பொதுநலவாய நாடுகள் (கொமன் வெல்த்) அமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள நாடுகளில் மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு என்பவற்றைக் கவனிப்பதற்காக மனிதஉரிமைகள் ஆணையாளர் ஒருவர் தலைமையை ஏற்படுத்துவதற்கான யோசனையை இந்தியாவும் எதிர்த்துள்ளது.
ஏற்கனவே இந்த யோசனைக்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இன்று ஆரம்ப மாகும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றாமல் இருப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
இந்த கண்காணிப்புப் பொறிமுறை, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுதியுரைக்கு (மான்டேட்) மாறானது என்று கூறுகின்றது இந்தியா. அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வழிகாட்டலில் இந்தக் கண்காணிப்புப் பொறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட 11 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு தனது 106 பக்கப் பரிந்துரையை வழங்கி உள்ளது.
இந்தியா அதில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டாலும் உறுப்பு நாடுகளைக் கண்காணிக்க மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரை (ஐ.நா. போன்று) நியமிப்பது என்ற பரிந்துரையை ஏற்கத் தயாராக இல்லை. இந்தப் பரிந்துரையைப் பயன்படுத்தி இலங்கையை வீழ்த்த மேற்குலக நாடுகள் முயலக்கூடும் என்று இந்தியா அஞ்சுகிறது.அத்துடன் இலங்கையின் மனித உரிமை மீறல்களில் இந்தியாவிற்கும் சம பங்குண்டு என்பது யாவரும் அறிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக