13 அக்டோபர் 2011

ஜே.வி.பி.யின் கிளர்ச்சிக் குழுவிற்கு புலிகளின் ஆதரவாளர்கள் நிதியுதவி வழங்குகிறார்களா என விசாரணை!

ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு தலைவராகக் கருதப்படும் பிரேம்குமார் குணரட்னத்திற்கு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் நிதி உதவி வழங்குகின்றார்களா என புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாட்டாளர்கள் பிரேம்குமாருக்கு பண உதவிகளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கனடா மற்றும் ஸ்கென்டினேவிய நாடுகளிலிருந்து தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் ஜே.வி.பி கிளர்ச்சிக் குழுவிற்கு பணம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி கிளர்ச்சிக்குழு உறுப்பினர்களான திமுத்து அட்டிகால்ல மற்றும் வருண ராஜபக்ஷ ஆகியோரின் வங்கிக் கணக்குகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 19ம் திகதி ஜே.வி.பியில் பிளவு ஏற்பட்டது முதல் இதுவரையில் கிளர்ச்சிக்குழு உறுப்பினர்கள் 6 மில்லியன் ரூபா பிரச்சாரத்திற்காக செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பிரச்சாரப் பணிகளுக்காக ஆறு மில்லியன் ரூபா செலவிட்டதாக கிளர்ச்சி குழு ஒப்புக் கொண்டுள்ளது. ஜே.வி.பிக்கு நிதி உதவிகளை வழங்கி முக்கியஸ்தர்கள் தற்போது கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும், இனமத மொழி பேதமின்றி சிலர் உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக