26 அக்டோபர் 2011

சுயநலவாத போக்கை கைவிட்டு தமிழ் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டால் மட்டுமே தீர்வு சாத்தியம்.

தமிழ்த் தலைவர்கள் ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே நாட்டில் காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியும் என அகில இலங்கை இந்து பேரவை வலியுறுத்தியுள்ளது.
குறிப்பாக நாட்டின் சகல தமிழ் பேசும் தலைவர்களும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடிய அரசியல் தீர்வுத்திட்டம் இனியும் காலம் தாழ்த்தப்படக் கூடாது என அகில இலங்கை இந்து காங்கிரஸின் தலைவர் காசிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொள்வதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் தலைவர்கள் தங்களுக்கு இடையிலான சுயநலவாத கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களின் நலன்களையும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஒற்றுமை மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக