
19 பிப்ரவரி 2017
காயம்பட்ட நிலையில் போராளியின் உடலம்!

15 பிப்ரவரி 2017
நடராஜனை கட்டிப்பிடித்து கதறி அழுத சசிகலா!

10 பிப்ரவரி 2017
பேரெழுச்சியுடன் நடைபெற்றது எழுக தமிழ் பேரணி!
.jpg)
மட்டக்களப்பு கல்லடி மணிக்கூடு கோபுரத்திற்கு அருகில் இருந்து வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் ஆயிரக்கணக்கான மக்களுடன் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த எழுச்சி பேரணியில் கலந்து கொண்டனர். இந்த எழுச்சிப் பேரணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
நாவற்குடா விவேகாந்தா விளையாட்டு மைதானத்தை பேரணி வந்தடைந்ததும் அங்கு தமிழ் வாழ்த்துப்பா இசைக்கப்பட்டு எழுக தமிழ் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இங்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார். மேலும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எஸ்.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் உரையாற்றினர்.
07 பிப்ரவரி 2017
பன்னீர்செல்வத்தின் புரட்சியால் அதிர்கிறது தமிழகம்!

சசிகலா அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டார். அம்மாவின் சாவில் சந்தேகம் உள்ளது என்று நாம் கூறியது இப்போது உறுதியாகி உள்ளது. இப்படியெல்லாம் உட்கிராமங்கள்தோறும் அதிமுக தொண்டர்கள் கொந்தளித்து வரும் நிலையில் அதிமுக செல்வாக்காக உள்ள மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளின் மனநிலை எப்படி உள்ளது என பலரிடம் பேசினோம்.
இதில் தற்போது எம்எல்ஏவாக உள்ள ஒருவரும், கடந்த மாநகராட்சி மேயராக இருந்த ஒருவரும் நம்மிடம் கொந்தளித்துப் பேசியது இதுதான்.
எம்எல்ஏவாக உள்ள நான் கோடிக்கணக்கில் செலவு செய்து வெற்றி பெற்றேன். என்னிடம் தற்போது உள்ள அதிமுக தலைமை நிர்வாகிகள் கூறியது, சின்னம்மா சசிகலா இருந்தால்தான் நீ செலவு செய்த காசைவிட இரண்டு மடங்கு எடுக்கலாம் என்று உறுதி கூறினார்கள். வேறுவழியில்லாமல்தான் நான் கடனாளியாக இருககக் கூடாது என்பதற்காகத்தான் சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டோம். ஆனால் எனது மனச்சாட்சி ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று அம்மாவின் மனசாட்சியாக பன்னீர்செல்வம் கொட்டி தீர்த்துவிட்டார். இதைத்தான் எதிர்ப்பார்த்தோம். இப்போது எங்களைப்போன்ற எம்எல்ஏக்களிடம் முன்பு உள்ள பிரச்சனை செலவை செய்ததை திரும்ப எடுப்பதல்ல. மனசாட்சி இல்லாமல் வாழ்வது முடியாது. கட்சியின் பொதுச்செயலாளராக கட்சிக்குள் உள்ள நிர்வாகிகள் வந்திருந்தால் இந்த கேவலம் நிகழ்ந்திருக்காது. ஆனால் அதற்கு நேர் எதிராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது யாருக்குமே பிடிக்கவில்லை.
இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் வெளிப்பாட்டை அதிமுகவின் 130 எம்எல்ஏக்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆதரிப்பார்கள். இதனை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் எங்கள் கட்சியின் தொண்டர்கள் ஒன்று செய்ய வேண்டும். அம்மாவின் இறப்புக்கு காரணமான சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து விரட்ட வேண்டும். அதற்கு தொண்டர்கள் தயாராகி சென்னை நோக்கி வர வேண்டும். இங்கு சசிகலா எந்த அரசு பொறுப்பிலும் இல்லை. அப்படிப்பட்ட ஒருவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது சட்ட விரோதமானது. தொண்டர்கள் நினைத்தால் சசிகலாவை போயஸ் கார்டனில்இருந்துவிரட்டிவிட்டு அம்மாவின் இல்லத்தை அதிமுக கட்சியின் கோயிலாக மாற்றுவோம். பன்னீர்செல்வத்துக்கு, அவருடைய குரலுக்கு உறுதுணையாக தொண்டர்கள் திரண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
நன்றி:நக்கீரன்-
ஜீவா தங்கவேல்
02 பிப்ரவரி 2017
என்ன செய்கிறார் கருணாநிதி!

மருத்துவமனையில் இருந்து திரும்பிய பின், அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அவர் பெயரில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. ஜல்லிக்கட்டு தொடர்பாக, அத்தனை போராட்டங்கள் நடந்த போதும் அவர் எந்த கருத்தும் கூறவில்லை.
கை, கால், முதுகு, இடுப்பு, கழுத்து ஆகியவற்றில் என அவரது உடலில் ஏற்பட்ட கொப்பளங்கள், வயோதிகம் ஆகியவற்றில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார் கருணாநிதி. கொப்பளங்களை முழுமையாக போக்க அளிக்கும் மருந்துகளை ஏற்றுக்கொள்ளும் வலிமை அவரின் உடலுக்கு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து விட்டதாக தெரிகிறது.தற்போது அவருக்கு, குழாய் வழியாக திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. அதனால் அவரால் பேச முடியாமலும் போனது. அரிதாக சில நேரம் மட்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை அவர் அடையாளம் கண்டு கொள்கிறாராம். சில சமயம் முகத்தில் புன்னகை மட்டும் பதிலாக வருகிறதாம்.
அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக கட்சி பிரமுகர்கள் உட்பட அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், செயற்கை சுவாம் அளிக்க பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் அகற்றபப்ட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்கு முன்பு, மாடியில் உள்ள அவரது அறையிலிருந்து கீழ் தளத்திற்கு அவரை அழைத்து வந்தனர் எனவும், அப்போது அவர் குடும்பத்தினரை பார்த்து புன்னகைத்தார் எனவும் திமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
மேலும், அவர் உடல் நிலையில் எந்த குறையும் இல்லை. பேச்சு திறனும், ஞாபக சக்தியும் வந்து விட்டால், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என அவர்கள் கூறி வருகிறார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)