15 அக்டோபர் 2011

லியாம் பொக்ஸின் இடத்திற்கு பிலிப் ஹேமண்ட் நியமனம்!

கடந்த ஒரு வார காலமாக பாதுகாப்பு செயலாளருக்கும், அவரின் தனிப்பட்ட ஆலோசகர் அடம் வெரிற்றிக்கும் உள்ள தொடர்பு குறித்து சர்வதேச ஊடகங்கள் சர்ச்சையினைக் கிளப்பியிருந்தன. இதனைத் தொடர்ந்து பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் தமது பதவியில் இருந்து விலகினார்.
ராஜதந்திர முறையிலான பல்வேறு சந்திப்புக்களின் போது, லியம் பொக்ஸ், அடம் வெரிற்றியையும் தன்னுடன் வைத்திருந்தார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.ராஜதந்திர அந்தஸ்து இல்லாத நிலையிலும், அடம் வெரிற்றி, பாதுகாப்பு செயலாளருடன் 18 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லியம் வொக்ஸ் அண்மையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரை இலங்கையில் சந்தித்த போதும் கூட அடம் வெரிற்றி அங்கு பிரசன்னமாகியிருந்தமை குறித்து சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.
இந்த நிலையில், பிரித்தானிய பாதுகாப்பு செயலர் லியம் பொக்ஸ் தாம், பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனுக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, லியம் வொக்ஸ்ஸுக்கு பதிலாக பிரித்தானியாவிற்கான புதிய ராணுவ அமைச்சராக பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.லியம் வொக்ஸ்ஸின் விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட பிரதமர் டேவிட் கேமரூன் அவரின் உண்மையான விளக்கத்தை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
லியம் வொக்ஸ்ன் விலகலுக்கு பின்னர் புதிய செயலாளராக 55 வயதாகும் பிலிப் ஹேமண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் கூட்டணி கட்சிகளின் சார்பில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 97-ல் முதல்முறையாக பிரித்தானிய நாடாளுமன்றிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து வர்த்தகதுறை, உற்பத்திதுறை மற்றும் இயற்கை எண்ணெய், எரிவாயு, நிர்மாணப் பணிகள் துறைகளில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக