கொழும்பு நகரின் புறநகர் பிரதேசமான கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொல்லப்பட்டுள்ளார்.இச்சம்பவத்தில் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவும், அவரது மெய்ப்பாதுகாவலரும் அடங்கலாக மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துமிந்த சில்வா தரப்பினருக்கும் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மூன்றிற்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 10 ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தையடுத்து முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக