07 அக்டோபர் 2011

மகிந்த ராஜபக்சவை தண்டிக்க மேற்கு நாடுகள் சதியாம்!

விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தை அடியோடு அழித்ததற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை தண்டிக்க சில சக்திவாய்ந்த மேற்குநாடுகள் சதி செய்வதாக சிறிலங்கா அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியிருந்த போது போரை நிறுத்துமாறு இந்த நாடுகள் கொடுத்த அழுத்தங்களை புறக்கணித்ததாலேயே சிறிலங்கா அதிபரைத் தண்டிக்க மேற்கு நாடுகள் முனைவதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும், அமைச்சருமான சுசில் பிறேம்ஜெயந்த தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் மனிதஉரிமைகளை மீறியதாக குற்றம்சாட்டி சிறிலங்காவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரும் பரப்புரைகளை சிலமேற்கு நாடுகளும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களும், புலிகள் ஆதரவு தொண்டர் நிறுவனங்களும் உலகளவில் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவுக்குள் அரசாங்கம் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ள சுசில் பிறேம் ஜெயந்த வெளியுலக சவால்களையும் தாம் வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக