ககு நல்லது நடக்க வேண்டும் என்று 5 ஆண்டுகளாக மாநிலம் முழுவதும் சுற்றியவன் நான். தற்போது முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் மாட்சி, அவரது ஆளுமைத் திறன் பற்றி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்யவிருக்கிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று சரித்திரம் படைக்க எட்டுத் திக்கிலும் சூராவளிப் பிரச்சாரம் செய்வேன். தமிழகத்தின் உரிமைக்காகவும், தமிழக மக்களின் தேவைக்காகவும் தொடர்ந்து போராடும் முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் இருந்து உபரி மின்சாரத்தைப் பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். பாகிஸ்தானுக்கு மட்டும் 5,000 மெகாவாட் மின்சாரம் அளி்க்கும் மத்திய அரசு டெல்லியில் இருந்து உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு கொடுக்க மின் பாதை இல்லை என்கிறது. அதற்கு தமிழகத்திற்கு மின்சாரம் தர மனமில்லை. மேலும் காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்ததையடுத்து முதல்வர் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வழக்கு போட்டு போராடிக் கொண்டிருக்கிறார். டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி மின்சார வழங்க முதல்வர் தாயன்புடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். 20 கோடி விவசாயிகள் மற்றும் 5 கோடி வணிகர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா குரல் கொடுத்து வருகிறார். ஜெயலிலதாவின் அருமை, பெருமைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் எனது பிரச்சாரம் இருக்கும். இவ்வாறு மக்கள் நலனுக்காக பணியாற்றும் அதிமுகவை விமர்சிக்க தமிழகத்தில் உள்ள எந்த கட்சிக்கும் தகுதி இல்லை என்றார்.

சம்பந்தனின் கருத்து கூட்டமைப்பின் கருத்தல்ல என்கிறார் அரியநேந்திரன்

வடக்கு கிழக்கிலிருந்து இருந்து சிறீலங்கா இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென தாம் கோரவில்லை நாடாளுமன்றத்தில் சம்பந்தன் ஆற்றிய உரை அவரது தனிப்பட்ட கருத்தாகும். அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய சம்பந்தனின் உரைதொடர்பாக அரியநேத்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அப்பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து அல்ல என தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பாலும் அவரவர் தனிப்பட்ட கருத்துக்களையே பேசுகின்றனர். கட்சியின் உத்தியோகபூர்வ கருத்தும் அல்ல என அரியநேத்திரன் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேற்ற வேண்டும் என்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தாகும். சம்பந்தனின் உரையை ஒட்டுமொத்த கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படவில்லை.
அதேவேளை வடகிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேறும் பட்சத்தில்தான் அப்பிரதேசம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும். எனவே வடக்கு கிழக்கிலிருந்து முற்றாக இராணுவம் வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தான் கொண்டிருப்பதாக அரியநேத்திரன் தெரிவித்தார் என தினக்கதிர் இணையம் செய்தி வெளியுட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் அவதூறுக் கருத்துக்களுக்கு அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை கண்டனம்.

News Serviceதமிழ்த் தேசியத்தை இழிவுபடுத்தும் வகையிலும் தமிழீழ விடுதலைப் பயணத்தைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் தெரிவித்த கருத்துகளை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வன்மையாகக் கண்டிக்கிறது.
இது தொடர்பாக பின்வரும் அறிக்கையை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை விடுத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் கடந்த சில மாதங்களாக தமிழர்களின் விடுதலைப் பயணம் தொடர்பாகவும் அவர்களின் நிகழ்கால அவலங்கள் தொடர்பாகவும் தெரிவித்துவரும் உண்மைக்குப் புறம்பான கருத்துகள் தமிழ் மக்களைத் தொடர்ந்து வேதனைக்குள்ளாக்கி வருவதோடு இவரது செயற்பாடுகள் தொடர்பாகப் பல சந்தேகங்களையும் ஏற்படுத்தி வருகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது தேசிய விடுதலைப் பயணத்துக்கு உறுதுணையாக செயற்படுவதற்காக தமிழ் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்டது. இது தனி ஒருவரது சொத்தல்ல. இதில் உள்வாங்கப்பட்டவர்கள் அதற்கான உறுதிமொழியை தேசியத் தலைமை முன்னிலையில் வழங்கியவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தேசியத் தலைமை மௌனிக்கப்பட்டுள்ள வேளையில் அதைனைத் தமக்குச் சாதகமாக்கியுள்ள தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தமிழின படுகொலைக்காக போர்க்குற்றத்தை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு துணை போவதைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது.
விடுதலைப் புலிகள் மீது தம்மால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் பதிலளிக்க முடியாத நிலையில் இருப்பதைத் தெரிந்துகொண்டும் அதனையே தமது சொந்த அரசியலுக்கான ஆதாய ஆயுதமாக சம்பந்தன் பயன்படுத்துவது தமிழ்த் தேசியத்துக்கு இழைக்கப்படும் துரோகமாகவே பார்க்கப்படுகின்றது.
சிங்கக்கொடி ஏந்தியதை நியாயப்படுத்தி அதனை எவராலும் தடுக்க முடியாது என்று சம்பந்தன் கூறியபோதே அவரது இரட்டை முகம் அம்பலமானது.
வடக்கிலுள்ள ராணுவ முகாம்களை மூடுமாறு தாம் ஒருபோதும் கேட்கவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் அழிவு அவர்களினாலேயே நிகழ்த்தப்பட்டது என்றும் திரு. சம்பந்தன் அவர்கள் இப்போது கூறுவது தமிழ் மக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மஹிந்த அரசின் தமிழினப் படுகொலையை விசாரிக்க சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர்ந்த தமிழர்களும் முயற்சி மேற்கொண்டுவரும் இவ்வேளையில் அதனை முறியடித்து சிங்கள அரசுக்கு முண்டு கொடுக்க திரு. சம்பந்தன் அவர்கள்; முயலுவதை இதனூடாகக் காணமுடிகின்றது.
இவ்வாறு செயற்படும் ஒருவர் தமிழினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதற்குத் தகுதியானவரா என்ற கேள்வி இப்போது எம்முன்னால் எழுகின்றது.
தமிழ் தேசியத்தின் குரலாக கூட்டமைப்பினர் இருப்பார்கள் என்ற நம்பிக்கையிலும் தேசியத் தலைமையினால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பைப் பலமாக்க வேண்டுமென்ற தேவையையும் கருதியே கடந்த தேர்தல்களில் தங்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பினரைத் தமிழ் மக்கள் தெரிவு செய்தார்கள் என்பதை திரு. சம்பந்தன் அவர்கள் மறந்துவிடக் கூடாது.
இதற்கு எதிர்மாறான தமது சொல்லுக்கும் செயலுக்கும் திரு. சம்பந்தன் அவர்கள் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டும். அதனை விரும்பாவிடின் தலைமைப் பதவியிலிருந்து தாமாகவே அவர் விலகிவிட வேண்டும் என்று அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வேண்டுகின்றது.
தமிழ் மக்களின் அரசியல் வேணவாவை அதி உயர் ஆணையாக ஏற்று உறுதியோடு செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று திரு சம்மந்தனின் உரைக்கு பின்னர் தாயகத்தில் மற்றும் புலத்தில் இருக்கும் தமிழ் மக்களுக்கும் தமது அரசியல் நிலைப்பாட்டை விளக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

பஞ்சகுலசிங்கம் கந்தையா
ஊடக பேச்சாளர்

12 டிசம்பர் 2012

பேய் பிடித்ததாக கூறி தமிழ் பெண்களை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் சிங்களப்படைகள்!

தமிழ் யுவதிகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி படைத்தரப்பு சுமார் 21 வரையிலான யுவதிகளை நேற்றிரவு கிளிநொச்சி அரச வைத்தியசாலையினில் ஒப்படைத்துள்ளது. அண்மையில் படைத்தரப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் கிளிநொச்சியின் பாரதிபுரம் முகாமில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
பேய் பிடித்த இவர்கள் இரவு வேளைகளில் எழுந்து நின்று சன்னதமாடுவதாக கூறியே தம்மிடம் அனுமதிக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கருத்து வெளியிட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் அனுமதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 13 பேரென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்த போதும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் சுயாதீன தகவல்கள் அவ்வெண்ணிக்கை 21 என தரிவிக்கின்றன.
தற்போது வைத்தியசாலையின் தனியான பிரிவில் படையினரது கண்காணிப்பின் கீழ் இவர்கள் வைக்கப்பட்டு உள்ளதுடன் ஊடகவியலாளர்களோ தமிழ் அரசியல் தரப்பாரோ உட்சென்று பார்வையிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பெற்றோர் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆவர்களது தகவல்களின் பிரகாரம் குறித்த யுவதிகள் வெறித்துப்பார்த்த வண்ணம் மூச்சு பேச்சின்றி இருப்பதாக தெரிவித்தனர்.
அவர்கள் பாலியல் ரீதியாக தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டமையால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.குறித்த படை முகாமில் இரவு வேளைகளில் ஆவிகளை கண்டதாக ஒரு சிலர் சொன்ன போதும் தவறான நோக்கத்துடன் வந்த படையினராக இருக்கலாமென மற்றொரு அனுபவ தரப்பு கூறுகின்றது.
பெரும் பிரச்சாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட படையில் தமிழ் யுவதிகளை இணைக்கும் நடவடிக்கை பின்னர் தோல்வியை நோக்கியே பயணித்திருந்தது. முன்னதாக ஒரு பகுதி யுவதிகள் தப்பி ஒடி வீடுகளை வந்து சேர்ந்திருந்தனர். மற்றொரு தொகுதியினர் வீடு திரும்ப முற்பட்ட போதும் படைத்தரப்பு அவர்களது பெற்றோரை பார்க்க கூட கடந்த சில நாட்களாக அனுமதித்திருக்கவில்லை.
இதனிடையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதிகளை பார்வையிட சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உட்செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி அவரை உள்ளே அனுமதிக்க கூடாதென வன்னி படைத்தலைமை வைத்தியசாலை பணிப்பாளரை பணித்திருந்ததாக மேலும் அவர் தெரிவித்தார்.

கட்டாயமாக படையில் சேர்க்கப்பட்ட தமிழ் பெண்கள் மருத்துவமனையில்!

News Serviceசிங்களப் படைகளால்  வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்களில் 10 முதல் 15 வரையிலான பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து செய்திகள் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.தங்களை ஏமாற்றி படையில் இணைத்துக் கொண்டதாக கூறி சுய விருப்பத்தின் பேரில் சில பெண்கள் அண்மையில் படைகளை விட்டு வெளியேறி இருந்தனர். ஏனையவர்களை பெற்றோர் பார்வையிட படையினர் அனுமதிக்கவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணமிருந்தது. இதனால் பெற்றோருக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.இந்த நிலையில் இன்று ஒரு தொகுதி பெண்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் படையினர் அனுமதித்து உள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வருவதாக இணையமொன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

11 டிசம்பர் 2012

அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதாக எனக்கு மிரட்டல்-மகிந்த

சிறிலங்கா அதிபர் பதவியில் இருந்து விலகியதும், தன்னை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப் போவதாக வெளிநாட்டவர் ஒருவர் மிரட்டி வருவதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“எந்த உயர்பதவியில் இருப்பவராக இருந்தாலும், தவறிழைத்தால் அவர் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும்.
அதற்கு ஒரு முறைமை உள்ளது, அதன்படியே நாம் செயற்படுகிறோம்.
நான் தவறிழைத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எனக்கெதிராக குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வர முடியும்.
அவ்வாறு இடம்பெற்றாலும் என்னால் அப்போது நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது.
அரசியலமைப்பின்படி அவ்வாறு என்னால் செய்ய முடியாது.
எதற்கும் ஒரு சம்பிரதாயம், சட்டம், முறைமை என உள்ளன. அதனை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம்.
தலைமை நீதியரசர் விவகாரத்திலும் அவ்வாறே செய்யப்படுகிறது.
நாம் இப்போது பல்வேறு தடைகள், அழுத்தங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலிகள் எனக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர்.
நான் குற்றவாளி என்றும் எனக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் முழக்கம் எழுப்புகின்றனர்.
நான் ஒரு ஐந்து, பத்து ஆண்டுகள் அல்லது இருபது ஆண்டுகளோ தான் பதவியில் இருக்க முடியும்.
அதன் பின்னர் என்னை அனைத்துலக நீதிமன்றத்தின் முன்நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டவர் ஒருவர், பரப்புரை செய்து வருகிறார்.
இது பிரபாகரனை நான் கொன்றமைக்காகவாம். இதுதான் தற்போதைய நிலை.
ஒரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாட்டில் தற்போதுள்ள பிரச்சினை தொடர்பில் கொமன்வெல்த்துக்கு அறிவித்து, அங்கிருந்து ஒரு விசாரணைக் குழுவை அனுப்ப வேண்டும் என்று கடித மூலம் கோரியுள்ளார்.
ஏனென்றால், அடுத்த ஆண்டு இறுதியில் சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ளது.
அப்போது அதன் தலைமைத்துவம் இரண்டு வருடங்களுக்கு எனக்குக் கிடைத்து விடும்.
அதனைத் தடுப்பதற்காகவே இந்தக் குரோத மனப்பாங்குடன் செயற்படுகின்றனர்.
இப்போதிருந்தே அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இத்தகையவர்கள் தமது நாடு, மக்கள், நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக அல்லாமல் மக்கள் நலனுக்காக செயற்பட வேண்டியது அவசியம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக நேற்று கொழும்பில் மக்கள் திரள்வு; பொது எதிரணி, சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

news64ஆவது சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று கொழும்பில் அரசுக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பிரதம நீதியரசருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், அவருக்கு எதிரான குற்றப் பிரேரணை, தெரிவுக்குழு விசாரணைகள் ஆகியவற்றைக் கண்டித்தும் எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் ஆகியன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.
லிப்டன் சுற்று வட்டாரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக, அதனை அண்டிய வீதிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் நகரமண்டபப் பகுதியில் நேற்று பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது; வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, கரு ஜயசூரிய ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், நவசம சமாஜக் கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி குமரகுருபரன் ஆகியோரும், பொது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரதிநிதிகளும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் சட்டத்தரணிகள் சங்கத்தினரும் இதில் கலந்துகொண்டனர்.
அரசுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுக்கும் நோக்கிலும், இது விடயத்தை சர்வதேசத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கிலும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதித்துறையை நிறைவேற்றுத்துறை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறது, பிரதம நீதியரசருக்கு நியாயம் கிடைக்க வேண்டும், தெரிவுக்குழுவின் முடிவை ஏற்க முடியாது என்று தெரிவிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்பட்டனர்.
அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை மீறி அரசு பிரதம நீதியரசரைப் பதவி இறக்க முயற்சிக்கிறது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஐ.தே.க.துணைத் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ் சாட்டினார்.
நாட்டை இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவே நீதித்துறையின் சுதந்திரத்தை அரசு ஒடுக்க முனைகிறது என இலங்கைக் கத்தோலிக்க மன்றத்தைச் சேர்ந்த அருட்தந்தை சத்தியவேல் தெரிவித்தார்.

10 டிசம்பர் 2012

துமிந்த கைதாகாவிடின் கொலன்னாவ போர்க்களமாக மாறும் என்கிறார் கிருணிகா!

துமிந்த&கோத்தபாய 
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நாடு திரும்பும்போது அவர் விமான நிலையத்தில் கைதுசெய்யப்படாதுவிடின், கொலன்னாவைப் பகுதி போர்க்களமாக மாறும் என மறைந்த பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிரூணிக்கா பிரேமச்சந்திர நேற்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நாடு திரும்பும்போது அவர் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிடின், கொலன்னாவையில் மற்றுமொரு போர் மூளும் எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஆசி வேண்டி அண்மையில் நடத்தப்பட்ட போதி பூஜை பற்றி அவர் தெரிவிக்கையில், குற்றச்செயல் வழக்கு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு ஆசி வேண்டி நடத்தப்பட்ட முதலாவது பூஜை இதுவாகத்தான் இருக்க முடியும் எனவும் கூறினார்.
ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவராக நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் உள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தற்போது சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

ஜனநாயக வழியில் போராடியவர்களுக்கு புனர்வாழ்வளிக்கவும் ஏற்பாடு?

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களுள் நால்வரை குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சிக்க வைக்க முழு அளவினில் முயற்சிகள்இடம்பெற்று வருவதாக இன்று காலை கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாணவர் சங்கத்தின் இரண்டு உறுப்பினர்களான சண்முகம் சொலமன் (24) கனகசுந்தரம் ஜெனமஜெந்த் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சனன் (24)ஆகியோருடன் மாணவர் ஒன்றிய தலைவர் பவானந்தன் ஆகியோரையே சிக்க வைக்க முயற்சிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் மூலம் பல்கலைக்கழக சமூகத்திற்கு பாடம் படிப்பிக்கவும் முற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடையே இறுதியாக ஒப்படைக்கப்பட்ட மருத்துவ பீட மாணவர்கள் ஜவரையும் அதே போன்று பெற்றோர் மற்றும் பீடாதிபதிகள் சகிதம் சரணடைந்த மாணவர்களில் மாணவர் ஒன்றிய தலைவர் பவானந்தன் தவிர்ந்த ஏனைய அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டதாகவும் தெரியவருகின்றது. முன்னதாக இம்மாணவர்களுள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைய முற்பட்டிருந்த போதும் அலுவலகம் திறக்கப்பட்டிராமையால் நேரில் வவுனியா சென்று சரணடைந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.
அதே வேளை கடந்த சனிக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் அங்கு நிறுவப்பட்டுள்ள பொங்கு தமிழ் பிரகடனப்பலகை மற்றும் மாவீரர் நினைவுத் தூபிகளை படம் பிடித்துள்ளதுடன் கடந்த 27 மற்றும் 28ம் திகதிய சம்பவங்கள் தொடர்பாக காவலர்களிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்து சென்றுள்ளனர்.
இதனிடையே ஜனநாயக வழியில் போராடிய மாணவர்களை புனர்வாழ்வளிக்க வேண்டிய தேவையென்ன என கேள்வி எழுப்பியுள்ள மாணவர் சமூகம் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போராட்டத்தை விலக்கிகொள்ளும் பேச்சிற்கே இடமில்லையென உறுதிபட தெரிவித்துள்ளது.

09 டிசம்பர் 2012

நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி!

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, பிரெட்டோரியாவில் உள்ள இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தியவர் நெல்சன் மண்டேலா.
இதற்காக 27 ஆண்டுகள் சிறைக்காவலில் இருந்த மண்டேலா, 1994-ம் ஆண்டு தென் ஆப்பிரக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகள் மட்டும் ஜனாதிபதியாக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.
2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் உலக கால்பந்து போட்டி நடந்தபோது, கடைசி முறையாக பொது இடத்தில் தோன்றிய அவர், பூரண ஓய்வில் உள்ளார். அவரது உடல் நிலை குறித்து ராணுவ மருத்துவர்கள் அடிக்கடி சோதனை நடத்தி வைத்தியம் அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் நலமடைந்து வீடு திரும்பினார்.
கடந்த ஜீலை 18ம் திகதி, 94வது பிறந்த நாளை மண்டேலா கொண்டாடினார். மண்டேலாவின் உடல்நிலை குறித்து, கருத்து கூறிய தற்போதைய ஜனாதிபதி ஜேக்கப் ஜீமாவின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ´தென் ஆப்பிரிக்காவின் ஜனநாயக ஆட்சிக்கு வித்திட்ட எங்கள் தலைவரின் உடல்நலத்தை பேணி, பராமரிக்க அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது.
அவரது உடல் நிலையில் கவலைக்கிடமாக எந்த பின்னடைவும் இல்லை. இது அவரது வயது சார்ந்த பிரச்சினை தான். அவர் விரைவில் பூரண நலமடைந்து விடுவார்´ என்று கூறப்பட்டுள்ளது.

வட,கிழக்கில் ஐ.நா.படையை நிலை நிறுத்துமாறு கோரிக்கை!

நிரந்தரமான தீர்வு ஒன்று ஏற்படும் வரை தமிழர் தாயகப் பகுதியான இலங்கையின் வடக்கு கிழக்கில் ஐக்கிய நாடுகளின் படையை நிறுத்த வேண்டும் என ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிகள் குழுவிடம் யாழ்ப்பாணத்தின் சிவில் சமூகம் வலியுறுத்தி உள்ளது.
கடந்த காலங்களில் தொடர்ச்சியாக இடம் பெற்ற சம்பவங்களில் இருந்து அரச படைகள் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத நிலை இருப்பதால் இவ்வாறு ஐ.நா. படையை நிறுத்தும் யோசனையை சிவில் சமூகம் முன்வைத்ததாக அதன் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் விதிவிடப் பிரதிநிதிகள் குழு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் வந்தது. ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹன்ன குழுவுக்குத் தலைமை தாங்கினார். ஜப்பான், பங்களாதேஷ், ருமேனியா, நைஜீரியா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட 13 நாடுகளின் வதிவிடப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் வடக்கின் நிலைமையை நேரில் ஆராய்வதற்காகவே இந்தக் குழுவினர் வருகை தந்திருந்தனர். அவர்கள் சமூகத்தின் பல தரப்பட்டவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமா தூதுக்குழுவினர் காலையில் யாழ். ஆயர் இல்லத்தில் வைத்து ஐ.நா. குழுவினரைச் சந்தித்து நிலைமைகளை எடுத்துரைத்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறிந்து கொள்வதும் மீண்டும் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுமே தமது பயணத்தின் நோக்கம் என்று ஐ.நா. குழுவினர் தெரிவித்தனர்.
இலங்கையில் சகல இன மக்களும் சகல விடயங்களிலும் சமமாக நடத்தப்படுவதில்லை. மொழி உரிமை தொடர்ந்தும் மீறப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதிகாரப் பகிர்வைக் கேட்டுப் போராடியவர்களுக்கு அது கிடைக்கவில்லை. ஆனால் கேட்காதவர்கள் அதனை அனுபவிக்கிறார்கள்.
சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ் மக்கள் மனதை வெல்ல வேண்டும். ஆனால் அதற்குரிய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக தமிழர்கள் தமது தனித்துவங்களைப் பேண முடியாத நிலையில் இருக்கின்றோம்.
பெரும் எண்ணிக்கையில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதும் படை முகாம்கள் பல அமைக்கப்பட்டிருப்பதும் நல்லிணக்கத்துக்குத் தடையாக இருக்கின்றது.
தென்னாபிரிக்காவைப் போன்றதொரு நல்லிணக்கத்தை இங்கு ஏற்படுத்த முடியாது. அங்கு சட்டரீதியான உரிமைகளை மதித்து கறுப்பின மக்கள் வெள்ளையர்களுடன் இணக்கத்திற்கு வந்திருந்தார்கள்.
ஆனால் இங்கு இதுவரை செய்து கொள்ளப்பட்ட எந்தவொரு ஒப்பந்தங்களும் மதிக்கப்பட்டதில்லை. இங்கு கருத்துச் சுதந்திரமோ பத்திரிகைச் சுதந்திரமோ கிடையாது. இரண்டுமே அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என சிவில் சமூகத்தினர் ஐ.நா. குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

08 டிசம்பர் 2012

புலிகளுக்கு எதிராக சம்பந்தன் பேச்சு பாராட்டுகிறார் நிமால்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது இனவாத நிலைப்பாடுகளில் இருந்து மாறியுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன்  ஆற்றிய உரை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சம்பந்தன் உரையின் முதல் பகுதியில் தெரிவித்த விடயங்கள் குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத நிலைப்பாடுகளில் இருந்து மாறியுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் சிங்கள மக்களை மாத்திரம் கொலை செய்யவில்லை. எனினும் கூட்டமைப்பினர்  இவ்வாறு சுதந்திரமாக பேச முடியாதிருந்தது. ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும்  புண்ணியம் கிடைக்க, கூட்டமைப்பினர்  தற்போது சுதந்திரமாக பேசுகின்றனர். தற்போது, தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் தேவையே நமக்குள்ளது. இராணுவம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தி, இனங்களின் மனங்களை வென்று வருகிறது. எனினும் இதனை விட துரிதப்படுத்த வேண்டும். நாட்டுக்கு தேவையானதை இராணுவத்தினர் நிறைவேற்றினர், இப்போது அவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு கூறமுடியாது எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

பிரதம நீதியரசரை பைத்தியக்கார பெண்மணி"என கேலி செய்த ஆளும் கட்சியினர்!

"பைத்தியக்கார பெண்மணி" என்று நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் விளித்தமையை அடுத்தே இலங்கையின் பிரதம நீதியரசர், குற்றவியல் விசாரணைகளில் இருந்து வெளியேறினார் என்று ஏஎப்பி தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் சட்டத்தரணிகளை கோடிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக "நோனா" "பேபி" என்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பிரதம நீதியரசரை கேலி செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையிலேயே ஏஎப்பி தமது செய்தியை வெளியிட்டுள்ளது. இதேவேளை ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்சவின் சில சட்டமூலங்களை உயர்நீதிமன்றத்தின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள முடியாமை காரணமாகவே சிராணி பண்டாரநாயக்கவின் மீது குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டது என்று ஏஎப்பி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

07 டிசம்பர் 2012

இலங்கையை கண்டிக்க இலங்கை மண்ணே சிறந்தது"கனடிய பிரதமருக்கு ஆலோசனை

இலங்கைத்தீவில் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு நேரடியாக இலங்கையைக் கண்டிப்பதா அல்லது முற்றாகவே மாநாட்டிற்குச் செல்லாமல் விடுவதா என்ற இரண்டு முடிவுகளில் எதை எடுப்பது என்பது குறித்து கனடியப் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சிக்குட்படுத்தப்பட்டிருந்த ஐம்பத்து நான்கு நாடுகள் அங்கம் வகிக்கும் பொதுநலவாய நாடுகள் அவையின் முடிவெடுக்கும் திறன்வாய்ந்த நாடுகளாக நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாநது, கனடா, இந்தியா, தென்னாபிரிக்கா என ஆறு நாடுகளே தலைமைத்துவ நிலையில் இருக்கின்றன. இதில் கனடா கலந்து கொள்ளாமல் விடுமிடத்து ஒரு பாரிய “தலைமை” வெற்றிடம் ஏற்படும் என்பதோடு கனடா குறித்த ஏனைய நாடுகளின் பார்வையும் மாறுபட வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் 2013ம் ஆண்டில் கொழும்பில் இடம்பெறவிருக்கும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து அங்கு வைத்து கண்டனம் தெரிவிப்பது ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்பதைப் பிரதமரே பரிசீலனைக்கு விட்டுள்ளதாகத் தெரியவருகிறது. தனது கட்சி சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் குழுவிடமும் எந்த முடிவு நன்மை பயக்கும் என்பதை அறிவுறுத்துமாறு வேண்டியுள்ளார்.
இவ்விடயம் குறித்து கனடியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள கனடிய தமிழர் கண்சவேட்டிவ் அமைப்பு, www.constam.ca இலங்கையின் தமிழர் பகுதிகள் யாவும் இராணுவ முகாம்கள், தளங்கள் என்றில்லாமல்; இராணுவ நகரங்களாகவே மாற்றப்பட்டு சிங்கள இராணுவத்தினர் யதார்த்தத்திற்குப் புறம்பாக குடியமர்த்தப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அவர்களிற்கான சிங்களப் பாடசாலை, விகாரை என்பனவும் தமிழர்களின் நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளதுடன்,
போரின் பின்னரான புரிந்துணர்வு தமிழர்களிற்கும் சிஙகள அரசிற்குமிடையே ஏற்படாதததற்கு சிங்கள அரசின் தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தும் செயல்களே முதன்மை காரணியென்றும், தற்போது உயர் கல்விப்பீடங்கள், பல்கலைக்கழகங்கள் மீது சிறீலங்கா நடத்தும் தாக்குதல்கள் இதற்கு முன்னுதாரணம் என்றும் தெரிவித்து,
தமிழர்களிற்கு நீதி வழங்கப்படாததைச் 54 நாடுகளின் முன் சுட்டிக்காட்டும் சந்தர்ப்பத்தை இம் மாநாடு கனடியப் பிரதமருக்கு வழங்கும் என்பதையும், இம் மாநாட்டில் இலங்கையை பொதுநலவாய நாடுகளிலிருந்து ஒதுக்கும் தீர்மாணத்தை கனடா கொண்டு வரலாம் என்றும், முன்னர் பாகிஸ்தான் ஒதுக்கப்பட்டதைப் போன்று சிறீலங்காவும் ஒதுக்கப்படுவதற்கு ஆதாரத்தகவல்கள் நிறையவே உள்ளன எனத் தெரிவித்து எனவே,
54 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையை அதன் மண்ணிலேயே நின்று கண்டிப்பதே மனிதவுரிமைகளை மதிக்கும் கனடாவிற்கு உகந்த செயற்பாடென கனடிய தமிழர் கண்சவேட்டிவ் அமைப்பு தெரிவித்துள்ளது.

என்னைக்கொல்ல பலமுறை அரசு முயற்சித்துள்ளது உண்மை-சிவாஜிலிங்கம்

இலங்கை அரசு தன்னைக் கொல்ல பலமுறை முயற்சி எடுத்தது எனவும், எனவே தற்போது கனடாவில் அகதிக் கோரிக்கை சமர்ப்பித்துள்ள இராணுவ அதிகாரி தன்னைப் பற்றித் தெரிவித்துள்ள கூற்றுக்கள் உண்மையாக இருக்கலாம் எனவும் சிவாஜிலிங்கம் கனடிய ஊடகமொன்றிற்குத் தெரிவித்துள்ளார். கனடாவில் அகதிநிலை கோரியுள்ள கப்டன் ரவீந்ரா வதுடுரா பண்டனகே என்ற இலங்கை இராணுவ அதிகாரி தனது உயரதிகாரியான கேணல் அத்தபத்து தன்னை சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்குக் குண்டு வைக்குமாறு கேட்டதாகவும் ஆனால் தான் அவ்வாறு செய்யவில்லையென்றும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நசனல் போஸ்ட் என்ற இந்தப் பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்த முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.எம்.கே.சிவாஜிலிங்கம், இந்த இராணுவ வீரர் சொல்வதை தன்னால் நம்ப முடிவதாகவும், இறுதி யுத்தத்தின் போது மூன்று முறை தன்னை அரசு கொல்ல முனைந்ததாகவும் அதிலொரு தடவை கிளைமோர் குண்டொன்றின் மூலம் தன்னைக் கொல்ல முயன்றதாகவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தான் 2008ம் ஆண்டு இறுதிப்பகுதியில் நாட்டை விட்டு வெளியேறி போர் முடிந்த பின்பு நாடு திரும்பியதாகத் தெரிவித்துள்ள சிவாஜிலிங்கம்,போரின் போது வேறு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி இந்த இராணுவ வீரர் சொல்வது உண்மையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

06 டிசம்பர் 2012

முடியாத ஏக்கங்கள்",எனும் தலைப்பில் பெண்போராளி எழுதிய நூல் வெளியீட்டு விழா!

முன்னாள் போராளி எழுதிய முடியாத ஏக்கங்கள் நூல் வெளியீடுமன்னார் அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி வெற்றிச்செல்வி (வேலு சந்திரகலா)எழுதிய முடியாத ஏக்கங்கள் என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா அண்மையில்  இடம்பெற்றுள்ளது. இந்த சிறுகதை நூலில் முழுக்க ழுழுக்க போரில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறானாளிகளின் வாழ்க்கையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சிறுகதைத் தொகுதி வெளியீட்டுவிழா கடந்த முதலாம் திகதி அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளி செல்வி வேலுசந்திரகலாவின் இந்த நூல்வெளியீட்டு விழா கவனத்தை ஈர்க்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் வெளிப்பாடுகளுடன்அமைந்திருந்தது.
போரில் ஒரு கண்ணும் கையும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் முன்னாள் போராளியான வெற்றிச்செல்வி தனது சிறுகதைகளிலும் மாற்றுத்திறனாளிகள் மீதான பார்வைமாற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு மன்னார்,வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த பல மாற்றுத்திறனாளிகள் அழைக்கப்பட்டடிருந்தனர்.
இந்த நிகழ்வில் ஒரு கையை இழந்த சிறுமி அன்பரசியின் நடன நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. நூலுக்கான மதிப்பீட்டுரையை  வழங்கிய அம்பிகைபாலனும் இரண்டு கால்களும் வழங்காத ஒரு மாற்றுத்திறனாளியாவார்.
இந்த நிகழ்வில் மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்டார். மாந்தைமேற்கு உதவி அரச அதிபர் பிரிவு சமூகசேவை உத்தியோகத்தர் த.தனசீலன் நிகழ்வுக்குத் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு உதவி அரசஅதிபர் மா.சிறிஸ்கந்தகுமார் ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் ஆகியோர் கலந்துகொண்டனர். அடம்பன் பங்குத்தந்தை அருட்திரு லக்கோன்ஸ் பிகிராடோ, மன்னார் பிரஜைகள் குழுத்தலைவர் அருட்திரு இ.செபமாலை,அடம்பன் மத்திய மகா வித்தியாலய அதிபர் மை.கிறிஸ்ரியான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நூல் நயப்புரையை மன்னார் வட்டக்கண்டல் அ.த.க.பாடசாலையின் தமிழ் ஆசிரியை பரமேஸ்வரி சிலுவேஸ்திரன் வழங்கினார். ஏற்புரையாற்றறிய சந்திரகலா மாற்றுத்திறனாளிகள் நம்பிக்கையோடு வாழவேண்டும் எனவும் இவர்கள் மீது சமூகம் அக்கறையும் கரிசனையும் கொள்ளவேண்டும் எனவும் எடுத்துரைத்தார். மன்னார் மாற்றுத் திறனாளிகள் அமைப்பான தேனீ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

யாழில் கைதானவர்களுக்கு புலிகளோடு தொடர்பு என்கிறது போலிஸ்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் 10 பேரும் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டு செயற்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பிரசாந்த ஜயக்கொடி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (05) மாலை வரை ஏழு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி எஸ். கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை யாழில் கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டிதுறை, சுன்னாகம், சங்கானை ஆகிய பிரதேசங்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

05 டிசம்பர் 2012

மேர்வின் சில்வா போன்று சண்டியனாகும் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி!

கொழும்பில் அமைந்துள்ள ரூபவாகினி தொலைக்காட்சி அலுவலகத்திற்கு முன்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி தயானந்தா போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
களனியில் பொலிசார் மற்றும் சில அரசியல்வாதிகளை தமது அடாவடித்தனத்தால் வெருட்டி வைத்திருக்கும் மேர்வின் சில்வா போன்று கொழும்பில் போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கின்றார் அமைச்சரின் தம்பி தயானந்தா.
தீவக மக்களின் வாக்குகளோடு யாழ். மண்ணில் அசைக்க முடியாத சக்தியாக இன்று வரை விளங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பியான தயானந்தாவின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ள யாழ். மாவட்ட வர்த்தகர்களும் விசனம் வெளியிட்டுள்ள நிலையில் கொழும்பில் போக்குவத்து பொலிசாருடன் வாய்த்தர்க்கத்தில் டக்ளஸின் தம்பி தயானந்தா ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
அமைச்சரை பகைக்கவிரும்பாத யாழ்.மாவட்ட பொலிஸ் திணைக்களம், தயானந்தா செய்யும் எதனையும் ஏற்றுக்கொள்ளும் நிலையிலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைகழக மாணவர்கள் பொலிசாரினால் தாக்கப்படும் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி தாயனந்தா பார்வையாளராக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் பகுதிகளில் இருந்து படைகள் வெளியேற்றப்படவேண்டும்-பற்றிக் பிறவுன்

News Serviceசிறீலங்காவில் மனித உரிமைகள் சீர்கெட்டுச் செல்வது மிகுந்த கவலையளிப்பதாக கனடாவின் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் பரித்தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான பற்றிக் பிரவுன் விடுத்துள்ள அறிக்கையில் தெரவித்துள்ளார். சுதந்திரமாக கருத்து வெளியிடுதல் சுதந்திரமாக கூடுதல் போன்ற உரிமைகளுக்கு சிறீலங்காவில் நடந்துள்ள சமீபத்திய சம்பவங்கள் கடும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளமை அதிகரித்த கவலையை  தருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், தொடரும் அச்சுறுத்தல்கள்,மாணவர் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை என்பன கவலையளிப்பதாக தெரிவித்த பிரவுன் அமைதி வழிப் போராட்டங்களை அனுமதித்து மாணவர் தலைவர்களை உடன் விடுதலை செய்யுமாறு சிறீலங்காவை வேண்டியுள்ளார்.
சிறீலங்காவில் அதிகரித்து வருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திகள் சர்வதேச சமூகத்தின் கரிசனையை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரவுன் இராணுவமயமாக்கல் ஏதேச்சதிகார ஆட்சி என்பன சனநாயக முறைமையல்ல என சிறீலங்காவின் இன்றைய நிலைமையை கடுமையாக சாடியுள்ளார்.
தமிழர் பகுதிகளில் இருந்து சிறீலங்கா இராணுவத்தை வெளியேற்றி ஆட்சி அதிகாரத்தை மக்கள் செயற்பாட்டாளர்களிடம் கைய்ளிக்குமாறு வேண்டியுள்ள கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிறவுன் சர்வதேச சமூகம் விரைந்து செயற்பட்டு தமிழர் அபிலாசைகளுக்கான நீதியான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான தருணம் இது எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் சிறீலங்காவில் நிலைமைகளைக் கண்டறிய செல்ல முற்பட்டபோது சிறீலங்கா அரசினால் அனுமதி மறுக்கப்பட்டவர் பற்றிக் பிரவுன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

04 டிசம்பர் 2012

மாத்தளை மருத்துவமனையில் பாரிய மனிதப் புதைகுழி!

இலங்கையின் மத்திய பகுதியிலுள்ள மாத்தளை மருத்துவமனைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியிலிருந்து கடந்த மூன்று தினங்களில் மட்டும் 16 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ள மனித எச்சக்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடரும் அதேவேளையில் இங்கு மேலும் மனித எச்சங்கள் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தகவலின்படி மேலும் பெருமளவு மனித எச்சங்கள் இப்பகுதியில் மீட்கப்படலாம் எனத் தெரியவருகின்றது.
மாத்தளை மருத்துவமனையின் உயிரியல் வாயுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஒன்றின் போது நவம்பர் 30 திகதி முதலில் ஆறு பேருடைய மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. அத்திபாரத்துக்காக நிலத்தைத் தோண்டிய போதே இந்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டன. இதனையடுத்து மேலும் ஐந்து பேருடைய மனித எச்சங்கள் மீட்கப்பட்டதையடுத்து இந்தப் பகுதியில் பாரிய மனிதப் புதைகுழி ஒன்றிருக்கலாம் எனக் கருதப்பட்டது.
இதனையடுத்து புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்போது இதுவரையில் 27 பேருடைய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாத்தளை மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மனித உச்சங்கள் இபடபகுதியில் இருக்கலாம் எனக் கருதப்படுவதால் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுகக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட மனித எச்சங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படும் எனத் தெரிகின்றது.
இதேவேளையில் கொழும்பு பொலிஸ் தலைமையகத்திலிருந்து தடயவியல் நிபுணர்கள் குழு ஒன்று புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்துக்கு இன்று அவசரமாக அனுப்பிவைக்கப்படவிருக்கின்றது. பெருமளவு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதால் இது தொடர்பான விசாரணையை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த மனித எச்சங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து இது 20 வருடத்துக்கு முற்பட்ட புதைகுழியாக இருக்கலாம் என மாத்தளை பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இருந்த போதிலும், கொல்லப்பட்டவர்கள் யார் என்பது தொடர்பாகவோ அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது பற்றியோ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.
1971 ஆம் ஆண்டிலும் பின்னர், 1988- 1989 காலப் பகுதியிலும் ஜே.வி.பி. மேற்கொண்ட கிளர்ச்சியின் போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் புதைகுழியாக இது இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

கூட்டமைப்பை அவசரமாக அழைக்கிறார் மகிந்த!யாழில் நடைபெறவுள்ள போராட்டங்களை குழப்பும் சூழ்ச்சியா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவசர சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார். இதற்கான அழைப்பு நேற்று திங்கட்கிழமை கூட்டமைப்பிற்கு விடுக்கப்பட்டுள்ளது.
இடையில் நின்று போயிருக்கும் அரசியல் தீர்வு முயற்சிகள் தொடர்பில் சர்வதேச சமூகம் அழுத்தங்களைக் கொடுத்து வரும் ஒரு சூழ்நிலையில், அரசியல் தீர்வுப் பேச்சுகளை உடனடியாக முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி இந்தச் சந்திப்பின்போது சில யோசனைகளை முன்வைக்கும் சாத்தியம் இருப்பதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
பிரதம நீதியரசர் விவகாரத்தினால் சர்வதேச மட்டத்தில் அரசு நெருக்குவாரங்களைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், இனப்பிரச்சினைத் தீர்விலும் இழுத்தடிப்பைச் செய்யாமல் முன்னோக்கிச் செல்ல உத்தேசித்து ஜனாதிபதி இந்த அவசர சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கலாம் என்று அரச தமிழ்க் கூட்டமைப்பு பேச்சுக்குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
அதேவேளை யாழ். பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இன்று யாழில் ஏற்பாடு செய்துள்ள கண்டனப் போராட்டத்தை குழப்புகின்ற நோக்குடனேயே இந்த அழைப்பை ஜனாதிபதி விடுத்திருக்கலாம் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஜனாதிபதியிடமிருந்து வந்த அழைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாகப் பதில் எதனையும் தெரிவிக்கவில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் கொழும்பில் இல்லாத காரணத்தினால் அவர்கள் கொழும்பு திரும்பியதும் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான நாள் தீர்மானிக்கப்படுமெனத் தமிழ்க் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

03 டிசம்பர் 2012

"ஈழத்தமிழகம்"தமிழர்களை மீண்டும் கடுப்பேற்றிய கருணாநிதி!

ஈழத் தமிழர் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் நிலைப்பாடுகள் பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் "தமிழீழம்" என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் திடீரென "ஈழத் தமிழகம்" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஈழத் தமிழர் பிரச்சனையில் காலந்தோறும் பயன்படுத்தப்பட்டு வரும் சொல் "தமிழீழம்" என்பதுதான். திமுக டெசோ மாநாடு நடத்துவதாக அறிவித்த போதுதான் "தமிழீழம்" என்ற சொல்லுக்கே பிரச்சனை வந்தது. "தமிழீழம்" என்பதே இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதைத் தொடந்து திமுக முன்னின்று நடத்திய டெசோ மாநாட்டில் அதாவது "தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டில்", "தமிழீழம்" என்ற சொல்லே இல்லாமல் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட்னா. அவற்றைத்தான் இன்றளவும் "டெசோ" தீர்மானங்களாக திமுக புகழ்ந்து வருகிறது.
தற்போதைய சூழலில் திமுக- காங்கிரஸ் உறவு பலப்பட்டுவிட்ட நிலையில் "தமிழீழம்" என்ற சொல்லையே பயன்படுத்த விரும்பாததைப் போல திமுக தலைவர் கருணாநிதி, "ஈழத் தமிழகம்" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 80-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசுகையில் "ஈழத் தமிழகம்" என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார். பொதுவாக தமிழ்நாட்டைத் தான் "தமிழகம்" என்று சொல்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது கருணாநிதி, "ஈழத் தமிழகம்" என்று புது சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்.
"தமிழீழம்" என்ற சொல்லைத்தானே பயன்படுத்தக் கூடாது.. "ஈழத் தமிழகம்" என்று சொன்னால் ஒரு பாதுகாப்பாக இருக்கலாம் என்று அவர் கருதியிருக்கலாம். ஆனால் கருணாநிதியின் இந்த 'சொல் விளையாட்டு' என்பது "தமிழீழம்" என்ற உயரிய லட்சிய பயணத்தில் குழப்பம்தான் விளைவிக்கும் என்கின்றனர் ஈழத் தமிழர் ஆர்வலர்கள்.

கிழக்குப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்தில்அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை தாம் முன்னெடுத்துள்ளதாகவும்,மாணவர்களது உரிமைகளில் இராணுவம் தலையிடுவது தவிர்க்கப்படவேண்டும் என இதன்போது வலியுறுத்துவதாகவும் மாணவர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது ஆசியாவின் ஆச்சரியம் என்பது அடக்குமுறை தானா? அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களை தாக்கியதேன்?, மாணவர்களது பாதுகாப்பை கேள்விக்குறியாக்காதே?, மாணவிகளின் விடுதிகளுக்கு இராணுவம் வேண்டாம் என்ற கோசங்களை மாணவர்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

02 டிசம்பர் 2012

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம்; கனடா மீண்டும் எச்சரிக்கை

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாடு தொடர்பில் கனடா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மேம்படாத பட்சத்தில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு இலங்கை அரசாங்கம் நியாயம் வழங்கத் தவறியுள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் கிறிஸ்டியன் ரோய் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றக் கட்டமைப்பின் மீதான அண்மைய அழுத்தங்கள் தொடர்பிலும் பிரதம நீதியரசர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் தொடர்பிலும் உன்னிப்பதாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது. எனவே நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது.
இலங்கையில் குறிப்பிடக்தக்களவு அரசியல் நல்லிணக்கம், மனித உரிமை மேம்பாடு போன்றன ஏற்படாத பட்சத்தில், 2013ஆம் ஆண்டு நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் ஹார்பர் பங்கேற்க மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துமாறு ஸ்டீபன் இலங்கை அரசிடம் கோரியிருந்தார்.
எனினும், எதிர்பார்க்கப்பட்டளவு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படாமையுடன் மனித உரிமை நிலைமைகளிலும் மாற்றம் ஏற்படவில்லை எனவே பொதுநல வாய நாடுகளுக்கான மாநாட்டை புறக்கணிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

கைதான மாணவர்கள் இதுவரை நீதிமன்றில் முன்நிறுத்தப்படவில்லை

கைதான பல்கலை மாணவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு 24 மணிநேரம் ஆனபோதும் அவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என முன்னிலை சோஷலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 24 மணித்துயாலத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பது சட்டம் எனவும், ஆனால் இம் மாணவர்கள் இதுவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை என அக்கட்சி குற்றஞ் சுமத்தியுள்ளது.
கடந்த 26ஆம் திகதி பல்கலைக்கழகத்தில் விளக்கு ஏற்றியமையின் காரணமாக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அரம்பிக்கப்பட்டிருந்தன.
போராட்டத்தில் உயிரிழந்த வீரர்களிற்கு மரியாதை செலுத்தி வணங்கும் உரிமை பல்கலைக்கழக மாணவர்களிற்கு உண்டு.
சமூகத்தில் பல்வேறுபட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்களிற்கான உரிமைகள் அவர்களிற்கு வழங்கப்படவேண்டும். எனவே இங்கு மாணவர்களது உரிமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இத்தகையொதொரு காலப்பகுதியில்தான் 30 வருடங்களிற்கு முன்னதாக இலங்கையில் போராட்டம் வெடித்தது எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

01 டிசம்பர் 2012

இராணுவம் பற்றி கனடாவில் முன்னாள் கப்டன் சொன்னது யாவும் பொய்யென சிறீலங்கா மறுப்பு

இராணுவம் தமிழர்களை சித்திரவதை செய்ததாக முன்னாள் கெப்டன் முன்வைத்த கருத்துக்கு மறுப்புதமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் மற்றும் மீறல்கள் குறித்த தகவல்களை, கனேடிய அதிகாரிகளிடம் வெளியிட்டுள்ள இலங்கை இராணுவ கெப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே ஒரு மோசடிப் பேர்வழி என இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தினரால், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்தும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் வீட்டில் குண்டு வைக்குமாறு தான் மேலதிகாரியால் பணிக்கப்பட்டதாகவும், கெப்டன் வடுதுர பண்டாரகே கனேடிய அதிகாரிகளிடம் கூறியிருந்தார்.
இதுபற்றிய தகவல்கள் நேற்று கனடாவின் நெசனல் போஸ்ட் நாளிதழில், வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சு இன்று (01) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையிலேயே, கெப்டன் வடுதுர பண்டாரகே ஒரு மோசடியான நபர் என்றும், தனது புகலிடக் கோரிக்கையை கனடிய அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதற்காக பொய் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தற்காப்புக்கலைஞரான இவர் உள்ளூரிலும் அனைத்துலக அளவிலும் நடைபெறும் போட்டிகளில் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக, 1993ம் ஆண்டில் ஒரு 2வது லெப். அதிகாரியாக சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவும் சர்ச்சைக்குரிய ஒரு அதிகாரியாகவே இருந்து வந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனிதாபிமானப் போரின்போது அவர் போர் நடந்த பிரதேசங்களுக்கு அண்மையில் எங்குமே சென்று பணியாற்றவில்லை எனவும் 2006 தொடக்கம் அவர் தப்பிச்செல்லும் வரை, கொழும்பைச் சுற்றிய பகுதிகளிலேயே பணியாற்றியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் குண்டுவைக்குமாறு தனக்கு ஒரு கேணல் உத்தரவிட்டதாக இவர் கூறியுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அப்படி எதுவும் நடக்கவேயில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கெப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே என்ற 38 வயதுடைய இந்த இலங்கை படை அதிகாரி 2009 ஒக்ரோபரில், இராணுவத்தில் இருந்து ரொரன்டோவுக்குத் தப்பிச்சென்றார்.
சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசுப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், குற்றச்செயல்கள் குறித்து தனக்குத் தெரியும் என்று கனேடிய குடிவரவு அதிகாரிகளிடம் இவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டில் குண்டுஒன்றை வைக்குமாறு தனக்கு கேணல் தர அதிகாரி ஒருவர் உத்தரவிட்டதாகவும் தனது புகலிடக் கோரிக்கை தொடர்பான விசாரணையின் போது, இவர் கூறியுள்ளார்.
தான் அதற்கு மறுத்ததால், கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அங்கு தமிழர்களைச் சுற்றிவளைக்கும் தேடுதல்களுக்கு உதவியதாகவும் கெப்டன் ரவீந்திர வடுதுர பண்டாரகே தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களை சித்திரவதை செய்தது, தாக்கியது, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது குறித்து தனக்குத் தெரியும் என்றும் அவர் சாட்சியமளித்துள்ளார்.
“மக்களுக்கு இழைக்கப்பட்டது கொடுமை என்பதை ஒத்துக் கொள்கிறேன். நான் அதை ஒப்புக் கொள்கிறேன்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்துக் கருத்து வெளியிட்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் இலங்கைக்கான கனேடிய ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஆர்கியூ “இது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஆயுதமோதலின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்றும், பொறுப்புக்கூறுதல் குறித்தும் இது பகிரங்க விவாதங்களை ஏற்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தற்கொலை செய்ய முடிவெடுத்தவர்கள் பட்டினிப்போராட்டம் நடத்துவார்களா?சீமான் கேள்வி

தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தவர்கள் பட்டினி கிடந்து போராடிக் கொண்டிருப்பார்களா, பொய் வழக்கு போட்டு ஈழத்தமிழ்ச் சொந்தங்களை மிரட்டி வரும் பொலிஸ்துறைக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா? நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது:
பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் சட்டத்துக்குப் புறம்பாகவும், மனிதாபிமானமற்ற வகையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள், தனிமைச் சிறையில் வாட்டும் தங்களை சாதாரண முகாம்களுக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் பல முறை பட்டினிப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
அவ்வாறு போராடிய போதெல்லாம் அவர்களுடன் பேச்சு நடத்தும் மாவட்ட நிர்வாகிகளும், தமிழக காவல்துறையின் கியூ பிரிவு அதிகாரிகளும், உங்களை சிறப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்கிறோம் என்று வாக்குறுதி அளித்து போராட்டத்தை முடித்து வைப்பார்கள்.
ஆனால், அதன் பின்னர் அவர்களை கண்டுகொள்வதில்லை. சிறப்பு முகாம்வாசிகளும் பொறுத்துப் பார்த்து பொறுமையிழந்து அதன் பின்னர் சாகும்வரை பட்டினிப் போராட்டம் அறிவித்து அதில் ஈடுபடுவார்கள்.
இது தொடர்கதையாக பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இப்போது பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 7 ஈழத் தமிழர்களில் பரமேஸ்வரன், தர்ஷன், பிரதீபன் ஆகிய மூன்று பேரும் கடந்த 23 ஆம் திகதியிலிருந்து ஒருவர் பின் ஒருவராக பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, விடுதலை செய்யாமல், அவர்கள் மீது தற்கொலைக்கு முயன்றனர் என்று கியூ பிரிவு பொலிஸ் வழக்கு பதிவு செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளது. இது உண்மைக்கும், நியாயத்துக்கும் எதிரான அடக்கு முறை நடவடிக்கையாகும் என்று செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.