26 நவம்பர் 2019

பின்வாங்கா போர்த்திறன்,அறம் வழுவா ஆட்சித்திறன்,மதுவை மக்களிடம் நெருங்க விடா மாவீரன்!ராமதாஸ் வாழ்த்து!

Bild"மதுவை நெருங்க விடா மாவீரன்.. மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்" என்று பிரபாகரனின் பிறந்த நாளுக்கு டாக்டர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 65வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அதன்படி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதற்காக அடுத்தடுத்து 2 ட்வீட்டுகளையும் பதிவிட்டுள்ளார்."பின்வாங்கா போர்த்திறன், அறம் வழுவா ஆட்சி திறன், மதுவை மக்களிடம் நெருங்க விடா மாவீரன் பிரபாகரனுக்கு 65ஆவது பிறந்த நாள் வாழ்த்துகள். படைகளால் மட்டுமின்றி, பழக்கவழக்கங்களாலும் சீரழிந்து கிடக்கும் தமிழீழத்தை சீரமைத்து, சிறப்பான ஆட்சி வழங்குவதே புலிகளின் தலைவனுக்கு செலுத்தும் மரியாதை!" என்று தெரிவித்துள்ளார்.அடுத்த ட்வீட்டில், "மாவீரர்கள் மண்ணில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மொழி, கலாச்சார, பண்பாட்டு சீரழிவுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை; தாங்கிக் கொள்ள முடியாதவை. இந்த சீரழிவுகளை சரி செய்து தமிழர்களின் உன்னத, அறம் சார்ந்த வாழ்க்கை முறையை மீட்டெடுக்கவாவது அந்த மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.தமிழக மொழி, நலன், வளம், போன்றவற்றில் எந்நேரமும் அக்கறை செலுத்தி வருபவர் டாக்டர் ராமதாஸ்.. குறிப்பாக மதுவிலக்கு, மற்றும் கலாச்சார சீரழிவு எதுவானாலும் அதற்கு முதலாவதாக வந்து குரல் கொடுப்பதும் டாக்டர்தான். "பின்வாங்கா போர்த்திறன், அறம் வழுவா ஆட்சி திறன், மதுவை மக்களிடம் நெருங்க விடா மாவீரன்" என்று பிரபாகரனுக்காக தெரிவித்த வாழ்த்திலும் டாக்டர் ராமதாஸின் ஆழ்மனசு எண்ணம் பிரதிபலிக்கிறது. அந்த மண்ணில் அதிசயம் நிகழ வேண்டும் என்ற ராமதாஸின் இந்த எதிர்பார்ப்பு நிறைந்த ட்வீட்டினை பலரும் வரவேற்று கமெண்ட்கள் போட்டு வருகின்றனர்.

22 நவம்பர் 2019

தமிழர் தேசத்தை பாதுகாக்க தமிழ்த் தேசியப் பேரியக்கம்!

Bildergebnis für uruthira kumar"சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்களிடம் இருந்து கருணை எதனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் புதிய அரச தலைவரும், அமைந்துள்ள மகிந்த ஆட்சியும் தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் வேலைகளை வேகப்படுத்துவார்கள். சிறிலங்கா என்பது ஒரே மக்களைக் கொண்ட நாடு என்ற கொள்கையின் கீழ் சிங்கள மேலாண்மைக்குள் தமிழ் முஸ்லீம் மக்களைச் சிறைப்பிடிக்க முனைவார்கள்.
தமிழ் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களால் நிறைப்பார்கள். அனைத்துலக அரசுகளுடன் நலன் சாரந்த உறவுகளைப் பேணி அவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு தமது திட்டங்களை முன்னெடுப்பார்கள். இத்தகையதொரு சூழலில் தமிழர் தேசத்தை பாதுகாக்க தமிழ்த் தேசிய பேரியக்கம் ஒன்றை கட்டியெழுப்ப நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் ஒன்றினை விடுத்துள்ளது.
இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய இராஜபக்ச சிங்கள மக்களின் வாக்குகளால் பெருவெற்றியடைந்திருப்பது சிங்கள பௌத்த தேசியவாதம் சிங்களதேசத்தில் ஆழமாக வேருன்றியிருப்பதனை நன்கு வெளிப்படுத்துகிறது. சிங்கள மக்களது வாக்குகளால் மட்டும் என்னால் வெற்றிகொள்ளமுடியும், தமிழ் முஸ்லீம் மக்களது வாக்குகள் எனக்குத் தேவையுமில்லை எனத் திடமாகக் கூறி அதன் வாறே கோத்தாபய இராஜபக்ச வெற்றி பெற்றிருப்பதும்கூட சிறிலங்காவை முன்னிருந்ததைவிடத் தீவிரமான இனவாதத்தின் ஒரு தோற்றமாகவே வெளிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த இனவாதநிறுவனமாக இவ்வாறு இறுகிப்போயிருக்கும் நிலையில், புதிய அரச அதிபரின் செயற்பாடுகள் சிறிலங்கா அரசை மேலும் சிங்கள பௌத்தமயப்படுத்தும் வகையில்தான் அமையும். எல்லாளனைத் தோற்கடித்த பின்னர் துட்டகைமுனுவால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ருவான்வெலிசாய விகாரை வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்தமையின் ஊடாக கோத்தாபய தன்னைத் தமிழர்களை வெற்றி கொண்ட நவீன துட்டகைமுனுவாக சிங்கள மக்கள் மனதில் பதிய வைக்க முயல்கிறார் என்றுதான் நாம் பார்க்கிறோம்.
ஒரு இனவழிப்புக் குற்றவாளியை அந்த இனவழிப்புக்குத் துணைபோன மக்கள் கூட்டம் ஆதரித்து நி;ற்பதனால் மட்டும் அவர் புனிதராகி விட முடியாது. உலகத் தமிழ் மக்களின் ஆன்மபலத்துடன், உலகில் நீதிக்காகப் போராடும் தோழமைகளுடன் இணைந்து, தமிழின அழிப்புக் குற்றவாளி கோத்தபாய இராஜபக்சவினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திலும் (ICC), சிறிலங்கா நாட்டினை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக நீதிமன்றிலும் (International Court of Justice) நிறுத்தும் போராட்டத்தை நாம் வீச்சாக முன்னெடுப்போம்.
சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்துக்கு முன்னால், அரசு அதிபருக்கான விலக்கு( head of state immunity) என்ற திரைக்கு பின்னால் கோத்தபயவும், சிறிலங்கா நாடு என்ற வகையில் உலக நீதிமன்றத்தின் முன்னால் இறைமைக்கான விலக்கு (sovereign immunity) என்ற திரைக்கு பின்னாலும் ஒளித்து கொள்ள முடியது சுட்டிக்காட்டுகின்றோம்.
எமது இந்தப் பிரகடனம் எமது தார்மீகக்கோபத்தில் இருந்து மட்டுமல்ல, ஒரு இனஅழிப்புக் குற்றவாளி அரச தலைவராக இருக்கும் நிலையினை உலக மனச்சாட்சிக்குச் சுட்டிக்காட்டும் நோக்கத்தினையும் தன்னகத்தே கொண்டது. இவ்வேளையில் நடைமுறை யதார்த்தத்துக்கு இசைவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் சிலர் எண்ணலாம்.
இவ்விடத்தில் நாம் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். தமிழ் மக்கள் தமது தேசத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ்த் தேசியப் பேரியக்கமொன்றைக் கட்டியெழுப்பி அர்ப்பணிப்பு மிக்க ஜனநாயகவழிப் போராட்டங்களுக்குத் தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. புதிய ஆட்சியாளர்களிடம் இருந்து கருணை எதனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் புதிய அரசதலைவரும், தொடர்ந்து அமைந்துள்ள மகிந்த ஆட்சியும் தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் வேலைகளை வேகப்படுத்துவார்கள். சிறிலங்கா என்பது ஒரே மக்களைக் கொண்ட நாடு என்ற கொள்கையின் கீழ் சிங்கள மேலாண்மைக்குள் தமிழ் முஸ்லீம் மக்களைச் சிறைப்பிடிக்க முனைவார்கள். தமிழ் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களால் நிறைப்பார்கள். அனைத்துலக அரசுகளுடன் நலன் சாரந்த உறவுகளைப் பேணி அவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு தமது திட்டங்களை முன்னெடுப்பார்கள்.
இத்தகையதொரு சூழலில் தமிழ் மக்களுக்கு இரு தெரிவுகள் மட்டுமே இருக்கும்.
ஒன்று, யதார்த்தம் என்று கூறி புதிய ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேண முயன்று சிங்கள மேலாண்மைக்குள் அமிழ்ந்து போவது.
அடுத்தது, நமது சக்தி அனைத்தையும் திரட்டி, நம்மைத் தேசமாக ஒருங்கிணைத்து நமது இருப்புக்கும் உரிமைக்காகவும் போராடுவது.
முதலாவது தெரிவு மிகவும் அவமானகரமானது. இது இனஅழிப்புக்கு வழிகோலும். இதனை நாம் தெரிவு செய்ய முடியாது. தமிழ் மக்கள் இரண்டாவது தெரிவினை மேற்கொண்டேயாக வேண்டும். இதனைத் தமிழ் மக்களின் தேசிய அரசியற் தலைவர்களாகத் தம்மை அடையாளப்படுத்துவோர் தாமே முன்னின்று எடுத்துச்செல்ல வேண்டும். அரபு வசந்தம், பிரான்சின் மஞ்சள் அங்கிப் போராட்டம், மற்றும் தற்போது நடைபெறுகின்ற கொங் கொங் மக்கள் போராட்டம், பொலிவியா மக்கள் போராட்டம், ஈரான் மக்கள் போராட்டம் ஆகியன மக்கள் போராட்டங்களின்; வலிமையினை எடுத்தியம்புகின்றன.
எமது பார்வையில் தமிழ் மக்கள் போராடினால்தான் வாழ்வு என்ற கட்டத்தை அடைந்துள்ளார்கள் என்றே கருதுகிறோம். இது சவால் நிறைந்த காலகட்டமாகவே இருக்கும். இதனைத் தமிழ் மக்கள் எதிர்கொள்வது நெருப்பாற்றை நீந்திக் கடப்பது போன்றதாகவே அமையும். இருந்த போதும் இதுதான் யதார்த்தமாக அமையப் போகிறது. இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ளத் தாயகத் தமிழ் மக்கள், புலர்பெயர் தமிழ் மக்கள், தமிழ்நாடு மக்கள், உலகத் தமிழ் மக்கள் என அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாக இருக்கும்.
சிறிலங்காவின் தமிழின அழிப்பாளிகளை அனைத்துலக அரங்கில் நீதியின் முன் நிறுத்தும் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு கோத்தாபய இராஜபக்ச அரசதலைவராகத் தேர்வு செய்யப்பட்டமை தார்மீகத் தளத்தில் பலம் சேர்க்கும். நீதியின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவை எமக்குப் பெற்றுத் தரும். தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தை நடத்தும் வகையில் தமிழ் தேசம் மாவீரர்கள் நினைவுடன் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும். என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

02 அக்டோபர் 2019

லலிதா யுவல்லரியில் 50 கோடி பெறுமதியான நகைகள் கொள்ளை!

விசாரணை சுவரில் உள்ள அந்த ஓட்டையை பார்த்தால் அவ்வளவு பெரிசாக இருக்கிறது. ஒரு ஆள் உள்ளே புகுந்து வெளியே வரும் அளவுக்கு கனகச்சிதமாக ஓட்டைய போட்டு.. லலிதா ஜுவல்லரியில் 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை ஆட்டைய போட்டுள்ளனர் கொள்ளையர்கள்! திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே லலிதா ஜூவல்லரி நகைக் கடை உள்ளது. 5 வருஷமாக இங்குதான் செயல்பட்டு வருகிறது. நேத்து ராத்திரி வழக்கம்போல, கடை ஊழியர்கள் வேலையை முடித்து வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். எப்பவுமே 6 வாட்ச்மேன்கள் இந்த கடைக்கு வெளியே நைட் டியூட்டியில் இருப்பார்களாம். அப்படிதான், கடைக்கு வெளியே இரவெல்லாம் காவல் இருந்துள்ளனர்.ஆனால் இன்று காலை கடையை திறந்து பார்த்தால், நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது 3 மாடி கட்டிடம்.. இங்குள்ள முதல் தளத்தில்தான் கொள்ளை நடந்துள்ளது. ஷோ-கேஸில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நகைகள் எல்லாமே அபேஸ் ஆகி இருந்தது. இதையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.விஷயத்தை கேள்விப்பட்டு, திருச்சி மாநகர கமிஷனர் அமல்ராஜே நேரடியாக கடைக்கு வந்துவிட்டார். பிறகு போலீஸ் அதிகாரிகள் கடையை ஆய்வு செய்தனர். அப்போது, கடையின் மேற்கு பகுதியில் உள்ள சுவரில் ஒரு பெரிய துளை இருப்பதை பார்த்தனர். ஒரு ஆள் உள்ளே நுழைந்து வெளியே ஈஸியாக வந்துவிடும் அளவுக்கு அந்த ஓட்டை இருந்தது. அந்த துளை வழியாகத்தான் கொள்ளையர்கள் உள்ளே வந்திருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.ஆனால் கொள்ளையர்கள் யார் என உறுதியாக தெரியவில்லை. அநேகமாக வடமாநில கொள்ளைக் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எப்படியோ கொள்ளை போன வைரம், தங்க நகைகளின் மதிப்பு 50 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து விசாரணை நடந்து வருகிறது.நைட் டியூட்டி வாட்ச்மேன்களையும் போலீசார் விசாரித்து வருவதுடன், கடைக்கு உள்ளே, கடைக்கு வெளியே உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து வருகிறார்கள். இதில் 2 பேர் கடைக்கு உள்ளே வருவது தெரிகிறது. ஆனால் அவர்கள் முகமூடி அணிந்துள்ளனர். இன்னொரு பக்கம் மோப்பநாய், வரவழைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. 100 கிலோ நகைகளுடன் மாயமான அந்த கொள்ளையர்களை 7 தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.ஆனால் கொள்ளையர்கள் உஷாராக, கொள்ளையடித்து சென்ற வழி வரைக்கும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். கிட்டத்தட்ட ஒன்றே முக்கால்மணி நேரம் வரை கடைக்குள் பொறுமையாக இருந்து நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். திருச்சி நகரின் மையப்பகுதியில், அதுவும் கடையை சுற்றி இவ்வளவு கேமராக்கள் இருப்பது தெரிந்தும்.. துணிகரமாக இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது சாமான்ய மக்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

08 செப்டம்பர் 2019

மூவரின் தூக்கு கயிற்றை அறுத்த வீரவாள் ராம் ஜெத்மலானி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குக் கயிற்றை அறுத்த வீரவாள் ராம் ஜெத்மலானியின் வாதம் தான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். ராம் ஜெத்மலானிக்கு வயது 95. அவரின் மரணம் அரசியல் தலைவர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்காக கடுமையான சட்ட போராட்டம் நடத்தியவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி என்பது குறிப்பிடத்தக்கது. அழைத்து வந்த வைகோ.. நீதிமன்றத்தை அசர வைத்த வாதம்.. 7 தமிழர்களின் உயிரை காத்த ராம் ஜெத்மலானி!இந்த வழக்கில் இவர் செய்த வாதங்கள் மிக முக்கியமானது ஆகும். 7 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு ராம் ஜெத்மலானி வைத்த வாதங்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மூலம் இந்த வழக்கிற்காக அழைத்து வரப்பட்டவர்தான் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி. இவர்தான் நண்பர் நான் வைகோவின் நீண்ட கால நண்பன். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேருக்காக தொடர்ந்து போராடுவேன். 7 பேரும் விடுதலை அடைய வேண்டும் என்பதுதான் வைகோவின் ஆசை. அவரின் ஆசையை கண்டிப்பாக நான் சட்ட போராட்டம் மூலம் நிறைவேற்றுவேன், என்று குறிப்பிட்டவர்தான் ராம் ஜெத்மலானி.இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மறைவுக்கு வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குக் கயிறை அறுத்த வீரவாள் ராம் ஜெத்மலானியின் வாதம் தான். ராம் ஜெத்மலானி என்ற மாமனிதரின் நினைவுகள் என் இதயத்தில் என்றும் சுழன்றுகொண்டே இருக்கும்.அவர் நீதிக்காகக் கடைசிவரை போராடினார். அவரின் மறைவு நீதித்துறை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று வைகோ குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று ராம் ஜெத்மலானி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்காக வைகோ இன்று டெல்லி செல்ல இருக்கிறார்.

12 ஆகஸ்ட் 2019

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஜனநாயகவிரோதம்-விஜய் சேதுபதி!

என்ன சொன்னார் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமானது என்று நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார். பெரியாரின் பழமொழியை குறிப்பிட்டு விஜய் சேதுபதி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனை தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. இது தொடர்பாக நேற்று ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதே சமயம் மத்திய அரசுக்கு எதிராக நடிகர் விஜய் சேதுபதி இதில் கருத்து தெரிவித்துள்ளார். எங்கு ஆஸ்திரேலியாவிற்கு விருது விழாவிற்கு சென்று இருந்த விஜய் சேதுபதி சர்வதேச தமிழ் வானொலி ஊடகம் ஒன்றுக்கு காஷ்மீர் பிரச்சனை குறித்து பேட்டி அளித்தார். காஷ்மீர் பிரச்சனையில் மத்திய அரசு செய்த நடவடிக்கை தவறு என்று அவர் வெளிப்படையாக குரல் கொடுத்து பேசினார். இது உலகம் முழுக்க வைரலாகி உள்ளது. என்ன சொன்னார் அவர் தனது பேட்டியில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார். அப்போதே அவர் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்லிவிட்டார். வீட்டு அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது. தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம்; ஆளுமை செலுத்தக் கூடாது. அவர்கள் வாழ்க்கையில் தலையிட கூடாது . காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மிகுந்த மன வருத்தம் தருகிறது என்று மிகவும் உருக்கமாக பேட்டி அளித்து இருந்தார். மக்கள் பக்கம் பொதுவாக விஜய் சேதுபதி சமுதாய பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பது வழக்கம். முக்கியமாக தமிழர் சார்ந்த பிரச்சனைகளில் தமிழக மக்களுடன் இவர் சேர்ந்து பேசி இருக்கிறார். அதேபோல் தற்போது காஷ்மீர் பிரச்சனையிலும் பெருவாரியான தமிழக மக்களின் குரலுக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளார்.

26 மே 2019

கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை,திமுகவை சாடுகிறது நமது அம்மா!


விஸ்தரிக்க உதியமரம் பெருத்தாலும் உத்தரத்துக்கு உதவாது என்றும் கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை என கருணாநிதி கூறியது தற்போது அக்கட்சிக்கே திரும்பி விட்டது என்றும் திமுக வெற்றியை நமது அம்மா நாளிதழ் விமர்சனம் செய்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 38 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனினும் இந்த வெற்றியால் திமுகவுக்கு சந்தோஷம் இல்லை என்றே கூறப்படுகிறது. மத்தியில் திமுக நினைத்தது நடக்கவில்லை. அது போல் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்து ஏமார்ந்ததுதான் மிச்சம். இதுகுறித்து நமது அம்மா நாளிதழில் தலையங்கத்தில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.அதில் கூறுகையில் திமுக கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் இந்த உதியமரம் பெருத்தாலும் உத்திரத்துக்கு உதவாது. முருங்கைமரம் முற்றினாலும் முட்டுக் கொடுக்க ஆகாது எனும் கதைதான். அதிகப்பட்சம் என்ன நடக்கும். மது ஆலைகளை விஸ்தரிக்க மகாபிரபு டிஆர் பாலு பாடுவார்.மருத்துவக் கல்லூரி வளர்ச்சிக்கு ஜெகத்ரட்சகன் போராடுவார். ஸ்பெக்ட்ரம் மேல்முறையீட்டு வழக்கிலிருந்து தலை தப்பித்தால் போதும் என கனிமொழியும் ராசாவும் கடுமையாக உழைப்பார்கள். பிஎஸ்என்எல் முறைகேட்டு வழக்கில் இருந்து எப்படி தப்பிப்பது என்ற தயாநிதி திட்டமிடுவார். இப்படிதான் இந்த முப்பத்தெட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்னெடுப்புகள் இருக்கும்.ஒன்றும் மட்டும் நிச்சயம். நாடாளுமன்றக் கேண்டீனில் பஜ்ஜி, வடை வியாவாரம் திமுகவால் படுஜோராய் நடக்கும். அதிலும் ஓசி பிரியாணி அரங்கேற்றம் நடக்காமல் இருந்தால் சரி. அதுவன்றி வேறு பயனேதும் தமிழகத்திற்கு சத்தியமாய் இருக்காது.கல்யாணம் ஆனவனுக்கு சாந்தி முகூர்த்தத்திற்கு வழியில்லை என்று 2014-ஆம் ஆண்டு கழகத்தின் சார்பில் தனித்து நின்று 37 பேர் வெற்றி பெற்றபோது கருணாநிதி செய்திட்ட விமர்சனம் இப்போது பூமராங் ஆகி அவரது கட்சிக்கே அன்னாரது பொன்மொழி புண் மொழியாகியிருக்கிறது என நமது அம்மாவில் விமர்சனம் எழுந்துள்ளது.


23 ஏப்ரல் 2019

எனது பேத்தியின் தலையில் கைவைத்து விட்டு உள்ளே சென்றார் குண்டுதாரி!


நீர்கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த நிலையில் குண்டுடன் வெடித்தவரை நேரில் பார்த்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் திலீப் பெர்ணாண்டோ (66) மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.
நீர்கொழும்பில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த நிலையில் குண்டுடன் வெடித்தவரை நேரில் பார்த்ததாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் திலீப் பெர்ணாண்டோ (66) மற்றும் அவர் குடும்பத்தார் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.இது குறித்து திலீப் கூறுகையில், குண்டு வெடிப்புக்கு முன்னர் காலை 7.30 மணிக்கு எனது மனைவி மற்றும் குடும்பத்துடன் செண். செபஸ்டின் தேவாலயத்துக்கு வந்தேன். அப்போது அங்கு கூட்டமாக இருந்ததால் வேறு தேவாலயத்துக்கு செல்ல நானும் என் மனைவியும் முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பினோம். என்னுடைய இரண்டு பேத்திகள் உட்பட என் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தேவாலயத்தின் வாசலிலேயே நின்றிருந்தனர்.அப்போது 30 வயதான இளைஞர் ஒருவர் கையில் கனமான பையுடன் வந்துள்ளார். பின்னர் என் பேத்தியின் தலையில் கை வைத்து விட்டு தேவாலயத்தின் உள்ளே சென்றார், அவர் தான் வெடிகுண்டோடு வந்த நபர் என கூறியுள்ளார். அவரை பார்க்க அப்பாவியாக இருந்தது, அவர் எந்த வித பயமும், பதட்டமும் இன்றி நிதானமாகவே காணப்பட்டார். அவர் உள்ளே சென்றவுடன் வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. பின்னர் என் குடும்பத்தார் அங்கிருந்து பதறியடித்து கொண்டு ஓடினார்கள். இப்படி தான் நாங்கள் உயிர் பிழைத்தோம் என கூறியுள்ளார்.

14 ஏப்ரல் 2019

மோடி வாக்கு சேகரிக்க வந்ததே ஒரு வாரிசுக்காகத்தான்!

NTK Seeman todays campaign schedule - Full Details வாரிசு அரசியலை ஒழிப்போம் என கூறும் மோடி வாக்கு சேகரிக்க தேனிக்கு வந்ததே ஒரு வாரிசுக்குத்தான் என்பதை மறந்துவிட்டார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் அனல் கக்க வைக்கின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் 40 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூடான பிரசாரத்தை செய்து வருகிறார்.இந்நிலையில் வடசென்னை வேட்பாளர் காளியம்மாளுக்கு ஆதரவாக சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது ராயபுரம் பகுதியில் அவர் பேசினார்.அவர் பேசுகையில் ஊழலுக்கான முதல் விதை எது தெரியுமா அது ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான். நாங்கள் அரசியல் அமைப்பு சரியில்லை என்று கூறி வருகிறோம். ஆனால் சிலரோ சிஸ்டம் சரியில்லை என்று கூறி வருகின்றனர்.வீட்டுக்கு வீடு மழை நீரை சேகரிக்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த சொல்லும் அரசு இதுவரை மக்களுக்காக எதையும் சேர்த்து வைத்ததில்லை. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் பிரச்சாரக் கூட்டங்களிலும் ஊழலை ஒழிப்போம் என கூறும் அரசியல் கட்சிகள், இதையே பல காலமாக சொல்லி வருகிறார்கள் மத்தியில் 50 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் 5 ஆண்டு ஆட்சி செய்த பாஜகவும் இதுவரை தாங்கள் செய்த சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் சொல்ல முடியுமா? கல்வியும் மருத்துவமனையும் ஏழைகளுக்கு ஒன்று , பணக்காரர்களுக்கு வேறு என உள்ளது.இதை மாற்ற வேண்டும். மோடி நேற்று தேனியில் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று பேசினார். ஆனால் தேனியில் அவர் வாக்கு கேட்க வந்ததே ஒரு வாரிசுக்குத்தான் (ஓபிஎஸ் மகன்) என்பதை அவர் மறந்துவிட்டார் போலும் என சீமான் விமர்சனம் செய்தார்.

03 ஏப்ரல் 2019

இயக்குனர் மகேந்திரன் மறைவு!சீமான் அறிக்கை!

Bildergebnis für mahendran directorதமிழ்த் திரை உலகின் பிதாமகரும், மூத்த படைப்பாளியுமான இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்தேன் அவருடைய இறப்பு என்பது தமிழ் திரை உலகிற்கும், தமிழ்த் தேசிய இனத்திற்கும் நேரிட்ட பேரிழப்பு | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது,

நாடகங்களிலிருந்து அறிவியல் கண்டுபிடிப்பான திரை வடிவத்திற்கு கலை வடிவம் மாறுதல் பெற்றாலும் நாடகங்களின் இறுக்கமான கதைசொல்லல் முறைமையையும், நுட்பமான உணர்வுகள் அற்ற நடிப்பு முறைமையையும் திரைக் கலை கைவிடாமல் நாடகப் பாணியிலான திரைப்படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில்..இயல்பான காட்சிகள், அசலான மனிதர்கள் , வியக்க வைக்கும் திரைக்கதை என தமிழ் திரையுலகிற்கு புது ரத்தம் பாய்ச்சிய மாமேதை மறைந்த இயக்குனர் மகேந்திரன் அவர்கள். அவருடைய உதிரிப்பூக்கள் உலகத் திரைப்பட வரிசைக்கு தமிழ் திரை உலகின் மறக்கமுடியாத பூங்கொத்து. புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்கின்ற சிறு நாவலை தழுவி உருவாக்கப்பட்ட உதிரிப்பூக்கள் திரைப்படக் கலையை பயில விரும்பும் மாணவர்களுக்கு முதன்மைப் பாடமாக இன்னுமும் திகழ்கிறது. அதேபோல இயக்குனர் மகேந்திரனின் இயக்கத்தில் உச்ச நட்சத்திரம் திரு ரஜினிகாந்த் அவர்கள் நடித்த முள்ளும் மலரும் தமிழ் திரையுலகின் மறக்க முடியாத மாபெரும் படைப்பாக திகழ்ந்து வருகிறது. காட்சிகளின் இடையே நிகழுகின்ற வேதியியல் மாற்றத்தை சரியாகப் புரிந்துகொண்டு உயிரோட்டமாக ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் இயக்குனர் மகேந்திரன் ஒரு மாமேதை.
கதாபாத்திரங்களின் நுட்பமான உணர்வுகளை, மென்மையான காட்சிகள் மூலம் அழகாக திரையில் வடித்தெடுப்பதில் அவருக்கு இணையானவர் இந்திய திரை உலகில் எவரும் இல்லை.

தனது இறுதி காலத்தில் சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தேர்ந்த நடிகராகவும் நடித்து புகழ்பெற்ற இயக்குனர் மகேந்திரன் அவர்கள் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளர் ‌. சிறந்த எழுத்தாளர். அவரின் கலைத் திறமையை கண்டு கவரப்பட்ட நம் தேசிய தலைவரும் என்னுயிர் அண்ணனும் ஆகிய மேதகு வே பிரபாகரன் அவர்கள் நேரில் சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்து இயக்குனர் மகேந்திரன் அவர்களை நேரில் சந்தித்து திரைப்படக் கலை குறித்து விவாதித்து மகிழ்ந்தது குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வு.

தமிழ் தேசிய இனத்தின் ஆற்றல்மிக்க கலையாளராக தமிழ் திரை உலகின் மூத்த படைப்பாளியாக திகழ்ந்த இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் தமிழ் திரை உலகின் மாபெரும் இழப்பில் அவர்களோடு ஒருவனாக நானும் பங்கேற்கிறேன். மாமேதை இயக்குனர் மகேந்திரன் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் திரைக்கலையின் மகத்தான மகுடம் ஐயா இயக்குனர் மகேந்திரன் அவர்களுக்கு எனது புகழ் வணக்கம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084 

28 பிப்ரவரி 2019

அபிநந்தனை வரவேற்க புறப்பட்டார் தந்தை!

Image result for apinanthanஇந்திய விமானப்படை விமானி அபிநந்தனை நாளை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதை அடுத்து சென்னையில் அவர் வீடு உள்ள பகுதியில் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது.
அந்த பகுதி மக்கள் இனிப்பு வழங்கி அபிநந்தன் விடுதலையாவதை கொண்டாடினர்.
விடுதலை செய்தி மகிழ்ச்சி தருவதாக மக்கள் தெரிவித்தனர்.இந்த சூழலில் அபிநந்தனை வரவேறக் அவரது தந்தை சிம்மக்குட்டி வர்தமான் டெல்லி புறப்பட்டார்.
செய்தியாளர்களை சந்திப்பதை அவர் தவிர்த்தார்.
அந்தப் பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.முன்னதாக பல அரசியல் கட்சி தலைவர்கள், காவல் படை அதிகாரிகள் அபிநந்தனின் தந்தயை அவரது வீட்டில் சந்தித்து உரையாடினர்.
இன்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய இம்ரான் கான் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்றார்.
இதனை அடுத்து இன்று மாலை பத்தரிகையாளர்களை முப்படை தளபதிகள் சந்தித்தனர்.
வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தில் இருந்து பாகிஸ்தானில் தரையிறங்கிய விமானி அபிநந்தனை அமைதி நிமித்தம் விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருப்பதற்கு நன்றி தெரிவிப்பதை அவர்கள் தவிர்த்தனர்.

நன்றி:பிபிசி தமிழ் 

06 ஜனவரி 2019

தம்பி சிம்புதான் நிஜ சூப்பர் ஸ்டார்-சீமான் புகழாரம்!

சென்னை வடபழனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த இன எழுச்சி முழக்கம்’ பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில்,
உண்மையிலேயே ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது அரசியலுக்கு வந்த விஜயகாந்த்தான் ஆண் மகன். ரஜினிகாந்த், கமல் எல்லாம் பேசக்கூடாது. அவர்கள் ஹீரோக்கள் அல்ல ஜீரோக்கள். என் தம்பி ஒருவர் இருக்கிறார் விஜய். சர்க்கார் படத்தில் பேசினேன் என்றால் ஆமாம் பேசினேன் என்று சொல்லவேண்டியதுதானே. உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கெல்லாமா பயப்படுவது. என் படத்தில் நடிக்கமாட்டாரு ஆனால் நான் பேசுவதையெல்லாம் பேசி நடிப்பாரு என் தம்பி விஜய். என்ன செய்வது என் தம்பியாக போய்விட்டார்.தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமே என் தம்பி சிலம்பரசன்தான். மூன்று படம் சிம்புவை வைத்து எடுக்கப்போவதாக முடிவு செய்தாச்சு. அதோட பலபேர் நெஞ்சு வெடிக்க போகுது. தனக்கு நேர்மையானவன், துணிவானவன், அச்சப்படாதவன் அவன்தான் ரியல் சூப்பர் ஸ்டார். கொளுத்தி எடுக்குறோம் அண்ணனும் தம்பியும் சேர்ந்து.எல்லார்கிட்டையும் கதையை சொன்னேன் எல்லாரும் பயந்துட்டாங்க ஆனா நான் நடிக்கிறேன் அண்ணா என்று என் தம்பி சிம்பு மட்டும்தான் சொன்னார். ஏன் சொன்னார் அவர்தான் தமிழன். அண்ணாவுக்கு எம்ஜிஆர் அண்ணனுக்கு நீதான்'னு சொல்லிட்டேன் என்றார் நகைச்சுவையாக.