நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் இலங்கை அரசானது தனது வீடியோவை எம்.பீக்களுக்கு போட்டுக் காட்டியது. இது சனல் 4 தயாரித்து வெளியிட்ட ஆவணப்படத்தை எதிர்த்து இலங்கை அரசால் தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும். சுமார் 150 சிங்களவர்கள் அங்கே இருந்தபோதும் 3 தமிழர்கள் மட்டுமே அங்கே இலங்கை அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டனர். மற்றுமொரு தமிழ் பெண்மணியான ராஜேஸ்வரி என்பவர் எழுந்து தான் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பேசுவதாகவும் ஒரு தமிழ் தாயாக நான் கேட்க்கிறேன் சனல் 4 கொலைக்களம் போன்ற ஆவணப்படங்களை இனி வெளியிடக்கூடாது என்றார். சனல் 4 கொலைக்களத்தை ஆவணப்படமாக்கிய பெண் டரைக்டர் அங்கே உட்காந்திருந்தார்.
அவரைப் பார்த்து இலங்கையில் மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்கவே நீங்கள் இதுபோல ஆவணப்படங்களை வெளியிடுகிறீர்கள் என்று திருமதி ராஜேஸ்வரி சாடினார். கேடுகெட்ட பிரபாகரனால் தான் எமது பிள்ளைகள் பலர் இறந்தனர் என எமது தேசிய தலைவரை அவமதித்து மிகவும் தரைக்குறைவாக அவர் பேசினார். உடனே சிங்களவர்கள் அதனை கைதட்டி ஆராவாரப்படுத்தினர். தொடர்ந்து அவர்பேச சுமார் 7 நிமிடங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டது. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இலங்கையில் இனிவேண்டாம், தமிழர்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று சனல் 4 டரைக்டரைப் பார்த்து அவர் உரக்கக் கத்தினார்.
தான் ஏதோ பிரித்தானியாவில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக ஒலிப்பதாக அவர் பேச்சு அமைந்திருந்தது. இவர் இலங்கை அரசின் கைக்கூலி என்பது பலருக்கும் தெரிந்த விடையம். சமீபத்தில் தீபம் தொலைக்காட்சிக்கு இவர் ஒரு பேட்டிகொடுக்கப்போய், இலங்கை அரசைப் பற்றி நல்லமாதிரிக் கதைத்து பொதுமக்களிடம் தொலைபேசிவாயிலாக வாங்கிக்கட்டியது சிலருக்கு ஞாபகம் இருக்கும். அந் நிகழ்ச்சியின் முடிவில் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய சபா நாவலன் மீது மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றினார் திருமதி ராஜேஸ்வரி. பின்னர் படுகெட்ட வார்த்தைகளாலும் அவர் சபா நவலனைத் திட்டித் தீர்த்தார் என்பது நிகழ்ச்சிக்குப் பின் நடந்த வெளிவராத நிகழ்வு.
இவரைப் போன்ற இலங்கை அரசின் அடிவருடிகளை சமுதாயத்தில் முன்னணியில் உள்ளோர் ஏன் தமது கூட்டங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை. விடுதலைப் புலிகளை எதிர்த்துப் பேசினால் கூடப் பரவாயில்லை அவர் அதற்கு எதிரானவர் என்று சொல்லாம். ஆனால் தமிழர்கள் பிழைவிட்டுவிட்டார்கள் என்றுகூற இவர் யார் ? மக்கள் தான் முடிவெடுக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக