தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை விடுவிக்கும் வைபவத்தில் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் கலந்து கொண்டமையானது வெட்கக்கேடு என அவுஸ்ரேலிய முன்னாள் சட்டமா அதிபரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைவருமான ஜோன் டூட் கண்டித்துள்ளார்.1800 முன் நாள் போராளிகளை விடுவிப்பதாக மஹிந்த எல்லோரையும் கொழும்பிற்கு அழைத்து சில ராஜதந்திரிகள் முன்னிலையில் பெரும் நிகழ்வாக நடத்தினார். இதில் சில வெளிநாட்டு ராஜ தந்திரிகளும் கலந்துகொண்டனர். அதில் அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் கதி கொளக்மானும் கலந்து கொண்டிருந்தார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போராளிகளுக்கு வழங்கியது புனர்வாழ்வு அல்ல மாறாக மூளைச் சலவையே. போர்க்குற்றம் புரிந்த அரசாங்கம் சர்வதேச விசாரணைகளுக்கும் மறுத்துவருகின்றது.இந்நிலையில் அவுஸ்ரேலிய அரசு சிறிலங்கா அரசின் பிரசாரங்களை ஊக்குவிப்பது அழகல்ல எனவும் கூறியுள்ளார் ஜோன் டூட்.
அவுஸ்ரேலியத் தூதுவர் இந்த நிகழ்வில் பங்கேற்றது, உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்த மறுக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்களின் செயலுக்கு, அவுஸ்ரேலியா சட்டரீதியான ஆதரவைக் கொடுப்பதாக அமைந்து விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பேர்த்தில் இந்த மாதம் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில், கொமன்வெல்த்தில் இருந்து சிறிலங்காவை இடைநிறுத்த வேண்டும் என்று அவுஸ்ரேலியாவின் கிறின் கட்சி விடுத்து வரும் கோரிக்கையின் பின்னணியில் பேராசிரியர் ஜோன் டவுணும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சிறிலங்காவில் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வுக்காக அவுஸ்ரேலியா எந்தவொரு நிதியையும் வழங்கவில்லை என்று அவுஸ்ரேலிய வெளிவிவகாரத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். முன்னாள் போராளிகளை தடுத்து வைக்கும் திட்டத்தை அவுஸ்ரேலியா ஆதரிக்கவில்லை என்றும், முன்னாள் போராளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என்றே சிறிலங்கா அரசிடம அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக