12 அக்டோபர் 2011

ஜே.வி.பி.கிளர்ச்சிக்குழு பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பு!

ஜே.வி.பியின் கிளர்ச்சி அணியினருக்கு உள்ளக ரீதியாக ரகசியமான தலைமைத்துவத்தை வழங்கி வரும், பிரேம்குமார் குணரட்னம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி திருகோணமலை சீனக்குடா பிரதேசத்தில் வைத்து, கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தரப்பினருடன் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹபரணை, மட்டக்களப்பு, வாகரை ஊடாக கறுப்பு நிற டொல்பின் வேன் ஒன்றில், திருகோணமலை சென்ற குணரட்னம், சுழியோடியாக தொழில்புரியும் ஒருவரின் நண்பரின் வீட்டில் உணவை உடக்கொண்டுள்ளார்.
இதன் பின்னர், பிரேமகுமார் தரப்பை சேர்ந்த ஜே.வி.பியின் சுசந்த என்பவரின் வீட்டில், பிள்ளையானின் செயலாளரான சீலன் என்பவருடன் மிக நீண்ட நேரம் கலந்துரையாடி விட்டு, பின்னர், சீலன் சென்ற காரில் ஏறி, குணரட்னம் புறப்பட்டுச் சென்றுள்ளார். குணரட்னம் சென்ற வேன் கொழும்புக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குணரட்னம், பிள்ளையான் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் யாருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
அதேவேளை சீலன் என்பவர் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கப்பம் கோரல் சம்பவங்களுடன் தொடர்புடைய குழுக்களை வழி நடத்தி வந்துள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு தரப்பினர், அவர் இந்திய புலனாய்வு பிரிவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளதாகவும் கூறிவருகின்றனர். பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்கள் தொடர்புடைய சகல செயற்பாடுகளுடனும், சீலன் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி அதாவது, குணரட்னம், சந்தித்ததற்கு இரண்டு தினங்களுக்கு பின்னர், குணரட்னம் தரப்பை சேர்ந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் உந்துல் பிரேமரட்ன, ஜே.வி.பியின் பாதுகாப்பு பிரிவின் தலைவர் மாலன் மற்றும் குணரட்னம் தரப்பின் திருகோணமலை பொறுப்பாளராக செயற்பட்டு வரும் நபர் ஒருவரும், சீலனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக