16 அக்டோபர் 2011

கருணாவின் மிரட்டலால் ஆடிப்போன இமெல்டா!

பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபர் தொடர்பான கருத்துக்களை ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்திவிட்டதாக அந்தர் பல்டி அடித்துவிட்டார் அரச அதிபர் இமெல்டா சுகுமார். பிரதி அமைச்சர் கருணாவினூடாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையடுத்தே தனது கடும் போக்கிலிருந்து அரச அதிபர் பின்வாங்கியுள்ளதாக செயலக அதிகாரிகள் கூறுகின்றனர்.
"பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை ஆசிரிய மாணவிகள் பாலியல் நுகர் பொருளாகப் பார்க்கப்படுகின்றனர் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தேனே தவிர பலாலி ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபரினால் ஆசிரிய மாணவிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக நான் கூறவில்லை" என யாழ் அரச அதிபர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
தனக்கு கிடைக்கப்பெற்ற குறித்த கடிதத்தில் அதிபரின் சிரிப்பு, பேச்சு, செயற்பாடுகள் அனைத்தும் பெண்களைப் பாலியல் நுகர் பொருளாகவே பார்க்கப்படுகின்றது என குறிப்பிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பக்க நியாயத்தினை மட்டும் பார்த்து தீர்வு வழங்க முடியாது. பரிசீலனை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுடன் ஆராய்ந்து தீர்வு வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் கலாசாலை அதிபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவே முடிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளில் குழப்பம் இருப்பின் அதனை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். அல்லது இது தொடர்பாக கல்வித் திணைக்களங்கள் ஊடாக எனக்கு அறியப்படுத்தியிருக்க வேண்டும். அதற்கு உரிய பதிலை நான் வழங்கியிருப்பேன். என்னை வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக