ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. கால அவகாசம் முடிவடைவதற்குஇன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசாங்கம் எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. இந்த கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க ஜெனிவா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை வௌ்ளிக்கிழமை ஜெனிவா வளாகத்தில் சந்தித்து பேச்சு நடத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான மாணிக்கவாசகர் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.இந்த சந்திப்பின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், '2019 ஆம் ஆண்டுடன் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுக்கு வந்துவிடும். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யாத அரசாங்கம் எதிர்வரும் ஒரு வருட காலத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அரசாங்கம் எதனையும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.அந்தவகையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுத்து அறிவிக்கவேண்டும். நாங்கள் இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதே என்று எம்மிடம் சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்புகின்றன. தற்போது இலங்கை விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்று புலம்பெயர் அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன. இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வைப் பெறலாம் என்றார்.இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிடும்போது 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஒரு வருடம் பொறுமைகாக்கவே விரும்புகின்றது . அதன் பின்னர் சர்வதேசத்துடன் இணைந்து எவ்வாறான திட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதனை ஆராய்வோம்.அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த வழிவகைகளை கூறவேண்டும். நாம் பொறுமை காக்கின்றோம். முடியாத பட்சத்தில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.18 மார்ச் 2018
சிறீலங்கா எதையும் செய்து விடப்போவதில்லை என்ற புலம்பெயர் அமைப்பின் கூற்றுக்கு பொறுப்போம் என்கிறார் சிறீதரன்!
ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யவில்லை. கால அவகாசம் முடிவடைவதற்குஇன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில் அரசாங்கம் எதனையும் செய்யாது என்பது புரிகின்றது. இந்த கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஜெனிவா கூட்டத் தொடரில் பங்கேற்க ஜெனிவா வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை வௌ்ளிக்கிழமை ஜெனிவா வளாகத்தில் சந்தித்து பேச்சு நடத்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளான மாணிக்கவாசகர் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.இந்த சந்திப்பின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், '2019 ஆம் ஆண்டுடன் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுக்கு வந்துவிடும். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யாத அரசாங்கம் எதிர்வரும் ஒரு வருட காலத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அரசாங்கம் எதனையும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது.அந்தவகையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுத்து அறிவிக்கவேண்டும். நாங்கள் இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதே என்று எம்மிடம் சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்புகின்றன. தற்போது இலங்கை விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்று புலம்பெயர் அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன. இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வைப் பெறலாம் என்றார்.இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறிப்பிடும்போது 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் ஒரு வருடம் பொறுமைகாக்கவே விரும்புகின்றது . அதன் பின்னர் சர்வதேசத்துடன் இணைந்து எவ்வாறான திட்டத்தை முன்னெடுக்கலாம் என்பதனை ஆராய்வோம்.அத்துடன் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த வழிவகைகளை கூறவேண்டும். நாம் பொறுமை காக்கின்றோம். முடியாத பட்சத்தில் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுவோம் என்றார்.17 மார்ச் 2018
ஜெனிவா பிரேரணையை நிறைவேற்ற சிறீலங்கா எதனையும் செய்யவில்லை!
ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. காணாமல் போனோர் குறித்து விசாரிக்கும் அலுவலகமும் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திப்படுத்துவதாக இல்லை என்று சமாதானத்திற்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பின் தலைவர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மனித உரிமை நிலை தொடர்பான விசேட உபகுழுக்கூட்டத்தில் உரையாற்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.யுத்தக்குற்றங்கள் மனதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற விடயங்களின் அடிப்படையிலேயே ஜகத் ஜயசூரிய மீது சர்வதேச நியாயாதிக்கம் பிரயோகிக்கப்பட்டது. இதேவேளை யுத்தத்தின்போது என்ன நடந் தது என்ற உண்மை கண்டறியப்படவேண்டும். அதனடிப்படையிலேயே தர்ஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவை அன்று பான்கீ மூன் நியமித்தார். நானும் அதில் அங்கத்துவம் பெற்றேன்.யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயுமாறு எமது நிபுணர் குழுவிற்கு பணிக்கப்பட்டது. நாம் சிவிலியன்களின் உயிரிழப்பு தொடர்பாக ஆராய்ந்தோம். எமக்கு கிடைத்த தகவல்களின் படி 40 ஆயிரம் என்று கூறப்பட்டது. நாங்கள் தரவுகளை சேகரித்தோம். எமது பரிந்துரைக்கு அமைவாகவே முன்னாள் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை இலங்கையின் யுத்தம் தொடர்பில் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் நாம் மதிப்பிட்ட எண்ணிக்கையை விட உயிரிழப்புக்கள் அதிகமாக இருக்கும் என கருதப்பட்டது. அது 75 ஆயிரமாக இருக்கும் என்றும் கருதப்பட்டது.நாங்கள் மத பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினோம். நாங்கள் சாட்சியாளர்களிடம் ஆதாரங்களைப் பெற்றோம். எமக்கு கிடைத்த முறையான தகவல்களின் பிரகாரமே எமது மதிப்பீட்டை வெளியிட்டோம்.இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அந்த பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, விசேட நீதிமன்றம், காணாமல்போனோர் அலுவலகம் என்பன குறித்து இந்த பிரேரணை வலியுறுத்துகின்றது. நட்டஈடு தொடர்பாகவும் இந்த பிரேரணை வலியுறுத்துகின்றது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இந்தப் பிரேரணையை அமுல்படுத்துவதில் ஏற்பட்டதாக தெரியவில்லை. அரசாங்கம் எதனையும் செய்யவில்லை.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் மூலம் பல விடயங்களை அறிந்துகொள்ள முடியும். குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை மட்டுமன்றி முழுநாட்டுக்கும் இந்த விடயத்தை தெரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும். அதனால்தான் ஒரு நாட்டில் நிறுவன ரீதியான கட்டமைப்பில் இதனை செய்யவேண்டுமெனக் கூறப்படுகின்றது.இலங்கை அதிகமான காணாமல்போனோர்கள் தொடர்பான முறைப்பாடுகளை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றது. காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை நியமித்தமையானது ஒரு சிறந்த நடவடிக்கை என்றே சர்வதேச சமூகம் பார்க்கின்றது. அதன் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்றே சர்வதேச சமூகம் கருதுகின்றது. எனினும் வரைபில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் திருப்தியடையாத நிலைமையும் இருக்கின்றது. பலர் அது சரியான முறையில் இயங்காது என்று குறிப்பிடுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.16 மார்ச் 2018
இலங்கை குறித்து மாற்றுப்பொறி முறைக்கு ஆதரவு கோரப்படலாம் என நம்பப்படுகிறது!
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவாதங்கள் நடைபெறவுள்ளன. இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கா மாற்று பொறிமுறையை முன்னெடுக்குமாறு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.ஏற்கனவே ஜெனிவா வளாகத்தில் நடைபெற்றுவரும் இலங்கை தொடர்பான உபகுழுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்த செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பான விடயத்தில் தாம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்பதாக கூறியிருந்தார். அந்தவகையில் இன்று நடைபெறும் விவாதம் மற்றும் எதிர்வரும் 21 ஆம்திகதி நடைபெறும் விவாதங்களின் போது இந்த மாற்றுப் பொறிமுறை தொடர்பில் செயிட் அல் ஹுசைன் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.இலங்கையானது 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு நீடிக்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையை இலங்கை இதுவரை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்ற விடயத்தை செய்ட் அல் ஹுசைன் அதிருப்தியுடன் வெளிப்படுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.14 மார்ச் 2018
இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் 76 வயதில் மரணம்!
இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76ஆவது வயதில் மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.பிரிட்டனை சேர்ந்த இவர், ’கருந்துளை மற்றும் சார்பியல்’ சார்ந்த பணிகளுக்கு புகழ்பெற்றவர்.
ஏ ஃப்ரீஃப் ஹிஸ்டிரி ஆஃப் டைம்`( A Brief History of Time) என்ற புத்தகம் உட்பட பல புகழ்பெற்ற அறிவியல் புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
"எங்களது அன்புமிக்க தந்தை இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்" என அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.தன்னுடைய 22ஆம் வயதில், மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும் `மோட்டார் நியூரான் நோய்` என்னும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது மேலும் அந்த நோயால் அவர் சில நாட்களே உயிருடன் வாழ்வார் என்றும் கூறினர்.அந்த நோயால் அவர் சக்கர நாற்காலியை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது; மேலும் அவர் பேச முடியாத நிலைக்கும் போனார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருக்கும் அவரது இல்லத்தில் அவரின் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவரின் பிள்ளைகளாகிய லூசி, ராபட் மற்றும் டிம்.
"ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி மேலும் அவரின் பணிகள் ஆண்டாண்டு காலம் நிலைத்திருக்கும்" என தெரிவித்துள்ளனர்
அவரின் மன தைரியம் மற்றும் உறுதியை புகழ்ந்த அவரின் பிள்ளைகள், அவரின் புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும் உலகளவில் அனைவரையும் ஈர்த்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
நன்றி:பிபிசி தமிழ்.01 மார்ச் 2018
தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் அனந்தி, அருந்தவபாலன், ஐங்கரநேசன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருந்த வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அனந்தி சசிதரன், பொ.ஐங்கரநேசன் மற்றும் க.அருந்தவபாலன் ஆகியோர் புதிதாக வருகை தந்திருந்தனர். இவர்கள் மூவரும், தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இன்று இணைக்கப்பட்டுள்ளனர்.இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், சபை ஏற்றுக்கொண்டால் வருகைதந்த மூவரையும் மத்திய குழுவில் இணைத்துக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார். இதனையடுத்து குழு உறுப்பினர்களின் முழு சம்மதத்துடன் மூவரும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.ஈபிஆர்எல்எவ் சார்பில் தெரிவாகி அமைச்சராக பதவி வகித்த ஐங்கரநேசனுக்கு எதிராக தமிழரசுக் கட்சியினால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.இதேவேளை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகள் க.அருந்தவபாலன் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, கூட்டமைப்பின் முடிவுக்கு எதிராகச் செயற்பட்ட அனந்தி சசிதரனுக்கு எதிராக தமிழரசுக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.26 பிப்ரவரி 2018
கூட்டமைப்பின் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கவில்லை!
இலங்கை அரசாங்கம் ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்பதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக இல்லை என்பது தெளிவாகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புகூறல் தொடர்பாக முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டு 2 மாற்று வழிகளாக, போர்குற்றங்களை புரிந்தவர்கள் என அறியப்படுபவர்கள் உறுப்பு நாடுகளுக்கு பயணம் செய்தால் உறுப்பு நாடுகள் தமது நீதிமன்றங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அல்லது, விசேட குற்றவியல் தீர்பாயம் ஒன்றை அமைத்து அதற்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.இவ்வாறான நிலையில் கடந்த 24 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐ.நா தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளது. இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டு கால அவகாசத்தில் 1 ஆண்டு நிறைவில் இலங்கை அரசு ஒன்றும் செய்யவில்லை.இவ்வாறான நிலையில், தமிழ்தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருடைய கருத்தை வலுப்படுத்த வேண்டுமே தவிர ஐ.நா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கேட்கக் கூடாது. ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் குரலாக இல்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்களின் குரல் ஐ.நா வரை செல்ல வேண்டும். அதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கையெழுத்து போராட்டம் ஒன்றை ஒழுங்கமைத்துள்ளது. இந்த போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து கையொப்பங்களை இடவேண்டும்” என தெரிவித்துள்ளார்.24 பிப்ரவரி 2018
ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மரணம்!
18 பிப்ரவரி 2018
நாமே ஆட்சி அமைப்போம் என்கிறார் மாவை!
![]() |
| மகிந்தவுடன் மாவை,சம்பந்தன் |
16 பிப்ரவரி 2018
இலங்கை விவகாரத்தை பாதுகாப்பு சபைக்கு மாற்றக்கோரி கையெழுத்து போராட்டம்-கஜேந்திரகுமார்!
இலங்கைக்கு வழங்கப்பட்ட 2 வருட கால அவகாசத்தை உடனடியாக இடைநிறுத்தி, இவ்விடயத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு மாற்ற வேண்டும் என வலிறுயுத்தி, கையெழுத்துப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ளது. பேரவையில், இலங்கை அரசாங்கத்துக்கு 30.1 தீர்மானம் நிறைவேற்றுவதுக்கு 2 வருட கால அவசாகம் கடந்த ஆண்டு கூட்டத்தொடரின் போது வழங்கப்பட்டது. அக்கால அவகாசம் வழங்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு நீதிமன்றம் ஒன்றினை நிறுவுவதனைக் கூட ஏற்றுக்கொள்ளாத நிலையில்தான் இரண்டு வருட கால அவசாகம் வழங்கப்பட்டது. இன்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்தில் செயற்பட்டது போலவே பொறுப்புக்கூறலில் எதுவித முன்னேற்றகரமான நடவடிக்கைகயும் இன்றியே இலங்கை அரசாங்கம் இருக்கின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதன் செயற்பாடின்மையால் மக்கள் அதனை நிராகரித்திருக்கின்ற நிலையில், ஒரு விதமான முன்னேற்றமும் இல்லை என்ற யதார்த்த நிலைதான் காணப்படுகின்றது.
நாம் ஏற்கனவே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்படக் கூடாது என வலிறுயுத்தி வந்திருந்தோம். இலங்கை ஜனாதிபதியும் சரி பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் 30.1 அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவற்றை நிறைவேற்றப்போவதில்லை என தெளிவாகக் கூறிய நிலையிலேயே அவர்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களும், காணிகள் விடுவிக்கப்படவேண்டும் எனப் போராடுகின்ற மக்களும் கடந்த ஒருவருடமாக தெருக்களிலேயே இருக்கின்றனர். எனவேதான் நாங்கள் மேலதிக கால அவகாசத்தை இடைநிறுத்தி இலங்கை விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு மாற்றவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.
பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச நீதிமன்றில் இலங்கையை முன்னிறுத்த வேண்டும். அல்லாவிடின் குறைந்த பட்சம் இலங்கைக்கென சர்வதேச விசாரணைத் தீர்ப்பாயம் ஒன்றாவது உருவாக்கப்படவேண்டும் என வலியுறுத்தவுள்ளோம்.
இதன்பொருட்டு, மக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளோம். இதற்கான கையெழுத்துப் போராட்டத்தை விரைவில்; ஆரம்பிக்கவுள்ளோம். இப்போராட்டமானது தமிழ் மக்கள் பேரவை, பேரவையில் இணைத்தலைவராகவுள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. வீடு வீடாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று கையெழுத்துகள் பெறப்படும். அம் மக்களுக்கு யதார்த்த நிலைபற்றி தெளிவுபடுத்தப்படும்” என்றார்.
14 பிப்ரவரி 2018
வட்டக்கச்சியில் இளம் பெண் படுகொலை!
12 பிப்ரவரி 2018
தேர்தல் முடிவுகள் கூட்டமைப்புக்கு பின்னடைவே என சித்தார்த்தன் கருத்து!
09 பிப்ரவரி 2018
வாக்களிப்பு நிலையங்களில் கைபேசிக்கு தடை!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்காக 13, 374 வாக்களிப்பு நிலையங்கள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இதுதவிர நாளை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் கையடக்க தொலைபேசிப் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.குறித்த பகுதியில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல், காணொளி எடுத்தல், புகைப்படம் எடுத்தல், புகைத்தல், மதுபானம் அருந்துதல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
08 பிப்ரவரி 2018
மூன்று பிள்ளைகளின் தந்தையான போராளி சாவடைந்துள்ளார்!
விசுவமடுவில் வசித்து வந்த இவர் இன்று மரணமடைந்துள்ளார். நாட்டுக்காக போராட்டத்தில் இணைந்த சந்திரச்செல்வன் தனது உடல் அங்கங்களை இழந்து மிகுந்த வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். விசுவமடுவின் குமாரசாமிபுரம், புன்னை நீராவியில் வசித்து வந்த இவர் இன்று மரணமடைந்திருப்பது அப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
04 பிப்ரவரி 2018
தமிழ்த் தேசியப்பேரவையின் கலந்துரையாடலை தடுக்க குழப்பம் விளைவித்தது ஈபிடிபி!
யாழ்ப்பாணம் - றக்கா வீதி - மருதடிப் பிரதேசத்தில், நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில், நேற்று மாலை மக்கள் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது, தாம் ஈ.பி.டி.பியினர் எனக் கூறியவாறு, ஈ.பி.டி.பியின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்த சில இளைஞர்கள், இப்பகுதியில் வேறு கட்சிகள் கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்போவதில்லை எனக் கூறியவாறு, அங்கிருந்த ஒலி மற்றும் ஒளி சாதனங்களின் வயர்களை அறுத்துவிட்டு மேடைப் பகுதியில் அமர்ந்துள்ளனர்.பின்னர், மாலை 06.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் கலந்துரையாடலுக்கு மக்கள் திரளத் தொடங்கியபோது, அங்கிருந்து குறித்த தரப்பினர் நழுவிச் சென்றுள்ளனர். இதையடுத்து, யாழ். மாநகர வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர முதன்மை வேட்பாளருமான வி.மணிவண்ணன் உள்ளிட்டோர் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது திடீரென முச்சக்கரவண்டிகளில் வந்த சில குண்டர்கள், இது ஈ.பி.டி.பியின் இடம், இங்கு பிரசாரத்தில் ஈடுபட எவருக்கும் அனுமதி இல்லை எனக் கூச்சலிட்டவாறு கலந்துரையாடல் நடைபெற்ற இடத்தை நோக்கி கற்களைக் கொண்டுத் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.
03 பிப்ரவரி 2018
நீதிமன்றுக்குப் பயந்து 5ஆண்டு வனவாசம் இருந்தவர் எம்மை காவாலி என்கின்றார்!
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நீதிமன்றில் வழக்கை முன்னெடுப்பது தொடர்பில் பொலிஸாரே அறிவிக்க முடியும். அவர்கள் ஆதாரங்கள், சாட்சியங்களை வைத்து வழக்கைத் தொடர்ந்து நடத்துவதா, இல்லையா? என்று தெரிவிக்க பொலிஸாருக்கு முழுச் சுதந்திரம் உண்டு. பாதிக்கப்பட்ட நபரோ அல்லது முறைப்பாட்டாளரோ நீதிமன்றில் தமது விடயங்களைக் கதைப்பதற்கு அனுமதியில்லை. யாரும் விரும்பியபடி வந்து கருத்துத் தெரிவிக்க இது சந்தையில்லை. இது நீதிமன்றம். நீதிமன்றின் மாண்பு தெரியாதவர்களை நீதிமன்றை அவமதிப்பவர்களை பொறுப்புவாய்ந்த பதவியில் வைத்திருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
தங்களுடைய தனிப்பட்ட பாதிப்புக்காக மதவாதத்தையும் சாதியத்தையும் தூண்டிவிடுவதில் கல்விமான்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் செயற்படுவது வேதனையான விடயம். மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட விவகாரம் நீதிமன்றில் சரியாகவே அணுகப்பட்டது.
ஆதாரங்களும் இல்லாமல், குற்றச்செயலும் நடக்காமல் எங்களை மாத்திரம் துரத்தித் துரத்தி எங்களுடைய பரப்புரையை முடக்குகின்றார். எங்களைப் பற்றி கேவலமாகப் பேசிக் கொண்டு வருகிறார். எம்மைக் காவலி என்று பேசுகின்ற அவர் யார்? என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு நபர். நீதிமன்ற பிடியாணைக்கு மதிப்பளிக்காது தப்பி ஓடி 5 ஆண்டுகள் வனவாசம் செய்துவிட்டு வந்த நபர் மற்றவர்களைக் குறை கூறுகின்றார்.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் மீது விசாரணை நடத்த முடியாது எனக் கூறுபவருக்கு எதிராக எத்தனை வழக்குகள் போடப்படுகின்றன என, தேர்தல் முடிவடைந்த பின்னர் அறிவீர்கள்” எனத் தெரிவித்தார்.
31 ஜனவரி 2018
வடக்கு கிழக்கில் ஆயிரம் புத்த விகாரைகள்!ஐ.தே.கவின் தேர்தல் வாக்குறுதி!
![]() |
இன நல்லிணக்க நடவடிக்கை என்னும் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
29 ஜனவரி 2018
அபிவிருத்திக்கான நிதியெனில் சம்பந்தனும் சிறீதரனும் ஏன் அதை பெறவில்லை?சுரேஷ் கேள்வி!
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சுரேஸ் பிரேமசந்திரன் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“இரா.சம்பந்தன் இந்த நிதியை பெற்றுக்கொள்ளாவிட்டால் ஏன் இந்த நிதியை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.நாங்கள் இந்த நிதியை பெற்றுகொள்ளவில்லை என சிறீதரன் கூறுகின்றார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் உள்ளிட்டவர்கள் நிதியை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.வரவுசெலவு திட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தமையின் காரணமாகவே கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதே உண்மை. வாக்களிக்காதவர்களுக்கு இந்த நிதி கொடுக்கப்படவில்லை. வாக்களித்தவர்களுக்கு மட்டும்தான் இந்த நிதி கொடுக்கப்படுகின்றது என்றால் இதனை ஒரு அரசியல் லஞ்சமாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசு தமிழ் மக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கின்றது? என அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.
23 ஜனவரி 2018
பொப்பிசை புகழ் ஏ.ஈ.மனோகரன் மறைவு!
இவரது சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா... என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார். பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார். இவருக்கு இலங்கை மட்டுமன்றி தமிழகம் உள்ளிட்ட உலகில் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் இரசிகர்கள் உள்ளனர்.இவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத் திரைப்படங்களிலே நடித்தும் பாடியும் வந்தார். தமிழ், ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள மனோகர் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளை சென்னையில் நடைபெறும்.
21 ஜனவரி 2018
அரசின் பசப்பு வார்த்தையில் மயங்கிக் கிடக்கிறது கூட்டமைப்பு-வடக்கு முதல்வர்!
இலங்கை ஆட்சியாளர்களின் பசப்பு வார்த்தைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மயக்கிக் கிடப்பதாக வடக்கு மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டமாக முன்னெடுக்கப்பட வேண்டிய தமிழர்களின் அரசியல் இன்று சுயநலவாதத்துடன் வெறும் கட்சி அரசியலாகவே முன்னெடுக்கப்படுகின்றது. அனுபவசாலிகள் என்றும் வயதில் மூத்தவர்கள் என்றும் பெருமித்துக் கொள்கின்ற ஒரு சிலரின் சர்வாதிகாரப் போக்கினால் இன்று ஒற்றுமையாக இருந்த கட்சிகள் சிதறுண்டு போயுள்ளன. அதனால் அரசியல்வாதிகளுக்கு ஏதேனும் நன்மைகள் கிட்டலாம். ஆனால் பாதிக்கப்படுகின்றவர்கள் தமிழ் மக்களே. இந் நிலையில் இருந்து மீண்டெழுந்து தமிழர்கள் தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்வார்களா? அதற்காக அவர்கள் செய்ய வேண்டியது என்ன? என ஊடகவியலாளர்கள் நேற்று முதலமைச்சரிடம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில், வெறும் சுயநலக் காரணங்களுக்காக மட்டும் பெரும்பான்மை மக்கள் தலைவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயக்கம் அடைந்துள்ளார்கள் அவர்கள் என்று கூற என் மனம் விடவில்லை.உண்மையில் 'நம்பினார் கெடுவதில்லை' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் பெரும்பான்மைத் தலைவர்களை அவர்கள் நம்பி வருகின்றார்கள் என்று கூடக் கூறலாம். ஆனால் அவர்களின் செயலில் எனக்கிருக்கும் ஆதங்கம் வேறு. 'தருவதைத் தாருங்கள்' அல்லது 'தருவதைப் பெறுவோம்' என்று கூறுவது ஒன்று.
'தந்ததுடன் நாங்கள் திருப் தி அடைகின்றோம்' என்று கூறுவது வேறு. எங்கே எமது தலைமைத்துவங்கள் குறைந்ததையேற்று எமது வருங்காலத்தை குறைபாடுடையதாக ஆக்கிவிடுவார்களோ என்றே அஞ்சுகின்றேன். அரசாங்கம் தருவதைத் தருவது அவர்கள் இஷ்டம். ஆனால் எமது வாழ்வுரிமை, வரலாற்றுரிமை, வள உரிமை வேறு. அதை நாம் விட்டுக்கொடுக்க முடியாது. விட்டுக்கொடுத்தால் வட கிழக்கு மாகாணங்கள் பெரும்பான்மை இனத்தவரைப் பெரும்பான்மையாகப் நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு 25 வருடங்கள் தேவையில்லை.
இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரியாமல் நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்களே என்று ஆக்ரோஷமாக அடித்துப்பேச முற்பட்டோமானால் எமது அழிவு வெகு தூரத்தில் இல்லை. பெரும்பான்மை இனத்தவர்கள் சிறுபான்மையினரை இளைய சகோதரர்களாகப் பார்ப்பார்கள், பண்புடன் நடந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பிலேயே ஆங்கிலேயர்கள் எமது முதல் அரசியல் யாப்பை எமக்குத் தந்துதவிடச் சென்றார்கள்.
ஆனால் அப்போதைய பெரும்பான்மை இனத் தலைவர்களிடம் உள்ளொன்றும் புறமொன்றும் இருந்ததை ஆங்கிலேயர்கள் அறிந்திருக்கவில்லை. ஏன் எமது தமிழ்த் தலைவர்கள் கூட அப்போது புரிந்திருக்கவில்லை. புகழ்ச்சிக்கு மயங்கிவிட்டார்கள் அவர்கள் என்றே கொள்ளவேண்டியிருக்கின்றது.
உதாரணத்திற்கு விண்ணாதி விண்ணனான பேராசிரியர் சி.சுந்தரலிங்கம் கூட டி.எஸ்.சேனாநாயக்கவின் பசப்பு வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டுச் சிறைப்பட்டு விட்டார் என்றே கொள்ள வேண்டியுள்ளது. 'சிங்களவர் மட்டும்' அமைச்சரவையை ஏற்படுத்திக் கொடுத்தது அவரே.
அதனால்தான் இன்று நாம் நேரடியான எதிரிகளை வரவேற்கின்றோம். சேர்ந்திருந்து குழி தோண்டும் எமது நண்பர்கள் மீது விழிப்பாய் இருக்கின்றோம். சூடுபட்ட பூனை அடுப்பங்கரை ஏறாது! எமது நாட்டின் ஆங்கிலேய ஆளுநர் நாயகமாகத் திகழ்ந்த சோல்பரிப் பிரபு தமது நண்பரிடம் என்பவரிடம் தாங்கள் கொடுத்த அரசியல் யாப்பு தோல்வியுற்றது என்று கூறி 1958ஆம் ஆண்டில் நடந்தவற்றைப் பார்க்கும் போது இலங்கைக்கு ஒரு சமஷ்டி ரீதியான அரசியல் யாப்பைக் கொடுத்திருக்க வேண்டும் என்று எண்ண வேண்டியுள்ளது என்று கருத்துத் தெரிவித்தாராம்.
இவ்வாறான சிறுபான்மையோரை முடக்கும் அரசியலானது சிறுபான்மை மனோநிலை கொண்ட பெரும்பான்மை அரசியல்த் தலைவர்களால் அரங்கேற்றப்பட்டதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.ஏதோ காரணத்தினால் அப்போதைய சிங்களத் தலைவர்கள் தென்னிந்திய தமிழர்களையும் சேர்த்துக் கூட்டி சிங்களவர் உலகில் ஒரு சிறுபான்மையினமே என்றும் தம்மைப் பாதுகாத்தல் அவசியம் என்ற எண்ணத்திலும் தமிழ் மக்களை வதைத்து, வருத்தி, வாழவிடாது செய்யத் துணிந்தார்கள்.
நீங்கள் கூறும் தமிழ்த் தலைமைகள் ஒரு வேளை அதைப் புரிந்து கொள்ளாது நடக்கின்றார்களோ நான் அறியேன். இதை உணர்ந்தே எம் சகோதரர்கள் மக்கள் பாற்பட்ட, மக்கள் மயப்பட்ட ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள்.அதாவது மக்களின் தலைவர்கள் என்று கூறப்படுபவர்கள் எங்கே மக்கள் மனம் அறியாமல் எமது மாண்பை மலினப்படுத்தி விடுவார்களோ என்ற பயம் பலர் மனதிலும் இப்பொழுது எழுந்துள்ளது.
ஆனால் கட்சிகள் சிதறுண்டமையின் காரணம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டும். காரணங்களை இவைதான் என்று மிக எளிமையாகச் சுட்டிக்காட்ட முடியாது.அது எமக்குத் தேவையுமில்லை. ஏன் என்றால் நீங்கள் கூறுவது போல அனைத்துத் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்துப் போராட வேண்டிய நிலைமையே இன்று பரிணமித்துள்ளது.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் தருவதாகக் கூறியவற்றை பெரும்பான்மையினம் தருவதாக இல்லை. 2016ல் தரப்படுவன என்று எதிர்பார்த்த எமது கனவான் நெஞ்சங்கள் கருகியுள்ளன.இன்று கனன்று கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் நடக்க வேண்டியது என்ன என்று கேட்டு உங்கள் கேள்வியே பதிலைத் தந்துள்ளது. மக்கள் போராட்டமே அது. மக்கள் போராட்டத்திற்கு சில அடிப்படைகள் தேவையாகவுள்ளன.
எமது போராட்டம் நாம் மனமுவந்து போராடும் ஒன்றாக இருக்க வேண்டும். போராட்டத்துக்கான காரணம் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். வெறுப்பு, கோபம், ஆத்திரம் ஆகியவற்றைக் களைந்திருக்கத் தெரிய வேண்டும்.வெறும் பொருளாதார நன்மைகள் பெறப்பட்டால் நாம் போராட்டத்தை கைவிட்டுவிடுவோம் என்று இருக்கக்கூடாது. கேப்பாப்புலவு மக்களைப் பாருங்கள். தொடர்ந்து போராடி வருகின்றார்கள். தாம் அடையவேண்டிய வாழ்வுரிமை இலக்கை எட்ட அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருந்து வருவதே இதற்குக் காரணம்.
எம்முள் பலர் கூடி எமக்கென ஒரு வழி சமைத்தோம். எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அவற்றை உள்ளடக்கினோம். அவை கிடைக்கமாட்டா என்று தமிழ்த் தலைமைகள் தீர்மானித்தால் தமது தலைமைத்துவத்தை வேறு யாரிடமாவது கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதே உசிதம். நாம் கேட்பவை கிடையாது. ஆகவே தருவதை ஏற்போம் என்று கூறுவது தர்மம் ஆகாது. நாம் போராடுவது ஒரு தார்மீக உரிமைக்காக. நியாயமற்ற காரணங்களுக்காக அல்ல. எம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் எங்களிடம் திருப்பித் தருமாறு கேட்பது தவறானதொரு கோரிக்கையாகாது.
ஆகவே ஒன்றிணைந்து ஒருமித்து எமது தேவைகளை, உரிமைகளைக் கோர வேண்டியதே தற்போது எமக்கிருக்கும் தார்மீகக் கடமை. உலகில் வாழும் சகல தமிழ்ப்பேசும் மக்களும் எமக்கு இது சம்பந்தமாக உதவி அளிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.
18 ஜனவரி 2018
தேர்தல் நேரத்தில் சம்பந்தர் இப்படித்தான் பேசுவார்!
நாம் தற்போது நிதானமாக, நியாயமாக, நேர்மையாக ஒருமித்த நாட்டுக்குள் மதிப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம். அது நடைபெறா விட்டால் எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார்.திருகோணமலை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் ஒருமித்து நிற்கின்றார்களா என்பதைப் பன்னாட்டு ரீதியில் இந்த தேர்தலை பலர் உற்று நோக்குகின்றனர். தமிழ் மக்கள் மிக நீண்ட காலமாக போராடி வருகின்றார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் அடிப்படை பிரகடத்தின் படி ஒரு மக்களை அவர்களின் சம்மதம் இல்லாமல் ஆட்சி புரிய முடியாது. எமக்கு சுயாட்சி உரித்து உண்டு. அந்த உரிமை மதிக்கப்பட வேண்டும். நாம் தற்போது நிதானமாக, நியாயமாக, நேர்மையாக ஒருமித்த நாட்டுக்குள் நியாயமான மதிப்பைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றோம். அது நடைபெறா விட்டால் எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.நாங்கள் இன்று அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோம் என்றும், மக்களுடைய பல கருமங்களை தீவிரமாக கையாளவில்லை என்றும் எம்மீது குற்றம் சாட்ட சிலர் முயற்சிக்கிறார்கள். அது தவறு நாங்கள் அரசின் பங்காளிகள் அல்ல. நாங்கள் அரசின் அமைச்சர்களும் அல்ல. எமது பிரச்சினை தீரும் வரை அமைச்சர்களாக வரமாட்டோம். எமது மக்கள் தமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்களுடைய கருமங்களை அவர்களே கையாளக் கூடிய நிலை ஏற்படும் வரை நாம் அமைச்சுப் பதவிகளை ஏற்க மாட்டோம்.நாட்டில் ஒரு கொடுரமான ஆட்சி நடைபெற்றது.அதை எமது மக்களின் வாக்குப் பலத்தால் நாம் மாற்றினோம் அதன் நிமித்தம் எமது மக்களின் காணிப் பிரச்சினை காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பான விடயங்களுக்கு தீர்வு பெற்று வருகின்றோம் என்றார்.12 ஜனவரி 2018
வாக்கு சேகரிக்க புலி வேஷம் போட்ட பேரினவாதக் கட்சி!
நிகழ்வு ஆரம்பிப்பதற்கு முன்பதாக ஒலிபெருக்கியில் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலான “நித்திரையா தமிழா நீ நிமிர்ந்து பாரடா” என்ற எழுச்சிப்பாடல் ஒலிபரப்பப்பட்டது. இப்பாடலில் அரசாங்கத்தையும் அதன் படையினரையும் கடுமையாக விமர்சிக்கும் “ அப்பு ஆச்சியர் வாழ்ந்த பூமியிப் பூமிதானடா.... அப்புகாமியை ஆளயிங்கு விட்டதாரடா.... இனிமேல் தமிழன் பணியானென்று உரத்துக் கூறடா....” போன்ற வரிகள் அடக்கியிருக்கின்ற நிலையில் குறித்த பாடல் மைத்திரியின் கட்சியின் நிகழ்வில் ஒலிக்கவிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று வேட்டையாடிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி, விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிபரப்பி வாக்குக் கேட்கும் இழி நிலைக்கு வந்திருப்பதாக பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.
04 ஜனவரி 2018
மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவுகள்!
யாழ்ப்பாணம், வடமராட்சியில் ஜி. ஜி. பொன்னம்பலம், அழகுமணி மண இணையருக்கு 12.08.1940ல் மகனாகப் பிறந்தவர் குமார்.இவருக்கு ஒரு சகோதரியும் உண்டு.யாழ்ப்பாணம் அரச அதிபராக இருந்த முருகேசம்பிள்ளை என்பவரின் மகள் யோகலட்சுமியை மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்.தந்தையைப் போலவே இவரும் சட்டம் பயின்று பாரிஸ்டர் ஆகி வழக்கறிஞராகப் பணியாற்றினார்.1966 ஆம் ஆண்டு முதல் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்த மாமனிதர் குமார் பொன்னம்பலம், 1977 ஆம் ஆண்டில் தந்தை ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் இறந்த பின்னர் அக்கட்சியின் தலைவரானார்.தெற்கில் இருந்துகொண்டே தமிழ் மக்களின் உரிமைகளுக்காக துணிவோடு போராடி வந்தார். அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடினார். எவ்விடத்திலும், தமிழ் மக்களுக்குச் சார்பான கருத்துக்களைத் துணிவாக வெளியிட்டு வந்தார்.ஐ.நா.வில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களுக்கு முன்பே குரல் கொடுத்தவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் என்பது குறிப்பிடத்தக்கது.சிறந்த சட்டவாளரான இவரது துணிச்சலான செயற்பாடுகளால் சிங்கள இனவாதிகள் பெரும் சீற்றம் கொண்டனர்.சிங்கள இன வெறியின் உச்சக் கட்டமாக சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் சூழ்ச்சியால் வரவழைக்கப்பட்டு கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் 05.01.2000மாம் ஆண்டு மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவரை மாமனிதராக தமிழீழ விடுதலைப் புலிகள் கௌரவித்தனர்.மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களுடைய புதல்வர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தந்தை வழியில் அரசியல் ரீதியாக தொடர்ந்து போராடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
30 டிசம்பர் 2017
மண்டைதீவு கடலில் மீனவர் மரணம்!
மண்டைதீவு கடற்பரப்பில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார்.2ம் வட்டாரம் அல்லைப்பிட்டி பகுதியினை சேர்ந்த பொடிபாஸ் ஸ்ரான்லிலாஸ் வயது (64) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.நேற்று உயிரிழந்த குறித்த நபர் தனது மைத்துனருடன் மண்டைதீவு துறைப்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் மீன்பிடித்துள்ளார். அவருக்கு ஒவ்வாமை காரணமாக திடிரென மயக்கம் ஏற்பட்டுள்ளது.அவரை மைத்துனர் அழைத்துச் சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.இறப்பு விசாரணையினை யாழ்,போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
26 டிசம்பர் 2017
சொந்த மக்கள் முன் வரப்பயத்தால் சுமந்திரனுக்கு அதிக பாதுகாப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி என்பது புதிதான விடயமல்ல என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.சுமந்திரன் அரசில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய நபர், மக்கள் மத்தியில் சென்றால் அடி விழும் என்பதற்காக அவருக்கு பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கம், அதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டதோ, இல்லையோ, தமது சொந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை நல்லாட்சி அரசாங்கம் வைத்திருக்கின்றதென்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவருக்கும், பேச்சாளருக்கும் உள்ளது.தமது சொந்த மக்களை சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அடி விழும் என்ற நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுகின்றதெனில் எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்.இந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி, கடந்த அரசாங்கத்திலும் 3ஆவது அதி உயர் பாதுகாப்புக்கள் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், நீலம் திருச்செல்வத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது.
அரசாங்கத்திற்கு எதிராக போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் சென்று வாக்குகளைக் கேட்கின்றார்கள்.ஆனால், அந்த அரசாங்கம் தான் அவர்களை அதிகமாக பாதுகாப்பதற்கு விரும்புகின்றது. யார் அரசாங்கத்துடன், எந்தக் கோணங்களில் இருக்கின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக்கொள்வார்கள்.இந்த விடயங்களை காலம் தாழ்த்தி ஊடகங்கள் தெரிவிப்பது தனக்கு கவலையளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
24 டிசம்பர் 2017
தமிழக அரசியல் வரலாற்றில் தினகரன் புரிந்த சாதனை!
தமிழக அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முந்தி சென்று வெற்றி பெற்றுவிட்டார். ஆர்கே நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு பிறகு மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும் அமில சோதனையாகவே பார்க்கப்பட்டது.திமுக ஆட்சியில் நடந்த அவலங்களை அதிமுகவும், அதிமுகவில் நடப்பதை திமுக, தினகரன் அணியினரும் மாறி மாறி மக்கள் முன்பு வைத்தனர். குற்றச்சாட்டுகளை முன்வைத்தே தேர்தல் பிரசாரம் சூடு பிடித்தது. மேலும் நீட் தேர்வு, ஜெயலலிதா மரணம், குட்கா ஊழல், ஓகி புயல் உள்ளிட்டவை இந்த தேர்தலில் பிரதிபலித்தன.சுமார் 19 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையில் தினகரன் 89,013 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரை குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டார். மதுசூதனனை காட்டிலும் 40707 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் சாதனை பெற்றுவிட்டார்.தினகரன் வெற்றி பெற்றதன் மூலம் இடைத்தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் என்ற சாதனையை படைத்துவிட்டார். அதேபோல் தமிழகத்தில் இடைத்தேர்தலில் முதல் முறையாக ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் தோற்கடித்த சுயேச்சை வேட்பாளர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்து விட்டது.23 டிசம்பர் 2017
வேட்பாளர்களாக திருடர்களும் மோசடிக்காரர்களும் என்கிறது பவ்ரல் அமைப்பு!
இத்தகையவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையில் உள்ளதாகவும் தகவல்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதும் அவர்களின் பெயர்களை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இத்தகையவர்களுக்கு வாக்களிப்பதிலிருந்து தவிர்த்து கொள்ளுமாறு தாம் வாக்காளர்களைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கேட்டுள்ளார்.
16 டிசம்பர் 2017
தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஏழு பேர் விலகல்!
சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனு பட்டியல் தயாரிப்பின்போது இடம்பெற்ற முறைகேடுகளை மறைத்து தம்மிடம் கையொப்பம் பெறப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், குறித்த செயலுக்கு தமது வன்மையான கண்டனத்தினையும் பதிவு செய்துள்ளனர்.
சம்பவத்தன்று காலையில் தம்மிடம் முறையான வேட்பாளர் பட்டியலைக் காட்டி அடையாள அட்டைப் பிரதி மற்றும் கையொப்பம் பெறப்பட்டதன் பின்னர், மீண்டும் மதியவேளை வேறொரு வேட்பாளர் பட்டியலில் முறைகேடாக கையொப்பம் பெறப்பட்டதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் தமது சக வேட்பாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் மன உணர்வினைக் கருத்திற்கொண்டு இந்த தேர்தலில் நிற்பதிலிருந்து தாம் ஒருமித்தவகையில் விலகிக்கொள்வதாகவும், மிகுந்த மனவருத்தத்துடன் எடுக்கப்பட்ட இந்த முடிவிற்கு கீழ்த்தரமான சம்பவங்களே காரணமாக அமைந்துள்ளது என்று அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கடிதத்தினை தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு அனுப்பியுள்ளதோடு அதன் பிரதிகளை ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.
10 டிசம்பர் 2017
ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது தேர்தல் அல்ல.. யுத்தம்:சீமான்!
ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியும் பயனில்லை என்று சீமான் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். டிசம்பர் 21ஆம் நாள் நடைபெற உள்ள ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கா.கலைக்கோட்டுதயம் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.இன்று காலையில் காசிமேட்டில் சீமான் தனது கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்திற்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஒன்பது ஹெலிகாப்டர்களைக் கொண்டு தொலைந்துபோன மீனவர்களைத் தேடுகிறது கேரள அரசாங்கம். இங்கு தெருவுக்குத் தெரு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறார்கள் என்றார். விஷால் வேட்புமனு நிராகரிப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என்று கூறிய சீமான், ஆர்.கே.நகரில் தேர்தல் அதிகாரியை மாற்றியும் பயனில்லை என்றார். ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள இளைஞர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார்கள் என்றும் சீமான் தெரிவித்தார். இந்த இடைத்தேர்தல் தேர்தல் மட்டுமல்ல ஒரு போர் என்றும் சீமான் கூறினார்.25 நவம்பர் 2017
முதல்வரை சந்தித்தார் கஜேந்திரகுமார்!
வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையே நேற்றுக் காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. வடக்கு மாகாண முதலமைச்சரின் இல்லத்தில் நேற்றுக் காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் இடம்பெற்றது.அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உடனான சந்திப்பின் போது, அரசின் தீர்வு மக்களுக்கு போதாமை தொடர்பாக கருத்திற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வடக்கு முதல்வர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.“அரசியல் ரீதியாக சேர்ந்திருக்காவிட்டாலும், கொள்கை ரீதியாக சில விடயங்களில் ஆராய வேண்டிய நிலை மற்றும் தற்போதைய அரசின் தீர்வு மக்களுக்கு போதாது என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. ஆனால், அரசியல் ரீதியாக எதுவும் கலந்துரையாடவில்லை. இருவரும் மக்கள் அமைப்பின் தலைவர் என்ற வகையில் கொள்கை ரீதியான ஒருமைப்பாடு தொடர்பாக கலந்துரையாடினோம்” என கூறினார்.
01 நவம்பர் 2017
80 வயது மகனை பராமரிக்கும் 98 வயது தாய்!
பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியில் அமைந்துள்ள Moss View முதியோர் இல்லத்தில் தான் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இங்கு கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்தே வசித்து வருபவர் 80 வயதான டோம்.
இதுவரை திருமணம் செய்து கொள்ளாத டோமுக்கு தினமும் காலை வணக்கம் சொல்லவும், உணவு தயாரானதும் சென்று கூப்பிடவும், அவருக்கு யாரும் இல்லை என்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக Ada Keating என்ற டோமின் 98 வயது தாயார் தெரிவித்துள்ளார்.
எப்போதெல்லாம் தாம் வீட்டை விட்டு வெளியே செல்கின்றேனோ அப்போதெல்லாம் டோம் தமக்காக காத்திருந்ததாகவும், தாம் வீட்டுக்கு வந்த அந்த நொடி ஓடி வந்து தம்மை இறுக்கமாக அணைத்து அன்பை வெளிப்படுத்துவார் எனவும் Ada Keating நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
முதியோர் இல்லத்தில் அனைவரும் தமது தாயாரை அன்புடன் கவனிப்பதாக கூறும் டோம், சமயங்களில் தமது தாயார் தம்மை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதெல்லாம் அடாவின் பேரப்பிள்ளைகளும் தவறாமல் வந்து டோமையும் அடாவையும் சந்தித்துவிட்டு செல்கின்றனர்.
முதியோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் பிலிப் தெரிவிக்கையில், இந்த தள்ளாத வயதிலும் தாய் மகன் பாசத்தை கண்கூடாக பார்க்கும் போது உண்மையில் நெகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
23 அக்டோபர் 2017
வேட்டி அணிந்து விமானம் செலுத்திய ஈழத்தமிழன்!
அமெரிக்காவில் வானூர்தி செலுத்தவே வேட்டி கட்டித்தான் வருவேன். என் பாரம்பரிய உடையை அணிய நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்..? என சண்டைபோட்டு அனுமதி வாங்கி வேட்டி கட்டி விமானம் செலுத்திய ஒரே தமிழன் ரவிகரன் ரணேந்திரன்.இவர் அகரன் என்ற ஏவுகணையை உருவாக்கியவர். தமிழ் வார்த்தைகளை தவிர்த்து பிறமொழி சொற்களை பயன்படுத்த விரும்பாத அனுமதிக்காத ஒரே தமிழன்.
ஈழத்தமிழரான முல்லை மண்ணின் வாரிசு ரணேந்திரன் மட்டுமே. இவரை கர்வமாக சொல்லலாம் வேட்டி கட்டிய தமிழன் என்று.இவர் விண் பொறியியல் ஆய்வுத்துறை மாணவனாக அமெரிக்காவில் கல்விகற்று வருகின்றார்.தனது வெற்றி குறித்து அவர் தெரிவிக்கையில்,
'தொடர் செயற்திட்டங்களின் முதல் படிநிலையாக எனது ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் இரவு பகலாக கடினமாக உழைத்து ‘அகரன்’ஐ உருவாக்கியுள்ளேன்.இது ஒரு மாதிரி ஏவுகணை முயற்சியாகும்.இதைக்கொண்டு மிகவும் திறன்வாய்ந்த ஏவுகணை அளவுகளை எளிதில் உருவாக்கிடமுடியும்.
ஏவுகணையின் உந்துசக்தி தொடர்பில் நான் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நான் தேர்ந்தெடுத்த முறைமையால் இந்த ஏவுகணை மிகவும் வினைத்திறன் கொண்டதென ஏற்றுக்கொள்ளப்பட்டது' என்று ரவிகரன் ரணேந்திரன் கூறியுள்ளார்.
நன்றி:அதிர்வு
10 அக்டோபர் 2017
மாலதி 30ம் ஆண்டு நினைவு வணக்கம்!
26 செப்டம்பர் 2017
சிங்களவர்களின் மிரட்டலால் வைகோவிற்கு ஐ.நா.பாதுகாப்பு!
தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வைகோவுக்கு பாதுகாப்பு தர ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வைகோவை சிங்களர்கள் மிரட்டிய நிலையில் அவருக்கு ஐ.நா சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெனிவாவில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோ, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டினார்.மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் தமிழ் ஈழ தேசத்தை அமைக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கூட்டத்தில் உரையாற்றிவிட்டு வெளியே வந்த வைகோவை சிங்களப் பெண் ஒருவர் வழிமறித்து அவரை திட்டியுள்ளார். பின்னர் அவருடன் சேர்ந்து வந்த சில சிங்களர்கள் அவரை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வைகோவை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு தனக்கு உரிமை உள்ளது என்று வைகோ வாதாடினார். பிரச்சினை முற்றிய நிலையில், அங்கிருந்த பாதுகாவலர்கள் வைகோவை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்து விட்டுள்ளனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இலங்கையில் 90 ஆயிரம் விதவைகள், காணாமல் போன கணவன், தந்தையை தேடி கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கிறார்கள்.210 நாட்களாக பெண்கள் கிளிநொச்சியல் உண்ணாவிரதம்இருக்கிறார்கள். எங்கள் மக்கள் அழிக்கப்பட்டு எங்கள் இனமே அழிக்கப்படும் கொடுமை நடந்துகொண்டிருக்கிறது. 2015 தீர்மானத்தை ஏற்கவேண்டியதில்லை என்று ரணில் விக்ரமசிங்கேயும் மைத்ரிபாலா சிறிசேனாவும் சொல்கிறார்கள். எனவே, மனித உரிமை ஆணையம் இதனை ஐ.நா. பொதுச் செயலாளருக்கு அனுப்பி அவர் நேரடியாக இலங்கை வந்து பார்வையிட்டு நீதி வழங்க வேண்டும் என்று பேசினேன். இதற்கு சிங்களப் பெண் ஒருவர் திட்டினார். போர்க்குற்றத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ தளபதி சரத் வீரசேகரா தலைமையிலான சிங்களர்களே தகராறு செய்தனர். நீங்கள் தற்கொலை தீவிரவாதிகள், கொலைகாரர்கள் என்று சொன்னார்கள். அவர்களுக்கு நானும் பதில் பேசினேன். ஆனால், அவர்கள் பிரச்சினை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே வந்துள்ளனர். நான் பேசுவதை மட்டுமே வீடியோவில் பதிவு செய்தனர் என்று வைகோ சொன்னார். ஜெனிவாவில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. தமிழ் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து வைகோவிற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா சார்பில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.17 செப்டம்பர் 2017
கள்ளிச் செடி கூட எங்க ஊரில் வளரும்.. பாஜக வளரவே வளராது:சீமான்
தமிழகத்தில் கள்ளிச் செடி கூட வளரும்.. பாஜக வளரவே வளராது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:பாஜக தேசிய செயலாளர் ராஜா, நான் சாரணர் இயக்கத்தின் முன்னாள் மாணவர்; நான் பொறுப்புக்கு வந்தால் தேசப்பற்று, ஒழுக்கத்தை கற்பிப்பேன் என்றார்.ஆனால் உங்க ஒழுக்கமும் பற்றும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். 51 ஓட்டுகள்தான் வாங்கியிருக்கிறார். அவரை எதிர்த்து நின்ற மணி 236 ஓட்டுகள் வாங்கியிருக்கிறார். இதுதான் உங்க நிலைமை.தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டு வருகிறது என்கிறார்கள்... எங்க வளருது? கள்ளிச்செடி கூட எங்க ஊரில் வளரும். பாஜக வளரவே வளராது.இவ்வாறு சீமான் கூறினார்.
01 செப்டம்பர் 2017
நீட் தேர்வால் ஏமாற்றம் மாணவி அனிதா தற்கொலை!
28 ஆகஸ்ட் 2017
வித்தியா படுகொலைக்கு கடற்படைதான் காரணம்-சசீந்திரன்
கடற்படையினரே புங்குடுதீவு மாணவி வித்தியாவை வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொலை செய்துள்ளனர் என்று தீர்ப்பாயத்தில் தெரிவித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான ம.சசீந்திரன். இவர் இந்தக் கொலை வழக்கின் மற்றோரு சந்தேகநபரான சுவிஸ்குமாரின் தம்பியாவார்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தீர்ப்பாயம் முன்னிலையில் விசாரணை செய்யப்படுகின்றது. வழக்குத் தொடுநர் தரப்புச் சாட்சியப் பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று எதிரித் தரப்பினரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அதில் இன்று சாட்சியமளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
சாரதாம்பாள், தர்சினி கொல்லப்பட்ட சம்பவங்களில் கடற்படையினர் ஏற்கனவே இவ்வாறு செய்துள்ளனர். இந்தக் கொலையும் கடற்படையினரே செய்துள்ளனர். அதை மறைக்கவே எம்மைக் கைது செய்துள்ளனர். ஊர் முழுக்க அறிவித்து எமக்கு எதிரான எண்ணப்பாட்டை உருவாக்கிவிட்டனர். சமூக வலைத் தளங்களிலும், ஊடகங்களிலும் எமது படங்களை வெளியிட்டு அசிங்கப்படுத்தியுள்ளனர். அதனால் எங்கள் குடும்பம் நஞ்சருந்தி இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. நாம் இந்தக் குற்றத்தைச் செய்யாததாலேயே உயிரோடு இருக்கின்றோம் என்று அவர் தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
27 ஆகஸ்ட் 2017
தமிழர் தெரு விழாவில் கனடிய பிரதமர் உரை!
அவர் மேடையில் உரையாற்றும் போது கனடாவின் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினராக திரு ஹரி ஆனந்தசங்கரியும் உடனிருந்தார். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றிய பின்னர் வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கா பிரதமர் விடைபெற்றார்.
இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் இந்த தமிழர் தெருவிழா இடம்பெறும். நூற்றுக்கணக்கான தமிழ்ர் வர்த்தக நிலையங்களும் பிரதான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தஙகள் வர்த்தகச் சாவடிகளை இங்கு அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி:கனடா உதயன் செய்திப் பிரிவு
22 ஜூலை 2017
வானில் இருந்து விழுந்த திரவத்தால் மாணவிகள் பாதிப்பு!
வானத்தில் இருந்து விழுந்த மஞ்சள் நிற திரவம் உடலில் பட்டதால் யாழ்ப்பாண நகரில் உள்ள வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 18 பேர் மயக்கமடைந்தனர். இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் மாணவிகள் மைதானத்தில் நின்றிருந்த வேளையில் வானிலிருந்து விழுந்த ஒருவகை திரவம்பட்டே 18 மாணவிகள் பாதிக்கப்பட்டனர். மதிய இடைவேளையின்போது மாணவர்கள் மைதானத்தில் நின்றிருந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, மஞ்சள் நிற திரவமொன்று வானிலிருந்து வீழ்ந்ததாக பாடசாலை மாணவிகள் குறிப்பிட்டனர். குறித்த திரவம் மாணவிகளின் உடலில்பட்ட நிலையில் அவர்களது கைகள் சிவந்துள்ளன. அதனை தொடர்ந்து பாடசாலைக்கு வந்த சுகாதார வைத்திய அதிகாரி மாணவர்களை பார்வையிட்டதுடன், உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பணித்துள்ளார். இந்நிலையில், அவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
18 ஜூலை 2017
மரணத்தை ஏமாற்றிய மனிதன்!
![]() |
| காப்பாற்றிய காவல்துறையினருடன் |
மாரடைப்பினால் நாடித் துடிப்பு நின்று போயிருந்த ஒருவருக்கு 40 நிமிடங்கள் தொடர்ந்து முதலுதவி செய்து அவரை மரணத்தின் பிடியிலிருந்து மருத்துவமனையின் அவசரப்பிரிவு ஊழியர்கள் இருவர் மீட்டுள்ளனர் .
கடந்த ஜுன் 26-ஆம் தேதி தனது வீட்டில் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்த அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்த 36 வயதான ஜான் ஆக்பர்னுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.இது குறித்து அவசரப்பிரிவு எண்ணான 911-க்கு தெரிவிக்கப்பட்டதும் , மூன்று குழந்தைகளின் தந்தையான ஆக்பர்னின் வீட்டிற்கு உடனடியாக வந்த இரண்டு காவல்துறையினர் அவருக்கு சி.பி.ஆர் (Cardiopulmonary resuscitation) எனப்படும் இதயத்தை இயங்க வைக்கும் முதலுதவி முயற்சியில் இறங்கியுள்ளனர்.
அவருடைய நாடித்துடிப்பு மீண்டும் வரும் வரை சுமார் 42 நிமிடங்கள் அவர்கள் இருவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சி.பி.ஆர் முதலுதவி செய்தும், பாதிக்கப்பட்டவருக்கு 20 நிமிடங்கள் வரை மீண்டும் நாடித்துடிப்பு வரவில்லை எனில் அந்த நபருக்கு மீண்டும் சி.பிஆர் முதலுதவி செய்வது அவசியமில்லை. ஆனால் சார்லெட்-மெக்லென்பர்க் காவல்துறை அதிகாரிகளான லாரன்ஸ் கைலர் மற்றும் நிக்கோலினா பஜிக் ஆகியோர் 40 நிமிடங்களுக்கு மேலாக சி.பி.ஆர் முதலுதவி செய்து ஆக்பர்னின் உயிரை காப்பாற்றியுள்ளது போற்றுதலுக்குரியது.
நான் நலமாக இருக்கிறேன்`:
நாடித்துடிப்பு வந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட ஆக்பர்ன், விரைவில் குணமடைவதற்காக மருத்துவர்களால் ஒரு வாரத்திற்கு கோமா நிலையில் வைக்கப்பட்டார்.
மீண்டும் பணிக்கு செல்வதை எளிதாக்குவதற்காக, இன்னும் ஆறு மாதங்கள் அவர் வாகனங்களை இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மார்பில் உள்ள புண்களைத் தவிர, தான் முழுமையான குணமடைந்துவிட்டது போல உணர்வதாக அவர் கூறியுள்ளார்.
`என்னுடைய இரண்டாவது வாழ்க்கையை எப்படி சிறப்பாக உருவாக்கிக் கொள்வது என யோசித்து வருகிறேன். அவர்களுடைய பணியையும் தாண்டி என்னை காப்பாற்ற முயற்சி எடுத்து, என்னுடைய ஒவ்வொரு நாளையும் வாழ எனக்கு வாய்ப்பளித்துள்ள அவர்களுக்கு கடன்பட்டுள்ளேன்.` என ஆக்பர்ன் தெரிவித்துள்ளார்.
தங்க நிமிடங்கள்:
இதயத்துடிப்பு நின்ற ஒருவருக்கு உடனடியாக சி.பி.ஆர் முதலுதவி செய்யப்படவில்லை என்றால் அடுத்த ஒவ்வொரு நிமிடமும் அவர் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு 10 சதவீதம் குறைவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.` என அலபாமா பல்கலைகழகத்தின் மருத்துவ கல்வித்துறை இணைப் பேராசிரியரான மைக்கேல் குர்ஸ் தெரிவித்துள்ளார்.
`வடக்கு கரோலினாவில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், சி.பி.ஆர் முதலுதவி உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதை உணர்த்துகிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்டர்களுக்கு உடனடியாக அளிக்கப்படும் சி.பி.ஆர் சிகிச்சை, அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை மும்மடங்காக்குகிறது.பெரும்பாலான அமெரிக்க பணியாளர்கள் திடீரென ஏற்படும் மாரடைப்பை கையாளத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.` என அவர் கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் 3,50,000க்கும் அதிகமானோர் அமெரிக்காவில் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர்.அவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். மருத்துவமனைக்கு வெளியில் மாரடைப்பால் பாதிக்கப்படும் 46 சதவீதம் பேர், மருத்துவ உதவிகள் கிடைப்பதற்கு முன்னர் வேறு எந்த வித முதலுதவியும் கிடைக்காததால் உயிரிழக்கின்றனர்.
நன்றி:பிபிசி தமிழ்
10 ஜூலை 2017
மணற்காட்டில் மக்கள் கொந்தளிப்பு!இரு பொலிஸார் கைதாம்!
வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் துன்னாலையைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது இடுப்புக்கு மேற் பகுதியில் சூட்டுக்காயம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
“சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனவும் ஹன்ரர் ரக வாகனம் மணலுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. அதன்பின்னரே முழுமையாக தகவல்களைத் தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 10 நாள்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர். நேற்று மதியம் உணவு உண்டுவிட்டு யாழ்ப்பாணம் சென்று வந்து மோட்டார் சைக்கிளை வீட்டில் நிறுத்திய அவர் வல்லிபுரம் கோயிலுக்குச் சென்று வருகின்றேன் என்று கூறிச் சென்றார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.அவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதில்லை என்றும் அவர் மீண்டும் வெளிநாடு செல்லவிருந்தார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டனர். மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தினர். மந்திகை மருத்துவமனைப் பகுதியில் பதற்றமான நிலைமை ஏற்பட்டதை அடுத்து காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகர் மகாசிங்க, காங்கேசன்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட 50 பொலிஸாரும் அவர்களுடன் இரு வாகனங்களில் சிறப்பு அதிரடி படையினரும் மந்திகை ஆதார மருத்துவனைக்குச் சென்றனர்.
அதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் வீட்டின் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நெல்லியடியில் அமைந்துள்ள அவரது வீட்டின்மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டிலிருந்த பொருள்களையும் சேதப்படுத்தினர். சுமார் 20 பேர் கொண்ட குழுவினர் முகத்தை துணியால் மூடிக் கட்டியவாறு தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்பட்டது.
துன்னாலையில் அமைக்கப்பட்டிருந்த பொலிஸ் காவலரண் ஒன்றும் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவித்தன. அதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
03 ஜூலை 2017
மீண்டும் உதயமாகிறது நவம் அறிவுக்கூடம்!
வியட்னாமில் இருக்கின்ற அதிகமான பிச்சைக்காரர்கள் அந்தநாட்டின் விடுதலைக்காக போராடி விழுப்புண்அடைந்த போராளிகளே. அதேபோன்றதொரு நிலமை எமது இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற போராளிகளுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே நாம் நவம் அறிவுக்கூடத்தை நிறுவுகின்றோம்.இன்றையகால அவசியத்தின் பொருட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சி தளத்திலும் புலத்திலும் இன்றும் தலைவரையும் போரளிகளையும் நேசிக்கும் உறவுகளின் பலத்துடனும் ஆசியுடனும் தாயகத்தில் நவம்அறிவுகூடத்தை 15-07-2017உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றோம்.ஊடகப்பிரிவு
ஜனநாயகபோராளிகள்கட்சி
தலைமைச்செயலகம்
கைவேலி புதுக்குடியிருப்பு
25 ஜூன் 2017
பக்கபலமாக இருந்த மக்களுக்கு முதல்வர் நன்றி தெரிவிப்பு!
நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வெளியிட்டுள்ள
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனதினிய தமிழ் நெஞ்சங்களே!
அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன.
முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள்.
இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனமுற்றிருந்த வேளையிலே தான் ‘ நீங்கள் போகும் பாதை சரி! நாமும் உங்களுடன் தான்’ என்று நம்பிக்கை ஒளி ஊட்டியுள்ளீர்கள்.
மூன்றாவதாக மக்கள் பலம் என்பதென்ன என்ற கேள்விக்கு விடையை உலகறியச் செய்து விட்டீர்கள்.
நான்காவதாக நந்தவனத்து ஆண்டிகளுக்கு நயமான பாடங்கள் புகட்டி விட்டீர்கள். போட்டுடைத்தவர்களை அடையாளம் காண அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளீர்கள்.
ஐந்தாவதாக தமிழர் அரசியல் பிரச்சினைகளை ‘ இந்தா அந்தா’ தீர்க்க வருகின்றோம் என்றவர்களுக்கு அவர்களின் 13 ஆம் திருத்தச் சட்ட அடிப்படையிலான தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற செய்தியை ஓங்கி உரைத்துள்ளீர்கள்.
ஆறாவதாக ஊழலுக்கு எம் மக்கள் எதிரானவர்கள் என்ற செய்தியை உலகறியச் செய்து விட்டீர்கள்.
இவ்வாறு பல செய்திகளை நீங்கள் உங்கள் எழுச்சியால் எடுத்தியம்பி விட்டீர்கள். என்னையும் உங்களுள் ஒருவனாக ஏற்றுள்ளீர்கள். தமிழ் மக்களின் எதிர்காலம் எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் என்பதை ஊரறிய உலகறியச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!
முக்கியமாக இளைஞர்களின் எழுச்சி என்னைப் பரவசம் கொள்ளச் செய்தது. எம்மவர்களின் அன்பு நெஞ்சங்களின் அரவணைப்பு மனதுக்கு இதமாய் அமைந்தது. அவர்களின் கரிசனையும் ஊக்குவிப்பும் என் கடமைகளை எனக்குணர்த்தின.
நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று நம்புகின்றேன்.
உங்கள் யாவருக்கும் இறைவனின் அருள் கிட்டுவதாக எனப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனதினிய தமிழ் நெஞ்சங்களே!
அண்மையில் நடந்தவை கனவாகக் கடந்து விட்டாலும், அவற்றின் தாற்பரியங்கள் சில மேலோங்கி நிற்கின்றன.
முதலாவதாக என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை அளித்துள்ளீர்கள். ‘கொழும்பில் இருந்து வந்த இவருக்கு மக்கள் பலம் இல்லை’ என்றவர்கள் யாவரும் உங்கள் அன்பின் நிமித்தம் திகைத்து நிற்கின்றார்கள். உங்கள் உணர்வுகளின் வேகம் கண்டு மிரண்டுள்ளார்கள். என்னைக் காண வந்தவர்கள் சேர்க்கப்பட்டவர்கள் அல்ல. உணர்வு மேலீட்டால் சேர்ந்தவர்கள் என்பதை உலகறிச் செய்துள்ளீர்கள்.
இரண்டாவதாக 2013 ஆம் ஆண்டின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஒட்டி நான் நடந்து கொண்டு வரும் விதம், எடுத்து வந்த தீர்மானங்கள் ஆகியன சரியோ பிழையோ என்று சலனமுற்றிருந்த வேளையிலே தான் ‘ நீங்கள் போகும் பாதை சரி! நாமும் உங்களுடன் தான்’ என்று நம்பிக்கை ஒளி ஊட்டியுள்ளீர்கள்.
மூன்றாவதாக மக்கள் பலம் என்பதென்ன என்ற கேள்விக்கு விடையை உலகறியச் செய்து விட்டீர்கள்.
நான்காவதாக நந்தவனத்து ஆண்டிகளுக்கு நயமான பாடங்கள் புகட்டி விட்டீர்கள். போட்டுடைத்தவர்களை அடையாளம் காண அவர்களுக்குச் சந்தர்ப்பம் வழங்கியுள்ளீர்கள்.
ஐந்தாவதாக தமிழர் அரசியல் பிரச்சினைகளை ‘ இந்தா அந்தா’ தீர்க்க வருகின்றோம் என்றவர்களுக்கு அவர்களின் 13 ஆம் திருத்தச் சட்ட அடிப்படையிலான தீர்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற செய்தியை ஓங்கி உரைத்துள்ளீர்கள்.
ஆறாவதாக ஊழலுக்கு எம் மக்கள் எதிரானவர்கள் என்ற செய்தியை உலகறியச் செய்து விட்டீர்கள்.
இவ்வாறு பல செய்திகளை நீங்கள் உங்கள் எழுச்சியால் எடுத்தியம்பி விட்டீர்கள். என்னையும் உங்களுள் ஒருவனாக ஏற்றுள்ளீர்கள். தமிழ் மக்களின் எதிர்காலம் எங்கள் ஒவ்வொருவரினதும் கைகளில் என்பதை ஊரறிய உலகறியச் செய்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்!
முக்கியமாக இளைஞர்களின் எழுச்சி என்னைப் பரவசம் கொள்ளச் செய்தது. எம்மவர்களின் அன்பு நெஞ்சங்களின் அரவணைப்பு மனதுக்கு இதமாய் அமைந்தது. அவர்களின் கரிசனையும் ஊக்குவிப்பும் என் கடமைகளை எனக்குணர்த்தின.
நீதியான தமிழ்த் தேசியக் கொள்கைக்காக என்னுடன் நின்ற அனைவருக்கும் நான் செய்யக் கூடிய கைமாறு என்னவென்றால் தமிழ் மக்கள் நலன் கருதி அவர்களின் ஈடேற்றத்திற்காக உங்களுடன் கைகோர்த்து நிற்பதே என்று நம்புகின்றேன்.
உங்கள் யாவருக்கும் இறைவனின் அருள் கிட்டுவதாக எனப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
15 ஜூன் 2017
விக்னேஸ்வரன் மீது சூழ்ச்சி அரங்கேறுகிறது!
பன்னாட்டு சக்திகளின் சதியினால் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டம் முள்ளிவாய்க்காலில் குருதி தோய்ந்த காவியமாய் முடிவுரை எழுதப்பட்டு மக்கள் நிர்க்கதியாக நின்றவேளை தமிழ்மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுக்கவென தமிழ்மக்களின் கொள்கைகளுடன் ஒத்துப்போகின்ற ஒரு தனிப்பெருந் தலைமையாக தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரே வடக்கின் முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன்.அரசு மக்களின் காணிவிவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் இழுத்தடிப்பான ஓர் போக்கினைக் கடைப்பிடித்து வந்தபோது அரசிற்கு அழுத்தங்களைக் கொடுத்துவந்த ஒரேயொரு மக்கள் பிரதிநிதி விக்கினேஸ்வரன் அவர்களே!
மக்களின் கொள்கைகளை மனதில் நிறுத்தி அரசியல் பாதையில் மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக மீட்டெடுப்பதில் முழுமூச்சாகச் செயற்பட்ட இவரை, தென்பகுதி அடுத்த பிரபாகரன் என்றே வர்ணித்தது. சிறுபான்மையினரை அடிமைப்படுத்துவதில் பெருந்தடையாக இருந்த இவரை எவ்வழியில் வீழ்த்தலாம் என்பதில் எந்நேரமும் குறியாக இருந்த அரசு கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது நாட்டில் புலிகளை மீளவும் உருவாக்க முனைகின்றார் எனும் ஓர் குற்றச்சாட்டை இவர்மீது முன்வைத்து பௌத்த மதகுருக்களைத் தூண்டிவிட்டது. அதுவும் பயனற்றுப்போனது.
அடுத்தகட்டமாக விலைபோன சில தமிழ்த் தலைமைகளை வைத்து அரசு தனது நாடகத்தினை அரங்கேற்றி வலுவாக இருந்த தமிழரசுக்கட்சியிடையே ஓர் பிளவினை ஏற்படுத்தி அதனை வலுக்குன்றச் செய்துள்ளது.இதனால் மீண்டும் மக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
அரசிற்கு சிம்மசொப்பனமாக இருந்த வடக்கு மாகாணசபையில் இடம்பெற்ற ஊழலை எதிர்த்து அவ் ஊழல்ப் பேர்வழிகளை பதவிநீக்கம் செய்தமைக்காக இன்று ஓர் உன்னதமான, அரசியலில் அத்தனை தந்திரோபாயங்களையும் அறிந்து அதன்படி தமிழ்மக்களுக்கான அரசியல்த் தீர்வுக்கான ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்துவைத்த முதல்வரை அரசு விலைபோன சில தமிழ்த் தலைமைகளை வைத்து பதவியிலிருந்து நீக்கியுள்ளது. இங்குதான் மக்கள் விழிப்படையவேண்டிய கட்டாயமுள்ளது. இப்படியோர் தமிழின மீட்பரை அரசு திட்டமிட்டு சதியால் வீழ்த்தியதைக் கண்டும் மௌனம் காத்து மறுபடியும் அரசின் அடக்குமுறைக்குள் சிக்குண்டு நாதியற்று வாழ்வதா, இல்லை முதல்வரின் பின்னின்று நீதிக்காகக் குரல்கொடுத்து உரிமைகளை வென்றெடுத்து சுதந்திரமாக வாழ்வதா என்பதை முடிவுசெய்து புதிய வரலாற்றினை மக்கள் எழுத வேண்டுமென தமிழ்த்தாய் கண்விழிக்கின்றாள்.
தமிழ் இளைஞர்ளே!!!
முள்ளிவாய்க்காலில் தமிழனின் விடிவுக்காக பொராடியவர்களை துரோகம் எப்படி தோற்கடித்ததோ அதேபோல இன்று மற்றுமொரு துரோகம் நடந்து கொண்டிருக்க நாம் அனைவரும் வீடுகளில் படுத்துறங்கிங்கொண்டிருக்கிறோம். நாளை விடிந்ததும் எமக்காக பாடுபட்ட இன்னொரு மரமும் துரோகிகளால் வெட்டி சாய்க்கப்பட்டிருக்கும் வேதனையோடு கடந்து செல்லப்போகிறோமா? முடிவெடுங்கள் இளைஞர்கள் முடிவெடுத்தால் இயலாது என்று ஒண்றில்லை.
வடக்கில் உள்ள எல்லா மாகாணசபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்னால் ஒண்று கூடுங்கள் அவர்களை துரோகத்திற்கு துணைபோகவேிடாது தடுத்து நிறுத்துங்கள் உடனடியாக செயற்படுங்கள் இல்லையேல் நாளை ஒரு மாபெரும் துரோகத்தினை கண்டுகளித்த பார்வையாளராகிவிடுவீர்கள்..
-வடமாகாண இளைஞர் பேரவை-
05 ஜூன் 2017
இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி - மறுக்கிறது அரசாங்கம்!
இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வெளியான செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன தெரிவித்துள்ளன. அண்மைக்காலமாக இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும், பாகிஸ்தானிலிருந்து சதொச நிறுவனம் பிளாஸ்டிக் கலந்த பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய செய்தித் தளங்களில் பரவலான செய்தி பரப்பப்பட்டிருந்தது.எனினும் குறித்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை என்று மறுக்கும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன, உரிய பரிசோதனைகளின் பின்னரே பாகிஸ்தானிலிருந்து பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன. அத்துடன் இவ்வாறான செய்திகள் பரவத் தொடங்கியதன் பின்னர் மீண்டுமொரு முறை குறித்த அரிசியை பரிசோதனைக் கூடமொன்றில் சமைத்து பரிசோதனைக்குட்படுத்திய போதிலும் எதுவித பிளாஸ்டிக் கலவைகளும் அடங்கியிருக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.எனவே பொதுமக்களின் நன்மை கருதி குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்கப்படும் பாகிஸ்தான் பாஸ்மதி அரிசியை பொதுமக்கள் எதுவித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம் என்றும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன உறுதிப்படுத்தியுள்ளன.
02 ஜூன் 2017
கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு!
இவர் பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை போன்ற பல்வேறு கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1999-ம் ஆண்டு ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றிருந்தார். மேலும் இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி இலக்கியங்களை தமிழில் புனைந்திருக்கிறார்.
இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள். கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர். இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி' 1974ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்.
தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், 1999ல் 'ஆலாபனை' கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வென்றார். கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.
நன்றி:நக்கீரன்
28 மே 2017
சட்டவாளர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி காலமானார்
09 மே 2017
மொன்றியலில் வெள்ளம்,இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது!
கனடாவில், மொன்றியல், கியுபெக் பகுதிகளில் வெள்ளம் அதிகரித்ததால் இராணுவத்தினர் அழைக்கப்பட்டிருப்பதுடன் மொன்றியலில் அவசர கால நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மொன்றியலிற்கும் Île-Perrotற்கும் இடையில் Galipeault பாலம் மூடப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் மழை தொடர்ந்து பெய்ததால் அவசர கால நிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப்பணிகளை மேற்கொள்வதற்கு 1,200 துருப்புக்கள் அனுப்பபட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மொன்றியலில் 179 குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மொன்றியல் Sacré-Coeur Hospital in Ahuntsic வைத்தியசாலையிலிருந்து 86 மனநோயாளர்கள் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
கியுபெக்கில் பல இடங்களில் போக்குவரத்து பாதைகள் மூடப்பட்டன. பிரதான பாலங்கள் போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளும் இயங்கவில்லை. மொன்றியலில் 100ற்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கியு பெக்கிலும் 100ற்கும் மேற்பட்ட நகராட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கியுபெக் பூராகவும் 146 நகராட்சிகள் வெள்ள மண்டலங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன. இப்பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கியுபெக்கின் மேற்கு பகுதிகளான றிகாட் கற்ரினோ மற்றும் ஹட்சன் பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
04 மே 2017
ரொறன்றோவிற்கு காலநிலை எச்சரிக்கை!
தேசிய காலநிலை உதவி மையம் காலநிலை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ரொறொன்ரோ பெரும்பாகம் உட்பட்ட இடங்களில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பிக்கும் மழை ஞாயிற்றுகிழமை வரை தொடரும். வியாழக்கிழமை கிட்டத்தட்ட 10-15 மில்லி மீற்றர்கள் வரை மழை பெய்யலாம் என வானிலை கணிப்பு கூறுகின்றது. மழையின் பெரும்பகுதி வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படுகின்றது.ஒரு மாதத்தின் மதிப்புள்ள மழை மே மாதம் முதல் ரொறொன்ரோ பெரும்பாகத்திற்கு ஒரு வாரத்தில் பெய்யும். மழையுடன் குளிரான கால நிலையும் இணைந்து கொண்டு வெப்பநிலை அடுத்த நான்கு நாட்கள் 6-8 C ஆக காணப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




